Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
அதானிக்கு எதிராக கிராம சபைத் தீர்மானம்... காட்டுப்பள்ளி மக்களின் அடுத்த அதிரடி!
உள்ளூருக்கான வரைபடத்தை தமிழக அரசு செய்து முடிக்காத வரையில் எங்கள் வாழ்வாதாரத்தையும் வாழ்விடத்தையும் பாதிக்கும் எந்த ஒரு திட்டத்தையும் எங்கள் பகுதியில் வர விடமாட்டோம் என்று ஒரு மனதாகத் தீர்மான நிறைவேற்றப்படுகிறது.
மண்ணிற்கும் மக்களுக்கும் தீங்கிழைக்கும் குறிப்பிட்ட சில வளர்ச்சித் திட்டங்களுக்கு எதிராக தொடர்ச்சியாகத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கிராம சபைகள் தீர்மானம் நிறைவேற்றிக்கொண்டிருக்கின்றன. டெல்டா பகுதி, கூடங்குளம் அனல்மின் நிலையம் ஆகியவற்றுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட கிராம சபைத் தீர்மானங்களின் வரிசையில் தற்போது அதானி துறைமுக விரிவாக்கத் திட்டத்திற்கு எதிராகவும் காட்டுப்பள்ளி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராம மக்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.
காட்டுப்பள்ளியில் அமைந்திருக்கும் அதானி துறைமுகம் கடந்த ஆண்டு துறைமுக விரிவாக்கத் திட்டத்தை மத்திய அரசிடம் முன்வைத்தது. 330 ஏக்கர் பரப்பளவில் தற்போது இருக்கும் அந்தத் துறைமுகத்தை 6200 ஏக்கர்களுக்கு விரிவாக்கம் செய்வதே அவர்களின் திட்டம். அதற்காகக் களாஞ்சி சேறு, கருங்காளி சேறு என்று கரைக்கடல் பகுதிகளை மணல் போட்டு மூடி நிலப்பகுதியாக மாற்றுவதும் அந்தத் திட்டத்தின் ஒருபகுதி. அந்தப் பகுதிகள் அதிகமான இறால், நண்டு மற்றும் சிறு மீன் வளங்கள் அதிகமுள்ள பகுதி. கடலை நிலமாக்கி நிலவியல் அமைப்பையே மாற்றுவதுதான் அவர்களின் குறிக்கோள். அதோடு துறைமுக விரிவாக்கம் கொற்றலை ஆறு மற்றும் ஆற்றங்கரையைப் பெருமளவில் விழுங்கி ஏப்பம் விடப்போகிறது. இது பெருமளவில் அந்தப் பகுதி மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும். அவர்களின் வாழ்விடங்களே இல்லாமல் போகும் அபாயமும் உள்ளது.
[color][font]
மக்களின் பல்வேறு எதிர்ப்புகளையும் மீறி, இந்தத் திட்டத்திற்கான சாத்தியக்கூறு அறிக்கையைச் சமர்ப்பித்து மத்திய வல்லுநர் குழுவிடம் சூழலியல் தாக்க மதிப்பீடு செய்வதற்கான குறிப்பாணை கேட்டு அதானி துறைமுகம் விண்ணப்பித்துள்ளது. அதோடு கடந்த ஆண்டு கடலோர மண்டலங்களில் கட்டுமானங்கள் செய்வதற்கு ஏற்பக் கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகள் மாற்றியமைக்கப்பட்டன. அதுவும் அந்தப் பகுதி மக்களின் வாழ்வியலுக்கு எதிராகவே அமைந்துள்ளது. ஆனால், இன்னமும் அந்தப் பகுதியின் உள்ளூர் கடற்கரை மண்டல மேலாண்மைத் திட்ட வரைபடத்தைச் செய்துமுடிக்கவில்லை. தமிழக அரசு அதை உடனடியாகச் செய்து முடிக்கவேண்டுமென்றும் அதானி துறைமுக விரிவாக்கத் திட்டத்தை முற்றிலுமாக ரத்து செய்யவேண்டுமென்றும் கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நேற்று நடைபெற்ற கிராம சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு...
தீர்மானம்-1
அதானி துறைமுகம் தற்போது காட்டுப்பள்ளியில் மட்டும் செயல்பட்டு வருகிறது. அதைக் களாஞ்சி, கருங்காளி, இப்ரஹாம்புரம் ஆகிய பகுதிகளுக்கும் அந்தப் பகுதிகளின் ஆறு மற்றும் ஆற்றுக்கரைப் பகுதி வரையிலும் விரிவாக்கம் செய்ய அதானி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்கான சாத்தியக்கூறு அறிக்கை செய்து முடித்து மத்திய வல்லுநர் குழுவிடம் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அறிக்கை செய்ய குறிப்பாணை கேட்டு விண்ணப்பம் செய்துள்ளனர். திட்டப்பகுதியாகக் காட்டப்பட்டுள்ள கடல், கடற்கரை மற்றும் ஆறு, ஆற்றுக்கரை பகுதியானது பழவேற்காடு பகுதியில் வாழும் ஐம்பதாயிரம் மீனவ மக்களின் வாழ்வாதாரமாகத் திகழ்கிறது. இது மிகவும் முக்கியமான மீன்பிடிப்புப் பகுதி.
கடலில் இயற்கையாக அமைந்துள்ள சேற்றுத் திட்டை இந்தத் திட்டம் அழிக்க இருப்பதால் பழவேற்காடு கடற்கரைப் பகுதியிலுள்ள மீனவக் கிராமங்கள் அனைத்தும் கடல் அரிப்பால் அழியும் அபாயம் உள்ளது. கடல் அரிப்பால் பழவேற்காடு ஏரியும் கடலும் ஒன்றிணையும் அபாயமும் இந்தத் திட்டத்தால் ஏற்பட்டுள்ளது. கடல் அரிப்பால் கடல் நீர் நிலத்தடி நீருடன் கலந்து நிலத்தடி நீர் பாதிக்கும் அபாயமும் இதனால் உண்டாகும். வெள்ள வடிகால் வாய்கள் அடைக்கப்பட்டு மழைக் காலங்களில் வெள்ள அபாயம் ஏற்படும் வாய்ப்புகளும் இருக்கின்றன. இவ்வளவு அழிவுகளைக் கொண்டுவர வல்ல இந்தத் துறைமுக விரிவாக்கத் திட்டத்தைப் பழவேற்காடு பகுதி மீனவ கிராம மக்களாகிய நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். ஆகையால் தமிழக அரசு இந்தத் துறைமுகத் திட்டத்தை உடனே ரத்து செய்யவேண்டுமென்று ஒரு மனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
[/font][/color]
துறைமுக விரிவாக்கத் திட்டத்தில் கையகப்படுத்த திட்டமிட்டிருக்கும் நிலப்பகுதியின் வரைபடம் சிவப்பு நிறத்தில் காட்டப்பட்டுள்ளது.
[color][font]
தீர்மானம்-2
கடற்கரை ஒழுங்குமுறை மண்டல அறிவிப்பாணையின் கீழ் கடற்கரை மண்டல மேலாண்மைத் திட்டம் செய்துமுடிக்க வேண்டும். உள்ளூருக்கான கடற்கரை மண்டல மேலாண்மை திட்ட வரைபடத்தில் மீனவக் கிராமங்களின் பொதுச் சொத்துகள், மீனவக் கிராம மக்களின் சமூகக் கட்டமைப்புகள், மீன்பிடி இடங்கள், மீன் இனப்பெருக்கம் செய்யும் இடங்கள் தெளிவாகக் காண்பிக்கப்பட வேண்டும். இன்றுவரை உள்ளூருக்கான கடற்கரை மண்டல மேலாண்மைத் திட்ட வரைபடத்தைத் தமிழக அரசு செய்துமுடிக்கவில்லை. இந்த வரைபடத்தைச் செய்து முடித்தால் மட்டுமே மீன்பிடி இடங்கள், மீன் இனப்பெருக்கம் செய்யும் இடங்கள் மற்றும் நம்முடைய பாரம்பர்ய உரிமைகள் அனைத்தையும் பாதுகாக்க முடியும். அதனால் உள்ளூருக்கான வரைபடத்தை தமிழக அரசு செய்து முடிக்காத வரையில் எங்கள் வாழ்வாதாரத்தையும் வாழ்விடத்தையும் பாதிக்கும் எந்த ஒரு திட்டத்தையும் எங்கள் பகுதியில் வர விடமாட்டோம் என்று ஒரு மனதாகத் தீர்மான நிறைவேற்றப்படுகிறது.
