Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
ஒரு கிராமத்தின் வரைபடமே மொத்தமாக மாறியது.. கேரளாவில் நிலச்சரிவால் உருக்குலைந்த ஏழைகளின் ஊட்டி!

திருவனந்தபுரம்: கேரளாவில் பெய்த கனமழை காரணமாக வயநாட்டில் ஒரு கிராமத்தின் வரைபடம் அழிந்துள்ளது.
கேரளாவில் கடந்த ஒருவாரமாக பெய்து வரும் கனமழை காரணமாக பல மாவட்டங்கள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கேரளாவில் வயநாடு, இடுக்கி, கோழிக்கோடு, மலப்புரம் மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் தொடர் மழை போக போக அதிகரிக்கும் என்று வானிலை மையம் கூறியுள்ளது. 4 நாட்களில் கேரளாவில் 80 நிலச்சரிவுகள் ஏற்பட்டு உள்ளது.
அதிகம் என்ன
இந்த மழையால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதி என்றால் அது வயநாட்டில் மேப்படி என்ற பகுதியில் உள்ள புதுமலை என்ற கிராமம்தான். கேரளாவில் மழை காரணமாக அதிகமாக நிலச்சரிவு ஏற்பட்டது புதுமலை பகுதியில்தான் என்பது குறிப்பிடத்தக்கது. அங்கு கடந்த நாட்களில் மட்டும் 15க்கும் அதிகமாக மழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.


[Image: kerala-flood322323-1565491187.jpg]
 
[color][size][font]
புதுமலை எப்படி
அது மட்டுமில்லாமல் மழை காரணமாக, புதுமலை பகுதியில் 1000க்கும் அதிகமான வீடுகள் இருந்த இடமே தெரியாமல் போய் இருக்கிறது. மொத்தமாக ஒரு குட்டி மழை நிலச்சரிவில் காணாமல் போய் உள்ளதும் குறிப்பிடத்தக்கது. புதுமலை நிறைய டீ எஸ்டேட் கொண்டது. எல்லா டீ எஸ்டேட்டும் மொத்தமாக மழையால் சரிந்துள்ளது.
[/font][/size][/color]

[Image: kerala-flood232323-1565491180.jpg]
 
[color][size][font]
ஏழைகளின் ஊட்டி
பொதுவாக புதுமலையை ஏழைகளின் ஊட்டி என்று அழைப்பது வழக்கம். அந்த அளவிற்கு அழகு கொஞ்சும் இந்த பகுதியில் 1 லட்சத்திற்கும் அதிகமான மரங்கள் கடந்த சில நாட்களில் மட்டும் விழுந்து இருக்கிறது. சில இடங்களில் இயல்பு நிலை திரும்ப பல வருடங்கள் கூட ஆகும் என்கிறார்கள்.[/font][/size][/color]

[Image: kerala-flood23232333-1565491172.jpg]
 
[color][size][font]

வரைபடம் என்ன
பல வீடுகள் இடிந்தது, எஸ்டேட்கள் சரிந்து மறைந்தது, ஒரு மலையே காணாமல் போனது என்று வரிசையாக நடந்த நிகழ்வுகளால், புதுமலையின் வரைபடம் மொத்தமாக மாறி இருப்பதாக வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மழை காரணமாக புதுமலை நிறைய மாற்றங்களை சந்தித்து உள்ளது என்று வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளன[/font][/size][/color]
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
காங்கிரஸ் இடைக்கால தலைவராக சோனியா காந்தி தேர்வு.. கட்சியை காப்பாற்ற மீண்டும் தீவிர அரசியலுக்கு வருகை

டெல்லி: காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தியை அக்கட்சி செயற்குழு இன்று தேர்வு செய்துள்ளது.
லோக்சபா தேர்தலில் அடைந்த படு தோல்வியைத் தொடர்ந்து, தார்மீக பொறுப்பேற்று, காங்கிரஸ், கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார் ராகுல் காந்தி.


[Image: soniagandhi-1565459362.jpg]
முன்னணி தலைவர்கள் பலர் வற்புறுத்தியும் கூட, ராகுல் காந்தி தனது முடிவில் பிடிவாதமாக உள்ளார் எனவே கடந்த இரு மாதங்களாக காங்கிரஸ் கட்சி தலைமை இன்றி தத்தளித்து வருகிறது.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்காக அக் கட்சியின் உயர்மட்டக் குழுவான செயற்குழு டெல்லியில் இன்று கூடியது.

கட்சியின் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தியும் ராகுல் காந்தியும் காலையில் செயற்குழு கூட்டத்தில் பங்கேற்றனர். இதன் பிறகு புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான நடைமுறை ஆரம்பித்ததும் அவர்கள் இருவரும் இந்த நடைமுறையில் தாங்கள் பங்கேற்பதில்லை என்று கூறி கிளம்பி சென்றனர்.

அதை நேரம், பிரியங்கா காந்தி மட்டும், தொடர்ந்து கூட்டத்தில் பங்கேற்றார். கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு, வடகிழக்கு என காங்கிரஸ் கட்சியின் ஐந்து மண்டல நிர்வாகிகளும் பங்கேற்று தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.

அனைத்து மண்டல நிர்வாகிகளுமே, ராகுல் காந்தியே மீண்டும் கட்சித் தலைவர் பதவிக்கு வரவேண்டும் என்று வற்புறுத்தியதாக தகவல்கள் வெளியாகின. ராகுல் காந்திக்கு இதில் சம்மதம் இல்லாத நிலையில் புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கு இழுபறி நிலை நீடித்தது.

இதனிடையே இரவு 10.50 மணியளவில் செயற்குழு கூட்டம் நிறைவடைந்தது. அப்போது, "சோனியா காந்தி காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்" என்று மூத்த தலைவரான குலாம் நபி ஆசாத் தெரிவித்தார்.



சோனியா காந்தி 1998 முதல் 2017ம் ஆண்டுவரை காங்கிரஸ் தலைவராக தொடர்ந்து 19 வருடங்கள் பதவி வகித்தார். அந்த கட்சியில் நீண்ட கால தலைவராக பதவி வகித்த பெருமை அவருக்கு உண்டு. காங்கிரஸ் பெரும் வீழ்ச்சியை சந்தித்த கால கட்டத்தில் தலைமை பதவிக்கு வந்த சோனியா காந்தி, அக்கட்சியை அடுத்தடுத்து ஆட்சி பீடத்தில் அமர வைத்ததில் முக்கிய பங்கு வகித்தார்.





இப்போது மீண்டும் காங்கிரஸ் கடும் சிக்கலில் தவித்துள்ள நிலையில், தீவிர அரசியலில் இருந்து உடல்நலக்குறைவால் ஒதுங்கியிருந்த சோனியா மீண்டும் களம் வந்துள்ளார். இனி அரசியலில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கலாம்.
Like Reply
தொலைச்சிடுவேன் ஜாக்கிரதை.. ஐஜி நம்பர் எங்கே".. மக்கள் முன்னிலையில் ஆவேசமான கலெக்டர்!

மக்கள் முன்னிலையில் ஆவேசமான கலெக்டர்!-
காஞ்சிபுரம்: "தொலைச்சிடுவேன் ஜாக்கிரதை.. பித்தலாட்டம் பண்ணவா வந்தே? ஐஜி நம்பர் எங்கேப்பா.. இரு வரேன்.. உன்னை சஸ்பெண்ட் பண்ணாதான் சரியா வரும். திமிர்தனமா பண்றீங்க போலீஸ்காரங்க எல்லாம்" என்று காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர், இன்ஸ்பெக்டர் ஒருவரை தாறுமாறாக திட்டும் வீடியோ ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாஸ்
இப்படி பாஸ் இல்லாமல் விவிஐபிக்கள் செல்லும் வழியில் போலீசார் லஞ்சம் வாங்கி கொண்டு அழைத்து செல்வதாக மாவட்ட கலெக்டர் பொன்னையாவுக்கு புகார்கள் நிறைய வந்து கொண்டே இருந்தன. இந்நிலையில், நேற்று இன்ஸ்பெக்டர் ஒருவர் பாஸ் இல்லாமல் ஒருசிலரை உள்ளே அழைத்து சென்றதாக தெரிகிறது.


[Image: kanceepuramdistrictcollectorshoutingonse...431748.jpg]
 
[color][size][font]
இன்ஸ்பெக்டர்
அந்த நேரம் பார்த்து அங்கு வந்த கலெக்டர் இதை நேரடியாக பார்த்ததும் கொதித்து போய் விட்டார். கையும் களவுமாக மாட்டிய இன்ஸ்பெக்டரை லெப்ட் & ரைட் வாங்கிவிட்டார். அப்போது கலெக்டர் இன்ஸ்பெக்டரிடம் பேசியது இதுதான்:[/font][/size][/color]

[Image: kanceepuramdistrictcollectorshoutingonse...431755.jpg]
 
[color][size][font]

தொலைச்சிடுவேன்
"எந்த ஸ்டேஷன் நீ.. பித்தலாட்டம் பண்ணவா வந்தே? தொலைச்சிடுவேன் ஜாக்கிரதை.. ஐஜி நம்பர் எங்கேப்பா.. என்னத்த நீ செக் பண்ணி அனுப்பறே.. பாஸ் இல்லாம அங்கே அவ்ளோ பேர் உட்கார்ந்திட்டு இருக்காங்க. என்னய்யா செக் பண்றே? இரு வரேன்.. உன்னை சஸ்பெண்ட் பண்ணாதான் சரியா வரும். திமிர்தனமா பண்றீங்க போலீஸ்காரங்க எல்லாம். என்ன ஸாரி.. யோவ்.. அங்க எத்தனை பேர் நிக்கறாங்க பாத்தியா? ஐஜியை வரசொல்லுய்யா.. ஐஜிக்கிட்ட நான் பேசறேன். இன்னைக்கு நீ சஸ்பெண்ட் ஆகறே.." என்று ஆவேசமாக சொன்னார். இதை அங்கிருந்த பொதுமக்கள் உள்ளிட்டோர் வேடிக்கை பார்த்தனர்.[/font][/size][/color]

