Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது ஐசிசி
ஐசிசி சாம்பியன்ஷிப்
இறுதிப் போட்டியில் இங்கிலாந்தில் 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் நடைபெறும் என ஐசிசி தெரிவித்துள்ளது. இதில் 27 தொடர்கள் 71 போட்டிகள் அடங்கும்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் ஆஸ்திரேலியா, வங்காளதேசம், இங்கிலாந்து, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, இலங்கை மற்றும் வங்காளதேச அணிகள் பங்கேற்கின்றன.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் முதல் தொடராக இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையே ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் ஆஷஸ் வருகிற 1-ந்தேதி தொடங்குகிறது.
டெஸ்ட் போட்டிகள் இரு நாடுகளுக்கு இடையில் நடத்தப்பட்டு வந்தது. இந்த முறையை மாற்றி ஐரோப்பிய நாடுகளில் நடைபெறும் கால்பந்து லீக் தொடரை போன்று நடத்த ஐசிசி விரும்பியது. இதற்கான வேலைகள் அனைத்தையும் செய்து இன்று அதிகாரப்பூர்வமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன்படி டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் உள்ளூர் வெளியூர் அடிப்படையில் டெஸ்ட் போட்டிகளில் விளையாட வேண்டும். இறுதியில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் சாம்பியனுக்கான இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தும்
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
எம்.எல்.ஏ., மீது பலாத்கார புகார் கொடுத்த பெண்ணை கொல்ல முயற்சி?
புதுடில்லி: உ.பி.,யில், பா.ஜ. எம்.எல்.ஏ. மீது இளம் பெண் அளித்த பாலியல் பலாத்கார வழக்கில் சி.பி.ஐ., விசாரித்து வரும் நிலையில், பாதிக்கப்பட்ட இளம் பெண்ணை லாரியை ஏற்றி கொல்ல சதி செய்ததாக பா.ஜ. எம்.எல்.ஏ. மீது வழக்குப்பதியப்பட்டுள்ளது.
உத்தர பிரதேசத்தில், உன்னாவ் மாவட்டத்தை சேர்ந்த, பா.ஜ., - எம்.எல்.ஏ., குல்தீப் சிங் சென்கர் மற்றும் அவரது சகோதரர், ஆகியோர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக, இளம் பெண் அளித்த புகாரின் அடிப்படையில், எம்.எல்.ஏ., குல்தீப் சிங் மீது, முதல் தகவல் அறிக்கை எனப்படும், எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு, சி.பி.ஐ., வசம் ஒப்படைக்கப்பட்டு மூன்று தனித்தனி வழக்குகளை, சி.பி.ஐ., அதிகாரிகள் பதிவு செய்துள்ளனர். எம்.எல்.ஏ., கடந்த ஆண்டு ஜூலையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட இளம் பெண் தனது குடும்பத்தினருடன் காரில் சென்ற போது ரேபரேலி என்ற பகுதியில் விபத்தில் சிக்கியது. இதில் 2 பேர் பலியாயினர், இளம் பெண் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது விபத்து அல்ல, திட்டமிட்டு சரக்கு லாரியை ஏற்றி விபத்தை ஏற்படுத்தி இளம் பெண்ணை கொலை செய்ய பலாத்கார குற்றவாளியான பா.ஜ. எம்.எல்.ஏ, குல்தீப் சிங் சதி செய்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து குல்தீப் சிங் உள்பட 9 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
புகாரில் சிக்கியவர் எப்படி பொதுமேலாளர்?
சென்னை : முறைகேடு புகாரில் சிக்கியவரை பொது மேலாளராக நியமித்தது தொடர்பான வழக்கில், ஆவின் நிர்வாக இயக்குநர் பதில் அளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
கோவை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியத்தின் பொதுமேலாளராக ரவிச்சந்திரன் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இது முறைகேடான பணி நியமனம். ரவிச்சந்திரன் முறைகேடு புகாரில் சிக்கியவர். அவரை ஆவின் நிர்வாகம் எப்படி நியமிக்கலாம் என்று ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும், அதில் வழக்கமாக மேலாளர் அல்லது துணை பொதுமேலாளர் நிலையில் உள்ளவர்கள் மட்டுமே பதவி உயர்வு பெற்று பொது மேலாளராக நியமிக்கப்படுவார்கள்.
ஆனால் ரவிச்சந்திரனின் நியமனம் அவ்வாறு நடைபெறவில்லை. மேலும் அவர் மீது முறைகேடு புகாரின் கீழ் துறை ரீதியான விசாரணை நடைபெற்று வருகிறது. எனவே அவரை பதவி நீக்கம் செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நீதிபதி வைத்தியநாதன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆவின் நிர்வாகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ரவிச்சந்திரனுக்கு பொதுமேலாளராக பொறுப்பு மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அதற்கான உத்தரவை ஆவின் நிர்வாக இயக்குநர் தான் பிறப்பித்துள்ளதாகவும் பதிலளித்தார். இதைக் கேட்ட நீதிபதி, வழக்கு குறித்து ஆவின் நிர்வாக இயக்குநர் ஒரு வாரத்தில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை அடுத்த வாரத்திற்கு தள்ளிவைத்தார்.
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
மாட்ரிட் அணியில் இந்திய வீராங்கனை
புதுடில்லி: பெங்களூருவை சேர்ந்த கால்பந்து வீராங்கவை பிரிஷிதி பாக்சி 25. முன்கள வீராங்கனையான இவர், கர்நாடக அணிக்காக ஜூனியர், சீனியர் போட்டிகளில் பங்கேற்றார். 2012ல் அமெரிக்கா சென்ற இவர் ஆக்லஹாமா சிட்டி, வடக்கு டெக்சாஸ் பல்கலை., அணிகளில் விளையாடினார்.
சமீபத்தில் பெண்களுக்கான இந்திய லீக் கால்பந்து தொடரில் பெங்களூரு யுனைடெட் அணியில் களமிறங்கினார். தற்போது ஸ்பெயின் கிளப் அணிக்காக விளையாட உள்ளார். பெண்களுக்கான தொடரில் ஸ்பெயினின் பிரைமரா டிவிசன் புரோ தொடர் பிரபலம் ஆனது.
இத்தொடரில் 2019–20 சீசனில் மாட்ரிட் கிளப் டி புட்பால் அணியில் விளையாட பிரிஷிதி பாக்சி ஒப்பந்தம் செய்யப்பட்டார். இந்தியா சார்பில் ஸ்பெயின் உள்ளூர் கால்பந்து தொடரில் பங்கேற்கும் முதல் வீராங்கனை என்ற பெருமை இவருக்கு கிடைக்கவுள்ளது
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
[color=var(--title-color)] தந்தையின் ’மறதி’; காரிலேயே இறந்த குழந்தைகள்!- அமெரிக்காவை உலுக்கிய சோகச் சம்பவம்[/color]
[color=var(--title-color)]இறந்த குழந்தைகளை மடியில் வைத்துக்கொண்டு அவரின் தாய் கதறி அழுத சம்பவம், காண்போர் மனத்தை உருக்கும் விதமாக இருந்தது.[/color]
[color=var(--meta-color)]ஜுவான் - மரிசா[/color]
[color=var(--content-color)] அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள ராக் லேண்ட் நகரைச் சேர்ந்தவர், 39 வயதான ஜுவான் ரோட்ரிக்ஸ் ( Juan Rodriguez). இவருக்கு, மரிசா (Marissa) என்ற மனைவி, 4 வயதில் ஒரு மகன், லூனா மற்றும் போனெக்ஸ் என்ற ஒரு வயதாகும் இரட்டைக் குழந்தைகள் இருந்தனர். வேலைக்குச் செல்லும் தம்பதியான இவர்கள், தினமும் தங்கள் குழந்தைகளைப் பாதுகாப்பு மையத்தில் விட்டுவிட்டு வேலைக்குச் செல்வார்கள்.[/color]
[color=var(--content-color)]
குழந்தைகள் இருந்த கார்
[/color]
[color=var(--content-color)] ஜுவான், அங்குள்ள ஒரு மருத்துவமனையில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், கடந்த சனிக்கிழமை தன் மூன்று குழந்தைகளையும் காரில் ஏற்றிக்கொண்டு சென்ற ஜுவான், 4 வயது மகனை ஒரு மையத்தில் விட்டுவிட்டு நேராக தன் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். தன் இரட்டைக் குழந்தைகள் காரின் பின் இருக்கையிலிருந்ததை மறந்துவிட்டார். பின்னர், பணி முடிந்த பிறகு எப்போதும்போல காரை எடுத்துக்கொண்டு வீட்டுக்குச் செல்லும் வழியில், எதேச்சையாகப் பின் இருக்கையைப் பார்த்த ஜுவானுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.[/color]
[color=var(--content-color)] பின் இருக்கையில் இருந்த 2 குழந்தைகளும் வாயில் நுரை தள்ளியபடி பேச்சுமூச்சு இல்லாமல் படுத்திருந்துள்ளன. அதைப் பார்த்ததும் பதறிய ஜுவான், உடனடியாக காவலர்களுக்கு போன் செய்து உதவி கேட்டுள்ளார். இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவலர்கள், குழந்தைகளைப் பரிசோதித்துவிட்டு, இருவரும் இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து நடந்த மருத்துவ சோதனையில், எட்டு மணி நேரமாகக் குழந்தைகள் காரில் இருந்ததால், அந்த வெப்பம் தாங்காமல் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.[/color]
[color=var(--content-color)]
நீதிமன்றத்தில் கதறி அழும் ஜுனாவா
[/color]
[color=var(--content-color)] இதையடுத்து, குழந்தைகளின் தந்தையைக் காவலர்கள் கைது செய்து விசாரணைக்கு அழைத்துச்சென்றனர். விசாரணையில் பேசிய ஜுவான், “ நான் வேலைக்குச் செல்லும் முன்பு குழந்தைகளைப் பாதுகாப்பு மையத்தில் விட்டதாகவே தோன்றியது. முற்றிலும் வெறுமையாக உணருகிறேன். என் குழந்தைகள் இறந்துவிட்டன. நானே அவர்களைக் கொன்றுவிட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.
