Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
காதலுக்கு எதிர்ப்பு: தந்தையை 10 முறை கத்தியால் குத்தி தீ வைத்து கொன்ற 10-ம் வகுப்பு மாணவி
பதிவு: ஆகஸ்ட் 19, 2019 20:03 IST
Share Tweet அ-
அ+
[color][size][font]
காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தால் நேரம் பார்த்து காதலனுடன் சேர்ந்து தந்தையை கத்தியால் குத்தி தீ வைத்து எரித்த 10-ம் வகுப்பு மாணவி கைது செய்யப்பட்டார்.
[/font][/size][/color] தந்தையை கத்தியால் குத்தி கொலை செய்த மாணவி
[color][size][font]
பெங்களூருவில் உள்ள ராஜாஜிநகர் பகுதியில் துணிக்கடை நடத்தி வந்தவர் ஜெய் குமார் ஜெய்ன். இவருக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர். மகள் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கும் 18-வயதாகும் பிரவீன் என்பவருக்கும் பழக்கம் இருந்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன் அந்த மாணவி பிரவீன் உடன் ஒரு வணிக வளாகத்திற்கு சென்றுள்ளார். இது ஜெய்குமாருக்கு எப்படியோ தெரிந்து விட்டது. மகளை கண்டித்துள்ளார்.
இதனால் கோபம் அடைந்த அந்த மாணவி, ஆண் நண்பருடன் ஊர் சுற்ற அப்பா தடையாக இருக்கிறார். அவரை தீர்த்துக் கட்டினால் மட்டுமே தடையின்றி ஊர்சுற்ற முடியும் என்று நினைத்துள்ளார். தனது எண்ணம் குறித்து ஆண் நண்பரிடம் தெரிவித்துள்ளார். அவனும் சம்மதம் தெரிவித்துள்ளான்.
தந்தையை கொலை செய்ய தக்க தருணத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார் மாணவி. அதற்கு நேற்று வாய்ப்பு அமைந்தது. பாண்டிச்சேரியில் உள்ள ஒரு திருமண விழாவிற்கு ஜெய் குமார் தனது மனைவி மற்றும் மகனை ரெயில் மூலம் அனுப்பி வைத்துவிட்டு இரவு வீட்டிற்கு வந்தார்.
தனியாக வீட்டில் இருக்கும் தந்தையை கொலை செய்த இதுவே சரியான நேரம் என்று கருதிய அந்த மாணவி, தந்தையிடம் அன்பாக பேசியுள்ளார். அப்போது தூக்க மாத்திரை கலந்து பாலை குடியுங்கள் என்று கொடுக்க, மகள்தானே தருகிறாள் என்று, மகளின் கொடூர திட்டத்தை அறியாத தந்தை குடித்துள்ளார்.
குடித்ததும் ஜெய் குமார் மயக்கம் அடைய, தனது திட்டத்தை அந்த மாணவி நிறைவேற்ற தொடங்கினார். தனது ஆண் நண்பரை வீட்டிற்கு அழைத்துள்ளார். அவனது துணையுடன் தந்தையை 10 முறை கத்தியால் குத்தியுள்ளார்.
கத்தியால் குத்தியும் ஆத்திரம் தீராத அந்த மாணவி ஆண் நண்பர் துணையுடன் குளியல் அறைக்குள் இழுத்துச் சென்று தீவைத்து கொளுத்தியுள்ளார்.
புகை வெளியில் வர அருகில் வசித்தவர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வீட்டிற்குள் சென்று பார்க்கும்போது பாதி எரிந்த நிலையில் ஜெய் குமார் பிணமாக கிடந்தார்.
பின்னர் இருவரிடமும் போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை நடத்த குற்றத்தை ஒப்புக் கொண்டனர். 10-ம் வகுப்பு படிக்கும்போதே ஆண் நண்பருடனான தொடர்புக்காக தந்தையை கொன்ற குற்றத்திற்காக கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார் அந்த மாணவி.[/font][/size][/color]
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
பெண் கொலையில் திடீர் திருப்பம்: கள்ளக்காதல் விவகாரத்தில் தீர்த்துக்கட்டிய கணவர் கைது
Facebook Twitter Mail Text Size Print
பெண் கொலையில் திடீர் திருப்பமாக, கள்ளக்காதல் விவகாரத்தில் மனைவியை தீர்த்துக்கட்டிய கணவரை போலீசார் கைது செய்தனர்.
பதிவு: ஆகஸ்ட் 18, 2019 05:45 AM
கொடைரோடு,
திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே உள்ள ரெயில்வேநகர் பகுதியில், கடந்த மாதம் 14-ந்தேதி ஒரு சாக்குமூட்டை தீயில் எரிந்துகொண்டிருந்தது. அதில் இருந்து துர்நாற்றமும் வீசியது. இதுகுறித்து தகவல் அறிந்த அம்மையநாயக்கனூர் போலீசார், சாக்குமூட்டையில் பற்றி எரிந்த தீயை அணைத்து சோதனையிட்டனர். அப்போது அதில், ஒரு பெண் பிணம் முழுவதுமாக எரிந்த நிலையில் இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். ஆனால் எந்த துப்பும் போலீசாருக்கு கிடைக்கவில்லை. இந்த நிலையில் கரூர் மாவட்டம் தான்தோன்றிமலை பூங்காநகரை சேர்ந்த சிவசங்கரன் (வயது 47) என்பவர், கடந்த மாதம் 9-ந்தேதி தான்தோன்றிமலை போலீஸ் நிலையத்தில் தனது மனைவி சூரியகுமாரியை (34) காணவில்லை என்று புகார் அளித்தார்.
அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர். அவர்களுடன் சேர்ந்து சிவசங்கரனும் மனைவியை தேடி அலைந்தார். பல்வேறு இடங்களில் போலீசார் தேடியும் சூரியகுமாரி குறித்து அவர்களுக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதற்கிடையே சிவசங்கரனின் நடவடிக்கையில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
அதையடுத்து அவருடைய செல்போனை ஆய்வு செய்தால் துப்பு கிடைக்கலாம் என்று போலீசார் கருதினர். இதனால் போலீசார் அவரிடம் செல்போனை தரும்படி கேட்டனர். ஆனால் அவர் தனது செல்போன் தொலைந்துவிட்டதாக கூறினார். இது போலீசாரின் சந்தேகத்தை வலுவடைய செய்தது.
இதனையடுத்து அவருடைய செல்போன் கடைசியாக எங்கு பயன்படுத்தப்பட்டது என்று சைபர் கிரைம் போலீசார் மூலம், தான்தோன்றிமலை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது கடந்த மாதம் 8-ந்தேதி அது கொடைரோடு அருகே பயன்படுத்தப்பட்டிருப்பது தெரியவந்தது. பின்னர் கொடைரோடு போலீசாரை தொடர்புகொண்ட தான்தோன்றிமலை போலீசார் சிவசங்கரனின் செல்போன் டவர் காட்டிய இடத்தில் ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் நடந்ததா? என்று விசாரித்தனர்.
