Romance மெய்நிகர் பூவே
#61
bala mostly will be busy, give update once or twice in a month.
like all, me too waiting to know what happened
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#62
கல்யாணம் முடிந்து பந்தி நடைபெற்று கொண்டிருக்க மணமக்கள் இருவரையும் சந்தித்து வந்திருந்தவர்கள் அனைவரும் வாழ்த்தி விட்டு சென்று கொண்டிருந்தனர்.

 
லட்சுமி மதிய உணவிற்காக கார்த்திக்கும் ராஜியும் சாப்பிட அழைத்தாள். கார்த்திக் ராஜியுடன் அருகில் அமர வைக்கப்பட பாலா அவர்களுக்கு உணவு பரிமாறி கொண்டிருந்தான்.
 
முதலில் இனிப்பு வைக்கப்பட காலையில் இருந்து கொலை பசியில் இருந்த கார்த்திக் அதை எடுத்து சாப்பிட அவன் சாப்பிடுவதை தலை குனிந்து வெட்கத்துடன் பார்த்தாள் ராஜி.
 
தனது இலையில் இருந்த லட்டு ஐ எடுத்து தலை குனிந்தவாறே கார்த்திக் இலையில் எடுத்து வைத்தாள்.
 
கார்த்திக் அதை பார்த்தவன் சிரித்து கொண்டே வேண்டாமா என்பது போல பார்க்க ராஜி வேண்டாம் என்று வெட்கத்துடன் தலையை அசைத்தாள்.
 
கார்த்திக் சிரித்து கொண்டே ஒரே வாயில் போட்டு கொண்டான்.
 
சாப்பாடு இலையில் வைத்து மற்ற கறிகள் வைக்கப்பட பாலா கார்த்திக்கை பார்த்து மாப்ள உன் பொண்டாட்டிக்கு ஊட்டி விடுடா என்றான்.
 
கார்த்திக் : ச்சீ போடா.
 
பாலா : டேய் வெட்கபடாத. சும்மா ஊட்டி விடு மாப்ள. என்ன தங்கச்சி என் மாப்ள கொடுத்தா சாப்ட மாட்டியா என்ன.
 
ராஜி தலையை குனிந்து வெட்கப்பட கார்த்திக் சோறு எடுத்து அவளுக்கு ஊட்டி விட்டான்.
 
பாலா : என்ன தங்கச்சி என் மாப்ள மட்டும் தான் ஊட்டி விடணுமா. நீ ஊட்டி விட மாட்டியா.
 
கார்த்திக் : டேய் சும்மாவே இருக்க மாட்டியா. சாப்பிட விடுடா அவளை
 
பாலா : பாருடா. பொண்டாட்டி மேல அக்கறையை.
 
ராஜி அதற்கும் வெட்கத்தை பரிசாக தர சாதத்தை எடுத்து கார்த்திக்கிற்கு ஊட்டி விட்டாள்.
 
இப்படியாக கேலியும் கிண்டலுமாக இரவு வரை சென்றது.
 
 
 
இந்த இரவுதான் போகுதே போகுதே
இழுத்துக்கட்ட கயிறு கொண்டுவா நண்பனே நண்பனே
இங்கே தான் சொர்க்கம் நரகம் இரண்டும் உள்ளதே ..
ஆந்தை போலதான் இரவிலே இரவிலே
கண்ணிரண்டை திறந்துவைக்கலாம் நண்பனே நண்பனே
இங்கேதான் இன்ப துன்பம் ரெண்டும் உள்ளதே
என்றென்றும் பகலிலே ஏதேதோ வழியிலே
பொல்லாத ஞாபகத்தை துரத்தி துரத்தி
கொன்றுப்போடு இரவிலே
பொய்யான வாழ்விலே மெய்யான இன்பம் இந்த போதையாலே
என்றென்றும் மனதிலே ஏதேதோ கனவிலே
பொல்லாத ஆசியாவும் துரத்தி துரத்தி
கொன்றுப்போடு இரவிலே
பொய்யாக வாழும் வாழ்க்கை மேலே
மெய்யான இன்பம் இந்த போதையாலே

இரவு கார்த்திக்கின் ரூமில் பாடலை போட்டு கொண்டு பாடி கொண்டே படுக்கை மற்றும் ரூமை அலங்கரித்து கொண்டிருந்தான் பாலா.
 
