Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
டாஸ்மாக்கை மூடுங்கள்' - மனைவி சடலத்தோடு 4 மணி நேரம் போராடிய கோவை மருத்துவர்!
வாகன விபத்தில் சம்பவ இடத்திலேயே மனைவி இறந்துவிட, பலத்த காயத்தோடு உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கிறார் உயிருக்கு உயிரான மகள். உலகமே இருண்டது போன்ற அந்த ரணமான சூழலில், ஒரு தந்தையால் என்ன செய்துவிட முடியும்? கோவையைச் சேர்ந்த டாக்டர் ரமேஷ்.... உயிருக்குப் போராடிய தன் மகளை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு, விபத்துக்குக் காரணமான டாஸ்மாக்கை மூடச்சொல்லி, தன் மனைவியின் சடலத்தோடு 4 மணி நேரத்துக்கும் மேலாகப் போராடியுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவையை அடுத்த கணுவாய்ப் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். டாக்டரான இவர் இயற்கை ஆர்வலர், தொடர்ந்து சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காகப் பல்வேறு தளங்களில் பணியாற்றியவர். எளிய மக்களுக்குச் சேவை செய்வதையே வாழ்வாகக் கொண்டிருந்தவர். சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் பிரபலமான நபர். இவருடைய மகள் சாந்தலா ஆனைகட்டியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், நேற்று மாலை பள்ளியிலிருந்து சாந்தலாயை அழைத்து வருவதற்காக ரமேஷின் மனைவி ஷோபனா ஸ்கூட்டரில் சென்றுள்ளார்.
மகளை அழைத்துக்கொண்டு ஜம்புகண்டிக்கு அருகில் ஷோபனா வந்துகொண்டிருந்தபோது, எதிர்த் திசையில் அசுர வேகத்தில் வந்த பைக் ஷோபனாவின் ஸ்கூட்டர் மீது நேருக்கு நேர் மோதியது. இந்த கோர விபத்தில், ஷோபனா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். சாந்தலா பலத்த அடியோடு உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தார். இந்த அதிர்ச்சி தகவலறிந்து சம்பவ இடத்திற்குப் பதறிக்கொண்டு வந்த டாக்டர் ரமேஷ், உயிருக்குப் போராடிய தனது மகளை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டார். பின் மனைவியின் உடலைப் பார்த்து கண்ணீர் மல்கக் கதறி அழுத ரமேஷ், மனைவியின் சடலத்தோடு அந்தப் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை மூடச் சொல்லி போராட்டத்தில் குதித்துவிட்டார்.
ஜம்புகண்டி பகுதியில் உள்ள டாஸ்மாக்கில் மது குடித்துவிட்டு வருபவர்களால் அந்தப் பகுதியில் இதுபோன்ற விபத்துகள் அடிக்கடி நடக்கிறது என்பது அந்தப் பகுதி மக்களின் நீண்ட நாள் குற்றச்சாட்டு. ஷோபனாவின் ஸ்கூட்டரில் மோதிய ஆனைகட்டியைச் சேர்ந்த பாலாஜி என்பவர் குடிபோதையில் இருந்ததாகவும், போதைதான் இந்த விபத்துக்கு முக்கிய காரணம் என்றும் அந்த டாஸ்மாக் மதுக்கடையை மூடும் வரை போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை எனக்கூறி சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக அப்பகுதி மக்களைத் திரட்டி போராட்டம் நடத்தினார் டாக்டர் ரமேஷ்.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த கோவை வடக்கு பகுதி தாசில்தார், துடியலூர் இன்ஸ்பெக்டர் பாலமுரளி ஆகியோர் போராட்டம் நடத்திய ரமேஷிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அந்த டாஸ்மாக் கடையை அகற்றுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், விபத்து ஏற்படுத்தி உயிரிழப்பு ஏற்படுத்தியவர்கள் மீது கடும் சட்டப்பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்படும் என்றும் அவர்கள் உறுதியளித்த பிறகே, தனது போராட்டத்தைக் கைவிட்டார் டாக்டர் ரமேஷ். அவருடைய மகள் சாந்தலா கோவை கங்கா மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவருகிறார். ஷோபனா மரணம் குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
32 ஏக்கர்; 54,000 சதுப்பு நில மரங்கள்! - புல்லட் ரயில் திட்டத்துக்காக அழிக்கப்படும் காடுகள்
பிரதமர் மோடியின் கனவுத் திட்டமான, மாகாராஷ்டிராவின் மும்பை முதல் குஜராத்தின் அகமதாபாத் வரையிலான இந்தியாவின் முதல் புல்லட் ரயில் சேவைக்கான பணிகள் விரைவில் தொடங்கப்படவுள்ளது. மொத்தம் ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் இந்தத் திட்டத்துக்கு ஜப்பான் அரசு 88,000 கோடி ரூபாய் இந்தியாவுக்கு வழங்கியுள்ளது. மீதமுள்ள தொகையை மாகாராஷ்டிரா மற்றும் குஜராத் அரசுகள் வழங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் மே மாதம் இந்தியா வந்திருந்த ஜப்பான் நாட்டு அதிபர் புல்லர் ரயில் திட்டத்துக்கான அடிக்கல்லை நாட்டினார். இன்னும் சில மாதங்களில் மகாராஷ்டிராவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. அதனால் தற்போதே புல்லட் ரயில் திட்டத்துக்கான பணிகளை விரைவில் நடத்த அதிக மும்முரம் காட்டி வருகிறது மத்திய அரசு.
இந்நிலையில் மகாராஷ்ட்ராவில் நேற்று நடந்த சட்டமன்றக் கூட்டத் தொடரில் இந்த விவகாரத்தை எழுப்பிய சிவசேனா கட்சியின் மனீஷா கயாந்தே, `புல்லட் ரயில் திட்டத்துக்காக 32 ஏக்கரில் உள்ள 54,000 சதுப்பு நில மரங்கள் அழிக்கப்படும் அபாயம் இருக்கிறது. இதனால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும்' எனக் குற்றம்சாட்டினார்.
அவரின் கருத்துக்கு பதில் அளித்துப் பேசிய போக்குவரத்துத்துறை அமைச்சர் திவாகர் ராவ்தி, ``விரைவில் புல்லட் ரயில் திட்டத்துக்கான பணிகள் தொடங்கப்பட இருக்கின்றன. ஆனால், அதற்காக அதிக மரங்கள் வெட்டப்படப்போவதில்லை. இதனால் வெள்ள அபாயமும் வரப்போவதில்லை. புல்லட் ரயில் திட்டத்துக்காக அனைத்துத் தூண்களும் மிகவும் உயரமாகக் கட்டப்படவுள்ளது. அதனால் சுற்றுச் சூழலுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. இந்தத் திட்டத்துக்காக சில மரங்கள் வெட்டப்பட்டாலும், ஒரு மரத்துக்கு ஐந்து புதிய மரங்கள் வீதம் இன்னும் அதிகமான மரங்கள் நடப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, புல்லட் ரயிலால் அதிகமான விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் அவர்களின் நிலங்கள் பறிக்கப்படுவதாகவும் கூறிய காங்கிரஸ் எம்.எல்.ஏ-வின் கேள்விக்குப் பதிலளித்த திவாகர், ``புல்லட் ரயில் திட்டம் மொத்தமாக 1,379 ஹெக்டேர் வரை கொண்டது. இதில் 724 ஹெக்டேர் குஜராத்திலும், 270 ஹெக்டேர் மகாராஷ்ட்ராவிலும் உள்ளது. அதிலும் 188 ஹெக்டேர் நிலங்கள் தனியாருக்குச் சொந்தமானது. அவர்களுக்கு உரிய தொகை வழங்கப்பட்டு அந்த நிலங்களை அரசு வாங்கிவிட்டது. தானே மாவட்டத்தில் உள்ள 84 ஹெக்டேர் நிலங்கள் மட்டுமே விவசாயிகளுடையது. அதில் 2 ஹெக்டேர் நிலங்கள் மட்டுமே விவசாயிகளின் விருப்பபடி வாங்கப்பட்டுள்ளது. அதற்கு உரிய தொகையும் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது” எனக் கூறியுள்ளார்.
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
`மணிக்கு 600 கி.மீ வேகம்!' - விமானங்களுக்கு டஃப் கொடுக்கும் சீனாவின் அடுத்த மின்னல் வேக ரயில்
மணிக்கு 600 கிலோமீட்டர் வேகம்வரை எட்டும் புதிய ரயிலின் மாதிரியை ஷின்டோவ் (Qingdao) நகரில் அறிமுகப்படுத்தியுள்ளது சீனா. இந்த ரயில்கள் பயன்பாட்டுக்கு வரும்போது விமான சேவைகளுக்கே போட்டியாக அமையும் என நம்பப்படுகிறது. China Railway Rolling Stock Corporation (CRRC) என்னும் சீனா அரசின் துணைநிறுவனம்தான் இந்த ரயிலை வடிவமைத்துள்ளது.
இதில் ஈடுபட்டிருக்கும் பொறியியலாளர்கள், இது மொத்த சீனாவின் போக்குவரத்தையும் மாற்றியமைக்கும் என நம்பிக்கை தெரிவிக்கின்றனர். ``பெய்ஜிங்கையும் ஷாங்காயையும் எடுத்துக்கொள்ளுங்கள். இவற்றுக்கிடையே விமானத்தில் சென்றால் 4.5 மணி நேரம் ஆகும். இப்போது இருக்கும் அதிவேக ரயில்களில் 5.5 மணிநேரம் ஆகும். இதுவே இந்தப் புதிய ரயில்களில் 3.5 மணி நேரம்தான் ஆகும்" என்கின்றனர் அவர்கள். மணிக்கு 600 கிலோமீட்டர் வேகத்தைத் தொடும் முதல் ரயிலாக இது இருக்காது. ஏற்கெனவே 2015-ல் ஜப்பான் மேக்லெவ் ரயில் சோதனை ஓட்டங்களில் மணிக்கு 603 கிலோமீட்டர் வேகத்தைத் தொட்டது.
P.C: CRRC
Magnetic Leviation தொழில்நுட்பத்தில் காந்த சக்தியால் இயங்கும் இந்த ரயில்கள். 53 மீட்டர் உள்ள இந்த மாதிரியில் ஓட்டுநருக்கான ஒரு பெட்டியும், பயணிகளுக்கான ஒரு பெட்டியும் இருக்கிறது. 2016-ல் அறிவிக்கப்பட்ட ஐந்து வருட மேக்லெவ் முன்னேற்றத் திட்டத்தின்கீழ் இது தயாராகிவருகிறது. இதற்கான சோதனை தடங்கள் 2021-ல் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தத் திட்டத்தின் பட்ஜெட் இந்திய மதிப்பில் சுமார் 3200 கோடி ரூபாய். இதில் 430 கோடி சீன அரசு நிதியில் இருந்துவரும். ஏற்கெனவே சீனாவில் சற்றே குறைந்த வேகத்தில் 2002 முதல் maglev ரயில்கள் இயக்கப்பட்டுதான் வருகின்றன. மேக்லெவ் தொழில்நுட்பம்தான் ரயில்களின் எதிர்காலம் என்பதை இந்தத் திட்டங்கள் மீண்டும் அழுத்திக் கூறுகின்றன.
