Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
மோடியை ஏற்காதவர்கள் இந்தியரில்லை: மத்திய அமைச்சர்
புதுடில்லி : இந்தியாவின் தந்தையாக மோடியை ஏற்க தயாராக இல்லாதவர்கள் தங்களை இந்தியர்கள் என சொல்லிக் கொள்ள முடியாது என மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
செப்.,22 ம் தேதி அமெரிக்காவின் ஹூஸ்டனில் நடந்த ஹவுடி மோடி நிகழ்ச்சியில் பிரதமர் மோடியுடன் கலந்து கொண்ட அமெரிக்க அதிபர் டிரம்ப், ஏராளமான பிரச்னைகள் சண்டைகள் இருந்த போதிலும் மக்களை ஒன்றுபடுத்திய பிரதமர் மோடி, இந்தியாவின் தந்தை என புகழ்ந்து பேசினார். அமெரிக்க அதிபர் டிரம்பின் இந்த வார்த்தைக்கு காங்., கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது.
இந்நிலையில் இது பற்றி கருத்து தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், வெளிநாட்டில் வசிப்பவர்கள் என பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இது பிரதமர் மோடி என்ற தனிநபர் மற்றும் தகுதியாலேயே ஏற்பட்டது. அமெரிக்க அதிபரிடம் இருந்து முதல் முறையாக இது போன்றதொரு வார்த்தை வந்துள்ளது. வேறு எந்த தலைவரையும் இல்லாமல் இந்திய பிரதமரை மட்டும் பாராட்டி உள்ளார். இதனால் பெருமை கொள்ளாதவர்களை இந்தியர்களாகவே கருத முடியாது. டிரம்ப் பேசியதில் காங்.,க்கு ஏதாவது பிரச்னை என்றால் அவரிடம் நேரடியாக வாதம் செய்யட்டும் என்றார்.
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
தமிழகத்தில் ஏன் வர முடியலை...எது பண்ணாலும் எதிர்ப்பு...கோபத்தில் அதிரடி திட்டம் போட்ட பாஜக!
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் மத்தியில் பாஜக கூட்டணி அரசு 353 இடங்களை கைப்பற்றியது. இதில் பாஜக மட்டும் 303 இடங்களில் வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. இதில் என்னவென்றால் தமிழகத்தில் அதிமுக, பாஜக கூட்டணி தமிழகத்தில் தேனி தொகுதியை தவிர போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் படுதோல்வி அடைந்தது. இந்தியா முழுவதும் பாஜகவிற்கு ஆதரவு அதிகமாக இருந்தாலும் தமிழகம் உட்பட தென் மாநிலங்களில் பாஜகவிற்கான ஆதரவு குறைவாக உள்ளது. குறிப்பாக தமிழகத்தில் பாஜகவின் எதிர்ப்பு அலை அதிகமாகவே காணப்படுகிறது.
இதனால் பாஜக தலைமைக்கு தமிழக பாஜக நிர்வாகிகள் மீது கடும் அதிருப்தியை நிலவியது. தெலுங்கானா கவர்னராக தமிழிசை பதவி ஏற்று ஒரு மாதம் ஆகியும் தமிழக பாஜக தலைவரை நியமிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதற்கு தமிழக பாஜக நிர்வாகிகள் மீது தமிழக மக்களுக்கு இருக்கும் அதிருப்தியும் காரணம் என்று சொல்லப்படுகிறது. அதே போல் முத்தலாக் விஷயத்தில் பாஜக எடுத்த நிலைப்பாடு தான் வேலூர் தொகுதியில் அதிமுக, பாஜக கூட்டணி தோல்விக்கு முக்கிய காரணமாக சொல்லப்பட்டது. அதனையடுத்து காஷ்மீர் விவகாரத்தில் தமிழக அரசியல் கட்சியனர் தீவிரம் காட்டியதும் பாஜகவிற்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. கடந்த சில நாட்களுக்கு முன் அமித்ஷா இந்தி பற்றி கூறிய கருத்துக்கு தமிழகத்தில் பலத்த எதிர்ப்பு கிளம்பிய நிலையில் அமித்ஷா தன்னுடைய நிலைப்பாட்டில் இந்தி பற்றி கூறிய கருத்துக்கு விளக்கம் அளித்தார்.
அதன் பின்பு எதிர்க்கட்சிகள் போராட்டத்தை தாற்காலிகமாக நிறுத்தி வைத்தது. இந்த நிலையில் தமிழகத்தில் பாஜக கட்சியை வளர்க்க பாஜக தலைமை சில அதிரடி திட்டங்களை வகுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இது பற்றி அரசியல் வட்டாரங்களில் விசாரித்த போது, அதிமுக, திமுக இரண்டு திராவிட கட்சிகளும் நாடார் சமுதாய மக்களுக்கும், வன்னியர் சமுதாய மக்களுக்கும் அதே போல் தேவேந்திர குல வேளாளர் மக்களுக்கும் முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்று அம்மக்களிடையே ஒரு கருத்து நிலவுகிறது.
இதனால் ஜாதி அரசியலை முன்னெடுத்து அந்த குறிப்பிட்ட சமுதாய மக்களுக்கு பதவி கொடுத்து அவர்களது ஆதரவை பெரும் நோக்கத்தில் பாஜக காய் நகர்த்தி வருவதாக சொல்லப்படுகிறது. இதற்கு சான்றாக சமீபத்தில் தெலங்கானா ஆளுநராக தமிழிசை சவுந்திரராஜனுக்கு பதவி கொடுக்கப்பட்டது. இதே போல் DRDO மற்றும் ISRO வின் உயர் பதவியில் நாடார்களுக்கு மத்தியில் ஆளும் பாஜக அரசு முக்கியத்துவம் கொடுத்து வருவதாக கூறுகின்றனர். இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது வருகிற சட்டமன்ற தேர்தலையும், பாஜக கட்சியை தமிழகத்தில் நிலை நிறுத்தவும் பாஜக திட்டம் போட்டு தற்போது இருந்தே செயல்பட ஆரம்பித்துவிட்டது என்கின்றனர்.
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
தமிழனுக்கு மதம் இருக்கிறதா...அரசியல் சூழ்ச்சி...கீழடி தரும் அதிர்ச்சி தகவல்!
இந்திய வரலாற்றை வடக்கின் பார்வையிலிருந்தே எழுதிவந்த ஆய்வாளர்கள் தெற்கு நோக்கித் திரும்பவேண்டும் என்பதைப் பன்னெடுங்காலமாக வலியுறுத்தி வரப்பட்ட நிலையில், ஹரப்பா, ராகிகடி புதைபொருள் ஆய்வுகள் வரிசையில் அதனை உறுதியாக மெய்ப்பித்திருக்கிறது கீழடி. சிவகங்கை மாவட்டம் கீழடியில் உள்ளது பள்ளிச்சந்தைப் புதூர். இங்குள்ள உழவுநிலமான மண்மேட்டில் தொல்லியல் எச்சங்கள் பலமுறை கண்டெடுக்கப்பட்ட நிலையில், 2015-ஆம் ஆண்டு அகழ்வாராய்ச்சிப் பணிகளை தொடங்கியது மத்திய தொல்லியல் துறை. அது நடத்திய மூன்றுகட்ட ஆய்வுகளில் கீழடியில் வாழ்ந்த தமிழர்களின் நாகரிகம் கி.மு.3-ம் நூற்றாண்டு என கணிக்கப்பட்டது. ஆனால், மத்திய தொல்லியல் துறையின் செயல்பாடுகளில் அதிருப்தியடைந்த தமிழ் ஆர்வலர்கள், அறிஞர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து, நான்காம் கட்ட ஆய்வை 2018-ல் கையிலெடுத்தது மாநில தொல்லியல் துறை.
தமிழகத்தில் நிலவிய சங்ககால பண்பாட்டு வரலாற்று ஆய்வில் மாபெரும் திருப்புமுனையாக இந்த ஆய்வு அமையுமென்று அதுவரை யாரும் எதிர்பார்க்கவில்லை. கீழே தோண்டத்தோண்ட தமிழரின் பெருமையை மென்மேலும் உயர்த்தி இருக்கிறது கீழடி. வைகை நதிக்கரை நாகரிகமாக கீழடியில் வசித்துவந்த தமிழரின் நாகரிகம் கி.மு. 6-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்றும், அதாவது 2,600 ஆண்டுகள் பழமையான சிறப்பம்சங்களைக் கொண்டிருந்ததையும் இந்த ஆய்வு உறுதிப் படுத்துகிறது.
