Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
டாஸ் வென்றது பாகிஸ்தான் : பங்களாதேஷ் முதலில் பந்துவீச்சு

[Image: 66942.jpg]
பங்களாதேஷ் அணிக்கு எதிரான உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணி டாஸ் வென்றுள்ளது.
உலகக் கோப்பை தொடரின் 43வது லீக் போட்டி இன்று பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகள் இடையே நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளது. இதனால் பங்களாதேஷ் அணி முதலில் பந்துவீசுகிறது. புள்ளிகள் பட்டியலை பொறுத்தவரையில் 8 போட்டிகளில் 4 போட்டிகளை வென்று 9 புள்ளிகளுடன் பாகிஸ்தான் 5வது இடத்தில் உள்ளது. பங்களாதேஷ் 8 போட்டிகளில் 3 போட்டிகளை வென்று 7 புள்ளிகளுடன் 5ஆம் இடத்தில் உள்ளது
இன்றைய போட்டியில் பங்களாதேஷை வீழ்த்தினால் பாகிஸ்தான் 11 புள்ளிகள் பெறும். ஆனாலும் 4ஆம் இடத்தில் இருக்கும் நியூஸிலாந்து அணி 11 புள்ளிகளுடன் +0.175 ரன் ரேட்டில் உள்ளது. பாகிஸ்தான் -0.792 ரன் ரேட்டில் உள்ளது. இதனால் இன்றைய போட்டியில் பாகிஸ்தான் அணி 400 ரன்கள் அடித்து, பின்னர் பங்களாதேஷை 316 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் அரையிறுதியில் நுழையும் வாய்ப்பு கிடைக்கும். இதனால் இன்றைய போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றாலும், அரையிறுதிக்குள் நுழைவதற்கான சாத்தியக்கூறுகள் மிகக் குறைவாகும்.
first 5 lakhs viewed thread tamil
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
[color=var(--title-color)]``நல்ல நடிகனாக வருவதே என் நோக்கம்!'' 5 ஆண்டுகளுக்கு முன் உதயநிதி சொன்னதும் வாரிசு அரசியலும்![/color]

[color=var(--title-color)]உதயநிதி ஸ்டாலினின் நோக்கம் கடந்த ஐந்தாண்டுகளில் மாறியிருப்பது, மிகப்பெரும் விமர்சனத்திற்கு உட்பட்டது இல்லை. ஆனால், `குடும்ப அரசியல் செய்கிறார்கள்' என ஏற்கெனவே தி.மு.கவின் மீது இருக்கும் முத்திரை மீண்டும் வலுப்பெறும் ஒரு சம்பவமாகத்தான் இதைப் பார்க்க முடிகிறது.[/color]
[Image: vikatan%2F2019-07%2F0880f932-6705-4cb5-9...2Ccompress][color=var(--meta-color)]உதயநிதி[/color]
Quote:``எனக்கு அரசியலில் எப்போதும் ஈடுபாடு இருந்தது கிடையாது. சொல்லப்போனால் எனக்கு அரசியலே வேண்டாம். தமிழ் சினிமாவில் ஒரு நல்ல நடிகனாக வரவேண்டும் என்பதே என்னுடைய நோக்கம்!"
[color=var(--content-color)]
உதயநிதி ஸ்டாலின்
[/color]
[color=var(--content-color)][Image: vikatan%2F2019-07%2F413f1ce8-721f-4a57-9...2Ccompress]உதயநிதி[/color]
[color=var(--content-color)]ஐந்து வருடங்களுக்கு முன்பு `நண்பேன்டா' படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது உதயநிதி ஸ்டாலின் அளித்த பேட்டியில் சொன்ன கருத்து இது. கலைத்துறைக்கே தன்னை அர்ப்பணித்துக் கொள்ளும் குணத்துடன் அன்று பேசிய உதயநிதி, தற்போது தி.மு.க இளைஞரணிச் செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.[/color]
[color=var(--content-color)]உதயநிதி ஸ்டாலினின் நோக்கம் கடந்த ஐந்தாண்டுகளில் மாறியிருப்பது, மிகப்பெரும் விமர்சனத்திற்கு உட்பட்டது இல்லை. ஆனால், `குடும்ப அரசியல் செய்கிறார்கள்' என ஏற்கெனவே தி.மு.கவின் மீது இருக்கும் முத்திரை மீண்டும் வலுப்பெறும் ஒரு சம்பவமாகத்தான் இதைப் பார்க்க முடிகிறது![/color]
[color=var(--content-color)][Image: vikatan%2F2019-07%2Ffeeeea37-99a2-4a88-9...2Ccompress]உதயநிதி[/color]
[color=var(--content-color)]சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்திருக்கும் உதயநிதியின் பயணம், திட்டமிட்டு நடந்ததா அல்லது தற்செயலா என்பது ஒருபுறமிருக்கட்டும். ஆனால், இந்தப் பயணத்தின் உச்சம் என்னவாக இருக்கும் என்கிற கேள்வி எழுகிறது. `உதயநிதிக்கு கிடைத்திருக்கும் இந்தப் பொறுப்பு தி.மு.கவின் அடுத்த முதல்வர் பதவிக்கான அச்சாரமாகக்கூட இருக்கலாம்' எனக் கணித்தால், அது தவறான கணிப்பாக இருக்காது. அதுவே தமிழக அரசியல் வரலாறு நமக்கு கற்றுக் கொடுத்திருக்கும் பாடம். உதயநிதிக்கு கிடைத்திருக்கும் பதவி, தி.மு.கவிலேயேகூட சலசலப்பை ஏற்படுத்தியிருப்பதாகத்தான் சொல்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். ஆனால், அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் ஒரு புலம்பலாகவே புகைந்து கொண்டிருக்கிறது அவ்வளவுதான்.[/color]

[color=var(--content-color)]குடும்ப அரசியல் என்பதை தி.மு.க மட்டும் செய்யவில்லை. இந்திய அளவில், ஏன் உலக அளவில்கூட தன் குடும்பத்தைச் சேர்ந்தவர்களை அடுத்தடுத்து பதவியில் உட்கார வைப்பது தொன்றுதொட்டு கடைப்பிடிக்கப்படும் முறை மன்னராட்சி காலத்தில் இருப்பதுதான். தற்போது ஜனநாயகம் என்று கூறிக் கொண்டாலும் இன்றைய காலத்திலும் அது தொடரவே செய்கிறது. இந்தப் போக்கு நியாயமானதா, இல்லையா என்பது விவாதத்திற்கு உட்பட்டது. ஆனால், உடனடியாக நாம் எழுப்ப வேண்டிய கேள்வி குடும்பப் பின்னணியை அடிப்படையாக வைத்து, பதவியில் உட்காரும் அந்த இளம் வாரிசு, குறிப்பிட்ட பதவிக்குத் தகுதியானவர்தானா, அந்தப் பதவிக்கு உரிய அரசியல் தெளிவும், களப்பணியும் அவரிடம் இருக்கிறதா என்பதுதான். இந்தக் கேள்விகளுடன்தான் உதயநிதியை நாம் பொருத்திப் பார்க்க வேண்டியிருக்கிறது.[/color]
[color=var(--content-color)][Image: vikatan%2F2019-07%2Fed5227b3-d0e3-48c7-8...2Ccompress]சோ ராமசாமி[/color]
[color=var(--content-color)]கருணாநிதியின் மறைவுக்குப் பின் தற்போது தி.மு.க தலைவராக இருக்கும் மு.க. ஸ்டாலினுக்கு தி.மு.கவில் முந்தைய காலங்களில் அடுத்தடுத்த பொறுப்புகள் கொடுக்கப்பட்டபோது, கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் இது மிகப்பெரிய அளவில் விமர்சனமாக வைக்கப்படவில்லை. தி.மு.கவைக் கடுமையாக விமர்சித்த துக்ளக் ஆசிரியர் சோ.ராமசாமி கூட `தி.மு.கவின் அடுத்த தலைவராக ஸ்டாலின் வரலாம்' என்று கூறியிருந்தார். அதற்கு சோ முன்வைத்த காரணம், ஸ்டாலினின் தொடர் அரசியல் செயல்பாடுகள்.[/color]
[color=var(--content-color)]மிசா காலத்தில் சிறை சென்றதிலிருந்து, தற்போதுவரை அவருடைய அரசியல் களப்பயணம் மிக நீண்டது. தற்போதும் அது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. ஆகையால், இயல்பாகவே அவர் தற்போது வகிக்கும் இடத்திற்குத் தகுதியானவராக மாறுகிறார்.[/color]
[color=var(--content-color)][Image: vikatan%2F2019-07%2F69b098cb-9df2-49d4-9...2Ccompress]உதயநிதி[/color]
[color=var(--content-color)]ஆனால், உதயநிதி...?! திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்ததற்கும், அரசியலில் இறங்கியதற்குமான இடைவெளி எவ்வளவு காலம் என்பதைப் பார்க்க வேண்டியுள்ளது. தேர்தல் சமயத்தில் தாத்தா கருணாநிதிக்காகவும், அப்பா ஸ்டாலின் உள்ளிட்ட குறிப்பிட்ட சில வேட்பாளர்களுக்காகவும் சுற்றுப்பயணம் சென்று தி.மு.கவுக்காக பிரசாரம் செய்ததை மட்டும் வைத்துக் கொண்டு, அவருக்கு வெகுசீக்கிரமே கட்சியின் மிக முக்கியப் பதவியைக் கொடுத்திருக்கிறார்கள். அல்லது மிகப்பெரிய பதவியைக் கொடுப்பதற்கு முன்னோட்டமாக உதயநிதியை மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய வைத்திருக்கிறார்கள் எனலாம்.[/color]

[color=var(--content-color)]எது எப்படியோ, ஆண்டாண்டு காலமாக தி.மு.கவிற்காக உழைத்துக் கொண்டிருக்கும் ஓர் உடன்பிறப்பு வந்தடைய வேண்டிய இடத்தை வாரிசு என்பதாலேயே உதயநிதி அடைகிறார் என்பது கட்சியினருக்கு எந்தளவுக்கு மிகப்பெரிய சோர்வைக் கொடுக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அதை அவர்கள் வெளியே காட்டிக் கொள்ள முடியாமல் இருப்பது இன்னும் சோகம்.[/color]
[color=var(--content-color)]தி.மு.க தலைவராக இருந்து மறைந்த கருணாநிதியிடம் குடும்ப அரசியல் பற்றி பத்திரிகையாளர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பினர். அதற்கு கருணாநிதி..[/color]
[color=var(--content-color)][Image: vikatan%2F2019-07%2F3c90ae3e-849f-4002-9...2Ccompress]கருணாநிதி[/color]
Quote:"குடும்பம் என ஒன்று இருந்தால் அரசியல் செய்வார்கள்தான்" என்றார்.

