Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
நீதிமன்றத்தில் மதுபானம் பற்றிப் பேசியதால் நந்தினியைச் சிறைக்கு அனுப்பியது சரியா?
ஐபிசி பிரிவு 328-ன்படி டாஸ்மாக் மூலமாக போதைப் பொருள் விற்பது அல்லது விநியோகிப்பது குற்றமில்லையா?"
"நான் ஒருத்தன் திருந்தி மட்டும் என்ன ஆகிவிடப்போகிறது?" என்ற அலட்சியம், சுற்றுச்சூழல் தொடங்கி ஊழல்வரை, நாட்டைச் சீர்குலைக்கும் தீராத நோய் பரவ முக்கியக் காரணமாகிவிட்டது. உலகை உலுக்கும் இந்த அலட்சிய நோய்க்குப் பலியாகாத ஒரு நம்பிக்கை நட்சத்திரம் நந்தினி. மதுவிலக்கை வலியுறுத்தியும், மத்திய - மாநில அரசுகளின் செயல்பாடுகளைக் கண்டித்தும் நந்தினியும், அவரின் தந்தை ஆனந்தனும் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். 'திறக்காத கதவு எனினும், நான் தட்டிக்கொண்டே இருப்பேன். அது என் கடமை' என ஓயாது போராடிக்கொண்டே இருக்கிறார் இவர். பள்ளிப்பருவம் தொடங்கி, சட்டக்கல்லூரி மாணவியாகத் தொடர்ந்து, இன்று வழக்கறிஞராக உருவெடுத்திருக்கும் அவரின் போராட்டத்திற்குக் கிடைத்த பரிசு அவர் மீது எண்ணற்ற வழக்குகளும், ஐம்பது முறைக்கும் மேலான சிறைவாசமும்தான். தற்போது நந்தினிக்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ள நிலையில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், நந்தினியும் அவரின் தந்தையும் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள்.
விகடனின் #DoubtOfCommonMan பக்கத்தில் ``நீதிமன்றத்தில் மதுபானம் பற்றிப் பேசியதால் நந்தினியையும் ஆனந்தனையும் சிறைக்கு அனுப்பியது சரியா? அவர் மீது எந்தப் பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது?" என்ற கேள்வியை செல்வராஜ் என்ற வாசகர் எழுப்பியிருந்தார்.
[color][font]
2014-ம் ஆண்டு நந்தினியும், ஆனந்தனும் போராட்டம் நடத்தியபோது, போலீஸாரைத் தாக்கியதாக, திருப்பத்தூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கு தொடர்பான விசாரணை திருப்பத்தூர் கோர்ட்டில் நடந்தது. அந்த விசாரணையில் ஆஜரான நந்தினி, ``ஐ.பி.சி பிரிவு 328-ன்படி, டாஸ்மாக் மூலம் மதுபானத்தை விற்பது அல்லது விநியோகிப்பது குற்றமில்லையா?" என்று கேள்வி எழுப்பினர். `வழக்குக்குத் தொடர்பில்லாமல் நந்தினி பேசுவது தவறு என்று நீதிபதி கண்டித்தும் அவர் கேட்க மறுத்ததாகவும், நீதிமன்றத்தில் கூச்சலிட்டதாகவும்' கூறி நந்தினி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டிருக்கிறது.
[/font][/color]
[color][font]
ஒருவர், நீதிமன்றம் வழங்கிய உத்தரவு அல்லது தீர்ப்பை மதிக்காவிட்டாலோ, நீதிமன்றத்தில் முறையின்றியும் மரியாதையின்றியும் நடந்து கொண்டாலோ, நீதிமன்றத்தின் இறையாண்மைக்கு ஊறுவிளைவிக்கும்படி செயல்பட்டாலோதான், சம்பந்தப்பட்டவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர முடியும். இந்த வழக்கு தொடர்பாக விளக்கமளிக்கக் கூறி வாரன்ட் அனுப்புவது முதல் அவர்களைக் கைது செய்வதுவரை, எல்லாவிதமான உத்தரவுகளையும் பிறப்பிக்க, இதற்கென பிரத்யேகமாக உள்ள நீதிமன்ற அவமதிப்புச் சட்டம் 1971-ன் கீழ் நீதிபதிக்கு அதிகாரம் உண்டு.
அதன்படி, திருப்பத்தூர் நீதிமன்ற நீதிபதி சாமுண்டீஸ்வரி பிரபா உத்தரவின்பேரில், அவர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
குணா ஜோதிபாசு என்பவருடன் நந்தினிக்கு ஜூலை 5ம் தேதி திருமணம் நடக்கவிருந்த நிலையில், ஜூலை 9-ம் தேதிவரை, நந்தினியையும் அவரின் தந்தையையும் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கைது செய்யப்பட மது ஒழிப்பு போராளி நந்தினி மற்றும் அவரது தந்தையை உடனே விடுவிக்க வேண்டும் என இணையதளத்தில் #ReleaseNandhini என்கிற ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆனது.
[/font][/color]
[color][font]
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடங்கி பி.ஜே.பி தேசியச் செயலாளர் எச்.ராஜாவரை பல்வேறு அரசியல் தலைவர்கள் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளிலெல்லாம், அவர்களைக் கைது செய்தது போன்ற தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதில்லை என்னும்போது, நந்தினியை வேண்டுமென்றே பழிவாங்கும் வகையிலும், அரசுக்கு எதிரான அவரின் போராட்டங்களை ஒடுக்கும் நோக்கத்துடனும் இந்தக் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நந்தினியின் உறவினர்களும், சமூக ஆர்வலர்களும் குற்றம்சாட்டி வருகிறார்கள். போராளிகளின் வரிசையில் ஒடுக்கப்படும் நந்தினிக்கு நியாயம் கிடைக்க வேண்டி ஒருமித்த குரல் எழுப்புவது நமக்கான அறம். இந்த முறை அவருக்காக எல்லோரும் சேர்ந்து நீதியின் கதவுகளைத் தட்டுவோம்.
வாசகர்கள், இதுபோன்ற உங்களின் சந்தேகங்களை விகடனின் #DoubtOfCommonMan பக்கத்தில் பதிவிட கீழ்க்கண்ட லிங்க்-ஐ அழுத்துங்கள்.... Click here
[/font][/color]
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
ஈஸ்டர் தின குண்டுவெடிப்பு - இலங்கை முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சர் கைது!
ஈஸ்டர் தினத்தில் இலங்கையில் உள்ள தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகளில் தற்கொலைப்படைத் தாக்குதல் நடந்தப்பட்டது. இலங்கையில் மொத்தம் 9 இடங்களில் நடத்தப்பட்ட தாக்குதலில் 250-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்றது. இலங்கையில் இதுபோன்ற தாக்குதல் நடக்கவுள்ளதாக ஏப்ரல் 4-ம் தேதி இந்திய உளவுத்துறை இலங்கையை எச்சரித்திருந்தது. அப்படி இருந்தும் ஈஸ்டர் தினத்தில் இந்தத் தாக்குதல் நடத்தது. இலங்கையில் வசிக்கும் தொழிலதிபரின் மகன்கள் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டது தெரியவந்தது. இந்தச் சம்பவம் தொடர்பாக இலங்கை காவல்துறை தீவிர விசாரணையில் இறங்கியது. 100-க்கும் அதிகமானவர்களைக் கைது செய்து விசாரிக்க ஆரம்பித்தனர்.
சி.பி.ஐ அதிகாரிகள் இந்த வழக்கு தொடர்பாக விசாரணையில் இறங்கினர். இதில் அப்போதைய பாதுகாப்புத் துறை முன்னாள் செயலாளர் பெர்னாண்டோ, இலங்கை காவல்துறைத் தலைவர் புஜித் ஜெயசுந்தரா இருவரும் இந்தக் கொடூரத் தாக்குதலைத் தடுப்பதைத் தவறவிட்டுவிட்டனர் எனக் குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து, இவர்கள் இருவரும் பதவி விலக நேர்ந்தது. காவல்துறைத் தலைவர் புஜித் ஜெயசுந்தரா கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டார்.
இது தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக 3 பேர் கொண்ட குழுவை மைத்ரிபாலா சிறிசேனா அமைத்தார். அந்தக் குழு முன்பு நேரில் ஆஜராகுமாறு அறிவுறுத்தப்பட்டது. ஆனால், மருத்துவ காரணத்தைக் காட்டி ஆஜராகாமல் தவிர்த்து வந்தனர். இந்த நிலையில்தான், மருத்துவமனைக்குச் சென்ற காவலர்கள் இருவரையும் கைது செய்துள்ளன.
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
மும்பையில் 45 ஆண்டுகளுக்கு பிறகு வரலாறு காணாத மழை - ஒரே நாள் இரவில் 34 பேர் பலி
நாள் இரவில் மும்பை, தானே, பால்கர் மற்றும் புனேயில் 34 பேர் பலியாகி உள்ளனர்.
மும்பை கனமழை
[color][size][font]
மும்பை:
மராட்டியத்தில் தென்மேற்கு பருவமழை அதி தீவிரமடைந்து பெய்து வருகிறது. குறிப்பாக மாநில தலைநகர் மும்பையில் தாமதமாக தொடங்கிய பருவமழை நகரை புரட்டி எடுத்து வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை முதல் 5 நாட்களாக இரவு, பகலாக விடாமல் கொட்டி தீர்த்து வருகிறது. நகரமே வெள்ளத்தில் தத்தளிக்கிறது.
மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ள நிலையில், நேற்று முன்தினம் இரவும் விடிய, விடிய அடை மழை கொட்டி தீ்ர்த்தது. நேற்று பகலிலும் மழை வெளுத்து வாங்கியது. இதனால் மும்பை நகரமே வெள்ளத்தில் மிதக் கிறது.
தாழ்வான பகுதிகளில் வீடுகளும், சாலைகளும் தெரியாத அளவுக்கு வெள்ளக்காடாக மாறி உள்ளன. சாலை, ரெயில், விமான போக்குவரத்தும் முடங்கி விட்டது.
1974-ம் ஆண்டு மும்பையில் இதேபோன்ற பிரளயம் ஏற்பட்டது. அப்போது ஒரே நாளில் 375.2 மி.மீ. மழை பெய்தது. 45 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது அதே மழை அளவு பதிவாகி உள்ளது. அதாவது, நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் 375.2 மி.மீ. பதிவாகி வரலாறு காணாத மழை பெய்து உள்ளது.
