Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
[color=var(--title-color)]ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 ரத்து! - நாடாளுமன்றத்தில் அறிவிப்பு #LiveUpdates[/color]

[color=var(--title-color)]ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 ரத்து செய்ய அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்தார்.[/color]




[color=var(--content-color)]ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 ரத்து!

[color=var(--content-color)][Image: vikatan%2F2019-08%2F77e3246e-0273-4981-9...2Ccompress]
அமித் ஷா
[/color]
[color=var(--content-color)]ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்ய அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்தார்.

[/color]
[Image: vikatan%2F2019-08%2F94a6e866-a138-41ab-9...2Ccompress]
[/color]
first 5 lakhs viewed thread tamil
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
[color=var(--title-color)]அன்று ஹீரோ... இன்று வில்லன்... `குடி'யால் ஒரே நாளில் சரிந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி![/color]
[Image: vikatan%2F2019-08%2F059f5940-fa6f-4111-8...2Ccompress][color=var(--meta-color)]ஐ.ஏ.எஸ் அதிகாரி ஸ்ரீராம் வெங்கட்ராமன்[/color]
[color=var(--content-color)]கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் வடகரையைச் சேர்ந்தவர் கே.எம் பஷீர். மலையாள நாளிதழில் பத்திரிகையாளராகப் பணியாற்றி வரும் பஷீர் நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணியளவில் தன் வேலைகளை முடித்துவிட்டு தன் வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்தார். அப்போது எதிரில் அதிக வேகத்தில் வந்த ஒரு சொகுசு கார் இவரது இரு சக்கர வாகனத்தின் மீது மோதியதில் பஷீரின் வாகனம் தூக்கிவீசப்பட்டு அருகிலிருந்த சுவரில் பலமாக மோதியுள்ளது. இதையடுத்து, சம்பவ இடத்திலேயே பஷீர் பரிதாபமாக உயிரிழந்தார்
[color=var(--content-color)][Image: vikatan%2F2019-08%2F0714ca8f-38cc-4b17-8...2Ccompress]
பஷீர்
[/color]
[color=var(--content-color)]பஷீரின் பரிதாப உயிரிழப்பு கேரளாவில் காட்டுத்தீ போல் பரவ ஆரம்பித்தது. அதற்கு காரணம் விபத்தை ஏற்படுத்திய ஐ.ஏ.எஸ் அதிகாரி ஸ்ரீராம் வெங்கட்ராமன். தன் சொகுசு காரை குடிபோதையில் ஸ்ரீராம் இயக்கியதே விபத்துக்குக் காரணமாக அமைந்தது. அவர் காரில் இருந்து இறங்கும்போது குடிபோதையில் இருந்ததை மக்களும் பார்த்துள்ளனர். இந்த விபத்தால் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் கொண்ட பஷீரின் குடும்பம் தற்போது நடுத்தெருவுக்கு வந்துள்ளது. ஆனால் பஷீரின் உயிரிழப்பைக் கண்டுகொள்ளாமல், அதிகாரிகள் ஸ்ரீராமை காப்பாற்ற முயன்ற சம்பவமும் அரங்கேறியுள்ளதாகக் கூறுகிறது மலையாள ஊடகங்கள்.[/color]
[color=var(--content-color)]விபத்து நடந்த சிறிது நேரம் கழித்து ஸ்ரீராமை விசாரணைக்காகக் காவல்துறையினர் அழைத்துச் சென்றுள்ளனர். முதலில் தான் காரை ஓட்டவில்லை எனக் கூறிய அவர் பிறகே தன் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். இதையடுத்து, அவருக்கு மது அருந்தியதற்கான ரத்தப் பரிசோதனை செய்வதில் போலீஸார் தாமதம் காட்டியுள்ளனர். விபத்து நடந்த 9 மணி நேரம் கழித்தே அவரின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லை, விபத்து நடந்த போது ஸ்ரீராம் உடன் இருந்த மாடல் அழகியும், அவரது நண்பருமான பெண் ஒருவரும் இருந்துள்ளனர்[/color]
[/color]
first 5 lakhs viewed thread tamil
Like Reply
[color=var(--content-color)][Image: vikatan%2F2019-08%2F7c34a612-c910-4b7e-a...2Ccompress]
ஸ்ரீராம் வெங்கட்ராமன்
[/color]
[color=var(--content-color)]காரின் உரிமையாளரான அந்தப் பெண் மீதும் வழக்குப் பதிவு செய்யக் கால தாமதம் செய்துள்ளனர். இதன்பிறகு விவகாரம் பெரிதாகவே ஸ்ரீராம் மீது நடவடிக்கை பாய்ந்துள்ளது. தற்போது 14 நாள் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ளார் ஸ்ரீராம். இதற்கிடையே, விபத்து குறித்த செய்திகள் வெளியானதும் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஸ்ரீராமை வசைபாடத் தொடங்கினர் மக்கள். சமூக வலைதளங்களில் அவருக்கு எதிரான கண்டனங்கள், விமர்சனங்கள் அதிகமாகப் பகிரப்பட்டன
[color=var(--content-color)]சமூகப் பணிகள் செய்ய வேண்டிய ஒரு ஐ.ஏஸ் அதிகாரியே குடிபோதையில் வாகனத்தை ஒட்டி  விபத்து ஏற்படுத்தலாமா என்றெல்லாம் கண்டனங்கள் குவிந்தன. மக்களின் இந்த எதிர்ப்புக்கு அவர் ஐ.ஏ.எஸ் அதிகாரி என்பதைத் தாண்டி மற்ற காரணங்களும் இருக்கின்றன. கொச்சியில் பிறந்த ஸ்ரீராம் ஒரு மருத்துவர். மருத்துவராகத் தேர்ச்சி பெற்றாலும் ஐ.ஏ.எஸ் ஆக வேண்டும் என்ற தனது கனவை நனவாக்க வேண்டும் என்பதற்காக மருத்துவ தொழிலை விடுத்து சிவில் சர்வீஸ் தேர்வுக்குப் படிக்க ஆரம்பித்தார். வாத்தியார் பிள்ளை (ஸ்ரீராமின் அப்பா கல்லூரி விரிவுரையாளர்) என்பதாலோ என்னவோ எந்தவித ஸ்பெஷல் கோச்சிங்கும் எடுக்காமல் சிவில் சர்வீஸ் தேர்வை எழுதினார்.[/color]
[color=var(--content-color)][Image: vikatan%2F2019-08%2F320ad736-8137-4f35-9...2Ccompress]
ஸ்ரீராம்
[/color]
[color=var(--content-color)]இரண்டாவது முயற்சிலேயே (2013ம் ஆண்டு) இரண்டாவது ரேங்க் எடுத்து ஐ.ஏ.எஸ் ஆகத் தேர்ச்சியும் பெற்றார். துடிப்பு மிக்க வாலிபரான அவர் மத்திய உணவு பாதுகாப்பு துறை பணியில் இருந்தார். பின்னர் 2016ம் ஆண்டு இடுக்கி அருகே உள்ள தேவிகுளம் பகுதி சப்-கலெக்ட்ராக பணியமர்த்தப்பட்டார். இங்கு தான் அவருக்கு ஏறுமுகம் ஏற்பட்டது. சப்-கலெக்டராக பணியில் அமர்ந்தவுடன் இடுக்கி மலைப்பகுதியில் இருந்து விதிகளை மீறி கட்டிடம் கட்டியவர்கள், லேண்ட் மாஃபியாக்கள் மீது தயங்காமல் நடவடிக்கை எடுக்கத் தொடங்கினார்.[/color]

