Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
•
Posts: 115
Threads: 2
Likes Received: 3 in 2 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
1
ஹிந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே தபால்துறை தேர்வு
புதுடில்லி: தபால்துறை தேர்வு வினாத்தாள்கள் இனி ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் நடத்தப்பட்டு வந்த தபால் துறையின் தேர்வுகளில், வினாத்தாள்கள் அந்தந்த மாநில மொழிகளிலும் வழங்கப்பட்டு வந்தன. பல ஆண்டுகளாக இருந்து வந்த இந்த நடைமுறையை தற்போது மத்திய அரசு மாற்றியுள்ளது.
இதுகுறித்து அனைத்து தபால் நிலையங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தபால்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வுகளின் வினாத்தாள்கள், ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் மட்டுமே கேட்கப்படும். மாநில மொழிகள் இடம்பெறாது. எனவே ஹிந்தி அல்லது ஆங்கிலத்தில் மட்டுமே இனி தேர்வு எழுத வேண்டும். இது முதல் தாளுக்கு மட்டுமே பொருந்தும்.
அதே சமயம் இரண்டாம் தாளில் கேட்கப்படும் கேள்விகள், ஹிந்தி, ஆங்கிலத்துடன் மாநில மொழிகளிலும் வழங்கப்படும். இரண்டாம் தாளை மாநில மொழிகளில் தேர்வர்கள் பதிலளிக்கலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
சர்க்கரை மிகுந்த பானங்கள் புற்றுநோயை உண்டாக்குமா?
படத்தின் காப்புரிமைGETTY IMAGES
சர்க்கரை மிகுந்த பானங்கள், பழரச பானம், கார்பனேட் செய்த பானங்கள் உள்ளிட்டவை, புற்றுநோய் ஏற்படும் ஆபத்தை அதிகரிக்கச் செய்யும் என்று பிரான்ஸ் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
பிரிட்டன் மருத்துவ இதழ் வெளியிட்டுள்ள ஓர் ஆய்வு முடிவில் இந்தத் தொடர்பு தெரிய வந்துள்ளது. ஐந்து ஆண்டுகளாக 100,000 பேரை கவனித்து இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
ரத்தத்தில் சர்க்கரை அளவில் ஏற்படும் மாற்றம் தான் இதற்குக் காரணம் என்று Université Sorbonne Paris Cité பல்கலைக்கழகக் குழு கூறியுள்ளது.
இருந்தபோதிலும் உறுதி செய்யப்பட்ட ஆதாரங்கள் போதுமான அளவுக்கு இல்லை என்று நிபுணர்கள் கூறியுள்ளனர். இதுகுறித்து இன்னும் ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.
சர்க்கரை மிகுந்த பானம் என்று எதைக் குறிப்பிடுகிறார்கள்?
5 % அளவுக்கும் மேல் சர்க்கரை உள்ள பானங்களை சர்க்கரை மிகுந்த பானங்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் வரையறுத்துள்ளனர்.
பழரச பானங்கள் (கூடுதல் சர்க்கரை சேர்க்காதவையும்), குளிர்பானங்கள், இனிப்பாக்கப்பட்ட மில்க்சேக், சத்து பானங்கள், சர்க்கரை கலந்த டீ அல்லது காபியும் இதில் அடங்கும்.
சர்க்கரைக்குப் பதிலாக பூஜ்யம் கலோரி செயற்கை இனிப்பூட்டிகள் கலந்த சத்து பானங்களையும் இந்தக் குழு ஆய்வு செய்தது. ஆனால் புற்றுநோயுடன் தொடர்பு எதையும் காண முடியவில்லை.
புற்றுநோய் ஆபத்து எவ்வளவு பெரியது?
சர்க்கரை மிகுந்த பானங்களை தினமும் 100 மில்லி கூடுதலாகக் குடித்தால் - வாரத்துக்கு இரண்டு கேன்கள் அதிகமாகக் குடித்தால்- புற்றுநோய் ஏற்படும் ஆபத்து 18% அதிகரிக்கும் என்று ஆய்வில் கண்டறியப் பட்டுள்ளது.
ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட ஒவ்வொரு ஆயிரம் பேரிலும் 22 பேருக்கு புற்றுநோய் பாதிப்பு இருந்தது.
எனவே, அவர்கள் அனைவரும் ஒரு நாளுக்கு 100 மில்லி கூடுதலாகக் குடித்தால், மேலும் நான்கு பேருக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்படும் - ஒவ்வொரு ஆயிரம் பேரிலும் 26 பேருக்கு புற்றுநோய் பாதிப்பு இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
``இருந்தபோதிலும், சர்க்கரை மிகுந்த பானங்கள் குடிப்பதற்கும் புற்றுநோய் ஏற்படுவதற்கும் இது சாதாரணமான நியாயமான தொடர்பாக இருக்கலாம். இதுபற்றி இன்னும் ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டும்'' என்று பிரிட்டன் புற்றுநோய் ஆராய்ச்சி அமைப்பில் உள்ள மூத்த புள்ளியியல் நிபுணர் டாக்டர் கிரஹம் வீலர் கூறுகிறார்.
ஆய்வின் போது கண்டறியப்பட்ட 2,193 புற்றுநோய் நோயாளிகளில், 693 பேருக்கு மார்பகப் புற்றுநோய் இருப்பதும், 291 பேருக்கு பிராஸ்டேட் புற்றுநோய் இருப்பதும், 166 பேருக்கு ஆசனவாய் புற்றுநோய் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
படத்தின் காப்புரிமைGETTY IMAGES
இது உறுதியான ஆதாரமா?
இல்லை - இந்த ஆய்வுக்கு பின்பற்றப்பட்ட வழிமுறையானது, தகவல்களின் போக்கை கண்டறியும். ஆனால் அதற்கான விளக்கத்தை தரக் கூடியதாக இல்லை.
எனவே, குறைவாக இதைக் குடிப்பவர்களை (ஒரு நாளுக்கு 30 மில்லிக்கும் குறைவாக) காட்டிலும், அதிகமாகக் குடிப்பவர்களுக்கு (ஒரு நாளுக்கு சுமார் 185 மில்லி) புற்றுநோய் வருவதற்கு அதிக ஆபத்து இருப்பதாக இது காட்டுகிறது.
சர்க்கரை மிகுந்த பானங்கள் புற்றுநோய் ஆபத்தை அதிகரிக்கின்றன என்பது இதற்கான ஒரு விளக்கமாக இருக்கலாம்.
ஆனால், சர்க்கரை மிகுந்த பானங்களை அதிகம் குடிப்பவர்களுக்கு ஆரோக்கியக் குறைபாடான செயல்பாடுகள் (உதாரணமாக மற்றவற்றைவிட அதிகம் உப்பு மற்றும் கலோரிகள் எடுத்துக் கொள்வது) இருக்கும். அது புற்றுநோய் ஆபத்தை அதிகரிக்கும். சர்க்கரை மிகுந்த பானங்களே தான் காரணமாக இருக்கும் என்று சொல்வது பொருத்தமற்றதாக இருக்கலா
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
னவே, சர்க்கரை மிகுந்த பானங்கள் புற்றுநோயை உருவாக்குகின்றன என்று இந்த ஆய்வு கூற முடியாது.
