பாகம் - 12
மங்களா அகிலாண்டேஸ்வரியின் வீட்டை கடப்பதற்கு அரை மணி நேரம் முன்பு, அகிலாண்டேஸ்வரியை தவிர மீதி 9 மாமிகளும், அகிலாண்டேஸ்வரியின் வீட்டு முற்றத்தில் அகிலாண்டேஸ்வரி அமர்வதற்காக போடப்பட்ட நாற்காலியை சுற்றி அமர்ந்து அவர்களுக்குள் பேசிக்கொண்டிருந்தனர். மாதம் ஒரு முறை அவர்கள் அங்கு கூடி அக்ரஹார விஷயங்களை பற்றி பேசுவதுண்டு. அன்றும் அது போல் தான்.
வீட்டின் உள்ளே இருந்து அகிலாண்டேஸ்வரி வெளியே வர, அவர்கள் பேசுவதை நிறுத்திவிட்டு எழுந்து நின்று அவருக்கு வணக்கம் வைத்தனர்.
அகிலாண்டேஸ்வரி(60), அக்ராஹாரத்தின் தலைக்கட்டான அகிலாண்டேஸ்வரியின் அனுமதி இல்லாமல் அந்த அக்ராஹாரத்தில் ஒரு அணுவும் அசையாது. எந்த ஒரு நல்லது கெட்டது என்றாலும், அது ஆகிலாண்டேஸ்வரியின் அனுமதி பெற்ற பின்னே அது நடக்கும். ஊரில் இருப்பவர்கள் மட்டுமல்ல; வீட்டில் இருப்பவர்களும் அகிலாண்டேஸ்வரியின் பேச்சை மீறுவதில்லை. மிகவும் இறுமாப்பு கொண்டவர். உலகமே தன்னை சுற்றி தான் இயங்குகிறது என்று நினைக்கும் பேர்வழி. எவரேனும் இவரை கேட்காமல் ஏதேனும் செய்தால், அவர்களுக்கு அந்த அக்ராஹாரத்தில் இருப்பதே மிகவும் சிரமமாகும்.
மிகவும் ஆச்சாரம் கொண்டவர். அந்நிய ஆட்களை மட்டுமல்ல; நவரத்தினங்களையே தன் இல்லத்திற்குள் அனுமதிப்பதில்லை. அவர்களுக்கு பருக காஃபி கொடுக்க நினைத்தாலும், தனக்கொரு தட்டில் ஒரு குவளையும், மீதி இருப்பவர்களுக்கு தனி தட்டில் மற்ற குவளைகளையும் வைத்து வழங்குவார். கொண்டு வருபர்களின் கை தன் மீது பட்டுவிடுமோ என்று நினைத்து அவர் அந்த தட்டையும் நேரடியாக வாங்குவதில்லை. அவர்களை நாற்காலியின் பிடியின் வைத்துவிட்டு போகும்படி சொல்லிவிடுவார். தன் கணவர் முதற்கொண்டு யாரையும் தொட்டு பேச மாட்டார். அனைவரையும் 3 அடி தள்ளி நிற்க வைத்தே பேசுவார். அந்த அளவுக்கு சுத்தத்தை கடைபிடிப்பவர். மங்களா அனைத்து விதமான மக்களிடமும் சகஜமாக பழகுவது அகிலாண்டேஸ்வரிக்கு பிடிக்கவில்லை. அவர் மங்களாவிற்கு சொல்லியும் மங்களா அதை கேட்காமல் அனைவரிடமும் சகஜமாக பழகுவாள். பற்றாக்குறைக்கு ஆண்கள் அவள் பின்னால் சுற்றுவதும், அவர்கள் கூறும் இரட்டை அர்த்த சொற்களுக்கு அவள் கோபம் கொள்ளாமல், சிரித்தபடி கடந்து செல்வதும் அல்லது ஒற்றை அர்த்த பதிலை கூறுவதையும் பார்த்து அகிலாண்டேஸ்வரி மங்களாவின் நடத்தையில் சந்தேகம் கொண்டார். பற்றாக்குறைக்கு கமலமும் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் மங்களாவை பற்றி, அவதூறு பரப்பி அகிலாண்டேஸ்வரிக்கு மங்களாவின் மீதான வெறுப்பு அதிகரித்துள்ளது. அது மட்டுமல்ல; எப்போது யார் தன்னை பார்த்தாலும் வணங்க வேண்டும் என்று நினைக்கும் அகிலாண்டேஸ்வரிக்கு மங்களாவின் தான் உண்டு தன் வேலை உண்டு என்ற சுபாவம் ஆணவமாக தெரிய, அவளுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்று பல நாட்களாக எண்ணிக்கொண்டிருக்கிறார். ஆனால் மங்களாவை பற்றி வரும் அவதூறுகள் எல்லாம் வாய் வார்த்தைகளாக தான் உள்ளனவே தவிர, எவையும் நிரூபிக்கப்படவில்லை. எனவே அகிலாண்டேஸ்வரியால் மங்களாவை இன்னும் ஒன்றும் செய்ய முடியவில்லை. பல வித சொத்துபத்து உண்டு; ஆனாலும் எளிமையாகவே உடை அணிவார். நகைகளின் மீதும் மோகம் இல்லை.
