Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கலாம்: உச்சநீதிமன்றம் தீர்ப்பு
டெல்லி: துப்பாக்கி சூட்டினை நடத்தி 13 உயிர்களை காவு வாங்கியதற்கு காரணமான ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கலாம் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேலும் இதுதொடர்பாக மதுரை உயர்நீதிமன்றக் கிளை பிறப்பித்த உத்தரவையும் சுப்ரீம் கோர்ட் ரத்து செய்துள்ளது.
ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது. இதை ரத்து செய்யக்கோரி வேதாந்தா நிறுவனத்தின் சார்பாக தாக்கல் செய்துள்ள மேல்முறையீடு மனுவை வரும் 8ம் தேதி விசாரிப்பதாக உச்ச நீதிமன்றம் ஏற்கனவே அறிவித்திருந்தது.


[Image: sterlite-copper31-1546927446.jpg]

Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
இந்த நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கலாம் என தேசிய பசுமை தீர்ப்பாயம் கடந்த மாதம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து பாத்திமா பாபு தரப்பில் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதனால் தமிழக அரசின் தலைமை செயலாளர் மற்றும் வேதாந்தா நிறுவன குழும இயக்குநர் பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பியதுடன், வழக்கை ஜனவரி 21ம் தேதிக்கு ஒத்திவைத்தது. அதுவரை ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் இப்போதுள்ள நிலையே தொடர வேண்டும் என்றும் உத்தரவில் தெரிவித்தது.
ஆனால் உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவிற்கு எதிராக வேதாந்தா நிறுவனத்தின் சார்பாக கடந்த மாதம் 24ம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், "ஸ்டெர்லைட் தொடர்பான வழக்கை தேசிய பசுமை தீர்ப்பாயம் தீர விசாரித்த பின்னர்தான் ஆலையை மீண்டும் திறக்கலாம் என தீர்ப்பு வழங்கியது.
இதற்கிடையே, உயர் நீதிமன்றம் ஜனவரி 21ம் தேதி வரை ஆலையை திறக்க தடை விதித்துள்ளது. இதில் தேசிய பசுமை தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பை விசாரிக்க உயர் நீதிமன்றத்திற்கு அதிகாரம் கிடையாது. உச்ச நீதிமன்றத்திற்கு மட்டுமே உண்டு. அதனால், இந்த வழக்கில் உயர் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்" என தெரிவித்திருந்தது.
Like Reply
இந்நிலையில், வேதாந்தா நிறுவனத்தின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அரிமா சுந்தரம் சுப்ரீம்கோர்ட்டில் ஒரு புதிய கோரிக்கையை முன்வைத்தார். தனது கோரிக்கையில்,"ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக மதுரை ஐகோர்ட் வழங்கிய உத்தரவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து, இந்த வழக்கு 8-ம் தேதி அதாவது இன்று நடைபெறும் என சொல்லப்பட்டிருந்தது. இதனால் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவும், ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்தின் மனுவும் ஒன்றாக சேர்த்து விசாரிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் இது தொடர்பான தீர்ப்பினை சுப்ரீம் கோர்ட் வழங்கி உள்ளது. அதன்படி,தற்போதைய நிலையே தொடரலாம் என்று மதுரை உயர்நீதிமன்க் கிளையின் உத்தரவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவை ரத்து செய்ய சுப்ரீம் கோர்ட் மறுத்து விட்டது.

இரு தரப்பும் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவின்படி பார்த்தால் ஸ்டெர்லைட் ஆலை இயங்கலாம் என்றே சுப்ரீம் கோர்ட் கூறியிருப்பதாக சட்ட நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
 ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட அமைச்சரவையை கூட்டி கொள்கை முடிவை எடுக்க வேண்டும் என சட்டப்பேரவையில் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொள்ள, அதற்கு பதிலளித்த அமைச்சர் தங்கமணி "ஸ்டெர்லைட் ஆலையை யார் நினைத்தாலும் திறக்க இயலாது" என்று கூறியது குறிப்பிடத்தக்கது. 
Like Reply
சிபிஐ இயக்குநர் பொறுப்பில் இருந்து அலோக் வர்மா நீக்கம்

[Image: _105133839_alok.jpg]

