Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
ஆட்டோமொபைல் துறை சரிய ஓலா, ஊபர்தான் காரணம் -நிர்மலா சீதாராமன்
மத்திய பாஜக அரசின் 100 நாள் செயல்பாடுகள் குறித்து நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்தபோது, ஆட்டோமொபைல் துறை வீழ்ச்சிக்கான காரணங்களை கூறினார்.



[Image: 201909110838362765_preference-for-Ola-Ub...SECVPF.gif]
நிர்மலா சீதாராமன்
[color][size][font]

சென்னை:

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 100 நாட்களில் செய்தது மற்றும் மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கினார்.


இந்த சந்திப்பில் ஆட்டோமொபைல் துறை வீழ்ச்சி அடைந்தது குறித்து அவர் கூறுகையில், ‘மோட்டார் வாகன உற்பத்தியில் உள்ள சிக்கல் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. பல காரணங்களால் மோட்டார் வாகன உற்பத்தியில் சரிவு ஏற்பட்டுள்ளது.

[Image: 201909110838362765_1_CARR._L_styvpf.jpg]

முக்கியமாக பெரும்பாலான மக்களின் மனப்போக்கு, ஆட்டோமொபைல் துறையில் வாகனங்களை வாங்குவதைவிட ஓலா, ஊபர் போன்றவற்றை பயன்படுத்துவதே சிறந்தது என்றாகிவிட்டது.

மேலும் பி.எஸ்6 இந்த துறையின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாகும். இதனை மீட்பதற்கு அரசு சில நடவடிக்கைகளை எடுத்துள்ளது. வேலையிழப்பு பிரச்சினையை சரிசெய்யவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன’ என கூறியுள்ளார்
[/font][/size][/color]
first 5 lakhs viewed thread tamil
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
நிர்மலா சீதாராமனை கலாய்த்த நெட்டிசன்கள்: "மக்கள் திருமணம் செய்து கொள்வதுதான் விவாகரத்துக்குக் காரணம்

[Image: _108745965_gettyimages-1163350830.jpg]படத்தின் காப்புரிமைHINDUSTAN TIMES
கார்கள் வாங்குவதை தவிர்த்து ஓலா, ஊபர் ஆகியவற்றில் பயணிப்பதை மக்கள் தேர்ந்தெடுப்பதால் வாகன உற்பத்தித்துறையில் வீழ்ச்சி ஏற்பட்டதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று கூறியிருந்தார்.
"விவாகரத்து அதிகமாவதற்கு காரணம் மக்கள் திருமணம் செய்து கொள்வதுதான்" என்பது போன்ற பல வாசகங்களை பதிவிட்டு, ட்விட்டர் வாசிகள் #SayItLikeNirmalaTai என்ற ஹேஷ்டேகை ட்ரெண்டாக்கி வருகின்றனர்.
அமைச்சர் நிர்மலா சீதாராமன் வாகன உற்பத்தித்துறை வீழ்ச்சிக்கு காரணம் மக்கள் ஓலா, ஊபரில் பயணிப்பதுதான் என்று கூறியதை வைத்து நக்கல் அடித்து வரும் நெட்டிசன்களில் ஒருவர், "மக்கள் ஆடைகள் அணிவதால்தான் ஆடைகள் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. காஃபி குடிப்பதால்தான் தேநீர் விற்பனை தொழில் பாதித்துள்ளது" என்று பதிவிட்டுள்ளார்
மக்கள் ஓயோ ரூம்களை பயன்படுத்துவதால், ரியல் எஸ்டேட் தொழில் பாதிக்கப்பட்டது. மக்கள் கார்போஹைட்ரேட்ஸ் எடுத்தக் கொள்வதை மக்கள் குறைத்துக் கொண்டதால் பார்லே- ஜி விற்பனையும் குறைந்துவிட்டது" என ருசிரா சத்ருவேதி என்ற ட்விட்டர்வாசி பதிவிட்டுள்ளார்.
"மக்கள் இணையத்தில் அனைத்து சுற்றுலாதளங்களில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பார்த்துவிடுவதால், இந்தியாவின் சுற்றுலாத்துறையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது" என்று பதிவிட்டுள்ளார் வித்யுத்

Quote:[Image: NLzBWP9-_normal.png]
[/url]Vidyut@Vidyut





Tourism is down because people are seeing photos and videos of places online.#SayItLikeNirmalaTai

4,025
பிற்பகல் 10:07 - 10 செப்., 2019
Twitter விளம்பரத் தகவல் மற்றும் தனியுரிமை


இதைப் பற்றி 1,074 பேர் பேசுகிறார்கள்





முடிவு டுவிட்டர் பதிவின் இவரது @Vidyut
"ஸ்கைப் கால் வழியாக அனைத்து சந்திப்புக் கூட்டங்களும் நடப்பதால், ஏர் இந்தியா நஷ்டமானது"
கடந்து செல்க டுவிட்டர் பதிவு இவரது @crtclctznin
Quote:[Image: _FqnC4E8_normal.jpg]
Critical Indian Citizen@crtclctznin





Air India is in losses as more companies prefer their people to do Skype meetings #SayItLikeNirmalaTai

330
பிற்பகல் 8:08 - 10 செப்., 2019
Twitter விளம்பரத் தகவல் மற்றும் தனியுரிமை


இதைப் பற்றி 93 பேர் பேசுகிறார்கள்




[color][font][color][font]
முடிவு டுவிட்டர் பதிவின் இவரது @crtclctznin[/font][/color][/font][/color]
"இக்காலத்து இளைஞர்கள் மொபைல் போனில் மட்டுமே வேலை செய்வதால், நாட்டில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துவிட்டது"
கடந்து செல்க டுவிட்டர் பதிவு இவரது @PIdeas2019
Quote:[Image: 2rFXU0bj_normal.png]
PoliticalIdeas2019@PIdeas2019





Millennials are always on their phones and never working, that's why the unemployment figures are high. #SayItLikeNirmalaTai

2
பிற்பகல் 8:25 - 10 செப்., 2019
Twitter விளம்பரத் தகவல் மற்றும் தனியுரிமை


PoliticalIdeas2019-இன் பிற கீச்சுகளைப் பார்க்கவும்

[url=https://twitter.com/PIdeas2019]


