30-07-2021, 07:30 AM
(26-01-2019, 03:43 PM)krishkarthick Wrote: சுபா ரூமை விட்டு சிரித்துக்கொண்டு வெளியே வருவதை பார்த்த கோமதிக்கு கோவம் தலைக்கு ஏறியது, சுபாவை தனியாக அழைத்து நாளைக்கு என்ன நாள் என்று தெரியுமா ? என்று கேட்டாள்.
சுபாவிற்கு அப்பொழுதுதான் ஞாபகம் வந்தது அது விக்ரமின் இரண்டாம் வருட திவசம் செய்யும் நாள் என்று.
அதோடு சுபா முகத்தில் இருந்த சிறு சந்தோசம் காணாமல் போனது.பிறகு, சேது காலை உணவு சாப்பிடும் போது உணவு பரிமாறிய சுபா அவனிடம் ஏதும் பேசாமல் அமைதியாகவும் முகம் வாட்டமாகவும் இருப்பதை உணர்ந்த சேது சுபாவிடம் ஏன் வருத்தமா இருக்க சுபா என்று கேட்டான்.
சுபா பதில் ஏதும் சொல்லாமல் எதையோ யோசித்து கொண்டு இருந்தாள், அதை பார்த்த சேது சுபா உன்னை தான் கேட்கிறேன் ஏன் இப்படி இருக்கிறாய்? பதில் சொல்...
சுபா: .......
சேது: உன் அம்மா ஏதாச்சும் சொன்னாங்களா?
சுபா: ......
சேது: என் அம்மா ஏதாச்சும் சொன்னாங்களா?.
கோமதி: டேய் இவளை நான் ஏண்டா திட்ட போறேன், நாளைக்கு விக்ரமிற்கு திவசம் நாள் என்று சொன்னேன்,அதான் இவ இப்படி இருக்காள்.
சேது: அவளே இப்பதான் விக்ரமை கொஞ்சம் கொஞ்சமா மறந்துட்டு நிம்மதியா இருக்கா, இப்போ ஏன் மா சுபாட்ட அதை பத்தி பேசின!!.
கோபத்துடன் கோமதி: டேய் அவன் உன் தம்பி டா, அவனோட மகன் வச்சு தான் திவசம் பண்ண முடியும், அவன் இறக்கும்போது இவதான்அவனோட மனைவியா இருந்தாள்,இவங்க ரெண்டு பேரும் தான் முக்கியமா இருக்கணும் அதனால் தான் சொன்னேன்.
சேது: இப்போ சுபா என்னோட மனைவி அவளோட குழந்தை இப்போ எனக்கும் குழந்தை தான் , விக்ரமிற்கு இவங்க எப்படி திவசம் பண்ண முடியும் அதெல்லாம் முடியது. வேணும்னா நீயும் நானும் திவசம் பண்ணலாம் என்றான்.
அப்போது அங்கு வந்த செல்வி, மாப்பிள்ளை சொல்வது சரிதான் சுபாவிற்கு மறுமணம் ஆகி புருஷன்னு சேது மாப்பிள்ளை இருக்காரே, பிறகு எப்படி சுபாவும் அவள் குழந்தையும் அதில் கலந்து கொள்ளமுடியும் என்றாள்.
கோமதிக்கு கடுப்பாகியது ஆனாலும் அவர்கள் சொல்வது சரி என்று பட்டது, சரி செல்வி அப்போ சுபா வேண்டாம் குழந்தைய வச்சு தான் விக்ரமிற்கு திவசம் பண்ணனும் என்று கோமதி கூறினாள்.
செல்வி: அதெல்லாம் முடியாது அண்ணி குழந்தை இப்போது சேதுவிற்கு மகன் அதனால் பண்ண விடமாட்டேன்.
கோமதி: என் பையனுக்கு திவசம் பண்ண என் பேரனுக்கு தான் உரிமை இருக்கு இதுல நீ தலையிடாத இதுக்கும் உனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை.
செல்வி: பாத்தீங்களா மாப்பிள்ளை, உங்க அம்மா என்ன சொல்றாங்கன்னு!! எனக்கு உரிமை இல்லைனு சொல்றாங்க ......என்று நீலி கண்ணீர் விட்டாள்.
சேது: அம்மா நான் சொல்றது தான் செய்யணும் இல்லைனா எனக்கு கோவம் வந்துரும் பிறகு என்ன செய்வேன் என்று எனக்கே தெரியாது என்று கத்திவிட்டு சென்றுவிட்டான்.
அவன் அப்படி கூறியதும் கோமதிக்கு வருத்தமாக இருந்தது, அப்பொழுது செல்வி கோமதியை நோக்கி ஒரு நக்கல் பார்வை பார்த்து சென்றுவிட்டாள்.
இவ பேச்சை கேட்டுட்டு அம்மானு பார்க்காம என்னையே திட்டுகிறானே என்று கடுப்பில் இருந்தாள் கோமதி.
சேதுவிற்கு இப்பொழுதுதான் அவன், சுபா மற்றும் குழந்தை என ஒரு குடும்பமாக நினைக்க தோன்றி இருந்தான் இந்த நேரத்தில் விக்ரமின் திவசம் வந்து அவனை அவர்களை விட்டு தூரமாக்கியதையும் அவனால் ஏற்று கொள்ள முடியவில்லை அதனால்தான் அவன் கோமதியை திட்டினான்.
