Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
[color=rgba(0, 0, 0, 0.87)] [/url]
IND
[/color] 209/5
(47.4)
[color][size][font]
நேரலை
[/font][/size][/color] இனிதான் பேட்
[color][size][font]
AFG
[url=https://news.google.com/topics/CAAqIggKIhxDQkFTRHdvSkwyMHZNRGMyZEc1akVnSjBZU2dBUAE?hl=ta&gl=IN&ceid=IN%3Ata][/font][/size][/color]
[color=rgba(0, 0, 0, 0.87)] ஒருநாள் போட்டி 28/48[/color]
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
கடைசி ஓவரில் ஷமி ஹாட்ரிக்: ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இந்தியா 'த்ரில்' வெற்றி
நன்றி: டிவிட்டர்/உலகக் கோப்பை கிரிக்கெட்
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் 'த்ரில்' வெற்றி பெற்றது.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய (சனிக்கிழமை) ஆட்டத்தில் இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடின. டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 224 ரன்கள் எடுத்தது
225 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் ஆப்கானிஸ்தான் அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் பூம்ரா மற்றும் ஷமி பந்தை எதிர்கொள்ள திணறினர். இதன் விளைவாக ஸஸாய் 10 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதன்பிறகு, கேப்டன் நைப் மற்றும் ரஹ்மத் ஷா நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த இணை பெரிதளவு ரன்களை குவிக்காவிட்டாலும், விக்கெட்டை பாதுகாத்து விளையாடியது. வெற்றிக்கு தேவையான ரன் ரேட், நெருக்கடியளிக்கும் வகையில் இல்லாதது ஆப்கானிஸ்தானுக்கு சாதகமாக அமைந்தது. நல்ல அடித்தளம் அமைத்து விளையாடி வந்த நைப் 27 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
இதையடுத்து, ரஹ்மத் ஷா மற்றும் ஷாகிதி மீண்டும் பாட்னர்ஷிப் அமைத்து விளையாடினர். இந்த இணையும், ரன் ரேட்டை மனதில் கொள்ளாமல் ஆட்டத்தை கடைசி கட்டம் வரை எடுத்துச் செல்லும் நோக்கத்தில் விளையாடினர். இதனால், இந்திய அணிக்கு நெருக்கடி அதிகரித்தது.
பூம்ரா இரட்டை அடி:
இந்த நிலையில், பூம்ரா தனது இரண்டாவது ஸ்பெல்லை வீச வந்தார். இதில், அவர் ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி ஆப்கானிஸ்தானுக்கு நெருக்கடியை உண்டாக்கினார். அடுத்து களமிறங்கிய அஸ்கார் 8 ரன்களுக்கு சாஹல் பந்தில் ஆட்டமிழந்தார். இதனால், அந்த அணிக்கு நெருக்கடி கூடியது.
ஆனால், முகமது நபி மற்றும் ஸாத்ரான் சற்று துரிதமாக ரன் சேர்த்து விளையாடினர். இதனால், அந்த அணி வெற்றியை நெருங்க தொடங்கியது. இந்த நிலையில், ஆப்கானிஸ்தான் மீண்டும் ஒரு விக்கெட்டை இழந்தது. ஸாத்ரான் 21 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
எனினும், முகமது நபி ஆப்கானிஸ்தானுக்கு நம்பிக்கையளிக்கும் வகையில் களத்தில் நின்று விளையாடி வந்தார். அவருக்கு சிறிது நேரம் ஒத்துழைத்த ரஷித் கான் 14 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
இந்த கட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணிக்கு 24 பந்துகளில் 32 ரன்கள் தேவைப்பட்டது. அந்த அணி 7 விக்கெட்டுகளை இழந்திருந்தாலும் நபி நம்பிக்கை நட்சத்திரமாக களத்தில் இருந்தார். அவர் பூம்ரா ஓவரிலேயே சிக்ஸர் அடிக்க இந்திய அணிக்கு நெருக்கடி மேலும் அதிகரித்தது.
ஆனால், 48-வது ஓவரை வீசிய ஷமி வெறும் 3 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்த ஆட்டத்தை ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார். 49-வது ஓவரில், பூம்ரா தனது யார்க்கர் பாணிக்கே திரும்பி 5 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார்.
இதனால், கடைசி ஓவரில் ஆப்கானிஸ்தான் வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்பட்டது. ஷமி வீசிய முதல் பந்தையே நபி பவுண்டரிக்கு விரட்டி மிரட்டினார். இதன்மூலம், அவர் தனது அரைசதத்தையும் எட்டினார். ஆனால், ஷமி அடுத்த பந்தை சிறப்பாக வீசி ரன் எடுக்காமல் கட்டுப்படுத்தினார்.
ஷமி ஹாட்ரிக்:
3-வது பந்தை நபி மீண்டும் பவுண்டரிக்கு விரட்ட நினைத்து, பாண்டியாவிடம் கேட்ச் ஆனார். அவர் 52 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்த இரண்டு பந்துகளையும் அற்புதமாக வீசிய ஷமி, அப்தப் அலாம் மற்றும் முஜீப்பை போல்டாக்கினார். இதன்மூலம், உலகக் கோப்பையில் ஷமி ஹாட்ரிக் விக்கெட்டுகள் சாதனை புரிந்தார்.
இதனால், அந்த அணி 49.5 ஓவர்களில் 213 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் 'த்ரில்' வெற்றி பெற்றது
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
தங்கம் விலை தொடர்ந்து அதிகரிப்பு பவுன் ரூ.27 ஆயிரத்தை எட்டும் நகை வியாபாரிகள் தகவல்
சென்னை: கடந்த சில நாட்களாக தங்கம் விலையில் கடும் ஏற்றம், இறக்கங்கள் காணப்பட்டு வருகிறது. கடந்த 14ம் தேதி தங்கம் பவுன் ரூ.312 உயர்ந்து ரூ.25,288க்கு விற்பனையானது. இது இந்த மாதம் தொடங்கிய பிறகு அதிகபட்ச உயர்வாக கருதப்பட்டது. அதன்பிறகு தொடர்ந்து பவுன் ரூ.25,000த்துக்கு மேல் விற்பனையாகி வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் தங்கம் பவுனுக்கு ரூ.528 அதிகரித்து கிராம் ரூ.3,213க்கும், பவுன் ரூ.25,704க்கும் விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து நேற்றும் தங்கம் விலை பவுனுக்கு ரூ.464 உயர்ந்து கிராம் ரூ.3,271க்கும் பவுன் ரூ.26,168க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஆனால், மாலையில் பவுனுக்கு ரூ.272 குறைந்தது.