சிபிஐ இயக்குநர் பொறுப்பில் இருந்து அலோக் வர்மா நீக்கப்படுவதாக பிரதமர் நரேந்திர மோதி தலைமையிலான நியமனங்களுக்கான அமைச்சரவை குழு தெரிவித்துள்ளது.
அவர் தீயணைப்புத் துறையின் தலைமை இயக்குநர் பதவிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்று அந்த அறிக்கை மேலும் தெரிவித்துள்ளது.
சி.பி.ஐ-இன் பொறுப்பு இயக்குநராக, இணை இயக்குநராக இருந்த நாகேஸ்வர ராவ் மீண்டும் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.
அலோக் வர்மா நீக்கம் குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சி, தன் மீதான விசாரணைக்கு அஞ்சியே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளது.
Like Reply
[Image: _105134249_bf4bec6e-15a5-4445-a1d7-69f93aaf7a90.jpg]
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பிரசாந்த் பூஷன், ரஃபேல் வழக்கு குறித்த அச்சத்தில் பிரதமர் நரேந்திர மோதி இவ்வாறு செய்துள்ளதாக ட்வீட் செய்துள்ளார்.

மத்திய அரசால் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்ட முன்னாள் சிபிஐ இயக்குநர் அலோக் வர்மாவை மீண்டும் சிபிஐ இயக்குநராக்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.
அலோக் வர்மா அலுவலகம் சென்று பணியில் ஈடுபடலாம் என்றும் தற்போதைக்கு மிகப்பெரிய கொள்கை முடிவுகளை எடுக்கமுடியாது என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது. [Image: _105126645_abe48834-36f0-4351-b03c-5be67ebdf667.jpg]
Like Reply
சிபிஐ இயக்குநரை மாற்றுவதோ, அவரை பணியில் ஈடுபடாமல் முடக்கி வைப்பதோ தேர்ந்தெடுக்கப்பட்ட உயர் மட்ட குழுவின் ஆலோசனையின்றி தன்னிச்சையாக அரசு முடிவெடுக்க சட்டப்படி எந்த அதிகாரமும் இல்லை என்றும் கூறப்பட்டது.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோதி தலைமையிலான உயர்மட்ட தேர்வுக்குழு அலோக் வர்மாவை சிபிஐ இயக்குநர் பொறுப்பில் இருந்து நீக்கியுள்ளது.
[Image: _105133838_cbi.jpg]படத்தின் காப்புரிமைCBIImage captionராகேஷ் அஸ்தானா (இடது) மற்றும் அலோக் வர்மா
முன்னதாக இந்தியாவின் உச்சபட்ச புலனாய்வு அமைப்பான சிபிஐ-இன் மூத்த பொறுப்புகளில் இருந்த இரு அதிகாரிகள் இடையே உண்டான அதிகாரப் போட்டியால், அதன் இயக்குநர் அலோக் வர்மா மற்றும் சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா ஆகிய இருவருமே கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டிருந்தனர்.
சிபிஐ, அதாவது மத்தியப் புலனாய்வு முகமை, ஊழல் பற்றி விசாரணை செய்யும் இந்திய அரசின் முக்கியமான நிறுவனமாகும்.
Like Reply
[video=dailymotion]blob:https://ww
w.dailymotion.com/94951c2c-be73-46c7-aaf5-5ec92904a921[/video]

இமிகிரேஷன் மறுக்கப்பட்ட தமிழருக்காக கனிமொழி குரல்!

சென்னை: மும்பை விமான நிலையத்தில் இந்தி தெரியாத தமிழக மாணவருக்கு இமிகிரேஷன் மறுக்கப்பட்டதற்கு மாநிலங்களவை திமுக எம்.பி கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தை சேர்ந்த மாணவர் ஆப்ரகாம் சாமுவேல் இந்தி தெரியாத காரணத்தால் மும்பை விமான நிலையத்தில் இமிகிரேஷன் மறுக்கப்பட்ட விவகாரம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இதற்கு தமிழகத்தில் பெரிய எதிர்ப்பு எழுந்துள்ளது. தமிழகம் மட்டுமில்லாமல் பிற மாநில மக்கள் சிலரும் கூட இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள்.


[Image: kanimozhi323-1547178273.jpg]
Like Reply
தமிழகத்தை சேர்ந்த மாணவர் ஆப்ரகாம் சாமுவேல் இரண்டு நாட்களுக்கு முன் நியூயார்க் செல்வதற்காக மும்பை சத்திரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது அங்கிருந்த குடியேற்றப் பிரிவு அதிகாரி அவரிடம் இந்தியில் பேசி இருக்கிறார். ஆனால் இந்தி தெரியாத, ஆப்ரகாம் சாமுவேல் அந்த அதிகாரியை ஆங்கிலத்தில் பேசும்படி கேட்டுள்ளார்.