[color][font][color][font]
முடிவு டுவிட்டர் பதிவின் இவரது @PIdeas2019[/font][/color][/font][/color]
மக்கள் பெப்ஸி, கோக், மற்றும் மதுபானங்களை அருந்துவதால், நிலத்தடி நீர் குறைந்துவிட்டது என்று இதுபோன்ற பல்வேறு விஷயங்களை வைத்து, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் பேச்சை நக்கலடித்து வருகின்றனர்
first 5 lakhs viewed thread tamil
Like Reply
செம ஐடியா..? 3 ஆண்டுகளுக்கு.., – 5 மற்றும் 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு..! செங்கோட்டையன் பேட்டி..!
கடந்த சில தினங்களுக்கு முன்பு, மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கை வெளியிடப்பட்டது. இதில், 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட உள்ளதாக கூறப்பட்டது.
இதுகுறித்து தமிழக அரசு அரசானையும் வெளியிட்டுள்ளது. இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு நேற்று பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர், 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்ற அறிவிப்பு, பெற்றோர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்று தெரிவித்தார்.
மேலும், 5 மற்றும் 8 -ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுவதால் இடைநிற்றலுக்கு வாய்ப்பே இல்லை என்று கூறிய அவர், தமிழகத்தைப் பொருத்தவரை, இதற்காக 3 ஆண்டு காலம் முதல்வர் விதிவிலக்கு அளித்திருக்கிறார் என்று தெரிவித்தார்.
தேர்வு முடிவின் அடிப்படையில் முதல் 3 ஆண்டுகளுக்கு மாணவர்களின் தேர்ச்சி நிறுத்தி வைக்கப்படமாட்டாது. அதன் பிறகே இது முழுமையாக அமல்படுத்தப்படும் என்றும் செங்கோட்டையன் தெரிவித்தார்.
first 5 lakhs viewed thread tamil
Like Reply
[color=var(--title-color)]`அமேசான், ஃப்ளிப்கார்ட்டுக்குக் கடிவாளம்!' - மத்திய அரசுக்கு வியாபாரிகள் சங்கத்தின் புதிய கோரிக்கை
[color=var(--content-color)]தினேஷ் ராமையா[/color]
[color=var(--title-color)]அமேசான், ஃப்ளிப்கார்ட் உள்ளிட்ட ஆன்லைன் வர்த்தகத் தளங்களின் பண்டிகைகால விற்பனைக்குத் தடை விதிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு வியாபாரிகள் சங்கம் கோரிக்க விடுத்திருக்கிறது.[/color]
[/color]
[Image: vikatan%2F2019-09%2F4c060256-b914-4627-8...2Ccompress][color=var(--meta-color)]Amazon, Flipkart ( Twitter )[/color]
[color=var(--content-color)]தீபாவளி, தசராப் பண்டிகைகள் நெருங்கிவரும் சூழலில் ஆன்லைன் தளங்கள் பண்டிகைகாலச் சிறப்பு விற்பனைக்கு முழுவீச்சில் தயாராகி வருகின்றன. மற்ற நாள்களைவிட இந்தச் சிறப்பு விற்பனை நாள்களில் சலுகைகளை அந்த நிறுவனங்கள் வாரி வழங்கும். 10 முதல் 80 சதவிகிதம் வரை தள்ளுபடி உள்ளிட்ட அறிவிப்புகளால் குறிப்பிட்ட அந்த நாள்களில் விற்பனையும் பன்மடங்காக உயரும்.[/color]
[color=var(--content-color)][Image: vikatan%2F2019-09%2Ffa318b35-49b2-4779-8...2Ccompress]
Sale[color=var(--meta-color)]Pixabay[/color]
[/color]
[color=var(--content-color)]தீபாவளி நெருங்கிவரும் நிலையில், 6 நாள்கள் சிறப்பு விற்பனையை செப்டம்பர் 29ம் தேதி முதல் அறிவித்திருக்கிறது ஃப்ளிப்கார்ட். அமேசான் நிறுவனம் இதுகுறித்து அறிவிப்பு எதையும் இதுவரை வெளியிடவில்லை. ஆனால், விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.[/color]
[color=var(--content-color)]அந்நிய நேரடி முதலீட்டு விதிகள்[/color]
[color=var(--content-color)][Image: vikatan%2F2019-08%2Ffc0edd1b-976e-4ee0-b...2Ccompress]
[color=var(--accent-color)]Also Read[/color]
[/url][color=var(--title-color)]அதிக தள்ளுபடி... ஆன்லைன் நிறுவனங்களுக்கு நெருக்கடி![/color]
[url=https://www.vikatan.com/news/general-news/more-discounts-crisis-for-online-companies]
[/color]
[color=var(--content-color)]ஒருபுறம் ஆன்லைன் தளங்களின் வளர்ச்சி குறித்து பேசப்பட்டாலும், மறுபுறம் அதனால் சிறுவியாபாரிகள் கடுமையான பாதிப்புகளைச் சந்தித்து வருகிறார்கள். இதனால், அந்நிய நேரடி முதலீட்டுக் கொள்கையில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அந்தக் கோரிக்கையை அடுத்து அந்நிய நேரடி முதலீட்டுக் கொள்கையில் மத்திய அரசு சில திருத்தங்களைக் கொண்டுவந்தது.[/color]
[color=var(--content-color)][Image: vikatan%2F2019-09%2F74106920-df3a-45c6-a...2Ccompress][/color]
first 5 lakhs viewed thread tamil
Like Reply
[color=var(--content-color)]அந்த விதிமுறைகள் கடந்த பிப்ரவரி ஒன்றாம் தேதி முதல் அமலாகின. புதிய விதிமுறைகளுக்கேற்ப இந்த நிறுவனங்கள், பங்குதாரர்களாக இருக்கும் நிறுவனங்களின் தயாரிப்புகளை அவர்களது தளத்தில் விற்பனைசெய்யக் கூடாது. சில்லறை வணிகர்களின் நலன்கருதியே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.[/color]

[color=var(--content-color)]அகில இந்திய வியாபாரிகள் கூட்டமைப்பின் கோரிக்கை[/color]
[color=var(--content-color)]இந்தநிலையில், அமேசான் மற்றும் ஃப்ளிப்கார்ட் போன்ற நிறுவனங்கள் பண்டிகைகாலச் சிறப்பு விற்பனைக்குத் தடை விதிக்க வேண்டும் என மத்திய அரசை அகில இந்திய வியாபாரிகள் கூட்டமைப்பு (the Confederation of All India Traders) கேட்டுக்கொண்டுள்ளது. இதுதொடர்பாக வர்த்தகத்துறை அமைச்சகத்துக்கு அந்த அமைப்பு சார்பில் எழுதப்பட்டுள்ள கடிதத்தில், ``பத்து முதல் 80 சதவிகிதம் வரை தள்ளுபடி அறிவிப்பதன் மூலம் ஆன்லைன் வர்த்தகத் தளங்கள் பொருள்களின் விலையை நிர்ணயிப்பதில் ஆதிக்கம் செலுத்துகின்றன.[/color]
[color=var(--content-color)][Image: vikatan%2F2019-09%2F4c324ea0-c43b-4a01-8...2Ccompress]
online shopping[color=var(--meta-color)]Pixabay[/color]
[/color]
[color=var(--content-color)]இதன்மூலம் சந்தையில் சமநிலையற்ற போட்டியை அவர்கள் உருவாக்குகிறார்கள். இது அரசின் விதிமுறைகளுக்கு எதிரானது'' என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதுபோன்ற விற்பனைகளை முழுவதுமாகத் தடை செய்ய வேண்டும் என்றும் இவற்றில் அந்நிய நேரடி முதலீட்டு விதிமுறைகள் மீறப்பட்டுள்ளனவா என்பது குறித்து அரசு விசாரணை நடத்த வேண்டும் என்றும் அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.[/color]
[color=var(--content-color)][Image: fallback-image-58c853ff8f42ae45cd52.png]
[color=var(--accent-color)]Also Read[/color]
[/url][color=var(--title-color)]ஃப்ளிப்கார்ட், அமேசானுக்கு `கிடுக்கிப்பிடி'... ஆன்லைன் தள்ளுபடிகளுக்கு தடா?![/color]
[/color]

[color=var(--content-color)]என்ன சொல்கிறது ஃப்ளிப்கார்ட்?[/color]
[color=var(--content-color)]இதுகுறித்து ஃப்ளிப்கார்ட் தரப்பிலோ, ``எங்களுடன் கைகோத்துள்ள விற்பனையாளர்களுக்கு ஆன்லைன் வர்த்தகம் குறித்து நாங்கள் தெளிவாக விளக்கியிருக்கிறோம். அதன்மூலம், தங்களது தயாரிப்புப் பொருள்களுக்கு அவர்களே விலை நிர்ணயம் செய்து, வாடிக்கையாளர்களுக்குச் சலுகைகளை அளிக்கிறார்கள்.[/color]
[color=var(--content-color)][Image: vikatan%2F2019-09%2F2c4cc148-1112-47f1-a...2Ccompress]
Flipkart[color=var(--meta-color)]Twitter[/color]
[/color]
[color=var(--content-color)]அதேநேரம், எங்கள் தளத்தின்மூலம் அவர்களின் வியாபாரத்தையும் பெருக்குகின்றனர்'' என்று விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. மேலும், சிறப்பு விற்பனையை எதிர்பார்த்து ஏறக்குறைய 10,000 விற்பனையாளர்கள் காத்திருப்பதாகவும் அந்த நிறுவனம் கூறுகிறது.
[color=var(--content-color)]அமேசானின் விளக்கம்[/color]
[color=var(--content-color)]அமேசான் தரப்பிலோ, சிறப்பு விற்பனையை எதிர்நோக்கி 50 ஆயிரத்துக்கும் அதிகமான விற்பனையாளர்கள் இருப்பதாகக் கூறுகிறது. அவற்றில் பெரும்பாலானவர்கள் சிறுவணிகர்கள் என்றும் அந்த நிறுவனம் தரப்பில் சொல்லப்படுகிறது.[/color]
[color=var(--content-color)][Image: vikatan%2F2019-09%2Fa82f4531-ce8c-4987-9...2Ccompress]
Amazon[color=var(--meta-color)]Twitter[/color]
[/color]
[color=var(--content-color)][Image: fallback-image-58c853ff8f42ae45cd52.png]
[color=var(--accent-color)]Also Read[/color]
[color=var(--title-color)]அமலுக்கு வரும் புதிய விதிகள்... அமேசான், ஃப்ளிப்கார்ட் ஆஃபர்கள் என்னாகும்?[/color]
[url=https://www.vikatan.com/oddities/miscellaneous/148519-what-will-happen-to-offers-and-huge-discounts-on-ecommerce-sites-from-tomorrow]
[/color]
[color=var(--content-color)]``எங்கள் தளத்தில் விற்கப்படும் பொருள்களுக்கான விலையை விற்பனையாளர்களே நிர்ணயிக்கின்றனர்'' என்கிறது அமேசான்.[/color]
[/color]
first 5 lakhs viewed thread tamil
Like Reply
(11-09-2019, 11:28 AM)johnypowas Wrote: வெறும் 100 ரூபாய் போதும்... நீங்கள் அபராதமே கட்ட வேண்டியதில்லை... இந்த சூப்பர் ரூல் தெரியாம போச்சே
வெறும் 100 ரூபாயில் காப்பாற்றும் ஒரு சூப்பர் ரூல் இருப்பது தெரியாமல், ஆயிரக்கணக்கான ரூபாயை வாகன ஓட்டிகள் அபராதமாக இழந்து வருகின்றனர். உங்கள் விழிப்புணர்விற்காக இந்த விதிமுறை தொடர்பான தகவல்களை இந்த செய்தியில் பகிர்ந்து கொள்கிறோம்.