ஹாலில் இருந்த போனை நோண்டி கொண்டிருந்த கார்த்திக்கை ரூமுக்கு போடா. உன் பொண்டாட்டியை அனுப்பி வைப்பாங்க என்று லட்சுமி சொல்ல கார்த்திக் இதற்கு தான காத்திருந்தேன் இவ்ளோ நேரம் என்று நினைத்து கொண்டே தன்னுடைய ரூமை நோக்கி வேகமாக சென்றான்.
 
அவனது போக்கு லக்ஷ்மிக்கு சந்தோசமாக இருந்தது. என்ன இது நேத்து வரைக்கும் கல்யாணமே வேண்டாம்னு சொன்னவன் இப்ப முதல் இரவுக்கு இப்படி ஓடுறான். அப்போ இவ்ளோ நாள் கல்யாணம் வேண்டாம்னு சும்மாதான் நடிச்சிருக்கான் போல.
 
இந்த இரவுதான் போகுதே போகுதே
இழுத்துக்கட்ட கயிறு கொண்டுவா நண்பனே நண்பனே
இங்கே தான் சொர்க்கம் நரகம் இரண்டும் உள்ளதே ..
ஆந்தை போலதான் இரவிலே இரவிலே
கண்ணிரண்டை திறந்துவைக்கலாம் நண்பனே நண்பனே
இங்கேதான் இன்ப துன்பம் ரெண்டும் உள்ளதே. நண்பனே இடுப்பை ஆட்டி ஆட்டி ரோஜா பூவை மெத்தையில் தூவிகொண்டிருந்தான் பாலா.

கதவை திறந்த கார்த்திக் பாட்டு பாடி கொண்டே மலர் தூவி கொண்டிருந்த பாலாவை பார்த்தான்.

பாலா : நண்பா வா வா. உனக்காக இந்த தேவா பன்னிருக்குற ஏற்பாடை பாரு சூர்யா. எடுத்துக்கோ எல்லாம் உனக்கு தான்.என்ஜாய்

கார்த்திக் : டேய் முதல்ல அந்த பாட்டை ஆப் பண்ணுடா

ரிமோட்டை எடுத்து சவுண்ட் சிஸ்டத்தில் பாட்டை ஆப் செய்தான் பாலா.

கார்த்திக் : என்னடா இதெல்லாம். முதல்ல இதெல்லாம் அப்படியே நிறுத்திட்டு வெளிய கிளம்பு. கிளம்பு கிளம்பு.

பாலா : மாப்ள என்னடா அவசரம். இன்னும் கொஞ்சம் ரோஜா பூ. அப்படியே அந்த மெத்தை மேல. ம்ம்ம்ம்ம்ம்

கார்த்திக் : டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

பாலா : சரி சரி கோவப்படாத. புரியுது. உன் அவசரம் புரியுது. சரி நான் போய் உனக்கு பாதாம் பிஸ்தா எல்லாம் போட்டு கம கம ன்னு பால் போட சொல்லி தங்கச்சி கிட்ட கொடுத்து விட சொல்றேன்.

கார்த்திக் : டேய் கடுப்பேத்தாம போய்டு. நானே செம டென்சன்ல இருக்கேன். மரியாதையா ஓடிடு.

பாலா : ஏன்டா டென்சன். இந்த மாதிரி விஷயத்துக்கு எல்லாம் டென்சன் ஆகவே கூடாது. உனக்கு எதாச்சும் டவுட்டுன்னா என்கிட்ட கேளுடா.

கார்த்திக் : மயிறு மூடிட்டு போடா.

அவன் தோள்களை பிடித்து தள்ளி கொண்டே கதவருகில் சென்றான் கார்த்திக்.

பாலா : மாப்ள மாப்ள ஒரு நிமிஷம் டா. சொல்றதை கேளுடா.

கார்த்திக் : ஒரு மண்ணும் கேட்க வேண்டாம் மூடிட்டு கிளம்பு. சொல்லி கொண்டே அவனை வெளியே தள்ளி கதவை தாளிட்டான் கார்த்திக்.

