Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
முதல் நாள் வழங்கப்பட்ட உணவு...கொடுக்கப்பட்ட சலுகைகள்...தூக்கமின்றி தவித்த ப.சிதம்பரம்! 
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிபிஐ காவலில் இருந்த ப.சிதம்பரத்தை நேற்று மீண்டும் டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர் சிபிஐ அதிகாரிகள். அப்போது சிபிஐ தரப்பில் நீதிமன்ற காவலில் ப.சிதம்பரத்தை திகார் சிறைக்கு அனுப்ப கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்ற சிறப்பு சிபிஐ நீதிமன்ற நீதிபதி, ப.சிதம்பரத்தை 14 நாட்கள் (செப்டம்பர் 19 ஆம் தேதி வரை) நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து பொருளாதார குற்றவாளிகளுக்கான பகுதியில் உள்ள ஏழாம் எண் சிறையில் அடைக்கப்பட்டார். இதே சிறையில்தான் கார்த்திக் சிதம்பரமான சிதம்பரத்தின் மகனும் அடைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில் நேற்று இரவு சிதம்பரத்திற்கு காய்கறிகள் மற்றும் பருப்புடன் சப்பாத்தி கொடுத்துள்ளனர். ஆனால் அதை சாப்பிட மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. 
 
[Image: image%20%2841%29.jpg]

அதனை தொடர்ந்து சிறையில் உள்ள கேன்டீனிலும் உணவு எடுத்து கொள்ளலாம் என்று கூறியுள்ளனர். சிதம்பரத்துக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தாலும் பாதுகாப்பு காரணங்களால் சிசிடிவி கேமிராவாலும் கண்காணிக்கப்பட்டு வருகிறார். அதேபோல் அவர் இருக்கும் சிறையில் தமிழக காவலர்கள் யாரும் பணியில் அமர்த்த படவில்லை.  சிதம்பரம் இருக்கும் அரைக்கு தினமும் பத்திரிகைகள் கொடுக்கப்படும் என்று கூறியுள்ளனர். சிறைச்சாலையில் இருக்கும் நூலகத்தையும, டிவியையும் பயன்படுத்திக் கொள்ள அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. சிதம்பரத்துக்கு தலையணை மற்றும் கம்பளி வழங்கப்பட்டுள்ளது. மேலும் வெஸ்டன் ஸ்டைல் கழிப்பறை, மருந்துகள் வைத்துக் கொள்ள கோர்ட் அனுமதி அளித்துள்ளது. மேலும் முதல்நாள் அவர் தூக்கமின்றி தவித்ததாக சொல்லப்படுகிறது. 
first 5 lakhs viewed thread tamil
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
கடைசி நொடியில் பிரச்சனை.. விக்ரம் லேண்டருடன் தொடர்பு துண்டிப்பு.. என்ன ஆனது சந்திரயான் 2?
டெல்லி: நிலவின் தென் துருவத்தில் தரையிறக்கப்படுவதாக திட்டமிடப்பட்டு இருந்த சந்திரயான் 2ன் விக்ரம் லேண்டருடன் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் சந்திரயான் 2 நிலை என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது.
சந்திரயான் 2 கடந்த ஜூலை மாதம் 22ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. வெற்றிகரமாக நிலவை நோக்கி சென்ற சந்திரயான் 2 இன்று நிலவில் இறங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
பூமியை 22 நாட்கள் சுற்றிய சந்திரயான் நிலவை அடைய மொத்தம் 48 நாட்கள் எடுத்துக் கொண்டது. இந்த நிலையில் இன்று சந்திரயான் 2 நிலவில் இறங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் இதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.


[Image: chandrayaan-2-3-1567791100.jpg]
[url=https://www.outbrain.com/what-is/default/en]
[color][size][font]



எப்படி
சந்திரயான் 2 விண்கலம் ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் மூலம் விண்ணில் s. பொதுவாக இஸ்ரோ பெரிய திட்டங்களுக்கு மட்டுமே ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட்டை பயன்படுத்தும். இது கிரையோஜெனிக் எஞ்சின் கொண்ட ராக்கெட் ஆகும். இது முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்பட்ட எஞ்சின் ஆகும். சந்திராயன் 2 திட்டத்தை முடிக்க ஜிஎஸ்எல்வி ராக்கெட்டையும் சேர்த்து 940 கோடி ரூபாய்தான் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது

[Image: chandrayaan-2-pic6-1567791123.jpg]
என்ன இருக்கிறது
சந்திராயன் 2ல் மூன்று முக்கியமான கருவிகள் அடங்கி உள்ளது. ஆர்பிட்டர் எனப்படும் நிலவை அதன் சுற்றுவட்டப்பாதையில் இருந்து ஆராயும் சாட்டிலைட் போன்ற கருவி ஒன்று. நிலவில் இறங்கி அதை சோதனை செய்யும் பிரக்யான் என்று அழைக்கப்படும் ரோவர் ஒன்று. இந்த ரோவரை தரையிறக்க உதவும் விக்ரம் என்ற லேண்டர் கருவி ஒன்று.

[Image: chandrayaan-2-pic4-1567791147.jpg]
[/font][/size][/color]
first 5 lakhs viewed thread tamil
Like Reply
என்ன ராக்கெட்
விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான் 2 முதலில் பூமியை சுற்றி வந்தது. சந்திரயான் 2 தனது சோலார் பேனல்களை திறந்துவிட்டு பூமியை 170 கிமீ தூரத்தில் இருந்து சுற்றி வந்தது. பூமியை நீள்வட்ட பாதையில் சுற்றி கொஞ்சம் கொஞ்சமாக இதன் சுற்றுவட்டப்பாதை அதிகரிக்கப்பட்டது.


[Image: chandrayaan-2-pic5-1567791135.jpg]

அடுத்து என்ன
சந்திரயான் 2 முதலில் பூமியை எதிர் கடிகார திசையில் சுற்றி வந்தது. நீள்வட்ட பாதையில் சந்திரயான் 2 சுற்றுவதன் மூலம் அதன் வேகம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்தது. இதனால் நீள்வட்ட பாதையில் சுற்றி சுற்றி பூமியைவிட்டு கொஞ்சம் கொஞ்சமாக சந்திரயான் 2 நகர்ந்து சென்றது.


[Image: chandrayaan-2-pic3-1567791159.jpg]


[size=undefined]


விண்ணில் எவ்வப்பட்டது
சரியாக விண்ணில் ஏவப்பட்ட 23 நாள் கழித்து பூமியில் இருந்து சந்திரயான் 2 ஆனது 45000 கிமீ தூரத்திற்கு சென்றது. அப்போது சரியாக சந்திரயான் 2 பூமியின் வட்டப்பாதையில் இருந்து வெளியேற்றப்பட்டு, நிலவை நோக்கி அனுப்பப்பட்டது. சந்திரயான் 2ல் உள்ள எஞ்சின் ஒன்றை ஆன் செய்து இது நிலவை நோக்கி அனுப்பப்பட்டது.[/size]


[Image: chandrayaan-2-4-1567791088.jpg]
சரியாக சென்றது
சந்திரயான் 2ல் எஞ்சின் ஆன் செய்யப்பட்ட பின் அது நிலவை நோக்கி நகர தொடங்கியது. அதன்பின் சரியாக நிலவின் வட்டப்பாதையை சந்திரயான் 2 அடைந்தது. பூமியை எப்படி சந்திரயான் 2 எதிர் கடிகார திசையில் சுற்றியதோ அதேபோல் நிலவை சந்திரயான் 2 கடிகார திசையில் சுற்றியது. அதன்மூலம் நிலவிற்கு அருகில் சென்று அதன் வேகத்தை குறைத்துக்கொண்டது.


[Image: chandrayaan-2-pic7-1567791111.jpg]

first 5 lakhs viewed thread tamil
Like Reply
அருகில் சென்றது
நிலவின் ஈர்ப்பு விசையை பயன்படுத்தி, நீள்வட்ட பாதையில் சுற்றி சந்திரயான் 2 நிலவிற்கு அருகில் கொஞ்சம் கொஞ்சமாக சென்றது. நிலவில் சரியாக வட்டப்பாதையை அடைந்தவுடன் சந்திராயனின் இருந்து ஆர்பிட்டர் எனப்படும் சாட்டிலைட் கழற்றி விடப்பட்டது. இதில் இருக்கும் விக்ரம் லேண்டர் தனியாக கழற்றிவிடப்பட்டது. கழற்றிவிடப்பட்ட ஆர்பிட்டார் நிலவை அடுத்த ஒரு வருடத்திற்கு சாட்டிலைட் போல சுற்றி தகவல்களை அனுப்பும்.


[Image: chandrayaan-2-5-1567791077.jpg]
இன்று என்ன
சந்திரயான் 2ல் உள்ள ஆர்பிட்டர் மிக சரியாக இயங்கி கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் தற்போது விக்ரம் லேண்டரை தரையிறக்கி உள்ளது. சந்திரயான் 2ன் விக்ரம் லேண்டர் நிலவின் சுற்று வட்டப்பாதையில் நுழைந்தவுடன் வேகமாக நிலவின் ஈர்ப்பு விசையால் ஈர்கப்பட்டது. இதனால் சந்திரயான் 2விற்கு எதிர் உந்து விசையை அளிக்க எதிர்புறத்தில் சில எதிர் திரஸ்டர் எஞ்சின்கள் இயக்கப்பட்டு அது நிலவில் வேகமாக இறங்க தொடங்கியது.