[color=var(--content-color)]தொடர்ந்து தனது செயல்களில் அதிரடி காட்ட லோக்கல் அரசியல்வாதிகளின் பகையும் சம்பாதித்தார். இதனால் சப்-கலெக்டர் பதவி பறிபோனது. இருந்தாலும் அதன்பிறகு எந்த துறைக்கு சென்றாலும் அங்குத் தனி முத்திரை பதித்துவந்தார். அரசியல்வாதியாக இருந்தாலும், வேறுநபராக இருந்தாலும் அவர்கள் மீது தைரியமாக இவர் எடுக்கும் நடவடிக்கை இளைஞர்கள் மத்தியில் பெரிதாக பேசப்பட்டது. வலைதளங்களில் அவருக்குத் தனி ரசிகர் பட்டாளமே இருந்தது.[/color]
[color=var(--content-color)][Image: vikatan%2F2019-08%2F21d48a77-77b1-4e81-9...2Ccompress]
ஸ்ரீராம்
[/color]
[color=var(--content-color)]முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் முதல் பலரும் அவரின் நடவடிக்கையைப் பாராட்டினர். இவர் பேசும் காட்சிகள் அவ்வப்போது இளைஞர்கள் மத்தியில் பரவ `ஹீரோ'வாக வலம்வரத் தொடங்கினார். இந்தச் சமயத்தில் மேற்படிப்புக்காக வெளிநாடு சென்ற ஸ்ரீராம் இந்தவாரம் தான் நாடு திரும்பினார். நாடு திரும்பிய அவர் கேரள சர்வே துறை இயக்குநராக பணியமர்த்தப்பட்டார். தனக்குக் கிடைத்த புது பதவியை பார்ட்டி வைத்து கொண்டாடியுள்ளார் ஸ்ரீராம். இங்கு தான் அவருக்கு வினையே ஏற்பட்டது.[/color]
[/color]
first 5 lakhs viewed thread tamil
Like Reply
[color=var(--content-color)]சமூகத்துக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டிய ஸ்ரீராம், பார்ட்டியில் மது குடித்ததுடன் குடிபோதையில் விதிகளை மதிக்காமல் அதிவேகமாகச் சென்று விபத்தை ஏற்படுத்தியுள்ளார். தங்கள் பலருக்கும் ஆதர்ச நாயகனாக இருந்த ஸ்ரீராமின் இந்த மோசமான செயல் வெளியில் தெரிய கேரள இளைஞர்கள் கடுப்பாகி போகினர். இதனால் ஒரே இரவில் அதிக விமர்சனத்துக்கு உள்ளானர்.[/color]
[color=var(--content-color)][Image: vikatan%2F2019-08%2Fe0bff106-b506-4b06-8...2Ccompress]
ஸ்ரீராம்
[/color]
[color=var(--content-color)]இத்தனை நாள் அவர் கட்டிக்காத்த கண்ணியம் ஒரே இரவில் சரிவை சந்தித்துள்ளது. ஸ்ரீராம்.. இதற்கு முன் பேசிய பேச்சுகளை வைத்து ட்ரோல் செய்யத் தொடங்கியுள்ளனர் கேரள இளைஞர்கள். இதனால் கேரளாவில் எங்குப் பார்த்தாலும் ஸ்ரீராம் தொடர்பான பேச்சாகத் தான் உள்ளது.[/color]
first 5 lakhs viewed thread tamil
Like Reply
மாநில அந்தஸ்தையும் இழக்கிறது காஷ்மீர் - இரு யூனியன் பிரதேசங்களாக பிரிப்பு

மத்திய மந்திரிசபையின் முடிவின்படி ஜம்மு-காஷ்மீர் என்ற தனி மாநிலம் இனி லடாக் மற்றும் ஜம்மு-காஷ்மீர் என்ற இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படும் என உள்துறை மந்திரி அமித் ஷா அறிவித்துள்ளார்.



[Image: 201908051349460409_Bill-to-provide-UT-st...SECVPF.gif]

புதுடெல்லி:

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியலமைப்பின் சட்டப்பிரிவுகள் 370, 35ஏ ஆகியவற்றை ரத்து செய்யும் மசோதா இன்று பாராளுமன்ற மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.
எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புக்கு இடையில் இந்த மசோதாவுடன் மேலும் 3 மசோதாக்களை தாக்கல் செய்து பேசிய மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா, மத்திய மந்திரிசபையின் முடிவின்படி ஜம்மு-காஷ்மீர் என்ற தனி மாநிலம் இனி லடாக் மற்றும் ஜம்மு-காஷ்மீர் என்ற இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படும் என அறிவித்தார்.

[Image: 201908051349460409_1_Ladakh._L_styvpf.jpg]

'தற்போதைய ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள லடாக் மிகப்பெரிய நிலப்பரப்பை கொண்ட பகுதியாக இருந்தாலும் மக்கள்தொகை நெருக்கம் என்பது மிகக்குறைவாகவே உள்ளது. லடாக் பகுதியை யூனியன் பிரதேசமாக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாகவே இருந்து வருகிறது.

எனவே, இனி ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் ஆக்கப்படும். லடாக் மற்றொரு யூனியன் பிரதேசமாக மாற்றப்படும். சட்டசபையுடன் கூடிய யூனியன் பிரதேசமாக ஜம்மு-காஷ்மீரும் சட்டசபை இல்லாத யூனியன் பிரதேசமாக லடாக் பகுதியும் செயல்படும்’ என அமித் ஷா குறிப்பிட்டார்.
first 5 lakhs viewed thread tamil
Like Reply
போலீஸ் பெயரில் திருச்சி என்.ஐ.டி மாணவியை ரேப்பிங் செய்த திருடன்!

திருச்சி துவாக்குடியில் என்.ஐ.டி எனப்படும் தேசிய தொழில்நுட்பக்கழகம் செயல்பட்டு வருகிறது. இங்கே இந்தியாவின் பல்வேறு மாநிலத்தை சேர்ந்த மாணவர்கள் படித்து வருகிறார்கள். அந்த விடுதியில், மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் தங்கி பொறியியல் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.
 
[Image: mani_7.jpg]
 
மத்திய அரசு ஊழியரான அம்மாணவியின் தந்தை சென்னை கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் பணியாற்றி வருகிறார். தந்தையை சந்திக்க அடிக்கடி செல்லும்போது, கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் பணியாற்றும் இளைஞர் ஒருவருடன் காதல் ஏற்பட்டுள்ளது. இதனால் அவருடன் அடிக்கடி வெளியே சென்று வருவது வழக்கம். 
 
இதே போன்று கடந்த 1-ம் தேதி விடுதியில் இருந்து அனுமதியின்றி வெளியே சென்ற மாணவி 2 நாட்களுக்கு பிறகு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணி அளவில் திருச்சி திரும்பிய அவர், தனது காதலருடன் கல்லூரி முன்பு உள்ள பேருந்து நிறுத்தத்தில் பேசிக்கொண்டிருக்கிறார்கள். 
அப்போது, அங்கு வந்த வாளவந்தான் கோட்டையை சேர்ந்த மணிகண்டன் தன்னை போலீஸ் என அறிமுகப்படுத்தி, இருவரையும் யார் என விசாரித்ததுடன், இரவில் இங்கு நின்றுகொண்டிருப்பது ஏன் என போலீஸ் பாணியில் மிரட்டியிருக்கிறார். 
 
