Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
பாகிஸ்தான் எடுத்துள்ள அவசர நடவடிக்கைகளை மாற்றிக்கொள்ள வேண்டும் - இந்திய வெளியுறவுத்துறை

[Image: 201908081307562621_Ministry-of-External-...SECVPF.gif]
புதுடெல்லி

காஷ்மீருக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த மத்திய அரசு, அந்த மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாகவும் பிரிக்கிறது. இதற்கு பாகிஸ்தான் ஏற்கனவே கண்டனமும், எதிர்ப்பும் தெரிவித்தது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் பேசும்போது, இதுகுறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் மூலம் பொதுச்சபையில் எழுப்புவோம் என்று தெரிவித்தார்.

இந்த நிலையில் பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு கவுன்சில்  கூட்டத்தில், இந்தியாவுடன் தூதரக உறவுகளை துண்டித்துக்கொள்வது என்றும், இரு நாடுகள் இடையேயான வர்த்தகத்தை தற்காலிகமாக நிறுத்திவைப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.

பாகிஸ்தான் நேற்று அறிவித்த நடவடிக்கைகளுக்கு இந்திய அரசு வருத்தம் தெரிவித்துள்ளது. தூதரக உறவுகளை துண்டித்துக்கொள்வது  குறித்து  பாகிஸ்தான் மறுபரிசீலனை செய்ய வேண்டும். பாகிஸ்தான் எடுத்துள்ள அவசர நடவடிக்கைகளை மாற்றிக்கொள்ள வேண்டும். இது இரு நாட்டு நல்லூறவுகளையும் பாதிக்கும்  என இந்திய வெளிவிவகார துறை வலியுறுத்தி உள்ளது.

வெளிவிவகார துறை மேலும் கூறி இருப்பதாவது : 

ஜம்மு-காஷ்மீரில் எந்தவொரு அதிருப்தியையும் தீர்க்கக்கூடிய இத்தகைய வளர்ச்சி முயற்சிகள் பாகிஸ்தானில் எதிர்மறையாக உணரப்படும் என்பதில் ஆச்சரியமில்லை, இதுபோன்ற விவகாரங்களை  அதன் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை நியாயப்படுத்த பயன்படுத்தியுள்ளது.

இந்தியாவுடனான இருதரப்பு உறவுகள் தொடர்பாக  ஒரு தலைப்பட்ச நடவடிக்கைகளை எடுக்க பாகிஸ்தான் முடிவு செய்துள்ளதாக நாங்கள் எதிர்பார்த்தோம்  இதில் நமது தூதரக  உறவுகள் ரத்து செய்யப்படுவதும்  அடங்கும்.

370 வது பிரிவு தொடர்பான சமீபத்திய முன்னேற்றங்கள் முற்றிலும் இந்தியாவின் உள் விவகாரம். இந்திய அரசியலமைப்பு எப்போதுமே ஒரு இறையாண்மை விஷயமாக இருக்கும். பிராந்தியத்தின் எச்சரிக்கை பார்வையைத் தூண்டுவதன் மூலம் அந்த அதிகார வரம்பில் தலையிட முற்படுவது ஒருபோதும் வெற்றிபெறாது என அதில் கூறப்பட்டு உள்ளது.
first 5 lakhs viewed thread tamil
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
போதையில் பாவாடை-ரவிக்கை அணிந்து வரும் லல்லு பிரசாத் மகன் - மனைவி புகார்


[Image: 201908081154242805_Tej-Pratap-Yadav-is-a...SECVPF.gif]

லக்னோ

லாலு பிரசாத் யாதவ் மகன் தேஜ் பிரசாத் யாதவுக்கும், அம்மாநில மற்றொரு முன்னாள் முதல்வர் குடும்பத்தை சேர்ந்த ஐஸ்வர்யா ராய்க்கும் கடந்த ஆண்டு மே மாதம் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது.

இந்த திருமணம் முடிந்த ஐந்தே மாதங்களில் விவாகரத்து கோரி தேஜ் பிரதாப் யாதவ் நீதிமன்றத்தில் மனு அளித்தார். இருவரது குடும்பத்தினரும் இணைப்பு முயற்சியில் ஈடுபட்டனர். அம்முயற்சி வெற்றி பெறவில்லை. இந்நிலையில் ஐஸ்வர்யா ராய் நீதிமன்றத்தில் ஒரு பிரமாண பத்திரம் அளித்துள்ளார். அதில் ஐஸ்வர்யா ராய், எனக்கும் தேஜ் பிரதாப் யாதவுக்கும் திருமணம் நடந்த உடனேயே அவர் ஒரு போதை அடிமை என தெரிந்து கொண்டேன்.

அவர் போதையின் விளைவால் தம்மைச் சிவபெருமானின் அவதாரம் எனக் கூறிக் கொள்வார். அத்துடன் அவர் ராதையைப் போலவும் கிருஷ்ணரைப் போலவும் உடை அணிவார். ஒரு முறை போதை மருந்தை உட்கொண்ட பிறகு அவர் ஒரு பாவாடை மற்றும் ரவிக்கை அணிந்து விக் வைத்துக் கொண்டு தம்மை ராதை எனக் கூறிக் கொண்டார்.

[Image: 201908081154242805_Tej%20Pratap%20Yadav02._L_styvpf.gif]

இது குறித்து நான் என் புகுந்த வீட்டாரிடம் பலமுறை கூறினேன். ஆனால் அவர்களால் எனக்கு உதவ முடியவில்லை. முக்கியமாக நான் இதை எனது மாமியார் மற்றும் நாத்தனாரிடம் கூறினேன். அவர்கள் இனி தேஜ் அவ்வாறு நடக்காமல் பார்த்துக் கொள்வதாக ஆறுதல் கூறினார்கள். ஆனால் தேஜ் அவர்கள் பேச்சுக்குக் கட்டுப்படவில்லை. நான் அவரிடம் நேரடியாகவே இந்த பழக்கங்களை விட்டு விடுமாறு கேட்டுக் கொண்டேன்.

அவர் சிவ பெருமானின் பிரசாதம் கஞ்சா, அதை விட முடியாது என்று கூறி விட்டு ராதையே கண்ணன் மற்றும் கண்ணனே ராதை என தத்துவம் பேசத் தொடங்கி விட்டார். அது மட்டுமின்றி அவர் எனது கல்வித் தகுதி குறித்தும் தரக்குறைவாகப் பேசுவார். நான் எத்தனை படித்திருந்தாலும் எனது பணி சமைப்பதும், குடும்பத்தை கவனிப்பதும் தான் என என்னை மட்டம் தட்டுவார். எனது புகுந்த வீட்டினருக்கும் என்னைக் குறித்து அதே எண்ணம் இருந்ததால் நான் மனதளவில், உடலளவில் மற்றும் உணர்ச்சிபூர்வமாகக் கொடுமைப் படுத்தப்பட்டுள்ளேன். எனக்கு இதிலிருந்து மீட்பு தேவை என்று குறிப்பிட்டுள்ளார்.
first 5 lakhs viewed thread tamil
Like Reply
[color=var(--title-color)]`46 ஆண்டுகளாக உன் பின்னால் ஓடிக்கொண்டிருக்கிறேன்' - சுஷ்மா குறித்து காதல் கணவர் உருக்கம்![/color]

