14-06-2022, 02:20 PM
(07-06-2022, 11:45 AM)Kabi_kabi Wrote: சமையல் அறையில் இருந்து வெளியே வந்தவள், அவன் எதிரில் உட்கார்ந்து சொல்ல ஆரம்பித்தாள்.
2004
கரிசல்நாத்தம் முதல் ஸ்பின்னிங் மில் முதலாளி பாண்டியன் யாரைவைத்து தனது கட்டிட வேலைகளை ஆரம்பிப்பது என தேடிய போது சுந்தரம் அறிமுகம் கிடைத்தது.
சுந்தரம் மேஸ்திரி இல்லையென்றால் ரத்தினம் மேஸ்திரி தான் அங்கு பிரபலம். சுத்தி உள்ள ஆறு ஊரில் இருந்து திறமையான வேலையாட்கள் அவர்களிடம் இருந்தனர். மாமனும் மச்சினன் ஒன்றாக இருந்த நேரம் அது.
பாண்டியனின் இந்த முடிவு தான் அவர்களின் ஒற்றுமைக்கு முடிவாக இருக்க போகிறது என யாரும் அறிந்தாரில்லை.
முதல் கட்டிடத்திற்கு அட்வான்ஸ் மட்டும் ஒரு லட்சம் அளிக்கப்பட்டது. சுந்தரதிர்க்கு தலை கால் புரியவில்லை. ஒட்டு மொத்தமாக கூலி மட்டும் 9 லட்சம் என கூறிய போது லாபம் மட்டும் அவருக்கு 2 லட்சம். ஒட்டுமொத்த கட்டிட கூலி காண்ட்ராக்ட் தனக்கு கிடைக்கும் படி வேலை செய்ய தொடங்கினார்.
சொற்ப லாபம் வரும் காலங்களில் உதவி கேட்டு போன மச்சான் இப்போது தொழில் எதிரி போல அந்த வேலை மாற்றி விட்டது. எங்கே உதவி கேட்டால் அவனும் லாபத்தில் பங்கு கேட்பானோ என ரத்தினத்தை ஒதுக்கியவன் எல்லா வேலை ஆட்களையும் தன் பக்கம் இழுக்க தொடங்கினான்.
இப்படியே படிப்படியாக அந்த ஊரின் தேர்ந்தெடுக்கப்பாடாத தலைவர் போல செயல்பட தொடங்கினான். லாபம் அதிகரித்து மடமடவென இரண்டு வருடத்தில் மொத்தமாக காண்ட்ராக்ட் எடுத்து கட்டிடங்கள் கட்ட ஆரம்பித்தான்.
சொந்த வீட்டை புதுப்பிக்க இடித்துவிட்டு பூஜை போட்ட போது சுந்தரம் தன்னை அழைக்காமல் வேலைகளை தொடங்கிய போது தான் ரத்தினதிற்க்கு புரிந்தது. புதுபணக்காரன் காசு வந்ததும் சொந்தபந்தம் மறந்து விட்டது என தன்னை தானே சமாதானம் செய்து கொண்டு தனது தொழிலை மகனுடன் சேர்ந்து மேம்படுத்த தொடங்கினார்.
ரத்தினத்தின் மூத்தமகன் ரகுராமன் சிவில் இன்ஜினீயரிங் படிப்பை முடித்து தொழிலில் தந்தைக்கு உதவினான். அதுவரை சாதரணமாக இருந்த ரத்தினம் திடீர் என பெருவளர்ச்சி கொண்டார். 15 ஆண்டுகளுக்கு பிறகு வந்த முதல் இன்ஜினீயர் அல்லவா. பணம் கொட்ட ஆரம்பித்தது. சுந்தரம் 3 ஆண்டுகள் சம்பாதித்தது ஒரு ஆண்டில் சேர்ந்தது.
கல்லூரி காலங்களில் படிப்பில் கெட்டியா இருந்த ரகு இருக்கும் எல்லா கெட்ட பழக்கங்களையும் நண்பர்களும் சேர்ந்து கற்றுக்கொண்டான்.ஹாஸ்டலில் இருந்து ஏறி குதித்து விலைமாதுவிடம் சென்று வருவார்கள். இது இப்போதும் தொடர்ந்தது. மேலும் கல்லூரி ஆசிரியை ஒருவரிடம் இருந்த தொடர்பு படிப்பு முடிந்த பிறகும் தொடர்ந்தது.
அவனுக்கு திருமணம் செய்துவைக்க எண்ணி 3 ஆண்டுகளுக்கு பிறகு சுந்தரத்தை பார்க்க அவர் வீட்டுக்கு தாம்பபூலத்துடன் சென்றனர்.
2007...
அங்கே.....
கபி கபி நண்பா வணக்கம்
இந்த முறை உங்கள் பதிவு மிகவும் அருமை நண்பா
பிளாஷ்பேக் கதை மிக மிக அருமை நண்பா
அப்படியே அந்த கட்டுமான பணிக்குள் நாங்களே சென்று பார்ப்பது போல இருந்தது உங்கள் அருமையான கதை நடை
சுந்தரம்.. ரத்தினம்.. பாண்டியன்.. பற்றிய விளக்கங்களும்.. அவர்கள் ஒவ்வொருவருடைய எண்ணங்களும் வேறுபட்டு இருப்பதை குறிப்பிட்டு காட்டி இருப்பது சூப்பர் நண்பா
ரகுராமனின் விலைமாது பயணங்கள் மிக தத்ரூபம் நண்பா
அதுவும் அந்த கல்லூரி ஆசிரியையுடனான கள்ளத்தொடர்ப்பு செம ஹாட் நண்பா
அடுத்து என்ன நடக்க போகிறது என்று அறிந்து கொள்ள மிக மிக ஆவலாக உள்ளது நண்பா
நேரம் கிடைக்கும் போதெல்லாம் தயவு செய்து தொடர்ந்து எழுதுங்கள் நண்பா பிளீஸ்
வாழ்த்துக்கள் நன்றி