இந்த நிலையில் இன்று காலையில் தங்கம் விலையில் கிராமுக்கு ரூ.22 அதிகரித்து ஒரு கிராம் ரூ.3259க்கும், பவுனுக்கு ரூ.176 அதிகரித்து ஒரு பவுன் ரூ.26,072க்கும் விற்பனையானது. இதுகுறித்து சென்னை தங்கம் மற்றும் வைர வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் கூறியதாவது:அமெரிக்கா ஈரான் மீது தாக்குதல் நடத்தலாம் என்ற ஒரு பதற்றமான சூழ்நிலை தொடர்ந்து நீடித்து வருகிறது. இதனால் தங்கத்தில் முதலீடு செய்வது என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பவுன் ரூ.27,000 தொட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
வில்லியம்சன் சதம்: நியூசி., 'திரில்' வெற்றி
மான்செஸ்டர்: விண்டீஸ் அணிக்கு எதிரான உலக கோப்பை லீக் போட்டியில் நியூசிலாந்து அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் 'திரில்' வெற்றி பெற்றது.
இங்கிலாந்து மண்ணில் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. மான்செஸ்டரில் நடந்த லீக் போட்டியில் நியூசிலாந்து, விண்டீஸ் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற விண்டீஸ் கேப்டன் ஹோல்டர் பவுலிங் தேர்வு செய்தார்.
நியூசிலாந்து அணி துவக்கத்திலேயே அதிர்ந்தது. காட்ரெல் 'வேகத்தில்' கப்டில், முன்ரோ டக் அவுட்டாகினர். கேப்டன் வில்லியம்சன், ராஸ் டெய்லர் ஜோடி பொறுப்புடன் விளையாடியது. டெய்லர் (69) அரை சதம் கடந்தார். வில்லியம்சன் (148) ஒரு நாள் அரங்கில் 13வது சதம் விளாசினார். நியூசிலாந்து அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 291 ரன்கள் எடுத்தது. விண்டீஸ் சார்பில் அதிக பட்சமாக காட்ரெல் 4 விக்கெட் வீழ்த்தினார்.
பிராத்வைட் சதம்
விண்டீஸ் அணிக்கு ஷாய் ஹோப், பூரன் தலா ஒரு ரன்களில் ஆட்டமிழந்தனர். ஹெட்மயர், கெய்ல் அரை சதம் விளாசினர். பெர்குசன் 'வேகத்தில்' ஹெட்மயர் (54), கேப்டன் ஹோல்டர் (0) சிக்கினர். கெய்ல் 87 ரன்கள் (8 பவுண்டரி, 6 சிக்சர்) எடுத்தார். லீவிஸ் டக் அவுட்டானார். பொறுப்புடன் விளையாடிய கார்லோஸ் பிராத்வைட் சதம் விளாசினார். இவர் பவுல்ட்டின் அபார 'கேட்ச்சில்' 101 ரன்களில் சிக்க, விண்டீஸ் அணி 49 ஓவரில் 286 ரன்கள் மட்டும் எடுத்து வீழ்ந்தது.
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு: `இது மனிதர்களின் அலட்சியத்தால் ஏற்பட்ட வறட்சி
படத்தின் காப்புரிமைARUN SANKAR
சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. எளிய மனிதர்கள் இரவு முழுக்க வெற்றுக் குடங்களோடு தெருவில் காத்துக் கிடக்கின்றனர்.
நாளுக்கு நாள் தனியார் தண்ணீர் டேங்குகளில் விற்கப்படும் தண்ணீரின் விலை கூடிக் கொண்டே போகிறது. வியாழக்கிழமை மாலை பெய்த மழை தொடரும் என அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில் , நேற்று சுத்தமாக மழை பெய்யவில்லை. இருக்கின்ற தண்ணீர் எத்தனை நாட்களுக்கு வரும் என்று தெரியாத நிலையில் இந்த சிக்கல்களில் இருந்து சென்னை எப்படி மீண்டெழும் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.
இந்த சிக்கல்களுக்கான நிரந்தரத் தீர்வுகள் என்ன, இந்த நிலை எதிர்காலத்தில் ஏற்படாமல் காத்துக்கொள்ள அரசும் , மக்களும் செய்ய வேண்டிய முதன்மையான செயல்கள் என்னென்னெ போன்ற கேள்விகளோடு, சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் ஓய்வு பெற்ற பேராசியரும் நீரியல் நிபுணருமான ஜனகராஜன் அவர்களை சந்தித்தது பிபிசி தமிழ்.
அவர் நம்மிடம் பகிர்ந்து கொண்ட தகவல் பின்வருமாறு.
கடுமையான வறட்சியினை சந்தித்துக் கொண்டு இருக்கிறோம். இது மழைப்பொழிவு இல்லாமல் ஏற்பட்ட வறட்சி அல்ல, மனிதர்களின் பொறுப்பின்மையாலும் அலட்சியத்தாலும் ஏற்பட்ட வறட்சி. சென்னை கடந்த நாற்பது ஐம்பது வருடங்களில் காணாத அளவு கடுமையான தண்ணீர் தட்டுப்பாட்டினை சந்தித்துக் கொண்டு வருகிறது
இதற்கு முதன்மையான காரணம், அரசின் கவனமின்மைதான். கடந்த இருபது வருடங்களாக சென்னைக்கான குடிநீர் திட்டங்களுக்காக ஏராளமான பணம் செலவழிக்கப்பட்டுள்ளதாக அரசு குறிப்பிடுகிறது. குறிப்பாக கடந்த எட்டு வருடங்களில் பார்க்கும்போது அமைச்சரின் அறிக்கை படி குடிதண்ணீருக்காக கிட்டத்தட்ட 38,000 கோடி செலவிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இதில் சாமானிய மனிதர்களுக்கு இருக்கும் சந்தேகம் என்னவென்றால், இந்த பணமெல்லாம் எங்கு போனது, இவ்வளவு கோடிகள் செலவு செய்த பின்னரும் குடிப்பதற்கு நீர் இல்லையே என்பதுதான். இதனால் ஏதேனும் புதிய திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டனவா, அதனால் அடைந்துள்ள பயன்கள் என்ன என்று பல கேள்விகள் நம் முன்னே இருக்கிறது.