சிந்துச் சமவெளி நாகரிகம் தொல்தமிழர் நாகரிகம் என்பதை சர்வதேச ஆய்வாளர்கள் ஹரப்பா, மொகஞ்சதாரோ ஆய்வுகள் வழியாக உறுதிப்படுத்தினர். அதை ஆரிய நாகரிகமாக சித்தரிக்க எடுக்கப்படும் ஒவ்வொரு முயற்சியையும், வரலாற்று தொன்ம ஆதாரங்கள் முறியடித்து வருகின்றன. குறிப்பாக ஹரியானா மாநிலம் ராகிகடியில் எடுக்கப்பட்ட 4,500 ஆண்டுகள் பழமையான மனித எலும்புக்கூடுகளின் மரபணு ஆய்வு முடிவு, ஸ்டெப்பி புல்வெளிப் பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்துவந்த ஆரியர்களின் மரபணுக்களோடு ஒத்துப் போகவில்லை என்பதை உறுதிசெய்தது. மேலும், இந்தியா முழுமைக்கும் பரந்துவிரிந்த நிலப்பரப்பில் வாழ்ந்த, ஆரியர்களுக்கு முற்பட்ட மனிதர்களின் மரபணுவாக இருப்பதற்கான சாத்தியக்கூறுகளும் விவாதிக்கப்பட்டன.
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
இந்நிலையில், உலக அரங்கில் தமிழர்களுக்குக் கிடைத்திருக்கும் புதிய பலமாக கீழடி அகழாய்வு முடிவுகள் பார்க்கப்படுகின்றன. சங்ககாலத் தமிழரின் வைகை ஆற்று நாகரிகத்தில் வேளாண் சமூகமாக, நகர நாகரிகமாக, வளமும் செழுமையுமாய் நம் மூதாதையர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் கீழடியில் கிடைத்துள்ளன. அகழாய்வு நடந்த பகுதி தொழில்நகரமாக இருந்திருக்கிறது. நேர்த்தியான வேலைப்பாடுகளுடன் கட்டப்பட்டுள்ள கட்டடங்கள், சுட்ட செங்கற்களும், சுண்ணாம்பும், கூரை ஓடுகளும் கொண்டு எழுப்பப் பட்டவை. பூச்சுக்காக பயன்படுத்தப்பட்ட சுண்ணாம்புச் சாந்தில் 97 சதவீதம் சுண்ணாம்பு இருந்ததுதான் இத்தனை ஆண்டுகாலம் அவை நிலைத்திருந்ததற்கான காரணம்.
இந்தியாவிலேயே மிகவும் பழமையான சிந்துச் சமவெளி பண்பாட்டின் வரிவடிவங்களின் நீட்சியாகவும், தமிழ் பிராமி எழுத்துகளின் முன்னோடியாகவும் கீறல்கள் எனப்படும் வரிவடிவங்கள் பார்க்கப்படுகின்றன. கீழடியில் கண்டெடுக்கப்பட்ட ஆயிரக்கணக்கான பானை ஓடுகளில் இந்தக் கீறல்கள் இடம்பெற்றிருப்பதும், அவை சிந்து சமவெளியில் கண்டெடுக்கப்பட்ட எழுத்துகளோடு ஒத்துப்போவதும் இந்தியா முழுமைக்கும் தொல்தமிழர் நாகரிகம் பரவிக் கிடந்ததற்கான சான்றுகளுக்கும், பார்வைக்கும் வித்திடுகின்றன. அதுபோக, சங்ககாலத்தில் புலவர்கள் மட்டுமின்றி, எளிய மக்களும் எழுத்தறிவு பெற்றிருந்ததற்கான ஆதாரங்களாக அவை விரிகின்றன.
[color][font][size]
வைகை நதிக்கரை நாகரிகத்தில் வேளாண் சமூகமாகவும், கால்நடைத் தொழிலை முதன்மையாகக் கொண்டும் செழுமையாக வாழ்ந்திருக்கிறார்கள் தமிழர்கள். அங்கு கிடைத்த உயிரினங்களின் எலும்புகளில் வெட்டுத் தழும்புகள் இருப்பதன்மூலம், உணவுக்காக அவற்றைப் பயன்படுத்தியதும் தெரியவருகிறது. திமிலுள்ள காளை, பசு, காட்டுப்பன்றி, வெள்ளாடு, எருமை, மயில் போன்ற உயிரினங்களாகவே அவை இருப்பதாலும், ஆரியம் தன் புராணங்களில் முன்வைக்கும் குதிரை இல்லாதபடியாலும், இது ஆரியம் நுழைவதற்கு முந்தைய நாகரிகம்தான் என்பதை நிறுவ இயலும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
கீழடி அகழாய்வில் சுடு மண்ணாலான 13 மனித உருவங்கள், 3 விலங்கு உருவங்கள், 650-க் கும் மேற்பட்ட விளையாட்டுப் பொருட்கள், 35 காதணிகள், அணிகலன்கள், தங்கம், செம்பு, இரும்பு போன்ற உலோக தொல்பொருட்கள் கிடைத்துள்ள போதிலும், மத வழிபாட்டுக்கான எந்தவித ஆதாரமும் கிடைக்கப்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆரியர்களின் வேத நாகரிகத்துக்கு மாறான, தனித்துவமிக்க இயற்கை சார்ந்த சமூகமாக தமிழர்கள் வாழ்ந்தார்கள் என்பதையே கீழடியும் உண்மையாக்குகிறது. இதன்மூலம், எந்தவொரு மத அடையாளத்தையும் தமிழர்கள் கொண்டிருக்கவில்லை என்பது உறுதியாகிறது. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும், யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற வரிகள் எழுதப்படுவதற்கு முன்பே அந்த வாழ்க்கை முறையைத் தமிழர்கள் கடைப்பிடித்திருப்பதும் தெரிய வருகிறது.
தமிழர்களின் பெருமையை உலகறியச் செய்யும் இந்தப் பணியை சிறப்புடன் மேற்கொண்டு ஆய்வு முடிவுகளை வெளியிடுவதில் முனைப்பு காட்டிய தமிழக தொல்லியல் துறை முதன்மைச் செயலாளர் த.உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ்., தீராத எழுத்துப்பணியின் மூலம் முறையான அகழாய்வு மேற்கொள்ள வலியுறுத்திவந்த சு.வெங்க டேசன் எம்.பி., அகழாய்வுக்கான நிலத்தை வழங்கியவர்கள் என எல்லோருடைய மதிப்பையும் இன்னும் பல படிகள் கூட்டியிருக்கிறது கீழடி. தமிழகத்தின் மீதான மத்திய அரசின் போக்குகளைக் கண்டுகொள்ளாமல் விட்டாலும், கீழடி விவகாரத்தில் உறுதியாக நின்ற தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜனும் பாராட்டப்படுகிறார்.
பெருமையும் தொன்மையும் மிக்க ஆய்வுக்காக தன் விளைநிலத்தை வழங்கிய பேராசிரியர் கரு.முருகேசன், மத்திய தொல்லியல் துறை ஆய்வில் பல அரிய தகவல்களை வெளிக் கொண்டு வந்த டாக்டர் அமர்நாத், அவரை அந்தப் பணியிலிருந்து மாற்றி, அகழாய்வு பணிகளை முடக்க முயன்ற மத்திய அரசின் சதித்திட்டத்திற்கு எதிராக வழக்குத் தொடுத்து வென்ற வழக்கறிஞர் கனிமொழிமதி என இந்த ஆய்வுக்கு வலுச்சேர்த்தவர்கள் ஏராளம்.
