Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
முன்னாள் நிதியமைச்சர் அருண்ஜேட்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார்
டெல்லி: முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 66.
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் அருண்ஜேட்லி (66). இவர் முன்னாள் நிதி அமைச்சராக பதவி வகித்து வந்தார். கடந்த 2014-ஆம் ஆண்டு சர்க்கரை நோயால் அவதிப்பட்ட ஜேட்லி உடல் எடையை குறைப்பதற்கான அறுவை சிகிச்சையை செய்து கொண்டார்.
கடந்த இரு ஆண்டுகளாக அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டு வரும் நிலையில் அவருக்கு தோல் புற்றுநோய் காரணமாக நியூயார்க்கில் சிகிச்சை மேற்கொண்டார். இவர் கடந்த 2018-ஆம் ஆண்டு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையும் செய்து கொண்டுள்ளார்.



கடிதம்
இந்த நிலையில் 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டதும், உடல்நிலை பாதிப்பால் தான் ஓய்வெடுக்க வேண்டும் என்பதால் தனக்கு தேர்தலில் வாய்ப்பு வழங்க வேண்டாம் என கடிதம் அளித்துவிட்டார்.


[Image: arun-jaitley-5-1566632923.jpg]
10-ஆம் தேதி
இந்த நிலையில் பாஜக மூத்த தலைவரான அருண் ஜேட்லி கடந்த 9-ஆம் தேதி மூச்சுத்திணறலால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை சீராக உள்ளது என துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கடந்த 10-ஆம் தேதி தெரிவித்திருந்தார்
first 5 lakhs viewed thread tamil
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
உடல்நிலை
இதைத் தொடர்ந்து அவருக்கு தொடர்ந்து உயர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவரது உடல்நிலை குறித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, அமைச்சர் ஹர்ஷவர்தன், பீகார் முதல்வர் நிதிஷ்குமார் உள்ளிட்டோர் விசாரித்தனர்.


[Image: arun-jaitley-passed-away-news55-1566633080.jpg]

சிகிச்சை பலனின்றி
அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அவரது இதயமும் நுரையீரலும் செயல்பட வைப்பதற்கான உயிர் காக்கும் கருவிகள் அவருக்கு பொருத்தப்பட்டன. எய்ம்ஸ் மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார்.


[Image: arun-jaitley-1-1566632990.jpg]
அருண் ஜேட்லி பதவி
அவருக்கு மனைவி, இரு பிள்ளைகள் உள்ளனர். கடந்த 2009-ஆம் ஆண்டு முதல் 2014-ஆம் ஆண்டு வரை பாஜக எதிர்க்கட்சியாக இருந்த போது மாநிலங்களவையின் எதிர்க்கட்சித் தலைவராக அருண் ஜேட்லி பதவி வகித்தார்.


[Image: arun-jaitley-847-1566633055.jpg]
19 மாதம் சிறைவாசம்
இந்திரா காந்தி கொண்டு வந்த நெருக்கடி நிலையால் மாணவரணி தலைவராக இருந்த ஜேட்லி கைது செய்யப்பட்டார். 19 மாத சிறைவாசத்துக்கு பின்னர் அவர் விடுதலையாகி பாஜகவில் பல்வேறு பதவிகளில் அலங்கரித்தார்
first 5 lakhs viewed thread tamil
Like Reply
கோவையில் 'லஷ்கர்' பயங்கரவாதிகள்?:உளவுத்துறை உஷார் உத்தரவின் பின்னணி

[Image: Tamil_News_large_2351549.jpg]
கோவை: பாக். ஆதரவு 'லஷ்கர் - இ- தொய்பா' பயங்கரவாதிகள் ஆறு பேர் தமிழகத்தில் ஊடுருவியதாக உளவுத்துறை தகவல்களின் பின்னணி குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன.

இலங்கையில் கடந்த ஏப்ரலில் பயங்கரவாதிகள் தொடர் குண்டுவெடிப்பு நடத்தினர். அதேபோன்று விநாயகர் சதுர்த்தி விழாவின்போது வெடிகுண்டு தாக்குதல்களை நடத்தும் திட்டத்துடன் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. ஆதரவு 'லஷ்கர் -இ- தொய்பா' பயங்கரவாதிகள் தமிழகத்தில் ஊடுருவியிருப்பதாக ராணுவ உளவுப்பிரிவு 22ம் தேதி உஷார் படுத்தியிருந்தது.அதில் 'லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாதிகள் ஆறு பேர் இலங்கை வழியாக தமிழகத்தில் ஊடுருவியுள்ளனர். அவர்களில் ஒருவர் பாகிஸ்தான் நாட்டவர். எஞ்சிய ஐந்து பேர் இலங்கையைச் சேர்ந்தவர்கள்.'இந்நபர்கள் தங்களை ஹிந்து போல வெளியில் காட்டிக்கொள்ள நெற்றியில் திலகமும், விபூதியும் அணிந்துள்ளனர். தற்போது கோவையில் பதுங்கி இருக்கின்றனர். இவர்களில் ஒருவர் பாகிஸ்தானைச் சேர்ந்த இலியாஸ் அன்வராக இருக்கலாம். 

தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்க' என குறிப்பிடப்பட்டிருந்தது.அதுமட்டுமின்றி 'வேளாங்கண்ணி மாதா கோவில்; நீலகிரி மாவட்டம் வெல்லிங்டன் ராணுவ பயிற்சி கல்லுாரி; கோவை சூலுார் விமானப்படை தளம்; கேரளாவிலுள்ள சபரிமலை மற்றும் முக்கிய வழிபாட்டு தளங்களே பயங்கரவாத கும்பலின் தாக்குதல் இலக்குகள்' என்ற அதிர்ச்சி தகவல்கள் இடம்பெற்றிருந்தன.
இதைத் தொடர்ந்தே தமிழகம் முழுவதும் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டு சந்தேக நபர்கள் மீதான கண்காணிப்பு முடுக்கிவிடப்பட்டுள்ளன.கோவையில் 1998ல் நடந்த தொடர் குண்டுவெடிப்புக்குப் பின் தற்போது தான் அதிக எண்ணிக்கையிலான போலீசார் அதி நவீன துப்பாக்கிகள் மற்றும் புல்லட் புரூப் கவச உடைகளுடன் ஷாப்பிங் மால் கோவில் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் இரவு பகலாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கின்றனர்.பயங்கரவாத தடுப்பு நடவடிக்கையாக கோவையின் பல்வேறு இடங்களில் கமாண்டோ போலீஸ் படையினரின் கொடி அணிவகுப்பு நடந்து வருகிறது.மக்கள் மத்தியில் பீதி நிலவினாலும் போலீஸ் பாதுகாப்பின் மீதான நம்பிக்கையில் அன்றாட பணிகளை தொடர்கின்றனர்.தமிழக சட்டம்- ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. ஜெயந்த் முரளி நேரடி மேற்பார்வையில் போலீஸ் கமிஷனர் சுமித்சரன், துணைக் கமிஷனர் பாலாஜி சரவணன் தலைமையில் 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.
first 5 lakhs viewed thread tamil
Like Reply
இந்த அளவுக்கு உஷார் ஏன்