[color=var(--content-color)]தற்போதைய தி.மு.க தலைமையும் இதே பதிலைத்தான் சொல்லும் என்பதில் எந்த ஆச்சர்யமுமில்லை[/color]
first 5 lakhs viewed thread tamil
Like Reply
கவிழும் கர்நாடகா அரசு: விலகும் எம்எல்ஏக்கள்

பெங்களூரு: குமாரசாமி ஆட்சி மீது அதிருப்தியில் இருக்கும் காங்., மற்றும் மஜத எம்எல்ஏ.,க்கள் 12 பேர் ராஜினாமா செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் இம்மாநிலத்தில் காங்., ஆட்சி கலையும் என்ற சூழல் எழுந்துள்ளது.



[Image: Tamil_News_large_2314022.jpg]




கர்நாடகாவில் சட்டசபை தேர்தலுக்காக காங் - மஜத கூட்டணி அமைக்கப்பட்டது. இருந்தும் தேர்தலுக்கு பிறகு ஓராண்டாக கூட்டணிக்குள் சலசலப்பு ஏற்பட்டு வருகிறது. ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த முதல்வர் குமாரசாமி, காங்., எங்களை செயல்படவிடாமல் கட்டுப்படுத்த பார்க்கிறது. எதிர்க்கட்சிகளும் தங்கள் அரசை செயலற்றதாக்க திட்டமிட்டுள்ளன. கூட்டணி அரசு நடத்துவது விஷத்தை விழுங்கியதற்கு சமம். இதனால் தான் பதவி விலக வேண்டியது இருக்கும் என கூறியிருந்தார்.


[Image: gallerye_140256334_2314022.jpg]





இந்நிலையில் இன்று (6ம் தேதி) மதியம் காங்கிரஸ் தரப்பில் 9, மஜத தரப்பில்3 எம்எல்ஏ.,க்கள் சட்டசபை வளாகத்திற்கு வந்துள்ளனர். சபாநாயகரை சந்தித்து ராஜினாமா கடிதம் வழங்க உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் சபாநாயகர் அலுவலகத்தில் இல்லை. இதனால் மாநில அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பா.ஜ.,வின் எடியூரப்பா, லோக்சபா தேர்தல் முடிந்த ஒரு மாதத்தில் கர்நாடகாவில் ஆட்சி அமைப்போம் என கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
first 5 lakhs viewed thread tamil
Like Reply
எல்லோரைப் போன்று பிக் பாஸூம் அழ வச்சுட்டாரே! மீரா மிதுனை வெளியேற்றிய பிக் பாஸ்!

இன்றைய பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கு நிகராக பிக் பாஸூம் மீரா மிதுனை டார்க்கெட் செய்யும் விதமாக அவரை போட்டியிலிருந்து வெளியேற்றியுள்ளார்.
[color][size][font]

Samayam Tamil | Updated:Jul 6, 2019, 05:54AM IST




[/url]


[Image: mith.jpg]எல்லோரைப் போன்று பிக் பாஸூம் அழ வச்சுட்டாரே! மீரா மிதுனை வெளியேற்றிய பிக் பாஸ்!
கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் 
பிக் பாஸ் 3நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. ஒவ்வொரு நாளும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்நிகழ்ச்சிக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் பட்டாளங்கள் உண்டு. குறிப்பாக குடும்ப பெண்கள் தான் ஏராளமானோர் இருக்கின்றனர். மொத்தம் 16 போட்டியாளர்களுடன் ஒவ்வொரு நாளும் விதவிதமான டாஸ்க்குகளுடன், வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் பிக் பாஸ் 3 நிகழ்ச்சி கடந்து வருகிறது. 





இன்றைய நிகழ்ச்சியின் தொடக்கம் முதல் காதல் மன்னன் என்று பிக் பாஸ் வீட்டில் அழைக்கப்படும் கவின் மற்றும் சாக்‌ஷி இருவரும் தங்களது காதல் அனுபவங்களை ஒருவருக்கொருவர் பேசி வந்தனர். ஆனால், இருவரும் காதலிப்பதாக கூறிக்கொள்ளவில்லை. இதையடுத்து, யானை அணிகளுக்கு சாப்பாட்டு ராமன்கள் டாஸ்க் கொடுக்கப்பட்டது. 
[/font][/size][/color]
Quote:[Image: HSiHOXbS_normal.jpg]
Samayam Tamil

@SamayamTamil





எல்லோரும் அவரையே கார்னர் பண்ணுறீங்க: எனக்கு மீரா மிதுன் ஏஞ்செல் தான்: ஃபாத்திமா பாபு!#MeeraMithun #BiggBoss3Tamil #TamilBiggBoss3 #BiggBoss3 #SandyBirthday #AbhiramiVenkatachalam #Kavin #Madhumitha #SakshiAgarwalhttps://tamil.samayam.com/tv/bigg-boss-tamil/only-fathima-babu-support-to-meera-mithun-in-elimination-round-in-tamil-bigg-boss-season-3/articleshow/70098534.cms?utm_source=facebook.com&utm_medium=referral&utm_campaign=Meeramithun05072019 …

4
11:56 PM - Jul 5, 2019
Twitter Ads info and privacy

[Image: fesElFnP?format=jpg&name=144x144_2]
எல்லோரும் அவரையே கார்னர் பண்ணுறீங்க: எனக்கு மீரா மிதுன் ஏஞ்செல் தான்: ஃபாத்திமா பாபு!-Samayam Tamil
bigg boss tamil: இன்றைய பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் மீரா மிதுன் தனக்கு ஒரு ஏஞ்சலாக இருப்பதாக ஃபாத்திமா பாபு தெரிவித்துள்ளார்.
tamil.samayam.com

[color][size][font]

See Samayam Tamil's other Tweets






இந்த நிலையில் தான் அபிராமி, சாக்‌ஷி, வனிதா, ரேஷ்மா, ஷெரின் ஆகியோரப் போன்று பிக் பாஸூம் மீரா மிதுனை டார்க்கெட் செய்துள்ளார். ஆம், மற்ற போட்டியாளர்கள் அனைவரும், எலிமினேஷனுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களில் யாரேனும் ஒருவரை முழு மனதாக எலிமினேஷன் செய்ய வேண்டும். அதற்கான காரணத்தை சரிவர தெரிவிக்க வேண்டும். இதில், பிக் பாஸே மீரா மிதுனை தேர்வு செய்துள்ளார்.

[Image: H8z7XXoD8lsbKLtR?format=jpg&name=small]
[/font][/size][/color]
Quote:[Image: 7Brnicl__normal.jpg]
Losliya Army@LosliyaOff





#Losliya #Tharshan
Dance For Venilave Song....#BB3FavLosliya #BiggBossTamil3 #BiggBossTamil #BiggBoss3 #BiggBoss #LosliyaArmy #losliya_army#VijayTelevision @LosliyaArmy@ArmyLosliya @Losliya_Army2@TamilBigBoss@vijaytelevision

Do Support Our Page @LosliyaOff

17
3:05 AM - Jul 6, 2019
[color][size][font][color][font]

See Losliya Army's other Tweets


Twitter Ads info and privacy

[/font][/color]


அதன்படி, அனைவரும் மீரா மிதுனையே எலிமினேஷன் செய்தனர். ஆனால், ஃபாத்திமா பாபு மட்டும், மீரா ஒரு ஏஞ்சல். கடவுள் கொடுத்த வரம் என்றெல்லாம் கூறியுள்ளார். அதுவரை யாருக்கும் எதையும் காட்டிக்கொள்ளாமல் சிரித்துக் கொண்டிருந்த மீரா, ஃபாத்திமா கூறியதைத் தொடர்ந்து அவரை கட்டியணைத்து அழத் தொடங்கியுள்ளார். 
[/font][/size][/color]
Quote:[Image: N2l-FSuo_normal.jpg]
BigBoss Sneha@snake_rags





#FathimaBabu is so correct. She has her own opinions. #Vanitha can't take her statements. #BigBossTamil3

12
10:09 PM - Jul 5, 2019
Twitter Ads info and privacy
[color][size][font]

See BigBoss Sneha's other Tweets






இறுதியில், அனைவரிடமும் கூறிவிட்டு வீட்டை விட்டு செல்லலாம் என்று பிக் பாஸே மீரா மிதுனுக்கு அறிவுரை வழங்கினார். அதற்கேற்ப மீராவும், ஒவ்வொருவரையும் பார்த்து, ஓகே பாய் என்றெல்லாம் கூறினார். இறுதியில் பெர்த்டே பாய் சாண்டி இதெல்லாம் ஒரு நாடகம் என்று கூறி, மீராவை சமாதானம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

[/font][/size][/color]
Quote:[Image: NcZqdLAE_normal.jpg]
RamKumarr@ramk8060





மொதல்ல இந்த வனிதாவை வெளிய அனுப்புங்க டா முடியலை டா சாமி [img=17.9x18]https://abs.twimg.com/emoji/v2/72x72/1f620.png[/img][img=16.9x18]https://abs.twimg.com/emoji/v2/72x72/1f64f.png[/img]#BiggBossTamil

252
10:21 PM - Jul 5, 2019
Twitter Ads info and privacy
[color][size][font]

37 people are talking about this

[url=https://twitter.com/ramk8060/status/1147186311029129217]





 

[/font][/size][/color]
first 5 lakhs viewed thread tamil
Like Reply
வெளியேறியது பாகிஸ்தான்; வங்கதேசத்தை வீழ்த்தியும் அரையிறுதி கனவு கலைந்தது: ஷோயப் மாலிக் ஓய்வு, சகிப் அல் ஹசன் சாதனை
[Image: thumbnailmalikjpg]

