Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
பார்டர்-கவாஸ்கர் கோப்பையை தக்க வைத்தது இந்தியா: மெல்போர்னில் 150-வது டெஸ்ட் வெற்றி: பும்ரா சாதனை
[Image: 1virajpg]
வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்து ஓடி வந்த கேப்டன் விராட் கோலி

மெல்போர்னில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பாக்ஸிங்டே டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 137 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று பார்டர்-கவாஸ்கர் டிராபியை தக்கவைத்துள்ளது.

இதன் மூலம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-1 என்று இந்திய அணி முன்னிலை வகிக்கிறது. கடந்த 40 ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரில் 2 டெஸ்ட் வெற்றிகளை இந்திய அணி முதல்முறையாகப் பெற்றுள்ளது. கடந்த 1980-81-ம் ஆண்டில் கவாஸ்கர் தலைமையிலான இந்திய அணி இதே மெல்போர்ன் மைதானத்தில் கிரேக் சாப்பல் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியை வென்றது. ஏறக்குறைய 37 ஆண்டுகளுக்குப் பின் 2 வெற்றிகளை ஆஸி. மண்ணில் இந்தியா பெற்றுள்ளது.

கடந்த 2017-ம் ஆண்டு பார்டர் கவாஸ்கர் கோப்பை இந்தியாவில் நடந்த போது அதை இந்திய அணி கைப்பற்றி இருந்ததால், இந்த தொடர் சமன் அடைந்தாலும், அந்த கோப்பை இந்திய அணி வசமே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மழை குறுக்கிட்டு ஏறக்குறைய உணவு இடைவேளை வரை போட்டி தொடங்காததால், போட்டி சமனில் முடிந்து இந்திய அணியின் வெற்றியை மழை தடுத்துவிடுமோ என்று கவலை நீங்கியது.
உணவு இடைவேளைக்குப்பின் மழை நின்றதால், மீண்டும் ஆட்டம் தொடங்கியது. 5 ஓவர்களில் ஆஸ்திரேலியாவின் மீதமிருந்த 2 விக்கெட்டுகளையும் இசாந்த், பும்ரா வீழ்த்தி வெற்றிக்கு வித்திட்டனர்.
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
[Image: INDIAKBjpg]வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்து ஓடி வரும் இந்திய வீரர்கள் : படம் உதவி ட்விட்டர்
 
மெல்போர்ன் டெஸ்ட் போட்டி மட்டுமன்று, கடந்த 3 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர்களின் செயல்பாடு சிறப்பாக இருந்துள்ளது. குறிப்பாக பும்ரா, இசாந்த் சர்மா, ஷமி ஆகியோரின் பந்துவீச்சு மிகப் பிரமாதமாக இருந்தது.
மெல்போர்ன் டெஸ்டில் இந்திய அணிக்குக் கிடைத்த வெற்றி மறக்க முடியாததாகும். ஏனென்றால் இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்போட்டி விளையாடத் தொடங்கிய பின் பெறும் 150-வது வெற்றி இதுவாகும். அதிலும், இந்த வெற்றி ஆஸ்திரேலியாவுக்கு எதிராகக் கிடைத்திருப்பது மிகச் சிறப்பாகும்.
அதுமட்டுமல்லாமல், இந்தப் போட்டியில் குறிப்பிடத்தக்க சில சாதனைகளையும் இந்திய வீரர்கள் செய்துள்ளனர். அறிமுக ஆண்டிலேயே அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்திய சர்வதேச அளவில் முதல் வீரர், இந்திய அளவில் முதல் வீர்ர் எனும் பெருமையை பும்ரா பெற்றார்.
Like Reply
[Image: bhumjpg]வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் பும்ரா, ஷமி
 