![[Image: screenshot77381-1684676835.jpg]](https://images.filmibeat.com/ta/img/2023/05/screenshot77381-1684676835.jpg)
அகிலாண்டேஸ்வரி தனக்கே உண்டான கம்பீரத்துடன் நடந்து வந்து தன் நாற்காலியில், நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டு, தன் இருகைகளையும் நாற்காலியின் இரு பிடிகளின் மீது வைத்து அமர்ந்தார்.
அகிலாண்டேஸ்வரி மற்ற அனைவரையும் அமரும்படி சொல்ல, மற்றவர்களும் அமர்ந்தனர். அவர்கள் அனைவரும் அமர்ந்து, சலசலப்பு தீர்ந்த பின்,
அகிலாண்டேஸ்வரி: எல்லாம் நன்னா இருக்கேளா?
என்று கேட்க,
அனைவரும் ஒருமித்த குரலில்,
"நன்னா இருக்கோம் மாமி" என்று சொல்ல,
அகிலாண்டேஸ்வரி தன் வலது பக்கத்தில் திண்ணையில், அவரை போலவே நிமிர்ந்து கம்பீரமாக அமரிந்திருக்கும் சாமுண்டீஸ்வரியை பார்த்தார்.
சாமுண்டீஸ்வரி, வயது 55, அக்ராஹாரத்தால் அடுத்த அகிலாண்டேஸ்வரி என்று அழைக்கப்படுபவர். முகத்திலேயே ராஜ கலை கொண்டவர். பார்க்கும் பார்வை ஈட்டியை போல கூர்மையானது. பார்வையாலேயே எதிரிகளை பஸ்பமாக்க கூடியவர். பார்வை மட்டும் அல்ல; பேச்சாலும் தான் நினைத்ததை சாதிக்கும் திறன் கொண்டவர்.மிகவும் கர்வம் மிக்கவர். சாமுண்டீஸ்வரியை பகைத்துக்கொள்ள அந்த அக்ராஹாரத்தில் யாரும் விரும்ப மாட்டார்கள். ஆண்களே அவரை பார்த்து பயந்து நடுங்குவர். சாமுண்டீஸ்வரிக்கு அகிலாண்டேஸ்வரியின் மீது மிகுந்த மரியாதை உண்டு. அகிலாண்டேஸ்வரியின் சொல்லை வேதவாக்காக கருதுபவர். மங்களாவின் மீது சாமுண்டீஸ்வரிக்கு தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி ஒன்றும் இல்லை என்றாலும், அகிலாண்டேஸ்வரிக்காக மங்களாவின் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டாள். பற்றாக்குறைக்கு ருக்மணியின் எதிர்த்து பேசும் குணமும் பிடிக்கவில்லை. ருக்மணியின் தோழி என்பதனாலேயே சாமுண்டீஸ்வரிக்கு மங்களாவையும் பிடிக்கவில்லை.
அவருடைய பழைய வீடு பழுதாகி விட்டதால், அது இடிக்கப்பட்டு புதிய வீடு கட்டப்பட்டுக்கொண்டிருக்கிறது.
சாமுண்டீஸ்வரி அந்த அக்ராஹாரத்திலேயே உள்ள தன்னுடைய வேறொரு வீட்டில் தாங்கிக்கொண்டு அவ்வப்போது வந்து வீட்டு வேலை நடப்பதை பார்வையிட்டுக் கொண்டிருக்கிறார்.
