Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
வெளியே தலைகாட்ட முடியாத அளவுக்கு தர்ம அடி.. சாம்பியன் இங்கிலாந்தை வைச்சு செஞ்ச அயர்லாந்து!
கத்துக்குட்டி அயர்லாந்திடம் கவிழ்ந்து போன உலக சாம்பியன் இங்கிலாந்து
லண்டன் : இங்கிலாந்து அணி 2019 உலகக்கோப்பை தொடரை வென்று பத்து நாள் கூட ஆகவில்லை. அதற்குள் கிரிக்கெட்டில் பெரும் அவமானத்தை சந்தித்துள்ளது.
50 ஓவர் உலகக்கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இங்கிலாந்து அணி அடுத்து அயர்லாந்து அணியுடனான ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் ஆடியது.
எதிர்பார்ப்பு என்ன?
இந்த டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி சில அனுபவம் குறைந்த வீரர்களுடன் களமிறங்கினாலும், அயர்லாந்து அணியை விட பலம் வாய்ந்த அணியாகவே காட்சி அளித்தது. தன் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆடிய அயர்லாந்து அணி ஓரளவு தாக்குப் பிடித்தாலே பெரிது என்ற எதிர்பார்ப்பு தான் முதலில் இருந்தது.
துவக்கம்
போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. அயர்லாந்து அணியின் முர்டாக், துவக்க வீரர் ஜேசன் ராயை 5 ரன்களில் வெளியேற்றினார். அடுத்து டென்லியை 23 ரன்களில் வெளியேற்றினார் அடைர்.
விக்கெட் மழை
தொடர்ந்து அடைர் மற்றும் முர்டாக் விக்கெட்டாக வீழ்த்தித் தள்ளினர். 36 ரன்களுக்கு 3 விக்கெட்கள் இருந்த நிலையில், அடுத்து 43 ரன்களுக்கு 7 விக்கெட்கள் வீழ்ந்து பெரும் அவமானத்தில் சிக்கியது இங்கிலாந்து. அப்போதே இங்கிலாந்து ரசிகர்கள் மனமுடைந்து போய் உலகக்கோப்பை வெற்றியை எல்லாம் மறந்தார்கள்.
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
வரிசையாக டக் அவுட்
மிகச் சிறந்த பேட்ஸ்மேனும், இங்கிலாந்து டெஸ்ட் அணி கேப்டனுமான ஜோ ரூட் 2 ரன்கள் எடுத்தார். பேர்ஸ்டோ, மொயீன் அலி, கிறிஸ் வோக்ஸ் மூவரும் மிடில் ஆர்டரில் வரிசையாக களமிறங்கி டக் அவுட் ஆனார்கள்.
குறைந்த ஸ்கோர்
இறுதியாக சாம் கர்ரன் 18, ஸ்டோன் 19 ரன்கள் எடுத்த இங்கிலாந்து அணி 85 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்து முதல் இன்னிங்க்சை முடித்துக் கொண்டது. வெறும் 23.4 ஓவர்களில் இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்களையும் இழந்தது குறிப்பிடத்தக்கது.
அசத்தல் பந்துவீச்சு
முர்டாக் 9 ஓவர்கள் வீசி 13 ரன்கள் கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தினார். அடைர் 7.4 ஓவர்கள் வீசி 32 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்கள் வீழ்த்தினார். ரான்கின் 2 விக்கெட் வீழ்த்தி இருந்தார். அயர்லாந்து அணியில் மொத்தமே நான்கு பந்துவீச்சாளர்கள் மட்டுமே பந்து வீசி இருந்தனர்.
சாம்பியன் அணி
ஜூன் 14 ஆம் தேதி உலகக்கோப்பை சாம்பியன் பட்டம் வென்ற இங்கிலாந்து அணி, ஜூன் 24ஆம் தேதி வெறும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் மட்டுமே ஆடியுள்ள அயர்லாந்து அணியிடம் 85 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகி உள்ளது.
அவமானம்
இந்த மோசமான சம்பவம் இங்கிலாந்து அணியின் சொந்த மண்ணில் நடந்துள்ளது. அதுவும் அதே உலகக்கோப்பை வென்ற மைதானத்தில் நடந்துள்ளது. ஒரு சாம்பியன் அணிக்கு இதை விட மோசமான அவமானம் எதுவுமே இருக்க முடியாது என கிரிக்கெட் ரசிகர்கள் கூறி வருகிறார்கள். இந்தப் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெறவில்லை என்றால், அது இன்னும் பெரிய அவமானமாக மாறி விடும்.
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
அஸ்வினின் 'சென்னை 28 மிர்ச்சி சிவா பவுலிங்'..!! பந்துவீச தடை விதிக்க வாய்ப்பு?
மும்பை: அஸ்வினின் கோமாளித்தனமான பவுலிங், ஏற்கனவே வீரர்களை கடுப்பேற்றி இருக்கும் நிலையில் அவருக்கு தடை விதிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் என அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஆனால், டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் மறுக்கப்பட்டு வருகிறது.
தற்போதைய இந்திய அணியில் டெஸ்ட் போட்டிகளில் மட்டும் அஸ்வின் இடம் பெற்று விளையாடி வருகிறார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அஸ்வின் தேர்வாகி உள்ளார். தற்போது டிஎன்பிஎல் தொடரில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் கேப்டனாக அஸ்வின் விளையாடி வருகிறார்.
[color][size][font]
பவுலிங் சர்ச்சை
இந்த தொடரில் மதுரை அணிக்கு எதிராக அவரின் திண்டுக்கல் அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சென்னை அணிக்கு எதிராக கேப்டன் அஸ்வின் வித்தியாசமாக பவுலிங் செய்தார். அந்த பவுலிங் முறை சர்ச்சைக்கு உள்ளானது.
[/font][/size][/color]
[color][size][font]
கோமாளி பவுலிங்
இந்நிலையில் அதனை தொடர்ந்து தற்போது மதுரை பாந்தர்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போதும் இந்த கோமாளித்தனமான முறையில் பந்து வீசி விக்கெட்களை வீழ்த்தினார் அஸ்வின். அவரின் இந்த பந்தை ஒளித்து வைத்துக் கொண்டு வீசும் முறை ரசிகர்களிடையே கடும் விமர்சனத்தை பெற்றிருக்கிறது.
[/font][/size][/color]
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
முதல் தடவை அல்ல
அஸ்வின் இது போன்று வினோதமாக பந்துவீசுவது இது முதல் முறை அல்ல. ஐபிஎல் போட்டிகளிலும் அவ்வப்போது வழக்கத்திற்கு மாறாக பந்து வீசியுள்ளார். ஆனால் அவை வீதிகளுக்கு உட்பட்டே வரும்.
விதிமுறை மீறல்
ஆனால் இதுபோன்ற பந்துவீச்சு கிரிக்கெட்டின் விதிகளை மீறுகிறது என்று சிலர் விமர்சிக்கின்றனர். கேரம் பாலுக்கு பேர்போன அஸ்வினின் இந்த பந்தை போங்கு பால் என்றும் சென்னை 28 மிர்ச்சி சிவா பவுலிங் என்றும் கிண்டல் செய்கின்றனர்.
தடைக்கு வாய்ப்பு?
அவரது இந்த வித்தியாசமான பந்துவீச்சு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராகவும் இதுபோன்று ஸ்டைலில் செய்தால் அவருக்கு பந்துவீச தடை செய்யும் வாய்ப்பு உள்ளது. இது போன்ற விசித்திரமான பந்துவீச்சை சர்வதேசப் போட்டிகளில் வீசினால் ஐசிசி ஏற்றுக் கொள்ளுமா என்பது சந்தேகம்தான்.