[Image: chandrayaan-2-pic2-1567791171.jpg]
[color][size][font]


வேகம் குறையும்
இந்த எஞ்சின்கள் எதிர் திசையில் எஞ்சினை இயக்கி சந்திரயான் 2வின் வேகத்தை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து. அதன்பின் கொஞ்சம் கொஞ்சமாக வேகம் குறைந்து விக்ரம் என்ற லேண்டர் கீழே இறங்கியது. சரியாக 2.1 கிமீ தூரம் வரை லேண்டர் சரியாக இறங்கியது. ஆனால் அதன்பின் பிரச்சனை ஏற்பட்டது.[/font][/size][/color]

[Image: chandrayaan-2-pic1-1567791183.jpg]

என்ன பிரச்சனை
சரியாக 2.1 கிமீ தாண்டிய பின் திடீர் என்று லேண்டர் உடன் தொடர்பு துண்டிக்கப்பட்டது. 2 கிமீலிருந்து வேகம் குறைக்கப்பட்டு லேண்டர் மெதுவாக இறக்கப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் அதற்கு முன் லேண்டருடன் தொடர்ந்து துண்டிக்கப்பட்டது. நிலவின் நிலப்பரப்பிலிருந்து 2.1 கி மீ உயரத்தில் இருக்கும்போது சந்திராயன் 2 விண்கலத்தில் உள்ள லேண்டர் கருவி தகவல் தொடர்பை இழந்தது.



[Image: modi2343434-1567804963.jpg]
[url=https://www.outbrain.com/what-is/default/en]
[color][size][font]


என்ன பேட்டி
இந்த நிலையில் சந்திரயான் 2 குறித்து இஸ்ரோ இயக்குனர் சிவன் பேட்டி அளித்தார். அதில், சந்திரயான் 2ல் உள்ள விக்ரம் லேண்டர் 2.1 கிமீ வரை சரியாக இறங்கியது.அதன்பின் விக்ரம் லேண்டர் உடன் தொடர்பு துண்டிக்கப்பட்டது. தொடர்ந்து ஆலோசனை நடந்து வருகிறது. டேட்டாக்களை சோதனை செய்து வருகிறோம், என்று குறிப்பிட்டார்.[/font][/size][/color]

[Image: chandrayaan-2-pic6-1567791123.jpg]

நிலை என்ன
சந்திரயான் 2ன் நிலை என்ன என்பது குறித்து இஸ்ரோ தெளிவுபடுத்தியுள்ளது. அதாவது ஆர்பிட்டர் சரியான பாதையில் உள்ளது. அதில்தான் முக்கியமான ஆய்வு சாதனங்கள் உள்ளதால் அதை வைத்துக் கொண்டு 95 சதவீத ஆய்வுகளை மேற்கொள்ள முடியும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது. எனவே சந்திரயான் 2 திட்டம் தோல்வி என்று கூற முடியாது என்ற நிலையே தற்போதைக்கு நிலவுகிறது.
first 5 lakhs viewed thread tamil
Like Reply
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானி ராஜினாமா..


மும்பை உயர்நீதிமன்ற  நீதிபதியாக இருந்த தஹில் ராமனி, கடந்த 2018 ம் ஆண்டு ஆகஸ்ட் 12-ம் தேதி சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இவரை மேகாலயா உயர்நீதிமன்றத்திற்கு  மாற்றி கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி உச்சநீதிமன்ற  தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான கொலீஜியம் முடிவு செய்தது.   இந்த முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு, கொலீஜியத்திற்கு தஹில் ரமானி வேண்டுகோள் விடுத்தார். அவரது கோரிக்கையை ஏற்கப்படாததை அடுத்து, அதிருப்தி அடைந்த நீதிபதி தஹில்ரமானி, பதவியை ராஜினாமா செய்துள்ளார்.  இந்தக் கடிதத்தை, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கும், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்-க்கும் அவர் அனுப்பி வைத்துள்ளார். வரும் 2020- ம் ஆண்டு அக்டோபர் 2 ம் தேதி தஹில் ரமானி ஓய்வு பெற இருப்பது குறிப்பிடத்தக்கது.
first 5 lakhs viewed thread tamil
Like Reply
இந்திய துடுப்பாட்ட வீரர்கள் எனக்கு மரண பயத்தை காட்டினார்கள்..! அவுஸ்திரேலிய பந்துவீச்சு ஜாம்பவான்
இந்திய துடுப்பாட்ட வீரர்கள் அனைவரும் தனக்கு மரண பயத்தை காட்டியதாக, அவுஸ்திரேலிய ஜாம்பவான் பிரெட் லீ தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் உலகில் அனைத்து துடுப்பாட்ட வீரர்களையும் தனது அதிவேக பந்துவீச்சால் திணறடித்தவர் பிரெட் லீ. அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான இவர், குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் உள்ள கல்லூரியில், காது கேட்பு செயல்திறன் குறை குறித்தான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
அப்போது அவர் இந்திய கிரிக்கெட் வீரர்கள் குறித்து பேசினார். அவர் கூறுகையில், ‘தற்போதைய கிரிக்கெட் உலகில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். பும்ராவை பொறுத்தவரை அவர் இந்த சகாப்தத்தின் சிறந்த வேகப்பந்து வீச்சாளராகவும், வேகப்பந்து வீச்சு அரசர்களின் அரசராகவும் திகழ்கிறார்.
[Image: 625.0.560.350.160.300.053.800.668.160.90.jpg]
இந்திய வீரர்களில் சச்சின் டெண்டுல்கர், வி.வி.எஸ். லட்சுமணன், டிராவிட் மற்றும் மகேந்திர சிங் டோனி ஆகிய வீரர்களுக்கு பந்துவீசுவது மிகவும் கடுமையான செயல். ஆனால், பொதுவாக இந்திய துடுப்பாட்ட வீரர்கள் அனைவருக்கும் எனக்கும் மரண பயத்தை ஏற்படுத்தினர்’ என தெரிவித்துள்ளார்.
first 5 lakhs viewed thread tamil
Like Reply
இந்திய ரூபாய் மதிப்பு உயர்ந்ததால்: ஒரு வாரத்துக்கு பிறகு தங்கம் விலை குறைந்தது - பவுனுக்கு ரூ.664 சரிந்து, ரூ.29,264-க்கு விற்பனை


[Image: 201909070447216399_As-the-Indian-Rupee-r...SECVPF.gif]

சென்னை,

தங்கம் விலை கடந்த மாதம் 1-ந் தேதியில் இருந்து தாறுமாறாக உயர்ந்து வந்தது. கடந்த மாதம் 24-ந் தேதி ஒரே நாளில் மட்டும் பவுனுக்கு ரூ.640 அதிகரித்தது. அதன் பின்னரும் தங்கம் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து கொண்டே தான் சென்றது. கடந்த மாதம் 29-ந் தேதி பவுனுக்கு ரூ.240 குறைந்து, அதற்கு மறுநாளே மீண்டும் விலை அதிகரிக்க தொடங்கியது.

கடந்த 4-ந் தேதி காலையில் ஒரு பவுன் ரூ.30 ஆயிரத்தை தாண்டி, மாலையில் சற்று குறைந்தது. இருப்பினும் முந்தைய நாளைவிட விலை அதிகரித்து தான் இருந்தது. நேற்று முன்தினம் மட்டும் தங்கம் விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் காணப்பட்டது.

இந்த நிலையில் நேற்று தங்கம் விலை அதிரடியாக குறைந்தது. நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.3 ஆயிரத்து 741-க்கும், ஒரு பவுன் ரூ.29 ஆயிரத்து 928-க்கும் விற்பனை ஆனது.

நேற்று மாலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.83-ம், பவுனுக்கு ரூ.664-ம் அதிரடியாக சரிந்து, ஒரு கிராம் ரூ.3 ஆயிரத்து 658-க்கும், ஒரு பவுன் ரூ.29 ஆயிரத்து 264-க்கும் விற்பனை செய்யப்பட்டது. கடந்த ஒரு வாரத்துக்கு பிறகு தங்கம் விலை குறைந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

தங்கம் விலை குறைவுக்கான காரணம் குறித்து மெட்ராஸ் வைரம் மற்றும் தங்கம் வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் ஷலானியிடம் கேட்டபோது, ‘உலக சந்தையில் தங்கத்தின் விலை சற்று குறைந்து இருக்கிறது. அதேபோல், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்துள்ளது. இந்த காரணங்களால் தான் தங்கம் விலை அதிரடியாக குறைந்து இருக்கிறது. இன்னும் 2 நாட்களுக்கு இதேநிலை தான் நீடிக்கும். அடுத்த வாரத்தில் மீண்டும் உயர வாய்ப்புள்ளது’ என்றார்.

வெள்ளி விலையும் நேற்று பெருமளவில் குறைந்தது. கிராமுக்கு 3 ரூபாய் 50 காசும், கிலோவுக்கு ரூ.3 ஆயிரத்து 500-ம் குறைந்து, ஒரு கிராம் 51 ரூபாய் 30 காசுக்கும், ஒரு கிலோ ரூ.51 ஆயிரத்து 300-க்கும் விற்பனை ஆனது.
first 5 lakhs viewed thread tamil
Like Reply
செப்.,11 முதல் மோட்டார் வாகன சட்டம் அமல்
[Image: Tamil_News_large_236174920190908063610.jpg]

சென்னை : வெளிநாடு சென்றுள்ள முதல்வர் பழனிசாமி நாளை மறுநாள் தமிழகம் திரும்புகிறார். அதற்கு அடுத்த நாளான 11ம் தேதி முதல் தமிழகத்தில் புதிய மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே வாகன ஓட்டிகள் இனிமேல் 'ஒன்வே, சிக்னல்' என அனைத்து சாலை விதிகளையும் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும்; இல்லையெனில் பல மடங்கு அபராதம் செலுத்த வேண்டியது கட்டாயம்.