அகிலாண்டேஸ்வரி: என்னடி சாமுண்டி!
சாமுண்டீஸ்வரி: சொல்லுங்கோ மாமி!
அகிலாண்டேஸ்வரி: வீட்டு வேலைலாம் எப்படி நடக்குறது?
சாமுண்டீஸ்வரி: நன்னா நடக்குது மாமி!! ஆரம்பத்துல இழுத்தடிச்சிண்டு இருந்தா! அப்புறம் நான் போய் லெஃப்ட், ரைட் விட்டேன். இப்போ வேல வேகமா நடக்கறது. நானும் தெனம் வந்து சரியா கட்டுறலானு பாத்துண்டிருக்கேன்.
அகிலாண்டேஸ்வரி: சாமுண்டியா கொக்கா? சாமுண்டி போயும் அங்க வேல நடக்காம இருக்குமா?
என்று அகிலாண்டேஸ்வரி புகழாரம் சூட்ட, சுற்றி இருப்பவர்களும் அதை ஆமோதிப்பது போல தலையாட்ட, சாமுண்டி தன்னை எண்ணி பெருமிதம் கொண்டாள்.
சாமுண்டியின் பக்கத்தில் அமர்ந்திருந்தாள் ரமணி.
ரமணி(45), அரசு பள்ளி ஆசிரியையாக இருக்கிறார். மாணவர்களை பற்றி துளியும் கவலை படாமல், வந்தோமா சென்றோமா என்றிருக்கும் மற்ற ஆசிரியர்களை போல் அல்லாமல், மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டவர். பள்ளி முடிந்ததும், உதவி தேவைப்படும் அக்ராஹாரத்தில் உள்ள ஏழை மாணவர்களுக்கு தன் வீட்டிலேயே ஒரு ரூபாய் கூட பணம் வாங்காமல், படிப்பு சொல்லி கொடுத்துக்கொண்டிருக்கிறார். இப்படிப்பட்ட நல்ல குணம் கொண்ட ரமணிக்கு, மங்களாவின் மீது என்ன கோபம்? தனிப்பட்ட கோபம் ஒன்றும் இல்லை, மங்களாவின் தரிசனத்தை காண படிக்கும் மாணவர்கள் அக்ராஹாரத்தின் முனையில் இருப்பதை பார்த்து, மங்களாவால் படிக்கும் மாணவர்களின் மனதில் தேவை இல்லாத சிந்தனைகள் வருகிறது என்று மங்களாவின் மீது தேவையில்லாத ஒரு காழ்ப்புணர்ச்சியை கொண்டுள்ளார்.
அகிலாண்டேஸ்வரி: என்னடி ரமணி, பசங்களாம் நன்னா படிக்குறாங்களாடி?
ரமணி: நன்னா படிக்கிறாங்க மாமி!
அகிலாண்டேஸ்வரி: ஒரு பைசா கூட வாங்காம முடியாதவாக்கு பாடம் சொல்லி தரியேடி. இது எவ்ளோ பெரிய புண்ணியம் தெரியுமாடி நோக்கு?
ரமணி: ஏதோ என்னால முடிஞ்சுது மாமி!
அகிலாண்டேஸ்வரி: தங்கமான மனசுடி நோக்கு!
என்று அகிலாண்டேஸ்வரி ரமணியை புகழ, ரமணி புன்முறுவல் செய்தாள்.
அகிலாண்டேஸ்வரி இடது புறமாக திரும்பிப் பார்க்க தூணை ஒட்டி கொட்டாப்பாக்கை இடித்தபடி அம்புஜமும், அவள் பக்கத்தில் அவளை உரசியபடி அவளுடைய சகோதரி பங்கஜமும் அமர்ந்திருந்தனர்.