அப்போது சாக்குமூட்டையில், எரிந்த நிலையில் ஒரு பெண்ணின் பிணத்தை கைப்பற்றிய விவரத்தை அம்மையநாயக்கனூர் போலீசார் தெரிவித்தனர். அதையடுத்து சிவசங்கரனை பிடித்து தான்தோன்றிமலை போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது அவர் தனது மனைவியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். பின்னர் அவரை கைது செய்து, கொடைரோட்டுக்கு அழைத்து வந்தனர். தொடர்ந்து தனது மனைவியின் உடலை சாக்குமூட்டையில் போட்டு வீசிச்சென்ற இடத்தை அடையாளம் காட்டியதுடன், எப்படி வீசிச்சென்றார் என்பது குறித்தும் போலீசாரிடம் நடித்து காட்டினார். பின்னர் அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-
எனது மனைவிக்கும் ஒரு வாலிபருக்கும் கள்ளக்காதல் இருந்தது. இதையறிந்ததும் அவரை கண்டித்தேன். ஆனால் எனது மனைவி கள்ளக்காதலை கைவிடவில்லை. அத்துடன் ஒரு வாலிபருடன் இணைந்து ‘டிக்-டாக்’ வீடியோவும் வெளியிட்டார். இது எனக்கு மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து அவரை கொலை செய்ய திட்டமிட்டேன். அதன்படி கடந்த மாதம் 7-ந்தேதி இரவு வீட்டுக்கு சென்ற நான், படுக்கையறையில் தூங்கிக்கொண்டிருந்த சூரியகுமாரியை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்தேன்.
பின்னர் அவருடைய உடலை சாக்குமூட்டையில் கட்டி படுக்கையறையில் வைத்துவிட்டு தூங்கினேன். பின்னர் அடுத்த நாள் காரில் அந்த சாக்குமூட்டை போட்டு கொடைரோடு அருகே, ரெயில்வே நகர் பகுதிக்கு வந்தேன். பின்னர் அங்குள்ள காலியிடத்தில் அந்த மூட்டையை வீசிச்சென்றேன். மேலும் அப்பகுதியில் உள்ள ஒரு புதரில் எனது செல்போனை வீசிவிட்டு தான்தோன்றிமலைக்கு திரும்பிவிட்டேன்.
மேலும் என் மீது யாருக்கும் சந்தேகம் வந்துவிடக்கூடாது என்பதற்காக 9-ந்தேதி சூரியகுமாரியை காணவில்லை என்று போலீசிலும் புகார் அளித்தேன். ஆனால் நான் கொலை செய்ததை போலீசார் எப்படியோ கண்டுபிடித்துவிட்டனர். அதனால் நான் போலீசாரிடம் சிக்கிக்கொண்டேன்.
இவ்வாறு அவர் கூறினார். சாக்குமூட்டையில் வீசிச்சென்றதாக சிவசங்கரன் கூறியதையடுத்து, யார் அந்த சாக்குமூட்டைக்கு தீ வைத்தது என்று போலீசார் விசாரித்தனர். அப்போது சாக்குமூட்டை இருந்த இடத்தில் இருந்து துர்நாற்றம் வீசியதால் 14-ந்தேதி, யாரோ மர்ம நபர்கள் அதற்கு தீ வைத்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
அதிர வைத்த எஸ்ஆர்எம் தற்கொலைகள்.. எஸ்பி மல்லிகா தலைமையில் அதிரடி விசாரணை.. பாரிவேந்தருக்கு சிக்கல்?
நெருக்கடி?
மாணவர்கள் எப்படி இறந்து போனார்கள் என்பது குறித்த உண்மைகள் இனி விரைவில் வெளிவரும் என்று நம்பப்படுகிறது. 3 மாணவர்களின் இந்த தற்கொலைகள் பல்கலைக்கழகத்தையே அசைத்து பார்க்கும் அளவுக்கு வந்துவிடுமா அல்லது பாரிவேந்தருக்கு எந்த வகையிலாவது ஏதாவது நெருக்கடி தந்துவிடுமா என்பதை இனிதான் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
கிறிஸ்தவ நிறுவனங்கள் குறித்த கருத்து... திரும்பப் பெற்றார் நீதிபதி வைத்தியநாதன்
சென்னை: கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களில் பெண் குழந்தைகளின் எதிர்காலம் பாதுகாப்பற்றதாக இருப்பதாக பெற்றோர் மத்தியில் கருத்து நிலவுகிறது என்று தெரிவித்த கருத்தை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன் வாபஸ் பெற்றுள்ளார்.
சென்னை, தாம்பரத்தில் உள்ள கிறிஸ்தவ கல்லூரியில் விலங்கியல் மாணவ - மாணவிகள், கடந்த ஜனவரி மாதம் பெங்களூரு, மைசூரு, கூர்க் போன்ற ஊர்களுக்கு சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனர். சுற்றுலா முடிந்து திரும்பியதும், 34 மாணவிகள் கையெழுத்திட்டு, சாமுவேல் டென்னிசன் மற்றும் ரவின் ஆகிய இரு பேராசிரியர்களும் பாலியல் தொல்லை அளித்ததாக கல்லூரி முதல்வருக்கு புகார் அளித்தனர்.
இதன் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையின் முடிவில், பணிநீக்கம் செய்வது தொடர்பாக சாமுவேலுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த நோட்டீஸை ரத்து செய்யக் கோரி சாமுவேல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கு நீதிபதி வைத்தியநாதன் முன் விசாரணைக்கு வந்தபோது, விசாரணையின் போது கோரிய ஆவணங்கள், விசாரணைக்கு பின் வழங்கப்பட்டதாகவும், தன் தரப்பு வாதத்தை முன் வைக்க வாய்ப்பு வழங்காமல் இயற்கை நீதி மீறப்பட்டதாகவும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. ஆனால், அனைத்து வாய்ப்புகளும் வழங்கப்பட்டதாக கல்லூரி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதை ஏற்று, மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி வைத்தியநாதன், தற்போது கிறிஸ்தவ மிஷனரீஸ் கட்டாய மத மாற்றங்களில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன எனவும், கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களில் பெண் குழந்தைகளின் எதிர்காலத்துக்கு பாதுகாப்பு இல்லை என்ற கருத்து பெற்றோர் மத்தியில் நிலவுகிறது. நல்ல கல்வியை வழங்கினாலும் கிறிஸ்தவ கல்வி நிறுவனங்கள், நன்னெறியை போதிக்கிறதா என்றால் அது மில்லியன் டாலர் கேள்வியாகவே உள்ளது என கூறியிருந்தார்.
இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, கிறிஸ்துவ கல்லூரி சார்பாக ஆஜரான வழக்கறிஞர் , இந்த வழக்கிற்கும் நீதிபதியின் கருத்துக்கும் சம்மதமே இல்லையென தெரிவித்தார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, கிறிஸ்துவ மிஷனரிசுக்கு எதிராக தெரிவித்த கருத்துகளை உத்தரவில் இருந்து நீக்குவதாக தெரிவித்து கருத்துகளை திரும்பப் பெற்றார்.
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
விரைந்து வந்த ரயில்.. தண்டவாளத்தில் தடுக்கி நின்ற ஸ்கூட்டி.. குழந்தைகளுடன் சுமதி.. திரில் சம்பவம்!
சென்னை: சென்னை கொருக்குப்பேட்டையில் ரயில் வரும் நேரத்தில் ஸ்கூட்டியில் தண்டவாளத்தை குழந்தைகளுடன் பெண் கடக்க முயன்ற போது, வாகனம் திடீரென பழுதானது. அப்போது ரயில் வேகமாக வந்தநிலையில் அந்த பெண் உடனே ஸ்கூட்டியை விட்டுவிட்டு குழந்தைகளை தூக்கிக்கொண்டு கனநிமிடத்தில் தப்பினார். இதனால் வாகனம் மட்டும் ரயில் சிக்கி சிதறியது.