``சர்க்கரை மற்றும் புற்றுநோய் குறித்து உறுதியான காரணத்தைச் சொல்வதாக இந்த ஆய்வு இல்லை. நாம் சர்க்கரை எடுத்துக் கொள்வதைக் குறைப்பதற்கான முக்கியத்துவத்தைக் காட்டும் வகையில் ஒட்டுமொத்த தகவல்களை அது அளிக்கிறது'' என்று டீஸ்ஸைட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் அமெலியா லேக் கூறுகிறார்.
``நமது உணவில் சர்க்கரையின் அளவைக் குறைப்பது மிகவும் முக்கியமானது'' என்கிறார் அவர்.
இது உடல் பருமன் பற்றியதா?
சில புற்றுநோய்களுக்கு உடல் பருமன் காரணமாக இருக்கிறது. சர்க்கரை மிகுந்த உணவுகளை அதிகம் சாப்பிடுவது, எடை கூடுதவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கச் செய்கிறது.
இருந்தபோதிலும், அது மட்டுமே முழுமையான விவரம் இல்லை என்று ஆய்வு தெரிவிக்கிறது.
``சர்க்கரை மிகுந்த பானங்களை அதிகம் குடிப்பது உடல் பருமன் ஏற்படுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால் அதற்கான முழு காரணத்தை அவர்கள் விளக்கவில்லை'' என்று ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான மாதில்டே டவ்வியர் பிபிசி செய்திப் பிரிவு செய்தியாளரிடம் கூறினார்.
அப்படியானால் எங்கே தவறு நடக்கிறது?
இந்தத் தொடர்பு `சுகர் கலப்பு என்ற அம்சத்தின் அடிப்படையில் இருக்கிறது' என்றும், ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அவர்கள் காரணம் சொல்கிறார்கள் என்றும் பிரெஞ்ச் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
பானங்களுக்கு நிறத்தைக் கொடுப்பதற்காக சேர்க்கப்படும் சில ரசாயனங்கள் மற்றும் பானங்களும் கூட காரணமாக இருக்கலாம் என்கின்றனர் அவர்கள்.
இருந்தபோதிலும், இந்தக் கேள்விக்குப் பதில் அளிக்க அந்த ஆய்வு முயற்சிக்கவில்லை.
``இதில் உயிரியல் ரீதியிலான சாத்தியத்தைக் கண்டறிவது சிரமமான விஷயம். உடல் எடை அதிகம் உள்ளவர்கள் அல்லது நீரிழிவு பாதிப்பு ஏற்படுபவர்களின் குழுக்களுக்கு இடையில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏதும் இல்லை. ஆனால் அதுதான் தொடர்புடைய ஆபத்து என்கின்றனர். இந்த நிலையில் சாத்தியக்கூறுகளை கண்டறிவது கஷ்டம்'' என்று தேசிய சுகாதார சேவைகள் துறை உணவியல் நிபுணர் கேத்தரின் காலின்ஸ் கூறுகிறார்.
ஆராய்ச்சியாளர்கள் என்ன சொல்கின்றனர்?
இதில் கண்டறியப்பட்ட விஷயங்களின் தொடர்பை அறிவதற்கு பெரிய அளவில் ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்று Université Sorbonne Paris பல்கலைக்கழக குழுவினர் கூறுகின்றனர்.
``இருதய நோய்கள், அதிக உடல் எடை, உடல் பருமன் மற்றும் சர்க்கரை நோய் போன்றவை வருவதற்கான ஆபத்துக்கும் சர்க்கரை மிகுந்த பானங்களுக்கும் தொடர்பு இருக்கிறது'' என்று டாக்டர் டவ்வியர் கூறுகிறார்.
``ஆனால் நாங்கள் காட்டுபவை புற்றுநோய் ஆபத்துடனும் தொடர்புடையதாக இருக்கலாம்'' என்கிறார் அவர்.
சர்க்கரை மிகுந்த பானங்களுக்கு வரி விதிப்பது நல்ல விஷயமாக இருக்கும் என்பதற்கு இந்த ஆராய்ச்சி, மேலும் ஓர் ஆதாரமாக இருக்கும் என்று அவர்கள் கூறுகின்றனர்.
``சர்க்கரை மிகுந்த 100 சதவீத பழரசங்கள், உள்ளிட்ட பானங்கள் குடிப்பதைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று சத்துணவியல் துறை பரிந்துரைகளின் நியாயத்துக்கு ஆதரவு தருவதாக இந்தப் புள்ளிவிவரங்கள் உள்ளன. வரி விதிப்பது மற்றும் சர்க்கரை மிகுந்த பானங்களை மார்க்கெட்டிங் செய்வதில் வரையறைகள் தேவை என்பதற்கான காரணத்தை வலியுறுத்துவதாகவும் இது இருக்கிறது'' என்று அவர்களுடைய அறிக்கை தெரிவிக்கிறது.
2018 ஆம் ஆண்டில் பிரிட்டன் அரசு சர்க்கரை வரி விதித்தது. அதன்படி, சர்க்கரை மிகுந்த பானங்களைத் தயாரிப்பவர்கள் அதற்குத் தனியாக வரி கட்டியாக வேண்டும்.
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
ஏரியை ஆய்வு செய்ய வந்தவர்களைக் கைது செய்தது ஏன்?- காவல்துறை விளக்கம்; அறப்போர் இயக்கம் மறுப்பு
தன்னார்வலர்களிடம் பேசும் காவல்துறையினர்.
கல்லுக்குட்டை ஏரியை ஆய்வு செய்ய வந்தவர்களைக் கைது செய்தது ஏன் என்பது குறித்து காவல்துறை விளக்கமளித்த நிலையில், அதை அறப்போர் இயக்கம் மறுத்துள்ளது.
நீர்நிலைகளைத் தூய்மைப்படுத்தி, தூர் வாரும் பணிக்காக 'அறப்போர் இயக்கம்' என்னும் தன்னார்வ அமைப்பைச் சேர்ந்த 11 பேர் சென்னை, தரமணியில் உள்ள கல்லுக்குட்டை ஏரிக்கு இன்று (சனிக்கிழமை) காலை ஆய்வு செய்யச் சென்றனர். ஆனால் ஏரியை ஆய்வுசெய்ய முன் அனுமதி வாங்கவேண்டும் என்றுகூறி காவல்துறையினர் அவர்களைக் கைது செய்து மண்டபத்தில் வைத்திருந்தது. மாலை சுமார் 5.30 மணியளவில் தன்னார்வலர்கள் விடுவிக்கப்பட்டுள்ளன
ஆய்வு செய்ய வந்தவர்களைக் கைது செய்தது ஏன் என்பது குறித்து தரமணி காவல் நிலைய ஆய்வாளர் ஜெயராஜிடம் 'இந்து தமிழ்' சார்பில் பேசினோம். இதுகுறித்து விளக்கமளித்த அவர், ''இந்த இயக்கத்தினர் ஏரியை ஆய்வு செய்ய கும்பலாக வந்துள்ளனர். அங்கு குடியிருப்பவர்களில் ஒருவரான மதி என்பவர், 'எதற்காக இங்கு வந்திருக்கிறீர்கள், அரசிடமோ, தாசில்தாரிடமோ அனுமதி பெற்றிருக்கிறீர்களா?' என்று கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு, 'அதெல்லாம் உன்னிடம் சொல்லவேண்டியதில்லை, போ' என்று பிரச்சினை செய்துள்ளனர்.