வெளிநாடுகளில் அதிகமான டெஸ்ட் போட்டிகளில் வெற்றியைப் பெற்றுக்கொடுத்த கங்குலியின் 11 வெற்றி சாதனையை கோலி சமன் செய்துள்ளார். ஒரு டெஸ்ட் தொடரில் அதிகமான கேட்சுகளைப் பிடித்த முதல் இந்திய வீரர் எனும் பெருமையை ரிஷப்பந்த் 20 கேட்சுகளுடன் முதலிடத்தில் உள்ளார்.
இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 443 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது. ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 151 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இந்திய அணி 2-வது இன்னிங்ஸில் 8 விக்கெட் இழப்புக்கு 106 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் டிக்ளேர் செய்தது. இதைத்தொடர்ந்து 399 ரன்கள் ஆஸ்திரேலிய அணிக்கு இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமலும், இமாலய இலக்கு என்பதாலும் கடும் நெருக்கடியுடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி நேற்று விக்கெட்டுகளை மள மளவென பறிகொடுத்தது. ஆனால், கம்மின்ஸ், லயான் நிலைத்து ஆடி இந்திய அணியின் பொறுமையை சோதித்தனர்.
4-ம் நாளான நேற்றைய ஆட்டநேர முடிவில், ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் இழப்புக்கு 258 ரன்கள் சேர்த்திருந்தது. கம்மின்ஸ் 61 ரன்னிலும், லயன் 6 ரன்னிலும் களத்தில் இருந்தனர்.
கடைசி நாளான இன்று மெல்போர்னில் காலை முதல் இடைவெளி விட்டு மழை பெய்ததால், ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஆனது. ரசிகர்கள் ஒருபுறம் வந்து ஆட்டத்தின் முடிவை அறிய குழுமி இருந்தனர்.
ஏறக்குறை உணவு இடைவேளைக்குப் பின் மழை நின்று மைதானத்தின் ஈரம் குறையத் தொடங்கியது. இதையடுத்து, ஆட்டத்தை தொடர நடுவர்கள் முடிவு செய்தனர்.
இதையடுத்து, கம்மின்ஸ், லயன் களமிறங்கினார்கள். பும்ரா, இசாந்த் சர்மா வீசிய 3 ஓவர்களிலும் விக்கெட் ஏதும் விழவில்லை. பும்ரா வீசிய 4-வது ஓவரில் கம்மின்ஸின் பேட்டின் முனையில் பட்டு புஜாராவின் கைகளில் பந்து தஞ்சமடைந்தது. கம்மின்ஸ் 63 ரன்களில் நடையைக்கட்டினார்
Like Reply
[Image: inijpg]
 
அடுத்து ஓவரை இசாந்த் சர்மா வீசினார். 3-வது பந்தை எதிர்கொண்ட லயன் 7 ரன்கள் சேர்த்த நிலையில், ரிஷப்பந்திடம் கேட்ச் கொடுத்து வெளியே இந்தியாவின் 150-வது டெஸ்ட் வெற்றி உறுதியானது.
ஆஸ்திரேலிய அணி 2-வது இன்னிங்ஸில் 89.3 ஓவர்களில் 261 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 137 ரன்களில் தோல்வி அடைந்தது.
இந்தியத் தரப்பில் பும்ரா இரு இன்னிங்ஸிலும் சேர்த்து 9 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஆட்டநாயகன் விருதையும் பும்ரா பெற்றா
Like Reply
கைப்பை, தேநீர் குவளை உள்ளிட்ட 14 பொருட்களை பயன்படுத்த அனுமதி இல்லை பிளாஸ்டிக் தடை நாளை முதல் அமல் தடையை மீறினால் அபராதம்; தமிழக அரசு அறிவிப்பு

[Image: 201812310401506298_Plastic-bans-tomorrow...SECVPF.gif]

சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து, 2019 புத்தாண்டு தினமான நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் தமிழகத்தில் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்படுகிறது.


இதற்கான அறிவிப்பை, உலக சுற்றுச்சூழல் தினமான கடந்த ஜூன் மாதம் 5-ந் தேதி சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.அப்போது அவர் பேசுகையில், “ஜனவரி 1-ந் தேதி முதல் பால், தயிர், எண்ணெய், மருத்துவ பொருட்கள் உறைகள் தவிர, தடிமன் வேறுபாடின்றி மக்காத பிளாஸ்டிக் பொருட்களான பிளாஸ்டிக் தாள், பிளாஸ்டிக் தட்டு, பிளாஸ்டிக் தேநீர் குவளை, பிளாஸ்டிக் தண்ணீர் குவளை, பிளாஸ்டிக் தண்ணீர் பாக்கெட், பிளாஸ் டிக் உறிஞ்சி குழல், பிளாஸ்டிக் கைப்பை, பிளாஸ்டிக் கொடி உள்பட 14 பொருட்களுக்கு தடை விதிக்கப்படுவதாக” அறிவித்தார். இதற்கான அரசாணை ஜூலை 16-ந் தேதி வெளியிடப்பட்டது.