இமாம் உல் ஹக்கின் சதம், ஷாகீன் ஷா அப்ரிடியின் 6 விக்கெட் ஆகியவற்றால் லாட்ஸ் மைதானத்தில் நேற்று நடந்த ஆட்டத்தில் வங்கதேச அணியை 94 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது பாகிஸ்தான் அணி.
இந்த போட்டியில் வென்றபோதிலும்கூட பாகிஸ்தான் அணியால் அரையிறுதிக்கு தகுதிபெற முடியவில்லை. வங்கதேச அணியை 7 ரன்களுக்குள் சுருட்டினால்தான் அரையிறுதி வாய்ப்பு என்ற நிலையில், வங்கதேச அணி 8-வது ரன்னை அடித்தபோதே பாகிஸ்தானின் அரையிறுதி கனவு தகர்ந்துவிட்டது.
உகாண்டா, பாலி மகளிர் அணிகளுக்கு இடையே நடந்தபோட்டி போல் நடந்திருந்தால், ஒருவேளை பாகிஸ்தான் அரையிறுதி சென்றிருக்கும். கடந்த மாதம் நடந்த ஆட்டத்தில் உகாண்டா மகளிர் அணி 314 ரன்கள் குவிக்க பாலி மகளிர் அணி 10 ரன்களில் சுருண்டது. அதுபோல் ஏதாவது அசாதாரண வெற்றி இருந்தால் பாகிஸ்தான் அரையிறுதி ெசன்றிருக்கும்.
முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 315 ரன்கள் சேர்த்தது. 316 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும்இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணி 44.1 ஓவர்களில் 221 ரன்களுக்கு ஆட்டமிழந்து 94 ரன்களில் தோல்வி அடைந்தது.
இந்த போட்டியி்ல் பாகிஸ்தான் தொடக்க ஆட்டக்காரர் இமாம் உல் ஹக் சதம் அடித்தார், இளம் வீரர் ஷாகின் ஷா அப்ரிடி 6 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை புரிந்து ஆட்டநாயகன் வென்றார், மூத்த வீரரும் சானியா மிர்சாவின் கணவருமான ஷோயப் மாலிக் 20 ஆண்டுகள் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். இவை அனைத்தும் நடந்தும் பாகிஸ்தான் அணிக்கு அரையிறுதிக்கு செல்லாத வெற்றி மகிழ்ச்சி அளிக்கவில்லை.
உலகக்கோப்பப் போட்டியில் ஒரு அணி தொடர்ச்சியாக 4 வெற்றிகள் பெற்றபின் அரையிறுதிக்குள் செல்லாமல் வெளியேறுவது இதுதான் முதல்முறை, அந்த அணியும் பாகிஸ்தான் மட்டுமே.
பல்வேறு சூழல்கள் பாகிஸ்தானுக்கு எதிராகவே அமைந்துவிட்டன. அதிலும் தொடக்கத்தில் மேற்கிந்தியத்தீவுகள் அணியிடம் அடைந்த படுதோல்வி பாகிஸ்தான் ரன்ரேட்டை அதளபாதாளத்தில் கொண்டு சென்றது.
[Image: thumbnailafridijpg]
 
ஆஸ்திரேலிய அணியிடம் வெல்ல வேண்டிய நிலையில் தோற்றது, மேற்கிந்தியத்தீவுகளிடம் நியூஸிலாந்து தோற்க வேண்டிய நிலையில், பிராத்வெய்ட் கேட்சை போல்ட் பிடித்தார். அந்த கேட்சை போல்ட் பிடிக்காமல் இருந்திருந்தால் நியூஸிலாந்து தோற்றிருக்கும், இப்போது சூழ்நிலை மாறி இருக்கும். இலங்கையுடன் ஒருபோட்டி மழையால் ரத்தானது, இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் நியூஸிலாந்து 2-வது பேட் செய்தது ஆகியவை பாகிஸ்தானுக்கு எதிராக அமைந்துவிட்டன. இவை அனைத்தையும் தாண்டி தொடக்கத்தில் அந்த அணியினர் மந்தமாக விளையாடியதன் விளைவுதான் பலதோல்விகளைச் சந்தித்தார்கள் என்பதை மறுக்க முடியாது.
வங்கதேச அணியைப் பொருத்தவரை அந்த அணியின் ஆல்ரவுண்டர் சகிப் அல் ஹசன் நேற்று 64 ரன்களில் ஆட்டமிழந்தார். உலகக்கோப்பைப் போட்டியில் 600 ரன்களுக்குமேல் அடித்து, 11 விக்கெட்டுகளையும் வீழ்த்திய முதல் வீரர் எனும் பெருமையை சகிப் அல் ஹசன் பெற்றார். உலகக் கோப்பைப் போட்டியில் 600 ரன்களுக்கு மேல் சேர்த்தவர்களில் சச்சின் டெண்டுல்கர், மேத்யூ ஹேடன் ஆகியோர் வரிசையில் சகிப் அல் ஹசன் இணைந்தார்.
மற்றவகையில் வங்கதேச அணியினர் சொல்லிக் கொள்ளும் விதமாக நேற்று விளையாடவில்லை. இந்த தொடரில் தென் ஆப்பிரி்க்கா, மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு அளித்த அதிர்ச்சிகரமான வெற்றி வங்கதேச அணியின் மதிப்பை உயர்த்தியது. ஒவ்வொரு போட்டியிலும் 300 ரன்கள் வரை அடிக்க முயற்சித்தது, எதிரணியிடம் எளிதாக வீழ்ந்துவிடாமல் போராட்டக் குணத்தை வெளிப்படுத்தி ,தங்களை அடுத்த கட்டத்துக்கு உயர்த்திக்கொண்டது வங்கதேசம்.
இதன் வெற்றி மூலம் பாகிஸ்தான் அணி 9 போட்டிகளில் 5 வெற்றிகள், 3 தோல்விகள் ஒரு போட்டி ரத்து என 11  புள்ளகளுடன் ரன்ரேட் குறைவால் 5-ம் இடத்துடன் வெளிேயறியது. வங்கதேசம் அணி 9 போட்டிகளில் 3 வெற்றிகள் 5 தோல்விகள் ஒரு போட்டி ரத்து என 7 புள்ளிகளுடன் 7-வது இடத்தைப் பிடித்தது
டாஸ்வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட் செய்தது. டாஸ் வெல்லாமல் இருந்தாலே பாகிஸ்தான் அணியின் அரையிறுதி கனவு அப்போதே முடிவுக்கு வந்திருக்கும்.
பக்கர் ஜமான், இமாம் உல்ஹக் ஆட்டத்தத் தொடங்கினர். தொடக்கத்திலேயே சுழற்பந்துவீச்சாாளர் மெஹதி ஹசனை களமிறங்கி வங்கதேசம் நெருக்கடி அளித்தது. 13 ரன்னில் பக்கர் ஜமான் ஆட்டமிழந்தார்
first 5 lakhs viewed thread tamil
Like Reply
2-வது விக்கெட்டுக்கு பாபர் ஆஸம், இமாம் உல் ஹக் ஜோடி சேர்ந்தனர். இருவரும் நிதானமாக அடிஅணியின் ஸ்கோரை உயர்த்தினார்கள். பாபர் ஆசம் 62 பந்துகளிலும், இமாம்உல் ஹக் 52 பந்துகளிலும் அரைசதம் அடித்தனர். 2-வது விக்கெட்டுக்கு 157 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.
சதத்தை நோக்கி முன்னேறிய பாபப் ஆஸம் 96 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து முகமது ஹபீஸ் களமிறங்கினார். சிறப்பாக ஆடிய இமாம் உல் ஹக் 99 பந்துகளில் தனது 6-வது ஒருநாள் சத்ததை பதிவு செய்து 100 ரன்னில் ஆட்டமிழந்தார். 3-வது விக்கெட்டுக்கு ஹபி்ஸ், இமாம்உல் ஹக் ஜோடி 66 ரன்கள் சேர்த்தனர்.
42 ஓவர்களில் 246 ரன்களுக்கு 3-வது விக்கெட் என வலுவடன் பாகிஸ்தான் இருந்தது. ஆனால், அடுத்த 8 ஓவர்களில் 69 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து சரிவைச் சந்தித்தது. ஹபீஸ்(27), ஹாரிஸ் சோஹைல்(6), இமாத் வாசிம்(43), வகாப் ரியாஸ்(2), சதாப்கான்(1), அமிர்(8), சர்பிராஸ்அகமது 3 ரன்னில் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
50 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 315 ரன்கள் சேர்த்து பாகிஸ்தான். சிறிது பொறுப்புடன் பாகிஸ்தான் வீரர்கள் பேட் செய்திருந்தால், 350 ரன்களைத் தொட்டிருக்க முடியும். ஆனால் கோட்டை விட்டனர்.
[Image: thumbnailabngjpg]
 
வங்கதேசம் தரப்பில் முஷ்தபிசுர் ரஹ்மான் 5 விக்கெட்டுகளையும், சைபுதீன் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
316 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் வங்கதேசம் களமிறங்கியது. அரையிறுதிக்கு தகுதிபெற முடியாது என்பதால் என்னவோ தன்னம்பிக்கையற்ற பேட்டிங் வீரர்களிடம் தெரிந்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் தமிம் இக்பால்(8), சவுமியா சர்க்கார்(22)ரன்னில் ஆட்டமிழந்தனர். அனுபவ வீரர் சகிப் அல் ஹசன் களத்தில் நின்று 64 ரன்கள் சேர்த்து வெளியேறினார்.
மற்ற வீரர்களான முஷ்பிகுர் ரஹ்மான்(16), லிட்டன் தாஸ்(32), மகமதுல்ல(29), மொசாடக் ஹூசைன்(16) என சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தனர்.
சகிப்அல்ஹசன் ஆட்டமிழந்தபோது 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 154 ரன்கள் சேர்த்திருந்தது வங்கதேசம். அதன்பின் அடுத்த 12 ஓவர்்களில் 67 ரன்கள் சேர்்த்து மீதமுள்ள 5 விக்கெட்டுகளையும் இழந்தது வங்கதேசம்.
பாகிஸ்தான் தரப்பில் ஷாகீன் ஷா அப்ரிடி 6 விக்கெட்டுகளையும், சதாப்கான் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
first 5 lakhs viewed thread tamil
Like Reply
[color=var(--title-color)]பட்ஜெட் 2019-20: ஏமாற்றிவிட்டாரா நிதி அமைச்சர்?[/color]