[Image: kanimozhi334-1547178280.jpg]
  
[color][size][font]
தமிழ்நாட்டிற்கு போ
இதற்கு மறுப்பு தெரிவித்த அந்த மொழி வெறி பிடித்த அதிகாரி, இந்தி தெரியாது என்றால் தமிழ்நாட்டிற்கே போ, என்று கோபமாக தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து டிவிட் செய்திருக்கும் ஆப்ரகாம் சாமுவேல், பிரதமர் மோடியிடம் புகாரும் அளித்துள்ளார்.[/font][/size][/color]
Like Reply
Quote:[Image: gFqMQriK_normal.jpg]
[/url]Kanimozhi (கனிமொழி)

@KanimozhiDMK





I am an Indian and I do NOT speak Hindi #StopHindiImpositionhttps://twitter.com/MumbaiMirror/status/1083210842802401287?s=19 …
Mumbai Mirror

@MumbaiMirror

Airport immigration officer denied a PhD student clearance for not speaking Hindi; he sparked a twitter debate by tagging PM Modi, Rahul Gandhi; security officer orders probe.@AAI_Official @Mumbaisecurity officer @sureshpprabhu @abrahamsamuel @SushmaSwaraj @MEAIndia https://mumbaimirror.indiatimes.com/mumb...461838.cms …



4,038
3:01 PM - Jan 10, 2019
Twitter Ads info and privacy


1,723 people are talking about this

[url=https://twitter.com/KanimozhiDMK/status/1083295251647741953]




கனிமொழி கண்டனம்
இதற்கு தற்போது மாநிலங்களவை திமுக எம்.பி கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் இதுகுறித்து செய்துள்ள டிவிட்டில் ''நான் ஓர் இந்திய பெண்..நான் இந்தி பேச மாட்டேன்'' என்று மிகவும் கோபமாக குறிப்பிட்டுள்ளார். ''நாங்க இப்படித்தான் முடிந்ததை பார்த்துக் கொள்ளுங்கள்'' என்று பணியில் கனிமொழி  டிவிட் செய்துள்ளார்
Like Reply
‘பணிக்காலம் முடிந்ததாக எடுத்துக்கொள்ளவும்’ - ராஜினாமா செய்தார் சி.பி.ஐ இயக்குநர் அலோக் வர்மா..!

சி.பி.ஐ இயக்குநராக இருந்த அலோக் வர்மாவை கட்டாய விடுப்பில் செல்ல மத்திய அரசு வற்புறுத்தி அவரைப் பதவியிலிருந்து நீக்கியது . அவருக்குப் பதில் இடைக்கால இயக்குநராக நாகேஷ்வர ராவ் நியமிக்கப்பட்டார். கட்டாய விடுப்பில் அனுப்பப் பட்டதற்கு எதிராக  அலோக் வர்மா நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பணிக்காலம் முடியும் வரை அலோக் வர்மா மீண்டும் பணியில் தொடர அனுமதி வழங்கி உத்தரவிட்டனர்.

[Image: varma_08008_00314.jpg]
இந்நிலையில் பிரதமர் இல்லத்தில் நியமனக் குழு ஆலோசனை கூட்டம்  நடைபெற்றது.அதில் பிரதமர் மோடி, எதிர்க்கட்சி சார்பாக  மல்லிகார்ஜுனா கார்கே, நீதிபதி ஏ.கே.சிக்ரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அந்த கூட்டத்தில் அலோக் வர்மாவை மீண்டும் சி.பி.ஐ இயக்குநர் பதவியிலிருந்து நீக்குவது குறித்து முடிவு செய்யப்பட்டது. சி.பி.ஐ இயக்குநர் பதவிக்கு  பதிலாக அலோக் வர்மா தீயணைப்பு துறையின் இயக்குநராக நியமிக்கப்பட்டார்
Like Reply
இதனைத் தொடர்ந்து, “ இன்றோடு தன்னுடைய பணிக்காலம் முடிந்து விட்டதாக எடுத்துக் கொள்ளவும். தீயணைப்பு  இயக்குநர் பணிக்கான வயது வரம்பை நான் ஏற்கனவே கடந்து விட்டேன்” என அலோக் வர்மா மத்திய பணியாளர் அமைச்சக செயலாளருக்கு   கடிதம் எழுதியுள்ளார்.
[Image: _104004529_0ff04fc6-18f0-46c8-ba35-61718..._01088.jpg]
இது தொடர்பாக  கருத்து தெரிவித்திருந்த மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி, “ மத்தியில் ஆட்சியில் உள்ள பி.ஜே.பி அரசு ரிசர்வ் வங்கி, சி.பி.ஐ போன்ற அமைப்புகளைச் சீர்குலைத்து வருகின்றது.  தன்னுடைய அரசியல் எதிரிகளைப் பழிவாங்குவதற்காக சி.பி.ஐ உள்ளிட்ட அமைப்புகளைப் பயன்படுத்தி வருகின்றது. ” எனக் கூறியுள்ளார்.
Like Reply
சதம் விளாசினார் ரோகித் சர்மா - இந்திய அணிபோராடி தோல்வி
[Image: 57060.jpg]