[color=var(--title-color)]கடந்த 46 ஆண்டுகளாக நான் உன் பின்னால் ஓடிக்கொண்டிருக்கிறேன். எனக்கு ஒன்றும் இப்போது 19 வயது கிடையாது.[/color]
[Image: vikatan%2F2019-08%2F86db8810-c70c-4e8d-9...2Ccompress][color=var(--meta-color)]கணவர் கௌஷல் உடன் சுஷ்மா ஸ்வராஜ் ( twitter )[/color]
[color=var(--content-color)]மத்திய அமைச்சராக இருந்த சுஷ்மா ஸ்வராஜ் மறைவு அக்கட்சியினரைத் தாண்டியும் பல பேரிடம் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதற்கு காரணம் அவர் செய்த நற்செயல்கள். பா.ஜ.கவின் மிகப்பெரிய பெண் ஆளுமையாக இருந்த சுஷ்மா தொடர்ச்சியாக மக்களவை உறுப்பினராக தேர்வாகி வந்தார். கடந்த அமைச்சரவையில் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்தபோது அவரது செயல்பாடுகள் கட்சி... நாடுகள்... கடந்து வெகுவாகப் பாராட்டப்பட்டது. வெளிநாடுகளில் பிரச்னைகளில் சிக்கித்தவித்த இந்தியர்கள் மீண்டும் தாயகம் திரும்புவதற்கான நடவடிக்கையில் துரிதமாகச் செயல்பட்டார்.[/color]
[color=var(--content-color)][Image: vikatan%2F2019-08%2Ff7bc9d1a-d76a-4f3f-9...2Ccompress]
கணவர் கௌஷல் உடன் சுஷ்மா ஸ்வராஜ்[color=var(--meta-color)]twitter[/color]
[/color]
[color=var(--content-color)]சுஷ்மா ஸ்வராஜை அணுகுவது மிகவும் எளிதாக இருந்தது. ட்விட்டரில் தங்கள் பிரச்னைகள் குறித்து பதிவிட்டவர்களுக்கு தேடிச் சென்று அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்துகொடுத்தார். அது இந்தியர்களாக இருந்தாலும் அல்லது வெளிநாட்டவர்களாக இருந்தாலும் சரி. அவர்களுக்கான உதவி தேடிச் செல்லும். ஆனால் எண்ணங்கள் இருந்தாலும் உடல்நிலை அவருக்கு ஒத்துழைக்கவில்லை. அதன்காரணமாக சமீபத்தில் நடந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து ஒதுங்கினார். இதுபலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தேர்தலில் போட்டியிடாவிட்டாலும் அமைச்சரவையில் இடம்கிடைக்கும் எனப் பேசப்பட்டது.[/color]

[color=var(--content-color)]ஆனால் அதையும் மறுத்து உருக்கமாக ட்விட்டரில் பதிவிட்டார். இந்தப் பதிவு வெளியான பிறகு, ``நீங்கள் செய்த உதவிகள் ஏராளம். நிச்சயம் அதை யாரும் மறக்க மாட்டார்கள். நீங்கள் செய்த நல்ல காரியங்கள் உங்களை எப்போதும் பாராட்டும்'' என வெளிநாடு வாழ் இந்தியர்கள் அனைவரும் அவரை பாராட்டினர். சுஷ்மாவின் முடிவு அனைவருக்கும் ஏமாற்றம் அளித்தாலும் ஒருவர் மட்டும் அந்த முடிவை வரவேற்றார். அது அவரின் காதல் கணவர் ஸ்வராஜ் கௌஷல். தேர்தலில் போட்டியிடவில்லை எனக் கூறியதுமே அது தொடர்பாக கௌஷல் எழுதிய கடிதம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.[/color]
[color=var(--content-color)][Image: vikatan%2F2019-08%2F2e68b0ca-93d0-4dd2-b...2Ccompress]
கணவர் கௌஷல் உடன் சுஷ்மா ஸ்வராஜ்[color=var(--meta-color)]twitter[/color]
[/color]
[color=var(--content-color)]அதில், ``இனிமேல் தேர்தலில் போட்டியில்லை என்ற உனது முடிவுக்கு நன்றி சொல்லிக்கொள்கிறேன். மில்கா சிங் கூட ஓடுவதை நிறுத்திய ஒரு காலம் வந்ததை நினைவுபடுத்தி பார்க்கிறேன். இந்த மாரத்தான் 1977ல் தொடங்கியது என நினைக்கிறேன். அதற்குள் 41 ஆண்டுகள் ஆகிவிட்டது. கட்சி அனுமதிக்காத 1991, 2004ம் ஆண்டுகள் தவிர மற்ற அனைத்து முறையும் தேர்தலில் நீ போட்டியிட்டுவிட்டாய். உன்னுடைய 25 வயதில் இருந்து தேர்தல் ரேஸில் பங்கேற்று இருக்கிறாய். 41 ஆண்டுகளாக தேர்தல்களை எதிர்த்துப் போராடுவது ஒரு மாரத்தான் என்றே சொல்லலாம்.[/color]
first 5 lakhs viewed thread tamil
Like Reply
[color=var(--content-color)]ஆனால் மேடம்.... கடந்த 46 ஆண்டுகளாக நான் உன் பின்னால் ஓடிக்கொண்டிருக்கிறேன். எனக்கு ஒன்றும் இப்போது 19 வயது கிடையாது. நானும் மூச்சுத் திணறிக் கொண்டிருக்கிறேன்" எனப் பதிவிட்டுள்ளார். சுஷ்மாவின் மறைவை அடுத்து இந்தப் பதிவு தற்போது அதிகமாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது. ஹரியானா மாநிலத்தில் பிறந்தவர், சுஷ்மா ஸ்வராஜ்.[/color]
[color=var(--content-color)][Image: vikatan%2F2019-08%2F2251a6a9-ab02-4a5d-a...2Ccompress]
மனைவிக்கு இறுதி மரியாதை செலுத்தும் கௌஷல்[color=var(--meta-color)]ANI[/color]
[/color]
[color=var(--content-color)]டெல்லி சட்டக் கல்லூரியில் படித்தபோது அவரின் சக மாணவர் ஸ்வராஜ் கௌஷல். அப்போது, அன்றைய பிரதமர் இந்திரா காந்தியால் இந்தியாவில் எமர்ஜென்சி என்கிற அவசர நிலை கொண்டுவரப்பட்டது. அந்தக் காலகட்டத்தில்தான் இவர்கள் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இருவரும் அரசியல்ரீதியாக எதிரெதிர் கொள்கைகளைக் கொண்டவர்களாக இருந்தாலும் காதலால் இருவரும் வீட்டை எதிர்த்து திருமணம் செய்தனர்.[/color]
first 5 lakhs viewed thread tamil
Like Reply
first 5 lakhs viewed thread tamil
Like Reply
[color=var(--title-color)]இந்திய கிரிக்கெட்டை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்!’ - டிராவிட்டுக்காக கொதித்த கங்குலி[/color]