வெளியூர் சென்றுவிட்டு வந்ததாகவும், விடுதியில் விடுவதற்காக வந்த நண்பருடன் பேசிக்கொண்டி ருப்பதாகவும் மாணவி கூறியுள்ளார். இருட்டில் இங்கு நிற்பது ஆபத்தானது எனக் கூறிய மணிகண்டன், கல்லூரி விடுதியில் கொண்டு விடுவதாக மாணவியை அழைத்துள்ளார்.
 
அதற்கு மாணவி மற்றும் அவரது காதலர் மறுப்பு தெரிவித்ததுடன், தானே சென்று விடுவதாக மாணவி கூறியுள்ளார். இதை ஏற்காத மணிகண்டன், காதலரை தாக்கி கீழே தள்ளிவிட்டு, மாணவியை இருசக்கர வாகனத்தில் வலுக்கட்டாயமாக அழைத்துக் கொண்டு கல்லூரியின் நுழைவாயில் வழியே விடுதிக்கு செல்லும் வழியில் உள்ள கல்லூரி வளாக காட்டுப்பகுதிக்குள் இழுத்துச் சென்று மாணவியை பலவந்தமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் மணிகண்டன். 
 
பின்னர் பாதிக்கப்பட்ட மாணவி மொபைல் மூலம் காதலர் மற்றும் சக மாணவிகளுக்கு தகவல் அளித்துள்ளார். அவர்கள் அந்த மாணவியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் மாணவியின் தந்தைக்கும் தகவல் கொடுத்தனர். அவர் அளித்த புகாரின் பேரில், போலீசார் விசாரணை நடத்தினர். காதலன் துவாக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். 
மாணவி மற்றும் அவரது காதலர் கூறிய அடையாளங்கள் மற்றும் கல்லூரி வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகள் ஆகியவற்றின் அடிப்படையில் வாளவந்தான் கோட்டை மணிகண்டனை துவாக்குடி போலீசார் கைது செய்தனர். 
 
 மணிகண்டன் ஏற்கனவே பல்வேறு திருட்டு வழக்குகளில் சிக்கியிருக்கான். . இவன் என்.ஐ.டி கல்லூரி விடுதி வழியே வாழவந்தான்கோட்டையில் உள்ள வீட்டிற்கு அடிக்கடி சென்று வருவது வழக்கமாம். அவன் கஞ்சாவும்  இந்த கல்லூரிக்குள் விற்பது வழக்கமாக வைத்திருக்கிறான். இதில் பல மாணவிகள் மற்றும் இளைஞர்கள் இவனுக்கு கஸ்டமராக இருந்து உள்ளனர் என்பது குறிப்பிடதக்கது. கஞ்சா வாங்கிய பழக்கம் இவன் உள்ளே சென்று வருவது அங்க இருக்கும் வாட்ச்மேன்களுக்கும் தெரியுமாம். 
 
கல்லூரிக்குள் விற்கப்படும் கஞ்சா மற்றும் போதை பொருட்களை தடுக்காத வரை இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நிகழும் என்பது மட்டும் உண்மை
first 5 lakhs viewed thread tamil
Like Reply
370-வது சட்டப்பிரிவு நீக்கம்! இனி என்னவாகும் காஷ்மீர்?

காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியலமைப்பு சட்டத்தின் 370 மற்றும் 35 ஏ பிரிவுகளை நீக்கியிருக்கிறது மத்திய பாஜக அரசு. இதற்கான அறிவிப்பை நாடாளுமன்ற மாநிலங்களவையில் இன்று (5.8.2019) அறிவித்துள்ளார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா. இதற்கான ஒப்புதலை குடியரசு தலைவரும் வழங்கியிருக்கிறார். இதன் மூலம் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் என்கிற அந்தஸ்து பறிபோயிருக்கிறது. 
 
மேலும், இந்த மாநிலத்தை ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டாக உடைத்திருக்கிறது மத்திய பாஜக அரசு.  மத்திய அரசின் இத்தகைய முடிவுகளை எதிர்த்து எதிர்க்கட்சிகள் கொந்தளித்துள்ளன. பாஜகவின் இந்த முடிவுகளை அதிமுக எம்.பி.க்கள் வரவேற்று ஆதரித்திருக்கிறார்கள். 

 
[Image: kashmir_4.jpg]

 
மத்திய அரசின் இந்த முடிவுகள் தேசம் முழுவதும் சர்ச்சைகளையும் அதிர்வுகளையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்து திமுகவின் செய்தித் தொடர்பு செயலாளரும் வழக்கறிஞருமான கே.எஸ்.ராதாகிருஷ்ணனிடம் நாம் பேசிய போது, ‘’ மத்திய பாஜக அரசு நிறைவேற்றியிருக்கும் இந்த அதிரடி நடவடிக்கை மூலம் இனி  சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாக ஜம்மு - காஷ்மீர் இருக்கும்.  அதேபோல சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாக லடாக் செயல்படும்.
 
இதனை வைத்து ஆய்வு செய்கிறபோது, இனி ஜம்மு - காஷ்மீருக்கு தனிக் கொடி, தனி அரசியல் சாசனம் என்று எந்த விதமான அதிகாரங்களும் இருக்காது. இந்தியாவில் பிறப்பிக்கப்படும் சட்டங்கள் அனைத்தும் காஷ்மீருக்கும் பொருந்தும்.  மாநிலத்தின் எல்லைகளை விரிவுபடுத்தவோ, குறைக்கவோ முடியாது என்கிறது அரசியல் சாசனத்தின் 370-வது விதி. இனி மத்திய அரசு நினைத்தபடி எல்லைகளை மாற்றலாம்.  

இந்திய அரசியல் சாசனத்தின்  238 வது பிரிவு இம்மாநிலத்திற்குப் பொருந்தாது என்ற நிலை தற்போது நீக்கப்பட்டுள்ளது. இனி அனைத்துத் துறை சார்ந்து  மத்திய அரசு நிறைவேற்றும் மசோதாக்களை ஜம்மு - காஷ்மீர் சட்டப்பேரவையின் சம்மதம் இல்லாமல் அங்கு அமலுக்குக் கொண்டு வர முடியும். மேலும், வெளிமாநில ஆண்களை காஷ்மீரில் வாழும் பெண்கள் மணம் முடித்தால், அந்த ஆண்களால் காஷ்மீரில்  சொத்துகளை வாங்க முடியும். முன்பு  இந்த அதிகாரம் கிடையாது. 
 