நேராக சென்று பெட்டில் அமர்ந்தான் கார்த்திக்.அவன் அமர்ந்த இடத்தில ரிமோட் இருந்ததால் சவுண்ட் ஆன் ஆகி மறுபடியும் இந்த இரவு தான் என்று கூவ இது வேற என்று ரிமோட்டை எடுத்து ஆப் செய்தான்.

நேற்று கலட்டி போட்ட பேன்ட் பாக்கெட்டில் இருந்து சிகரட்டை எடுத்து தம் ஒன்றை பற்ற வைத்து ஆழமாக உள்ளிழுத்தான்.

ச்ச ஒரு நாள். ஒரு நாள் ல என் வாழக்கை எப்படியோ போய் இப்போ முதல் இரவுல வந்து நிக்குது.அவ மட்டும் என் வாழ்க்கைல வராம இருந்திருந்தா இந்நேரம் சந்தோஷமா இருந்திருப்பேன். இப்படி சனியன் மாதிரி குறுக்க வந்து ஸ்பீட் ப்ரேக் போட்டுட்டா.நான் என்னோட முடிவுல தெளிவா இருக்கேன். அவ கிட்ட இருந்து தள்ளியே இருக்குறது தான் நல்லது. ஒரு நிமிஷம் மன மேடைல அந்த கோலத்துல அவ முகத்தை பார்த்ததுக்கே இப்படி ஸ்லிப் ஆகிட்டேன். இனி வாழ்க்கை முழுதும் அவளோட எப்படி இருக்க போற கார்த்தி.

வேண்டாம். சென்னைக்கு போனதும் முதல்ல அவளை அந்த மீரா கிட்ட விட்டுட்டு தான் ரூமுக்கே போகணும். அவளை நம்ம கூட தங்க வைக்க கூடாது. அதுக்கு முன்னாடி அவகிட்ட எல்லாம் தெளிவா இப்போ பேசிடனும். அதே சமயத்துல அவகிட்ட உன் கேத்தையும் விட்டு கொடுத்துட கூடாது கார்த்திக். சிந்தித்து கொண்டே தம்மை இழுத்தான். அந்நேரம் கதவு தட்டப்பட்டு திறக்க பட எளிமையான அலங்காரத்துடன் தலையை குனிந்தவாறே அவனை நோக்கி வந்து கொண்டிருந்தாள்.

கார்த்திக் அவளை சட்டை செய்யாமல் தம்மை இழுத்து கொண்டிருக்க ராஜி அவன் அருகில் சென்று முகம் முழுதும் நாணத்துடன் அவனருகில் சென்றாள்.

சிகரெட் வாடை பிடிக்காமல் அவள் இரும தம்மை கீழே போட்டு அணைத்து விட்டு அவளை நோக்கி நிமிர்ந்தான்.

கார்த்திக் : உட்காரு

ராஜி எதுவும் பேசாமல் தலையை மட்டும் ஆட்ட சற்று தள்ளி அமர்ந்து  பரவா இல்ல உக்காரு என்றான் கார்த்திக்.

ராஜி கட்டிலின் விளிம்பில் அமர்ந்து கொண்டாள்.

கார்த்திக் : அப்பரம். நினைச்சதுலா நடந்துட்டு இப்போ ஹாப்பி தான.

ராஜி : என்ன சொல்றீங்க. புரியல

கார்த்திக் : இல்ல என்ன கல்யாணம் பண்ணுவன்னு என்கிட்ட அன்னைக்கு ஹாஸ்பிடல்ல வச்சி சொன்ன. நீ சொன்ன மாதிரியே எல்லாம் முடிஞ்சிடுச்சு. இப்போ சந்தோசம் தான உனக்கு.

ராஜி : ரொம்ப சந்தோசமா இருக்கு. அப்போ என் மேல உங்களுக்கு லவ் இல்ல.ஆனா இப்போ என்ன நீங்க லவ் பண்றீங்க. இப்போதான் நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன். Feeling blessed னு சொல்லுவாங்கல்ல. அதை இப்போ  நான் உணருறேன்.