மக்களுக்கான குடிநீர் வாரியத்தினை நிலையாக கட்டமைக்க வேண்டுமென்றால் அதற்கு அடிப்படையான சில ஆய்வுகளை அரசு முன்னெடுக்க வேண்டும். எந்த மாதிரி சிக்கல்கள் நம்மிடம் உள்ளன, நம்முடைய பூகோள அமைப்பு என்ன, மழையின் அளவு என்ன இப்படி பல விஷயங்களை அரசு கவனிக்க வேண்டும். ஆனால், அரசு தரப்பில் இப்படியான ஆய்வுகள் நடத்தப்பட்டதாக தெரியவில்லை. ஏரிகள் தானாக நிரம்பினால், ஏரிகள் நிரம்பி விட்டது என்பர். இதற்காக எந்த சிரத்தயினையும் எடுப்பதில்லை.
உதாரணத்திற்கு 6 வருடங்களுக்கு முன்பு , தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்கம் சுமார் 400 கோடி செலவில் அமைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு, அதில் 1 டி எம் சி தண்ணீர் தேக்கலாம் என்று கூறப்பட்டது. அதன் நிலை என்ன என்று தற்போது தெரியவில்லை.
தேர்வாய் கண்டிகை திட்டம் என்பது சென்னையில் அதிகரிக்கும் குடிநீர் தேவையினை எதிர்கொள்ள, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கண்ணன்கோட்டை, தேர்வாய் கண்டிகை ஆகிய கிராமங்களில் உள்ள இரண்டு ஏரிகளை இணைத்து புதிய நீர்த்தேக்கம் அமைப்பதற்கான திட்டம் என்றும், ரூ 330 கோடி செலவில் அமைக்கப்படவுள்ள நீர்த்தேக்கத்திற்கு அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா அடிக்கல் நாட்டியுள்ளதாகவும் 2013 ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.
படத்தின் காப்புரிமைARUN SANKAR
மேலும், 1000 கோடிக்கு மேல் செலவு செய்து கொண்டு வந்த தெலுங்கு கங்கை திட்டமும் என்னவாயிற்று என்று தெரியவில்லை. அதில் வருடத்திற்கு 12 டி எம் சி தண்ணீர் கிடைக்க வேண்டும் என்று ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. ஆனால் எந்த வருடத்திலும் 1 டிஎம்சிக்கு மேல் நமக்கு வந்ததில்லை.
சென்னையின் குடிநீர் தேவைக்கு ஆந்திர பிரதேசத்தில் உள்ள கண்டலேறு நீர்த் தேக்கத்தில் இருந்து தெலுங்கு கங்கை திட்டத்தின் மூலம் கிருஷ்ணா நதி நீர் ஒவ்வொரு ஆண்டும் 12 டிஎம்சி பெறப்பட வேண்டும். ஆனால், 2018-19ம் ஆண்டில் 1.98 டிஎம்சி தண்ணீர் மட்டுமே பெறப்பட்டுள்ளது என்று அரசும் குறிப்பிட்டு உள்ளது.
இது போக வீராணத்தில் இருந்து தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. இவை எல்லாவற்றுக்கும் மேலாக கடல் நீரினை குடிநீராக்கும் திட்டத்திற்காக இரண்டு ஆலைகள் நெம்மேலி மற்றும் மீஞ்சூரில் உள்ளன. இவைதான் சென்னைக்கான நீராதாரங்கள். இதை நம்பி நாம் வாழ முடியுமா, இவை நிரந்தரமாக நம்முடைய சிக்கல்களை தீர்த்து விடுமா என்றால் நிச்சயமாக இல்லை. ஏனெனில் மக்கள் தொகை பெருகிக் கொண்டே உள்ளது. சென்னையில் மட்டுமே எட்டு கோடி மக்கள் வாழ்கின்றனர். சென்னை மெட்ரோபாலிட்டன் பகுதிகளையும் சேர்த்தால் ஒரு கோடிக்கும் மேல். ஒரு கோடிக்கும் மேல் உள்ள இந்த மக்களுக்கு நிரந்தரமாக குடிநீர் வழங்க வேண்டும் எனில் நிலையான, வற்றாத நீராதாரங்கள் தேவை.
நமக்கு நன்கு மழை பெய்யக் கூடிய பருவம் வட கிழக்கு பருவமழை. அக்டோபரில் இருந்து டிசம்பர் வரை உள்ள மூன்று மாதம். அந்த மூன்று மாதத்தில் புயலோடு கூடிய மழைதான் நமக்கு கிடைக்கும். புயல் வரும், உடனே ஒரு மழை வரும். அப்படிதான் நமக்கு மழை கிடைக்கிறது என்பது , நமக்கு தெரிந்த செய்திதான். குறைந்த நாட்களில் நமக்கு பெய்யும் மழைதான், அதனை எப்படி சேகரித்து வைப்பது என்பதனை நாம் சிந்திப்பதே இல்லை.
மாறாக மழைக்காலத்தில் தண்ணீர் தேங்கி நிற்கும் பொழுது நமது கவனமெல்லாம் தண்ணீரினை வெளியேற்றுவதில் தான் இருக்கும். வீட்டில் தண்ணீர் நின்றால் சாலையில் விட வேண்டும், சாலையில் தண்ணீர் நின்றால் கூவத்தில் விட வேண்டும் என்ற மனநிலைதான் மக்களிடமும் உள்ளது, அரசிடமும் உள்ளது. அடுத்த ஒரு நான்கு மாதத்தில் டேங்கர் லாரிகள் நகரத்திற்குள் வர ஆரம்பித்து விடும். தண்ணீர் இல்லை தண்ணீர் இல்லை என்று புலம்புவது நமக்கு வழக்கமான செயலாகி விட்டது. இது மிகத் தவறு.
படத்தின் காப்புரிமைMANJUNATH KIRANImage caption"தண்ணீரினை சேமிக்க ஏதுவான மிக அருமையான பூகோள அமைப்பு உடையது சென்னை மாநகரம்"
மழைக்காலங்களில் பெய்யும் மழைநீரினை நாம் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்த முன்னேற்பாடு திட்டங்கள் அரசிடம் இருக்க வேண்டும். இந்த வருடம் செயற்கை மழையினை உருவாக்க இருக்கிறோம் என்று ஒரு அமைச்சர் கூறியதாக படித்தேன். செயற்கை மழையினை தோற்றுவிப்பதில் உள்ள தொழில்நுட்பங்களுக்குள் எல்லாம் போவதற்கு முன்பு அடிப்படையான ஒரு கேள்வியினை முன்வைக்கிறேன். செயற்கை முறையில் மேகங்களை தூண்டிவிட்டு மழை பொழிய வைத்து விட்டீர்கள். 200 மிமீ மழை பெய்கின்றது, அதனை எங்கே சேமிப்பீர்கள்,அதனை வெள்ளமாகத்தான் பார்ப்பீர்கள். இந்த நான்கு மாதங்களை விட்டு விடுவோம், அக்டோபரில் நல்ல மழை பெய்ய இருக்கின்றது ,அந்த நீரினை எல்லாம் எங்கு சேமிக்க இருக்கின்றோம். இந்த கேள்விகள் எதற்கும் அரசிடம் பதில் இல்லை.