இனிமேல் இந்தப் பிரச்சனை எப்படி அணுகப்படும் என்பதும் கேள்விக்குறியானது. காஷ்மீர் பிரச்சினை இன்றல்ல. ; நேற்றல்ல. பிரிட்டிஷ் காலத்திற்கு முன்பே சிறு சிறு கலகங்களாகத் தொடங்கின. ஆங்கிலேயர்கள் சாமர்த்தியமாக இதில் காய்களை நகர்த்தி தங்களுடைய இருப்பையும், ஆதாயத்தையும் பெருக்கிக் கொண்டனர்.  பஞ்சாப்பை பிடித்து ஆப்கானை ஆக்கிரமித்ததைப் போல, காஷ்மீர் பிரச்சினையிலும் சிக்கல் உருவானது.  ஆங்கிலேயர்களுக்குப் பல வகைகளிலும் துணையாக நின்ற ரன்பீர்சிங்கை, காஷ்மீர் அரசராக அங்கீகரித்தனர். அவருடைய வாரிசான ஹரிசிங்தான், அதாவது மத்திய அமைச்சர் கரண் சிங்கின் தந்தையார் காலத்தில்தான் பல நிகழ்வுகள் நடந்தேறின. 
 
இப்படியான சிறுசிறு பிரச்சினைகள் இருந்த சூழலில், நாடு 1947-இல் விடுதலை பெற்றது. இந்தியா – பாகிஸ்தான் பிரிவின்போது காஷ்மீர் சிக்கல் பெரிதாக எரிய ஆரம்பித்தது.  பல மன்னராட்சி சமஸ்தானங்கள், குறிப்பாக, இன்றைக்கு பாகிஸ்தானில் உள்ள ஐதராபாத், ஜோத்பூர், ஜூனாகத் மற்றும் பஞ்சாப் பகுதியில் உள்ள சமஸ்தானங்கள் பாகிஸ்தானோடு இணைய வேண்டுமென்று ஜின்னா போன்றவர்கள் விரும்பியதாகக் கூறப்படுவதுண்டு.
first 5 lakhs viewed thread tamil
Like Reply
இதில் ஒரு சில பகுதிகள், அதிக இஸ்லாமியர்கள் மக்கள் தொகை கொண்ட சமஸ்தானங்கள் ஆகும்.  குறிப்பாக ஜம்மு-காஷ்மீரை தன்னோடு இணைத்துக் கொள்ள வேண்டுமென்று பாகிஸ்தான் மும்முரம் காட்டியது.  ஆனால், ஜூனாகத் சமஸ்தானத்தில் பெரும்பான்மையானோர் இந்தியாவுடன் இணைய வேண்டுமென்ற விருப்பத்தின்படி இந்தியாவோடு இருந்துவிட்டது.  இந்த நிலையில் ஜின்னாவும், லியாகத் அலிகானும் பாகிஸ்தானோடு சேர்ந்தால்தான் இஸ்லாமியருக்கு நல்லது என்று பிரச்சாரம் மட்டுமல்லாமல், வேறு சில நடவடிக்கைகளிலும் இறங்கினர். அந்த வகையில் பாகிஸ்தான் ராணுவம் காஷ்மீரின் மீது படையெடுத்தது.
 
கரண்சிங்கின் தந்தையார் மன்னர் ஹரிசிங், இந்தச் சூழலில் இந்தியாவின் உதவியை நாடினார்.  ஷேக் அப்துல்லாவும் இஸ்லாமியரின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் தன்னுடைய காய்களை போராட்டக் களத்தில் நகர்த்தினார். ஹரிசிங் கையறு நிலையில் இருந்தார். பாகிஸ்தான் இராணுவமும் நெருங்கிவிட்டது. ஹரிசிங்கிடம் நேருவும், படேலும், "நீங்கள் உதவ வேண்டும். இந்திய இராணுவத்தை அனுப்புங்கள் என்று அழைத்தால் அனுப்புவோம். அதுமட்டுமல்லாமல், இந்தியாவோடுதான் இணைவோம் என சொல்லுங்கள்" என்று நிபந்தனையும் போட்டனர்.

 
[Image: 7744.jpg]

 
 "உங்களையும், உங்கள் சமஸ்தானத்தையும் இந்தியா பாதுகாக்கும் என்ற உத்தரவாதத்தையும் தருகிறோம்" என்று பிரதமர் நேருவும், உள்துறை அமைச்சர் படேலும் அப்போது  கூறினர்.  கூறியவாறே ஹரிசிங்கையும், அவர் சமஸ்தானத்தையும் இந்திய அரசு காப்பாற்றியது. அவரும் உறுதியளித்தவாறு 1947, அக்டோபர் 26ஆம் தேதி முறைப்படி இந்தியாவோடு இணைந்தார். 
 
அந்த வகையில் இன்றைக்கு நீக்கப்பட்டுள்ள சட்டப் பிரிவுகள் 370, 35A  ஆகியன, காஷ்மீரின் தனித்தன்மையைப் பாதுகாக்க இந்திய அரசு ஒத்துக்கொண்டது.  இதற்கான ஒப்பந்தங்களில் ஹரிசிங்கும், இந்திய அரசும் முறைப்படி கையொப்பமிட்டனர்.  இந்தப் பிரிவுகளை பின்னாள்களில் ரத்து செய்யச் சொல்லி ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் நடந்ததெல்லாம் உண்டு.   இந்த நிலையில் பாகிஸ்தான், தன் எல்லைப் பக்கத்தில் உள்ள சில பகுதிகளை ஆக்கிரமித்துக் கொண்டு, "ஆசாத் காஷ்மீர் " என்று தன்னகத்தே வைத்துக் கொண்டுள்ளது.  நேருவின் ஆட்சிக் காலத்தில் 1964-ஆம் ஆண்டில் சீனாவுடன் போர் ஏற்பட்ட காலத்தில் காஷ்மீரின் வடகிழக்குப் பகுதியில் சீனாவும் நுழைந்து ஆக்கிரமித்துக் கொண்டுள்ளது. இதை பாகிஸ்தானும் அன்று ஆதரித்தது. 

 
[Image: a_5.jpg]

 
இந்த நிலையில் பண்டித நேரு, காஷ்மீர் சிக்கலை ஐ.நா. மத்தியஸ்தத்திற்கு விட்டுவிட்டார். அன்றைய உள்துறை அமைச்சர் படேலும் நேருவின் இந்த முடிவுக்கு மாறுபட்டார்.  ஐ.நாவுக்கு இந்தப் பிரச்சனையைக் கொண்டு சென்றதில் இருந்து, கிணற்றில் போட்ட கல்லாக ஒரு தீர்வு எட்டப்படாமல் சீனாவும், பாகிஸ்தானும் தங்களது விருப்பத்திற்கேற்றவாறு சிக்கல்களை உருவாக்கிக் கொண்டே வந்தன. இடைப்பட்ட காலத்தில் பொதுவாக்கெடுப்பு என்கிற விவாதம் வந்தபோது, " ஆசாத் காஷ்மீரில் இருந்து பாகிஸ்தான் வெளியேறினால்தான் சாத்தியம் " என்று ஐ.நா.வில் தெரிவித்தது இந்தியா. 
 