[color=var(--content-color)]ப்ரான்க்ஸ் (Bronx) குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஜுவான் மீதான வழக்கு விசாரணை முடிந்த பிறகு, அவருக்கு ஒரு லட்சம் டாலர் அபராதம் விதிக்கப்பட்டு, ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். சிறையிலிருந்து வெளியில் வந்த ஜுவானை அவரின் மனைவி மரிசா கண்ணீருடன் கட்டித்தழுவி அழுதார்.
[/color][/color]
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
“காபி டே“ நிறுவனர் சித்தார்த்தாவின் சொத்து மதிப்பு தெரியுமா?
சித்தார்த்தா
1.ஐ.டி.பி.ஐ. வங்கி - ரூ.4,475 கோடி.
2.ஆக்சிஸ் டிரஸ்டி லிமிடெட் - ரூ.915 கோடி.
3.ஆக்சிஸ் வங்கி - ரூ.315 கோடி.
4.ஆதித்யா பிர்லா பைனான்ஸ் லிமிடெட் - ரூ.278 கோடி.
5.எஸ் வங்கி ரூ.273 கோடி.
6.பிரமால் டிரஸ்ட் சிவ் சர்வீஸ் லிமிடெட் - ரூ.175 கோடி.
7.ஆர்.பி.எல். வங்கி - ரூ.174 கோடி.
8.இ.சி.எல். பைனான்ஸ் - ரூ.150 கோடி.
9.ஸ்டேண்டர்ட் சார்டெட் லோன்ஸ் அன்ட் இன்வெஸ்ட்மென்ட் - ரூ.150 கோடி.
10.கிளிக்ஸ் கேபிடல் - ரூ.150 கோடி.
11.ஆக்சிஸ் பைனான்ஸ் லிமிடெட் - ரூ.125 கோடி.
12.கோடெக் மகிந்திரா இன்வெஸ்ட்மென்ட் லிமிடெட் - ரூ.125 கோடி.
13.ஏ.கே.கேபிட பைனான்ஸ் - ரூ.121 கோடி.
14.எஸ்.டி.பி.ஐ. பைனான்ஸ் - ரூ.100 கோடி.
15.ரோபோ இன்டியா பைனான்ஸ் லிமிடெட் - ரூ.80 கோடி.
16.சப்ரோஜி பல்லோஞ்சி பைனான்ஸ் லிமிடெட் - ரூ.80 கோடி.
17.விஸ்திர ஐ.டி.சி.எல். லிமிடெட் - ரூ.75 கோடி.
18.ஸ்ரீராம் பைனான்ஸ் - ரூ.50 கோடி.
19. பஜாஜ் பைனான்ஸ் - ரூ.45 கோடி.
3 மடங்கு அதிகம்
மேற்கண்ட வங்கிகள் உள்பட மொத்தம் 24 வங்கிகளில் இருந்து சித்தார்த்தா ரூ.8 ஆயிரம் கோடி கடன் பெற்றிருக்கிறார் என்று கூறப்படுகிறது. ஆனால் சித்தார்த்தாவின் சொத்து மதிப்பு அவர் கடன் வாங்கியுள்ள தொகையைவிட 3 மடங்கு அதிகம், அதாவது ரூ.24 ஆயிரம் கோடி இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
சித்தார்த்தா தனது கடன் பிரச்சினை, மனவேதனை, கடன் கொடுத்தவர்கள் தரும் தொந்தரவுகள் குறித்து தனது நண்பர்கள் மற்றும் தனக்கு நெருங்கியவர்களிடம் மட்டும் சொல்லி மனமுடைந்து வாழ்ந்து வந்தார் என்று கூறப்படுகிறது.
இவ்வளவு கடன் பிரச்சினையில் சிக்கித் தவித்த சித்தார்த்தா உலகம் முழுவதும் கிளைகளை கொண்டுள்ள தனக்கு சொந்தமான 12 ஆயிரம் ஏக்கர் காபி எஸ்டேட் மூலம் கடந்த 2015-ம் ஆண்டு ரூ.8,200 கோடி லாபம் ஈட்டி இருந்தார்.
அதனால் அவர் அந்த ஆண்டு போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட மிகச்சிறந்த தொழில் அதிபர்களின் பட்டியலில் சிறப்பிடம் பிடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மங்களூரு :
கர்நாடக மாநில முன்னாள் முதல்-மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன் சித்தார்த்தா. தொழில் அதிபரும், மிகவும் பிரபலமான கபே “காபி டே“ நிறுவனருமான சித்தார்த்தா திடீரென மாயமாகி விட்டார். அவர் கடன் பிரச்சினை காரணமாகவே மாயமாகி விட்டார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் அவருக்கு ரூ.8 ஆயிரம் கோடி கடன் இருப்பதாகவும், அவர் எந்தெந்த வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் கடன் வாங்கியிருந்தார் என்ற தகவலும் வெளியாகி இருக்கின்றன. அதுபற்றிய விவரம் வருமாறு:
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
பள்ளி விடுதியில் மாணவர் குத்திக்கொலை! கொடைக்கானலில் பயங்கரம்!!
கொடைக்கானல் பள்ளி விடுதியில் மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் சக மாணவரை குத்திக்கொன்றவர் கைது செய்யப்பட்டார்.
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கொடைக்கானலில் பவானி காந்திவித்தியாசாம் என்ற தனியார் பள்ளி செயல் பட்டு வருகிறது. இந்த பள்ளியில் பல்வேறு வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். மாணவ மாணவிகளுக்காக இங்கு தனித்தனி விடுதி வசதியும் உள்ளது. இந்த பள்ளியில் ஓசூர் பெங்களூர் ரோடு கே சி சி நகரைச் சேர்ந்த சதீஷ் என்பவரது மகன் கபில் ராகவேந்திரன் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். அதே பகுதியில் விருதுநகர் செட்டியார் பற்றி ஐயங்கார் காலனியை சேர்ந்த முருகானந்தம் என்பவரின் மகன் ஸ்ரீஹரியும் படித்து வருகிறார். இருவருக்கும் அங்குள்ள விடுதியில் தங்கிப் படித்து வந்தனர்.
இவர்களுக்கிடையே உணவருந்தும் வேளையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த விவரம் விடுதி கண்காணிப்பாளர் மற்றும் ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. அதில் ஆசிரியர்கள் மற்றும் சக மாணவர்களும் அவர்களை சமாதானம் செய்து வைத்தனர்.
இந்த நிலையில் நேற்று இரவு கபில் ராகவேந்திரன் உடன் ஸ்ரீஹரிவுக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் கபில் ராகவேந்திரன் மீது ஸ்ரீஹரி ஆத்திரமடைந்தார். அப்போது அவர்கள் இருவரும் கைகலப்பில் ஈடுபட்டனர். ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். அப்போது மாணவர் ஸ்ரீஹரி கபில் ராகவேந்திரனை ஆவேசமாக கீழே பிடித்து தள்ளினார். அதன்பின் ஆத்திரம் ஸ்ரீஹரி கபில் கத்தரிக்கோலை எடுத்து கபில்ராகவேந்திரனை உடலில் பல இடங்களில் சரமாரியாக குத்தினார். இதில் கழுத்து தலை உடலிலும் பயங்கர காயம் ஏற்பட்டது. இப்படி படுகாயமடைந்த மாணவர் கபில் ராகவேந்திரன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.
