Thread Rating:
  • 2 Vote(s) - 3 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
எனக்குள் ஒருவன் (completed)
#85
அந்த கோயிலை கடந்த ஒரு வெள்ளைக் டெம்ப்போ கார் படு வேகமாக பறந்து கொண்டிருந்தது.. பின் சீட்டில் இரண்டு முரடர்கள் அமர்ந்திருந்தார்கள்.. பார்க்க பக்கா கடத்தல்காரர்கள் போல இருந்தார்கள்..

டிரிங்.. டிரிங்..
டிரிங்.. டிரிங்..
டிரிங்.. டிரிங்..
டிரிங்.. டிரிங்..

ஒரு முரடன் யாருக்கோ போன் போட்டு லைன் ட்ரை பண்ணிக் கொண்டு இருந்தான்..

போன் எடுக்கப்பட்டது..

பாஸ் நீங்க சொன்ன பையனை கடத்திட்டோம்.. இப்போ என்ன பண்ணனும்.. என்று கேட்டான் ஜெகன்.. அந்த முரட்டு ஆசாமிகளின் ஒருவன்..

மறுமுனையில்.. வெரி குட்.. அந்த பையனை என்னோட கெஸ்ட் ஹவுஸ்க்கு கொண்டு வந்து கட்டி போட்டு வை.. பையன் தப்பிச்சிட போறான்.. என்றது அந்தப் பக்கத்தில் இருந்த போன் குரல்..

அவன் எங்க பாஸ் தப்பிச்சி போக போறான்.. நாங்க கடத்திட்டு வந்ததில் இருந்து பேய் அடிச்சவன் மாதிரி பேந்த பேந்த முழிச்சிட்டு இருக்கானே தவிர உடம்புல ஒரு அசைவும் இல்ல.. என்றான் ஜெகன்

சரி விஷ்ணுவை கெஸ்ட் அவுஸ் கூட்டிட்டு போ.. நான் சொன்ன மாதிரி எதுக்கும் கட்டி பேட்டே வை.. என்றது மறுமுனை

ஓகே பாஸ்.. இப்போ உங்க கெஸ்ட் அவுஸ் நோக்கி தான் நாங்க போய்கிட்டு இருக்கோம்.. என்று சொல்லி வைத்தான் ஜெகன்..

டேய் குமாரு.. பாஸ் இந்த பையனை அவர் கெஸ்ட் அவுஸ்ல கட்டி போட சொல்லி இருக்காரு.. என்றான் ஜெகன் மற்றொருவனை பார்த்து..

இந்த இரு முரடர்கள் குமாருக்கும் ஜெகனுக்கு மத்தியில் ஒரு சின்ன உருவம் அமைதியாக அமர்ந்திருந்தது..

அந்த உருவம் வேறு யாரும் இல்லை நமது விஷ்ணு உருவம் தான்.. விஷ்ணு உருவத்தில் இருக்கும் கோபால் தான் அவர்கள் இடையே அமர்ந்தபடி பேந்த பேந்த முழித்துக் கொண்டிருந்தார்..

ஆனால் உடலில் எந்த அசைவும் இல்லை.. கண்கள் மட்டும் தான் திறந்திருந்தது.. ஏதோ கோமா ஸ்டேஜில் இருப்பது போல் இருந்தது அவர் உருவம்..

யார் இந்த கடத்தல்காரர்கள்.. இவர்கள் ஏன் விஷ்ணு உருவில் இருக்கும் கோபாலை கடத்த வேண்டும் என்பதை பற்றி இப்போது பார்ப்போம்..

கார் விரைந்து சென்று அந்த பாஸ் குறிபிட்ட அவுட்ஹவுஸ் வாசலில் நின்றது..

விஷ்ணு உடலை குமாரும் ஜெகனும் ஆளுக்கு ஒரு பக்கமாக நின்று கை தாங்களாக து£க்கி மெல்ல மெல்ல நடக்க வைத்து அவுட் ஹவுஸ் நோக்கி நடத்தி சென்றனர்..

ஜெகன் மறுபடியும் போன் போட்டான்..

பாஸ் விஷ்ணுவை அவுட்டவுஸ் கொண்டு வந்து கட்டி போட்டுட்டோம்.. இப்போ அடுத்தது என்ன பண்றது.. என்று கேட்டான் ஜெகன்..

போன் குரல் மறுமுனையில் இருந்து ஏதோ சொல்ல சொல்ல..

சரி பாஸ் அப்படியே பண்ணிட்றோம்.. என்று சொல்லி ஜெகன் போனை கட் பண்ணான்..