சென்னை கொருக்குப்பேட்டையை சேர்ந்தவர் சுமதி. இவர் தனது இரு குழந்தைகளையும் பள்ளியில் விடுவதற்காக தனது இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்று கொண்டிருந்தார். ஆனால் கொருக்குப்பேட்டை ரயில்வே கிராசிங்கில் ரயில் செல்வதற்காக கேட் அடைக்கப்பட்டிருந்தது. இதனால் வாகனங்கள் எல்லாம் வரிசையில் அணி வகுந்த நின்றுகொண்டிருந்தன. சுமதி மட்டுமே குழந்தைகளுளை பள்ளியில் விட வேண்டிய அவசரத்தில் ரயில்வே கேட்டை கடந்து தண்டவாளத்தில் சென்றார்.
அப்போது எதிர்பாராதவிதமாக வண்டி ஆப்பாகி தண்டவாளத்தின் நடுவே பழுதாகி நின்றுகொண்டது. . அந்த நேரத்தில் சென்னை - நெல்லூர் விரைவு ரயில் வேகமாக வந்துகொண்டிருந்தது. இதனால் அங்கிருந்த மக்கள் அபாய குரல் எழுப்பினர். வாகனத்தை இயக்க முடியாது என்பதை உணர்ந்த சுமதி. உடனே சமயோசிதமாக செயல்பட்டு தனது குழந்தைகளுடன் தண்டவாளத்தை கடந்து கனநிமிடத்தில் தப்பினார்.
ஆனால் தண்டவாளத்தில் நின்ற வாகனம் விரைவு ரயிலில் சிக்கி சின்னாபின்னமானது. வெகு தூரம் ரயிலால் இழுத்துச் செல்லபட்ட இருசக்கர வாகனத்தின் பாகங்களை எடுப்பதற்காக ரயில் நிறுத்தப்பட்டது. பின்ன இருசக்கர வாகன பாகங்களை அகற்றப்பட்ட பின்னர் ரயில் புறப்பட்டு சென்றது.
ரயில் வரும் போது தண்டாவளத்தை கடந்து செல்லக்கூடாது என்பதற்காக தடுப்புகள் போடப்படும் நிலையில் அதை வாகன ஓட்டிகள் கடந்து செல்வது மிகப்பெரிய ஆபத்தை விளைவிக்கும் என்பதை எத்தனை முறை ரயில்வே விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் மக்கள் புரிந்து கொள்ள தயாராக இல்லை என்பதையே இச்சம்பவம் காட்டுகிறது.
அதேநேரம் கொருக்குப்பேட்டை ரயில்வே கிராஸிங்கை கடந்து செல்லும் வாகன ஓட்டிகள் அலுவலக நேரத்தில் சுமார் ஒரு மணி நேரம் வரை காத்திருக்க வேண்டி நிலை உள்ளது என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதன் காரணமாகவே ஆபத்தான வகையில் தண்டவாளத்தை கடக்க வேண்டிய சூழல் தங்களுக்க ஏற்படுவதாகவும் எனவே கொருக்குப்பேட்டை ரயில்வே கிராஸிங் சுரங்க பாலம் அமைத்து தர வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
25 ஆயிரம் சம்பளத்தில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் வேலை!
மெட்ரோ ரயில்
news18
Updated: August 19, 2019, 10:57 AM IST
சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் நிறுவனத்தில் உதவியாளர் (கணக்கு), உதவியாளர் (ஆவண நிர்வாகப் பணி) ஆகிய பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தமிழக அரசு மற்றும் மத்திய அரசின் கூட்டு பங்களிப்புடன் நடத்தப்படும் போக்குவரத்து நிறுவனமாகும். முதல் கட்ட மெட்ரோ ரயில் வழித்தட பணிகள் முழுவதுமாக முடிவடைந்து, இரண்டாம் கட்ட பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன.
மெட்ரோ ரயில் நிறுவனத்தில் உதவியாளர் (கணக்கு), உதவியாளர் (ஆவண நிர்வாகப் பணி) ஆகிய பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஒப்பந்த அடிப்படையில் இந்த பணியிடங்கள் நிரப்பப்படுவதாக அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பணி: உதவியாளர் (கணக்கு) - 02
தகுதி: 60 சதவீத மதிப்பெண்களுடன் வணிகவியல் துறையில் முதுகலை பட்டம் பெற்று சம்மந்தப்பட்ட பிரிவில் 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: உதவியாளர் (ஆவண நிர்வாகப் பணி) - 01
தகுதி: ஏதாவதொரு துறையில் 60 சதவீத மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றிருக்க வேண்டும். சம்மந்தப்பட்ட பிரிவில் 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். கணினி பிரிவில் சான்றிதழ் பெற்றிருப்பது விரும்பத்தக்கது.
வயதுவரம்பு: 14.08.2019 தேதியின்படி 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.25,000 வழங்கப்படும்
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனைகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
https://chennaimetrorail.org என்ற அதிகாரப்பூர்வ இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான அனைத்து அசல் மற்றும் நகல் சான்றிதழ்களுடன் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ள வேண்டும்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: CHENNAI METRO RAIL LIMITED CMRL DEPOT, ADMIN BUILDING, POONAMALLEE HIGH ROAD, KOYAMBEDU, CHENNAI - 600 107
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 24.08.2019
மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://chennaimetrorail.org/wp-content/uploads/2015/11/Employment-Notification-No.CMRL-HR-05-2019.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும்.
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
நடு ராத்திரியில்.. ஒட்டுத் துணியின்றி பைக் ஓட்டி வந்த இளம்பெண்.. வைரலாகும் பரபர வீடியோ
By Hemavandhana
| Updated: Wednesday, August 21, 2019, 16:05 [IST]
நிர்வாணமாக.. நடு ராத்திரியில்.. பைக் ஓட்டி வந்த இளம்பெண்.. வைரலாகும் பரபர வீடியோ
பெங்களூரு: நடுராத்திரி.. இளம் பெண் ஒருவர் நிர்வாணமாக பைக் ஓட்டி செல்லும் வீடியோ ஒன்று சோஷியல் மீடியாவில் வைரலாகி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
இந்த வீடியோ நான்கைந்து நாளாக இணையத்தில் சுற்றி சுற்றி வருகிறது. ஆடைகள் எதுவும் இன்றி ஒரு இளம் பெண், நிர்வாணமாக பைக் ஓட்டுகிறார்.
இந்த இடம் கர்நாடகா மாநிலம் பெல்கா என்று கூறப்படுகிறது. ஒருசில வினாடிகள்தான் இந்த வீடியோ ஓடுகிறது. முதலில் ஒரு இளைஞர் பைக்கை ஓட்டி வருகிறார்.
பைக்கின் பின்னாடி, அந்த பெண் நிர்வாணமாக உட்கார்ந்து வருகிறார். சிறிது நேரத்தில், அந்த இளைஞர் பைக்கில் இருந்து இறங்கியதும், அந்த பெண் நிர்வாணமாகவே அந்த பைக்கை ஓட்டி செல்கிறார். நடுராத்திரி.. நடுரோட்டில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அதனால் அந்த வழியாக காரில் சென்றவர்கள் யாரோ இதை வீடியோ எடுத்து இணையத்திலும் போட்டுள்ளனர்.