அந்த அரசாணையில், “பால் மற்றும் பால் பொருட் களை பேக் செய்ய பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள், தோட்டக்கலை மற்றும் வனத்துறை மூலம் மரங்கள் வளர்ப்பதற்கு அரசு உத்தரவின் அடிப்படையில் பிளாஸ்டிக்கை பயன்படுத்தலாம். சிறப்பு பொருளாதார மண்டலத்தில் தயாரித்து ஏற்றுமதி செய்யப்படும் பிளாஸ்டிக் பொருட்கள், உற்பத்தி நிறுவனத்தில் ‘பேக்’ செய்ய பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் மற்றும் மக்கும் பிளாஸ்டிக் ஆகியவற்றுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
Like Reply
பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவு புத்தாண்டு தினமான நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் அமலுக்கு வர இருக்கிறது. எனவே இனி கடைகளில் பொருட்களை பிளாஸ்டிக் பைகளில் போட்டு தரமாட்டார்கள். பொதுமக்களே வீட்டில் இருந்து மறக்காமல் துணிப்பைகளை கையில் எடுத்து செல்ல வேண்டிய நிலை உருவாகி உள்ளது.

அரசின் இந்த முயற்சிக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டியது கடமை ஆகும். பொதுமக்களும் தாங்களாகவே முன்வந்து பிளாஸ் டிக் பைகளையும், குறிப்பிட்ட பிளாஸ்டிக் பொருட்களையும் தவிர்க்கும்போது, கடைக்காரர்களும் அவற்றை வாங்கி வைக்க மாட்டார்கள். தேவை குறையும்போது பிளாஸ்டிக் உற்பத்தி நிறுவனங்களும் அதை தயாரிப்பதை குறைத்துக்கொள்ளும். இதுபோன்ற நிலையால், பிளாஸ்டிக் இல்லா தமிழ்நாட்டை விரைவில் உருவாக்க முடியும்.

அரசின் தடை உத்தரவை மீறி, கடைக்காரர்கள் பிளாஸ் டிக் பை உள்ளிட்ட 14 வகையான பிளாஸ்டிக் பொருட் களை விற்பனை செய்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து இருக்கிறது. தடை செய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்களை வாங்கும் பொதுமக்கள் மீதும் இந்த நடவடிக்கை பாயும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என்பதை கண்காணிக்க, தமிழகம் முழுவதும் 10 ஆயிரம் குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த குழுவினர் மண்டல மற்றும் வார்டு வாரியாக சோதனையில் ஈடுபட்டு நடவடிக்கை எடுப்பார்கள். முதற்கட்டமாக, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட் களை விற்பனை செய்வோர் மற்றும் பயன்படுத்துவோரிடம் இருந்து அதிக அளவில் அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

மேற்கொண்டு என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்து, மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் இன்று (திங்கட்கிழமை) நடைபெறும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட இருக்கிறது. அதன் பிறகே தண்டனை விவரங்கள் தெரியவரும்.

இது தொடர்பாக, பிளாஸ் டிக் ஒழிப்பு பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள மண்டல ஒருங்கிணையாளர்களில் ஒருவரான மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ராஜேந்திர ரத்னு ‘தினத்தந்தி’ நிருபரிடம் கூறியதாவது:-

அரசு அறிவித்துள்ளபடி, தமிழகத்தில் 1-ந் தேதி (நாளை) முதல் பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கை தீவிரமாக்கப்பட இருக்கிறது. தடுக்கப்பட வேண்டிய பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா? என்பதை கண்காணிக்க மாநகராட்சிகளில் மண்டல வாரியாகவும், நகராட்சி மற்றும் பஞ்சாயத்துகளிலும் தனித்தனி குழுக்கள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. அதிகபட்சமாக ஒரு பகுதிக்கு 4 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த குழுவினர் 1-ந் தேதி முதல் தீவிர ஆய்வு மற்றும் சோதனைகளில் ஈடுபடுவார்கள்.

இந்த ஆய்வின்போது அரசு அறிவித்த மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால் வரையறுக்கப்படாத பிளாஸ்டிக் பொருட்களை பதுக்கி வைத்திருந்தாலோ, வியாபாரம் செய்தாலோ அல்லது அதில் உணவு பொருட்களை கட்டித்தருவது தெரிந்தாலோ அவர்களை இந்த குழுவினர் உடனடியாக மாவட்ட கலெக்டர் முன்னிலையில் ஆஜர்படுத்துவார்கள். ஆஜர்படுத்தப்படும் நபர்கள் வியாபாரிகளாகவோ, தொழிலாளர்களாகவோ, மக்களாகவோ யாராக இருந்தாலும் அரசின் உத்தரவை மீறியதற்காக அதிகபட்ச அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