பல ஆண்டுகள் உளவுத் துறையில் பணியாற்றிய அனுபவம் மிக்க ஓய்வு பெற்ற போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:* வெளிநாட்டில் வெளிமாநிலத்தில் பயங்கரவாத தாக்குதல் நடக்கும்போது அதுபோன்று இங்கும் நிகழ்ந்துவிடாமல் தடுக்க அந்த சம்பவத்தின் சாராம்சத்தை அடியொற்றி உஷார் தகவலை அனைத்து மாவட்ட போலீசுக்கும் அனுப்புவது; இது வழக்கமானது பாதுகாப்பு படையினரிடம் சிக்கிய பயங்கரவாதிகளிடம் விசாரணை நடத்தும்போது அவர்களின் சதித்திட்டம் குறித்த தகவல்களை சேகரித்து சம்பந்தப்பட்ட மாநில மாவட்ட போலீசாரை உஷார் படுத்துவது.
* உளவாளிகள் வாயிலாக உளவுத்துறைக்கு கிடைக்கப்பெறும் ஒற்றுத் தகவல்களின் அடிப்படையில் உத்தரவுகளை பிறப்பிப்பது என உஷார் தகவல்களில் பல ரகம் உள்ளன.தற்போது தமிழகம் உஷார் படுத்தப்பட்டிருப்பது 'எம்.ஐ.' என சுருக்கமாக அழைக்கப்படும் 'ராணுவ நுண்ணறிவுப்பிரிவு' அளித்த ஒற்றுத் தகவல்களின் அடிப்படையில் என கூறப்படுகிறது.இதையொட்டியே மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் ஓர் அங்கமான சி.ஐ.எஸ்.எப். என்ற மத்திய தொழிலக பாதுகாப்பு படையானது தன் கட்டுப்பாட்டில் இருக்கும் விமான நிலையங்களை உஷார்படுத்தியிருக்கிறது.உள்ளூர் போலீசாரும் பயங்கரவாத தடுப்பு நடவடிக்கையை முடுக்கிவிட்டுள்ளனர். 
இதுபோன்ற உஷார் நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது பயங்கரவாதிகள் குழப்பமடைந்து தங்களின் திட்டத்தை கைவிடவோ அல்லது தள்ளிப்போடவோ வாய்ப்பிருக்கிறது.எனினும் பாதுகாப்பு பணியில் எவ்விதமான சமரசத்துக்கும் இடமிருக்காது. மறு உத்தரவு தொடரும் வரை பாதுகாப்பு தொடரும். சந்தேக நபர்களின் நடமாட்டத்தை பொதுமக்கள் போலீசாருக்கு தெரிவிப்பது கடமை. இவ்வாறு அவர் கூறினார்.





விஷமிகளுக்கு எச்சரிக்கை!

உளவுத் தகவல் அடிப்படையில் போலீசார் உஷார் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். மறுபுறம் விஷமிகள் சிலர் தவறான தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்பி மக்களை குழப்பி வருகின்றனர்.தங்களுக்கு வேண்டாத நபர்களை பழிவாங்கும் வகையில் அவர்களின் போட்டோ வாகனங்களின் எண்களை பரப்பி வருகின்றனர்.தவறான தகவல் பரப்பும் விஷமிகளுக்கு போலீசார் கடுமையாக எச்சரித்துள்ளனர்.கோவை மாநகர சட்டம் - ஒழுங்கு போலீஸ் துணைக் கமிஷனர் பாலாஜி சரவணன் கூறுகையில் ''உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன; மக்கள் அச்சப்பட வேண்டாம். விஷமிகள் சிலர் தவறான தகவல்களை கிளப்பி வருகின்றனர்; நம்ப வேண்டாம்'' என்றார்.



262 பேர் கைது

கோவையில் பயங்கரவாதிகள் ஆறு பேர் ஊடுருவி உள்ளதாக உளவுத்துறை தகவல் வந்துள்ளது. அதன்படி தமிழகம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். வேலுார் மாவட்டத்தில் தமிழக - ஆந்திர மாநில எல்லையில் 24 மணி நேரம் வாகன சோதனை நடந்து வருகிறது.இந்நிலையில் 'சாமிங் ஆபரேஷன்' என்ற பெயரில் வேலுார் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு 8:00 மணி முதல் நேற்று காலை 8:00 வரை 435 லாட்ஜ்கள் பஸ் நிலையம் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதில் சந்தேகத்தின் அடிப்படையில் 262 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.



மூவர் சிக்கினர்

பயங்கரவாதிகளை கண்காணிக்கும் சிறப்பு நுண்ணறிவுப்பிரிவு போலீசார் கோவையில் நடத்திய சோதனையில் சந்தேக நபர்கள் சென்னையைச் சேர்ந்த சித்திக் கோவை உக்கடத்தைச் சேர்ந்த ஜாகிர் உள்ளிட்ட மூவர் பிடிபட்டனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
first 5 lakhs viewed thread tamil
Like Reply
அமேசான் காடுகளில் பற்றி எரியும் தீ - களம் இறக்கினார் பிரேசில் அதிபர்

[Image: 201908250030189563_President-Jair-Bolson...SECVPF.gif]
பிரேசிலியா:

பூமிக்கு தேவையான சுவாச காற்றில் 20 சதவீதத்தை உற்பத்தி செய்து தந்து வந்தது, பிரேசிலில் உள்ள அமேசான் மழைக்காடுகள்தான். எனவேதான் இந்த காடுகள், பூமியின் நுரையீரல் என்று அழைக்கப்படுகின்றன.


இந்த காடுகளில் முன் எப்போதும் இல்லாத வகையில் ஏராளமான இடங்களில் தீப்பற்றி எரிகின்றன. இது ஐரோப்பிய நாடுகளையெல்லாம் கவலையில் ஆழ்த்தி உள்ளது.

மின்னல் காரணமாக காடுகள் தீப்பற்றி எரிவதாக சொல்லப்பட்டாலும், அங்கு வாழ்கிற மக்களின் கைவேலை இது எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. விவசாயம், சுரங்க பணிகளுக்கு தேவைப்படுகிற நிலத்தை குறி வைத்து காடுகள் தீயிட்டு அழிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது.

[Image: 201908250030189563_1_0qtpd9uc._L_styvpf.jpg]



எனவே அமேசான் காடுகள் தீப்பற்றி எரியும் பிரச்சினையில் உலக நாடுகள் பலவும் பிரேசிலுக்கு எதிராக கருத்து தெரிவித்தும், அழுத்தம் தந்தும் வருகின்றன. தீயை அணைப்பதற்கு போதுமான நடவடிக்கை எடுக்காவிட்டால், பிரேசிலின் பொருளாதாரத்தில் கை வைப்போம் என அந்த நாடுகள் மிரட்டல் விடுத்துள்ளன.

அமேசான் காடுகளில் பற்றி எரிகிற தீயை கட்டுக்குள் கொண்டு வருகிறவரையில் அந்த நாட்டுடன் செய்து கொண்டுள்ள வர்த்தக ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தப்போவதில்லை என்று பிரான்சும், அயர்லாந்தும் அறிவித்துள்ளன.

பிரேசிலில் இருந்து மாட்டிறைச்சி இறக்குமதி செய்வதை நிறுத்துவது பற்றி ஐரோப்பிய கூட்டமைப்பு பரிசீலிக்க வேண்டும் என்று பின்லாந்து குரல் கொடுத்துள்ளது.

இப்படி சர்வதேச அளவில் நிர்ப்பந்தங்கள் பெருகி வருகிற நிலையில், அமேசான் மழைக்காடுகளில் தீயை அணைக்கும் பணியில் அந்த நாட்டின் பாதுகாப்பு படைகளை களம் இறக்கி அதிபர் ஜெயிர் போல்சொனரோ அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.

இயற்கை வளங்கள் உள்ள பகுதிகள், பூர்வீக குடிமக்கள் வாழ்கிற இடங்கள், குடியிருப்பு பகுதிகளையொட்டிய காடுகள் ஆகிய இடங்களுக்கு படைகள் விரைகின்றன.

இதையொட்டி நேற்று முன்தினம் அதிபர் ஜெயிர் போல்சொனரோ தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரை ஆற்றினார். அப்போது அவர், “உலகமெங்கும் காடுகளில் தீப்பற்றி எரிகிறது. சர்வதேச பொருளாதார தடைகளுக்கு ஒரு சாக்குபோக்காக செயல்பட முடியாது” என கூறினார்.