[/font][/color]
[color][font]
காட்டுப்பள்ளி துறைமுகத்துக்கும் பழவேற்காட்டுக்கும் இடையே வெறும் 8 கிலோமீட்டர் தூரமே உள்ளது. காட்டுப்பள்ளியில் அவர்கள் விரிவாக்கத் திட்டம் போட்டிருக்கும் பகுதிகள் முழுவதும் சேற்றுத் திட்டுகளைக் கொண்ட கடல் பகுதிகள். அதுதான் அதிகமான இறால், நண்டு, நவர மீன், கெழங்கான், கானாங்கெளுத்தி போன்றவை அதிகம் கிடைக்கும் பகுதி. அதோடு ஏரிகளின் முகத்துவாரப் பகுதிகளில் இறால் வகைகள் இனப்பெருக்கம் செய்கின்றன. சிறு ஆமை வகைகளும் இங்குதான் அருகில் கடற்கரை ஓரங்களில் இனப்பெருக்கம் செய்கின்றன. இந்த வளங்கள் அனைத்துமே விரிவாக்கத் திட்டத்தால் பாதிக்கப்படும். அது மீனவக் கிராமங்களின் வாழ்வாதாரங்களை ஒட்டுமொத்தமாகப் பாதிக்கும்.
கிராம சபைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களைக் கருத்தில் கொண்டு தமிழக அரசும் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகமும் அவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் திட்டத்திற்கு அனுமதி வழங்கக் கூடாது. தமிழக அரசு உடனடியாக உள்ளூருக்கான கடற்கரை மண்டல மேலாண்மைத் திட்ட வரைபடத்தைச் செய்துமுடிக்க வேண்டும்
[/font][/color]
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
சென்னை தண்ணீர் தட்டுப்பாடு குறித்து மெகபூபா கருத்து
சென்னை நகரில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவுவது குறித்து மெகபூபா முப்தி கருத்து தெரிவித்துள்ளார்.
மெகபூபா முப்தி
[color][size][font]
ஸ்ரீநகர்:
இந்திய கிரிக்கெட் அணி, உலக கோப்பை கிரிக்கெட் பந்தயத்தில் இங்கிலாந்து அணியுடன் இன்று மோதுகிறது. அப்போது, வழக்கமான நீல நிற சீருடைக்கு பதிலாக, ஆரஞ்சு நிற சீருடை அணியும் என்று இணையத்தளங்களில் தகவல்கள் வெளியாகி உள்ளன. இது, கிரிக்கெட் அணியை காவிமயமாக்கும் முயற்சி என்று சில அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
[/font][/size][/color] –– ADVERTISEMENT ––
[color][size][font][size][font][size]
[/size]
இந்நிலையில், சென்னை தண்ணீர் பிரச்சினையை சுட்டிக்காட்டி இதுகுறித்து காஷ்மீர் மாநில முன்னாள் முதல்-மந்திரி மெகபூபா முப்தி கூறியதாவது:-
சர்வதேச தண்ணீர் பிரச்சினை விசுவரூபம் எடுத்து வருகிறது. அதற்கு விரைவில் தீர்வு காண வேண்டும். சென்னை நகரில், கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. ஆனால், நாம் கிரிக்கெட் அணியின் சீருடை நிறம் விஷயத்தில் நமது ஆற்றலை செலவிட்டு வருகிறோம். தவறான பிரச்சினைகளுக்கு நாம் முன்னுரிமை கொடுத்து பேசி வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.[/font][/size][/font][/size][/color]
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
'ஜெய் ஸ்ரீராம்' தாக்குதல்: முஸ்லிம் சிறாரையும் விட்டு வைக்காத கும்பல்
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் ஜெய் ஸ்ரீராம் என்று கூறுமாறு வலியுறுத்தி முஸ்லிம் சிறார் முகமது தாஜ் மீது மர்ம கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக உத்தரப் பிரதேச மாநிலம் பரா காவல் துறை அதிகாரி சதீஷ் குமார் சிங் தெரிவிக்கையில்,
[img=0x0]https://wtf2.forkcdn.com/www/delivery/lg.php?bannerid=0&campaignid=0&zoneid=5834&loc=https%3A%2F%2Fwww.dinamani.com%2Findia%2F2019%2Fjun%2F29%2F'.-boy-thrashed-in-kanpur-for-refusing-to-chant-jai-shri-ram-3181876.html&referer=https%3A%2F%2Fnews.google.com%2F&cb=b927a143d5[/img]
"பரா பகுதியில் வசித்து வரும் முகமது தாஜ் (16) கித்வாய் நகரில் தொழுவையில் ஈடுபட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். வீட்டுக்கு நூறு மீட்டர் தொலைவு முன்பு, மூன்று, நான்கு அடையாளம் தெரியாத நபர்கள் தாஜை வழிமறித்துள்ளனர். தாஜ் தலையில் அணிந்திருந்த தொப்பிக்கு அந்த கும்பல் எதிர்ப்பு தெரிவித்தது. இதன்பிறகு, ஜெய் ஸ்ரீராம் என்று கூறுமாறு வலியுறுத்தியுள்ளனர். அதற்கு மறுப்பு தெரிவித்ததையடுத்து, தாஜை கடுமையாக தாக்கியுள்ளனர். குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் பணி நடைபெற்று வருகிறது" என்றார்.
இதுகுறித்து, முகமது தாஜ் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசுகையில்,
"அவர்கள் எனது தொப்பியை அகற்றினர். என்னை கீழே தள்ளிவிட்டு ஜெய் ஸ்ரீராம் என்று கூறுமாறு வலியுறுத்தி தாக்குதல் நடத்தினர். இந்த பகுதியில் தொப்பி அணிவதற்கு அனுமதி கிடையாது என்று கூறினர். உதவி செய்யுமாறு அருகில் இருந்தவர்களிடம் கதறினேன். அதன்பிறகு, அந்த பகுதியில் சென்றுகொண்டிருந்தவர்கள் காப்பாற்ற வந்துள்ளனர். இதை கண்டு, தாக்குதல் நடத்தியவர்கள் அங்கிருந்து தப்பித்துச் சென்றனர்" என்றார்.
இந்த சம்பவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
’’ஆப்கானிஸ்தான் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக வீசி, எங்களுக்கு நெருக்கடி கொடுத்தனர்’’ என்று பாகிஸ்தான் கேப்டன் சர்பிராஸ் அகமது தெரிவித்தார்.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் அணிகள் நேற்று மோதின. முதலில் பேட் செய்த ஆப்கான் அணி, 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 227 ரன்கள் சேர்த்தது. பாகிஸ்தான் வீரர் ஷகின் அப்ரிதி 4 விக்கெட்களை வீழ்த்தினார்.
எளிதான இலக்கை நோக்கி விளையாடிய பாகிஸ்தான் அணி, 156 ரன்னுக்கு 6 விக்கெட்டை இழந்து தடுமாறியது. பின்னர் வந்த இமாத் வாசிம் நிலைத்து நின்று ஆடி, பாகிஸ்தான் அணியை வெற்றி பெற வைத்தார். 49.4 ஓவர்களில் பாகிஸ்தான் 7 விக்கெட் இழப்புக்கு 230 ரன்கள் சேர்த்து, 3 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. கடைசிநேர பதற்றம் காரணமாக, ஆப்கானிஸ்தான் வீரர்கள் சில கேட்ச்களை கோட்டைவிட்டனர். ரன் அவுட் வாய்ப்புகளையும் தவறவிட்டனர். இந்த வெற்றி மூலம் 9 புள்ளிகளுடன் பாகிஸ்தான் 4-வது இடத்துக்கு முன்னேறியது.
இந்நிலையில், இன்று நடக்கும் இந்தியா- இங்கிலாந்து போட்டியில், இந்தியா வென்றால், பாகிஸ்தான் அணியின் அரையிறுதி வாய்ப்புக்கு சாதகமாக இருக்கும். இல்லை என்றால் சிக்கல்தான்.
இந்நிலையில் நேற்றைய போட்டி முடிந்ததும் பாகிஸ்தான் கேப்டன் சர்பிராஸ் அகமது கூறும்போது, ’’இது சிறப்பான வெற்றி. இந்த பிட்சில் ஆடுவது எளிதானதில்லை. இமாத் வாசிம் நன்றாக ஆடினார். அவருக்கு தலைவணங்குகிறேன். ஆப்கான் பந்துவீச்சாளர்கள் துல்லியமாக வீசி, நெருக்கடி கொடுத்தனர். எங்களுக்கு சரியான பார்ட்னர்ஷிப் தேவைப்பட்ட நிலையில், இமாத் அதை நிறைவேற்றினார். ஷாகின் அப்ரிதி, ஒவ்வொரு நாளும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அடுத்து இந்தியா- இங்கிலாந்து போட்டியை நாங்கள் பார்க்கப் போகிறோம். ஆனால் அதை பற்றி அதிகமாக யோசித்துக் கொண்டிருக்கவில்லை. சிறந்த அணி கண்டிப்பாக வெற்றி பெறும்’’ என்றார்
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
``60 சதவிகிதம்தான் சம்பளம் வரும் எனச் சொல்கிறார்கள்!" - போக்குவரத்து ஊழியர்கள் ஸ்ட்ரைக்கின் பின்னணி
சென்னையில், அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு ஜூன் மாதம் வழங்கப்படவேண்டிய சம்பளம் வழங்கப்படாததால், இன்று காலை முதல் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
வடபழனி, பெரம்பூர், குன்றத்தூர் உள்ளிட்ட பணிமனைகளில் உள்ள ஊழியர்கள், பேருந்துகளை இயக்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பேருந்துகள் இயங்காததால், காலையில் வேலைக்குச் செல்லும் ஊழியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் எனப் பலரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
போராட்டத்துக்கான காரணத்தை அறிந்துகொள்ள, போக்குவரத்து ஊழியர் எம்.டி.சி வெங்கடேசனைத் தொடர்புகொண்டு பேசினோம். “எங்களுக்கு எப்போதும் மாதத்தின் முதல் தேதியில் சம்பளம் வந்துவிடும். அப்படி இன்று வரவேண்டிய சம்பளம் 60 சதவிகிதம் மட்டுமே வழங்கப்படும், மீதியுள்ள 40 சதவிகித சம்பளம் பின்னர் வழங்கப்படும் என சென்னை மாநகர போக்குவரத்துக் கழக எம்.டி கணேசன் அறிவித்துள்ளார்.