[color=var(--title-color)]கடந்த வாரம் ராகுல் டிராவிட்டுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. அவருக்கு எதிராக சொல்லப்பட்டிருக்கும் புகார் தொடர்பாக அவர் இரண்டு வாரத்தில் பதிலளிக்க வேண்டும்.[/color]
[Image: vikatan%2F2019-05%2Ffa58334a-9989-4814-b...2Ccompress][color=var(--meta-color)]கங்குலி[/color]
[color=var(--content-color)]இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு சவால்களைச் சந்தித்துவருகிறது. பல முன்னாள் வீரர்கள் ஐபிஎல் அணி மற்றும் பிசிசிஐ-யின் சில முக்கிய பொறுப்பு என ஆதாயம் தரும் இரட்டைப் பதவிகளில் இருப்பதாக குற்றச்சாட்டு அடிக்கடி வருவது உண்டு.[/color]
[color=var(--content-color)][Image: vikatan%2F2019-05%2F4b866eea-b540-4c41-9...2Ccompress]
கங்குலி, சச்சின் லட்சுமண்
[/color]
[color=var(--content-color)]இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி, சச்சின், லட்சுமண் ஆகியோரும் இந்தக் குற்றச்சாட்டில் சிக்கினர். இதற்கான விளக்கங்களும் அந்த வீரர்கள் அளித்தனர். சச்சின் தான் மும்பை அணியின் ஆலோசகரா இருப்பதற்கு எந்தப் பணமும் வாங்குவதில்லை என்று தெரிவித்தார். லட்சுமண், தான் இரு பொறுப்புகளில் இருப்பது சட்ட விதிகளுக்கு முரண் என்றால் ஒன்றில் இருந்து விலகத் தயார் என்று அறிவித்தார்.[/color]
[color=var(--content-color)]இந்நிலையில், தற்போது இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் மீதும் இதே குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மத்திய பிரதேச கிரிக்கெட் சங்கத்தின் உறுப்பினரான சஞ்சீவ் குப்தா ஒரு புகாரை ராகுல் டிராவிட்டுக்கு எதிராகக் கொடுத்துள்ளார். இவர் தான் சச்சின் மற்றும் லட்சுமணுக்கு எதிராகவும் புகார் அளித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.[/color]
[color=var(--content-color)][Image: vikatan%2F2019-05%2F33716a11-c7dc-4018-b...2Ccompress]
ராகுல் டிராவிட்
[/color]
[color=var(--content-color)]இந்தப் புகாரைத் தொடர்ந்து பிசிசிஐ-யின் நன்நெறி அதிகாரியான ஓய்வுபெற்ற நீதிபதியான டி.கே ஜெயின், டிராவிட்டுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். சஞ்சீவ் குப்தா தன்னுடைய புகாரில், ``நேஷ்னல் கிரிக்கெட் அகாடமியின் தலைவராகவும், இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவராகவும் ஆதாயம் தரும் இரு பதவிகளில் டிராவிட் இருக்கிறார்” எனக் குறிப்பிட்டுள்ளா.

[color=var(--content-color)]இது தொடர்பாக பேசிய டி.கே ஜெயின், ``கடந்த வாரம் ராகுல் டிராவிட்டுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. அவருக்கு எதிராக சொல்லப்பட்டிருக்கும் புகார் தொடர்பாக அவர் இரண்டு வாரத்தில் பதிலளிக்க வேண்டும். அவரது பதிலை வைத்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என்றார்.[/color]
[color=var(--content-color)][Image: vikatan%2F2019-08%2F8b1b927d-81bc-4af9-a...2Ccompress]
டிராவிட் - கங்குலி
[/color]
[color=var(--content-color)]இந்நிலையில் டிராவிட்டுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது தொடர்பாக இந்திய அணியின் கங்குலி கடுமையாக சாடியுள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் இது தொடர்பாக ட்வீட் செய்துள்ள கங்குலி, ``இந்திய கிரிக்கெட்டின் புதிய ஃபேஷன்... இந்த `ஆதாய முரண்’... செய்திகளில் தொடர்ந்து இடம்பெறுவதற்கான சிறந்த வழி. இந்திய கிரிக்கெட்டுக்கு கடவுள்தான் உதவ வேண்டும்” எனக் கடுமையாகச் சாடியுள்ளார். முன்னதாக கங்குலியும் பெங்கால் கிரிக்கெட் சங்கத்தின் பதவி மற்றும் ஐபிஎல்-லில் டெல்லி அணிக்கு ஆலோசகர் என இரு ஆதாயம் தரும் பதவியில் இருப்பதாக குற்றச்சாட்டை எதிர்கொண்டார்.[/color]

[color=var(--content-color)]கங்குலியின் கருத்தை ஹர்பஜன் சிங்கும் வரவேற்றுள்ளார். கங்குலியின் ட்வீட்டை குறிப்பிட்டு, ``இது உண்மையா....? நாம் எங்கே செல்கிறோம் என்றே தெரியவில்லை. இந்திய கிரிக்கெட்டுக்கு இவரை (டிராவிட்டை) விட சிறந்த நபர் கிடைக்க மட்டார். இதுபோன்ற லெஜண்டுகளுக்கு நோட்டீஸ் அனுப்புவது என்பது அவர்களை அவமதிக்கும் செயல். கிரிக்கெட்டின் மேம்பாட்டுக்கு அவர்களின் சேவை தேவை.. ஆம், இந்திய கிரிக்கெட்டை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்” என பதிவிட்டுள்ளார்.[/color]
[/color]
first 5 lakhs viewed thread tamil
Like Reply
நீலகிரியை துவம்சம் செய்தது வரலாறு காணாத மழை.. அவலாஞ்சியில் ஒரே நாளில் 92 செமீ மழை பொழிவு

உதகை: நீலகிரி மாவட்டத்தில் வரலாறு காணாத அளவுக்கு மழை பெய்துள்ளது. அவலாஞ்சியில் கடந்த 24 மணி நேரத்தில் 92 செ.மீ மழை பெய்துள்ளது. முன்னதாக அதற்கு முந்தைய 24 மணி நேரத்தில் 82 செ.மீ மழை பெய்து இருந்தது.
தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 7 நாளாக கனமழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக ஆங்காங்கே சாலைகளில் மரங்கள் விழுந்துள்ளன. போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. ஊட்டி, கூடலூர், குன்னூர், கோத்தகிரி, குந்தா, பந்தலூர் உப்ட மொத்த நீலகிரியும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு மக்கள் மழையால் வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல் முடங்கி கிடக்கின்றனர். மின்சாரமும் பல இடங்களில் இல்லாததால் இருளில் மூழ்கி மக்கள் தவிக்கிறார்கள். வர்த்தகமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.