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
அரையிறுதியில் ஆஸி., : இங்கிலாந்து 'சரண்டர்'
லண்டன்: உலக கோப்பை தொடரின் அரையிறுதிக்கு முதல் அணியாக முன்னேறியது ஆஸ்திரேலியா. நேற்று நடந்த லீக் போட்டியில் இங்கிலாந்தை 64 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
இங்கிலாந்தில் 12வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. லண்டன், லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் மார்கன் பீல்டிங் தேர்வு செய்தார்.
சூப்பர் துவக்கம்
ஆஸ்திரேலிய அணிக்கு கேப்டன் பின்ச், வார்னர் ஜோடி சூப்பர் துவக்கம் கொடுத்தது. வார்னர் 20வது அரைசதம் எட்டினர். மொயீன் அலி சுழலில் வார்னர் (53) சிக்கினார். கவாஜா 23 ரன்னுக்கு போல்டானார்.
சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்த பின்ச், ஒருநாள் அரங்கில் 15வது சதம் எட்டினார்.அடுத்த பந்தில் சிக்சருக்கு ஆசைப்பட்டபின்ச் (100), அவுட்டானார்.
மேக்ஸ்வெல் ஏமாற்றம்
மேக்ஸ்வெல் 12 ரன்னுக்கு உட் வீசிய 'ஷார்ட் பிட்ச்' பந்தில் அவுட்டானார். ஸ்டாய்னிஸ் (8) ரன் அவுட்டானார். தடுமாறிய ஸ்மித் 38 ரன்கள் எடுத்தார். கம்மின்ஸ் (1) கைவிட்டார். கடைசி ஓவரில் கேரி 11 ரன்கள் எடுத்து உதவினார்.ஆஸ்திரேலிய அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 285 ரன்கள் எடுத்தது. கேரி (38), ஸ்டார்க் (4) அவுட்டாகாமல் இருந்தனர்.
விக்கெட் சரிவு
இங்கிலாந்து அணிக்கு பேர்ஸ்டோவ், வின்ஸ் ஜோடி துவக்கம் கொடுத்தது. ஆஸ்திரேலிய 'வேகங்கள்' மிரட்டினர். பெஹ்ரன்டர்ப் வீசிய முதல் ஓவரின் 2வது பந்தில் வின்ஸ் 'டக்' அவுட்டானார்.மறுபக்கம் தன் பங்கிற்கு மிரட்டிய ஸ்டார்க், ஜோ ரூட் (8),மார்கனை (4) வீழ்த்த, இங்கிலாந்து 26/3 ரன் என திணறியது. பேர்ஸ்டோவ் 27 ரன்னுக்கு திரும்பினார்.
ஸ்டோக்ஸ் ஆறுதல்
ஸ்டோக்ஸ் ஒருநாள் அரங்கில் 18வது அரைசதம் எட்டினார். இவர் 89 ரன்கள் எடுத்த போது ஸ்டார்க் வீசிய 145 கி.மீ., வேக 'யார்க்கரில்' போல்டானார். மொயீன் அலியும் 6 ரன்னுக்கு திரும்பினார். வோக்ஸ் (26), அடில் ரஷித் (25), ஆர்ச்சர் (1) சொதப்பினார்.
இங்கிலாந்து அணி 44.4 ஓவரில் 221 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலியா 64 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 7 போட்டியில் 6 வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா, 12 புள்ளிகள் பெற்று, முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேறியது. பெஹ்ரன்டர்ப் 5,ஸ்டார்க் 4 விக்கெட் வீழ்த்தினர்.
வார்னர் '500'
நேற்று 53 ரன்கள் எடுத்த ஆஸ்திரேலியாவின் வார்னர், இந்த உலக கோப்பை தொடரில் 500 ரன்கள் எடுத்த முதல் வீரர் ஆனார். அடுத்த இடங்களில் சக வீரர் பின்ச் (496 ரன்) வங்கதேசத்தின் சாகிப் அல் ஹசன் (476), ஜோ ரூட் (424) உள்ளனர்.
ஆஸ்திரேலியாவின் வார்னர், பின்ச் ஜோடி, அணிக்கு சூப்பர் துவக்கம் தருகிறது. இதுவரை களமிறங்கிய 7 போட்டிகளில் இந்த ஜோடி 96, 15, 61, 146, 80, 121, 123 என மொத்தம் 642 ரன்கள் குவித்துள்ளது.
இதையடுத்து உலக கோப்பை தொடரில் முதல் விக்கெட்டுக்கு ஒட்டுமொத்தம் அதிக ரன்கள் சேர்த்த ஜோடி வரிசையில் வார்னர், பின்ச் இணை, 3வது இடத்துக்கு முன்னேறியது. முதல் இரு இடங்களில் இலங்கையின் தில்ஷன், தரங்கா (9 போட்டி, 800 ரன், 2011), ஆஸ்திரேலியாவின் கில்கிறிஸ்ட், ஹைடன் (10ல் 699 ரன், 2007) ஜோடி உள்ளன.
வார்னர், பின்ச் இணைந்து உலக கோப்பை தொடரில் முதல் விக்கெட்டுக்கு அதிகமுறை 50 அல்லது அதற்கும் மேல் ரன்கள் சேர்த்த 'நம்பர்-1' ஜோடி என்ற பெருமை பெற்றனர். 2019 தொடரில் இதுவரை 5 முறை இது போல ரன்கள் எடுத்தனர். அடுத்த இடத்தில் கிரீம் பவுலெர்-தாவரே (இங்கிலாந்து, 1983), டேவிட் பூன், மார்ஷ் (ஆஸி., 1987, 92), அமீர் சோகைல், சயீத் அன்வர் (பாக்., 1996), கில்கிறிஸ், ஹைடன் (ஆஸி., 2003, 07) ஜோடி தலா 4 முறை இப்படி ரன்கள் சேர்த்தனர்.
நேற்று 100 ரன்கள் எடுத்த பின்ச், இங்கிலாந்துக்கு எதிராக 7வது சதம் (25 போட்டி அடித்தார். இங்கிலாந்துக்கு எதிராக எந்த ஒரு வீரரும் இவ்வளவு சதம் ஒருநாள் அரங்கில் அடித்தது இல்லை.
உலக கோப்பை அரங்கில் ஒரு தொடரில் அதிக விக்கெட் வீழ்த்திய இங்கிலாந்து பவுலர்களில் இயான் போத்தமுடன் (1992) இணைந்தார் ஜோப்ரா ஆர்ச்சர். இருவரும் தலா 16 விக்கெட் சாய்த்தனர். பிளின்டாப் (14 விக்.,, 2007), விக் மார்க்ஸ் (13, 1983) அடுத்த இடங்களில் உள்ளனர்.
நேற்று 44 ரன்கள் கொடுத்து, 5 விக்கெட் சாய்த்த ஆஸ்திரேலியாவின் பெஹ்ரன்டர்ப், ஒருநாள் மற்றும் உலக கோப்பை அரங்கில் தனது சிறந்த பந்து வீச்சை பதிவு செய்தார். இதற்கு முன் துபாய் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக 63 ரன்னுக்கு 3 விக்கெட் வீழ்த்தி இருந்தார்.* லார்ட்சில் 5 விக்கெட் வீழ்த்திய ஐந்தாவது ஆஸ்திரேலிய பவுலர் ஆனார் பெஹ்ரன்டர்ப்.
உலக கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஒரு போட்டியில் அதிக ரன் எடுத்த இங்கிலாந்து வீரர்களில் மூன்றாவது இடம் பிடித்தார் ஸ்டோக்ஸ் (89 ரன்). முதல் இடங்களில் பீட்டர்சன் (104, 2007), ஜேம்ஸ் டெய்லர் (2015) உள்ளனர்.
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
அமெரிக்கா: இ-சிகரெட்டால் பிரச்சனை இல்லையென்று யார் சொன்னது?
படத்தின் காப்புரிமைGETTY IMAGESImage captionசித்தரிப்புக்காக
இ-சிகரெட்டால் பிரச்சனை
இ- சிகரெட் உடல் நலத்தில் என்ன விதமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தெளிவாக தெரியும் வரை அதன் விற்பனையை தடை செய்வதாக அமெரிக்காவில் முதல் முதலாக சான் ஃபிரான்சிஸ்கோ மாகாணம் உத்தரவிட்டுள்ளது. கடைகளில் விற்பனையை தடை செய்ததோடு மட்டுமில்லாமல், இணையத்தில் விற்பனை செய்வதும் சட்ட விரோதமென அறிவித்துள்ளது.
படத்தின் காப்புரிமைBOSTON GLOBE VIA GETTY IMAGES
பிரபல இ-சிகரெட் நிறுவனமான ஜூல் லேப்ஸின் தலைமையகம் கலிஃபோர்னியாவில்தான் அமைந்துள்ளது. புகைப்பழக்கத்தை விட்டவர்கள் மீண்டும் இந்த தடையால் புகை பிடிப்பார்கள் அதுமட்டுமல்லாமல் கள்ள சந்தைக்கும் வழிவகுக்குமென ஜூல் லேப்ஸ் நிறுவனம் கூறி உள்ளது
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
ஸ்குருடிரைவர் மூலம் கொலை; செயின் பறிப்பில் கிங் - பெண்களைப் பதற வைத்த திருடன் சிக்கியது எப்படி?
சென்னையில் செயின் பறிப்புச் சம்பவத்தில் ஈடுபட்ட ராகேஷ் என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர். ஸ்குருடிரைவர் மூலம் கொலை செய்வதே ராகேஷின் ஸ்டைல் என்கின்றனர் போலீஸார்.
சென்னையில் கடந்த சில தினங்களாக தொடர்ச்சியாக தனியாக நடந்துசெல்லும் பெண்களிடம் செயின்பறிப்புச் சம்பவங்கள் நடந்தன. கடந்த 2 தினங்களில் மட்டும் 9 பெண்களிடம் செயின் பறிப்புச் சம்பவங்கள் நடந்துள்ளன. இதனால் பெண்கள் பீதியடைந்துள்ளனர். செயின் பறிப்புச் சம்பவம்போல செல்போன் பறிப்புச் சம்பவங்களும் தொடர்கதையாக உள்ளன. செயின்பறிப்பு, செல்போன் பறிப்புச் சம்பவங்களைத் தடுக்க கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார்.