கார்த்திக் : நான் உன்னை லவ் பண்றேன்னு உனக்கு யாரு சொனனா. இப்போவும் நான் உன்ன லவ் பன்னல.
ராஜி : என்ன என்ன சொல்றீங்க. நீங்க பொய்தான சொல்றீங்க. அதிர்ச்சி மீளாமல் கேட்டாள்.

கார்த்திக் :  நான் இப்போவும் சொல்றேன். நான் உன்னை லவ் பண்ணல. நான் உன்கிட்ட எப்பவாச்சும் உங்கிட்ட சொல்லிருக்கேனா. உன்ன நான் லவ் பண்றேன்னு.

ராஜிக்கு இது அதிர்ச்சியாக இருந்தது. காலைல அவ்ளோ தூரம் சந்தோசமா இருந்தான்.சாப்பிடும் போது கூட ஊட்டி விட்டான். மணவறைக்கு வரும் போது வச்ச வச்ச கண் வாங்காம பார்த்தான். இப்போ இப்படி சொல்றான்.

ராஜி : இல்ல நீங்க போய் சொல்றீங்க. ப்ளீஸ் கார்த்திக் விளையாடாதீங்க. மணவறைக்கு நான் வரும் போது என்ன நீங்க வச்ச வச்ச கண் வாங்காம பார்த்தீங்க. காலைல இருந்து இப்போ வரைக்கும் நீங்க ரொம்ப சந்தோசமா இருந்தீங்க.ஏன் சாப்பிடும் போது கூட எனக்கு ஊட்டி விட்டீங்க,உங்க முகத்துல கொஞ்சம் கூட இறுக்கம் தெரியல.

கார்த்திக் : அதெல்லாம் சும்மா நடிச்சேன். நான் சந்தோசமா இல்லாத மாதிரி இருந்தா எங்க அம்மா என்ன எதுன்னு கேட்பாங்க. இதுவே அவுங்க கட்டாயபடுத்த போய் தான் நான் ஒத்துகிட்டேன். உன்கிட்ட நேத்து கூட சொன்னேன். நீ கேக்கல. சோ என்னோட தப்பு எதுவும் இல்ல.

ராஜி பேசாமல் மெளனமாக இருந்தாள். தன்னுடைய சந்தோசதிற்க்கான காலம் ஒரு நாள் எனும் போது அவளால் மேற்கொண்டு எதுவும் சொல்ல முடியவில்லை.

கார்த்திக் : சரி அதை விடு. எனக்கு இந்த மேரேஜ் சுத்தமா பிடிக்கல. சோ என்கூட நீ இருக்கணும்னு நினைக்காத. எப்போ வேணும்னாலும் நீ போய்க்கலாம். நான் ஒன்னும் சொல்ல மாட்டேன். நமக்குள்ள கல்யாணம் நடந்த விஷயம் சென்னைல யாருக்கும் தெரிய கூடாது. வழக்கம் போல நீ உன் ரூம்க்கு போய்டு. நான் என்னோட ரூம்க்கு போய்டுறேன். ஆபிஸ்ல எப்போதும் போல நான் உனக்கு பாஸ். நீ எனக்கு கீழ வேலை பாக்குற. அப்படியே மெயின்டைன் பண்ணிக்கோ. புரிஞ்சுதா.

ராஜி : கார்த்திக் நிஜமாவே நீங்க மாறலையா அப்போ. இன்னைக்கு முழுநாளும் சந்தோஷமா இருந்த மாதிரி நடிக்க தான் செஞ்சீங்களா.

கார்த்திக் : எத்தனை தடவை சொல்றது ஆமா ஆமா ஆமா.