[Image: heavyrainfallinthenilgiris126-1565321873.jpg]


இதனிடையே அவலாஞ்சியில் நேற்று முன்தினம் வரலாறு காணாத அளவாக 82 செ.மீ மழை பெய்தது. அதைத்தொடர்ந்து கடந்த 24 மணி நேரத்தில் 92 செ.மீ மழை பெய்துள்ளது.இன்னும் மழை பெய்து வருகிறது. இதனால் அவலாஞ்சியை சுற்றியுள்ள பகுதிகயை வெள்ளம் சூழந்துள்ளது. மின்விநியோகம் தடைபட்டுள்ளது அங்கு 24 மணி நேரமும் பேரிடர் குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.


[Image: heavyrainfallinthenilgiris12-1565321880.jpg]
first 5 lakhs viewed thread tamil
Like Reply
கூடலூர் பந்தலூர் பகுதிகளில் 10 இடங்களில் வெள்ள நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த முகாம்களில் 180 குழந்தைகள் உள்பட 629 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது. கனமழை தொடர்ந்து பெய்து வரும் காரணத்தால் முகாம்களில் தங்கிபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.


[Image: heavyrainfallinthenilgiris1267-1565321866.jpg]

கூடலூரில் இருந்து உதகை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் தெய்வமலை மலைப்பகுதியில் மரங்கள் விழுந்துள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் ஓரளவு சரி செய்து ஒருவாகனம் செல்லும் அளவுக்க போக்குவரத்தை சீர் செய்துள்ளனர். நிலச்சரிவு காரணமாக பந்தலூரிலிருந்து கேரளா செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பள்ளி கல்லூரிகளுக்கு இன்றும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.




[Image: heavyrainfallinthenilgiris1-1565321887.jpg]
first 5 lakhs viewed thread tamil
Like Reply
கொச்சி விமான நிலையம் 11 ஆம் தேதி வரை மூடப்படுவதாக அறிவிப்பு


[Image: 201908090736066807_Kerala-Operations-sus...SECVPF.gif]


கொச்சி, 

தென்மேற்கு பருவ  மழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், கேரளாவில் கனமழை கொட்டி வருகிறது.  மாநிலத்தின் பல்வேறு இடங்களில் கொட்டி தீர்க்கும் கனமழையால் பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.  

வயநாடு மாவட்டத்தில் உள்ள மேப்படி என்ற இடத்தில் மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது. 40 -பேர் வரை நிலச்சரிவில் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுவதால், மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
மலப்புரம், வயநாடு, கோழிக்கோடு, திரிசூர், பாலக்காடு, கன்னூர், காசர்கோடு, ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலார்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கனமழை நீடித்து வருவதால், கொச்சி விமான நிலையம் வரும் 11 ஆம் தேதி 3 மணி வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 விமான நிலையத்தை ஒட்டி அமைந்துள்ள பெரியார் ஆறு மற்றும் கால்வாயில் நீர் மட்டம் உயர்ந்துள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமான  நிலையம் மூடப்பட்டுள்ளது. கனமழை காரணமாக 12 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
first 5 lakhs viewed thread tamil
Like Reply
காஷ்மீரில் பதற்றம் : பெல்லெட் குண்டு காயங்களுடன் ஓடிய சிறுவன் பலி..!
By
 Sathiyam Digital
 -

07/08/2019 9:21 PM

[/url][url=https://www.stumbleupon.com/submit?url=https://www.sathiyam.tv/kashmir-crpf-attack-on-17-yrs-boy-children/&title=%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D%20:%20%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%93%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF..!]
காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்தை நீக்கி அம்மாநிலத்திற்கான அதிகாரத்தை ரத்து செய்ததையடுத்து இந்திய சிஆர்பிஎஃப் வீரர்கள் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

[Image: kashmir-ssf.jpg]

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கி கடந்த 5 ஆம் தேதி மத்திய அரசால் மசோதா நிறைவேற்றப்பட்டது. இதற்கிடையே கடந்த 10 நாட்களுக்கு முன்பே இராணுவப்படை குவிப்பு, காஷ்மீர் தலைவர்கள் வீட்டுச்சிறையில் அடைப்பு என தொடர்ந்து நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டது.

மசோதா தாக்கல் செய்யும் நேரத்தில் காஷ்மீர் முழுவதும் முந்தைய நாளே 144 தடை, தொடர்புசாதனங்கள், இணையதள சேவைகள் முழுவதுமாக துண்டிக்கப்பட்டு மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது.

இந்த நிலையில் தான் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்குவதற்கான மசோதாவை அமித்ஷா தாக்கல் செய்தார். எதிர்கட்சிகளின் பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் இந்த மசொதா மத்திய அரசால் நிறைவேற்றப்பட்டது.

இந்த விவகாரம் குறித்து காஷ்மீர் மக்களின் மனநிலை என்பது குறித்தான செய்தியை வெளியிடுவதற்கு கூட அங்குள்ள மத்திய அரசின் அதிகாரிகள் முட்டுக்கட்டை போட்டிருப்பதாகவும், அங்குள்ள செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் கடந்த 5 ஆம் தேதியன்று காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த நாளன்று, ஒசைப் அல்தாஃப் என்ற 17 வயது சிறுவன் ஒரு விளையாட்டு திடலில் விளையாடி கொண்டிருக்கும்பொழுது துணை ராணுவப்படையினரின் பெல்லட் குண்டு தாக்குதல் அறங்கேறியுள்ளது.


அப்போது துணைராணுவப்படையினரின் தாக்குதலுக்கு பயந்து ஓடியதில் ஒரு ஆற்றில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். அந்த சிறுவனுடன் விளையாடிய மற்ற இளைஞர்களும் ஆற்றில் குதித்துள்ளனர்.

அவர்களை அங்கு இருந்த ஒரு சில மணல் அள்ளும் தொழிலாளர்கள் காப்பாற்றினாலும் நீச்சல் தெரியாத ஒசைப் என்ற சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்தார். ஸ்ரீநகரில் உள்ள SMHS மருத்துவமனையில், அவரது உடல் கூறாய்வு செய்யப்பட்டு அவரது தந்தை அல்தாஃப் மராஸியுடன் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அவரது உடலில் 13 பெல்லெட் குண்டுகளின் காயங்கள் இருந்தன எனவும், பெரும்பாலும் கண்களில் காயங்கள் இருந்தன எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மீதமுள்ள இருவரையும் அங்குள்ள ஊர் மக்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த தாக்குதல் குறித்து கூறிய சிறுவனின் தந்தை, தனது மகன் சுமார் 20 நிமிடங்கள் தண்ணீரில் மூழ்கி கிடந்ததாக தெரிவிக்கிறார்.