சென்னை கோட்டூர்புரம் ஏரிக்கரைப் பகுதியைச் சேர்ந்த செல்வியிடம் பைக்கில் ஹெல்மெட் அணிந்துவந்த கொள்ளையர்கள் 5 சவரன் செயினைப் பறித்தனர். கொள்ளையர்களுடன் செல்வி போராடியும் செயினைக் காப்பாற்ற முடியவில்லை. இந்தக் காட்சி அருகில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தன.
அதை கோட்டூர்புரம் போலீஸார் ஆய்வுசெய்தனர். அப்போது பைக்கில் வந்த கொள்ளையர்களில் பின்னால் அமர்ந்திருந்தவர் ஹெல்மெட் அணியவில்லை. இதனால் அவரின் முகம் தெளிவாகத் தெரிந்தது. அதைவைத்து செயின்பறிப்புக் கொள்ளையர்களை போலீஸார் அடையாளம் கண்டனர்.
இதுகுறித்து மயிலாப்பூர் போலீஸார் கூறுகையில், ``கோட்டூர்புரத்தில் நடந்த செயின் பறிப்புச் சம்பவத்தில் பயன்படுத்திய பைக், திருடப்பட்டது. இந்த பைக் மயிலாப்பூரில் கடந்த 22-ம் தேதி திருடிய கொள்ளையர்கள் அதன்மூலம் செயின்பறிப்புச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். மூலக்கடையைச் சேர்ந்த ராகேஷ் என்பவர் சரித்திர பதிவேடு குற்றவாளி. இவர் மீது கொலை வழக்குகள், கொலை முயற்சி, திருட்டு உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளன. செயின் பறிப்புச் சம்பவத்தில் ராகேஷ், பைக்கின் பின்னால் அமர்ந்திருந்துள்ளார். இவர்தான் பெண்களின் கழுத்திலிருந்து செயினைப் பறித்துள்ளார். செயின் பறிப்பில் ராகேஷ் கிங் என்கின்றனர் அவரின் கூட்டாளிகள். செல்வியிடம் செயின் பறித்த சம்பவத்தில் பைக்கை ஓட்டியது ராகேஷின் கூட்டாளி சீனு. அவர் தலைமறைவாக உள்ளார். அவரைத் தேடி வருகிறோம். ராகேஷைப் பிடித்து அவரிடமிருந்து செயின்களைப் பறிமுதல் செய்துள்ளோம். ஸ்குரு டிரைவர் மூலம் குத்திக் கொலை செய்வதுதான் ராகேஷின் ஸ்டைல்" என்றனர்.
ராகேஷ் கைது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த மயிலாப்பூர் துணை கமிஷனர் மயில்வாகனன், ``சிசிடிவி கேமரா காட்சி மூலம் கொள்ளையன் ராகேஷை கைது செய்துள்ளோம். இவர் மீது கொலை வழக்குகள், வழிப்பறி வழக்குகள் நிலுவையில் உள்ளன. ராகேஷின் கூட்டாளியைத் தேடிவருகிறோம். செயின் பறிப்புக்குப் பயன்படுத்திய திருட்டுப் பைக்கை பறிமுதல் செய்துள்ளோம். சம்பவத்தன்று காலையில் ஐஸ்ஹவுஸ் பகுதியில் தொடங்கும் செயின் பறிப்புச் சம்பவம் கோட்டூர்புரம், ராயப்பேட்டை, தேனாம்பேட்டை, மயிலாப்பூர், ஆதம்பாக்கம் திருமங்கலம், பள்ளிக்கரணை ஆகிய இடங்களில் இரவு வரை நடந்துள்ளது. ராகேஷின் கூட்டாளியையும் விரைவில் கைது செய்துவிடுவோம்" என்றார்.
தனிப்படை போலீஸார் கூறுகையில், ``சென்னையில் தொடர்ந்து செயின்பறிப்புச் சம்பவங்கள் நடந்ததும் கோட்டூர்புரம் உதவி கமிஷனர் சுதர்சன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீஸார் செயின் பறிப்புச் சம்பவங்கள் நடந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போதுதான் ராகேஷ் குறித்த தகவல் கிடைத்தது. அவரின் நடவடிக்கைகளை ரகசியமாக கண்காணித்து இன்று அதிகாலை கைது செய்துள்ளோம். அவரிடம் விசாரித்தபோது செயின் பறிப்புச் சம்பவத்தில் ஈடுபட்டதை ஒப்புக் கொண்டார். செயின் பறிப்பில் கிடைத்த நகைகளை ராகேஷ் மற்றும் அவரின் கூட்டாளியும் பங்கு போட்டுள்ளனர். ராகேஷ்தான் நடந்து செல்லும் பெண்களிடம் தைரியமாக செயின் பறிப்பார். அப்போது பெண்கள் போராடினாலும் அவர்களை ராகேஷ் தாக்கிவிட்டு தப்பிச் செல்வதுண்டு. ராகேஷ், எங்களிடம் செயினைப் பறிப்பது எப்படி என்ற தகவலை விளக்கமாக தெரிவித்துள்ளார்" என்றனர்.
நடந்து செல்லும் பெண்களிடம் ராகேஷ் செயின் பறிக்கும் சிசிடிவி காட்சிகளைப் பார்ப்பவர்களின் நெஞ்சைப் பதற வைக்கிறது.
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
சந்திரபாபு நாயுடுவின் ரூ.8 கோடி மதிப்புள்ள வீட்டை இடிக்கும் பணி தொடக்கம்: பலத்த போலீஸ் பாதுகாப்பு
சந்திரபாபு நாயுடுவின் வீட்டை இடிக்கும் பணி நடந்து வரும் காட்சி : படம் ஏஎன்ஐ
கிருஷ்ணா நதியின் கரைஓரத்தில் கட்டப்பட்டுள்ள தெலுங்குதேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவின் ரூ.8 கோடி மதிப்புள்ள வீடு, பிரஜா வேதிகா எனும் கட்சியின் கட்டிடம் ஆகிவற்றை இடிக்கும் பணி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தொடங்கி நடந்து வருகிறது.
வீட்டை இடிப்பதை நிறுத்தக் கோரும் பொதுநலன் மனுவை நள்ளிரவில் விசாரித்த உயர் நீதிமன்றம் தடைவிதிக்க மறுத்துவிட்டது
ஆந்திர முன்னாள் சந்திரபாபு நாயுடு அமராவதியில் உண்டவெளி பகுதியில் கிருஷ்ணா நதிக்கரையின் ஓரத்தில் பிரம்மாண்ட வீட்டையும் அதன் அருகே, ரூ.5 கோடி மதிப்பில் பிரஜா வேதிகா (மக்கள் குறைதீர்க்கும் அரங்கு) என்ற கட்டிடத்தை கடந்த 2017-ம் ஆண்டு கட்டினர். இதன் மதிப்பு ரூ. 8 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த கட்டிடமும், சந்திரபாபு நாயுடுவின் வீடும் அருகே அமைந்தவாறு அமைக்கப்பட்டது. கட்சி நிர்வாகிகளிடம் பேசுவதற்கும், சிறப்புக்கூட்டங்கள் நடத்துவதற்கும் பிரஜா வேதிகா இல்லம் பயன்படுத்தப்பட்டது.
இந்நிலையில், தேர்தல் பிரச்சாரத்தின் போது ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி, கிருஷ்ணா நதிக்கரையில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள அனைத்து கட்டிடங்களும் அகற்றப்படும் எனத் தெரிவித்திருந்தார்.
தேர்தலில் சந்திரபாபு நாயுடு ஆட்சியை இழந்து, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்றியது. முதல்வராக ஜெகன்மோகன் ரெட்டிக்கு கடிதம் எழுதிய சந்திரபாபு நாயுடு, தனது இல்லத்தையும், பிரஜா வேதிகா இல்லத்தையும் தொடர்ந்து பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
ஆனால், கடந்த சனிக்கிழமை பிரஜா வேதிகா இல்லத்தை ஆந்திர மாநில அரசு கையகப்படுத்தியது. அந்த இல்லத்தில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, மாவட்ட ஆட்சியர்கள், போலீஸ் எஸ்பிக்கல், அதிகாரிகளுடன் 2 நாட்கள் ஆலோசனை நடத்தினார்.
அந்த ஆலோசனையின் முடிவில், கிருஷ்ணா நதிக்கரையில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள அனைத்து கட்டிடங்களையும் இடிக்க உத்தரவிட்டார். மேலும், சந்திரபாபு நாயுடு வாழ்ந்துவரும் இல்லமும், பிரஜா வேதிகா இல்லமும் சட்டவிரோதமானது என்று ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்தார்.
இதையடுத்து, நேற்று நள்ளிரவில் இருந்து சந்திரபாபு நாயுடுவின் இல்லம் இடிக்கும் பணி தொடங்கியது. கட்டிடத்தின் சுற்றுச்சுவர், சமையற்கூடம், சாப்பிடும் அறை, கழிவறை ஆகியவை இடிக்கப்பட்டன. இன்று காலை முதல் மீண்டும் இடிக்கும் பணி தொடங்கி போலீஸார் பாதுகாப்புடன் நடந்து வருகிறது.
வீட்டை இடிக்கும் பணி நடந்து வரும் காட்சி: படம் ஏஎன்ஐ
தலைநகர் பகுதி மேம்பாட்டு ஆணையத்தின் கூடுதல் ஆணையர் விஜய் கிருஷ்ணன் தலைமையில் கட்டிடத்தை இடிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. உண்டவெளி பகுதியில் பதற்றமாக இருப்பதால், போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையை கட்டிடத்தை தேவையின்றி இடிப்பதால், மக்கள் பணம் வீணாகிறது எனக் கோரி சமூக ஆர்வலர் பி. சீனிவாச ராவ் ஆந்திர உயர் நீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்து, கட்டிட இடிக்கும் பணியை நிறுத்தக் கோரினார். இந்த மனுவை அதிகாலை 2.30 மணிக்கு நீதிபதிகள் சீதாராம மூர்த்தி, ஜி.ஷியாம் ஆகியோர் விசாரித்தனர். அப்போது அரசு தரப்பில் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. இதனால் கட்டிடத்தை இடிக்க தடை விதிக்க முடியாது என்று நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.
முன்னதாக சந்திரபாபு நாயுடு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததும் குறிப்பிடத்தக்கது.