போக்குவரத்துத் துறையின் நிதிநிலை சரியில்லை, பண வரவு இல்லை எனத் தொடர்ந்து கூறி வருகின்றனர். இந்தத் தகவல் அறிந்ததும் சென்னை முழுவதும் உள்ள போக்குவரத்து ஊழியர்கள் பேருந்துகளை எடுக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், ஒரு சில பணிமனைகளில் உள்ள உயர் அதிகாரிகள் இன்று இரவுக்குள் உங்களுக்கு முழுமையாகச் சம்பளம் வழங்கப்படும் என உத்திரவாதம் அளித்துள்ளால் அந்த பகுதிகளில் மட்டும் சில பேருந்துகள் வெளியில் சென்றுள்ளன. மற்ற பணிமனைகளில் இருந்து யாரும் பேருந்தை இயக்கவில்லை.
வெளியூர்களில் உள்ள போக்குவரத்து ஊழியர்களுக்கு (மப்சல்) சொந்த வீடு இருக்கும். அவர்கள் ஒரு நாள் விட்டு ஒரு நாள் வேலை செய்தால் போதும். அவர்களுக்கு இரண்டு சம்பள நடைமுறை ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும். ஆனால், தமிழகத்திலேயே சென்னையில் தான் அதிகமாகப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. நாங்கள் தினமும் வேலை செய்கிறோம். வாடகை வீட்டில்தான் உள்ளோம். மாத வருமானத்தை வைத்துதான் வீட்டு வாடகை, பிள்ளைகளின் பள்ளிச் செலவு ஆகியவற்றைப் பார்த்துவருகிறோம்.
இப்படி இருக்கையில், எங்களுக்கு வரவேண்டிய சம்பளத்தில் 60 சதவிகிதம் மட்டுமே வழங்கினால் எப்படி? சென்னை ஊழியர்களுக்கு இரண்டு சம்பள முறை சரிவராது. ஊழியர்களின் வேலை நிறுத்ததைத் தொடர்ந்து, அடுத்ததாக யூனியனில் உள்ள சிலர் எம்.டி-யிடம் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். இன்று முழு சம்பளமும் வந்துவிடும் எனக் கூறியுள்ளனர். சம்பளம் வருமா இல்லையா என்பது 11 மணிக்கு மேல்தான் தெரியும். அதற்கு மேல்தான் வண்டிகள் இயக்கம் குறித்து முழுமையாகத் தெரியும்” என்று கூறினார்.
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
`அனைத்து மதங்களையும் மதிக்கிறேன்!' - தன் மீதான விமர்சனத்துக்கு எம்.பி நுஸ்ரத் பதில்
அனைத்து மதங்களையும் மதிக்கிறேன். நான் என்ன அணிய வேண்டும் என யாரும் சொல்ல வேண்டாம்’ எனத் தன் மீதான விமர்சனத்துக்கு எம்.பி நுஸ்ரத் பதிலளித்துள்ளார்.
நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் மேற்கு வங்க மாநிலத்தின் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட நடிகை நுஸ்ரத் ஜஹான் சுமார் மூன்று லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல்முறையாக எம்.பியாக தேர்வாகியுள்ளார்.
கடந்த வாரம் தொடங்கிய நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தோடரில் பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உட்பட அனைவரும் எம்.பியாக பதவியேற்றுக்கொண்டனர். ஆனால் அவர்களுடன் இணைந்து எம்.பி நுஸ்ரத் ஜஹான் பதவியேற்கவில்லை.
கொல்கத்தாவைச் சேர்ந்த தொழிலதிபர் நிகில் ஜெயின் என்பவருக்கும், நுஸ்ரத் ஜஹானுக்கும் கடந்த 19-ம் தேதி துருக்கியில் திருமணம் நடைபெற்றது. இரு வீட்டாரின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே இவர்களின் திருமணத்தில் கலந்துகொண்டனர். இதனால் தன் திருமணத்தை முடித்துவிட்டு கடந்த இரு தினங்களுக்கு முன்னர்தான் நாடாளுமன்றம் வந்துள்ளார் நுஸ்ரத்.
இஸ்லாமிய பெண்ணான நுஸ்ரத், ஜெயின் மதத்தைச் சேர்ந்த ஒருவரைத் திருமணம் செய்துகொண்டதால் அவர்கள் முறைப்படி நெற்றில் குங்குமம், தாலி, புடவை, கை நிறைய வளையல் என முற்றிலும் மணப்பெண்ணாக நாடாளுமன்றம் வந்து பதவியேற்றுக்கொண்டார். நுஸ்ரத் இஸ்லாமிய விதிமுறைகளை மீறியதால் அவருக்கு `ஃபத்வா’ வழங்கப்பட்டுள்ளது. (ஃபத்வா - இஸ்லாமிய முறைப்படி தண்டிக்கப்பட வேண்டியவர்) மேலும் இதற்காக அவர் கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.
இந்நிலையில், தன் மீதான குற்றச்சாட்டுக்கு பதிலளித்து ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார் நுஸ்ரத். அதில், ``சாதி, மதம் ஆகிய தடைகளுக்கு அப்பாற்பட்ட இந்தியாவை நான் பிரதிநிதித்துவப்படுத்துகிறேன். நான் இன்னும் முஸ்லிமாகவே உள்ளேன். நான் எது அணிய வேண்டும் என யாரும் சொல்ல வேண்டாம். என் மதத்தின் மீதான விசுவாசத்தைத் தாண்டி அனைத்து மதங்களின் விலைமதிப்பற்ற கோட்பாடுகளையும் நான் நம்புகிறேன். மதிக்கிறேன்'' எனக் குறிப்பிட்டுள்ளார்.
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
தமிழகத்திலேயே முதல்முறை - கோவையில் ஏரியைச் சுற்றி அமைகிறது உயிர்வேலி!
தமிழகத்திலேயே முதல்முறையாக, கோவையில் உள்ள ஓர் ஏரியைச் சுற்றி உயிர்வேலி அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளன.
தமிழகம் முழுவதும் தண்ணீர்ப் பஞ்சம் வாட்டி வதைத்து வருகிறது. நீர்நிலைகள் வற்றி மைதானங்களாகக் காட்சியளிக்கின்றன. இதையடுத்து, நீர்நிலைகளை மீட்பதற்காக பொது மக்களும், தன்னார்வலர்களும் களமிறங்கி ஆங்காங்கே களப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. கோவை, சின்னவேடம்பட்டியில் 200 ஏக்கர் பரப்பளவில் ஓர் ஏரி இருக்கிறது. ஒரு லட்சம் மக்களின் நிலத்தடி நீர் ஆதாரம், ஆயிரக்கணக்கான விவசாய நிலத்துக்கான பாசனம் என்று இந்த ஏரியை நம்பி ஏராளமான மக்கள் இருந்தனர்.
மாங்கரையிலிருந்து கணுவாய் வழியாகத்தான், சின்னவேடம்பட்டி ஏரிக்குத் தண்ணீர் வரவேண்டும். ஆனால், அந்தப் பகுதிகளில் சட்ட விரோதமாகச் செம்மண் எடுப்பது போன்ற இயற்கைச் சுரண்டல்களால், கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக இந்த ஏரிக்குத் தண்ணீரே வரவில்லை. இதையடுத்து, அந்தப் பகுதியைச் சுற்றியுள்ள மக்கள் மற்றும் சூழலியல் ஆர்வலர்கள் இணைந்து இந்த ஏரியை மீட்பதற்கான பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஏரியைச் சுத்தம் செய்வது போன்ற களப்பணிகளில் ஈடுபட்டு வந்தனர். தற்போது, பலரும் இணைந்து, சின்னவேடம்பட்டி பாதுகாப்பு அமைப்பாக உருவாகியுள்ளது. இந்த ஏரி பல்லுயிர்களுக்கும் முக்கியம் என்பதால், இந்த ஏரியைச் சுற்றி உயிர்வேலி அமைக்கும் பணியை இன்று தொடங்கியுள்ளனர்.