நவரத்தினம் என்று குறிப்பிட்டு விட்டு, ஏன் 10 மாமிகள் இருப்பதாக சொல்கிறான் என்று நீங்கள் குழம்பி இருக்கலாம். அந்த குழப்பத்திற்கு காரணம் நான் அல்ல. அம்புஜமும் பங்கஜமும் தான். சகோதரிகளில் மூத்தவள்
அம்புஜம், வயது 75, அவளை விட ஒரு வயது சிறியவள் பங்கஜம். ஒரு வருடம் இடைவெளி விட்டு பிறந்திருந்தாலும், இருவரும் உருவத்திலும் உள்ளத்திலும் இரட்டையர்களைப் போலவே தான் இருப்பார்கள். ஒரே மாதிரி இருப்பார்கள்; ஒரே கருத்தை பேசுவார்கள். அக்ராஹாரத்தில் இருப்பவர்களால் இரட்டை கிழவிகள் என்று அழைக்கப்படும் இவர்கள் இருவரையும் ஒருவராகவே எண்ணலாம். இரட்டைக்கிளவியை சேர்த்தால் பொருள் தரும்; பிரித்தால் பொருள் தராது. இரட்டைக்கிளவியை போலவே, இந்த இரட்டைக் கிழவிகளையும் சேர்த்து ஒரு கிழவியாய் பார்ப்பதே நலம்.
வயது முதிர்ந்த இவர்களுக்கும் மங்களாவுக்கும் என்ன பிரச்சனை? நேரடியாக ஒரு பிரச்னையும் இல்லை. ஆனால், புத்திர பாக்கியம் இல்லாதவர்கள் எல்லாம் முன் ஜென்மத்தில் பாவம் செய்தவர்கள் என்று பழைய பஞ்சாங்கத்தை பாடிக்கொண்டிருக்கும் இரட்டைக்கிழவிகளின் கண்களுக்கு, மங்களாவும் ருக்மணியும் பாவம் செய்தவர்களாகவே தெரிகிறார்கள். அதனால் பாவம் செய்தவர்களைப் பார்க்கும்போது இவர்களுக்கு பிடிப்பதில்லை.
அகிலாண்டேஸ்வரி: என்னாச்சு மாமி? சோகமா இருக்கேள்?
அம்புஜம்: பெத்து படிக்க வச்சு கஷ்டப்பட்டு ஆளாக்குனா, புள்ள, பெண்ணு எல்லாரும் எங்களை விட்டுட்டு போய்ட்டா! இப்போதைக்கு நானும் இவளும் மட்டும் அந்த ஆத்துல தனியா இருக்கோம். அந்த எமன் எப்போ வந்து எங்கள கூட்டிண்டு போவானோ?
என்று தன் கண்கள் கலங்க, பக்கத்தில் அவள் இளைய சகோதரி பங்கத்தின் கண்களும் கலங்க இருவரும், தங்கள் முந்தானையின் நுனியால், கண்களை துடைத்துக்கொண்டிருந்தனர்.
அகிலாண்டேஸ்வரி: ஏன் மாமி அழறீங்கோ? நீங்க எங்க தனியா இருக்கீங்கோ? நாங்க அத்தன பேரும் உங்களுக்காக இருக்கோமே!
என்று அவர்களை தேற்ற, மற்ற நவரத்தினங்கள் அனைவரும், இரக்கத்துடன் ஆமாம் என்று தங்கள் தலையை ஆட்டிக்கொண்டிருந்தனர்.
அகிலாண்டேஸ்வரி குனிந்து கீழே மேல்படியில் அமர்ந்திருக்கும் கோமளவல்லியை பார்த்தார்.
கோமளவள்ளி(29), அக்ராஹாரத்திலேயே மங்களாவை அடுத்த அழகி என்றால் அது கோமளவள்ளி தான். ஆனால் அது தான் அவள் மங்களாவை வெறுப்பதற்கு காரணமும் ஆகும். பார்ப்பவர்கள் எல்லாம் அவளை மங்களாவுடன் ஒப்பிட்டு இரண்டாம் பரிசை கொடுத்து செல்வதால், கோமளவள்ளிக்கு ஒரு தாழ்வு மனப்பான்மை உண்டானது. அதனாலேயே மங்களாவை யாராவது வசை பாடினால் அவளுக்கு மிகவும் பிடிக்கும். நன்கு படித்து தகவல் தொழில் நுட்ப துறை அலுவலகத்தில் மனித வள மேலாளராக பெரிய பதவியில் இருக்கும் இவளுக்கு, மங்களாவை பற்றி கமலம் கூறுவதெல்லாம் அப்பட்டமான பொய் என்று நன்றாகவே தெரியும். ஆனாலும், மங்களாவின் அழகின் மீதுள்ள பொறாமையால், அவள் ஒன்றும் சொல்லாமல், கமலமும் பிறரும் மங்களாவை வசைபாடுவதை கேட்பதற்கென்றே இந்த கூட்டத்துடன் இருக்கிறாள். 3 மாதங்கள் முன்பு தான் திருமணம் ஆனது. கொஞ்சம் சிடு மூஞ்சி. நன்றாக நாட்டியம் ஆடுவாள்.