[Image: kanceepuramdistrictcollectorshoutingonse...431762.jpg]
 
[color][size][font]
ஆதங்கம்
அதில் சிலர் கலெக்டர் சத்தம் போடுவதை வீடியோவாகவும் எடுத்து இணையத்தில் போட்டுவிடவும் அது வைரலாகி வருகிறது. கலெக்டர் பொன்னையாவின் ஆதங்கமும், கோபமும் நியாயம் ஆனதே.. கண்டிப்பும் அவசியமே.. பாஸ் இல்லாமல் உள்ளே அனுமதிக்கப்படும் செயலில் சம்பந்தப்பட்டவர் இந்த இன்ஸ்பெக்டர் மட்டுமே இருக்க முடியாது. வேறு சிலருக்கும் தொடர்பிருக்கலாம். அதற்காக ஒட்டுமொத்த காவல்துறையையும் "திமிர்தனமா பண்றீங்க போலீஸ்காரங்க எல்லாம்" என்று ஒட்டுமொத்தமாக அனைத்து காவலரையும் பேசியிருக்க கூடாது என்றே தோன்றுகிறது.
[/font][/size][/color]

[Image: kanceepuramdistrictcollectorshoutingonse...431769.jpg]
 
[color][size][font]
உயிரிழப்பு
ஏனெனில், இதே அத்திவரதர் கூட்ட நெரிசலை சமாளிக்க ஆயிரக்கணக்கான போலீசார் சிக்கி திணறி கடமையாற்றி வருகிறார்கள். 2 தினங்களுக்கு முன்பு கூட ஒரு போலீஸ்காரர் நெஞ்சை பிடித்து கொண்டே இறந்துவிட்டார். விஐபிக்கள் தரிசன வரிசையில் சில தினங்களுக்கு முன்பு மின்கசிவு ஏற்பட்டபோது, பக்தர்களுடன் காயமடைந்தது அங்கு நின்று கொண்டிருந்த போலீசாரும்தான். அதனால் ஒருசிலரது நடவடிக்கைக்காக ஒட்டுமொத்த போலீஸையும் குற்றம் சாட்டுவதோ, அல்லது ஒருமையில் திட்டுவதோ ஏற்க முடியவில்லை... அதுவும் ஒரு கலெக்டரே இப்படி பேசியதுதான் கொஞ்சம் நெருடலாக உள்ளது.[/font][/size][/color]
காஞ்சிபுரத்தில் அத்தி வரதரை தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். இதனால் கட்டுக்கடங்காத கூட்டம் அங்கு தினந்தோறும் நிரம்பி வழிகிறது.

தரிசனத்தின் முதல் நாளில் இருந்தே அத்திவரதரை தரிசிக்க போலி பாஸ்களை பெற்று நிறைய பேர் தரிசனம் செய்து விட்டு போவதாக புகார்கள் எழுந்தபடி இருந்தது. மேலும் பணம் வாங்கி கொண்டு சிலர் பக்தர்களை உள்ளே அனுமதித்து விடுவதாகவும் கூறப்பட்டது
Like Reply
இனிமேல் காஷ்மீர் பெண்களை…! ஹரியானா முதல்வரின் சர்ச்சை பேச்சு.! – விளாசிய ராகுல் காந்தி..!

காஷ்மீர் பெண்கள் குறித்து ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் தெரிவித்த கருத்து நாடு முழுக்க பெரும் சர்ச்சையையும், கண்டனத்தையும் ஒருங்கே ஈட்டியுள்ளது.
ஹரியானாவில் நேற்று நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் பேசிய மனோகர் லால் கட்டார், “ஆண்-பெண் விகிதம் குறைவாக இருப்பதால், பீகாரிலிருந்து மணப்பெண்களை அழைத்து வரலாம் என்று முன்பு பாஜக தலைவர் தன்கர் அடிக்கடி சொல்வார்.
இப்போது, காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டுள்ளதால், இனிமேல் காஷ்மீர் பெண்களை ஹரியானா இளைஞர்கள் திருமணம் செய்ய முடியும் என்று மக்கள் சொல்ல ஆரம்பித்துள்ளனர்” என்றார்.
2014ம் ஆண்டு பாஜக தலைவர் ஓபி தன்கர் பீகார் பெண்கள் பற்றி, இதுபோன்ற கருத்தை தெரிவித்திருந்தார். அதை இப்போது காஷ்மீருடன் ஒப்பிட்டு மனோகர் லால் கட்டார் பேசியுள்ளார்.
முன்னதாக, உத்தர பிரதேசத்தை சேர்ந்த பாஜக எம்எல்ஏ ஒருவர், தனது கட்சி நிர்வாகிகள், இனிமேல் அழகான காஷ்மீர் பெண்களை திருமணம் செய்துகொள்ள முடியும். முன்பு இப்படி திருமணம் செய்தால், காஷ்மீர் பெண்களுக்கு குடியுரிமை பறிபோகும் நிலை இருந்தது. இனி கிடையாது. உங்களுக்கெல்லாம் இனி அழகான பெண்கள் கிடைப்பார்கள் என்று பேசியிருந்தார்.
இதனிடையே, கட்டார் கருத்துக்கு, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி டிவிட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார். “ஹரியானா முதல்வர் கட்டார், காஷ்மீர் பெண்கள் குறித்து கூறிய கருத்து வெறுக்கத்தக்கது, பலவீனமான, பாதுகாப்பற்ற மற்றும் பரிதாபகரமான மனிதனின் மனதில் ஆண்டுக்கனக்கான ஆர்.எஸ்.எஸ் பயிற்சி என்ன செய்யும் என்பதைத்தான் அவர் கருத்து காட்டுகிறது. பெண்கள் ஆண்களுக்குச் சொந்தமான சொத்துக்கள் அல்ல” என்று தெரிவித்துள்ளார்.
Quote:[Image: O-Zn2b72_normal.jpg]
[/url]Rahul Gandhi

@RahulGandhi





Haryana CM, Khattar's comment on Kashmiri women is despicable and shows what years of RSS training does to the mind of a weak, insecure and pathetic man. Women are not assets to be owned by men. https://scroll.in/latest/933418/now-we-can-bring-kashmiri-girls-for-marriage-says-haryana-cm-manohar-lal-khattar …
[Image: oH-s81oL?format=jpg&name=800x419]
‘People are saying we can now bring girls from Kashmir’: Haryana Chief Minister Manohar Khattar
Khattar was speaking at an event in Fatehabad about Haryana’s poor sex ratio.
scroll.in



42.8K
2:13 PM - Aug 10, 2019
Twitter Ads info and privacy


22.5K people are talking about this

[url=https://twitter.com/RahulGandhi/status/1160109457470189568]



அதேநேரம், மனோகர் லால் கட்டார், ராகுல் காந்திக்கு டிவிட்டரில் பதில் அளித்துள்ளார். அதில், சிதைக்கப்பட்ட செய்திக்கு, உங்களை போன்ற உயரத்தில் உள்ள ஒருவர் கருத்து தெரிவித்திருக்க கூடாது. நான் உண்மையில் சொன்னதின் வீடியோவை இணைத்துள்ளேன். இது உங்களுக்கு மன தெளிவைத் தரும். இவ்வாறு கட்டார் தெரிவித்துள்ளார்.
first 5 lakhs viewed thread tamil
Like Reply
[color=var(--title-color)]`இலவச 4K டிவி, வெளியான அன்றே வீட்டில் திரைப்படம்..!' ஜியோவின் ஜிகா ஃபைபர் அதிரடி! #JioGigaFiber[/color]

[color=var(--title-color)]டெலிகாம் வட்டத்தில் ஏற்படுத்திய அதே தாக்கத்தை இப்போது பிராட்பேண்ட் சந்தையிலும் ஏற்படுத்தும் என எதிர்பார்க்கலாம்![/color]
[Image: vikatan%2F2019-08%2F6e909d19-8064-4d2d-a...2Ccompress][color=var(--meta-color)]ஜியோ ஜிகா ஃபைபர்[/color]
[color=var(--content-color)]சந்தையில் நுழைந்து, குறுகிய காலத்திற்குள்ளாகவே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் ஜியோ நிறுவனம், அதன் அடுத்த அதிரடியை இப்போது அறிவித்துள்ளது. அது, பிராட்பேண்ட் சேவைதான். ஜியோ ஜிகா ஃபைபர் என்று பெயரிடப்பட்ட பிராட்பேண்ட் சேவை குறித்து கடந்த வருடம் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், அது கூடிய விரைவில் மக்கள் அனைவரின் பயன்பாட்டுக்கும் வரவுள்ளது. இதுகுறித்து இன்றைய ரிலையன்ஸ் குழுமத்தின் வருடாந்திர பொதுக்கூட்டத்தில் (Annual General Meeting) அறிவித்தார், முகேஷ் அம்பானி.[/color]
[color=var(--content-color)][Image: vikatan%2F2019-08%2F46cbc889-6ae9-431b-b...2Ccompress]
ஜியோ ஜிகா ஃபைபர்
[/color]
[color=var(--content-color)]100 Mbps முதல் 1 Gbps வரை கிடைக்கும் இந்த ஜியோ ஃபைபர் சேவைகள், செப்டம்பர் 5 முதல் கிடைக்கும். குறைந்தபட்சமாக 700 ரூபாய் கட்டினால் இந்தச் சேவையைப் பெறமுடியும். அதிகபட்சமாக 10,000 ரூபாய் வரை சேவைகள் இருக்கின்றன. 700 ரூபாய்க்கு 100 Mbps-ல் உங்களால் பிராட்பேண்ட் சேவையைப் பயன்படுத்தமுடியும். 10,000 ரூபாய் சேவையில் ஜியோ பிராட்பேண்டுடன் ஜியோ HomeTV, ஜியோ IoT போன்ற ஆடம்பர சேவைகளும் கிடைக்கும்.[/color]
[color=var(--content-color)]லேண்ட்லைன் சேவைகளும் குறைந்த விலையில் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. ISD அழைப்புகளுக்கு, தற்போதைய சந்தை விலையில் 1/10 மடங்குதான் ஜியோவில் செலுத்தவேண்டியதிருக்கும். அன்லிமிடெட் அமெரிக்கா மற்றும் கனடா அழைப்புகளுக்கு 500 ரூபாய் பேக் ஒன்றையும் அறிமுகப்படுத்தியிருக்கிறது, ஜியோ.[/color]
[color=var(--content-color)]மேலும், நீண்டகால சேவைகளைப் (Jio Forever Plan) பெறுவதாக இருந்தால், இலவச 4K LED டிவியும், 4K செட்-அப் பாக்ஸும் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இது, எந்த பிராண்ட் டிவி என்றும் இதற்குத் தனியாக டெபாசிட் ஏதேனும் செலுத்த வேண்டுமா என்பது,குறித்த தெளிவான தகவல்கள் குறிப்பிடப்படவில்லை. அவை விரைவில் தெரியவரும் என எதிர்பார்க்கலாம்.[/color]