கீழடியில் ஐந்தாம் கட்ட ஆய்வு தொடங்கவுள்ள நிலையில், அருகிலுள்ள பகுதிகளிலும் ஆய்வுப் பணி நீட்டிக்கப்பட இருக்கிறது. வைகை நதிக்கரை மட்டுமின்றி ஏற்கனவே ஆய்வுக்குட்பட்ட அரிக்கமேடு, ஆதிச்சநல்லூர் ஆகிய பகுதிகளிலும், கடலுக்குள் மூழ்கிய பூம்புகார் பகுதியையும் ஆய்வு செய்யும்போது, தொல்தமிழர் பண்பாட்டு அடையாளம் இன்னும் பல மடங்கு வெளிப்படுவதுடன், இந்தியா முழுவதும் திராவிட அடையாளங்கள் நிறைந்திருந்த காலமும் உறுதியாகும்.
இதுவரை கீழடியில் கண்டெடுக்கப்பட்ட தொல்லியல் பொருட்களை அங்கேயே அருங்காட்சியம் அமைத்து பாதுகாக்க அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இரண்டாயிரம் ஆண்டுகளாக தென்னை மரங்களால் பாதுகாக்கப்பட்ட பண்பாட்டு மேட்டைக் கிளறி, மேலே கொண்டுவரப்பட்ட தமிழரின் பெருமையை அதிகார பலத்தின் கரங்களுக்கு இரையாகக் கொடுத்து விடக் கூடாது என அனைத்து தரப்பும் வலியுறுத்துகின்றன.[/size]
[/font][/color]
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
Virat Kohli: சச்சின்... கோலி...எல்லாம் ‘டம்மி’....: களத்தில இல்லாட்டியும் சும்மா கலக்கு...கலக்குன்னு... கலக்கும் ‘தல’ தோனி....!
இந்தியாவில் பிரதமர் மோடியை அடுத்து பிரபலமானவர்கள் பட்டியலில் முன்னாள் கேப்டன் தோனி இடம்பிடித்துள்ளார்.
[/url]
Virat Kohli: சச்சின்... கோலி...எல்லாம் ‘டம்மி’....: களத்தில இல்லாட்டியும் சும்ம...
ஹைலைட்ஸ்
-
- விளையாட்டு வீரர்கள் பட்டியலில் தோனி முதலிடத்திலும், சச்சின், விராட் கோலி ஆகியோர் அடுத்த அடுத்த இடங்களிலும் உள்ளனர்.
[color][size][font]
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் [url=https://tamil.samayam.com/topics/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF] தோனி. இவரது தலைமையில் இந்திய அணி பல்வேறு உச்சங்களை எட்டியுள்ளது. இந்நிலையில் சமீபத்தய உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், இவரின் ஆமை வேக ‘பேட்டிங்’ காரணமாக கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.
சின்ன ஓய்வு
இதையடுத்து எழுந்த மோசமான விமர்சனங்களை ஓரங்கட்டி வைத்த தோனி, இரண்டு மாதம் லீவ் லெட்டர் கொடுத்துவிட்டு, ராணுவ பணிக்காக சென்றார். பின் தற்போது வீடு திரும்பி மகள் ஜிவா மற்றும் குடும்பத்தாருடன் ஜாலியாக பொழுதை போக்கி வருகிறார்.
தொடரும் ஓய்வு...
இதற்கிடையில் தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான தொடருக்கு பின் தொடர்ந்து நடக்கவுள்ள வங்கதேச அணிக்கு எதிரான தொடரிலும் தோனி புறக்கணிக்கப்படுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் சுமார் இரண்டு மாதத்துக்கு மேல் தோனியை களத்தில் காணாத போதும் அவர் ரசிகர்களின் மனதில் இருந்து நீங்கவில்லை.
ரசிகர் கூட்டம்
இதற்கிடையில் இந்தியாவில் பிரபலமானவர்களின் பட்டியலை தனியார் நிறுவனம் கருத்துக்கணிப்பு மூலம் வெளியிட்டது. அதில் முன்னாள் கேப்டன் தோனி, இந்திய பிரதமர் மோடிக்கு பின் இரண்டாவது இடம் பிடித்து அசத்தியுள்ளார்.
42,000 பேர்...
சர்வதேச அளவில் சுமார் 42,000 பேர் இந்த கருத்துக்கணிப்பில் பங்கேற்றனர். அதில் இந்தியாவில் பிரபலமான ஆண்கள் பட்டியலில் சுமார் 15.66 சதவீதம் பேர் பிரதமர் மோடியை தெரிவித்துள்ளனர். இவரைத் தொடர்ந்து முன்னாள் இந்திய கேப்டன் தோனி (8.58%) இரண்டாவது இடத்தில் உள்ளார்.
ஜாம்பவான் சச்சின்
விளையாட்டு வீரர்களை பொறுத்தவரையில், ஜாம்பவான் சச்சின் (5.81), விராட் கோலி (4.46) போர்ச்சுகல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ (2.95), அர்ஜெண்டினாவின் லயோனல் மெஸ்சி (2.32) ஆகியோர் உள்ளனர்.
மேரி கோம் ‘டாப்’ ....
இதே போல பெண்களுக்கான பட்டியலில் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் 10.36 சதவீதம் பெற்று முதலிடம் பிடித்தா
[/font][/size][/color]
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
உதித்சூர்யா கைதை தொடர்ந்து அதிரடி நடவடிக்கை ‘நீட்’ தேர்வில் நடந்த ஆள்மாறாட்ட முறைகேட்டில் மாணவி, 2 மாணவர்கள் சிக்கினர்
சென்னை,
சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் டாக்டராக பணியாற்றி வரும் வெங்கடேசனின் மகன் உதித்சூர்யா (வயது 20). இவர் தேனி அரசு மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்ந்தார். இந்த நிலையில் இவர், ‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவ படிப்பில் சேர்ந்த விவரம் வெளியானது.
இதுகுறித்து தேனி அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் கொடுத்த புகாரின் பேரில், உதித்சூர்யா மீது க.விலக்கு போலீசார் கடந்த 18-ந்தேதி வழக்குப்பதிவு செய்தனர். உதித்சூர்யா தனது குடும்பத்துடன் தலைமறைவானதால் அவர்களை தனிப்படை போலீசார் தேடி வந்தனர். பின்னர், இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், திருப்பதி மலையடிவாரத்தில் உதித்சூர்யாவை குடும்பத்துடன் தனிப்படையினர் மடக்கிப் பிடித்து தேனிக்கு கொண்டு வந்தனர்.
இந்த சம்பவம் குறித்து தேனி சி.பி.சி.ஐ.டி. போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ராதேவி வழக்குப்பதிவு செய்து உதித்சூர்யாவை நேற்று முன்தினம் கைது செய்தார். உதித்சூர்யா கொடுத்த வாக்குமூலத்தின் பேரில் அவருடைய தந்தை டாக்டர் வெங்கடேசனும் கைது செய்யப்பட்டார்.
போலீசாரிடம் வெங்கடேசன் அளித்த வாக்குமூலத்தில் ‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்டம் செய்வதற்கு கேரளாவைச் சேர்ந்த இடைத்தரகர் ஒருவரிடம் ரூ.20 லட்சம் கமிஷன் கொடுத்ததாக தெரிவித்து உள்ளார்.
கைதான உதித்சூர்யா, அவருடைய தந்தை டாக்டர் வெங்கடேசன் ஆகியோரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் அதிகாரிகள் நடத்திய விசாரணையில், மேலும் 5 பேர் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதி, தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்துள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் கிடைத்தன.
இதனால் மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கையில் கலந்தாய்வு முதல் மாணவர் சேர்க்கை வரை பல்வேறு கட்டங்களில் முறைகேடு நடந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இதுதொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.
இந்த நிலையில், ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதி முறைகேடாக மருத்துவ படிப்பில் சேர்ந்ததாக சென்னையில் நேற்று ஒரு மாணவி உள்பட 3 பேர் சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் சிக்கினார்கள்.
அவர்களில் ஒருவர் பெயர் பிரவீண். இவர் எஸ்.ஆர்.எம். மருத்துவ கல்லூரியில் சேர்ந்து உள்ளார்.
மற்றொரு மாணவரின் பெயர் ராகுல். இவர் பாலாஜி மருத்துவ கல்லூரியில் படித்து வருகிறார்.
பிடிபட்ட மாணவியின் பெயர் அபிராமி. இவர் சென்னையை அடுத்த திருப்போரூரில் உள்ள சத்ய சாய் மருத்துவ கல்லூரி மாணவி ஆவார்.
