Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
2 இளம்பெண்கள் நுழைந்த விவகாரம் - பரிகார பூஜைக்குப்பின் சபரிமலை நடை திறப்பு
[Image: 201901021202456843_Sabarimala-Temple-reo...SECVPF.gif]
திருவனந்தபுரம்:


சபரிமலையில் இன்று இளம்பெண்கள் பிந்து, கனகதுர்கா இருவரும் சன்னிதானம் சென்று ஐயப்பனை தரிசித்தனர்
சபரிமலை ஐயப்பன் கோவிலில் இளம்பெண்கள் நுழைவது கோவில் ஆச்சாரத்திற்கு எதிரானது என்றும், இளம்பெண்கள் சபரிமலை சன்னிதானம் சென்றால் கோவில் நடையை மூடுவோம் என்றும் ஏற்கனவே பந்தளம் ராஜ குடும்ப பிரதிநிதிகள் தெரிவித்து இருந்தனர்.
இந்த நிலையில் இன்று இளம்பெண்கள் இருவர் சபரிமலை சன்னிதானம் சென்றதை அறிந்ததும் பந்தளம் ராஜ குடும்ப பிரதிநிதி சசிகுமாரவர்மா அதிர்ச்சி அடைந்தார்.

இவரைப்போல கோவில் தந்திரிகள், அர்ச்சகர்களும் இந்த சம்பவத்தால் பெரும் அதிர்ச்சிக்கு ஆளானார்கள். அவர்கள் இதுபற்றி கோவில் மேல்சாந்தி, தலைமை தந்திரி ஆகியோருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து கோவில் நடை உடனடியாக அடைக்கப்பட்டது. சாமி தரிசனமும் நிறுத்தப்பட்டது.

இதுபற்றி பந்தளம் ராஜ குடும்ப பிரதிநிதி சசிகுமார வர்மா கூறியதாவது:-

சபரிமலை கோவில் சன்னிதானத்தில் இளம்பெண்கள் இருவர் நுழைந்ததாக தகவல் வந்துள்ளது. இதற்காக கோவிலில் பரிகார பூஜை நடத்தப்படும்.

எந்த வயதை சேர்ந்த பெண்கள் வந்தார்கள் என்பதை உறுதிசெய்த பின்பு தந்திரிகளுடன் கலந்து ஆலோசித்து பரிகார பூஜை நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிலையில் ஒரு மணி நேர பரிகார பூஜைக்குப் பின்னர் சபரிமலை கோவில் நடை மீண்டும் திறக்கப்பட்டது. இதையடுத்து பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.  
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
சிட்னி டெஸ்ட்: முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 303 ரன்கள் குவிப்பு
[Image: 201901031500205016_Pujara-masterclass-sh...SECVPF.gif]
சிட்னி,


இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான 4-வது மற்றும் இறுதி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்னியில் இன்று தொடங்கியது.  நான்கு போட்டிகள் கொண்ட தொடரின் முதல் 3 போட்டிகளில் 2-ல் இந்தியாவும், ஒன்றில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றுள்ளன.
இந்த நிலையில், இவ்விரு அணிகளுக்கும் இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி இன்று துவங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.  அதன்படி இந்திய அணியின் சார்பில் மயங்க் அகர்வால் மற்றும் லோகேஷ் ராகுல் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கி விளையாடினர்.

இதில், ராகுல் 9 (6 பந்துகள் ) குறைந்த ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், மற்றொரு துவக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வாலுடன், புஜாரா கைகோர்த்து விளையாடினார்.  இதில் மயங்க் அகர்வால் 77 ரன்கள் (112 பந்துகள்) அடித்து ஆட்டமிழந்தார். இதன்பின்னர் வந்த விராட் கோலி 23 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால், மறுமுனையில் நிலைத்து நின்று விளையாடிய புஜாரா சதம் அடித்து அசத்தினார். சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் புஜாரா அடித்த 18-வது சதம் இதுவாகும். இதற்கிடையில், ரகானே 18 ரன்களில் ஆட்டமிழந்தார். 

இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில், 90 ஓவர்களுக்கு 4 விக்கெட் இழப்புக்கு 303 ரன்கள் சேர்த்துள்ளது. புஜாரா 130 ரன்களுடனும், ஹனுமா விஹாரி 39 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். 
Like Reply
ஆலையைத் திறக்க அனுமதிக்க முடியாது - ஸ்டெர்லைட்டின் கோரிக்கை நிராகரிப்பு
[Image: 56573.jpg]
Like Reply
நிலவின் இருண்ட மறுபக்கத்தில் தரையிறங்கி சீன விண்கலம் சாதனை


[Image: 201901031230186321_China-Successfully-To...SECVPF.gif]

பீஜிங்,

சந்திரனுக்கு முதன்முதலாக அமெரிக்கா மனிதர்களை அனுப்பி சரித்திர சாதனை படைத்தது. அதை தொடர்ந்து இந்தியா,  சீனா, ரஷியா உள்ளிட்ட நாடுகள் சந்திரனில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றன.