[color=var(--title-color)]பட்ஜெட்[/color]
[Image: vikatan%2F2019-07%2Fd5b682c0-9e93-4bba-a...2Ccompress][color=var(--meta-color)]நிர்மலா சீதாராமன்[/color]
[color=var(--content-color)]மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தன்னுடைய முதல் பட்ஜெட்டைத் தாக்கல் செய்திருக்கிறார். இந்த பட்ஜெட்டில் வரிச் சலுகைக்கான உச்சவரம்பு அதிகரிக்கப்படும்; பொருளாதார வளர்ச்சியின் வேகத்தை அதிகப்படுத்த பல பெரிய திட்டங்கள் அறிவிக்கப்படும்; வேலைவாய்ப்பினைப் பெருக்குவதற்குக் குறிப்பிடத்தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்கிற எதிர்பார்ப்பு பரவலாகவே இருந்தது.[/color]
[color=var(--content-color)][Image: vikatan%2F2019-07%2Fc3d620ae-5e95-4cd4-8...2Ccompress][/color]
[color=var(--content-color)]ஆனால், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள இந்த பட்ஜெட்டில் அப்படிப்பட்ட அறிவிப்புகள் எதுவும் இல்லாத காரணத்தால், இந்த பட்ஜெட் ஏமாற்றம் தரக் கூடியதாக இருப்பதாக மக்களிடம் ஒரு கருத்து உருவாகியிருக்கிறது. சில பொருளாதார நிபுணர்கள்கூட இந்த பட்ஜெட் குறித்து அப்படிச் சொல்லியிருக்கிறார்கள். இந்த பட்ஜெட் உள்ளபடியே ஏமாற்றம் அளிப்பதாக இருக்கிறதா அல்லது பொருளாதார வளர்ச்சியைத் தூண்டுகிற வகையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நடவடிக்கை எடுத்திருக்கிறாரா என்று பார்ப்போம்.
5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம்...
நீண்ட காலத்தில் பொருளாதார வளர்ச்சியைக்கொண்டு வருவதற்கான இலக்குகள் இந்த பட்ஜெட்டில் தெளிவாகத் தீட்டப்பட்டுள்ளன. வருகிற 2025-ம் ஆண்டுக்குள் இந்தியா 5 டிரில்லியன் டாலர் (சுமார் 350 லட்சம் கோடி ரூபாய்) பொருளாதாரமாக உயர்த்த வேண்டும் என்பது பிரதமர் நரேந்திர மோடி நிர்ணயித்துள்ள இலக்கு. இந்த ஆண்டே நம்முடைய பொருளாதாரம் மூன்று டிரில்லியன் (சுமார் 210 லட்சம் கோடி ரூபாய்) இலக்கினை எட்டத் தேவையான திட்டங்களை இந்த பட்ஜெட்டில் சொல்லி யிருக்கிறார் நிதி அமைச்சர்.
[/color]
[color=var(--content-color)]வளர்ச்சிக்கு உதவும் உள்கட்டமைப்பு...
நிலம் வழியாகவும், நீர் வழியாகவும், ஆகாயம் வழியாகவும் நாட்டின் அனைத்துப் பகுதிகளையும் இணைப்பதற்குத் தேவையான உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படும் என்று அறிவித்திருக்கிறார், நிதி அமைச்சர். ரயில்வே துறையை மேம்படுத்த அடுத்த 12 ஆண்டுகளுக்குள் ரூ.50 லட்சம் கோடி தேவை. ரயில்வே துறையின் வளர்ச்சிக்கான நிதியை பப்ளிக் - பிரைவேட் - பார்ட்னர்ஷிப்மூலம் திரட்ட முடிவு செய்திருப்பதுமூலம், தனியார் நிறுவனங்கள் மிகப் பெரிய அளவில் முதலீடு செய்ய வாய்ப்பாக அமையும்.
[/color]
[color=var(--content-color)][Image: vikatan%2F2019-07%2Fa89584bc-a798-43c4-a...2Ccompress][/color]
[color=var(--content-color)]அடுத்த ஐந்து ஆண்டுகளில் 1.25 லட்சம் கிலோ மீட்டர் தூரத்துக்கான சாலைகளின் தரத்தினை உயர்த்த ரூ.80,250 கோடி ஒதுக்கீடு செய்யப் பட்டிருக்கிறது. உள்நாட்டு நதிகள்மூலம் சரக்கு போக்குவரத்தினை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்திருப்பதுடன், கடல்வழிப் போக்குவரத்தை அதிகப்படுத்துகிற மாதிரி பாரத் மாலா திட்டத்தின் இரண்டாம் கட்டத் திட்டம் தொடங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார் நிதி அமைச்சர். இந்தத் திட்டங்கள் மூலம் போக்குவரத்து வசதி பெருகி, பொருளாதார வளர்ச்சி வேகமெடுக்கும்.
வேலைவாய்ப்பை அதிகரிக்கும் திட்டங்கள்
வேலைவாய்ப்பின்மை கடந்த பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இருப்பதாகச் சொல்லப்படும் இந்தச் சமயத்தில், வேலைவாய்ப்பை அதிகரிக்கும் திட்டங்களை அறிவித்திருக்கிறார் நிதி அமைச்சர். வெளிநாடுகளிலிருந்து இறக்குமதியாகும் சில வகையான பொருள்களுக்கு கலால் வரி விதிப்பதன்மூலம், அவற்றை உள்நாட்டிலேயே தயாரிக்க வழிவகைகள் செய்யப்பட்டுள்ளன. பி.வி.சி பொருள்கள், டைல்ஸ், ஆட்டோ உதிரிப்பாகங்கள், மார்பிள்கள், ஆப்டிக்கல் பைபர் கேபிள், சி.சி.டி.வி கேமரா போன்ற வற்றுக்கான கலால் வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தயாரிக்கும் சில எலெக்ட்ரானிக்ஸ் பொருள்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான வரியும் நீக்கப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பை அதிகரிக்க விவசாயம் சார்ந்த துறையில் 75,000 புதிய தொழில்முனைவோர்கள் உருவாக்கப்படுவார்கள். புதிய பொருள்களை உருவாக்க உதவும் 80 பிசினஸ் இன்குபேட்டர்களும், 20 தொழில்நுட்ப இன்குபேட்டர்களும் தொடங்கப்படும். அரசின் இந்தத் திட்டங்களால் கிராமப்பகுதிகளில் வேலைவாய்ப்புகள் குறிப்பிடத்தக்க அளவுக்கு உருவாகும்
[/color]
first 5 lakhs viewed thread tamil
Like Reply
[color=var(--content-color)]வங்கிகளும் வங்கிசாரா நிதி நிறுவனங்களும்
வாராக் கடன் சிக்கலினால் வங்கிகள் புதிதாகக் கடன் தரமுடியாமல் கஷ்டப்பட்டு வருகின்றன. வங்கிகள் இன்னும் அதிக அளவில் கடன் தருவதற்குப் புதிய முதலீடு தேவை என்பதால், ரூ.70,000 கோடி ஒதுக்கீடு செய்து தந்திருக்கிறார் மத்திய நிதி அமைச்சர். இதன்மூலம் புதிய கடன்கள் தரப்பட்டு, பல புதிய தொழில்கள் தொடங்கப்படலாம். பொதுத் துறை வங்கிகள் பலப்படுத்தப்படும் என அறிவித்திருக்கும் மத்திய நிதி அமைச்சர், வங்கிசாரா நிதி நிறுவனங்கள் முதலீட்டினைத் திரட்டுவதற்கான பல வழிகளையும் செய்துதந்திருக்கிறார். இதற்கான சட்டம் நிதி மசோதாவில் கொண்டுவரப்படும் என்றும் சொல்லியிருக்கிறார். பொருளாதார வளர்ச்சிக்குப் பெரும் அபாயமாக விளங்கும் வாராக் கடன் பிரச்னை இதன்மூலம் தீர்ந்து, பொருளாதார வளர்ச்சி வேகமெடுக்கும் என்று நாம் எதிர்பார்க்கலாம்.
விவசாயத்துக்கு உதவும் ஜீரோ பட்ஜெட்
விவசாயத் துறை வளர்ச்சிக்கும் பல திட்டங் களை அறிவித்திருக்கிறார் நிதி அமைச்சர். மதிப்புக் கூட்டல் தொழிலில் தனியார் நிறுவனங் கள் ஈடுபட ஊக்குவிக்கப்படும்; 10,000 புதிய விவசாய உற்பத்தியாளர் சங்கங்கள் உருவாக்கப்பட்டு, விவசாய விளைபொருள்களின் விற்பனை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்; ஜீரோ பட்ஜெட் மூலம் விவசாய விளைபொருள் உற்பத்தி அதிகரிக்கப்படும் என விவசாய வளர்ச்சிக்கு பல திட்டங்களை அறிவித்திருக்கிறார் நிதி அமைச்சர்.
[/color]
[color=var(--content-color)]நாரி து நாராயணி
பெண்களின் முன்னேற்றத்துக்கும் இந்த பட்ஜெட்மூலம் பல திட்டங்களைக் கொண்டு வந்திருக்கிறார் நிதி அமைச்சர். ஜன்தன் திட்டத்தின்கீழ் ஒவ்வொரு மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கும் ரூ.5,000 ஓவர் டிராஃப்ட் கடன் தரப்படும்; மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்ட கடனுக்கான வட்டி மானியம் எல்லா மாவட்டங்களில் உள்ளவர்களுக்கும் இனி தரப்படும்; முத்ரா திட்டத்தின்கீழ் தகுதியுள்ள மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.1 லட்சம் கடன் தரப்படும் என அறிவித்துள்ளார் நிதி அமைச்சர்.
தீர்க்கதரிசனத்துடன்கூடிய பட்ஜெட்
நிர்மலா சீதாராமன் அறிவித்திருக்கும் இத்தனை திட்டங்களாலும், உடனடியாக வேலைவாய்ப்பு உருவாகி பொருளாதார வளர்ச்சி பெருகிவிடாது என்றாலும், நீண்ட காலத்தில் நம் நாட்டின் வளர்ச்சியினைப் பெருக்க இந்தத் திட்டங்கள் நிச்சயம் உதவவே செய்யும். அந்த வகையில் தீர்க்கதரிசனத்துடன் போடப்பட்ட பட்ஜெட் இது என்றே சொல்லலாம்.
தவிர, கடந்த பிப்ரவரி மாதத்தில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டிலேயே பல முக்கியமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டு விட்டன. நாடாளுமன்றத் தேர்தலை முன்நிறுத்தி அப்போது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதால், பல முக்கியமான திட்டங்களை அப்போதே அறிவிக்க வேண்டிய அவசியம் முந்தைய பா.ஜ.க அரசுக்கு இருந்தது.
நடந்துமுடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க ஜெயிக்காமல், வேறு கட்சி ஆட்சிக்கு வந்திருந்தால், இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டு, புதிய திட்டங்கள் அறிவிக்கப்படும் சூழ்நிலை உருவாகியிருக்கும். ஆனால், நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க மீண்டும் ஆட்சியைப் பிடித்திருப்பதால், பரபரப்பான பெரிய அறிவிப்புகள் ஏதும் வெளியிடவேண்டிய அவசியம் அரசுக்கு இல்லை.
பொறுத்திருந்து பார்ப்போம், அடுத்த ஆண்டு எப்படிப்பட்ட பட்ஜெட்டினை அவர் தாக்கல் செய்கிறார் என்று!
[/color]