மாணவர்கள் முன்னிலையில் நடந்த இந்த கொலை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதை அடுத்து பள்ளி நிர்வாகத்தினர் கொடைக்கானல் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். பள்ளியில் ஏற்பட்ட மோதல் குறித்து மாணவர் உயிரிழந்த சம்பவம் குறித்து இரு மாணவர்களின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பலியான கபில் ராகவேந்திரன் பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் உடலை பார்த்து கதறி அழுதனர். மேலும் மாணவன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். இதனை அடுத்து கொடைக்கானல் போலீசார் ஸ்ரீஹரியை கைது செய்து கொடைக்கானல் மாஜிஸ்ட்ரேட் முன்பு ஆஜர்படுத்தினர்.
மாணவன் உயிரிழந்ததையடுத்து அந்த பள்ளிக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது. கொலை செய்யப்பட்ட மாணவர் கபில் ராகவேந்திரனை கொலை செய்த மாணவர் ஸ்ரீஹரியும் நெருங்கிய நண்பர்கள். பள்ளியில் எப்போதும் ஒன்றாகவே அமர்ந்திருப்பர். விடுதியிலும் அவர்கள் சேர்ந்து இருப்பது வழக்கம் . சாப்பிடும் போதும் அவர்கள் ஒன்றாகவே அமர்ந்து சாப்பிடுவார்களாம். இப்படி நெருங்கிய நண்பர்கள் இடையே ஏற்பட்ட வாய்த் தகராறு கொலையில் முடிந்துள்ளது. மாணவர் கபில் ராகவேந்திரன் தந்தை சதீஷ் ஓசூரில் தனியார் வாட்ச் ஷோரூமில் வேலை செய்து வருகிறார். அதுபோல்ஸ்ரீஹரி மாணவரின் தந்தை முருகானந்தம் விருதுநகரில் பழக்கடை வைத்துள்ளார்.
கொலை பற்றிய தகவல் கிடைத்ததும் கொடைக்கானல் இன்ஸ்பெக்டர் ராஜசேகர் தலைமையில் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். கொடைக்கானல் ஆர்டிஓ சுரேந்திரனும் இச்சம்பவத்தைப் பற்றி விசாரணை நடத்தி வருகிறார். இச்சம்பவம் கொடைக்கானலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
-
- Tamil News
- Education-Jobs News In Tamil
- Recruitment In Anna University
பி,.இ. பட்டதாரிகளே.... கடைசி வாய்ப்பு அதுவும் இறுதிநாளில்...மிஸ் பண்ணிறாதீங்க
Anna university : அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள மற்றும் புரோகிராம் அனலிஸ்ட் பணிகளுக்கு தகுதியுள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
புரோகிராம் அனலிஸ்ட்
காலிப் பணியிடம் : 03
கல்வித் தகுதி – பி.இ . கம்ப்யூட்டர் சயின்ஸ் ,பி.டெக் இன்பர்மேசன் டெக்னாலஜி
சம்பளம் : ரூ.23,500
விண்ணப்பிக்கும் முறை :
புரொபஷனல் அசிஸ்டெண்ட் பணியிடத்திற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள், ஜூலை 30ம் தேதிக்குள் (இன்று ) கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.
புரோகிராம் அனலிஸ்ட் பணியிடத்திற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஜூலை 31ம் தேதிக்குள் (நாளை ) கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.
நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :
The Additional Controller of Examinations (University Departments),
Bi-Centennial Building,
CEG Campus,
Anna University,
Chennai – 600 025.
இந்த பணீயிடங்கள் குறித்த மேலதிக தகவல்களுக்கு //www.annauniv.edu/pdf/employment%20advertisement.pdf இந்த இணையதள பக்கத்தை பார்க்குமாறு விண்ணப்பதாரர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
உணவை இந்து மதத்தவர் எடுத்துவரவில்லை என ஆர்டரை கேன்சல் செய்த நபர்... பதிலடி கொடுத்த சோமாட்டோ...
தனக்கு உணவு கொண்டு வந்தவர் இந்து மதத்தை சேர்ந்தவர் இல்லை என கூறி வாடிக்கையாளர் ஒருவர் தான் ஆர்டர் செய்த உணவை கேன்சல் செய்துள்ள சம்பவம் மத்தியபிரதேசம் மாநிலத்தில் நடந்துள்ளது.
ஆனால் அவர் உணவை கேன்சல் செய்தது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு, அதற்கு சோமாட்டோ நிறுவனம் அளித்த பதில் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
மத்திய பிரதேசத்தின் ஜபல்பூர் பகுதியை சேர்ந்த அமித் சுக்லா என்ற நபர் நேற்று இரவு சோமாட்டோ செயலி மூலம் அருகிலுள்ள உணவகத்தில் உணவு ஆர்டர் செய்துள்ளார். அவரது உணவு தயாரிக்கப்பட்டு, டெலிவரிக்காக ஒரு நபரிடம் தரப்பட்டுள்ளது. ஆனால் அந்த நபர் ஒரு இந்து இல்லை என கூறி தனது ஆர்டரை வேறு டெலிவரி பாய் மூலம் அனுப்ப கோரியுள்ளார். ஆனால் அவ்வாறு மாற்ற முடியாது என சோமாட்டோ நிறுவனம் கூறிய நிலையில் தனது ஆர்டரை கேன்சல் செய்து, அதற்கான தொகையான 237 ரூபாயையும் செலுத்தியுள்ளார்.
பின்னர் இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தும், அவரை கிண்டல் செய்தும் வந்த நிலையில், அவரின் இந்த பதிவிற்கு சோமாட்டோ நிறுவனம் பதிலளித்துள்ளது. அந்நிறுவனத்தின் பதிலில், "உணவிற்கு மதம் கிடையாது, உணவு என்பதே ஒரு தனி மதம் தான்" என கூறியுள்ளது. சோமாட்டோ நிறுவனத்தின் இந்த பதில் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயாரை கூட்டு பலாத்காரம் செய்த பாஜக எம்.எல்.ஏ. மகன்!
டெல்லி: பலாத்காரம் செய்யப்பட்ட உன்னாவ் பெண் மற்றும் அவரது தாயார் ஆகியோர் பாஜக எம்.எல்.ஏ. குல்தீப்சிங்கின் மகனால் கூட்டு பலாத்காரம் செய்யப்ப்ட்டதாக உச்சநீதிமன்றத்தில் சிபிஐ அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது.
உன்னாவ் வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான பெஞ்ச் இன்று விசாரணை நடத்தியது. இந்த விசாரணையின் போது சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்ட தகவல்கள்:
2017-ம் ஆண்டு ஜூலை 4-ந் தேதி எம்.எல்.ஏ. குல்தீப்சிங் இளம்பெண்ணை பலாத்காரம் செய்தார். இந்த சம்பவத்தில் மொத்தம் 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன,
பாதிக்கப்பட்ட பெண், பாஜக எம்.எல்.ஏவால் பலாத்காரம் செய்யப்பட்டது, பொய்யாக ஆயுத சட்டங்களின் கீழ் பெண்ணின் தந்தை மீது வழக்கு தொடரப்பட்டது, பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை விசாரணை கைதியாக இருந்த போது மர்மமாக மரணம் அடைந்தது, பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது தாயார் ஆகியோர் பாஜக எம்.எல்.ஏ. குல்தீப்சிங்கின் மகனால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டது ஆகிய 4 வழக்குகள் பதிவு செய்யபப்ட்டுள்ளன.
இந்த 4 வழக்குகளிலுமே நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளன, ஆனால் இதை ஏற்று கடந்த 2 ஆண்டுகளாக குற்றப்பத்திரிகை விவரங்களை நீதிமன்றம் பதிவு செய்யவில்லை.
இவ்வாறு உச்சநீதிமன்றத்தில் சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
உன்னாவ் வழக்கு... அதிரடி காட்டிய உச்சநீதிமன்றம்... முக்கிய உத்தரவுகள் இவைதான்!