மும்பையின் பக்கத்து மாவட்டங்களான தானே, பால்கரும் வெள்ளத்தில் மிதக்கின்றன.கொட்டி தீர்க்கும் பேய் மழை உயிர் பலியும் வாங்கி வருகிறது. கடந்த 29-ந் தேதி புனேயில் மழையின் போது, அடுக்குமாடி குடியிருப்பு சுற்றுச்சுவர் இடிந்து 15 பேர் பலியானார்கள்.
இந்தநிலையில், நேற்று ஒரே இரவில் மும்பை, தானே, பால்கர், புனேயில் பெய்த கனமழை கொத்து, கொத்தாக உயிர் பலி வாங்கி விட்டது.
மும்பை மலாடு கிழக்கு குரார் பிம்பிரிபாடா பகுதியில் இருக்கும் மலையடிவாரத்தில் உள்ள குடிசைவாசிகள் அனைவரும் அயர்ந்த தூக்கத்தில் இருந்த போது நேற்று அதிகாலை 2 மணியளவில் மலை தடுப்புச்சுவர் திடீரென இடிந்து குடிசை வீடுகள் மீது விழுந்து அமுக்கியது.
இதில் வீடுகள் தரைமட்டமாகின. உள்ளே தூங்கிக்கொண்டிருந்த பலர் இடிபாடுகளில் சிக்கி புதைந்தனர். பலர் படுகாயம் அடைந்து உதவி கேட்டு கூச்சல் போட்டனர். சுவர் இடிந்த சத்தம்கேட்டு அக்கம்பக்கத்து வீடுகளை சேர்ந்தவர்கள் ஓடிவந்தனர். இடிபாடுகளில் சிக்கியிருந்தவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து தீயணைப்பு படையினர் மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். கொட்டும் மழையில் இடிபாடுகளை அகற்றி உள்ளே சிக்கியிருந்தவர்களை மீட்கும் பணியில் துரிதமாக ஈடுபட்டனர்.
பெரும் சிரமத்துக்கு மத்தியில் இடுபாடுகளுக்குள் சிக்கியிருந்த 21 பேர் பிணமாக மீட்டனர். 50-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் துடித்துக்கொண்டிருந்தனர். அவர்கள் அருகில் உள்ள அந்தேரி கூப்பர், காந்திவிலி சதாப்தி, மலாடு எம்.டபிள்யு. தேசாய், ஜோகேஸ்வரி டிராமாகா கேர் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டனர்.
மும்பை மலாடு பகுதியில் உள்ள சுரங்கப்பாதை வழியாக நேற்று அதிகாலை 4 மணி அளவில் ஒரு கார் செல்ல முயன்றது. அப்போது மழை வெள்ளம் காரை இழுத்து சென்றது.
இதில் துரதிருஷ்டவசமாக கார் வெள்ளத்தில் மூழ்கியது. காரில் இருந்த 2 பேர் வெளியே வர முடியாமல் காருக்குள்ளேயே உயிரோடு சமாதி ஆனார்கள். இந்த சம்பவம் பெருந்துயரத்தை ஏற்படுத்தியது.
தானே மாவட்டம் கல்யாணில் மழை பெய்து கொண்டிருந்த போது, அங்குள்ள தேசிய உருது பள்ளி சுற்றுச்சுவர் நேற்று அதிகாலை 12.30 மணியளவில் திடீரென இடிந்து விழுந்தது. இதில் அங்குள்ள குடிசை வீட்டில் வசித்து வந்த சோகன் காம்ப்ளே (வயது60), கரீனா சந்த் (25), பூசன் சந்த் என்ற 3 வயது சிறுவன் என 3 பேர் உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் காயம் அடைந்த ஆர்த்தி (வயது16) என்ற சிறுமி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டாள். மேலும் பால்கர் மாவட்டத்தில் ஜானு உம்பர்சாடா (60), கைலாஷ் நாகடே (29) ஆகிய 2 பேர் மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தனர்.
புனே அம்பேகாவ் பகுதியில் உள்ள சின்ஹாட் என்ற கல்லூரியின் சுற்றுச்சுவர் மழையின் போது இடிந்தது. இதில் அந்த சுற்றுச்சுவரை ஒட்டி குடிசை அமைத்து தங்கியிருந்த 6 தொழிலாளர்கள் பலியானார்கள். 2 பேர் காயம் அடைந்தனர்.
ஒரே இரவில் மழைக்கு 34 பேர் பலியாகி இருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மராட்டியம் முழுவதும் கடந்த 5 நாட்களில் மழையின் காரணமாக ஏறத்தாழ 60 பேர் வரை உயிரிழந்து இருக் கிறார்கள்[/font][/size][/color]
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
`பழைய பேலன்ஸை வாங்கிக்கொண்டு கட்சியில் சேருங்கள்!' - இசக்கி சுப்பையாவுக்கு எடப்பாடியின் `70 கோடி' அழுத்தம்
கடந்த வாரம்கூட பொதுச் செயலாளர் தினகரனை நேரில் சந்தித்து நீண்டநேரம் பேசினார் இசக்கி. அப்போதுகூட இப்படியொரு முடிவில் அவர் இருப்பது குறித்து யாருக்கும் தெரியவில்லை. அசோக் நகரில் உள்ள கட்டடமானது, 35 மாதகால குத்தகை அடிப்படையில் இயங்கி வருகிறது. அதற்கு முறையாகப் பணம் செலுத்தியிருப்பதால் தொடர்ந்து அலுவலகம் செயல்படுவதில் தடங்கல் இல்லை.
தென்காசியில் அ.தி.மு.க உடனான இணைப்பு விழாவை மிகப் பிரமாண்டமாக நடத்தவிருக்கிறார் அ.ம.மு.க அமைப்புச் செயலாளர் இசக்கி சுப்பையா. `மக்களின் முதல்வர் எடப்பாடி' என அவர் சூட்டிய புகழாரத்தை அ.ம.மு.க நிர்வாகிகள் ரசிக்கவில்லை. `தமிழக அரசிடமிருந்து அவருக்கு 60 கோடி ரூபாய்க்கும் அதிகமான ஒப்பந்தப் பணம் வர வேண்டியிருக்கிறது. இதையே துருப்புச் சீட்டாகப் பயன்படுத்திக் கொண்டார் எடப்பாடி பழனிசாமி' என்கின்றனர் அ.ம.மு.க வட்டாரத்தில்.
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
சென்னை அசோக் நகரில் அம்மா முன்னேற்றக் கழகத்தின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. அ.தி.மு.க முன்னாள் அமைச்சரும் அ.ம.மு.க அமைப்புச் செயலாளருமான இசக்கி சுப்பையாவுக்குச் சொந்தமான கட்டடம் இது. தற்போது அ.தி.மு.க-வில் இசக்கி சுப்பையா ஐக்கியமாக இருப்பதால், `இந்தக் கட்டடத்தில் இனி அ.ம.மு.க இயங்குமா?' என்ற கேள்வியும் தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது. `கடந்த வாரம்கூட பொதுச் செயலாளர் தினகரனை நேரில் சந்தித்து நீண்டநேரம் பேசினார் இசக்கி. அப்போதுகூட இப்படியொரு முடிவில் அவர் இருப்பது குறித்து யாருக்கும் தெரியவில்லை. அசோக் நகரில் உள்ள கட்டடமானது, 35 மாதகால குத்தகை அடிப்படையில் இயங்கி வருகிறது. அதற்கு முறையாகப் பணம் செலுத்தியிருப்பதால் தொடர்ந்து அலுவலகம் செயல்படுவதில் தடங்கல் இல்லை. தற்போது இசக்கி சுப்பையாவுடன் மோதல் வலுத்துவிட்டதால் இந்தக் கட்டடத்தில் தொடர்ந்து இயங்குவதற்கான வாய்ப்புகள் இல்லை' என்கின்றனர் அ.ம.மு.க நிர்வாகிகள்.
இசக்கி சுப்பையா மனமாற்றத்தின் பின்னணி என்ன?
தென்காசி, அம்பை சட்டமன்றத் தொகுதியிலிருந்து 2011-ம் ஆண்டு எம்.எல்.ஏ-வாகத் தேர்வு செய்யப்பட்ட இசக்கி சுப்பையா, 48 நாள்கள் சட்டத்துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்தார். இவர் மீதான அதிருப்தி காரணமாகக் கடந்த தேர்தலில் அ.தி.மு.க தலைமை சீட் வழங்கவில்லை. ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு, தினகரனின் ஆதரவாளராக வலம் வந்தார். கடந்த மக்களவைத் தேர்தலில் நெல்லைத் தொகுதியில் போட்டியிட விரும்பியவருக்கு, தென்சென்னை தொகுதியை ஒதுக்கீடு செய்தார் தினகரன். இந்தத் தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் தி.மு.க வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன். ``தேர்தல் செலவுகளைவிடவும் இசக்கி சுப்பையா மனமாற்றத்தின் பின்னணியில் பல்வேறு விஷயங்கள் உள்ளன" என விவரித்த அ.ம.மு.க மூத்த நிர்வாகி ஒருவர்,
``தமிழக அரசில் பல்வேறு ஒப்பந்தப் பணிகளை எடுத்துச் செய்து வருகிறார் இசக்கி சுப்பையா. அ.ம.மு.க-வில் இணைந்த பிறகு, இந்தப் பணிகளுக்காகச் சென்று சேர வேண்டிய பில்களைக் கிடப்பில் போட்டுவிட்டார் எடப்பாடி பழனிசாமி. உள்ளாட்சித்துறையில் ஏராளமான பணிகளை எடுத்துச் செய்து வந்தார். அந்தவகையில் சுமார் 60 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணத்தை அரசு தரப்பிலிருந்து கொடுக்க வேண்டியுள்ளது. தினகரனோடு சேர்ந்துகொண்டு அ.தி.மு.க-வுக்கு எதிராகச் செயல்பட்டு வந்ததால், அடுத்தடுத்த ஒப்பந்தப் பணிகளில் புறக்கணிக்கப்பட்டார் இசக்கி சுப்பையா.