[color=var(--content-color)]சூட்கேஸுக்கு டாடா![/color]
[color=var(--content-color)][Image: vikatan%2F2019-07%2F18b6c7a1-8755-4266-b...2Ccompress][/color]
[color=var(--content-color)]பொதுவாக, நிதி அமைச்சர்கள் பட்ஜெட் தாக்கல் செய்யவரும்போது கையில் பிரவுன் சூட்கேஸுடன்தான் வருவார்கள். மத்திய நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் தமிழர் உடையான வேட்டி, சட்டையுடன் நாடாளு மன்றத்துக்கு வருவார் என்றாலும், அவரும் சூட்கேஸுடன் வந்துதான் பட்ஜெட்டினைத் தாக்கல் செய்வார்.
இந்த மரபினை முதலில் உடைத்து, வழக்கமான சூட்கேஸைக் கொண்டு வராமல், சிவப்புப் பையினைக் கொண்டு வந்திருந்தார் நிர்மலா சீதாராமன். சிவப்புப் பையைக் கொண்டுவந்ததற்கான காரணத்தை நிதி அமைச்சர் சொல்லவில்லை என்றாலும், நமது பட்ஜெட்டினை நம்முடைய கலாசாரத்துக்கேற்றபடி மாற்ற வேண்டும் என்கிற நோக்கில் அவர் இதைச் செய்திருப்பார் என்று நம்பலாம்.
[/color]
first 5 lakhs viewed thread tamil
Like Reply
[color=var(--title-color)]நண்பரைச் சந்திக்கச் சென்ற சிறுமி 5 பேரால் பாலியல் வன்கொடுமை!- பொள்ளாச்சியில் அடுத்த அதிர்ச்சி[/color]

[color=var(--title-color)]பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தாய் இல்லை; தந்தை மட்டும்தான் இருக்கிறார். பாட்டி வீட்டில் வளர்ந்து வருகிறார் என்று முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.[/color]
[Image: vikatan%2F2019-07%2Fb117f7f4-1671-4f8a-8...2Ccompress][color=var(--meta-color)]பாலியல் வன்கொடுமை[/color]
[color=var(--content-color)]பொள்ளாச்சி குமரன் நகரைச் சேர்ந்த அமானுல்லா என்ற நபர், இந்தச் சிறுமிக்கு நண்பராக இருந்துள்ளார். அமானுல்லாவைச் சந்திக்கச் சென்றபோது, அந்தச் சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.[/color]
[color=var(--content-color)][Image: vikatan%2F2019-07%2Fdce10f58-eea5-49f2-8...2Ccompress]பாலியல் வன்கொடுமை[/color]
[color=var(--content-color)]இதைத்தொடர்ந்து, போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, அமானுல்லா உள்ளிட்ட ஐந்து பேரைக் கைதுசெய்து, போலீஸார் விசாரித்து வருகின்றனர். கோவை மாவட்ட போலீஸ் எஸ்.பி சுஜீத்குமார் பொள்ளாச்சிக்கு நேரடியாகச் சென்று விசாரணை நடத்தி வருகிறார்.[/color]
[color=var(--content-color)]இந்த வழக்கில் மேலும் சிலர் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்பதால், கைது எண்ணிக்கையும் அதிகரிக்கக் கூடும் என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தாய் இல்லை. தந்தை மட்டும்தான் இருக்கிறார். பாட்டி வீட்டில் வளர்ந்து வருகிறார் என்று முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.கடந்த சில மாதங்களுக்கு முன்பு நாட்டையே அதிரவைத்த பொள்ளாச்சி பாலியல் வழக்கின் பாதிப்பு அடங்குவதற்குள், தற்போது 16 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ள வழக்கு மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.[/color]
first 5 lakhs viewed thread tamil
Like Reply
புள்ளிப்பட்டியலில் இந்தியா முதலிடம்.. அரையிறுதியில் யார் யாருடன் மோதல்??

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை தொடரில் பரபரப்பான ரவுண்ட் ராபின் லீக் சுற்றுப் போட்டிகள் நேற்று முடிவடைந்தன. 45 லீக் போட்டிகள் முடிவில் 15 புள்ளிகளுடன் இந்திய அணி புள்ளி பட்டியலில் முதலிடம் வகிக்கிறது. தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதிய போட்டியில் ஆஸ்திரேலிய அணி தோல்வியை தழுவியதால், புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டது. மூன்றாவது இடத்தில் இங்கிலாந்து அணியும், நான்காவது இடத்தில் நியூசிலாந்து அணியும் இருக்கிறது.
[Image: IMG_20190707_071050.jpg]
முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இப்போட்டி ஜூலை 9ஆம் தேதி மான்செஸ்டர் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இரண்டாவது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா இரு அணிகளும் மோதுகின்றன. இப்போட்டி பிர்மிங்காம் மைதானத்தில் 11ஆம் தேதி நடைபெறுகிறது.
[Image: IMG_20190707_071121.jpg][Image: IMG_20190707_071124.jpg]
first 5 lakhs viewed thread tamil
Like Reply
உலககோப்பையின் இறுதிப்போட்டி ஜூலை 14ஆம் தேதி லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது.
லீக் சுற்றுக்கள் முடிவில்..
பேட்டிங்கில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியல்
[Image: IMG_20190706_214809.jpg]
  1. ரோஹித் சர்மா – 647 ரன்கள்
  2. டேவிட் வார்னர் – 638 ரன்கள்
  3. சகிப் அல் ஹசன் – 606 ரன்கள்
பந்துவீச்சில் அதிக விக்கெட்டுகள்
[Image: 290751.jpg]
LONDON, ENGLAND – JUNE 15: Mitchell Starc of Australia (L) celebrates after taking the wicket of Kusal Mendis of Sri Lanka during the Group Stage match of the ICC Cricket World Cup 2019 between Sri Lanka and Australia at The Oval on June 15, 2019 in London, England. (Photo by Andy Kearns/Getty Images)


  1. மிச்சேல் ஸ்டார்க் – 26 விக்கெட்டுகள்
  2. முஸ்தாபிசுர் ரஹ்மான் – 20 விக்கெட்டுகள்
  3. பும்ராஹ்/ஜோப்ரா ஆர்ச்சர்/முகமது அமீர்/லாக்கி பெர்குசன் – 17 விக்கெட்டுகள்
first 5 lakhs viewed thread tamil
Like Reply
Bigg Boss 3 'க.பா.'வை வெளியேற்றச் சொன்னால் 'பா. பா.'வை வெளியேற்றிய பிக் பாஸ்

சென்னை: பிக் பாஸ் வீட்டில் இருந்த பாத்திமா பாபு வெளியேற்றப்பட்டுவிட்டாராம்.
பிக் பாஸ் 3 வீட்டில் இருந்து இன்று இரவு ஒரு போட்டியாளர் வெளியேற்றப்படுவார் என்பது அனைவருக்கும் தெரியும். சாக்ஷி அல்லது கவின் அல்லது அவர்கள் இருவரையும் சேர்த்தே வெளியே அனுப்பி வைக்குமாறு பார்வையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
இந்நிலையில் பாத்திமா பாபுவை தான் வெளியேற்றியுள்ளார் பிக் பாஸ்.


[Image: fathimababu-1562492009.jpg]






பாத்திமா பாபு
பிக் பாஸ் வீட்டில் இருந்து பாத்திமா பாபு ஏற்கனவே வெளியேறி தன் சொந்த வீட்டிற்கு சென்றுவிட்டார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. முதல் போட்டியாளராக பிக் பாஸ் 3 வீட்டிற்கு வந்தவர் முதல் ஆளாக வெளியேற்றப்பட்டுள்ளார். கவின்(கடலை பார்ட்டி(க. பா.) அல்லது சாக்ஷி வெளியேற்றப்பட்டிருந்தால் பார்வையாளர்கள் மகிழ்ச்சி அடைந்திருப்பார்கள். அவர்களில் ஒருவர் வெளியேறினால் காதல் கதை பாதியில் முடிந்துவிடும் என்பதால் பிக் பாஸ் தற்போதைக்கு அவர்களை வெளியேற்ற மாட்டார். மேலும் வனிதா விஜயகுமார் இருந்தால் தான் தினமும் சண்டையும், சச்சரவும் ஏற்பட்டு பிக் பாஸ் வீடு பரபரக்கும் என்பதால் அவரும் கடைசி வரை இருப்பார்.
[Image: meera-1562492026.jpg]
 
பாசம்
பாத்திமா பாபுவை பிக் பாஸ் போட்டியாளர்கள் அம்மா என்று பாசமாக அழைத்தனர். பார்வையாளர்களுக்கும் பாத்திமா பாபு நடந்து கொண்ட விதம் பிடித்திருந்தது. மீரா மிதுனை பார்த்து அவர் பெண் கடவுள் போன்று என்று பாத்திமா பாபு தெரிவித்தது மட்டும் பார்வையாளர்களுக்கு பிடிக்கவில்லை. அவர் சொன்ன அந்த வார்த்தையை கேட்டு அதிகமாக கடுப்பானது வனிதா விஜயகுமார் தான்.
[Image: bigboss67-1562492039.jpg]
 
டாஸ்க்
பாத்திமா பாபுவுக்கு மக்கள் மத்தியில் நல்ல பெயர் இருந்தும் அவரை வெளியேற்றியுள்ளனர். வயதில் மூத்தவர் அவரால் டாஸ்குகளை ஓடியாடி செய்ய முடியாது என்பதால் முதல் ஆளாக வெளியேற்றியிருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. அப்படிப் பார்த்தால் அடுத்து மோகன் வைத்யா அல்லது சித்தப்பு சரவணன் தான் வெளியேற்றப்படுவார்கள்.
first 5 lakhs viewed thread tamil
Like Reply
உலக கோப்பை கிரிக்கெட் : 11 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் மோதும் கேப்டன்கள்


[Image: 201907072027236725_World-Cup-Cricket-Cap...SECVPF.gif]


நடப்பு உலகக்கோப்பை தொடரில் லீக் சுற்று போட்டிகள் முடிவடைந்து இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகிய அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ளது.