டெல்லி: பெரும் பரபரப்பை ஏற்படுத்திய உன்னாவ் பாலியல் பலாத்கார வழக்கில் சிபிஐ மற்றும் விசாரணை நீதிமன்றத்துக்கு அதிரடி உத்தரவுகளை இன்று பிறப்பித்துள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் இளம்பெண்ணை பாஜக எம்.எல்.ஏ. குல்தீப்சிங் பலாத்காரம் செய்தார் என்பது வழக்கு. இது தொடர்பான விசாரணையில் சிபிஐ மொத்தம் 4 வழக்குகளை பதிவு செய்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
இந்நிலையில் புகார் தெரிவித்த இளம்பெண்ணை கொல்லவும் முயற்சி நடந்தது. இதனால் நாடு முழுவதும் இந்த வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான பெஞ்ச் இன்று விசாரணை நடத்தி அதிரடி உத்தரவுகளை பிறப்பித்தது. அவை:
-
- உன்னாவ் சம்பவத்தில் சிபிஐ பதிவு செய்த 5 வழக்குகளும் உத்தரப்பிரதேசத்தில் இருந்து டெல்லிக்கு மாற்றம் செய்யப்படுகிறது
-
- சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த 4 வழக்குகளையும் விசாரணை நீதிமன்றம் 45 நாட்களுக்குள் விசாரணை நடத்தி தீர்ப்பு வழங்க வேண்டும்.
-
- விசாரணை நீதிமன்றமானது வழக்கு விசாரணையை நாள்தோறும் நடத்த வேண்டும்.
-
- பாதிக்கப்பட்ட பெண்ணை கொல்ல முயன்ற வழக்கின் விசாரணையை அதிகபட்சமாக 7 நாட்களுக்குள் சிபிஐ விசாரித்து முடிக்க வேண்டும்.
-
- கொலை முயற்சி வழக்கை விசாரிக்க 30 நாட்கள் அவகாசம் கேட்ட சிபிஐ கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது.
-
- பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ25 லட்சம் நிவாரண தொகையை உத்தரப்பிரதேச அரசு வழங்க வேண்டும்.
-
- பலாத்காரம் செய்யப்ப்ட்ட பெண், அவரது தாயார் மற்றும் வழக்கறிஞருக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.
-
- இந்த பாதுகாப்பு தொடர்பாக அப்பகுதி சிஆர்பிஎப் அதிகாரிகள் கண்காணித்து அறிக்கை அளிக்க வேண்டும்.
-
- ரேபரேலி சிறையில் உள்ள பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினரை டெல்லி திஹார் சிறைக்கு மாற்றுவதாக உபி அரசு தெரிவித்ததை நீதிமன்றம் ஏற்கிறது.
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
குற்றவாளிக்கு தூக்கு தண்டனை" - ஒரே வரியில் தீர்ப்பை உறுதி செய்த நீதிபதிகள்
மிழகத்தை உலுக்கிய கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
2010ஆம் ஆண்டு கோவையில், சிறுமி முஸ்கான், அவளது தம்பி ரித்திக் இருவரும் கடத்தி கொலை செய்யப்பட்டனர். அந்த சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வழக்கில் விசாரணை நடந்து கொண்டிருந்த போது, குற்றவாளிகளில் ஒருவரான மோகன கிருஷ்ணன், காவல்துறையிடம் இருந்து தப்ப முயன்ற போது என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். மற்றொரு குற்றவாளியான மனோகரனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து மனோகரன் தரப்பு, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கின் விசாரணை முடிந்த நிலையில், உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை உறுதி செய்வதாக ஒரே வாக்கியத்தில் நீதிபதிகள் தீர்ப்பு அளித்துள்ளனர். மேலும், குற்றவாளி மனோகரன் தரப்பு தொடர்ந்த மனுவையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
உஷார் வாகன ஓட்டிகளே... அதிகரிக்கும் சாலை விதிமீறல்கள் - மிகக் கடுமையான தண்டனைகள்!
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மோட்டார் வாகனச் சட்டத் திருத்தம் மூலம், போக்குவரத்து விதிமீறல்களுக்கு தண்டனைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.
உஷார் வாகன ஓட்டிகளே... அதிகரிக்கும் சாலை விதிமீறல்கள் - மிகக் கடுமையான தண்டனைகள...
ஆனால் ஆச்சரியம் தரும் வகையில் முத்தலாக் தடை மசோதாவை மாநிலங்களவையில் நிறைவேற்றி பாஜக அரசு சாதனை படைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து மோட்டார் வாகனச் சட்ட திருத்த மசோதாவும் இரு அவைகளிலும் வெற்றிகரமாக நிறைவேற்றி உள்ளது. இந்த மசோதாவை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தாக்கல் செய்தார்.
மாநிலங்களவையில் இந்த மசோதாவிற்கு ஆதரவாக 103 பேரும், எதிராக 13 பேரும் வாக்களித்தனர். மோட்டார் வாகன சட்டத் திருத்தம் மூலம் போக்குவரத்து விதிமீறல்களுக்கு தண்டனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
* லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டினால் அபராதம் ரூ.5000(முன்பு - ரூ.500)
* ஹெல்மெட் இல்லாமல் வாகனம் ஓட்டினால் அபராதம் ரூ.1000(முன்பு - ரூ.100)
* சீட்பெல்ட் அணியாமல் ஓட்டினால் அபராதம் ரூ.1000(முன்பு - ரூ.100)
உஷார் வாகன ஓட்டிகளே... அதிகரிக்கும் சாலை விதிமீறல்கள் - மிகக் கடுமையான தண்டனைகள்!
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மோட்டார் வாகனச் சட்டத் திருத்தம் மூலம், போக்குவரத்து விதிமீறல்களுக்கு தண்டனைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.
[color][size][font][size]
Samayam Tamil | Updated:Aug 1, 2019, 02:25PM IST
[/url]
உஷார் வாகன ஓட்டிகளே... அதிகரிக்கும் சாலை விதிமீறல்கள் - மிகக் கடுமையான தண்டனைகள...
மத்தியில் மோடி தலைமையிலான பாஜக அரசு இரண்டாவது முறையாக பதவியேற்றுள்ளது. இதையடுத்து நிறைவேறாத ஏராளமான மசோதாக்களை, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து நிறைவேற்றி வருகின்றது. மக்களவையில் அதிக பெரும்பான்மை இருப்பதால், மசோதாக்கள் எளிதில் நிறைவேறி விடுகின்றன. ஆனால் மாநிலங்களவையில் போதிய பெரும்பான்மை இல்லாத காரணத்தால், மசோதாக்கள் நிறைவேறுவதில் சிக்கல் நீடித்து வருகிறது.
ஆனால் ஆச்சரியம் தரும் வகையில் முத்தலாக் தடை மசோதாவை மாநிலங்களவையில் நிறைவேற்றி பாஜக அரசு சாதனை படைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து மோட்டார் வாகனச் சட்ட திருத்த மசோதாவும் இரு அவைகளிலும் வெற்றிகரமாக நிறைவேற்றி உள்ளது. இந்த மசோதாவை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தாக்கல் செய்தார்.
Also Read: [url=https://tamil.samayam.com/latest-news/india-news/tamil-nadu-mps-discuss-about-new-education-policy-with-union-minister-ramesh-pokhriyal/articleshow/70478612.cms]புதிய கல்விக் கொள்கையில் என்ன பிரச்சனை? மத்திய அமைச்சருடன் தமிழக எம்.பிக்கள் ஆலோசனை!
மாநிலங்களவையில் இந்த மசோதாவிற்கு ஆதரவாக 103 பேரும், எதிராக 13 பேரும் வாக்களித்தனர். மோட்டார் வாகன சட்டத் திருத்தம் மூலம் போக்குவரத்து விதிமீறல்களுக்கு தண்டனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
* லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டினால் அபராதம் ரூ.5000(முன்பு - ரூ.500)
* ஹெல்மெட் இல்லாமல் வாகனம் ஓட்டினால் அபராதம் ரூ.1000(முன்பு - ரூ.100)
* சீட்பெல்ட் அணியாமல் ஓட்டினால் அபராதம் ரூ.1000(முன்பு - ரூ.100)
Also Read: எதிர்ப்பதுபோல எதிர்த்துவிட்டு என்.ஐ.ஏ-வை ஆதரித்த திமுக; முத்தலாக்குக்கு ஆதரவளித்த அதிமுக
* அதிக வேகத்துடன் வாகனம் ஓட்டினால் அபராதம் ரூ.1000(முன்பு - ரூ.400)
* செல்போன் பேசிக் கொண்டு வாகனம் ஓட்டினால் அபராதம் ரூ.5000(முன்பு - ரூ.1000)
* மிக மிக வேகமாக வாகனம் ஓட்டினால் அபராதம் ரூ.5000(முன்பு - ரூ.1000)
* மதுபோதையில் வாகனம் ஓட்டினால் அபராதம் ரூ.10,000(முன்பு - ரூ.2000)
* ஆம்புலன்ஸுக்கு வழிவிடா விட்டால் அபராதம் ரூ.10,000. இதற்கு முன்பு அபராதம் ஏதும் விதிக்கப்படவில்லை.