அமேசான் காடுகளில் தீயணைப்பு பணியில் பாதுகாப்பு படைகளை களம் இறக்கி உள்ளதை அவர் உறுதி செய்தார். இதுபற்றி அவர் குறிப்பிடுகையில், “ஒரு ராணுவ வீரராக நான் அமேசான் காடுகளை நேசிக்க கற்றுக்கொண்டிருக்கிறேன். அவற்றை நான் பாதுகாக்க விரும்புகிறேன்” என கூறினார்.

அமேசான் காடுகளில் பற்றி எரிகிற தீயை அணைக்கும் பணியில் பாதுகாப்பு படைகளை ஈடுபடுத்துவது தொடர்பாக அவர் அதிகாரப்பூர்வ உத்தரவு ஒன்றையும் பிறப்பித்தார். ஆனால் அந்த உத்தரவு தெளிவற்று இருப்பதாகவும் விமர்சிக்கப்படுகிறது. அதே நேரத்தில் பிராந்தியத்தில் உள்ள இயற்கை வளம் நிறைந்த பகுதிகள், பூர்வீக நிலங்கள் மற்றும் எல்லையையொட்டிய பகுதிகளுக்கு படைகள் அனுப்பி வைக்கப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தீயணைப்பு பணிகளை ராணுவ மந்திரி பெர்னாண்டோ அஜேவிடோ டி சில்வா கண்காணிப்பார், படை வீரர்களை ஒதுக்கீடு செய்யும் பொறுப்பை அவர் கவனிப்பார் எனவும் கூறப்பட்டுள்ளது.

அடுத்த மாதம் 24-ந்தேதி வரை ஒரு மாத காலத்துக்கு தீயணைப்பு பணியில் படையினர் ஈடுபடுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
first 5 lakhs viewed thread tamil
Like Reply
பொருளாதாரத்தை உயர்த்த நிர்மலா சீதாராமன் கொடுத்த ஐடியா.. பயங்கரமாக கலாய்க்கும் நெட்டிசன்கள்
வரி சலுகைகள்.. நிர்மலா சீதாராமன் அதிரடி அறிவிப்பு-வீடியோ
சென்னை: வீழ்ந்து கிடக்கும் இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுக்க மத்திய நிதி அமைச்சகம் ஏதாவது செய்யும் என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில்தான், நேற்று மாலை திடீரென செய்தியாளர்களை சந்தித்தார் அந்த துறைக்கான அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
பொருளாதாரம் மந்தம் என்றாலும், அமெரிக்கா, சீனாவைவிட வேகமாகத்தான் போய்க் கொண்டு இருக்கிறது என்று பிரஸ் மீட்டின் ஆரம்பத்திலேயே ஒரு கருத்தை சொல்லி, ஜெர்க்கடிக்க வைத்தார். அதன்பிறகு ஐடியாக்கள் என்ற பெயரில் அவர் சொன்ன பல தகவல், நெட்டிசன்களுக்கு மீம் கிரியேட் பண்ண ரொம்பவே உதவியாக மாறிய ரகம்தான்.

பழைய கார்களை விற்று புது கார் வாங்கினால் கார் விற்பனை மந்த நிலை போய்விடும், அரசாங்கமும் புது கார்களை வாங்கப்போகிறது, அப்படியும், கார் விற்பனை பிரச்சினையை தீர்த்துவிடலாம் என்றெல்லாம் நிர்மலா சொல்ல சொல்ல, நிருபர்களுக்கு தலை லைட்டாக கிறுகிறுத்தது. இதோ நெட்டிசன்களும், தங்கள் பங்கிற்கு, இந்த ஐடியாக்களை வாரி சுருட்டியுள்ளனர். வாங்க பார்க்கலாம்.


Quote:[Image: Dck9wTUB_normal.jpg]
[/url]Srivatsa

@srivatsayb





Nirmala Sitharaman will use our taxes and buy herself a new Innova [img=16.9x18]https://abs.twimg.com/emoji/v2/72x72/1f698.png[/img] to apparently save the Auto Industry!

This is the best jumla yet of Modi 2.0

3,505
பிற்பகல் 9:52 - 23 ஆக., 2019
Twitter விளம்பரத் தகவல் மற்றும் தனியுரிமை


இதைப் பற்றி 1,092 பேர் பேசுகிறார்கள்

[url=https://twitter.com/srivatsayb/status/1164935859176640512]



நம்ம வரிப்பணத்தில் கார் வாங்கனும்
நிர்மலா சீதாராமன் நமது வரிப்பணத்தை பயன்படுத்தி, மேலும் ஒரு புதிய இன்னோவாவை வாங்குவார். இதனால் ஆட்டோ மொபைல் தொழிலைக் காப்பாற்றுவார்! மோடி 2.0 அரசின் சிறந்த ஜும்லா இதுவாகும். என்று கிண்டல் செய்கிறார் இந்த நெட்டிசன்.
first 5 lakhs viewed thread tamil
Like Reply
நம்ம வரிப்பணத்தில் கார் வாங்கனும்
நிர்மலா சீதாராமன் நமது வரிப்பணத்தை பயன்படுத்தி, மேலும் ஒரு புதிய இன்னோவாவை வாங்குவார். இதனால் ஆட்டோ மொபைல் தொழிலைக் காப்பாற்றுவார்! மோடி 2.0 அரசின் சிறந்த ஜும்லா இதுவாகும். என்று கிண்டல் செய்கிறார் இந்த நெட்டிசன்.


Quote:[Image: aSuKFcPZ_normal.jpg]
[/url]ಪ್ರಿಯದರ್ಶಿನಿಗೌಡ@arpriyagowda

 · 23 ஆக., 2019



ಆ ಕಡೆ ನೆರೆ ಸಂತ್ರಸ್ತರಿಗೆ ಪರಿಹಾರ ನೂ ಇಲ್ಲಾ

ಈ ಕಡೆ ಖಾತೆಗಳೇ ಇಲ್ಲದ ಸರ್ಕಾರ

ಯಡಿಯೂರು ಸಿದ್ದಲಿಂಗೇಶ್ವರ

Quote:[Image: 3i8kLfKX_normal.jpg]
raj@Chowkid57278886


#EconomyGoneBJPMaun
India's growth rate is higher than everybody else, more than US and China, says Finance Minister #NirmalaSitharaman Sitharaman

This is how it is .[img=17.9x18]https://abs.twimg.com/emoji/v2/72x72/1f602.png[/img][img=16.9x18]https://abs.twimg.com/emoji/v2/72x72/1f602.png[/img][img=17.9x18]https://abs.twimg.com/emoji/v2/72x72/1f602.png[/img]
[Image: ECq2oKSU0AAWlmM?format=jpg&name=small]


4
பிற்பகல் 10:25 - 23 ஆக., 2019
Twitter விளம்பரத் தகவல் மற்றும் தனியுரிமை


raj-இன் பிற கீச்சுகளைப் பார்க்கவும்





பாகுபலி தூக்கினால்தான் உண்டு
இந்தியாவின் வளர்ச்சி விகிதம் மற்ற அனைவரையும் விட, அமெரிக்கா மற்றும் சீனாவை விடவும் அதிகமாக உள்ளது என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகிறார். இது இப்படித்தான் .?? என்கிறார் இவர். அதாவது பாகுபலி வந்து தூக்கி காட்டினால்தான் உண்டு. உண்மை புள்ளி விவரம் அதுவல்ல என்பது இவர் கருத்து.