[Image: xtraffic-security%20officer-breath-alcohol...XZMEQR.jpg]




மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய மோட்டார் வாகன சட்டம் இந்தியாவில் உள்ள அனைத்து வாகன ஓட்டிகளையும் தலை சுற்ற வைத்துள்ளது. போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கான அபராத தொகைகள் அந்த அளவிற்கு மிக கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளன. இந்தியாவில் இதற்கு முன்பாக இவ்வளவு கடுமையான அபராதங்கள் வாகன ஓட்டிகளுக்கு விதிக்கப்பட்டதில்லை.

[Image: xtraffic-security%20officer-breath-alcohol...sPKnKm.jpg]

புதிய மோட்டார் வாகன சட்டம் கடந்த செப்டம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு கொண்டு வரப்பட்டது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் இதை அப்படியே ஏற்று கொண்டு விட்டன. ஆனால் மேற்கு வங்கம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

[Image: xtalking-while-riding-bike-2-1568143876....VSmBUz.jpg]
nsor
[url=https://www.outbrain.com/what-is/default/en][/url]


அவ்வளவு ஏன்? பாஜக ஆட்சி நடைபெற்று வரும் குஜராத்தே இதை அமல்படுத்த மறுத்து முரண்டு பிடித்து கொண்டுள்ளது. போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கான அபராத தொகைகள் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதை மேற்கண்ட 5 மாநிலங்களும் ஏற்றுக்கொள்ளவில்லை. இது வாகன ஓட்டிகளை கடுமையாக பாதிக்கும் என இந்த 5 மாநில அரசுகளும் கூறி வருகின்றன.

[Image: xtalking-while-riding-bike-5-1568143882....WFnoc_.jpg]
Like Reply
[color=var(--title-color)]`43 வீடியோக்கள், 20 பக்க புகார், கொலை மிரட்டல்..!’ - பாலியல் வழக்கில் கைதான சுவாமி சின்மயானந்த்
[color=var(--content-color)]மலையரசு[/color]
[color=var(--title-color)]சட்டக்கல்லூரி மாணவிமீதான பாலியல் வன்கொடுமை வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் சுவாமி சின்மயானந்த் குறித்த அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகியுள்ளன.[/color]
[/color]
[Image: vikatan%2F2019-09%2Ff03d80ab-0b09-418b-b...2Ccompress][color=var(--meta-color)]Chinmayanand[/color]
[color=var(--content-color)]உத்தரப்பிரதேச மாநிலம் ஷாஜகான்பூர் மாவட்டத்தில் செயல்பட்டு வருகிறது எஸ்.எஸ் சட்டக்கல்லூரி. இதன் நிறுவனத் தலைவராக இருக்கிறார் சுவாமி சின்மயானந்த். சந்நியாசியாக இருந்தாலும் அந்தப் பகுதியின் பிரபல அரசியல்வாதி. மூன்று முறை நாடாளுமன்றத்துக்கு உறுப்பினராகத் தேர்வான இவர், வாஜ்பாய் அரசில் மத்திய அமைச்சராகவும் இருந்துள்ளார். இதற்கிடையே கடந்த மாதம் 23 -ம் தேதி சின்மயானந்த்தின் கல்லூரியில் சட்டம் படிக்கும் மாணவி ஒருவர், முகநூலில் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
அதில், அவர் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அந்த வீடியோ பதிவில், ``நான் ஷாஜகான்பூர் மாவட்டத்திலிருந்து வருகிறேன். எஸ்.எஸ் கல்லூரியில் சட்டப் படிப்பு படித்து வருகிறேன். புனிதமான சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் இங்கு பல பெண்களின் வாழ்க்கையைச் சீரழித்துள்ளார்.
[/color]
[color=var(--content-color)][Image: vikatan%2F2019-09%2F27069288-49ee-4e48-9...2Ccompress]
Chinmayanand
[/color]
[color=var(--content-color)]அவர் தற்போது என்னைக் கொலை செய்துவிடுவதாக மிரட்டுகிறார். பிரதமர் மோடி, முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர்தான் எனக்கு உதவ வேண்டும். அவர் என் குடும்பத்தையும் கொன்றுவிடுவதாக மிரட்டுகிறார். என்ன நடக்கிறது என்பது எனக்கு மட்டுமே தெரியும். பிரதமர் மோடி, தயவுசெய்து எனக்கு உதவுங்கள். இதைச் செய்பவர் ஒரு சந்நியாசி. அவர், `காவல்துறை, மாவட்ட நீதிபதி உள்ளிட்ட பலரும் எனக்குப் பழக்கம். அவர்கள் அனைவரும் எனக்காகத்தான் நிற்பார்கள். அவர்கள் யாரும் எனக்கு எதிராகச் செயல்படமாட்டார்கள்' என மிரட்டுகிறார்” எனக் கூறியிருந்தார்.[/color]
first 5 lakhs viewed thread tamil
Like Reply
[color=var(--content-color)]இந்த வீடியோவில் சின்மயானந்த் பெயரை நேரடியாக குறிப்பிடாவிட்டாலும் வீடியோவை வெளியிட்ட மறுநாளே அந்தப் பெண்ணைக் காணவில்லை. பின்னர் `தன் மகள் காணாமல் போனதற்குக் காரணம் சின்மயானந்த்' என மாணவியின் தந்தை புகார் அளிக்கவே, விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. முதல்கட்டமாக மாணவி கடத்தப்பட்டுள்ளதாகக் கூறி போலீஸார் சின்மயானந்த் மீது வழக்குப்பதிவு செய்து மாணவியைத் தேடும்பணியில் ஈடுபட்டிருந்தனர். இதற்கிடையே, சுமார் 13 நாள்களுக்குப் பிறகு ராஜஸ்தானில் மாணவி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு ஷாஜகான்பூர் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டார்.[/color]
[color=var(--content-color)][Image: vikatan%2F2019-09%2F3d3a6620-52bf-49eb-a...2Ccompress]
SS Law college
[/color]
[color=var(--content-color)]``ஒருவருடமாக சின்மயானந்த்தால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளேன். நான் மட்டுமல்ல என்னைப் போல் பல பெண்களும் அவரால் கொடுமைகளை அனுபவித்திருக்கிறார்கள்'' என நீதிபதிகள் முன்பு 4 மணிநேர வாக்குமூலம் கொடுத்ததுடன் 20 பக்க புகாரையும் கொடுத்தார். இதன்பின் இந்த வழக்கை விசாரணை செய்ய ஸ்பெஷல் டீம் ஒன்று அமைக்கப்பட்டது. இந்த டீம் விசாரணை செய்தாலும், சின்மயானந்த் மீது பாலியல் குற்ற அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்படாமல் இருந்தது.
``முதலில் மாணவி குளிப்பதை வீடியோவாக எடுத்து அதை வைத்து மிரட்டி ஒருவருடமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்கள். சின்மயானந்த்தின் கொடுமைதாங்க முடியாமல் அவரின் செயல்களை ரகசிய கேமரா மூலம் வீடியோவாக மாணவி எடுத்த பிறகுதான் இந்த விவகாரத்தில் ஆதாரத்துடன் போராட முடிந்தது.
[/color]
[color=var(--content-color)][color=var(--content-color)]இப்போதும் அந்த வீடியோவை அழிக்க முயற்சி செய்கிறார்கள்" என மாணவியின் தரப்பினரும் அவரின் தந்தையும் கூறுகின்றனர்.
``என் மகளை தவறாக வீடியோ எடுத்துவைத்து மிரட்டி கொடுமைப்படுத்தியுள்ளார். பின்னர்தான் சின்மயானந்த்துக்கு எதிராக ஆதாரங்களை திரட்டும் முயற்சியாகவே என் மகள் வீடியோ எடுத்துள்ளார். தோழியின் உதவியுடன் சின்மயானந்த்தின் முகத்திரையைக் கிழிக்கவே இப்படி வீடியோக்களை எடுத்துள்ளார். முதலில் இதுபற்றி எனக்குத் தெரியாது. போலீஸாரால் அழைத்துவரப்பட்டபிறகுதான் இதுகுறித்து தெரியும். வீடியோ ஆதாரங்கள் மகளின் ஹாஸ்டல் அறையில் இருந்தது.[/color]
[color=var(--content-color)][Image: vikatan%2F2019-09%2Fb1b15d0e-906e-4782-a...2Ccompress]
victim
[/color]
[color=var(--content-color)]ஆனால், அதை எடுக்க சின்மயானந்த் தரப்பில் முயற்சி நடந்துவருகிறது. அரசு தரப்பும் அவருக்கு ஆதரவாகச் செயல்படுகிறது. எங்களுக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் வந்துகொண்டிருக்கிறது" எனப் புகார் கூறும் மாணவியின் தந்தை மகளின் தோழி மூலமாக சம்பந்தப்பட்ட பென்டிரைவ்வை மீட்டுள்ளார்.
அந்த பென்டிரைவ்வில் சின்மயானந்த்துக்கு எதிராக 43 வீடியோக்கள் இருந்துள்ளன. இவை அனைத்தும் சின்மயானந்த் செய்த பாலியல் வன்கொடுமை வீடியோக்கள் எனக் கூறப்படுகிறது. இதில் சில வீடியோக்கள் வெளியாகி சர்ச்சையாகின. பின்னர் மாணவி தரப்பிலிருந்து இந்த வீடியோக்களை போலீஸாரிடம் கொடுத்தபிறகுதான் அவர்மீது பாலியல் வழக்குப் பதிவு செய்யப்பட்டு தற்போது அவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