[color=var(--content-color)]மேலும், திரைப்படங்கள் வெளியாகும் அன்றே அதை விலைகொடுத்துப் பார்க்கும் Jio FDFS பற்றியும் இதில் அறிமுகம் கொடுக்கப்பட்டது. இது எப்படி செயலுக்கு வரும் என்பதைப் பற்றியும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.[/color]
[color=var(--content-color)][Image: vikatan%2F2019-08%2F76b67bf6-0021-4f45-a...2Ccompress]
ஜியோ ஜிகா ஃபைபர்
[/color]
[color=var(--content-color)]மேலும், பிராட்பேண்ட் சேவையுடன் வரும் டிஜிட்டல் டிவி, கிளவுட் கேமிங் போன்ற மற்ற சேவைகள்குறித்தும் இந்த நிகழ்ச்சியில் அறிமுகம் செய்யப்பட்டது. மேலும், புதிய ஸ்டார்ட்-அப்களுக்கு இலவச இணைய மற்றும் கிளவுட் சேவைகளைத் தரப்போவதாகவும் முகேஷ் அம்பானி தெரிவித்தார். இவர்களின் மிக்ஸட் ரியாலிட்டி ஸ்டார்ட்-அப்பான Tesseract-ன் சாராம்சம் என்ன என்பதும் விளக்கப்பட்டது.[/color]
first 5 lakhs viewed thread tamil
Like Reply
காவிரியில் 2. 4 லட்சம் கன அடி நீர்: அபாய அளவைத் தாண்டியது

[Image: _108282942_d880d572-777e-4608-8206-567c6024a7dd.jpg]படத்தின் காப்புரிமைKAR.NIC.INImage captionகிருஷ்ணராஜசாகர் அணையிலிருந்து ஒன்றரை லட்சம் கன அடி திறந்துவிடப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை தொடர்ந்துவருவதால் காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகள் வேகமாக நிரம்பிவருகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு காவிரியில் வரும் நீரின் அளவு சுமார் 2.4 லட்சம் கன அடியை எட்டியுள்ளது.
கடந்த மூன்று நாட்களுக்கும் மேலாக கர்நாடக மாநிலத்தில் உள்ள காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கன மழை பெய்துவருகிறது.
கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள் தங்கள் முழுக் கொள்ளளவை எட்டியதால், கிருஷ்ணராஜசாகர் அணையிலிருந்து ஒன்றரை லட்சம் கன அடி நீரும் கபினி அணையிலிருந்து 70 ஆயிரம் கன அடி நீரும் காவிரியில் திறந்துவிடப்பட்டது.
வெள்ளிக்கிழமையன்று திறந்துவிடப்பட்ட நீர் ஞாயிற்றுக்கிழமையன்று பிலிகுண்டுலுவை அடைந்ததால் அந்தப் பகுதியில் உச்சபட்ட வெள்ள மட்டத்தைத் தொடும் அளவுக்கு தண்ணீர் பாய்ந்துவந்தது.
[Image: _108281106_2e21abfe-f8db-4fd4-bdfa-6f34298ffd3c.jpg]படத்தின் காப்புரிமைKAR.NIC.INImage captionகபினி அணை
இதன் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் பதினைந்து அடி உயர்ந்து, 82 அடியை எட்டியது. மத்திய நீர் அணையம் நேற்று வெளியிட்டுள்ள தகவல்களின்படி, காவிரிக்கு தற்போது ஒரு நாளைக்கு 15-20 டிஎம்சி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது.
இதனால், மேட்டூர் அணை தனது அதிகபட்ச உயரமான 120 அடியை இன்னும் இரண்டு - மூன்று நாட்களில் எட்டிவிடுமென கூறப்பட்டது.
ஆனால், தற்போது மேட்டூர் அணைக்கு சுமார் 2.4 லட்சம் கன அடி நீர் வந்துகொண்டிருக்கிறது. இதன் காரணமாக ஹொகேனக்கல் அருவிகளை மூடியபடி தண்ணீர் பாய்ந்துவருகிறது.
இது தொடர்பாக மத்திய நீர் ஆணையம் வெளியிட்டுள்ள குறிப்பின்படி, காவிரி நீர் தமிழகத்திற்குள் நுழையும் எல்லைப் பகுதியான பிலிகுண்டுலுவில் நீர் வரத்து அபாய அளவைத் தாண்டி பாய்ந்து வருகிறது.
[Image: _108282945_hogenakkal.jpg]படத்தின் காப்புரிமைM. NIYAS AHMEDImage captionஹொகேனக்கல் அருவிகளை மூடி நீர் பாய்ந்து வருகிறது. (கோப்புப்படம்)
இந்தப் பகுதியில் இதற்கு முன்பாக அதிக பட்சம் 265.7 மீட்டர் அளவுக்கு தண்ணீர் பாய்ந்ததே உச்சபட்ச அளவாக (HFL)இருந்தது. ஆனால், தற்போது கர்நாடகத்திலிருந்து பெருமளவு நீர் திறக்கப்பட்டிருப்பதால், நீர்மட்டம் பிலிகுண்டுலுவில் 266 மீட்டர் உயரத்தையும் தாண்டிப் பாய்ந்து வருகிறது.
தற்போது அணையிலிருந்து 1,000 கன அடி நீர் திறக்கப்பட்டுவருகிறது. இதன் காரணமாக, அப்பகுதியில் பரிசல் இயக்க தொடர்ந்து தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
first 5 lakhs viewed thread tamil
Like Reply
நாளை திறக்கப்படுகிறது மேட்டூர் அணை
காவிரி டெல்டா பாசன பகுதிகளில் விவசாயத்திற்காக நாளை மேட்டூர் அணை திறக்கப்படுமென தமிழக முதலமைச்சர் கே. பழனிச்சாமி அறிவித்திருக்கிறார்.
காவிரி டெல்டா பகுதிகளுக்கு முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் மேட்டூர் நீர்த்தேக்கம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12ஆம் தேதி திறக்கப்படும். ஆனால், இந்த ஆண்டு போதிய நீர் இல்லாத காரணத்தால் அந்த நாளில் அணை திறக்கப்படவில்லை.
இப்போது தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்திருக்கும் நிலையில், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வெகுவாக அதிகரித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டும் 90 அடியை எட்டியுள்ளது. நீர் இருப்பு 65 டி.எம்.சியாக உள்ளது. மேலும் நீர்வரத்து விநாடிக்கு 2 லட்சத்து 40 ஆயிரம் கன அடியாக உள்ளது.

[Image: _108282939_d46ca0ec-f8df-43fc-bce7-bb83ab14d639.jpg]படத்தின் காப்புரிமைSALEM.NIC.INImage captionமேட்டூர் அணை இன்னும் இரண்டு - மூன்று நாட்களில் நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது
காவிரியின் நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்யுமெனத் தெரிவதாலும் தற்போதைய நீர் இருப்பை மனதில்கொண்டும் ஆகஸ்ட் 13ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படுமென முதலமைச்சர் அறிவித்திருக்கிறார். தானே நேரில் சென்று அணையைத் திறந்துவைக்கப்போவதாகவும் அவர் கூறியிருக்கிறார்.
நீலகிரி மாவட்டத்திலும் அதனை ஒட்டி கேரளாவில் அமைந்துள்ள பாலக்காட்டிலும் பெய்துவரும் மழையால் பவானி அணைக்கு வரும் நீரின் அளவுக்கு வெகுவேகமாக அதிகரித்துவருகிறது.
பைகாரா, பில்லூர், அப்பர் பவானி நீர்த்தேக்கங்களுக்கும் நீர் வரத்து அதிகரித்துவருவதால் அந்த நீர்த்தேக்கங்களிலிருந்தும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையில் திருச்சியில் கடந்த ஆண்டு வெள்ளத்தின்போது இடிந்து விழுந்த முக்கொம்பு அணை, சரி செய்யாததால் காவிரியில் வரும் வெள்ள நீர் வீணாக கொள்ளிடத்தில் பாய்ந்து கடலில் கலக்குமெனவும் இந்த விவகாரத்தில் தமிழக அரசு கவனம் செலுத்த வேண்டுமெனவும் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கூறியிருக்கிறார்
first 5 lakhs viewed thread tamil
Like Reply
தண்ணீர் பற்றாக்குறை: பாலைவன நாடுகளின் பட்டியலில் இடம்பெறும் இந்தியா