இந்த இடம் கர்நாடகா மாநிலத்தில் உள்ள பெல்காவிதானா என்று உறுதியாக தெரியவில்லை. கோலாலம்பூர், மஹாராஷ்டிராவில் எடுக்கப்பட்ட வீடியோ என்று ஒருசிலர் சொல்கிறார்கள். இது சம்பந்தமாக யாருமே இதுவரை எந்த புகாரும் போலீசாருக்கு தரவில்லையாம்.
இருந்தாலும், இந்த வீடியோ சம்பந்தமாக விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது. அந்த பெண் யார், எதற்காக நிர்வாணமாக பைக்கை ஓட்டி வந்தார் என்பது குறித்தெல்லாம் சைபர் கிரைம் போலீஸ் உதவியுடன் விசாரணை நடந்து வருகிறது.
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
[color=var(--title-color)]சென்னை உயர் நீதிமன்ற நீதியரசர் செய்தது முறையா?
[color=var(--content-color)]ஜூனியர் விகடன் டீம்[/color]
[color=var(--content-color)]அரஸ்[/color]
[color=var(--title-color)]கே.சந்துரு, மேனாள் நீதிபதி, சென்னை உயர் நீதிமன்றம்[/color][/color]
[color=var(--meta-color)]Sexual-harassment[/color]
[color=var(--content-color)] சென்னை கிறிஸ்துவக் கல்லூரிப் பேராசிரியர்கள் இருவர், கல்லூரி மாணவிகள் கொடுத்த பாலியல் தொந்தரவுப் புகாரில் சிக்கி, விசாகா கமிட்டி விசாரணைக்குப் பிறகு வீட்டுக்கு அனுப்பப்பட்டிருக்கிறார்கள். இதை எதிர்த்துப் போடப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்தார், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன். அதேசமயத்தில் அந்தத் தீர்ப்பில் வழக்குக்கு எந்த வகையிலும் ஒவ்வாத கருத்துகளை அவர் பதிவு செய்துள்ளது பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
`சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிறுவனங்களில் இருபாலருக்கும் கல்வி கற்பிப்பதால், பல சிக்கல்கள் எழுந்துள்ளன. பாலியல் சீண்டல் புகார்கள் அதிகம் வருவதாகப் பெற்றோர்களிடம் கருத்து நிலவுகிறது’ என்று அவர் கூறியிருக்கிறார். இது உண்மைக்குப் புறம்பானது மட்டுமல்ல... எந்தவித ஆதாரமும் இல்லாத, பொத்தாம்பொதுவான கூற்று. இப்படியெல்லாம் கூறுவதற்கு நீதிபதிகளுக்கு எந்தவித அதிகாரமும் இல்லாததுடன், சட்டவரையறைக்குப் புறம்பான செயலுமாகும்.
182 வருடங்களாகச் செயல்பட்டுவரும் சிறப்பான ஒரு கல்லூரியைப் பற்றியும் அதை நடத்திவரும் மத சிறுபான்மையினரைப் பற்றியும் கூறுவதற்கு நீதிபதிக்கு எப்படி மனம் வந்தது? இந்தியாவில் தலைசிறந்த அறிவுஜீவிகளையும், அதிகாரிகளையும், அரசியல்வாதிகளையும், நீதிபதிகளையும் வெளிக்கொண்டுவந்த கல்வி நிறுவனம் அது. எல்லா கல்லூரிகளும் சென்னை நகரத்துக் குள் தொடங்கப்பட்டபோது, அன்றைய செங்கல்பட்டு மாவட்டத்தில் அந்தக் கல்லூரி துணிச்சலாகத் தொடங்கப்பட்டது. தவிர, முதன்முறையாக இருபாலர் கல்வி நிறுவனமாக அது தொடங்கப்பட்டதுதான் அதன் சிறப்பே. தமிழகத்திலேயே எங்கும் இல்லாத அளவுக்கு 275 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள அந்தக் கல்லூரியில், 8,500 மாணவர்கள் படிக்கிறார்கள்; 300 ஆசிரியர்கள் பணிபுரிகிறார்கள்.
குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணன், தேர்தல் கமிஷனர் டி.என்.சேஷன், மேற்குவங்க ஆளுநர் கோபால் கிருஷ்ண காந்தி, ஐ.ஏ.எஸ் அதிகாரிகளான சாந்தா ஷீலா நாயர், கிறிஸ்துதாஸ் காந்தி, இந்திய காவல் துறைப் பணியைச் சேர்ந்த வி.ஆர்.லட்சுமி நாராயணன் முதல் விஜயகுமார் ஐ.பி.எஸ் வரை படித்த கல்லூரி அது. மேலும், பரிதிமாற்கலை ஞரில் தொடங்கி இன்றைய தமிழ் எழுத்தாளர் அம்பை (சி.எஸ்.லஷ்மி) வரை பயின்ற நிறுவனம் அது. இதுமட்டுமின்றி, உச்ச நீதிமன்ற நீதிபதி சந்தோஷ் ஹெக்டே மற்றும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளான ஏ.கே.ராஜன், கே.சந்துரு, பி.டி.தினகரன், சுதந்திரம், எம்.ஜெயச்சந்திரன், ரவிச்சந்திரபாபு, பார்த்திபன், சி.வி.கார்த்திகேயன் முதலானவர்களை அந்தக் கல்லூரி வளர்த்து வழங்கியுள்ளது. இவையெல்லாம் நீதிபதி வைத்தியநாதனுக்குத் தெரியுமா?
1970-களில் நான் சென்னை கல்லூரி ஒன்றிலிருந்து இரண்டாவது வருடப் பட்டப்படிப்பில் வெளியேற்றப்பட்டபோது, சென்னை கிறிஸ்துவக் கல்லூரிதான் எனக்கு புகலிடம் வழங்கி, பட்டதாரி ஆக்கியது. அப்போது கல்லூரி மாணவிகள் விடுதி, கல்லூரி வளாகத்தில் இல்லாமல் கிண்டி ரயில் நிலையத்துக்கு அருகில் (தற்போது தென்சென்னை கோட்டாட்சியர் அலுவலகம் உள்ள இடத்தில்) இயங்கி வந்தது. இது, பெற்றோர்களை திருப்திப்படுத்துவதற்காகச் செய்யப்பட்ட ஏற்பாடு. ஏனென்றால், 275 ஏக்கர் பரப்பளவு உள்ள வளாகத்தில் அவர்களுக்குத் தனி விடுதி அமைப்பது ஒன்றும் சிரமமானதல்ல. அந்தச் சமயத்தில் மாணவர்களாகிய நாங்கள் மாணவிகளின் நலனைக் கருதி அவர்களுக்கும் கல்லூரி வளாகத்துக்குள்ளேயே விடுதி அமைக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்ததன் காரணமாக, இன்றைக்கு மாணவிகள் விடுதியும் தாம்பரம் வளாகத்திலேயே செயல்பட்டு வருகிறது.[/color]
[color=var(--content-color)]
[/color]
[color=var(--content-color)] உலகத்தின் தலைசிறந்த கல்வியாளர்கள், ‘இருபாலர் பயிற்சிப் பள்ளிகள்தான் சிறப்பான கல்வியைக் கற்பிக்க முடியும்’ என்று கூறியுள்ளனர். ஏனென்றால், பாடப்புத்தகங்களுக்கு அப்பாற்பட்டு மாற்றுப் பாலினத்தைச் சேர்ந்தவர்களும் புரிந்துகொள்வதற்கு, அப்படிப்பட்ட நிறுவனங்கள்தான் உதவி செய்ய முடியும். நான் அந்தக் கல்லூரியில் படிக்கும்போது எங்களுடைய அரசியல் நடவடிக்கைக்கு எந்தவிதமான தடையும் இருந்ததில்லை. அந்தக் காலத்தில் மாணவிகளை பாலியல் சீண்டலுக்கு உட்படுத்தியதாக எந்தப் புகாரும் வந்ததில்லை. கல்லூரி மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் நல்ல ஓர் உறவு இருந்த கல்லூரி ஒன்று உண்டென்றால், அது தாம்பரம் கிறிஸ்துவக் கல்லூரியாக மட்டுமே இருக்கும்.[/color]
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
Quote:கடந்த இரண்டு நூற்றாண்டுகளாக, கிறிஸ்துவ நிறுவனங்கள் தரமான பல கல்வியை சேவை மனப்பான்மையுடன் அளித்து வருகின்றன. இந்த வரலாற்றைச் சீர்குலைக்கும்விதமாக உயர் நீதிமன்றம் கருத்து கூறியுள்ளது தவறு.