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
[color=var(--title-color)] ஆன்லைன் ஷாப்பிங்கில் ஈடுபாடு கொண்ட மனைவி! - பிறந்தநாளுக்கு கணவர் கொடுத்த`மாத்தியோசி' கிஃப்ட்[/color]
[color=var(--title-color)]அவர் இதற்கு முன் இதுபோன்ற சர்ப்ரைஸ்களை கொடுத்ததில்லை. ஆனால், இப்போது அது ஒரு நடைமுறையாகவே மாறிவிட்டது.'[/color]
[color=var(--meta-color)]பிறந்தநாள் கிஃப்ட[/color]
[color=var(--content-color)] அமெரிக்காவில் உள்ள வடக்கு கரோலினாவைச் சேர்ந்தவர் வேலன் மெக்கொயர். இவர் தன் மனைவியின் பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க திட்டமிட்டிருந்தார். வித்தியாசமான முறையில் ஏதாவது செய்ய வேண்டும் என்று எண்ணியவர், மனைவிக்குப் பிடித்த விஷயம் ஒன்றை `கேக்’ வடிவத்தில் உருவகப்படுத்தி கொடுக்கலாம் என முடிவு செய்தார்.[/color]
[color=var(--content-color)]
அமேசான்
[/color]
[color=var(--content-color)] சாக்லேட், டைமண்ட், பூக்கள் இப்படி ஏதாவது ஒன்றாக இருக்கலாம் என நாம் நினைப்போம். ஆனால், அவரது விருப்பம் வேறுமாதிரியாக இருந்தது. மெக்கொயர், அமேசான் டெலிவரி பாக்ஸ் ஒன்றை கேக் வடிவத்தில் வடிவமைத்துக் கொடுத்துள்ளார். ``நான் இதைப் பார்த்த பிறகு என்னையே அறியாமல் சிரித்துவிட்டேன்; ஆரம்பத்தில் இது உண்மையான பாக்ஸ்தான் என்று நினைத்தேன். பிறகு தான் கேக் என்பதை உணர்ந்தேன்” என்கிறார் அவரின் மனைவி எமிலி.[/color]
[color=var(--content-color)] இப்படியொரு கேக் கொடுக்க காரணம், அவரின் மனைவி எமிலி, அமேசானிலிருந்து வாரத்துக்கு இரண்டு, மூன்று முறை எதையாவது வாங்கிக்கொண்டேயிருப்பாராம். அதனடிப்படையில் அவருக்கு டெலிவரி பாக்ஸையே கேக்காகக் கொடுத்திருக்கிறார். இந்த கேக் கேரோலினாவில் உள்ள `ஸ்வீட் டிரீம்ஸ்’ பேக்கரியில் வடிவமைக்கப்பட்டுள்ளது[/color]
[color=var(--content-color)]
கேக்
[/color]
[color=var(--content-color)] அச்சு அசல் அமேசான் டெலிவரி பாக்ஸ் போன்றே, டேப் ஓட்டி, பார்கோடு உள்ளிட்டவற்றை இடம்பெற்றிருப்பது போலவே அந்தக் கேக்கை வடிவமைத்துள்ளனர். இந்தக் கேக்கின் விலை 50 டாலராம். அதாவது நமது இந்திய மதிப்பில் தோராயமாக 3,441 ரூபாயாம். உண்மையில் அந்தப் புகைப்படத்தைப் பார்க்கும்போது, நாமும்கூட ஒரு நிமிடம், `இது பாக்ஸா, கேக்கா?’ என்று உற்றுநோக்க வேண்டியுள்ளது. அந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.[/color]
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
[color=var(--title-color)] திருட்டை முடித்துவிட்டு சுற்றுலா புறப்பட்ட திருடர்கள்! - மடக்கிப்பிடித்த சிவகங்கை காவல்துறை[/color]
[color=var(--title-color)]திருடும் போது இடை, இடையே சுற்றுலாவும் செல்வார்கள். திருட்டுத் தொழிலை ஜாலியாக செய்துவரும் இவர்கள், தமிழகம் முழுவதும் 200 திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.[/color]
[color=var(--meta-color)]திருடர்கள்[/color]
[color=var(--content-color)] தமிழகம் முழுவதும் 200 திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு ஜாலியாக சுற்றுலா பயணங்கள் செல்லும் திருடர்கள் சிக்கினர்.[/color]
[color=var(--content-color)]
கைது
[/color]
[color=var(--content-color)] விஜயகுமார் மாலிக், சோஹைல்குலாப் பட்டான், கணேஷ்மாலி, அசோக்மால் ஜெயின், ஆகிய நான்கு நபர்களும் கர்நாடக மற்றும் ராஜஸ்தான் பகுதிகளை சேர்ந்தவர்கள். திருட்டு தொழில் மூலம் நண்பர்களான இவர்கள், பல்வேறு இடங்களில் காரில் சென்று திருடுவார்கள்.[/color]
[color=var(--content-color)] திருட்டுக்கு நடுவே இடை, இடையே சுற்றுலாவும் செல்வார்கள். திருட்டுத் தொழிலை ஜாலியாக செய்துவரும் இவர்கள், தமிழகம் முழுவதும் 200 திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி, தேவகோட்டையில் கடந்த ஒரு வாரமாக தங்களது கைவரிசையை காட்டியுள்ளனர்.[/color]
[color=var(--content-color)]
கொள்ளை
[/color]
[color=var(--content-color)] நகை பட்டறை, ஐஸ் நிறுவனம், அரிசிக்கடை, பால்கடை, வணிக வளாகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தொடர்ந்து திருடியுள்ளனர். இந்த புகார்கள் சிவகங்கை காவல்துறை எஸ்.பி., ரோஹித்நாத் கவனத்துக்கு வர தேவகோட்டை உதவி ஆய்வாளர் மீனாட்சி சுந்தரம் தலைமையில் தனிப்படை அமைத்தார். இந்நிலையில் தொடர்கொள்ளையில் ஈடுபட்ட நான்கு வெளி மாநில நபர்கள் என்பது உறுதியானது.
[color=var(--content-color)]அதனை தொடர்ந்து சி.சி.டி.வி, காட்சிகள் உதவியால் திருடர்களை காவல்துறையினர் பிடித்தனர். சிவகங்கையில் திருட்டு சம்பவங்களை முடித்துவிட்டு ஊட்டி, கொடைக்கானல் என்று சுற்றுலா செல்ல முடிவு செய்து காரைக்குடியில் தங்கிருந்த தனியார் விடுதியில் இருந்து கிளம்பியுள்ளனர்.[/color]
[color=var(--content-color)]
கைது
[/color]
[color=var(--content-color)]அப்போது காவல்துறையினர் அவர்களை கையும், களவுமாக பிடித்து வழக்குப்பதிவு செய்தனர். தமிழகம் முழுவதும் பல்வேறு திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட ஜாலி திருடர்களை பிடித்த போலீஸ் தீவிர விசாரணை செய்துவருகிறது. மேலும் அவர்களிடம் இருந்த பணத்தையும் காரையும் பறிமுதல் செய்தனர்.[/color][/color]
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் அரசுக்கு வருமானம் கிடைக்கும் ஆனால் தமிழகம் சோமாலியாவாக மாறும் - வைகோ
தமிழக மக்களின் எதிர்ப்பையும் மீறி ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட திட்டங்களை 10 ஆயிரம் அடி ஆழத்துக்கு செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக மாநிலங்களவையில் வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழக மக்களின் எதிர்ப்பையும் மீறி ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட திட்டங்களை 10 ஆயிரம் அடி ஆழத்துக்கு செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக மாநிலங்களவையில் வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். எந்த எதிர்ப்பு வந்தாலும் இந்த திட்டத்தை நிறைவேற்றுவோம் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசி உள்ளதாகவும், மக்கள் எதிர்ப்பை மீறி செயல்படுத்த முயன்றால், மத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிராக மிகப் பெரிய போராட்டம் வெடிக்கும் என்றும் வைகோ தெரிவித்தார். மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் பேசக் கூடாது என மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்யா நாயுடு அறிவுறுத்தினார்.