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
அந்தவகையில் கடந்த 3 ஆண்டுகளாகக் கடுமையான நெருக்கடியில் இருந்தார். தொடர்ச்சியாகப் பணிகள் இருந்தால்தான் தொழிலும் நல்லபடியாக நடக்கும். அவரை வீழ்த்துவதற்கு இந்த ஓர் ஆயுதத்தை மட்டுமே கையில் எடுத்தார் எடப்பாடி பழனிசாமி. அ.ம.மு.க-விலிருந்து முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி வரும் தென்மண்டல பிரமுகர் மூலமாகவே இசக்கி சுப்பையாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. `பழைய பேலன்ஸை வாங்கிக்கொண்டு கான்ட்ராக்டைத் தொடருங்கள்' என முதல்வர் தரப்பில் உறுதியளிக்கப்பட்டதால், அவரும் அதை ஏற்றுக்கொண்டார். தினகரன் குடும்பத்தோடு அதிக நெருக்கத்தில் இருந்தாலும், தொழில்ரீதியான நெருக்கடியால் அ.தி.மு.க-வில் இணையும் முடிவுக்குத் தள்ளப்பட்டார் இசக்கி. வரும் 6-ம் தேதி தென்காசியில் நடக்கவிருக்கும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இணையவிருக்கிறார்" என்கின்றனர் விரிவாக.
இசக்கி சுப்பையா விலகல் குறித்துப் பேட்டியளித்த டி.டி.வி.தினகரன், ``கட்சியைவிட்டு வெளியே போவதற்கு ஒவ்வொருவருக்கும் ஒரு காரணம் தேவை. இசக்கி சுப்பையா பெரிய கான்ட்ராக்டர். அவருக்கு அரசிடம் இருந்து வர வேண்டிய தொகைகள் அதிகம் உள்ளன. வேலுமணி அதிகப்படியான தொல்லைகளைத் தருகிறார் எனச் சொல்வார். நாங்கள் இப்போது தோல்வியடைந்ததால் அவர் போகலாம். எங்களுக்கு இது பின்னடைவா என்பதை வருங்காலம் முடிவு செய்யும். ஏற்கெனவே இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ-வாக இருந்தவர். 48 நாள் ஒரு மண்டலத்துக்கு அமைச்சராக இருந்தவர். அவர் யாரைக் குறை சொல்கிறாரோ, அவர் சொல்லித்தான் இசக்கி சுப்பையாவுக்குப் பதவி கொடுத்தோம். எங்களால் முதலமைச்சர் ஆக்கப்பட்டவர் எங்களை எதிர்ப்பதால் நாங்கள் அழிந்துபோய்விட்டோமா. பன்னீர்செல்வமும் எங்களை எதிர்ப்பதால் அழிந்துபோய்விட்டோமா. எங்களால் கை காட்டப்பட்ட நிர்வாகிகள் வேறு இடம் தேடிப்போவதால் இன்னும் வலுவடைவோமே தவிர பாதிக்கப்பட மாட்டோம்" என்றார் ஆவேசத்துடன்.
தினகரனின் பேட்டியைக் கவனித்த இசக்கி சுப்பையா, ``தினகரன் அளித்த பேட்டியால் எனக்கு மனவருத்தம் ஏற்பட்டது. ஒரு தலைவருக்கு அழகல்ல. அவர் பதற்றத்தில் இருக்கிறார். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரால் ஈர்க்கப்பட்டுத்தான் கட்சிக்கு வந்தோம். ஜூலை 6-ம் தேதி அ.தி.மு.க-வில் 20,000 தொண்டர்களுடன் இணைகிறேன். மக்களின் முதல்வராக எடப்பாடி பழனிசாமி திகழ்கிறார். நானும் என் தொண்டர்களும் தாய்க் கழகத்துக்கே செல்கிறோம்" என விளக்கமளித்தார்.
இசக்கி சுப்பையா `மன மாற்றம்' குறித்து நம்மிடம் பேசிய அ.ம.மு.க செய்தித் தொடர்பாளர் புகழேந்தி, ``தி.மு.க-வை விட்டு வைகோ விலகியபோது ஏராளமான மாவட்டச் செயலாளர்கள் அவர் பின்னால் அணிவகுத்தனர். `இனி தி.மு.க அவ்வளவுதான்' எனப் பேசினர். ஆனால், முன்பைவிட வலுவாக அரசியல் களத்தில் தி.மு.க மீண்டெழுந்தது. அதைப்போலத்தான் இந்த இயக்கத்திலிருந்து யார் விலகினாலும் அ.ம.மு.க இன்னும் வலுவான இடத்தைப் பிடிக்கும். அ.ம.மு.க-வில் இருப்பதால் இசக்கி சுப்பையாவின் எதிர்கால ஒப்பந்தப் பணிகளுக்கும் பாதிப்பு ஏற்படுவதாகக் கருதுகிறார். அவரது ஒப்பந்தப் பணிகள் சிறக்க எங்களுடைய வாழ்த்துகள்" என்றார் நிதானமாக.
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
அரையிறுதியில் இந்தியா: ரோஹித் சர்மா அபார சதம்; பும்ரா 4 விக்கெட்: வெளியேறியது வங்கதேசம்
வெற்றி மகிழ்ச்சியில் இந்திய அணி. | ஏ.எப்.பி.
பர்மிங்ஹாமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நேற்று நடந்த உலகக்கோப்பை கிரிக்ெகட் லீக் ஆட்டத்தில் வங்கதேசம் அணியை 28 ரன்களில் வீழ்த்தியது இந்திய அணி.
வங்கதேசம் அணி தோல்வியால் உலகக்கோப்பைத் தொடரில் இருந்து வெளியேறியது. ஆஸ்திரேலியாவுக்கு அடுத்தாற்போல் 2-வது அணியாக அரையிறுதிக்கு இந்திய அணி முன்னேறியது.
முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களி்ல் 9 விக்கெட் இழப்புக்கு 314 ரன்கள் சேர்த்தது. 315 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய வங்கதேசம் அணி 48 ஓவர்களில் 286 ரன்களுக்கு ஆட்டமிழந்து 28 ரன்களில் தோல்வி அடைந்தது.
டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இந்திய அணியில் இரு மாற்றங்கள் செய்யப்பட்டன. ஜாதவுக்குப் பதிலாக தினேஷ் கார்்த்திக்கும், குல்தீப்புக்கு பதிலாக புவனேஷ்வர்குமாரும் சேர்க்கப்பட்டனர்
ரோஹித் சர்மா, ராகுல் இருவரும் நிதானமாக ஆட்டத்தைத் தொடங்கி அதன்பின் அதிரடிக்கு மாறி பவுண்டரிகளாக விளாசினர். இதனால் அணியின் ஸ்கோர் வேகமெடுத்து 9 ஓவர்களில் 50 ரன்களையும், 18 ஓவர்களில் 100 ரன்களையும் எட்டியது.
அதிரடியாக பேட் செய்த ரோஹித்சர்மா 45 பந்துகளில் அரைசதத்தையும், ராகுல் 57 பந்துகளில் அரைசதத்தையும் பதிவு செய்தனர். இவர்களைப் பிரி்்க்க வங்கதேச பந்தவீச்சாளர்கள் போராடியும் முடியவில்லை. 24 ஓவர்களில் இந்திய அணி 150 ரன்களை எட்டியது.
வங்கதேச பந்துவீச்சை துவம்சம் செய்த ரோஹித் சர்மா 90 பந்துகளில் சதம் அடித்தார். இந்த உலகக்கோப்பைத் தொடரில் 4-வது சதத்தை பதிவு செய்தார். முதல் விக்கெட்டுக்கு இருவரும் 180 ரன்கள் சேர்த்த நிலையில் பிரிந்தனர்.
ரோஹித் சர்மா 5 சிக்ஸர், 7பவுண்டரி உள்பட 92 பந்துகளில் 104 ரன்கள் சேர்த்து சவுமியா சர்க்கார் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 9 ரன்களில் ரோஹித்துக்கு தமிம் கேட்சை விட்டதே மறந்து போகும் அளவுக்கு ஆடினார் ரோஹித். அடுத்துவந்த கேப்டன் கோலி, ராகுலுடன் இணைந்தார்.இந்த ஜோடி சிறிதுநேரமே நிலைத்தது. ராகுல் 77 ரன்களில் ருபெல் ஹூசைன் பந்துவீச்சில் வெளியேறினார்.
3-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய ரிஷப் பந்த் கோலியுடன் சேர்ந்தார். இருவரும் நிதானமாக ரன்களைச் சேர்்த்துவந்த நிலையில் கோலி 26 ரன்னில் முஷ்தபிசுர் ரஹ்மான் ஓவரில் ஆட்டமிழந்தார். அதே ஓவரி்ல் அதிரடி ஆட்டக்காரர் ஹர்திக் பாண்டியாவும் வந்தவேகத்தில் டக்அவுட்டில் பெவிலியன் திரும்பினார். ஓரே ஓவரில் 2 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி சற்று தடுமாறியது.
அப்போது தோனி களமிறங்கி, ரிஷப்பந்துடன் சேர்ந்தார். ரிஷப்பந்த் அதிரடியாக ஆடி பவுண்டரி, சிக்ஸர் விளாச, தோனி அவ்வப்போது சில பவுண்டரிகளை விளாசி நிதானமாக பேட் செய்தார். தோனி மட்டும் பொறுப்பாக விளையாடாவிட்டால் இந்திய அணி மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி 300 ரன்களை எட்டி இருக்காது.
ரிஷப்பந்த் 41 பந்துகளில் 48ரன்கள்(1சிக்ஸர், 6பவுண்டரி) அடித்தநிலையில் சகிப் அல் ஹசன் பந்துவீச்சில் வெளியேறினார். தோனியும், ரிஷப்பந்தும் சேர்ந்து 5-வது விக்கெட்டுக்கு 40 ரன்கள் சேர்த்தனர். அடுத்துவந்த தினேஷ் கார்த்திக் தோனியுடன் இணைந்தார்.
தினேஷ் கார்த்திக் தனக்கு கிடைத்த முதல் வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக்கொள்ளாமல் 8 ரன்னில் ஆட்டமிழந்தார். முஷ்தபிசுர் ரஹ்மான் வீசிய கடைசிஓவரில் தோனி 33 பந்துகளில் 35 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அடுத்துவந்த புவனேஷ்வர் குமார்(2), ஷமி(1) என ஆட்டமிழந்தனர் இந்திய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 314 ரன்கள் சேர்த்தது.