இதுகுறித்து ஸ்ரீ மகாராஜா ஹரி சிங் மருத்துவமனையில் இந்த தாக்குதல் குறித்து ஊடகங்களுக்கு எந்த தகவலும் அளிக்கக்கூடாது என அரசு அதிகாரிகள் மிரட்டியதாகவும், அதனால் தாங்கள் எந்த தகவலையும் அளிக்கமுடியாது எனவும் தனியார் செய்தி நிறுவன செய்தியாளரிடம் மருத்துவ நிர்வாகம் தெரிவித்துள்ளது.


 
first 5 lakhs viewed thread tamil
Like Reply
பாகிஸ்தான் டாக்டர்கள் வெளியேற சவுதி அரேபியா உத்தரவு

[Image: 201908090235177926_Saudi-government-has-...SECVPF.gif]
பாகிஸ்தான் டாக்டர்கள் வெளியேற சவுதி அரேபியா உத்தரவு

இந்த நிலையில், பாகிஸ்தானில் எம்.எஸ். மற்றும் எம்.டி. போன்ற முதுகலை மருத்துவப்படிப்பின் தரம் மற்றும் பயிற்சி சிறப்பானதாக இல்லை என கூறி அதன் அங்கீகாரத்தை சவுதி அரேபியாவின் சுகாதாரத்துறை அமைச்சகம் ரத்து செய்துள்ளது.

இதுதொடர்பாக சவுதி அரேபிய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாகிஸ்தானின் முதுகலை மருத்துவ மேற்படிப்பு, சவுதி அரசின் சுகாதார ஆணையத்தின் நெறிமுறைகளுக்கு ஏற்புடையதாக அல்ல என்பதால் அங்கு எம்.எஸ்., எம்.டி படித்துவிட்டு சவுதியில் பணியாற்றுபவர்களின் ஒப்பந்தத்தை ரத்து செய்கிறோம்” என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சவுதி அரேபியாவின் இந்த அதிரடி முடிவு நூற்றுக்கணக்கான டாக்டர்களை வேலையிழக்க செய்துள்ளது. அவர்களில் பெரும்பாலானோர் சவுதி அரேபியாவில் உள்ளனர்.

எனவே அங்கு இருக்கும் பாகிஸ்தான் டாக்டர்களை உடனடியாக வெளியேறும்படி சவுதி அரேபியா அரசு உத்தரவிட்டு உள்ளது. இதையடுத்து சுகாதார சிறப்புகளுக்கான சவுதி ஆணையம் (எஸ்.சி.எப்.எச்.எஸ்) அங்குள்ள பாகிஸ்தான் டாக்டர்களுக்கு பணி நீக்கம் செய்யப்பட்டதற்கான கடிதங்களை அனுப்பி உள்ளன.

அந்த கடிதத்தில் “தொழில்முறை தகுதிக்கான உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. காரணம், எஸ்.சி.எப்.எச்.எஸ் விதிமுறைகளின்படி பாகிஸ்தானில் இருந்து பெறப்பட்ட உங்கள் முதுகலை பட்டம் ஏற்றுக்கொள்ளப் படாது” என குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சவுதி அரசின் இந்த நடவடிக்கையில் பாதிக்கப்பட்டு உள்ள அலி உஸ்மான் என்ற பாகிஸ்தான் டாக்டர் இதுகுறித்து கூறுகையில், “லாகூர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் 5 வருடம் மேற்படிப்பு முடித்தேன். அங்குள்ள பொது மருத்துவமனையில் பயிற்சி பெற்றபின் சவுதிக்கு வேலைக்கு வந்தேன். சவுதி சுகாதார அமைச்சகம் எனது ஒப்பந்தத்தை நீக்கியுள்ளது. இந்த நீக்கத்தால் எனது குடும்பம் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளது” என வருத்தத்துடன் கூறினார்.

மற்றொரு டாக்டர் கூறுகையில், “இந்தியா, எகிப்து, சூடான் மற்றும் வங்காள தேசம் ஆகிய நாடுகள் வழங்கும் அதே பட்டப்படிப்பு திட்டத்தை தான் பாகிஸ்தானும் வழங்குகிறது. ஆனால் பாகிஸ்தானை மட்டும் புறக்கணிப்பது தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது” என்றார்.

சவுதி அரேபியாவின் இந்த நடவடிக்கை குறித்து பாகிஸ்தான் உடனடியாக எந்தவித கருத்தும் தெரிவிக்கவில்லை. அதே சமயம் பாகிஸ்தானில் உள்ள மருத்துவ பல்கலைக்கழங்களின் துணை வேந்தர்கள் மற்றும் பேராசிரியர்கள் சவுதி அரேபியாவின் குற்றச்சாட்டை தீர்க்கமாக நிராகரித்து உள்ளனர்.

இதற்கிடையில் சவுதி அரேபியாவை தொடர்ந்து, கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் ஆகிய அரபு நாடுகளும் பாகிஸ்தானில் முதுகலை மருத்துவப்படிப்பு படித்தவர்களை பணியில் இருந்து நீக்கி, உடனடியாக அவர்கள் நாட்டை விட்டு வெளியேற உத்தரவிட்டுள்ளன.



ரியாத்:

பாகிஸ்தான் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இதனால் நாட்டின் வர்த்தகம், பொருளாதாரம் உள்ளிட்ட துறைகள் பெரும் பின்னடைவை சந்தித்து வருகின்றன
first 5 lakhs viewed thread tamil
Like Reply
[color=var(--title-color)]பேருந்துகளுக்குத் தனிப்பாதை, ஹைடெக் அம்சங்கள்... சென்னையின் நெரிசலைக் குறைக்குமா BRTS?
[color=var(--content-color)]பூஜா[/color]
[color=var(--title-color)]சென்னையில் இயங்கும் மாநகரப் பேருந்துகளுக்குத் தனிப்பாதை ஒன்றை அமைக்கத் திட்டமிட்டுள்ளது தமிழக அரசு. இது சென்னைச் சாலைகளின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்குமா?[/color]
[/color]
[Image: vikatan%2F2019-08%2F3bbe6b1f-b63c-4a78-8...2Ccompress][color=var(--meta-color)]Bus Rapid Transit System (BRTS) ( அ.பூஜா )[/color]
[color=var(--content-color)]பஸ் ராபிட் டிரான்ஸிட் சிஸ்டம்... சுருக்கமாக BRTS. சென்னைச் சாலைகளின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், மாநகரப் பேருந்துகளின் பயண நேரத்தைக் குறைக்கவும் தமிழக அரசு கையில் எடுத்திருக்கும் புதிய முயற்சி இது. சென்னைக்குதான் இந்த BRTS புதிது, இந்தியாவில் ஏற்கெனவே புனே, விஜயவாடா, சூரத், அகமதாபாத் ஆகிய நகரங்களில் இந்த BRTS வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. இதேபோல ஆசிய கண்டத்தில் மட்டும் மொத்தம் 43 நகரங்களில், 1593 கி.மீ தூரத்திற்கு BRTS இருப்பதாகக் குறிப்பிடுகிறது உலக BRT அமைப்பு. இந்த BRTS-ஐ சென்னையிலும் அமல்படுத்துவதற்காக 2011-லேயே ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு செயலாக்க அறிக்கையும் வெளியிடப்பட்டது. பின்னர் இதை விரிவாக உருவாக்கும் பொறுப்பு ICRA மேனேஜ்மென்ட் கன்சல்ட்டிங் சர்வீசஸ் லிமிடட் என்னும் தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.[/color]
[color=var(--content-color)][Image: vikatan%2F2019-08%2F0a0439aa-048d-45c9-b...2Ccompress]
BRTS-ல் பயணிகள் தகவல் மையம்
[/color]
[color=var(--content-color)]இந்நிறுவனம் அந்தச் செயலாக்க அறிக்கைகளை ஆராய்ந்து, சென்னையில் BRTS-ஐ செயல்படுத்துவதற்கான ஏழு வழித்தடங்களை தேர்வுசெய்து அதற்கான திட்ட வடிவமைப்பை உருவாக்கியிருக்கிறது. இதற்கடுத்து இந்த ஏழு வழித்தடங்களிழும் உள்ள மக்களிடம் கருத்துக்கேட்பு கூட்டங்களை தற்போது நடத்திவருகிறது பல்லவன் போக்குவரத்து ஆலோசனை சேவை நிறுவனம். இந்த BRTS எப்படிச் செயல்படும், எப்படிப் பாதைகள் வடிவமைக்கப்படும் போன்ற அனைத்துத் தகவல்களும் பொதுமக்களுக்கு விளக்கப்பட்டு பின்னர் கருத்துகள் கேட்கப்பட்டன. முதல்கட்டமாக கோயம்பேடு - பூவிருந்தவல்லி வழித்தடத்துக்கான கருத்துக் கேட்புக் கூட்டம் சென்னை அரும்பாக்கத்தில் அண்மையில் நடைபெற்றது.[/color]
ADVERTISEMENT