இதுகுறித்து சின்னவேடம்பட்டி அமைப்பினர், “கோவை வடக்கு பகுதிக்கு இருக்கும் ஒரே நீராதாரம் இதுதான். 8 கி.மீ தொலைவுள்ள இதன் ராஜ வாய்க்கால் பகுதியை ஆய்வு செய்து, அரசின் அனுமதியுடன் தூர் வாரியுள்ளோம். அவினாசி அத்திக்கடவு திட்டத்தின் இரண்டாவது திட்ட மதிப்பீட்டில் இந்த ஏரி இணைக்கப்பட்டுள்ளது.
பொதுவாக, விவசாய நிலங்கள் மற்றும் வீடுகளைச் சுற்றித்தான் உயிர்வேலி அமைப்பார்கள். ஆனால், பல்லுயிர்ப் பெருக்கத்துக்காக, தமிழத்திலேயே முதல்முறையாக இந்த ஏரியைச்சுற்றி உயிர்வேலி அமைக்கும் பணியை இங்கு தொடங்கியுள்ளோம். இந்த மண்ணுக்குத் தகுந்த நாட்டு மரங்கள் மற்றும் தாவரங்களை ஆய்வு செய்து தேர்ந்தெடுத்து வருகிறோம். முழுக்க முழுக்க நாட்டு மரங்களை மட்டுமே நட உள்ளோம்” என்றனர்.
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
India Vs England : இந்தியா தோல்வி - பேர்ஸ்டோவின் சதம் முதல் தோனியின் சிக்ஸர் வரை
படத்தின் காப்புரிமைGETTY IMAGES
உலகக் கோப்பை 2019 தொடரில் இந்தியா முதல் தோல்வியைச் சந்தித்திருக்கிறது.
உலகக் கோப்பையில் சாதனை சேஸிங்கை நோக்கி விளையாடிய இந்தியா தோல்வியைத் தழுவியுள்ளது.
உலகக் கோப்பைத் தொடரில் சேஸிங்கில் இந்தியா 300 ரன்களை கடப்பது இது தான் முதல் முறை. ஆனால் வெற்றி பெற இந்த ரன்கள் போதுமானதாக இருக்கவில்லை.
2003 உலகக்கோப்பை இறுதிப்போட்டி, 2015 உலகக்கோப்பை அரை இறுதிப் போட்டி, 2017 சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி போல இப்போட்டியிலும் சேஸிங்கில் சொதப்பியது இந்திய அணி. எனினும் முந்தைய மூன்று போட்டிகளை விட நேற்றைய போட்டியில் கூடுதல் ரன்களை எடுத்தது இந்திய அணி.
உலகக்கோப்பை தொடரில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஆட்டத்தில் மட்டுமே இந்தியாவுக்கு சேசிங் வாய்ப்பு வந்தது, குறைவான இலக்கு என்றாலும் கூட தென்னாப்பிரிக்காவின் தரமான பந்துவீச்சை சமாளித்து கடைசி கட்டத்தில் வெற்றி கண்டது.
அதன்பின்னர் தொடர்ச்சியாக முதலில் பேட்டிங் செய்து வென்றுவந்த நிலையில் நேற்று சேஸிங்கில் சறுக்கியிருக்கிறது.
படத்தின் காப்புரிமைCLIVE MASON
''ஓவ்வொரு அணியும் ஓரிரு போட்டிகள் தோற்கத்தான் செய்யும். உங்களை விட எதிரணி சிறப்பாக விளையாடியது என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். நாங்கள் நல்ல கிரிக்கெட்டை விளையாடுகிறோம். டாஸ் இப்போட்டியில் மிகமுக்கிய பங்காற்றவில்லை ஆனால் நாங்கள் பேட்டிங்கில் மிகச்சிறப்பாக செயல்படவில்லை என்பதே உண்மை. இன்னும் கொஞ்சம் ரன் குவிப்பை அதிகரித்து இலக்குக்கு நெருக்கமாகச் சென்றிருக்கலாம். ஆனால் அவர்கள் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டார்கள்'' எனப் போட்டி முடிந்த பிறகு கூறினார் கோலி.
''இன்று சிறப்பாக கிரிக்கெட் விளையாடிய இங்கிலாந்துக்கு வாழ்த்துகள்'' என ட்வீட் செய்திருக்கிறார் வீரேந்திர சேவாக்.
2007 உலகக்கோப்பையின் இந்தியா லீக் சுற்றில் வெளியேறிய பிறகு ஐசிசி உலகக்கோப்பை ஒருநாள் தொடர்களில் இந்தியாவுக்கு கிடைத்திருக்கும் மூன்றாவது தோல்வி இது.
தோனியும் கேதர் ஜாதவும் ரன் ரேட் எகிறிய வேளையில் ஆறாவது விக்கெட்டுக்கு 31 பந்துகளில் 39 ரன்கள் குவித்தனர். இது குறித்து இந்திய ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அதிருப்தியைத் தெரிவித்து வருகின்றனர்.
''இந்தியாவின் வெற்றி ஓட்டத்தை தடுக்கக்கூடிய திறன் படைத்த ஒரே அணியாக இங்கிலாந்து இருக்கிறது. கடைசி கட்ட ஓவர்களை தோனி அணுகிய விதம் புரிந்துகொள்ள முடியாத வகையில் குழப்பாக இருக்கிறது'' என வர்ணனையாளர் சஞ்சய் மஞ்சரேக்கர் ட்விட்டரில் விமர்சித்துள்ளார்.
இங்கிலாந்து இந்தியாவை வென்றது எப்படி?
இங்கிலாந்து அணி டாஸ் வென்று பேட்டிங்கை எடுத்தது.
இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் முகமது ஷமி மற்றும் பும்ராவின் முதல் கட்ட பந்துவீச்சை திறம்பட சமாளித்த இங்கிலாந்து அணி முதல் பத்து ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 47 ரன்கள் குவித்தது. இந்த உலகக் கோப்பைத் தொடரில் இந்தியாவுக்கு எதிராக விளையாடிய அணிகளில் இதுவரை அதிக ரன்கள் குவித்தது ஆஸ்திரேலியா மட்டுமே (48/0).
முதல் பத்து ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி ரன்கள் சேர்த்த இங்கிலாந்து அணி அடுத்த பத்து ஓவர்களில் அதிரடியாக ஆடியது
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
இங்கிலாந்து அணி தனது பேட்டிங்கின் போது முதல் பத்து ஓவர்களில் நிதானம் காட்டி இரண்டாவது பத்து ஓவர்களில் அதிரடியாக ஆடி, பின்னர் நடுவரிசை ஓவர்களில் மிகவும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி கடைசி ஓவர்களில் வேகமான ரன் குவிப்பில் ஈடுபட்டு 337 ரன்கள் சேர்த்தது.
இதற்கு தலைகீழாக இந்திய அணி முதல் 15 ஓவர்களில் மிக மிக நிதானமாக விளையாடி நடுவரிசை ஓவர்களில் ஓரளவு ரன் குவிப்பில் ஈடுபட்டு கடைசி கட்ட ஓவர்களில் அதிகளவு ரன்களை குவிக்க முடியாமல் தோல்வியைத் தழுவியது.
'' தோனி கடைசி பௌண்டரி விளாச கடுமையாக முயற்சித்தார் என நினைக்கிறேன். ஆனால் அவை கிடைக்கவில்லை. எதிரணியினர் நல்ல லெந்தில் தரையில் நல்ல இடத்தில் பந்துபட்டு எழும்புமாறு வீசினர். ஆகையால் இறுதி ஓவர்களில் பேட்டிங் சிரமமாக இருந்தது'' என்றார் விராட் கோலி.
படத்தின் காப்புரிமைMICHAEL STEELE
இங்கிலாந்து முதலில் பேட்டிங் பிடித்தபோது 13 சிக்ஸர்களை விளாசியது.
300 பந்துகளில் 338 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற இலக்கை துரத்திய இந்தியா ஒட்டுமொத்த இன்னிங்ஸில் ஒரே ஒரு சிக்ஸர் விளாசியது. அது 50-வது ஓவரில் தோனி மூலமாக வந்தது.
இந்திய அணி இன்னும் அரை இறுதிக்குத் முழுமையாக தகுதி பெறவில்லை. நாளை வங்கதேச அணியை எதிர்கொள்கிறது
இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் தோனி - கேதர் ஜாதவின் நிதான ஆட்டம் குறித்து கடுமையான விமர்சனம் எழுந்துள்ளது.