'அத்துமீறிக் குடியிருக்கிறார்கள் என்று தங்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்குமோ?' என்று பயந்த மதி, தரமணி காவல் நிலையத்திடம் வந்து புகார் அளித்தார். அவரின் புகாரின் அடிப்படையில், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்தோம். சட்டம், ஒழுங்கு பிரச்சினை வந்துவிடக்கூடாது என்பதால் எங்களிடம் கேட்டு விட்டுத்தான் ஆய்வு நடத்தவேண்டும்'' என்றார் ஆய்வாளர் தேவராஜ்.
ஆனால் தேவராஜின் குற்றச்சாட்டை அறப்போர் இயக்கம் முழுமையாக மறுக்கிறது. இதுகுறித்து அவ்வியக்கத்தைச் சேர்ந்த ஜெயராமன் நம்மிடம் கூறும்போது, ''தன்னார்வலர்கள் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு, சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். என்ன பிரிவுகளில் வழக்கு போடப்பட்டது என்று தெரியவில்லை. காவல்துறை சொல்வதில் உண்மையில்லை. உள்ளூர் மக்களுடன் இணைந்துதான் பணியாற்றிவருகிறோம். ஏன், கைதான 11 பேரில் ஒருவர்கூட உள்ளூர் நபர்தான்.
இதுவரை 30 ஏரிகளை ஆய்வு செய்துள்ளோம். இதுவரை இப்படிப்பட்ட பிரச்சினை ஏற்பட்டதில்லை. 'கேளு சென்னை கேளு' என்ற தண்ணீர் தொடர்பான நிகழ்ச்சியை நடத்தியபோது காவல்துறை அனுமதி கொடுக்கவில்லை. நீதிமன்றம் சென்று அனுமதி வாங்கி, நிகழ்ச்சியை நடத்தினோம். 'Know your Rights' என்ற நிகழ்ச்சியை வார்டு தோறும் மண்டபங்களில் நடத்தி வருகிறோம். மண்டப உரிமையாளரை போலீஸார் மிரட்டியுள்ளனர். எங்கள் மீது துல்லிய தாக்குதலைத் தீவிரமாக நடத்துகின்றனர்.
ஆளுங்கட்சியின் அழுத்தம் காரணமாக குறிப்பாக அமைச்சர் வேலுமணியாலேயே இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. போலீஸாரும், 'மேலிடத்து பிரஷர் சார், நாங்க ஒண்ணும் பண்ணமுடியாது' என்கின்றனர். ஏற்கெனவே நாங்கள் அவரின் ஊழலை வெளிக்கொண்டு வந்து அவர் மீது வழக்கு தொடுத்திருக்கிறோம். அவர் எங்கள் மீது போட்ட 18 அவதூறு வழக்குகளிலும் தோல்வியடைந்துவிட்டார். இதுதான் இந்த தாக்குதலுக்கான காரணம்.
வழக்குகளில் ஜனநாயக நாட்டில், ஓர் ஏரியைச் சென்று பார்ப்பதே தவறு என்றால், சாலையில் நடக்கக் கூடாது என்று சொல்வது போலத்தான். ஒருபக்கம் முதல்வர், 'ஏரிகளைக் காப்பாற்ற வேண்டும். மக்கள் அனைவரும் வாருங்கள்' என்கிறார். மறுபுறம் காவல்துறை கைது செய்கிறது.
தண்ணீர்ப் பஞ்சம் இருக்கும் நேரத்தில் தண்ணீருக்காக வேலை செய்ய வரும் தன்னார்வலர்கள் மீது வழக்கு பதிவு செய்வதை எப்படி எடுத்துக்கொள்வது? ஜனநாயகத்தின் குரல்வளையையே நசுக்குகின்ற செயலாகத்தான் இதைப் பார்க்க முடிகிறது'' என்கிறார் ஜெயராமன்.
மழையை எதிர்நோக்கித் தலைநகரும் தமிழ்நாடும் காத்துக்கிடக்கும் இந்த சூழலில், ஏரி உள்ளிட்ட நீராதாரங்கள் தூர்வாரப்பட வேண்டியது அவசர அவசியம். இதை எல்லா இடங்களிலும் அரசு முன்னெடுக்க முடியாவிட்டாலும், செய்யும் தனியார்களைத் தடுக்காமலாவது இருக்கலாம் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
அரசு பேருந்தில் பயணிகளுக்கு இடையூறாக ரகளை; புதுக்கல்லூரி மாணவர்கள் 9 பேர் கைது: இடைநீக்கம் செய்தது கல்லூரி
கோப்புப் படம்
சென்னை ராயப்பேட்டையில் அரசுப்பெருந்தில் பயணம் செய்த கல்லூரி மாணவர்கள் பயணிகளுக்கு இடையூறாக ரகளை செய்து, தொல்லைக் கொடுத்து பயணம் செய்ததாக புகாரின்பேரில் புதுக்கல்லூரி மாணவர்கள் 9 பேரை போலீஸார் கைது செய்தனர். கல்லூரி இடைநீக்கம் செய்தது.
சென்னையில் கல்லூரிகள் இந்த மாதம் திறக்கப்பட்டது. கல்லூரி திறக்கப்பட்ட முதல்நாளே பஸ்டே கொண்டாட்டத்தில் மாணவர்கள் ஈடுபட்டனர். இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இந்த விவகாரத்தில் 24 மாணவர்களை போலீஸார் பிடித்தனர். இதில் 13 பேர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 9 மாணவர்களை பச்சையப்பன் கல்லூரி முதல்வர் இடைநீக்கம் செய்தார்
பேருந்தில் ரகளையில் ஈடுபட்டாலோ, பஸ்டே கொண்டாடினாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் எச்சரித்திருந்தனர். இந்நிலையில் பூந்தமல்லியில் இருந்து அண்ணா சதுக்கம் செல்லும் 25G பேருந்து நேற்று ராயப்பேட்டை அருகே சென்றது.
அதில் ஏறி பாட்டுப்பாடி, பேருந்தை தட்டிக்கொண்டும், பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும்வண்ணம் ரகளையில் ஈடுபட்டு வந்தனர். இதைப்பார்த்த பயணிகள் போலீஸாருக்கு புகார் அளித்தனர். உடனடியாக அங்கு வந்த போலீஸார் அந்த மாணவர்களை கைது செய்தனர். பின்னர் அவர்களை விசாரணை நடத்திய போலீஸார் அவர்கள் 9 பேரையும் கைது செய்தனர்.