இதில் முதல் அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் வரும் செவ்வாய்க்கிழமை அன்று மான்செஸ்டரில் மோதவுள்ளது.  அதனைத்தொடர்ந்து இரண்டாவது அரையிறுதிபோட்டியில் ஆஸ்திரேலிய மற்றும் இங்கிலாந்து அணிகள்  வியாழக்கிழமை அன்று மோதவுள்ளது.  


முதல் அரையிறுதியில்  இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் போட்டி ஆனது 11 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற போட்டியினை நினைவுபடுத்துகின்றது. 

11 ஆண்டுகளுக்கு முன் 2008-ம் ஆண்டு நடந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை அரையிறுதியில் இதே இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. அப்போது இந்திய அணிக்கு கேப்டனாக விராட் கோலியும் நியூசிலாந்து அணிக்கு கேப்டனாக கேன் வில்லியம்சனும் இருந்தனர்.

தற்போது 11 ஆண்டுகளுக்கு பிறகு, அதே கேப்டன்கள் தலைமையில்  இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் உலகக்கோப்பை தொடரில் அரையிறுதிப்போட்டியில் மோதவுள்ளது. 2008-ம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி அரையிறுதியில் வென்று கோப்பையையும் கைப்பற்றியது. 

தற்போது நடைபெறவிருக்கும் போட்டியில் எந்த அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு செல்லும் என்பதை காண ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர்.

2008 -ம் ஆண்டு நடந்த போட்டியில், இந்திய அணியில் விராட் கோலி மற்றும் ஜடேஜாவும், அதேபோல் நியூசிலாந்து அணியில் கேன் வில்லியம்சன் மற்றும் டிம் சவுதி ஆகியோர் இருந்தனர். இவர்கள் தற்போதைய உலகக்கோப்பை தொடரிலும் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
first 5 lakhs viewed thread tamil
Like Reply
[color=var(--titleColor)]தனியாருக்கு தாரை வார்க்கப் பட்டது தேஜாஸ் எக்ஸ்பிரஸ் ரயில் ![/color]
[color=var(--titleColor)]டெல்லி-லக்னோ இடையே ஓடும் தேஜாஸ் எக்ஸ்பிரஸ் தனியாரால் இயக்கப்படும் முதல் ரயிலாக அமையவுள்ளது.[/color]



டெல்லி-லக்னோ இடையே ஓடும் தேஜாஸ் எக்ஸ்பிரஸ் தனியாரால் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி-லக்னோ இடையே ஓடும் தேஜாஸ் எக்ஸ்பிரஸ் 2016 இல் அறிவிக்கப்பட்டது. டெல்லி- லக்னோ மார்க்கத்தில் நாள் ஒன்றுக்கு 50 ரயில்கள் இயக்கப்படுகின்றன. நாட்டிலேயே வெகு பிசியான மார்க்கம் இது.
தொழிற்சங்கங்களின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் ரயில்வே தனது இரண்டு ரயில்களை தனியார் துறைக்கு ஒப்படைப்பதற்கான செயலை முன்னெடுத்து வருகிறது. இதுபோன்ற மற்றுமொரு பாதையை தனியாரிடம் ஒப்படைக்க ரயில்வே வாரியம் ஆலோசித்து வருகிறது, அதுவும் 500 கி.மீ தூரத்திற்குள் இருக்கும்.
இந்த ரயில் தற்போது உத்தரபிரதேசத்தில் உள்ள ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது, மேலும் ஏல நடைமுறைக்கு பின்னர் தனியாரிடம் ஒப்படைக்கப்படும்.
"இந்த இரண்டு ரயில்களும் சோதனை அடிப்படையில் வழங்கப்படும், அடுத்த 100 நாட்களுக்குள் அவற்றில் குறைந்தபட்சம் ஒன்றை இயக்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். குறைந்த நெரிசல் உள்ள பாதைகளை கண்டறிந்து முக்கியமான சுற்றுலா இடங்களை இணைப்பதே இதன் யோசனையாக இருந்தது. இரண்டாவது பாதை விரைவில் அடையாளம் காணப்படும், "ஒரு மூத்த அதிகாரி கூறினார்.

இந்த முடிவு, நாடு முழுவதும் உள்ள ரயில்வே தொழிற்சங்கங்களிலிருந்து எதிர்ப்பை எழுப்பியுள்ளது, அவர்கள் இந்த விவகாரத்தில் பெரிய அளவிலான ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ளனர்.
[Image: kalaignarseithigal%2F2019-07%2F3b68fc46-...2Ccompress]
first 5 lakhs viewed thread tamil
Like Reply
[color=var(--titleColor)]மெஸ்ஸியை பின்னுக்கு தள்ளிய சுனில் சேத்ரி![/color]
[color=var(--titleColor)]தஜிகிஸ்தான் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் 2 கோல்கள் அடித்ததன் மூலம் சர்வதேச போட்டிகளில் அதிக கோல்கள் அடித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை இந்திய அணியின் கேப்டன் சுனில் சேத்ரி எட்டியுள்ளார்.[/color]


இந்தியா - தஜிகிஸ்தான் அணிகள் மோதிய போட்டி அகமதாபாத் மைதானத்தில் நேற்று நடைப்பெற்றது. 2-4 என்ற கணக்கில் இந்திய அணி தோல்வியை தழுவியது. இருப்பினும், இந்திய அணியின் கேப்டன் சுனில் சேத்ரி2 கோல்களை அடித்தார். இதன்மூலம், அதிககோல் அடித்தவர்கள் பட்டியலில் கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸியை பின்னுக்குத் தள்ளியுள்ளார்.
சர்வதேச போட்டிகளில் அதிக கோல்கள் அடித்தவர்கள் பட்டியலில் சுனில் சேத்ரி 70 கோல்களுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார். மூன்றாம் இடத்தில் 68 கோல்களுடன் மெஸ்ஸி உள்ளார். முதலிடத்தில் உள்ள போர்ச்சுக்கல் அணி வீரர் ரொனால்டோ 88 கோல்கள் அடித்துள்ளார்.
சர்வதேச போட்டிகளில் அதிக கோல்கள் அடித்தவர்கள் பட்டியல் !
* கிறிஸ்டியானோ ரொனால்டோ
* சுனில் சேத்ரி
* லியோனல் மெஸ்ஸி
* டேவிட் வில்லா
* எடின் டீகோ

கடந்த ஜனவரி மாதம் முதன் முறையாக மெஸ்ஸியை பின்னுக்குத்தள்ளி சுனில் சேத்ரி இரண்டாம் இடம் பிடித்தார். ஆனால், அதற்குப் பின்னர் மெஸ்ஸி சில போட்டிகளில் விளையாடி கோல்கள் அடித்து இரண்டாம் இடத்துக்கு முன்னேறினார். இந்நிலையில், தற்போது மீண்டும் மெஸ்ஸியை சுனில் சேத்ரி பின்னுக்குத் தள்ளியுள்ளார்.
[Image: kalaignarseithigal%2F2019-07%2F2ce797b8-...2Ccompress]
first 5 lakhs viewed thread tamil
Like Reply
நாயை கூட விட்டு வைக்காத ராட்சசர்கள் - உருக்குலைந்த குட்டிப்பப்பி

லக்னோ: உத்தரபிரதேச மாநிலத்தில் ஹத்ராஸ் பகுதியில் சந்தோஷ் தேவி என்பவரின் வீட்டில் செல்லமாக வளர்த்த பொமரேனியன் நாய் குட்டி உருக்குலைந்து கிடைந்தது. என்ன ஆச்சு செல்லத்துக்கு என்று பரிசோதனை செய்தபோது அதிர்ச்சியடைந்தார் காரணம் நாயின் உருப்புகள் சேதமடைந்திருந்தன. சில ஆண் மிருகங்கள் வலுக்கட்டாயமாக நாயுடன் உறவு கொண்டது தெரியவந்தது.
சந்தோஷ் தேவிக்கு நாய் என்றால் உயிர். பொமரேனியன் நாயை ஆசை ஆசையாக வளர்த்து வந்தார். இரு தினங்களுக்கு முன்பு அந்த நாய் சிதைந்து போயிருந்தது. இதற்குக் காரணம் பக்கத்து வீட்டில் இருந்த மூன்று கொடூரர்கள்தான் என்று தெரியவந்தது.

[Image: dog-rain45-1546856155-1562579359.jpg]



தினேஷ் குமார் என்பவன் தனது இரண்டு நண்பர்களுடன் வசித்து வருகின்றனர். குடி போதையில் இருந்த அவர்களின் கண்களில் அந்த பொமரேனியன் நாய் பட்டது. முட்டையை நாய்க்கு கொடுத்து விட்டு அதனை வலுக்கட்டாயமாக தூக்கிக்கொண்டு போய் அதனை கொடுமை படுத்தியிருக்கிறான்.

வியாழக்கிழமை இரவு முழுவதும் நாயை காணமல் தவித்த சந்தோஷ் தேவி, வெள்ளிக்கிழமையன்று காலையில் தினேஷ் குமாரின் அறையில் மயக்க நிலையில் இருந்த கண்டு பிடித்தார். பதறிப்போன சந்தோஷ் தேவி கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அங்கே நாயை பரிசோதித்த மருத்துவர்கள், உள்ளுறுப்புகள் காயமடைந்திருந்ததை டாக்டர்கள் கண்டுபிடித்தனர்.