[color=var(--content-color)] தமிழ்நாட்டைத் தவிர்த்து இதர மாநில மாணவர்கள் மட்டுமின்றி வெளிநாட்டு மாணவர்களும் விருப்பத்துடன் படித்த இடம் அது. பன்முகத்தன்மையுடன் விளங்கிய அந்தக் கல்லூரியில் சமய பூசல்களோ, சாதிச் சண்டைகளோ வந்ததில்லை. நான் படித்த சமயத்தில், கல்லூரிக்கு வெளியே நடைபெற்ற பல சமூகப் பிரச்னைகளில் பங்குபெறும் வாய்ப்பு கிடைத்தது. அதேபோல் கல்லூரியில் பல அரசியல் தலைவர்கள் நேரில் வந்து உரையாற்று வதற்கான இடமாகவும் இருந்தது. ஏ.கே.கோபாலன், ஈ.எம்.எஸ்.நம்பூதிரி பாட், பி.சுந்தரய்யா போன்ற இடதுசாரித் தலைவர்களும் கல்லூரியில் உரையாற்றியுள்ளனர். இந்திய மாணவர் சங்கத்துக்கு அங்கு கணிசமான செல்வாக்கு இருந்தபோது, கல்லூரி மாணவர் பேரவைத் தலைவர்களாகப் பலர் தொடர்ந்து தேர்ந்தெடுக்கப் பட்டனர். அங்கு படித்த தோழர் பிரகாஷ் காரத் பிறகு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப் பட்டது, வரலாறு.
இப்படிப்பட்ட பாரம்பர்யம் மிகுந்த ஒரு கல்லூரியில், கடந்த 182 ஆண்டுகளில் பல சம்பவங்கள் நடைபெற்றிருக்கலாம். அதில் நல்லதும் இருக்கலாம்... கெட்டதும் இருக்கலாம். அதற்காக நிறுவனத்தையும், அதை நடத்திவரும் சிறுபான்மைச் சமூகத்தினரையும் பொத்தாம் பொதுவாகத் தூற்றுவது எப்படி நியாயமாகும்? அவர் முன்னால் வந்த வழக்கில், மாணவிகளின் புகார் விசாரிக்கப்பட்டு அதன்படி கல்லூரி நிர்வாகம் அந்தப் பேராசிரியரை பணியிலிருந்து நீக்கியது சட்டப்படிச் செல்லும் என்று கூறிய நீதியரசர், அத்துடன் கோப்பை முடிக்காமல் தன்னுடைய சொந்தக் கருத்தை உலக உண்மை யாகப் பதிந்துள்ளது தவறான செயலாகும்.
மீரட் வளர்ச்சிக் குழும வழக்கில் உச்ச நீதிமன்றம், ‘நீதிபதிகள் தங்கள் முன்னால் வரக்கூடிய வழக்குகளில் கூறப்பட்ட பொருண்மைகளின் அடிப்படையில் மட்டுமே தீர்ப்பு கூற வேண்டுமே தவிர, தங்களுடைய சொந்தக் கருத்துகளைப் பதிவு செய்யக் கூடாது’ என்று கூறிய பிறகும், இப்படி பலர் செயல்பட்டுவருவது வருந்தத்தக்கது. சிறுபான்மையினர் மட்டுமின்றி, இதர சமயத்தைச் சேர்ந்தவர்களும் இருபாலர் பயிற்சிப் பள்ளிகளை நடத்திவருகின்றனர். இன்றைக்கு தமிழ்நாட்டில் உள்ள 672 பொறியியல் கல்லூரிகள், இருபாலரும் சேர்ந்து பயிலும் கல்லூரிகளாகத்தான் நடைபெற்றுவருகின்றன.[/color]
[color=var(--content-color)] கல்லூரி மட்டுமின்றி மேனிலைப் பள்ளிகளிலும் இருபாலர் பயிலக்கூடிய பல பள்ளிகள் தமிழகத்தில் உண்டு. என்றைக்கு இருபாலருக்கும் பொதுவான நிறுவனம் செயல்படுகிறதோ அந்த நிறுவனத்தில் பாலியல் பிரச்னைகள் உருவாவது உண்டு. அப்படிப்பட்ட உளவியல் பிரச்னை களைத் தீர்ப்பதற்காகத்தான் பள்ளியிலிருந்தே பாலியல் கல்வியைச் சொல்லிக்கொடுக்க வேண்டும் என்கிறார்கள் கல்வி அறிஞர்கள். நிலைமை அப்படி இருக்கும்போது, பெற்றோர்களிடமிருந்து புகார் வருவதாகத் தனது தீர்ப்பில் நீதியரசர் பதிவிட்டு, அப்படிப் பட்ட பாலியல் புகார்கள் சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிறுவனங்களில் அதிகமாக நடைபெறுவதாகக் கூறுவதற்கு, அவர் எந்தவித ஆதாரத்தையும் சுட்டிக்காட்ட வில்லை.
இந்தியா போன்ற மதசார்பற்ற ஒரு குடியரசுக்காக உருவாக்கப் பட்ட அரசமைப்புச் சட்டத்தில், மொழி மற்றும் சமயம் சார்ந்த சிறுபான்மையினர் தங்கள் விருப்பத்துக்கேற்ப கல்வி நிறுவனங்களை ஏற்படுத்திக் கொள்ளலாம் என்று அடிப்படை உரிமையாக 30-வது பிரிவில் கூறப்பட்டுள்ளது. அதன்படி கடந்த இரண்டு நூற்றாண்டு களாக, கிறிஸ்துவ நிறுவனங்கள் தரமான பல கல்வியை சேவை மனப்பான்மையுடன் அளித்து வருகின்றன. இந்த வரலாற்றைச் சீர்குலைக்கும்விதமாக உயர் நீதிமன்றம் கருத்து கூறியுள்ளது தவறு. எனவே, நீதியரசர் வைத்தியநாதன் அவர்களை, டென்னிசன் என்கிற பேராசிரியர் தொடர்ந்த வழக்கைத் தள்ளுபடி செய்த அதே நேரத்தில், தனது தீர்ப்புக்கு ஒவ்வாத கருத்தைப் பதிவு செய்துள்ளதை மறுபரிசீலனை செய்து, தீர்ப்பிலிருந்து அதை நீக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இதற்காக அவர் யாரிடமிருந்தும் மனுவை எதிர்பார்க்கத் தேவையில்லை. ஏனென்றால், கனம் நீதிபதி அவர்கள் பல வழக்குகளில் தானே முன்வந்து வழக்கைப் பதிவுசெய்து தீர்ப்பளித்துள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே. நீதியரசர் செய்வாரா[/color]
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
முதலிரவு பற்றி பெண்கள் பள்ளியில் கிளுகிளுப்பாக பேசிய திமுக. எம்.எல்.ஏ... மதுராந்தகத்தில் பரபரப்பு!!
