Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
மீண்டும் போட்டி தொடங்க ஆயத்தம் செய்யப்பட்ட காட்சி
அதன்பின் உணவு இடைவேளைக்குப்பின் மழை குறைந்து ஓரளவுக்கு வெளிச்சம் நிலவியது. இதையடுத்து, ஆட்டத்தை தொடர நடுவர்கள் முடிவு செய்து புதிய பந்தை எடுத்தனர்.
கம்மின்ஸ் 25 ரன்களுடனும், ஹேண்ட்ஸ்கம்ப் 28 ரன்களுடனும் ஆட்டத்தைத் தொடர்ந்தனர். 3-ம் நாளான நேற்று ஜடேஜா வீசிய ஓவரில் 3 பந்துகள் மீதம் இருந்தநிலையில் அதை வீசினார்.
அதன்பின் முகமது ஷமி பந்துவீச அழைக்கப்பட்டார். கம்மின்ஸ் ஓவரை எதிர்கொண்டார். 3-வது பந்தில் கம்மின்ஸ் க்ளீன் போல்டாகி 25 ரன்களில் வெளியேறினார்.
அடுத்து மிட்ஷெல் ஸ்டார்க் களமிறங்கி, ஹேண்டஸ்கம்ப்புடன் இணைந்தார். புதிய பந்து என்பதால், பும்ரா பந்துவீச அழைக்கப்பட்டார். பும்ரா வீசிய முதல் ஓவரில் ஸ்டார்க் திணறி, தத்துபித்து என்று சமாளித்தார்.
பும்ரா வீசிய 95 ஓவரில் விக்கெட் விழுந்தது. 4-வது பந்தில் ஹேண்ட்ஸ்கம்ப் ஸ்டெம்ப் தெறிக்க போல்டாகி, 37 ரன்களில் பெவிலியன் திரும்பினா
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் குல்தீப் யாதவ்
அடுத்து வந்த லயன், ஸ்டார்க்குடன் இணைந்தார். வந்தவேகத்தில் குல்தீப் யாதவ் சுழலில் எல்பிடபிள்யு முறையில் டக் அவுட்டில் லயன் வெளியேறினார். அடுத்து வந்த ஹேசல்வுட், ஸ்டார்க்குடன் இணைந்தார். இருவரும் நிதானமாக பேட் செய்தனர்.
குல்தீப் வீசிய 93-வது ஓவரில் அருமையான ஹேசல்வுட் அமைந்த கேட்சை விஹாரி தவறவிட்டார்.
ஸ்டார்க் 21 ரன்களிலும், லயன் 12 ரன்களில் களத்தில் உள்ளனர். 100 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 283 ரன்கள் சேர்த்துள்ளது
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
`கைகொடுத்த குல்தீப்; கடைசி நேரத்தில் சோதித்த கூட்டணி' - பாலோ ஆன் பெற்றது ஆஸ்திரேலியா!
சிட்னி டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 300 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியுள்ளது.