நிலவு மற்றும் செவ்வாய் போன்ற பகுதிகளுக்கு மனிதனை அனுப்புவதற்கு முன்னர் தாவரங்கள் மற்றும் பிற உயிரினங்களை அனுப்பி அவை எப்படி அங்குள்ள சூழ்நிலைகளை சமாளித்து தாக்குப்பிடிக்கின்றன மற்றும் அவற்றுக்கு எந்தவிதமான பாதிப்புகள் ஏற்படுகின்றன என்று கண்டறிந்து ஆவணப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது சீனாவின் சாங் இ (Chang’e Program) திட்டம். இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக ‘சாங் இ 4 மிஷன்’ (Chang’e 4 Mission) எனும் திட்டத்தை சீனா செயல்படுத்தி உள்ளது.
Like Reply
இதுவரை பூமியை நோக்கி காணப்படாத நிலவின் மற்றொரு பகுதியாக கருதப்படும் வோன் கர்மான் என்னும் பகுதியில் சாங் இ-4 என்னும் இந்த செயற்கைக்கோள் தரை இறங்கியது .

சீனாவிலுள்ள ஷிசாங் விண்வெளி நிலையத்திலிருந்து லோங் மார்ச் 3பி என்னும் ராக்கெட்டில் இந்த ரோபோ, நிலவை நோக்கி செலுத்தப்பட்டது.

இந்த முயற்சியின் மூலம் நிலவிலுள்ள பாறைகள், மண் ஆகியவற்றை பூமிக்கு கொண்டு வந்து மேலதிக ஆராய்ச்சிகளை செய்வதற்கு சீனா திட்டமிட்டுள்ளது.

Tidal locking அல்லது ஓதப்பூட்டல் என்ற விளைவின் காரணமாக நம்மால் நிலவின் ஒரு பகுதியை மட்டுமே பார்க்க முடிகிறது. ஏனெனில், நிலவை சுற்றி வருவதற்கு எடுத்துக் கொள்ளும் அதே காலத்தை தன்னைத்தானே சுற்றி வருவதற்கும் நிலவு எடுத்துக் கொள்கிறது.

பொதுவாக நிலவின் 'இருண்ட பக்கம்' என்றழைக்கப்படும் இந்த இடத்திலும் சூரிய வெளிச்சம் காணப்பட்டாலும், பூமியிலிருந்து இந்த இடத்தை பார்க்க முடியாது என்பதால்தான் இதை அவ்வாறு அழைக்கின்றனர்.

நிலவின் மறுபக்கத்தை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட விண்கலத்தை, கரடுமுரடான பகுதியில் வெற்றிகரமாக தரையிறக்கி சீனா சாதனை படைத்துள்ளது. இந்த செயற்கைக்கோள் இதுவரை ஆராய்ச்சிகளே மேற்கொள்ளப்படாத நிலவின் தென் துருவப் பகுதியின் புவியியல் அமைப்பு குறித்த தகவல்களை சேமிப்பதோடு அங்கிருந்து பாறை துண்டுகள், மண் மாதிரிகளை பூமிக்கு கொண்டு வரும்.

பூமியின் தொலைதூரத்தில் ரேடியோ அலைகளை அடிப்படையாக கொண்ட தொலைநோக்கிகளை நிலவின் தென் துருவத்தில் அமைப்பதற்கான பூர்வாங்க பணிகளையும் இந்த செயற்கைக்கோள் மேற்கொள்ளும்.

அதுமட்டுமின்றி, நிலவில் உயிரியல் பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக ஒரு பெட்டிக்குள் உருளைக்கிழங்கு, அராபிடாப்சிஸ் தாவரத்தின் விதைகள் மற்றும் பட்டுப்பூச்சி முட்டைகள் மூன்று கிலோ கொண்ட கொள்கலனில் கொண்டு செல்லப்பட்டுள்ளன.

நிலவை அடையும் பட்டுப்பூச்சி முட்டைகள் முதலில் பட்டுப்பூச்சிகளை உற்பத்தி செய்யும், பின்னர் அந்த பட்டுப்பூச்சிகள் நிலவில் கரியமில வாயுவை உற்பத்தி செய்யும். இதற்கிடையில், உருளைக் கிழங்கு மற்றும் அராபிடாப்சிஸ் செடிகள் வளர்ந்து ஒளிச்சேர்க்கை மூலம் ஆக்சிஜனை உற்பத்தி செய்யும். இவை அனைத்தும் ஒன்று சேர்ந்து நிலவில் ஒரு சிறிய சூழ்மண்டலத்தை (simple ecosystem) . உருவாக்கும்.
#BREAKING: China’s Chang’e-4 probe successfully made the first-ever soft landing on the far side of the Moon on the South Pole-Aitken basin Thursday morning, a major milestone in space exploration. #ChangE4pic.twitter.com/mt2YTWqlxs

— Global Times (@globaltimesnews) January 3, 2019
China's Chang'e-4 probe touches down on the far side of the moon, becoming the first spacecraft soft-landing on the moon's uncharted side never visible from Earth https://t.co/JoR13R5BUlpic.twitter.com/bS7fS4xwUt

— China Xinhua News (@XHNews) January 3, 2019
#BREAKING China's Chang'e-4 probe lands successfully on far side of the moon at 10:26 a.m. BJT Thursday, marking the first ever soft-landing in this uncharted area pic.twitter.com/rTlJ4EzOw2