             காஷ்மீர் அழகான, அமைதியான பூமி. இன்றைக்கு கலவர பூமியாக மாறியதற்கு உலகப் புவியரசியலும் ஒரு காரணம்.  காஷ்மீர் பிரச்சினையின் விளைவாக 1980-களில் பஞ்சாபிலும் சிக்கல்கள் கடுமையாக இருந்தன.  காஷ்மீர் மக்கள் பலர் இந்தியாவுடன் இருக்கத் தான் பெரும்பாலும் விரும்புகின்றனர். யாசிம் மாலிக் போன்ற சிலர் , வேறு திசையை நோக்கி அழைத்துச் செல்கின்றனர் என்றும் காஷ்மீரில் இருப்பவர்களே சொல்கின்றனர். காஷ்மீர் பிரச்சினையில் ஒவ்வொருவரும் தவறான அணுகுமுறையில் நடத்திச் சென்றுவிட்டனர் என்பதே யதார்த்தம்.  காஷ்மீர் விவகாரத்தில் கண்டிப்பும் வேண்டும் ;  அனுசரணையும் வேண்டும். அதுவே தீர்வுக்கு வழி.  காஷ்மீர் மீண்டும்  அழகிய, அமைதியான பூமியாகத் திரும்பட்டும் ‘’ என்கிறார் மிக அழுத்தமாக !  
 
first 5 lakhs viewed thread tamil
Like Reply
[Image: III-mumbai-rains-759-1.jpg]
கேரளாவில் ரெட் அலெர்ட்! நீலகிரியை வெளுத்து வாங்கும் தென்மேற்கு பருவ மழை.
Chennai weather today:நேற்று மாலை பொழுதிகளில் நகரங்களில் சில பகுதிகளில் மிதமான மழை பெய்து பலரையும் மகிழிச்சி கொள்ள வைத்தது சென்னை வானிலை
first 5 lakhs viewed thread tamil
Like Reply
amilnadu weather latest updates:  கேரளாவில் ஆரம்பித்த தென்மேற்கு பருவமழை நாளுக்கு நாள் தமிழகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. நேற்று கடுமையான மழையால் கேரளாவில் உள்ள 3 மாவட்டத்திற்கு ரெட் அலெர்ட் விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்திலும், நேற்று பரவலாக மழை பெய்தது. குறிப்பாக கோயம்பத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டத்திலும் கனத்த மழை பதிவானது.
இன்றும், நீலகிரி மாவட்டத்தில் கனத்த மழைக்கு அதிக வாய்ப்பு இருப்பதால் அம்மாவட்டத்திலுள்ள பந்தலூர், கூடலூர், குந்தா, ஊட்டி ஆகிய 4 தாலுகாவில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை என்று ஆட்சியர் அறிவித்துள்ளார்.
சென்னை வானிலை 
 
மழை எச்சரிக்கை
நீலகிரி மற்றும் கோயம்பத்தூர் மாவட்டங்களில் 21 cm மேல் நேற்று மற்றும் மழை பதிவாகியுள்ளதை அடுத்து, இன்றும் அம்மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
[Image: IE-nilgiris-300x200.jpg]
சென்னை வானிலை முன்னறிவிப்பு:
நேற்று மாலை பொழுதிகளில் நகரங்களில் சில பகுதிகளில் மிதமான மழை பெய்து பலரையும் மகிழிச்சி கொள்ள வைத்தது சென்னை வானிலை .
ஆனால், நேற்றை விட இன்று ஒப்பிட்டு ஈரப்பதம்(relative Humidity ) காலை நிலவரப் படி சற்று கம்மியாய் இருப்பதால் நேற்றை விட மழையின் அழுத்தம் சற்று கம்மியாகவே இருக்கும் என்று கருதப்படுகிறது. பொதுவாக,ஒப்பிட்டு ஈரப்பதம் அதிகம் இருந்தால் மழைக்கான வாய்ப்பு அதிகம் என்பது அறிவியல் கருத்து.
[Image: IE-relative-humidity-300x200.jpg]
 
first 5 lakhs viewed thread tamil
Like Reply
மாற்றப்படுகிறது வாட்ஸ்ஆப்பின் பெயர்; பேஸ்புக் அதிரடி! பின்னணி என்ன?

நியூயார்க் டைம்ஸின் கூற்றுப்படி, இந்த யோசனையை வாங்கியதே பேஸ்புக் தலைவர் ஆன மார்க் ஜுக்கர்பெர்க் தான்.

[Image: facebook-force-whatsapp-to-change-the-name-why.jpg]மாற்றப்படுகிறது வாட்ஸ்ஆப்பின் பெயர்; பேஸ்புக் அதிரடி! பின்னணி என்ன?
பேஸ்புக் நிறுவனத்தின் இந்த திடீர் முடிவுக்கு என்ன காரணம்? பெயர் மாற்றுவதற்கான அவசியமும் பின்னணியும் என்ன? வாட்ஸ்ஆப் மற்றும் இன்ஸ்டாகிராமின் புதிய பெயர்கள் என்னவாக இருக்கும்? 

தாய் நிறுவனமான பேஸ்புக்!

பேஸ்புக் நிறுவனத்தின் இந்த முடிவானது இந்த இரண்டு சோஷியல் ஆப்ஸ்களை அதிக அளவில் கட்டுப்படுத்த முயற்சிக்கிறது என்பதற்கான தெளிவான அறிகுறி ஆகும். பேஸ்புக் நிறுவனம் கடந்த 2012 ஆம் ஆண்டில் இன்ஸ்டாகிராமை வாங்கியதும், பின் 2014 ஆண்டில் வாட்ஸ்ஆப்பை வாங்கியதும் இங்கு குறிப்பிடத்தக்கது. 

பெயர் மாற்றத்திற்கான காரணம் என்ன? 

நிகழ்த்தப்படவுள்ள இந்த பெயர் மாற்றமானது, மூன்று ஆப்ஸ்களையும் (பேஸ்புக், வாட்ஸ்ஆப் மற்றும் இன்ஸ்டாகிராம்) ஒன்றாக இணைத்து பேஸ்புக் பேனரின் கீழ் கொண்டுவருவதற்கான ஒரு பகுதியாகும். 

திடீரென்று ஏன் இந்த முடிவு?

பேஸ்புக் நிறுவனமானது வாட்ஸ்ஆப் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய இரண்டையும் வாங்கியதிலிருந்து, அவைகள் பெரும்பாலும் தனித்து இயங்குவதற்கான உரிமைகளை கொடுத்து வந்தது. அதாவது வாட்ஸ்ஆப் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய இரண்டுமே பேஸ்புக்கிற்கு சொந்தமான ஆப்ஸ்கள் என்கிற வெளிப்படையான பிராண்டிங்கை உள்ளடக்கமாக கொண்டிருக்கவில்லை. பெயர் மாற்றம் செய்யவதின் மூலம், இந்த இரண்டு ஆப்ஸ்களை பயன்படுத்தும் எவருக்கும், இவைகள் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டுள்ளது என்பதும், இவைகள் பேஸ்புக் நிறுவனத்துடையது என்பதும் எளிமையாக புரியவரும். 

புதிய பெயர் என்ன?

மாற்றம் காணும் வாட்ஸ்ஆப் மற்றும் இன்ஸ்டாகிராமின் பெயர்கள் ஆனது பேஸ்புக்கின் உள் வர்த்தகத்தில் மட்டுமின்றி, கூகுள் பிளே மற்றும் ஆப் ஸ்டோரிலும் கூட புதிய பெயரின் கீழ் தான் தோன்றும். இருந்தாலும் கூட, ஸ்மார்ட்போனின் ஹோம் ஸ்க்ரீனில் காட்சிப்படும் ஆப் பெயரில் எந்த மாற்றமும் இருக்காது. மாறாக நீங்கள் அதை திறக்கும்போது புதிய பெயர் தோன்றும். "பேஸ்புக்கின் ஒரு பகுதியாக இருக்கும் தயாரிப்புகள் மற்றும் சேவைகள் ஆனது மிகவும் தெளிவாக இருக்க வேண்டும்" என்பதற்காகவே இந்த முடிவை எடுத்ததாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது வரையிலாக புதிய பெயர்களை பற்றிய வார்த்தைகள் எதுவும் இல்லை. 