இந்த நிலையில் எப்படி தண்ணீர் கஷ்டம் தீரும் ? தண்ணீரினை சேமிக்க ஏதுவான மிக அருமையான பூகோள அமைப்பு உடையது சென்னை மாநகரம்.
சென்னையினை சுற்றி இருக்கின்ற திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கிட்டத்தட்ட 3600 ஏரிகள் இருக்கின்றன. இதில் அரக்கோணம் தாலூக்காவினையும் சேர்த்துக் கொண்டால் மொத்தம் 4100 ஏரிகள் உள்ளன. அந்த 4100 ஏரிகளை முறையாக பராமரித்தால் மழை பெய்யும் பொழுது சுமார் 170 டிஎம்சி நீரினை சேமித்து வைக்க இயலும்.
அப்படி ஏரிகளில் சேமித்தால் மூன்று வருடம் மழை பெய்யாவிட்டால் கூட நம்மால் சமாளித்து விட இயலும். நிலத்தடி நீர் வளமும் பெருகும்.
இந்த வருடம் வறட்சி என்கின்றனர், கடுமையான வறட்சி என்கின்றனர். ஆனால், இந்த வருடம் பெய்த மழையின் அளவு 800மிமீ. பெங்களூரின் சராசரி மழை அளவே 860 மிமீ தான், ஜெய்ப்பூரில் சராசரி மழை அளவே 550 மிமீ தான். 800 மிமீ மழை பெய்யும் இந்த நகரம் வறட்சியான நகரம் எனில், நாம் எங்கேயயோ தவறு செய்து கொண்டு இருக்கின்றோம் என்றுதானே பொருள்.
தண்ணீர் பிரச்சனை: சென்னையின் அவல நிலையை விவரிக்கும் காணொளி
அதனால்தான் அறிவியல் முறைமைகளை அடிப்படையாகக் கொண்ட மழை அளவு கணக்கியல் நெறிமுறைகளை அரசு பின்பற்ற வேண்டும் என்பதனை வலியுறுத்திக் கொண்டே இருக்கிறேன். மழை எந்த அளவு பெய்தது, எத்தனை டிஎம்சி தண்ணீர் கிடைக்கப்பெற்றது போன்ற கணக்குகள் நம்மிடம் வேண்டும். மொத்தமாக கடலுக்குள் போய்விட்டது என்று கூறுங்கள். அனைத்தும் ஆவியாகி விட்டது என்று கூறுங்கள், அல்லது அனைத்தும் பூமிக்குள் போய் விட்டது என்று கூறுங்கள், ஏதாவது ஒரு கணக்கு கொடுங்கள் என்று கூறுகின்றேன்.
மெட்ரோ நீர் 750 - 800 மில்லியன் லிட்டர் தண்ணீர் ஒரு நாளைக்கு அளிக்கப்படுகின்றது என்று கூறப்படுகின்றது. அனைத்தும் மக்களுக்கு போய் சேருகின்றதா. விநியோகத்தின் போது சுமார் 20 சதவீதம் தண்ணீர் வீணாகிறது.
வறட்சி வந்து விட்டால், வறட்சி நிவாரணம் கொடுத்து விடுவது, வெள்ளம் வந்து விட்டால் வெள்ள நிவாரணம் கொடுத்து விடுவது என்ற நடைமுறையால் தீர்வுகள் கிடைக்காது. இந்த வருடம் முறையான அறிவியல் தரவுகளின் அடிப்படையில் ஏரிகளை பராமரித்தால் இனியாவது தண்ணீரினை சேமிக்கலாம்.
I am warm திட்டத்தில் கிட்டத்தட்ட 7000 கோடி செலவிடப்பட்டுள்ளது. ஏரி பராமரிப்பு காரணத்திற்கு, ஆனால், நடைபெறவில்லை.ஏரி பராமரிப்பு காண்ட்ராக்டர்களிடம் கொடுக்கப்படுகின்றது. அவர்கள், மேற்பரப்பில் உள்ள மண்ணை எடுத்து கரையில் போட்டு விட்டு, எங்கெல்லாம் நல்ல மண் இருக்கின்றதோ அதனை எடுத்து விற்றுவிட்டு, பள்ளம் பள்ளமாக உருவாக்கிவிட்டு ஏரிகள் தூர்வாரப்பட்டது என்று கூறிச் செல்வதுதான் நடைபெறுகின்றது.
இதே நிலை நீடித்தால், 800 மிமீ மழை பெய்த பின்னும் வறட்சி நிலவுவது போல், 900, 1000 மிமீ என மழையின் அளவு அதிகரித்துக் கொண்டே சென்றாலும் வறட்சி தான் நிலவும் என்கிறார் இவர்.
படத்தின் காப்புரிமைARUN SANKAR
கழிவு நீரினை குடிநீராக்குவது எந்த அளவு சாத்தியம்?
வீட்டில் இருந்து உபயோகப்படுத்தப்பட்ட தண்ணீரினை, மீண்டும் குடிநீராக மாற்ற இயலும். பல வெளிநாடுகளில் இந்த மறு சுழற்சி முறை நடைமுறையில் உள்ளது. அதற்கான தொழில் நுட்பங்கள் நிச்சயம் உள்ளது.
கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு ஆகும் பொருள் செலவினை விட , கழிவு நீரினை குடிநீராக்கும் தொழில்நுட்பத்திற்கு செலவு குறைவுதான். மற்றுமொரு குறிப்பிடத்தகுந்த விஷயம், கடல் நீரினை குடிநீராக்கும் திட்டத்தின் வாயிலாக கடலில் சூழலியல் மிகவும் பாதிப்படைகின்றது. இந்த தொழில்நுட்பத்தில் அதிக உப்பு கலந்த நீரினை கடலில் விடுகின்றோம்; இதனால் கடல் வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படும், 2 மீட்டர் தூரம் வரையிலும் கடல் இறந்து போய்விடும் .
கழிவு நீரினை மறு சுழற்சி செய்து கொள்ளலாம் என்று முடிவெடுத்தால் கடல் சூழலையும் பாதுகாக்கலாம், செலவினையும் குறைக்கலாம். மேலும் , கழிவு நீரினை சுத்திகரிக்கும் போது கிடைக்கின்ற கசடுகளில் இருந்து இயற்கை உரம் தயாரிக்கலாம், இஸ்ரேல் போன்ற நாடுகளில் இதனை நிரந்தரமாக செய்கின்றனர். சிங்கப்பூரில், மேலும் பல ஐரோப்பிய நாடுகளில் செய்கின்றனர். 60 சதவீதம் நீரினை கழிவு நீர் மறுசுழற்சி வழியாக பெற்றுக் கொள்ள இயலும் என பதிலளித்தார்.