வங்கதேசம் தரப்பில் முஷ்தபிசுர் ரஹ்மான் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
315 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் வங்கதேசம் அணி களமிறங்கியது. தமிம் இக்பால், சவுமியா சர்க்கார் ஆட்டத்தை தொடங்கினர். இந்திய வீரர்களின் பந்துவீ்ச்சுக்கு தொடக்கத்தில் இருந்து வங்கதேச பேட்ஸ்மேன்கள் திணறியதால், ஸ்கோர் மெதுவாகவே உயர்ந்தது. 22 ரன்னில் தமிம் இக்பால் ஷமி பந்துவீச்சில் போல்டாகி வெளியேறினார். 39 ரன்னில் முதல் விக்கெட்டை இழந்தது
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
அடுத்துவந்த சகிப் அல் ஹசன், சர்்க்காருடன் இணைந்தார். இருவரும் நிதானமாக ரன்களைச் சேர்த்தனர். பாண்டியா பந்துவீச்சில் சர்க்கார் 33 ரன்னில் ஆட்டமிழந்தார். 3-வது வி்க்கெட்டுக்கு களமிறங்கிய முஷ்பிகுர் ரஹிம்(24), அடுத்துவந்த லி்ட்டன் தாஸ்(24), மொசாடக் ஹூசைன்(3) என சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்துவந்தனர்.
விக்கெட்டுகள் சரிந்தாலும் அனுபவ வீரர் சகிப் அல்ஹசன் 58 பந்துகளில் அரைசதம் அடித்து 66 ரன்னில் பாண்டியாவிடம் விக்கெட்டை இழந்தார்.
7-வது விக்கெட்டுக்கு சபீர் ரஹ்மானும், சைபுதீனும் ஓரளவுக்கு நிலைத்து ஆடிய ஸ்கோரை உயர்த்தினர். இந்த 66 ரன்கள் சேர்த்துப்பிரிந்தது. சபீர் ரஹ்மான் 31 ரன்னில் பும்ரா பந்துவீச்சில் போல்டாகினார். அடுத்துவந்த மோர்தசா(8), ருபெல் ஹூசைன்(9), முஸ்தபிசுர்(0)என வரிசையாக விக்கெட்டுகளை பறிகொடுக்க 48 ஓவர்களில் 286 ரன்களுக்கு வங்கதேசம் அணி ஆட்டமிழந்தது. சைபுதீன் 51 ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்திய அணியின் பந்து வீச்சு அபாரம், அனைவருமே அற்புதமாக வீசினர். புவனேஷ்வர் குமார் 9 ஓவர் 51 ரன்1 விக்கெட். ஷமி 9 ஓவர் 68 ரன் 1 விக்கெட். சாஹல் 10 ஓவர் 50 ரன் 1 விக்கெட். ஹர்திக் பாண்டியா மிகப் பிரமாதம் 10 ஓவர் 60 ரன் 3 விக்கெட். பும்ரா மிகமிகப் பிரமாதம் 55 ரன்களுக்கு 4 விக்கெட்.
ஆட்டநாயகனாக ரோஹித் சர்மா தேர்வு செய்யப்பட்டார்
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
`இது இருந்தால்தானே அபராதம் விதிப்பீர்கள்' - போலீஸ் எஸ்.ஐ-க்கு `ஷாக்' கொடுத்த கூலித்தொழிலாளி
சென்னையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரிடமிருந்து இ-சலான் கருவியைப் பறித்துச் சென்றவரை போலீஸார் விரட்டிச் சென்று பிடித்தனர்.
சென்னையை அடுத்த கோவிலம்பாக்கம் ஈச்சங்காடு சந்திப்பில் மடிப்பாக்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கனகராஜ் வாகனச் சோதனையில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தார். அப்போது பைக்கில் ஒருவர் ஹெல்மெட் அணியாமல் வந்தார். அந்தப் பைக்கை கனகராஜ் மடக்கினார். அப்போது அந்த நபர் குடிபோதையில் பைக்கை ஓட்டி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த நபரிடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கனராஜ் விசாரணை நடத்தினார். அப்போது அவரின் பெயர் செந்தில்குமார் (42) என்று தெரியவந்தது. இந்தச் சமயத்தில் செந்தில்குமார், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கனகராஜ் வைத்திருந்த இ-சலான் கருவியைப் பறித்துக்கொண்டு பைக்கில் வேகமாகச் சென்றார். இதனால் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கனகராஜ் அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாகப் பள்ளிக்கரணை காவல் நிலையத்துக்கு சப்-இன்ஸ்பெக்டர் கனகராஜ் தகவல் தெரிவித்தார். இதையடுத்து போலீஸார் செந்தில்குமாரை விரட்டிப் பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அப்போது செந்தில்குமார் குடிபோதையில் இருந்தார். இதனால் செந்தில்குமாரின் உறவினர்களுக்கு போலீஸார் தகவல் தெரிவித்தனர். போதை தெளிந்த பிறகு செந்தில்குமாரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில் கோவிலம்பாக்கம், ரோஸ்நகரைச் சேர்ந்தவர் என்றும் கூலித்தொழிலாளி என்றும் தெரியவந்தது. இதையடுத்து செந்தில்குமார் மீது போலீஸார் வழக்குப்பதிந்து கைது செய்தனர். அவரிடமிருந்த இ-சலான் கருவியையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``செந்தில்குமார் மீது ஹெல்மெட் அணியவில்லை என்று கருதிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கனகராஜ் அபராதம் விதிக்க இ-சலானில் விவரங்களைப் பதிவு செய்துள்ளார். அப்போதுதான் செந்தில்குமார், குடிபோதையில் இருப்பது தெரியவந்தது. இதனால் அவர் மீது ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டியது, குடிபோதையில் வாகனத்தை ஓட்டியது என இரண்டு குற்றத்துக்காக அபராதம் விதிக்க போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கனகராஜ் இ-சலானில் பதிவு செய்துக்கொண்டிருந்தார்.
இதனால் செந்தில்குமார் ஆத்திரமடைந்தார். இது இருந்தால்தானே என் மீது அபராதம் விதிப்பீர்கள், இரண்டு வழக்குகள் போடுவீர்கள் என்று கூறியபடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கனகராஜிடமிருந்த இ-சலான் கருவியைப் பறித்தார். அடுத்து மின்னல் வேகத்தில் அங்கிருந்து புறப்பட்டார். இதனால் செந்தில்குமார் மீது மூன்று குற்றத்திற்காக வழக்கு பதிவு செய்துள்ளோம் என்றனர்.
போதையில் இருந்த செந்தில்குமார், நான் யார் தெரியுமா, என்னை ஏன் இங்கு அடைத்து வைத்துள்ளீர்கள் என்று கேள்வி கேட்டு போலீஸாரை படாதபாடுபடுத்தியுள்ளார். அவர் குடிபோதையில் இருந்ததை மருத்துவபரிசோதனை மூலம் போலீஸார் உறுதி செய்தனர். போதை தெளிந்த பிறகு செந்தில்குமார், `சார் என்னை மன்னித்துவிடுங்கள். நான் தெரியாமல் தவறு செய்துவிட்டேன்' என்று போலீஸாரிடம் கூறியுள்ளார். ஆனால், செந்தில்குமார் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
வாட்ஸ் அப், ஃபேஸ்புக்கில் புகைப்படம் பதிவிறக்க முடியாமல் பயனாளர்கள் அவதி!
இன்றைய காலகட்டத்தில் ஸ்மார்ட்போன் இல்லாதவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்கள் வாட்ஸ் அப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் பயனாளர்களாக இருப்பார்கள். நோட்டும் புத்தகமும் கையுமாக இளைஞர்கள் சுற்றிய காலம் மலையேறிவிட்டது. தற்போது எல்லோரும் வாட்ஸ் அப், ஃபேஸ்புக் சகிதமாகத்தான் சுற்றுகின்றனர். இந்தநிலையில், கடந்த சில மணி நேரங்களாக வாட்ஸ் அப் மற்றும் ஃபேஸ்புக்கில் சில இடர்ப்பாடுகள் ஏற்பட்டுள்ளன.
இந்தியா மட்டுமல்லாது அமெரிக்கா, ஐரோப்பாவிலும் இந்தப் பிரச்னை ஏற்பட்டுள்ளது. வாட்ஸ் அப்பில் டெக்ஸ்ட் மெசேஜ், புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்ப முடிகிறது. ஆனால், புகைப்படங்களை பதிவிறக்கம் செய்ய முடியவில்லை. வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில் வைக்கப்படும் புகைப்படங்கள் தெரியவில்லை. ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராமிலும் இதே பிரச்னை நிலவுகிறது. வாட்ஸ் அப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் இவை அனைத்தும் ஃபேஸ்புக் நிறுவனத்தோடுதான். இவற்றில் ஏதாவது ஒரு சர்வரில் ஏற்படும் பிரச்னை மற்றவற்றைப் பாதிக்கிறது. இந்தப் பிரச்னையைச் சுட்டிக்காட்டி பலர் ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
`வளர்பிறையில் வாரிசுக்குப் பதவி'... நாளை முடிசூடுகிறார் உதயநிதி!
தி.மு.க தலைவர் ஸ்டாலினின் மகனும் திரைப்பட நடிகருமான உதயநிதி ஸ்டாலின் இளைஞர் அணிச் செயலாளர் பதவிக்கு முடிசூட்டு விழா நாளை மாலை (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது.
தி.மு.க-வின் அதிகாரமிக்க பதவிகளில் ஒன்றாகக் கருதப்படுவது இளைஞர் அணிச் செயலாளர் பதவி. கருணாநிதி தி.மு.க தலைவராக இருந்தபோது அவருடைய மகன் ஸ்டாலினின் அரசியல் வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்ட அணிதான் இளைஞர் அணி. சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த அணியின் செயலாளர் பொறுப்பிலிருந்த ஸ்டாலின், தி.மு.க வின் பொருளாளர் பதவிக்கு வந்தபோதே தான் உருவாக்கிய இளைஞரணி பதவியை விட்டுக்கொடுத்தார். அதற்குபின் அந்தப் பதவியில் வெள்ளக்கோவில் சுவாமிநாதன் இருந்தார். இந்நிலையில் கருணாநிதி மறைவுக்குப் பிறகு ஸ்டாலின் தி.மு.க தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து அவருடைய வாரிசான உதயநிதி தி.மு.க கூட்டங்களில் வலிய கலந்துகொள்ள ஆரம்பித்தார்.