பிரபல மெசேஜிங் தளமான வாட்ஸ்ஆப்மற்றும் புகைப்படம், வீடியோ பகிர்விற்கான வலைப்பின்னலான இன்ஸ்டாகிராம் ஆகிய இரண்டு ஆப்ஸ்களின் பெயர்கள் ஆனது கூடிய விரைவில் மாற்றப்படவுள்ளதாக பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது
first 5 lakhs viewed thread tamil
Like Reply
தாறுமாறாக அதிகரிக்கப்போகும் தங்கத்தின் விலை... இரண்டு மடங்காக உயர வாய்ப்பு..!

[Image: pjimage--9--jpg_710x400xt.jpg]
[Image: facebook_icon.svg][Image: twitter_icon.svg][Image: redit_icon.svg]
HIGHLIGHTS
 ஜூலை மாதம் இந்தியா இறக்குமதி செய்துள்ள தங்கத்தின் அளவு 39.66 டன். கடந்த ஆண்டு இதே ஜூன் மாதத்தில் 88.16 டன்


பெண்களுக்கு மிகவும் பிடித்தமான தங்கத்தின் விலையேற்றம் அங்கத்தை பதபதக்க வைத்துள்ளது. தென்னிந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. அப்படிப்பட்ட தங்கம் இனி அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுக்கப்போகிறது. [Image: gold1-jpg.jpg]
ஜூன் மாதம் இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்பட்ட தங்கத்தின் அளவு கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் குறைவாகி உள்ளது. உலகிலேயே அதிக அளவு தங்கத்தை இறக்குமதி செய்யும் நாடாக இந்தியா இருக்கிறது. ஆனால், கடந்த ஜூன் மாதம் இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்பட்ட தங்கத்தின் அளவு கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இறக்குமதி செய்யப்பட்ட அளவில் பாதிக்கும் கீழே சென்றுவிட்டது.[Image: pjimage--18--jpg.jpg] 
கடந்த மூன்று ஆண்டுகளுக்கு பிறகு இந்த அளவுக்கு தங்கம் இறக்குமதி குறைந்துள்ளது. ஏற்கெனவே இந்தியாவில் தங்கத்தின் விலை கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவு உச்சம் தொட்டிருக்கிறது. ஜூலை மாதம் இந்தியா இறக்குமதி செய்துள்ள தங்கத்தின் அளவு 39.66 டன். கடந்த ஆண்டு இதே ஜூன் மாதத்தில் 88.16 டன். இதேபோல இந்தியாவிலிருந்து தங்கம் ஏற்றுமதி செய்யப்படுவதும் 42 சதவீதம் வீழ்ச்சியுற்று இருக்கிறது. ஜூன் 2019ல் இந்தியாவின் தங்க ஏற்றுமதி மதிப்பு 1.71 பில்லியன் டாலர்.[Image: gold-jpg.jpg]
தங்கத்துக்கான தேவை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. ஆனால், ஆகஸ்ட் மாதமும் தங்கம் இறக்குமதி கடந்த ஆண்டைவிடக் குறைவாகவே இருக்கும் என தகவல்கள் கூறுகின்றன. 2019-20 நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தங்கத்தின மீதான இறக்குமதி வரியை 10 சதவீதத்தில் இருந்து 12.5 சதவீதமாக அதிகரிப்பதாக அறிவித்தார். அதிலிருந்து தங்கத்தின் விலை படுவேகமாக உயர்ந்து வருகிறது.
விலை அதிகரிப்பு காரணமாக இந்தியாவில் தங்கத்தின் தேவை செப்டம்பர் 2019 மாதத்தில் குறைந்துவிடும் என உலக தங்க கவுன்சில் கூறுகிறது
first 5 lakhs viewed thread tamil
Like Reply
[color=var(--title-color)]`நாளை என்னை வந்து சந்தியுங்கன்னு சொன்னார்’- சுஷ்மாவின் கடைசி வார்த்தைகளை கண்ணீருடன் பகிரும் நண்பர்[/color]

[color=var(--title-color)]சுஷ்மாவின் மரணத்தை என்னால் நம்ப முடியவில்லை' என அவரின் நண்பரும் குல்பூஷண் ஜாதவுக்காக சர்வதேச நீதிமன்றத்தில் வாதாடிய ஹரிஷ் சால்வ் கூறியுள்ளார்.[/color]
[Image: vikatan%2F2019-08%2F26c760bf-f601-4771-9...2Ccompress][color=var(--meta-color)]சுஷ்மா ஸ்வராஜ்[/color]
[color=var(--content-color)]சுஷ்மா ஸ்வராஜ் ஒரு சிறந்த மனிதர். அவரது இரக்க குணத்தாலும் அரவணைப்பாலும் அனைவரின் நெஞ்சங்களிலும் சென்றடைந்தார். சுஷ்மா ஸ்வராஜ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அத்வானி கூறிய வார்த்தைகள் இது. மத்திய வெளியுறவுத்துறை அமைச்சராக சுஷ்மா ஸ்வராஜ் இருந்தபோது தன்னால் முடிந்த உதவிகளை மக்களுக்குச் செய்தார். அதேபோல் வெளிநாடுகளில் பிரச்னைகளில் சிக்கித்தவித்த இந்தியர்கள் மீண்டும் தாயகம் திரும்புவதற்கான நடவடிக்கையில் துரிதமாக செயல்பட்டார். சுஷ்மா ஸ்வராஜை அணுகுவது மிகவும் எளிதாக இருந்தது. ட்விட்டரில் தங்கள் பிரச்னைகள் குறித்து பதிவிட்டவர்களுக்கு தேடிச் சென்று அவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்துகொடுத்தார். அந்த நன்றியை மறக்காத உள்ளங்கள் இன்று சுஷ்மாவுக்காக கண்ணீர் வடிக்கிறது.[/color]
[color=var(--content-color)][Image: vikatan%2F2019-08%2F8b94e02a-7868-4db4-b...2Ccompress]
ஹமீத் அன்சாரி[color=var(--meta-color)]ANI[/color]
[/color]
[color=var(--content-color)]இந்தியாவைச் சேர்ந்த ஹமீத் அன்சாரி எல்லைத் தாண்டிய குற்றத்துக்காக 2012 பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டார். தண்டனைக் காலம் முடிந்தும் அவரை பாகிஸ்தான் விடுவிக்கவில்லை. போலி அடையாள அட்டை வைத்திருந்ததாக அவர் மீது பாகிஸ்தான் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டது. குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து அவருக்கு மூன்றாண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. 2015-ல் தான் அன்சாரி பாகிஸ்தான் வசம் இருப்பதை அந்நாட்டு அரசு ஒப்புக்கொண்டது. சரியான ஆவணங்கள் இல்லை எனக் கூறி அவரை விடுவிக்க பாகிஸ்தான் மறுத்துவிட்டது. இந்த விவகாரம் சுஷ்மாவின் கவனத்துக்கு வந்ததும் இதுதொடர்பாக நடவடிக்கை எடுத்து அவர் இந்தியா வசம் ஒப்படைக்கப்பட்டார்.[/color]
first 5 lakhs viewed thread tamil
Like Reply
[color=var(--content-color)]இதை எதிர்த்து சர்வதேச நீதிமன்றத்தை இந்தியா அணுகியது. சர்வதேச நீதிமன்றம் மரண தண்டனையை நிறுத்திவைக்குமாறு பாகிஸ்தானுக்கு உத்தரவிட்டது. குல்பூஷண் ஜாதவுக்காக சர்வதேச நீதிமன்றத்தில் ஹரிஷ் சால்வ் வாதாடினார். ஜாதவுக்கு வழங்கிய மரண தண்டனையை மறுபரிசீலனை செய்யுமாறு பாகிஸ்தான் அரசுக்கு சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் வாதாடுவதற்கு தனக்கு சம்பளமாக 1 ரூபாய் போதும் என ஹரிஷ் சால்வ் கூறியிருந்தார். குல்பூஷண் ஜாதவுக்காக சர்வதேச அரங்கில் அதிகம் குரல் கொடுத்தது சுஷ்மாதான்.[/color]
[color=var(--content-color)][Image: vikatan%2F2019-08%2F10d93019-538c-4592-a...2Ccompress]
ஹரிஷ் சால்வ்[color=var(--meta-color)]ANI[/color]
[/color]
[color=var(--content-color)]``நேற்று இரவுதான் என்னுடன் போனில் நன்றாகப் பேசினார். உண்மையில் இது மிகவும் உணர்ச்சிகரமான உரையாடல். நீங்கள் நாளை வந்து என்னை சந்திக்க வேண்டும். நீங்கள் வாதாடி வென்ற வழக்குக்காக நான் உங்களுக்கான 1 ரூபாயை கொடுக்க வேண்டும் என்றார். நான் அந்த விலைமதிப்பற்ற கட்டணத்தை பெற வேண்டியிருந்தது. நாளை 6 மணியளவில் வந்து சந்திக்கச் சொன்னார். அவர் ஒரு சிறந்த தலைவர்” என ஹரிஷ் சால்வ் கண்ணீருடன் கூறினார்.[/color]
first 5 lakhs viewed thread tamil
Like Reply
ஜம்மு காஷ்மீர் விவகாரம் பாகிஸ்தானில் இந்தியாவுக்கு ஆதரவான பேனர்கள் வைக்கப்பட்டதால் பரபரப்பு