போக்குவரத்து விதிகளை மீறினால் பல மடங்கு அபராதம் விதிக்கும் வகையில் புதிய மோட்டார் வாகன சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றி உள்ளது. புதிய சட்டத்தின்படி மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டினால் 10 ஆயிரம் ரூபாய்; அதிவேகமாக வாகனத்தை இயக்கினால்; உரிய ஆவணங்கள் இல்லாமல் வாகனம் ஓட்டி சென்றால் 5000 முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் மற்றும் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்படும்.

மேலும் 'சீட் பெல்ட், ஹெல்மெட்' அணியாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கான அபராதம் 100 ரூபாயிலிருந்து 1000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 'ஹெல்மெட்' அணியாமல் வாகனம் ஓட்டினால் அபராதம் செலுத்துவதுடன் மூன்று மாதங்களுக்கு ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும். அலைபேசியில் பேசியபடி வாகனம் ஓட்டினால் 5000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். தமிழகத்தில் தற்போது பழைய சட்டப்படி போலீசார் குறைந்தபட்ச அபராதமே வசூலித்து வருகின்றனர். ஆனால் நீதிமன்றங்கள் புதிய மோட்டார் வாகன சட்டப்படி அதிக அபராதங்களை விதிக்க துவங்கி விட்டன.

அதனால் புதிய சட்டம் அமலுக்கு வராத நிலையில் அதில் கூறப்பட்டுள்ள அபராதம் குறித்து தமிழகத்தில் போலீசார் ஆங்காங்கே 'பேனர்'கள் வைத்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இந்த புதிய சட்டம் பெரும்பாலான மாநிலங்களில் செப். 1 முதல் அமலுக்கு வந்தது. தமிழகம், மேற்கு வங்கம், ஒடிசா உட்பட சில மாநிலங்கள் மட்டும் இன்னமும் புதிய சட்டத்தை அமல்படுத்தாமல் உள்ளன.

முதல்வர் பழனிசாமி வெளிநாடு சுற்றுப்பயணம் சென்றுள்ளதால் தமிழகத்தில் புதிய மோட்டார் வாகன சட்டம் இன்னமும் அமலுக்கு வரவில்லை. வெளிநாடு சுற்றுப்பயணம் முடிந்து நாளை மறுநாள் 10ம் தேதி அதிகாலை அவர் சென்னை திரும்புகிறார்.