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
`ஒரு சிலரின் தவற்றுக்காக மாநிலத்தையே குற்றம்சாட்டுவது சரியல்ல!' -ஜெய்ஶ்ரீராம் குறித்து மோடி
ஜார்க்கண்ட் மாநிலம் கர்ஸ்வான் மாவட்டத்தில் கடந்த 18-ம் தேதி அன்சாரி என்கிற 24 வயது இளைஞனை திருடன் எனக் கருதி ஒரு கும்பல், கம்பத்தில் கட்டி வைத்து அடித்து உதைத்தது. அந்த இளைஞன் முஸ்லிம் மதத்தைச் சார்ந்தவர் எனத் தெரிந்ததும் அவரை `ஜெய் ஶ்ரீராம்', `ஜெய் ஹனுமான்' என்று சொல்லுமாறு கட்டாயப்படுத்தி மேலும் அடித்தார்கள். சுமார் ஏழுமணி நேரம் தாக்குதலுக்குப் பிறகு அந்த இளைஞன் மயங்கி விழுந்தார். அவரை அடித்துத் துன்புறுத்திய காட்சி சமூக வலைதளங்களில் பரவி மனிதநேயம் கொண்ட ஒவ்வொருவரையும் தொந்தரவுக்கு உள்ளாக்கியது.
`18 மணிநேரம் கழித்து மருத்துவமனையில் சேர்க்க அந்த இளைஞர் சிகிச்சை பலனளிக்காமல் இறந்துபோனதும் பெருவாரியானோர் கொந்தளித்தார்கள். பல தரப்புகளிலிருந்து கண்டனக் குரல் எழுந்தது. `ஜெய் ஶ்ரீராம்' சொல்ல மாட்டோம் எனப் பல பதிவுகள் ஃபேஸ்புக்கில் எழுதப்பட்டது. ஆளுங்கட்சியின் மீது எதிர்க்கட்சியினர் சரமாரியாக கேள்விகள் எழுப்பினர். இதுதொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத் மாநிலங்களவையில் கடுமையாக விமர்சனம் செய்தார். `நோ டு ஜெய் ஸ்ரீராம்' என்கிற முழக்கம் ட்விட்டரில் இந்திய அளவில் ட்ரெண்டிங் ஆனது.
மாநிலங்களவையில் பேச இருந்த மோடி இதுகுறித்து பேசுவாரா என எல்லோரும் எதிர்பார்த்திருந்த நிலையில், பிரதமர் மோடி அது குறித்து தன் கருத்தை தெரிவித்தார். அவர் பேசுகையில், ``ஜார்க்கண்ட் மாநிலத்தில் கூட்டு வன்முறையால் நிகழ்த்தப்பட்ட கொலை கடும் கண்டனத்துக்கு உரியது. காரணமானவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும்" எனச் சொன்னவர் அத்துடன்
``ஒரு சிலர் செய்யும் தவற்றுக்காக மாநிலத்தையே குற்றம் சாட்டுவது சரியல்ல" எனவும் கூறியிருக்கிறார். பிரதமர் மோடியின் மாநிலங்களவை உரையில் இதுதவிர, பீகாரில் மூளைக்காய்ச்சலால் 130 குழந்தைகள் இறந்துபோனதற்கும் தன்னுடைய வருத்தத்தைப் பதிவு செய்திருக்கிறார்.
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
ஜெய் ஶ்ரீராம்' மந்திரமும் மூன்று சம்பவங்களும்... கடவுளின் பெயரால் நிகழும் வன்முறைகள்!
ஜெய் ஶ்ரீராம் என்கிற மந்திரம் சாந்தமாகக் கோயில் வளாகங்களில் ஒலித்த காலம்போய் அதை ஒரு கொலைக்கருவியாக மாற்றும் காலத்துக்கு வந்து நிற்கிறோமா!
நாடு முழுவதும் உள்ள இந்து வழிபாட்டுத் தலங்களில் மட்டுமே ஒலித்துக்கொண்டிருந்த 'ஜெய் ஶ்ரீராம்' என்னும் கடவுளின் மந்திரம், அண்மைக்காலமாக வன்முறைச் சம்வங்களுக்கு வித்திடுகிறதா என்ற கருத்து பரவலாக எழுந்துள்ளது.
சம்பவம் 1:
கடந்த மே மாதம் 25-ம் தேதி அன்று டெல்லி அருகேயுள்ள குர்கான் மாவட்டத்தில் முகமது பரக்கத் என்னும் இளைஞர் மாலை நேரத்தில் மசூதிக்குச் சென்று தொழுகை நடத்திவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது ஐந்து பேர் கொண்ட கும்பல், அவரை வழிமறித்து, அவரின் தலையில் இருந்த குல்லாவை பறித்தனர். பின்னர், அவரை 'ஜெய் ஶ்ரீராம்' எனக் கோஷமிடச் சொல்கிறார்கள்.
அதற்கு முகமது பரக்கத் மறுத்துள்ளார். உடனே அந்த ஐந்து பேர் கும்பலால் அவர் தாக்கப்படுகிறார். மேலும், அவர் அணிந்திருந்த குர்தாவையும் அந்தக் கும்பல் கிழித்து, வன்முறையில் ஈடுபட்டுள்ளது. அந்தக் கும்பலிடமிருந்து தப்பித்து, தன் உயிரைக் காப்பாற்றிக் கொண்டார் முகமது.
[color][font]
சம்பவம் 2:
மேற்கு வங்கத்தில் கடந்த வாரம் ஓடும் ரயிலில் ஒரு தரப்பினர் 'ஜெய் ஶ்ரீராம்' என முழக்கமிட்டுக்கொண்டே வந்தனர். அவர்களுடன் அதே ரயிலில் ஹஃபீஸ் முகமது ஷாருக் என்பவரும் பயணம் செய்தார். தலையில் குல்லா அணிந்திருந்த அவரிடம், 'ஏன் குல்லா அணிந்திருக்கிறாய்?' என்று அந்தக் கும்பல் கேட்டுள்ளது. என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் ஹஃபீஸ் அமைதியாக இருந்துள்ளார். அந்தக் கும்பல், அவரைத் தாக்கத் தொடங்கினர்.
[/font][/color]
[color][font]
தாக்கிக் கொண்டே, ஹஃபீஸை 'ஜெய் ஶ்ரீராம்' என முழக்கமிடச் சொல்லி, அந்தக் கும்பல் வற்புறுத்தி இருக்கிறது. அதற்கு மறுத்த ஹஃபீஸை ஓடும் ரயிலிலிருந்து அந்தக் கும்பல் கீழே தள்ளிவிட்டுள்ளது. அதிர்ஷ்டவசமாக, ஹஃபீஸ் உயிர் பிழைத்தார்.
சம்பவம் 3:
கடந்த 18-ம் தேதி, ஜார்க்கண்ட் மாநிலம் கர்ஸ்வான் மாவட்டத்தில் 24 வயது இளைஞர் அன்சாரியை, திருடன் என்று கருதி அவரைப் பிடித்து கடுமையாகத் தாக்குகிறது ஒரு கும்பல். அந்த இளைஞரை 'ஜெய் ஶ்ரீராம்', 'ஜெய் ஹனுமான்' என்று சொல்லுமாறு அந்தக் கும்பல் கட்டாயப்படுத்தியுள்ளது. அன்சாரி மயங்கிச் சரியும்வரை, சுமார் ஏழு மணி நேரம் பலமாகத் தாக்கியுள்ளனர் அந்தக் கும்பலலைச் சேர்ந்தவர்கள்.
[/font][/color]
[color][font]
தாக்கப்பட்டதிலிருந்து 18 மணிநேரம் கழித்து, மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அன்சாரி, சிகிச்சை பலன் அளிக்காமல் ஜூன் 24-ம் தேதி உயிரிழந்தார்.
முந்தைய இரண்டு சம்பவங்களைவிடவும் அன்சாரியின் இழப்பு, நாடு தழுவிய அளவில் பேசுபொருளானதற்குக் காரணம், அவர் தன் உயிரை விலையாகக் கொடுத்ததுதான். ஒருவேளை இவரும் உயிரிழக்காமல் இருந்திருந்தால் மற்ற இரு சம்பவங்களைப்போன்று இதுவும் அனைவராலும் ஒரு சாதாரண சம்பவமாகவே பார்க்கப்பட்டிருக்கும்.
ஒரு கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டதில் அன்சாரி மரணம் அடைந்ததைத் தொடர்ந்து, மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி, தன் கருத்தை பின்வருமாறு பதிவு செய்தார். "ஒருவரை அடித்து அல்ல; அன்பால் அணைத்து 'ஜெய் ஶ்ரீராம்' சொல்லச் சொல்லுங்கள். வன்முறையால் 'ஜெய் ஶ்ரீராம்' சொல்ல வற்புறுத்துபவர்கள், அரசின் நற்பெயரைக் குலைக்கிறார்கள்" என வருத்தம் தெரிவித்திருக்கிறார்.
[/font][/color]
[color][font]
"தவறு செய்தவர்களுக்கு எதிராகக் கடுமையான கண்டனத்தைத் தெரிவிக்காமல், மத்திய அமைச்சராக இருக்கக்கூடிய ஒருவர், சம்பந்தப்பட்டவர்களை மயிலிறகால் வருடும் வகையிலான அவரின் இந்தக் கருத்து, யாரைக் குளிர்விக்க?" என அவரை நோக்கிக் கேள்வி எழுப்பாமல் இருக்க முடியவில்லை.[/font][/color]
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
ரூ.340 கோடி தந்தால் தான் தண்ணீர் :
ஆந்திரா அடம்; தமிழகம் தவம்
'தமிழகத்திற்கு, கிருஷ்ணா நீரை வழங்க வேண்டும் என்றால், 340 கோடி ரூபாய் தர வேண்டும்' என, ஆந்திர அதிகாரிகள் திட்டவட்டமாக கூறி விட்டதால், தமிழக பொதுப்பணித் துறையினர், தண்ணீருக்காக தவம் இருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
[color][font]
சென்னையின் குடிநீர் தேவைக்காக, ஆண்டு தோறும், 12 டி.எம்.சி., கிருஷ்ணா நீரை, ஆந்திர அரசு வழங்கும் வகையில், இரு மாநிலங் களுக்கு இடையே, 1983ல், ஒப்பந்தம் செய்யப் பட்டுள்ளது. அதன்படி, கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்படும் கிருஷ்ணா நீர், தமிழகத்திற்கு வருவதற்காக, கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.
[/font][/color] ஒப்பந்த விதி
[color][font]
இந்த நீர், பூண்டி ஏரியில் சேமிக்கப்பட்டு, சென்னையின் குடிநீர் தேவைக்காக, புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த கால்வாயை, ஸ்ரீசத்யசாய் அறக்கட்டளை புனரமைத்து தந்த
பின்னரே, தமிழகத்திற்கு முறையாக தண்ணீர் எடுத்து வர வழிவகை செய்யப்பட்டது. அதற்கு முன் வரை, தமிழகத்திற்கு, கிருஷ்ணா நீர் கிடைப்பதில், சிக்கல் நீடித்து வந்தது. அதனால், கிருஷ்ணா நீர் வரும் கால்வாயை, சாய்கங்கை கால்வாய் என்று, பொதுப்பணிதுறை அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.