இவர்கள் மூவரும் சென் னையைச் சேர்ந்தவர்கள்.
பிடிபட்ட 3 பேரையும், நேற்று இரவு சென்னை எழும்பூரில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்துக்கு போலீசார் கொண்டு வந்தனர். அங்கு அவர்களிடம் நீண்ட நேரம் துருவி துருவி விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையின் போது, இவர்களுக்காக உத்தரபிரதேசத்திலும், டெல்லியிலும் வேறு நபர்கள் நீட் தேர்வு எழுதியதையும், இதற்காக லட்சக்கணக்கில் பணம் கைமாறியதையும் 3 பேரும் ஒப்புக்கொண்டதாக சி.பி.சி.ஐ.டி. அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
நீட் தேர்வில் நடைபெற்ற ஆள்மாறாட்டம் தொடர்பான பிரதான வழக்கு தேனியில் நடைபெற்று வருவதால், மேல் விசாரணைக்காக மாணவர்கள் பிரவீண், ராகுல், மாணவி அபிராமி ஆகிய மூவரையும் இன்று (சனிக்கிழமை) தேனிக்கு கொண்டு செல்கிறார்கள்.
இதற்கிடையே, உதித்சூர்யா ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுத இடைத்தரகராக செயல்பட்ட நபரை தேடி சி.பி.சி.ஐ.டி. போலீசார் கேரளா சென்றனர்.
உதித்சூர்யாவுக்கு பதிலாக மற்றொருவர் நீட் தேர்வு எழுதிய சம்பவம் மும்பையில் உள்ள தேர்வு மையத்தில் நடந்துள்ளது. எனவே தேர்வு எழுதியவர் மும்பையைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. மேலும் உதித்சூர்யா மும்பையில் உள்ள ஒரு பயிற்சி மையத்தில் நீட் தேர்வுக்காக பயிற்சி பெற்றதாக கூறப்படுகிறது. எனவே தேர்வு எழுதிய நபரை தேடி மும்பைக்கும் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் அதிகாரிகள் சிலர் சென்று உள்ளனர்.
இதற்கிடையே, கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இடைத்தரகர் ஜார்ஜ் ஜோசப் என்பவர் நேற்று கைதானதாகவும், அவரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் தேனிக்கு கொண்டு வர இருப்பதாகவும் பரபரப்பு தகவல் வெளியானது.
இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமாரிடம் கேட்டபோது, இதுவரை அப்படி யாரையும் கைது செய்யவில்லை என்றும், இடைத்தரகர் கேரளாவைச் சேர்ந்தவர் என்ற தகவலின் பேரில் அங்கு தேடுதல் வேட்டை நடந்து வருவதாகவும், இந்த வழக்கில் இன்னும் நிறைய பேரிடம் விசாரணை நடத்த வேண்டியது உள்ளது என்றும் கூறினார்.
நீட் தேர்வில் நடைபெற்ற ஆள்மாறாட்ட முறைகேடு தொடர்பாக மருத்துவ கல்வி இயக்குனரக அதிகாரிகளிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டு உள்ளனர்.
இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி. போலீஸ் உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “நீட் தேர்வின் போது பல்வேறு சோதனைகள் நடத்தப்பட்டன. ஆனால், ஹால் டிக்கெட் வழங்கும் போதும், கலந்தாய்வு, மாணவர் சேர்க்கையின் போதும் ஆள்மாறாட்டத்தை கவனிக்காமல் விட்டது எப்படி? என்பது தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்படும். இந்த வழக்கில் சென்னையில் உள்ள மருத்துவ கல்வி இயக்குனரக அதிகாரிகளிடமும் விசாரணை நடத்தப்பட உள்ளது. இதற்காக அவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட இருக்கிறது. ஆள்மாறாட்டம் செய்த மாணவர் உதித்சூர்யா மற்றும் சந்தேகத்துக்கு உள்ளான சில மாணவர்களுக்கு கலந்தாய்வு நடத்தியவர்கள் யார்? மாணவர் சேர்க்கை நடத்தியது யார்? என்பது போன்ற விவரங்களை கேட்டு அறிய இருக்கிறோம்” என்றார்.
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
சார்ஜ் போட்டபடி செல்போனில் பேசியவர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு
நாமக்கல்,
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே உள்ள ஓடப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் தேவேந்திரன். இவர் செல்போனை சார்ஜரில் போட்டு கொண்டே போன் பேசியுள்ளார்.
அப்போது மின் கசிவு ஏற்பட்டதால் மின்சாரம் தாக்கி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து பள்ளிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
டிரைவிங் லைசென்சை புதுப்பிக்கும் கால அவகாசம் ஓர் ஆண்டாக குறைப்பு
தமிழகத்தில் டிரைவிங் லைசென்ஸ் புதுப்பிக்கத் தவறினால் அதைப் புதுப்பிக்க 5 ஆண்டுகள் கால அவகாசம் வழங்கப்பட்டது. அது தற்போது ஒரு ஆண்டாகக் குறைக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஒரு ஆண்டு தவறினால் மீண்டும் டிரைவிங் லைசென்ஸ் பெறுவதற்கான கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும். புதிய மோட்டார் வாகன சட்டத்தின் படி ஓராண்டிற்குள் ஓட்டுநர் உரிமத்தை புதுப்பிக்க வேண்டும்.
இந்த புதிய நடைமுறை தமிழகம் முழுவதும் அனைத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களிலும் அமலுக்கு வந்துள்ளது. எனவே டிரைவிங் லைசென்ஸ் காலாவதி தேதியை கவனிக்காதவர்கள் உரிய காலத்தில் புதுப்பித்துக் கொள்ளலாம்.
இதுதொடர்பாக, வட்டார போக்குவரத்து அதிகாரிகள் கூறுகையில், தமிழகத்தில் டிரைவிங் லைசென்ஸ் புதுப்பிக்க முன்பு 5 ஆண்டுகள் வரை வழங்கப்பட்ட கால அவகாசம் தற்போது ஒரு ஆண்டாக குறைக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
ஐநா கூட்டத்திற்குப் பிறகு எல்லையில் பெரிய ஊடுருவலுக்கு திட்டமிட்டு உள்ள பாகிஸ்தான் ; 3000-4000 இளைஞர்களுக்கு பயிற்சி
துடெல்லி
ஐநா பொதுக்குழு கூட்டத்திற்கு பின் எல்லை கட்டுப்பாடு முழுவதும் பெரிய ஊடுருவலுக்கு பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது. 3000-4000 இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து தயாராக வைத்து உள்ளதாக இராணுவ ஆதாரங்கள் தெரிவித்து உள்ளன.
பாகிஸ்தான் இராணுவம் ஜமாத் உல்-அல்-ஹதீஸுடன் (மும்பை தாக்குதல் சூத்திரதாரி ஹபீஸ் சயீத்தின் கட்டுப்பாட்டில் உள்ள புதிய அமைப்பு) இணைந்து அக்டோபர் முதல் வாரத்தில் இந்திய எல்லையில் ஊடுருவ ராவல்பிண்டியில் 3000-4000க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு பயிற்சி அளித்துள்ளதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவற்றில் ஜம்மு-காஷ்மீர் விடுதலை முன்னணியின் (ஆசாதி) சில இளைஞர்களும் அடங்குவர்.
இந்த பயிற்சியின் நோக்கம் இந்த இளைஞர்களை தீவிரவாதிகளாக்குவதும், அக்டோபர் முதல் வாரத்தில் எல்லையில் ஊடுருவக்கூடிய வகையில் அவர்களை கட்டுப்பாட்டு எல்லைப் பகுதிகளுக்கு அனுப்புவதும் ஆகும் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
நியூயார்க்கில் நடைபெறும் ஐநா பொதுக்கூழு கூட்டம் முடிந்ததும் பொதுமக்களை கேடயங்களாக பயன்படுத்தி பெரிய தாக்குதல் நடத்த பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது என்று இந்திய புலனாய்வு அமைப்புகளுக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.
இந்திய பாதுகாப்புப் படைகள் அவர்களை குறிவைத்தால், மனித உரிமை மீறல் பிரச்சினையை பாகிஸ்தான் மீண்டும் எழுப்ப முடியும் என்பதற்காக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பொதுமக்களை கேடயமாக பயன்படுத்த ஆட்களை தேர்வு செய்து வருகிறார்கள்.