[Image: 035237_dhoni.jpg]

[Image: 031838_rohit2.jpg]
Like Reply
பேட்டிங்கை துவங்கிய 3 வது ஓவரிலேயே பின்ச், புவனேஷ்வர் குமார் பந்தில் போல்டாகி வெளியேறினார். அடுத்த துவக்க வீரரான கேரி, குல்தீப் பந்தில் ஆட்டமிழந்தார். 10 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 41 ரன்கள் எடுத்துள்ளது.
 

[/url]
[Image: DwrXQ53UUAA2SVj?format=jpg&name=small]
Quote:[Image: C_t9bM0O_normal.jpg]
cricket.com.au

@cricketcomau





Bhuvneshwar Kumar picks up his 100th ODI wicket in style.

Stream live via Kayo HERE: https://cricketa.us/AUSvIND_1  #AUSvIND

918
8:05 AM - Jan 12, 2019
[color][size][font]

128 people are talking about this


Twitter Ads info and privacy

[/font][/size][/color]
 

View image on Twitter
[Image: DwrCM6eU0AAV1Gs?format=jpg&name=small]
Quote:[Image: C_t9bM0O_normal.jpg]
cricket.com.au

@cricketcomau






Today's @scg pitch. Thoughts?

191
6:33 AM - Jan 12, 2019
[color][size][font]

63 people are talking about this

[url=https://twitter.com/cricketcomau/status/1083892234624200705][/font][/size][/color]
Like Reply
ஓவர் 17 : 
ட்ரிங்ஸ் ப்ரேக்கின் போது ஆஸ்திரேலியா 17 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 75 ரன்கள் எடுத்துள்ளது. கவாஜா 26 ரன்களுடனும்,  ஷான் மார்ஷ் 13 ரன்களுடனும் நிதானமாக ஆடி வருகின்றனர். இந்திய தரப்பில் குல்தீப், புவனேஷ்வர் குமார் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தியுள்ளனர்.
 