[Image: 201908071537250627_Pak-security%20officer-...SECVPF.gif]

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு நீக்கி அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கையை பாராட்டி மாநிலங்களவையில் சிவசேனா கட்சியை சேர்ந்த எம்.பி. சஞ்சய் ராவத்  பேசியிருந்தார். அவருடைய பேச்சு அடங்கிய செய்தி நிறுவனத்தின் டுவிட்டர் பதிவு பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் பேனர்களாக வைக்கப்பட்டுள்ளது. இது சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இந்தியாவிற்கு ஆதரவாக வைக்கப்பட்ட  பேனர்களால் அந்நாட்டில் சர்ச்சையாக வெடித்துள்ளது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சஞ்சய் ராவத் மாநிலங்களவையில் பேசுகையில், அகண்ட பாரதத்தை ஏற்படுத்தும் கனவில் அடுத்த கட்டத்தை நோக்கி சென்றுள்ளோம். இந்திய நிர்வாகத்துக்கு உட்பட்ட காஷ்மீரை மீட்டதை போன்று, பாகிஸ்தான் நிர்வாகத்துக்கு உட்பட்ட காஷ்மீர் மற்றும் பலூசிஸ்தானை இந்தியா மீட்கும் என குறிப்பிட்டு இருந்தார். இதனை ஆதரிக்கும் வகையில் இஸ்லாமாபாத் நகரில் சாலைக்கு நடுவே பேனர்கள்  வைக்கப்பட்டது. பொதுவாக இஸ்லாமாபாத் நகரில் பேனர்களை வைக்க அனுமதியை வாங்க வேண்டும். ஆனால் இந்த பேனர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என கூறப்பட்டது.

பாகிஸ்தானின் உளவுத்துறை தலைமையகம், பல்வேறு நாடுகளின் தூதரகங்களை ஒட்டிய இடத்திலேயே இந்த பேனர்கள் ஐந்து மணிநேரத்துக்கு மேலாக இருந்துள்ளது. பின்னர்தான் நடவடிக்கை எடுக்கப்பட்டு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. நீண்ட காலதாமத்திற்கு பின்னர் பேனர் அகற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக விளக்கம் அளிக்க மாவட்ட நிர்வாகத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
first 5 lakhs viewed thread tamil
Like Reply
சென்னையில் கத்திகளுடன் மோதிக்கொண்ட மாணவர்கள்

[Image: 69179.jpg]
சென்னை அடுத்த பெரம்பூரில் பயணிகள் ரயிலில் கல்லூரி மாணவர்கள் இடையே நடைபெற்ற மோதலில் பயணிகள் காயம் அடைந்தனர். 
சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த பயணிகள் ரயிலில் திடீரென பச்சையப்பன் கல்லூரி மற்றும் மாநில கல்லூரி மாணவர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. அந்த ரயில் பெரம்பூர் கேரேஜ் ரயில் நிலையத்தை அடைந்தப்போது, மாணவர்கள் பயங்கர ஆயுதங்களை கொண்டு மோதலில் ஈடுபட்டனர். மேலும் கற்களை கொண்டும் தாக்கினர். 

இதில் ரயிலில் வந்த பயணி ‌ஒருவர் காயமடைந்தார். இதனால் பிளாட்பாரத்தில் இருந்த பயணிகள் அலறியடித்துக்கொண்டு ஓடினர். தகவலறிந்து ரயில்வே காவல்துறையினர் அங்கு விரைவதற்குள் மோதலில் ஈடுபட்ட மாணவர்கள் தப்பியோடினர். எனினும் ஒரு மாணவரை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்
first 5 lakhs viewed thread tamil
Like Reply
தங்கம் விலை தொடர்ந்து விர்ர்ர்... - ரூ.28 ஆயிரத்தை தாண்டியது

சென்னை : தங்கம் விலை தொடர்ந்து புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. இன்று(ஆக.,7) ஒரேநாளில் சவரன் ரூ.568 உயர்ந்து இருப்பதுடன், ரூ.28 ஆயிரத்தை தாண்டியது.

சென்னை, தங்கம் - வெள்ளி சந்தையில், காலைநேர நிலவரப்படி, 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.3,544க்கும், சவரன் ரூ.28,352க்கும், 24காரட் 10கிராம் தங்கத்தின் விலை ரூ.37,010க்கும் விற்பனையாகிறது.




[Image: Tamil_News_large_2338606.jpg]





வெள்ளியின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. ஒருகிராம் சில்லரை வெள்ளியின் விலை ரூ.1.10 காசுகள் உயர்ந்து ரூ.46,800க்கு விற்பனையாகிறது. 