மறுநாள் புதிய மோட்டார் வாகன சட்டத்தை அமல்படுத்த அரசாணை பிறப்பிக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. அதைத் தொடர்ந்து போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு போலீசார் கூடுதல் அபராதத் தொகை விதிப்பர்
first 5 lakhs viewed thread tamil
Like Reply
[Image: z1927-750x506.jpg]
அத்வானி டூ ஆசாராம் பாபு வரை - ராம்ஜெத்மலானி ஆஜரான வழக்குகள், ஒரு பார்வை உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ராம் ஜெத்மலானி, டில்லியில் உள்ள அவரது வீட்டில் இன்று காலமானார். 95 வயதாகும் அவர் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். 1996 ம் ஆண்டு முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆட்சியின் போது மத்திய சட்டத்துறை அமைச்சராகவும், நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராகவும் இருந்தவர் ராம்ஜெத்மலானி. 1923 ம் ஆண்டு செப்.,14 அன்று பாகிஸ்தானின் ஷிகர்புரில் பிறந்த இவர், இந்தியா-பாக்., பிரிவினைக்கு பிறகு மும்பை வந்து வழக்கறிஞரானார். ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியை சேர்ந்த இவர் 2016 ம் ஆண்டு வரை ராஜ்யசபா எம்.பி.,யாக இருந்துள்ளார்.
சட்ட நிபுணரான ராம் ஜெத்மலானி, முன்னாள் பிரதமர்களான இந்திரா, ராஜிவ் ஆகியோரின் கொலை வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் சார்பில் வாதாடியவர். 2ஜி ஸ்பெக்டரம் ஊழல் உள்ளிட்ட பல முக்கிய வழக்குகளிலும் இவர் வாதாடி இருக்கிறார்.
நானாவதி Vs மகாராஷ்டிரா மாநிலம்
1959 ஆம் ஆண்டில், கடற்படைத் தளபதியான கவாஸ் மானேக்ஷா நானாவதி, அவரது மனைவியின் காதலரான பிரேம் அஹுஜாவின் கொலை செய்ய முயற்சி செய்ததாக அவர் மீது வழக்குத் தொடரப்பட்டது. இது நீதித்துறையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வழக்காக்கும். ராம் ஜெத்மலானி வழக்கு தொடர்ந்தார். கொலை முன்கூட்டியே திட்டமிடப்பட்டது என்ற வழக்கு விசாரணையின் வாதத்தை உயர்நீதிமன்றம் ஒப்புக் கொண்டு, நானாவதிக்கு ஆயுள் தண்டனை விதித்தது. நவம்பர் 24, 1961 அன்று, இந்திய உச்ச நீதிமன்றம் இந்த தண்டனையை உறுதி செய்தது.
[Image: z1924-266x300.jpg]
சோஹ்ராபுதீன் போலி என்கவுன்டர் வழக்கில் அமித் ஷாவுக்கு ஆஜர்
2005 ஆம் ஆண்டு சோஹ்ராபுதீன் ஷேக் போலி என்கவுன்டர் வழக்கில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு ஆதரவாக ராம் ஜெத்மலானி வாதாடினார். அன்றைய காங்கிரஸ் தலைமையிலான யுபிஏ அரசாங்கம், சிபிஐயை பயன்படுத்தி முன்னாள் குஜராத் உள்துறை அமைச்சரை பொய்யாக சிக்க வைக்க பயன்படுத்துவதாக குற்றம் சாட்டினார். “முதலமைச்சர் நரேந்திர மோடியையும் அவரது அரசாங்கத்தையும் குறிவைக்க சிபிஐயுடன் இந்த மத்திய சதித்திட்டம் தீட்டியது, அவர்களில் முதலாவது அமித் ஷா” என்று ஜெத்மலானி குறிப்பிட்டிருந்தார்.
[Image: z1925-300x169.jpg]
first 5 lakhs viewed thread tamil
Like Reply
ஹவாலா ஊழலில் எல் கே அத்வானி சார்பாக ஆஜர்
90 களின் முற்பகுதியில் ஹவாலா ஊழலில் முன்னாள் துணைப் பிரதமர் எல் கே அத்வானிக்கு ஆதரவாக ஜெத்மலானி வாதாடினார். இது 18 மில்லியன் டாலர் லஞ்ச ஊழலில் ஹவாலா புரோக்கர்கள் மூலம் அரசியல்வாதிகள் செலுத்தியது தொடர்பானது. இந்த ஊழலில் அத்வானி, ஷரத் யாதவ், மதன் லால் குரானா உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் குற்றம் சாட்டப்பட்டனர். 2015ல் ஜெத்மலானி கூறுகையில், நான் ஆஜரானதால் ஹவாலா வழக்கில் அத்வானி வென்றதாக கூறியிருந்தார்.
2 ஜி ஊழலில் கனிமொழி சார்பாக ஆஜர்
காங்கிரஸ் தலைமையிலான யுபிஏ -2 அரசாங்கத்தை உலுக்கிய புகழ்பெற்ற 2 ஜி ஊழலில் ஜெத்மலானி திமுக எம்.பி. கனிமொழிக்கு ஆதரவாக வாதாடினார். கனிமொஜியுடன், முன்னாள் தொலைத் தொடர்பு அமைச்சர் ஏ.ராஜா மற்றும் பலர் கடந்த ஆண்டு இந்த வழக்கில் விடுவிக்கப்பட்டனர். தீர்ப்பைக் குறிப்பிட்ட சிறப்பு நீதிமன்றம், குற்றச்சாட்டுகளை நிரூபிக்க அரசு தரப்பு “பரிதாபமாக தோல்வியுற்றது” என்று கூறியது. 2 ஜி ஸ்பெக்ட்ரமுக்கான உரிமங்களை ஒதுக்கீடு செய்வதில் கருவூலத்திற்கு ரூ .30,984 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக சிபிஐ குற்றம் சாட்டியிருந்தது. ஆனால், அந்த குற்றச்சாட்டு பிப்ரவரி 2, 2012 அன்று உயர் நீதிமன்றத்தால் கைவிடப்பட்டது.
[Image: z1926-300x209.jpg]
பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆசாராம் பாபு சார்பாக ஆஜர்
பாலியல் வன்கொடுமை செய்ததாக சந்தேகத்தின் பேரில் 2013 ல் கைது செய்யப்பட்ட ஆசாராம் பாபுவுக்கு ஆதரவாக மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத் மலானி வாதாடினார். தி வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலுக்கு அளித்த பேட்டியில், ஜெத்மலானி, “உண்மைகளைப் பொறுத்தவரை, வழக்கு மிகவும் விவாதிக்கத்தக்கது. இது ஒரு திறந்தவுடன் மூடப்படும் வழக்கு அல்ல, இந்த வழக்கு இறுதியில் நிற்காது என்பதற்கான நல்ல வாய்ப்புகள் உள்ளன.” என்றார். அவர் ஏன் ஆசாராமுக்கு ஆதரவாக வாதாட விரும்புகிறார் என்று கேட்டபோது, ஜெத்மலானி, “எனது நடைமுறை மற்ற வழக்கறிஞர்களிடமிருந்து வேறுபட்டது. நான் டன் கணக்கில் பணம் சம்பாதிக்கிறேன், ஆனால் எனது வாடிக்கையாளர்களில் 10% பேரிடமிருந்து இதைச் செய்கிறேன். அந்த 10 சதவிகிதத்தில் பாபு உள்ளார்.” என்றார். ஏப்ரல் 2018 இல், ஆசாரம் பாலியல் பலாத்கார குற்றச்சாட்டில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு, பாதிக்கப்பட்டவருக்கு ரூ .5 லட்சம் செலுத்த வேண்டும் என்ற அபராதத்துடன் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அவரது இரண்டு கூட்டாளிகளுக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா சார்பில் ஆஜர்
தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தனது 1991-96 ஆட்சிக் காலத்தில் தனது அலுவலகத்தை தவறாக பயன்படுத்தியதாகவும், 66 கோடி சொத்து குவித்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது. சிறப்பு நீதிமன்றத்தில் செப்டம்பர் 27, 2014 அன்று வழங்கப்பட்ட தீர்ப்பில், குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் – ஜெயலலிதா, சசிகலா நடராஜன், இளவரசி மற்றும் வி என் சுதாகரன் ஆகியோருக்கு தண்டனை விதித்து, அவர்களுக்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. ஜெயலலிதாவுக்காக வாதிட்ட ஜெத்மலானி, குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 389 ன் கீழ் தண்டனையை நிறுத்தி வைக்குமாறு மன்றாடினார்.
ஜெசிகா லால் கொலை வழக்கில் மனு ஷர்மா
1999ல் பிரபலமற்ற ஜெசிகா லால் கொலை வழக்கில் ஜெத்மலானி மனு ஷர்மாவை ஆதரித்தார். முன்னாள் ஹரியானா காங்கிரஸ் தலைவர் வெனோத் ஷர்மாவின் மகன் மனு ஷர்மா, மாடல் ஜெசிகா லால் தெற்கு டெல்லி ரெஸ்டாரன்ட்டில் அவருக்கு மதுபானம் வழங்க மறுத்ததால் கொலை செய்யப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. 2006 ஆம் ஆண்டில் சர்மா ஒரு விசாரணை நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார். இதற்கு பலரும் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். ஜெத்மலானியின் மகள் ராணி ஜெத்மலானி உட்பட பலர் மனு ஷர்மா விடுதலையை விமர்சித்திருந்தனர். இருப்பினும், ராம் ஜெத் மலானி உயர் நீதிமன்றத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் ஷர்மாவை ஆதரித்தார்.
first 5 lakhs viewed thread tamil
Like Reply
[Image: college-survey.jpg]
நாட்டின் டாப் 10 பள்ளிகளில் 8 பள்ளிகள் சென்னையில்...
Top 8  Chennai colleges Among Top 10 across Country: எஜுகேஷன் வேர்ல்ட் 2019 - 20 ஆம் ஆண்டு சர்வேவில், இந்தியாவில் பள்ளிகள்..
Top 8  Chennai colleges Among Top 10 across Country: எஜுகேஷன் வேர்ல்ட் 2019 – 20 ஆம் ஆண்டு சர்வேவில், இந்தியாவில் பள்ளிகள் தரவரிசையில், நாடு முழுவதும் பல்வேறு வகைகளில் இடம்பெற்ற முதல் 10 பள்ளிகளில் 8 பள்ளிகள் சென்னையில் இடம் பெற்றுள்ளன.
எஜுகேஷன் வேர்ல்ட் மற்றும் சி ஃபோர் டெல்லி என்ற அமைப்புடன் இணைந்து 13வது ஆண்டு பள்ளிகளின் தரவரிசை சர்வேவை முடித்துள்ளது. இந்த சர்வேவுக்காக இந்தியா முழுவதும் 28 கல்வியியல் மையங்களில், மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், பள்ளி முதல்வர்கள், கல்வியாளர்கள் என 12,213 பேர்களிடம் கள ஆய்வில் பல்வேறு பின்னணிகளில் நேர்காணல் செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த நேர்காணலில் பதில் அளித்தவர்களிடம் உள்கட்டமைப்பு, பணியாளர்களின் திறன், அகாடமிக் கௌரவம், பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் ஆகிய 14 அளவீடுகளின் அடிப்படையில் இந்தியாவின் 1000 சிறந்த பள்ளிகளுக்கு மதிப்பீடு அளிக்க கேட்கப்பட்டது. .
இந்த சர்வேயில் நாடு முழுவதும் பகல் நேர ஆண்கள், பெண்கள், இருபாலர், சர்வதேச பள்ளிகள், அரசு பள்ளிகள், உண்டு உறைவிடப் பள்ளிகள் ஆகிய வகைகளில் 1000 பள்ளிகளை தரவரிசை செய்துள்ளது. இதற்காக தமிழகத்தில் 141 பள்ளிகள் தணிக்கை செய்யப்பட்டுள்ளன.
இந்த தரவரிசையில் தொடர்ச்சியாக நான்காவது ஆண்டாக சென்னை ஐஐடியில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளி அரசின் பகல் நேர பள்ளிகள் பிரிவில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. அதே போல, பகல் நேர இருபாலர் பள்ளிகள் பிரிவில் அடையாரில் உள்ள கே.எஃப்.ஐ. பள்ளி 7வது இடத்தையும் சிஷ்யா பள்ளி 10வது இடத்தையும் பிடித்துள்ளன.
நாடு முழுவதும் உள்ள ஆண்கள் பகல் நேரப் பள்ளிகள் பிரிவில் கோபாலபுரத்தில் உள்ள டி.ஏ.வி ஆண்கள் சீனியர் மேல்நிலைப்பள்ளி 5வது இடத்தைப் பிடித்துள்ளது. நாட்டில் உள்ள சிறப்பு பள்ளிகளில் சென்னையில் உள்ள சங்கல் பள்ளி 10வது இடத்தைப் பிடித்துள்ளது. பகல் நேர சர்வதேச பள்ளிகள் பிரிவில் நாவலூரில் உள்ள கே.சி ஹைக் சர்வதேச பகல் நேர பள்ளி 5வது இடத்தைப் பிடித்துள்ளது. சர்வதேச உண்டு உறைவிடப் பள்ளி பிரிவில் கோவூரில் உள்ள லாலாஜி மெமொரியல் சர்வதேச பள்ளி 8வது இடத்தைப் பிடித்துள்ளது. சர்வதேச இருபாலர் உறைவிடப் பள்ளி பிரிவில் கோவையில் உள்ள சின்மயா சர்வதேசப் பள்ளி இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் பள்ளிகள் தரவரிசையில் நாடு முழுவதும் பல்வேறு வகைகளில் இடம்பெற்ற முதல் 10 பள்ளிகளில் 8 பள்ளிகள் சென்னையில் இடம் பெற்றுள்ளன.
first 5 lakhs viewed thread tamil
Like Reply
தொடர்ந்து மூடு விழா காணும் அசோக் லேலண்ட்.. 59 நாட்கள் விடுமுறை.. கதறும் பணியாளர்கள்!
டெல்லி : ஆட்டோமொபைல் துறையின் வீழ்ச்சி அனைவரும் அறிந்த விஷயமே என்றாலும், இந்த அளவுக்கு வீழ்ச்சி கண்டுள்ளதா என்ற கேள்விக்குறியும் எழுந்துள்ளது.
அதிலும் சென்னை சேர்ந்த ஹிந்துஜா குழுமத்தை சேர்ந்த அசோக் லேலண்ட் நிறுவனம், பெரும் பின்னடைவை கண்டுள்ளது.
அதிலும் தனது 5 ஆலைகளுக்கு 59 நாட்கள் கட்டாய விடுமுறை அளித்துள்ளது என்றும் ஸ்டாக் எக்சேஞ்ச்களுக்கு அளித்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



[Image: ashok-leyland2-1568012047-1568025635.jpg]





 

தொடர் விடுமுறை
அதிலும் குறிப்பாக ஏற்கனவே விடுமுறை அளித்துள்ள எண்ணூர் ஆலைக்கு மீண்டும் விடுமுறையை அளித்துள்ளதோடு, தற்போது மேலும் பல ஆலைகளுக்கும் சேர்த்து விடுமுறை அளித்துள்ளது அசோக் லேலண்ட் நிறுவனம். குறிப்பாக தனது எண்ணூர் ஆலைக்கு 16 நாட்கள் விடுமுறை என்றும், ஓசூர் 1 மற்றும் 2வது ஆலைகளுக்கு ஐந்து நாட்கள் விடுமுறையும், ஆல்வார் மற்றும் பந்தாரா ஆலைகளுக்கு 10 நாட்கள் விடுமுறையும், அதிகபட்சமாக பந்த் நகாரில் 18 நாட்கள் விடுமுறையும் அளித்துள்ளது.
[Image: ashok-leyland6-1568012140-1568025612.jpg]
மொத்த விற்பனையில் சரிவு
இந்த நிறுவனம் தனது மொத்த விற்பனையிலேயே 28 சதவிகிதம் வீழ்ச்சி கண்டுள்ளதாகவும், மொத்தம் வெறும் 10,927 வாகனங்களை மட்டுமே விற்பனை செய்துள்ளதாகவும், முன்னதாக கடந்த ஆண்டு இதே காலத்தில் 15,199 வாகனங்களை விற்பனை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. முன்னதாக உள் நாட்டு விற்பனையும் 29 சதவிகிதம் சரிந்து 10,101 வாகனங்கள் மட்டுமே விற்பனை செய்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 14,205 வாகனங்களை விற்பனை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
[Image: ashok-leyland1-1568012057-1568025623.jpg]