Play Video
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
டிரம்பின் எல்லைச்சுவர் திட்டத்துக்கு உச்சநீதிமன்றம் அனுமதி மற்றும் பிற செய்திகள்
அமெரிக்கா மற்றும் மெக்ஸிகோ இடையேயான எல்லைப்பகுதியில் சுவர் அமைக்கும் அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்பின் கனவுத் திட்டத்தின் ஒரு பகுதிக்கு அனுமதியளித்து அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதன் மூலம், அந்நாட்டின் தெற்கு எல்லையில் சுவர் அமைப்பதற்கு தேவையான இரண்டு பில்லியன் அமெரிக்க டாலர்களை பென்டகனின் நிதியிலிருந்து பெற்றுக்கொள்ள முடியும்.
முன்னதாக, எல்லைச்சுவர் திட்டத்திற்கு பென்டகனின் நிதியை பயன்படுத்துவதற்கு கலிஃபோர்னியா மாகாண நீதிமன்றம் தடை விதித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
2016ஆம் ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான பிரசாரத்தின் போது இந்த எல்லைச்சுவர் திட்டத்தை முன்னிறுத்தியே டிரம்ப் செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த திட்டத்திற்கு, அமெரிக்காவின் எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி தொடக்கத்திலிருந்தே கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
அமெரிக்க உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவின் மூலம், அந்நாட்டின் கலிஃபோர்னியா, அரிசோனா, நியூ மெக்ஸிகோ ஆகிய மாகாணங்களை ஒட்டிய எல்லைப்பகுதியில் சுவர் கட்டப்படும்.
இது 'மிகப் பெரிய வெற்றி' என்று தெரிவித்து டிரம்ப் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
ஏ.டி.எம்மில் நூதன கொள்ளை - ஸ்கிம்மிங் கருவியை கண்டுபிடிப்பது எப்படி? #TechBlog
படத்தின் காப்புரிமைVALERY HACHE
"எனது வங்கிக்கணக்கிலிருந்து எனக்கே தெரியாமல் யாரோ பணம் எடுத்துவிட்டார்கள்" என்று அதிர்ச்சியடைபவர்களின் எண்ணிக்கை நாடு முழுவதும் ஆண்டுதோறும் அதிகரித்த வண்ணம் உள்ளது. 'ஸ்கிம்மிங் டிவைஸ்' எனும் கருவியை பயன்படுத்தியே இதுபோன்ற கொள்ளை சம்பவங்கள் பெரும்பாலும் அரங்கேற்றப்படுகின்றன.
அதாவது, இந்தியா முழுவதும் தானியங்கி பணம் எடுக்கும் இயந்திரத்தை (ஏ.டி.எம்) மையமாக கொண்டு நடத்தப்பட்ட நூதன கொள்ளைகளில் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் இழந்த புகார்களின் எண்ணிக்கை 2017-18 நிதியாண்டில் 911ஆக இருந்த நிலையில், கடந்த நிதியாண்டில் அது 980ஆக அதிகரித்துள்ளது என்று இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளதாக தி டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.
அதன்படி, 2018-2019 நிதியாண்டில் தானியங்கி பணம் எடுக்கும் இயந்திரத்தை மையமாக கொண்டு நடந்த நூதன கொள்ளைகளின் மூலம் சுமார் 21.4 கோடி ரூபாய் பணம் களவாடப்பட்டுள்ளது.
இந்த பட்டியலில், கடந்த நிதியாண்டை பொறுத்தவரை, 233 புகார்களுடன் மகாராஷ்டிரா முதலிடத்திலும், 179 புகார்களுடன் டெல்லி இரண்டாமிடத்திலும், 147 புகார்களுடன் தமிழ்நாடு மூன்றாமிடத்திலும் உள்ளது. கடந்தாண்டு தமிழ்நாட்டில் மட்டும் 3.6 கோடி ரூபாய் தானியங்கி பணம் எடுக்கும் மையங்களை முதலாக கொண்டு கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக அந்த செய்தி மேலும் கூறுகிறது.
இந்நிலையில், ஏ.டி.எம். கொள்ளைகளுக்கு அடிப்படையாக உள்ள கார்டு ஸ்கிம்மிங் டிவைஸ் என்றால் என்ன? அது எப்படி செயல்படுகிறது? ஸ்கிம்மிங் கருவியை கண்டுபிடிப்பது எப்படி? இழந்த பணத்தை திரும்ப பெற முடியுமா? போன்ற பல்வேறு கேள்விகளுக்கு பதிலளிக்கிறது இந்த கட்டுரை.
ஸ்கிம்மிங் கருவி என்றால் என்ன?
படத்தின் காப்புரிமைGETTY IMAGES
தானியங்கி பணம் எடுக்கும் இயந்திரத்தில் பணம் எடுப்பதற்காக ஏ.டி.எம் அட்டை (டெபிட் கார்டு) அல்லது கடன் அட்டையை (கிரெடிட் கார்டு) சொருகும் இடத்தில் கூடுதலாக பொருத்தப்பட்டு, அதன் மூலம் குறிப்பிட்ட அட்டையின் எண் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்களை ஒருவருக்கு தெரியாமலே பதிவு செய்துக்கொள்ளும் கருவியே ஸ்கிம்மிங் கருவியாகும்.
ஸ்கிம்மிங் கருவியின் மூலம் வங்கி அட்டையின் எண், தனிப்பட்ட குறியீட்டு எண் (சிவிவி) போன்றவை சேகரிக்கப்படும் நிலையில், ஒருவரது கடவுச்சொல் பணம் எடுக்கும் இயந்திரத்தின் தட்டச்சு செய்யும் இடத்தில் மிகச் சிறிய கேமரா பொருத்தப்பட்டு அதன் மூலம் கண்டுபிடிக்கப்படும். மிகவும் அரிதான நேரங்களில், பணம் எடுக்கும் இயந்திரத்தின் கடவுச்சொல் பதிவிடும் இடத்தில் அதே வடிவமைப்பை கொண்ட உறை மேலே விரிக்கப்பட்டு அதன் மூலம் கடவுச்சொல் திருடப்படும்.
ஸ்கிம்மிங் கருவியை கண்டுபிடிப்பது எப்படி?
தானியங்கி பணம் எடுக்கும் இயந்திரத்தின் வங்கி அட்டையை சொருகும் இடத்தில்தான் ஸ்கிம்மிங் கருவி பொருத்தப்படுகிறது. அதாவது, நீங்கள் வழக்கமாக வங்கி அட்டை சொருகும் இடம் புதிதாக நீண்டு வளர்ந்ததை போன்றோ அல்லது அசாதாரணமாகவோ காட்சியளிக்கும்.