photo credit: @icc
விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, தற்போது ஆஸ்திரேலியாவில் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் மூன்று போட்டிகள் முடிவடைந்துவிட்டன. முதல் போட்டியிலும், மூன்றாவது போட்டியிலும் வென்ற இந்திய அணி, 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. சிட்னியில் நடைபெற்றுவரும் கடைசி டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணியின் புஜாரா மற்றும் பன்ட் ஆகியோரின் அபார சதத்தின் உதவியுடன் 622 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. ஆஸ்திரேலிய அணி தற்போது தனது முதல் இன்னிங்ஸை விளையாடி வருகிறது.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
photo credit: @icc
மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில், ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 236 ரன்கள் எடுத்திருந்தது. நான்காம் நாள் ஆட்டம் இன்று காலை தொடங்கவிருந்தது. ஆனால் மழையின் காரணமாக ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. மதிய உணவு இடைவேளை வரை ஆட்டம் தொடங்கப்படவில்லை. உணவு இடைவேளைக்கு பின் ஆட்டம் தொடங்கிய நிலையில், ஷமியின் ஓவரில் கம்மின்ஸ் போல்ட் ஆனார். தொடர்ந்து வந்த மற்ற ஆஸ்திரேலிய வீரர்களும் சிறிது நேரம் மட்டுமே தாக்கு பிடித்தன
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
photo credit: @bcci
கடைசி விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஹேஸல்வுட் - ஸ்டார்க் ஜோடி இந்திய பௌலர்களைச் சிறிது நேரம் சோதித்தனர். இருவரும் இந்திய அணியின் பந்துவீச்சில் நிதானமாக எதிர்கொண்டனர். இந்தக் கூட்டணி கடைசி விக்கெட்டுக்கு 40 ரன்கள் மேல் குவித்தது. இருப்பினும் இவர்களை குல்தீப் யாதவ் பிரித்தார். இதனால் ஆஸ்திரேலிய அணி 300 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளும் ஷமி, ஜடேஜா தலா இரண்டு விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரைவிட 322 ரன்கள் பின்தங்கிய நிலையில் பாலோ ஆன் பெற்றது ஆஸ்திரேலியா. முன்னதாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இரண்டாவது முறையாக 5 விக்கெட் எடுத்து அசத்தியுள்ளார் குல்தீப் யாதவ்.
இதற்கிடையே, பாலோ ஆன் பெற்ற பிறகு ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது. அப்போது போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் மீண்டும் தடைபட்டது. இதனால் நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி விக்கெட் இழப்பு இன்றி 6 விக்கெட்டுகள் எடுத்திருந்தது.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
``திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து!” -தலைமைத் தேர்தல் ஆணையம் உத்தரவு
கஜா புயல் நிவாரணப் பணிகள் முழுமையாக நிறைவுபெறாத நிலையில், திருவாரூரில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தால், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் கிடைப்பதிலும் சிக்கல் ஏற்படும் எனத் தமிழக அரசியல் கட்சிகள் இடைத்தேர்தலை நடத்த எதிர்ப்புத் தெரிவித்தன. மேலும், எம்.எல்.ஏ-க்கள் தகுதியிழப்பு தீர்ப்பால் காலியாக இருக்கும் 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்படாதது குறித்துப் பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பினர்.
எனினும் தி.மு.க, அ.ம.மு.க, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்தன. ஆளும் அ.தி.மு.க தனது வேட்பாளரை இன்னமும் அறிவிக்கவில்லை. இன்று அ.தி.மு.க வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்றும் கூறப்பட்டது.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
இந்த நிலையில், திருவாரூர் இடைத்தேர்தலை ஒத்திவைக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா, திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாரிமுத்து, ரத்தினக்குமார் ஆகியோர் சார்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதி எஸ்.கே.கவுல் ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வர இருக்கிறது.
இந்த நிலையில், இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம், திருவாரூர் தொகுதிக்கு அறிவிக்கப்பட்ட தேர்தலை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. மாநிலத் தேர்தல் ஆணையமும் மாவட்ட அதிகாரிகளும் இடைத்தேர்தல் தொடர்பாக எடுத்த அனைத்து நடவடிக்கைகளும் ரத்துசெய்யப்படுவதாகவும், இடைத்தேர்தல் பணிகளை நிறுத்துமாறும் தமிழகத் தேர்தல் அதிகாரிக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
முன்னதாக, தி.மு.க தலைவர் ஸ்டாலின், `திருவாரூர் இடைத்தேர்தல்குறித்து இந்திய தேர்தல் ஆணையம் கேட்டுள்ள அறிக்கையை, அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் திருவாரூர் மாவட்டத்துக்குட்பட்ட முக்கியப் பிரமுகர்கள், விவசாய சங்கப் பிரதிநிதிகளின் கருத்துகளைக் கேட்டு, மாவட்டத் தேர்தல் அதிகாரி அறிக்கை அனுப்ப வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்’ எனக் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், கடந்த சனிக்கிழமை முதல்வர் பழனிசாமியைச் சந்தித்த பா.ஜ.க மாநிலத் தலைவர் தமிழிசை, ``திருவாரூர் இடைத்தேர்தல் நடந்தாலும் நடக்கலாம் அல்லது நடக்காமலும் போகலாம்.இடைத்தேர்தலைவிட மக்களவைத் தேர்தலில் அதிக கவனம் செலுத்துவதே எங்கள் நோக்கம்’’ என்றும் குறிப்பிட்டிருந்தார்.