ராஜி : சரி. உங்க முடிவை நீங்க சொல்லிட்டீங்க. என்னோட முடிவை நான் சொல்லிடுறேன். நீங்க எப்படி காலம் பூரா தனியா இருக்கணும்னு நினைக்கிறீங்களோ அதே மாதிரி நானும் உங்களை விட்டு பிரிய கூடாது, உங்க கூடவே வாழ்க்கை முழுதும் இருக்கணும்னு நினைக்கிறேன். கண்டிப்பா நீங்க முழு மனசோடு என்கிட்ட நீங்க வருவீங்கன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு. அது வரைக்கும் நான் காத்திருப்பேன். ராஜி என்னோட பொண்டாட்டின்னு நீங்களா சொல்ற வரைக்கும் நான் சென்னைல யார்கிட்டையும் இந்த விஷயத்தை சொல்ல மாட்டேன்

கார்த்திக் : குட். நான் எதிர்பார்த்ததை விட நீ ஸ்பீடா தான் இருக்க. ரொம்ப உன்கிட்ட விளக்கம் கொடுக்க வேண்டியது இல்லை. நமக்குள்ள ரிலேஷன்ஷிப்னு ஒன்னு இல்லாத வரைக்கும் நாம நல்ல பிரெண்ட்ஸா இருக்க முயற்சி பண்ணுவோம். முடிஞ்சா. இல்லனா விலகியே இருப்போம்.
ராஜி : ஆல்ரெடி நமக்குள்ள இன்னைல இருந்து ரிலேஷன்ஷிப் ஆரம்பிச்சுடுச்சு. சோ இனி அடுத்த கட்டத்துக்கு தான் போகும்.

கார்த்திக் : என்ன சொல்ற

ராஜி : ஒன்னும் இல்ல. ட்ரை பண்றேன். ஆனா அப்ப்போ உங்க பொண்டாட்டி ராஜி எட்டி பார்த்தா என்ன பண்ண. ஏன்னா எனக்கும் உணர்ச்சிகள் இருக்கும்ல. உங்க அளவுக்குள்ளா என்னால நடிக்க முடியாது.
கார்த்திக் எதுவும் பேசாமல் மெளனமாக சிரித்தான்.

ராஜி : சிரிக்காதீங்க.சும்மா சொல்ல கூடாது ரொம்ப நல்லாவே நடிச்சீங்க. நான் கூட உண்மைன்னு நம்பிட்டேன் தெரியுமா. ஏன் னு காரணம் தெரிஞ்சிக்கலாமா.

கார்த்திக் : ஒரு கதை படிச்சேன். ரொம்ப மொக்கையான கதை. ஹீரோ பேரு கார்த்திக். ஹீரோயின் பேரு ராஜி. நம்ம கதை மாதிரி தான். ஒரு சின்ன வித்தியாசம். அங்க ஹீரோ ஹீரோயினை லவ் பண்ணுவான். அவ இவனை லவ் பண்ண மாட்டா.வேற ஒருத்தனை லவ் பண்ணிருப்பா.அது தெரிஞ்சும் அந்த மடையன் அவளை லவ் பண்ணி கல்யாணம் பண்ணிருப்பான். கேக்கவே காமெடியா இல்ல. ஒரு வழியா ரெண்டு பேருக்கும் சண்டை எல்லாம் முடிஞ்சு கடைசில  சேருவாங்க. கிளைமாக்ஸ்ல அந்த பொண்ணு பிறந்த நாளுக்கு என்ன கிப்ட் வேணும்னு கேட்பான்.அதுக்கு அவ ரெண்டு பேரோட கல்யாண நாள் திரும்ப வந்தா நல்லா இருக்கும்னு சொல்லுவானள். இவனும் அதுக்கு சர்ப்ரைசா அவள கூட்டிட்டு போய் சர்ச்ல வச்சி மோதிரம் மாத்தி மறுபடியும் கல்யாணம் பண்ணுவான்.

ராஜி : அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்.

கார்த்திக் : சொல்றேன். அவள் ஏன் அந்த கல்யாண நாள் திரும்ப வந்தா நல்லா இருக்கும்னு சொன்னானு கேட்டா அன்னைக்கு அவள் பிடிக்காம மூஞ்சிய வருத்தமா வச்சிருந்தான்னு சொல்லுவா. அந்த கல்யாண ஆல்பம் பார்க்கும் போது எல்லாம் அவளுக்கு கஷ்டமா இருந்துச்சாம்.அதான் அவ கேட்டலாம். அதே மாதிரி நீயும் ஒரு நாள் வந்து கேட்டுட்டன்னா. நமக்கு ஒரு கல்யாணமே பிடிக்கல. இதுல திரும்பவும் பண்ணனுமா. அதான் போட்டோக்கு போஸ் கொடுக்க மூஞ்ச சந்தோசமா சிரிச்ச முகமா வச்சிருந்தேன்.