மேலும், பாதுகாப்பு இடங்களுக்கு பாகிஸ்தான் இராணுவத்துடன் அனுப்புவதில் நிறுத்தப்பட்டுள்ள பயங்கரவாதிகளின் எண்ணிக்கையை பாகிஸ்தான் மீண்டும் அதிகரித்துள்ளது.
இதன் விளைவாக, இந்திய பாதுகாப்பு படையினர் கட்டுப்பாட்டுக் கோட்டு பகுதில், கண்காணிப்பை அதிகரித்து உள்ளனர். மேலும் உயர்மட்ட கண்காணிப்பு அமைப்புகளை நிறுவி உள்ளனர்.
32 இடங்களில் பாகிஸ்தான் இராணுவத்துடன் பயங்கரவாதிகள் காணப்பட்டதாக பாதுகாப்பு நிறுவன வட்டாரங்கள் தனியார் டிவி ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:-
1.பாகிஸ்தான் போஸ்ட்- இந்தியன் சைட்
2.பிபி நாலா - பூஞ்ச்
3.சோனார் - மச்சால்
4.ஹத்லங்கா- ராம்பூர்
5.அத்முகாம் - கெரன்
6.துத்னியல்- கெரன்
7. போஸ்ட் கிடார் 1- யூரி
8.குண்ட்கிரா- யூரி
9.சார்டி- மச்சால்
10.லாஞ்சோட்- பி.ஜி.
11. மோஹ்ரா- பி.ஜி.
12. காசிம்- மச்சால்
13.கோபிரா - சுஜியன்
14.பிபி பார்பட் 1 - பி.ஜி.
15.போலாஸ் - பூஞ்ச்
16.டெஜியன்- பி.ஜி.
17.மொச்சி மோஹ்ரா- பூஞ்ச்
18.மதர்பூர்- கே.ஜி.
19. பட்டால் மஜூரா- கே.ஜி.
20.கோய்- கே.ஜி.
21.தாண்டிகாசி- பி.ஜி.
22. ஜான்வாய்- மச்சால்
23. ஹர்மர்கி- மச்சால்
24.சாம்- யூரி
25. கதர்- கே.ஜி (கிருஷ்ணா காதி)
26.போக்ரா- உரு
27.பச்சிபன்- யூரி
28.ரோசா- கே.ஜி.
29.பிபி இரட்டை- கே.ஜி.
30.பி.எல் மஜார்- பி.ஜி.
31.நர்கோட்- நவுகம்
32.பாக் போஸ்ட் கிரீன் பம்ப்- பூஞ்ச்
ஊடுருவல் முயற்சிகளுக்கு உதவ, பாகிஸ்தான் இராணுவம் எல்லையைத் தாண்டி கடும் துப்பாக்கிச் சூடு நடத்தக்கூடும். பிர் பஞ்சால் எல்லைகளுக்கு வடக்கு மற்றும் தெற்கே எல்லைக் கட்டுப்பாடு முழுவதும் உள்ள சில ஏவுதளங்களில் இருந்து இந்த தாக்குதல்கள் நடத்தப்படக்கூடும் என தகவல்கள் கூறுகின்றன.
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
உலக தலைவர்களை பார்த்து உங்களுக்கு எவ்வளவு தைரியம் இருக்கும்? என கேட்ட சிறுமிக்கு உயரிய விருது
ஸ்டாக்ஹோம்:
அமெரிக்காவின் ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையில் பருவநிலை மாற்றம் குறித்த மாநாட்டில் கடந்த திங்கள்கிழமை (செப்டம்பர் 23) ஸ்வீடன் நாட்டை சேர்ந்த கிரேட்டா தன்பெர்க் என்ற 16 வயது சிறுமி (பருவநிலை மாற்ற ஆர்வலர்) பங்கேற்றார்.
அந்த மாநாட்டில் பேசிய அந்த சிறுமி கூறியதாவது:-
நான் இங்கே இருந்திருக்கக் கூடாது. இந்த பெருங்கடலின் மறுமுனையில் இருக்கும் பள்ளியில் நான் இருந்திருக்க வேண்டும்.
ஆனாலும் நீங்கள் அனைவரும் நம்பிக்கையோடு எங்களிடம் வருகிறீர்கள். உங்களுக்கு எவ்வளவு தைரியம்?
உங்களது வெற்று வார்த்தைகளால் எனது கனவுகளை, எனது குழந்தைப் பருவத்தைக் திருடி விட்டீர்கள்
ஆனாலும், நான் பாக்கியசாலிகளில் ஒருத்தி தான்.
மக்கள் துன்பப்படுகிறார்கள், செத்து மடிகிறார்கள்.
மொத்த சூழலியலும் உருக்குலைந்துவிட்டது. அழிவின் தொடக்கத்தில் நாம் இருக்கிறோம்.
ஆனால், பணம் குறித்து... நிரந்தர பொருளாதார வளர்ச்சி குறித்த கற்பனை கதைகளைப் பேசிக் கொண்டிருக்கிறீர்கள்.
உங்களுக்கு எவ்வளவு தைரியம்?
நீங்கள் எங்களை வஞ்சித்துவிட்டீர்கள்
உங்களது துரோகத்தை இளைஞர்கள் புரிந்து கொள்ளத் தொடங்கிவிட்டார்கள்.
எதிர்கால தலைமுறையினரின் விழிகள் உங்கள் மீது தான் உள்ளன.
எங்களுக்குத் துரோகம் செய்ய நினைத்தால்,
நான் இப்போது சொல்கிறேன், "நாங்கள் உங்களை மன்னிக்க மாட்டோம்"
என ஆக்ரோஷமாக முழங்கினார். அவர் பேசிய வார்த்தைகள் உலக அளவில் பெரும் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், கிரேட்டா தன்பெர்க் 'வாழ்வாதார உரிமை விருது'-க்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக ஸ்வீடன் நாட்டை சேர்ந்த மனித உரிமைகள் விருதுக்கான தேர்வுக்குழு தலைவர் தெரிவித்துள்ளார்.
உலக அளவில் 'வாழ்வாதார உரிமை விருது' நோபல் பரிசுக்கு நிகராக கருதப்படுவதால் இது ‘மாற்று நோபல் விருது' என்றும் அழைக்கப்படுகிறது.
கிரேட்டா தன்பெர்க் 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ‘வெள்ளிக்கிழமைகள் எதிர்காலத்திற்கானது’ என்ற இயக்கத்தின் பெயரில் 'பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்த பள்ளிகள் வேலைநிறுத்தம் செய்கின்றன’ என்ற பதாகைகளுடன் ஸ்வீடன் நாடாளுமன்றத்திற்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டார்.
இந்த போராட்டத்தின் வளர்ச்சியாக கடந்த வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 20) ‘உலக பருவநிலைமாற்ற போராட்டம்’ என்ற பெயரில் உலகம் முழுவதும் 150-க்கும் அதிக நாடுகளில் பருவநிலைமாற்ற ஆர்வலர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என பலத்தரப்பட்ட மக்கள் இணைந்து போராட்டம் நடத்தினர்.
பருவநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை உலகம் முழுவதும் கொண்டு சென்று ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் ஆதரவு குரல்களை வெளிப்படுத்த காரணமாக இருந்து உலக தலைவர்கள் மத்தியில் நிலைமையை எடுத்து கூறியதற்காக கிரேட்டா தன்பெர்க்கு ‘மாற்று நோபல் விருது' என அழைக்கப்படும் 'வாழ்வாதார உரிமை விருது' வழங்கப்படுவதாக இந்த விருது வழங்கும் வாழ்வாதார அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
2019ம் ஆண்டுக்கான விருதுக்காக 4 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அதில் ஸ்வீடனைச் சேர்ந்த சிறுமி க்ரேடா தன்பெர்க்கும் ஒருவராவார்.