[/color]
[/color]
first 5 lakhs viewed thread tamil
Like Reply
[color=var(--content-color)]ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை எல்லாம் மறுக்கும் சின்மயானந்த் தரப்பு வழக்கறிஞர் ஓம் சிங்கோ, ``அவர்கள் கொடுத்த வீடியோவில் காட்டப்படும் தேதி ஜனவரி 31, 2014. சம்பந்தப்பட்ட மாணவி கடந்த ஒருவருடமாகத்தான் ஹாஸ்டலில் தங்கியுள்ளார். இதிலிருந்தே தெரிய வேண்டாமா அது போலி வீடியோதான் என்று. சின்மயானந்த்துக்குக் கடந்த 22-ம் தேதி ஒரு மெசேஜ் வந்தது. அதில் `உங்கள் நற்பெயரை தரைமட்டமாக்கும் வீடியோ ஒன்று என்னிடம் இருக்கிறது. அதை வெளியிடக் கூடாது என்றால் 5 கோடி ரூபாய் வேண்டும்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. சுவாமி ஜியின் நற்பெயரைக் கெடுப்பதற்காக இப்படிச் செய்து வருகின்றனர். இது தொடர்பாக முறையிட்டுள்ளோம். ஸ்பெஷல் டீம் இதுகுறித்தும் விசாரிக்கும்” என்றார்.[/color]
[color=var(--content-color)][Image: vikatan%2F2019-09%2Fe0037f55-64bb-4ef9-a...2Ccompress]
Chinmayanand
[/color]
[color=var(--content-color)]முன்னதாக 2011-ம் ஆண்டு சின்மயானந்த் ஆசிரமத்தில் நீண்டகாலமாகத் தங்கியிருந்த பெண் ஒருவர், அவர் மீது பாலியல் வன்கொடுமை வழக்கைத் தொடுத்தார். அதில் அவர், என்னை நீண்டகாலமாக அடைத்து வைத்ததுடன் தன்னைத் தாக்கி பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கு 2018-ம் ஆண்டில் அரசு தரப்பிலிருந்து திரும்பப்பெறப்படுவதாக மனுத்தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், இந்த மனுவை நீதிமன்றம் நிராகரித்துவிட்ட நிலையில், தற்போது சின்மயானந்த் மீது தொடுக்கப்பட்டுள்ள பாலியல் வழக்கு உத்தரபிரதேசத்தில் புயலை கிளப்பி வருகிறது.
[/color]
first 5 lakhs viewed thread tamil
Like Reply
வரலாற்றை மாற்றி அமைக்கும் கீழடி நாகரிகம் ?

[Image: 71784.jpg]
வைகை நதிக்கரையில் அமைந்துள்ள கீழடி கிராமத்தில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சி மூலம், சங்க கால நாகரிகத்திற்கான சான்றுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.
தமிழகத்தில் நடைபெற்ற அகழாய்வுகளிலேயே மிகப்பெரியது கீழடி அகழாய்வுதான். சுமார் 2,600 ஆண்டுகளுக்கு முந்தைய வைகை கரை நாகரிகம் சிறந்து விளங்கியதற்கான சான்றுகள் கீழடி அகழ்வாராய்ச்சியின் மூலம் தெரியவந்துள்ளன. இங்கு கிடைக்கப்பெற்ற பொருட்கள் உலகப் புகழ்பெற்ற அறிவியல் கூடங்களில் ஆய்வு செய்யப்பட்டுள்ளன
கார்பன் டேட்டிங் எனப்படும் கரிம பகுப்பாய்வுகள், அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள பீட்டா சோதனை ஆய்வகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இத்தாலியிலுள்ள பைசா பல்கலைக்கழகத்தின் புவி அறிவியல் துறையில், பானை ஓடுகள் பகுப்பாய்வு செய்யப்பட்டன. புனேவிலுள்ள முதுகலை மற்றும் ஆராய்ச்சி நிறுவனமான டெக்கான் கல்லூரியில் எலும்புத் துண்டுகள் பகுப்பாய்வுகள் செய்யப்பட்டுள்ளன.
[Image: 093519_keeladi%20l.jpg]
செங்கல் கட்டுமானத்தில் வீடுகள், தொழில் கூடங்கள், வணிகம் ஆகியவற்றை பிரதிபலிக்கும் நகர நாகரிகம் கீழடி அகழாய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இங்கு வெளிகொணரப்பட்ட மட்கலன்கள் மூலம், வட இந்தியாவின் கங்கை சமவெளி பகுதியில் நகரமயமாதலும் வைகைக் கரையின் நகரமயமாதலும் ஒரே காலக்கட்டம் என்பதை தெரிந்து கொள்ள முடிகிறது. அதாவது கி.மு. ஆறாம் நூற்றாண்டு.
கரிம பகுப்பாய்வு முறைப்படி, கி.மு. ஆறாம் நூற்றாண்டில் தமிழ் பிராமி எழுத்து பொறித்த பானை ஓடு கண்டெடுக்கப்பட்டுள்ளது. அகழாய்வு இடத்தில் உள்ள எலும்புத் துண்டுகள் மூலம், திமிலுள்ள காளை, பசு, எருமை, ஆடு ஆகியவை வேளாண்மைக்கு உறுதுணை செய்யும் வகையில் கால்நடைகளாக வளர்க்கப்பட்டது தெரியவந்துள்ளது. சன்னமான களிமண், செங்கல், சுண்ணாம்பு சாந்து, இரும்பு ஆணிகள் பயன்படுத்தி கட்டுமானத் தொழில்நுட்பத்தில் வீடுகள் கட்டப்பட்டிருந்தது அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
[Image: 092220_k2%20l.jpg]
கி.மு. 6ஆம் நூற்றாண்டில் சங்க காலச் சமூகம் எழுத்தறிவு பெற்று இருந்ததற்கான சான்றுகளாக ஆதன், குவிரன் போன்ற ஆட்பெயர்கள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கருப்பு சிவப்பு நிறப் பானை, மண் பானை, நூல் நூற்கும் தக்களிகள், கூர்முனைக் கொண்ட எலும்பு கருவிகள், தங்க அணிகலன்கள், மணிகள் போன்றவையும் கண்டறியப்பட்டுள்ளன. அரவைக் கல், மண் குடுவை, தந்தத்தில் செய்யப்பட்ட சீப்பு, சதுரங்கக்காய்கள் பகடைக்காய், சூதுபவள மணிகள், ரெளலட்டட் சாயல் கொண்ட பானை ஓடுகள், சுடுமண் வார்ப்பு, மனித உடல் பாகம், காளையின் தலை, மனித தலை உருவம் போன்றவைகளும் கண்டறியப்பட்டுள்ளன. 
first 5 lakhs viewed thread tamil
Like Reply
திருச்சி ரயில்வேயில் அதிக அளவு வட மாநிலத்தவர் நியமனம்.. 528 பேரில் 53 பேர் மட்டுமே தமிழர்கள்
திருச்சி: திருச்சி ரயில்வே கோட்டத்தில் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு புதிதாக பணி நியமனம் செய்யப்பட்ட 528 பேரில் 53 பேர் மட்டுமே தமிழர்கள் என்ற விவரம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக தமிழக தொலைக்காட்சி ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது . அந்த செய்தியில் திருச்சி ரயில்வே கோட்டத்தில் காலியாக உள்ள 800 உதவியாளர் குரூப் டி பணியிடங்களுக்கு அண்மையில் ரயில்வே பணியாளர் வாரியம் தேர்வு நடத்தியது. இதில் மொத்தம் 528 பேர் இரண்டு நாள்களுக்கு முன்பு பணியமர்த்தப்பட்டுள்ளனர். இதில் 475 பேர் வெளிமாநிலத்தவர் என்பது தெரியவந்துள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த 53 பேர் மட்டுமே பணியில் சேர்ந்துள்ளனர்.