![[Image: maxresdefault.jpg]](https://i.ytimg.com/vi/nwZgS-Zvb8E/maxresdefault.jpg)
அகிலாண்டேஸ்வரி: வேலையெல்லாம் எப்படிடி போகறது?
கோமளவள்ளி: எங்க மாமி? அவாள கட்டி மேய்க்கிறதே பெரும் பாடா இருக்கும். ஒன்னொன்னும் ஒவ்வொரு விதமா இருக்கு. ஒவ்வொன்னுத்துக்கும் அதுக்கேத்த மாதிரி சொல்லித்தர வேண்டியதா இருக்கு. ஒரே கஷ்டம் மாமி!
அகிலாண்டேஸ்வரி: அத்தனையையும் கட்டி மேய்க்கிற தெறம உன்னாண்ட இருக்கவே தானடி இந்த சின்ன வயசுலயே அத்தன பெரிய பொசிஷன்ல இருக்க?
என்று புகழாரம் சூட, கோமளவள்ளியும் அகிலாண்டேஸ்வரியின் புகழாரத்தில் நனைந்து சிரித்துக்கொண்டிருந்தாள்.
அகிலாண்டேஸ்வரி: நாட்டியம்லாம் எப்படிடி போகறது?
கோமளவள்ளி: நன்னா போகறது மாமி.
அகிலாண்டேஸ்வரி: ரொம்ப நாள் ஆச்சு உன் நாட்டியத்த பாத்து. நேக்கு பாக்கணும்னு ஆஷயா இருக்குடி.
கோமளவள்ளி: ஐயோ மாமி! நீங்க என் நாட்டியதுக்கு வரது நான் பண்ண பாக்கியம் மாமி. அடுத்த முற ஆடுறப்போ, நானே நம்மாத்துக்கு வந்து, உங்கள முறைப்படி அழைக்கிறேன் மாமி!
அகிலாண்டேஸ்வரி: பெரியவா மேல நன்னா மரியாத கொடுக்குறவ! சமத்துடி நீ!
என்று கோமளவள்ளியை செல்லம் கொஞ்ச கோமளவள்ளியும் வெட்கம் கொண்டு சிரித்தாள்.
அகிலாண்டேஸ்வரி அப்படியே பார்வையை கோமளவள்ளியின் பக்கத்தில் அமர்ந்திருக்கும் நம் ஆசை
கமலத்தின் மீது திருப்பினார்.
கமலத்திற்கு மங்களா மீது இல்லாத பொல்லாத அவதூறுகளை பரப்பும் அளவுக்கு அப்படி என்ன தான் பிரச்சனை? கமலம் பிறப்பிலேயே பொறாமை குணம் கொண்டவள். யாரை பற்றியயேனும் தூற்றிக்கொண்டிருப்பது அவளுக்கு மிகவும் பிடிக்கும். அக்ராஹாரத்தில் வேறு யாரையாவது பேசினால், அவர்கள் மங்களாவை போல் பொறுத்துக்கொண்டிருக்க மாட்டார்கள். கமலத்திடம் சண்டைக்கு வந்து விடுவார்கள். ஆனால் மங்களாவோ அவள் பேசுவதை ஒரு பொருட்டாகவே மதிக்காமல் கடந்து செல்வாள். அதனாலேயே கமலத்திற்கு மங்களாவை பற்றி என்ன சொன்னாலும் பிரச்சனை வராது என்ற தைரியம் உண்டு.
பற்றாக்குறைக்கு எதிர் வீடு. நம் ஊரில், நாம் கஷ்டப்பட்டு நம் கடின உழைப்பால் ஒரு நல்ல நிலைமைக்கு வந்தாலும், ஏதோ அவர்கள் வீட்டிலிர்ந்து திருடிக்கொண்டு வந்ததை போல், நம் வீட்டின் அருகே வசிப்பவர்களும், உறவினர்களும் எண்ணுவது சகஜம் தானே? அது போல் தான் கமலத்திற்கும்.