பிரேசிலை சேர்ந்த பழங்குடியின தலைவர் டேவி கோபநாவா சீனாவை சேர்ந்த மகளிர் உரிமைகள் வழக்கரைஞர் குவோ ஜியான்மெய் மேற்கு சஹாரா மனித உரிமைகள் பாதுகாப்பாளர் அமினாதோ ஹைதர் ஆகியோரும் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
டிஎன்பிஎஸ்சி தேர்வில் தமிழை புறக்கணித்ததாக கூறப்படும் குற்றச்சாட்டில் உண்மையில்லை என்ற அவர், குரூப் 2 முதல் நிலைத் தேர்வில் தமிழக வரலாறு பண்பாடு சேர்க்கப்பட்டுள்ளது, திருக்குறளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.
டி.என்.பி.எஸ்.சி.யின் இந்த புதிய திட்டம் தமிழே தெரியாதவர்களுக்குத்தான் பாதிப்பை ஏற்படுத்தும். கிராமப்புற மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என்றும் கூறினர். அதேபோல் புதிய பாடத் திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால் தேர்வு எழுதக்கூடியவர்கள் தேர்வு எழுத தயாராவதற்கு போதுமான கால அவகாசம் வழங்கப்படும் என்றனர்.
[/url]
[url=https://tradingoptions/Binary_Options_Trading_Platform_Can_Surprise_You]
அதேபோல் டி.என்.பி.எஸ்.சி தேர்வில் கேள்விகள் தவறாக வருவதை குறைக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை என்று கூறிய தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சுதன், குரூப் 4 தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளில் தவறு இருந்தது குறித்து வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளது. எனவே குழு அளிக்கப்படும் அறிக்கையின் அடிப்படையில் அந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
டி.என்.பி.எஸ்.சி தேர்வில் கேள்விகள் தயார் செய்யப்படும் நடவடிக்கை அனைத்தும் ரகசியமாக மேற்கொள்ளப்படும் எனவும், கேள்விகள் அச்சிடப்பட்டு அதன் பின் கவரில் வைத்து சீல் வைத்ததும், தேர்வு அறையில் மாணவர்கள் அதனை பிரிக்கும் போது தான் கேள்விகள் தவறா? என்பது தெரிய வரும் எனக் கூறினார்.
இந்நிலையில் இந்த ஆண்டிற்கான டி.என்.பி.எஸ்.சி வேலை வாய்ப்பு குறித்து ஏற்கனவே கால அட்டவணை போடப்பட்டுள்ளது. எனவே அடுத்த ஆண்டிற்கு அட்டவணை போடப்பட்டு அறிவிப்பு வெளியிடப்படும் என்று தெரிவித்த அவர், டி.என்.பி.எஸ்.சி தேர்வில் ஆள்மாறாட்டம் நடைபெறாத வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும், இதுவரை அதுபோன்று நடந்தது இல்லை என்றும் தெரிவித்தனர்.
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
நேற்று கைது... இன்று விடுவிப்பு... நீட் ஆள்மாறாட்ட வழக்கு விசாரணையில் திடீர் திருப்பம்
நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்டிருந்த மாணவி அபிராமி மற்றும் அவரது தந்தையை சிபிசிஐடி போலீஸார் இன்று விடுவித்துள்ளனர்.
நேற்று கைது... இன்று விடுவிப்பு... நீட் ஆள்மாறாட்ட வழக்கு விசாரணையில் திடீர் தி...
நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரம் மருத்துவக் கல்வித் துறையில் தற்போது பெரும் புயலை கிளப்பியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக மாணவர் உதித் சூர்யா, அவரது தந்தையும், மருத்துவருமான வெங்கடேசன் ஆகியோர் முதலில் கைது செய்யப்பட்டனர். இதுகுறித்த தொடர் விசாரணையில் கேரளத்தைச் சேர்ந்த இடைத்தரகர் ஜார்ஜ் ஜோசப் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார்.
ஜார்ஜ் ஜோசப், வெங்கடேசன் ஆகியோரிடம் நடைபெற்ற விசாரணையில் சென்னையைச் சேர்ந்த மேலும் மூன்று மாணவர்கள் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டது உறுதியானது.
காஞ்சிபுரம் மாவட்டம், திருப்போரூர் அருகே அமைந்துள்ள ஸ்ரீ சத்ய சாய் மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த அபிராமி என்ற மாணவி, அவரது தந்தை மாதவன், காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த ராகுல் என்ற மாணவர், அவரது தந்தை டேவிட் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேபோன்று பாலாஜி மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த மாணவர் பிரவீனும், அவரது தந்தை சரவணனும் நேற்று கைது செய்யப்பட்டனர்.
கைதாகியுள்ள 6 பேரையும் தேனி அழைத்துச் சென்று சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். தேனி நீதிமன்றத்தில் இவர்கள் விரைவில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில், இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட விழுப்புரத்தைச் சேர்ந்த மாணவி அபிராமியை சிபிசிஐடி போலீஸார் இன்று விடுவித்தனர். அவரது தந்தையும் விடுவிக்கப்பட்டார்.
அபிராமியின் நீட் நுழைவுத் தேர்வுக்கான ஹால்டிக்கெட்டில் உள்ள புகைப்படத்துடன் அவரது புகைப்படம் ஒத்துபோனதையடுத்து, விசாரணையிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டதாக சிபிசிஐடி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அபிராமியின் புகைப்படம் தொடர்பாக, தடயவியல் துறையின் ஆலோசனையை பெற்றே, அவர் விடுவிக்கப்படுவதாகவும் அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
பேனர் விழுந்து உயிரிழந்த சுபஸ்ரீ ஐஈஎல்டிஎஸ் தகுதி தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி
பதிவு : செப்டம்பர் 30, 2019, 02:54 AM
பேனர் விழுந்து உயிரிழந்த சுபஸ்ரீ பிடெக் படிப்பு முடித்திருந்த நிலையில் கனடாவில் மேல் படிப்பு படிக்க கடந்த 10 ஆம் தேதி சென்னை பிரிட்டிஷ் கல்லூரியில் ஐஈஎல்டிஎஸ் தகுதி தேர்வு எழுதியிருந்தார்.
பேனர் விழுந்து உயிரிழந்த சுபஸ்ரீ பிடெக் படிப்பு முடித்திருந்த நிலையில், கனடாவில் மேல் படிப்பு படிக்க கடந்த 10 ஆம் தேதி சென்னை பிரிட்டிஷ் கல்லூரியில் ஐஈஎல்டிஎஸ் தகுதி தேர்வு எழுதியிருந்தார். இந்நிலையில், இன்று அவர் வீட்டிற்கு வந்த கொரியரில் சுபஸ்ரீ முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றது தெரியவந்தது.கனடாவில் ஸ்காலர்ஷிப்புடன் மேற்படிப்பு தொடர்வதற்கான தங்கள் மகளின் கனவு நனவாகியும் அதனை பார்க்க சுபஸ்ரீ இல்லை என்று கூறி அவரது பெற்றோர் கண்கலங்கினர்.