அப்படி உங்களுக்கு சந்தேகம் இருக்கும் அசாதாரணமான பகுதியை சிறிதளவு அசைத்து பார்த்தாலே அது இணைக்கப்பட்ட இடத்திலிருந்து பிரிய ஆரம்பிக்கும்
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
அதே போன்று, நீங்கள் கடவுச்சொல் பதிவு செய்யும் இடத்திற்கு மேலே ஏதாவது புள்ளி அளவில் கேமரா தென்பட்டாலும் எச்சரிக்கையாக இருங்கள்.
சில சமயங்களில், ஏ.டி.எம் அட்டையின் கடவுச்சொல் தட்டச்சு செய்யும் பலகையின் மேலே அதே போன்ற மற்றொரு உறை ஒட்டப்பட்டு உங்களுக்கு தெரியாமலே கடவுச்சொல் பதிவுசெய்யப்படும். எனவே, நீங்கள் கடவுச்சொல் தட்டச்சு செய்யுமிடத்தில் வழக்கத்துக்கு மாறாக ஏதாவது தென்பட்டால் எச்சரிக்கையாக இருங்கள்.
திருடிய தகவலை வைத்து என்ன செய்வார்கள்?
பெரும்பாலான வேளைகளில் தானியங்கி பணம் எடுக்கும் இயந்திரங்களில் ஸ்கிம்மிங் கருவி மற்றும் கேமராவை வைக்கும் திருடர்கள் ஒரு குறிப்பிட்ட காலம் கழித்து வந்து அவற்றை எடுத்து, அதில் சேகரிக்கப்பட்ட தகவல்களை ஒப்பீடு செய்து அதேபோன்றதொரு போலியான கார்டை தயார் செய்கின்றனர்.
பின்பு, அவற்றை பயன்படுத்தி வேறுபட்ட தானியங்கி பணம் எடுக்கும் இயந்திரங்களிலிருந்து வங்கி கணக்கின் உரிமையாளருக்கு தெரியாமலே பணம் எடுத்து துடைத்துவிடுக்கின்றனர். இந்த முறையில் பணம் எடுப்பவர்களை கண்காணிப்பு கேமராக்கள் உள்ளிட்ட வசதிகளை பயன்படுத்தி காவல்துறையினர் பிடித்துவிடுகின்றனர்.
படத்தின் காப்புரிமைGETTY IMAGES
இந்நிலையில், காவல்துறையினரிடம் சிக்குவதை தவிர்க்கும் வகையில், ஓர் இயந்திரத்தில் பொருத்தப்படும் ஸ்கிம்மிங் கருவியின் விவரங்களை உடனுக்குடன் இணையதளம் மூலம் தெரிந்துகொண்டு அதை பயன்படுத்தி இணையம் மூலமே பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன.
பணம் போனால் திரும்ப கிடைக்குமா?
பொதுவான காந்தத்தை அடிப்படையாக கொண்ட வங்கி அட்டைகளை கொண்டுள்ள வாடிக்கையாளர்களே இதுபோன்ற பிரச்சனைகளில் சிக்குவதாக வங்கிகள் தெரிவிக்கின்றன. இந்த பிரச்சனைகளை களையும் பொருட்டே, மேம்பட்ட தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்ட இஎம்வி (EMV) எனும் சிப் ரக கார்டுகளை வைத்திருப்பதை இந்திய ரிசர்வ் வங்கி இந்தாண்டு தொடக்கம் முதல் கட்டாயப்படுத்தியது.
அதாவது, இந்த புதிய இஎம்வி ரக அட்டையை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு பணப்பரிமாற்றத்துக்கும் தனியே கிரிப்டோகிராம் (Cryptogram) எனும் மறையாக்கம் (Encryption) செய்யப்பட்ட எண்கள் ஒதுக்கப்படும். எனவே, இந்த ரக கார்டை ஸ்கிம்மிங் செய்து புதிய கார்டை உருவாக்க முடியாது என்று வங்கிகள் உறுதியளிக்கின்றன.
இருந்தபோதிலும், இந்தியாவிலுள்ள சுமார் இரண்டு லட்சம் தானியங்கி பணம் எடுக்கும் இயந்திரங்களில் பாதிகூட இந்த புதிய தொழில்நுட்பத்துக்கு ஏற்றவாறு மேம்படுத்தப்படவில்லை என்று கூறுகிறார் அகில இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளனத்தின் பொதுச் செயலாளரான வெங்கடாச்சலம்.
"நாடுமுழுவதும் சரியான கட்டமைப்பு, கண்காணிப்பு கேமராக்கள், பாதுகாவலர்கள், மேம்பட்ட தொழில்நுட்பம் போன்ற எதுவுமே இல்லாத பணம் எடுக்கும் மையங்கள் பெருமளவில் இருக்கின்றன. அவற்றின் தரத்தை உயர்த்தி, பிரச்சனைகளை களையாமலே புதிய தொழில்நுட்பங்களை கொண்ட வங்கி அட்டைகளை மட்டும் பயன்படுத்துவதில் பயனில்லை" என்று அவர் கூறுகிறார்.
நூதனமான வழிகளின் மூலம் பணத்தை இழந்தவர்களுக்கு அவர்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கி பணத்தை திரும்ப கொடுக்குமா? என்று அவரிடம் கேட்டபோது, "கண்டிப்பாக கொடுக்காது. பணத்தை இழந்தவர்கள் அதுகுறித்த விவரங்களை வங்கியிடம் தெரிவித்து தக்க பாதுகாப்பு நடவடிக்கை (வங்கி அட்டை அல்லது இணையதள கணக்கின் பயன்பாட்டை நிறுத்துவது) எடுத்துவிட்டு, பிறகு காவல்துறையிடம்தான் முறைப்படி புகார் அளிக்க வேண்டும். இதுவே பணம் எடுக்கும் இயந்திரம் மற்றும் பிற வங்கி சார்ந்த காரணங்களினால் பறிபோன பணம் தொடர்பாக சரியான ஆதாரம் கொடுக்கும் பட்சத்தில் வங்கிகள் பணத்தை திரும்ப வழங்கிவிடும்," என்று அவர் மேலும் கூறுகிறார்.
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
சொந்த செலவில் ஜெருசலேம் செல்லும் ஆந்திர முதல்வர்
ஜெகன்மோகன் ரெட்டி தனது சொந்த செலவில் இஸ்ரேல் தலைநகர் ஜெருசலேம் நகருக்கு அடுத்த மாதம் செல்கிறார்.
ஜெகன்மோகன் ரெட்டியின் தந்தையான மறைந்த முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டி குடும்பத்துடன் கிறிஸ்தவ மதத்துக்கு மாறினார்.
ஒவ்வொரு ஆண்டும் ராஜசேகர ரெட்டி குடும்பத்துடன் ஜெருசலேம் செல்வதை வழக்கமாக வைத்து இருந்தார். அதே போல் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகும் ஜெருசலேம் சென்று வருவார்.
தற்போது ஜெகன்மோகன் ரெட்டியும் தனது தந்தையின் பாணியை கடைபிடிக்கிறார். தேர்தலில் அபார வெற்றியை பெற்ற ஜெகன்மோகன்ரெட்டி வருகிற 1-ந் தேதி குடும்பத்துடன் ஐதராபாத்தில் இருந்து ஜெருசலேம் புறப்பட்டு செல்கிறார். அங்கு ஏசு பிறந்த இடமான பெத்தலகேமுக்கு செல்கிறார். அங்கு தேர்தலில் பெற்ற வெற்றிக்காக நன்றி தெரிவிக்கிறார். பின்னர் அவர் 5-ந்தேதி ஆந்திரா திரும்புகிறார்.
