19-07-2022, 08:10 AM
(18-07-2022, 05:04 PM)Loveyourself1990 Wrote:வணக்கம் நண்பா,
இல்லை நண்பா, சில மன கசப்புக்கள், நான் கதை எழுதுன அந்த நாட்கள், என்னுடைய முழு ஓய்வு நேரத்தையும் இங்க தான் செலவழிச்சேன், ஒரே நேரத்துல ரெண்டு வேற வேற கதைகள் அதுவும் முற்றிலும் வித்தியாசமா கொண்ட கதை கருவை மையமா வச்சு எழுதினேன்,
அந்த கதை கூட ஒரு சாதாரண பாணியில் போற கதை தான் ஆனா இந்த கதை அப்படி இல்லை, இதுல கால இயந்திரம், கால பயணம்னு கற்பனைக்கும் எட்டாத ஒரு விஷயத்தை என்னால முடிந்த அளவுக்கு எளிமையா சொல்ல முயற்சி செஞ்சு எழுதுன கதை
அதுக்கு நான் ஆசைப்படுறது வாசகர்களோடு உரையாடல், அவங்க ஆதரவு தான்.
அதுவே கிடைக்காம இருக்கும்போது கஷ்டமா இருக்கு, அதான் ரொம்ப மாசமா இந்த பக்கம் நான் எட்டி கூட பாக்குறது இல்லை
Good nanba