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
[color=var(--title-color)] `ராஜினாமாவுக்குப் பிறகும் துரத்தும் சர்ச்சை!’ - சி.பி.ஐ வளையத்தில் தஹில் ரமானி?[/color]
[color=var(--title-color)]முக்கியப் புள்ளிகள் சம்பந்தப்பட்ட தமிழ்நாடு சிலை திருட்டு வழக்குகள் குறித்து விசாரிக்க நீதிபதி மகாதேவன் தலைமையில் அமைக்கப்பட்ட சிறப்பு அமர்வை தஹில் ரமானி கலைத்தார். இதை ஐ.பி கோடிட்டுக் காட்டியுள்ளது.[/color]
[color=var(--meta-color)]tahilramani[/color]
[color=var(--content-color)] சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்தவர் தஹில் ரமானி. தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டு ஒருவருடம் ஆன நிலையில், சென்னைக்கு வேறு தலைமை நீதிபதியை நியமிக்க கொலீஜியம் குழு மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்தது. அதன்படி, மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக தஹில் ரமானியை இடமாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இந்த இடமாற்றத்தை ஏற்க மறுத்து, கொலீஜியத்துக்கு கோரிக்கை வைத்தார் தஹில் ரமானி. ஆனால், அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து, அவர் ராஜினாமா கடிதத்தைக் கொடுத்தார். இந்த நிலையில், தஹில் ரமானி இடமாற்றம் செய்யப்பட்டதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது.[/color]
[color=var(--content-color)]
tahilramani
[/color]
[color=var(--content-color)] இதனிடையே, அவரின் ராஜினாமா கடிதம் ஏற்கப்பட்டதாக மத்திய அரசு அறிவித்தது. வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த நிலையில், தஹில் ரமானிக்கு சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கங்கள் சார்பில் பிரிவு உபசார நிகழ்ச்சி நடைபெற்றது. ``பாரம்பர்யமிக்க சென்னை உயர் நீதிமன்றத்தில், கடந்த ஓராண்டுக்கு மேலாக தலைமை நீதிபதியாகப் பணியாற்றியது குறித்துப் பெருமை கொள்கிறேன். மும்பையை ஒப்பிடும்போது சீதோஷ்ண நிலை, சாலை வசதி, உள்கட்டமைப்பு வசதி என எல்லாவற்றிலும் சென்னையே சிறந்து விளங்குகிறது. சென்னையிலேயே குடியேற விரும்புவதால், இங்கே நிலம் வாங்கியுள்ளேன்” என்று பேசினார்.[/color]
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
[color=var(--content-color)] இந்தநிலையில், அடுக்குமாடி குடியிருப்பில் இரண்டு வீடுகள் வாங்கியது குறித்து சி.பி.ஐ விசாரணை நடத்துவதற்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் உத்தரவிட்டிருப்பதாக, `டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ்’ செய்தி வெளியிட்டுள்ளது. அதில், முறைகேடாக வீடு வாங்கியது குறித்து, விசாரித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க சி.பி.ஐ-க்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஐ.பி என்னும் மத்திய உளவுத்துறை தஹில் ரமானி ராஜினாமா செய்ததற்குப் பிறகு 5 பக்க அறிக்கையை அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.[/color]
[color=var(--content-color)]
Tahilramani
[/color]
[color=var(--content-color)] டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள செய்தியில், `தஹில் ரமானியின் பணப்பரிவர்த்தனை குறித்து மத்திய உளவுத்துறை விரிவாக அலசியுள்ளது. அதன்படி, 3.18 கோடி ரூபாய்க்கு சென்னை புறநகரில் உள்ள செம்மஞ்சேரியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் இரண்டு புதிய வீடுகளை அவர் வாங்கியுள்ளார். அதில் கடந்த ஜூன் - ஜூலை மாதங்களில் 1.62 கோடி ரூபாய் ஹெச்டிஎஃப்சி வங்கியின் லோன் மூலமாக செலுத்தப்பட்டுள்ளது. மீதியுள்ள 1.56 கோடி ரூபாய் சொந்த சேமிப்பிலிருந்து செலுத்தப்பட்டுள்ளது
[color=var(--content-color)]6 வங்கிக் கணக்குகளை மத்திய உளவுத்துறை பட்டியலிட்டுள்ளது. அதில் தஹில் ரமானியின் கணவருடன் சேர்ந்து 3 ஜாயின்ட் அக்கவுன்டுகளும் தாயுடன் சேர்த்து மற்றொரு வங்கிக் கணக்கு, வருமான கணக்கு மற்றும் மகனுடைய வங்கி கணக்குகள் இருப்பதாகவும் உறுதிப்படுத்தியுள்ளது. ஜூலை 8-ம் தேதி அவரது தாயுடனான ஜாயின்ட் அக்கவுன்டிலிருந்து, அவரது கணக்கில் 18 லட்ச ரூபாய் பணம் செலுத்தப்பட்டுள்ளது.[/color]
[color=var(--content-color)]
Vijaya Kamlesh Tahilramani
[/color]
[color=var(--content-color)]அடுத்த மாதத்திலேயே ரூ.18 லட்சம் பணம் காசோலை மூலம் ஜாயின்ட் அக்கவுன்டுக்கு வந்துள்ளது. மேலும், முக்கியப் புள்ளிகள் சம்பந்தப்பட்ட தமிழ்நாடு சிலை திருட்டு வழக்குகள் குறித்து விசாரிக்க நீதிபதி மகாதேவன் தலைமையில் அமைக்கப்பட்ட சிறப்பு அமர்வை தஹில் ரமானி கலைத்தார். இதையும் மத்திய உளவுத்துறை கோடிட்டுக் காட்டியுள்ளது’ என்று அதில் குறிப்பிட்டுள்ளது[/color][/color]
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
லண்டன் வங்கியில் இருக்கும் ரூ.300 கோடி இந்தியாவுக்கே சொந்தம்- இங்கிலாந்து கோர்ட்டு அதிரடி தீர்ப்பு
லண்டன் வங்கியில் இருக்கும் ஐதராபாத் நிஜாமின் சுமார் ரூ.300 கோடி இந்தியாவுக்கே சொந்தம் என இங்கிலாந்து கோர்ட்டு அதிரடியாக தீர்ப்பு வழங்கியது.
லண்டன் வங்கியில் இருக்கும் ரூ.300 கோடி இந்தியாவுக்கே சொந்தம் என்று தீர்ப்பு வழங்கிய இங்கிலாந்து கோர்ட்டு
[color][font]
லண்டன் :
பிரிட்டிஷ் இந்தியாவின் மிகப்பெரிய சமஸ்தானமாக விளங்கிய ஐதராபாத், 1948-ம் ஆண்டு இந்தியாவுடன் இணைந்தது. அப்போது ஐதராபாத்தை ஆண்டு வந்த நிஜாம் உஸ்மான் அலி கான், 10 லட்சத்து 7 ஆயிரத்து 940 பவுண்டு பணத்தை (தற்போதைய மதிப்பு சுமார் ரூ.8.70 கோடி) பாகிஸ்தானுக்கான அப்போதைய இங்கிலாந்து தூதர் ஹபிப் இப்ராகிம் ரகிம்தூலாவுக்கு கைமாறினார்.
இந்த பணத்தை அவர் லண்டனில் உள்ள நாட்வெஸ்ட் வங்கியில் போட்டு வைத்திருந்தார். 70 ஆண்டுகளை கடந்துள்ள நிலையில் இந்த பணம் தற்போது 35 மில்லியன் பவுண்டாக (சுமார் ரூ.300 கோடி) உயர்ந்துள்ளது.
இந்த நிதிக்கு இந்தியாவும், பாகிஸ்தானும் உரிமை கோரி வரும் நிலையில், லண்டனில் உள்ள கோர்ட்டில் இது தொடர்பாக வழக்கு நடந்து வந்தது. இந்த வழக்கில் ஐதராபாத் நிஜாமின் வாரிசுகளான முகரம் ஜா (8-வது நிஜாம்), அவரது சகோதரர் முபகம் ஜா ஆகியோரும் இந்தியாவுடன் இணைந்து சட்ட போராட்டம் நடத்தி வந்தனர்.
சுமார் 10 ஆண்டுகளாக விசாரிக்கப்பட்டு வந்த இந்த வழக்கில் லண்டனில் உள்ள நீதிக்கான ராயல் கோர்ட்டில் நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. இதில் இந்தியாவுக்கு சாதகமாக நீதிபதி மார்கஸ் ஸ்மித் தீர்ப்பு வழங்கினார்.
அதாவது, ‘7-வது நிஜாமுக்கு (உஸ்மான் அலி கான்) உரிமையுள்ள இந்த நிதி, அவரது வாரிசுகளான இளவரசர்கள் மற்றும் இந்தியாவுக்கு சொந்தமானதாகும். இந்த வழக்கில் பாகிஸ்தான் வைத்த வாதங்கள் தவறானவை’ என்று நீதிபதி தனது தீர்ப்பில் கூறினார்.
முன்னதாக இந்த நிதிக்கு உரிமை கோரிய பாகிஸ்தான், அதற்கு ஆதரவாக 2 அம்சங்களை எடுத்து வைத்தது. அதாவது பாகிஸ்தானிடம் இருந்து ஆயுதங்கள் வாங்குவதற்காக இந்த நிதி அந்த நாட்டுக்கு வழங்கப்பட்டது எனவும், இந்த பணத்தை இந்தியாவுக்கு வெளியே வைத்திருக்கும் நோக்கில் வழங்கப்பட்டது எனவும் பாகிஸ்தான் கூறியது. ஆனால் இந்த வாதங்களை நீதிபதி நிராகரித்தார்.