— CGTN (@CGTNOfficial) January 3, 2019
Like Reply
இரட்டை சதத்தை தவறவிட்டார் புஜாரா: இமாலய ரன் குவிப்பில் இந்தியா:
[Image: pujarajpg]
ஆஸ்திரேலிய அணியை தனது சுவர்போன்ற பேட்டிங்கால் கிறங்க வைத்த புஜாரா இரட்டை சதம் அடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டார்.
புஜாரா 373 பந்துகளில் 193 ரன்கள் சேர்த்துப் புஜாராவுக்கு துணையாக ஆடிய ரிஷப் பந்த் இந்தத் தொடரில் முதல் முறையாக அரைசதம் அடித்துள்ளார். 137 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 439 ரன்களுடன் உள்ளது. ரிஷப் பந்த் 58 ரன்களுடனும், ஜடேஜா 7 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். மிகப்பெரிய ஸ்கோரை நோக்கி இந்திய அணி நகர்ந்து வருவதால், என்ன செய்வதென்று தெரியாமலும், விக்கெட்டுகளை வீழ்த்த முடியாமலும் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் விழிபிதுங்கி , நம்பிக்கையற்று பந்துவீசுவதை காணமுடிகிறது.
இந்த தொடரில் புஜாரா இரட்டைச் சதம் அடித்திருந்தால் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 3 இரட்டை சதம் அடித்த 3-வது சர்வதேச வீரர் எனும் பெருமையை புஜாரா பெற்றிருப்பார். இதற்கு முன் மே.இ.தீவுகள் வீரர் பிரையன் லாரா, இங்கிலாந்து வீரர் வாலே ஹேமண்ட் ஆகியோர் மட்டுமே அடித்துள்ளனர். பந்துவீசிய லயனிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதில் 22 பவுண்டரிகள் அடங்கும்.
Like Reply
[Image: pujpg]பந்தை பவுண்டரிக்கு விரட்டிய புஜாரா 
 
இதன் மூலம், ஆஸ்திரேலிய மண்ணில் மட்டுமல்லாது, வெளிநாடுகளில் தனது மிக அதிகபட்ச ஸ்கோரையும் புஜாரா பதிவு செய்துள்ளார். வெளிநாடுகளில் புஜாராவின் அதிகபட்ச ஸ்கோர் 153 ரன்கள்தான் அதை இப்போது கடந்த 193 ரன்களைப் பதிவு செய்துள்ளார்.
மேலும், ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரில் 500 ரன்களுக்கு மேல் எடுத்த 3-வது வீரர் புஜாரா ஆவார். இதற்கு முன் ராகுல் டிராவிட் கடந்த 2003-04ம் ஆண்டிலும், 2014-15-ம் ஆண்டில் விராட் கோலியும் அந்த சாதனையை படைத்திருந்தனர்.
குறிப்பாட கடந்த 4 டெஸ்ட் போட்டிகளில் 1200 பந்துகளுக்கு மேல் சந்தித்துள்ளார் புஜாரா. இதற்கு முன் ராகுல் டிராவிட் 2003-04ம் ஆண்டில் 1203 பந்துகளைச் சந்தித்திருந்தார். அவருக்குப் பின் 2-வது வீரர் புஜாரா.
சிட்னியில் இந்தியா, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. டாஸ்வென்ற இந்திய அணி முதலில் பேட் செய்ய தீர்மானித்தது. முதல்நாளான நேற்றைய ஆட்ட முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 303 ரன்கள் குவித்திருந்தது. புஜாரா 130 ரன்களிலும், விஹாரி 39 ரன்களிலும் ஆட்டமிழக்காமல் இருந்து இன்றைய 2-ம் நாள் ஆட்டத்தைத் தொடர்ந்தனர்
Like Reply
[Image: lauanjpg]நடுவரிடம் அப்பீல் செய்த லயன்
 
ஆடுகளம் இன்று பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக மாறும் என்று கூறப்பட்ட நிலையில், எந்தவிதமான மாற்றமும் இல்லை. இந்திய வீரர்களை ஆட்டமிழக்கச் செய்ய ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் பெரும் சிரமப்பட்டனர். சிறப்பாக பேட் செய்த புஜாரா 282 பந்துகளில் 150 ரன்களை எட்டினார்.
லயன் வீசிய 102 ஓவரின் கடைசிப் பந்தில் விஹாரி ஷார்ட்லெக் திசையில் பந்து லாபுசாங்கேயிடம் கேட்சாக மாறியது. விஹாரி 42 ரன்களில் ஆட்டமிழந்தார். 5-வது விக்கெட்டுக்கு 101 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.
அடுத்து ரிஷப் பந்த் களமிறங்கி புஜாராவுடன் சேர்ந்தார். இருவரும் ஓரளவுக்கு வேகமாக ரன்குவிப்பில் ஈடுபட்டதால், இந்திய அணியின் ஸ்கோர் சீராக உயர்ந்தது. மதிய உணவு இடைவேளையின் போது இந்திய 5 விக்கெட் இழப்புக்கு 398 ரன்கள் குவித்திருந்தது.
இரட்டை சதத்தை நோக்கி புஜாரா முன்னேற, மறுபுறம் இந்த தொடரில் முதல் அரை சதத்தை நோக்கி பந்த் நகர்ந்தார். லயன் வீசிய 126 ஓவரில் புஜாரா அதை அடிக்க லயன் கேட்ச் பிடிக்க தவறினார். இதனால் இந்த வாய்ப்பை புஜாரா பயன்படுத்துவார் என எதிர்பார்க்கப்பட்டது
Like Reply
[Image: rishajpg]அரைசதம் அடித்த ரிஷப் பந்த் :
 