தி.மு.க மூத்த நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்களிடம் உதயநிதிக்கு முக்கியத்துவம் கொடுக்க வாய்மொழியாக வலியுறுத்தப்பட்டது. இந்நிலையில் நாடாளுமன்றத் தேர்தலின்போது தமிழகம் முழுவதும் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்தார். அவருடை பிரசாரத்துக்கு நல்ல ரெஸ்பான்ஸ் இருந்ததை ஒரு தந்தையாகப் பார்த்து பூரிப்படைந்துள்ளார் ஸ்டாலின். அதன்பிறகே உதயநிதிக்கு கட்சிப் பதவி வழங்க வேண்டும் என்ற பேச்சு வீட்டுக்குள்ளிருந்து கட்சிக்குள் சென்றுள்ளது. கடந்த மாதமே அவர் வசம் இளைஞர் அணி பதவியை ஒப்படைக்க தலைமை திட்டமிட்டது. ஆனால், ஜோதிட ரீதியாக இப்போது வேண்டாம் என்று தடுத்துவிட்டார்கள். உதயநிதி பதவியேற்க வசதியாக வெள்ளக்கோவில் சுவாமிநாதன் தனது ராஜினாமா கடிதத்தை ஏற்கெனவே கட்சித் தலைமையிடம் கொடுத்துவிட்டார்.
இந்நிலையில் இன்று உதயநிதியின் நெருங்கிய நண்பரும் சட்டமன்ற உறுப்பினருமான அன்பில் மகேஷுக்கு நெருக்கமானவர்கள் முகநூலில் நாளை உதயநிதி பதவியேற்கப் போவதாகப் பதிவிட்டுள்ளனர். இதுகுறித்து அறிவாலய வட்டாரத்தில் விசாரித்தபோது “உண்மைதான். செவ்வாய்க்கிழமை அமாவாசை, இன்று பாத்திமை, வியாழக்கிழமை வளர்பிறை என்பதால் அன்று மாலை முறைப்படி அறிவிப்பு வரவுள்ளது. இதுவும் நல்ல நேரம் பார்த்தே இந்த அறிவிப்பையும் வெளியிட உள்ளதாம் தி.மு.க. தலைமை. கருணாநிதி குடும்பத்தில் மூன்றாம் தலைமுறையின் அரசியல் என்ட்ரி வளர்பிறை நாளில் ஆரம்பமாகிறது.
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
தமிழகத்தில் ஜூலை 9க்குப் பிறகு டமால் டுமீல் மழை: தமிழ்நாடு வெதர்மேன்
சென்னை: தமிழகத்தில் இடைவேளை விட்டிருந்த தென்மேற்குப் பருவ மழை ஜூலை 9க்குப் பிறகு சூடுபிடிக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் தனது பேஸ்புக்கில் கூறியிருப்பதாவது, தமிழகம் மற்றும் சென்னையில் ஜூலை 9ம் தேதி முதல் டமால் டுமீல் மழை பெய்யும்.
[img=0x0]https://wtf2.forkcdn.com/www/delivery/lg.php?bannerid=0&campaignid=0&zoneid=5834&loc=https%3A%2F%2Fwww.dinamani.com%2Ftamilnadu%2F2019%2Fjul%2F03%2F%25E0%25AE%25A4%25E0%25AE%25AE%25E0%25AE%25BF%25E0%25AE%25B4%25E0%25AE%2595%25E0%25AE%25A4%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AE%25BF%25E0%25AE%25B2%25E0%25AF%258D-%25E0%25AE%259C%25E0%25AF%2582%25E0%25AE%25B2%25E0%25AF%2588-9%25E0%25AE%2595%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AF%2581%25E0%25AE%25AA%25E0%25AF%258D-%25E0%25AE%25AA%25E0%25AE%25BF%25E0%25AE%25B1%25E0%25AE%2595%25E0%25AF%2581-%25E0%25AE%259F%25E0%25AE%25AE%25E0%25AE%25BE%25E0%25AE%25B2%25E0%25AF%258D-%25E0%25AE%259F%25E0%25AF%2581%25E0%25AE%25AE%25E0%25AF%2580%25E0%25AE%25B2%25E0%25AF%258D-%25E0%25AE%25AE%25E0%25AE%25B4%25E0%25AF%2588-%25E0%25AE%25A4%25E0%25AE%25AE%25E0%25AE%25BF%25E0%25AE%25B4%25E0%25AF%258D%25E0%25AE%25A8%25E0%25AE%25BE%25E0%25AE%259F%25E0%25AF%2581-%25E0%25AE%25B5%25E0%25AF%2586%25E0%25AE%25A4%25E0%25AE%25B0%25E0%25AF%258D%25E0%25AE%25AE%25E0%25AF%2587%25E0%25AE%25A9%25E0%25AF%258D-3184617.html&referer=https%3A%2F%2Fnews.google.com%2F&cb=08c9cd5c4e[/img]
தென்மேற்குப் பருவ மழை இடைவேளை விடுவது இந்தியாவின் அனைத்துப் பகுதிகளுக்கும் நல்ல செய்தி அல்ல. ஆனால் தமிழ்நாட்டுக்கு நல்ல செய்தியாகவே அமைந்துள்ளது. எப்போதெல்லாம் தென்மேற்குப் பருவ மழை இடைவேளை விடுகிறேதா, அப்போது தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் வெப்பச் சலனத்தால் மழை சூடுபிடிக்கும்.
2017ம் ஆண்டு தென்மேற்குப் பருவ மழை இடைவேளை விட்டிருந்த போது ஆகஸ்ட் - செப்டம்பரில் வட தமிழகத்தில் பெய்த மழையை யாரால் மறந்திருக்க முடியும்?
எனவே ஜூலை 9ம் தேதிக்குப் பிறகு தமிழகத்தில் பெய்யும் மழைக்காக காத்திருப்போம்.
உத்தரப்பிரதேசம், பிகார், மேற்கு வங்கம், டார்ஜிலிங் ஆகிய பகுதிகள் மீது அடுத்த வாரம் முழுக்க ஒரு கண்ணை வைத்திருக்க வேண்டும். இப்பகுதிகளில் மிகக் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
குறைந்தக் காற்றழுத்தத் தாழ்வு நிலை மும்பைக்கு அருகே மிக மெதுவாக நகர்வதால், மும்பை கடற்கரைப் பகுதிகளில் இன்று மாலை முதல் நாளை வரை மிகப் பலத்த மழை பெய்யும்.
அடுத்த இரண்டு மூன்று நாட்களுக்கு கர்நாடகாவின் காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் நல்ல மழைக்கு வாய்ப்பு உள்ளது. கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு பகுதிகளில் மழை பெய்தால், நாட்டின் பிற பகுதிகளில் வானிலை வறண்டு காணப்படும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
`தமிழக அரசின் நிலம் கையகப்படுத்தும் சட்டம் ரத்து!’ - சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி
நிலம் கையகப்படுத்தல் தொடர்பாக 2015-ம் ஆண்டு தமிழக அரசு கொண்டு வந்த சட்டத்தை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.
அரசு திட்டங்களுக்காகத் தனியார் நிலங்கள் கையகப்படுத்த, நியாயமான இழப்பீடு, வெளிப்படைத்தன்மை, மறுவாழ்வு மற்றும் மறு குடியமர்வு என்ற சட்டத்தை மத்திய அரசு 2013-ம் ஆண்டு கொண்டு வந்தது. மத்திய அரசின் இந்தப் புதிய சட்டத்திலிருந்து மாநில அரசின் நில கையகப்படுத்தும் சட்டங்களான மாநில நெடுஞ்சாலைகள் சட்டம், தொழில் பயன்பாட்டுக்கான நிலம் கையகப்படுத்தும் சட்டம் மற்றும் ஹரிஜன் நல சட்டம் ஆகிய சட்டங்களை பாதுகாக்கும் வகையில் 2015-ம் ஆண்டு தமிழக அரசு 105 (a) என்ற சட்டப் பிரிவை சேர்த்து நியாயமான இழப்பீடு, வெளிப்படைத்தன்மை, மறுவாழ்வு மற்றும் மறு குடியமர்வு என்ற சட்டத்தைக் கொண்டு வந்தது. மத்திய அரசு சட்டம் கொண்டு வந்து ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு, தமிழக அரசு கொண்டு வந்த இந்தப் புதிய சட்டம் செல்லாது என அறிவிக்கக் கோரி ராமநாதபுரத்தைச் சேர்ந்த கருணாநிதி உட்பட 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்குகள் நீதிபதி மணிக்குமார் மற்றும் சுப்ரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசின் சட்டத்தில் இருந்ததுபோல, தமிழக அரசு கொண்டு வந்த இந்தப் புதிய சட்டத்தில் பொதுமக்கள் கருத்து கேட்புக் கூட்டம் நடத்தாமல் நிலங்களை கையகப்படுத்த கூடாது என்ற விதி இல்லை எனவும், நிலம் கையகப்படுத்தும் 6 மாதத்தில் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்ற விதிகள் இல்லாததும் நில உரிமையாளர்களை மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக,
மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன் வாதிட்டார்.