இன்று நாம் சந்தித்துள்ள மோசமான தண்ணீர் பிரச்சினையில் இருந்து விடுபடுவதற்கான தீர்வினை பெறுவதில் அரசின் செயல்பாடுகள் மட்டும் போதாது, தனிமனிதர்களின் கைகளிலும் அந்தப் பொறுப்பு உள்ளது என்று குறிப்பிடும் ஜனகராஜன், இவ்வளவு பெரிய பிரச்சனையினை நாம் பார்த்து விட்டோம், இதனை ஒரு படிப்பினையாக எடுத்துக் கொண்டு இனியாவது தண்ணீர் பயன்பாட்டில் மிக கவனத்துடன் இருக்க வேண்டும்.நமக்கு கிடைக்கின்ற நீரின் அளவு என்ன, எங்கிருந்து கிடைக்கின்றது, எவ்வளவு தண்ணீரினை நாம் பயன்படுத்துகின்றோம் என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.
குளிப்பதற்கு 20 லிட்டர் தண்ணீர் பயன்படுத்துகிறோம் என்றால் அதனை 10 லிட்டர் தண்ணீராக மாற்ற முடியுமா என முயற்சிக்க வேண்டும். ஒருவர் 100லிட்டர் தண்ணீர் பயன்படுத்துகிறார் என்றால் அதனை 50லி ஆக குறைக்க என்ன செய்வது என சிந்தித்து செயல்பட வேண்டும்.
குழந்தைகளுக்கு, தண்ணீரின் அவசியத்தினையும், தண்ணீர் பயன்பாட்டில் சிக்கனத்தினைக் கடைபிடிப்பது குறித்தும் கற்றுக் கொடுக்க வேண்டும். மேலும், வீட்டில் உபயோகப்படுத்தும் தண்ணீரினை வீட்டிற்குள்ளேயே மறு சுழற்சி செய்யும் முறைகளை அரசு நடைமுறைப்படுத்த வேண்டும். தனி மனிதர்கள் என அனைவரும் இணைந்து விழிப்புணர்வோடு செயல்பட்டால் மட்டுமே இந்த சிக்கல்களில் இருந்து மீள முடியும்.
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
இந்திய பெண்கள் ரக்பி அணியின் முதல் சர்வதேச வெற்றி - ஆசிய மகளிர் ரக்பி சாம்பியன்ஷிப் போட்டியில் சிங்கப்பூரை வீழ்த்தியது
படத்தின் காப்புரிமைRUGBY INDIA
இந்திய மகளிர் ரக்பி அணி தனது முதல் சர்வதேச அளவிலான வெற்றியை பதிவு செய்து சாதனை படைத்துள்ளது.
ஆசிய மகளிர் ரக்பி சாம்பியன்ஷிப் போட்டி பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நடைபெற்று வருகிறது. 2021ஆம் ஆண்டு நியூசிலாந்தில் நடைபெறவுள்ள உலக ரக்பி சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெறும் தொடர்களில் ஒன்றாக இது உள்ளது.
இந்நிலையில், நேற்று (சனிக்கிழமை) மணிலாவில் நடைபெற்ற வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில், 15 பேர் கொண்ட இந்திய அணியின் வீராங்கனைகள் சிங்கப்பூர் அணியை எதிர்கொண்டனர்.
தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்த இந்திய அணி வீராங்கனைகள் தங்களுக்கு கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தினர்.
அனுபவம் மிக்க சிங்கப்பூர் அணியின் வீராங்கனைகளின் முயற்சி கடைசி வரை பலனளிக்காததால் 21-19 என்ற கணக்கில் இந்திய மகளிர் அணி தங்களது வரலாற்று சிறப்புமிக்க முதல் சர்வதேச வெற்றியை பதிவு செய்ததோடு, வெண்கலப் பதக்கத்தையும் தட்டிச்சென்றது
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
நூறு கிலோ தங்கம் மோசடி: காஞ்சிபுரம் கோவில் குருக்கள் மும்பையில் கைது
படத்தின் காப்புரிமைதினத்தந்தி
தினத்தந்தி: 'தங்கம் மோசடி - காஞ்சிபுரம் கோவில் குருக்கள் மும்பையில் கைது'
காஞ்சிபுரம் கோவிலில் 100 கிலோ தங்கம் மோசடி வழக்கில் தேடப்பட்ட கோவில் குருக்கள் மும்பை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். அவரை போலீசார் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர் என்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி.
பின்வருமாறு அந்நாளிதழ் விவரிக்கிறது,
காஞ்சிபுரத்தில் புகழ்பெற்ற ஏகாம்பரநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சோமாஸ்கந்தர் சிலை செய்யப்பட்டது. இந்த சிலை செய்ததில் 100 கிலோவுக்கும் மேல் தங்கம் மோசடி செய்யப்பட்டது தெரிய வந்தது. இதில் ஏகாம்பரநாதர் கோவில் குருக்கள் ராஜப்பாவுக்கு (வயது 87) தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து அறநிலையத்துறையினர் கொடுத்த புகாரின் பேரில் காஞ்சிபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜப்பா குருக்களை தேடி வந்தனர். இதனால் ராஜப்பா குருக்கள் கனடா நாட்டுக்கு தப்பி சென்றுவிட்டார். இதைத்தொடர்ந்து அனைத்து விமான நிலையங்களுக்கும் அவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து போலீசார் நோட்டீஸ் அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் ராஜப்பா குருக்கள் கனடா நாட்டில் இருந்து மும்பைக்கு நேற்று முன்தினம் காலையில் வந்தார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த விமான நிலைய போலீசார், ராஜப்பா குருக்களை கைது செய்தனர். பின்னர் அவரை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
ராஜப்பா குருக்களை மும்பையில் இருந்து கும்பகோணத்துக்கு நேற்று முன்தினம் இரவு போலீசார் அழைத்து வந்தனர். இதைத்தொடர்ந்து கும்பகோணத்தில் உள்ள தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி மாதவராமானுஜர் வீட்டுக்கு ராஜப்பா குருக்களை அழைத்து சென்று நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர்.