[url=https://www.outbrain.com/what-is/default/en][/url]



இங்கயும் வீழ்ச்சி தான்
இதே சிறிய கனரக வர்த்தக வாகனங்கள் விற்பனை 41 சதவிகிதம் வீழ்ச்சி கண்டுள்ளதாகவும், இது வெறும் 6,018 வாகனங்களை மட்டுமே விற்பனை செய்துள்ளதாகவும், இதே முந்தைய ஆண்டில் 10,152 வாகனங்களை விற்பனை செய்யவுள்ளதாகவும் அறிவித்துள்ளது. இதே லைட் கமர்ஷியல் வாகன விற்பனையானது கடந்த ஜூலை 2019ல் 4,083 வாகனங்கள் எனவும், இது முந்தைய ஆண்டில் 4,053 எனவும் கூறப்பட்டுள்ளது

[Image: ashok-leyland5-1568012146-1568025606.jpg]

 

ஊழியர்களின் நிலை என்ன?
இந்த நிறுவனத்தின் இந்த கட்டாய விடுமுறையால் சம்பள இழப்பு என இருக்கலாம் எனவும், இதை நம்பி இருக்கும் ஊழியர்களின் நிலை பரிதாபக்குரியது தான், ஆனால் என்ன செய்வது நிறுவனத்தின் நிலை அதைவிட மோசமாக உள்ளதே என்றும், இத்துறை சார்ந்த மூத்த அதிகாரிகள் வட்டாரத்தில் கூறப்படுகிறது, இதுவே பல நிறுவனங்கள் பல ஆயிரம் ஊழியர்களை வீட்டிற்கு அனுப்பிய நிலையில், இது எவ்வளவோ பரவாயில்லை என்றும் கூறப்படுகிறது. ஆக மொத்தம் ஆட்டோமொபைல் ஊழியர்களுக்கு இது போதாதா காலம் தான்
first 5 lakhs viewed thread tamil
Like Reply
புலிகள் ஒழிக்கப்பட்ட நாள்தான் எனக்கு மிக முக்கியமான நாள்: முத்தையா முரளிதரன் சர்ச்சை பேச்சு
கொழும்பு: தமிழீழ விடுதலைப் புலிகள் ஒழிக்கப்பட்ட நாள்தான் தமக்கு மிக முக்கியமான நாள் என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் பேசியிருப்பது சர்ச்சையாகி உள்ளது.
இந்திய வம்சாவளி தமிழரான முத்தையா முரளிதரன் இலங்கை கிரிக்கெட் அணியில் சுழற்பந்து வீச்சாளராக விளையாடி வந்தார். அண்மையில் அவரது வாழ்க்கை வரலாறு பற்றிய திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க இருந்தது பெரும் சர்ச்சையானது.

தற்போது விடுதலைப் புலிகளுக்கு எதிராக வெளிப்படையாக முத்தையா முரளிதரன் கருத்து தெரிவித்துள்ளது சர்ச்சையாகி உள்ளது. இலங்கையில் விரைவில் நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் போட்டியிடும் கோத்தபாய ராஜபக்ச ஏற்படுத்திய வியத்மக என்ற அமைப்பின் சார்பிலான நிகழ்ச்சியில் பங்கேற்ற முத்தையா முரளிதரன் பேசியதாவது:


[Image: muttiah-muralitharan-1568005386.jpg]


மக்களை கொன்ற புலிகள்
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சமாதான பேச்சுவார்த்தைகளின் போது வாய்ப்பு கொடுக்கப்பட்டது. ஆனால் அப்பாவி மக்களை அவர்கள் படுகொலை செய்தனர்.

[Image: ltte-12-1486896424-1568005401.jpg]
புலிகள் ஒழிக்கப்பட்ட நாள்
அதேநேரத்தில் இலங்கை அரசும் ஒருகட்டத்தில் தவறு செய்தது. பின்னர் விடுதலைப் புலிகளும் தவறு செய்தனர். 2009-ல் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட நாள்தான் எனக்கு மிக முக்கியமான ஒருநாள்.

[Image: muttiah-muralitharan-1541509315-1568005393.jpg]


அடுத்த அதிபர் யார்?
இலங்கையைப் பொறுத்தவரை அனுபவம் வாய்ந்த ஒரு அரசியல்வாதிதான் ஆட்சி செய்ய வேண்டும். அவரே அடுத்த அதிபராகவும் வர வேண்டும். மக்கள் பிரச்சனைகளுக்கு அனுபவம் உள்ள ஒருவரால்தான் தீர்வு காணவும் முடியும்.


[Image: muttiah-muralitharan-1-1568005380.jpg]

அதிபர் தேர்தலில் யாருக்கு ஓட்டு?
மக்களுக்கு பாதுகாப்பு வழங்க தகுதியான ஒரு தலைவருக்குத்தான் அதிபர் தேர்தலில் நானும் வாக்களிப்பேன். இவ்வாறு முத்தையா முரளிதரன் பேசினார்
first 5 lakhs viewed thread tamil
Like Reply
மிகப்பெரிய அளவில் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய காக்னிசென்ட் திட்டம்: அச்சத்தில் ஊழியர்கள்.!
அன்மையில் நியூயார்க் நகரில் நடந்த முதலீட்டாளர்கள் கூட்டத்தில் காக்னிசென்ட் தலைமை நிர்வாக அதிகாரியான பிரையன் அவர்கள் ஒரு அறிவிப்பை வெளியிட்டார், அது என்னவென்றால், நிர்வாகத்தின் செலவுகளை குறைக்கவும், பின்பு மிகப்பெரிய அளவில் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யவும் உள்ளதாக அவர் தெரிவித்தார்.



[Image: cognizant-us-banner-1568013238.jpg]


[url=https://www.outbrain.com/what-is/default/en][/url]




சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்த திட்டமிட்டுள்ளனர்
காக்னிசென்ட் நிறுவனம் அன்மையில் பல முக்கியமாக பிராஜெக்ட்களை இன்போசிஸ், டிசிஎஸ் உட்பட பல முன்னணி நிறுவனங்களிடம் இழந்துள்ளது. இதற்கு முக்கியமான காரணம் காக்னிசென்ட் நிறுவனத்திடம் சரியான விலை இல்லை என்பதே வாடிக்கையாளர்கள் மத்தியல் கருத்துக்கள் இருந்துள்ளது. எனவே இதை மிகப்பெரிய சவாலாக எடுத்துக் கொண்டு காக்னிசென்ட் ஊழியர்கள் மத்தியில் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
[Image: cognizant-ofc-1568013215.jpg]
குறிப்பாக வரும் அக்டோபர் மாதத்தில் மிகப்பெரிய அளவில் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யப்பட உள்ளதாக காக்னிசென்ட் தலைமை நிர்வாக அதிகாரியான பிரையன் அவர்கள் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
3-ஆம் காலாண்டு முடிவுகளை வெளியிட்டது
காக்னிசென்ட் நிறுவனம் 3-ஆம் காலாண்டு முடிவுகளை வெளியிட்டது, அதில் காக்னிசென்ட் சிஇஒ Brian Humphries தெரிவித்தது, முதலீட்டாளர்களிடம் கடந்த இருபது வருடங்களாகக் காக்னிசென்ட் நிறுவனம் வளர்ச்சிப் பாதையிலிருந்தாலும் கடந்த சில வருடங்களாக நிறுவனத்தின் வளர்ச்சி பெரிய அளவில் பாதித்துள்ளது என்று தெரிவித்தார்.
[Image: cognizant-us-logo-1568013250.jpg]

தொடர்ந்து முக்கிய துறைகளில் முதலீடு அதிகரிக்கவும்,பின்பு மற்ற துறைகளின் வர்த்தகம் மற்றும் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு ஊழியர்கள் மற்றும் வளர்ச்சியை கருத்தில் கொண்டு ‘fit-for-growth' எனும் திட்டத்தை செயல்படுத்த உள்ளது. இதன் திட்டத்தின் அர்த்தம் என்னவென்றால் நீர்வாகம் செலவு செய்யும் தொகையை மிகப்பெரிய அளவில் குறைக்க முடியும் எனத் தெரிவித்துள்ளனர்.
[Image: cognizant-us-meeting-1568013262.jpg]
  • புதிய திட்டங்களை செயல்படுத்தும்
கண்டிப்பாக இந்நிறுவனம் புதிய திட்டம், புதிய திறமைகள்,போன்ற அனைத்து சிறந்த சேவைகளை எதிர்பார்க்கிறது, எனவே தான் இந்த மறுசீரமைப்பு திட்டத்தை செயல்படுத்த அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. மேலும் இந்நிறுவனம் பல்வேறு அடுத்த மாதம் பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
[Image: cognizantceo-plans-surgical-strike-1568013187.jpg]
சிஇஒ Brian Humphries அவர்கள் தெரிவித்து, ஊழியர்களை நீக்குவது எனது விருப்பம் இல்லை, அதேசமயம் இந்தப் பணியை 3 அல்லது 6 மாத காலமோ நீட்டிக்கவும் விருப்பம் இல்லை என்று தெரிவித்தார். எனவே வரும் ஆக்டோபர் மாதம் காக்னிசென்ட் நிறுவனம் தனது சிறப்பான திட்டத்தை செயல்படுத்தும் என்றும் தெரிவித்தார்
first 5 lakhs viewed thread tamil
Like Reply
சந்திராயன்-2 லேண்டர் பேட்டரிக்கு மின்சப்ளை துவங்கியது:இஸ்ரோ-நாசா சேருகிறது.!
நிலவின் தென்துருவ தரையில் மோதிக் கிடந்த விக்ரம் லேண்டருக்கு சோலார் தடுகள் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் பணி நடந்து வருகின்றது. பிரக்யான் ரோவை இயக்கும் முயற்சியிலும் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் இஸ்ரோவுக்கு நாசா முக்கிய விஷயத்தையும் கூறியுள்ளது.