Quote:[Image: Dkhub0wE_normal.jpg]
Vel Prasanth@pgvelu06





New Automobile System is Born[img=17.9x18]https://abs.twimg.com/emoji/v2/72x72/1f4a5.png[/img][img=16.9x18]https://abs.twimg.com/emoji/v2/72x72/1f3c2.png[/img][img=17.9x18]https://abs.twimg.com/emoji/v2/72x72/1f3c2.png[/img]
[Image: ECrBxswUEAA4ElW?format=jpg&name=small]


211
பிற்பகல் 11:14 - 23 ஆக., 2019
Twitter விளம்பரத் தகவல் மற்றும் தனியுரிமை


இதைப் பற்றி 57 பேர் பேசுகிறார்கள்






புதிய இந்தியா
இப்படித்தான் பணமதிப்பிழப்பை பிரதமர் மோடி அறிவித்தபோது, புதிய இந்தியா பிறந்தது என்று ரஜினிகாந்த் ட்வீட் செய்தார். அந்த திட்டத்தால் மக்கள் அவதிப்பட்டதுதான் மிச்சம். இப்போது, புது ஆட்டோமொபைல் பிறந்துவிட்டது என்று நடனமாடுவார் என கேலி செய்கிறது இந்த ட்வீட்.


Quote:[Image: HQov4n4U_normal.jpg]
Parottamaster@parotta_master





#NirmalaSitharaman
[Image: ECqoNe0VAAEdnoj?format=jpg&name=900x900]


107
பிற்பகல் 9:22 - 23 ஆக., 2019
Twitter விளம்பரத் தகவல் மற்றும் தனியுரிமை


இதைப் பற்றி 80 பேர் பேசுகிறார்கள்





துட்டு, துட்டுங்க
புதுசா கார் வாங்கச் சொல்லி ஐடியா கொடுக்குறீங்களே, காசு யார் கொடுப்பா என கேட்கிறது இந்த கேலி ட்வீட். காசு இல்லாமல்தான் நுகர்வு குறைந்துவிட்டது. பொருட்கள் விற்பனையாகவில்லை. ஆனால் காரை எக்சேஞ்ச் செய்யுங்கள் என நிர்மலா கூறிய ஐடியாவை பார்த்தால் இந்த சநதேகம் எல்லோருக்கும் வரத்தானே செய்யும்.


Quote:[Image: vsxXdwKu_normal.jpg]
உளவாளி@withkaran





ஆட்டோமொபைல் துறை வளர்ச்சியடையனும்னா பழைய கார வித்துட்டு புது கார் வாங்கனும்..
பார்லே ஜி ஓனர்: அப்படியே தின்ன பிஸ்கெட்ட வாந்திதெடுத்துட்டு வேற பிஸ்கட் வாங்கச்சொல்லுங்க மேடம்
[Image: ECqplH4UYAAQdZ6?format=jpg&name=small]


50
பிற்பகல் 9:28 - 23 ஆக., 2019
Twitter விளம்பரத் தகவல் மற்றும் தனியுரிமை


இதைப் பற்றி 34 பேர் பேசுகிறார்கள்

[url=https://twitter.com/withkaran/status/1164929919228317698]



என்ன ஒரு ஐடியா
"ஆட்டோமொபைல் துறை வளர்ச்சியடையனும்னா பழைய கார வித்துட்டு புது கார் வாங்கனும்.. பார்லே ஜி ஓனர்: அப்படியே தின்ன பிஸ்கெட்ட வாந்தியெடுத்துட்டு வேற பிஸ்கட் வாங்கச்சொல்லுங்க மேடம்" என்று கிண்டல் செய்கிறார் இந்த நெட்டிசன். பார்லேஜி பிஸ்கெட் நிறுவனத்தின் விற்பனை குறைவால், சுமார் 10,000 பேர் வேலையிழப்பை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியான நிலையில், இப்படி கிண்டல் செய்கிறார் இவர்
first 5 lakhs viewed thread tamil
Like Reply
பா.ஜ.,வுக்கு எதிர்கட்சிகள் சூனியம்: சாத்வி

போபால் : பா.ஜ.,வுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் சூனியம் வைத்துள்ளதே பா.ஜ.,வை சேர்ந்த தலைவர்கள் அடுத்தடுத்து உயிரிழப்பதற்கு காரணம் என, சர்ச்சை பேச்சுக்களுக்கு பெயர் போன பா.ஜ., பெண் எம்.பி சாத்வி பிரக்யா தாக்கூர் தெரிவித்துள்ளார்.



[Image: Tamil_News_large_2352861.jpg]



போபாலில் செய்தியாளர்களிடம் பேசிய பிரக்யா, தேர்தல் சமயத்தில் மகாராஜ் ஜி என்னிடம் வந்து, இது மிகவும் மோசமான நேரம். உங்கள் கட்சி மற்றும் தலைவர்களுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் தீய சக்திகளை பயன்படுத்துகின்றன. இந்த சூழலில் நீங்கள் கவனமாக இருங்கள் என என்னிடம் கூறினார். நான் அதன் பிறகு அதை மறந்து விட்டேன். 
இப்போது நடப்பதை எல்லாம் பார்க்கும் போது அவர் கூறி உண்மை என்றே தோன்றுகிறது. கட்சி தலைவர்கள் ஒருவர் பின் ஒருவராக மரணமடைந்து வருகின்றனர். மகாராஜ் ஜி சொன்னதை இப்போது நினைத்து பார்க்கிறேன். நீங்கள் நம்புவீர்களா இல்லையா என எனக்கு தெரியவில்லை. இது உண்மை என்றே தோன்றுகிறது என்றார்.


[Image: gallerye_142154873_2352861.jpg]





பிரக்யாவின் இந்த வார்த்தைகள் குறித்து பா.ஜ., தலைவர்கள் யாரும் வாய்திறக்கவில்லை. அதே சமயம் எதிர்க்கட்சி தலைவர்களான கோபால் பார்கவா உள்ளிட்டோர் இதனை மறுத்துள்ளனர். காங்., கட்சியும் இது தொடர்பாக தனது அதிருப்தியை தெரிவித்துள்ளது. பிரக்யா சர்ச்சையாக பேசி சிக்கலில் சிக்கிக் கொள்வதும், பரபரப்பை ஏற்படுத்துவதும் புதிதல்ல என்பதால் பா.ஜ.,வினர் இதனை பெரிதாக கண்டுகொள்ளவில்லை என்றே கூறப்படுகிறது.
first 5 lakhs viewed thread tamil
Like Reply
பும்ரா, இஷாந்த் சூப்பர்: இந்திய அணி அசத்தல் வெற்றி

ஆன்டிகுவா: விண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்டில் பும்ரா, இஷாந்த் சர்மா 'வேகத்தில்' மிரட்ட இந்திய அணி 318 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.



[Image: Tamil_News_large_235263120190826022803.jpg]




வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விண்டீஸ் அணியுடன் மோதுகின்றது. முதல் டெஸ்ட் ஆன்டிகுவாவில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 297, விண்டீஸ் 222 ரன்கள் எடுத்தன.




கோஹ்லி நம்பிக்கை

பின், 75 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை துவக்கிய இந்திய அணிக்கு மயங்க் அகர்வால் (16), லோகேஷ் ராகுல் (38),புஜாரா (25)சோபிக்கவில்லை. பொறுப்பாக ஆடிய கோஹ்லி அரைசதமடித்தார். மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில், 2வது இன்னிங்சில் இந்திய அணி 3 விக்கெட்டுக்கு 185 ரன்கள் எடுத்திருந்தது.ரகானே (53), கோஹ்லி (51) அவுட்டாகாமல் இருந்தனர்.