ஆனால், 130-வது ஓவரில் லயன் பந்துவீச்சுக்கு புஜாரா இரையாகினார். லயனிடமே கேட்ச் கொடுத்து புஜாரா 193 ரன்களில் ஆட்டமிழந்து இரட்டை சதத்தை தவறவிட்டார். 6-வது விக்கெட்டுக்கு புஜாரா, பந்த் இருவரும் 89 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.
அடுத்து ஜடேஜா களமிறங்கி, ரிஷப் பந்துடன் சேர்ந்தார். ரிஷப் பந்து சிறப்பாக ஆடி 85 பந்துகளில் இந்த தொடரில் முதலாவது அரை சதத்தை பதிவு செய்தார்
Like Reply
சிட்னி அரங்கை அதிரவைத்த புஜாரா-ரிஷப் பந்த்: 622 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது இந்தியா

சிட்னியில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில் புஜாரா, ரிஷப் பந்த், ஜடேஜா ஆகியோரின் அபாரமான ஆட்டத்தால், இந்திய அணி முதல் இன்னிங்சில் 622 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. #AUSvIND #SydneyTest




[Image: 201901041224094473_India-declare-on-622-...SECVPF.gif]
சிட்னி:

ஆஸ்திரேலியா - இந்தியா இடையில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. அடிலெய்டு மற்றும் மெல்போர்ன் டெஸ்டில் இந்தியா வெற்றி பெற்றது. பெர்த் டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் சிட்னியில் நடைபெற்று வருகிறது.
Like Reply
புஜாரா, மயாங்க் அகர்வால் ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தினால் முதல் நாள் ஆட்ட முடிவில் இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு 303 ரன்கள் சேர்த்திருந்தது. மயாங்க் அகர்வால் 77 ரன்கள் சேர்த்தார். புஜாரா 130 ரன்களுடனும், விகாரி 39 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். 

இன்று இரண்டாம் நாள் ஆட்டம் நடைபெற்றது. தொடர்ந்து ஆடிய புஜாரா சிறிது நேரத்தில் 150 ரன்களைக் கடந்தார். உணவு இடைவேளையின்போது இந்திய அணியின் ஸ்கோர் 5 விக்கெட் இழப்பிற்கு 389 ரன்கள் எடுத்திருந்தது. சிட்னி அரங்கை அதிரவைத்த புஜாரா 181 ரன்களுடன் இரட்டை சதத்தை நோக்கி பயணித்தார். 

உற்சாகத்துடன் பந்துகளை பறக்க விட்ட புஜாரா, இன்று தனது நான்காவது இரட்டை சதத்தை பதிவு செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், துரதிர்ஷ்டவசமான அவர் 193 ரன்களில் ஆட்டமிழந்தார். 

[Image: 201901041224094473_1_cricket-declare2._L_styvpf.jpg]

அவரைத் தொடர்ந்து ரிஷப் பந்த், ஜடேஜா இருவரும் அணியின் ஸ்கோரை மேலும் உயர்த்தினர். ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களை மிரட்டிய ரிஷப் பந்த் சதம் அடித்தார். மறுமுனையில் ஜடேஜா அரை சதம் கடந்தார். இதன் மூலம் அணியின் ஸ்கோர் 500 ரன்களைத் தாண்டியது. 7வது விக்கெட்டுக்கு இவர்கள் இருவரும் 200க்கும் அதிகமான ரன்கள் சேர்த்தனர். 

இந்நிலையில் ஜடேஜா 81 ரன்களில் அவுட் ஆனார். இதையடுத்து முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்வதாக கேப்டன் கோலி அறிவித்தார். அப்போது இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 622 ரன்கள் குவித்திருந்தது. ரிஷப் பந்த் 159 ரன்களுடன் களத்தில் இருந்தார். ஆஸ்திரேலியா தரப்பில் லயன் 4 விக்கெட்டுகளும், ஹேசில்வுட் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இதையடுத்து ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சை ஆடி வருகிறது. தொடக்க வீரர்களாக ஹாரிஸ், கவாஜா களமிறங்கினர். #AUSvIND #SydneyTest
Like Reply
இதுதான் நேர்மை, ஜென்டில்மேன் கேம்: ஹேண்ட்ஸ்கம்ப்க்கு பாடம் கற்றுக்கொடுத்த கே.எல்.ராகுல்: பாராட்டு குவிகிறது