கையகப்படுத்தும் நிலத்தின் மதிப்பில் 2 மடங்கு வரை இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் விவசாய நிலத்தை கையகப்படுத்தக் கூடாது என்றும் மத்திய சட்டத்தில் கூறப்படுள்ள நிலையில், தமிழக அரசின் இந்தச் சட்டத்தில் இது போன்ற வழி வகைகள் இல்லை எனவும் குற்றம் சாட்டினார். சட்டபேரவையில் அறிவிக்கை தாக்கல் செய்யாமல் தமிழக அரசு கொண்டு வந்த இந்தப் புதிய சட்டம் அரசியல் சாசனத்துக்கு எதிரானது எனவும், அவர் வாதிட்டார். தமிழக அரசின் இந்தச் சட்டத்தை ரத்து செய்தால் சுமார் 80,000 கோடி ரூபாய் மதிப்பிலான உள்கட்டமைப்பு திட்டங்கள் பாதிக்கப்படும் எனத் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், நில எடுப்பு தொடர்பாகத் தமிழக அரசு கொண்டு வந்த புதிய சட்டத்தை செல்லாது என அறிவித்து தீர்ப்பளித்தனர். மேலும், இந்த 3 நில கையகப்படுத்தல் சட்டங்களின் கீழ் தமிழக அரசால் நிலம் கையகப்படுத்தும் பணிகள் முடிவடைந்திருந்தால் இந்தத் தீர்ப்பு பொருந்தாது எனவும், செயல்பாட்டில் உள்ள திட்டங்களுக்கு மட்டுமே இந்தத் தீர்ப்பு பொருந்தும் எனவும் நீதிபதிகள் தெளிவுபடுத்தினர். இந்தத் தீர்ப்பின் காரணமாக ராமநாதபுரம் உப்பூரில் சுமார் 5,000 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் பணிகள் நிறுத்தப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
எடப்பாடி பழனிசாமியைக் கடுகடுக்க வைத்த ரோகிணி! - சேலம் கலெக்டர் இடமாற்றப் பின்னணி
கடந்த ஆகஸ்ட் 2017-ம் ஆண்டு சேலத்தின் முதல் பெண் கலெக்டராக ரோகிணி ஆர்.பாஜிபாகரே பதவியேற்றார். முதல்வர் மாவட்டத்தின் இளம் ஆட்சியராக வளம் வந்த இவர் கொஞ்ச நாள்களிலேயே தமிழகம் முழுவதும் வெகு பிரபலமடைந்தார். இவர் திடீரென நேற்று (27.6.2019) சேலம் மாவட்ட ஆட்சியர் பணியிலிருந்து மாற்றப்பட்டு தமிழ்நாடு இசை பல்கலைக்கழகப் பதிவாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.அரசு ஊழியர்களுக்கு மாறுதல் என்பது தவிர்க்க முடியாது. ஆனால், முதல்வர் மாவட்டத்தில் ஆட்சியராக இருந்த ஓர் ஆட்சியர் டம்மியான இன்னொரு பதவிக்கு மாற்றப்படும்போது மாறுதலுக்கான பல சந்தேகங்கள் எழுகின்றன. `சேலம் கலெக்டர் ரோகிணி காரணம் இல்லாமல் மாற்றப்படவில்லை. காரணத்தோடுதான் மாற்றப்பட்டிருக்கிறார்' என்கிறார்கள் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள விவரம் தெரிந்த அதிகாரிகள்.
அதோடு காரணங்கள் சிலவற்றையும் அவர்கள் பட்டியலிட்டனர். நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சார்ந்துள்ள அ.தி.மு.க வேட்பாளர் வெற்றி பெற அதிகாரிகள் ஒத்துழைக்கவில்லை என்பதே அவரது பணிமாறுதலுக்கான பொதுவான காரணம் என்கிறார்கள்.
அதோடு சில சம்பவங்களையும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். ``நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்துக்கு மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி சேலம் கோட்டை மைதானத்துக்கு வந்தபோது கோட்டை மைதானத்திலிருந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீடு உள்ள திருவாகவுண்டனூர் வரை அ.தி.மு.க கொடிக் கம்பங்கள் கட்டப்பட்டிருந்தன. அதையடுத்து தி.மு.க-வினர் மாவட்டத் தேர்தல் அதிகாரியான கலெக்டர் ரோகிணியிடம் புகார் தெரிவித்தார்கள். உடனே கலெக்டர் ரோகிணி அந்தக் கொடிக் கம்பங்களை அகற்றச் சொல்லி உத்தரவிட்டார். இது முதல்வர் தரப்பைக் கோபப்படுத்தியது.
சமீபத்தில் சேலம் 5 ரோடு பகுதியில் பறக்கும் மேம்பாலம் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு பாலத்தைத் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் யாரும் எதிர்பார்க்காத வகையில் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தி.மு.க-வைச் சேர்ந்தச் சேலம் மக்களவைத் தொகுதி உறுப்பினர் பார்த்திபனும், சேலம் தி.மு.க மத்திய மாவட்டச் செயலாளரும் வடக்குத் தொகுதி எம்.எல்.ஏ-வுமான பனமரத்துப்பட்டி ராஜேந்திரன் மற்றும் தி.மு.க-வினர் கலந்துகொண்டார்கள். முதல்வர் மேடையில் இருக்கும்போதே அ.தி.மு.க-வினருக்கும் தி.மு.க-வினருக்கும் ரகளை ஏற்பட்டது. இதில் முதல்வர் ரொம்ப அப்செட் ஆகிவிட்டாராம். `மக்களவை உறுப்பினராகப் பதவிப் பிரமாணமே எடுக்காதபோது, யாரைக் கேட்டு பார்த்திபனுக்கு அழைப்பு கொடுத்தீர்கள்' என்று கடுப்பானதோடு கலெக்டர் ரோகிணி மீது முதல்வர் அதிருப்தியானார்.
சேலம் மக்களவைத் தொகுதி உறுப்பினராகப் பார்த்திபன் வெற்றிபெற்ற பிறகு, பல முறை கலெக்டரை நேரில் சந்தித்து மக்கள் பிரச்னைக்காக மனுக்கொடுத்தார். எதிர்க்கட்சியைச் சேர்ந்த மக்களவை உறுப்பினரை கலெக்டர் உடனே நேரில் சந்திப்பதையும் அ.தி.மு.க-வினர் ரசிக்கவில்லை. அதை முதல்வர் காதுக்கும் கொண்டு சென்றிருக்கிறார்கள்.
ரோகிணி சேலம் மாவட்ட ஆட்சியராகப் பதவியேற்ற இரண்டு ஆண்டுகளில் மாவட்டத்தில் உள்ள 10 அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களின் பரிந்துரைகளையும் தட்டிக் கழித்து வந்ததையும், தொடர்ந்து முதல்வர் கவனத்துக்கு தெரியப்படுத்தி வந்தார்கள் அம்மாவட்ட அ.தி.மு.க-வினர்.
இப்படிப் பல காரணங்கள் சொன்னாலும் உண்மையில் சேலத்தில் தற்போது தி.மு.க-வினரின் ஆதிக்கம் அதிகரித்திருக்கிறது. அதனால் முதல்வருக்கு நேரடி ஆதரவாளராகச் செயல்படும் ஆட்சியர் இருந்தால் மட்டுமே இங்கு அரசியல் செய்ய முடியும். தி.மு.க மாநிலப் பொருளாளர் துரைமுருகன் வீட்டில் ரெய்டு நடத்தித் தேர்தலையே நிறுத்திய வேலூர் கலெக்டர் ராமன் இங்கு இருந்தால் சரியாக இருக்கும் எனக் கருதியே ராமனுக்கு, முதல்வர் தேர்தல் பரிசாக சேலம் மாவட்ட ஆட்சியர் பொறுப்பு வழங்கி இருக்கலாம்'' என்கிறார்கள்
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
27 ஆண்டுகளுக்குப்பின் அரையிறுதிக்கு தகுதிபெற்ற இங்கிலாந்து: நியூஸி.க்கு 4-வது இடம்: பாகிஸ்தானுக்கு கதவடைப்பு
கிரிக்கெட் போட்டியை உலகிற்க்கு அறிமுகம் செய்த இங்கிலாந்து , 1992-ம் ஆண்டுக்குப்பின் இந்தமுறைதான் உலகக் கோப்பை அரையிறுதிச்சுற்றுக்கு தகுதிபெற்றது.
ஜானி பேர்ஸ்டோவின் தொடர் சதம், ஜேஸன் ராயின் அதிரடி, கட்டுக்கோப்பு, துல்லியமான பந்து வீச்சு ஆகியவற்றால், செஸ்டர் லீ ஸ்ட்ரீடில் நேற்று நடந்த உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் நியூஸிலாந்து அணியை 119 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது இங்கிலாந்து அணி.
முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 305 ரன்கள் சேர்த்தது. 306 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய நியூஸிலாந்து அணி 45 ஓவர்களில் 186 ரன்களில் சுருண்டு 119 ரன்களில் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. சதம் அடித்து அசத்திய பேர்ஸ்டோ ஆட்டநாயகன் விருது வென்றார்.
இதுவரை இங்கிலாந்து அணி 9 போட்டிகளில் விளையாடி 6 வெற்றிகள், 3 தோல்விகள் என 12 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் இருக்கிறது. நியூஸிலாந்து தொடர்ந்து வெற்றிகள் பெற்று கடைசியில் தொடர்தோல்வி அடைந்துள்ளது. 9 போட்டிகளில் 5 வெற்றிகள், 3 தோல்விகள் ஒருபோட்டி ரத்து என 11 புள்ளிகளுடன் நல்ல ரன்ரேட்டில் 4-வதுஇடத்தில் இருக்கிறது
27 ஆண்டுகளுக்குப்பின்…
இந்த வெற்றியின் மூலம் 1992-ம் ஆண்டுக்குப்பின், அதாவது 27 ஆண்டுகளுக்குப்பி்ன் அரையிறுதிக்குள் இங்கிலாந்து அணி சென்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் 27 ஆண்டுகளுக்குப்பின் இந்திய அணியையும், நியூஸிலாந்து அணியையும் இங்கிலாந்து அணி இந்த முறை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
கிரிக்கெட்டின் தாய்வீடான இங்கிலாந்து கடந்த 44 ஆண்டுகளாக கோப்பையை வெல்ல முடியாமல், தவித்து வரும் நிலையில் அதற்கு இன்னும் 2 வெற்றிகள் மட்டுமே தேவைப்படுகிறது.
கதவடைப்பு
இந் போட்டியின் முடிவு மூலம் பாகிஸ்தானுக்கான அரையிறுதிக் கதவு அடைக்கப்பட்டது. நியூஸிலாந்து அணி 11 புள்ளிகளுடன் நல்ல ரன்ரேட்டில் 4-வது இடத்தில் இருக்கிறது. பாகிஸ்தான் அணி வங்கதேசத்தை மிகப்பெரிய ரன் வித்தியாசத்தில் வென்றால் மட்டுமே நியூஸிலாந்தை வீழ்த்தி அரையிறுதிக்குள் வர முடியம்
எப்படி என்று கேட்கிறீர்களா…
அதாவது வங்கதேச அணிக்கு எதிராக பாகிஸ்தான் முதலில் பேட் செய்து 308 ரன்கள் குவித்து வங்கதேசம் அணியை 0 ரன்களில் சுருட்ட வேண்டும். அல்லது 400 ரன்களை பாகிஸ்தான் சேர்்த்து, வங்கதேசத்தை 316 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்த வேண்டும். அதாவது 84 ரன்களுக்குள் வங்கதேசத்தை சுருட்ட வேண்டும்.