[/size]
[/font][/size][/color]
மத்தியில் மோடி தலைமையிலான பாஜக அரசு இரண்டாவது முறையாக பதவியேற்றுள்ளது. இதையடுத்து நிறைவேறாத ஏராளமான மசோதாக்களை, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து நிறைவேற்றி வருகின்றது. மக்களவையில் அதிக பெரும்பான்மை இருப்பதால், மசோதாக்கள் எளிதில் நிறைவேறி விடுகின்றன. ஆனால் மாநிலங்களவையில் போதிய பெரும்பான்மை இல்லாத காரணத்தால், மசோதாக்கள் நிறைவேறுவதில் சிக்கல் நீடித்து வருகிறது
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
நடிகை காஜல் அகர்வாலை சந்திக்கும் ஆசையில் ரூ.60 லட்சத்தை இழந்த ராமநாதபுரம் வாலிபர்சினிமா தயாரிப்பாளர் அதிரடி கைது
ராமநாதபுரம் வாலிபர்
ராமநாதபுரத்தை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவரின் மகனான 27 வயது வாலிபர், சில மாதங்களுக்கு முன்பு கம்ப்யூட்டரில் இணையதளத்தை பயன்படுத்திக் கொண்டிருந்தார். அப்போது ஒரு இணையதள முகவரிக்குள் சென்ற போது இடையில் சில ஆபாச படங்கள் வந்துள்ளன. அதனை அகற்ற முயன்றபோது மற்றொரு இணையதள பக்கம் திறந்துள்ளது.
அந்த இணையதளத்தில் நடிகைகளின் கவர்ச்சி படங்கள் இருந்ததுடன், யாராவது விருப்பப்பட்டால் அந்த நடிகைகளை நேரில் சந்திக்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் கூறப்பட்டு இருந்தது.
இதை பார்த்ததும் அந்த தொழில் அதிபரின் மகன் அந்த பக்கத்திற்குள் சென்று தனது விவரங்களை பதிவு செய்ய தொடங்கி இருக்கிறார். தனது செல்போன் எண்ணை பதிவு செய்த அடுத்த நிமிடமே சில நடிகைகளின் படங்கள் தோன்றி, அவர்களில் யாரை சந்திக்க வேண்டும் என்ற தகவலை கேட்டுள்ளது.
நடிகை காஜல் அகர்வால்
நடிகை காஜல் அகர்வாலை சந்திக்க விரும்பிய அந்த வாலிபர், அந்த படத்தின் மீது ‘கிளிக்’ செய்துள்ளார். இதனை உறுதி செய்ய ரூ.50 ஆயிரம் நுழைவுக் கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் தகவல் வந்துள்ளது.
அதன்படி, அந்த வாலிபர் தனது வங்கி கணக்கு மூலம் பணத்தினை செலுத்தி உள்ளார். சற்றுநேரத்தில் அவரின் செல்போன் எண்ணுக்கு உறுதிசெய்யப்பட்ட எஸ்.எம்.எஸ். வந்தது.
இதன் மூலம் நடிகை காஜல் அகர்வாலை சந்தித்து விடலாம் என்றும், அவரை தன்னுடைய இல்லத்துக்கும் அழைத்து வரலாம் என்று அந்த வாலிபர் மகிழ்ச்சி அடைந்துள்ளார். ஆனால் இதுபற்றிய தகவலை அப்போது அவர் யாரிடமும் கூறவில்லை என தெரிகிறது.
இதற்கிடையே இணையதளத்தில் பதிவு செய்த தகவலைக் கொண்டு அவரிடம் ரூ.50 ஆயிரத்தை கறந்தவர்கள் மேலும் பணத்தை பறிக்க அந்த வாலிபர் யார், அவரது பின்னணி என்ன? என்பது குறித்து ரகசியமாக விசாரித்துள்ளனர். அந்த வாலிபர் வசதியான குடும்பத்தை சேர்ந்தவர் என்பதையும் உறுதி செய்துள்ளனர். எனவே அவரை ஏதாவது ஒரு வழியில் சிக்க வைத்து, அதன் மூலம் மிரட்டி தொடர்ந்து பணம் பறிக்கலாம் என்றும் திட்டமிட்டுள்ளனர்.
ஆபாச படங்களை வைத்து மிரட்டல்
சில நாட்களில் மேலும் ஒரு வங்கி கணக்கில் பணம் செலுத்தினால் நடிகை காஜல் அகர்வாலை சொல்லும் இடத்திற்கு அழைத்து வந்து சந்திக்க ஏற்பாடு செய்யப்படும் என்று தகவல் அனுப்பி உள்ளனர். ஆனால், அந்த நேரத்தில் உஷாரான அந்த வாலிபர், இது ஏமாற்று வேலை என்று உணர்ந்து பணம் அனுப்ப முடியாது என மறுத்துள்ளார்.
அதற்கு பின்னர்தான் அவருக்கு அதிர்ச்சியே காத்திருந்தது. அடுத்த சிலநிமிடங்களில் அந்த வாலிபரின் செல்போன் எண்ணிற்கு அவரையும் சில பெண்கள் மற்றும் நடிகைகளை இணைத்து, மார்பிங் செய்யப்பட்ட ஆபா படங்களையும், வீடியோக்களையும் அனுப்பி உள்ளனர்.
உடனே அந்த வாலிபர் அந்த படங்களை அழித்து விடுமாறு தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளார். தாங்கள் கேட்கும் பணத்தை கொடுக்காவிட்டால் அந்த ஆபாச புகைப்படங்களை உறவினர்கள், நண்பர்களுக்கு அனுப்பிவிடுவதுடன், சமூக வலைத்தளங்களிலும் பரவ விடுவோம் என மிரட்டி உள்ளனர்.
ரூ.60 லட்சத்தை அனுப்பினார்
குடும்ப கவுரவத்தை கருத்தில் கொண்டு அந்த வாலிபர், அந்த மோசடி பேர்வழிகளின் வலையில் விழுந்துவிட்டார். வேறு வழியின்றி அவர்கள் கூறிய வங்கி கணக்கிற்கு 3 தவணைகளாக ரூ.60 லட்சத்தை அனுப்பி உள்ளார்.
இந்த பணத்தை எடுத்துக்கொண்ட அவர்கள், அவர் ‘பொன்முட்டையிடும் வாத்து’ என்று நினைத்து தொடர்ந்து பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளனர். ஆனால், நடந்ததை வெளியே சொல்ல முடியாமல் அந்த வாலிபர் தொடர்ந்து மன அழுத்தத்துக்கு ஆளாகி உள்ளார்.
ஒரு கட்டத்தில் தற்கொலை என்ற விபரீத முடிவையும் எடுத்துள்ளார். பின்னர் வீட்டில் சொல்லாமல் கொள்ளாமல் வெளியேறினார்.
பாசமாக வளர்த்த மகனை காணாமல் அந்த தொழில் அதிபரும், குடும்பத்தினரும் பரிதவித்தனர். பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியாததால் கடைசியில் போலீசாரின் உதவியை நாடினர். போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து கொல்கத்தாவில் வைத்து அந்த வாலிபரை மீட்டனனர். அவரிடம் விசாரித்த பின்னர்தான், நடிகை குறித்து ஆசையால், இணையதளம் மூலம் ரூ.60 லட்சத்தை இழந்தது தெரியவந்தது.
போலீஸ் சூப்பிரண்டு பேட்டி
இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனா கூறியதாவது:-
தொழில் அதிபரின் மகனை காணவில்லை என்று புகார் வந்த பின்னர் அவரை தீவிரமாக தேடினோம். இந்த நிலையில் அந்த வாலிபர் தனது தந்தையை செல்போனில் அழைத்து, தன்னை தேடவேண்டாம் என்றும், தனக்கு வாழ பிடிக்காததால் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும் கூறியுள்ளார்.
எனவே அந்த வாலிபரின் செல்போன் அழைப்பு வந்ததை வைத்து விசாரித்த போது அவர் கொல்கத்தாவில் தங்கி இருந்தது தெரிந்தது. இதனை தொடர்ந்து அங்குள்ள போலீசாருக்கு தகவல் தெரிவித்து, வாலிபர் தங்கியிருந்த விடுதியில் அதிரடியாக நுழைந்து அவரை மீட்டு, அங்குள்ள போலீசார் எங்களிடம் ஒப்படைத்தனர். வாலிபரிடம் விசாரித்த பின்னர்தான், இணையதளம் மூலம் நடந்த மோசடி பற்றிய முழு விவரம் தெரிந்தது.