ராஜி : ம்ம்மம்மம்ம்ம்ம். சூப்பர். சிரித்தாள்

கார்த்திக் : ஏன் சிரிக்குற.

ராஜி : அப்போ நீங்களும் அதே மாதிரி என்ன லவ் பண்ணிடுவீங்களோன்னு நினைச்சேன் சிரிச்சேன்.

கார்த்திக் : உன் பேச்சே சரி இல்லையே. வேற எதாச்சும் ஐடியா பண்றியா.

ராஜி : இப்போ வரைக்கும் இல்ல. இனி நீங்க சொன்னதுக்கு அப்றம் தான் யோசிக்கணும்.

கார்த்திக் : ஏய். அவ்ளோதான் உனக்கு. பேசாம படுத்து தூங்கு. குட் நைட்.

ராஜி : படுத்து தூங்குனா. எங்க படுக்க. கொஞ்சம் தள்ளி படுங்க.

கார்த்திக் : ஏய் என்ன ஓவரா போற. இந்தா பெட்ஷீட் பில்லோ. தரைல படு. எனக்கு தரைல படுத்தா தூக்கம் வராது.

ராஜி : ஹெலோ எங்களுக்கும் தரைல படுத்தா தூக்கம் வராது. எனக்கு உங்க கூட பக்கத்துல பெட்ல படுக்க கூச்சம் இல்ல. உங்களுக்கு இருந்தா நீங்க தரைல படுங்க.

கார்த்திக் : அடிங்க. இது என்னோட ரூம். இங்க நான் சொல்றதை தான் நீ கேக்கணும்.

ராஜி : சார். எப்போ என் கழுத்துல நீங்க தாலி கட்டினின்களோ அப்போவே உங்களோட எல்லாத்துலையும் எனக்கு சரி பாதி பங்கு இருக்கு. நான் நீங்க சொன்னதுக்கு எல்லாம் ஒத்துகிட்டேன். கேக்கலைன்னா நான் அத்தைய கூப்பிடுறேன் நீங்களே சொல்லிடுங்க. அவுங்க என்ன சொல்றாங்களோ அதை நான் கேட்டுகிடுறேன். அத்தை அத்தை.

கார்த்திக் : ஏய்ய்ய்ய்ய்ய். ஷ்ஷ்ஷ்ஷஷ் கத்தாத. படுத்து தொலை. நான் கீழ படுத்துகிடுறேன்.

ராஜி : ம்ம்ம்ம் அது. தேங்க்ஸ்.

கார்த்திக் : மொதல்ல இந்த கண்ராவி எல்லாம் அவுத்து போட்டு படு. வாசமே குமட்டிட்டு வருது. கட்டிலை சுற்றி தொங்க விடப்பட்டு இருந்த பூமாலைகளை சொன்னான் கார்த்திக்.

ராஜி சிரித்து கொண்டே தனது புடவை முந்தியில் குத்தி இருந்த பின்னை கலட்டி விட்டு முந்தியை தோள்களில் இருந்து எடுத்து கொண்டிருந்தாள்.

கார்த்திக் : ஏய் ச்சீ. என்ன பண்ற. வேறு பக்கமாக திரும்பி கொண்டான்.

ராஜி : நீங்க தான சொன்னீங்க. எல்லாத்தையும் அவுத்து போடுன்னு.அதான் நான் ஸ்பீடா புரிஞ்சிகிட்டேன். இருந்தாலும் நீங்க ரொம்ப மோசம். எவ்ளோ நடிச்சாலும் இந்த விஷயத்துல கரெக்டா இருக்கீங்க.

கார்த்திக் : ஏய் அறிவு இல்ல உனக்கு. நான் சொன்னது இந்த மாலை எல்லாத்தையும். முதல்ல சேலையை எடுத்து போடு.

ராஜி : ஒரு நிமிஷம். ம்ம்ம்ம் போட்டுட்டேன்.