அந்த நாள் இரவு வந்தது, அன்றும் சேது குழந்தை சுபாவோடு பெட்டில் படுத்து கொண்டான். சுபா அன்று காலையில் நடந்த நிகழ்வாள் அவன் மீது கோபத்தில் இருந்தாலும் ஒன்றும் சொல்லமுடியாமல் தூங்கிவிட்டாள்.
சேது, கோமதி மற்றும் சுபாவின் அப்பா முத்து ஆகியோர் ஐயருடன் மறுநாள் ஏரிக்கு சென்று ஹோமம் வளர்த்து திவசம் செய்ய ஏற்பாடு செய்தனர்.சேது சுபாவையும் குழந்தையையும் வரவிடவில்லை.
பின் ஐயர் இறந்தவர் பெயர், புகைப்படம் மற்றும் அவருக்கு திருமணம் ஆகிவிட்டதா என்று கேட்டார்.
அவனிற்கு திருமணமாகிவிட்டது ஐயா என கோமதி கூறினாள்.
ஐயர் : அப்போ அந்த பெண் எங்கே?
சேது: ஐயா இறந்தவன் என்னோட தம்பி தான், அவன் இறந்த பிறகு அவன் மனைவியை நான் திருமணம் செய்து கொண்டேன் அதனால் தான் அவள் வரவில்லை என்றான்.
ஐயர்: ஓஹ் அப்படியா சரி ஒன்றும் பிரச்சனை இல்லை,அவரின் தம்பி நீங்களே திதி கொடுக்கலாம்.
சேது: அம்மா பாத்தியா... ஐயரே சொல்லிட்டார் நானே தம்பிக்கு திதி கொடுக்கலாம்னு,நீதான் சுபாவை வர சொன்ன இப்போ போதுமா ???
ஐயர்: ஆம், இறந்தவர் மனைவி இப்போது வேறு திருமணம் புரிந்ததால் அந்த பெண்ணால் இப்போது மனைவி ஸ்தானத்தில் கலந்து கொள்ள முடியாது.
கோமதி: இவன் சொல்லும்போது எனக்கும் அதான் சரின்னு பட்டது ஐயா, அதான் சுபாவை நானும் தடுத்துவிட்டேன். ஆனால் இறந்து போன விக்ரமிற்கு ஒரு மகன் இருக்கான் ரெண்டு வயசு ஆகுது, அவனை வச்சு திதி கொடுக்கலாம்னு கேட்டேன் அதுக்கும் முடியாதுன்னு சொல்லிட்டான் ஐயா அதான் எனக்கு சங்கடமா போச்சு. போன வருஷம் கூட குழந்தையை வச்சி தான் திதி கொடுத்தோம்.
ஐயர்: என்னமா சொல்றேள் மகன் இருக்கானா? அப்போ இறந்தவர் குழந்தை தான் திதி கொடுக்க முடியும் அதான் முறை, குழந்தைக்கு தான் முதல் உரிமை உண்டு. நீங்கள் தயவு செய்து பிள்ளையை உடனேஅழைச்சிண்டு வாங்கோ என்றார்.
சேது: ஐயரே இப்போ அவன் எனக்கு மகன் முறை அவன் எப்படி விக்ரமிற்கு திதி கொடுக்க முடியும்?.
ஐயர்: இறந்தவருடைய அடுத்த வாரிசு அந்த குழந்தைதான். நீங்கள் தகப்பன் ஸ்தானத்தில் தான் இருக்க முடியும் தகப்பனாக முடியாது. குழந்தையை தவிர வேறு நபர் திதி கொடுத்தால், உங்கள் இறந்த முன்னோர்கள் ஏற்று கொள்வார்கள் ஆனால் உன் சகோதரன் ஆன்மா அதை ஏற்று கொள்ளாது.
வேறுவழியில்லாமல் குழந்தையை அழைத்து வந்து திதி கொடுத்து பிண்டத்தை தண்ணீரில் கரைத்து விட்டு சென்றனர்.
திதி கொடுத்து முடித்து வீட்டிற்கு செல்லும் வழியில் ஒரு சித்தர் இவர்களை நோக்கி,
"சர்வமே சிவமயம்
அவன் மீட்ட உயிருக்கு பிண்டம் எதற்கு?
அனையாத விளக்கிற்கு
எண்ணெய் ஊற்றி ஒளி கொடுக்கும் உத்தமர்களே சென்ற சரீரம் திரும்பி வந்தாள் உங்கள் சகலமும் அடங்கிவிடும்... மூடர்களே கொஞ்சம்
இந்த பித்தன் கூறுவதை கேளும்".
என்று கூறிவிட்டு சிரிக்க தொடங்கினார்.
அவரை பார்க்கவே பயமாய் இருந்தது, கோமதி அவர் அருகில் சென்று சாமி என்ன சொல்றிங்க சாமி ஒண்ணுமே புரியல விரிவா சொல்லுங்க சாமி என்றாள்.
மீண்டும் சித்தர் சிரித்து விட்டு, உன் வீட்டை விட்டு சென்ற ஒளி திரும்பி வந்தால் உன் வீட்டில் பூகம்பம் வெடிக்கும், எல்லாம் விதி என்று கூறி கிளம்பிவிட்டார்.
Sithar sonna turning point visayam super nanba
Kathai romba arumaiyaga etharthamaga nadai perukirathu
Suba and sethum serum naalai miga avaludan ethir parthu kondu irukiren
Naan ippothu thaan kathaiyai konjam konjamaga padithu kondu irukkiren.. athanal sethuvum subavum evvalavu thuram serthu irukkirargal endru theriya villai.. aanal kandippaga kathaiyai thodarnthu padithu thodarnthu comment pannuven endru uruthi kurukiren
Nandri vanakkam