ஆப்கானிஸ்தானிற்கு எதிரான போட்டியில் இந்திய அணி 224 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணி 213 ரன்களுக்கு ஆப்கானை சுருட்டி வெற்றி பெற்றிருந்தாலும், பேட்டிங் சரிவு விமர்சனத்திற்கு உள்ளானது. குறிப்பாக, தோனி - கேதர் ஜாதவ் ஜோடியின் நிதானமாக ஆட்டம் அதிருப்தியை ஏற்படுத்தியது. தொடக்கத்தில் விக்கெட் சரிவில் இருந்து இந்திய அணியை இந்த ஜோடி மீட்டு இருந்தாலும், இறுதிவரையிலும் தொடர்ந்து அப்படியே ஆடியதை ரசிகர்கள் விமர்சனம் செய்திருந்தன
தோனி - கேதர் ஜாதவ் ஜோடியின் ஆட்டத்தை சச்சின் டெண்டுல்கரும் கடுமையாக விமர்சித்து இருந்தார். அடித்து விளையாட வேண்டும் என்ற உள்நோக்கமே இல்லாமல் இந்த ஜோடி ஆடியதாக சாடியிருந்தார். குறிப்பாக சுழற்பந்துகளில் அதிக அளவில் தடுமாறுவதையும் அவர் குறிப்பிட்டிருந்தார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டிக்குப் பின் கூட சேவாக்கும் தோனியின் நிதானமான ஆட்டம் குறித்து கிண்டலாக விமர்சனம் செய்திருந்தார்.
இந்நிலையில், இங்கிலாந்து அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்திலும் தோனி - கேதர் ஜாதவ் ஜோடியின் நிதான ஆட்டம் சச்சின் விமர்சனத்தை உறுதி செய்யும் வகையில் இருந்தது. 5 ஓவர்களில் 71 ரன்கள் தேவைப்பட்ட நேரத்தில் 20 சிங்கிள் அடித்தது அவர்களுக்கு அடித்து விளையாட வேண்டும் என்ற நோக்கமே இல்லாததை தெளிவாக வெளிப்படுத்தி இருந்தது
குறிப்பாக, 39 ஓவர்கள் முடிவில் இரு அணிகளும் கிட்டத்தட்ட ஒரே அளவில்தான் ரன்கள் அடித்திருக்கிறார்கள் என்பதை ஒப்பிட்டு பலரும் ட்விட்டரில் பதிவிட்டிருந்தனர். இந்திய வீரர்கள் இலக்கை நோக்கி சரியாக விளையாடி இருந்தால் வெற்றிக்கான வாய்ப்பு அதிகமாகியிருக்கும் என அவர்கள் கூறுகின்றனர்.
நேற்றைய போட்டி குறித்து ட்விட்டரில் பதிவிட்டிருந்த சச்சின், தோனி - கேதர் ஜோடி குறித்து எவ்வித கருத்தும் தெரிவிக்கவேயில்லை. இங்கிலாந்து அணிக்கு வாழ்த்துகள் எனக் கூறிவிட்டு பும்ராவை மட்டும் பாராட்டினார். அவரது ட்விட்டரில் ரசிகர்கள் பலரும் ஏன் தோனி - கேதர் ஜோடி குறித்து கருத்து தெரிவிக்கவில்லை எனக் கேள்வி எழுப்பியிருந்தனர்.
நேற்றைய போட்டியை இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் நாசர் ஹூசைன், சவுரவ் கங்குலியும் வர்ணனை செய்து கொண்டிருந்தனர். அப்போது, ஹூசைன், ‘தோனி ஏன் இப்படி விளையாடிக் கொண்டிருக்கிறார். ஆட்டமிழந்துவிட்டு செல்லலாமே. ரசிகர்கள் எழுந்து சென்று கொண்டிருக்கிறார்கள்’ எனக் கூறினார். அதற்கு, ‘என்னால் இந்தக் கேள்விக்கு விளக்கம் அளிக்க முடியவில்லை’ எனக் கங்குலி தெரிவித்துவிட்டார்.
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
கள்ளக் காதலுக்கு இடையூறு !! பெற்ற மகளை போட்டுத் தள்ளிய தாய் !!
[url=https://reddit.com/submit?url=https://tamil.asianetnews.com/crime/illegal-contact-daughter-killed-by-her-mother-ptxz0x&title=%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81%20!!%20%20%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%20%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%20%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%20!!][/url]
HIGHLIGHTS
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த பிளஸ்-1 படிக்கும் மகளை கழுத்தை நெரித்துக் பொலை செய்த தாயையும் கள்ளக் காதலனையும் போலீசார் கைது செய்தனர் திருவனந்தபுரத்தை அடுத்த நெடுமாங்காடு கருப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் மஞ்சு .இவரது கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். 16 வயதாகும் மஞ்சுவின் மகள் மீரா எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று நெடுமங்காட்டில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.
இதற்காக மஞ்சுவும், மீராவும் அந்த பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்தனர். மீரா, வீட்டில் இருந்தபடி தினமும் பள்ளிக்கு சென்று வந்தார். மஞ்சுவின் கணவர் இறந்த பின்பு, கணவரின் நண்பர் அனிஷ் என்பவர் அடிக்கடி மஞ்சு வீட்டிற்கு வருவார். வீட்டிற்கு தேவையான உதவிகளை செய்து கொடுப்பார். அடிக்கடி வந்து சென்றதில் மஞ்சுவுக்கும், அனிசுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது.
வீட்டில் மீரா இல்லாத நேரத்தில் இவர்கள் இருவரும் உல்லாசமாக இருந்து வந்தனர். மீரா பள்ளிக்கு செல்லாவிட்டால், கள்ளக்காதலர்கள் சந்திக்க முடியாத நிலை ஏற்படும். இது அவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது.
இதையடுத்து கள்ளக்காதலுக்கு இடையூறாக இருப்பதால் மீராவை கொலை செய்ய அவரது தாயார் மஞ்சுவும், கள்ளக்காதலன் அனிசும் முடிவு செய்தனர். அதன்படி, கடந்த 10-ந்தேதி இருவரும் சேர்ந்து மீராவின் கழுத்தை நெரித்து கொலை செய்தனர்.
பின்னர் பிணத்தை அவர்கள் குடியிருந்த வீட்டில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்த பாழும் கிணற்றில் உடலை வீசி விட்டு வந்து விட்டனர். பிணம் நீரில் மிதக்காமல் இருக்க பிணத்துடன் சிமெண்ட் கட்டைகளையும் சேர்த்து கட்டி இருந்தனர்.
மீராவை கொன்று பிணத்தை கிணற்றில் வீசிய பின்பு மஞ்சு, அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்றார். அவர்களிடம் மீராவை 10-ந்தேதி முதல் காணவில்லை. அவர், தமிழ்நாட்டைச் சேர்ந்த வாலிபர் ஒருவருடன் ஓடி விட்டார் என்று கூறியுள்ளார்.
மீராவை தேடி கண்டுபிடிக்க நானும், தமிழகத்திற்கு செல்லலாம் என முடிவு செய்துள்ளேன். 12-ந்தேதி நான், தமிழகம் செல்ல உள்ளேன். அங்கு எப்படியாவது மீராவை தேடி கண்டுபிடித்து அழைத்து வருகிறேன் என்று அவர் தயாரிடம் கூறினார். மறுநாள் முதல் மஞ்சுவையும் காணவில்லை.
மஞ்சுவின் தாயார் வல்சலா, அவர் தமிழகம் சென்றிருப்பார் என்று கருதினார். 2 நாட்களுக்கு பிறகு மஞ்சுவின் செல்போனுக்கு, அவரது தாயார் வல்சலா தொடர்பு கொண்டார். அப்போது மஞ்சுவின் செல்போன் உபயோகத்தில் இல்லை என்று பதில் வந்தது.
மஞ்சு தமிழகத்திற்கு செல்வதாக கூறிய நாள் முதல் அவரது வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்ற அனிசையும் காணவில்லை. இது வல்சலாவுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. எனவே அவர், இதுபற்றி நெடுமங்காடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மஞ்சு, அவரது மகள் மீரா ஆகியோரை தேடினர்.
போலீசார் நடத்திய விசாரணையில், மஞ்சு நாகர்கோவிலில் ஒரு வீடு வாடகைக்கு எடுத்து தங்கியிருப்பது தெரிய வந்தது. அவருடன் அனிஸ் மட்டுமே இருப்பதை அறிந்த போலீசார் மீராவை அவர்கள் என்ன செய்தனர்? என்பதை அறிந்து கொள்ள இருவரையும் பிடித்து வந்து விசாரித்தனர். அப்போதுதான் மஞ்சுவும், அனிசும் சேர்ந்து மீராவை கொன்று பிணத்தை கிணற்றில் வீசிய கொடூர தகவல் தெரியவந்தது. இதையடுத்து மீராவை கொன்று வீசிய கிணற்று பகுதிக்கு சென்று அவரது உடலை மீட்ட போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தன
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
மரணத்தின் விளிம்புக்குச் சென்ற எங்களை மரம்தான் காப்பாற்றியது - ஊட்டி விபத்தில் உயிர் பிழைத்த பயணி
நீலகிரி மாவட்டம் ஊட்டி மலைப் பாதையில் அரசுப் பேருந்து நிலை தடுமாறி விபத்து ஏற்பட்டதில் பல அடி பள்ளத்தில் பாய இருந்த பேருந்தை ஒற்றை மரம் தடுத்து 34 பயணிகளின் உயிரைக் காப்பாற்றியுள்ளது.