[Image: rahuljpg]
கே.எல்.ராகுல் கேட்ச் பிடித்த காட்சி 

கிரிக்கெட் போட்டியில் நேர்மையாக எவ்வாறு ஒரு வீரர் நடக்க வேண்டும் என்பதை ஆஸ்திரேலிய வீரர் ஹேண்ட்ஸ்கம்ப்புக்கு கற்றுக் கொடுக்கும் வகையில் இந்திய அணி வீரர் கே.எல்.ராகுல் நடந்து கொண்டார்.
இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி சிட்னியில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணி தனது முதலாவது இன்னிங்ஸில் 7 விக்கெட் இழப்புக்கு 622 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்து வலுவான நிலையில் இருக்கிறது
இந்த டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தாலும், ஏற்கனவே 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருப்பதால், இந்திய அணி டெஸ்ட் தொடரை வெல்லும் என்பது தெளிவாகி உள்ளது.
ஆனால், கிரிக்கெட்டில் எதிரணி வீரர்களை வெறுப்பேற்றி விளையாடுவது, ஸ்லெட்ஜிங்கில் ஈடுபடுவது ஒருபக்கம் இருந்தாலும், தரையில் பட்டு வந்த பந்தை கேட்ச் என்று சொல்லி ஆட்டமிழக்கச் செய்வது கிரிக்கெட்டின் அடிப்படை நேர்மைக்கு விரோதமானதாகும். ஜென்டில்மேன் கேமின் தாத்பரியத்துக்கு வேட்டுவைப்பதாகும். கடந்த காலங்களில் இதுபோன்ற சம்பவங்களில் ஆஸ்திரேலய வீரர்கள் பெருமளவு ஈடுபட்டுள்ளார்கள். இந்த தொடரிலும் ஆஸ்திரேலிய வீரர்கள் விதிவிலக்கு அல்ல.
பெர்த்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 123 ரன்களில் வலுவாக இருந்தார். கம்மின்ஸ் வீசிய 93-வது ஓவரில் ஸ்லிப்பில் நின்றிருந்த ஹேண்ட்ஸ்கம்ப் விராட் கோலியின் பேட்டில் பட்டு வந்த பந்தை கேட்ச் பிடித்தார்.
இந்த கேட்ச்சுக்கு உடனே களத்தில் உள்ள நடுவர் அவுட் கொடுத்துவிட்டார். ஆனால், சந்தேகத்துக்கு உரியதாக இருந்ததால், இது குறித்து அப்பீல் செய்யப்பட்டது. மூன்றாவது நடுவர் ஆய்வு செய்தபோது, ஹேண்ட்ஸ்கம்ப் பிடித்த கேட்ச் பந்து தரையில் பட்டபின்புதான் எடுத்தார் என்பது தெளிவாகத் தெரிந்தது. ஆனால், களநடுவரின் முடிவை மாற்ற முடியாது என்பதால், அவுட் இல்லாததற்கு விராட் கோலிக்கு அவுட் அளிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். இந்தச் சம்பவத்துக்கு கிரிக்கெட் ரசிகர்கள் பலர் கண்டனம் தெரிவித்தனர், எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.
Like Reply
ஆனால் இன்று நடந்த சம்பவத்தின் மூலம் ஆஸ்திரேலிய வீரர்களுக்குப் பாடம் கற்றுக்கொடுத்துள்ளார் இந்திய அணி வீரர் கே.எல். ராகுல்.

15-வது ஓவரை ரவிந்திர ஜடேஜா
 வீசினார். களத்தில் ஆஸ்திரேலிய வீரர் ஹாரிஸ் பேட் செய்தார். 3-வது பந்தை ஹாரிஸ் தூக்கி மிட்ஆப் திசையில் அடிக்க அந்தப் பந்தை கே.எல்.ராகுல் ஓடி வந்து கேட்ச் பிடித்தார்.கே.எல். ராகுல் கேட்ச் பிடித்ததைப் பார்த்த இந்திய வீரர்கள் ஜடேஜா, கோலி, ரஹானே அனைவரும் ஓடிவந்து ராகுலை பாராட்டினர். ஆனால், கே.எல். ராகுல், தான் பிடித்த கேட்ச் சரியானது அல்ல, தரையில் பட்டபின் பிடித்துவிட்டேன். இது கேட்ச் அல்ல என்று சைகையில் உணர்த்தினார். இதைக் கேட்ட நடுவர் வியப்படைந்து சற்றுபுன்னகை செய்தவாறு மீண்டும் ஆட்டத்தை தொடங்குமாறு கூறினார்.
பவுண்டரி அருகே நின்றிருந்த பும்ரா ஓடிவந்து கே.எல்.ராகுல் செயலைப் பாராட்டி, முதுகில் தட்டிக்கொடுத்துவிட்டுச் சென்றார்.
[Image: rahjpg]கே.எல்.ராகுல் அவுட் இல்லை என்று கூறிய காட்சி:
 
கிரிக்கெட்டில் எதிரணி வீரர்களை எப்படி வேண்டுமானாலும் ஆட்டமிழக்கச் செய்துவிடலாம் என்ற தவறான நோக்கத்தோடு இல்லாமல், தான் பிடித்த கேட்ச் மூலம் தனது நேர்மையையும், இந்திய அணியின் கண்ணியத்தையும் ராகுல் நிலைநாட்டிவிட்டார். இது ஆஸ்திரேலிய அணிக்கு பாடமாக அமையுமா என்பதைக் காட்டிலும் ஹேண்ட்ஸ்கம்புக்கு பாடமாக இருக்கும். கே.எல். ராகுலின் செயலை நெட்டிசன்கள் புகழ்ந்து ,பாராட்டி வருகின்றனர். 
Like Reply
மேலும் 10 நாட்களுக்கு கடும் குளிர் நீடிக்கும்: வானிலை மையம் தகவல்

[Image: 14THFOGjpg]
சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தற்போது வடக்கு திசையில் இருந்து தமிழகம் நோக்கி குளிர்ந்த காற்று வீசி வருகிறது. அதன் காரணமாக தமிழக பகுதிகளில் குளிர் அதிகரித்துள்ளது. வியாழக்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான குறைந்தபட்ச வெப்பநிலை அளவின்படி, மலைப் பிரதேசங்களில் மிகக் குறைந்த அளவாக வால்பாறையில் 3.5 டிகிரி செல்சியஸ், உதகையில் 4.4 டிகிரி, குன்னூரில் 7.8 டிகிரி, கொடைக்கானலில் 8.3 டிகிரி செல்சியஸ் குளிர் பதிவாகியுள்ளது. நிலப் பகுதியில் மிகக் குறைந்த அளவாக தருமபுரி மற்றும் கரூர் பரமத்தியில் 15 டிகிரி, வேலூர், திருத்தணி, நாமக்கல் ஆகிய இடங்களில் தலா 15.5 டிகிரி செல்சியஸ் குளிர் பதிவாகியுள்ளது. இது மேலும் 10 நாட்கள் வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Like Reply
ரேசன் கடைகளில் 7-ந்தேதி முதல் பொங்கல் பொருளுடன் ரூ.1000 வழங்குவது எப்படி?: கலெக்டர்களுக்கு அரசு உத்தரவு