[Image: whereisvikaramlander-1568001511.jpg]






இஸ்ரோவுன் தகவல் தொடர்பு துண்டிப்பு
விக்ரேம் லேண்டர் உடன் தொடர்பு நேற்று முன்தினம் அதிகாலை 1.58 மணிக்கு துண்டிக்கப்பட்டது. லேண்டர் எங்கு இருக்கின்றது எப்படி இருக்கின்றது என்றும் விஞ்ஞானிகள் தீவிரமாக தேடினர்.

[Image: vikaramlander-1568001499.jpg]
500 மீ தள்ளி தரையிறங்கியது
நிலவில் 2.1 கி.மீ இருக்கும் போது, மிஸ்ஸிங் ஆன லேண்டர் விக்ரம் தரையிறங்க வேண்டிய இடத்தில் 500 மீட்டர் தள்ளி தரையிறங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதை சந்திராயன்-2 ஆர்பிட்டரில் உள்ள சக்தி வாயந்த தெர்மல் இம்மேஜிங் முறையால், கடும் பகல்-இரவு நேரங்களிலும் தெளிவாக காண முடியும்.
[Image: isrosivanmain-ok-1568001469.jpg]



36 மணி நேரத்தில் கண்டுபிடிப்பு
லேண்டர் உடனான தொடர்பு துண்டிக்கப்பட்ட போதிலும், ஒரு வாரத்தில் கண்டுபிடிப்போம் என்று இஸ்ரோ கூறியிருந்தது. ஆனால் வெறும் 36 மணி நேரத்தில் கண்டுபிடித்து அசத்தியது. ரோவர் நேற்று மதியம் 2.30 மணியளவில் கண்டுபிடிக்கப்பட்டது. இதுவும் இஸ்ரோவின் சாதனையாக பார்க்கப்படுகின்றது


[Image: vikrama-working-rec-1568001505.jpeg]

எங்கு கிடந்தது தெரியுமா
நிலவின் தென் துருவத்தில், மான்சினஸ்-சி, சிம்பலீலியஸ்-என் ஆகிய இரு பள்ளங்களுக்கு இடையே நிலவின் தரையில் மோதிக் கிடந்தது விக்ரம் லேண்டர்.
அங்கு அதிவேகமாக தரையிறங்கியதால், லேண்டர் உடைந்தா அல்லது நல்ல நிலையில் இருக்கின்றதா என்றும் தெரியவில்ல்லை.
S

[url=https://www.outbrain.com/what-is/default/en]



லேண்டர் பேட்டரிக்கு மின் சப்ளை
இந்நிலையில் லேண்டரின் உள்ள சோலார் தகடுகள் மூலம் மின் உற்பத்தி நடந்து வருகின்றது. இதை அதில் பொறுத்தியுள்ள கருவிகள் பேட்டரிக்கு கடத்தி வருகின்றன.

[Image: chandrayaan-2-thrmalimage-1568001463.jpg]
தொடர்பு மீட்க முடியுமா
இந்நலையில் விடுப்பட்ட தகவல் தொடர்பை மீட்பதில் குறைந்த வாய்புகளே உள்ளது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்
பெங்களூர் இஸ்ரோ தலைமை செயலகத்தில் இருந்து, விக்ரேண்டருக்கு சமிக்கைகள் அனுப்படும். இதற்கு பதில் கிடைக்கவில்லையானால், விக்ரம் லேண்டரில் இருக்கும் அவசரர கால மாற்று கருவிகளை இயக்க முயற்சி நடக்கும். இதுவும் பயனளிக்காவிட்டால், நிலவை சுற்றி வரும் ஆர்பிட்டர் மூலம் விக்ரம் லேண்டருக்கு சமிக்கை அனுப்படும். பிறகு, விக்ரம் ரோவரில் இருக்கும் பிரக்யான் ரோவருடன் தொடர்பு ஏற்படுத்தவும் இஸ்ரோ வேகமாக செயல்பட்டு வருகின்றது.


இஸ்ரோவுக்கு நாசா அழைப்பு
விக்ரம் லேண்டர் கண்டுபிடிக்கப்பட்டது முதல் இஸ்ரோவின் அனைத்து முயற்சிக்கும் நாசா பாராட்டுக்களை தெரிவித்துள்ளது. மேலும், இந்தியா விண்வெளி சாதனை படைக்கும் என்றும் கூறியுள்ளது. சூரியனை ஆய்வு செய்யும் திட்டத்தில் இஸ்ரோவுடன் இணைந்து பணியாற்ற தயார் என்றும் அழைப்பு விடுத்துள்ளது'
first 5 lakhs viewed thread tamil
Like Reply
[Image: z1953-750x506.jpg]
'சின்மயானந்த் என்னை கற்பழித்தார்; ஒரு வருடம் உடல் ரீதியாக நாசம் செய்தார்' - சட்டக்கல்லூரி மாணவி புகார்
சுவாமி சின்மயானந்த் மீது புகாரளித்த பெண், 'சாமியார் தன்னை கற்பழித்ததாகவும், ஒரு வருடத்திற்குள் உடல் ரீதியாக தன்னை துன்புறுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்
ஷாஜகான்பூரில் உள்ள சுவாமி சின்மயானந்துக்கு சொந்தமான முமுக்சு ஆசிரமம் நடத்தும் கல்லூரியில் முதுநிலை சட்டப் படிப்பு படித்து வந்த இளம் பெண் ஒருவர், சின்மயானந்த் பாலியல் தொல்லை கொடுத்ததாக வீடியோ மூலம் புகாரளித்தார். போலீஸில் புகார் கொடுத்த நிலையில் அந்தப் பெண் திடீரென மாயமானார். இதைத் தொடர்ந்து சுவாமி சின்மயானந்த் மீது கடத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டது.
பாலியல் தொல்லை குறித்து அந்தப் பெண்ணின் தந்தை போலீஸில் புகார் கொடுத்திருந்தார். சின்மயானந்தும் மேலும் சிலரும் தனது பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அவர் பகிரங்கமாக புகாரளித்திருந்தார்.

இதையடுத்து, காணாமல் போன இளம்பெண்ணை போலீஸார் ராஜஸ்தானில் இருந்து கடந்த மாதம் கண்டுபிடித்தனர்.

இந்நிலையில், சுவாமி சின்மயானந்த் மீது புகாரளித்த பெண், ‘சாமியார் தன்னை கற்பழித்ததாகவும், ஒரு வருடத்திற்குள் உடல் ரீதியாக தன்னை துன்புறுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டெல்லி போலீஸில் புகார் பதிவு செய்தும், ஷாஜஹான்பூர் போலீசார் இதுவரை புகாரை பதிவு செய்யவில்லை என்று அப்பெண் கூறுகிறார்.
“சுவாமி சின்மயானந்த் என்னை கற்பழித்தது மட்டுமில்லாமல் ஒரு வருட காலமாக உடல் ரீதியாக என்னை துன்புறுத்தினார். இந்த புகாரின் மீது டெல்லி போலீஸ் லோதி ரோடு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவுசெய்து, அதனை ஷாஜஹான்பூர் காவல்துறைக்கு அனுப்பியுள்ளது. ஆனால், கற்பழிப்பு வழக்காக இது பதிவு செய்யப்படவில்லை,” என்று அப்பெண் கூறியுள்ளார்.
மேலும், “கடந்த ஞாயிறன்று, சிறப்பு விசாரணை குழு என்னிடம் 11 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தியது. கற்பழிப்பு குறித்து அவர்களிடம் நான் தெரிவித்தேன். அவர்களிடம் அனைத்தையும் சொல்லிய பிறகும் கூட, அவர்கள் இதுவரை சின்மயானந்தை கைது செய்யவில்லை” என்று தெரிவித்திருக்கிறார்.
first 5 lakhs viewed thread tamil
Like Reply
ஆபத்தான இடத்தில் விக்ரம் லேண்டர் இருக்கிறது -ஐரோப்பிய விண்வெளி மையம் எச்சரிக்கை


[Image: 201909101532192965_Moons-south-pole-is-a...SECVPF.gif]


பெங்களூரு,

நிலவை பற்றி ஆய்வு செய்வதற்காக ஆர்பிட்டர், விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் ஆகிய 3 பகுதிகளை உள்ளடக்கிய சந்திரயான்-2 விண்கலத்தை இஸ்ரோ (இந்திய விண்வெளி ஆய்வு மையம்) கடந்த ஜூன் 22-ந்தேதி ராக்கெட் மூலம் விண்ணுக்கு அனுப்பியது. ஆர்பிட்டரில் இருந்து பிரிந்து, சந்திரனில் இருந்து 35 கி.மீ. உயரத்தில் சுற்றி வந்த விக்ரம் லேண்டர் கடந்த சனிக்கிழமை அதிகாலை நிலவில் தரை இறங்க முயன்றது.
கீழ் நோக்கி வந்து கொண்டிருந்த விக்ரம் லேண்டர் நிலவில் இருந்து 2.1 கிலோ மீட்டர் உயரத்தில் இருந்த போது, அதற்கும் பெங்களூவில் உள்ள இஸ்ரோ தரை கட்டுப்பாட்டு நிலையத்துக்கும் இடையேயான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது.

