27-06-2022, 09:49 AM
(27-06-2022, 09:15 AM)dreamsharan Wrote: நண்பர்களே. பல கதைகள் படித்த ஆர்வத்தில் நானும் இங்கே ஒரு கதை எழுத ஆரம்பித்தேன். ஆரம்பத்திலாவது சில கமெண்ட்ஸ் வந்தன. போகப் போக குறைந்து கொண்டே போனதால் வாசகர்களுக்குப் போரடிக்கிறது போலிருக்கிறது என்று நிறுத்தி விடுவதாய் அறிவித்தேன். அதற்கு இங்கே எழுத்தாளர்களுக்கு ஆதரவாய் பேசும் பெரிய எழுத்தாளரே கிண்டலாய் “உங்களைப் போன்ற மாபெரும் எழுத்தாளருக்கு எங்களைப் போன்ற வாசகர்கள் கமெண்ட் போடாதது தவறு தான்” என்று வஞ்சப்புகழ்ச்சி செய்து எழுதியிருந்தார். வெறுத்துப் போய் இனி கதை மட்டுமல்ல இங்கே எதையும் பதிவு செய்வதில்லை என்று முடிவெடுத்தேன். புதிதாய் எழுத வருபவர்களை, பெரிய எழுத்தாளர்கள் ஊக்குவிக்க வேண்டாம். கிண்டலாவது செய்யாமல் இருக்கலாமல்லவா?
நானா இருக்குமோ..
காரணம் நான் தான் அதிகமாக நக்கலாக எல்லோருக்கும் கமெண்ட் போடுவேன் நண்பா
ஆனால் நிறைய நேரம் நான் எழுத்தாளர்களின் பெயரையோ.. அவர்கள் புதியவர்களா.. அல்லது எக்ஸ்பீரியன்ஸ்டு எழுத்தாளர்களா என்றெல்லாம் பார்ப்பதில்லை
கண்ணை மூடி கொண்டு கமெண்ட் போட்டு விடுவேன்
கமெண்ட் போடவேண்டும் என்ற ஒரே எண்ணம் தான் எனக்குள் இருக்குமே தவிர.. வேறு எந்த வித வஞ்சகமும் இருக்காது நண்பா
நீங்கள் குறிப்பிட்ட முதிர்ந்த வயதான சின்ன இளம் எழுத்தாளர் நானாக இருந்தால் தயவு செய்து என்னை மன்னிக்கவும் நண்பா
அது நானாக இல்லையென்றாலும்.. அந்த கமெண்ட் போட்ட எழுத்தாளர் சார்பாக நானே அதற்கும் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் நண்பா
இனி தொடர்ந்து எழுதுங்கள்
வாசகர் கமெண்ட் போடவில்லை என்றாலும் இனிமேல் எழுத்தாளர்களாகிய நாங்கள் தான் இனி ஒருவருக்கொருவர் கமமெண்ட் போட்டுக்கொள்ள போகிறோம்
அதனால் கவலை வேண்டாம் நண்பா.. தொடர்ந்து எழுதுங்கள்
நம் எழுத்தாளர்கள் சங்கத்திலும் அப்படி தான் ஒரு முடிவு எடுத்து இருக்கிறோம் என்று நம்புகிறேன் நண்பா
பதிவிற்கு நன்றி நண்பா
வாழ்த்துக்கள்