[Image: _108249973_8.jpg]படத்தின் காப்புரிமைNOORULLAH SHIRZADA/GETTY IMAGES
தண்ணீர் பஞ்சம் தீவிரமாக உள்ள சௌதி அரேபியா, பஹ்ரைன் போன்ற பாலைவன நாடுகள் இடம்பெற்றுள்ள உலகின் 17 நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இடம் பெற்றுள்ளது என்று உலகளாவிய அறிக்கை ஒன்று கூறுகிறது.
பாகிஸ்தானை ஒட்டிய இந்திய எல்லையில் உள்ள மாநிலங்களிலும் தண்ணீர் பிரச்சனை கடுமையாக உள்ளது. பாகிஸ்தானில் இரண்டு மாகாணங்களில் இந்த நிலைமை இருக்கிறது.
இந்தியாவில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் பிபிசி உலக சேவையின் சுற்றுச்சூழல் பிரிவு செய்தியாளர் நவீன் சிங் காட்கா பயணம் மேற்கொண்டார்.
[Image: _108272094_ee09083b-8e3f-41b7-9a68-5706868bccf0.jpg]படத்தின் காப்புரிமைPRADEEP KUMAR
இந்தியாவின் வடக்குப் பகுதியில் ஹரியானா மாநிலத்தில் தரோடி கிராமத்தில் விவசாயிகள் போராட்டம் நடத்தியதில் காரணத்துடன் கூடிய கோபம் காணப்பட்டது.
ஹரியானா மாநிலத்தில் அந்தப் பகுதியில் 10க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள், அந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டனர். சுமார் ஒன்றரை மாதங்களாக சுத்தமான குடிநீர் வராததால், அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தண்ணீர் கேட்டு முழு ஆவேசமாக ராஜ்பதி பன்வாலா என்ற விதவை முழக்கம் எழுப்பியபோது, நூற்றுக்கணக்கான பெண்களும், ஆண்களும் கூடாரத்தின் கீழ் அமர்ந்து போராட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.
''அரசாங்கம் வாரம் இருமுறை தரும் தண்ணீரை எங்களுடைய கால்நடைகள் கூட குடிக்க முடியாது,'' என்று போராட்டக் களத்தில் அவர் தெரிவித்தார்.
''நான் விலை கொடுத்து குடிநீர் வாங்குகிறேன். அதற்கு மாதம் 500 ரூபாய் செலவாகிறது,'' என்று நம்மிடம் கூறிய அவர், விலைகொடுத்து தண்ணீர் வாங்கிய கோப்பையைக் காட்டினார்.
[Image: _108272095_18402f44-f9e0-47b4-b950-54800af09914.jpg]படத்தின் காப்புரிமைPRADEEP KUMAR
போராட்டக் களத்தில் இருந்து, நம்மிடம் பேச வந்த அவருடைய தோழி நீலம் தின்ட்ஷா, தன்னால் விலை கொடுத்து தண்ணீர் கோப்பையை வாங்க முடியவில்லை என்று கூறினார்.
``தண்ணீரை விலை கொடுத்து வாங்க முடியாத கிராமவாசிகள் பலர் இருக்கிறார்கள்'' என்று முகத்தை மூடிய துணியை அகற்றியபடி அவர் குறிப்பிட்டார்.
பொது குழாயில் இருந்து குடத்தில் தண்ணீர் பிடித்துக் கொண்டு, தலையில் வைத்துக் கொண்டு வீட்டுக்குப் புறப்பட்ட அவர், ''எங்களுக்கு அளிக்கப்படும் இந்த நிலத்தடி நீர், நோய்களை ஏற்படுத்துகிறது'' என்று கூறினார்.
''என் வீட்டு வேலைகளை முடிக்கவும், விவசாய நிலத்தில் வேலை பார்க்கவும் காலையில் நான் சீக்கிரம் எழுந்திருக்க வேண்டும் என்றாலும், இந்தக் காரணத்தால்தான் போராட்டத்தில் நானும் கலந்து கொண்டிருக்கிறேன்.''
உலக ஆதாரவள இன்ஸ்டிடியூட் தயாரித்துள்ள உலகளாவிய தகவல் தொகுப்பில், மிக மோசமாக தண்ணீர் பஞ்சம் ஏற்படும் ஆபத்துள்ள இந்தியாவின் 9 மாநிலங்களின் பட்டியலில் ஹரியானாவும் ஒன்று
first 5 lakhs viewed thread tamil
Like Reply
[Image: _108250020_5.jpg]படத்தின் காப்புரிமைIAN WALDIE/GETTY IMAGES
அருகில் உள்ள பஞ்சாப் மாநிலத்திலும் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருவது குறித்து விவசாயிகள் மிகவும் கவலையடைந்துள்ளனர்.
நிலத்தடி நீரை எடுப்பதற்கு அமைத்த ஆழ்துளைக் கிணற்றில் போர்வெல் இயந்திரம் அமைக்கப்படுவதை இளம் விவசாயி நரேந்தர் சிங் ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருக்கிறார்.
''20 ஆண்டுகளுக்கு முன்பு முதலாவது ஆழ்துளைக் கிணறு தோண்டியபோது நாங்கள் 150 அடி தோண்டினோம்'' என்று விவசாயி நரேந்தர் சிங் தெரிவித்தார்.
'' சுமார் 10 ஆண்டுகள் கழித்து நாங்கள் 300 அடி ஆழம் வரை தோண்ட வேண்டியிருந்தது. இப்போது நிலத்தடி நீரைப் பெறுவதற்கு இந்த இயந்திரம் 500 அடி வரை தோண்டியுள்ளது.''
'' விவசாயத்தை விடுங்கள், விரைவில் குடிப்பதற்குக் கூட தண்ணீர் கிடைக்காது. எனக்கு மிகவும் கவலையாக இருக்கிறது'' என்கிறார் அவர்.
[Image: _108250022_4.jpg]படத்தின் காப்புரிமைMATT CARDY/GETTY IMAGES
பூமிப்பரப்பில் இருந்த தண்ணீரும் காணாமல் போய்க் கொண்டிருக்கிறது.
பஞ்சாப் மற்றும் சண்டிகரில் நகரமயமாக்கல் காரணமாக ஆக்கிரமிக்கப்பட்ட குளங்கள், சதுப்பு நிலங்கள் இருந்த இடங்களை அங்கிருந்த மூத்த குடிமக்கள் சிலர் காட்டினர்.
``பஞ்சாபில் சுமார் 140 ஒன்றியங்கள் உள்ளன. அவற்றில் பெரும்பாலானவை கருப்பு மண்டலமாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. அதாவது காலியாகிவிட்ட நிலத்தடி நீரை நம்மால் மீண்டும் உருவாக்க முடியாது. ஏனெனில் திறந்தவெளிப் பகுதிகளை நகரமயமாக்கல் காரணமாக ஆக்கிரமித்துவிட்டார்கள்'' என்று சண்டிகரைச் சேர்ந்த உணவு மற்றும் நீர்வள நிபுணர் தேவிந்தர் சர்மா கூறினார்.
ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், குஜராத், உத்தரகாண்ட், மத்தியப்பிரதேசம், ஜம்மு காஷ்மீர் மாநிலங்களுடன் தண்ணீர் பிரச்சினை அதிகம் நிலவும் பகுதிகளில் சண்டிகரும் சேர்க்கப்பட்டுள்ளது.
இந்த மாநிலங்களுக்கு 4 முதல் 5 புள்ளிகளுக்கு இடைப்பட்டவையாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.
தண்ணீர் பிரச்சினை அளவின் அடிப்படையில் நாடுகள், மாநிலங்கள் மற்றும் மாகாணங்களை 0 முதல் 5 வரை என மதிப்பெண் கொடுத்து உலக ஆதாரவள இன்ஸ்டிடியூட் அறிக்கை தயாரித்துள்ளது.
இந்தப் பட்டியலில் பாகிஸ்தானுக்கு அடுத்த நிலையில், 13வது இடத்தில் இந்தியா இடம் பெற்றுள்ளது.
கிடைக்கிற நீர் ஆதாரத்தை, பயன்படுத்தும் அளவால் வகுத்து இந்தக் கணக்கீடு உருவாக்கப்பட்டதாக, இந்த அறிக்கையை தயாரித்தவர்கள் பிபிசியிடம் தெரிவித்தனர்.
உலகளவில் கிடைக்கும் தண்ணீரில் 70 சதவீதம் விவசாயத்துக்கு பயன்படுத்தப்படுவதாக உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு கூறியுள்ளது.
[Image: _108250024_7.jpg]படத்தின் காப்புரிமைRICHARD HEATHCOTE/GETTY IMAGES
இந்தியாவில் தண்ணீர் மேலாண்மைக்கான உச்ச அதிகாரம் பெற்ற அமைப்பான மத்திய நீர்வள ஆணையம், இரண்டு மாதங்களுக்கு முன்பு ஓர் அறிக்கை தயாரித்தது. நாடு முழுக்க 20 மில்லியனுக்கும் அதிகமான கிணறுகளில் இருந்து தண்ணீர் பம்ப் செய்து வெளியே கொண்டு வரப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
``இந்தியா நீர்வளம் குறைந்த நாடு அல்ல. ஆனால் தீவிர அலட்சியம் மற்றும் நீர்வளங்கள் மற்றும் வளர்ச்சித் திட்டங்களை சரியாக கண்காணிக்காத காரணத்தால் தண்ணீர்ப் பஞ்சம் ஏற்பட்டுள்ளது'' என்று அறிக்கையின் முடிவில் கூறப்பட்டுள்ளது.
இருந்தபோதிலும், இந்தத் துறையில் இனியும் அலட்சியம் காட்டினால் எதிர்காலத்தில் தண்ணீர்ப் பஞ்சம் ஏற்படும் என்றும் அறிக்கை எச்சரித்துள்ளது.
உலகில் பல்வேறு பகுதிகளில் நிலத்தடி நீர்வளம் வேகமாகக் குறைந்து வருகிறது என்று கடந்த காலங்களில் நாசா உள்பட பல அறிக்கைகளில் கூறப்பட்டுள்ளது.
உலகில் 10-ல் 4 பேர் ஏற்கனவே தண்ணீர் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.
உலகளாவிய அறிக்கையில் இந்தியாவுக்கு கவலை தரக் கூடிய இன்னொரு விஷயம், எல்லைக்கு அப்பால் பாகிஸ்தானிலும் இதே நிலை இருக்கும் என்பதுதான்.
பாகிஸ்தான் எல்லையில் உள்ள இந்திய மாநிலங்கள் அனைத்திலும் தீவிர தண்ணீர் பிரச்சினை உள்ளதாக உலகளாவிய அறிக்கையில் கூறப்பட்டிருந்தாலும், பாகிஸ்தானில் - பஞ்சாப் மற்றும் சிந்து - என இரண்டு மாகாணங்களிலும் இதே நிலைதான் உள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சிந்து நதி நீர் பகிர்வு தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையில் ஒப்பந்தம் உள்ள நிலையில் சமீபத்திய முரண்பாடுகளின்போது தண்ணீர் பிரச்சினை முக்கியமானதாக முன்வைக்கப்பட்டது.
தண்ணீர் பிரச்சினை அதிகமாக உள்ள பல பகுதிகள் முரண்பாடுள்ள மண்டலங்களில் அமைந்துள்ளன. வன்முறை ரீதியிலான மோதல் ஏற்படுவதற்கு தண்ணீரும் ஒரு பிரச்சினையாக உருவாகலாம் என்று உலகளாவிய அறிக்கை குறிப்பிடுகிறது.
``இஸ்ரேல், லிபியா, ஏமன், ஆப்கானிஸ்தான், சிரியா, இராக் ஆகியவையும் இதில் அடங்கும்.'
first 5 lakhs viewed thread tamil
Like Reply
58 வருடத்தில் இல்லாத அளவிற்கு வெள்ளம்.. ஒகேனக்கல்லில் பெருக்கெடுக்கும் நீர்வரத்து.. வந்தாய் காவிரி!
ஓசூர்: ஒகேனக்கல்லில் கடந்த 58 வருடங்களில் இல்லாத அளவிற்கு பெரிய அளவில் வெள்ளம் ஏற்பட்டு இருக்கிறது.
காவிரியில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக தமிழகத்திற்கு மேட்டூர் அணையில் இருந்து அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. கர்நாடகாவில் கடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்கு மாவட்டங்களில் கடுமையாக மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் இன்று அதிகாலை மேட்டூர் அணை 100 அடியை எட்டியது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2,85,000 கன அடியாக அதிகரித்தது.