நாயை சிதைத்த கொடூரர்களான தினேஷ் அவனது நண்பர்கள் மீது சந்தோஷ் தேவி போலீசில் புகார் அளித்தார். விசாரணையில் மூவரும் தங்களின் குற்றத்தை ஒப்புக்கொண்டனர். மூவர் மீதும் மிருகவதை தடுப்பு சட்டப்பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. நாட்டில் பெண்களுக்குத்தான் பாதுகாப்பில்லை என்று நினைத்தால் வீட்டின் செல்லப்பிராணிகளான நாய்க்குக் கூட பாதுகாப்பில்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
first 5 lakhs viewed thread tamil
Like Reply
[color=var(--title-color)]`என்ன காரு நகர மாட்டேங்குது?'- தலைகீழாகக் கவிழ்ந்த காருக்குள் உளறிய தொழிலதிபர்[/color]

[color=var(--title-color)]சென்ட்ரல் ரயில்நிலையம் அருகே நள்ளிரவில் மின்னல் வேகத்தில் வந்த கார், பிளாட்பாரத்தில் மோதி தலைகீழாக கவிழ்ந்தது. காருக்குள் சிக்கிய தொழிலதிபரை பொதுமக்கள் மீட்டனர்.[/color]
[Image: vikatan%2F2019-07%2F12043217-95ac-440b-a...2Ccompress][color=var(--meta-color)]விபத்தில் சிக்கிய சொகுசு கார்[/color]
[color=var(--content-color)]சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில் தென்னக ரயில்வே அலுவலகம் உள்ளது. இந்தப் பகுதியில் நேற்றிரவு சொகுசு கார், மின்னல் வேகத்தில் வந்தது. திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார், பிளாட்பாரத்தில் மோதி அப்படியே நடுரோட்டில் தலைகீழாகக் கவிழ்ந்தது. இந்தச் சத்தம் கேட்டு அந்தப் பகுதியில் உள்ளவர்கள் ஓடிவந்தனர். அப்போது டிரைவர் சீட்டில் ஒருவர், தலைகீழாகக் கிடந்தார்.[/color]
[color=var(--content-color)][Image: vikatan%2F2019-07%2Fd1036116-f7a6-443d-a...2Ccompress]
விபத்தில் சிக்கிய சொகுசு கார்
[/color]
[color=var(--content-color)]உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விபத்து குறித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கும் தகவல் தெரிவித்தனர். உடனடியாகக் கட்டுப்பாட்டு அறையிலிருந்து யானைக் கவுனி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் கவிழ்ந்து கிடந்த காரை, ஜே.சி.பி இயந்திர உதவியுடன் காரை அங்கிருந்து போலீஸார் அப்புறப்படுத்தினர்.[/color]
[color=var(--content-color)]இதையடுத்து, காரை ஓட்டிவந்தது யார் என்று போலீஸார் விசாரித்தனர். அப்போது அவரை பொதுமக்கள், ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்த தகவல் கிடைத்தது. அங்கு சென்று விசாரித்தபோது காரை ஓட்டிவந்தவர் சாகுல்ஹமீது என்றும் இவர், பர்மா பஜாரில் செல்போன் கடை நடத்திவருவதும் தெரியவந்தது. மேலும், இவர் குடிபோதையில் காரை ஓட்டியது போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.[/color]
[color=var(--content-color)][Image: vikatan%2F2019-07%2F7c0dd4dd-6ed7-437a-9...2Ccompress]
விபத்தில் சிக்கிய சொகுசு கார்
[/color]
[color=var(--content-color)]இதுகுறித்து போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் கூறுகையில், ``விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்குச் சென்றோம். அப்போது நடுரோட்டில் கார், கவிழ்ந்து கிடந்தது. காரை ஓட்டிய சாகுல் ஹமீதுக்கு முதலுதவி அரசு மருத்துவமனையில் அளிக்கப்பட்டது. அவர் போதையில் இருந்ததால் முழுமையாக விசாரிக்க முடியவில்லை. காலையில் அவரிடம் விசாரித்தபோது `நள்ளிரவு நேரம் என்பதால் வேகமாகச் சென்றேன். அப்போது கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்ததால் பிரேக் பிடித்தேன். இதனால்தான் கார் கவிழ்ந்துவிட்டது. நல்லவேளை நான் பிழைத்துக்கொண்டேன்' என்று கூறினார்.

[color=var(--content-color)]குடிபோதையில் காரை ஓட்டிய குற்றத்துக்காக சாகுல் ஹமீது மீது வழக்கு பதிவு செய்துள்ளோம். நள்ளிரவு நேரம் என்பதால் சாலையில் குறைவான எண்ணிக்கையில் வாகனங்கள் சென்றன. இதனால் பெரியளவில் விபத்து ஏற்படவில்லை. சாகுல் ஹமீது குடிபோதையில் இருந்ததற்கான பரிசோதனை செய்யப்பட்டு அதன் ரிப்போர்ட்டையும் பெற்றுள்ளோம். விரைவில் அவரின் லைசென்ஸை ரத்து செய்ய பரிந்துரை செய்யப்படும்" என்றனர்.[/color]
[color=var(--content-color)][Image: vikatan%2F2019-07%2F73e161c6-6a36-4a07-a...2Ccompress]
விபத்து
[/color]
[color=var(--content-color)]விபத்து நடந்த இடத்துக்கு விரைந்து வந்த பொதுமக்கள் போலீஸாரிடம் சில தகவல்களைத் தெரிவித்துள்ளனர். கார், கவிழ்ந்ததும் டிரைவர் சீட்டில் தலைகீழாக ஒருவர் கிடந்தார். அவரை நாங்கள் சிரமப்பட்டு மீட்டோம். அப்போது அந்த நபர் போதையில் ஏன் கார் நகரவில்லை என்று உளறினார். அந்தளவுக்கு அவர் போதையில் இருந்தார் என்று கூறியுள்ளனர்.[/color]
[color=var(--content-color)]சாகுல் ஹமீதுவின் கார் விபத்துக்குள் சிக்கிய இடத்தின் எதிரில்தான் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை உள்ளது. இதனால் அந்தப் பகுதியில் 24 மணி நேரமும் மக்கள் நடமாட்டம் இருக்கும். அவர்கள் மீது கார் மோதியிருந்தால் உயிரிழப்பு ஏற்பட்டிருக்கும். மேலும், தென்னக ரயில்வே பொது மேலாளர் அலுவலகம் அருகில் உள்ள பிளாட்பாரத்தில் இரவு நேரத்தில் குடும்பமாகச் சிலர் படுத்திருப்பதுண்டு. அவர்கள் மீது கார் ஏறியிருந்தால் உயிரிழப்பு ஏற்பட்டிருக்கும். கட்டுப்பாட்டை இழந்த கார் கவிழ்ந்ததால் உயிரிழப்பு ஏற்படவில்லை என்கின்றனர் போலீஸார்.[/color]
[color=var(--content-color)][Image: vikatan%2F2019-07%2F827e1cd7-4086-48aa-a...2Ccompress]
ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை
[/color]
[color=var(--content-color)]ஏற்கெனவே, போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க சென்னை உயர் நீதிமன்றம் போலீஸாருக்கு உத்தரவிட்டுள்ளது. இதனால் ஹெல்மெட் இல்லாமல் டூவிலர்களை ஓட்டுபவர்கள் மீது சென்னை போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும், ஆங்காங்கே வாகனச் சோதனையிலும் போலீஸார் ஈடுபட்டுவருகின்றனர். இருப்பினும் குற்றங்கள் குறைந்தபாடில்லை.[/color]
[/color]
first 5 lakhs viewed thread tamil
Like Reply
[color=var(--title-color)]உடனே சிறைக்குச் செல்லுங்கள்' - ராஜகோபால் வழக்கில் கறார் காட்டிய உச்ச நீதிமன்றம்![/color]

[color=var(--title-color)]சரவணபவன் ராஜகோபால் வழக்கில் அவர் சிறைக்குச் செல்ல, கால நீட்டிப்பு வழங்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது[/color]

















[color=var(--content-color)]ஹோட்டல் சரவண பவன் உரிமையாளர் ராஜகோபாலுக்கு, ஜீவஜோதியின் கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் கொலைவழக்கில், ஆயுள் தண்டனை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து செய்யப்பட்ட மேல்முறையீட்டில் அந்தத் தீர்ப்பை உறுதிசெய்து உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம். மேலும், தண்டனை அறிவிக்கப்பட்டதையொட்டி, சிறை செல்வதற்கு ஏதுவாக, அவர் ஜூலை 7-ம் தேதிக்குள் சரணடைய வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.


[color=var(--content-color)][Image: vikatan%2F2019-07%2F44a47cfe-c485-4ad3-8...2Ccompress]
saravana bhavan
[/color]

[color=var(--content-color)]ஜீவஜோதியின் தந்தை சரவணபவனில் உதவி மேலாளராகப் பணிபுரிந்து வந்தவர். அப்போது ஜோதிடர்களின் அறிவுரையின் பேரில், ஜீவஜோதியை மூன்றாவது திருமணம் செய்ய விரும்பினார் ராஜகோபால்.[/color]

[color=var(--content-color)]ஆனால், பிரின்ஸ் சாந்தகுமார் என்பவரை ஜீவஜோதி, காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஜீவஜோதியைத் திருமணம் செய்வதற்கு சாந்தகுமார் தடையாக இருந்ததால், ஆட்களை விட்டு அவரைக் கொலை செய்தார் ராஜகோபால்.[/color]

[color=var(--content-color)][Image: vikatan%2F2019-07%2F50ad3c33-56de-45e4-9...2Ccompress]
Jeeva jothi
[/color]

[color=var(--content-color)]இந்த வழக்கில் 2004-ம் ஆண்டு பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் ராஜகோபாலுக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனையுடன் 55 லட்சம் ரூபாய் அபராதத்தையும் விதித்தது. தண்டனையைத் தொடர்ந்து சில காலம் சிறையில் இருந்தார் ராஜகோபால். பின்னர் ஜாமீனில் வெளியே வந்தவர், அந்தத் தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்தார். எனினும், இந்த வழக்கில் உயர் நீதிமன்றம் ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. உச்ச நீதிமன்றம், அந்தத் தண்டனையை உறுதி செய்துள்ளது.