விருகம்பாக்கத்தைச் சேர்ந்த 1.அஷ்ரப் அலி (20), புதுக்கோட்டை புதுக்குளத்தைச் சேர்ந்த பயாஸ் (18), வானகரத்தைச் சேர்ந்த முகமது பர்கான்(19), ஆழ்வார் திருநகரைச் சேர்ந்த முகமது ஆருண்(18), விருகம்பாக்கத்தைச் சேர்ந்த அப்துல் ரஹ்மான்(20)
அஸ்லாம் (19), சூளைமேடு பகுதியைச் சேர்ந்த முகமது பகிம்(18)வடபழனியைச் சேர்ந்த முகமது முபாரக் (17) கே.கே.நகரைச் சேர்ந்த சையத் அன்வர்(18) ஆகிய 9 பேர் மீதும் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து பின்னர் ஜாமினில் விடுவித்தனர்.
இதனிடையே கைது செய்யப்பட்ட 9 பேரையும் கல்லூரி நிர்வாகம் இடைநீக்கம் செய்தது. 9 பேரையும் இடைநீக்கம் செய்த உத்தரவின் நகலை போலீஸாருக்கு கல்லூரி முதல்வர் அனுப்பியுள்ளார்.
உட்ஸ்ரோடு பேருந்து நிருத்தம் வரும்போது பஸ்சை தட்டியதாக மேற்படி மாணவர்களை சுமார் 09:50 மணிக்கு நிலையம் அழத்து வந்து விசாரணை செய்து வருகின்றனர்.
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
தோனியை ஏழாவது இடத்தில் இறக்கியது ஏன்..? புதிய விளக்கம் கொடுக்கும் ரவி சாஸ்திரி !!
தோனியை ஏழாவது இடத்தில் இறக்கியது ஏன்..? புதிய விளக்கம் கொடுக்கும் ரவி சாஸ்திரி
நியூசிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் தோனியை 7ஆவது வீரராக களமிறக்கியது குறித்து தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி விளக்கம் அளித்துள்ளார்.
உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணியை இந்தியா 239 ரன்களில் கட்டுப்படுத்தியது. 240 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இந்திய அணியில் ரோகித் சர்மா, விராட் கோலி, கே.எல்.ராகுல் தலா ஒரு ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தது. 5 ரன்னிற்குள் இந்திய அணி 3 விக்கெட்டை இழந்து தடுமாறியது.
வழக்கமாக தோனிதான் 5 ஆவது வீரராக களமிறங்குவார். ஆனால், அன்றைய போட்டியில் தினேஷ் கார்த்திக் 5வது வீரராக களமிறக்கப்பட்டார். ஆனால், அவரும் ஒற்றை இலக்க ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார். 10 ஓவர்களில் இந்திய அணி 24 ரன்களுக்கு 4 விக்கெட்டை இழந்தது. ஆறாவது வீரராகவும் தோனி இறங்கவில்லை. ஹர்திக் பாண்ட்யா 6 ஆவது வீரராக களமிறங்கினார். நான்காவது வீரராக களமிறங்கிய ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா தலா 32 ரன்கள் எடுத்து முக்கியமான நேரத்தில் பொறுப்பற்ற ஷாட்களை அடித்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
பின்னர், 7 ஆவது வீரராக தோனி களமிறங்கினார். தோனியும், ரவீந்திர ஜடேஜாவும் இணைந்து 8 ஆவது விக்கெட்டுக்கு 116 ரன்கள் குவித்தனர். ஆனால், இறுதியில் தோனி ரன் அவுட் ஆனதை அடுத்து இந்திய அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
அதனையடுத்து, தோனி 7 ஆவது வீரராக களமிறக்கப்பட்டது குறித்து விமர்சனங்கள் எழுந்தது. முன்னாள் வீரர்கள் சச்சின், கங்குலி, கவாஸ்கர் உள்ளிட்ட வீரர்கள் தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்ட்யா ஆகியோருக்கு பின் களமிறக்கப்பட்டது குறித்து அதிருப்தியை வெளிப்படுத்தினர்.
இந்நிலையில், தோனி 7 ஆவது வீரராக களமிறக்கப்பட்டது குறித்து ரவிசாஸ்திரி விளக்கம் அளித்துள்ளார். , “அது முற்றிலும் அணியாக எடுத்த முடிவு. அதில் எல்லோருடைய பங்கும் உண்டு. அது ஒரு எளிமையான முடிவுதான். தோனி தொடக்கத்திலே களமிறங்கி ஆட்டமிழக்க வேண்டும் என விரும்புவீர்களா? அது ஒட்டுமொத்த வெற்றியை நோக்கிய பயணத்தை தடுத்துவிடும்.
அனுபவம் வாய்ந்த ஆட்டம் கடைசியில் தேவைப்பட்டது. அவர் எல்லா காலங்களிலும் சிறந்த பினிஷராக இருந்துள்ளார். தோனியை கடைசி கட்டத்தில் பயன்படுத்தாமல் இருப்பதுதான் தவறு. அதில் ஒட்டுமொத்த அணியும் தெளிவாக இருந்தது.
உங்களின் தலையை நிமிர்ந்தி கொண்டு நடந்து வாருங்கள் வீரர்களே. அந்த 30 நிமிட கோசமான விளையாட்டிற்காக கடந்த சில வருடங்களாக நாம் ஒரு சிறந்த அணியாக விளையாடவில்லை என்று ஆகிவிடாது. ஒரேயொரு போட்டி, ஒரு தொடர் மட்டுமே ஒரு அணியின் திறனை தீர்மானித்துவிடாது. நீங்கள் ஏற்கனவே நிறைய மரியாதையை சம்பாதித்துவிட்டீர்கள்” என இந்தியன் எக்ஸ்பிரசுக்கு அளித்த பேட்டியில் ரவிசாஸ்திரி கூறியுள்ளார்
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
ஹெல்மெட்டுக்குள் வைத்து பேசிய போது வெடித்த செல்போன்- இளைஞர் கவலைக்கிடம்
சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற போது ஹெல்மெட்டுக்குள் இருந்த செல்போன் வெடித்ததில் வாகன ஓட்டி படுகாயமடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு தொடர் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
ஹெல்மெட்டுக்குள் வைத்து பேசிய போது வெடித்த செல்போன்- இளைஞர் படுகாயம்
அப்போது அவருக்கு செல்போன் அழைப்பு வந்துள்ளது. பைக்கை நிறுத்துவிட்டு தன்னுடைய செல்போனை ஹெல்மெட்டுக்குள் வைத்து அவர் பேசிக்கொண்டே சென்றார். எதிர்பாராத விதமாக அந்த செல்போன் பெருத்த சத்தத்துடன் வெடித்தது.
இதனால் அவருடைய கை, முகம், தலை, காது, மூக்கு ஆகிய பகுதிகளில் படுகாயம் ஏற்பட்டது. இதனால் நிலைதடுமாறி அவர் கீழே விழுந்தார். இதை பார்த்த மற்ற வாகன ஓட்டிகள், வண்டியை நிறுத்திவிட்டு கீழே விழுந்தவருக்கு உதவி செய்தனர். அதை தொடர்ந்து அக்கம் பக்கத்தினரும் உதவி செய்தனர்.
பிறகு சம்பவம் குறித்து மக்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். உடனே விபத்து நடந்த சூளகிரி போலீசாருக்கு வருகை தந்தனர். விபத்தால் பாதிக்கப்பட்ட ஆறுமுகத்தை மீட்ட காவலர்கள் உடனே அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு அவருக்கு படுகாயம் ஏற்பட்ட பகுதிகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் ஆறுமுகம் விவோ ஸ்மார்ட்போனை ஹெல்மெட்டிற்குள் வைத்து பேசியது தெரியவந்தது.