பெருநகர சென்னை மாநகராட்சியை பொறுத்தவரை, தடை செய்யப்பட்டுள்ள 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களை பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் யாரேனும் வைத்திருந்தால், தாங்கள் வசிக்கும் பகுதிக்கு உட்பட்ட வார்டு அலுவலகங்களில் ஒப்படைக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இன்று (திங்கட் கிழமை) மாலை வரை இந்த பொருட்களை எடுத்துச் சென்று வழங்கவும் கால அவகாசம் வழங்கப்பட்டு இருக்கிறது.
Like Reply
தமிழ்நாட்டில் நாளை முதல் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், பால், தயிர், எண்ணெய், மருத்துவப் பொருட்கள் அடைக்கப்பட்ட பிளாஸ்டிக்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், குழந்தைகளுக்கான நொறுக்குத் தீனிகள் அடைக்கப்பட்ட பிளாஸ்டிக் பைகள் தடை செய்யப்பட்ட பொருட்கள் பட்டியலில் இடம்பெற இல்லை. இதற்கு, பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு இந்தியா முழுவதும் 2022-ம் ஆண்டு முதல் தடை விதிக்கப்பட இருக்கிறது. அதற்கு முன்னோட்டமாக தமிழகத்தில், 2019-ம் ஆண்டு தொடக்கம் (நாளை) முதலே தடை விதிக்கப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்டுள்ள 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக பயன்படுத்தும் பொருட்களையும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

அரசின் அதிரடி நடவடிக்கையை பொறுத்து, பிளாஸ்டிக் பயன்பாடு குறையும் என்றாலும், மக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் அது வெற்றி பெறாது. கடைக்காரர்கள் பிளாஸ்டிக் பையில் போட்டு கொடுக்கிறார்களே என்று பொதுமக்கள் வாங்கி வந்தால், பிளாஸ்டிக் பை என்றைக்கும் ஒழியாது. அதே நேரத்தில், எதிர்கால சந்ததியின் நலனை கருத்தில் கொண்டு, பொதுமக்களே பிளாஸ்டிக் பைகளை வெறுத்து ஒதுக்கி துணிப் பைகளுக்கு மாறினால், மண்ணை மலடாக்கும் பிளாஸ்டிக் என்ணும் அரக்கனை மண்ணை விட்டு ஒழிப்பது நிச்சயம் சாத்தியமாகும். எந்தவொரு பொருளும் விற்பனையானால் தான், அதன் உற்பத்தியும் இருக்கும். விற்பனை இல்லாதபோது உற்பத்தி குறைந்து அது தானாகவே முடங்கிவிடும்.
Like Reply
கிரிக்கெட்
2019-ல் இந்திய கிரிக்கெட் அணி விளையாடவுள்ள தொடர்கள்: முழு விவரம்


[Image: 201901011225565321_The-Indian-cricket-te...SECVPF.gif]
Like Reply
உலகக் கோப்பை போட்டிக்கு பிறகு டெஸ்ட் தொடர்கள் ஆரம்பிக்கவுள்ளன. மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 2 டெஸ்டுகளுடன் இந்திய அணியின் தொடர்கள் ஆரம்பிக்கவுள்ளன.

2018 முதல் 2023 வரை இந்திய அணி 51 டெஸ்டுகள், 83 ஒருநாள், 69 டி20 ஆட்டங்களில் விளையாடவுள்ளது. அதன்படி இந்த வருடம் இந்திய அணி 8 டெஸ்டுகளும் 19 ஒருநாள் மற்றும் 11  இருபது ஓவர் போட்டிகளிலும்  கலந்து கொள்கிறது. இதுதவிர இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலகக் கோப்பைப் போட்டியில் குறைந்தபட்சம் 9 ஆட்டங்களில் விளையாடவுள்ளதால் இந்த வருடம் இந்திய அணி குறைந்தபட்சம் 28 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்கிறது. கடந்த வருடத்தை விடவும் அதிக எண்ணிக்கை இது.

இந்த வருட ஐசிசி எஃப்டிபி-யின்படி, மார்ச் மாதம் ஜிம்பாப்வேவுக்கு எதிராக ஒரு டெஸ்ட், 3 ஒருநாள் ஆட்டங்களில் இந்திய அணி விளையாட வேண்டும். ஆனால் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு மார்ச் மாதமே ஐபிஎல் போட்டி தொடங்கவுள்ளதால் ஜிம்பாப்வேவுக்கு எதிரான இந்தத் தொடர்கள் நடைபெறாது என்றே தெரிகிறது.  இந்தியாவுக்கு வரும் ஆஸ்திரேலியா தனது கடைசி ஆட்டமாக மார்ச் 13 அன்று 20  ஓவர் போட்டியில்  பங்கேற்கிறது. இதன்பிறகு ஐபிஎல் தொடங்கவுள்ளது.