நியூஸிலாந்தை வரவிடக்கூடாது என்பதற்காக வங்கதேச அணி வேண்டுமென்றே ஆட்டமிழந்தால் மட்டுமே இதுசாத்தியம். ஆதலால் பாகிஸ்தானின் அரையிறுதிக் கனவு தகர்ந்தது.
அரையிறுதியில் யார் யாரைச் சந்திக்கப் போகிறார்கள் என்பதில்தான் சுவாரஸ்யம் இருக்கிறது. இன்னும், இந்தியா, ஆஸ்திரேலிய அணிகளுக்கு தலா ஒரு போட்டி மீதம் இருக்கிறது. இதில் அணிகள் பெறும் வெற்றியின் அடிப்படையில் யாருடன் யார் மோதுவது என்பது முடிவாகும்.
மிரட்டல் கூட்டணி
இங்கிலாந்து அணியைப் பொருத்தவரைக்கும் ஜேஸன் ராய், பேர்ஸ்டோ கூட்டணி அவர்களுக்கு மிகப்பெரிய பலமாகும். பேர்ஸ்டோ இந்தியாவுக்க எதிராக சதம் அடித்து, தொடர்ச்சியாக இந்த போட்டியிலும் சதம் அடித்தார். இந்த ஜோடி தொடர்ந்து 10-வது முறையாக 100ரன்களுக்கு மேல் பாட்னர்ஷிப்பை கொண்டுள்ளது. இவர்கள் இருவரும் அமைத்துக்கொடுக்கும் வலுவான தொடக்கம் அடுத்தடுத்து களமிறங்கும் பேட்ஸ்மேன்கள் தோளில் பாரமின்றி, அழுத்தமின்றி பேட் செய்ய முடிகிறது. அரையிறுதியில் இங்கிலாந்துடன் எந்தஅணி மோதினாலும், இந்த கூட்டணியை தொடக்கத்திலேயே உடைத்துவிட்டாலே பாதி வெற்றி கிடைத்துவிட்டதுபோலத்தான்.
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
இந்த ஆட்டத்தில் பேர்ஸ்டோ, ராய் இருவரும் முதல் விக்கெட்டுக்கு 123 ரன்கள் சேர்த்தனர். 30ஓவர்களில் 194 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து அசுரபலத்துடன் இங்கிலாந்து அணி அடுத்தடுத்து பேட்ஸ்மேன்களின் பொறுப்பற்ற ஆட்டத்தால் கடைசி 20 ஓவர்களில் 111 ரன்களுக்கு 6 விக்கெட்டை இழந்தது.
ஜேஸன் ராய், பேர்ஸ்ட்டோ அடித்த வேகத்தை பார்த்தபோது, ஸ்கோர் 400 ரன்களைத் தொடும் எனக்கணக்கிடப்பட்டது. ஆனால், மோர்கன் ஆட்டமிழந்தபின் ஸ்கோர் 280-ரன்களுக்குள் படுத்துவிடும் என தோன்றியது. கடைசியில் பிளெங்கெட், அதில் ரஷித் இருவரும் சேர்்ந்து 300 ரன்களுக்கு மேல் உயர்த்தினர்.
அதேபோல ராய், பேர்ஸ்டோ விக்கெட்டுகளை கழற்ற சிரமப்பட்ட நியூஸிலாந்து பந்துவீச்சாளர்கள், பந்து தேய்ந்தவுடன், கடைசி 20 ஓவர்களில் பந்தின் தையலை குறுக்காகப்பிடித்து வீசும் ஸ்லோ பந்துகள், லெக் கட்டர்கள் ஆகியவற்றே நேர்த்தியாக வீசி விக்கெட்டை வீழ்த்தினார்கள்.
இங்கிலாந்து அணியும் பந்துவீச்சில் பிரமாதப்படுத்தியது. குறிப்பாக ஆர்ச்சர், பிளெங்கெட், மார்கஉட் ஆகியோர் துல்லியமாக, கட்டுக்கோப்பாக வீசி திணறடித்தனர்.
வில்லிம்யஸன், டெய்லர்
நியூஸிலாந்து அணியைப் பொருத்தவரை அந்த அணி இன்னும் கேன் வில்லியம்ஸன், ராஸ் டெய்லரை மட்டுமே இருப்பது தெளிவாகிறது. தொடக்க ஆட்டக்காரர்கள் நிகோலஸ், கப்தில் இருவரும் மோசமாக ஆடி வருகிறார்கள். கப்தில் என்றோ அடித்த சாதனையை வைத்துக்கொண்டு இன்னும் அணியில் நீடிக்கிறார். இந்த தொடரில் ஆப்கானிஸ்தான் போட்டிையத் தவிர்த்து வேறு எந்த ஆட்டத்திலும் ரன் சேர்்்க்கவில்லை.
வில்லிம்ஸன், டெய்ஸர் ஆட்டமிழந்தவுடனே அணியில் மற்ற வீரர்களின் நம்பிக்கை உடைந்ததுபோன்று பேட் செய்து ஆட்டமிழக்கிறார்கள். 25 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 123 ரன்கள் சேர்த்திருந்த நியூஸிலாந்து அணி அடுத்த 20 ஓவர்களுக்கு வெறும் 50 ரன்கள் மட்டுமே சேர்த்து மீதமிருந்த விக்கெட்டுகளை இழந்தது படுமோசம்.
உலகக்கோப்பைப் போட்டியில் தொடர்ச்சியாக நியூஸிலாந்து வென்ற போட்டிகளில் எல்லாம் வில்லியம்ஸன், டெய்லர்தான் அடித்துக்கொடுத்தார்கள். சில ஆட்டங்களில் மட்டுமே நீஷம், லாதம் பங்களிப்புசெய்தார்கள். தொடர் வெற்றிகளைப் பெற்றுவிட்டு இப்போது தொடர்்ந்து தோல்வியைச் சந்திப்பது அரையிறுதியில் நம்பிக்கை குறைவை ஏற்படுத்தி ஆபத்தாக அமையும்.
பந்துவீச்சில் நியூஸிலாந்து அணி சிறப்பாகச் செயல்படுகிறார்கள் என்றாலும் பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளங்களில் விக்கெட்டுகளை வீழ்த்த திணறுகிறார்கள். அதிலும் தரமான சுழற்பந்துவீச்சாளர்கள் இல்லாதது அணிக்கு மகிப்பெரிய பலவீனமாகும்.
விக்கெட் சரிவு
308 ரன்கள் இலக்காகக் கொண்டு நியூஸிலாந்து அணி களமிறங்கியது. கப்தில், நிகோலஸ் தொடங்கினர். வோக்ஸ் வீசிய முதல் ஓவரிலேயே நிகோலஸ் எல்பிடபிள்யு முறையில் டக்அவுட்டில் வெளியேறினார். அடுத்த சிறிதுநேரத்தில் கப்தில் 8 ரன்னில் ஆர்ச்சரிடம் விக்கெட்டை பறிகொடுத்தார்.
ரன் அவுட்
3-வது விக்கெட்டுக்கு வில்லியம்ஸன், டெய்லர் ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்க முயன்றனர்.ஆனால், துரதிர்ஷ்டவசமாக வில்லியம்ஸன் 27 ரன்னில் மார்க் உட்டால் ரன் அவுட் செய்யப்பட்டார். அடுத்த சிறிது நேரத்தில் டெய்லர் 28 ரன்னில் அதில் ரஷித்தால் ரன் அவுட் செய்யப்பட்டார். இருவரும் ஆட்டமிழந்தபின் ஆட்டத்தில் சுவாரஸ்யம் குறைந்தது.
50 ரன்கள்
அதன்பின் விக்கெட் டாம் லாதம் மட்டுமே நிதானமாக பேட் செய்தார். மற்ற பேட்ஸ்மேன்களான நீஷம்(19), கிராண்ட்ஹோம்(3), சான்ட்னர்(12), ஹென்றி(4), போல்ட்(4) என விக்கெட்டுகளை சீராக இழந்தனர். லாதம் 57 ரன்னில் ஆட்டமிழந்தார். அணியில் அதிகபட்ச ஸ்கோர் லாதம் அடித்த 57 ரன்கள்தான்.
45 ஓவர்களில் 186 ரன்களுக்கு நியூஸிலாந்து அணி ஆட்டமிழந்தது. கடைசி 20 ஓவர்களில் 5விக்கெட்டுகள் இழந்து வெறும் 50 ரன்கள் மட்டுமே சேர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்த தரப்பில் மார்க்உட் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அதிரடி ஆட்டம்
முன்னதாக டாஸ்வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட் செய்தது. அதிரடிக் கூட்டணி பேர்ஸ்டோ, ஜேஸன் ராய் இருவரும் முதல் விக்ெகட்டுக்கு நல்ல அடித்தளம் அமைத்துக்கொடுத்தனர். ஆடுகளத்தின் காய்ந்த தன்மையால் பந்துகள் பேட்ஸ்மேனே நோக்கி நன்றாக வந்ததால், இதைப்பயன்படுத்தி இருவரும் நியூஸிலாந்து பந்துவீச்ச நொறுக்கினார்கள். பேர்ஸ்டோ 46 பந்துகளிலும், ராய் 55 பந்துகளிலும் அரைசதம் அடிதத்தனர்.
முதல் விக்கெட்டுக்கு 123 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். ராய் 60 ரன்னில் வெளியேறினார். அடுத்துவந்த ரூட், பேர்ஸ்டோவுடன் சேர்ந்து 71 ரன்கள் கூட்டணி சேர்த்துப் பிரிந்தார். ரூட் 24 ரன்னில் ஆட்டமிழந்தார். அதிரடியாக ஆடிய பேர்ஸ்டோ 95 பந்துகளில், தனது 9-வது சதத்தைப் பதிவு செய்தார். உலகக்கோப்பைப் போட்டியில் தொடர்ந்து 2-வது சதத்தை அடித்தார். அடுத்த சிறிதுநேரமே களத்தில் இருந்த பேர்ஸ்டோ 106 ரன்னில்(15பவுண்டரி,ஒரு சிக்ஸர்) ஆட்டமிழந்தார்.