ஓவர் 20 : 
இரண்டாவது பவர் ப்ளேயின் முடிவில்  ஆஸ்திரேலியா 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 91 ரன்கள் எடுத்துள்ளது. கவாஜா 31 ரன்களுடனும்,  ஷான் மார்ஷ் 24 ரன்களுடனும் நிதானமாக ஆடி வருகின்றனர். இருவரும் இணைந்து 50 ரன்கள் சேர்த்து ஆரம்ப சரிவிலிருந்து அணியை மீட்டு வருகின்றனர்.
ஓவர் 25: 
ஆஸ்திரேலிய இன்னிங்ஸின் பாதி ஆட்டத்தில்  ஆஸ்திரேலியா 25 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 116 ரன்கள் எடுத்துள்ளது. கவாஜா 50 ரன்களுடனும்,  ஷான் மார்ஷ் 31 ரன்களுடனும் நிதானமாக ஆடி வருகின்றனர். இந்நிலையில், கவாஜா அரைசதமடித்தார்.2016 க்கு பிறகு அவர் அடிக்கும் முதல் அரைசதம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
ஓவர் 28.3 : கவாஜா அவுட் 
அரைசதமடித்து சிறப்பாக ஆடி வந்த கவாஜா ஜடேஜா பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். அதனை ரிவியூ செய்தார் கவாஜா. அதிலும் அவுட் என தெரிய வர ஒரு ரிவியூவை இழந்தது ஆஸ்திரேலியா. 29 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 136 ரன்கள் எடுத்துள்ளது ஆஸ்திரேலியா.
ஓவர் 35:
அபாரமாக ஆடி வந்த ஷான் மார்ஷ், தனது அரைசதத்தை நிறைவு செய்தார். 66 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் அரைசதமடித்தார் மார்ஷ். ஹேண்ட்ஸ்கோம்பும் 26 பந்தில் 26 ரன் எடுத்து ஆடி வருகிறார். ஆஸ்திரேலியா 35 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் குவித்துள்ளது.
ஓவர் 38 : ஷான் மார்ஷ் அவுட் 
ஷான் மார்ஷ் 54 ரன்கள் எடுத்திருந்த நிலையில் குல்தீப் பந்தில் ஷமியிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். 36 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் எடுத்துள்ளது ஆஸ்திரேலியா. இறுதி கட்ட ஓவர்களில் அதிரடி காட்ட விடாமல் இந்தியா சிறப்பாக பந்துவீசி வருகிறது.
ஓவர் 45:
ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடி வந்த ஹேண்ட்ஸ்கோம்ப், குல்தீப் பந்தை சிக்ஸருக்கு அனுப்பி அரைசதமடித்தார். குல்தீப் 10 ஓவர்கள் வீசி 54 ரன்களை கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார். ஜடேஜா 10 ஓவர்கள் வீசி 48 ரன்களை கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.
45 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 229 ரன்கள் எடுத்துள்ளது ஆஸ்திரேலியா.
50 ஓவர் முடிவில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் இழப்புக்கு 288 ரன்கள் குவித்துள்ளது. ஆரம்பம் முதலே மெதுவாக ரன் குவித்து வந்த ஆஸ்திரேலிய வீரர்கள், சரியான நேரத்தில் வேகமெடுக்காததால் ஆஸ்திரேலியா இந்த ஸ்கோரை எட்டியுள்ளது. ஒரு கட்டத்தில் 300 ரன்களை தாண்டும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மெதுவான ரன்குவிப்பால் 288 ரன்களை எடுத்தது.
ஆஸ்திரேலிய தரப்பில் 3 வீரர்கள் அரைசதமடித்தனர், ஹேண்ட்ஸ்கோம்ப் 73 ரன்களும், ஷேன் மார்ஷ் 53 ரன்களும், கவாஜா 59 ரன்களும் குவித்து ஆட்டமிழந்தனர். ஸ்டோனின்ஸ் ஆட்டமிழக்காமல் 47 ரன்கள் குவித்திருந்தார். மேக்ஸ்வெல் தாமதமாக இறங்கியதும் ஸ்கோர் அதிகரிக்காமல் போக காரணமகியது. கடைசியில் மேக்ஸ்வெல் 5 பந்தில் 11 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய தரப்பில் புவனேஷ்வர் குமார், குல்தீப் யாதவ் தலா இரண்டு விக்கெட்டுகளையும், ஜடேஜா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். இந்திய அணிக்கு 289 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Like Reply
289 ரன்கள் என்ற இலக்குடன் ஆடத்துவங்கிய இந்தியா, முதல் ஓவரின் கடைசி பந்தில் தவான் விக்கெட்டை இழந்தது. பெகன்ட்ராஃப் பந்தில் எல்பிடபிள்யூ ஆகி வெளியேறினார். ஒரு ஓவர் முடிவில் ஒரு ரன் ஒரு விக்கெட்!
ஓவர் 4: கோலி, ராயுடு அவுட்!
நான்காவது ஓவரை ரிச்சர்ட்ஸன் வீசினார். இதில் மூன்றாவது பந்தில் கோலி ஸ்டோனின்ஸிடம் கேட்ச் கொடுத்து 3 ரன் எடுத்த நிலையில் வெளியேறினார்.  ஐந்தாவது பந்தில் ராயுடு டக் அவுட் ஆகி வெளியேறினார். இந்திய அணி 4 ஓவரில் நான்கு ரன் குவித்து 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிற‌து. தோனி களமிறங்கியுள்ளார். ரிச்சர்ட்ஸன் 2 ஓவர் வீசி ரன் ஏதும் கொடுக்காமல் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
ஓவர் 10: இந்தியா நிதான ஆட்டம்!
டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் விக்கெட்டை இழந்ததால், இந்திய துணை கேப்டன் ரோஹித் ஷர்மாவும், தோனியும் பொறுப்பை உணர்ந்து ஆடி வருகின்றனர். இந்திய அணி 10 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து 21 ரன்கள் எடுத்துள்ளது. தோனி 3 ரன்களுடனும், ரோஹித் 11 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