ஈரோட்டிலிருந்து ஊட்டிக்கு 34 பயணிகளுடன் வந்துகொண்டிருந்த அரசுப் பேருந்தைமேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த வேலுச்சாமி என்ற ஓட்டுநர் இயக்கிவந்தார். பேருந்து குன்னுார் ஊட்டி மலைப்பாதையில் பெரிய பிக்கட்டி அருகே வந்துகொண்டிருந்தபோது எதிரில் வந்த பேருந்துக்கு வழிவிட முயன்றார். அப்போது சற்றும் எதிர்பாராமல் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரத்தில் இருந்த தடுப்பில் மோதியது. பேருந்து தடுப்பை உடைத்துக்கொண்டு பள்ளத்தை நோக்கிப் பாய்ந்தது. சாலையோரத்தில் இருந்த பைன் மரத்தில் மோதி பேருந்து நின்றது. மரத்தால் தடுக்கப்பட்ட பேருந்து அந்தரத்தில் தொங்கியது . இதைப் பார்த்த வாகன ஓட்டிகள் தங்களின் வானங்களை நிறுத்திவிட்டு பேருந்தில் தவித்த பயணிகளை மீட்டனர்.
இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 34 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர் .பேருந்தின் ஒட்டுநர் வேலுச்சாமிக்கு மட்டும் பேருந்து மரத்தில் மோதியதில் கால் மற்றும் தலையில் காயம் ஏற்பட்டது.அவர் ஊட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து பேருந்தில் பயணம் செய்த பயணி ஒருவர் கூறுகையில், ``பேருந்து சீரான வேகத்தில் வந்துகொண்டிருந்தது. திடீரென பேருந்து சடசடவென பள்ளத்தில் பாய்ந்தது. எங்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை எல்லோரும் அலறிவிட்டோம் எங்களின் கதை முடிந்துவிட்டது என நினைத்தோம். திடீரென பேருந்து அருகில் இருந்த மரத்தில் மோதி நின்றது. எங்களால் நம்பவே முடியவில்லை கிட்டத்தட்ட மரணத்தின் விளிம்புக்கே சென்ற எங்களைக் கடவுள்போல இந்த மரம்தான் காப்பாற்றியது. மரத்தில் மோதி பேருந்து நிற்காமல் போயிருந்தால், பேருந்து 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து பெரிய அளவில் விபத்து ஏற்பட்டிருக்கும்” என்றார்.
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
`உங்களையெல்லாம் யார் வேலைக்கு எடுத்தது?’ - கரூர் டி.எஸ்.பியை வறுத்தெடுத்த மாவட்ட நீதிபதி
கரூர் நகர டி.எஸ்.பி கும்மராஜாவை, கரூர் மாவட்ட முதன்மை நீதிபதி கிறிஸ்டோபர், ``நீங்கள் எப்படி டி.எஸ்.பி ஆனீர்கள்?. நீங்களெல்லாம் காவல்துறையில் இருந்தால், மக்களுக்குத்தான் கேடு" என்றெல்லாம் ஒரு மணிநேரம் வறுத்தெடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
கரூர் தான்தோன்றிமலையில் இயங்கி வருகிறது, அரசு கலைக் கல்லூரி. இந்தக் கல்லூரியில் பொருளியல் துறைக்குத் தலைவராக பணியாற்றி வந்தவர் இளங்கோவன். `52 வயதையுடைய இவர் மாணவிகளிடம் தவறாகப் பேசுகிறார். இவர்மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்' என்று மூன்று மாதங்களுக்கு முன்பு மாணவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர். இதனால், அவர் கைதுசெய்யப்பட்டார். அப்போதே மாணவர்கள், ``காவல்துறை இளங்கோவனுக்குச் சாதகமாகச் செயல்படுகிறது" என்று குற்றம்சாட்டினர். இருந்தாலும், கைது செய்யப்பட்ட அவர், சிறையில் அடைக்கப்பட்டார்.
கரூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கில், கரூர் காவல்துறையினர் 90 நாள்களைக் கடந்தும் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்யவில்லை. இந்நிலையில், இளங்கோவனுக்கு ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த ஜாமீன் மனுவைப் பார்த்துக் கோபப்பட்ட மாவட்ட முதன்மை நீதிபதி கிறிஸ்டோபர்,வழக்கின் விசாரணை அதிகாரியான கரூர் நகர டி.எஸ்.பி கும்மராஜாவை ஆஜராகச் சொல்லி வறுத்துத்தெடுத்திருக்கிறார்.
இது சம்பந்தமாக நீதிமன்றத்தில் நடந்தவற்றை விவரித்த வழக்கறிஞர்கள் சிலர், ``நீதிமன்றத்துக்கு கும்மராஜா வந்ததும், குற்றவாளியைக் கைது செய்து 90 நாள்கள் ஆகியும், ஏன் அவர்மீது குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்யவில்லை? எனக் கேள்வி எழுப்பிய நீதிபதி தொடர்ந்து, குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்யவில்லை என்றால், அவருக்கு எளிதாக ஜாமீன் கிடைத்துவிடும் அதற்கு நீங்களே வழிவகுக்கிறீர்களா. உங்களை எல்லாம் யார் போலீஸ் வேலைக்கு எடுத்தது? நீங்களெல்லாம் எப்படி டி.எஸ்.பி ஆனீர்கள்? நீங்கள் குற்றவாளியை தப்பிக்க வைக்கக் காரணமாக இருந்திருக்கிறீர்கள்? உங்களை மாதிரி ஆள்கள் காவல்துறையில் இருந்தால் பொதுமக்களுக்குத்தான் கேடு. உங்களுக்கு மேல் உள்ள காவல்துறை அதிகாரி யார்? குற்றவாளி மீது, அதுவும் கல்லூரியில் பாலியல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபர்மீது குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்வதில் என்ன கஷ்டம்? இப்படிப்பட்ட வழக்கில் இவ்வளவு அலட்சியமாக 90 நாள்கள் குற்றப்பத்திரிகையை தாக்கல் பண்ணாம, அப்படி என்ன பண்ணிகிட்டு இருந்தீங்க? எனக்குக் காரணம் சொல்லணும். இளங்கோவனுக்கு இன்று ஜாமீன் தரமுடியாது. நீங்க 90 நாள்களும் என்ன பண்ணிகிட்டு இருந்தீங்கன்னு தினவாரியான அபிடவிட்டை கோர்ட்டில் தாக்கல் பண்ணுங்க. திங்கட்கிழமை தாக்கல் பண்ணணும். அன்னைக்கு இந்த மனுமீதான விசாரணையைத் தள்ளி வைக்கிறேன்' என உத்தரவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
காங்கிரஸ் கனவை தகர்த்த திமுக! காங்கிரஸ் அதிர்ச்சி!
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் திமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 இடங்கள் கொடுக்கப்பட்டன. இதில் 9 நாடாளுமன்ற தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. தமிழகத்தில் 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவி காலம் முடியும் நிலையில் உள்ளது. இதனால் திமுக மற்றும் அதிமுக சார்பாக தலா 3 ராஜ்யசபா எம்.பி.க்களை தேர்ந்த்தெடுக்க முடியும். இதில் திமுக மற்றும் அதிமுக கூட்டணி கட்சியினருக்கு ஒரு ராஜ்யசபா சீட் கொடுக்கப்படும் என்று நாடாளுமன்ற தேர்தலின் போது அறிவித்தது.
திமுக சார்பாக மதிமுக கட்சிக்கும், அதிமுக சார்பாக பாமகவிற்கும் கொடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இந்த நிலையில் திமுக சார்பில் தொ.மு.ச. பொதுச்செயலாளர் சண்முகம், வழக்கறிஞர் வில்சன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இதுகுறித்த அறிவிப்பை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். இதனால் மன்மோகன் சிங்கிற்கு தமிழகத்தில் இருந்து ராஜ்யசபா சீட் கொடுக்கப்படும் என்று எதிர்பார்த்த நிலையில் தற்போது அந்த வாய்ப்பு இல்லை என்று திமுகவின் அறிவிப்பு உறுதி செய்துள்ளது. இந்த நிலையில் காங்கிரஸின் கோரிக்கையை திமுக நிராகரித்தது என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
ஒரு நிமிடத்தில் 24 தக்கல் டிக்கெட்டுகள்... மென்பொருளை பயன்படுத்தி ரயில் டிக்கெட் மோசடி... வடமாநில இளைஞர் கைது!!
தமிழகத்திலிருந்து இருந்து வட மாநிலங்களுக்கு செல்லும் ரயில்களின் டிக்கெட்டுகளை கணினி மென்பொருளை பயன்படுத்தி ஒரே நிமிடத்தில் 24 தக்கல் டிக்கெட்டுகள் வரை முன்பதிவு செய்து கூடுதல் விலைக்கு விற்று வந்த மோசடி வடமாநில நபரை போலீசார் அதிரடியாக கைது செய்யதுள்ளனர்.