அதன் பின் ஜெகன்மோகன் ரெட்டி 15-ந்தேதி குடும்பத்துடன் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்கிறார். அங்கு அவரது இளைய மகள் வர்ஷாவை உயர் கல்வி படிப்பில் சேர்ப்பதற்காக செல்ல உள்ளார்.
மேலும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் சார்பில் ஏற்பாடு செய்யப்படும் வெளிநாட்டு வாழ் இந்தியர்களுடனாக சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.
24- ந்தேதி அமெரிக்க பயணத்தை முடிந்து கொண்டு நாடு திரும்புகிறார். ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராக பதவி ஏற்ற பிறகு முதல் வெளிநாட்டு பயணம் மேற்கொள்கிறார்.
ஆனால் சொந்த விஷயமாக பயணம் மேற்கொள்வதால் அரசு செலவை ஏற்க மறுத்து தனது சொந்த செலவிலேயே செல்கிறார்.
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
[color=var(--title-color)] பாட்டில் வீச்சு... உருட்டுக் கட்டை தாக்குதல்! - திருச்சியில் மோதிக்கொண்ட கல்லூரி மாணவர்கள்[/color]
[color=var(--title-color)]ரூட் தல” விவகாரத்தில் சென்னை கல்லூரி மாணவர்கள், பேருந்தில் அட்டகத்திகளுடன் செய்த கொலைவெறி தாக்குதல் சம்பவத்தின் அதிர்ச்சி அடங்குவதற்குள், திருச்சியில் அடுத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.[/color]
[color=var(--meta-color)]திருச்சி கல்லூரி மாணவர்கள் தாக்குதல்[/color]
[color=var(--content-color)] திருச்சியில் கல்லூரி மாணவர்கள் உருட்டுக்கட்டை, பாட்டில், கருங்கல் ஆகியவற்றால் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்ட பயங்கர மோதலில் 15 பேர் படுகாயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தீரன் நகர் பகுதியில் தனியார் பொறியியல் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் கடந்த சில வாரங்களாகவே மாணவர்களுக்குள் சீனியர்- ஜூனியர் மோதல் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.[/color]
[color=var(--content-color)]
[/color]
[color=var(--content-color)] இந்நிலையில் நேற்று மாலை கல்லூரி நுழைவாயில் அருகே இரு தரப்பு மாணவர்களும் உருட்டுக்கட்டை, கல் மற்றும் சோடா பாட்டில்களைக் கொண்டு திடீரென ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டார்கள். இந்த சம்பவம் திண்டுக்கல் - திருச்சி தேசிய நெடுஞ்சாலை அருகே நடந்ததால், பேருந்துக்காகக் காத்திருந்த மாணவர்கள் மற்றும் பாதசாரிகள், பயந்து சிதறி ஓடினார்கள். இந்தக் கொலைவெறித் தாக்குதலில் 18 க்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயம் அடைந்தார்கள்.
மாணவர்கள் மோதிக்கொண்ட சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறை உதவி ஆணையர் மணிகண்டன் தலைமையிலான போலீஸார் விரைந்து வந்து, காயமடைந்த 15 மாணவர்களை மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ரத்தவெள்ளத்தில் இருந்த மாணவர்கள் தற்போது திருச்சி தனியார் மருத்துவமனையில் மிகவும் ஆபத்தான சூழலில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.[/color]
[color=var(--content-color)] இந்நிலையில் ஒருதரப்பு மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய சுமார் 20க்கும் மேற்பட்ட மாணவர்களைப் பிடித்து வந்து திருச்சி எடமலைப்பட்டி ஒரு காவல் நிலையத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில், கல்லூரியில் படிக்கும் சீனியர் மற்றும் ஜூனியர் மாணவர்களுக்கும் கருத்து மோதல் இருந்து வருவதாகவும், வந்ததாகவும் அதை எடுத்து சீனியர் மாணவர்கள் விளையாடிய இடத்தில் உள்ள சிமெண்ட் பெஞ்சில் ஜூனியர் மாணவர்கள் அமர்ந்து இருந்ததாகவும் அப்போது ஏற்பட்ட வாக்குவாதமே மோதலாக மாறியதாகத் தெரியவந்தது. அதுமட்டுமல்லாமல், மூன்றாம் ஆண்டு மாணவர்கள் சிலர், மாணவிகளைக் கிண்டல் செய்ததாகவும், அதை இறுதியாண்டு மாணவர்கள் தட்டிக் கேட்டபோது வாக்குவாதம் ஏற்பட்டது என்றும் கூறப்படுகிறது.[/color]
[color=var(--content-color)]
திருச்சி கல்லூரி மாணவர்கள் தாக்குதல்
[/color]
[color=var(--content-color)] இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு, அப்பகுதியே பரபரப்பானது. பாரதிய ஜனதா கட்சியின் மாநில நிர்வாகியான ஒருவர் நடத்தி வரும் அந்த கல்லூரியில், அக்கட்சியின் தேசிய மற்றும் மாநில நிர்வாகிகள் வருகையால் எப்போதும் பரபரப்பாகவே இருக்கும். அந்தக் கல்லூரி மாணவர்களுக்குள் நடந்த பயங்கர தாக்குதல் சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.[/color]
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
கர்நாடக சபாநாயகர் ரமேஷை நீக்க வேண்டும் - எடியூரப்பா போர்க்கொடி
கர்நாடகாவில் இன்று உருவாகியிருக்கும் நிலைக்கு காரணம் காங்கிரஸின் சித்தராமையாவுக்கும், முதல்வர் எச்.டி.குமாரசாமிக்கும் இடையே நடைபெற்ற மோதல்தான் என்கின்றனர் இருகட்சியைச் சேர்ந்தவர்களும்.
சித்தராமையாவுக்கு நெருக்கமானவர் ராமலிங்கம் என்கிற ஏழு தடவை கர்நாடக எம்எல்ஏவாக ஜெயித்த நபர். இவரை நம்பித்தான் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஏழு எம்எல்ஏக்கள் சென்றனர். இந்த வாய்ப்பை பாஜக பயன்படுத்திக்கொண்டது. காங்கிரஸ் கட்சியில் இருந்தால் நீங்கள் 30 கோடி சம்பாதிப்பீர்கள். அந்த தொகையை நாங்கள் கொடுத்துவிடுகிறோம் என்பதுதான் பாஜக இந்த எம்எல்ஏக்களிடம் வைத்திருக்கும் டீல்.
நாங்கள் சித்தராமையா சொற்படித்தான் குமாரசாமியின் ஆட்சியை கவிழ்க்க முயற்சித்தோம் என சிவராம்ஹெப்பர் என்கிற அதிருப்தி எம்எல்ஏ இன்று வரை பேசிக்கொண்டிருக்கிறார். ஒருவேளை சித்தராமையா நினைத்தால் எடியூரப்பா அரசு கவிழ்ந்துவிடும். அவர் அதிருப்தி எம்எல்ஏக்கள் அனைவரையும் காங்கிரஸ் ஆதரவு நிலைக்கு கொண்டுவந்துவிடுவார் என்பதால்தான் எடியூரப்பா அவர் மட்டும் முதல்வராக பதவி ஏற்கிறார்.