[Image: hogenakkal-1565662795.jpg]



எப்படி
நேற்று அதிகாலை காவிரியில் 1.70 லட்சம் கனஅடியாகதான் நீர் வரத்து இருந்தது. மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதன்பின்தான் அதிகரிக்க தொடங்கியது. நேற்று மாலை மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 2.45லட்சம் கனஅடியாக என்று மாறியது. இந்த நிலையில் நேற்று இரவு நீர்வரத்து 2.95 லட்சம் கனஅடியாக உயர்ந்தது.

[Image: hogenakkal-34-1565600827-1565662883.jpg]
 
[color][size][font]
ஆனால் என்ன
ஆனால் நீர்வரத்து இதோடு நிற்கவில்லை. கர்நாடகாவில் நேற்று இரவு நல்ல மழை பெய்தது. இதனால் நேற்று இரவு முழுக்க காவிரியில் அதிக அளவில் உபரி நீர் திறந்து விடப்பட்டது. காவிரியில் நேற்று 3 லட்சம் கனஅடியாக நீர்வரத்து இருந்தது.


[Image: hogenakka676767-1565662786.jpg]
[/font][/size][/color]
 
[color][size][font]
வெள்ளம்
இதனால் ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மெயின் அருவி தொடங்கி கிளை அருவிகள் எல்லாம் அதிக அளவு வெள்ளம் ஏற்பட்டு மூழ்கியது. இதனால் அந்த பகுதியே தற்போது வெள்ளக்காடாக மாறி இருக்கிறது. கடந்த வருடம் கூட இப்படி நடக்கவில்லை.

[Image: hogenakkal-36-1565600813-1565662875.jpg]
[/font][/size][/color]
 
[color][size][font]
இதற்கு முன் இல்லை
இந்த வெள்ளம் என்பது கடந்த 58 வருடங்களில் இல்லாத வெள்ளம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கர்நாடகாவில் மேலும் மழை பெய்யும், அதனால் ஒக்கேனக்கல் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருக்கிறது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.[/font][/size][/color]
first 5 lakhs viewed thread tamil
Like Reply
அமித்ஷாவின் அடுத்த குறி.. திட்டமிட்டு காய் நகர்த்தும் பாஜக.. எடுபடுமா தமிழக மக்களிடம்?

போனமுறை 5-ல் ஒரு இடத்தில்கூட பாஜக வெற்றி பெறவில்லை. இதை பாஜக தலைமையால் ஏற்றுக் கொள்ளவும் முடியவில்லை. அதனால் பல வழிகளில் ஏன் தோல்வி என்பதை ஆராய்ந்தது.
தமிழக பாஜக தலைமை ஒரு விளக்கம் தந்தது, கூட்டணியில் உள்ள அதிமுக ஒரு விளக்கம் தந்தாலும், அமித்ஷா வேறு வகையில் இந்த தோல்வியை டீல் செய்ய ஆரம்பித்தார். இதற்கான 
பலம்
அதன்படி, அதிமுக வேட்பாளர்கள்தான் மிக அதிகமான வாக்கு வித்தியாசத்தில் தோல்வியை தழுவினர் என்பது தெரியவந்தது. இதனையடுத்துதான், தமிழகத்தில் பாஜகவின் பலத்தை அதிகரிக்கவும், அதற்காக கிராம அளவில் கட்சியை பலப்படுத்தவும் முடிவு செய்தார்.குழுவையும் வைத்து காரணங்களை அறிந்தார்.


[Image: amit-shah123-1565603298.jpg]
 
[color][size][font]
வேலூர் தேர்தல்
ஒருகட்டத்தில், உள்ளாட்சி தனித்துகூட போட்டியிடலாமா என்றுகூட யோசனை செய்ததாக சொல்லப்பட்டது. இந்த இடைப்பட்ட சமயத்தில்தான் அதிமுக-பாஜக இடையே எந்த மாதிரியான இணக்கம் உள்ளது என்பது வெளிப்படையாக தெரியாமலும் போனது. இருந்தாலும் வேலூர் தேர்தலில் பாஜகவை தள்ளி வைத்தும், அக்கட்சி தொண்டர்கள் அதிமுக வெற்றிக்காக களப்பணியில் இறங்கி வேலை பார்க்கவே செய்தனர்.[/font][/size][/color]

[Image: ravindranath55656-1565603307.jpg]
 
[color][size][font]

ரவீந்திரநாத்
கொஞ்சம் இடைவெளிக்கு பிறகு, தற்போது அதிமுக-பாஜக கட்சிகள் இடையே ஒரு சுமூகமான போக்கு தென்பட தொடங்கி உள்ளது. மக்களவையில் முக்கிய மசோதாக்களுக்கு அதிமுக ஆதரவு தந்து வருகிறது. இது போக அதிமுக எம்பி ரவீந்திரநாத் பாஜகவுக்கு ஆதரவான கருத்தையும் பகிரங்கமாக எடுத்து வைத்து வருகிறார். இதனிடையே, 2 நாட்களுக்கு முன்பு விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது என்று முதல்வர் அறிவித்து இருந்தார்.[/font][/size][/color]

[Image: amitshah-eps2-1565499362-1565603425.jpg]
 
[color][size][font]
அமித்ஷா
இதையடுத்துதான், நேற்று சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவுக்காக அமித்ஷா சென்னை வந்திருந்தார். அப்போது முதல்வர் எடப்பாடியாரை திடீரென சந்தித்ததாகவும், அப்போது, வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக இருவரும் நீண்ட நேரம் விவாதித்ததாகவும் கூறப்படுகிறது.
[/font][/size][/color]

[Image: bjp1-1555147186-1565603477.jpg]
 
[color][size][font]
தாமரை[/font][/size][/color]
அதாவது உள்ளாட்சி தேர்தலில் பாஜகவுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும்' என அமித்ஷா கேட்டதாக சொல்கிறார்கள். ஏனென்றால், திமுகவை எப்படியாவது திணறடிப்பதுதான் பாஜகவின் லட்சியமாக உள்ளதாம். அதேசமயம், உள்ளாட்சி தேர்தல் மூலம் தமிழக கிராமங்களிலும் காலூன்றவும் நினைக்கிறதாம். 
first 5 lakhs viewed thread tamil
Like Reply
[color=var(--title-color)]மகனை மார்போடு அணைத்தபடி உயிரிழந்த தாய்!'- கண்கலங்கிய மீட்புக் குழு; மலப்புரத்தில் நடந்த சோகம்[/color]