டெஸ்டுகள் - 8
ஒருநாள் - 28 (குறைந்தபட்சம்)
20 ஓவர் போட்டி - 11

2019-ல் இந்திய அணி பங்கேற்கும் தொடர்கள்:

இந்தியாவில் நடைபெறவுள்ள தொடர்கள்:

5 ஒருநாள் vs ஆஸ்திரேலியா
2 டி20 vs ஆஸ்திரேலியா
3 டெஸ்டுகள் vs தென் ஆப்பிரிக்கா
2 டெஸ்டுகள் vs வங்கதேசம்
3 டி20 vs வங்கதேசம்
3 ஒருநாள் vs மே.இ.
3 டி20 vs மே.இ.

வெளிநாடுகளில் இந்திய அணி பங்கேற்கும் தொடர்கள்:

1 டெஸ்ட் vs ஆஸ்திரேலியா
3 ஒருநாள் vs ஆஸ்திரேலியா
5 ஒருநாள் vs நியூஸிலாந்து
3 டி20 vs நியூஸிலாந்து
2 டெஸ்டுகள் vs மே.இ.
3 ஒருநாள் vs மே.இ.
3 டி20 vs மே.இ.
Like Reply
இலங்கை, வங்க தேசம் தகுதியிழந்தன: 2020, டி20 உலகக் கோப்பையில் நேரடி பங்கேற்பு இல்லை
[Image: icct20jpg]
2020-ம் ஆண்டு நடைபெறும் டி20 உலகக்கோப்பை போட்டியில் சூப்பர் 12 சுற்றில் நேரடியாகப் பங்குபெறும் தகுதியை முன்னாள் சாம்பியன் இலங்கையும், வங்கதேச அணியும் இழந்துவிட்டன என்று ஐசிசி இன்று அறிவித்துள்ளது.

இந்த இரு அணிகளும் தகுதிச்சுற்றுகளில் விளையாடி, உலகக்கோப்பை போட்டியில் பங்கேற்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.
Like Reply
ஐசிசி விதிமுறைப்படி, டி20 தர வரிசையில் முதல் 8 இடங்களில் இருக்கும் அணிகள் மட்டுமே நேரடியாகப் போட்டியில் பங்கேற்க முடியும். அந்த வகையில் பாகிஸ்தான், இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள், ஆப்கானிஸ்தான் அணிகள் மட்டுமே நேரடியாகப் பங்கேற்கின்றன. இலங்கையும், வங்கேதசமும் 9 மற்றும் 10 இடங்களில் இருப்பதால் அந்த அணிகள் நேரடியாகப் பங்கேற்கும் தகுதியை இழந்துவிட்டன.

2014-ம் ஆண்டு டி20 உலகக்கோப்பை சாம்பியன், 3 முறை இறுதிப்போட்டிவரை முன்னேறிய பெருமை கொண்டது இலங்கை அணி. ஆனால், இந்த முறை ஆப்கானிஸ்தான் அணி கூட நேரடியாகத் தகுதி பெற்றுவிட்டநிலையில், இலங்கை பங்கேற்க முடியாமல் போனது அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கக்கூடியதாகும்
[Image: t2020jpg]
Like Reply
2020 டி20 உலகக்கோப்பை போட்டியில் தகுதி பெறுவதற்கான தகுதிச்சுற்றுப் போட்டிகள் இந்த ஆண்டு அக்டோபர் 18-ம் தேதி முதல் நவம்பர் 15-ம் தேதி நடைபெறுகிறது. அதில் விளையாடி முதல் இரு இடங்களைப் பெறும் அணிகள் உலகக்கோப்பை போட்டிக்கு தகுதி பெறும். அதில் இலங்கையும், வங்கதேசமும், மற்ற கற்றுக்குட்டி அணிகளோடு பங்கேற்க வேண்டும்.

இலங்கை அணி தகுதிச்சுற்று மூலமே உலகக்கோப்பையில் பங்கேற்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது குறித்து அந்த அணியின் கேப்டன் ரசித் மலிங்கா வேதனை தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், “ இந்த முடிவு எங்களுக்கு வேதனை அளிக்கிறது. எங்களால் சூப்பர் 12 பிரிவில் நேரடியாகத் தகுதி பெறமுடியாவிட்டாலும் கூட உலகக்கோப்பையில் சிறப்பாகச் செயல்படுவோம் என்று நம்புகிறேன்.

ஒவ்வொரு அணியும் ஆண்டின் கடைசியில் முதல் 8 இடங்களில் இடம் பெறுவது அவசியம் என்று எண்ணுவது இயல்புதான். குரூப் பிரிவில் எங்களுக்கு மற்ற நாடுகளுடன் விளையாடுவதற்குக் கூடுதலாக வாய்ப்பு கிடைக்கும்” எனத் தெரிவித்தார்.