தோனி 1 ரன் எடுத்திருந்த நிலையில், ஒருநாள் போட்டிகளில் இந்திய அணிக்காக மட்டும் 10 ஆயிரம் ரன்களை கடந்தார் என்ற பெருமையை பெற்றார். இந்த பெருமையை பெரும் 5வது இந்தியர் தோனி.
9 வருடங்களுக்கு பிறகு அணிக்கு திரும்பிய பீட்டர் சிடில் போட்டியின் பத்தாவது ஓவரை வீசினார். அதில் 2 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டது.
ஓவர் 16: 
டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் விக்கெட்டை இழந்ததால் இந்திய துணை கேப்டன் ரோஹித் ஷர்மாவும், தோனியும் பொறுப்பை உணர்ந்து ஆடி வருகின்றனர். இந்திய அணி 16 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து 47 ரன்கள் எடுத்துள்ளது. தோனி 13 ரன்களுடனும், ரோஹித் 26 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். தோனி, லயன் பந்தில் அடித்த சிக்ஸர் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. 
ஓவர் 25: 
ஆரம்பத்தில் அணியின் விக்கெட்டுகள் இழந்ததால் அமைதியாக ஆடிய ரோஹித் ஷர்மா, பின் அதிரடியில் இறங்கினார்.  முதல் 18 பந்துகளில் ரன் எடுக்காத ரோஹித் ஷர்மா 62 பந்துகளில் அரைசதமடித்தார். தோனியும் பொறுப்பாக ஆடி 37 ரன் குவித்துள்ளார். இந்திய அணி 25 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 100 ரன்கள் குவித்துள்ளது. இன்னும் 25 ஓவர்களில் 189 ரன்கள் குவிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. 
ஓவர் 30:
4 ரன்களுக்கு 3 விக்கெட் என்ற நிலையிலிருந்து ரோஹித் - தோனி இணை 133 ரன்களுக்கு 3 விக்கெட் என்ற நிலைக்கு ஆட்டத்தை கொண்டு வந்துள்ளது. 30 ஓவர்கள் முடிவில் இந்தியா 3 விக்கெட்டுகளை இழந்து 133 ரன்கள் குவித்துள்ளது. ரோஹித் அபாரமாக ஆடி ரன்குவித்து வருகிறார். ரோஹித் ஷர்மா 84 பந்தில் 4 சிக்ஸர், 4 பவுண்டரியுடன் 73 ரன்கள் குவித்துள்ளார். தோனி 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் ஆடி வருகிறார்.
ஓவர் 32: தோனி அவுட்
4 ரன்களுக்கு 3 விக்கெட் என்ற நிலையிலிருந்து ரோஹித் - தோனி இணை 4வது விக்கெட்டுக்கு 137 ரன்கள் சேர்த்து இந்திய அணியின் ஸ்கோரை உயர்த்தியது. ரோஹித் அபாரமாக ஆடி ரன்குவித்து வருகிறார். ரோஹித் ஷர்மா 84 பந்தில் 4 சிக்ஸர், 4 பவுண்டரியுடன் 73 ரன்கள் குவித்துள்ளார். தோனி பொறுமையாக ஆடி 92 பந்துகளில் ஒரு சிக்ஸர் மூன்று பவுண்டரிகளுடன் அரைசதமடித்து ஆட்டமிழந்தார். 32.2 ஓவரில் இந்தியா 4 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்கள் குவித்துள்ளது. இந்திய வெற்றிக்கு இன்னும் 106 பந்தில் 148 ரன்கள் தேவை.
ஓவர் 40: ரோஹித் சதம்!
அபாரமாக ஆடிய  ரோஹித் ஷர்மா 110 பந்தில் 4 சிக்ஸர், 7 பவுண்டரியுடன் சதமடித்தார். 40 ஓவரில் இந்தியா 5 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் குவித்துள்ளது. தினேஷ் கார்த்திக் 21 பந்தில் 12 ரன் எடுத்து ரிச்சர்ட்ஸன் பந்தில் போல்டானார். இந்திய வெற்றிக்கு இன்னும் 60 பந்தில் 109 ரன்கள் தேவை. 
ஓவர் 45: ரோஹித் அதிரடி
45 ஓவரில் இந்தியா 6  விக்கெட்டுகளை இழந்து 231 ரன்கள் குவித்துள்ளது. ஜடேஜா 8 ரன்கள் குவித்து ரிச்சர்ட்ஸன் பந்தில் ஆட்டமிழந்தார். இந்திய வெற்றிக்கு இன்னும் 30 பந்தில் 75 ரன்கள் தேவை.  ரோஹித் ஷர்மா  126 பந்தில் 6 சிக்ஸர், 9 பவுண்டரியுடன் 128 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.
ஓவர் 46: ரோஹித் அவுட்
46 ஓவரில் இந்தியா 7  விக்கெட்டுகளை இழந்து 223 ரன்கள் குவித்துள்ளது. ரோஹித் ஷர்மா 129 பந்தில் 133 ரன்கள் குவித்து ஸ்டோனின்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார். இந்திய வெற்றிக்கு இன்னும்  24 பந்தில் 66 ரன்கள் தேவை.
இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ரன்குவிக்காமல் ஆட்டமிழந்து, 4 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் என்ற நிலையிலிருந்து ரோஹித் மற்றும் தோனியின் பொறுப்பான் ஆட்டத்தால் மீண்டு வந்தது. பின் தோனி ரோஹித் அவுட் ஆக பின் வரிசை வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 254 ரன்கள் குவித்தது. இதனால் இந்தியா முதலாவது ஒருநாள் போட்டியை 34 ரன்கள் வித்தியாசத்தில் இழந்தது. இந்திய தரப்பில் ரோஹித் 133 ரன்களும், தோனி 51 ரன்களும் குவித்தனர். புவனேஷ்வர் குமார் 29 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
ஆஸ்திரேலிய தரப்பில் ரிச்சர்ட்ஸன் 4 விக்கெட்டுகளையும், ஸ்டோனின்ஸ், பெகன்ட்ராஃப் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். பீட்டர் சிடில் 9 வருடங்களுக்கு பிறகு ஆடிய போட்டியில் ஒரு விக்கெட்டை கைப்பற்றினார். மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. அடுத்த போட்டி ஜனவரி 15ம் தேதி அடிலெய்டில் நடக்கிறது.