[color=var(--title-color)]மழையோடு சேர்த்து கடும் நிலச்சரிவு ஏற்பட `நிலச்சரிவு வருகிறது ஓடுங்கள்' எனக் கத்தியபடியே சரத் ஓட அதற்குள் ஒட்டுமொத்த வீடும் மண்ணுக்குள் புதைந்துள்ளது.[/color]
[Image: vikatan%2F2019-08%2Fe8e8dfb1-99df-440a-9...2Ccompress][color=var(--meta-color)]குழந்தை துருவ்வுடன் கீத்து[/color]
[color=var(--content-color)]கால்நூற்றாண்டுகளில் இல்லாத இரண்டாவது பிரளயத்தைச் சந்தித்துள்ளது கடவுளின் தேசமான கேரளம். கடந்த வருடம் ஏற்பட்ட சோகத்தின் நினைவுதினம்கூட அனுசரிக்கப்படவில்லை, அதற்குள் மீண்டும் பெரிய சோகத்தை சந்தித்து வருகிறது. எங்குப் பார்த்தாலும் மழை, வெள்ளம். மாநிலமே துயரத்தைச் சந்தித்துவருகிறது. பெருமழையைவிட நிலச்சரிவுதான் இந்தமுறை கேரள மக்களை வாட்டிவதைத்து வருகிறது. மலப்புரம் மாவட்டத்தில் உள்ள கவலப்பாரா, வயநாட்டில் உள்ள புதுமலா என இரண்டு கிராமங்கள் மண்ணில் புதையுண்டு இன்றோடு மூன்று நாள்களுக்கு மேலாகிறது. இதில் சிக்கியிருக்கிறவர்களின் நிலை என்னவென்று இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை.[/color]
[color=var(--content-color)][Image: vikatan%2F2019-08%2F5f8431cc-36de-475d-9...2Ccompress]
சடலத்தை மீட்டு வரும் குழுவினர்
[/color]
[color=var(--content-color)]இப்படி துயரத்தின் பிடியில் சிக்கியிருக்கும் கேரள மக்களை மேலும் ஒரு சம்பவம் சோகத்தில் மூழ்கடித்துள்ளது. மலப்புரம் அருகே உள்ள கொட்டகுன்னு அருகே உள்ள சாத்தக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் சரத். இரண்டு வருடத்துக்கு முன் திருமணம் செய்த தனது காதல் மனைவி கீத்து, தனது ஒன்றரை வயது குழந்தை மற்றும் தாய் சரோஜினி ஆகியோருடன் வசித்துவந்தார். கடந்த வெள்ளிக்கிழமை மதியம் இரண்டு மணியளவில் பெருமழை பெய்ய கீத்துவும், ஒன்றரை வயது மகன் துருவ் உடன் வீட்டின் உள்ளே இருந்துள்ளனர். தாய் சரோஜினியுடன் சரத் வெளியே இருந்துள்ளார். அப்போது மழையோடு சேர்த்து கடும் நிலச்சரிவு ஏற்பட `நிலச்சரிவு வருகிறது ஓடுங்கள்' எனக் கத்தியபடியே சரத் ஓட அதற்குள் ஒட்டுமொத்த வீடும் மண்ணுக்குள் புதைந்துள்ளது. இதில் வீட்டுக்குள் இருந்த கீத்து, ஒன்றரை வயது சிறுவன் துருவ் மற்றும் சரோஜினி ஆகிய மூவரும் மண்ணுக்குள் புதைய சரத் மட்டும் தப்பித்துவிட்டார்.[/color]
ADVERTISEMENT



POWERED BY PLAYSTREAM
[Image: mute.png]

[color=var(--content-color)]கிட்டத்தட்ட மூன்று நாள்கள் ஆகிவிட்டது. இன்று கீத்து மற்றும் துருவ்வின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. கீத்து தனது மகன் துருவை மார்போடு அணைத்தபடியே இறந்துகிடந்தது, மீட்புக் குழுவினரையும் அங்கிருந்தவர்களையும் கண்கலங்க வைத்துள்ளது. சரத்தும் கீத்துவும் இரண்டு வருடங்களுக்கு முன்பு காதலித்துவந்துள்ளனர். காதலுக்கு கீத்துவின் குடும்பத்தினர் சம்மதம் தெரிவிக்காததால் பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்துள்ளார். இந்தநிலையில் இருவருக்கும் குழந்தை பிறந்துள்ளது. துருவ் பிறந்தபிறகு குடும்பத்தினரின் கோபம் தணிந்துள்ளது. இதனால் இருவரையும் மீண்டும் தங்கள் வீட்டுக்கு அழைக்க திட்டமிட்டுள்ளனர் கீத்துவின் குடும்பத்தினர்.[/color]
[color=var(--content-color)][Image: vikatan%2F2019-08%2Fa38a9ff3-7619-4547-a...2Ccompress]
குழந்தை துருவ்வுடன் கீத்து மற்றும் சரத்

[/color]
first 5 lakhs viewed thread tamil
Like Reply
[color=var(--content-color)]ஆனால் அதற்குள் இப்படி ஒரு சோகம் நிகழ சம்பவ இடத்துக்கு ஓடியுள்ளனர் கீத்துவின் பெற்றோர். தன்குழந்தையை மார்பில் அணைத்தபடி உயிரிழந்ததை பார்த்த பெற்றோர் கதறி அழுதனர். ``தங்கள் மகள் மீது அதிகமான பாசம் வைத்திருந்தோம். அதனால்தான் அவள் காதல் திருமணம் செய்ததை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆனால் குழந்தை பிறந்தது எனத் தெரிந்ததும் அவர்களை வீட்டுக்கு அழைக்க முடிவு செய்திருந்தனர். கடைசியில் கீத்துவை அவர்களால் சடலமாகத்தான் பார்க்க முடிந்தது" எனக் கண்ணீர் வடிக்கிறார்கள் அவர்களது உறவினர்கள்.[/color]
[color=var(--content-color)]சரத் ஓடும் வீடியோ[/color]
Quote:[Image: P8p9fx7p_normal.jpg]
[/url]T Raghavan@NewsRaghav





#KeralaFloods
Scary visuals of a live land slide in Kottakunnu area of #Malappuram district. This Friday incident captured on CCTV is enough to show what people of God's own country are actually facing.@indiatvnews

[Image: vBHOBkWlgSLlQ6Qm?format=jpg&name=small]


39
முற்பகல் 9:24 - 10 ஆக., 2019
Twitter விளம்பரத் தகவல் மற்றும் தனியுரிமை
[color=var(--content-color)]

T Raghavan-இன் பிற கீச்சுகளைப் பார்க்கவும்

[url=https://twitter.com/NewsRaghav]

[/color]
first 5 lakhs viewed thread tamil
Like Reply
உற்சாகத்தில் கேப்டன் கோஹ்லி


 
 போர்ட் ஆப் ஸ்பெயின்: ‘‘விண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் சதம் அடித்தது மகிழ்ச்சி,’’ என கேப்டன் கோஹ்லி தெரிவித்தார்.
விண்டீஸ் சென்ற இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி மழையால் ரத்தானது. போர்ட் ஆப் ஸ்பெயினில் நடந்த இரண்டாவது போட்டியில் இந்திய அணி ‘டக்வொர்த் லீவிஸ்’ விதிப்படி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இதுகுறித்து கேப்டன் கோஹ்லி கூறுகையில்,‘‘பேட்டிங் ஆர்டரில் ‘டாப்–3’ வீரர்களில் யாராவது ஒரு ‘சீனியர்’ பொறுப்பாக செயல்பட்டு பெரியளவு ஸ்கோர் எடுக்க வேண்டும். ரோகித், தவான் குறைந்த ரன்னுக்கு திரும்பி விட்டனர். இதனால்  எனக்கான வாய்ப்பு வந்தது. 65 ரன்கள் எடுத்த போது, சற்று சோர்வு ஏற்பட்டது. ஆடுகளமும் கடினமாக இருந்தது, மழை வந்ததால் சற்று பேட்டிங் எளிதானது. கடைசியில் சதம் அடித்தது மகிழ்ச்சி,’’ என்றார்.
திருப்பம் எது
வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் கூறுகையில்,‘‘பூரன், போட்டியை அவர்கள் பக்கம் சாதகமாக கொண்டு செல்வார் எனத் தெரியும். இந்நிலையில் எப்படியும் ஓரிரு விக்கெட்டுகள் வீழ்த்தி விட்டால், இந்திய அணிக்கு சாதகமாக மாற்றி விடலாம் என நம்பினோம். இந்நிலையில் பூரன் அவுட்டானது திருப்பு முனையாக அமைந்தது. ராஸ்டன் சேஸ் வீழ்ந்ததும் கூடுதல் சாதகம் ஆனது,’’ என்றார்.
 
பாராட்டு
புவனேஷ்வருடன் இணைந்து எடுத்த போட்டோவை தனது ‘டுவிட்டர்’ சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட கோஹ்லி,‘சிறந்த வெற்றி, புவனேஷ்வரின் அசத்தலான பந்து வீச்சினால் கிடைத்தது,’ என தெரிவித்துள்ளா
first 5 lakhs viewed thread tamil
Like Reply
அத்தி வரதர் தரிசனம் நீட்டிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு :

அத்தி வரதர் வைபவம் வரும் 17ம் தேதி முடிவடைய உள்ளதை நிலையில், மேலும் 48 நாட்கள் நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை
[Image: athi-varadar-case.jpg]அத்தி வரதர் தரிசனம் நீட்டிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு : நீதிமன...

அத்தி வரதர் வைபவம்வரும் 17ம் தேதி முடிவடைய உள்ளதை அடுத்து, மேலும் 48 நாட்கள் நீட்டிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடப்பட்டுள்ளது. 






காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோயிலில், உள்ள அனந்த புஸ்கரணியில் இருந்த அத்தி வரதர் 40 ஆண்டுகளுக்கு பின் வெளியே எடுத்து, தற்போது அத்தி வரதர் வைபவம் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 17 வரை நடக்கிறது. 

வரும் 16ம் தேதி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படும் என்றும், 17ம் தேதி ஆகம விதிப்படி பூஜைகள் செய்யப்பட்டு மீண்டும் கோயில் புஸ்கரணியில் வைக்கப்படுவார் என கன்னியா குமரி மாவட்ட ஆட்சியர் பொன்னையா தெரிவித்துள்ளார்
உயர்நீதிமன்றத்தில் முறையீடு:
இன்னும் 3 நாட்கள் மட்டும் உள்ளதால், லட்சக்கணக்கான பக்தர்கள் கூட்டம் தற்போதும் வந்து கொண்டிருப்பதால், அத்தி வரதர் தரிசனம் வைபவம் மேலும் 48 நாட்கள் நீட்டிக்க வேண்டும் என உத்தரவிடக்கோரி கடலூரை சேர்ந்த மூதாட்டி தமிழரசி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. 
இந்நிலையில் மனுவாக தாக்கல் செய்தால் இதுகுறித்து விசாரிப்பதாக உயர்நீதிமன்றம் உறுதி கூறியதை தொடர்ந்து, மூதாட்டு மனு தாக்கல் செய்துள்ளார். 

first 5 lakhs viewed thread tamil
Like Reply
சீனா படைகளை குவித்து வருகிறது.. டிரம்ப் விடுத்த பகீர் எச்சரிக்கை.. தெற்காசியாவில் புதிய பரபரப்பு!