[Image: railwayworkers1-1568894498.jpg]


புதிதாக நியமனம் செய்யப்பட்ட 90 சதவீதம் பேரில் பலர் பீகார், மத்திய பிரதேசம். உத்தரப்பிரதேசம், ஒடிசா, மகாராஷ்டிரா மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.
first 5 lakhs viewed thread tamil
Like Reply
[color=var(--title-color)]கதறிய குழந்தைகள்; மருமகளுக்கு `பைத்திய' பட்டம்! - வீடியோவால் சிக்கிய உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி [/color]
[color=var(--title-color)]சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதியரசர் ராமமோகன ராவ் தன் மருமகளைத் தாக்கியதாக வெளியாகும் வீடியோவால் அவரது குடும்பம் சர்ச்சையில் சிக்கியுள்ளது.[/color]
[Image: vikatan%2F2019-09%2F3b15d46e-c687-4acb-a...2Ccompress][color=var(--meta-color)]cctv footage[/color]
[color=var(--content-color)]ஹைதராபாத்தில் ஒரு பெண்ணை மொத்தக் குடும்பமும் சேர்ந்து தாக்கும் காட்சிகள் நேற்று முதல் இணையத்தில் வைரலாகி வருகிறது. பெண்ணை, அடிப்பது சென்னை உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ராமமோகன ராவும் அவரது குடும்பமும் என்பது நீதித்துறை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.[/color]
[color=var(--content-color)][Image: vikatan%2F2019-09%2Fae2eb93d-7622-44d8-a...2Ccompress]
cctv
[/color]
[color=var(--content-color)]இந்த வீடியோ ஏப்ரல் மாதம் 20-ம் தேதி எடுக்கப்பட்டது. இரவு 11 மணிக்கு மேல் ராமமோகன ராவின் மகன் வசிஸ்டாவுக்கும் அவரின் மனைவிக்குமிடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. இதில் வசிஸ்டா அவரின் மனைவி சிந்து சர்மாவை சோபாவில் தள்ளுகிறார். அவரைத்தொடர்ந்து ராமமோகன ராவும் தன் மருமகளை அடித்துத் துன்புறுத்துகிறார். தொடர்ந்து கடுமையாக அவரிடம் பேசுகிறார்.
நீண்ட வாக்குவாதத்துக்குப் பிறகு, சிந்து சர்மா வீட்டைவிட்டு வெளியேற நினைத்து கதவின் அருகில் செல்கிறார். ஆனால், அவரை வெளியில் செல்லவிடாமல் மீண்டும் மொத்த குடும்பமும் அவரை இழுத்து ஷோபா மீது தள்ளுகிறது. ராமமோகன ராவ் அந்தப் பெண்ணிடம் பேசிக்கொண்டிருக்கும்போதே அவரின் மகன் வசிஸ்டா தன் மனைவியை சரமாரியாகத் தாக்குகிறார்.
இதற்கிடையில் வெளியிலிருந்து ஒரு பெண் வீட்டுக்குள் நுழைகிறார். மீண்டும் அனைவரும் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். சிந்து சர்மாவின் குழந்தை தன் தாயின் கால்களைக் கட்டியணைத்தபடி அழுகிறது. இதைப் பொருட்படுத்தாமல் நீதிபதி தன் மருமகளைக் கடுமையாக விமர்சித்துக்கொண்டே இருக்கிறார். இறுதியில் தந்தையும் மகனும் சேர்ந்து சிந்துவை தரதரவென இழுக்கின்றனர். நடக்கும் அனைத்துச் சம்பவங்களையும் சிந்துவின் குழந்தைகள் இருவரும் பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.
[color=var(--content-color)]முன்னாள் நீதிபதி ராமமோகன ராவின் மகன் வசிஸ்டாவுக்கும் சிந்து சர்மாவுக்கும் இடையே சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்தத் தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இதனிடையே, வசிஸ்டா தன்னை தொடர்ந்து அடித்துத் துன்புறுத்தி வந்தார் என சிந்து ஏற்கெனவே புகார் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் வீடியோ வெளியாகியுள்ளது.[/color]
[color=var(--content-color)][Image: vikatan%2F2019-09%2F74b3d929-5b86-4df9-8...2Ccompress]
ramamohana rao
[/color]
[color=var(--content-color)]வீடியோவுக்குப் பிறகு நடந்த சம்பவங்களை விவரித்த சிந்து, ``அன்றைய தினம் என் கணவர், அவரின் அப்பா, அம்மா என அனைவரும் வரதட்சணை கேட்டு என்னை அடித்துத் துன்புறுத்தினர். இறுதியில் வீட்டில் வேலை செய்பவரும் இணைந்துகொண்டார். அவர்கள் என்னை உடல்ரீதியாகவும் வார்த்தைகளாலும் கடுமையாகத் தாக்கினர். இறுதியில் வலி தாங்க முடியாமல் நான் கீழே விழுந்துவிட்டேன். அங்கிருந்து என்னை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.[/color]