தேவகௌடா சித்தராமையா மீது இரண்டு தடவை புகார் செய்திருக்கிறார். ராகுல்காந்தியும் காங்கிரஸ் கட்சியில் இருப்பவர்கள் உள்ளிருந்துகொண்டே கவிழ்த்ததால்தான் குமாரசாமியின் அரசு கவிழ்ந்தது என்று சொல்லியிருக்கிறார். இந்த நிலையில் சபாநாயகர் ரமேஷ் இரண்டு அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி இழப்பு செய்திருக்கிறார். இவர்களது தகுதி இழப்பு என்பது தமிழ்நாட்டில் நடந்ததுபோல் இல்லை. இவர்களது சட்டமன்றத் தொகுதிகளில் நடைபெறும் இடைத்தேர்தல்களில் மறுபடியும் போட்டியிடக்கூடாது என புதுவிதமான கண்டிஷன்களைப்போட்டு சஸ்பெண்ட் செய்து வருகிறார். இவரை யாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை.
வருகிற 31ஆம் தேதி நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் எடியூரப்பா வெற்றி பெற்றார் என்றால் அடுத்த ஆறு மாதத்திற்கு எந்த பிரச்சனையும் இல்லாமல் அரசை ஓட்டலாம். அப்படி வெற்றி பெற வேண்டும் என்றால் மகாராஷ்டிராவில் தங்க வைக்கப்பட்டுள்ள எம்எல்ஏக்கள் கர்நாடகத்திற்கு வரக்கூடாது. ஆனால் தற்போது இருக்கும் சபாநாயகர் இரண்டு எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்துவிட்டு, மற்ற எம்எல்ஏக்களை காங்கிரஸ் வசம் கொண்டுவர வலைவிரிக்கிறார். இதற்காக சித்தராமையாவின் உதவியையும் கோருகிறார். இந்த புதிய கேம் பிளானை முறியடிக்க சபாநாயகர் ரமேஷை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என எடியூரப்பா ஒற்றைக் காலில் நின்று கோரிக்கை வைத்துள்ளார்
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
கறுப்பின வழக்கறிஞரை இன ரீதியாக தாக்கி பேசிய டிரம்ப்புக்கு வலுக்கும் கண்டனம் மற்றும் பிற செய்திகள்
படத்தின் காப்புரிமைGETTY IMAGES
ஆப்ரிக்க அமெரிக்க வழக்கறிஞர் குறித்து டிரம்ப் பதிவிட்ட ட்வீட் ஒன்று ஒருவர் இன ரீதியிலாக தாக்குவது என அமெரிக்காவின் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசி தெரிவித்துள்ளார்.
ஜனநாயக கட்சியின் பிரதிநிதியான எலிஜா க்யூமிங்க்ஸ் மற்றும் அவரின் மேரிலாண்ட் மாவட்டம் குறித்து டிரம்ப் டிவிட்டரில் மோசமாக பதிவிட்டுள்ளார்.
கறுப்பின மக்களை அதிகமாக கொண்ட க்யூமிங்க்ஸின் பால்டிமோர் மாவட்டத்தை எலிகள் மிகுந்த அழுக்கான ஒரு பகுதி என டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க-மெக்ஸிகோ எல்லையில் குடியேறிகளை நடத்தும் விதம் குறித்து விமர்சித்திருந்த க்யூமிங்க்ஸ் பிறரை `கொடுமைப்படுத்துபவர்` என்றும் டிரம்ப் தெரிவித்திருந்தார்.
அமெரிக்க மக்கள் கணக்கெடுப்புப்படி 50சதவீதத்துக்கும் அதிகமான கறுப்பின மக்கள் வாழும் மாவட்டம் குறித்து டிரம்ப் பேசியது இன ரீதியிலான தாக்குதல் என சபாநாயகர் நான்சி பெலோசி தெரிவித்துள்ளார்.
தடுப்பு மையங்களில் குடியேறிகளை நடத்துவது உள்ளிட்ட டிரம்ப் நிர்வாகத்தின் கொள்கைகளை மேற்பார்வையிடும் கமிட்டியின் தலைவராகவும் க்யூமிங்க்ஸ் உள்ளார்.
கடந்த வாரம் தற்காலிக உள்துறை பாதுகாப்பு செயலாராக இருக்கும் கெவின் மெக் அலீனன் குறித்தும், தடுப்பு மையங்களில் குடியேறிகளின் நிலை குறித்தும் நாடாளுமன்றத்தில் கடுமையாக க்யூமிங்க்ஸ் பேசினார்.
மெக் அலீனன் மற்றும் க்யூமிங்கிஸுக்கு இடையே ஏற்பட்ட விவாதத்தில் எல்லை பகுதிகளில் வசதிகள் மேம்பட வேண்டும் என்று தெரிவித்தார் க்யூமிங்க்ஸ்.
"அதன்பிறகு எல்லை பகுதி சுத்தமாக, மற்றும் திறன்பட நடத்தப்பட்டு வருகிறது. அங்கு வெறும் கூட்டம் மட்டுமே அதிகமாக உள்ளது." என தனது டிவிட்டர் பக்கத்தில் டிரம்ப் பதிவிட்டிருந்தார்.
"இதற்கு முந்தைய ட்வீட்டில் எல்லை பாதுகாப்பு அதிகாரிகளிடம் க்யூமிங்ஸ் கத்திக் கொண்டு இருக்கிறார். ஆனால் அவரின் பால்டிமோர் மாவட்டம் தான் மிகவும் மோசமானது ஆபத்தானது. மேலும் அவரின் மாவட்டம்தான் அமெரிக்காவில் மிகவும் மோசமான மாவட்டம்." என அவர் தெரிவித்துள்ளார்
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
சாகும் தருவாயிலும் தங்கையை காப்பாற்றிய 5 வயது சிறுமி
டமாஸ்கஸ்: சிரியாவில் வான்வழித் தாக்குதலில் சாகும் தருவாயிலும் கட்டடங்களுக்கு இடையே சிக்கிய தனது தங்கையை காப்பாற்றிய 5 வயது சிறுமி உயிரிழந்தார்.
சிரியாவில் கிளர்ச்சியாளர்களின் பிடியிலுள்ள இட்லிப் மாகாணத்தில் ரஷ்யாவும், சிரியாவும் கடுமையான தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் நேற்று முன்தினம் இட்லிப் மாகாணத்தில் நடந்த தாக்குதலில் மூன்று குழந்தைகள் உட்பட 10 பேர் பலியாகினர்.
இந்த தாக்குதலில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின்மீது நடத்தப்பட்ட தாக்குதலில் கட்டடம் இடிந்து விழுந்தது. 5-வது தளத்தில் இருந்த சிறுமி நிஹாம் என்பவரின் தாய் அஸ்மா சம்பவ இடத்திலேயே பலியாயினர்.
காப்பாற்றிய சிறுமி
கட்டட இடிபாடுகளில் சிக்கி பாதி உடல் வெளியே தெரிய உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமி ரிஹாம், கீழே விழ இருந்த, தனது 7 மாதமே ஆன தங்கை துகா-வின் சட்டையை கெட்டியாக பிடித்துக்கொண்டார். இதனால் அந்தக் குழந்தை கீழே விழாமல் உயிர் பிழைத்தது. மனைவியை பறிகொடுத்து, இரு குழந்தைகளும் உயிருக்குப் போராடுவதைக் கண்டும் காப்பாற்ற முடியாமல் கீழே நின்றபடி கதறி அழுதார் தந்தை. இந்தக்காட்சி ஊடகங்களில் வெளியாகி அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
சிறுமியால் காப்பாற்றப்பட்ட 7 மாத குழந்தை பலத்த காயங்களுடன் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறது. ஆனால் உயிர்போகும் மரண அவஸ்தையிலும் தனது தங்கையை விழாமல் கெட்டியாக பிடித்து காப்பாற்றிய சிறுமி ரிஹாம், சிகிச்சை பலனின்றி இறந்தார்.