சினிமா தயாரிப்பாளர் கைது
இதனை தொடர்ந்து அவர் பணம் செலுத்திய வங்கி கணக்கினை வைத்து விசாரித்தோம். அது, சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பாவனாகோட்டை மணிகண்டன் என்பவருடையது என்று தெரிந்ததால், அவரிடம் விசாரித்தோம். அப்போது மணிகண்டன் கூறுகையில், “என்னுடைய நண்பர் கோபாலகிருஷ்ணன் என்ற சரவணக்குமார் (37), சினிமா தயாரித்து வருகிறார். படதயாரிப்புக்கு ஒருவர் உனது வங்கிக்கணக்கில் பணம் அனுப்புவார். அவர் பணம் அனுப்பும் போது எல்லாம் என்னிடம் எடுத்துக் கொடுக்க வேண்டும் என கூறினார். அவர் சொன்னபடி பணம் வந்தது. நானும் சரவணக்குமாரிடம் எடுத்துக்கொடுத்தேன்” என்று தெரிவித்தார்.
அவர் அளித்த தகவலின் படி, சென்னை அசோக் நகர் பகுதியில் தங்கியிருந்த சரவணக்குமாரை மடக்கி பிடித்தோம். அவர் ராமநாதபுரம் தொழில் அதிபர் மகனை மிரட்டி பணம் பறித்ததும், மிரட்டி வந்ததும் தெரியவந்தது. எனவே சரவணக்குமாரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தோம். இந்த சம்பவத்தில் மேலும் 2 பேருக்கு தொடர்பு இருப்பதாக தெரியவந்துள்ளதால் அவர் களை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சரவணக்குமார் இதுபோன்று பல நபர்களிடம் மோசடி செய்திருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. தொழில் அதிபர் மகனிடம் ரூ.60 லட்சம் பறித்து இருந்தாலும், சரவணகுமாரிடம் இருந்து ரூ.9 லட்சத்தை மட்டுமே மீட்க முடிந்தது. மற்ற தொகையை அவர் கிரிக்கெட் சூதாட்டத்தில் செலவழித்துவிட்டதாக கூறியுள்ளார்.
இவ்வாறு போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனா கூறினார்.
பாடமாக அமைந்தது
நடிகையை சந்திக்கும் ஆசையால் அவசரப்பட்டு, சில நொடிகளில் இணையதளத்தில் தனது விவரங்களை பதிவு செய்ததால் ஏற்பட்ட விளைவு, ஒரு வாலிபரை தற்கொலை முடிவு எடுக்கும் நிலைக்கு தள்ளியதுடன், பணம் பறிபோகவும் வாய்ப்பாக அமைந்துவிட்டது. போலீசார் சரியான நேரத்தில் எடுத்த நடவடிக்கையால் அவர் மீட்கப்பட்டுள்ளார். எனவே சினிமா, இணையதளம் மீது அதீத மோகம் கொண்டவர்களுக்கு இந்த சம்பவம் ஒரு பாடம் ஆகும்.
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
கணவர், மாமானார், மாமியார் அடி உதை.. வரதட்சணை கொடுமை.. தீக்குளித்து உயிர் துறந்த மைதிலி
திருவாரூர்: வரதட்சணை கொடுமையுடன் அடி, உதை, சித்ரவதையும் சேர்த்து அனுபவித்த மைதிலி, கடைசியில் தன் உடம்பில் மண்ணெண்ணை ஊற்றி தீ வைத்து கொண்டு தற்கொலை முயன்றார். இப்போது சிகிச்சை பலனளிக்காமல் மைதிலி இறந்துவிட்டார்.
திருவாரூர் அருகே மருதப்பட்டிணம் பகுதியைச் சேர்ந்தவர் அருண். இரண்டரை வருஷத்துக்கு முன்பு மைதிலி என்பவருடன் கல்யாணம் ஆனது. ஒருசில மாசம்தான் இருவரும் சந்தோஷமாக இருந்திருப்பார்கள்.. உடனே ஆரம்பமானது வரதட்சணை கொடுமை.
மைதிலியை தொடர்ந்து வரதட்சணை கேட்டு அருணும், மாமனார் இளங்கோவும் மாமியார் சுபாவும் கொடுமைபடுத்தி வந்துள்ளனர். போனவாரமும் இது சம்பந்தமான சண்டை வீட்டில் நடந்துள்ளது. இதனால் ஆத்திரமும், விரக்தியும் அடைந்த மைதிலி, கடந்த 26-ம் தேதி தன் உடம்பில் மண்ணெண்ணையை ஊற்றிக்கொண்டு தீ வைத்துக்கொண்டார்.
உடனே அக்கம்பக்கத்தினர் மைதிலியை மீட்டு திருவாரூர் அரசு ஆஸ்பத்திரியில் கொண்டு போய் சேர்த்தனர். 80 சதவீதம் உடல் எரிந்த நிலையில், மைதிலிக்கு தற்போது தீவிர சிகிச்சை அளித்தனர்.
இதனிடையே போலீசாரிடம் மைதிலி சொல்லும்போது, வரதட்சணை கேட்டு கணவன், மாமனார் தன்னை கொடுமைப்படுத்தி அடித்து துன்புறுத்தி வந்ததாகவும், அதனால்தான் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும் உடல் வெந்துபோன நிலையிலும் வாக்குமூலம் அளித்தார்.
அதனடிப்படையில் வழக்குப் பதிவு செய்த வைப்பூர் போலீசார், அருண் மற்றும் மாமனார் ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பின்னர் நாகை ஜெயிலில் அடைத்தனர். டாக்டர்கள் எவ்வளவோ போராடியும் மைதிலியை காப்பாற்ற முடியவில்லை. அதனால் சிகிச்சை பலனின்றி ஆஸ்பத்திரியிலேயே மைதிலிக்கு உயிர் பிரிந்தது.
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
காஷ்மீரில் குவிக்கப்படும் பாதுகாப்பு படை: கூடுதலாக 25 ஆயிரம் துணை ராணுவ வீரர்கள் அனுப்பி வைப்பு
ஸ்ரீநகர்,
இந்தியாவில் அடுத்த மாதம் (ஆகஸ்ட் 15) சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ளது. அதை சீர்குலைக்கும் விதமாக பாகிஸ்தானில் செயல்பட்டுவரும் பயங்கரவாத அமைப்புகள் காஷ்மீர் உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவு அமைப்புகள் எச்சரிக்கை விடுத்தன.
இதையடுத்து, அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்கும் விதமாக காஷ்மீருக்கு கூடுதலாக 10 ஆயிரம் ராணுவ வீரர்களை பாதுகாப்பு பணிக்காக மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பி வைத்தது.
இதனால் காஷ்மீர் மாநிலம் முழுவதும் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. காஷ்மீர் மாநிலத்துக்கு சலுகைகள் வழங்கும் சட்டப்பிரிவுகளான 35 ஏ 370 ஆகியவற்றை நீக்க மத்திய அரசு முடிவு செய்து இருப்பதால்தான் ராணுவத்தை குவிப்பதாக சமூக வலைதளங்களில் பல்வேறு தகவல்கள் பரவி வந்தன. ஆனால், இந்த தகவலை ஜம்மு காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக் திட்டவட்டமாக மறுத்தார்.
இந்த நிலையில், காஷ்மீர் பாதுகாப்பு பணிக்காக கூடுதலாக 25 ஆயிரம் துணை ராணுவ வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். நேற்று (வியாழக்கிழமை) காலை முதல் வீரர்கள் வரத்தொடங்கியுள்ளனர். வீரர்கள் பாதுகாப்பு பணிக்கு அனுப்பப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீநகரின் முக்கிய நுழைவு வெளியேறும் பகுதிகளை பாதுகாப்பு படையினர் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர். இதனால் ஸ்ரீநகரில் அசாதாரண சூழல் நிலவுகிறது.
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
அடேங்கப்பா.. ஒரே நாளில் இத்தனை தவறுகளா? சர்ச்சையில் ஆஷஸ் நடுவர்கள்
இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான முதல் ஆஷஸ் டெஸ்டின் முதல் நாள் ஆட்டத்தில் ஏராளமான தீர்ப்புகள் தவறாக வழங்கப்பட்டுள்ளன.
இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் போட்டி, பிர்மிங்காமில் இன்று தொடங்கியுள்ளது. இதன்மூலம் அனைவரும் எதிர்பார்க்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியும் ஆஷஸ் தொடர் மூலமாக அமர்க்களமாகத் தொடங்கியுள்ளது.
இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்து வரும் ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்து வேகங்களுக்கு கட்டுப்பட்டு அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து வருகிறது.
[img=0x0]https://wtf2.forkcdn.com/www/delivery/lg.php?bannerid=0&campaignid=0&zoneid=5834&loc=https%3A%2F%2Fwww.dinamani.com%2Fsports%2Fsports-news%2F2019%2Faug%2F01%2Fbrazen-umpiring-errors-marked-the-first-day-of-ashes-test-3204888.html&referer=https%3A%2F%2Fnews.google.com%2F&cb=6c735a7e9e[/img]
முதல் நாள் ஆட்டத்தின் தேநீர் இடைவெளியில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்டுகளை இழந்து 153 ரன்கள் எடுத்துள்ளது. ஸ்டீவ் ஸ்மித் மட்டும் அரைசதம் அடித்து 66 ரன்களுடன் விளையாடி வருகிறார்.
ஆனால், இந்த முதல் ஆட்டத்தின் தேநீர் இடைவெளி வரை நடுவர்கள் பல தவறான தீர்ப்புகளை வழங்கியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நடுவர்களும், மோசமான தீர்ப்பும்: -
- ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் தனது முதல் பந்திலேயே கீப்பர் கேட்ச் ஆனார். ஆனால், இங்கிலாந்து வீரர்கள் பெரிதளவில் அவுட் கேட்காததால் நடுவரும் அவுட் வழங்கவில்லை. ஆனால், ரீபிளேவில் அது அவுட் என்பது தெரியவந்தது. இதனால், டேவிட் வார்னர் இதில் இருந்து தப்பினார்.
- இன்னிங்ஸின் 4-வது ஓவரில் பிராட் பந்தில் டேவிட் வார்னர் 2 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். வார்னரும் இதற்கு ரிவியூ கேட்காமல் பெவிலியன் திரும்பினார். ஆனால், அந்த பந்து உண்மையில் ஸ்டம்புகளை தகர்க்கவில்லை. எனினும், முதல் பந்தில் தவறான தீர்ப்பால் தப்பிய வார்னர், நீண்ட நேரம் தாக்குப்பிடிப்பது நீதிக்கு உகந்ததல்ல என்று கர்மாவே முடிவு செய்ததோ என்னவோ!
- 15-வது ஓவரில் கவாஜா 13 ரன்கள் எடுத்திருந்தபோது, வோக்ஸ் பந்தில் கீப்பர் கேட்ச் ஆனார். ஆனால், கவாஜா கிரீஸைவிட்டு நகரவில்லை. நடுவரும் அவுட் கொடுக்கவில்லை. இதையடுத்து, இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் ரிவியூவைப் பயன்படுத்தினார். ரிவியூவில் கவாஜா அவுட் என்பது உறுதியானது. இதனால், அவுட் இல்லை என்ற நடுவர் தீர்ப்பு திரும்பப் பெறப்பட்டது.
- 34-வது ஓவரில் பிராட் வீசிய பந்தில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு எல்பிடபிள்யு முறையில் அவுட் வழங்கப்பட்டது. ஆனால், ஸ்டீவ் ஸ்மித் அதற்கு ரிவியூ கேட்க, அதில் அவருக்கு வழங்கிய அவுட் தவறு என்பது உறுதியானது. இதன்மூலம், ஸ்டீவ் ஸ்மித்தும் தப்பினார், ஆஸ்திரேலியாவின் ரிவியூவும் தப்பியது.
- அதற்கு அடுத்த ஓவரிலேயே மேத்யூ வேட்டுக்கு எல்பிடபிள்யு கேட்டு இங்கிலாந்து வீரர்கள் நடுவரிடம் முறையிட்டனர். ஆனால், நடுவர் அவுட் வழங்கவில்லை. எனினும், இங்கிலாந்து ரிவியூ கேட்டது. ரிவியூவில் மேத்யூ வேட் அவுட் என்பது உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம், நடுவரின் தீர்ப்பு மீண்டும் திரும்பப் பெறப்பட்டது.
- 40-வது ஓவரில் பேட்டின்சன் எல்பிடபிள்யூ முறையில் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அவரும் ரிவியூ கேட்கவில்லை. ஆனால், ரீபிளேவில் அந்த பந்து ஸ்டம்புகளைத் தகர்க்கவில்லை என்பது தெரியவந்தது. எனவே, நடுவர்களின் இன்றைய தவறான தீர்ப்புகள் பட்டியலில் மேலும் ஒன்று இடம்பிடித்தது.
- 47-வது ஓவரில் பீட்டர் சிடிலுக்கு எல்பிடபிள்யூ வழங்கப்பட்டது. ஆனால், பந்து பேட்டில் உறசியது சிடிலுக்கு உறுதியாக தெரிந்ததால், எந்தவித ஆலோசனையும் இல்லாமல் உடனடியாக ரிவியூ கேட்டார். இதன்மூலம், ரிவியூவில் வெற்றியும் பெற்றார். இதன்மூலம், இதுவும் நடுவர்களின் மோசமான தீர்ப்பாக அமைந்தது.
முதல் நாள் ஆட்டத்தின் தேநீர் இடைவெளி வரைதான் இந்த நிலை. இன்னும், முதல் நாள் ஆட்டத்தில் சுமார் 35 ஓவர்கள் மீதமுள்ளது. இங்கிலாந்துக்கு இரண்டு இன்னிங்ஸ் பேட்டிங் இருக்கிறது. ஆஸ்திரேலியாவுக்கு ஒரு இன்னிங்ஸ் முழுமையான பேட்டிங் இருக்கிறது. இப்படி இருக்கையில், நடுவர்கள் இப்படி தொடர்ந்து தவறான தீர்ப்புகளை அளித்து வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஆஷஸ் டெஸ்ட் தொடர் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு உலகக் கோப்பை தொடர் போன்றது. அதோடு அல்லாமல், இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் முதல் ஆட்டமாகும். எனவே, இதுபோன்ற மிக முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஆட்டத்தில் நடுவர்கள் தீர்ப்பு இப்படி அமைவது கிரிக்கெட் வட்டாரத்தில் மிகப் பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை, ஐசிசி நிச்சயம் கவனத்தில் கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நடுவர்கள் மோசமான தீர்ப்புகளை வழங்கியிருந்தாலும், இன்றைய ஆட்டத்தில் நடுவரின் தீர்ப்பை எதிர்த்து முறையிட்டு இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் தலா 1 ரிவியூவை இழந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
பாதிக்கப்பட்ட உன்னோவ் சிறுமியின் சகோதரியும் பாலியல் கொடுமைக்கு ஆளானார்- தாயார் குற்றச்சாட்டு
லக்னோ,
கடந்த 2017-ம் ஆண்டு ஜூன் மாதம் 4-ந்தேதியன்று, உத்தரபிரதேசம் உன்னாவ் மாவட்டத்தில் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்காரின் வீட்டுக்கு 17 வயது சிறுமி ஒருவர் வேலை கேட்டு சென்று உள்ளார். அப்போது அந்த சிறுமியை எம்.எல்.ஏ. கற்பழித்தார். சிறுமி மற்றும் அவரது தாயார் புகாரின் பேரில் எம்.எல்.ஏ. குல்தீப்சிங் செங்கார் மீது போக்சோ மற்றும் இந்திய தண்டனை சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்து சி.பி.ஐ. கைது செய்தது. தொடர்ந்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமி, தனது உறவுப்பெண்கள் மற்றும் வக்கீலுடன் சமீபத்தில் ரேபரேலி மாவட்டத்தில் காரில் பயணம் செய்தபோது, அந்த கார் மீது ஒரு லாரி மோதியது. நம்பர் பிளேட்டில் எண்கள் மறைக்கப்பட்டிருந்த அந்த லாரி மோதியதில், அந்த சிறுமியின் உறவுப்பெண்கள் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். அந்தச்சிறுமியும்,வக்கீலும் படுகாயம் அடைந்து சிகிச்சை பெறுகின்றனர்.
உன்னோவ் சிறுமி சிகிச்சை பெற்று வரும் உத்தரபிரதேசத்தின் லக்னோவில் உள்ள கிங் ஜார்ஜ் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு வெளியே அமர்ந்திருந்தபோது, தாய் தனது குடும்பத்திற்கு நடந்த கொடுமைகளை விவரித்து உள்ளார். அப்போது போலீசார் பல முறை குறுக்கிட்டனர், ஆனால் அவரது குடும்பம் எவ்வாறு அழிந்து போனது என்று தாய் தொடர்ந்து விவரித்தார். அவர்களின் அவல நிலையை உலகம் அறிய வேண்டும் என்று அவர் விரும்பினார்.