[/color]

[color=var(--content-color)]இந்தநிலையில், நீதிமன்ற உத்தரவுப்படி, குறிப்பிட்ட தேதிவரை சரணடையாத ராஜகோபால், இரு தினங்களுக்கு முன்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தனக்கு உடல்நிலை சரி இல்லை என்று தெரிவித்த அவர், உச்ச நீதிமன்றத்தில், தான் சரணடையும் காலத்தை நீடிக்குமாறு கோரிக்கை விடுத்து மனுத் தாக்கல் செய்தார்.[/color]
[color=var(--content-color)][Image: vikatan%2F2019-07%2F1d97c104-d941-448f-8...2Ccompress]
supreme court
[/color]
[color=var(--content-color)]இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு, ``இந்த வழக்கு நடைபெற்றுக்கொண்டிருக்கும் போது, ஒருமுறைகூட ஏன் உடல்நிலை சரி இல்லை என்பது பற்றிச் சொல்லவில்லை? குறிப்பாக, சரணடைவதற்கான தேதி முடிவடைந்துள்ள சூழலில், இவ்வளவு குறுகிய காலத்தில், திடீரென உடல்நிலையை ஏன் காரணம் காட்டுகிறீர்கள்? முன்கூட்டியே இந்த மனுவை ஏன் செய்யவில்லை?" என்று சரமாரிக் கேள்விகளை எழுப்பியதுடன், ராஜகோபால் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதையடுத்து, "உடனடியாக ராஜகோபால் சரணடைய வேண்டும். கால நீட்டிப்பு ஏதும் வழங்க முடியாது" என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.[/color]
[Image: vikatan%2F2019-07%2Fbe3be3cb-0942-45a5-a...2Ccompress]
[/color]
first 5 lakhs viewed thread tamil
Like Reply
இந்தியாவுக்கு எதிராக நியூசிலாந்து 211 ரன்கள் எடுத்த நிலையில்அரைஇறுதி ஆட்டம் மழையால் பாதிப்புஇன்று தொடர்ந்து நடைபெறும்


[Image: 201907100125536029_New-Zealand-scored-21...SECVPF.gif]

மான்செஸ்டர்,

உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிரான அரைஇறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுக்கு 211 ரன்கள் (46.1 ஓவர்) எடுத்திருந்த போது பலத்த மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. இந்த ஆட்டம் இன்று தொடர்ந்து நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


ஷமிக்கு இடமில்லை

இங்கிலாந்தில் நடந்து வரும் 12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இறுதிகட்டத்தை எட்டி விட்டது. இதில் மான்செஸ்டரில் நேற்று அரங்கேறிய முதலாவது அரைஇறுதி ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் இந்திய அணி, நியூசிலாந்தை எதிர்கொண்டது. இந்திய அணியில் ஒரே ஒரு மாற்றமாக குல்தீப் யாதவுக்கு பதிலாக யுஸ்வேந்திர சாஹல் சேர்க்கப்பட்டார். வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. நியூசிலாந்து அணியில் டிம் சவுதி கழற்றிவிடப்பட்டு லோக்கி பெர்குசன் இடம் பிடித்தார். இந்திய விக்கெட் கீப்பர் டோனிக்கு இது 350-வது ஒரு நாள் போட்டியாகும்.

‘டாஸ்’ ஜெயித்த நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் முதலில் பேட் செய்வதாக அறிவித்தார். இதன்படி நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மார்ட்டின் கப்திலும், ஹென்றி நிகோல்சும் களம் புகுந்தனர். மேகமூட்டமான சீதோஷ்ண நிலையில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் புவனேஷ்வர்குமாரும், ஜஸ்பிரித் பும்ராவும் மிரட்டினர்.

முதல் பந்திலேயே கப்திலுக்கு எல்.பி.டபிள்யூ. கேட்டு இந்திய வீரர்கள் முறையிட்டனர். நடுவர் மறுத்ததால் டி.ஆர்.எஸ். முறைப்படி அப்பீல் செய்யப்பட்டது. டி.வி. ரீப்ளேயில் பந்து லெக் ஸ்டம்பை விட்டு விலகிச் செல்வது தெரிந்தது. இதனால் இந்தியாவின் டி.ஆர்.எஸ். வாய்ப்பு வீணானது.

வில்லியம்சன்-டெய்லர்

முதல் 2 ஓவர் மெய்டன் ஆன நிலையில் 3-வது ஓவரில் கப்தில் (1 ரன், 14 பந்து) பும்ராவின் பந்து வீச்சில் ஸ்லிப்பில் நின்ற கோலியிடம் கேட்ச் ஆனார். 2-வது விக்கெட்டுக்கு கேப்டன் கேன் வில்லியம்சன், நிகோல்சுடன் இணைந்தார். இருவரும் எச்சரிக்கையுடன், நிதானமாக ஆடியதால் ஆட்டத்தின் போக்கு மந்தமானது. பவர்-பிளேயான முதல் 10 ஓவர்களில் அந்த அணி ஒரு விக்கெட்டுக்கு 27 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. நடப்பு உலக கோப்பையில் பவர்-பிளேயில் ஒரு அணியின் மோசமான ஸ்கோர் இது தான்.

அணியை சரிவில் இருந்து ஓரளவு மீட்ட இந்த ஜோடியை சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா பிரித்தார். அவரது பந்து வீச்சில் நிகோல்ஸ் (28 ரன், 51 பந்து, 2 பவுண்டரி) கிளன் போல்டு ஆனார்.

இதைத் தொடர்ந்து வில்லியம்சனும், முன்னாள் கேப்டன் ராஸ் டெய்லரும் கைகோர்த்து அணியை மீட்டெடுக்க போராடினர். இவர்களுக்கு சுழற்பந்து வீச்சாளர்கள் வெகுவாக நெருக்கடி தந்தனர். 15 முதல் 27-வது ஓவர் வரை பந்து பவுண்டரி பக்கமே போகவில்லை. இவர்களுக்கு அதிர்ஷ்டமும் துணை நின்றது. வில்லியம்சன் 36 ரன்னில் ரன் அவுட் கண்டத்தில் இருந்து தப்பினார். டெய்லர் 22 ரன்னில், பும்ராவின் பந்து வீச்சில் வழங்கிய கேட்ச் வாய்ப்பை விக்கெட் கீப்பர் டோனி கோட்டை விட்டார். இதற்கிடையே அந்த அணி 28.1 ஓவர்களில் 100 ரன்களை தொட்டது.

மழையால் பாதிப்பு

அணியின் ஸ்கோர் 134 ரன்களை (35.2 ஓவர்) எட்டிய போது வில்லியம்சன் 67 ரன்களில் (95 பந்து, 6 பவுண்டரி) சாஹலின் பந்து வீச்சில் கேட்ச் ஆனார். அடுத்து வந்த ஜேம்ஸ் நீஷம் (12 ரன்) தாக்குப்பிடிக்கவில்லை. ஆடுகளம் பேட்டிங்குக்கு கடினமாக இருந்த போதிலும் டெய்லர் கொஞ்சம் வேகமாக ரன்களை திரட்டினார். இந்தியாவின் பீல்டிங்கும் கடைசி கட்டத்தில் சொதப்பியது.

நியூசிலாந்து அணி 46.1 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 211 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. தனது 50-வது அரைசதத்தை நிறைவு செய்த ராஸ் டெய்லர் 67 ரன்களுடனும் (85 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர்), விக்கெட் கீப்பர் டாம் லாதம் 3 ரன்னுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர்.

இன்று தொடர்ந்து நடக்கும்

தொடர்ந்து மழை பெய்ததால், நடுவர்களும், வீரர்களும் நீண்ட நேரம் காத்திருந்தனர். டக்வொர்த்-லீவிஸ் விதிமுறைப் படி 20 ஓவர்களில் இந்தியாவுக்கு 148 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்படலாம் என்ற சூழலும் வந்தது. ஆனால் விட்டு விட்டு பெய்த மழை அதற்கு இடம் கொடுக்கவில்லை.

இந்த உலக கோப்பையில் அரைஇறுதி மற்றும் இறுதிப்போட்டிக்கு மட்டும் மாற்றுநாள் (ரிசர்வ் டே) வைக்கப்பட்டுள்ளது. இதன்படி மழையால் பாதிக்கப்பட்ட இந்த அரை இறுதி ஆட்டம் மாற்று நாளான இன்று நடைபெறும். இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் இன்றைய நாளில் நியூசிலாந்து அணி அதே நிலையில் இருந்து (211-5 ரன்) எஞ்சிய 23 பந்துகள் பேட்டிங் செய்யும். அதன் பிறகு இந்திய அணி ஆடும்.

இன்றும் மழையால் ஆட்டம் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. ஒருவேளை இன்றும் ஆட்டத்தை பாதியில் கைவிட நேர்ந்தால், லீக் சுற்று முடிவில் புள்ளி பட்டியலில் முதலிடத்தை பெற்றதன் அடிப்படையில் இந்தியாவுக்கு இறுதிப்போட்டி அதிர்ஷ்டம் கிட்டும்.

முன்னதாக இந்தியா-நியூசிலாந்து இடையிலான லீக் ஆட்டம் மழை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்தானது நினைவிருக்கலாம்.
first 5 lakhs viewed thread tamil
Like Reply
இரவோடு இரவாக திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்ட முகிலன்

பாலியல் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட முகிலனை காலை 10 மணிக்கு கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், முகிலன் இரவோடு இரவாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

[Image: mugilan-in-van.jpg]இரவோடு இரவாக திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்ட முகிலன்
கடந்த பிப்ரவரி மாதம் திருவாரூரில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக முகிலன் மற்றும் அவரது போராட்ட குழுவில் இருக்கும் ராஜேஸ்வரி சென்ற போது முகிலன் தன்னை பாலியல் தொந்தரவு செய்ததாக கரூர் மாவட்டம் குளித்தலை மகளிர் காவல் நிலையத்தில் மார்ச் 31ம் தேதி புகார் அளிக்கப்பட்டது. 

ஆனால் அதற்கு முன்பாகவே முகிலன் காணாமல் போய் உள்ளார். இதனையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு முகிலன் ஆந்தராவில் இருந்து மீட்கபட்டு சென்னை சிபிசிஜடி காவல் துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். நேற்று எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்பு பாலியல் வழக்கில் தொடர்புடைய முகிலனை கரூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த வேண்டும் என நீதிபதி உத்திரவிட்டிருந்தார். புதன் கிழமை காலை 10 மணிக்கு முகிலனை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த உத்தரவிடப்பட்டது. ஆனால் காவல் துறையினர் இரவோடு இரவாக கரூர் நீதிமன்ற நீதிபதி விஜய்கார்த்திக் முன்னிலையில் ஆஜர் படுத்தினர். 

பின்னர் அவரிடம் விசாரனை மேற்கொண்ட பின்பு வரும் 24 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்குமாறு நீதிபதி உத்திரவிட்டார். இதனைத் தொடர்ந்து முகிலன் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். 

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முகிலனின் மனைவி பூங்கொடி “முகிலனுக்கு ஓய்வு கொடுக்காமல் இரவோடு இரவாக கரூர் அழைத்து வந்துள்ளனர். காலை 10 மணிக்கு ஆஜர்படுத்தும்படி தான் எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. மக்களுக்காக போராடியது தவறா? என கண்ணீருடன் கேள்வி எழுப்பினார். 


பாலியல் புகார் வழக்கில் குற்றம் சாட்டபட்ட சமூக செயற்பாட்டாளர் முகிலனை கரூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி விஜய் கார்த்திக் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவரை வரும் 24 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்திரவிட்டா
first 5 lakhs viewed thread tamil
Like Reply




Users browsing this thread: 176 Guest(s)