தேர்தல் ரத்துசெய்யப்பட்டது அதிர்ச்சி அளிப்பதாகவும், கஜா புயல் நிவாரணம் முறையாக வழங்கப்பட வேண்டும் என்பதால் இந்த ரத்து வரவேற்கத்தக்கது எனவும் பல்வேறு கட்சிகள் தங்களது கருத்துகளைத் தெரிவித்துவருகின்றனர்.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
பொய்த்தது பருவமழை; வறண்டன ஏரிகள்; மிகப்பெரிய குடிநீர் பஞ்சத்தில் சிக்கப் போகும் சென்னை!
சென்னை: ஏரிகளில் நீர் வற்றிக் காணப்படுவதால் மிகப்பெரிய குடிநீர் பஞ்சத்தில் சென்னை சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் நடப்பாண்டு வடகிழக்கு பருவமழை பொய்த்துவிட்டது. பல மாவட்டங்களில் குறைவான மழையே பதிவாகியுள்ளது. குறிப்பாக சென்னையில் மிகக் குறைவான மழையே பதிவாகி இருக்கிறது. அதாவது வடகிழக்கு பருவமழையில் சென்னையில் 84 செ.மீ மழை பெய்திருக்க வேண்டும். ஆனால் 35 செ.மீ அளவே பெய்துள்ளது.
முன்னதாக 2003ல் 31 செ.மீ மழை என குறைவாக பதிவாகி இருந்தது. இந்நிலையில் 15 ஆண்டுகளுக்கு பிறகு, தற்போது அதே சூழல் ஏற்பட்டுள்ளது. ஓராண்டிற்கு சென்னை மாவட்டத்தில் 140 செ.மீ மழை பெய்ய வேண்டும். ஆனால் கடந்த ஆண்டு 83 செ.மீ மட்டுமே மழை பெய்துள்ளது.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
குடிநீர் ஏரிகள்
2, 3 புயல்கள் வந்து போன நிலையிலும், சென்னையில் சொல்லிக் கொள்ளும்படி மழை இல்லை. இதனால் சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஏரிகளின் நீர்மட்டம் கணிசமாக குறைந்துள்ளது.
ஏரிகளின் நீர் இருப்பு:
* செம்பரம்பாக்கம் - 96 மில்லியன் கன அடி
* பூண்டி - 287 கன அடி
* சோழவரம் - 48 மில்லியன் கன அடி
* புழல் - 913 மில்லியன் கன அடி
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
செங்குன்றம் ஏரி
மொத்தம் 11.25 டி.எம்.சி கொள்ளளவு கொண்ட 4 ஏரிகளிலும், தற்போது 1.351 டி.எம்.சி தண்ணீர் மட்டுமே உள்ளது. இன்னும் ஒரு மாதத்திற்கு மட்டுமே சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய தண்ணீர் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் ஆந்திராவில் இருந்து கிருஷ்ணா நீரைப் பெற, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரி
கடல் நீரை குடிநீராக மாற்றும் இரண்டு திட்டங்களுக்கு, தமிழக அரசு பல ஆண்டுகளுக்கு முன் திட்டமிட்டது. இதற்காக ரூ.7,500 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டது. ஆனால் அந்த திட்டம் இதுநாள் வரை கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுத்திருந்தால், சென்னை மிகப்பெரிய தண்ணீர் பஞ்சத்தில் இருந்து ஓரளவு தப்பிப் பிழைத்திருக்க வாய்ப்புண்டு.