அந்த ஸ்மார்ட்ஃபோன் எதற்காக வெடித்தது என்பது தொடர்பாக இன்னும் தகவல் வெளியாகவில்லை. எனினும், போனின் உடைந்த பாகங்கள் தொழில்நுட்ப பரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் புளியரசி கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர் தன்னுடைய இருசக்கர வாகனத்தில் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்தார்
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
சரவணபவன் ராஜகோபால் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்!
சரவணபவன் உரிமையாளர் ராஜகோபால் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாகவும், வெண்ட்டிலெட்டரில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சரவணபவன் உரிமையாளர் ராஜகோபால் பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று வருகிறார். உச்சநீதிமன்ற உத்தரவு படி கடந்த 9 ஆம் தேதி எழும்பூர் நீதிமன்ற நீதிபதி முன் ஆஜரானார். உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்ததால், தனியார் மருத்துவமனை ஆம்புலன்ஸ் மூலம் நீதிமன்றம் வந்தார். அதனைத் தொடர்ந்து நீதிபதி புழல் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். சிறைக்கு செல்லும் போதே ராஜகோபால் உடல்நிலை மோசமானதால், சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் உள்ள கைதிகள் வார்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட ராஜகோபாலுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று இரவு 11.00 மணியளவில் மாரடைப்பு ஏற்பட்டதாகவும், இதனால் அவரின் உடல்நிலை மோசமானதாகவும், ஸ்டான்லி மருத்துவர்கள் தெரிவித்தன.
அதன் பிறகு வெண்ட்டிலேட்டர் இயந்திரம் மூலம் செயற்கை சுவாசம் கொடுக்கப்பட்டது என தெரிவித்தன. மேலும் ராஜகோபாலில் உடல் நிலை மருத்துவ இயந்திரங்கள் உதவியுடன் இயங்கி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தன. இதன் காரணமாக சரவணபவன் ஊழியர்கள் மற்றும் குடும்பத்தினர் நேற்று இரவு முதலே மருத்துவமனைக்கு வரத்தொடங்கியுள்ளன. அதிகாலை 03.00 மணியளவில் ராஜகோபால் உடல் நிலை சற்று முன்னேற்றம் அடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தன. இருப்பினும் வெண்டிட்லேட்டரில் இருந்து வெளியே வந்தால் மட்டுமே ராஜகோபாலன் உடல்நிலை குறித்து முழுமையான நிலை தெரிய வரும் என ஸ்டான்லி மருத்துவர்கள் தெரிவித்தாக தகவல் வெளியாகியுள்ளது.
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
Team India: தோனியை ஓரங்கட்ட புது பிளான் செய்த பிசிசிஐ!- இனி தோனி ஆடுவது சந்தேகம்!
தோனி ஓய்வு பெற்றால் நல்லது, இல்லையென்றால் அவரை அணியில் எடுப்பதை தவிர்க்கப்படுவார் என கூறப்படுகிறது.
Team India: தோனியை ஓரங்கட்ட புது பிளான் செய்த பிசிசிஐ!- இனி தோனி ஆடுவது சந்தேகம...
தோனியின் பதில்:
சமூக வலைத்தளங்களில் பதிவிடப்படும் இது போன்ற பதிவுகளைப் பார்த்து தோனி, நான் எப்போது ஓய்வு பெறுவேன் என எனக்கே தெரியவில்லை என பதிலளித்திருந்தார்.
தோனியை கலற்றிவிட முடிவு!
இந்நிலையில் தோனி தானாக ஓய்வு பெற்றால் நல்லது. அப்படி அவர் செய்ய விரும்பவில்லை என்றால் அவரை அணியில் தானாக தேர்வு செய்யப்படுவது தடுக்கப்பட வாய்ப்புள்ளதாக பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக தகவல்கள் கூறுகின்றன.
தோனி இதுவரை இந்திய அணிக்காக நிறைய சிறப்பான விஷயங்களை செய்துள்ளார். பல சாதனைகளைப் படைத்துள்ளார். தோனி இந்திய அணிக்கு செய்தது போதும், அவர் இனி அவர் எந்த சாதனையும் செய்வதற்கு இல்லை என்பதால் அவர் ஓய்வு பெறுவது நல்லது. அவரால் ரிஷப் பண்ட் போன்ற இளம் வீரர்கள் அணியில் இடம்பெறுவதில் சிக்கல் ஏற்படுவதால், விரைவில் பிசிசிஐ தலைவர் எம்.எஸ்.கே பிரசாத் தோனியிடம் இது குறித்து பேசுவார்கள் என தெரிகிறது எனவும் கூறியதாக தெரிகிறது.
உலகக் கோப்பை நேற்று நிறைவு பெற்றது. இதில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. உலகக் கோப்பை தொடரில் தோனி சரியாக பேட்டிங் செய்யவில்லை அதனால் அணிக்கு சில நேரங்களில் தடுமாற்றம் ஏற்பட்டதாக கூறி பலர் தோனி ஓய்வு பெறுங்கள் என சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்தனர்
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
காதல் திருமணம் செய்த பாஜக எம்.எல்.ஏ. மகள், மகளின் கணவரை!!!
உத்திரபிரதேசம், பித்தாரி செயின்பூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் ராஜேஷ் மிஸ்ரா. அவரது மகள் சாக்ஷி மிஸ்ரா அஜிதேஷ் குமார் என்பவரை திருமணம் செய்துகொண்டார். அஜிதேஷ் குமார் பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவர்களது திருமணத்தை பெற்றோர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த திருமணம் நடந்தால்... என கொலை மிரட்டலும் விடுத்திருக்கிறார்.
இதனால் சாக்ஷி மிஸ்ரா சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார். “என்னுடைய திருமணத்திற்கு என் தந்தை ஒத்துக்கொள்ளவில்லை. சில ரவுடிகளை ஏவிவிட்டு எங்களை கொலைசெய்ய திட்டமிட்டுள்ளார். எனவே எங்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உரிய பாதுகாப்பு அளிக்கவேண்டும் என்று கூறிய அவர், எனது உயிருக்கோ, எனது கணவரின் உயிருக்கோ ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் அதற்கு என் தந்தைதான் காரணம். அப்படி ஏதாவது ஒரு சம்பவம் நடந்தால், அவரை நான் சட்டத்திற்கு முன்னால் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுத்தருவேன்.”