மங்களாவோ கமலத்தை விட அழகிலும், படிப்பிலும், குணத்திலும் சிறந்தவள். கணவன் கை நிறைய சம்பாதித்தாலும், தானும் தன் சொந்த காலில் நிற்க வேண்டும் என்று வேலைக்கு செல்கிறாள்.
இவை அனைத்தும் போதாதென்று, கணவன் மனைவிக்கு இடையிலான நெருக்கமும் கமலத்தின் பொல்லாத கண்களில் கொள்ளிக்கட்டையை சொருகுவதை போல் இருக்கும்.
அகிலாண்டேஸ்வரி: என்னடி கமலம்?
கமலம்: சொல்லுங்கோ மாமி!
அகிலாண்டேஸ்வரி: ஆத்துக்காரர் மாமனார்களாம் எப்படி இருக்காங்க?
கமலம்: இருக்காங்கோ மாமி!
அகிலாண்டேஸ்வரி: என்னடி அப்டி சலிச்சிக்குற?
கமலம்: ஆத்துல எல்லா வேலையும் நானே பண்ணிண்டிருக்கேன். உதவி செய்ய கூட ஆள் இல்ல. ஆத்துகார் ஒரு வேலையும் செய்யுறதில்ல. வருவாரு படுத்து தூங்குவாரு. இதுல பத்தாததுக்கு அவரோட அப்பா வேற. ரெண்டுத்துக்கும் வடிச்சு கொட்டியே என் வாழ்க்க போய்டும் போல.
அகிலாண்டேஸ்வரி: பாவம் தான்டி நீ!
அகிலாண்டேஸ்வரி அப்படியே பார்வையை இரண்டாம் படிக்கு இறக்க, அங்கு அமர்ந்திருந்தாள் விசாலாட்சி.
விசாலாட்சி,வயது 39, அகிலாண்டேஸ்வரியை போலவே ஆச்சாரத்தை மிகவும் கடைபிடிப்பவள். வேற்று மனிதர்களின் வாடை துளியும் ஆகாது. ஆனால் அகிலாண்டேஸ்வரியை போல இல்லாமல் மற்ற நவரத்தினங்களை தொட்டு பேசுவதில் விசாலாட்சிக்கு ஒரு பிரச்னையும் இல்லை. அவர்கள் வீட்டுக்கும் செல்வாள். அவர்களை தன் வீட்டுக்குள்ளும் அனுமதிப்பாள். மங்களா பல்வேறு மக்களுடன், சகஜமாக பழகுவதை பார்த்து, அவள் மீது வெறுப்பு கொண்டிருக்கிறாள். அவள் சாலையில் செல்லும் யாரையோ பார்த்து, சற்று அருவருப்பு கொண்டவளாய் இருப்பதை அகிலாண்டேஸ்வரி பார்த்தார்.
![[Image: 92279090.jpg]](https://static.toiimg.com/thumb/msid-92279090,width-1280,height-720,resizemode-4/92279090.jpg)
அகிலாண்டேஸ்வரி: என்னாச்சுடி நோக்கு? யார அப்டி பாத்துண்டிருக்க?
விசாலாட்சி: மாமி! கண்டவாலாம் நம்ம அக்ராஹாரதுக்குள்ள வரா மாமி! நீங்க தான் மாமி ஏதாவது பண்ணனும்?
அகிலாண்டேஸ்வரி: பண்ணின்றுக்கேன்டி! அக்ராஹாரத்தோட ரெண்டு பக்கத்துலயும் கேட் போடலாம்னு முடிவு பண்ணிட்டேன்! யார் அந்த பக்கம் போறதுனாலும், பின்னாடி காட்ட சுத்திண்டு தான் போகணும்!
விசாலாட்சி: மன்னிக்கணும் மாமி! உங்களுக்கு இத பத்தி சொல்லனுமா? நீங்க இதுக்கு ஏதாவது ஏற்பாடு பண்ணிண்டிருப்பீங்கனு புரியாம சொல்லிட்டேன்!
மீதி நவரத்தினங்கள், அதை ஆமோதிப்பது போல் தலையை ஆட்ட,
அகிலாண்டேஸ்வரி: பரவாலடி!