[Image: gallerye_015927634_2352631.jpg]








விஹாரி அரைசதம்

நான்காம் நாள் ஆட்டத்தில் இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த இந்திய அணி கேப்டன் கோஹ்லி (51), முந்தைய நாள் எடுத்த ரன்னுடன் 'பெவிலியன்' திரும்பினார். ராஸ்டன் சேஸ் வீசிய 96வது ஓவரில் தொடர்ச்சியாக 2 பவுண்டரி அடித்த ஹனுமா விஹாரி, ஹோல்டர் பந்தை பவுண்டரிக்கு அனுப்பி அரைசதமடித்தார். மறுமுனையில் அசத்திய ரகானே, டெஸ்ட் அரங்கில் தனது 10வது சதமடித்தார். ஐந்தாவது விக்கெட்டுக்கு 132 ரன் சேர்த்த போது கேப்ரியல் பந்தில் ரகானே (102) அவுட்டானார். ராஸ்டன் சேஸ் 'சுழலில்' ரிஷாப் பன்ட் (7) சிக்கினார். பொறுப்பாக ஆடிய விஹாரி (93) சதமடிக்கும் வாய்ப்பை இழந்தார்.


[Image: gallerye_015937283_2352631.jpg]
first 5 lakhs viewed thread tamil
Like Reply
இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி, 7 விக்கெட்டுக்கு 343 ரன்கள் எடுத்து 'டிக்ளேர்' செய்தது. ரவிந்திர ஜடேஜா (1) அவுட்டாகாமல் இருந்தார். விண்டீஸ் சார்பில் ராஸ்டன் சேஸ், 4 விக்கெட் வீழ்த்தினார்.

[Image: gallerye_01594516_2352631.jpg]






கடின இலக்கு

பின், 419 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் 2வது இன்னிங்சை துவக்கியது விண்டீஸ் அணிக்கு பும்ரா, இஷாந்த் சர்மா தொல்லை தந்தனர். பும்ரா 'வேகத்தில்' கிரெய்க் பிராத்வைட் (1), ஜான் கேம்ப்பெல் (7), டேரன் பிராவோ (2), ஷாய் ஹோப் (2), கேப்டன் ஹோல்டர் (8) வெளியேறினர். இஷாந்த் பந்தில் புரூக்ஸ் (2), ஹெட்மயர் (1) அவுட்டாகினர்.


[Image: gallerye_022959281_2352631.jpg]




2வது இன்னிங்சில் விண்டீஸ் அணி 9 விக்கெட்டுக்கு 50 ரன் எடுத்திருந்ததால், படுதோல்வி அடையும் என எதிர்பார்க்கப்பட்டது. கடைசி கட்டத்தில் ரோச் 5 சிக்சர்கள் விளாசி விண்டீஸ் அணி 100 ரன்கள் எடுக்க உதவினார். ரோச் 38 ரன்களில் இசாந்த் வேகத்தில் வெளியேற, 100 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணி 318 ரன்கள் வித்தியாசத்தில் பிரமாண்ட வெற்றியை பதிவு செய்தது. இந்தியா சார்பில் பும்ரா 5, இஷாந்த் 3 விக்கெட் கைப்பற்றினர். ஆட்ட நாயகன் விருதை ரஹானே வென்றார்.
first 5 lakhs viewed thread tamil
Like Reply
சிதம்பரத்திடம் சிபிஐ கேட்ட கேள்வியை சொல்லி கபில் சிபல் வாதம்.. நீதிமன்றத்தில் சிரிப்பலை..
டெல்லி: சிபிஐ காவலில் சிதம்பரத்திடம் உங்களுக்கு டுவிட்டர் கணக்கு உள்ளதா என்றொல்லாம் கேட்டுள்ளார்கள் என வழக்கறிஞர் கபில் சிபல் உச்ச நீதிமன்றத்தில் வாதிட்டுள்ளார்.
ப சிதம்பரத்தின் ஜாமின் மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று பரபரப்பாக நடந்தது.
அப்போது ப சிதம்பரம் சார்பில் ஆஜரான கபில் சிபல் மற்றும் அமலாக்கத்துறை வழக்கறிஞர் துஷார் மேத்தா ஆகியோரிடையே பரபரப்பான விவாதம் நடந்தது
.
நேற்று விவாதம் நடந்திருக்கு
கபில் சிபல் வாதிடுகையில், அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் கொடுக்க வேண்டிய ஆவணங்களை ஊடகங்களுக்கு கசியவிட்டுள்ளது. இதை வைத்து நேற்று தொலைகாட்சிகளில் விவாதம் நடந்தது.இன்று நாளிதழ்கள் செய்திகள் வந்துள்ளது என்றார்.


[Image: tushar-mehta-1566705919-1566816320.jpg]
துஷார் மேத்தா மறுப்பு
அப்போது குறுக்கிட்ட அமலாக்கத்துறை வழக்கறிஞர் துஷார் மேத்தா எந்த ஆவணங்களையும் நாங்கள் கசியவிடவில்லை என்றார்
first 5 lakhs viewed thread tamil
Like Reply
[Image: pchidambaram-1566816335.jpg]
ஆதாரத்தை வெளியிட முடியுமா
தொடர்ந்து பேசிய கபில் சிபல் "வழக்கில் தொடர்புடையதாக ஒரு வங்கி கணக்கையோ, இந்த வழக்கில் பெற்ற ஆதாயத்தை கொண்டு சிதம்பரம் சேர்த்ததாக ஒரு சொத்து குறித்து ஒரே ஒரு ஆதாரத்தை அமலாக்கத்துறை வெளியிடமுடியுமா? சிதம்பரத்தின் பெயரில் ஒரு சொத்தை இவர்கள் காட்டட்டும் நான் வழக்கை வாபஸ் பெற்றுக்கொள்கிறேன்" என்றார்.



[Image: chidambaram-p-600-1566816349.jpg]

இது என்ன சம்பந்தம்
அப்போது அமலாக்கத்துறை வழக்கறிஞர் துஸார் மேத்தா சிதம்பரத்திற்கு கணக்கு உள்ளது என்றார். அதற்கு கபில் சிபல், ஆமாம் டுவிட்டரில் கணக்கு உள்ளது. இதை நான் சொல்லவில்லை. சிபிஐ காவலில் உள்ள சிதம்பரத்திடம் உங்களுக்கு டுவிட்டர் கணக்கு உள்ளதா என கேட்டுள்ளனர். வங்கி கணக்கிற்கும் டுவிட்டர் கணக்கிற்கும் என்ன சம்மந்தம் என்று கபில் சிபல் கேள்வி எழுப்பினார். அப்போது நீதமன்றத்தில் சிரிப்பலை எழுந்தது
first 5 lakhs viewed thread tamil
Like Reply
டெல்லியில் உள்ள ரோஸ் அவென்யூ சிறப்பு நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் ஆஜர்படுத்தப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி அஜய் குமார் ப .சிதம்பரத்திற்கு பெயில் வழங்க முடியாது என்று கூறினார்.


[Image: chidambaram09-1566820436.jpg]


காவல் அனுமதி
அதோடு ப. சிதம்பரத்தை ஐந்து நாள் காவலில் எடுக்கவும் அனுமதி வழங்கினார். இவர் கடந்த 5 நாட்களாக கடுமையாக விசாரிக்கப்பட்டு வருகிறார். இந்த நிலையில் இவருக்கு வழங்கப்பட்ட காவல் இன்றோடு முடிகிறது. ஆனால் இந்த ஐந்து நாட்களில் சிபிஐ விசாரணைக்கு ப. சிதம்பரம் சரியாக ஒத்துழைக்கவில்லை என்று கூறப்படுகிறது.

[Image: chidambaram343434-1566820506.jpg]
இதுவும் தள்ளுபடி
சிபிஐ கேட்ட கேள்விகளுக்கு ப. சிதம்பரம் சரியாக பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ப.சிதம்பரத்தின் காவலை நீட்டிக்க சிபிஐ கோரிக்கை வைத்தது. இந்த சிபிஐ காவலுக்கு எதிராக ப.சிதம்பரம் ஏற்கனவே தாக்கல் செய்த முன் ஜாமீன் மனுவை உச்ச நீதிமன்றம் இன்று காலை தள்ளுபடி செய்தது.