பொறுப்பற்ற பேட்டிங்
அதன்பின் வந்த பேட்ஸ்மேன்கள் சராசரியாக 20 ரன்களுக்குள்ளாகவே வீழ்ந்தனர். கேப்டன் மோர்கன் மட்டும் 44 ரன்கள் சேர்த்து வெளியேறினார். பட்லர்(11), ஸ்டோக்ஸ்(11), வோக்ஸ்(4) ரசித்(16) என சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். பிளெங்கெட் 15 ரன்னிலும், ஆர்ச்சர் ஒரு ரன்னிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 305 ரன்கள் சேர்த்தது இங்கிலாந்து. நியூஸிலாந்து தரப்பில் நீஷம், ஹென்றி, போல்ட் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
முசுலீம் பெண்களைக் கும்பல் வல்லுறவு செய்யுங்கள் : பாஜக தலைவியின் அறைகூவல் !
“முசுலீம்களுக்கு ஒரே ஒரு தீர்வுதான் உள்ளது. இந்து சகோதரர்கள் 10 பேர் சேர்ந்து ஒரு குழு அமைத்து, அவர்களுடைய அம்மாக்கள், சகோதரிகளை கூட்டு வல்லுறவு செய்ய வேண்டும். பிறகு, அவர்களை நடுத்தெருவில் தூக்கிலிட வேண்டும்”
“இந்தியாவைக் காக்க இந்து ஆண்கள் முசுலீம் பெண்களை கும்பல் வல்லுறவு செய்வது ஒன்றே வழி” : பாஜக மகளிர் அணி தலைவி சொல்கிறார்
இந்திய சமூகத்திலிருந்து முசுலீம்களை தனிமைப்படுத்த வெளிப்படையான திட்டங்களுடன் களம் இறங்கிவிட்டது காவிப் படை. முசுலீம்கள் மீதான கும்பல் வன்முறை நோயாக பரவிவரும் நிலையில், முசுலீம் பெண்களை வல்லுறவு செய்யுங்கள் என வெளிப்படையாக அறிவிக்கிறார் ஒரு பாஜக நிர்வாகி. அதுவும் ஒரு பெண் அப்படி சொல்லியிருக்கிறார்.
காவிகள் நடத்திய கலவரங்களில் முசுலீம் பெண்கள் வல்லுறவு செய்யப்பட்ட வரலாறு மிகத் துயரமானது. உத்தர பிரதேச மாநில பாரதிய ஜனதா கட்சியின் மகளிர் அணித் தலைவியாக உள்ள சுனிதா சிங் கவுர், அவரது முகநூலில் எழுதிய பதிவு பலருக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது.
உத்தர பிரதேச மாநில பாரதிய ஜனதா கட்சியின் மகளிர் அணி தலைவியாக உள்ள சுனிதா சிங் கவுர்.
“முசுலீம்களுக்கு ஒரே ஒரு தீர்வுதான் உள்ளது. இந்து சகோதரர்கள் 10 பேர் சேர்ந்து ஒரு குழு அமைத்து, அவர்களுடைய அம்மாக்கள், சகோதரிகளை கூட்டு வல்லுறவு செய்ய வேண்டும். பிறகு, அவர்களை நடுத்தெருவில் தூக்கிலிட வேண்டும்” என வன்மத்தை கக்கியிருக்கும் சுனிதா,
முசுலீம் பெண்கள் தங்களது மானத்தை இழப்பதைத் தவிர, இந்தியாவைக் காப்பாற்ற வேறு வழியில்லை எனவும் தன்னுடைய வன்மத்துக்கு காரணம் சொல்கிறார். சுனிதாவின் பதிவு வைரலான பின், கண்டனங்கள் எழுந்ததால், பதிவை நீக்கிவிட்டார்.
பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால் சுனிதாவை பதவியிலிருந்து நீக்கிவிட்டதாகப் பாஜக அறிவித்துள்ளது. மாலேகான் குண்டு வெடிப்பு சம்பவத்தில் குற்றவாளியான பிரக்யா சிங், மக்களவை தேர்தல் பிரச்சாரத்தின்போது, கோட்சேவைப் புகழ்ந்து பேசினார். பாஜக அதைக் கண்டிப்பதாக நாடகம் ஆடியது. இது குறித்து விசாரிக்கக் குழு அமைக்கப்படுவதாகச் சொன்னது. இரண்டு மாதங்களாகியும் எந்தக் குழுவும் அமைக்கப்படவில்லை. காவிப் படை கோட்சே-வை புகழ்வது தொடர்ந்து கொண்டிருக்கிறது
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
சுந்தர மகாலிங்கம் கோயிலில் பெண் அதிகாரியை செல்போனில் படமெடுத்த அறநிலையத்துறை இணை ஆணையர் கைது
சாப்டூர் அருகே சுந்தரமகாலிங்கம் கோயிலில் தங்கியிருந்தபோது, பெண் அதிகாரியை செல்போனில் படமெடுத்த இந்து அறநிலையத் துறை இணை ஆணையர் பச்சையப்பன் கைது செய்யப் பட்டுள்ளார்.
மதுரை புது ராமநாதபுரம் ரோட்டில் வசிப்பவர் பச்சையப்பன் (55). இவரது சொந்த ஊர் தேனி. இந்து அறநிலையத் துறையின் இணை ஆணையராக பணிபுரிகிறார்.
மதுரை எல்லீஸ் நகரில் இவரது அலுவலகம் உள்ளது. இவரின் நிர்வாகத்தின் கீழ் மதுரை, விருதுநகர் உட்பட தென்மாவட்டத்தின் பல்வேறு கோயில்கள் நிர்வாக அலுவலர்கள், பணியாளர்கள் பணிபுரிகின்றனர்.
இந்நிலையில், விருதுநகர் மாவட்டம், சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் கடந்த 28ம் தேதி உண்டியல் எண்ணும் பணி இணை ஆணையர் பச்சையப்பன் தலைமையில் நடந்தது. இந்து அறநிலையத் துறை உதவி ஆணையர் திண்டுக்கல்லைச் சேர்ந்த அனிதா உட்பட பணியாளர்கள், தனியார் ஊழியர்கள் பங்கேற்றனர். உண்டியல் எண்ணும் பணி முடிவதற்கு இரவாகிவிட்டது.
இதையடுத்து மலையில் இருந்து தரைப்பகுதிக்கு இறங்கு முடியாத சூழலில் அதிகாரிகள், பணியாளர்கள் கோயில் பகுதியிலுள்ள கட்டிடத்தில் தங்கினர்.
இதற்கிடையில் அடுத்த நாள் காலையில் உதவி ஆணையர் அனிதா பாத்ரூம் சென்றபோது, அவரை பச்சையப்பன் பின்தொடர்ந்து தனது செல்போனிலும், பேனாவிலுள்ள நுண்ணிய கேமரா மூலமும் படமெடுத்துள்ளார். இதை அறிந்து அனிதா அதிர்ச்சி அடைந்தார்.
அவர் நேற்று சாப்டூர் காவல் நிலையத்தில் இணை ஆணையருக்கு எதிராகப் புகார் ஒன்றை அளித்தார். அதன்பேரில், டிஎஸ்பி மதியழகன், காவல் ஆய்வாளர் செல்வக்குமாரி விசாரித்தனர். ஐடி சட்டப்பிரிவின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்து பச்சையப்பனை கைது செய்தனர்.
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
அரையிறுதிக்குப் பாகிஸ்தான் தகுதி பெற என்ன நடக்க வேண்டும்? முன்னாள் கேப்டன் மொகமது யூசுப் ‘ஜோக்
இங்கிலாந்து அணி நியூஸிலாந்து அணியை நேற்று செஸ்டர் லீ ஸ்ட்ரீட் மைதானத்தில் நடைபெற்ற உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் 119 ரன்களில் வீழ்த்தியதையடுத்து பாகிஸ்தானின் அரையிறுதி வாய்ப்புகளுக்கு ஆணியறையப்பட்டது,
வங்கதேசத்துக்கு எதிராக பாகிஸ்தானுக்கு இருக்கும் ஒரே போட்டியில் பாகிஸ்தான் முதலில் பேட் செய்து 311 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். பாகிஸ்தான் முதலில் பந்து வீச நேரிட்டால் முதல் பந்து வீசுவதற்கு முன்பாகவே அரையிறுதி சாத்தியமற்ற வாய்ப்பிலிருந்தும் வெளியேறும். இத்தகைய விசித்திர நிலைமை அந்த அணிக்கு.
இந்நிலையில் முன்னாள் பாகிஸ்தான் வீரர் மொகமது யூசுப் உள்நாட்டுத் தொலைக்காட்சி சேனல் ஒன்றில் கூறும்போது, “பாகிஸ்தான் ஏற்கெனவே வெளியேறிவிட்டது இதில் எந்த வித சந்தேகமும் இல்லை. ஆனால் வங்கதேச அணி மீது இடிவிழுந்தால் அதனால் அவர்கள் விளையாட முடியாமல் போனால், அல்லது அவர்கள் ஒருவேளை அனைவரும் ஆடமுடியாத அளவுகு உடற்தகுதியை இழந்தால்.. ஒரு ஓவரில் 10 ரன்கள் எடுத்தால் போதும் என்ற நிலை பாகிஸ்தானுக்கு கிடைத்தால்... நாம் தகுதி பெறலாம்.
இப்போதைய நிலையில் சாத்தியமேயில்லை. எவ்வளவு கீழ்நிலையில் இருக்கும் கத்துக்குட்டி அணியுடன் ஆடினாலும் 316 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற முடியாது. வேறு வழியில்லை எதிரணியினரை மின்னல் தாக்கத்தான் நாம் வேண்டிக்கொள்ள வேண்டும்” என்று மொகமது யூசுப் ‘ஜோக்’ அடித்ததாக பாகிஸ்தான் ஊடகச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
first 5 lakhs viewed thread tamil
•
|