அவரிடம் விசாரணை நடத்திய நீதிபதி, ராஜப்பா குருக்களை அடுத்த மாதம் (ஜூலை) 5-ந் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டார். அதன்பேரில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், அவரை திருச்சி மத்திய சிறையில் அடைந்தன
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
காதலனை நம்பி சென்று ஏமாந்த சிறுமி
பதிவு : ஜூன் 24, 2019, 12:01 AM
ஆந்திராவில் 16 வயது சிறுமியை அடைத்து வைத்து கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஆந்திர மாநிலம் குண்டூர் நகரைச் சேர்ந்த அந்த 16 வயது சிறுமிக்கு ஓங்கோலை சேர்ந்த ராம் என்ற நபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை பெற்றோர் கண்டித்ததால், ராமின் அழைப்பின் படி கடந்த 5 நாட்களுக்கு முன்பு சிறுமி வீட்டிவிட்டு வெளியேறி ஓங்கோலுக்கு தனியே சென்றுள்ளார்.
காலையில் ஓங்கோல் பேருந்து நிலையத்து சென்றடைந்த சிறுமி மாலை வரை ராமை தொடர்புகொண்டும், அவர் பதிலளிக்கவில்லை. இதனால் அழுதபடி உட்கார்ந்திருந்த சிறுமியிடம் பாஜி என்ற மாற்றுத்திறனாளி ஒருவர் பேச்சு கொடுத்த தனது தனது நண்பன் அறைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு 2 நாட்கள் சிறுமியை அடைத்து வைத்து பாஜியும் அவரது நண்பர் ஆகாசும் சிறுமி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளனர்.
இதனைதொடர்ந்து அருகே தங்கியிருந்த பொறியியல் கல்லூரி மாணவர்களிடம் சிறுமியை பற்றி தெரிவித்து அவர்களது அறைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு சிறுமியை நான்கு நாட்கள் அடைத்து வைத்து நான்கு மாணவர்களும் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே அங்கிருந்து தப்பிய சிறுமி போலீசில் நடந்தவற்றை தெரிவிக்க குற்றம் சாட்டப்பட்ட மாற்றுத்திறனாளி பாஜி, ஆகாஷ், இரண்டு பொறியியல் மாணவர்களை கைது செய்துள்ளனர். தலைமறைவாக இரண்டு பேரை தேடி வரும் போலீசார் சிறுமியை வரவழைத்த ராமையும் தேடி வருகின்றனர். பாதிக்கப்பட்ட சிறுமி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
இனி மரங்களை வெட்ட மாட்டோம்; கேள்வி கேட்பவர்களை வெட்டுவோம்’ - ராமதாஸ்!
நேற்று, சென்னை அடையாறில் உள்ள முத்தமிழ்ப் பேரவையில், `வளர்க்கப்படுகின்ற வெறுப்பு அரசியல்’ என்ற பெயரில் கருத்தரங்கம் ஒன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கலந்துகொண்டார்.
அப்போது மேடையில் பேசிய அவர், ``கல்கத்தாவிலிருந்து வெளிவரும் பத்திரிகையின் நிருபர் ஒருவர், என்னிடம், `நீங்கள் மரம் வெட்டினீங்களாமே?’ என்று கேட்டார். அப்போது நான் சொன்னேன், `100 தடவை அதற்கு நான் பதில் கூறிவிட்டேன். நீங்கள் அதே நோக்கத்தில் கேள்வி எழுப்ப என்ன காரணம்?' என்று கேட்டேன். இனிமேல் அதுபோல ஏதாவது போராட்டம் என்றால் மரங்களை வெட்ட மாட்டோம். இதுபோல கேள்வி கேட்பவர்களைத்தான் வெட்டி குறுக்கே போடுவோம்’ என்றேன். மக்கள் மத்தியில், `ராமதாஸ் ஒரு மரம் வெட்டி’ என்ற கருத்தை விதைக்க வேண்டும் என்பதுதான் அவர்களது நோக்கம். ஏன்டா நாய்களா... நான் மரத்த எங்கெங்க வைச்சிருங்கேன்னு வந்து பாருங்கடா. மரம் வைப்பவர்களுக்கு 1லட்சம் பரிசு தருகிறேன்” என்று பேசினார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. பத்திரிகையாளர் சங்கங்கள் இதற்குக் கண்டனம் தெரிவித்தன.
இந்நிலையில், இன்று சென்னை சிவானந்த சாலையில் உள்ள அண்ணா கலையரங்கத்தில், வழக்குரைஞர்கள் சமூக நீதி பேரவையின் மாநில பொதுக்குழு நடைபெற்றது. இதில், பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ்,பா.ம.க தலைவர் ஜி.கே. மணி, முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ், ஏ.கே மூர்த்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போது பேசிய ராமதாஸ், ``ஸ்டாலின் கூறும் பொய்களை ஊடகங்கள் பெரிதுபடுத்துகின்றன. இளவரசன் விவகாரத்தில் திவ்யாவின் தந்தை தற்கொலை செய்துகொண்டது குறித்து செய்தி வெளியிடாத ஊடகங்கள், இளவரசன் மரணத்தில் எங்கள்மீது பழி போடுகின்றன.
நேற்று பத்திரிகையாளர்கள் குறித்து தான் கூறிய கருத்துகளை மாற்றிக்கொள்ள மாட்டேன். வழக்குரைஞர்கள் சமூக நீதி பேரவை ஆர்.எஸ்.எஸ் அமைப்பைப் போல செயல்பட வேண்டும். உயர் நீதிமன்றத்தில் தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கக் கோரி அடுத்த வாரம் போராட்டம் நடத்தப்படும்” என்றார். முன்னதாகப் பேசிய அன்புமணி ராமதாஸ், ``நாடாளுமன்றத் தேர்தலில் பா.ம.க தோல்வியடைய ஊடகங்களும் முக்கியக் காரணம். நாங்கள் எதிர்த்துப் பேசினால் தான் திருமாவளவனுக்கு அரசியல் வாழ்க்கை கிடைக்கும்” என்று காட்டமாகத் தெரிவித்தார். நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்பும் ஸ்டாலின் பகல் கனவு கண்டுவருகிறார் என்றும், தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன், நீட் போன்ற பிரச்னைகள் உருவாக தி.மு.க தான் காரணம்” என்றும் தெரிவித்தார்
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
Bigg Boss Tamil 3 | பிக் பாஸ் - 3 போட்டியாளர் இவர்கள் தான்!
BIGG BOSS TAMIL 3 | KAMALHAASAN | பிக்பாஸ் 3 நிகழ்ச்சி பிரம்மாண்டமாய் தொடங்கியது.
[/url]
பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ள பதினைந்தாவது போட்டியாளர் ரேஷ்மா. வேலைனு வந்துட்டா வெள்ளைகாரன் படத்தின் புஷ்பா என்ற கதாபாத்திரம் மூலம் பிரபலமானவர் நடிகை ரேஷ்மா.