[Image: chidambaram2323-1566820521.jpg]

விசாரணை
சிதம்பரத்திற்கு முன் ஜாமீன் வழங்க முடியாது, ஜாமீனுக்கு வேண்டுமானால் சிபிஐ கோர்ட்டிலேயே மீண்டும் விண்ணப்பியுங்கள் என்று உச்ச நீதிமன்றம் அறிவுரை வழங்கியது. அதையடுத்து தற்போது டெல்லி ரோஸ் அவென்யூ சிறப்பு சிபிஐ கோர்ட்டில் ப. சிதம்பரம் ஜாமீன் மனு விசாரணை நடந்தது .

[Image: chidambaram11-1566820492.jpg]
என்ன வாதம்
இங்குதான் ஐஎன்எக்ஸ் வழக்கு நடந்து வருகிறது. ப. சிதம்பரம் முன் ஜாமீன் மறுக்கப்பட்ட நிலையில் ஜாமீன் மனு மீது டெல்லி சிபிஐ கோர்ட்டில் விசாரணை நடந்தது. ப. சிதம்பரத்திற்காக கபில் சிபல் உச்ச நீதிமன்றத்தில் வாதிட்டார். அவர் அமலாக்கத்துறை முன் ஜாமீன் வழக்கில் வாதிட்டார். சிபிஐ நீதிமன்றத்தில் ப. சிதம்பரத்திற்காக அபிஷேக் மனு சிங்வி, கபில் சிபல் இருவரும் வாதிட்டனர்..

[Image: chidambaram-p-600-1566820461.jpg]
என்ன கோரிக்கை
இதில் ப.சிதம்பரத்திற்கு 5 நாட்கள் காவலை நீட்டிக்க வேண்டும் என்று சிபிஐ மனு தாக்கல் செய்தது. மேலும் இந்த வழக்கில் சிபிஐ சார்பாக ஆஜரான துஷார் மேத்தா, சிபிஐக்கு இந்த வழக்கில் புதிதாக நிறைய ஆதாரங்கள் கிடைத்துள்ளது. அமலாக்கத்துறை எங்களிடம் நிறைய ஆதாரங்களை வழங்கி இருக்கிறது. அதை வைத்து அவரை விசாரிக்க வேண்டும் என்று கேட்டது.

[Image: chidambaram-1566820475.jpg]

[url=https://www.outbrain.com/what-is/default/en]
[color][size][font]

எதிர்ப்பு
ஆனால் சிதம்பரத்திற்கு உடனடியாக பெயில் வழங்க வேண்டும் என்று கபில் சிபல் மற்றும் அபிஷேக் மனு சிங்வி வாதிட்டனர். என்ன ஆதாரம் இருக்கிறது என்று கூறுங்கள். நல்லபடியாக ஒரே ஒரு ஆதாரத்தை கொடுங்கள். நீங்கள் ஆதாரம் கொடுத்தால் பெயில் கேட்க மாட்டோம், என்று வாதிட்டனர். இரண்டு தரப்பும் சுமார் 30 நிமிடங்கள் வாதிட்டனர்.


[Image: supreme-court445-1566820598.jpg]
என்ன உத்தரவு
இதையடுத்து ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்தை மேலும் 5 நாட்கள் (ஆகஸ்ட் 30ம் தேதி வரை) விசாரிக்க சிபிஐக்கு அனுமதி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் வழங்கி உத்தரவிட்டது. நீதிபதி அஜய் குமார் சிபிஐ கோரிக்கையை ஏற்று ப.சிதம்பரத்தை மேலும் 5 நாட்கள் விசாரிக்க சிபிஐக்கு அனுமதி வழங்கினார். இதற்கு எதிராக ப. சிதம்பரம் தரப்பு உச்ச நீதிமன்றம் செல்ல வாய்ப்புள்ளது.

[/font][/size][/color]
first 5 lakhs viewed thread tamil
Like Reply
ஜாகீர் நாயக் - பினாங்கு துணை முதல்வர் ராமசாமி இடையே வலுக்கும் மோதல்: மீண்டும் நோட்டீஸ்
[Image: _108505073_gettyimages-656726994.jpg] மலேசியாவின் பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் ராமசாமிக்கும், மத போதகர் ஜாகிர் நாயக்கிற்கும் இடையேயான மோதல் வலுவடைந்து வருகிறது.
இந்திய தொலைக்காட்சி அலைவரிசை ஒன்றுக்கு அளித்த பேட்டியில், தன்னைப் பற்றி ராமசாமி தெரிவித்துள்ள கருத்துகளுக்கு ஆட்சேபம் தெரிவிக்கும் வகையில் அவருக்கு சட்ட நோட்டீஸ் அனுப்பியுள்ளார் ஜாகிர் நாயக்.
ஜாகிர் சார்பில் அவரது வழக்கறிஞர் அனுப்பியுள்ள அந்த நோட்டீசில், தொலைக்காட்சிப் பேட்டியில் தெரிவித்துள்ள கருத்துகளுக்காக அடுத்த 48 மணி நேரத்தில் பேராசிரியர் ராமசாமி மன்னிப்பு கோர வேண்டும் என்றும், இனி ஜாகிர் குறித்து கருத்து தெரிவிப்பதை நிறுத்த வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளதாக மலேசிய ஊடகம் தெரிவித்துள்ளது.
அவமானம் ஏற்படுத்தியதாக ஜாகிர் நாயக் குற்றச்சாட்டு
மேலும் தொலைக்காட்சி பேட்டி மூலம், ஜாகிர் நாயக்கிற்கு தர்ம சங்கடம் மற்றும் அவமானம் ஏற்படுத்தியதற்காக குறிப்பிட்ட தொகையை நஷ்ட ஈடாக தர வேண்டும் என்றும் அந்த நோட்டீசில் குறிப்பிடப்பட்டிருப்பதாக ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.
இது ஜாகிர் நாயக் தரப்பால் பேராசிரியர் ராமசாமிக்கு அனுப்பப்பட்டுள்ள இரண்டாவது நோட்டீஸ் ஆகும்.
[Image: _108505075_4f76cbce-dffd-4bc0-b793-168e41a078ca.jpg]படத்தின் காப்புரிமைFACEBOOKImage captionராமசாமி
முன்னதாக, மலேசிய மனிதவளத் துறை அமைச்சர் குலசேகரன், கிள்ளான் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் சார்லஸ் சந்தியாகு, பாகான் டாலம் தொகுதி உறுப்பினர் சதீஷ் முனியாண்டி, முன்னாள் தூதர் டென்னிஸ் இக்னேஷியஸ் ஆகியோருக்கும் ஜாகிர் நாயக் குறித்து அவதூறு கருத்துக்கள் தெரிவித்ததாகக் கூறி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இதையடுத்து ஐந்து பேரும் ஜாகிர் நாயக்கை நீதிமன்றத்தில் எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளனர்.
first 5 lakhs viewed thread tamil
Like Reply
துணை முதல்வர் ராமசாமிக்கு இரண்டாவது நோட்டீஸ்
இந்நிலையில் பேராசிரியர் ராமசாமிக்கு இரண்டாவது நோட்டீஸ் அனுப்பியுள்ளார் ஜாகிர் நாயக். தமது பேட்டிகள், அறிக்கைகளில் ஜாகிர் நாயக்கை தொடர்ந்து விமர்சித்து வருகிறார் பேராசிரியர் ராமசாமி.
இந்நிலையில் ஜாகிர் நாயக் தமக்கு நோட்டீஸ் அனுப்பி இருப்பது வருத்தம் அளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
"துணை முதல்வர் பதவியை நான் முறைகேடாக பயன்படுத்துவதாக நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளது. நான் சார்ந்துள்ள கட்சியில் எனது செல்வாக்கு சரிவதால் ஜாகிர் நாயக்கை தாக்குவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
"கடந்த சனிக்கிழமை பிரிக் ஃபீல்ட்ஸ் பகுதியில் நடைபெறுவதாக இருந்த ஜாகிர் நாயக் எதிர்ப்பு பேரணிக்கும் நான் தான் காரணம் என்று தெரிவித்திருப்பது வருத்தம் அளிக்கிறது," என்று பேராசிரியர் ராமசாமி கூறியுள்ளார்.
இந்நிலையில், ஜாகிர் நாயக் மீது காவல் துறையில் புகார் அளிக்கப் போவதாகவும் அவர் தெரிவித்திருப்பது பரபரப்பை அதிகப்படுத்தி உள்ளது.
மலேசியாவின் உள்நாட்டு அரசியலில் தலையிட்டதாக குறிப்பிட்டு, இந்தப் புகாரை அளிக்கப் போவதாக பேராசிரியர் ராமசாமி தெரிவித்துள்ளார்.
"சட்டத்துக்கு அப்பாற்பட்டவர் என்று யாரும் இல்லை"
[Image: _108505077_ff34314c-1d03-4abc-8c42-4c0dcc2febec.jpg]படத்தின் காப்புரிமைGETTY IMAGES
இதற்கிடையே, மலேசியாவில் சட்டத்துக்கு அப்பாற்பட்டவர் என்று யாரும் இல்லை என்றும், மத போதகர் ஜாகிர் நாயக் உள்ளிட்ட அனைவருக்கும் இது பொருந்தும் என்றும் உள்துறை அமைச்சர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் தெரிவித்துள்ளார்.
திங்கட்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய அவர், மலேசியாவில் எவரும் சட்டரீதியான விளைவுகள் இல்லாமல் சட்டவிரோதமாக செயல்பட முடியாது என்று குறிப்பிட்டார்.
எந்த விஷயத்திலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதிபட தெரிவித்துள்ளார்.
first 5 lakhs viewed thread tamil
Like Reply
1.76 லட்சம் கோடி ரூ. உபரி நிதியை மத்திய அரசுக்கு வழங்குகிறது ஆர்பிஐ

முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் பிமல் ஜலான் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையை ஏற்று மத்திய அரசுக்கு ரூ.1.76 லட்சம் கோடி உபரி நிதியை வழங்க ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளது என ஏஎன்ஐ செய்தி முகமை செய்தி வெளியிட்டுள்ளது.
ரிசர்வ் வங்கியின் வசம் ரூ.9.6 லட்சம் கோடி உபரி நிதி உள்ளதாக கூறப்பட்ட நிலையில், இந்த உபரி நிதியில் இருந்து 1.76 லட்சம் கோடியை மத்திய அரசுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் குறித்து ஆராய்வதற்கு ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் பிமல் ஜலான் தலைமையில் 6 உறுப்பினர்களைக் கொண்ட குழு ஒன்று கடந்த ஆண்டு அமைக்கப்பட்டது.
இந்நிலையில், திங்கள்கிழமை நடந்த ஆர்பிஐ மத்திய குழு கூட்டத்தில் ஜலான் குழுவின் பரிந்துரையின் பேரில் மத்திய அரசுக்கு 1.76 லட்சம் கோடி உபரி நிதியை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அண்மையில் வெளியான சில தகவல்களின்படி இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.3 சதவீதம் பற்றாக்குறை இருக்கும் என்று கூறப்பட்ட நிலையில், ரிசர்வ் வங்கி வழங்கும் உபரி நிதி இந்த பற்றாக்குறையை சமாளிக்க உதவும் என்று கருதப்படுகிறது.
first 5 lakhs viewed thread tamil
Like Reply
பி.வி.சிந்து: உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்று சாதனை

[Image: _108492454_sindhu.jpg]படத்தின் காப்புரிமைGETTY IMAGES
உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்றுள்ளார் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து.
ஜப்பானை சேர்ந்த நசோமி ஒகுஹாராவை 21-7, 21-7 என்ற கணக்கில் வீழ்த்தி உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தனது முதல் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார் பி.வி. சிந்து.
"இந்த பதக்கத்தை இன்று பிறந்தநாள் கொண்டாடும் எனது அம்மாவிற்கு சமர்ப்பிக்கிறேன்" என பதக்கம் வென்றபின் சிந்து தெரிவித்தார்.
இதன் மூலம், உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சிறப்பை பெற்றுள்ளார் பி.வி. சிந்து.
2016ஆம் ஆண்டு ரியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் உலகின் முன்னிலை ஆட்டக்காரரும் ஸ்பெயின் வீராங்கனையுமான கரோலின் மெரினுக்கு எதிராக 3 செட்களில் இறுதி வரை போராடிய இந்திய வீராங்கனை பி.வி.சிந்து இறுதியில் வெள்ளிப்பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்திருந்தார்
அதே போன்று, கடந்தாண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில், பேட்மிண்டன் பிரிவில் பங்கேற்ற சிந்து, வெள்ளிப்பதக்கம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆசிய விளையாட்டு போட்டியில், பேட்மிண்டன் பிரிவில் இந்திய வீராங்கனை ஒருவர் வெள்ளிப்பதக்கம் வென்றது அதுவே முதல்முறை.
2018 காமன்வெல்த் போட்டிகளிலும் தனிநபர் பிரிவில் வெள்ளி வென்றார் பி.வி.சிந்து கலப்பு இரட்டையர் பிரிவில் அணி தங்கம் வெல்ல உதவினார்.
குவியும் வாழ்த்துக்கள்
தனது டிவிட்டர் பக்கத்தில் பி.வி.சிந்துவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோதி, சிந்துவின் ஆர்வமும், அர்ப்பணிப்பும் உத்வேகமளிக்கக்கூடியது என்று தெரிவித்துள்ளார்.
மேலும், சிந்துவின் இந்த வெற்றி பல தலைமுறை வீரர்களுக்கு ஊக்கமளிக்கக்கூடியது என்றும் தெரிவித்துள்ளார்.
கடந்து செல்க டுவிட்டர் பதிவு இவரது @narendramodi
Quote:[Image: QbihPzrL_normal.png]
[/url]Narendra Modi

@narendramodi





The stupendously talented @Pvsindhu1 makes India proud again!

Congratulations to her for winning the Gold at the BWF World Championships. The passion and dedication with which she’s pursued badminton is inspiring.

PV Sindhu’s success will inspire generations of players.

101ஆ
பிற்பகல் 6:42 - 25 ஆக., 2019
Twitter விளம்பரத் தகவல் மற்றும் தனியுரிமை


இதைப் பற்றி 17.5ஆ பேர் பேசுகிறார்கள்




[color][font][color][font]
முடிவு டுவிட்டர் பதிவின் இவரது @narendramodi[/font][/color][/font][/color]
இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது டிவிட்டர் பக்கத்தில் சிந்துவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கடந்து செல்க டுவிட்டர் பதிவு இவரது @sachin_rt
Quote:[Image: 344204969_normal.jpg]
Sachin Tendulkar

@sachin_rt





Amazing performance, @Pvsindhu1!
Congratulations on becoming the 1st ever [img=17.9x18]https://abs.twimg.com/emoji/v2/72x72/1f1ee-1f1f3.png[/img] to win the BWF World Championships!
You have made India proud, yet again.#BWFWorldChampionships2019
[Image: EC0hQbpU8AAJwfw?format=jpg&name=small]


96ஆ
பிற்பகல் 7:28 - 25 ஆக., 2019
Twitter விளம்பரத் தகவல் மற்றும் தனியுரிமை


இதைப் பற்றி 8,752 பேர் பேசுகிறார்கள்

[url=https://twitter.com/sachin_rt/status/1165624451058135040]