வங்கதேச கேப்டன் ஷகிப் அல் ஹசன் கூறுகையில், “ சமீபகாலமாக எங்கள் செயல்பட்டுவரும் விதம் எங்களுக்கு ஊக்கம் அளிக்கிறது. இந்த சவாலில் நாங்கள் சிறப்பாகச் செயல்பட்டு வெல்வோம். ஏன் நேரடியாகத் தகுதிபெற இயலவில்லை எனத் தெரியவில்லை. இன்னும் காலம் இருக்கிறது, நாங்கள் சிறப்பாகச் செயல்படுவோம் “ எனத் தெரிவித்தார்.
Like Reply
சபரிமலையில் இரு இளம்பெண்கள் போலீஸ் பாதுகாப்புடன் அதிகாலையில் ஐயப்பனை தரிசித்தனர்
[Image: sabarimalajpegjpgjpg]
சபரிமலையில் இன்று அதிகாலையில் 40 வயதுகளில் உள்ள இரு இளம்பெண்கள் போலீஸார் பாதுகாப்புடன் சென்று ஐயப்பனைத் தரிசனம் செய்து திரும்பினர்.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயதுப் பெண்களும் சாமி தரிசனம் செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால், இந்தத் தீர்ப்புக்கு இந்து அமைப்புகள், பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால், சபரிமலையில் அசம்பாவித சம்பவங்கள் நடப்பதைத் தடுக்கும் வகையில் 144 தடை உத்தரவு போடப்பட்டு, போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த மாதம் திருநங்கைகள் 4 பேர் சபரிமலைக்குச் சென்று சாமி தரிசனம் செய்ய முயன்றபோது போலீஸாரால் தடுக்கப்பட்டனர். அதன்பின் மறுநாள் உயர் நீதிமன்ற குழுவினர் முறையிட்டதையடுத்து, பலத்த பாதுகாப்புடன் திருநங்கைகள் 4 பேரும் சாமி தரிசனம் செய்தனர்.
இதைத் தொடர்ந்து, சென்னையைச் சேர்ந்த 'மனிதி' எனும் பெண்கள் நல அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் செல்வி தலைமையில் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் 11 பேர் சபரிமலைக்கு நேற்று சென்றனர். ஆனால் பக்தர்களின் கடும் எதிர்ப்பால் அவர்கள் திரும்பினார்கள்.
Like Reply
இந்நிலையில், 21 நாள் மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை பலத்த பாதுகாப்புக்கு இடையே கடந்த 30-ம் தேதி மாலை நடை திறக்கப்பட்டது. கோயிலில் மகர விளக்கு பூஜை வரும் ஜனவரி 14-ம் தேதி நடைபெறவுள்ளது. ஜனவரி 20-ம் தேதி கோயில் நடை சாத்தப்படுகிறது.

இதனிடையே, சபரிமலையில் அமல்படுத்தப்பட்டிருக்கும் தடை உத்தரவை ஜனவரி 5-ம் தேதி வரை கேரள அரசு நீட்டித்துள்ளது.

இந்த சூழலில் இன்று அதிகாலை 3.45 மணி அளவில் கோழிக்கோடு கோயிலாண்டி பகுதியைச் சேர்ந்த பிந்து, மலப்புரம் அங்காடிபுரத்தைச் சேர்ந்த கனகதுர்கா ஆகிய இரு பெண்கள் இன்று அதிகாலை சபரிமலைக்கு போலீஸ் பாதுகாப்புடன் சென்று ஐயப்பனைத் தரிசனம் செய்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

இவர்கள் இருவரும் ஏற்கெனவே கடந்த மாதம் 24-ம் தேதி சபரிமலையில் ஐயப்பனை தரிசிக்க போலீஸ் பாதுகாப்புடன் சென்றனர். ஆனால், பிந்து, கனகதுர்காவுக்கு 40 வயதே ஆனதால் பக்தர்களின் கடும் எதிர்ப்பால் இருவரும் கீழே இறக்கப்பட்டனர்.
இந்நிலையில் தற்போது சபரிமலை சென்றுவந்தது குறித்துப் பிந்து தனியார் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “ நாங்கள் 2-வது முறையாக சபரிமலைக்கு வந்துள்ளோம். ஆனால், இந்த முறை ஐயப்பனை தரிசனம் செய்துவிட்டுத் திரும்பி இருக்கிறோம். நாங்கள் தரிசனம் செய்ய போலீஸார் உதவினார்கள். அதிகாலை 1.30 மணிக்கு பம்பைக்கு வந்தோம், அதன்பின் அங்கிருந்து எங்களை போலீஸார் சபரிமலைக்கு அழைத்துச் சென்றனர்.