அடுத்து ஒரு நம்பருக்கு போன் அடித்தான்..

டிரிங்.. டிரிங்..
டிரிங்.. டிரிங்..
டிரிங்.. டிரிங்..
டிரிங்.. டிரிங்..

போன் எடுக்கப்பட்டது..

ஹலோ யாருங்க.. என்று கேட்டது மறுமுனையில் ஒரு இனிமையான பெண் குரல்..

ஹலோ.. யாரு வந்தனாவா.. என் பெயர் கடத்தல்காரன் ஜெகன்.. உங்க பையன் விஷ்ணு உடம்பை இப்போ நாங்க கடத்தி வச்சி இருக்கோம்.. என்றான் ஜெகன்..

ஐயோ.. என் மகன் விஷ்ணு உடம்பை கடத்திட்டீங்களா.. எப்படிங்க முடியும்.. அவன் தான் டாக்டர் வசந்தபாலன் பாதுகாப்புல ட்ரீட்மெண்ட்ல.. அப்ஷர்வேஷன்ல இருக்கானே.. அப்புறம் எப்படி கடத்துனீங்க.. என்று வந்தனா அந்த பக்கம் பதறினாள்..

அட ஆமாம்மா.. அந்த டாக்டர் பாதுகாப்புல இருந்த விஷ்ணு உடம்பை நாங்க இப்போ கடத்திட்டு வந்துட்டோம்.. பக்கத்துல உன் புருஷன் கோபால் இருக்காறா.. என்று கேட்டான் கடத்தல்காரன் ஜெகன்..

ம்ம்.. இருக்காருங்க.. கொடுக்கவா.. என்றாள் வந்தனா பதட்டத்துடன்..

வேண்டாம்.. வேண்£டாம்.. கோபாலிடம் போன் கொடுக்க வேண்டாம்.. ஆனா.. நாங்க சொல்ற மாதிரி செய்ங்க வந்தனா.. என்றான் ஜெகன்..

சரிங்க.. சொல்லுங்க கடத்தல்காரர் சார்.. என்றாள் வந்தனா கவனமாக..

உன் புருஷன் கோபால் கிட்ட ஒரு சூட்கேஸ் நிறைய நிறைய பணம் குடுத்து நாங்க சொல்ற பாளடைஞ்ச பங்களாவுக்கு அனுப்பி வைங்க..

நிறைய பணம்னா.. எவ்ளோங்க.. என்று கேட்டாள் வந்தனா..

எவ்வளவு பணம் உங்களால குடுக்க முடியுமோ அவ்ளோ குடுத்து அனுப்புங்க.. டெம்ப்போ எல்லாம் வச்சி கடத்தி இருக்கோம்மா.. நீங்களா ஏதாவது பாத்து போட்டு குடுங்க.. காரணம் எங்களுக்கு பணம் முக்கியம் இல்ல.. ஆள் மாறாட்டம் தான் முக்கியம்.. என்றான் ஜெகன்

என்னது.. என்னது.. ஆள் மாறாட்டமா.. என்று குறிக்கிட்டாள் வந்தனா..

இல்ல இல்ல.. உங்க ஆளை பத்திரமா மாறாம உங்ககிட்ட ஒப்படைக்கணும்ல.. அத தான் அப்படி தெரியாம சொல்லிட்டேன் என்று ஜெகன் சொல்லி தன் நாக்கை கடித்துக் கொண்டான்..

சே.. சொதப்பிட்டோமோ.. நம்ம திட்டம் வந்தனாவுக்கு தெரிஞ்சிருக்குமோ.. என்று எண்ணினான்..

சரிங்க.. நான் என் வீட்டுக்கார்கிட்ட பண பெட்டியை குடுத்த அனுப்புறேங்க.. என் பையன் விஷ்ணுவை கொஞ்சம் பத்திரமாக அவர் கூட அனுப்பி வச்சிடுங்க.. என்று கூறினாள்..

சரிம்மா.. அட்ரஸ் லொக்கேஷன் உங்க வாட்சப்க்கு ஷேர் பண்ணி அனுப்பி இருக்கேன்.. உடனே கோபாலை வரச் சொல்லுங்க.. இந்த விஷயம் யாருக்கும் தெரியகூடாது சரியா.. போலீஸ்க்கு எதும் சொல்ல வேண்டாம்.. அப்படி சொன்னா.. என்று இழுத்தான் ஜெகன்..

இல்லங்க.. சொல்லலிங்க.. நான் ஏங்க போலீஸ்க்கு எல்லாம் சொல்ல போறோம்.. எங்களுக்கு எங்க பையன் விஷ்ணு உயிரோட உருப்படியா கிடைச்சாலே போதுங்க.. என்று சொன்னாள் வந்தனா..