[color=var(--content-color)]என்னால் நிற்கவும் முடியவில்லை. ஸ்ட்ரெக்சரில் வைத்துதான் அழைத்துச் சென்றனர். உள்ளே சென்றதும் எனக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது, உடனடியாக மயக்க மருந்து கொடுக்க வேண்டும் என மாமியார் தொடர்ந்து கத்திக்கொண்டே இருந்தார். ஆனால் அவரின் வார்த்தைகளைக் கேட்காத மருத்துவர்கள் எனக்கு முறையான சிகிச்சை அளித்தனர். மருத்துவமனையிலிருந்து என்னுடைய தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டேன், மறுநாள் என்னைத் தாக்கியவர்கள் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்தேன்.[/color]
[color=var(--content-color)][Image: vikatan%2F2019-09%2Fa2de1ae6-6b91-4a2a-9...2Ccompress]
Sindhu Sharma
[/color]
[color=var(--content-color)]இதையடுத்து என் இரு பிள்ளைகளையும் என்னிடம் ஒப்படைக்கும்படி அவர்களின் வீட்டுக்கு முன் தர்ணாவில் ஈடுபட்டேன். ஆனால், ஒரு குழந்தையை மட்டுமே என்னிடம் ஒப்படைத்தனர். இன்னொரு குழந்தையைச் சிறை வைத்துள்ளனர். அந்தக் குழந்தையையும் மீட்டுத் தர வேண்டும்” எனக் கூறியுள்ளார்.
சிந்து கொடுத்த புகாரின் மீதான வழக்கு நாளை மறுநாள் விசாரணைக்கு வரவுள்ளது. தற்போது வசிஸ்டா விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.[/color]
[color=var(--content-color)]இந்த வீடியோ ஏப்ரல் மாதமே தனக்குக் கிடைத்துவிட்டதாகவும் நேரம் பார்த்து வெளியிடவே காத்திருந்ததாகவும் தெரிவித்துள்ளார் சிந்து. தான் தாக்கப்பட்டது தொடர்பாக சிந்து பதிவு செய்த வழக்கு நாளை மறுநாள் நீதிமன்றத்துக்கு விசாரணைக்கு வரவுள்ள நிலையில் நேற்று வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.[/color]
[color=var(--content-color)][Image: vikatan%2F2019-09%2F06f20d1d-1da4-4a9b-8...2Ccompress]
Video
[/color]
[color=var(--content-color)]ஓய்வு பெற்ற நீதிபதி ராமமோகன ராவ் 2016-ம் ஆண்டு ஹைதராபாத் உயர் நீதிமன்றத்தில் பணியாற்றியபோது சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டார். பின்னர், 2017-ம் ஆண்டு பணியிலிருந்து ஓய்வுபெற்றார். அவர் சிறிது காலம் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையிலும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.[/color]
[/color]
first 5 lakhs viewed thread tamil
Like Reply
[color=var(--title-color)]3 நாள்களாகச் சிறுமிக்கு நடந்த கொடுமை! - போக்ஸோவில் சிக்கிய 48 வயது பெயின்டர்[/color]

[color=var(--title-color)]வடசென்னையைச் சேர்ந்த சிறுமியிடம் தவறாக நடந்த 48 வயது பெயின்டரை போலீஸார் கைது செய்துள்ளனர்.[/color]
[Image: vikatan%2F2019-09%2F28b8d887-aca3-4a81-8...2Ccompress][color=var(--meta-color)]Representational image[/color]
[color=var(--content-color)]வடசென்னையைச் சேர்ந்தவர் குமார். பரோட்டா மாஸ்டர். இவரின் மனைவி தேவகி. இவர் அம்பத்தூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றைக் கொடுத்தார். அதில், ``நான் குடியிருக்கும் வீட்டின் அருகில் சீனிவாசன் (48) வசித்துவருகிறார். அவர், என்னுடைய 11 வயது மகளிடம் தவறாக நடந்துள்ளார். எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று கூறியுள்ளார். இதுகுறித்து உதவி கமிஷனர் கண்ணன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் தாரணி வழக்குபதிவு செய்து சீனிவாசனிடம் விசாரித்தார். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.[/color]
[color=var(--content-color)][Image: vikatan%2F2019-09%2F8d8e1cba-effd-49d6-b...2Ccompress]
Representational image
[/color]
[color=var(--content-color)]இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ``குமார், தேவகி ஆகிய தம்பதிக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். அந்தப் பகுதியில் உள்ள பள்ளியில் மகன் 5-ம் வகுப்பும் மகள் 6-ம் வகுப்பும் படித்து வருகின்றனர். தேவகி, வீட்டு வேலை செய்துவருகிறார். இதனால் பெற்றோர் பகல் நேரத்தில் வீட்டில் இருப்பதில்லை. 6-ம் வகுப்பு படிக்கும் மாணவி மட்டும் தனியாக இருந்துள்ளார்.[/color]

[color=var(--content-color)]பக்கத்து வீட்டைச் சேர்ந்த சீனிவாசன் தனியாக இருந்த சிறுமியிடம் நெருங்கிப் பழகியுள்ளார். சீனிவாசனுக்குத் திருமணமாகவில்லை. அவர், பெயின்டிங் வேலை செய்துவருகிறார். வேலைக்குச் செல்லாத நாள்களில் சிறுமியிடம் அவர் பேசிக்கொண்டிருப்பார். சிறுமி விரும்பியதை எல்லாம் வாங்கிக் கொடுத்துள்ளார். இதனால் சீனிவாசனைச் சிறுமி முழுமையாக நம்பியுள்ளார். அதைப் பயன்படுத்தி சீனிவாசன் அந்தச் சிறுமிக்குக் கடந்த 3 நாள்களாகப் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
[color=var(--content-color)][Image: vikatan%2F2019-09%2F42fbc4ab-3671-4d2c-9...2Ccompress]
Representational image
[/color]
[color=var(--content-color)]2 நாள்களாகச் சிறுமி வீட்டில் எதுவும் சொல்லவில்லை. மூன்றாவது நாளில்தான் நடந்த சம்பவத்தைச் சிறுமி, அம்மாவிடம் கூறியுள்ளார். மேலும், சிறுமியிடம் சீனிவாசன் தவறாக நடந்ததை அந்தப் பகுதியைச் சேர்ந்த சிலரும் பார்த்துள்ளனர். இதையடுத்து சீனிவாசன் மீது போக்ஸோ மற்றும் பாலியல் வன்கொடுமை ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளோம்" என்றார்[/color]
[/color]
first 5 lakhs viewed thread tamil
Like Reply
வங்கி அதிகாரிகள் போராட்டம் வாபஸ்

சென்னை: வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற இருந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.



[Image: Tamil_News_large_2374194.jpg]




வங்கிகள் இணைப்பை எதிர்த்து, அதிகாரிகள் சங்கத்தினர், வரும், 26, 27ம் தேதிகளில் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்து இருந்தனர். இதையடுத்து, வங்கி பணிகள் முடங்கும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில், நேற்று, வங்கி அதிகாரிகள் சங்கத்தினர், மத்திய நிதித்துறை செயலர், ராஜூவ் குமாரை சந்தித்து பேசினர்.


[Image: gallerye_035202168_2374194.jpg]





அப்போது, வங்கி இணைப்பு குறித்து ஆய்வு செய்ய, கமிட்டி அமைப்பது மற்றும் வங்கிகளின் வேலை நாட்களை, வாரத்தில், ஐந்து நாட்களாக குறைப்பது மற்றும் ஊதிய உயர்வு குறித்து ஆய்வு செய்யப்படும் என அவர் உறுதி அளித்தார். இதையடுத்து, வங்கி அதிகாரிகள் அறிவித்து இருந்த, தங்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.
first 5 lakhs viewed thread tamil
Like Reply
பெயரை மாற்றிய ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு

[Image: Tamil_News_large_2374289.jpg]

[Image: facebook.svg]
[Image: twitter.svg]
[Image: whatsapp.svg]

[/url]






[url=https://www.dinamalar.com/news_detail.asp?id=2374289&Print=1]

இஸ்லாமாபாத்: சர்வதேச நாடுகளின் கண்காணிப்பில் இருந்து தப்பிக்கவும், பாகிஸ்தானில் எளிதாக பயிற்சி பெறவும் வகையில், ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத அமைப்பானது, தனது பெயரை, மஜ்லிஸ் வுரசா இ சுகுதா ஜம்முவா காஷ்மீர் என பெயர் மாற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த அமைப்பின் தலைவராக, பயங்கரவாதி மசூத் அசாரின் சகோதரர் முப்தி அப்துல் ரவுப் அசார் செயல்பட்டு வருகிறார்.
இது தொடர்பாக உளவுத்துறை வட்டாரங்கள் கூறுகையில், மசூத் அசாரின் உடல்நலக்குறைவு காரணமாக அவரது சகோதரன் தான், ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத அமைப்பை நிர்வகித்து வந்தான், தற்போது, பெயரை மாற்றி கொண்டு அவனை தலைமை ஏற்று செயல்பட்டு வருகிறான். முன்னர், இந்த ஜெய்ஷ் பயங்கரவாத அமைப்பு, குதம் உல் இஸ்லம், அல் ரெஹ்மத் டிரஸ்ட் என்ற பெயரிலும் செயல்பட்டு வந்தது. இந்த பயங்கரவாத அமைப்பின் முக்கிய தலைவனான மவுலானா அபித் முக்தார், ஏற்கனவே, இந்தியா, அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகளில் தாக்குதல் நடத்த வேண்டும் எனக்கூறியுள்ளான்.