கடந்த ஆக.,1ல் ஒரு கிராம் தங்கம் விலை ரூ.3,310ஆக இருந்த நிலையில் இன்று ரூ.3,544ஆக உயர்ந்துள்ளது. ஒருவாரத்தில் மட்டும் ரூ.1,872 அதிகரித்துள்ளது. 


[Image: gallerye_113646375_2338606.jpg]






சர்வதேச சந்தைகளில் பொருளாதார சூழல் ஸ்திரமற்ற தண்மையில் இருப்பதன் காரணமாக தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருவதாக தங்கம் - வெள்ளி வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். 
first 5 lakhs viewed thread tamil
Like Reply
[color=var(--title-color)]2003-ல் ஏற்பட்ட அந்த வலி இன்னும் மறையவில்லை' - ஷோயப் அக்தர் பகிர்ந்த `ரகசியம்!'[/color]

[color=var(--title-color)]2003-ல் இந்தியாவிடம் அடைந்த மோசமான தோல்வி குறித்தும், தனக்கு அன்றைக்கு என்ன நேர்ந்தது என்பது குறித்தும் அக்தர் தற்போது பேசியுள்ளார்.[/color]
[Image: vikatan%2F2019-08%2Ffaa1b49c-07ba-4d5b-9...2Ccompress][color=var(--meta-color)]ஷோயப் அக்தர்[/color]
[color=var(--content-color)]உலகக் கோப்பை போட்டிகளில் இந்தியா, பாகிஸ்தானிடம் தோற்றதில்லை என்ற வரலாறு இன்றுவரை தொடர்ந்து வருகிறது. ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு காரணங்களால் இந்தியாவிடம் தோற்றுவருகிறது பாகிஸ்தான். ஆனால், 2003-ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணியும் இந்திய அணியும் சம பலத்துடன் மோதியது. முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் சயீத் அன்வரின் சதத்துடன் 273 ரன்கள் எடுத்தது.[/color]
[color=var(--content-color)][Image: vikatan%2F2019-08%2F9b531128-e30b-484b-b...2Ccompress]
சச்சின்
[/color]
[color=var(--content-color)]வாக்கர் யூனிஸ், வாசிம் அக்ரம், ஷோயப் அக்தர் என வலுவான பௌலிங் யூனிட்டை வைத்திருந்த பாகிஸ்தான் இந்திய அணியை விரைவில் சுருட்டிவிடும் என அந்நாட்டு ரசிகர்கள் நினைத்துக்கொண்டிருந்தனர். ஆனால் சச்சின், அவர்களின் நினைப்பை தகர்த்தார். சச்சின் 98, டிராவிட் 44, யுவராஜ் 50 என ரன்கள் குவித்து பாகிஸ்தானின் பௌலிங் யூனிட்டையும் நொறுக்கினார்கள். இந்தப் போட்டியில் அதிக ரன்களை வாரி கொடுத்தவர் என்றால் ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ்' என அழைக்கப்படும் ஷோயப் அக்தர்தான். இந்தப் போட்டியில் 72 ரன்கள் இவர் விட்டுக்கொடுத்தார்.[/color]
[color=var(--content-color)]இதற்கிடையே, 2003-ல் இந்தியாவிடம் அடைந்த மோசமான தோல்வி குறித்தும், தனக்கு அன்றைக்கு என்ன நேர்ந்தது என்பது குறித்தும் அக்தர் தற்போது பேசியுள்ளார். அதில், ``எனது கிரிக்கெட் கேரியரிலேயே எனக்கு ஏற்பட்ட மோசமான நிகழ்வு என்றால் அது 2003-ல் நிகழ்ந்த அந்தத் தோல்விதான். 273 என்ற நல்ல ஸ்கோர் எடுத்திருந்தும், நல்ல பௌலிங் லைன் அப் வைத்திருந்தும் எங்களால் இந்திய அணியைத் தடுக்க முடியவில்லை. அன்றைக்கு என்னுடைய மோசமான பௌலிங்க்கு காரணம் என்னுடைய ஃபிட்னஸ்தான்.[/color]
[color=var(--content-color)][Image: vikatan%2F2019-08%2F8ee938f7-2d0a-43be-b...2Ccompress]
ஷோயப் அக்தர்
[/color]
[color=var(--content-color)]மேட்சுக்கு முந்தைய நாள் கால் வலியால் அவதிப்பட்டு வந்த எனக்கு இடது முழங்காலில் 5 ஊசிகள் போடப்பட்டன. பந்துவீச்சைத் தொடங்கியபோது, ஊசியால் என் இடது முழங்கால் உணர்ச்சியற்றுப் போயிருப்பதைக் கவனித்தேன். இதனால் என்னால் சரியாக ஓடக்கூட முடியவில்லை. முடிவில் எனது பௌலிங் மோசமானது. சச்சின், சேவாக்கும் எளிதில் எங்கள் பௌலிங்கை சமாளித்தார்கள். குறிப்பாக, சச்சின் எனது பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொண்டு விளையாடினார். அவர்களுக்கு எப்படி பந்துவீசுவது, ஆட்டத்தில் எப்படி திருப்பத்தை ஏற்படுத்துவது என்பது போன்ற எந்த ஐடியாவும் அன்றைக்கு எனக்குத் தோன்றவில்லை.

[/color]
first 5 lakhs viewed thread tamil
Like Reply
[color=var(--content-color)]இதனால் முதலில் பந்துவீசுவதில் இருந்து சிறிது நேரம் ஓய்வு கொடுத்தார் கேப்டன் வாக்கர் யூனிஸ். சிறிது நேரம் கழித்து மீண்டும் அழைத்தபோது ஷார்ட் பாலாக வீசி 98 ரன்களில் இருந்த சச்சினை அவுட் ஆக்கினேன். அப்போது கேப்டனிடம் சொன்னேன். ஆரம்பம் முதலே இதுமாதிரியான பந்துகள் வீசியிருக்க வேண்டும். உலககோப்பை தோல்விகள் எனக்கு முற்றிலும் ஒரு கசப்பான அனுபவம்தான். ஏனென்றால் 1999, 2003 உலகக் கோப்பைகளில் நாங்கள் இந்தியாவை தோற்கடித்திருக்கலாம். ஆனால், எங்களால் முடியவில்லை.[/color]
[color=var(--content-color)][Image: vikatan%2F2019-08%2F9aacb3a2-5d47-4692-9...2Ccompress]
ஷோயப் அக்தர்
[/color]
[color=var(--content-color)]உலகக் கோப்பை என்று வந்துவிட்டாலே இந்தியா எங்களைவிட சிறப்பாக விளையாடி வருகிறது. அவர்களுக்குத்தான் அத்தனை கிரெடிட்டும் செல்ல வேண்டும். இருந்தாலும், அன்றைய நாள் இன்னும் வருத்திக்கொண்டிருக்கிறது. இன்னும் சில ரன்கள் எடுத்து சிறப்பாகப் பந்து வீச முடிந்திருந்தால், அந்தப் போட்டியில் வென்றிருக்க முடியும். ஆனால், துரதிர்ஷ்டவசமாக எனது உடற்தகுதி, மோசமான கேப்டன்ஷிப் தோல்விக்கு வழிவகுத்தது" எனப் பேசியுள்ளார்.[/color]
first 5 lakhs viewed thread tamil
Like Reply
nic..............
Like Reply




Users browsing this thread: 154 Guest(s)