பொங்கல் இலவசப் பொருட்களுக்காக தமிழக அரசு ரூ.2,300 கோடியை ஒதுக்கியுள்ளது. ஆனால் மக்களின் அத்தியாவசியத் தேவையான குடிநீருக்கு எந்தவித முன்னேற்பாடுகளும் செய்யாமல் அலைக்கழித்து வருகிறது
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
எல்லைச் சுவருக்காக அவசர நிலையைப் பிரகடனம் செய்வேன்: ட்ரம்ப் மிரட்டல்
எல்லைச் சுவருக்காக நான் அவசர நிலையைப் பிரகடனம் செய்வேன் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுகுறித்து வெள்ளை மாளிகையில் பத்திரிகையாளர்களிடம் ட்ரம்ப் பேசும்போது, ''அடுத்து வரும் நாட்களைப் பொறுத்து நான் தேசிய அளவில் அவசர நிலையைப் பிரகடனப்படுத்துவேன்'' என்றார்.
எல்லைச் சுவருக்காக ராணுவ நிதியைப் பயன்படுத்தும் முடிவில் ட்ரம்ப் இருப்பதாக வெள்ளை மாளிகை அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்.
மேலும், அமெரிக்க நாடாளுமன்றம் விரைவில் மெக்சிகோ எல்லையில் கட்டப்படவுள்ள சுவருக்கான நிதி அளிக்க ட்ரம்ப் வேண்டுகோள் விடுத்துள்ளதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
முன்னதாக, அமெரிக்க- மெக்சிகோ எல்லையில் அகதிகள் நுழைவதைத் தடுக்கும் வகையிலும், அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புக்கு வழி செய்யும் வகையிலும் சுவர் எழுப்ப அதிபர் ட்ரம்ப் திட்டமிட்டார். இதற்காக 500 கோடி டாலர் நிதி ஒதுக்கக் கோரினார்.
ஆனால், அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அதிபர் ட்ரம்ப்பின் கோரிக்கைக்கு ஜனநாயகக் கட்சியின் எம்.பி.க்கள் செவிசாய்க்கவில்லை. அதற்கு ஒத்துழைக்க மறுத்துவிட்டனர். இதனால், இந்த நிதியாண்டுக்குச் செலவீனத்துக்கான நிதி மசோதாவுக்கு ஒப்புதல் அளித்த இரு அவைகளிலும் இருந்த ஜனநாயகக் கட்சியினர் மறுத்துவிட்டனர்.
இதனால் அமெரிக்காவில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி ஷட்டவுன் தொடங்கி 3 வாரமாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. 8 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஊதியமின்றிப் பணியாற்ற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்று இந்தியா வரலாற்று சாதனை
சிட்னி,
இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 4–வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்னியில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த இந்தியா 7 விக்கெட்டுக்கு 622 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா 104.5 ஓவர்களில் 300 ரன்களுக்கு ஆல்–அவுட் ஆகி ‘பாலோ–ஆன்’ ஆனது. ஸ்டார்க் 29 ரன்களுடன் (55 பந்து, 3 பவுண்டரி) அவுட் ஆகாமல் இருந்தார். இந்திய தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு பாலோ–ஆன் வழங்கியதால் 322 ரன்கள் பின்தங்கிய நிலையில் ஆஸ்திரேலிய அணி 2–வது இன்னிங்சை தொடங்கியது. அந்த அணி 4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 6 ரன் எடுத்திருந்த போது, மழை மேகம் திரண்டு இருள் சூழ்ந்ததால், போதிய வெளிச்சம் இல்லை என்று கூறி போட்டியை நடுவர் நிறுத்தினார். நீண்ட நேரம் மோசமான வானிலையே நீடித்தது. மாலையில் மழை தூரலும் விழுந்ததால் அத்துடன் 4–வது நாள் ஆட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது. நேற்றைய தினம் வெறும் 25.2 ஓவர்கள் மட்டுமே பந்து வீசப்பட்டன.