[Image: gallerye_084044694_2374289.jpg]





ஜெய்ஷ் பயங்கரவாத அமைப்பு, இந்தியாவில் ராணுவ முகாம்கள் மற்றும் வீரர்கள் மீது தாக்குதல் நடத்த வேண்டும் என்பதற்காக 30 தற்கொலைப்படை பயங்கரவாதிகளை உருவாக்கியுள்ளது. மசூத் அசாரின் சகோதரன் தான், பாலகோட்டில் பயங்கரவாத அமைப்பின் பயிற்சி முகாமை திறந்து வைத்ததுடன், சியால்கோட், பவல்பூரில் பயங்கரவாத அமைப்பிற்கு ஆட்கள் தேர்வு செய்து வருகிறான். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன
first 5 lakhs viewed thread tamil
Like Reply
இங்கிலாந்தின் 178 ஆண்டுகள் பாரம்பரியமிக்க  சுற்றுலா நிறுவனமான தாமஸ்குக் நிறுவனம், திடீரென திவால் ஆனது. இதனால், தாமக் குக் நிறுவனத்தில் பணியாற்றிய 21 ஆயிரம் ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. இந் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி பீட்டர் ஃ பங்க்ஹவுசர், லண்டனில், திவால் அறிவிப்பை, அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார். இதனிடையே, இந்த திடீர் நெருக்கடியால், வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்ற சுமார் 1 லட்சம் பேர், சொந்த ஊர் திரும்ப முடியாமல் தவித்து வருகிறார்கள். [Image: 201909240203536977_Thomas-Cook-London_SECVPF.gif]
first 5 lakhs viewed thread tamil
Like Reply
[color=var(--titleColor)]“அதிகாரிகள் பரிந்துரைத்தது தவறில்லை; ஒப்புதல் அளித்தது தவறா?” - ப.சிதம்பரத்துக்கு ஆதரவாக மன்மோகன் சிங்!
[color=var(--titleColor)]ப.சிதம்பரத்தை சிறையில் அடைத்திருப்பது கவலையளிக்கிறது என மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.[/color]
[Image: kalaignarseithigal%2F2019-09%2F3470bf9e-...2Ccompress]
[/color]
[url=https://www.kalaignarseithigal.com/author/604428][color=var(--codGray)]Janani

[color=var(--boulder)]Updated on [/color][color=var(--mineShaft)]: 24 September 2019, 01:18 PM[/color]
[color=var(--codGray)]ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கடந்த மாதம் சிபிஐயால் கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தற்போது டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவருக்கு அடுத்த மாதம் 3ம் தேதி வரை நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
சிறையில் இருக்கும் ப.சிதம்பரத்தை காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பலர் சந்தித்து வரும் நிலையில், நேற்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், முன்னாள் பிரதமரும் - காங்கிரஸின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங்கும் ப.சிதம்பரத்தை சந்தித்தனர்.

[/color]
[/color]
[Image: kalaignarseithigal%2F2019-09%2F0269f3b0-...2Ccompress]

[color][size][font][color]
இதனையடுத்து, ப.சிதம்பரம் சார்பில் ட்விட்டரில், சோனியா காந்தியும், மன்மோகன் சிங்கும் என்னைச் சந்தித்து மிகவும் பெருமையாக உள்ளது. காங்கிரஸ் தைரியமாகவும், வலுவாகவும் இருக்கும் வரை நானும் தைரியமாகவும், பலமாகவும் இருப்பேன் என்றும் பதிவிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில், ப.சிதம்பரத்தை சந்தித்ததற்குப் பிறகு மன்மோகன் சிங் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், முன்னாள் நிதியமைச்சரும், எங்களது நண்பருமான ப.சிதம்பரம் சிறையில் இருப்பது கவலையளிக்கிறது. இந்த வழக்கில் நியாயமான தீர்ப்பை நீதிமன்றம் வழங்கும் என்ற நம்பிக்கையில் நாங்கள் உள்ளோம்.

[/color][/font][/size][/color]
[Image: kalaignarseithigal%2F2019-09%2F6a5a3530-...2Ccompress]

[color][size][font][color]
நம்முடைய அரசாங்க விதிப்படி, எந்த ஒரு முடிவையும் தனி நபரால் தன்னிச்சையாக எடுக்க முடியாது. பல்வேறு அதிகாரிகள், பொறுப்பாளர்கள் இணைந்து ஆலோசனை மேற்கொண்ட பிறகே அரசு சார்ந்த எந்த முடிவும் எடுக்கப்படும்.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில், அரசின் 6 செயலாளர்கள், துறை சார்ந்த அதிகாரிகள் பலர் பரிந்துரைத்த முடிவுக்குத் தான் அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் ஒப்புதல் அளித்திருந்தார். அதிகாரிகளும், செயலாளர்களும் எந்தத் தவறும் செய்யவில்லை என்றால், அவர்கள் பரிந்துரைத்ததற்கு ஒப்புதல் அளித்த அமைச்சர் எப்படி குற்றவாளியாவார் எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

[/color][/font][/size][/color]
[Image: kalaignarseithigal%2F2019-09%2Fae7254ea-...2Ccompress]

[color][size][font][color]
பரிந்துரையை அங்கீகரித்ததற்கு ஒப்புதல் அளித்ததற்காக அதில் ஏற்படும் தவறுக்கு அமைச்சருக்கு மட்டும் பொறுப்பு என்றால் நம் அரசாங்க அமைப்பின் ஒட்டுமொத்த கட்டமைப்பும் சரிந்துவிடும். இது புரிதலுக்கு அப்பாற்பட்டதாகவே உள்ளது என மன்மோகன் சிங் குறிப்பிட்டுள்ளார்.[/color][/font][/size][/color]
first 5 lakhs viewed thread tamil
Like Reply
[color=var(--titleColor)]“இனி இந்த வங்கிகளில் ரூ.1000 க்கு மேல் பணம் எடுக்கமுடியாது” -[/color]

[color=var(--titleColor)]பஞ்சாப் மற்றும் மும்பை கூட்டுறவு வங்கியில் இனி 1,000 ரூபாய்க்கு மேல் பணம் எடுக்கமுடியாது என இந்திய ரிசர்வ் வங்கி சில கடுமையான கட்டுப்பாடு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.[/color]



[color=var(--codGray)]பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியின் மீது இந்திய ரிசர்வ் வங்கி சில கடுமையான கட்டுப்பாடு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் 1,000 ரூபாய்க்கு மேல் பணம் பரிவர்த்தனை செய்யமுடியாத நிலைக்கு ஆளாகியுள்ளனர்.
பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி இந்தியாவில் செயல்படும் சிறந்த கூட்டுறவு வங்கியாக இருக்கிறது. இந்த வங்கியில் அடுத்த அடுத்த ஆறு மாதங்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி விதித்துள்ளது. இதுதொடர்பாக ரிசர்வ் வங்கியின் தலைமைப் பொது மேலாளார் யோகேஷ் தயாள் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் தெரிவித்துள்ளதாவது, “பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் வாடிக்கையாளர்கள் தங்களின் கணக்கில் 1,000 ரூபாய்க்கு மேல் பணம் எடுக்கமுடியாது என்றும் குறிப்பாக சேமிப்புக் கணக்கு, நடப்புக் கணக்கு மற்றும் பிற டெபாசிட் கணக்கு வைத்திருப்பவர்கள் இனி ஆயிரம் ரூபாய்க்கு மேல் எடுக்கமுடியாது என்றும் கூறியுள்ளார்.