பண்டிகை காலங்களில் சென்னையிலிருந்து வட மாநிலங்களுக்கும், தென் மாவட்டங்களுக்கும் செல்வதற்காக பயணிகள் முண்டியடித்துக்கொண்டு பேருந்தோ, ரயிலோ எப்படியேனும் சென்று விடுவதற்காக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வது வழக்கமான ஒன்று. இப்படி முன்பதிவு செய்யும் வேலையை மூன்று மாதத்துக்கு முன்னரே ஆரம்பித்து விடுகின்றனர் பயணிகள். இப்படி இருக்கையில் ஒரு மென்பொருளை பயன்படுத்தி ஒரே நிமிடத்தில் மோசடியாக 24 ரயில் டிக்கெட்டுகள் வரை முன்பதிவு செய்து அதன் மூலம் லட்சக்கணக்கில் மோசடி செய்து சம்பாரித்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் பை பை என்ற டிராவல்ஸ் நிறுவனத்தை நடத்தி வரும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த தீபக் என்பவர் போலீசாரிடம் சிக்கியது தனிக்கதை. சென்னையில் அமைந்துள்ள சென்ட்ரல் மற்றும் எக்மோர் ரயில்நிலைய பகுதிகளைவிட இவருடைய கடையில்தான் கூட்டம் அலைமோதும். சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் அப்பல்லோ மருத்துவமனைக்கு எதிரே சுமார் 20க்கும் மேற்பட்ட டிராவல்ஸ் நிறுவனங்கள் இயங்குகின்றன. அப்பல்லோ மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வருபவர்களும் மற்றும் அவசரமாக ஊர் திரும்ப நினைக்கும் வசதிபடைத்த பயணிகளை இவர்கள் இலக்காகக் கொண்டு இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.
தட்கல் ரயில் டிக்கெட் வேண்டுமா உடனே அங்கு உள்ள டிராவல்ஸ் நிறுவனத்தை அணுகினால் கிடைத்துவிடும். இதுபோன்று கடந்த ஒன்றரை வருடங்களாக முழு நேர வேலையாக செய்து வந்திருக்கிறார் தீபக். இது தொடர்பாக ரயில்வே எழும்பூர் ஊழல் கண்காணிப்பு பிரிவுக்கு புகார்கள் குவிந்ததால் கடந்த சனிக்கிழமை டிக்கெட் வாங்குவது போன்று பேச்சு கொடுத்து போலீசார் தீபக்கை சுற்றிவளைத்தனர்.
அங்கு நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் ஆதாரங்களுடன் சிக்கியுள்ளன. ஏ எஸ் எம் எஸ் என்ற கணினி மென்பொருளை தனது லேப்டாப்பில் பதிவிறக்கம் செய்து வைத்துள்ள தீபக். அந்த மென்பொருளை பயன்படுத்த ஒரு குழுமத்தில் தன்னை உறுப்பினராக இணைத்துக் கொண்டு மொத்தம் 2500 ரூபாய் உறுப்பினர் கட்டணமாக செலுத்தி அந்த மென்பொருளை பயன்படுத்தி உள்ளார். இந்த மென்பொருளானது ஆன்லைனில் மோசடியாக அதிவேகத்தில் தட்கல் டிக்கெட்டுகளை இடைமறித்து முன்பதிவு செய்து வந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
டிக்கெட் கேட்டு வரும் பயணிகளிடம் டிக்கெட்டிற்கு உரிய கட்டணத்தை வசூலித்து கொண்டு விவரங்களையும் பெற்று விடுவார். தட்கல் டிக்கெட் முன்பதிவு தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பாகவே ரயில்வே இணையதளமான ஐஆர்சிடிசியில் அனைவரின் பெயருக்கும் தனித்தனியாக டிக்கட் போர்ட் தயார் செய்து வைத்துக் கொள்வார். முன்பதிவு தொடங்கிய ஒரு நிமிடத்தில் இவர் விண்ணப்பித்த பயணிகளுக்கு மட்டும் விரைவாக பயணச்சீட்டு ஒப்புதல் கிடைத்துவிடும். அந்த பயணச்சீட்டுகளை இரு மடங்கு விலைக்கு சம்பந்தப்பட்ட பயணிகளிடம் விற்பனை செய்து விடுவார். அந்த வகையில் இவர் அண்மையில் 5 லட்சத்து 20 ஆயிரம் மதிப்புள்ள 141 டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துள்ளதை போலீசார் கண்டறிந்துள்ளனர்.
அவர் முன்பதிவு செய்து வைத்திருந்த 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 14 பயணச்சீட்டுகளையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். அதேபோல் அவரது நிறுவனத்தில் இருந்த முன்பதிவு செய்ய பயன்படுத்தி வந்த மடிக்கணினி, பிரிண்டர், மொபைல் போன்றவற்றையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். தீபக்கை கைது செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
இது தான் சிறந்த சேஸிங்.. இலங்கையிடம் தோல்வி அடைந்தாலும் பாராட்டைப் பெற்ற வெ.இண்டீஸ்!
செஸ்டர் லீ ஸ்ட்ரீட் : வெஸ்ட் இண்டீஸ் அணி இலங்கையிடம் 23 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. எனினும், வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றிக்காக சேஸிங்கில் போராடிய விதம் அனைத்து கிரிக்கெட் ரசிகர்களையும் கவர்ந்தது. உலகக்கோப்பை அரையிறுதி செல்லும் வாய்ப்பை இலங்கை - வெஸ்ட் இண்டீஸ் இரு அணிகளும் இழந்த நிலையில் இந்தப் போட்டி ஆறுதல் வெற்றிக்காக நடந்தது. ஆனால், போட்டியின் முடிவில் 2019 உலகக்கோப்பை தொடரின் சிறந்த போட்டிகளில் ஒன்றாக மாறியது. இலங்கை பேட்டிங் இந்தப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இலங்கை அணி துவக்கம் முதலே அதிரடியாக ரன் சேர்த்தது. கேப்டன் கருணாரத்னே மட்டுமே நிதானமாக ரன் சேர்த்தார். அவர் 32 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். பெர்னாண்டோ அசத்தல் அடுத்து பெரேரா 64, பெர்னாண்டோ 104 ரன்கள் சேர்த்தனர். பெர்னாண்டோவின் சதம் இலங்கை அணியை பெரிய ஸ்கோரை எட்டச் செய்தது. கடைசி கட்டத்தில் திரிமன்னே 33 பந்துகளில் 45 ரன்கள் குவிக்க, இலங்கை அணி 50 ஓவர்களில் 338 ரன்கள் எடுத்தது. வெ.இண்டீஸ் பந்துவீச்சு வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஓஷேன் தாமஸ், ஹோல்டர், பாபியன் ஆலன் ஓவருக்கு 6 ரன்களுக்குள் கொடுத்தனர். மற்ற பந்துவீச்சாளர்கள் ரன்களை வாரி இறைத்தனர். காப்ரியல் 5 ஓவர்கள் வீசி 46 ரன்கள் கொடுத்து அதிர்ச்சி அளித்தார்.
கைவிட்ட டாப் ஆர்டர்
அடுத்து சேஸிங் செய்ய வந்த வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களுக்குள் 4 விக்கெட்களை இழந்தது. அப்போது பேட்டிங் செய்ய வந்த பூரன் போட்டியை தன் கையில் எடுத்துக் கொண்டார். அவருக்கு ஜேசன் ஹோல்டர் 26, பாபியன் ஆலன் ஒத்துழைப்பு அளித்தனர்.
விறுவிறுப்பான சேஸிங்
7வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஆலன் - பூரன் ஜோடி, இலங்கை பந்துவீச்சை அடித்து நொறுக்கியது. பூரன் தன் முதல் ஒருநாள் போட்டி சதம் கடந்து அசத்தினார். 45 வது ஓவரில் ஆலன், தான் செய்த தவறால் ரன் அவுட் ஆகி வெளியேறினார்.
முக்கிய விக்கெட்
அதன் பின் பூரன் தனி ஆளாக இலங்கை அணியை மிரட்டினார். எனினும், சுமார் 18 மாதங்கள் கழித்து பந்த வீச வந்த ஏஞ்சலோ மாத்யூசின் முதல் பந்தில் ஆட்டமிழந்தார் பூரன். அதன் பின் போட்டி இலங்கை கட்டுப்பாட்டிற்கு வந்தது. அது வரை ஓவருக்கு 9-10 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணி போராடியது.
தோல்வி
வெ.இண்டீஸ் அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழந்து 315 ரன்கள் மட்டுமே எடுத்து 23 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. பூரன், ஆலன் கூட்டணி மோசமான நிலையிலும், தோல்வி அடையவே அதிக வாய்ப்பு என்று தெரிந்தும் போராடினர். அந்த ஜோடி ரசிகர்களின் பாராட்டைப் பெற்றது.