POWERED BY PLAYSTREAM
[Image: mute.png]

[color=var(--content-color)]இந்த BRTS எப்படிச் செயல்படும்?[/color]
[color=var(--content-color)]தற்போது இருக்கும் பொதுவான போக்குவரத்துச் சாலைகளில் இந்த BRTS-க்காக தனிவழி அமைக்கப்படும். இந்த வழி ஏற்கெனவே இருக்கும் சாலைகளின் மையத்தில் அமையும். இதற்கு இருபுறமும் வழக்கம்போல பிற வாகனங்கள் பயணிக்கும். இந்தப் பிரத்யேக தனிவழியானது தடுப்புகள் மூலம் பிரிக்கப்படும். இந்த வழிகளைக் கண்காணிக்க தனி கேமராக்களும் பொருத்தப்படும்.
பேருந்துகள் பொதுப் போக்குவரத்திலிருந்து விலகிவிடுவதால், வழக்கமான சாலைகளில் பேருந்துகளால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் தவிர்க்கப்படும். பேருந்துகளும் போக்குவரத்து நெரிசலில் சிக்காது என்பதால் வழக்கத்தைவிடவும் விரைவாகச் செல்லும்.
[/color]
[color=var(--content-color)][Image: vikatan%2F2019-08%2Faf625013-362f-4130-8...2Ccompress]
கோயம்பேடு - பூவிருந்தவல்லி வழித்தடம்
[/color]
[color=var(--content-color)]தற்போது இருக்கும் வழக்கமான பேருந்துகள் போல் இல்லாமல், இந்த BRTS பேருந்துகளில் நவீன வசதிகள் ஏற்படுத்தப்படும். எப்படி மெட்ரோ ரயில்களில் படிகளின்றி நேரடியாக ஏறுகிறோமோ, அதேபோல இதிலும் ஏறமுடியும். இதற்கான, பேருந்து மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்படும். பேருந்துகளில் தானியங்கி கதவுகள் இருக்கும் என்பதால் கூடுதல் பாதுகாப்பு அம்சங்களும் இருக்கும்.[/color]
first 5 lakhs viewed thread tamil
Like Reply
இந்த BRTS வழித்தடங்களின்றி, பிற வழித்தடங்களில் இந்த BRTS சிறப்புப் பேருந்துகள் செல்ல நேரிடும்போது போக்குவரத்து சிக்னல்களில் அவற்றிற்கு முன்னுரிமை அளிக்கப்படும். டிக்கெட்களுக்காக ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்படும். இதைப் பேருந்தில் ஏறும்போதே கதவுகளில் ஸ்வைப் செய்துகொள்ளலாம். இதுபோக வழக்கமான டிக்கெட்களை அனைத்து BRTS பேருந்து நிறுத்தங்களில் முன்பே பெற்றுக்கொள்ளமுடியும்.
[color=var(--content-color)]இந்த BRTS வடிவமைப்பு முழுவதும் ஏற்கெனவே இருக்கும் சாலைகளை வைத்தே திட்டமிடப்பட்டுள்ளது. எனவே புதிதாக சாலைகளுக்காக நிலம் கையகப்படுத்தவேண்டிய அவசியம் இருக்காது. ஒருவேளை சில இடங்களில் இந்த BRTS அமைப்பிற்கான விரிவான சாலை அமைப்பு இல்லையெனில் அங்கும் சாலைகள் விரிவாக்கம் செய்யப்படாது. மாறாக, அங்கு வழக்கமான மிக்ஸ்டு டிராஃபிக் முறையே பின்பற்றப்படும்.[/color]

[color=var(--content-color)]மொத்தம் 120 கி.மீ தொலைவிற்கு இந்த BRTS வடிவமைக்கப்பட்டுள்ளது. பொதுவான பலவழிச் சாலைகளில் ஒரு பாதையின் அகலம் 3.5 மீட்டர் இருக்கவேண்டும். இந்த விதியைப் பின்பற்றி BRTS-ல் பேருந்து செல்லும் பாதை 3.5 அகலமும், பேருந்து நிறுத்தம் அமையும் இடங்களில் பாதை 7 மீட்டர் அகலமும் இருக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பேருந்து நிறுத்தங்களோடு ஆங்காங்கே பிற போக்குவரத்து நிலையங்களும் இணையும்படி வழிசெய்யப்பட்டுள்ளது.[/color]
[color=var(--content-color)][Image: vikatan%2F2019-08%2Fa51cd620-a11a-4ef4-a...2Ccompress]
BRTS வழித்தட பேருந்துகளுக்கான டிக்கெட் கவுன்ட்டர்
[/color]
[color=var(--content-color)]முதல்கட்டமாக மட்டுமே இந்த 7 வழித்தடங்கள் திட்டமிடப்பட்டுள்ளன. அரசு முழுமையாகச் செயல்படுத்திய பின்பு, இந்தத் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு இரண்டாவது கட்டமும் உருவாக்கப்படலாம். அதற்கான சாத்தியக்கூறுகளும் இருக்கின்றன.
தற்போது இருக்கும் பேருந்து வழித்தடங்களிலேயே மாற்றங்கள் செய்து இதை நடைமுறைப்படுத்த முடியும் என்பதால் இதற்கு மிக அதிக செலவு இருக்காது. மேலும், மெட்ரோ ரயில்களைவிட டிக்கெட் விலை குறைவு, வேகமான பயணம் போன்ற காரணங்களுக்காக மக்கள் இதை நாடுவதற்கான வாய்ப்புகளும் அதிகம். இதுபோக சொந்த வானங்களில் செல்வோரும் பயண நேரம் கருதி இதில் பயணித்தால், சாலையில் வாகனங்களின் எண்ணிக்கை இன்னுமே குறையும். இது அவர்களுக்கு எரிபொருள் சிக்கனத்திற்கு மட்டும் வழிவகுக்காமல், சுற்றுச்சூழலுக்கும் நன்மை பயக்கும். இந்தக் காரணங்களால் BRTS-க்கு மக்களிடையே வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது திட்டமிடப்பட்டுள்ள வழித்தடங்களும் அவற்றின் தொலைவு விவரங்களும் பின்வருமாறு.
1. கோயம்பேடு - பூவிருந்தவல்லி - 14 கி.மீ
2. கோயம்பேடு - அம்பத்தூர் - 7.70 கி.மீ
3. கோயம்பேடு - மாதவரம் - 12.40 கி.மீ
4. சைதாப்பேட்டை - சிறுசேரி - 24.25 கி.மீ
5. சைதாப்பேட்டை - மஹிந்திரா சிட்டி - 42.00 கி.மீ
6. துரைப்பாக்கம் - குரோம்பேட்டை - 10.60 கி.மீ
7. கோயம்பேடு - சைதாப்பேட்டை - 9.00 கி.மீ
[color=var(--content-color)][Image: vikatan%2F2019-08%2F36ecdee8-3ddb-4bef-b...2Ccompress]
பொதுமக்கள் கருத்து கேட்புக் கூட்டம்
[/color]
[color=var(--content-color)]இப்படி நிறைய நன்மைகள் இருந்தாலும் சரியான திட்டமிடல்கள் இல்லையெனில் தோல்வியடையவும் வாய்ப்புண்டு. உதாரணமாக, டெல்லியில் 2008-ம் ஆண்டு இந்த திட்டம் தொடங்கப்பட்டு பேருந்து வழிகளில் ஏற்பட்ட அதிகமான நெரிசலின் காரணமாக 2016-ம் ஆண்டு கைவிடப்பட்டது. இங்கு அத்தகைய சிக்கல்கள் எழாமல், போக்குவரத்து நெரிசலை BRTS கட்டுப்படுத்தும் என நம்புவோ[/color]
[/color]
first 5 lakhs viewed thread tamil
Like Reply
Nice updates bro keep on ...
Like Reply
வேலூர் கோட்டையை கைப்பற்றிய திமுக... கதிர் ஆனந்த் வெற்றி... தொண்டர்கள் கொண்டாட்டம்