மதுராந்தகம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இலவச மடிக்கணினி வழங்கும் விழாவில் பங்கேற்ற திமுக. எம்.எல்.ஏ. புகழேந்தி முதலிரவு குறித்து பேசியது மாணவிகளையும், ஆசிரியர்களையும் அங்கு கூடியிருந்த ஊர் மக்களையும் முகம் சுளிக்க வைத்தது.
காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கல்வித்துறை சார்பில் லேப்டாப் வழங்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது. அதில் பங்கேற்று வழங்கிய புகழேந்தி எம்.எல்.ஏ பேசியது அனைவரையும் வெறுப்பில் ஆழ்த்தியது.
அப்போது பேசிய அவர்; மதுராந்தகம் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு வெற்றி பெற்ற பின் அதற்கான சான்றிதழ் பெற்ற இடம் இந்த பள்ளிக்கூடம் தான்.ஒரு பெண்ணை பொறுத்தவரை ஆயிரம் இரவுகளை சந்தித்தாலும் வாழ்வின் கடைசி காலத்திலும் அவர் நினைத்து நினைத்து பார்ப்பது முதலிரவு என்று சொல்வார்கள். என்னை பொறுத்தவரை ஆயிரம் நிகழ்வுகளில் நாம் சந்தித்தாலும் சட்டசபை உறுப்பினர் அங்கீகாரம் இப்பள்ளியில் இருந்து வழங்கப்பட்டது என்னால் மறக்க முடியாது என்று பேசினார். பள்ளியில் அதுவும் பெண்கள் மேல்நிலை பள்ளியில் முதலிரவு குறித்து பேசியது ஆசிரியர்கள், மாணவிகள், பொதுமக்கள் என அனைவரையும் ஆழ்த்தியது.
எம்.எல்.ஏ.வின் இந்த பேச்சுக்கு ஆட்சேபனை தெரிவித்த காஞ்சிபுரம் முன்னாள் எம்.பி. மரகதம் ''பள்ளி சம்பந்தமாக மட்டும் பேசுங்கள்'' என்றார். இதனால் எம்.எல்.ஏ.வுக்கும் முன்னாள் எம்.பி.க்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம்: ப.சிதம்பரத்தை கைது செய்ய எவ்வாறு வழிவகுத்தது?
புதுடெல்லி,
தொழில் அதிபர் பீட்டர் முகர்ஜிக்கும், அவரது மனைவி இந்திராணிக்கும் சொந்தமான நிறுவனம் ஐ.என்.எக்ஸ். மீடியா. இந்த நிறுவனத்துக்கு 2007–ம் ஆண்டு மொரிஷியசில் உள்ள வெவ்வேறு 3 கம்பெனிகள் மூலம் சுமார் ரூ.300 கோடிக்கும் அதிகமான அன்னிய முதலீடு வந்துள்ளது. இந்த தொகை ஐ.என்.எக்ஸ். மீடியாவுக்கு அனுமதிக்கப்பட்ட முதலீட்டை விட அதிகமாகும்.
இதைத்தொடர்ந்து 2008–ம் ஆண்டு ஜனவரி மாதம் இந்த விவகாரத்தை தேசிய புலனாய்வு துறையும், வருமான வரித்துறையும் மத்திய அரசின் கவனத்துக்கு எடுத்துச் சென்றன. இதனை வருமான வரித்துறை, அமலாக்கத்துறைக்கு அனுப்பியது. அதன்பிறகு அன்னிய செலாவணி மேலாண்மை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்தது.
ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் தொடர்புள்ள ஒரு நிறுவனத்தில் அமலாக்கத்துறை ஆய்வு செய்தபோது ஐ.என்.எக்ஸ். மீடியாவுக்கும், கார்த்தி சிதம்பரத்துக்கும் இடையே தொடர்புடைய ஆவணங்கள் சிக்கின.
பண பரிமாற்றம், அதுமட்டும் அல்லாமல் அன்னிய முதலீட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட காலத்தில் ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்தில் இருந்து கார்த்தி சிதம்பரத்தின் கணக்கிற்கு பணம் கை மாறியுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டது.
அதன்பிறகு 2017–ம் ஆண்டு மே மாதம் 15–ந்தேதி முறையற்ற அன்னிய முதலீடு ஒப்புதல் என்றும், 2018–ம் ஆண்டு சட்டவிரோத பண பரிவர்த்தனை செய்ததாகவும் கார்த்தி சிதம்பரம் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது.
மேலும் ப.சிதம்பரம் மத்திய நிதி மந்திரியாக இருக்கும் போது ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்துக்கு தகுந்த தகுதிகள் இல்லாத பட்சத்தில் முறையற்ற வகையில் அன்னிய முதலீடு பெற கார்த்தி சிதம்பரம் மூலம் உதவி பெற்றதாக ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவன அதிகாரிகள் பீட்டர் முகர்ஜி, இந்திராணி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
ப.சிதம்பரம் நிதிமந்திரியாக இருந்த போது இந்த சட்டவிரோத பண பரிவர்த்தனை நடந்ததால் இந்த வழக்கில் ப.சிதம்பரமும் சேர்க்கப்பட்டார்.
2018–ம் ஆண்டு மார்ச் மாதம் இந்திராணி முகர்ஜியிடம், சி.பி.ஐ.விசாரணை நடத்திய போது ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்துக்கு முதலீடு பெறுவதற்காக தங்களுக்கும், கார்த்தி சிதம்பரத்துக்கும் இடையில் ரூ.7 கோடியே 16 லட்சம் டீல் இருந்தது என கூறியுள்ளார். இதுதொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் 2018–ம் ஆண்டு கார்த்தி சிதம்பரத்தை கைதும் செய்தனர்.
கடந்த ஜூலை மாதம் நடந்த விசாரணையின் போது குற்றச்சாட்டுக்களை இந்திராணி முகர்ஜி முழுமையா ஒப்புக்கொண்டார். இதையடுத்து கார்த்தி சிதம்பரத்தின் ரூ.54 கோடி மதிப்புள்ள சொத்துக்களையும், பீட்டர் முகர்ஜி, இந்திராணி ஆகியோரின் மொத்த சொத்துக்களையும் அமலாக்கத்துறை கையகப்படுத்தியது. இந்தவழக்கு தொடர்பாக கடந்த ஆண்டு டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் ப.சிதம்பரத்திடம் 2 முறை விசாரணை நடத்தப்பட்டது. இந்த வழக்கில் தற்போது ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் இந்திராணி முகர்ஜி அப்ரூவராக மாறியுள்ளார்.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் அப்ரூவராக மாறிய இந்திராணி முகர்ஜி, 2018 ம் ஆண்டு பிப்ரவரி 17 ம் தேதி சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையிடம் வாக்குமூலம் அளித்தார்.