இந்த நிலையில். 5 ஆம் நாள் ஆட்டமும் மழையால் பாதிக்கப்பட்டது. இதையடுத்து, ஒரு பந்து கூட வீசப்படாமல் 5-ஆம் நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதன்மூலம் இந்தப் போட்டி டிராவில் முடிவடைந்தது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்றது. ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணி டெஸ்ட் தொடரை வெல்வது இதுதான் முதல் தடவையாகும். 1947–ம் ஆண்டு இறுதியில் முதல்முறையாக ஆஸ்திரேலியாவுக்கு பயணித்த இந்திய அணி அங்கு தனது கனவை 12–வது முயற்சியில், அதாவது 71 ஆண்டுகளுக்கு பிறகு நனவாக்கியுள்ளது.
ஆட்ட நாயகன் விருதும், தொடர் நாயகன் விருதும் இந்திய வீரர் புஜாராவுக்கு வழங்கப்பட்டது.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
வாட்ஸ்ஆப் கோல்டு வைரஸ்: உஷார் மக்களே.!
வாட்ஸ்ஆப் கோல்டு
இப்போது புதிதாக ஒரு பிரச்சணை வந்துள்ளது, அது என்னவென்றால் வாட்ஸ்ஆப் கோல்டு என்ற அப்டேட் லிங்க், இந்த லிங்க் பல்வேறு மக்களின் வாட்ஸ்ஆப் செயலியில் அதிகமாக பரவி வருகிறது, இது பெரும் பிரபலங்கள் மட்டும் பயன்படுத்தும் வாட்ஸ்ஆப் கோல்டு என்ற அப்டேட் தற்போது கசிந்துள்ளது.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
வைரஸ்
வாட்ஸ்ஆப் கோல்டு என்ற அப்டேட் லிங்கை- அப்டேட் செய்தால் நாம் தனிச்சிறப்புகள் வசதிகள் போன்ற பலவற்றை வாட்ஸ்ஆப்பில் பெறமுடியும் என்ற வாசகமும் அனுப்பப்படுகிறது. இந்த லிங்க் மூலம் அப்டேட் செய்ய முயற்சிக்கும்
நபர்களின் செல்போன்களில் வைரஸ்கள் அதிகளவு ஊடுறுவுகின்றன.
வங்கி சார்ந்த தகவல்கள்
இந்த வைரஸ் மூலம் உங்கள் வாட்ஸ்ஆப் உரையாடல்களை கண்காணிக்க முடியும், பின்பு தனிப்பட்ட தகவல் பரிமாற்றங்கள் கொண்டு நீங்க மிரட்டப்படலாம். பின்ப வங்கி சார்ந்த தகவல்களையும் இந்த வைரஸ் திருடும் என்பது குறிப்பிடத்தக்கது,எனவே இதை தவிர்ப்பது மிக மிக நல்லது.
புதிய அப்டேட் ஐ.ஓ.எஸ்:
வாட்ஸ்அப் ஐ.ஓ.எஸ். இயங்குதளத்தில் பீட்டா பயனர்களுக்கு புதிய அம்சம் வழங்கப்பட்டுள்ளது, இந்த அம்சம் என்னவென்றால் புகைப்படங்கள், வீடியோக்கள் அல்லது ஜிஃப்களில் ஸ்டிக்கர்களை சேர்க்க முடியும். இதில் பயனர்கள் நேரம், இருப்பிடம் மற்றும் மூன்றாம் தரப்பு செயலிகளில் கிடைக்கும் தனிப்பட்ட ஸ்டிக்கர்களை பயன்படுத்த முடியும். இந்த அப்டேட்டில் ஸ்டிக்கர்களை தேர்வு செய்ய புதிய வடிவமைப்பு கொண்ட பகுதி வழங்கப்படுகிற
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
வால்பாறையில் 2 நாட்கள் உறைபனி.. அறிவித்தது சென்னை வானிலை மையம்
சென்னை: வால்பாறை, அதன் சுற்றுவட்டார மலை பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்துக்கு உறை பனி தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
கோவை, நீலகிரி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் உள்ள மலை பகுதிகளில் கடந்த சில நாட்களாக நீடித்து வந்த உறை பனி, நேற்று முதல் கணிசமான அளவில் குறைந்து வருகிறது. இருந்தபோதிலும், இந்த நிலை வால்பாறை, அதன் சுற்றுவட்டார மலை பகுதிகளில் மட்டும் அடுத்த இரண்டு இரவுகளுக்கு தொடரும்.
தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த நான்கு நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும். சென்னையை பொறுத்த வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்சமாக 30 டிகிரி செல்சியஸூம், குறைந்தபட்சமாக 21 டிகிரி செல்சியஸ் வரையும் வெப்பநிலை பதிவாகும்.
மேலும், பபுக் புயல் அந்தமான் கடல் பகுதியில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி, போர்ட் பிளேயர்க்கு 130 கிலோ மீட்டர் தொலைவில் மண்டலமாக நிலை கொண்டு உள்ளது என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக திறக்க முடியாது - தூத்துக்குடி கலெக்டர்
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தொடர்பாக கடந்த 15-12-18 அன்று தேசிய பசுமை தீர்ப்பாயம் ஒரு உத்தரவு பிறப்பித்தது. அந்த உத்தரவு வந்த உடன், முதல்-அமைச்சர் இது இறுதி உத்தரவு அல்ல, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என்று அறிவித்தார். அதன்படி தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவில் உள்ள அனைத்து விவரங்களையும் ஆய்வு செய்து, சட்டப்படி மேல்முறையீடு செய்யப்பட்டு உள்ளது.
இந்த வழக்கு விசாரணைக்கு ஏற்கப்பட்டு உள்ளது. அதன்பேரில் உச்சநீதிமன்றம் எதிர்மனுதாரர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு உள்ளது. மேலும் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் உடனே ஆலையை திறக்க எந்த இடத்திலும் கூறவில்லை. உச்சநீதிமன்றத்தில் சட்ட வல்லுநர்கள் மூலம் வழக்கு நடத்தப்படும். இந்த வழக்கு விசாரணை முடியும் வரை இதே நிலை(ஸ்டேட்டஸ் கோ) நீடிக்கும். உடனடியாக ஆலையை திறப்பதற்கான எந்த உத்தரவும் உச்ச நீதிமன்றத்தில் இருந்து வரவில்லை.
மதுரை ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்தாலும், அரசு தொடர்ந்த வழக்கு விசாரணை நடக்கிறது. தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவில் பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டு உள்ளன. அந்த நிபந்தனைகளை ஆலை நிர்வாகம் சரி செய்த பிறகு மாசுகட்டுப்பாட்டு வாரியத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அதன்பிறகு மாசுகட்டுப்பாட்டு வாரியம் முடிவு செய்யும். தற்போது எந்தவிதமான முடிவும் எடுக்கவில்லை. நிபந்தனைகளை ஸ்டெர்லைட் நிர்வாகம் நிறைவேற்றியதாகவும் தெரியவில்லை
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
நாங்கள் சட்டரீதியாக தொடர்ந்து போராடி வருகிறோம். ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக்கூடாது என்பது அரசின் முடிவு ஆகும். சட்ட வல்லுனர்களுடன் ஆலோசித்து அடுத்தக்கட்ட முடிவு எடுக்கப்படும்.
இவ்வாறு கலெக்டர் கூறினார்.
ஸ்டெர்லைட்டுக்கு எதிரான தமிழர்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி நிருபர்களிடம் கூறியதாவது:-
ஸ்டெர்லைட் ஆலைக்கு சாதகமான இடைக்கால உத்தரவை உச்சநீதிமன்றம் வழங்கி உள்ளது. ஸ்டெர்லைட்டுக்கு எதிராக அமைதி வழி போராட்டத்தில் மக்கள் பங்கேற்றனர். அரசு நடவடிக்கையால் 13 உயிர்களை இழந்து உள்ளோம். இப்படிப்பட்ட நிலையில் உச்சநீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவு ஜனநாயகத்தின் மீதான மக்களின் நம்பிக்கைக்கு எதிராகவே அமைந்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை தூத்துக்குடியில் இருந்து அகற்றப்படும் வரை மக்களின் அமைதி வழி போராட்டங்கள் தொடரும்.
இவ்வாறு அவர் கூறினார். #SterlitePlant #ThoothukudiCollecto
•
|