பாஜக எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்கரின் உதவியாளர்கள் பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரியையும் பாலியல் வன்கொடுமை செய்ததாக பெண்கள் ஆணையத்தில் கூறி உள்ளதாக கூறினார். சிறையில் அடைக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏ.வின் உதவியாளர்கள் எங்களை பலமுறை அச்சுறுத்தினர், துன்புறுத்தினர் என அவர் முன்பு கூறியிருந்தார். இப்போது, அவர்கள் தனது மற்றொரு மகளை கூட துஷ்பிரயோகம் செய்ததாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். இருப்பினும், புகார் அளிக்கப்பட்டுள்ளதா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
மேலும் அவர் கூறும் போது, செங்கரின் பாலியல் துஷ்பிரயோகம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜனாதிபதியின் அலுவலகங்களுக்கு புகார் கடிதங்களை அனுப்பி உள்ளோம்.
அவர்கள் எங்கள் குடும்பத்தில் உள்ள எல்லா ஆண்களையும் அழிக்க நினைக்கிறார்கள் . அவர்கள் என் கணவரை கொடூரமாக கொன்றனர். அவர்கள் அவளது சாச்சாவை (பாதிக்கப்பட்டவரின் மாமா) ஒரு புனையப்பட்ட வழக்கில் சிக்கி சிறையில் அடைத்து உள்ளனர். எம்.எல்.ஏ பற்றி நல்ல விஷயங்களைக் கேட்டு வளர்ந்தோம். அவர் எங்கள் வீட்டிற்கு பலமுறை வந்துள்ளார். அவருக்காக ஆம்லெட் தயாரிக்கும்படி என் அம்மாவிடம் கேட்டுக்கொண்டார். இத்தனைக்கும் பிறகு, அவர் என் குடும்பத்தை துன்புறுத்தி உள்ளார் என கூறினார்.
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
சித்தியுடன் தகாத உறவு... நேரில் பார்த்த உடன் பிறந்த தங்கையையும் மிரட்டி உல்லாசம்... தம்பியை கொன்ற கொடுமை!!
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர் பேட்டை அருகே அயன்குஞ்சரம் கிராமத்தை சேர்ந்த கேசவன் - பராசக்தி தம்பதியரின் இளைய மகன் சிவக்குமார், கடந்த சில தினங்களுக்கு முன்பு கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில் காப்புக்காடு பாறையில் சடலமாக மீட்கப்பட்டார்.
காப்புக்காட்டில் சிவக்குமாரின் சடலத்தை கைப்பற்றிய போலீசார் மோப்ப நாயின் உதவியுடன் விசாரணையை முன்னெடுத்தனர். சிறுவனின் சடலம் கிடந்த இடத்தில் இருந்து சுமார் நான்கரை கிலோ மீட்டர் ஓடிச்சென்ற நாய் சிவக்குமாரின் வீட்டருகே படுத்துக் கொண்டது.
சிறுவன் வீட்டில் இருந்து சென்றுள்ளான் என்பதால் நாய் அங்கு சென்று படுத்துக் கொண்டதாக கூறப்பட்ட நிலையில், இந்த கொலை வழக்கில் சிறுவனின் குடும்பமே போலீசிடம் சிக்கி உள்ளது.
இதுகுறித்து, போலீசார் நடத்திய விசாரணையில் அருவருக்கத்தக்க பல கேவலமான தகவல்கள் வெளிவந்துள்ளது. சிறுவனின் தந்தை வெளி நாட்டிற்கு சென்று விட்டதால், தாய் பராசக்தியின் நடத்தை சரியில்லை என்று கூறப்படுகிறது.
இதனை சிலமுறை நேரில் பார்த்த மூத்த மகன் சரத்குமாருக்கு, அவனது சித்தியுடன் முறையற்ற உறவு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் இவர்களின் பழக்கத்தை பார்த்து விட்டதால் உடன் பிறந்த அக்காவையும் மிரட்டி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளான் சரத்குமார்.
வெளியில் சொன்னால் தீர்த்துக் கட்டிவிடுவேன் என்ற சரத்குமாரின் மிரட்டலுக்கு பயந்து அந்த பெண்ணும் எதையும் வெளியில் சொல்லாமல் இருந்துள்ளார். அண்மையில் ஒரு நாள் சரத்குமார் தனது தங்கையிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபடுவதை சிவக்குமார் பார்த்து விட்டதாக சொல்லப்படுகிறது.
இதை எங்கே அவன் ஊராரிடம் சொல்லி விடுவானோ என்று பயந்து அவனை கொலை செய்ய பிளான் போட்டுள்ளான் சரத்குமார். சம்பவத்தன்று தனது சித்தியிடம் தகாத உறவு விவகாரம் தம்பி சிவக்குமாருக்கு தெரிந்துவிட்டதால், அவனை கொன்றுவிட வேண்டும் என்று தனது சித்தியை துணைக்கு அழைத்துள்ளான் சரத்குமார்.
அதே சமயத்தில் அவனது தங்கையையும் துணைக்கு அழைத்துக் கொண்டு 3 பேரும் சேர்ந்து சிவக்குமாரிடம் உடும்பு பிடிக்கலாம் என்று ஏமாற்றி, கொலை செய்யும் நோக்கில் காப்புக்காட்டுக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு வைத்து உடும்பு ஓடுவதாக கூறி, அதனை பிடிப்பதற்காக பாறை இடுக்கில் உற்று நோக்கவைத்த சரத்குமார், தான் கையுடன் எடுத்துச் சென்றிருந்த கரும்பு வெட்டும் கொடுவாளால் சிவகுமாரின் தலையை பிடித்து அறுத்துள்ளான். அப்போது உஷாராகி தப்பித்து ஓட முயன்ற சிவக்குமாரை, அவனது சித்தியும், தங்கையும் சேர்ந்து கால்களை பிடித்துக் கொள்ள, கொடூரமாக கொலை செய்துள்ளான் சரத்குமார் .
கொலை செய்துவிட்டு சிறிது நேரம் கழித்து ஊருக்குள் வந்து தம்பியை தேடுவது போல பாசாங்கு காட்டி நடித்த சரத்குமார், ஊருக்கு வெளியே காப்புக்காட்டு பகுதிக்கு சென்று தம்பியின் சடலத்தை கண்டுபிடித்ததாக கூறியதால், அவன் மீது சந்தேகம் ஏற்பட்டதாக போலீசார் கூறியுள்ளனர்.
தனது சித்தியையும், தங்கையையும் முறை தவறிய இச்சைக்கு பயன்படுத்தியதோடு, உடன் பிறந்த தம்பியையும் ஈவு இரக்கமின்றி கொடூரமாக வெட்டி கொலை செய்தது அந்த பெண்களிடம் நடத்திய விசாரணையில் தெரிகிறது. சரத்குமார், அவனது சித்தி, தங்கை ஆகியோரை கைது செய்த காவல்துறையினர் கொலைக்கு பயன்படுத்திய கரும்பு வெட்டும் கொடுவாளை பறிமுதல் செய்தனர்.
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
ஜம்மு காஷ்மீர்: லடாக்கில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு
ரீநகர்:
ஜம்மு காஷ்மீர் நிகழும் பதற்றம் தொடர்பாக ஸ்ரீநகரில் நள்ளிரவு முதல் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இங்கு பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக சுமார் 40 ஆயிரம் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு உள்ளனர். அமர்நாத் யாத்திரை, மச்சாயில் மாதா யாத்திரை உள்ளிட்ட யாத்திரைகள் ரத்து செய்யப்பட்டன.
மேலும், ஜம்மு காஷ்மீரில் தங்கியுள்ள சுற்றுலா பயணிகள் உடனடியாக வெளியேற வேண்டும் என மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் அறிவித்தார். இதை தொடர்ந்து சுமார் 5 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வெளியேறியுள்ளனர்.
இந்நிலையில் ஸ்ரீநகர் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமலானது. மறு உத்தரவு வரும் வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் காஷ்மீரில் மெகபூபா முஃப்தி, உமர் அப்துல்லா உள்ளிட்ட தலைவர்கள் வீடுகளை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது, அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களை மூடுவதற்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக காஷ்மீரில் பதற்றமான சூழ்நிலை நிலவுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் லடாக் மண்டலத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது.
லடாக்கில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படாததால் கல்வி நிறுவனங்கள் இன்று திறக்கப்பட்டுள்ளது. கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களும் வழக்கம் போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
first 5 lakhs viewed thread tamil
•
|