திடீரென்று ஆஆஆ!ஐயோ! என்று அலறியபடி, அவள் பக்கத்தில் அமர்ந்திருந்த காமாட்சி எழுந்து நின்று புடவையை உதறிக்கொண்டிருந்தாள்.
காமாட்சி, வயது 30. மிகவும் மென்மையானவள், கூச்ச சுபாவம் கொண்டவள். யாரேனும் சத்தம் போட்டு பேசினாலும் பயந்து விடுவாள். கணவருடன் கட்டிலில் இருப்பதையே பெரிதும் விரும்பாதவள். மற்ற ஆண்களை பற்றி சொல்ல வேண்டியதே இல்லை. ஆண்களை கண்டாலே 10 அடி தூர எட்டி நிற்பாள். பயம் போக எண்ணி தற்காப்பு பயிற்சிக்கெலாம் சென்று கொண்டிருக்கிறாள். அப்படி இருக்கும் இவளுக்கு மங்களா மீதென்ன கோபம்? ஒரு கோபமும் இல்லை. நவரத்தினங்களை காக்கா பிடிப்பதற்காக, பேச்சுக்கென்று மங்களாவின் மீது ஏதேனும் அவதூறு சொல்லிவிட்டு, அவர்கள் பேசுவதை கேட்டுக்கொண்டிருப்பாள்.
அகிலாண்டேஸ்வரி: என்னடி ஆச்சு நோக்கு? ஏன்டி இப்படி பதறுற?
காமாட்சி: மாமி ஏதோ மேல விழுந்துடுத்து மாமி!
என்று சொல்லி தன் புடவையை மீண்டும் உதற, ஒரு காய்ந்த இல்லை அவள் புடவையிலிருந்து விழுந்தது. அதை பார்த்த அனைவரும் சிரிக்க,
அகிலாண்டேஸ்வரி: ஏன்டி இப்டி எல்லாத்துக்கும் பயந்துண்டிருக்க?
காமாட்சி: நான் என்ன மாமி பண்ணுறது? பயம் போக நான் ஏதேதோ பண்ணி பாக்கறேன். ஆனா ஒன்னும் நடக்க மாட்டேன்றது.
அகிலாண்டேஸ்வரி: என்னடி நீ இப்படி இருக்க? தைரியமா இருந்த தானேடி லோகத்துல பொழைக்க முடியும்?
காமாட்சி: உண்ம தான் மாமி!
காமாட்சியிடம் பேசிவிட்டு, கீழ் படியில் இருக்கும் கற்பகத்தை பார்த்தார் அகிலாண்டேஸ்வரி.
கற்பகம், வயது 28, பள்ளியில் மங்களாவுடன் படித்தவள். இப்போது இல்லத்தரசியாக இருக்கிறாள். பள்ளி பருவம் மங்களாவியின் பின் பல ஆண்கள் பித்து பிடித்து அலைந்ததை பார்த்து, அவளுக்கு அப்போதிருந்தே மங்களாவின் மீது ஒரு பொறாமை இருந்தது. பற்றாக்குறைக்கு, அவள் காதல் செய்த அந்த மாணவனும், தனக்கு மங்களாவின் மீது விருப்பமுள்ளதாக தெரிவித்துவிட்டு, அவள் காதலை நிராகரித்ததும் மேற்கொண்டு கோபத்தை கூட்டியது. ஆனால் மங்களாவோ அவனுடைய காதல் விண்ணப்பிப்பதை நிராகரித்து விட்டாள்.
பள்ளிப்பருவ பகைக்காக நவரத்தினங்கள் மங்களாவை பற்றி வசை பாடுவதை கேட்டு மகிழ்வாள்.
கற்பகம் 1 வருட குழந்தையின் தாய் ஆவாள். தனக்கு குழந்தை பிறந்து விட்டதால், குழந்தை பிறக்காத மங்களாவையும், மங்காளாவின் தோழியான ருக்மணியையும் பார்த்து இளக்காரமாக கருதுபவள். தன் குழந்தைக்கு ஏதேனும் சிறு காய்ச்சல் வந்தால் கூட அதற்கு மங்களாவும், ருக்மணியும் கண் வைத்தது தான் காரணம் என்று கருதி, ருக்மணியிடம் போனால் அவளிடம் நன்கு வாங்கிக்கட்டிக்கொண்டு வரவேண்டும் என்ற பயத்தில், மொத்த பழியையும் மங்களாவின் மீது போட்டுவிடுவாள்.