அதில், "நானும், எனது கணவர் பீட்டர் முகர்ஜியும் 2006 ம் ஆண்டு, அப்போதைய மத்திய நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரத்தை அவரது அலுவலகத்தில் சென்று சந்தித்தோம். அப்போது அவர், தனது மகன் கார்த்தி சிதம்பரத்தை சந்திக்கும்படியும், கார்த்தி சிதம்பரத்தின் தொழிலுக்கு உதவும்படியும் கேட்டுக் கொண்டார். டில்லி ஹயத் ஓட்டலில் கார்த்தி சிதம்பரத்தை சந்தித்தோம். அவர் எங்களிடம் 1 மில்லியன் டாலர் லஞ்சமாக கேட்டார்" என கூறினார்.
இந்திரா முகர்ஜியின் இந்த வாக்குமூலம் தான் ப.சிதம்பரத்திற்கு எதிராக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை முன்வைக்கும் முக்கிய ஆதாரமாக உள்ளது.
இந்திரா முகர்ஜி மற்றும் கார்த்தி சிதம்பரத்தின் திட்டப்படி, கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான ஏஎஸ்சிபிஎல் நிறுவனத்திற்கு ஆதரவாக 700,000 டாலர் (ரூ.3.10 கோடி) மதிப்பிலான 4 இன்வாய்ஸ்களை தயாரித்துள்ளனர். இதன் மூலம் ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்திற்கு முறைகேடாக வெளிநாட்டு அந்நிய முதலீடு பெறப்பட்டுள்ளது. இதன் மூலம் ஐஎன்எக்ஸ் மீடியாவின் பங்குகள் 46 சதவீதமாக உயர்ந்தது. ரூ.4.62 கோடிக்கு பதிலாக சட்ட விரோதமாக ரூ.305 கோடி பிரீமியமாக பெறப்பட்டுள்ளதாகவும் இந்திராணி முகர்ஜி கூறி இருந்தார்.
இந்திராணி முகர்ஜியின் இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் தான் 2018ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்டார். கடந்த ஆண்டு ப.சிதம்பரத்திடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது, நிதியமைச்சக ஆவணங்கள் மற்றும் இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே ப.சிதம்பரம் பதிலளித்தார். சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையின் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பு அளிக்கவில்லை என மூத்த அதிகாரிகள் கூறி உள்ளனர்.
ஆனால் இன்று பேட்டி அளித்த கார்த்தி சிதம்பரம், என் வாழ்நாளில் இந்திராணி முகர்ஜி, பீட்டர் முகர்ஜியை பார்த்ததில்லை. நேரடியாகவோ, மறைமுகமாகவோ அவர்களின் நிறுவனத்துடன் நான் தொடர்பு வைத்திருந்ததில்லை. என்னை விசாரணைக்கு சிபிஐ அழைத்துச் சென்ற போதுதான் இந்திராணி முகர்ஜியை பார்த்தேன். மற்றபடி அவர்களுக்கும் எனக்கு எவ்வித தொடர்பும் இல்லை” என்று கூறி உள்ளார்.
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
மகளுடன், கணவருக்கு பாலியல் தொடர்பு: பொய் புகார் கொடுத்த மனைவி மீது கடும் நடவடிக்கை - ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
சென்னை,
சென்னையை சேர்ந்தவர்கள் பாபு-கலா. (இருவரது பெயரும் மாற்றப்பட்டுள்ளது). கணவன், மனைவியான இவர்களுக்கு, கடந்த 2003-ம் ஆண்டு திருமணம் நடந்தது. 11 மற்றும் ஒன்றரை வயதில், இரு பெண் குழந்தைகள் உள்ளனர். கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்கின்றனர். இரு மகள்களுடன், பாபு தனியாக வசித்து வந்தார்.
இந்த நிலையில், சென்னை கீழ்ப்பாக்கம் போலீசில் கலா ஒரு பகீர் புகாரை கொடுத்தார். அதில், ‘11 வயது மகளுடன், என் கணவர் பாலியல் தொடர்பு வைத்துள்ளார். இதை பார்த்த நான், கணவரை கடுமையாக கண்டித்தேன். ஒரு கட்டத்தில் என் மகள் கர்ப்பம் அடைந்தாள். அந்த கருவை மருந்து கொடுத்து கலைத்து விட்டேன். என் கணவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் பாபு மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இரு மகள்களையும் அரசு காப்பகத்தில் அடைத்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில் பாபு மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை நீதிபதி என்.ஆனந்த்வெங்கடேஷ் விசாரித்தார். பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-
இது ஒரு துரதிருஷ்டவசமான வழக்கு. கணவரை பழிவாங்க, பெற்ற மகளை கற்பழித்தார் என்ற பயங்கரமான குற்றச்சாட்டை கணவர் மீது மனைவி சுமத்தியுள்ளார். ஏற்கனவே, இந்த வழக்கில் பாபு முன்ஜாமீன் பெற்றுள்ளார். முன்ஜாமீன் மனு மீதான விசாரணையின்போது, அவரது மகள் ஐகோர்ட்டில் ஆஜராகி, தன் தாயார் பொய்யான புகாரை கொடுத்துள்ளார் என்று கூறியுள்ளார். அதனால், பாபுவுக்கு முன்ஜாமீன் கிடைத்தது.
அதனால், மனுதாரரின் 11 வயது மகள், எழும்பூர் கூடுதல் குடும்பநல நீதிமன்ற நீதிபதியிடம் அளித்து வாக்குமூலத்தை வாங்கி படித்து பார்த்தேன். அதில், அந்த சிறுமி முழு கதையையும் சொல்லியுள்ளார். தானும், தன் தங்கையும் தந்தையுடன் வசிப்பதாகவும், தங்களை தந்தையிடம் இருந்து பிரித்து, தன்னுடன் அழைத்து செல்வதற்காக இப்படி ஒரு பொய் புகாரை தாயார் கொடுத்துள்ளதாகவும், தானும், தன் தங்கையும் தந்தையுடன் வாழவே விரும்புவதாக தெளிவாகவும் அவள் கூறியுள்ளார்.
ஆனாலும், இந்த வாக்குமூலத்தின் மீது நம்பிக்கை இல்லாமல், அந்த சிறுமியை நேரில் அழைத்து விசாரித்தேன். எழும்பூர் நீதிபதியிடம் வாக்குமூலத்தில் என்ன கூறினாரோ, அதைதான் என்னிடமும் கூறினார்.
இந்த வழக்கு என்னுடைய (நீதிபதியுடைய) மனசாட்சியையே உலுக்கிவிட்டது. மகள்களை தன்னுடன் அழைத்து செல்வதற்காக, பெற்ற மகளுடன், கணவர் பாலியல் உறவு வைத்துள்ளார் என்று புகார் செய்யும் அளவுக்கு ஒரு தாய் செல்வாரா? என்று நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை.
ஆனால், ‘குடும்பநல கோர்ட்டுகளில் கணவரை பழிவாங்க இதுபோன்ற கீழ்த்தரமான புகார்கள் கொடுக்கப்படுகின்றன என்று என் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது. அப்போதெல்லாம் இதை நம்பவில்லை. ஆனால், அவையெல்லாம் உண்மை என்பதற்கு இந்த வழக்கு ஒரு உதாரணமாக அமைந்துவிட்டது. போக்சோ சட்டத்தை எந்த அளவுக்கு சிலர் தவறாக பயன்படுத்துகின்றனர்? என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.
எனவே, மனுதாரர் பாபு மீதான இந்த போக்சோ வழக்கு ஒரு நொடி பொழுது கூட தொடரக்கூடாது. தன்னுடைய மகளின் எதிர்காலம் குறித்து சிறிது கூட கவலைப்படாமல், தன் கணவருக்கு எதிராக மனைவி ஒரு கேவலமான புகாரை கொடுத்துள்ளார். இது ஒரு மோசமான நடவடிக்கை. இது தொடர்வதை அனுமதிக்க முடியாது.