இரண்டு பக்கமும் போன் வைக்கப்பட்டது..

என்னங்க.. நம்ம மகன் விஷ்ணுவை யாரோ இரண்டு கடத்தல்காரங்க கடத்தி வச்சி இருக்காங்களாம்.. என்று கோபால் உருவத்தை பார்த்து சொன்னாள் வந்தனா..

தெரியும் வந்தனாம்மா.. நாம்ம கோயில்ல இருந்து வெளியே வந்தோம்ல.. அப்போவே நம்மல ஒரு வெள்ளை டெம்ப்போ கார் கிராஸ் ஆச்சி பாருங்க.. அதுல நான் எட்டி பார்த்தப்போ.. அப்பா இரண்டு முரடர்களுக்கு நடுவுல அதுல உட்கார்ந்திருந்தரு.. என்றான் கோபால் உருவில் இருந்த விஷ்ணு..

அதை ஏங்க என்கிட்ட முன்னாடியே சொல்லல.. இருங்க இருங்க.. என்னது அப்பாவா.. அப்பானு ஏதோ சொன்னீங்க.. என்று கொஞ்சம் சந்தோகம் வந்தவளாய் கோபால் உருவத்தை பார்த்தாள் வந்தனா..

இல்ல இல்ல.. நம்ம பையன் விஷ்ணு உருவம் அந்த காருக்குள்ள உக்காந்து இருந்ததை பார்த்தேன்.. இப்ப நம்ம பையன் நமக்கு கிடைக்க போறான்ல.. அப்பாடா.. என்று நிம்மதி பெரும்மூச்சி விட்டு சொல்வதற்கு தான் தெரியாம அப்பா.. என்று சொல்லிட்டேன் வந்தனாம்மா.. என்று சமாளித்தான் கோபால் உருவில் இருந்த விஷ்ணு..

சரி சரி.. நல்ல வேல அந்த காரை பார்த்தீங்க.. போய் இந்த பணப்பெட்டிய அந்த கடத்தல்காரங்ககிட்ட குடுத்துட்டு நம்ம பையன் விஷ்ணுவை உடனே கையோட கூட்டிட்டு வந்துடுங்க.. என்று அனுப்பினாள் வந்தனா..

என்ன கொடும சார் இது.. என் உடம்பை மீட்டுட்டு வர.. என்கிட்டயே அம்மா பணம் குடுத்து அனுப்புறாங்களே.. என்று நினைத்துக் கொண்டான்..

கோபால் உருவில் இருந்த விஷ்ணு அந்த கடத்தல்காரர்கள் அனுப்பிய லொக்கேஷன் மேப்பை ஃபாலோ பண்ணி அவர்கள் இருந்த இடம் சென்று அடைந்தான்..

ஜெகன் அங்கிள்.. இந்தாங்க.. பணபெட்டி.. அம்மா குடுத்து அனுப்பிச்சாங்க.. என்று பணபெட்டியை ஜெகனிடம் நீட்டினான் கோபால் உருவில் இருந்த விஷ்ணு..

என்னது அங்கிளா.. யோவ் கிழ பாடு.. என்னை பார்த்தா உனக்கு அங்கிள் மாதிரி தெரியுதா.. என்று கோபாலை அடிக்கப் போனான் அந்த ரவுடி ஜெகன்..

ஐயோ.. சாரி சாரி தெரியாம பழக்க தோஷத்துல சொல்லிட்டேன்.. இந்தாங்க பணம் என் அப்பாவை என்கிட்ட குடுங்க.. என்றான் விஷ்ணு..

என்ன கோபால் சார் குழப்புறீங்க.. என்னை அங்கிள்னு சொல்றீங்க.. உங்க பையனை அனுப்புன்னு சொல்றதுக்கு பதிலா அப்பாவை அனுப்புன்னு மாத்தி மாத்தி சொல்லி குழப்புறீங்களே கோபால் சார்.. என்று குழப்ப நிலையில் கடத்தல்காரன் ஜெகன் கேட்டான்..

சரி உங்களுக்கும் வேண்டாம் எனக்கும் வேண்டாம்.. அந்த டெம்ப்போ காருல கடத்திட்டு போனீங்கல்ல அந்த உருவத்தை என்கிட்ட ஒப்படைச்சிடுங்க.. இந்தாங்க பணபெட்டி.. இத முதல்ல பிடிங்கங்க அங்கிள்.. என்னால ரொம்ப நேரம் து£க்க முடியல.. ரொம்ப வெயிட்டா இருக்கு.. என்று கால்களை உதைத்து உதைத்து துள்ளி துள்ளி மழலைதனமாக கோபால் உருவம் சொன்னது..