சாய்கங்கை கால்வாயின் பராமரிப்பு செலவை, ஆந்திரா - தமிழகம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என, ஒப்பந்த விதி உள்ளது. இதற்காக, தமிழக அரசு தரப்பில், ஆந்திர அரசிடம், 600 கோடி ரூபாய்க்கு மேல் வழங்கப்பட்டுஉள்ளது.
[/font][/color] சந்திப்பு
[color][font]
கால்வாயில், பல்வேறு பாசன விரிவாக்க பணி களை செய்து, அதற்கும் ஆந்திர அரசு, தமிழகத் திடம் நிதி கேட்டு வருகிறது.இதை காரணம் காட்டி, தமிழகத்திற்கு தண்ணீர் வழங்க மறுத்து வருகிறது. வரும் ஜூலை முதல், அக்., வரை, 8 டி.எம்.சி., நீரை, ஆந்திர அரசு வழங்க வேண்டும்.இந்தநீர் கிடைத் தால், வறட்சியில் தவிக்கும், சென்னையின் குடிநீர் தேவையை, எளிதாக சமாளிக்க முடியும். எனவே, தண்ணீரை பெறுவதற்காக, ஆந்திர அதிகாரிகளை, சமீபத்தில், தமிழக பொதுப்பணித் துறை உயர் அதிகாரிகள் குழு சந்தித்து பேசியது.
கால்வாய் பராமரிப்பு கட்டணமாக, 25 கோடி ரூபாயை வழங்குவதாக, தமிழக அரசு தரப்பில்[/font][/color]
உறுதியளிக்கப்பட்டது.இது குறித்து, ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மற்றும் நீர் வளத்துறை அமைச்சர் அனில்குமார் ஆகியோ ரிடம் தெரிவிப்பதாக, ஆந்திர அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து, தமிழக அதிகாரிகள், சென்னை திரும்பினர். ஆனாலும், ஆந்திர அதிகாரிகளிடம், தொடர்ந்து பேசி வந்தனர்.
தற்போது, 'கால்வாய் பராமரிப்பு கட்டணமாக, 340 கோடி ரூபாயை வழங்கினால் மட்டுமே, ஜூலையில் தண்ணீர் திறக்க முடியும்' என, ஆந்திர அதிகாரிகள் திட்டவட்டமாக கூறி விட்டனர். இதனால், பொதுப்பணித் துறை அதிகாரிகள், அதிர்ச்சி அடைந்துஉள்ளனர். கால்வாய் பராமரிப்பு செலவிற்கான கணக்கு விபரங்களை தரவும், ஆந்திர அதிகாரிகள் மறுத்து விட்டனர். இதனால், தமிழகத்திற்கு கிருஷ்ணா நீர் கிடைப்பது, கேள்விக்குறியாகி உள்ளது.
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
சென்னை நகரை குளிர்வித்த மழைஉற்சாகத்தில் நனைந்த பொதுமக்கள்
கோடை வெயில், கத்திரி வெயில் என அடுத்தடுத்த வெப்ப தாக்கங்களில் சிக்கி தவித்த மக்களுக்கு அடுத்து வந்த தண்ணீர் தட்டுப்பாடு பிரச்சினை பெரும் சோதனையை ஏற்படுத்தியது. குறிப்பாக தலைநகர் சென்னையில் தண்ணீர் பிரச்சினை தலைவிரித்து ஆடுகிறது
தலைநகரின் சாபம் தீராதா? வருண பகவான் கருணை காட்டி மழை தரமாட்டாரா? என்று சென்னை மக்கள் தினமும் ஏங்கிக்கொண்டு இருந்தனர். அதற்கேற்றாற்போலவே கடந்த சில நாட்களாக சென்னை நகரில் வானம் மேகமூட்டத்துடனேயே காணப்பட்டது. அவ்வப்போது மாலை மற்றும் இரவு நேரங்களில் லேசான தூறல் மழையும் பெய்து மக்களை பரவசம் கொள்ள செய்தது.
பெருமழை
இந்த நிலையில் நேற்று மாலை 5 மணி முதலே மேகங்கள் சூழ்ந்து காணப்பட்டது. மாலை 5.30 மணிக்கு லேசாக தூறலுடன் தொடங்கிய மழை அடுத்தடுத்த நிமிடங்களில் வேகம் எடுத்து, பெருமழையாக பெய்ய தொடங்கியது.
சென்னையிலும் புறநகர் பகுதிகளிலும் மழை பெய்தது.
மழையில் நனைந்து மகிழ்ச்சி
நேரம் செல்ல செல்ல பலத்த காற்று மற்றும் இடியுடன் மழை பெய்தது. எப்போதுமே மழை பெய்தால் வீட்டில் தஞ்சம் அடையும் பொதுமக்கள் நேற்று மழையை வரவேற்று உற்சாகத்தில் நனைந்தனர். குறிப்பாக இளைஞர்-இளம்பெண்கள் மழையில் நனைந்து ஆடி மகிழ்ந்தனர். கூரை மற்றும் ஓட்டு வீடுகளில் இருப்பவர்களுக்கு எப்போதுமே மழை பெரிய சங்கடத்தை ஏற்படுத்தும். ஆனால் நேற்று கூரையை தாண்டியும் வீட்டுக்குள் ஒழுகி விழும் மழை நீரை மக்கள் மகிழ்ச்சியுடன் பார்த்தனர்.
பலத்த மழை காரணமாக நேற்று சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்து போலீசார் போக்குவரத்தை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.
பூமி குளிர்ந்தது
இத்தனை நாட்களாக வெயிலுக்கு பயந்து குடை பிடித்து சென்ற மக்கள், இன்றைக்கு அந்த குடையை மழையில் நனையாமல் இருக்க பிடித்து சென்றனர். வீடுகளில் கூட பெய்த மழை நீரை பத்திரமாக வாளிகளில் பிடித்ததையும் பார்க்க முடிந்தது. மெரினா, பெசன்ட்நகர், திருவான்மியூர் போன்ற கடற்கரைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
மாலை 5.30 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை, இரவு 7 மணிக்கு ஓய்ந்தது. மழை ஓய்ந்தும் பெரும்பாலான இடங்களில் சில நிமிடங்கள் தூறல் விழுந்துகொண்டே இருந்தன. அந்தவகையில் 1½ மணி நேரம் பெய்த மழை பூமியை மட்டுமல்ல, மக்களின் உள்ளத்தையும் குளிரவைத்து விட்டது. தொடர்ந்து இதேபோல வருண பகவான் கருணை காட்டவேண்டும், தலைநகரின் சாபம் தீரவேண்டும் என்று சென்னைவாசிகள் வேண்டிக்கொண்டு இருக்கின்றனர்.
சமூக வலைதளங்களில் ‘டிரெண்டிங்’ ஆன மழை
சென்னையில் நேற்று பரவலாக பெய்த மழை சென்னை நகர மக்களை உற்சாகத்தில் நனைய வைத்தது. இதையடுத்து ‘சென்னையில் மழை’ என்பதை தங்கள் வாட்ஸ்-அப் ஸ்டேட்டஸ்களாக வைக்க தொடங்கினர். மழையில் உற்சாகமாக நனைந்தபடியும், தங்கள் பகுதியில் பெய்யும் மழையை படம்பிடித்து நண்பர்களுக்கு அனுப்பியும் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.
மேலும், ‘சென்னையில் மழை பெய்யலையா?’ என்று கேட்ட வெளியூர்களில் வசிக்கும் தங்களது உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் மழை படங்களை அனுப்பி மகிழ்ந்தனர். வாட்ஸ்-அப் மட்டுமின்றி பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களிலும் தலைநகரின் மழை படங்கள் நேற்று வைரலாக பரவியது. இதனால் சமூக வலைதளங்களில் நேற்று ஒரே நாளில் மழை ‘டிரெண்டிங்’ ஆகிப்போனது.
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
பாபர் ஆசம் அற்புத சதம்: சோஹைல் அதிரடி: நியூஸிக்கு முதல் தோல்வியளித்த பாகிஸ்தான்: 1992- வரலாறு திரும்புகிறதா?
பாபர் ஆசமின் அற்புதமான சதம், ஹரிஸ் சோஹைலின் அதிரடி அரைசதம், ஷாகின் அப்ரிடியின் வேகப்பந்துவீச்சு ஆகியவற்றால் எட்ஜ்பாஸ்டனில் நேற்று நடந்த உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் நியூஸிலாந்து அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து பாகிஸ்தான் அணி.
இந்த ஆட்டத்தின் ஹீரோவாக இருந்தவர்கள் “பாகிஸ்தானின் விராட் கோலி” என்று வர்ணிக்கப்படும் பாபர் ஆசம், சோஹைல் இருவர்தான். 4-வது விக்கெட்டுக்கு 126 ரன்கள் சேர்த்து பாகிஸ்தானை வெற்றிக்கு வழிநடத்தினா். ஆட்டநாயகன் விருதை பாபர் ஆசம் வென்றார்.
இந்த போட்டியை காண அரங்கில் ஆயிரக்கணக்கில் பாகிஸ்தான் ரசிகர்கள் கூடியிருந்தனர். பாபர் ஆசம் சதம் அடிப்பதைக் காண அனைவரும் எழுந்துநின்றதும், ஆதரவு அளித்ததும் பாகிஸ்தான் அணிக்கு மிகப்பெரிய உற்சாகத்தை அளித்தது. இங்கிலாந்தில் விளையாடுகிறோமா அல்லது லாகூரில் விளையாடுகிறோமோ என்ற சந்தகத்தையும் அவர்களுக்கு ஏற்படுத்தியது.
முதலில் பேட் செய்த நியூஸிலாந்து அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 237 ரன்கள் ேசர்த்தது. 238 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 5 பந்துகள் மீதமிருக்கும் நிலையில் 4 விக்கெட்டுகளை இழந்து 241ரன்கள் சேர்த்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
இந்த ெவற்றியின் மூலம் பாகிஸ்தான் 7 போட்டிகளி்ல் 3 வெற்றிகள், தோல்விகள்,ஒருபோட்டி ரத்து என 7 புள்ளிகளுடன் இங்கிலாந்து அணிக்கு அடுத்தார்போல் வந்துவிட்டது.
அடுத்துவரும் வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளுக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் வெற்றி பெறுவது ஏறக்குறைய உறுதியாகிவிட்ட நிலையில் 11 புள்ளிகளைப் பெற்று அரையிறுதிக்குள் நுழைய அதிகமான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது
ஆனால், இங்கிலாந்து அணி அடுத்துவரும் இந்தியா, நியூஸிலாந்து அணியுடன் ஒருஆட்டத்தில் தோற்றாலும் அரையிறுதி வாய்ப்பை ஏறக்குறைய இழக்க நேரிடும்.