[Image: 201901051151194663_Tamilnadu-govt-order-...SECVPF.gif]
இந்த திட்டத்தின்படி ரூ.258 கோடி செலவில் 2 கோடியே 2 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பச்சரிசி, சர்க்கரை தலா 1 கிலோ மற்றும் கரும்பு, முந்திரி, உலர் திராட்சை, ஏலக்காய் ஆகியவை தொகுப்பு பையில் போட்டு வழங்கப்பட உள்ளது.

பொங்கல் பரிசுத் தொகுப்புடன் பொங்கல் பண்டிகையை தமிழக மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதற்கு 1.98 கோடி குடும்ப அட்டைத்தாரர்களுக்கு தலா ரூ.1000 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் சுமார் 2 ஆயிரத்து 250 கோடி ரூபாய் செலவில் இந்த திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது.

இந்த திட்டத்தை இன்று மாலை 4 மணிக்கு தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கி தொடங்கி வைக்க உள்ளார். இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் இந்த திட்டம் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை மூலம் செயல்படுத்தப்பட உள்ளது.

பொங்கல் பரிசுத் தொகுப்பு திட்டத்தை பொது மக்களுக்கு எவ்வாறு வழங்குவது என்பது பற்றி உணவு பொருள் வழங்கல் ஆணையாளர் சோ.மதுமதி மாவட்ட கலெக்டர்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
Like Reply
[Image: 201901051151194663_1_pongalfigt._L_styvpf.jpg]



பொங்கலை சிறப்பாக கொண்டாடுவதற்காக குடும்ப அட்டைத்தாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, 20 கிராம் உலர் திராட்சை, 20 கிராம் முந்திரி, 5 கிராம் ஏலக்காய், 2 அடி நீள கரும்பு மற்றும் ரூ.1000 ரொக்கம் வழங்கப்படும். தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்து இருப்பதால் திருவாரூர் மாவட்டம் தவிர அனைத்து மாவட்டங்களிலும் இது நடைமுறைப்படுத்தப்படும்.

இப்பணி வருகிற 7-ந்தேதி (திங்கட்கிழமை) முதல் தொடங்கி பொங்கலுக்கு முன்னர் முழுமையாக முடிக்கப்பட வேண்டும். ரே‌சன் கடைகளில் 31.12.2018 அன்று நடைமுறையில் உள்ள அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதை அடிப்படையாக கொண்டு பொங்கல் பரிசுத் தொகுப்பு முறையாக வழங்கப்படுவதை மாவட்ட கலெக்டர்கள் கண்காணிப்பு செய்ய வேண்டும்.

பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரூ.1000 ரொக்கம் அனைத்து குடும்ப அட்டைத்தாரர்களுக்கும் வழங்கப்பட இருப்பதால் அதனை பெறும் ஆர்வத்தில் குடும்ப அட்டைத்தாரர்கள் அதிக எண்ணிக்கையில் ரே‌சன் கடைகளுக்கு ஒரே நேரத்தில் வருவதை தவிர்க்க வேண்டும்.

1000 குடும்ப அட்டைத்தாரர்கள் உள்ள நியாய விலை கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகத்தை முறைப்படுத்தும் வகையில் தெரு வாரியாக குறிப்பிட்டு குடும்ப அட்டை எண்ணிக்கை அடிப்படையில் பொங்கல் பரிசுத் தொகுப்பை பிரித்து வழங்க வேண்டும்.

பொங்கல் பையுடன் வழங்கப்படும் ரூ.1000 ரொக்கப் பணம் சம்பந்தப்பட்ட கூட்டுறவு சங்கங்களுக்கு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் வங்கி வழியாக செலுத்தப்படும். சம்பந்தப்பட்ட கூட்டுறவு சங்கங்கள் தேவைப்படும் நிதியை தினமும் ரொக்கமாக பெற்று ரே‌சன் கடைகளுக்கு வழங்க வேண்டும்
Like Reply
சென்னை உள்பட 10 மாநகராட்சிகளில் பொங்கல் பரிசை விரைவாக வழங்கிட கூடுதல் பணியாளர்களை அமர்த்திக் கொள்ளலாம். ஒரே இடத்தில் பல ரே‌சன் கடைகள் இருந்தால் கூடுதல் மேஜை நாற்காலிகளை அமைத்து கூடுதல் பணியாளர்களை அமர்த்தி பரிசுத் தொகுப்பை வழங்க வேண்டும்.

கூட்டத்தை ஒழுங்குப்படுத்த அந்தந்த பகுதி காவல் துறை ஒத்துழைப்பையும் பெற வேண்டும்.

பொதுமக்கள் பொங்கல் பரிசுத் தொகுப்பை எந்த தேதியில் ரே‌சன் கடைக்கு சென்று பெற்றுக் கொள்ளலாம் என்பதை தெரு வாரியாக குடும்ப அட்டைத்தாரர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். இதற்கான தகவல்கள் தெளிவாக ரேசன் கடைகளில் விளம்பரம் செய்யப்பட வேண்டும்.