[/color]
[Image: kalaignarseithigal%2F2019-09%2F07e413cc-...2Ccompress]

[color][size][font]
மேலும், அடுத்த ஆறு மாதங்களுக்கு எந்தவித கடனும் வழங்கக்கூடாது, முன்பு வாங்கிய கடன்களை மீண்டும் புதுப்பிக்கக்கூடாது. எந்தவொரு முதலீட்டு நடவடிக்கைகளிலும் ஈடுபடக்கூடாது என்பதுபோன்ற கடும் விதிகளைப் பின்பற்ற உத்தரவிட்டுள்ளது.[/font][/size][/color]
[color=var(--codGray)]மேலும், இதில் ஏதாவது பணிகளை மேற்கொள்ளவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டால் ரிசர்வ் வங்கியின் அனுமதியைப் பெறவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
[/color]
[Image: kalaignarseithigal%2F2019-09%2Fbeaae156-...2Ccompress]

[color][size][font]
இந்த நடவடிக்கை வாடிக்கையாளர்களின் நலனுக்காகவும், வங்கியின் நலனுக்காகவுமே எடுக்கப்பட்டதாகவும், வங்கியின் கட்டுப்பாடுகளை மேம்படுத்தவே இத்தகைய நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கி மேற்கொண்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

இதுகுறித்து வங்கி வாடிக்கையாளர் ஒருவர் கூறுகையில், "நாங்கள் உழைத்துச் சேர்க்கும் பணம் எங்களது தேவைகளுக்கு தான். கூட்டுறவு வங்கியில் வாடிக்கையாளராக இருப்பவர்களில் பெரும்பாலானோர் விவசாயிகள் மற்றும் விவசாய கூலித் தொழிலாளிகள். அவர்களின் பணத்தை வைத்துக்கொண்டு அவர்களுக்கே கட்டுப்பாடுகளை விதிப்பது நியாயமல்ல.
[/font][/size][/color]
என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.[Image: kalaignarseithigal%2F2019-09%2F9009cc01-...2Ccompress]
first 5 lakhs viewed thread tamil
Like Reply
[color=var(--titleColor)]ஐ.நா பருவநிலை மாற்ற மாநாடு : பொய் சொன்ன மோடி - ஆதாரத்துடன் விலக்கும் சூழலியல் ஆர்வலர்கள் ![/color]
[color=var(--titleColor)]ஐ.நா கூட்டத்தில் எரிசக்தி திறனை 2022-ம் ஆண்டில் 175 ஜிகா வாட்டாக உயர்த்தப் போகிறோம் என மோடி கூறுவது ஏமாற்றும் வேலை என சூழலியல் ஆர்வலர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.[/color]


[color=var(--codGray)]உலகம் முழுவதும் பருவநிலை மாற்றத்தைச் சமாளிக்க ஜெனிவாவில் உள்ள ஐ.நா சபை தலைமை அலுவலகத்தில் பருவநிலை மாற்றம் குறித்த மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் இந்திய பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டிரம்ப் உட்பட உலகின் பல நாடுகளைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் பங்கு பெற்றுள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு பிரதமர் மோடி பருவநிலை மாற்றம் குறித்து பேசினார். அப்போது, பேசுவதற்கான நேரம் முடிந்துவிட்டது. தற்போது உலகம் முழுவதும் பருவநிலை மாற்றம் தொடர்பாக செயல்பட வேண்டிய தருணம் வந்துவிட்டது.
எங்கள் நாட்டு மக்களுக்கு சமைப்பதற்கு சுத்தமான எரிவாயு சிலிண்டர்களை வழங்கி உள்ளோம் என பெருமிதமாகப் பேசினார். அதுமட்டுமின்றி இயற்கை எரிபொருள் ஆற்றல் உருவாக்கும் எரிசக்தி திறனை 2022-ம் ஆண்டில் 175 ஜிகா வாட்டாக உயர்த்தப் போகிறோம். மேலும் அதில் இருந்து 450 ஜிகாவாட்டாக உயர்த்த உறுதி எடுத்துள்ளோம்” என்று தெரிவித்திருந்தார்.

[/color]
[Image: kalaignarseithigal%2F2019-09%2Fad44ccb2-...2Ccompress]


[color=var(--codGray)]இந்த வாக்குறுதியில் உள்ள குளறுபடியை சூழலியல் ஆர்வலர்கள் கண்டறிந்துள்ளனர். மோடி பேசியது குறித்து பல கேள்விகளை எழுப்பியுள்ளனர். இதுதொடார்பாக சூழலியல் ஆர்வலர் ஒருவர் கூறுகையில், “கடந்த 2015-ம் ஆண்டு பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தில் இந்தியா தனது உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாக 175 ஜிகா வாட் இலக்கை நிர்ணயித்திருந்தது.
அதாவது புதை படிவ எரிபொருள் ஆற்றலின் பங்கை 175 ஜிகா வாட்டாக இந்தியா அதிகரிக்கும்” என்று பிரதமர் மோடி அப்போது கூறியிருந்தார். 2015 பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தில் இந்தியா ஒப்புக்கொண்ட இலக்கை முடிக்காத நிலையில் மீண்டும் அதே அளவை நிர்ணயித்துள்ளதாக கூறுகிறது.
அப்படியென்றால் இந்த நான்கு வருடங்களில் அதற்கான எந்தவொரு நடவடிக்கையும் மோடி அரசு மேற்கொள்ளவில்லை என்று அப்பட்டமாக தெரிகிறது. இந்நிலையில் "பேச்சு வார்த்தைக்கான நேரம் முடிந்துவிட்டது, உலகம் இப்போது செயல்பட வேண்டும்" என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்னிலையில் பிரதமர் மோடி பேசுகிறார்.
2022-ம் ஆண்டில் 175 ஜிகா வாட்டாக உயர்த்தப் போகிறோம் என மோடி கூறுவது ஏமாற்றும் வேலையாக தெரிகிறது. ஊருக்கு மட்டுதான் தான் உபதேசமா? பிரதமர் மோடி கூறியதை முதலில் அவர் செயல்படுத்தவேண்டும் என கோரிக்கை வைக்கிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.
[/color]
[Image: kalaignarseithigal%2F2019-09%2F69acb48b-...2Ccompress]
first 5 lakhs viewed thread tamil
Like Reply
[color=var(--titleColor)]எகிறும் வெங்காய விலை : குறைந்த விலையில் விற்கும் டெல்லி அரசு - வரிசையில் நின்று வாங்கிச் செல்லும் மக்கள்[/color]
[color=var(--titleColor)]டெல்லி அரசால் குறைந்த விலைக்கு விற்கப்படும் வெங்காயத்தை வாங்கிச் செல்ல டெல்லி மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.[/color]
[color=var(--codGray)]நம் அன்றாட சமையலுக்கு வெங்காயம் இன்றியமையாதது ஆகும். ஆனால், கடந்த சில தினங்களாக வெங்காயத்தின் விலை சில நாட்களாக கடுமையாக அதிகரித்துள்ளதைக் கண்டு பொதுமக்கள் வெங்காயத்தைப் பயன்படுத்தவே அஞ்சுகின்றனர்.
இந்தியாவில் வெங்காயம் அதிகமாக விளையும் மராட்டியம், கர்நாடகா, ஆந்திரா, குஜராத், கிழக்கு ராஜஸ்தான், மேற்கு மத்திய பிரதேசம் ஆகிய பகுதிகளில் கடந்த பருவ மழை அதிகமாக பெய்து வருகிறது.
இதனால் அங்கு இருந்து வரும் வெங்காயத்தின் வரத்து குறைந்து விட்டது. இதனால் வெங்காயத்தின் விலை திடீரென அதிக அளவில் உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
[/color]
[Image: kalaignarseithigal%2F2019-09%2Fd0a948a9-...2Ccompress]

[color=var(--codGray)]
டெல்லியில் கடந்த 2 நாட்களாக ஒரு கிலோ வெங்காயம் 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மக்கள் பாதிக்கப்படுவதைத் தவிர்க்க அரசே வெங்காயத்தை கொள்முதல் செய்து குறைந்து விலையில் மக்களுக்கு வழங்கும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்திருந்தார்.
அதன்படி, டெல்லியின் பல்வேறு பகுதிகளில் அரசு வாகனங்களில் மூட்டை மூட்டையாக வெங்காயங்கள் கொண்டு செல்லப்பட்டு மக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிலோ வெங்காயம் 22 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதால், நீண்ட வரிசையில் நின்று பொதுமக்கள் வெங்காயம் வாங்கி வருகின்றனர்.
[/color]
[Image: kalaignarseithigal%2F2019-09%2F88145145-...2Ccompress]
first 5 lakhs viewed thread tamil
Like Reply




Users browsing this thread: 166 Guest(s)