இந்த தொடரில் நியூஸிலாந்து அணி தொடக்கம் முதலே தோல்வியை ருசிக்காமல் பயணித்து வந்தது.இப்போது முதல் தோல்வி ஏற்பட்டு, 7 போட்டிகளில் 11 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
கடந்த 1992-ம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டியில் பாகிஸ்தான் சாம்பியன் பட்டம் வென்றது. அப்போதும், இதேநிலைமை தான் பாகிஸ்தானுக்கு இருந்தது, அப்போது இருந்த பல ஒற்றுமைகள் இப்போதும் இருப்பதால், மீண்டும் 1992 வரலாறு திரும்புமா என்று பாக்.ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
உலகக் கோப்பை தொடங்கும் முன் இங்கிலாந்தில் உள்ள ஆடுகளங்களில் 400 ரன்கள் வரை அடிக்க முடியும் என்று பேசப்பட்டது. ஆனால் மழை பெய்துவிட்டு சிறிது நேரத்தில் எல்லாம் ஆடுகளத்தின் ஒட்டுமொத்த தன்மையே மாறிவிடுகிறது
இந்த போட்டி நடந்த ஆடுகளம் இங்கிலாந்து ஆடுகளம் போல் இல்லால், இந்திய ஆடுகளம் போல் மட்டமாக சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்தது. முகமது ஹபீஸ், சதாப் கான் பந்துவீசும் போது ஏகத்துக்கும் டர்ன் ஆனது. ஆடுகளத்தின் நடுவில் பிட்ச் ஆகினால், பந்து ஆப்-சைடு நோக்கி சென்று பேட்ஸ்மேனை திணறடித்தது.
நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்ஸன் பெரும்பாலும் பந்துவீசாதவர் ஆனால், சுழற்பந்துவீச்சுக்கு நன்கு ஒத்துழைப்பதைப் பார்த்து நேற்று அவர் ஓவர்களை வீசி ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார். வில்லியம்ஸன் பந்தும் ஏகத்தும் சுழன்றது. இதுபோன்ற ஆடுகளங்கள் பேட்ஸ்மேன், பந்துவீச்சாளர்கள் திறமையாக இருந்தாலும் ஆட்டத்தின் போக்கை மாற்றிவிடும்.
நியூஸிலாந்து அணியைப் பொருத்தவரை நேற்றைய ஆட்டத்தில் ஆடுகளத்தின் ஏமாற்றத்தால் வேகப்பந்துவீச்சாளர்கள் எதி்ர்பார்த்த அளவுக்கு சோபிக்கவில்லை. கேப்டன் வில்லியம்ஸன் 8 பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்தியும், 4-வது விக்கெட்டுக்கு பாபர் ஆசத்தையும், சோஹைலையும் எடுக்கமுடியவில்லை.
பாபர் ஆசத்துக்கு ஒரு கேட்சை டாம் லாதம் கோட்டைவிட்டதற்கான மிகப்பெரிய விலையாக அவரை சதம் அடிக்கவிட்டனர். இந்த கேட்சை லாதம் பிடித்திருந்தால் ஆட்டம் மாறியிருக்கும்
ஹென்றி, நீஷம், சான்ட்னர், போல்ட், பெர்குஷன், வில்லியம்ஸன், முன்ரோ, கிராண்ட்ஹோம் என 8 பேர் பந்துவீசினார்கள். எப்போதும் தீர்க்கமாகச் செயல்படக்கூடிய கேப்டன் வில்லியம்ஸன் நேற்று சற்று குழப்பமடைந்தார்.
போல்ட், சான்ட்னருக்கு மட்டுமே ஓவர் முடிக்கப்பட்டது. பெர்குஷன், ஹென்ரி, நீஷம் ஆகியோருக்க போதுமான ஓவர்கள் அளிக்காமல் பந்துவீசச் செய்தார். மேலும், அணியில் சான்ட்னரைத்தவிர முழுநேர சுழற்பந்துவீச்சாளர்கள் இல்லாதது பெரும் குறையாகும். அடுத்துவரும் போட்டிகளில் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு அதிகமான முக்கியத்துவத்தை வில்லியம்ஸன் அளிப்பார்.
பேட்டிங்கிலும் தொடக்க வீரர்கள், நடுவரிசை வீரர்களின் திடீர் சரிவு நியூஸிலாந்து அணிக்கு சிக்கலை ஏற்படுத்தியது. 83 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து நியூஸிலாந்து கதை முடிந்துவிட்டது என்றபோது, கிராண்ட்ஹோம், நீஷம் இருவர் அணியைச் சரிவில் இருந்து மீட்டனர். 6-வது விக்கெட்டுக்கு இருவரும், 132 ரன்கள் சேர்த்தனர்.
பீல்டிங்கில் நேற்று நியூஸிலாந்து பிரமாதமாக செயல்பட்டார்கள். இமாம் உல் ஹக்கிற்கு முன்ரோ டைவ் செய்து எடுத்த கேட்ச், ஹாரிஸ் சோஹைலுக்கு கப்திலின் ரன்அவுட் அற்புதமாக இருந்தது.
கடந்த 1992-ம் ஆண்டில் ஜான்டி ரோட்ஸ், நியூஸிலாந்து அணிக்கு எதிராக டைவ் அடித்து செய்த ரன் அவுட் போன்று இருந்தது.
ஒட்டுமொத்தத்தில் நியூஸிலாந்து அணிக்கு விக்கெட்டில் ஏற்பட்ட சரிவு, ஆடுகளத்தின் தன்மை ஏமாற்றமளித்துவிட்டது
பாகிஸ்தான் அணியைப் பொருத்தவரை 5 போட்டிகள்வரை ஒரு வெற்றி மட்டும் பெற்று, தற்போது மீண்டுவந்திருப்பது அனைவரின் கூட்டு உழைப்புக்கு கிடைத்த வெற்றிதான்.
இந்த ஆட்டத்தில் ஷாகீன் அப்ரிடியின் பந்துவீச்சு நியூஸிலாந்து வீரர்களுக்கு நிச்சயம் கிலியாக அமைந்தது. ஆடுகளத்தி்ன் தன்மையால் பந்துகள் திடீரென ஸ்விங் ஆனது பேட்ஸ்மேன்களை உலுக்கிவிட்டது.
பாகிஸ்தான் கேப்டன் சர்பிராஸ் அகமதுவை நாகரீகமற்ற முறையில் விமர்சித்த ரசிகர்களுக்கு அவர் நேற்று ராஸ் டெய்லருக்கு ஒற்றைக் கையில் டைவ் அடித்து பிடித்த கேட்சால் பதில் கூறிவிட்டார்.
சுழற்பந்துவீச்சலும் சதாப்கான், ஹபீஸ், இமாத்வாசிம் 3பேரும் சேர்ந்து நியூஸிலாந்து அணியின் ரன்குவிப்பை கட்டுப்படுத்தினர். பாகிஸ்தான் அணிக்கு சுழற்பந்துவீச்சு மிகப்பெரிய பலமாகும்.
பேட்டிங்கில் தொடக்க வீரர்கள் இமாம் உல் ஹக், பக்கர்ஜமான் ஏமாற்றினாலும் ஹபீஸ் ஓரளவுக்கு நம்பிக்கை அளித்தார். அவரும் வில்லியம்ஸன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தபின் 4-வது விக்கெட்டுக்கு பாபர் ஆசம், சோஹைல் ஆடிய ஆட்டம் அற்புதமானது. இருவரும் அணியை கட்டமைத்து வெற்றிக்கு கொண்டு சென்றனர்.
சோஹைலின் அதிரடி அரைசதம், மிகவும் நிதானமாக பேட்செய்து, மேட்ச்வின்னராக ஜொலித்த பாபர் ஆசத்தின் 10-வது சதம் அற்புதம்.
டாஸ்வென்ற நியூஸிலாந்து அணி முதலில் பேட் செய்தது. ஷாகீன் அப்ரிடியும், அமீரும் சேர்ந்து நியூஸிலாந்து பேட்ஸ்மேனுக்கு பெருத்த சேதத்தை ஏற்படுத்தினர்.
கப்தில்(5), முன்ரோ(12), டெய்லர்(3), லாதம்(1) என 46 ரன்களுக்கு 4 முக்கிய விக்கெட்டுகளை இழந்து நியூஸிலாந்து தவித்தது. 5-வது விக்கெட்டுக்கு வில்லியம்ஸன், நீஷம் ஜோடி ஓரளவுக்கு நிலைத்து பேட் செய்தனர். நிலைக்காத வில்லியம்ஸன் 41ரன்னில் சதாப்கானிடம் விக்ெகட்டை இழந்தார்
6-வது விக்கெட்டுக்கு கிராண்ட்ஹோ், நீஷம் இருவரும் சேர்ந்து நிதானமாக ரன்களைச் சேர்த்தனர். நீஷம் 77 பந்துகளிலும், கிராண்ட்ஹோம் 63 பந்துகளிலும் அரைசதம் அடித்தனர். 6-வது விக்கெட்டுக்கு இருவரும் 132 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். கிராண்ட்ஹோம் 64 ரன்களி்ல ஆட்டமிழந்தார்.
நீஷம97 ரன்களிலும், சான்ட்னர் 5 ரன்னிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். நியூஸிலாந்து அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 237 ரன்கள் சேர்த்தது. பாகிஸ்தான் தரப்பில் அப்ரிடி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்
238 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது. பெர்குஷனின் 150 கி.மீ வேகத்தில் இமாம் உல் ஹக் 19 ரன்னில் ஆட்டமிழந்தார். இவருக்கு கப்தில் டைவ் அடித்து பிடித்த கேட்ச் ஆக்சிறந்தது. போல்டின் ஸ்விங் பந்தவீச்சில் பக்கர் ஜமான் 9 ரன்னில் வெளியேறினார்.
3-வது விக்கெட்டுக்கு முகமது ஹபீஸ், பாபர் ஆசம் ஓரளவுக்கு நிதானமாக பேட்செய்தனர். ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக மாறுவதைப் பார்த்த வில்லியம்ஸன் தான் பந்துவீசவந்தார். இவரின் ஓவரில் ஹபீஸ் 32 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
4வது விக்கெட்டுக்கு பாபர் ஆசம், ஹரிஸ் சோஹைல் ஜோடி அணியைச் சரிவில் இருந்து மீட்டனர். இருவரையும் பிரிக்க 8 பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்தியும் முடியவில்லை. பாபர் ஆசம் 65 பந்துகளிலும், சோஹைல் 63 பந்துகளிலும் அரைசதம் அடித்தனர். பாபர் ஆசம் 120 பந்துகளில் தனது 10-வது சதத்தை பதிவு செய்தார்.