[Image: 201908091546532747_DMK-seized-Vellore-Th...SECVPF.gif]
வேலூர்

வேலூர் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் கடந்த 5-ந் தேதி நடைபெற்றது. இதில் அ.தி.மு.க. சார்பில் ஏ.சி.சண்முகமும், தி.மு.க. சார்பில் கதிர்ஆனந்தும், நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமியும் இவர்கள் உள்பட 28 பேர் போட்டியிட்டனர்.
ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.  காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்றது. தபால் வாக்குகள் எண்ணிக்கையில் அதிமுக வேட்பாளர் ஏ.சி சண்முகம் முன்னிலை பெற்று இருந்தார்.

தொடர்ந்து வாக்குகள் முன்னிலை விவரம் மாறிக்கொண்டே இருந்தது.  முதல் 15 சுற்றுகள் வரை அதிமுக வேட்பாளர் ஏ.சி சண்முகம் முன்னிலையில் இருந்தார். தொடர்ந்து வாக்கு எணிணிக்கை நடைபெற்ற போது திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் முன்னிலை பெற்றார். இறுதி சுற்று முடிவின் போது கதிர் ஆனந்த் 9 ஆயிரம்  வாக்குகளுக்கும்  அதிக வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு 4.30 மணிக்கு வெளியிடப்படும் என வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் கூறி உள்ளார்.

சென்னை, அண்ணா அறிவாலயத்தில் வேலூர் மக்களவை தேர்தல் முடிவையொட்டி தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். அது போல் ஸ்டாலின் வீட்டின்  முன்பும் தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.
first 5 lakhs viewed thread tamil
Like Reply
கபினியிலிருந்து வெளியேறும் தண்ணீர் பல மடங்கு அதிகரிப்பு.. காவிரி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

பெங்களூர்: கர்நாடகாவில் கடந்த சில நாட்களாக கடுமையான மழை பெய்து வருகிறது. இதேபோன்று கேரளாவிலும் கடும் பருவ மழை கொட்டி வருகிறது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக, கிருஷ்ணராஜசாகர், கபினி, ஹேமாவதி உள்ளிட்ட காவிரி நதிக்கு குறுக்கே அமைக்கப்பட்டுள்ள அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து பல மடங்கு அதிகரித்துள்ளது.

[Image: kabani-zq1eitb-1565370613.jpg]


எனவே அனைத்து வரும் தண்ணீரை அப்படியே திறந்து விடுகிறது கர்நாடகா. இப்படி வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு, தினமும் படிப்படியாக அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந்த நிலையில் மத்திய நீர்வளத்துறை ஆணையம் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: கர்நாடகா மற்றும் கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக, கபினி அணைக்கட்டில் இருந்து அதிகப்படியான தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. நாளை தமிழகத்தில் உள்ள மேட்டூர் அணைக்கு வினாடிக்கு, 40 ஆயிரம் கன அடி அளவுக்கு தண்ணீர் வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது இன்று இரவு அல்லது நாளை காலையில் வினாடிக்கு, ஒரு லட்சம் கன அடி அளவாக அதிகரிக்கக் கூடும்.

எனவே தேவைப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்துக்கொள்ளவும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
first 5 lakhs viewed thread tamil
Like Reply
ஒரே ரேஷன் கார்டு திட்டம் - ராம்விலாஸ் பஸ்வான் தொடங்கி வைத்தார்

நாடு முழுவதும் ஒரே ரேஷன் கார்டை பயன்படுத்தி பொருட்கள் வாங்கும் வகையில் ‘ஒரு நாடு, ஒரே ரேஷன் கார்டு’ திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் நாட்டின் எந்த பகுதியை சேர்ந்தவரும், எந்த பகுதியிலும் பொது வினியோக திட்டத்தின் கீழ் ரேஷன் பொருட்களை வாங்க முடியும்.
 
[Image: ram_11.jpg]

இந்த திட்டத்துக்கான பணிகளை மத்திய அரசு தீவிரமாக செயல்படுத்தி வரும் நிலையில், முதற்கட்டமாக நேற்று 4 மாநிலங்களில் இந்த திட்டத்தை மத்திய உணவு மற்றும் பொது வினியோகத்துறை மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் தொடங்கிவைத்தார். அதன்படி ஆந்திரா-தெலுங்கானா மற்றும் குஜராத்-மராட்டியம் மாநிலங்களுக்கு இடையே பொருட்கள் வாங்கிக்கொள்ளும் திட்டம் தொடங்கப்பட்டது. இதன் மூலம் ஆந்திரா மக்கள் தங்கள் மாநிலத்தின் எந்த பகுதியிலோ அல்லது தெலுங்கானாவிலோ பொருட்கள் வாங்க முடியும். மேலும் தெலுங்கானா மக்களும் தங்கள் மாநிலத்தின் எந்த பகுதியிலோ அல்லது ஆந்திராவிலோ பொருட்கள் வாங்கலாம். இதைப்போல குஜராத், மராட்டிய மக்களும் தங்கள் மாநிலங்களுக்குள் பொருட்கள் வாங்கிக்கொள்ளலாம்.
first 5 lakhs viewed thread tamil
Like Reply
8 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்துக்கு ரூ.125 கோடி செலவு செய்தது ஒரு வெற்றியா? அமைச்சர் ஜெயக்குமார்

வேலூர் மக்களவை தேர்தலில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி பெற்றார்.   அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்மகம் 8 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.   
 