சென்ட்ரல்: ஹாங் காங் மக்களுக்கு எதிராக சீனா படைகளை குவித்து வருகிறது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
சீனாவின் ஆதிக்கத்திற்கு எதிராக ஹாங் காங் மக்கள் தற்போது போராடி வருகிறார்கள். முக்கியமாக சீனாவுடன் இணையும் போது ஹாங் காங் தன்னாட்சி அதிகாரத்துடன் இருக்கும் என்று ஒப்பந்தம் போடப்பட்டது.
இதை நீக்க கடந்த சில வருடங்களாக சீனா முயன்று வருகிறது. இதற்கு வசதியாக ஹாங் காங் மக்களை நாடு கடத்த உரிமை அளிக்கும் வகையில் சட்டம் இயற்றவும் சீ


போராட்டம்
இந்த சட்டத்திற்கு எதிராக ஹாங் காங் மக்கள் கடுமையாக போராடி வருகிறார்கள். கடந்த ஜூன் மாதத்தில் இருந்து அங்கு மக்கள் இதற்கு எதிராக போராடி வருகின்றனர். மிக முக்கியமாக ஹாங் காங்கில் சென்ட்ரல் விமான நிலையத்தில் பெரிய போராட்டம் நடைபெற்று வருகிறது.


[Image: hongkong-protest12121344-1565753015.jpg]
 
[color][size][font]
ஹாங் காங் எப்படி
இந்த நிலையில்தான் ஹாங் காங் மக்களுக்கு எதிராக சீனா படைகளை குவித்து வருகிறது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். அதன்படி ஹாங் காங் எல்லையில் சீனா படைகளை இறக்கி வருகிறது. எப்போது வேண்டுமானாலும் ஹாங் காங்கை சீனா மொத்தமாக கைப்பற்ற வாய்ப்புள்ளது.[/font][/size][/color]

[Image: chinese-army-i111-1565753094.jpg]
 
[color][size][font]

சீனா என்ன
அங்கு இருக்கும் போராட்டக்காரர்கள் மீது சீனா ராணுவத்தை பயன்படுத்தி நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது. மொத்தமாக ஹாங் காங் பகுதியை கைப்பற்ற சீனா திட்டமிட்டு உள்ளது. இது தொடர்பாக எனக்கு அதிர்ச்சி அளிக்கும் உளவுத்துறை தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது.


[/font][/size][/color]

[Image: hongkong-protest-1565753033.jpg]
 
[color][size][font]
படைகள்[/font][/size][/color]
அதனால் ஹாங் காங் மக்கள் கவனமாக இருக்க வேண்டும், என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இதனால் தற்போது ஹாங் காங்கில் மட்டுமில்லாமல் தெற்காசியாவில் பெரிய அளவில் பரபரப்பு நிலவி வருகிறது னா முயன்று வருகிறது.
first 5 lakhs viewed thread tamil
Like Reply
செம.. பூமி வட்டப்பாதையிலிருந்து வெளியேற்றப்பட்ட சந்திரயான் 2... நிலவை நோக்கி பயணம் தொடங்கியது!

டெல்லி: சந்திரயான் 2 இன்று அதிகாலை வெற்றிகரமாக பூமியின் வட்டப்பாதையில் இருந்து வெளியேற்றப்பட்டு, நிலவை நோக்கி அனுப்பப்பட்டது.
கடந்த 22ம் தேதி மதியம் 2.49 மணிக்கு சந்திரயான் 2 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. சந்திரயான் 2 பூமியில் இருந்து செலுத்தப்பட்டதில் இருந்து நிலவை அடையும் வரை மொத்தம் 48 நாட்கள் பயணம் மேற்கொள்ள இருக்கிறது.
சந்திரயான் 2 செலுத்தப்பட்ட முதல்நாள் பூமியை 170 கிமீ தூரத்தில் இருந்து சுற்ற தொடங்கியது. இது பூமியை நீள்வட்ட பாதையில் சுற்றி வந்தது.


[Image: chandrayaan-2-pic7-1563781787-1565748961.jpg]

இப்போது என்ன
நீள்வட்ட பாதையில் சந்திரயான் 2 சுற்றுவதன் மூலம் அதன் வேகம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கும். இதனால் நீள்வட்ட பாதையில் சுற்றி சுற்றி பூமியைவிட்டு கொஞ்சம் கொஞ்சமாக சந்திரயான் 2 நகர்ந்து தூரமாக செல்லும். இதன் மூலம் பூமியை விட்டு தூரம் சென்று அதன்பின் நிலவை நோக்கி செல்லும்.

[Image: chandrayaan-2-pic3-1563782182-1565748977.jpg]
 
[color][font]

15 முறை மாறும்
மொத்தம் 15 முறை சந்திரயான் 2 இதற்காக திசை மாற்றப்படும். கொஞ்சம் கொஞ்சமாக பூமியை விட்டு நகர்த்தி செல்லப்படும். இதற்காக அதில் உள்ள எஞ்சின் 15 முறை கொஞ்சம் கொஞ்சமாக இயக்கப்படும். இப்படியாக பூமியைவிட்டு 23 நாட்கள் கொஞ்சம் கொஞ்சமாக சந்திரயான் 2 விலகி செல்லும். அந்த 23 நாட்கள் இப்போது முடிந்துவிட்டது.

[Image: chandrayan-6-1563968190-1564114120-1565748985.jpg]
[/font][/color]
 
[color][font]

எப்படி
கடந்த 6ம் தேதி சந்திரயான் 2 இதேபோல் வட்டப்பாதையை மாற்றப்பட்டது. இதுவரை 5 முறை சந்திரயான் 2வின் வட்டப்பாதை வெற்றிகரமாக மாற்றப்பட்டு அது கொஞ்சம் கொஞ்சமாக பூமியை விட்டு நகர்ந்து சென்று கொண்டு இருந்தது. இதையடுத்து இன்று 6வது முறையாக வட்டப்பாதையை மாற்றப்பட்டு பூமியைவிட்டு சந்திரயான் 2 வெளியேற்றப்பட்டது.

[Image: isro8-1563430448-1565748992.jpg]
[/font][/color]
 
[color][font]


அதிகாலை
இன்று அதிகாலை பூமியின் வட்டப்பாதையில் இருந்து வெற்றிகரமாக சந்திரயான் 2 வெளியேற்றப்பட்டது. இன்று அதிகாலை 2.21 மணிக்கு நிலவை நோக்கி திருப்பப்பட்டது. இதன் மூலம் நிலவை நோக்கி வெற்றிகரமாக திசை மாற்றப்பட்டது சந்திரயான் 2.

[Image: chandrayaan-2-pic1-1563782189-1565748968.jpg]
[/font][/color]
 
[color][font]

என்ன நடந்தது
இதற்காக சந்திரயானில் உள்ள திரவ எஞ்சின் 1203 நொடிகள் பயன்படுத்தப்பட்டது. இனி நிலவை நோக்கி கொஞ்சம் கொஞ்சமாக சந்திரயான் 2 செல்லும். இன்னும் 6 நாட்களில் நிலவின் வட்டப்பாதையை சந்திரயான் 2 அடையும். அதன்பின் அதன் வேகம் கொஞ்சம் கொஞ்சமாக குறைக்கப்பட்டு நிலவில் தரையிறங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.




[Image: moon-craters-98-600-1565749047.jpg]
[/font][/color]
 
[color][font]

அங்கு இறங்கும்
இன்னும் 24 நாட்களில் சந்திரயான் 2 நிலவை அடையும் என்பது குறிப்பிடத்தக்கது. சரியாக செப்டம்பர் 6ம் தேதி நிலவின் சுற்று வட்டப்பாதையை சந்திரயான் 2 அடையும். செப்டம்பர் 7ம் தேதி சரியாக விக்ரம் லேண்டரில் உள்ள பிரக்யான் ரோவர் வெளியே வந்து நிலவில் ஆராய்ச்சிகளை செய்யும்[/font][/color]
first 5 lakhs viewed thread tamil
Like Reply
சில்மிஷம், சீண்டல்.. ஒருத்தரும் வாலாட்ட முடியாது.. ஒட்ட நறுக்க வந்துவிட்டது "பிங்க் கலர்" வண்டி
சென்னை: பெண்களிடம் ஆகட்டும், குழந்தைகளிடம் ஆகட்டும்.. அவர்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கவே பிங்க் கலரில் ஒரு புதிய ரோந்து வாகனத்தை அறிமுகப்படுத்தியுள்ளது தமிழக அரசு.
நம் மாநிலத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவது மக்களிடையே கலக்கம், பயத்தை சமீப காலமாக அதிகமாகவே தந்து வருகிறது. இதனை தடுப்பதற்காக தனிப்பிரிவு ஒன்றை ஏற்படுத்த அரசு முயன்று வந்தது.



[Image: amma-patrole-22-1565754822.jpg]


அதன்படி, மாவட்டந்தோறும் இதற்காக தனி அதிகாரிகள் நியமிக்கபட்டு மகளிர் ஸ்டேஷனுடன் இணைத்து செயல்பட்டு வருகிறது. இந்த பிரிவுக்கு தலைவராக ஏடிஜிபி ரவி இருக்கிறார். இந்த பிரிவுதான், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வழக்குகள் அனைத்தையும் சேர்த்து விசாரித்து வருகிறது.
இதை தவிர, மத்திய - மாநில அரசு இணைந்து பிங்க் கலரில் ஒரு ரோந்து வாகனத்தை உருவாக்கி அமலுக்கு கொண்டு வந்துள்ளது. இந்த ரோந்து வாகனமும் குழந்தைகள், பெண்கள் நலனுக்காகத்தான். அதாவது குழந்தைகளுக்காக 1098 என்ற ஹெல்ப்லைன் எண்ணும், பெண்களுக்காக 1091 என்ற எண்ணும் இந்த வாகனத்துக்கு வழங்கப்பட்டு உள்ளது.