அதுமட்டுமல்லாமல் பாபர் ஆசம் அதிவேகமாக 3 ஆயிரம் ரன்களை எட்டிய 2-வது வீரர் எனும் பெருமையைப் பெற்றார். ஆம் 57 இன்னிங்ஸில் அடைந்தநிலையில், பாபர்ஆசம் 68இன்னிங்ஸில் அடைந்தார்.
சிறப்பாக பேட் செய்த சோஹைல் 68 ரன் ேசர்த்திருந்தபோது ரன்அவுட் செய்யப்பட்டார். 4-வது விக்கெட்டுக்கு இருவரும் 126 ரன்கள் சேர்த்தனர்.
பாபர் ஆசம் 101 ரன்னும், சர்பிராஸ் அகமது 5 ரன்னும் சேர்த்து அணியை வெற்றி பெறவைத்தனர். 5 பந்துகள் மீதமிருக்கும் நிலையில் பாகிஸ்தான் வென்றது.
நியூஸிலாந்து தரப்பில் போல்ட், பெர்குஷன் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
அவர்கள் போட்ட ஆர்டர்.. எதுவும் செய்ய முடியாது.. இந்திய அணியின் காவி ஜெர்சிக்கு பாஜக காரணமா?
இந்திய அணியின் காவி ஜெர்சிக்கு பாஜக காரணமா? | கிளம்பிய எதிர்ப்புகள்
லண்டன்: இந்திய கிரிக்கெட் அணிக்கு காவி நிற ஜெர்சி வழங்கப்பட்டதற்கு யார் காரணம், யார் கொடுத்த அழுத்தம் இது என்ற கேள்வி எழுந்துள்ளது.
உலகக் கோப்பை தொடரில் மொத்தம் 10 அணிகள் விளையாடுகிறது. இதில் இங்கிலாந்து ஹோம் அணி. அதேபோல் பாகிஸ்தானும் ஹோம் அணிக்கான சலுகைகளை பெற முடியும். இதனால் இந்த இரண்டு அணிகளும் உலகக் கோப்பை போட்டியில் தங்களது ஜெர்சியை பயன்படுத்திக் கொள்ளலாம்.
அதாவது இங்கிலாந்து நீல நிற உடையை அணியலாம். அதேபோல் பாகிஸ்தான் பச்சை நிற உடையை தொடர்ந்து அணியலாம். அவர்கள் தங்கள் ஜெர்ஸியை மாற்ற தேவையில்லை.
[color][font]
ஆனால் என்ன
ஆனால் ஒரே மாதிரி உடை கொண்ட இரண்டு அணிகள் மோதும் நேரத்தில் ஒரு அணி உடையை மாற்ற வேண்டி இருக்கும். உதாரணமாக இந்தியா ஆப்கானிஸ்தான் இரண்டும் நீல நிற உடை கொண்டது. இதனால் இந்தியாவுடன் மோதும் போது, ஆப்கானிஸ்தான் அணி உடையை மாற்ற வேண்டும். உலகக் கோப்பையில் விளையாடும் 5 அணிகள் தங்கள் ஜெர்ஸியை சில போட்டிகளுக்கு மட்டும் மாற்ற வேண்டும்.
[/font][/color]
[color][font]
[/font][/color]
[color][font]
எந்த அணிகள்
இந்தியா, இலங்கை, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் நீல நிற உடை கொண்டது. வங்கதேசம், தென் ஆப்ரிக்கா, ஆகியவை பச்சை நிற உடை கொண்டது. இதனால் இந்த அணிகள் மோதும் போது ஒரே நிற ஜெர்ஸிக்கு பதிலாக மாற்று ஜெர்சியை அணிய வேண்டும். ஆஸ்திரேலியா, மேற்கு இந்திய தீவுகள், நியூசிலாந்து ஆகியவை தனித்துவமான வண்ணங்களை கொண்டு இருப்பதால் ஜெர்ஸி மாற்ற தேவையில்லை.
[/font][/color]
[color][font]
என்ன தேர்வு
இதில் இலங்கை மஞ்சள், ஆப்கானிஸ்தான் சிவப்பு, வங்கதேசம் சிவப்பு, தென்னாப்பிரிக்கா மஞ்சள் ஆகிய நிறங்களை தேர்வு செய்து இருக்கிறது. ஆனால் இந்தியா வித்தியாசமாக காவி நிறத்தை தேர்வு செய்துள்ளது. வரும் 30ம் தேதி இந்தியா இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்த காவி நிற உடையில்தான் விளையாட போகிறது.
[/font][/color]
[color][font]
பாஜக சர்ச்சை
இந்த காவி உடையின் தேர்வுக்கு பின் பாஜக இருப்பதாக சர்ச்சை எழுந்து இருக்கிறது. ஆளும் பாஜக அரசின் அழுத்தத்தின் காரணமாகத்தான் இந்திய அணியின் உடைக்கு காவி நிறம் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறது என்று கூறுகிறார். காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி உள்ளிட்ட கட்சிகள் இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் புகாரும் வைத்து இருக்கிறது.
[/font][/color]
[color][font]
உண்மை என்ன
ஆனால் இது முழுக்க முழுக்க பிசிசிஐ மேலிட உத்தரவு என்றும் கூறுகிறார்கள். பிசிசிஐ இந்திய கிரிக்கெட் அணியின் உடையில் ஏற்கனவே காவி நிறம் இருக்கிறது. அதைத்தான் பெரிதாக்கி, நீல நிறத்தை சிறிதாக்கி அவே ஜெர்சியாக பயன்படுத்துகிறோம். இது பிசிசிஐ போட்ட ஆர்டர்தான் என்றும் சிலர் கூறுகிறார்கள்.[/font][/color]
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
இங்கிலாந்துடன் போட்டி: இந்தியாவுக்கு ஆதரவு தரும் பாகிஸ்தான் ரசிகர்கள்
இந்தியா, பாக் போட்டியின் போது ரசிகர்கள் : படம் உதவி ட்விட்டர்
இங்கிலாந்து அணியுடன் வரும் ஞாயிற்றுக்கிழமை நடக்கும் உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் இந்திய அணிக்கு ஆதரவு அளிப்போம் என்று பாகிஸ்தான் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
உலகக் கோப்பைப் போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டிஇருக்கிறது. அரையிறுதிக்குள் செல்லும் 4 அணிகளுக்கு இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய அணி முதலிடத்தில் இருந்து வருகிறது.
இந்திய அணி 5 வெற்றிகளுடன் 11 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் இருக்கிறது. இங்கிலாந்து அணி 7 போட்டிகளில் விளையாடி 3 தோல்விகள், 4 வெற்றிகளுடன் 8 புள்ளிகளுடன் இருக்கிறது. அரையிறுதிக்கு தகுதிபெற்ற இந்தியா, நியூஸிலாந்து அணிகளுடனான ஆட்டத்தில் வெற்றி அவசியமாகும்.
நாசர் ஹூசைன் : படம் உதவி ஐசிசி
பரிமிங்ஹாமில் ஞாயிற்றுக்கிழமை நடக்கும் ஆட்டத்தில் இந்திய அணியும், இங்கிலாந்து அணியும் மோதுகின்றன. இந்த போட்டியில் இங்கிலாந்து தோற்றால், அரையிறுதிக்கான வாய்ப்பை இழந்துவிடும். அதேசமயம், 7 புள்ளிகளுடன் இருக்கும் பாகிஸ்தான் தான் அடுத்து மோத இருக்கும் வங்கேசம், ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு எதிரான ஆட்டத்தில் வென்றால், அரையிறுதிக்கான வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது.
இந்த சூழலில் இங்கிலாந்து, இந்தியா இடையிலான போட்டியில் பர்மிங்ஹாமில் உள்ள பாகிஸ்தான் ரசிகர்கள் யாருக்கு ஆதரவு தருவார்கள் என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹூசைன் ட்விட்டரில் கேள்வி எழுப்பி இருந்தார்.
நாசர் ஹூசைன் இந்தியாவில் பிறந்தாலும், இங்கிலாந்தில் செட்டில் ஆகிவிட்டதால், இங்கிலாந்துக்கே ஆதரவு தெரிவிப்பேன் என்று தெரிவித்தார்.
ஆனால், ட்விட்டரில் நாசர் ஹூசைன் கேட்ட கேள்விக்கு இங்கிலாந்துக்கு ஆதரவு தெரிவிப்போம் என பாகிஸ்தான் ரசிகர்கள் தெரிவிப்பார்கள் என எதிர்பார்த்தார். ஆனால், பதில் அளித்த பாகிஸ்தான் ரசிகர்கள் எங்களின் அண்டைநாடு இந்தியாதான் வெற்றி பெற வேண்டும். இங்கிலாந்துக்கு ஆதரவு தெரிவிக்கமாட்டோம் எனத் தெரிவித்துள்ளனர்.
ட்விட்டரில் ஒருவர் " நாங்கள் எங்கள் அண்டைநாட்டுக்கே ஆதரவு தெரிவிப்போம். இறைவன் இந்தியாவை வெல்ல ஆசிர்வதிக்கட்டும் " எனத் தெரிவித்துள்ளார்.
மற்றொருவர " ஞாயிற்றுக்கிழமை நடக்கும் ஆட்டத்தில் இந்தியாவுக்கு ஆதரவு தெரிவிப்பது மட்டுமின்றி இந்திய ஆடையை அணிந்து ஆதரவு தெரிவிப்பேன்" எனத் தெரிவித்துள்ளார்.
நாசர் ஹூசனை ட்விட்டுக்கு அளித்த பதலில் சிலர் " இந்தியா எங்கள் அண்டை நாடு அவர்களுக்குத்தான் ஆதரவு. கிரிக்கெட் மீது தீரா ஆர்வம் கொண்ட அவர்களுக்குத்தான் ஆதரவு" எனத் தெரிவித்தனர்.
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
மன்னித்துவிடுங்கள் மக்களே; தலைகுனிய வைத்துவிட்டோம், வெட்கமாக இருக்கு: டுமினி உருக்கம்
தென் ஆப்பிரிக்க வீரர் டுமினி : கோப்புப்படம்
உலகக்கோப்பை போட்டியில் நாங்கள் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறியது வெட்கமாக இருக்கிறது. எங்களை மன்னித்து விடுங்கள் என்று தென் ஆப்பரிக்க மக்களிடம் அந்நாட்டு வீரர் டுமினி உருக்கமாகப் பேசியுள்ளார்.