0 COMMENTS
Like Reply
புதுக்கோட்டையில் அடங்க மறுத்த காளைகளை அடக்கிய காளையர்கள்

[Image: _105175069_whatsappimage2019-01-14at1.10.24pm.jpg]
தமிழ்நாட்டில் அரசின் அனுமதி பெற்று நடைபெறுகின்ற 2019ம் ஆண்டின் முதல் ஜல்லிகட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் இன்று திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் சீறிப் பாய்ந்து வந்த 453 காளைகளை 100ற்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் அடக்கினர். இதில் மாடுபிடி வீரர்கள் மற்றும் பார்வையாளர்கள் உள்ளிட்ட 13 பேர் காயமடைந்தனர்.ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிக அளவில் நடத்தப்படுகிறது.
ஜல்லிக்கட்டு தொடர்பாக 2019 ஆம் ஆண்டிற்கான தமிழக அரசு அரசாணை வெளியான நிலையில் நடக்கும் முதல் ஜல்லிக்கட்டு புதுக்கோட்டை மாவட்டம் தச்சன்குறிச்சியில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது
Like Reply
[Image: _105175071_whatsappimage2019-01-14at1.10.25pm-2.jpg]
புத்தாண்டை வரவேற்கும் விதமாக இந்த ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.காலை 8 30 மணிக்கு தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் ஆட்சியர் கணேஷ் ஆகியோர் ஜல்லிகட்டு உறுதி மொழியை வாசிக்க மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.பின்னர், தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இந்தாண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கிவைத்தார்
இந்த போட்டியில் 453 காளைகளும் 120க்கும் மேற்பட்ட மாடு பிடி வீரர்களும் பங்கேற்கின்றனர்.வாடிவாசலில் இருந்து முதலில் கோயில் காளை அவிழ்த்துவிடப்பட்டது. அதன்பிறகு ஒவ்வொரு காளையாக அவிழ்த்துவிடப்பட்டது.
[Image: _105175073_whatsappimage2019-01-14at1.10.25pm-1.jpg]
வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்ட காளைகள் சீறிப் பாய்ந்து வர அதனை மாடுபிடி வீரர்கள் அடக்கினர்
Like Reply
ஒரு சில காளைகள் வீரர்களைப் பிடியில் சிக்கின. ஆனால், பல காளைகள் வீரர்களைப் பிடியில் சிக்காமல் சீறிச் சென்றன.ஜல்லிக்கட்டு போட்டியை ஆயிரக்கணக்கான பொதுமக்கள் உற்சாகமாக கண்டு ரசித்தனர்.
[Image: _105175075_whatsappimage2019-01-14at1.10.25pm.jpg]
இந்த போட்டியில் மாடுபிடி வீரர்கள் 5 பேர் பார்வையாளர்கள் உள்ளிட்ட 13 பேர் காயமுற்றனர். அதில் 4 பேர் உயர் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்
Like Reply
தனது கேள்வியால் ராகுலை மிரள வைத்தாரா துபாய் சிறுமி? - உண்மை என்ன? #BBCFactCheck