இந்த தீர்ப்பு வரலாற்று சிறப்பு மிக்கது என நிஜாமின் வாரிசுகள் சார்பில் ஆஜராகி வந்த வக்கீல் பால் ஹெவிட் தெரிவித்தார். இந்த பணம் கைமாறப்பட்ட போது தனது கட்சிக்காரர் அதாவது 8-வது நிஜாம் சிறுவனாக இருந்ததாகவும், தற்போது 80 வயதை கடந்திருக்கும் அவரின் வாழ்நாளிலேயே தீர்ப்பு கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர் கூறினார்.
அதேநேரம் இந்த தீர்ப்பால் பாகிஸ்தானுக்கு பெருத்த பின்னடைவு ஏற்பட்டு இருக்கிறது. இந்த தீர்ப்பின் முழு விவரத்தையும் ஆய்வு செய்த பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது. [/font][/color]
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
குஜராத் கலவரத்தில் கற்பழிக்கப்பட்ட பெண்ணுக்கு வீடு, அரசு வேலை, ரூ.50 லட்சம் - சுப்ரீம் கோர்ட்
குஜராத்தில் 2002-ம் ஆண்டு நிகழ்ந்த கலவரத்தில் கற்பழிக்கப்பட்ட பெண்ணுக்கு வீடு, அரசு வேலை மற்றும் 50 லட்சம் ரூபாயை 2 வாரங்களுக்குள் வழங்குமாறு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
பில்கிஸ் பானோ
[color][size][font]
புதுடெல்லி:
குஜராத் மாநிலம் கோத்ராவில் 2002-ம் ஆண்டு நடந்த கலவரத்தின் போது டாஹோட் மாவட்டம், ரந்திக்பூர் கிராமத்தை சேர்ந்த பில்கிஸ் பானோ (அப்போது வயது 19) என்ற 5 மாத கர்ப்பிணிப் பெண் 10-க்கும் மேற்பட்ட நபர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.
மேலும், அவரது குழந்தைகள் உள்பட குடும்ப உறுப்பினர்கள் 7 பேரை அந்த கும்பல் கொடூரமாக கொலை செய்தது.
இவ்விவகாரத்தில் குஜராத் மாநில அரசு வழங்கிய நிதியுதவி ரூ.5 லட்சத்தை ஏற்க மறுத்த பில்கிஸ் பானோ சுப்ரீம் கோர்ட்டு சென்று கூடுதல் நிவாரணம் கோரினார்.
இவ்வழக்கு விசாரணையை மேற்கொண்ட சுப்ரீம் கோர்ட்டு, குஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்ட பில்கிஸ் பானோவுக்கு ரூ. 50 லட்சம் வழங்குமாறு கடந்த ஏப்ரல் மாதம் குஜராத் அரசுக்கு உத்தரவிட்டது.
[/font][/size][/color]
[color][size][font][size][font]
மேலும் அரசு வேலை மற்றும் வீடு வழங்கவும் இவ்வழக்கில் ஏற்கனவே குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட அதிகாரிகள் மீது இரண்டு வாரங்களுக்குள் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டது.
ஆனால், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 5 மாதங்கள் ஆகியும் அவருக்கு எந்த நிவாரணமும் அளிக்கப்படாத நிலையில் இன்று சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் முன்னர் ஆஜரான குஜராத் அரசின் வழக்கறிஞர் துஷார் மேத்தா, இந்த தீர்ப்பு தொடர்பாக சீராய்வு செய்ய வேண்டும் என கோரினார்.
இதற்கு மறுப்பு தெரிவித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் இன்னும் 2 வாரங்களுக்குள் பில்கிஸ் பானோவுக்கு அரசு வேலை, வீடு மற்றும் 50 லட்சம் ரூபாய் வழங்குமாறு அம்மாநில அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கில் ஆதாரங்களை சீர்குலைத்ததற்காக 5 போலீஸ் அதிகாரிகளுக்கும் 2 மருத்துவ அதிகாரிகளுக்கும் சிறை தண்டனை விதிக்கப்பட்டது நினைவிருக்கலாம்.[/font][/size][/font][/size][/color]
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
ஓடும் பஸ்சில் கண்டக்டர் மீது தாக்குதல் - போலீஸ்காரர்கள் கைது
நெல்லை அருகே ஓடும் பஸ்சில் கண்டக்டரை தாக்கிய போலீஸ்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கண்டக்டரை போலீஸ்காரர் தாக்கும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
போலீஸ்காரர்கள் - கண்டக்டர்
[color][size][font]
நெல்லை:
நெல்லையில் இருந்து நாகர்கோவிலுக்கு நேற்று மாலை ஒரு அரசு பஸ் சென்றது. அந்த பஸ்சில் நாகர்கோவிலை சேர்ந்த ரமேஷ்(வயது50) என்பவர் கண்டக்டராக இருந்தார்.
அந்த பஸ்சில் பாளை ஆயுதப்படை போலீசார் தமிழரசன், மகேஸ்வரன் ஆகிய இருவரும் கைதி ஒருவரை கோர்ட்டுக்கு அழைத்து சென்றனர். அவர்களிடம் வாரண்ட் தருமாறு கண்டக்டர் கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் வாரண்டை கொடுக்கவில்லை.
மூன்றடைப்பு பகுதியில் பஸ் சென்று கொண்டிருந்தபோது கண்டக்டருக்கும், போலீஸ்காரர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது போலீஸ்காரர்களில் ஒருவர் கண்டக்டரை சரமாரியாக தாக்கினார். இதில் கண்டக்டருக்கு தலையில் காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தது.
இதனை பஸ்சில் இருந்த மற்ற பயணிகள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து கண்டக்டர் ரமேஷ் நாங்குநேரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
தான் தாக்கப்பட்டது குறித்து மூன்றடைப்பு போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரர்கள் மீது கண்டக்டர் ரமேஷ் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சபாபதி விசாரணை நடத்தி போலீஸ்காரர்கள் தமிழரசன் மற்றும் மகேஸ்வரன் மீது வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்தார்.
பின்பு போலீஸ்காரர்கள் இருவரும் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். கண்டக்டர் ரமேஷ் மீது போலீஸ்காரர்களும் மூன்றடைப்பு போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளனர். அதன் பேரில் கண்டக்டர் மீதும் போலீசார் வழக்குப்பதிந்துள்ளனர்.
இந்நிலையில் கண்டக்டரை போலீஸ்காரர் தாக்கும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.[/font][/size][/color]
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
தொடக்க பேட்ஸ்மேனாக சாதித்த ரோகித்- முதல் போட்டியிலேயே சதம் விளாசினார்
விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வரும் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா சதம் அடித்து அசத்தினார்.
பந்தை பவுண்டரிக்கு விரட்டும் ரோகித் சர்மா
[color][size][font]
விசாகப்பட்டினம்:
இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா, மயங்க் அகர்வால் ஆகியோர் களமிறங்கினர். ரோகித் சர்மா முதல் முறையாக தொடக்க வீரராக களமிறங்கியதால், அவர் மீது ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது.
ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் சிறப்பாக விளையாடிய ரோகித் சர்மா, பந்துகளை பறக்கவிட்டார். 84 பந்துகளில் அரை சதம் கடந்த ரோகித், தொடர்ந்து ரன் குவிப்பில் ஈடுபட்டார்.
தேனீர் இடைவேளைக்குப் பிறகு சதம் அடித்து அசத்தினார் ரோகித். 154 பந்துகளில் 10 பவண்டரி, 4 சிக்சருடன் இந்த இலக்கை அவர் எட்டினார். தொடக்க வீரராக களமிறங்கிய முதல் போட்டியிலேயே சதம் அடித்ததால் சக வீரர்கள் மற்றும் ரசிகர்கள் எழுந்து நின்று கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
இதேபோல் மறுமுனையில் ஆடிய மயங்க் அகர்வாலும் பொறுப்புடன் விளையாடி சதத்தை நெருங்கினார்.
மதிய நிலவரப்படி இந்திய அணி முதல் இன்னிங்சில் விக்கெட் இழப்பின்றி 190 ரன்கள் என்ற நிலையில் இருந்தது.[/font][/size][/color]
first 5 lakhs viewed thread tamil
•
|