ஜெகனுக்கு ஒன்றுமே புரியவில்லை.. சரி பணம் வந்து சேர்ந்தா போதும் என்று நினைத்து.. கோபால் உருவத்திடம் இருந்து பணப் பெட்டியை வாங்கப் போனான்..

அப்போது...

ஹான்ஸ் அப்.. என்று ஒரு பின்னாடி இருந்து ஒரு குரல் கேட்டது..

கைய து£க்கிட்டு அப்படியே அசையாம நில்லுங்க.. என்று அந்த குரல் எச்சரித்தது..

ஜெகனும் குமாரும் பின்னாடி யார் நிற்பது என்பதை அறியாமலேயே கைகளை து£க்கினார்கள்..

கோபால் உருவமும் கையை து£க்கியது..

டேய் விஷ்ணு.. நீ எதுக்கு கைய து£க்குற.. கைய கீழ போடு.. என்று சொன்னபடி அவர்கள் முன்பாக டாக்டர் வசந்தபாலன் தன் கையில் ஒரு சின்ன மினி பிஸ்டலுடன் வந்து நின்றார்..

டாக்டர் சார்.. நீங்களா.. நீங்க எங்க இங்க.. அதுவும் இல்லம.. கோபாலை போய் விஷ்ணுனு சொல்றீங்க.. அவர் பையன் விஷ்ணுவை தான் நாங்க கடத்தி எங்க பாஸ் அவுட்டவுஸ்ல கட்டி வச்சி இருக்கோமோ.. ஒன்னுமே புரியல டாக்டர் சார் என்றான் ஜெகன் அவரை பார்த்து...

ஹா.. ஹா.. என்னை இங்க நீங்க எதிர்பார்க்கலல்ல.. சொல்றேன்.. சொல்றேன்.. நான் என்னோட ப்ரைவேட் ஆராய்ச்சி லேப்புக்கு போய் பார்த்தப்போ அங்கே என்னோட அடியாள் கருணாவை அடிச்சி போட்டுட்டு நீங்க ரெண்டு பேரும் பணத்துக்கு ஆசைப்பட்டு ராஜகோபாலோட மகன் விஷ்ணுவை கடத்துனத நான் பார்த்தேன்..

அப்படி நீங்க விஷ்ணு உடம்பை து£க்கிட்டு உங்க காருக்குள்ள போகும் போது நைசா உங்களுக்கு தெரியாம உங்க வெள்ளை நிற கார் டிக்கில நான் ஏறி ஒளிஞ்சிகிட்டேன்.. நீங்க பேசுனதை எல்லாம் அப்படியே டிக்கில இருந்து ஒட்டு கேட்டுட்டு இருந்தேன்..

சரியான சந்தர்பத்துல கோபாலையும் விஷ்ணுவையும் உங்ககிட்ட இருந்து இப்போது நான் காப்பாத்திட்டேன்.. ஹா.. ஹா.. என்று சொல்லி சத்தமாக சிரித்தார் டாக்டர் வசந்தபாலன்..

கோபால் உருவத்திற்கு அங்கு நடப்பது எதுவுமே புரியவில்லை.. சரி டாக்டர் வசந்தபாலன் அங்கிள் நம்மளை காப்பாத்த வந்ததும் ஒரு வகையில நல்லது தான்னு நினைச்சி.. அங்கிள் அங்கிள்.. இந்த பணப்பெட்டியை பிடிங்களேன் ப்ளீஸ்.. என்னால ரொம்ப நேரம் து£க்க முடியல என்று டாக்டரிடம் சென்று பணப்பெட்டியை கொடுத்தான்..

இது ஒரு இம்சைடா.. இதுக்கு தான் சின்ன பையன் கையில இவ்வளவு பெரிய பெட்டியை குடுத்து இருக்கக் கூடாதுன்னு சொல்றது..

உன் அம்மாவுக்கு கொஞசம் கூட அறிவே இல்லடா.. சின்ன பெட்டியா குடுத்து அனுப்பி இருக்கலாம்ல.. என்று சலித்துக் கொண்டார் டாக்டர் வசந்தபாலன்..

உன்னையும் காப்பாத்தி.. உன் பணப்பெட்டியையும் காப்பாத்த வேண்டிய நிலைமையா போச்சுடா விஷ்ணு.. என்று தலையில் அடித்துக் கொண்ட வசந்தபாலன்.. சரி சரி வாங்க எல்லாம் விஷ்ணு இருக்கும் கெஸ்ட் ஹவுஸ்க்கு போகலாம் என்று சொல்ல..