அகிலாண்டேஸ்வரி: குழந்த நன்னா இருக்கானாடி?
கற்பகம்: நன்னா இருக்கான் மாமி!
அகிலாண்டேஸ்வரி: பால் பத்தலன்னு ரெண்டு மாடு வாங்குனியே? இப்போ பால் பத்தறதா?
கற்பகம்: எங்க மாமி? இந்த மாட்டுக்காரன், எப்போ கேட்டாலும், மாடு அவ்ளோ தான் கறக்குதுனு சொல்லிண்டிருக்கான். தெனம் வெளிய பாக்கெட் பால் வாங்கிண்ட்ருக்கேன்.
அகிலாண்டேஸ்வரி: அடிப்பாவி! நேக்கு தெரிஞ்ச ஒரு நல்ல மாட்டுக்காரன் இருக்கான்டி. நீயும் அவனையே வேலைக்கு வச்சிக்குறியா?
கற்பகம்: உங்களுக்கேன் மாமி சிரமம்?
அகிலாண்டேஸ்வரி: நேக்கென்னடி இதுல சிரமம்?
கற்பகம்: சரி மாமி! இன்னும் கொஞ்ச நாள் பாக்குறேன்! அப்போவும் அவன் பால் சரியா கறக்கலைனா அவன வேலைய விட்டு தூக்கிடுறேன் மாமி!
அகிலாண்டேஸ்வரி: சரிடி! நோக்கென்ன தோணுதோ அப்படியே செய்!
சாமுண்டீஸ்வரி: பின்னாடி அந்த பாழடைஞ்ச கெணத்த தூர் வாரிண்டுருந்தேளே மாமி? எவ்ளோ வேல முடிஞ்சுது?
அகிலாண்டேஸ்வரி: எங்கடி? அவாளும் தோண்டிண்டு தான் இருக்கா! ஆனா இன்னும் வேல முடிஞ்சபாடில்ல. கேட் வழிய ஜேசிபி போக வழியும் இல்ல. அப்டி இருந்தா ஒரே நாளல்ல வேல முடிஞ்சிருக்கும். நெறய பெற விடவும் விருப்பம் இல்ல. அவா ரெண்டு பெற பாக்குறப்போவே நேக்கு பத்திண்டு வர்றது. இதுல எங்க நெறய பெற விடுறது? நம்மாத்துல ஜலம் கூட அவாளுக்கு குடுக்கிறதில்ல. அவா வரும்போதே ஜலம் கொண்டு வருவா. அப்டியே வருவா; வேல முடிஞ்சப்புறம் பின்னாடியே போய்டுவா. அவாளலாம் முன்வாசல் வழியா விட முடியுமோ சொல்லு! மழ காலம் வரதுக்கு முன்னே வேலைய முடிச்சிட்டான்னா, நன்னா இருக்கும்.
சாமுண்டீஸ்வரி: சரி தான் மாமி! உங்களுக்கு தெரியாததா?
அகிலாண்டேஸ்வரி தன்னை எண்ணி பெருமைபட்டுக்கொண்டாள்.
அவர்கள் பேசிக்கொண்டிருக்க, அந்த பக்கம் போன மங்களாவைப் பார்த்து கமலம், தபால் காரரை வைத்து இணைத்து அவதூறு பரப்ப, நவரத்தினங்கள் அனைவரும், மங்களாவின் நடத்தையை பற்றி வசை பாடி விட்டு,
பிறகு அக்ராஹாரத்தில் நடந்த மற்ற விஷயங்களை பற்றியும் பேசிவிட்டு கலைந்து சென்றனர்.
அடுத்த நாள் காலை மங்களா தன் பக்தர்கள் அனைவருக்கும் தரிசனம் கொடுத்துவிட்டு வேலைக்கு சென்று திரும்பினாள்.
ஞாயிறு வந்தது. மங்களாவும் ருக்மணியும் பத்து மாமியின் இல்லத்திற்கு வளைக்காப்பிற்காக கிளம்பி சென்றனர்.
***********************************************************************************************************************
Guest users can share their thoughts here,
https://www.secretmessage.link/secret/67aeaa3dd8f07/
***********************************************************************************************************************