இதைத்தொடர்ந்து அலகாபாத் நீதிமன்றத்தில் பாதுகாப்பு அளிக்கும்படி கேட்டு, ஒரு பொதுநல மனுவை சாக்ஷி மற்றும் அவர் கணவர் தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெறவிருந்தது. சாக்ஷியும், அவரது கணவரும் காலை வந்திருந்தனர். 8.30 மணியளவில் நீதிமன்ற வளாகத்தினுள் இருந்த அவர்களை துப்பாக்கி காட்டி மிரட்டிய சிலர், அஜிதேஷை காரில் கடத்தி சென்றனர். நீதிமன்ற வளாக சிசிடிவி காட்சிகளைக்கொண்டு கடத்திய காரின் நம்பரை கண்டறிந்துள்ளனர். இந்த கார் ஆக்ராவைச் சேர்ந்தது என்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
[color=var(--title-color)] லிமிடெட் ஓவருக்கு ரோஹித்... டெஸ்டுக்கு கோலி?' - பி.சி.சி.ஐ கையிலெடுக்கும் அஸ்திரம்[/color]
[color=var(--title-color)]ஒரு புதிய பார்வை தேவை என்பதை நாம் அனைவரும் அறிந்த ஒன்று. ரோஹித் அதற்குத் தகுதியான நபராக இருப்பார்.[/color]
[color=var(--meta-color)]கோலி ( AP )[/color]
[color=var(--content-color)] உலகக்கோப்பையில் அரையிறுதியில் 18 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வி அடைந்தது. தோல்விக்கான காரணங்கள் சூழ்நிலைகள் குறித்து தொடர்ந்து விவாதங்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இதற்கிடையே, தோல்விக்கிடையே இந்தி பத்திரிகையான டைனிக் ஜக்ரான் இந்திய அணியில் பிளவு இருப்பதாக ஓர் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டது. கோலிக்கு ஆதரவாக சிலரும், ரோஹித் ஷர்மாவுக்கு ஆதரவாக சிலர் இருப்பதாகவும் அந்தப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.[/color]
[color=var(--content-color)]
ரோஹித் - கோலி[color=var(--meta-color)]AP[/color]
[/color]
[color=var(--content-color)] ``இந்திய அணியின் கேப்டன் கோலி, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோர் வீரர்களுடன் கலந்தாலோசிக்காமல் எடுக்கும் முடிவுகள் வீரர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. தனது சொல்லைக் கேட்டு விளையாடும் வீரர்களுக்கு மட்டுமே கோலி அணியில் இடம்கொடுக்கின்றனர். தனக்கு சரிப்பட்டு வராதவர்களைக் கழற்றி விடுகின்றனர். உலகக்கோப்பை அணித்தேர்வின்போதுகூட துணைக் கேப்டன் என்ற முறையில் ரோஹித் ஷர்மாவிடம் கலந்தாலோசிக்கப்படவில்லை என்றும், கோலி, ரவிசாஸ்திரி இருவரும் இணக்கமாக செயல்படுகின்றனர். தேர்வுக்குழுத் தலைவர் எம்.எஸ்.பிரசாத் இவர்களுக்கு சாதகமாகவே செயல்படுகிறார்.[/color]
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
[color=var(--content-color)] அவர்களுக்குத் தேவையான வீரர்கள் மட்டுமே அணியில் சேர்க்கப்படுகின்றனர். சாஹல் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாவிட்டாலும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியில் விளையாடுவதால் அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்கப்படுகிறது. பும்ரா, ரோஹித் ஷர்மா இருவரும் ஒரு நாள் தொடரில் இந்திய அணியில் தவிர்க்க முடியாத வீரர்கள், அவர்களைத் தவிர மற்ற வீரர்கள் தேர்வு இப்படியாகத்தான் நடக்கிறது. கோலி, ரவி சாஸ்திரியின் தன்னிச்சையான முடிவுகளே உலகக்கோப்பை தோல்விக்கான காரணம்" என அதில் கூறப்பட்டது. இந்தச் செய்தி இந்திய கிரிக்கெட் அணியில் பூகம்பமாக வெடித்துள்ளது. தற்போது இந்தப் பிரச்னை குறித்து ஆலோசிக்க பி.சி.சி.ஐ முன்வந்துள்ளது.[/color]
[color=var(--content-color)]
கோலி[color=var(--meta-color)]AP[/color]
[/color]
[color=var(--content-color)] ஐ.ஏ.என்.எஸ் தளத்துக்குப் பேட்டியளித்துள்ள பி.சி.சி.ஐ அதிகாரி ஒருவர், ``ரோஹித்துக்கும், கோலிக்கும் இடையே கருத்து வேறுபாடு என வெளியான தகவல் அனைத்தும் வதந்தியே. இந்த மாதிரியான தவறான தகவல்களால் அணிக்கு பாதிப்பு ஏற்படும். இருந்தாலும் இந்த விவகாரத்தில் விவாதம் நடத்த பி.சி.சி.ஐ தயாராக உள்ளது. ரோஹித் ஒருநாள் போட்டிகளுக்கு தலைமை ஏற்க இதுவே சரியான தருணம். கோலிக்கு தற்போது மிகப்பெரிய ஆதரவு இருக்கிறது. இருப்பினும் அடுத்த உலகக்கோப்பைக்கு தயாராக வேண்டிய கட்டாயமும் ஏற்கெனவே உள்ள யோசனைகளுக்கு புதுவடிவம் கொடுக்க வேண்டிய அவசியமும் ஏற்பட்டுள்ளது.[/color]
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
ரவி சாஸ்திரி பதவி நீடிக்குமா? பயிற்சியாளர் பொறுப்புக்கு விண்ணப்பம் கோருகிறது பிசிசிஐ
மும்பை,
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சிக்குழுவான ரவிசாஸ்திரி, சஞ்சய் பாங்கர், பாரத் அருண், ஆர்.ஸ்ரீதர் ஆகியோரது பதவிக்காலம் 45 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் மேற்கு இந்திய தீவுகள் தொடருடன் இவர்களது பதவிக்காலம் முடிகிறது. இவர்கள் அனைவரும் மீண்டும் பயிற்சியாளர், உதவிப்பயிற்சியாளர்களாக மீண்டும் பிசிசிஐ-யிடம் விண்ணப்பிக்க வேண்டும்.
இந்திய அணி உலக கோப்பை அரை இறுதி போட்டியில் படு தோல்வி அடைந்து வெளியேறியதையடுத்து, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மீது விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டு வருகின்றன. இதனால், ரவிசாஸ்திரி பதவிக்காலம் நீடிப்பது கடினம் என்று தெரிகிறது. கடந்த 2017 ஆம் ஆண்டு ரவி சாஸ்திரி இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
தபால் துறை தேர்வு: தமிழில் எழுதலாம்
புதுடில்லி: கடந்த ஞாயிற்றுக்கிழமை( ஜூலை 14) நடந்த தபால்துறை தேர்வு ரத்து செய்யப்படுவதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார். மேலும், இனி வரும் நாட்களில், தமிழ் உட்பட அனைத்து பிராந்திய மொழிகளிலும் தபால் துறை தேர்வு நடத்தப்படும் எனக்கூறியுள்ளார்.
தபால் துறை போட்டி தேர்வுகள், தமிழ் உட்பட, அந்தந்த மாநில மொழிகளில் நடத்தப்பட்டு வந்தன. இனிமேல், ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டும் மட்டுமே நடத்தப்படும் என அறிவித்தது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்தது.