பிக்பாஸ் வீட்டிற்குள் அடுத்த போட்டியாளர் மலேசிய தமிழரும், பாடகருமான முகென் ராவ் வருகை தந்துள்ளார்.
பிக்பாஸ் வீட்டில் அடுத்ததாக வருகை தந்துள்ள போட்டியாளர் தர்ஷன். இவர் இலங்கைத் தமிழர்; மாடலிங் துறையில் உள்ளார்
பிக்பாஸ் வீட்டில் அடுத்ததாக வருகைதந்துள்ள போட்டியாளர் நடன இயக்குநர் சாண்டி.
11வது போட்டியாளராக மோகன் வைத்யா பிக்பாஸ் வீட்டில் நுழைந்துள்ளார். கடந்த பிக்பாஸ் சீசனில் பங்கேற்ற ஆனந்த் வைத்தியநாதன் போல் இந்த முறை பாடகரும், நடிகருமான மோகன் வைத்யா பங்கேற்க உள்ளார்.
10வது போட்டியாளராக நடிகை ஷெரின் பிக்பாஸ் வீட்டில் நுழைந்துள்ளார். துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் ஷெரின். தொடர்ந்து விசில், நண்பேன்டா உள்ளிட்ட படங்களில் நடித்த இவர் சமீபகாலமாக படங்களில் நடிக்க வாய்ப்பில்லாமல் தவித்து வருகிறார்.
[url=http://twitter.com/share?text=%209%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%20%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D,%20%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%20%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AF%81%E0%AE%B4%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D.%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE,%20%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D,%20%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%20%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%20%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%20%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%20%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D.&url=https://tamil.news18.com/photogallery/entertainment/bigg-boss-tamil-3-contestants-list-vjr-171531-page-7.html]
9வது போட்டியாளராக இயக்கனரும், நடிகருமான சேரன் பிக்பாஸ் வீட்டில் நுழைந்துள்ளார். பாரதிகண்ணம்மா, பொற்காலம், ஆட்டோகிராப் உள்ளிட்ட படங்களை இயக்கிய சேரன் இறுதியாக திருமணம் என்ற படத்தை இயக்கியிருந்தார்
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
[/url]
8வது போட்டியாளராக நடிகை வனிதா பிக்பாஸ் வீட்டில் நுழைந்துள்ளார். நடிகர் விஜயகுமாரின் மகள் இவர். தமிழில் சந்திரலேகா, மாணிக்கம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது இவருக்கு 2 மகள்கள் உள்ளனர்.
7வது போட்டியாளராக நடிகர் சரவணன் பிக்பாஸ் வீட்டில் நுழைந்துள்ளார். தமிழ் சினிமாவில் 20 படங்களுக்கு மேல் கதாநாயகனாக நடித்து உள்ளார். நீண்ட இடைவெளிக்கு பருத்தி வீரன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.
பிக் பாஸ் 3வது சீசனில் 6வது போட்டியாளராக அபிராமி களமிறங்கி உள்ளார். பிரபல மாடலான இவர் பல விளம்பரங்களில் நடித்து உள்ளார். அஜித் நடித்துள்ள நேர்கொண்ட பார்வை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் முதல் ஆண் போட்டியாளராக கவின் பங்கேற்றுள்ளார். திருச்சியை சேர்ந்த இவர் சின்னத்திரை நடிகராக பிரபலமானவர். கனா கானும் காலங்கள், சரவணன் மீனாட்சி போன்ற தொடர்களில் நடித்துள்ளார்.
[url=http://twitter.com/share?text=%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%203%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%204%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%20%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%20%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%20%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D.%20%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%20%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%20%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%20%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%20%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%20%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%20%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE.%20%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%20%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D,%20%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF,%20%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%20%E0%AE%AA%E0%AE%B2%20%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%20%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%20%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D.%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%20%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%20%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D.%20%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%80%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%87%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81.&url=https://tamil.news18.com/photogallery/entertainment/bigg-boss-tamil-3-contestants-list-vjr-171531-page-12.html]
பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் 4வது போட்டியாளராக நடிகை மதுமிதா பங்கேற்றுள்ளார். ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் ஜாங்கிரி என்ற காமெடி கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை மதுமிதா. அந்தப் படத்தை அடுத்து மிரட்டல், அட்டக்கத்தி, கண்பேசும் வார்த்தைகள் உள்ளிட்ட பல படங்களில் நடித்த அவர் விஸ்வாசம் படத்தில் அஜித்துக்கு தங்கையாக நடித்திருந்தார். சினிமா மட்டுமின்றி சீரியல்களிலும் நடித்துவரும் மதுமிதாவுக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம். சமீபத்தில் இவருக்கு திருமணம் நடைபெற்றது
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
[/url]
Bigg Boss Tamil - 3 | 3-வது போட்டியாளராக காலா படத்தில் ரஜினியின் மருமகளாக நடித்து பிரபலமானவர் சாக்ஷி அகர்வால் இடம் பெற்றுள்ளார். விஸ்வாசம் படத்திலும் மருத்துவராக நடித்துள்ளார்.
Bigg Boss Tamil - 3 | 2-வது போட்டியாளராக பிக்பாஸ் வீட்டிற்குள் லொஸ்லியா சென்றுள்ளார். இலங்கையைச் சேர்ந்த இவர் செய்தி வாசிப்பாளராக இருந்து உள்ளார்.
[url=http://twitter.com/share?text=%20Bigg%20Boss%20Tamil%20-%203%20|%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%81%20%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%20%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D.%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%87%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D.&url=https://tamil.news18.com/photogallery/entertainment/bigg-boss-tamil-3-contestants-list-vjr-171531-page-15.html]
Bigg Boss Tamil - 3 | பிக்பாஸ் வீட்டின் முதல் போட்டியாளராக பாத்திமா பாபு களமிறங்கி உள்ளார். செய்தி வாசிப்பாளர் மற்றும் சின்னத்திரைகளில் இவர் நடித்து பிரபலமானவர்.
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
`அந்த ஆடியோ உண்மைதான்’ - தங்க தமிழ்ச்செல்வன் மீது பாயும் வெற்றிவேல்!