சபரிமலையில் அனைத்துப் பக்தர்களும் செல்லும் 18 படிகள் வழியாகச் செல்லாமல், பின்புறம் உள்ள, விஐபிக்கள் செல்லும் பகுதி வழியாக அதிகாலை 3.30 மணிக்குச் சென்றோம். நாங்கள் செல்லும் போது அதிகமான எதிர்ப்பு ஏதும் இல்லை. குறைவான அளவுள்ள பக்தர்களே சரண கோஷம் போட்டு எங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். ஆனால், நாங்கள் பாதுகாப்புடன் ஐயப்பனைத் தரிசனம் செய்தி திரும்பினோம்” எனத் தெரிவித்தார்.
Like Reply
ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.1000 வழங்கப்படும்! - பொங்கல் பரிசு அறிவித்த ஆளுநர்
[Image: WhatsApp_Image_2019-01-02_at_10.32.34_11364.jpeg]
ஆளுநர் உரையில், திருவாரூர் மாவட்டம் தவிர மற்ற மாவட்டங்களில் பொங்கலைக் கொண்டாட ஒரு குடும்பத்துக்கு ரூ.1000 வழங்கப்படும். திருவாரூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ளதால், அந்த மாவட்டத்தில் உள்ள தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு உட்பட்டு, திருவாரூர் மாவட்டம் தவிர மற்ற மாவட்டங்களிலுள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் பொங்கல் விழாவை சிறப்பாகக் கொண்டாட 1,000  ரூபாய் வழங்கப்படவுள்ளது. ஸ்டெர்லைட் விவகாரத்தில் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு மேல்முறையீடு செய்யும்'' என்றார்.
Like Reply
ஜீரோ டிகிரியைத் தொட்டது... உறைந்தது கொடைக்கானல்!
மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானல் தற்போது காஷ்மீரைப்போல காட்சியளிக்கிறது. இப்போது நீங்கள் கொடைக்கானலுக்குப் போனால் புது வெள்ளை மழை இங்குப் பொழிகின்றது என பாடத் தொடங்கிவிடுவீர்கள். அந்தளவுக்குப் பனிப் பொழிவு இருக்கிறது.

[Image: IMG-20190102-WA0096_16086.jpg]
வழக்கமாக டிசம்பர் மாதத்தில் பனிப்பொழிவு இருக்கும். கடந்த ஆண்டு இதே நாளில் 7 டிகிரி வரை வெப்பநிலை குறைந்தது. ஆனால், தற்போது ஜீரோவைத் தொட்டிருக்கிறது. 