[Image: amma-patrol-1565754829.jpg]

முதற்கட்டமாக சென்னையில் 35 ரோந்து வாகனங்கள் தரப்பட்டுள்ளன. அடுத்த வாரம் இந்த ரோந்து வாகனத்தை ஒப்படைக்க உள்ளது. அவைகளை முதல்வர் பழனிசாமிதான் துவக்கி வைக்க போகிறார். இப்படி பிங்க் நிற வாகன திட்டம் கேரளாவில் ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. இதற்கு அங்கு நல்ல வரவேற்பும் உள்ளது. அதனால்தான் நமக்கும் இப்படி ஒரு ஏற்பாட்டினை அரசு செய்துள்ளது.


குழந்தைகள் பெண்கள் மட்டுமில்லை.. வயசானவர்களுக்கும் இந்த திட்டம் உதவும். பெரிய அளவு கொடூரங்களை நடக்க விடாமல் மட்டுமில்லை.. யாராவது பெண்களை கேலி செய்தாலே போதும்.. அதிரடியாக களத்தில் இறங்கி தடுப்பதுதான் இந்த பிங்க் முக்கிய வேலை. சென்னைக்கு பிறகு மற்ற மாவட்டங்களிலும் படிப்படியாக இந்த பிங்க் வண்டி வர போகிறது என்பதால் பெண்கள், குழந்தைகளுக்கு ஒரு நிம்மதி பெருமூச்சு ஏற்பட்டு உள்ளது
first 5 lakhs viewed thread tamil
Like Reply
[Image: z1604-750x506.jpg]
வந்தார்... கதைத்தார்... முடித்தார்! முகேன் - அபி காதலுக்கு ஒரே மாலையில் 'மாலை' போட்ட வனிதா
Bigg Boss Tamil 3, Episode 51 Written Update: தர்ஷனோ, 'ஏன் முகேனை மட்டும் கார்னர் பண்றீங்க?' என்று வரிந்து கட்டி நின்றவர், 'எல்லா.
Bigg Boss Tamil 3 Episode 51 : ‘வந்தால் மகாலக்ஷ்மியே… என் வீட்டில் என்றும் அவள் ஆட்சியே…’ என்ற கமல்ஹாசனின் பாடலை 51வது நாள் காலை ஒலிக்கவிட்டதிலேயே, தற்போது வீட்டின் நிலைமையை, கச்சிதமாக சொல்லியுள்ளார் பிக்பாஸ்.
‘செத்துக் கெடுத்தான் சிவனாண்டி’-னு ஒரு பழமொழி இருக்கு. அதைக் கச்சிதமாக செய்திருக்கிறார் மக்களால் வெளியேற்றப்பட்டு மீண்டும் வீட்டிற்குள் சிறப்பு விருந்தினராக பங்கேற்றிருக்கும் வனிதா.
நேற்றைய நிகழ்ச்சியில் அபிராமி – முகேன் இடையே காதல் பஞ்சாயத்து நடத்தி, வீட்டையே ரணகளாமாக்கிஇருக்கிறார். எந்த முகேனை துரத்தி துரத்தி அபிராமி காதலித்தாரோ, அதே முகேனிடம் ஆக்ரோஷமாக சண்டை போட வைத்து, இருவரும், இனி பேச்சு வார்த்தையில்லை என்ற சொல்லும் அளவுக்கு கொண்டு வந்துவிட்டுவிட்டார்.
அதிலும், அபிராமியை நோக்கி முகேன் ஆவேசமாக நாற்காலியை தூக்கியது எல்லாம் வேற ரகம். அடிதடி சண்டையாகி போலீஸ் கேஸில் முடிந்திருக்க வேண்டிய அந்த சம்பவம், மற்ற ஆண் போட்டியாளர்களின் தடுப்பணையால் தப்பித்தது.
பிரச்சனை என்னவெனில், ‘வெளியில் எனக்கு ஒரு நெருங்கிய தோழி இருக்கிறாள் என்று முகேன் சொல்லியும், அபிராமி அவரிடம் நெருங்கிப் பழகினார். அது தவறு தான். ஆனால், அவ்வாறு ‘நீ ஏன் நெருங்கிப் பழக விட்ட? அவள் உன் மேல் ஏறி விளையாடுவதெல்லாம் நட்பா? அவளை ஏன் அந்தளவுக்கு உன்னில் உரிமை எடுத்துக் கொள்ள அனுமதிச்ச?. அபிராமி தவறு செஞ்சான்னா, நீயும் தப்பு செஞ்சிருக்க’ என்பதே வனிதாவின் குற்றாச்சாட்டு.
சேரனும் இதே கருத்தில் உறுதியாக இருந்தார்.
ஆனால், முகேனோ ‘நான் தோழி இருக்கிறார் என்று சொல்லியும், அவள் என்னிடம் நெருங்கிப் பழகும் போது, அவளை நான் தடுக்கவா முடியும்? அல்லது முகத்திற்கு நேராக என்னிடம் பேசாதே என்று எப்படி சொல்ல முடியும்?’ என்ற ரீதியில் அந்த பஞ்சாயத்தில் தன வாதத்தை முன்வைத்துக் கொண்டிருக்க, அவருக்கு சாண்டியும், தர்ஷனும், கவினும் பக்க பலமாக நின்று ஆதரவு கொடுத்தார்கள்.
குறிப்பாக, எதற்கும் ரியாக்ஷன் காட்டாத சாண்டி, முகேன் விஷயத்தில் முதன் முதலாக டெரர் முகம் காட்டியிருக்கிறார். ‘ஏன் தேவையில்லாமல் எல்லாவற்றையும் கிண்டுகிறீர்கள்?’ என்று வனிதாவை நோக்கி அவர் சொன்ன வாக்கியத்தில், ஒரு குறிப்பிட்ட வார்த்தையை பிக்பாஸ் ‘மியூட்’ செய்யும் அளவுக்கு டென்ஷனாகிப் போனார்.
தர்ஷனோ, ‘ஏன் முகேனை மட்டும் கார்னர் பண்றீங்க?’ என்று வரிந்து கட்டி நின்றவர், ‘எல்லா மேட்டரையும் சொல்லு… சொல்லு’ என்று முகேனிடம் திரும்பி திரும்பி சொல்லிக் கொண்டிருந்தார்.
இது எல்லாவற்றுக்கும் மேலாக நம்ம கஸ்தூ அக்கா, முகேன் – அபி பஞ்சாயத்தை கோபிநாத் ரேஞ்சுக்கு ‘இப்போ நீங்க பேசுங்க’ , ‘இப்போ நீங்க உங்க தரப்பை சொல்லுங்க’-னு மைக் நீட்ட, ‘ஏங்க இது நீயா நானா ஷோ இல்லீங்க.. பேசாம உட்காருங்க என்று ஓப்பனாகவே கவின் சொல்ல, வடகிழக்கு பக்கம் ஒதுங்கினார் கஸ்தூரி.
முகேன் மேல் தவறு உள்ளது வனிதா கேள்வி எழுப்பியது சரிதான் என்றாலும், அதனை சம்பந்தப்பட்ட இருவரின் மானம் காற்றில் பறக்கும் அளவுக்கு செய்திருக்க தேவையில்லை. ஆனால், அந்த பஞ்சாயத்தில் ‘மய்யத்தில்’ இருப்பது வனிதாவாச்சே!.. பின்னே, ரணகளம் இல்லாமல் எப்படி?
எது எப்படியோ, காதல், செண்டிமெண்ட், ஒன்சைட் கேம் என்று போட்டியே இல்லாமல் சென்றுக் கொண்டிருந்த பிக்பாஸ் வீட்டில், பக்காவாக தயார் செய்யப்பட்ட வனிதா, தனது வழக்கமான 50 ரூபாய் கூலிக்கு 5000 ரூபாய் உழைப்பு ஃபார்முலாவில் வீட்டை தக தகக்க வைத்திருக்கிறார். நம்ம ஆடியன்ஸும் அதைத்தானே எதிர்பார்க்குறங்க!!
ஆனா, கடைசி வரை அந்த ‘எல்லா மேட்டரையும்’ முகேன் சொல்லவேயில்லையப்பா!
first 5 lakhs viewed thread tamil
Like Reply
மாவட்ட ஆட்சியருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக வீடியோ வெளியிட்ட காவல்துறை..!

[Image: collector_5.png]

காஞ்சிபுரம் அத்திரவரதர் கோயிலில் பக்தர்கள் மத்தியில் காவல் ஆய்வாளரை மாவட்ட ஆட்சியர் திட்டியதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் காவல் துறை தரப்பில் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
அத்திவரதர் வைபவத்துக்காகக் காஞ்சிபுரத்தில் கூட்ட நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், விஐபி  வரிசையில் உரிய பாஸ் இல்லாமல் பொது மக்களை அனுப்பியதாக, காவல் ஆய்வாளர் ஒருவரைக் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா ஒருமையில் பேசிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது. 
இதனைப் பார்த்த பலரும் மாவட்ட ஆட்சியர் பொன்னையாவுக்கு எதிராகக் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தற்போது மாவட்ட ஆட்சியர் பொன்னையாவிற்கு பதிலடி தரும் வகையில் காவல் துறை தரப்பில் புதிய வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. 
காஞ்சிபுரத்தில் அத்திவரதரை தரிசிக்க நாள்தோறும் இரண்டரை லட்சம் பக்தர்கள் வருகை புரிகின்றனர் என்பதையும் அவர்களுக்கு காவல்துறை வழங்கிவரும் சிறப்பான சேவை குறித்து இந்த வீடியோவில் விளக்கப்பட்டுள்ளது.
first 5 lakhs viewed thread tamil
Like Reply




Users browsing this thread: 169 Guest(s)