இப்படி ஒரு பொய் புகாரை கொடுத்த கலா, அதற்குரிய பின்விளைவுகளை சந்திக்கவேண்டும். பொய் புகார் கொடுத்த கலா மீது போக்சோ சட்டப்பிரிவு 22-ன் கீழ் வழக்குப்பதிவு செய்து, சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
அவர் மீது எடுக்கப்படும் இந்த நடவடிக்கை, போக்சோ சட்டத்தை தவறாக பயன்படுத்துவோருக்கு ஒரு பாடமாக அமையவேண்டும். எனவே, மனுதாரர் பாபுவுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட போக்சோ சட்டத்தை ரத்து செய்கிறேன். கலா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய கீழ்ப்பாக்கம் போலீசாருக்கு உத்தரவிடுகிறேன். இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
8 வழிச்சாலை திட்டமே குழப்பமாக உள்ளது - உச்சநீதிமன்றம்
சேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்டமே குழப்பமாக உள்ளது என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்துதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் பல்வேறு தரப்பினர் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்ட நிலையில், மத்திய அரசு தொடுத்துள்ள இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் பல்வேறு கருத்துக்களை முன்வைத்துள்ளது.
குறிப்பாக நிலம் கையகப்படுத்தும் நடைமுறைகள் என்னென்ன? விரிவான திட்டம் தீட்டப்பட்டதா? சுற்றுச்சூழல் அனுமதி பெறப்பட்டதா? அனுமதி பெறாமல் எப்படி நிலத்தை கையகப்படுத்தும் செயலில் ஈடுபடுகிறீர்கள், சுற்று சூழல் அனுமதி பெற எவ்வளவு காலம் ஆகும். அவசியமான திட்டம் என்கிறீர்கள், ஆனால் சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதில் தாமதம் ஆகும் என்கிறீர்கள். இதை நாங்கள் குழப்பமாகவே பார்க்க வேண்டியுள்ளது. என நீதிபதிகள் கருத்துகளை தெரிவித்தனர். மேலும் செப்டம்பர் 4 ஆம் தேதிக்குள் விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
ப சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனு தள்ளுபடியாகிறதா? உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை
டெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் ப சிதம்பரம் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.
ஐஎக்எக்ஸ் மீடியா வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப சிதம்பரத்திற்கு முன்ஜாமீன் வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் கடந்த செவ்வாய்கிழமை மறுத்தது.
இதையடுத்து கடந்த புதன்கிழமை (ஆக 21) ப சிதம்பரம் சார்பில் அவரது வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர். ஆனால் அந்த மனுவை உடனடியாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. தலைமை நீதிபதி அமர்வில் முறையிட்ட நிலையில் வழக்கு இன்று விசாரணைக்கு வரும் என பட்டியலிடப்பட்டது.
உச்ச நீதிமன்றம் நீதிபதிகள் பானுமதி மற்றும் ஏ எஸ் போபண்ணா ஆகியோரது அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வருகிறது. இனிடையே புதன்கிழமை இரவு சிபிஐ அதிகாரிகளால் ப சிதம்பரம் ஏற்கனவே கைது செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து டெல்லி சிபிஐ நீதிமன்ற சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதித்த தகலை சிபிஐ உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கும்.
எனவே ப சிதம்பரம் ஏற்கனவே கைதாகிவிட்டதால் அவரது முன்ஜாமீன் மனு தள்ளுபடியாகவே வாய்ப்பு உள்ளது என கூறப்படுகிறது.
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
காஷ்மீரில் பெரும்பாலான இடங்களில் கட்டுப்பாடுகள் தளர்வு
ஸ்ரீநகர்,
ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டுவந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்ததையடுத்து பாதுகாப்பு காரணங்களுக்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, படிப்படியாக அங்கு இயல்பு நிலை திரும்பி வருகிறது. காஷ்மீரில் 18-வது நாளாக செல்போன் இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளன.
காஷ்மீரில் போக்குவரத்தும் அதிகரித்துள்ளது. எனினும், சந்தைப்பகுதிகள் இன்னும் திறக்கப்படவில்லை. தற்போது வரை காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் அமைதி நீடிப்பதாகவும் எந்த விரும்பத்தகாத சம்பவங்களும் நடைபெற வில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
பொதுப்போக்குவரத்து இயங்கவில்லை. எனினும், வாடகை கார்கள் அதிக அளவில் இயங்குவதை காண முடிகிறது. ஆட்டோ ரிக்ஷாக்களும் எப்போதும் பரப்பரப்பாக இயங்குகின்றன. பள்ளிகளில் ஆசிரியர்கள் வருகை இயல்பான அளவில் இருப்பதை காண முடிகிறது.
ஆனால், மாணவர்கள் வருகை குறைவாகவே காணப்பட்டது. அரசு அலுவலங்களிலும் ஊழியர்கள் வருகை எப்போதும் போல் காணப்பட்டது. ஸ்ரீநகர் உள்பட காஷ்மீரில் பெரும்பாலன இடங்களில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
கல்யாணத்திற்கு இன்னும் 8 நாள்தான்.. உற்சாகத்தில் இருந்த ஜான்சி ராணி.. காவு வாங்கிய செல்போன்
செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடந்த இளம் பெண் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு- வீடியோ
திண்டிவனம்: செல்போன் பேசிக் கொண்டே தண்டவாளத்தை கடக்க முயன்றார் ஜான்சிராணி. ஆனால் அடுத்த செகண்டே உடல் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தார்.
திண்டிவனம் அருகே சின்ன நெற்குணம் பகுதியை சேர்ந்தவர் ஜான்சிராணி. ஒரு எக்ஸ்போர்ட் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.
வர்ற 1-ம் தேதி ஜான்சிராணிக்கு கல்யாணம். இதற்கான ஏற்பாடுகளை குடும்பத்தினர் மிக தீவிரமாக செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் இன்று வழக்கம்போல் வேலைக்கு கிளம்பினார் இவர். கம்பெனிக்கு செல்லும் வழியில், சென்னை - திருச்சி ரயில்வே டிராக் உள்ளது. இதை கடந்துதான் கம்பெனிக்கு போக முடியும். இன்று ரயில்வே டிராக்கை கடக்க முயன்றபோது, செல்போன் பேசிக் கொண்டே கடந்துள்ளார்.
அந்த நேரம் பார்த்து திருச்செந்தூரிலிருந்து சென்னை நோக்கி வந்த எக்ஸ்பிரஸ் ரயில் ஜான்சிராணி மீது படாரென மோதியது. ரயில் மோதிய வேகத்தில் ஜான்சிராணி தூக்கி வீசப்பட்டு, அங்கேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இளம்பெண் உயிரிழந்த தகவல் கேள்விப்பட்டு பலர் ரயில்வே ஸ்டேஷன் முன்பு குவிய ஆரம்பித்தனர். கல்யாணத்துக்கு இன்னும் 8 நாளே உள்ள நிலையில், இப்படி அநியாயமாக உயிர் பறி போய்விட்டதே என்று குடும்பத்தார் கதறி அழுதது நெஞ்சை உருக்குவதாக இருந்தது. இந்த சம்பவம் குறித்து செங்கல்பட்டு இருப்புப் பாதை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
•
|