[Image: _105172099_961e4ddc-f0a0-402e-83dc-7a152278b8ff.jpg]படத்தின் காப்புரிமைGETTY IMAGESImage captionகோப்புப் படம்
காங்கிரஸ் கட்சியின் தலைவரான ராகுல் காந்தியை மிரள வைத்த துபாய் சிறுமி என்ற தலைப்பில் ஒரு செய்தி சமூக ஊடகங்களில் சனிக்கிழமை முதல் உலவியது.
ராகுல் இரண்டு நாட்கள் பயணமாக துபாய் சென்றுள்ளார். அந்த பயணத்தில் இந்தியர்களுடன் உரையாற்றும் போது, ஒரு 14 வயது சிறுமி, "இந்தியாவில் 80 சதவீத ஆண்டுகள் காங்கிரஸ்தான் ஆட்சியில் இருந்தது. ஆனால் அந்த நாட்களில் செய்யாத நன்மையை இனி எப்படி செய்வீர்கள்?" என்று கேட்டதாக விவரித்தது அந்த செய்தி.
இதனை தமிழின் பிரபல நாளிதழ்களும், "துபாய் சிறுமி துடுக்கான பேச்சு திணறிப்போனார் ராகுல்" மற்றும் "ராகுலை மிரள வைத்த துபாய் சிறுமி" என்ற தலைப்புகளில் ஒரு சிறுமியின் படத்துடன் வெளியிட்டன.
உண்மையில் ராகுலை மிரள வைத்தாரா அந்த சிறுமி?
"இல்லை" என்று தான் தரவுகள் கூறுகின்றன.
சரி. செய்திதாள்கள் வெளியிட்ட செய்தி என்ன என்பதை முதலில் பார்ப்போம்.
Like Reply
இந்தியாவில் மதவாதம் அதிகரித்துவிட்டதாக கூறும் நீங்கள் ஏன் குஜராத் தேர்தலின் போது திருநீறு அணிந்து கோயிலுக்கு சென்றீர்கள், காஷ்மீருக்கு சென்ற போது குல்லா அணிந்தீர்கள். இது ஏன்? என்று அந்த சிறுமி கேட்டதாகவும், அதற்கு ''அனைத்து மதத்தினரும் சமம் என்பதை உணர்த்தவே எல்லா வழிபாட்டு தலங்களுக்கும் செல்கிறேன். சமத்துவ இந்தியாவை உருவாக்குவதே நோக்கம்,'' என்று ராகுல் கூறியதாகவும் விவரிக்கிறது அந்த செய்தி.
[Image: _105170373_253cb7a1-cf2a-49f6-8520-9faf5520110a.jpg]படத்தின் காப்புரிமைDINAKARAN
சிறுமி, "இந்தியாவில் 80 சதவீத ஆண்டுகள் காங்கிரஸ்தான் ஆட்சியில் இருந்தது. ஆனால் அந்த நாட்களில் செய்யாத நன்மையை இனி எப்படி செய்வீர்கள்?" இதைக் கேட்டவுடன் ராகுலின் முகம் மாறியது. சிரித்த முகமாகவே இருந்தார்.மேலும் அந்த சிறுமி, 'நரேந்திர மோதி ஆட்சிக்கு வந்த பின்தான் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது. இனியாவது நீங்கள் 'மதவாதம்' என பிரசாரம் செய்யாமல் 'ஊழல் இல்லாத இந்தியா' என ஓட்டு கேளுங்கள். இந்திய மக்கள் சிந்திப்பர்' என்றார்.
சிறுமியின் பேச்சை பார்வையாளர்கள் பாராட்டினர்.இதற்கிடையே சிறுமியின் துடுக்கான கேள்விகளை தொடர்ந்து, இந்நிகழ்ச்சிக்கான நேரலை ஒளிபரப்பு திடீரென நிறுத்தப்பட்டது.
இவ்வாறாக செய்தி வெளியிட்டுள்ளது தினமலர் நாளிதழ்.
Like Reply




Users browsing this thread: 171 Guest(s)