இந்நிலையில், ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே தபால் தேர்வு நடத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த ஐகோர்ட், தேர்வை நடத்த அனுமதி வழங்கியது. ஆனால், தேர்வு முடிவை வெளியிட தடை விதித்தது. இதன்படி, ஞாயிற்றுக்கிழமை (ஜூலை14) தேர்வு நடந்தது
இந்நிலையில், தபால்துறையின் முடிவை கண்டித்து ராஜ்யசபாவில் அதிமுக எம்.பி.,க்கள் அமளியில் ஈடுபட்டனர். அவை ஒத்திவைக்கப்பட்டது.
தொடர்ந்து, ராஜ்யசபாவில் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அளித்த பதிலில், கடந்த 14ம் தேதி நடந்த தபால்துறை தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும், இனிமேல், தமிழ் உள்ளிட்ட அனைத்து பிராந்திய மொழிகளில் தேர்வு நடத்தப்படும் எனக் கூறியுள்ளார்
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
கல்வி கொள்கை பற்றி விமர்சனம்- நடிகர் சூர்யாவுக்கு ஆதரவும், எதிர்ப்பும்
மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை பற்றி விமர்சனம் செய்த நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் பிரபலங்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சூர்யா
[color][size][font]
சிவகுமார் கல்வி அறக்கட்டளை சார்பாக கடந்த சனிக்கிழமை சாலி கிராமத்தில் நடைபெற்ற பரிசு வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சூர்யா மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை அம்சங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார். மேலும் ‘அனைவருக்கும் சமமான கல்வியை வழங்காமல் நீட் போன்ற நுழைவு தேர்வுகள் நடத்துவது ஏன்?’ என்று கேள்வியெழுப்பி நீட் தேர்வையும் விமர்சித்திருந்தார்.
சூர்யாவின் இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தியது. பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா நடிகர் சூர்யா பேசியது வன்முறை தூண்டும் விதமாக உள்ளது என விமர்சித்தார். பா.ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும் சூர்யாவிற்கு பதிலளித்தார்.
[/font][/size][/color]
[color][size][font][size][font]
அதில் ‘அனைவருக்கும் நல்ல கல்வி, அனைவருக்கும் சமமாக கல்வி கொடுப்பதற்காக புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசு கொண்டு வந்திருக்கிறது. ஆனால் தமிழகத்தில் அதையும் எதிர்க்கிறார்கள்’ என்று குறிப்பிட்டு பேசிய அவர், கல்விக் கொள்கையைப் பற்றி தெரியாதவர்களும் பேசுகிறார்கள் என குற்றம் சாட்டினார்.
நெல்லையில் பத்திரிகையாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜு விடம், நடிகர் சூர்யா தெரிவித்த கருத்து தொடர்பாக கேள்வி எழுப்பினார்கள். அதற்கு அவர், ‘கல்விக் கொள்கை குறித்து சூர்யா வுக்கு என்ன தெரியும்? எதை தெரிந்து கொண்டு அவர் இவ்வாறு கூறியுள்ளார். நன்கு தெரிந்துகொண்டு பேசுபவர்களுக்கு பதில் சொல்லலாம். எதையுமே தெரிந்துகொள்ளாமல் அரைவேக்காட்டுதனமாகப் பேசுவோருக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை’ என்று கடுமையாக பதில் அளித்தார்.
பா.ஜனதா, அ.தி.மு.க தலைவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் அதே சமயம் சூர்யாவுக்கு ஆதரவாகவும் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி ‘புதிய கல்விக் கொள்கை வரைவு குறித்து நடிகர் சூர்யா பேசியதை நான் வரவேற்கிறேன்’ என்று தெரிவித்தார்.
[/font][/size][/font][/size][/color]
[color][size][font][size][font]
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும், ’சூர்யா பேசியது அவருடைய அடிப்படை உரிமை. இதில் அரசியல் எல்லாம் நாம் பார்க்கக் கூடாது. நாங்கள் பல ஆண்டுகளாகப் பேசி வந்த கருத்தைத்தான் அவர் சொல்லியிருக்கிறார்.
பெரிய பெரிய நடிகர்களெல்லாம் கருத்து தெரிவிக்க பயந்துகொண்டு இருக்கும்போது சூர்யா பேசுவது குறித்து பெருமையும் மகிழ்ச்சியும்தான் அடைய வேண்டும். மானுட உரிமை யான கல்வியை கொடுக்க வேண்டியது அரசின் கடமை. சூர்யாவின் கேள்வியில் எவ்வளவு நியாயம் இருக்கிறது என நாம் புரிந்துகொள்ள வேண்டும்’ என்று கருத்து தெரிவித்தார்.
சூர்யாவுக்கு நெருக்கமானவர்களிடம் சூர்யா பேசியது குறித்து கேட்டோம். அவர்கள் கூறியதாவது:- ‘சூர்யா எதையுமே பொத்தாம் பொதுவாக விமர்சிப்பவர் அல்ல. தனது அகரம் அறக்கட்டளை மூலம் நிறைய மாணவர்களை படிக்க வைக்கிறார். அரசு பள்ளிகளில் இருந்து உயர் கல்விக்காக வரும் மாணவர் களின் சூழ் நிலையை நன்கு உணர்ந்ததால் தான் இந்த குரலை எழுப்பினார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட ஜோதிகா இதே கேள்வியை எழுப்பினார். இதில் எந்த உள்நோக்கமோ, எதிர்கால நோக்கமோ கிடையாது. முழுக்க முழுக்க கிராமப்புற மாணவர்களின் எதிர்கால நலனுக்காக தான் அவர் பேசினார்’ இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
சூர்யா அரசியலுக்கு வருவாரா? என்று கேட்டதற்கு அவருக்கு அரசியல் ஆசை என்பது சுத்தமாக கிடையாது என்று பதில் அளித்தனர்.[/font][/size][/font][/size][/color]
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
சரவணபவன் ராஜகோபாலுக்கு உயர் சிகிச்சைக்கு அனுமதி: மகனின் பொறுப்பு என்று கூறிவிட்டது நீதிமன்றம்
சென்னை: கவலைக்கிடமான நிலையில் இருக்கும் சரவண பவன் நிறுவனர் ராஜகோபாலுக்கு தனியார் மருத்துவமனையில் உயர் சிகிச்சை அளிக்க அனுமதி வழங்கியிருக்கிறது சென்னை உயர் நீதிமன்றம்.
செயற்கை சுவாசம் பொறுத்தப்பட்டு, கவலைக்கிடமான நிலையில் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ராஜகோபாலுக்கு உயர் சிகிச்சை அளிக்க மருத்துவமனையில் போதிய வசதி இல்லை என்று கூறி, தனியார் மருத்துவமனைக்கு மாற்றக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இது குறித்து ஸ்டான்லி மருத்துவமனை டீன் விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டிருந்தது. இன்று அவர் அளித்த அறிக்கையில், தற்போது ராஜகோபாலன் இருக்கும் உடல்நிலையில் அவரை வேறு மருத்துவமனைக்கு மாற்றுவது சிக்கலானது என ஸ்டான்லி மருத்துவமனை டீன் அறிக்கை தாக்கல் செய்திருந்தார்.
அறிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், கவலைக்கிடமாக உள்ள ராஜகோபாலை வேறு மருத்துவமனைக்கு மாற்றுவது சிக்கலானது என்றாலும், உயர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு மாற்ற அனுமதி வழங்கினார்.