[Image: IMG-20190102-WA0087_16110.jpg]
 அப்சர்வேட்டரி பகுதியில் இன்று ஜீரோ டிகிரி பதிவாகியுள்ளது. இன்று இரவு மைனஸ் டிகிரிக்கு செல்ல வாய்ப்பிருக்கிறது. புல்வெளிகள்  வெண்மையாகப் பனி படர்ந்து உறைந்து கிடக்கின்றன. கடுமையான குளிர் காரணமாகச் சுற்றுலாப் பயணிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இந்தச் சூழலை மிகவும் ரசிக்கின்றனர். மதியம் 2 மணி வரை வெயில் அடிக்கிறது. அதற்குப் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கும் குளிர் நள்ளிரவில் எலும்புகளை ஊடுருவத் தொடங்கிவிடுகிறது. 
Like Reply
[Image: IMG-20190102-WA0089_16001.jpg] 
இது தொடர்பாகப் பேசிய கொடைக்கானல் வாய்ஸ் அமைப்பைச் சேர்ந்த மைக்கேல், ``கடுமையான பனிப்பொழிவு காரணமாகப் பயிர்கள் ரொம்ப பாதிக்கப்படுது. இந்தக் குளிர் தாங்காமல் இலை எல்லாம் கருக ஆரம்பிச்சிருக்கு. இதே நிலை நீடித்தால் விவசாயம் மிகப்பெரிய இழப்பைச் சந்திக்கும்.
[Image: IMG-20190102-WA0090_16524.jpg]
இப்பவே குளிர் தாங்க முடியல. பாத்திரங்கள்ல பிடிச்சு வெளியில வெச்சா தண்ணி உறைஞ்சுடுது. செடிகள்ல பனிக்கட்டியா நிக்குது. இன்னும் மைனஸ் டிகிரி போச்சுன்னா ரொம்ப கஷ்டம் ஆயிடும். ஜனவரி பாதி வரைக்கும் குளிர் கடுமையாக இருக்கும்" என்றார்.
[Image: IMG-20190102-WA0088_16438.jpg] 
கொடைக்கானலைச் சேர்ந்த சமூக ஆர்வலர் வீரா, ``போன வருஷம் சரியா மழையில்லை. அதனால பனியும் பெருசா இல்ல. ஆனா, இந்த வருஷம் நல்ல மழை கிடைச்சிருக்கு. அதனால இப்போ பனியும் ஆரம்பிச்சிருக்கு. கிட்டத்தட்ட 15 வருஷத்துக்கு முன்ன இதேபோல சூழ்நிலை இருந்துச்சு.
[Image: IMG-20190102-WA0097_16517.jpg] 
இந்த வருஷம் குளிர் ரொம்ப அதிகமா இருக்கு. 5 மணிக்கு மேல வெளியே போக முடியல. நெருப்பைவிட்டு மூன்றடிகூட தள்ளி இருக்க முடியல. இன்னும் போகப் போக குளிர் கடுமையாகும். இதே நிலைமை நீடித்தால் இன்னும் ஓரிரு நாளில் மைனஸ் டிகிரி போனாலும் போய்விடும்" என்றார்
காஷ்மீர், சிம்லா, டார்ஜிலிங் போன்ற இடங்களுக்குச் சென்று உறை பனியை ரசிக்க விரும்பும் சுற்றுலாப் பயணிகள் தாராளமாகக் கொடைக்கானலுக்குச் சென்று வரலாம்.
Like Reply
கேன்சர் எனக்குக் கிடைத்த பரிசு’ - மனிஷா கொய்ராலா உருக்கம்
தான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து மீண்டு வந்த கடுமையான நினைவுகள்குறித்து, தன் சுய சரிதைப் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார், நடிகை மனிஷா கொய்ராலா.
[Image: manisha_3_12017.jpg]
மனிஷா கொய்ராலா, 1990-களில் தமிழ், இந்தித் திரையுலகைக் கலக்கியவர்.  வினு வினோத் சோப்ரா இயக்கத்தில் வெளியான `1942 லவ் ஸ்டோரி' இந்திப் படம் அடையாளம் கொடுத்தது. மணிரத்னத்தின் `பம்பாய்’, சங்கரின் `இந்தியன்’ படங்கள் மனிஷாவுக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தன. நிறைய இந்திப் படங்களில் நடித்தார்.  பாலிவுட்டின் முன்னணி கதாநாயகியாக வலம்வந்த மனிஷா, சில வருடங்களுக்கு முன்பு  கர்ப்பப்பை புற்று நோயால் பாதிக்கப்பட்டார். அதன் பின், முழு நம்பிக்கையுடன் புற்றுநோயுடன் போராடி மீண்டு வந்துள்ளார். 
Like Reply
[Image: manisha_12181.jpg]
தான் கேன்சரால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்ததை, எப்படி கேன்சர் எனக்கு புது வாழ்க்கையை அளித்தது?’  என்பதை,  ‘ Healed’  என்ற சுய சரிதைப் புத்தகமாக எழுதியுள்ளார். அதில், ‘ கேன்சர் என் வாழ்வில் நிறைய தைரியங்களைக் கொடுத்துள்ளது. என்னுடைய மோசமான வாழ்க்கை முறையால் எளிதில் நோயால் பாதிக்கப்பட்டேன். நான் பல இருட்டான நாள்களையும், தனியான இரவுகளையும் கடந்திருக்கிறேன். அதிலிருந்து எப்படி மீண்டு வந்தேன் என்பதை நினைத்துப்பார்க்கும்போது, எனக்கே மிகவும் ஆச்சர்யமாக உள்ளது. 
Like Reply
[Image: manisha_2_12444.jpg]
என் காலடியில்தான் உலகமே இருப்பதாகக் கருதினேன். இடைவிடாத தொடர் படப்பிடிப்புகளால் 1999-ம் ஆண்டு உடல் அளவிலும் மனத்தளவிலும் அதிகம் பாதிக்கப்பட்டேன். அதிலிருந்து மீள்வதற்கு மது மட்டுமே எனக்கு சிறந்த வழியாக இருந்தது. என் நண்பர்கள் நிறைய அறிவுரை கூறியும் நான் அதைக் கேட்கவில்லை. கேன்சர் என் வாழ்வில் ஒரு பரிசாக வந்ததாகவே நான் நினைக்கிறேன். என் சிந்தனை கூர்மையானது, என் மனம் தெளிவானது, என் கண்ணோட்டம் மாறியது.  முன்பெல்லாம் அதிகம் கோபமாக, பதற்றமாகவே இருப்பேன். ஆனால் அதிலிருந்து மீண்டு, தற்போது முற்றிலும் அமைதியாக உள்ளேன்” என்று அந்தப் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். 
Like Reply




Users browsing this thread: 160 Guest(s)