உலகக்கோப்பையில் பலம்வாய்ந்த அணியாகக் கருதப்பட்ட தென் ஆப்பிரிக்கா அடுத்தடுத்த தோல்விகளால் தொடரில் இருந்தே வெளியேறியது. இதுவரை 7 ஆட்டங்களில் விளையாடியுள்ள அந்த அணி 6 முறை தோல்வி அடைந்துள்ளது. இதில் ஆப்கானிஸ்தானை மட்டும் வென்றுள்ள
இன்னும் 2 போட்டிகள் இருக்கும் நிலையில் இன்றைய ஆட்டத்தில் இலங்கையுடன் மோதுகிறது தென் ஆப்பிரிக்கா.
இந்த இரு ஆட்டங்களிலும் தென் ஆப்பிரிக்க அணி வென்றாலும், தோற்றாலும் அந்த அணிக்கு எந்தவிதமான பாதிப்பையும் ஏற்படுத்தப் போவதில்லை.
இந்த உலகக்கோப்பை போட்டியுடன் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து தென் ஆப்பிரிக்க அணி வீரர் டுமினி ஓய்வு பெற உள்ளார். இந்த சூழலில் தென் ஆப்பிரிக்க மக்களிடம் மன்னிப்பு கேட்டு அவர் உருக்கமாக நேற்று பேசியுள்ளார்.
இது தொடர்பாக டுமினி பேசியதாவது:
''இந்த உலகக்கோப்பை போட்டியில் நாங்கள் மோசமாகச் செயல்பட்டு இருக்கிறோம். இந்த தோல்விக்கும், மோசமான செயல்பாட்டுக்கும் நாங்கள் உண்மையிலேயே ரசிகர்களிடமும் மக்களிடமும் மன்னிப்பு கோருகிறோம். எங்கள் நாட்டு மக்களை தலைகுனிய வைத்துவிட்டதை நினைத்து வெட்கப்படுகிறோம்.
டுமினி : படம் உதவிஐசிசி
உங்கள் நாட்டுக்காக நீங்கள் விளையாட வந்தால் அது உண்மையில் பெருமையான நிகழ்வாக இருக்கும். 6 முதல் 7 கோடி மக்களின் பிரதிநிதியாக வருகிறோம் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். அது பெருமையான தருணம்.
கோடிக்கணக்கான மக்களின் பிரதிநிதியாக விளையாட வந்து, இதுபோன்று மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினால், அது எங்களுக்கும், எங்களுக்கும் வெட்கக்கேடானது. தலைகுனிவானது.
கடந்த போட்டிகளில் தோல்விக்கு வீரர்கள் மட்டுமல்ல, பயிற்சியாளர் மட்டுமல்ல, அனைவரும் தோல்விக்குப் பொறுப்பேற்க வேண்டும். எங்களின் செயல்பாடுகள், தோல்விகள் அனைத்தையும் தாங்கிக்கொண்டு விளையாடுவது எப்போதும் கடினமானது. தோல்விக்கு நாங்கள் முதலில் பொறுப்பேற்பது முக்கியமானது. தோல்விக்கான காரணங்கள் என்ன, என்பதை அனைவரும் சேர்ந்து ஆய்வு செய்ய வேண்டும்.
எங்களுக்கு மக்கள் அனைத்து வகையிலும் ஆதரவு அளித்தார்கள். தேவையான போதெல்லாம், மிகப்பெரிய போட்டியில் பங்கேற்கும் போதெல்லாம் ஆதரவு அளித்தார்கள். நாங்கள்தான் அதைப் பெறத் தவறிவிட்டோம். மன்னித்துவிடுங்கள்''.
இவ்வாறு டுமினி பேசினார்.
இதற்கிடையே தென் ஆப்பிரிக்க அணியின் மோசமான தோல்வியையடுத்து, அடுத்த சில வாரங்களில் அணியில் மிகப்பெரிய மாற்றம் இருக்கும் எனத் தெரிகிறது. பயிற்சியாளர், கேப்டன், வீரர்கள் அளவில் பல மாற்றங்கள் செய்யப்படும் என்று தென் ஆப்பிரிக்க வாரியத் தலைவர் கிறிஸ் நென்ஜானி சூசகமாகத் தெரிவித்துள்ளார்.
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
கோவை அருகே அதிர வைத்த ஆணவக் கொலை : சிகிச்சை பெற்று வந்த இளம் பெண் உயிரிழப்பு
கோவை மேட்டுப்பாளையத்தை சேர்ந்த காதலர்கள் கனகராஜ், வர்ஷினி பிரியா வீட்டைவிட்டு வெளியேறி உள்ளனர். அவர்களை திருமணம் செய்து வைப்பதாக கூறி இருவீட்டாரும் அழைத்து சென்றுள்ளனர். இந்நிலையில் அவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த, கனகராஜின் அண்ணன் வினோத் அவர்களை சில நாட்களுக்கு முன்பு அரிவாளால் வெட்டியதில், கனகராஜ் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். படுகாயமடைந்த வர்ஷினி பிரியா கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு வர்ஷினி பிரியா உயிரிழந்தார். இதனிடையே போலீசில் சரணடைந்த வினோத், தற்போது சிறையில் உள்ளார். இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணைய துணை தலைவர் முருகன் இன்று விசாரணை மேற்கொள்கிறார்.
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
விஜயதரணி மீது ஏன் நடவடிக்கை இல்லை; எனக்கு மட்டும் நெருக்கடியா?: கராத்தே தியாகராஜன் கடும் விமர்சனம்
கோப்புப் படம்
பிரதமர் மோடியை ஆதரித்துப் பேசிய சட்டப்பேரவை உறுப்பினர் விஜயதரணி மீது காங்கிரஸ் கட்சி நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று அண்மையில் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட கராத்தே தியாகராஜன் விமர்சித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் தென் சென்னை மாவட்டத்தலைவராக பதவி வகித்துவந்த கராத்தே தியாகராஜன், அக்கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதாக கட்சி அண்மையில் தெரிவித்தது
கே.என்.நேரு போன்றவர்கள் பேசியதால் திமுக- காங்கிரஸ் இடையே ஏற்பட்ட உரசலை அடுத்து, அதுகுறித்து தாமாக முந்திக்கொண்டு கராத்தே தியாகராஜன் ஊடகங்களில் பதிலளித்தார். அது காங்கிரஸ் தரப்புக்கு சங்கடத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து அவர்மீது நடத்தப்பட்ட விசாரணையின் முடிவில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.
இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரத்தைப் பார்த்துவிட்டு வந்த கராத்தே தியாகராஜன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், ''என்னை மட்டும் குறிவைத்து உள்நோக்கத்துடன் நீக்கியுள்ளார்கள். எந்த விளக்கமும் கேட்காமல் என்மீது நடவடிக்கை எடுத்துள்ளனர்.
பிரதமர் மோடியை ஆதரித்துப் பேசிய சட்டப்பேரவை உறுப்பினர் விஜயதரணி மீது காங்கிரஸ் கட்சி நடவடிக்கை எடுக்காதது ஏன்? ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸின் கொள்கையை எதிர்த்து நான் பேசவில்லையே.
நான் பேசியது தவறேனில், கூட்டத்தின்போதே ஏன் அழகிரி என்னைக் கண்டிக்கவில்லை? ராகுலுக்குத் தெரிந்துதான் என்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. நானும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் பதவியைக் கேட்டதால், அழகிரி என்மீது அதிருப்தியில் உள்ளார்.
காங்கிரஸ் சொத்தைக் கொள்ளையடித்தவர் கோபண்ணா. காமராசர் கிரவுண்டில் 500 சதுர அடி இடத்தை வைத்துக்கொண்டு 8 ஆயிரம் சதுர அடி நிலத்தை மடக்கிவைத்துக் கொண்டவர் கோபண்ணா. காமராசரின் பெயரில் புத்தகம் போட்டுக் கோடிக்கணக்கில் சம்பாதித்தார். இந்த மாதிரியான ஆட்களை எல்லாம் கட்சிக்குள் வைத்திருக்கிறார்கள். இதுகுறித்து காவல் ஆணையரிடம் புகார் அளிக்க உள்ளேன். அழகிரிக்குத் தெரிந்துதான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.
ராஜீவ் காந்தியின் ரத்தத்தைப் பார்த்தவன் நான். ராகுலுக்கும் சிதம்பரத்துக்கும் என்றுமே விசுவாசமாக இருப்பேன்; எப்போதும் காங்கிரஸ் காரனாகத்தான் இருப்பேன்'' என்றார் கராத்தே தியாகராஜன்.
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
வாவே மீதான தடை நீக்கம்... G-20 மாநாட்டில் அதிரடி முடிவெடுத்த ட்ரம்ப்
சீனா - அமெரிக்கா இடையே நடந்து வந்த வர்த்தகப் போரில் அதிகம் பாதிக்கப்பட்டது வாவே நிறுவனம்தான். சீனாவைச் சேர்ந்த வாவே மொபைல் தயாரிப்பில் உலக அளவில் முன்னிலையில் இருந்து வருகிறது. இந்நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கடந்த மாதம் அமல்படுத்திய இந்தத் தடையால் அமெரிக்காவில் வாவேவின் வர்த்தகம் முழுவதுமாகத் தடைபட்டது. அது மட்டுமன்றி அமெரிக்க நிறுவனங்கள் வாவேவுடன் இணைந்து வர்த்தகம் செய்வதும் முடியாமல் போனது. காரணம் அமெரிக்கா வாவேவுக்கு மிகப் பெரிய சந்தையாக இருந்து வந்தது. மேலும் ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தப்பட்டு வந்த ஆண்ட்ராய்டு கூகுளின் தயாரிப்பாக இருந்தது. மேலும் ஃபேஸ்புக் எனப் பல்வேறு நிறுவனங்களும் அமெரிக்காவைச் சேர்ந்தவையாகவே இருந்து வந்தன. இதனால் கடும் நெருக்கடியில் சிக்கித் தவித்தது வாவே.
தற்போது ஜப்பானின் ஒசாகா நடந்து வரும் G-20 நாடுகளின் உச்சி மாநாட்டில் இந்தச் சிக்கல் ஒரு வழியாக முடிவுக்கு வந்திருக்கிறது. " அமெரிக்க நிறுவனங்கள் அவர்களது உபகரணங்களை வாவேவுக்கு விற்பனை செய்து கொள்ளலாம்" என டொனால்டு ட்ரம்ப் தெரிவித்திருக்கிறார். பேசும்போது உபகரணங்கள் என்ற அவர் வேறு எதையும் தெளிவாகக் குறிப்பிடவில்லை. சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் ட்ரம்ப் இடையே நடைபெற்ற வர்த்தகம் தொடர்பான பேச்சுவார்த்தையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்னும் சில நாள்களில் வாவேஅமெரிக்க நிறுவனங்களுடன் வர்த்தகம் செய்யத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
first 5 lakhs viewed thread tamil
•
|