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
முற்றுகிறது விராட்-ரோகித் மோதல்?
இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர்கள் விராட் கோலிக்கும், ரோகித் சர்மாவுக்கும் இடையே விரிசல் அதிகரிக்கும் நிலையில், பிசிசிஐ நிர்வாகக் குழு கேட்டுக் கொண்டபடி அனைத்தும் சுமூகமாக இருப்பதாக சமூக வலைதளத்தில் பதிவிட ஒரு வீரர் மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகக் கோப்பை போட்டியின் தோல்விக்குப் பின் அணியில் விராட் கோலிக்கும்-ரோகித் சர்மாவுக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
ரோகித்தின் ஆலோசனையை விராட் கேட்கவில்லை எனக் கூறப்படும் நிலையில் ரோகித்தும் அவரது மனைவியும் விராட் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மாவை இன்ஷ்டாகிராமில் பின் தொடர்வதில் இருந்து வெளியேறி இருக்கின்றனர்.
இந்நிலையில் பிசிசிஐயில் உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்படுள்ள நிர்வாகக் குழு உறுப்பினரில் ஒருவர் வீரர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக சொல்லப்படுகிறது
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
நான் ஒரு சைக்கோ...தனி ஆளாக வீடு புகுந்து 3 பேரையும் தீர்த்துக்கட்டினேன் - கைதானவர் பரபரப்பு வாக்குமூலம்
நெல்லை,
முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி உள்பட 3 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி தி.மு.க. பெண் பிரமுகர் சீனியம்மாளின் மகன் கார்த்திகேயன் (39) என்பவரை கைது செய்தனர். இவர் ஒரு சைக்கோ கொலைகாரனை போல போலீசாரிடம் சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லி வருகிறான். இடையிடையே நான் ஒரு ‘சைக்கோ’ என்றும் கூறுகிறாராம்.
கொலையில் யார் யாரெல்லாம் ஈடுபட்டார்கள் என்ற கேள்விக்கு 3 பேரையும் நான் ஒருவனே தன்னந்தனியாக கொலை செய்தேன் என்றும் கூறி வருகிறாராம். அப்படியானால் எப்படி கொலை செய்தாய் என்று நடித்து காட்டு என்று போலீசார் கார்த்திகேயனை ஒரு காரில் சம்பவ இடத்துக்கு அழைத்து சென்றனர்.
அப்போது கார்த்திகேயன் வாக்குமூலமாக கூறியதாவது:-
தி.மு.க.வில் பெரிய சக்தியாக வளரவேண்டிய எனது தாயார், மேயர் உமா மகேஸ்வரி வருகையால் செல்லாக்காசாகி விட்டார். இதனால் எனக்கு சிறு வயது முதலே உமா மகேஸ்வரியை தீர்த்து கட்ட வேண்டும் என்ற வெறி ஏற்பட்டது. யாருக்கும் தெரியாமல் எப்படி இந்த கொலையை நடத்துவது என்று சிந்தித்து பார்த்தேன்.
ஜூலை 23ந்தேதி அனைத்து போலீசாரும், மாஞ்சோலை தோட்ட தொழிலாளர் நினைவு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள் என்று தெரிந்து அன்றைய தினத்தை தேர்ந்தெடுத்து நெல்லைக்கு வந்தேன். முதலில் எனது காரில் உமா மகேஸ்வரியின் வீட்டருகே சுற்றி சுற்றி வந்து வேறு யாரும் உள்ளார்களா என்று பார்த்தேன்.
வேறு யாரும் உள்ளே இல்லை என்று தெரிந்தது. இதைத் தொடர்ந்து எனது காரை என்.ஜி.ஓ. ‘பி’ காலனி விலக்கு அருகே உள்ள ஒரு கிறிஸ்தவ சர்ச் அருகே நிறுத்திவிட்டு அங்கிருந்து உமா மகேஸ்வரி வீட்டுக்கு நடந்து வந்தேன். என்னை பார்த்ததும் உமா மகேஸ்வரியின் கணவர் முருக சங்கரன் என்ன விஷயம் என்று கேட்டார்.
எனது அம்மா உங்களிடம் பேசி விட்டு வர சொன்னார் என்றதும் அவர் கதவை திறந்தார். நான் உள்ளே சென்று ஷோபாவில் அமர்ந்து அவரிடம் பேசினேன். அப்போது உங்களால் தான் என் அம்மாவின் அரசியல் வாழ்வு முடிந்து விட்டது என ஆவேசமாக கூறி திட்டினேன்.
அப்போது வீட்டுக்குள் இருந்து உமா மகேஸ்வரி வந்து ‘இப்படி பேசக்கூடாது வெளியே போ’ என்றார். ஏற்கனவே ஆத்திரத்தில் இருந்த நான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து உமா மகேஸ்வரியை குத்தினேன். அவர் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார். அப்போது முருக சங்கரன் கத்தியபடி என்னை பிடிக்க முயன்றார். அவரையும் கத்தியால் குத்தினேன். இதனால் அவர் உயிர் பிழைக்க படுக்கை அறைக்குள் புகுந்து கதவை மூட முயன்றார்.
ஆனால் நான் அவரை கீழே தள்ளி சரமாரியாக கத்தியால் குத்தினேன். அவர் பிணமாகி விட்டார் என்று தெரிந்ததும், வெளியே வந்தேன். அங்கு உமா மகேஸ்வரி உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதனால் மீண்டும் அவரை ஆத்திரம் தீரும் வரை குத்தி கொலை செய்தேன். அதன் பிறகு நகைக்காக கொலை நடந்தது போல் தெரிய வேண்டும் என்று உமா மகேஸ்வரி,
அவரது கணவர் உடலில் இருந்த அனைத்து நகைகளையும் வேகமாக இழுத்து அறுத்து எடுத்தேன். அனைத்து நகைகளையும் ஒரு பையில் போட்டு பின்னர் பீரோவை உடைத்து நகைகள்-பணம் கொள்ளை நடந்து இருப்பது போல கலைத்து போட்டேன்.அப்போது முன்பக்க காம்பவுண்டு கேட் திறக்கும் சத்தம் கேட்டது. இதனால் யார் வருகிறார்கள் என்று மறைந்து இருந்து பார்த்தேன்.
அப்போது வேலைக்கார பெண் மாரி உள்ளே வந்து கொலை சம்பவத்தை பார்த்து வெளியே ஓட முயன்றார். மறைந்து இருந்த நான் வெளியே வந்து மாரியை தப்பவிடாமல் பிடித்தேன். அவரை வெளியே விட்டால், என்னை பற்றி தகவல்களை கூறி விடுவார் என்று பயந்து அவரையும் கொலை செய்ய முடிவு செய்து, சமையல் அறைக்கு இழுத்து சென்று அங்கிருந்த கத்தியால் அவரை குத்தினேன்.
அவர் சாகாமல் போராடியதால் பாத்திரங்களால் தலையில் வேகமாக அடித்து கொலை செய்தேன். பின்னர் கொலை செய்யப்பட்ட இடங்களில் ஏதாவது தடயம் கிடக்கிறதா என்று தேடி எடுத்து கைரேகைகளையும் அழித்தேன். கொலைக்கு பயன்படுத்திய கத்தி, நகைகள் வைத்திருந்த பைக்குள் நன்றாக கழுவி போட்டுக் கொண்டேன். எனது உடலில் உள்ள ரத்தக்கறைகளையும், குளியலறைக்கு சென்று நன்றாக கழுவினேன். பின்னர் நகை பையுடன் எதுவும் தெரியாதது போல வெளியே வந்து, எனது காருக்கு நடந்து சென்றேன்.