விக்ரம் லேண்டரை நிலவின் தென்துருவ பகுதியில் குறிப்பிட்ட இடத்தில் பத்திரமாக தரை இறக்குவதுதான் சந்திரயான்-2 திட்டத்தின் முக்கியமான பணி ஆகும். சமிக்ஞை மூலம்,  மெதுவாக தரை இறக்க விஞ்ஞானிகள் முயற்சித்த நிலையில், விக்ரம் லேண்டருடன் தொடர்பு துண்டிக்கப்பட்டது அவர்களுக்கு பெரும் ஏமாற்றத்தையும், அதிர்ச்சியையும் அளித்தது.

விக்ரம் லேண்டரின் கதி என்ன ஆனது? என்று தெரியாததால் அதை கண்டுபிடிக்கும் முயற்சியிலும், அதனுடன் தொடர்பை ஏற்படுத்தும் முயற்சியிலும் விஞ்ஞானிகள் மும்முரமாக ஈடுட்டு வருகின்றனர். நிலவை சுற்றி வரும் ஆர்பிட்டர் எடுத்து அனுப்பிய தெர்மல் இமேஜ் மூலம் விக்ரம் லேண்டர் சேதம் அடையாமலும் ஒரு பக்கமாக சாய்வாக இருப்பதும் கண்டறியப்பட்டது. 

விக்ரம் லேண்டர் நிலவில் விழுந்து கிடக்கும் இடம் கண்டறியப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. ஆர்பிட்டர் உதவியுடன் விக்ரம் லேண்டர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் கூறியுள்ளது. 

விக்ரம் லேண்டருடன் தொடர்பு கொள்வதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாகவும் இஸ்ரோ அறிவித்துள்ளது. 

லேண்டர் விழுந்துள்ள தென் துருவத்தில் சில பகுதிகள் கொஞ்சம் கூட சூரியனே படாத இடங்கள் ஆகும். இங்கு மிக மோசமான உறை நிலை காணப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தென் துருவம் முழுக்க ஐஸ் குவியல்கள் இருக்கும். சூரிய வெளிச்சம் படாத நிலவின் தென் துருவ பகுதியிலுள்ள பள்ளங்களில்100 மில்லியன் டன் நீர் இருப்பதாக கருதப்படுகிறது.

இந்த நிலையில், ஐரோப்பிய விண்வெளி மையம் வெளியிட்டுள்ள செய்தியில்,  விக்ரம் லேண்டர் ஆபத்தான இடத்தில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளது.  

2020  ஆம் ஆண்டின் பிற்பகுதியில் சந்திரனின் தென் துருவப் பகுதிக்கு ஹெராக்கிள்ஸ் ரோபோடிக்கை அனுப்புவதற்கான பணிகளில்  தயாராவதற்கு  ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம்  தற்போது கனடா  மற்றும் ஜப்பானிய விண்வெளி நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது.

இதற்கான ஆய்வில்  தென் துருவம் குறித்தும்  லேண்டர் நிலை குறித்தும்  ஐரோப்பிய விண்வெளி மையம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறி இருப்பதாவது:-

சந்திரனின் மேற்பரப்பு (தென் துருவம்) ஒரு ஆபத்தான சூழல் நிறைந்த பகுதியாகும்  அங்கு சார்ஜ் செய்யப்பட்ட துகள்கள் மற்றும் கதிர்வீச்சு நன்றாக சந்திர தூசியை சந்திக்கின்றன.

இதன் முடிவுகள் ஆச்சரியமானவை, கணிக்க முடியாதவை மற்றும் அபாயகரமானவை. அங்கு கதிர்வீச்சுகள் அதிகமாக இருக்கும். மேலும் தூசுகள் நிறைந்த பகுதியாகும். 

சந்திரனில் உள்ள தூசி, விக்கரம் லேண்டரின் உபகரணங்களுடன் ஒட்டிக்கொண்டு, இயந்திர சிக்கல்களை ஏற்படுத்தலாம். சூரிய பேனல்கள் மற்றும் பிற மேற்பரப்புகள்  அவற்றின் செயல்திறனை குறைக்கலாம். 

மின்காந்த சக்திகள், சந்திரனின் மேற்பரப்பைச் சுற்றியுள்ள தூசுகள் கூடுதல் ஆபத்தை ஏற்படுத்துகின்றன. இந்த துகள்களால் ஏற்படும் மின்காந்த அலைகள்  எதிர்காலத்தில்  லேண்டர்களுக்கும் மனிதர்களுக்கும் ஆபத்தாக இருக்கலாம்.

சந்திர தூசி மற்றும் சந்திரனின் மேற்பரப்பில் அதன் செயல்கள் பற்றி அதிகம் அறியப்படவில்லை.

லேண்டர்  தரையிறங்கும் போது சூரிய சக்தி உற்பத்தியை பாதிக்க கூடியதாக இருகலாம்.  செங்குத்தான சரிவுகள் அல்லது பெரிய கற்பாறைகள் போன்ற ஆபத்துகளையும் கண்காணிக்க வேண்டும் என கூறி உள்ளது.

நிலவில் கடைசியாக காலடி வைத்த யூஜின் செர்னனின் அனுபவத்தை மேற்கோள் காட்டி  ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் கூறும் போது, 

லேண்டர் உயிர்ப்புடன் இருக்கும் என்றால், நீங்கள் தொடர்ந்து விண்கலத்திற்கு வெளியேயும், உள்ளேயும் தூசி பிரச்சினையை எதிர்த்துப் போராட வேண்டும் என கூறி உள்ளது.
first 5 lakhs viewed thread tamil
Like Reply
வெறும் 100 ரூபாய் போதும்... நீங்கள் அபராதமே கட்ட வேண்டியதில்லை... இந்த சூப்பர் ரூல் தெரியாம போச்சே
வெறும் 100 ரூபாயில் காப்பாற்றும் ஒரு சூப்பர் ரூல் இருப்பது தெரியாமல், ஆயிரக்கணக்கான ரூபாயை வாகன ஓட்டிகள் அபராதமாக இழந்து வருகின்றனர். உங்கள் விழிப்புணர்விற்காக இந்த விதிமுறை தொடர்பான தகவல்களை இந்த செய்தியில் பகிர்ந்து கொள்கிறோம்.


[Image: xtraffic-security%20officer-breath-alcohol...XZMEQR.jpg]




மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய மோட்டார் வாகன சட்டம் இந்தியாவில் உள்ள அனைத்து வாகன ஓட்டிகளையும் தலை சுற்ற வைத்துள்ளது. போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கான அபராத தொகைகள் அந்த அளவிற்கு மிக கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளன. இந்தியாவில் இதற்கு முன்பாக இவ்வளவு கடுமையான அபராதங்கள் வாகன ஓட்டிகளுக்கு விதிக்கப்பட்டதில்லை.

[Image: xtraffic-security%20officer-breath-alcohol...sPKnKm.jpg]

புதிய மோட்டார் வாகன சட்டம் கடந்த செப்டம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு கொண்டு வரப்பட்டது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் இதை அப்படியே ஏற்று கொண்டு விட்டன. ஆனால் மேற்கு வங்கம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

[Image: xtalking-while-riding-bike-2-1568143876....VSmBUz.jpg]
nsor
[url=https://www.outbrain.com/what-is/default/en][/url]


அவ்வளவு ஏன்? பாஜக ஆட்சி நடைபெற்று வரும் குஜராத்தே இதை அமல்படுத்த மறுத்து முரண்டு பிடித்து கொண்டுள்ளது. போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கான அபராத தொகைகள் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதை மேற்கண்ட 5 மாநிலங்களும் ஏற்றுக்கொள்ளவில்லை. இது வாகன ஓட்டிகளை கடுமையாக பாதிக்கும் என இந்த 5 மாநில அரசுகளும் கூறி வருகின்றன.