கடத்தல்காரர்கள் ஜெகனுக்கும் குமாருக்கும் சத்தியமாக ஒன்றுமே புரியவில்லை.. கோபால் உருவத்தை பார்த்து வசந்தபாலன் பேசியதை பார்த்து பைத்தியமே பிடித்துவிடும் போல இருந்தது அவர்களுக்கு..

அனைவரும் விஷ்ணு கட்டி போட்டு அடைக்கப்பட்டு இருந்த கெஸ்ட் ஹவுஸ் நோக்கி விரைந்தனர்..

டாக்டர் சென்று விஷ்ணு உடம்பில் இருந்த கட்டுக்களை அவிழ்த்தார்..

விஷ்ணு உடல் கண்கள் மட்டும் திறந்து இருந்தது.. ஆனால் எந்த வித அசைவும் இல்லை..

டாக்டர் வசந்தபாலன் விஷ்ணுவின் கண்கள் இரண்டிலும் டார்ச் லைட் அடித்து பார்த்தார்..

பக்கத்தில் இருந்த கோபால் உடம்பை பார்த்து சொன்னார்.. உன் அப்பாவோட கண் மட்டும் தான் இப்பொதைக்கு வேலை செய்து.. உடம்புல எந்த அசைவும் இல்ல.. அவரால இந்த உலகத்துல நடக்குறதை பார்க்க முடியும் கேட்க முடியும்.. ஆனா அசைய முடியாது.. அவர் ஹாப் கோமா ஸ்டேஜ்ல இருக்கார் என்றார்..

ஐய்யோ.. இப்ப என்ன பண்றது டாக்டர் அங்கிள்.. என்று பதறியது கோபால் உடம்பு..

ஒன்னும் கவலைப்படாத.. என்னோட லாப்ல உன் அப்பா.. அதாவது விஷ்ணு உடம்பு இருந்தா அவ்வளவா பாதுகாப்பு இல்ல.. பாரு.. இந்த கடத்தல்காரனுங்க கடத்திட்டானுங்க..

திரும்ப விஷ்ணு உடம்பை என் லேப்லயே வச்சா.. திரும்பி வேற யாராவது கடத்த கூடும்.. அதனால அவர் உடம்பை நீ வீட்டுக்கு எடுத்துட்டு போ.. வர்ற திங்கள் கிழமை காலையிலே ஒரு சின்ன ஆப்ரேஷன் பண்ணா எல்லாம் சரியாயிடும் ஓகேவா.. என்றார் டாக்டர் வசந்தபாலன்..

ஓகே அங்கிள்.. நான் அப்பாவை என்னோட கூட்டிட்டு போறேன் என்று சொல்லி.. விஷ்ணு உடலை மெல்ல மெல்ல து£க்கி நடக்க வைத்து காரில் ஏற்றி.. ஓகே.. நாங்க வர்றோம் அங்கிள் என்று பைபை டாட்டா சொல்லி கோபால் உடம்பில் இருந்த விஷ்ணு கிளம்பினான்..

தம்பி ஒரு நிமிஷம்.. உன் அம்மாவுக்கு இப்போ விஷ்ணு உடம்புல இருக்கறது அப்பா கோபால்னு தெரிய வேண்டாம் சரியா.. திங்கக்கிழமை நான் மாற்று ஆப்ரேஷன் பண்றவரை அம்மாவுக்கு நீ புருஷனாவே நடி.. ஆப்ரேஷன் முடிஞ்சதும் எல்லா உண்மைகளையும் சொல்லிக்கலாம் ஓகோவா.. என்று கோபால் உருவத்தை எச்சரித்து அனுப்பினார் வசந்தபாலன்..

கோபால் உருவத்தில் இருந்த மகன் விஷ்ணுவும்.. விஷ்ணு உருவத்தில் இருந்த அப்பா கோபாலும்.. தங்கள் வீட்டை நோக்கி வேக வேகமாக அந்த காரில் சென்று கொண்டிருந்தனர்..

அவர்களோடு அந்த பணப்பெட்டியும் அமைதியாக பயணம் செய்யத் துவங்கியது..

தொடரும் ... 11
[+] 7 users Like Vandanavishnu0007a's post
Like Reply


Messages In This Thread
RE: எனக்குள் ஒருவன் - by Vandanavishnu0007a - 27-07-2021, 03:31 PM



Users browsing this thread: 20 Guest(s)