அங்கிருந்து காரை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு சென்று விட்டேன். போகும்போது செல்போனில் மதுரையில் இருந்த எனது தாயாருக்கும் தகவல் தெரிவித்தேன். அவர்கள் பதறினார்கள். நான் காரில் தாமிரபரணி ஆற்றுப்பாலம் வழியாக சென்றபோது நகைகளையும், கத்தியையும் வைத்திருந்த பையை ஆற்றில் வீசி விட்டு சென்று விட்டேன்.
என்னை யாரும் கண்டுபிடிக்க முடியாது என்று நினைத்தேன். ஆனால் போலீசார் என்னை கண்டுபிடித்து கைது செய்து விட்டனர். இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறியுள்ளார். இதையே திரும்ப திரும்ப அவர் அச்சு பிசகாமல் கூறி வருகிறாராம். ஆனால் போலீசார் கூலிப்படை இல்லாமல் 3 பேரை தன்னந்தனியாக ஒருவரே கொலை செய்வது சாத்தியமா? என்பதால் கார்த்திகேயனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
12-ம் வகுப்பு ஆங்கில பாட புத்தகம் தயாரிப்பு குழுவினர் மீது நடவடிக்கை: பள்ளிக்கல்வித்துறை அதிரடி
சென்னை,
பிளஸ்-2 ஆங்கில பாடபுத்தகத்தில் 142-ம் பக்கத்தில் மொழிகள் பற்றிய ஒரு பாடப்பிரிவு இடம்பெற்று இருந்தது. அதில் தமிழ் கி.மு.300 ஆண்டுகள் தொன்மையானது என்றும், அதைவிட சமஸ்கிருதம் கி.மு.2000 ஆண்டுகள் தொன்மையானது என்றும் சர்ச்சைக்குரிய கருத்து பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. இந்த பதிவுக்கு தமிழ் ஆர்வலர்கள், கல்வியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கின்றனர்.
சமஸ்கிருதத்துக்கு முக்கியத்தும் கொடுக்கும் தவறான பாடப்பகுதி நீக்கப்படும் என்று தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், 12-ம் வகுப்பு ஆங்கில பாட புத்தகம் தயாரிப்பு குழுவினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. மேலும், புத்தகத்தில் உள்ள சர்ச்சைக்குரிய பகுதியும் நீக்கப்படும் எனவும் பள்ளி கல்வித்துறை கூறியுள்ளது.
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
பூந்தமல்லி ரோட்டில்.. வெட்டிய திருடன்.. கையில் ரத்தம் கொட்டியும்.. விடாமல் பிடித்த தைரியலட்சுமி!
சென்னை: பூந்தமல்லி ரோட்டில் தனலட்சுமியை பார்க்கணுமே.. தன் கையில் ரத்தம் சொட்ட சொட்ட திருடனை விடாமல் கெட்டியாக பிடித்து கொடுத்த சம்பவம் நடந்துள்ளது!
காட்டுப்பாக்கம் இந்திரா நகரைச் சேர்ந்தவர் தனலட்சுமி. இவர் டிவி சீரியல் படப்பிடிப்பு தளத்தில் உதவியாளராக வேலை பார்த்து வருகிறார்.
வழக்கம்போல வேலை முடித்துவிட்டு, வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார் தனலட்சுமி. ஆனால் அவரை ரொம்ப நேரமாகவே யாரோ ஒருவர் பின்னாடியே ஃபாலோ பண்ணிட்டு வந்திருக்கிறார்.
செயின்
பிறகு திடீரென்று தனலட்சுமி கழுத்தில் இருந்த 5 சவரன் தங்கச் சங்கிலியை பறிக்க முயன்றார். ஆனால் தனலட்சுமி சுதாரித்து கொண்டார். அதனால் செயினை கெட்டியாக பிடித்து கொண்டார். விடவே இல்லை.. செயினை விடாமல் பிடித்து கொண்டதால் ஆத்திரமடைந்த அந்த திருடனோ திடீரென பாக்கெட்டில் ரெடியாக வைத்திருந்த அரிவாளை எடுத்து தனலட்சுமியை கையில் ஒரே வெட்டு வெட்டினார்.
[color][font]
ரத்தம் கொட்டியது
இப்படி ஒரு அரிவாள் வெட்டினை எதிர்பார்க்காத தனலட்சுமி வலியால் கத்தினார். ரத்தம் கையில் கொட்டியது. ஆனாலும் தனலட்சுமி விடவில்லையே.. திருடனின் கையை கெட்டியாக பிடித்து கொண்டார். அவர் அங்கிருந்து தப்ப முயன்றும் விடாமல் இறுக்கமாக பிடித்து கொண்டு திருடன், திருடன் என அந்த வலியிலும் அலறினார். அந்த சத்தத்தை கேட்டதும், அங்கிருந்த சிலர் ஓடிவந்து திருடனை பிடித்து சரமாரியாக தாக்கி போலீசில் கொண்டு போய் ஒப்படைத்தனர்.
[/font][/color]
[color][font]
மிளகாய்பொடி
திருடன் பெயர் சிவக்குமார், அய்யப்பன்தாங்கல் பகுதியைச் சேர்ந்தவர் என தெரியவந்தது. பத்திரிகையாளர் அடையாள அட்டையை அவராகவே போலியாக தயாரித்து வைத்திருந்தார். தன்னுடைய பைக்கிலும் பிரஸ் என்று ஒட்டி வைத்துள்ளார். அந்த பைக்கில் கத்தி, மிளகாய்ப்பொடி என்று ஒரு களவாணிதனத்துக்கு தேவையான எல்லா பொருட்களையும் வைத்திருக்கிறார்.
தெருவிளக்கு
தொடர்ந்து நடத்திய விசாரணையில், திருட்டு முயற்சி நடந்த பகுதியில் எப்பவுமே லைட் எரிந்து கொண்டுதான் இருக்குமாம். ஆனால் எப்போதெல்லாம் திருட்டு சம்பவம் நடக்கிறதோ அப்போதெல்லாம்தான் லைட் எரிவது இல்லையாம். இதை பற்றி நிறைய புகார் மின்வாரியத்துக்கு அளித்தும், எல்லாம் சரியாத்தான் இருக்கிறது, ஒரு பிரச்சனையும் இல்லை என்று சொல்லி இருக்கிறார்கள்.
[/font][/color]
[color][font]
விசாரணை
கடைசியில் பார்த்தால், இந்த சிவக்குமார்தான் அந்த பகுதி லைட்டை ஆஃப் பண்ணி விடுவதாம். திருட்டுக்கு தயார் ஆகிவிட்டால் ஓடிபோய் லைட் ஆப் பண்ணிவிடுவாராம், இதெல்லாம் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இப்போது சிவக்குமாரிடம் தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்
[/font][/color]
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
இந்தியாவின் மேரிகோம் உள்பட 7 பேர் தங்கம் வென்று அசத்தல்!
குத்துச் சண்டை போட்டியில் தங்கம் வென்ற மேரிகோமுக்கு மத்திய அமைச்சர் கிரண் ரிஜூ வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மேரிகோம்
first 5 lakhs viewed thread tamil
•
|