[Image: xtalking-while-riding-bike-5-1568143882....WFnoc_.jpg]
first 5 lakhs viewed thread tamil
Like Reply
எனினும் இந்தியாவின் எஞ்சிய பகுதிகளில் புதிய அபராத தொகைகள் அமலுக்கு வந்து விட்டன. போலீசாரும் அதனை மிக கடுமையாக அமல்படுத்தி வருகின்றனர். புதிய மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு வந்தது முதல் வெளியாகி வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கும் வகையில் உள்ளன. ஏனெனில் ஒருவருக்கே பல்லாயிரக்கணக்கான ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டு வருகிறது.
[Image: xno-parking-01-1568143869.jpg.pagespeed....Vh2nS5.jpg]



கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒடிசா மாநிலத்தில் லாரி டிரைவர் ஒருவருக்கு சுமார் 80 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதாக வெளியான செய்தி அதிர்வலைகளை உண்டாக்கியது. சில சமயங்களில் வாகனத்தின் விலையை காட்டிலும் கூடுதலாக அபராதங்கள் விதிக்கப்பட்டு வருகின்றன. எனவே வாகன ஓட்டிகள் செய்வதறியாது திகைத்து போயுள்ளனர்.
[Image: xno-parking-1568143863.jpg.pagespeed.ic.U9BbEuWiLM.jpg]





ஆனால் உங்களுக்கு விதிக்கப்பட்ட அபராத தொகையை ரத்து செய்ய ஒரு வழி இருக்கிறது. இந்த கூடுதல் விதிமுறை குறித்து பலருக்கும் தெரிவதில்லை. எனவே உங்களுக்கு உதவும் வகையில் அந்த விதிமுறை குறித்த தகவல்களை இனி பகிர்ந்து கொள்கிறோம். வெறும் 100 ரூபாய் மட்டும் இருந்தால் போதும். உங்களுக்கு விதிக்கப்பட்ட அபராத தொகையை ரத்து செய்து விடலாம்.
இன்சூரன்ஸ் பேப்பர்கள், டிரைவிங் லைசென்ஸ், ஆர்சி புக் மற்றும் மற்ற முக்கியமான ஆவணங்கள் உங்களிடம் இல்லாவிட்டால் அதற்குரிய அபராத தொகையை விதித்து போலீசார் உங்களுக்கு சலானை வழங்குவார்கள். ஆனால் இந்த ஆவணங்களை எல்லாம் நீங்கள் கையில் வைத்திருந்தே ஆக வேண்டும் என்ற அவசியம் கிடையவே கிடையாது

சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகளிடம் அவற்றை சமர்ப்பிப்பதற்கு உங்களுக்கு 15 நாட்கள் கால அவகாசம் உள்ளது. ஒருவேளை உங்கள் ஆவணங்களை வீட்டிலோ அல்லது வேறு எங்கேயாவதோ மறந்து வைத்து விட்டீர்கள் என்றால் இந்த விதி உங்களுக்கு உதவும். இந்த விதிமுறையின்படி, ஸ்பாட்டிலேயே அவற்றை சமர்ப்பித்தே ஆக வேண்டும் என போலீஸ் அதிகாரிகள் உங்களை கட்டாயப்படுத்த முடியாது.

 ஆனால் வசூல் வேட்டையாட நினைக்கும் ஒரு சில போலீஸ் அதிகாரிகள், ஆவணங்களை உடனே சமர்ப்பித்தாக வேண்டும் என உங்களை கட்டாயப்படுத்தலாம். உங்களுக்கு அப்படி ஒரு சூழ்நிலை ஏற்பட்டால், இந்த விதிமுறை குறித்து அவர்களிடம் கூறுங்கள். அதன்பின் 15 நாட்களுக்குள் ஆவணங்களை சமர்ப்பித்து விட்டால், உங்களுக்கு விதிக்கப்பட்ட சலான் ரத்து செய்யப்பட்டு விடும்.
[Image: xinsurance5-1568143908.jpg.pagespeed.ic.qM91pQo5O7.jpg]
இந்த பணிகளுக்காக மட்டும் நீங்கள் 100 ரூபாய் செலுத்த வேண்டும். ஆனால் உங்களிடம் அனைத்து ஆவணங்களும் இருக்கும் சூழலில், அவற்றை நீங்கள் வீட்டிலோ அல்லது வேறு எங்கேயாவதோ மறந்து வைத்து விட்டு வந்து விட்டீர்கள் எனும்போது மட்டுமே இந்த 15 நாள் விதி பொருந்தும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
[Image: xinsurance1-1568143901.jpg.pagespeed.ic.7dWxjSsa6K.jpg]









அதேபோல் இன்சூரன்ஸ் பேப்பர்கள், டிரைவிங் லைசென்ஸ், ஆர்சி புக் மற்றும் மற்ற முக்கியமான ஆவணங்கள் இல்லாதது தொடர்பான குற்றங்களுக்கு மட்டுமே இந்த 15 நாள் விதியை நீங்கள் பயன்படுத்தி கொள்ள முடியும். இந்த முக்கியமான விதிமுறையை எக்காரணத்தை கொண்டும் சாதாரணமாக எடுத்து கொள்ளாதீர்கள்.
[Image: xmotor-bill-13-1568143850.jpg.pagespeed....AhXJNg.jpg]
ஏனெனில் லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டினால் முன்பு 500 ரூபாய் மட்டுமே அபராதம் விதிக்கப்பட்டு வந்தது. ஆனால் இது தற்போது 5 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் இன்சூரன்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டினால் முன்பு ஆயிரம் ரூபாய் மட்டுமே அபராதம். ஆனால் இது தற்போது 2 ஆயிரம் ரூபாயாக உயர்ந்துள்ளது.
[Image: xmotor-bill-12-1568143844.jpg.pagespeed....7ZIyiv.jpg]







உங்கள் கையில் இந்த ஆவணங்கள் இல்லையென்றால், நீங்கள் கொஞ்சம் அசந்தாலும் உயர்த்தப்பட்ட புதிய அபராத தொகை உங்கள் மீது விதிக்கப்பட்டு விடும். இப்படிப்பட்ட சூழலில் இந்த விதிமுறை உங்களை ஆபந்பாந்தவனாக வந்து காப்பாற்றும். எனவே போலீசாரிடம் நீங்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் நடந்து கொள்வதுதான் உங்கள் பர்சுக்கு நல்லது.

[Image: xdrink-and-drive-2-1568143837.jpg.pagesp...Lo2TmB.jpg]

ஏனெனில் கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லியை சேர்ந்த தினேஷ் மதன் என்ற இளைஞருக்கு ஹரியானா மாநிலம் குருகிராம் போலீசார் 23 ஆயிரம் ரூபாயை அபராதமாக விதித்தனர். லைசென்ஸ், ஆர்சி புக் உள்ளிட்ட ஆவணங்கள் இல்லாதது உள்பட பல்வேறு குற்றங்களுக்காக அவருக்கு ஒட்டுமொத்தமாக 23 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
[Image: xaccident-2-1568143830.jpg.pagespeed.ic.TohAK4zJiV.jpg]




[url=https://www.outbrain.com/what-is/default/en]




ஆனால் அவர் ஓட்டி வந்த செகண்ட் ஹேண்ட் ஸ்கூட்டரின் விலையே வெறும் 15 ஆயிரம் ரூபாய்தான். இதனிடையே ஆவணங்கள் வீட்டில் இருப்பதாக தான் கூறியதாகவும், ஆனால் பத்தே நிமிடத்தில் அவற்றை கொண்டு வர வேண்டும் என போலீசார் கட்டாயப்படுத்தியதாகவும் தினேஷ் மதன் குற்றம்சாட்டியது இங்கே குறிப்பிடத்தக்கது. இதுபோன்ற சூழல்களில் மேற்கண்ட விதிமுறை உங்களுக்கு உதவும். 
first 5 lakhs viewed thread tamil
Like Reply
#BREAKING | வாகன அபராதத்தொகையை குறைக்கிறது தமிழக அரசு

புதிய மோட்டார் வாகனத்திருத்த சட்டத்தின் படி அதிகரிக்கப்பட்ட அபராதத்தொகை விபரங்களை கீழே அட்டவணையில் பார்க்கலாம்...
Section/ Offence
Old Penalty
New Penalty (Minimum)
General (177)
Rs 100
Rs 500
Rules of road regulation violation (new 177A)
Rs. 100
Rs 500
Travelling without a ticket (178)
Rs 200
Rs 500
Disobedience of orders of authorities (179)
Rs 500
Rs 2000
Unauthorized use of vehicles without licence (180)
Rs 1000
Rs 5000
Driving without licence (181)
Rs 500
Rs 5000
Driving without qualification (182)
Rs 500
Rs 10,000
Oversized vehicles (182B)
New
Rs 5000
Over speeding (183)
Rs 400
Rs 1000 for LMV, Rs 2000 for Medium Passenger Vehicle
Dangerous driving penalty (184)
Rs. 1,000
Upto Rs 5000
Drunken driving (185)
Rs 2000
Rs 10,000
Speeding/ Racing (189)
Rs 500
Rs 5,000
Vehicle without permit (192A)
Upto Rs 5000
Upto Rs 10,000
Aggregators (violations of licencing conditions) (193)
New
Rs 25,000 to Rs 1,00,000
Overloading (194)
Rs 2,000, and Rs 1,000 per extra tonne
Rs 20,000, and Rs 2,000 per extra tonne
Overloading of Passengers (194A)
N.A.
Rs 1000 per extra passenger
Seat Belt (194 B)
Rs 100
Rs 1,000
Overloading of two-wheelers (194 C)
Rs 100
Rs 2,000 , Disqualification of licence for 3 months
Not providing way for emergency vehicles (194E)
New
Rs 10,000
Driving without insuarance (196)
Rs 1,000
Rs 2,000
Offences by Juveniles (199)
New
Guardian/ Owner shall be deemed guilty. Rs 25,000 with 3 years imprisonment. Juvenile to be tried under JJ Act. Registration of Motor Vehicle to be cancelled.
Power of officers to impound documents (206)
N.A.
Suspension of driving licence under sections 183, 184, 185, 189, 190, 194C, 194D, 194E,
Offences committed by enforcing authorities (210B)
N.A.
Twice the penalty under the relevant section
first 5 lakhs viewed thread tamil
Like Reply




Users browsing this thread: 30 Guest(s)