Quote:[Image: jayakumar_15.jpg] 
இது குறித்து சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.  அத் அதற்கு அவர்,   வேலூர் தொகுதியில் பழம் நழுவி பாலில் விழாமல் கீழே விழுந்துவிட்டது. அடுத்தமுறை நிச்சயமாக பழம் பாலில் விழும்.   வேலூர் தொகுதியை பொறுத்தவரை அ.தி.மு.க.தான் வெற்றி பெற்றுள்ளது. தி.மு.க. பணத்தை நம்பி வெற்றி பெற்று உள்ளது. தி.மு.க. பெற்றது மோசமான, மோசடியான வெற்றி. 
 
கடந்த நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் 2 அல்லது 3 லட்சம் ஓட்டுகள் வித்தியாசம் வாங்கினார்கள்.   அப்பாவி மக்களிடம் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை சொல்லி வாக்குகளை பெற்றனர். ஆனால் இந்த முறை ஏமாற்ற முடியவில்லை. கிளுகிளுப்பு காட்டி மக்களை ஏமாற்றும் செயல் எடுபடவில்லை.

 
இந்த தேர்தல் முடிவுகளை பார்க்கும்போது 2021-ம் ஆண்டு தேர்தலில் தி.மு.க. தேறாது என்ற நிலைதான் உள்ளது. 8 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்துக்கு ரூ.125 கோடி செலவு செய்தது ஒரு வெற்றியா?. மக்கள் மனதில் அ.தி.மு.க. முழுமையாக வெற்றி பெற்று உள்ளோம்’’என்று கூறினார்.  
 
first 5 lakhs viewed thread tamil
Like Reply
பாஜகவின் அடுத்த திட்டம்! அமித்ஷாவிற்கு கொடுக்கப்பட்ட அசைன்மென்ட்!

பொது சிவில் சட்டம் கொண்டு வருவது, உச்சநீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு ராமர் கோவில் கட்டுறதுன்னு பல வேலைத்திட்டங்களை அமித்ஷாவுக்கு ஆர்.எஸ்.எஸ். கொடுத்திருக்கு. 2019 எம்.பி. தேர்தலில் பா.ஜ.க.வுக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்கலைன்னா, மோடிக்குப் பதில் நிதின்கட்கரி பிரதமராக்கப்படலாம்னு யூகம் இருந்தது. ஆனா, தேர்தல் களத்தில் அமித்ஷா வகுத்த வியூகத்தால் எதிர்க்கட்சிகளால் பலமான கூட்டணி உருவாகாமல் தடுக்கப்பட்டது. அது, பா.ஜ.க.வுக்கு 303 எம்.பி.க்களோடு பிரதமரா மோடியை மீண்டும் உட்கார வச்சிடிச்சி. இதையும் கவனித்திருக்கும் ஆர்.எஸ்.எஸ். 
 

இப்பவே அடுத்த பிரதமருக்கான வியூகத்தை வகுக்க ஆரம்பிச்சிடிச்சி. மோடிக்குப் பதிலா ரேஸில் இருந்த நிதின் கட்கரி, உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத் இவங்களையெல்லாம் ஓரங்கட்டிட்டு, அமித்ஷாவுக்கு அந்த சான்ஸை கொடுக்க இப்பவே ரெடியாக ஆரம்பிச்சிடிச்சாம். ஆ.எஸ்.எஸ்.சின் குட்புக்கில் அதிக மதிப்பெண் பெற்று முன்னிலை இடத்தில்  இருக்கும் அமித்ஷா தான் மோடியின் பிரதமர் பதவிக்கு குறி வைக்கும் நபரா ஆர்.எஸ்.எஸ். தரப்பால் உருவாக்கப்படுகிறார். இதுதான் பா.ஜ.க. டெல்லி வட்டாரத்தில் ஹை லைட்டான டாக். பேட்டிகளில் கூட, மோடியின் வாய்ஸாக ஒலித்த அமித்ஷா, நேரடியா அதிகாரத் தலைமையில் இருந்து வாய்ஸ் கொடுக்கிற அளவுக்கு தன்னை ரெடி பண்ணிக்கிட்டிருக்காருனு சொல்லப்படுகிறது.[Image: 219%20%282%29.jpg]
first 5 lakhs viewed thread tamil
Like Reply
கேரளாவில் மழை, வெள்ளம் கோரத் தாண்டவம்.. 42 பேர் பலி.. 1 லட்சம் பேர் இடமாற்றம்

திருவனந்தபுரம்: கேரளாவில், கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக 42 பேர் உயிரிழந்துள்ளனர். இதில், கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் மட்டும் 20 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
கடந்த இரு நாட்களில் வயநாட்டில் 9 பேர் இறந்துள்ளனர். மாநிலம் முழுவதும் 988 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு சுமார் 1 லட்சம் மக்கள் இடம் மாற்றப்பட்டுள்ளனர். கடுமையாக மழை பெய்து வரும் வயநாடு பகுதியில், 24,990 பேர் நிவாரண முகாம்களில் உள்ளனர்.

[Image: kerala-flood26-1565434073.jpg]


கேரளா முழுவதும் கன மழை பெய்யும் என்று கணித்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய 9 மாவட்டங்களில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தென்மேற்கு பருவமழை கடந்த நான்கு நாட்களாக கேரளாவில் தீவிரமடைந்து உள்ளது. அதேநேரம், இன்று முதல், அடுத்த ஐந்து நாட்களுக்கு படிப்படியாக, கேரளாவில் மழையின் தீவிரம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆகஸ்ட் 12ம் தேதி இல் வடமேற்கு வங்கக் கடல் பகுதியில் ஒரு புதிய குறைந்த காற்று அழுத்த பகுதி உருவாக வாய்ப்புள்ளதால் அதன் தாக்கத்தால் மழை பிறகு அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.


[Image: kerala-flood23-1565434080.jpg]
ராகுல் காந்தி தனது லோக்சபா தொகுதியான வயநாட்டில் நாளை வெள்ள சேத பகுதிகளை பார்வையிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


வயநாடு சப் கலெக்டர் உமேஷ், கூறுகையில் "இப்பகுதி ஆபத்தான நிலையில் உள்ளது. 15 பேரை இன்னும் காணவில்லை. ராணுவம் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினரின் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். நீர் நிலைகள் உயர்ந்து வருவதால், பனசுராசாகர் அணையின் மதகுகளை திறக்கும் வாய்ப்பு உள்ளது" என்றார்.
first 5 lakhs viewed thread tamil
Like Reply




Users browsing this thread: 117 Guest(s)