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
இங்கிலாந்திடம் தோல்வி: இந்திய அணியின் கிரிக்கெட் நேர்மையை கேள்வி எழுப்பிய வக்கார் யூனுஸ்
வக்கார் யூனுஸ் : கோப்புப்படம்
எட்ஜ்பாஸ்டனில் நேற்று நடந்த உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் இங்கிலாந்திடம் இந்திய அணி தோல்வி அடைந்தது குறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் வக்கார் யூனுஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தியா, இங்கிலாந்து இடையே நேற்று நடந்த லீக் ஆட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஆட்டமாகும். இங்கிலாந்து அணி நேற்றைய ஆட்டத்தில் தோல்வி அடைந்திருந்தால், அரையிறுதிக்கு தகுதி பெறாமல் இருந்திருக்கும்
அதேசமயம், அரையிறுதிக்கான வாய்ப்பை எதிர்நோக்கி பாகிஸ்தான் அணியும் காத்திருந்தது. இங்கிலாந்து ஒருவேளை நேற்றைய ஆட்டத்தில் தோல்வி அடைந்திருந்தால், பாகிஸ்தான் அணி அடுத்துவரும் ஒரு ஆட்டத்தில் வென்றால், அரையிறுதிக்குத் தகுதி பெறும்.
உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் தோல்வி அடையாமல் வெற்றி நடைபோட்டு வந்த இந்திய அணி, நேற்று இங்கிலாந்திடம் 31 ரன்னில் தோற்றது பெரும் ஏமாற்றத்தை ரசிகர்களிடம் ஏற்படுத்தியுள்ளது. கடைசி 5 ஓவர்களில் தோனியும், ஜாதவும் பேட் செய்த விதம் சமூக ஊடகங்களில் விவாதப்பொருளாக மாறி இருக்கிறது.
இந்நிலையில், பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் வக்கார் யூனுஸ், இந்தியாவில் தோல்வி குறித்தும், விளையாட்டின் நேர்மை குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளார்.
அவர் ட்விட்டரில் கூறுகையில், "இப்போது நீங்கள் செய்த செயல் நீங்களாகச் செய்யவில்லை. வாழ்க்கையில் என்ன நீங்கள் செய்கிறீர்களோ அது உங்களை தீர்மானிக்கும். பாகிஸ்தான் அணி அரையிறுதிக்குச் செல்வதோ அல்லது இல்லையோ அதைப் பற்றி நான் கவலைப்படவில்லை. ஆனால் ஒரு விஷயம் உறுதியானது. சில சாம்பியன்களின் உண்மையான கிரிக்கெட் நேர்மை, பெருந்தன்மை சோதிக்கப்பட்டது. அதில் அவர்கள் தோல்வி அடைந்துவிட்டார்கள் " எனத் தெரிவித்துள்ளார்.
வக்கார் யூனுஸ் இந்தியா குறித்து மறைமுகமாக விமர்சனம் செய்தமைக்கு சமூக ஊடகங்களில் நெட்டிசன்கள் அவரை கடுமையாகச் சாடி வருகின்றனர்.
முன்னதாக, பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர்கள் பாசித் அலி, சிக்கந்தர் பாகத் ஆகியோர், வேண்டுமென்றே இந்திய அணி இங்கிலாந்திடம் தோல்வி அடைந்து பாகிஸ்தானை அரையிறுதிக்குள் வரவிடாமல் தடுக்கும் என்று குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது.
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
`டி.டி.வி சொல்வது தவறு; ரூ.70 கோடியல்ல 52 காேடி!' - அ.தி.மு.க-வில் ஐக்கியமாகும் இசக்கி சுப்பையா
அ.ம.மு.க அமைப்புச் செயலாளராக இருந்தவர் இசக்கி சுப்பையா. தற்போது இவர், அக்கட்சியிலிருந்து விலகி வரும் 6-ம் தேதி முதல்வர் எடப்பாடி முன்னிலையில் அ.தி.மு.க-வில் சேர்கிறார். இது குறித்து தென்காசியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய இசக்கி சுப்பையா, ``சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எனக்குக் கொடுத்தார். நெல்லை மாவட்ட மக்களின் ஆதரவுடன் வெற்றி பெற்று அமைச்சரானேன். ஆனால், எனக்கு டி.டி.வி தினகரன் சீட் வாங்கிக் கொடுத்ததாகத் தெரிவித்துள்ளார். அப்போது அவர் கட்சியில் இருந்தாரா என்பதே எனக்குத் தெரியாது. பொதுவாக அரசியல் மேடைகளில்கூட நான் யாரையும் குறைசொல்லிப் பேசுவதில்லை. ஆனால், டி.டி.வி தினகரனின் இன்றைய பேட்டி எனக்கு மன வருத்தத்தை அளிக்கிறது. என்னைப் பற்றிப் பேசிய அவர், `48 நாள்கள், அதாவது ஒரு மண்டலம் அமைச்சராக இருந்தவர்' என்று என்னைக் கிண்டல் பண்ணி இருக்கிறார். நாங்கள் கிண்டலடிக்கப்படக் கூடியவர்கள்தான். பாதாளச் சாக்கடை ஒப்பந்ததாரர் என்றும் என்னை விமர்சிக்கிறார். அவருக்குத் தெரியாதா எங்கள் பரம்பரைத் தொழிலே கான்ட்ராக்ட்தான் என்பது. சமீபகாலமாக அவர் பதற்றத்துடன் இருக்கிறார். அதனால், இரட்டை இலைச் சின்னம் பிரச்னையை 2017 என்பதற்குப் பதிலாக 2007 என்கிறார். அவர் கூட்டம் போட்ட தேதியை மாற்றிச் செல்கிறார். ஆனால், நானும் என்னுடன் இருந்தவர்களும் கட்சிக்காக உடல், பொருள், ஆவி என அனைத்தையும் இழந்து நிற்கிறோம்.
நான் யாரையும் குறை சொல்லவில்லை. என்னைப் பற்றிய விஷயங்களுக்கு மட்டுமே பதில் சொல்கிறேன். முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொண்டர்களின் முதல்வராக இருக்கிறார். அதனால்தான் கட்சியில் நாங்கள் இணைவது பற்றி கேட்டதற்கு, `நானே உங்களிடம் வருகிறேன். நீங்கள் இருக்கும் இடத்திலேயே இணையுங்கள்' என்று சொல்லிவிட்டார். எப்பேர்ப்பட்ட நல்ல உள்ளம் கொண்டவராக இருந்தால் இப்படிச் சொல்வார். தி.மு.க-விலிருந்து பாரதிய ஜனதாவில் இருந்தும் கட்சியில் சேருமாறு எங்களுக்கு அழைப்பு வந்தது உண்மைதான். ஆனால், கடந்த இரு வாரங்களுக்கு முன்பு எங்கள் கட்சியினருடன் ஆலோசனை நடத்தியபோது, 90 சதவிகிதம் தொண்டர்கள் மீண்டும் தாய்க் கழகத்திலேயே இணைய வேண்டும் என்று சொன்னார்கள். அதனால்தான் வரும் 6-ம் தேதி முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோர் பெருந்தன்மையோடு தென்காசிக்கு வருகிறார்கள். அவர்கள் முன்னிலையில் 20,000 பேர் கட்சியில் இணைய இருக்கிறோம். அ.ம.மு.க தற்போது செயல்பட்டு வரும் அலுவலகம் எனக்குச் சொந்தமானதல்ல. என் மகன் இயக்குநராக உள்ள நிறுவனத்துக்குச் சொந்தமானது. அது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி செயல்படுத்துவார்கள்.
எனக்கு அரசிடம் இருந்து 70 கோடி ரூபாய் வரவேண்டியதிருப்பதால் அ.தி.மு.க-வுக்குச் செல்வதாக டி.டி.வி.தினகரன் சொல்வது தவறானது. ஒப்பந்தப்பணிக்காக 52 கோடி ரூபாய் பாக்கி இருப்பது உண்மைதான். அமைச்சர் வேலுமணி எனக்கு நெருங்கிய நண்பர். அரசியல் வேறு தொழில் வேறு. வர்த்தகத்தில் பாக்கி என்பது சகஜமான ஒன்றுதான். நாங்கள் அ.ம.மு.க-வில் இருந்து வெளியேறக் காரணம் சிலர் இருக்கிறார்கள். அது என்ன என்பதை நாகரிகம் கருதி வெளியே சொல்ல முடியாது. பணத்துக்காகவோ சுயநலத்துக்காகவோ கட்சி மாறவில்லை. ஒரு சில தனி நபர்களிடம் டி.டி.வி.தினகரன் அச்சப்பட்டுக் கிடப்பதாலேயே கட்சியில் நீடிக்க முடியாத நிலைமை ஏற்பட்டுவிட்டது. ஏற்கெனவே பலர் கட்சியிலிருந்து வெளியேறிய நிலையில், இன்னும் தொடரும். சசிகலா தியாகத்தின் திருவுருவம். அதில் மாற்றுக்கருத்து ஏதும் கிடையாது. வரும் 6-தேதி முதல்வர் முன்னிலையில் இணையும் அனைவருமே தொண்டர்கள்தான். அனைவருமே முக்கியப் பிரமுகர்கள்தான். 20,000 முக்கியப் பிரமுகர்கள் அ.தி.மு.க-வில் இணைகிறோம்" என இசக்கி சுப்பையா தெரிவித்தா
first 5 lakhs viewed thread tamil
•
|