Romance ஆட்டோகிராப் …
#19
அடுத்த வாரம் திரும்ப பள்ளி சென்ற எனக்கு, போறவன் வர்ரவன் எல்லாம் என்னை பார்க்கும் போது, காயத்ரி.. காயத்ரி என்று கேலி செய்ய ஆரம்பித்தனர்!


அய்யயோ.. இவங்களுக்கு எப்படி தெரிந்தது.. சமயம் கிடைத்த உடன், நேரே நந்தினியிடம் கத்தியே விட்டேன்…

நான்: ஹே எரும மாடே.. ஏண்டி இப்படி எல்லார்கிட்டயும் சொல்லிவிட்ட...அறிவில்ல ….

நந்தினி: டேய்.. சத்தியமா நா சொல்லலடா… நானே அவளை எப்போ கோவிலுக்கு வருவா, உன்னபத்தி சொல்லிவெக்கலாம் னு யோசிச்சிட்டுருந்தேன்…

ஹே சுவேதா கிட்ட மட்டும் தாண்டா கோவில்ல பேசிட்டிருந்தேன்..அவ தான் சொல்லிருக்கனும்

நான்: லூசாடி நீ? எவ கிட்டயும் சொல்லாம இருடினு சொன்னா, சுவேதா கிட்ட மட்டும் சொன்னாளாம்.. நீ உன்மையை சொல்லு.. நீ உண்மைல லூஸ் தானே? இல்ல லூசு மாதிரி நடிக்கிறியா?

நந்தினி: டேய், சாரி டா …

நான்: மண்ணாங்கட்டி.. எங்க இவ? ஹே சுவேதா! ஒன் மினிட் ப்ளீஸ்?

சுவேதா: சொல்றா? சார் ரொம்ப சைலென்ட்டா ஒன் சைடு லவ் பண்றீங்களோ?

நான்: செம்ம கடுப்புல இருக்கேன்.. வெறுப்பேத்றியா… எதுக்கு டி எல்லார்கிட்டயும் போய் சொல்லிவிட்ருக்க?

சுவேதா: ரிலாக்ஸ்… இதெல்லாம் சப்ப மேட்டர்… இப்ப இத சொன்னதால, வேற எவனும் அவளை ட்ரை பண்ண மாட்டான் .. ட்ரை பண்ணாலும், நீ போய் சண்டை போடு.. இதெல்லாம் கூடவா அவளுக்காக பண்ணமாட்ட ?

அவளுக்காக பண்ணமாட்டியா என்றதும், ஒக்காலி எவன் வந்ததும் பாத்ரலாம்! என்று மனது சொன்னது… என்றாலும் சட்டென்று ஒரு பீதி

நான்: அதெல்லாம் பண்ணிரலாம்… அவன் அத பையன், அவனும் நம்ம ஸ்கூல் தான்.. அவன்கிட்ட லாம் மேட்டர் போச்சுன்னா வீட்ல லாம் சொல்லி இப்பவே முடிச்சி விட்ருவான் எரும… அப்புறம் காயத்ரியே என்கிட்ட நா உன்ன லவ் பண்றேன் னு எப்போ சொன்னேன்னு கேட்டுட்டானா..

சுவேதா: அப்போ நீயும் கேட்ரு.. நானா வந்து லவ் பண்றேன்னு சொன்னேனா...சும்மா கேட்டதை வெச்சு பேசாத னு அதட்டிக்கலாம்.. அப்புறமா அவளை கன்சோல் பண்ணிக்கோ..

நான்: செம்ம KDயாட்டம் பேசுற..

நந்தினி: சுவேதா சொல்றதும் கரெக்ட் தான் .. லேட் இட் கோ..
நீ ட்ரை பண்ணு… பசங்க காயத்ரி வெச்சி உன்ன கிண்டல் பண்ணா, நீ ஹாண்டில் பண்ணிக்கோ…. ஸ்டார்ட் பிஹேவிங் லைக் எ மேன் பிரேம் நவ்…

ஹ்ம்ம்….சொல்லியவாறே கிளம்பினேன்….
அந்த வருடம் காயத்ரியிடம் பேச எங்களுக்கு வாய்ப்பே கிடைக்கவில்லை...

படிப்பில் கவனம் செலுத்தினேன்.... காயத்ரி வேணும்… அப்போ நல்ல படிச்சி மெடிசின் பண்ணனும்.. டாக்டர் படிச்சா, டாக்டர் மாப்பிளை எவன் வேணாம்னு சொல்லுவான்… நம்மளே அவங்க வீட்ல பேசலாம்.. பல எண்ண ஓட்டங்கள்!

10வது பொதுத் தேர்வு, 91% வந்தது..என் பெஸ்ட்டீ நந்தினி 96%, அந்த வருடத்தின் அதிக மதிப்பெண் வாங்கிய மாணவி…
Like Reply


Messages In This Thread
RE: ஆட்டோகிராப் … - by aayushsalman - 02-12-2021, 02:19 PM



Users browsing this thread: 1 Guest(s)