[color][font][color][font]
முடிவு டுவிட்டர் பதிவின் இவரது @sachin_rt[/font][/color][/font][/color]
மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரும் பி.வி.சிந்துவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
first 5 lakhs viewed thread tamil
Like Reply
யூனிபார்மில் கேமரா பொருத்தம்.. சென்னை டிராபிக் போலீசாரின் புதிய நடைமுறை

சென்னை: சென்னை மாநகர காவல்துறையில் போக்குவரத்து காவலர்களின் ஆடையில் கேமரா பொருத்தும் நடைமுறை நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
இந்த கேமரா மூலம் காவல்துறை தலைமை கட்டுப்பாட்டு அறையில் உள்ள அதிகாரிகள் போக்குவரத்து போலீசார்கள் யார் யார்? எங்கு எப்படி வாகன சோதனையில் ஈடுபடுகிறார்கள். எப்படி பேசுகிறார்கள் என்பதை இருந்த இடத்தில் இருந்தே கண்காணிக்க முடியும்.
சென்னையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபடும் போது லஞ்சம் வாங்குவதாக புகார்கள் எழுந்தது. அண்மையில் திருவான்மியூரில் கால் டாக்ஸி டிரைவர் ஒருவர் போக்குவரத்து போலீசாருடனான தகராறில் தற்கொலை செய்து கொண்டார்.


[Image: trafficsecurity%20officer-2-1566880859.jpg]



போலீசாருக்கு கேமரா ஆடை
இந்நிலையில் போக்குவரத்து காவல்துறையில் பல்வேறு சிறப்பு திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வருகிறது. வாகன ஓட்டிகளுக்கு அபராத தொகையை இ-செலான் முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டது. போக்குவரத்து போலீசாரின் ஆடையில் கேமரா பொருத்தும் திட்டம் தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது.

[Image: trafficsecurity%20officer-1-1566880845.jpg]
first 5 lakhs viewed thread tamil
Like Reply
முதல்வர் தொடங்கி வைத்தார்
நேற்று தலைமைச் செயலகத்தில் 98 லட்சம் செலவில் 201 ஆடைகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. முதல்வர் பழனிச்சாமி 7 போக்குவரத்து போலீசாருக்கு கேமரா பொருத்தி திட்டத்தை தொடங்கி வைத்தார்.


[Image: security%20officer-body-cameras-1566881074.jpg]
கேமரா ஆடையுடன் சோதனை
இதனை தொடர்ந்து நேற்று முதல் சென்னை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் 201 போக்குவரத்து உதவி ஆய்வாளர்கள் தங்களது பணியின் போது கேமரா பொருத்திய ஆடையுடன் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.


[Image: traffic-security%20officer-to-carry-body-c...881061.jpg]

இடம் நேரம் தெரியும்
போக்குவரத்து போலீசாரின் ஆடையுடன் இணைக்கப்பட்டுள்ள இந்த கேமராவில் 2 எம்பி கேமராக்கள் மூலம் வீடியோ மற்றும் ஆடியோ பதிவுகள் மற்றும் புகைப்படங்கள் ஆகியவற்றை பதிவு செய்யலாம். அந்த பதிவு எடுக்கப்பட்ட நேரம், இடம் ஆகியவற்றை தானாகவே அந்த கேமரா பதிவாக்கி கொள்ளும்.


[Image: edappadi-3-1566881086.jpg]
கட்டுப்பாட்டு அறையில் இருந்து
கேமராக்களில் பொருத்தப்பட்டுள்ள 4ஜி இணைப்பு மூலம் கேமராக்களின் வீடியோ பதிவுகளை, காவல்துறை கட்டுப்பாட்டு அறையில் நேரலையில் கண்காணிக்க முடியும். அத்துடன் போக்குவரத்து காவல் அதிகாரிகள் யார் யார்? எங்கு வழக்கு பதிவு செய்கிறார்கள் என்பதையும் ஜிபிஎஸ் தொழில்நுட்பம் மூலம் வரைபடமாக காண முடியும்.


[Image: traffic-security%20officer323-1566881140.jpg]
கேமரா திட்டத்தால் நன்மை
இந்த கேமரா திட்டம் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளதால், போலீசார் மற்றும் வாகன ஓட்டிகளிடையே ஏற்படும் தகராறுகள் முற்றுப்பெறும் என நம்பப்படுகிறது.
first 5 lakhs viewed thread tamil
Like Reply
அமைச்சர் விஜயபாஸ்கர் நடத்திய மாரத்தான் பேச்சுவார்த்தையில் உடன்பாடு.. அரசு டாக்டர்கள் ஸ்ட்ரைக் வாபஸ்
சென்னை: தமிழக அரசுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதால், அரசு மருத்துவர்கள் கடந்த நான்கு நாட்களாக மேற்கொண்ட வேலை நிறுத்த போராட்டம், வாபஸ் பெறப்பட்டுள்ளது.
பட்ட மேற்படிப்பில் 50% இட ஒதுக்கீடு, சம்பள உயர்வு உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 23ம் தேதி முதல் அரசு மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.


[Image: vijayabasker-1566925767.jpg]


இதனால் நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பது பாதிக்கப்பட்டது. இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலின் இன்று வெளியிட்ட ட்வீட்டில், நான்கு அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து வருவதை கண்டுகொள்ளாமல் இருக்கும் அதிமுக அரசுக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கும் அரசு மருத்துவர்களை உடனே அழைத்து, அக்கறையுடன் பேசி அவர்களின் கோரிக்கையை முறையாக உடனடியாகப் பரிசீலனை செய்து நிறை வேற்றவும், அசவுகரியங்களுக்கு உள்ளாகியிருக்கும் உள்நோயாளிகள் மற்றும் அரசு மருத்துவமனைக்கு அவசரகால சிகிச்சைக்காக வருவோரின் சிரமங்களைப் போக்கி, மக்களுக்கு சிறப்பான சிகிச்சை கிடைப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன், என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், அரசு சார்பில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் காலை முதல், 6 மணி நேரம் நடத்திய, பேச்சுவார்த்தையில் முடிவு எட்டாத நிலையில், கோரிக்கைகளை ஆய்வு செய்ய அதிகாரியை, நியமனம் செய்வதாக இரவு 8 மணியளவில் அறிவித்தது தமிழக அரசு.
2 வாரங்களுக்கு ஒரு முறை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார திட்டப் பணிகள் இயக்குநர் செந்தில் ராஜ் ஆய்வு செய்வார் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.. ஊதிய உயர்வு கோரிக்கையை 2 மாதத்தில் நிறைவேற்றி தர எழுத்துபூர்வமாக உத்தரவாதம் அளிக்கப்படும் என அரசு தரப்பு தெரிவித்துள்ளது.

இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பிறகு, இரவில் மீண்டும், தலைமைச் செயலகத்தில் மருத்துவ சங்க பிரதிநிதிகளுடன் விஜயபாஸ்கர் பேச்சுவார்த்தை நடத்தினார். சுகாதாரத்துறை செயலாளர், மருத்துவ கல்வி செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளும் அப்போது உடன் இருந்தனர்.


6 வாரங்களுக்குள், ஊதிய உயர்வு உள்ளிட்ட மருத்துவர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றித் தரும் என்று விஜயபாஸ்கர் அப்போது உறுதிமொழியளித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, மருத்துவர்கள் தங்கள் வேலை நிறுத்த போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளனர். இதன் மூலம், 4 நாட்கள் நீடித்து வந்த அரசு டாக்டர்கள் வேலை நிறுத்தம் இன்றுடன் முடிவுக்கு வந்துள்ளது.
first 5 lakhs viewed thread tamil
Like Reply




Users browsing this thread: 132 Guest(s)