கார்த்திக் : உன்கிட்ட என்ன சொன்னாலும் தெளிவாதான் சொல்லனுமா. இனி இந்த மாதிரி எல்லாம் என்கிட்ட பண்ணாத. அதையும் இதையுமா காட்டி என்ன மயக்கனும்னு மட்டும் ட்ரை பண்ணாத.

ராஜி : எதையும் எதையும் ங்க. அப்பாவியாக கேட்டாள்.

கார்த்திக் : உன்கிட்டல்லா பேசவே முடியாது என்னமோ பண்ணு எனக்கு தூக்கம் வருது. நான் தூங்க போறேன்.
சொல்லிவிட்டு கார்த்திக் பெட்ஷீட்டை விரித்து அதில் படுத்து கொண்டான்.

ராஜிக்கு இப்போது புது விதமான தைரியம் வந்தது. கரைப்பார் கரைத்தால் கல்லே தேயும் போது இவன் மனசை கரைக்க முடியாதா. கார்த்திக் செல்லகுட்டி எங்கடா போய்ட போற நீ. இவ்ளோ தூரம் உன் ரூம் வரைக்கும் வந்த நான் உன் மனசுக்குள்ள வர்ரதுக்கு இன்னும் கொஞ்ச நாள் தாண்டா இருக்கு. தூங்குறதை பாரு. குழந்தை மாதிரி. லவ் யூ டா கோவக்காரா. மனதிற்குள் சொல்லிக்கொண்டே அவனை பார்த்தாள். அப்படியே உறங்கியும் போனாள்.
Like Reply
#63
Wowww super update.

Keeping regular updates
Like Reply
#64
Wow super bro
Vry interesting
Like Reply
#65
Super bro continue
[Image: 7f3eac9b49640ff18c05914fa2810247.png]
Like Reply
#66
அருமையான பதிவு
Like Reply
#67
Karthik making fun of "okay kanmani " story is super.
Like Reply
#68
ஏன்டா டென்சன். இந்த மாதிரி விஷயத்துக்கு எல்லாம் டென்சன் ஆகவே கூடாது. உனக்கு எதாச்சும் டவுட்டுன்னா என்கிட்ட கேளுடா.

bala nega kuda intha visayathula romba tha sharp polaa... doubt la clear panniduviga pola.... apa bala oru all in all allagurajavaaa

உன் பேச்சே சரி இல்லையே. வேற எதாச்சும் ஐடியா பண்றியா.

yanku teriju ethuku apurem tha namma hero sammaiya adivaga poren i mean kadhalaa....

சார். எப்போ என் கழுத்துல நீங்க தாலி கட்டினின்களோ அப்போவே உங்களோட எல்லாத்துலையும் எனக்கு சரி பாதி பங்கு இருக்கு

sama ... apa pathi kartick yna tha pannaporanoo ... eni raji tha around performance

லவ் யூ டா கோவக்காரா

wow super duper awesome dialogue narrated in spot of story..

keep rocking bro .......
Like Reply
#69
bala one humble request. ugga kitta old updates irutha athaiyum post pannuga bala please.. thirumbavum starting la erutha padikanum pola eruku bala
Like Reply
#70
Frds enkita indha storyoda full back up illa. lasta oru frd kita ketrunthen. avaru konjam anupirukanga. Mudinja varai adhai nan inga post panren
Like Reply
#71
நல்லா இருக்கு நண்பா.
Like Reply
#72
(17-07-2019, 11:42 PM)xossipyenjoy Wrote: - -web/20170719180245/http://www.xossip.com/showthread.php?t=1480793
only six pages showing.. Kindly fix the remaining pages
Like Reply
#73
Bro story post pannuga bro still waiting many Fan's pls
Like Reply
#74
wait pannuga dude..
Like Reply
#75
Unga update kaga wait pannurom bro
Congratulations for good story
Like Reply
#76
Good night dudes
Like Reply
#77
what happen dude
Like Reply
#78
Update bro plz
Like Reply
#79
what happen bala bro
Like Reply
#80
Ipdi iruka neega story post pannamyae iruthu irukalam ...Ipdi evlo per wait pannama iruthuirupaga la
Like Reply




Users browsing this thread: 14 Guest(s)