இறுதியான ஓரிரு நாட்களில் விடுபட்ட குடும்ப அட்டைகளுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பை கொடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். பொங்கல் பரிசுத் தொகுப்பும் மற்றும் ரொக்க தொகையான 1000 ரூபாயும் ஒரே நேரத்தில் குடும்ப அட்டைத்தாரர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.

அனைத்து குடும்ப அட்டைத்தாரர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் வழங்கப்படும் 1000 ரூபாய் ரொக்கப் பணத்தை முடிந்தவரை இரண்டு 500 ரூபாய் தாள்களாக வெளிப்படையாக வழங்க வேண்டும். எந்த காரணத்தை கொண்டும் 1000 ரூபாய் ரொக்கப்பணத்தை கவரில் வைத்து வழங்கக் கூடாது.

பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரூ.1000 ரொக்கப் பணம் ஆகியவற்றை மின்னணு குடும்ப அட்டையில் (ஸ்மார்ட் கார்டு) பதிவு செய்த பின்புதான் வழங்க வேண்டும். ஸ்மார்ட் கார்டு குடும்ப அட்டை இல்லாதவர்களுக்கு அவர்களது குடும்ப அட்டையில் உள்ள நபர்களில் ஏதேனும் ஒருவரின் ஆதார் அட்டையை வைத்து பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கலாம்.

அல்லது பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணுக்கு வரும் ஒருமுறை கடவு சொல் (ஓ.டி.பி.) அடிப்படையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரொக்கம் வழங்கலாம். இதற்கான உரிய பதிவுகள் ஒப்புதல் படிவத்தில் பதிவு தாளில் குறிப்பிட வேண்டும்.

குடும்ப அட்டைத்தாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கியதை உறுதி செய்யும் வகையில் இந்த ஒப்புதல் பெற வேண்டும்.

குடும்ப அட்டைத்தாரர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நாளில் தவறாமல் சென்று பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரொக்கத்தை பெற்றுக் கொள்ளலாம். குடும்ப அட்டையில் இடம் பெற்றுள்ள உறுப்பினர்களில் யார் வந்தாலும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும்.

பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் 1000 ரூபாய் ரொக்கப்பணம் அனைவருக்கும் வழங்குவதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. எனவே பொதுமக்கள் ரே‌சன் கடைகளில் நெரிசல் ஏற்படும் வகையில் கூட வேண்டாம்.

இந்த தகவலை மாவட்ட கலெக்டர்கள் உள்ளூர் நாளிதழ்கள் மற்றும் தொலைக்காட்சிகள் மூலம் அறிவிப்பு செய்ய வேண்டும்.
Like Reply
பொங்கல் பரிசுத் தொகுப்பு தினமும் காலை 8.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரையிலும், பிற்பகல் 1.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையிலும் ரே‌சன் கடைகளில் வழங்கப்படும். 5.30 மணி அளவில் பொங்கல் பரிசுத் தொகுப்பை பெற வரிசையில் காத்திருக்கும் அனைவருக்கும் டோக்கன் வழங்கப்படும்.

அந்த டோக்கன் அடிப்படையில் பொதுமக்களுக்கு வரிசையாக பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும். 5.30 மணி அளவில் வரிசையில் வந்து நின்ற அனைவருக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும். வரிசையில் காத்திருக்கும் குடும்ப அட்டைத்தாரர்கள் யாரையும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்காமல் திருப்பி அனுப்பக் கூடாது.

பொங்கல் பரிசுத் தொகுப்பு பெற வருகின்ற வயதானவர்கள், மாற்றுத் திறனாளிகளை நிற்க வைக்கக் கூடாது. அவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து பரிசுத் தொகுப்பு வழங்க வேண்டும்.

பரிசுத் தொகுப்பு வாங்க வரும் ஆண்கள் தனியாகவும், பெண்கள் தனியாகவும் நின்று எவ்வித சிரமமும் இல்லாமல் பெற்று செல்ல வேண்டும். தேவையில்லாமல் வரிசையை விட்டு விலகி செல்லாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அதற்காக உள்ளூர் காவல் துறை பாது காப்பு அளிக்கவும் ஏற்பாடு செய்துக் கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் பொங்கல் பரிசுத் தொகுப்பும், 1000 ரூபாய் ரொக்க விநியோகம் குறித்தும் புகார்களை பெறுவதற்கு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட வேண்டும். ஏதாவது புகார்கள் வந்தால் நடமாடும் கண்காணிப்பு குழுவுக்கு அதனை தெரிவித்து உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள் இது தொடர்பான புகார்களை தெரிவிக்க உரிய வசதிகள் செய்யப்பட வேண்டும். எந்த அலுவலரிடம் புகார்கள் தெரிவிக்க வேண்டும் என்பதை அவர்களது தொலைபேசி எண்ணுடன் குறிப்பிட வேண்டும். கட்டுப்பாட்டு அறையின் தொலைபேசி எண்ணையும் குறிப்பிட வேண்டும்.

அரசின் இந்த திட்டம் குடும்ப அட்டைத்தாரர்களுக்கு முறையாக சென்று அடைவதை உறுதி செய்ய வட்ட அளவில் துணை கலெக்டர்கள் தலைமையில் கண்காணிப்பு குழு அமைக்கப்பட வேண்டும்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் 10 முதல் 15 கடைகளுக்கு என துணை வட்டாட்சியர் அல்லது துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நிலையில் உள்ள ஒரு அதிகாரியை நியமித்து பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரூ.1000 சரியாக விநியோகிக்கப்படுகிறதா? என்பதை கண்காணிக்க வேண்டும். இந்த கண்காணிப்பு தகவலை 1 மணி நேரத்திற்கு ஒரு தடவை நடமாடும் குழுவில் உள்ள அதிகாரிகளிடம் தவறாது தகவல் தெரிவிக்க வேண்டும்.

பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரொக்கம் ரூபாய் 1000 ஆகியவை சரியானபடி வழங்கப்பட்டுள்ளதா? என்பது சரிபார்க்கப்பட வேண்டும். தவறுகள் காணப்பட்டால் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்க மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரைக்க வேண்டும்.

தவறுகள் நடப்பதை தடுப்பதற்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரூ.1000 விநியோகிக்கப்பட்ட நபர்களிடம் பரவலாக ஆய்வு செய்து தணிக்கை செய்ய வேண்டும். இந்த பணிகள் அனைத்தும் பொது விநியோக திட்டத்தின் கீழ் செய்யப்படும் அன்றாட பணிகளுக்கு இடையூறு இல்லாமல் செயல்படுத்தப்பட வேண்டும்.
Like Reply
கிரிக்கெட்

இந்தியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட்: மழையால் ஆட்டம் பாதிப்பு; 

[Image: 201901051415279516_4th-Test-against-Indi...SECVPF.gif]

இந்தியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டி மழையால் பாதிக்கப்பட்டு உள்ளது. ஆஸ்திரேலியா 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 236 ரன்கள் எடுத்துள்ளது.
ஆஸ்திரேலிய அணியின் வீரர்களில் ஹாரிஸ் (79), கவாஜா (27), லபூஸ்சாக்னே (38), மார்ஷ் (8) மற்றும் ஹெட் (20) ரன்களில் ஆட்டமிழந்தனர்.

அந்த அணி தேநீர் இடைவேளை வரை 68 ஓவர்கள் வரை 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 198 ரன்கள் எடுத்திருந்தது.  இந்த நிலையில், பெய்னி (5 ரன்கள்) குல்தீப் யாதவ் பந்தில் வெளியேறினார்.  தொடர்ந்து ஹேண்ட்ஸ்காம்ப் மற்றும் கம்மின்ஸ் விளையாடி வந்தனர்.

இந்த நிலையில், மழையால் ஆட்டம் பாதிப்படைந்து உள்ளது.  83.3 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் மழை பெய்ய தொடங்கியது.  இதனால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.  ஹேண்ட்ஸ்காம்ப் 28 (91 பந்துகள் 3 பவுண்டரிகள்), கம்மின்ஸ் 25 (41 பந்துகள் 6 பவுண்டரிகள்) எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.  இந்நிலையில் 3வது நாள் ஆட்டம் முடித்து 
Like Reply
9 விக்கெட்டுகளை இழந்து ஆஸி. போராட்டம்: ஷமி, பும்ரா அபாரம்; மிரட்டும் இந்திய அணி

[Image: shamijpg]கம்மின்ஸ் விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியில் ஷமி 
சிட்னியில் நடந்து வரும் 4-வது டெஸ்ட் போட்டியின் இன்றைய 4-வது நாள் ஆட்டம் மழையால் உணவுஇடைவேளை வரை ரத்தானது. அதன்பின் ஆட்டம் தொடங்கியநிலையில் ஆஸ்திரேலிய அணி விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
ஆட்டம் தொடங்கிய முதல் ஓவரிலேயே ஷமி வேகத்தில் கம்மின்ஸ் க்ளீன் போல்டாகி வெளியேறினார். அடுத்த சிறிது நேரத்தில் பும்ரா ஓவரில் ஹேண்ட்ஸ்கம்பும், குல்தீப் சுழலில் லயனும் ஆட்டமிழந்ததனர்
சிட்னியில் இந்தியா ஆஸ்திரேலய அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. ஏற்கனவே 2-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது.
டாஸ் வென்ற இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட் இழப்புக்கு 622ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது. இதையடுத்து, பேட் செய்த ஆஸ்திரேலிய அணி நேற்றைய ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 83.3ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 236 ரன்கள் சேர்த்துள்ளது. இந்திய அணியைக் காட்டிலும் இன்னும் 386 ரன்கள் பின்தங்கி உள்ளது.
3-ம் நாளான நேற்று மாலை திடீரென மேகம்கூடி வெளிச்சக்குறைவு ஏற்பட்டதையடுத்து ஆட்டம் 15 ஓவர்கள் குறைவாக வீசப்பட்ட நிலையில் நிறுத்தப்பட்டது. மேலும், மழை வருவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
ஒருவேளை இன்று மழை பெய்யாமல் இருந்தால், ஆட்டத்தை இன்று அரைமணிநேரம் முன்கூட்டியே தொடங்க நடுவர்கள் திட்டமிட்டு இருந்தனர். ஆனால், சிட்னியில் காலையில் இருந்து பலமான தூறலும், மேகமூட்டமாக இருந்தது. இதனால், விளையாடுவதற்குச் சாதகமான சூழல் இல்லாமல் இருந்தது. இருமுறை நடுவர்கள் சென்று மைதானத்தை ஆய்வு செய்து காலை ஷெசனையும், உணவு இடைவேளைவரையிலும் ரத்து செய்தனர்.
Like Reply




Users browsing this thread: 152 Guest(s)