Romance ஆட்டோகிராப் …
#2
அன்று….


அவள்!



அந்த ‘ஹாய்’ என்ற முகநூல் அறிவிப்பை காலை பார்த்த உடனே ஏனண்ணை அறியாமலே டெலிபதி  மேலே ஒரு அதீத நம்பிக்கை உண்டானது..


என்ன இது.. நேற்று தானே இறுதியாக நினைத்தோம்… இப்படி இருக்கே டெலிபதி...ஒருவேளை உண்மை தானோ… 
இப்படியாக ஓராயிரம் தடவை எண்ணிவிட்டேன்… 
அறிவிப்பில் வந்த அவளின் பெயரை பார்த்தேன்… கிட்டத்தட்ட 14 வருடங்களாக அவளை தெரியும். இப்போதெப்படி இருக்கிறாள்? மனம் ஒரு நொடி துடிப்பை சீறியது. அறிவிப்பை தட்டி விட்டு திறந்தேன்...அவள் முகநூல் கணக்கை எத்தனை ஆண்டாக தேடிருப்பேன்? கிராதகி, கண்டே பிடிக்க முடியாதபடி பெயரை சுருக்கி கணக்கை வைத்திருக்கிறாள்..உடனே விரல்கள் கணக்கை சல்லடை போட்டது… அவள் புகைப்படம் எங்காவது போட்டிருப்பாள்...தேடினேன்... அவள் கணக்கின் காட்சி படம் மட்டும் தெரிந்தது... 


யார் இந்த போட்டோல? அவளோட பொண்ணா? இருக்கக்கூடாதே கடவுளே….வேண்டினேன்…


இருந்தாலும் இருக்கட்டும், அவளுக்கு நல்ல வாழ்க்கை அமையனும் னு வேண்டியவனும் நானே… இப்படிலாம் கிறுக்கன் மாதிரி யோசிக்காதே...என்னை நானே சாந்தப்படுத்தினேன்...


அவள்….அவள் மகள் போல…அவளை போலவே அப்பாவித்தனமான முகம்….
ம்ம்ம்ம்…. பெருமூச்சு வாங்கி, அந்த வாண்டு முகத்தை பார்த்தேன்...அவளும் என் மகள் தான்.. 
இருக்கட்டுமே….ஏன்? என்னால் பிறந்தால் மட்டுமே மகள் ஆகணுமா என்ன? அவளோட பொண்ணு.. அந்த ஒரு காரணம் போதும்!


அவள் மகளின் பிறந்தநாள் அன்று எடுத்த படம் போல…அதுவும் முதல் பிறந்தநாள்...
அவளின் பெற்றோர் கையில், அவர்களின் மகளின் மகள்…


அவள் கணக்கை திறந்து பார்த்த எனக்கு ஏமாற்றமே! குறித்த படங்களிலும், எங்கும் எதிலும் அவள் முகம் இல்லை… 


சரி… திடீரென்று, என்னை எப்படி கண்டுபிடித்தாள்? ஓ .. பரஸ்பர நண்பர்கள் மூலமாக என்று பட்டது… 

பதில் அனுப்பினேன்…


------------------------------------------




ஹாய் ..வாட் எ சர்ப்ரைஸ்…



நேத்து நைட் தான் உன்ன பத்தி நெனச்சேன்…



எங்க இருக்கா இவ…

சந்தோஷமா இருக்காளா? இல்லையா’னு யோசிச்சேன்… பாரேன்! டெலிபதி போல...ஹ்ம்ம்….என்னலாம் ஞாபகம் வெச்சிருக்க…நைஸ்...

எப்படி இருக்க?

 

மூச்சு விடாமல் மெசேஜ்களை தட்டி விட்டு நிறுத்தினேன்….

உடனே பதில் வருமா?... 2 நிமிடங்கள் தண்டி போனது...இன்னும் பார்க்கவில்லை...



நல்லவேளை, இப்போதாவது  இவளை பார்க்கணும் என்று தவித்த எனக்கு, இந்த ஒரு ‘ஹாய்’, முற்றுப்புள்ளியாக இருந்தது…



நேரம் கடந்துக்கொண்டே இருந்தது…பிறகு பதில் சொல்லிக்கலாம்.. ஆபீஸ்க்கு ஓடனும், மனம் துரத்த, மடிக்கணினியை மடித்து விட்டு, குளித்து, ஆபீஸ்ல நேர போய்  லஞ்ச் சாப்பிடுகிறேன் மா, என்று அறைகூவல் விட்டு வேகமாக படியில் இறங்கி ஓடினேன்…



காரின் பின் கதவை திறந்து, பழைய கந்தல் துணியைக்கொண்டு, வண்டியை தூசி தட்டிவிட்டு, வண்டியை ஸ்டார்ட் செய்த நேரம்...  டிங்…… முகநூல்  அறிவிப்பு…  போன் திரையில் கொட்ட கொட்ட அளவில் 9.43 AM  காட்டியது...கீழே சின்னதாக அறிவிப்பு, அவளிடமிருந்து….



படிக்கலாமா, வேணாமா? படிச்சா பதில் அனுப்பனும்...பதில்களா போயிட்டே இருந்தால்? ஒரு ஆர்வத்துல, மெசேஜா அனுப்பி, டிராபிக்ல பொய், மத்யகைலாஷ் சிக்னல்ல பொய் மாட்டிகிட்டா.. சோலி முடிஞ்ச்சு…. மொதல்ல ஆபீஸ் போயிருவோம்... போயிட்டு ரிலாக்ஸ்ட்டா மெசேஜ் பண்ணலாம் - எண்ணிக்கொண்டே போனை திறந்தேன்… மேலிருந்து திரையை இழுத்து அறிவிப்பை அங்கிருந்தே படித்தேன்….முதல் வரி...





‘செருப்பு பிஞ்சிரும்!’
-----------------------------------------------------------------------
Like Reply


Messages In This Thread
RE: ஆட்டோகிராப் … - by aayushsalman - 21-11-2021, 12:23 AM



Users browsing this thread: 1 Guest(s)