29-01-2023, 09:02 PM
அவளை ரசித்துக்கொண்டே மெல்ல மெல்ல மலையின் உச்சியை அடைய நினைத்தான் ஆனந்த்
ஆனா அது தண்ணீர் நிறைந்த வழுக்கு பாறை என்பதை அறியாமல்.. திடீர் என்று கால் வழுக்கி அந்த அவ்வளவு உயரமான மலையில் இருந்து தண்ணீரோடு சேர்ந்து வழுக்கி கீழ்நோக்கி விழுந்தான் ஆனந்த்
நல்லவேளை மலையை ஒட்டி இருந்த மரத்திலும்.. செடி கொடியிலும் அவன் உடம்பு பட்டு.. பட்டு.. (பழைய கமல் படம் புன்னகை மன்னனின் படத்தில் முதல் காட்சியில் கமல் ரேகாவை லிப் டு லிப் கிஸ் அடித்துக்கொண்டே தற்கொலை பண்ணிக்கொள்ள முயற்சி பண்ணும்போது மரத்தில் சிக்கி உயிர் தப்புவது போல) மெதுவாய் அந்த அருவி தண்ணியோடு அவன் உடல் வழுக்கி அந்த அழகு தேவதை குளித்துக்கொண்டிருந்த இடத்துக்கு அருகில் வந்து பொத் என்று விழுந்தான்..
ஒன்றும் ஆகவில்லை என்றாலும்.. அவ்வளவு உயரத்தில் இருந்து விழுந்ததால் மயக்கமானான் ஆனந்த்
சின்ன சின்ன சிராய்ப்பு காயங்கள்.. நெற்றியில் மட்டும் ஒரு மரக்கிளையின் நுனிக்காம்பு பட்டு ஒரு சின்ன காயத்தை ஏற்படுத்தி இருந்தது..
ஆனந்தமாக குளித்துக்கொண்டிருந்த அந்த அழகியின் அருகில் திடீரென்று ஒரு புது மானிட உருவம் வழுக்கி வந்து விழாவும்.. ஆரம்பத்தில் அவள் பயந்து விட்டாள்
ஆனால் ஒரு வித்தியாசமான இந்த காலத்தை சேராத ஒரு மானிட உடல் தன் அருகில் மயக்கமாய் மலையில் இருந்து விழுந்ததை பார்த்து மனம் இறங்கினாள்
உடனே ஆனந்தின் உடலை தண்ணீரோடு சேர்ந்து மெல்ல இழுத்து... கரையில் இருந்த ஒரு பாறை மீது மல்லாக்க படுக்க வைத்தாள்
மானிடா.. மானிடா.. என்று ஆனந்த்தின் கன்னத்தில் தட்டி எழுப்பினாள்
ஆனால் ஆனந்திடம் இருந்து எந்த ரியாக்ஷனும் இல்லை..