மேலும், போலிஸ் பாதுகாப்பு உள்ளிட்ட நிபந்தனைகளை பின்பற்ற சிறைத் துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வேறு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது, சிகிச்சை செலவு என அனைத்துக்கும் மகன்தான் தான் பொறுப்பு என்றும் கூறிவிட்டனர்.
கொலை வழக்கில் ஆயுள்தண்டனை உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து சரவணபவன் உணவக அதிபர் ராஜகோபால் கடந்த வாரம் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
ஜீவஜோதியின் கணவர் பிரின்ஸ் சாந்தகுமார், மர்ம நபர்களால் கொடைக்கானலுக்கு கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த வேளச்சேரி போலீஸார் சரவணபவன் உணவக அதிபர் ராஜகோபால் உள்ளிட்ட 11 பேர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம், ராஜகோபாலுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.55 லட்சம் அபராதமும் விதித்து கடந்த 2004-ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது. மேலும், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த மற்றவர்களுக்கும் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்திருந்தது. இந்தத் தண்டனையை எதிர்த்து, ராஜகோபால் உள்ளிட்டோர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
ராஜகோபால் உள்ளிட்டோருக்கு தண்டனையை அதிகரிக்கக் கோரி போலீஸார் சார்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுக்களை விசாரித்த உயர்நீதிமன்றம், ஹோட்டல் அதிபர் ராஜகோபால், மேலாளர் டேனியல், கார்மேகம், ஜாகீர் உசேன், காசி விசுவநாதன், பட்டுராஜன் ஆகிய 6 பேருக்கு ஆயுள் தண்டனையும், தமிழ்செல்வன், சேது, முருகானந்தம் ஆகிய 3 பேருக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், பாலு மற்றும் ஜனர்த்தனன் ஆகியோருக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டணையும் விதித்து கடந்த 2009-ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது.
இந்தத் தண்டனையை கடந்த மார்ச் மாதம் உறுதி செய்த உச்சநீதிமன்றம், ஜூலை 8-ஆம் தேதிக்குள் ராஜகோபால் உள்ளிட்ட 11 பேரும் சென்னை அமர்வு நீதிமன்றத்தில் சரண் அடைய வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, ஹோட்டல் அதிபர் ராஜகோபால் மற்றும் ஜனார்த்தனன் தவிர 9 பேர் சென்னை 4-ஆவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் திங்கள்கிழமை (ஜூலை 8) சரணடைந்தனர்.
மேலும், உடல்நலனைக் கருத்தில் கொண்டு நீதிமன்றத்தில் சரண் அடைய கால அவகாசம் கோரி ராஜகோபால் மற்றும் ஜனார்த்தனன் தாக்கல் செய்த மனுக்களை, தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. இதனையடுத்து வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த ராஜகோபால், அண்ணாநகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த ஜனார்த்தனன் ஆகியோர் சென்னை 4-ஆவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி தானேந்திரன் முன் ஆஜராகி சரண் அடைந்தனர். அவர்களது பெயர் உள்ளிட்ட விவரங்களைக் கேட்ட நீதிபதி, இருவரையும் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து, ஸ்டான்லி மருத்துவமனையில் உள்ள சிறைத்துறை வார்டில் இருவரும் அனுமதிக்கப்பட்டனர்.
ஆம்புலன்ஸ் மூலம்.......: நீதிமன்றத்தில் சரண் அடைய சரவணபவன் அதிபர் ராஜகோபால், பணியாளர் ஜனார்த்தனன் ஆகியோர் தனித்தனி ஆம்புலன்ஸ் மூலம் நீதிமன்றத்துக்கு வந்து சரண் அடைந்தது குறிப்பிடத்தக்கது.
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
ஓவர் த்ரோ சர்ச்சை: நடுவர்கள் முடிவுக்கு ஐசிசி தந்த பதில்!
சூப்பர் ஓவர் டை ஆனது. அதனால் அதிக பவுண்டரி அடிப்படையில் இங்கிலாந்து உலகக் கோப்பையை வென்றது.© AFP
இங்கிலாந்து உலகக் கோப்பை இறுதிப்போட்டியை வென்றதிலிருந்து ஓவர் த்ரோ சர்ச்சை பெரிதாகி வருகிறது. பலரும் இது குறித்து ஐசிசியிடம் கேள்வி எழுப்பி வந்தனர். ஒரு ரன் கூடுதலாக வழங்கப்பட்ட சர்ச்சை பெரிதானதற்கு ஐசிசியின் விளக்கத்தை அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில், நடுவர்களின் முடிவுக்கு ஐசிசி பதிலளித்துள்ளது. நடுவர்கள் முடிவில் எந்த கருத்தையும் தெரிவிப்பது கொள்கைக்கு எதிரானது என்று கூறியுள்ளது.
ஐசிசியின் செய்தி தொடர்பாளர் "கள நடுவர்களின் முடிவில் தலையிட முடியாது. அவர்கள் ஐசிசியின் விதிமுறைகள் படியே தனது முடிவை அறிவிக்கிறார்கள்.அவர்கள் முடிவில் எந்த கருத்தையும் கூறக்கூடாது என்பதே கொள்கை முடிவு" என்று கூறினார்.
முன்னாள் நடுவர் டஃபெல் கூறும்போது, "இது நடுவர்களின் தவறு. பந்து த்ரோ செய்யப்படும் போது பேட்ச்மேன் க்ரீஸை க்ராஸ் செய்யப்படவில்லை என்றால் அவர்களுக்கு ஒரு ரன் தான் வழங்கப்பட வேண்டும்" என்று கூறியிருந்தார்.
"அப்படிப்பார்த்தால் 5 ரன்கள் தான் வழங்கியிருக்க வேண்டும் ஆறு ரன்கள் வழங்கியிருக்கக்கூடாது" என்றார். அதேபோல அதில் ரஷித் பந்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும், நியூசிலாந்தின் வெற்றி தவறான அம்பரியரிங்கால் பறிபோயுள்ளது என்று கூறியுள்ளார்.
5 முறை சிறந்த நடுவருக்கான ஐசிசி விருது வென்ற டஃபெல் இந்த கருத்தை கூறியிருந்தது விவாதங்களை எழுப்பியது. டஃபெல் ஐசிசியின் 19.8ம் விதியை குறிப்பிட்டு இந்த கேள்வியை எழுப்பியுள்ளார்.
"ஃபீல்டர் பந்தை எரியும் போது பேட்ஸ் மேன் க்ரீஸை அடையவில்லை என்றால் அந்த ரன் கணக்கில் எடுத்துக்கொள்ள்படக்கூடாது என்று கூறி இங்கிலாந்துக்கு அந்த பந்தில் 5 ரன்கள்தான் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் ஆறு ரன்கள் வழங்கப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளார்,.
போட்டி டை ஆன நிலையில், சூப்பர் ஓவர் வழங்கப்பட்டு அதுவும் டை ஆனது.அதனால் அதிக பவுண்டரி அடிப்படையில் இங்கிலாந்து உலகக் கோப்பையை வென்றது
first 5 lakhs viewed thread tamil
•
|