தங்க தமிழ்ச்செல்வன், டி.டி.வி. தினகரனை திட்டித்தீர்க்கும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டி.டி.வி. தினகரனுக்கும் தங்க தமிழ்ச்செல்வனுக்கும் இடையே தேர்தல் முடிந்ததிலிருந்தே பிரச்னை ஆரம்பமாகிவிட்டது என கூறப்பட்டது. அதனை நிரூபிக்கும் விதமாக, தற்போது ஆடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த ஆடியோவில், டி.டி.வி. தினகரனின் உதவியாளரும் தங்க தமிழ்ச்செல்வனும் பேசிக்கொள்கிறார்கள். அதில், டி.டி.வி. தினகரன் எங்கே என கேட்கிறார் தங்க தமிழ்ச்செல்வன். அதற்கு அவர், "அண்ணன் இல்லை. நான் ஊருக்கு வந்துவிட்டேன்" என்கிறார். உடனே கோபப்படும் தங்க தமிழ்ச்செல்வன், "இந்த மாதிரி பொட்டத்தனமான அரசியல் பண்றதை நிறுத்தச்சொல்லுப்பா. உங்க அண்ணணை நிறுத்தச்சொல்லு. நான் விஸ்வரூபம் எடுத்தா, நீங்க அழிஞ்சிபோவீங்க. நான் நல்லவன். நேற்று நீங்க தேனியில கூட்டம்போட்டீங்க. நாளைக்கு நான் மதுரைல கூட்டம் போடவா? பாரு... என்ன நடக்குதுனு பாரு. இந்த பேடித்தனமான அரசியல பண்ண வேணாம்னு உங்க அண்ணன்ட சொல்லிடு. தோத்துப்போவ... என்னைக்கும் ஜெயிக்க மாட்ட" என்று கடுமையாகப் பேசுகிறார்.
ஆடியோ பின்னணியும்... தங்க தமிழ்ச்செல்வனின் கோபமும் :
மதுரை எம்.பி தேர்தலில் அ.ம.மு.க வேட்பாளராக நிறுத்தப்பட்ட டேவிட் அண்ணாதுரை, உசிலம்பட்டி முன்னாள் எம்.எல்.ஏ-வும், திருப்பரங்குன்றம் அ.ம.மு.க வேட்பாளருமான மகேந்திரன் ஆகிய இருவரது தலைமையில், நேற்று தேனியில் ஒரு கூட்டம் போட்டதாகவும், தங்க தமிழ்ச்செல்வனுக்குப் பதிலாக புதிய நபரை நியமிப்பது தொடர்பாக அக்கூட்டத்தில் பேசப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
தங்க தமிழ்ச்செல்வன், அ.தி.மு.க'வில் இணையப்போகிறார் எனத் தகவல் வெளியான நிலையில், தேனிக்கு புதிய நிர்வாகியை டி.டி.வி. தினகரன் நியமிக்கச் சொல்லியதாகவும், அதன் அடிப்படையிலேயே கூட்டம் போடப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் கோபமடைந்த தங்க தமிழ்ச்செல்வன், டி.டி.வி. தினகரனின் உதவியாளரை அழைத்து கோபத்தைக் கொட்டித்தீர்த்துள்ளார். அதன்பின்னர், தனது கூடாரத்தை இன்று மாலை தேனியில் உள்ள தனியார் ஹோட்டலில் கூட்டினார். பின்னர், தனது ஆதரவாளர்களுடன் கம்பம் சென்றுள்ளார். இந்நிலையில், தங்க தமிழ்ச்செல்வனுடன் இருந்த பலர், சென்னை சென்றுவிட்டதாகவும் டி.டி.வி. தினகரனை சந்திக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இது தொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்றகழகத்தைச்சேர்ந்த வெற்றிவேலிடம் பேசினோம். அவர், `ஆம் அந்த ஆடியோ உண்மைதான். அவருக்கு மனநிலை சரியில்லை. வீட்டிலிருப்பவர்கள், அவரை சரியான மருத்துவரிடம் காட்டினால் சிறந்தது” என்று கூறினார்.
தங்கதமிழ்செல்வனை தொடர்பு கொள்ள முயற்சித்தோம். ஆனால் அவர் செல்ஃபோன் அணைத்துவைக்கப்பட்டுள்ளது. அவர் விளக்கம் கொடுத்தால் பிரசுரிக்க தயாராக உள்ளோம்.
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
சென்னையில் ஒரே நாளில் 11 செயின்பறிப்புகள்: வழிப்பறி கொள்ளையர்களுடன் போராடிய 3 பெண்கள் காயம்
செயின் பறிப்பு கொள்ளையர்களும் பாதிக்கப்பட்ட பெண்களும்
சென்னையில் அதிகரித்திருந்த செயின் பறிப்பு, செல்போன் பறிப்புகள் சிசிடிவி கேமராக்கள் அதிக அளவில் நிறுவப்பட்டவுடன் குறைந்திருந்த நிலையில் மீண்டும் அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 11 சம்பவங்களில் 3 பெண்கள் காயமடைந்தனர்.
சென்னையில் செயின் பறிப்புகள், செல்போன் பறிப்புகள் அதிரித்து பொதுமக்கள் வெளியில் நடமாட முடியாத நிலை இருந்தது. நுங்கம்பாக்கத்தில் செல்போன் பறிப்பின்போது ஒரு மாணவன் கொல்லப்பட்டார். பின்னர் குன்றத்தூரில் ஒரு பெண்மணி சாலையில் இழுத்துச் செல்லப்பட்டு காயமடைந்தார்.
ஐடி பெண் ஊழியர் லாவண்யா கொடூரமாக தாக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்குப்பின் உயிர் பிழைத்தார். கோயம்பேடு அருகே பேத்தி மற்றும் மகளுடன் வந்த வயதான பெண் தாக்கப்பட்டு கீழே விழ சாவகாசமாக அவரிடம் செயினை பறித்துச் சென்றனர். புழல் அருகே கார் ஓட்டுனர் வழிப்பறியில் கொல்லப்பட்டார்.
இதுபோன்ற தொடர் சம்பவங்கள் காரணமாக கண்காணிப்பு கேமராக்களை அதிக அளவில் நிறுவ காவல் ஆணையர் உத்தரவிட்டார். இதனால் செயின் பறிப்பு செல்போன் பறிப்பு குற்றவாளிகள் எளிதாக சிக்கினர். இதையடுத்து குற்ற எண்ணிக்கை 90 சதவீதம் குறைந்தது.
இந்நிலையில் சமீப காலமாக மீண்டும் செயின் பறிப்பு, செல்போன் பறிப்புகள் ஆங்காங்கே தலைதூக்க தொடங்கியது. இதன் உச்சமாக ஒரே நாளில் நேற்று 10 செயின் பறிப்புச் சம்பவங்களும் ஒரு செல்போன் பறிப்புச் சம்பவமும் நடந்துள்ளது.
இதில் செயின் பறிப்பின்போது கொள்ளையர்களுடன் போராடிய மூன்று பெண்கள் கடுமையான காயமடைந்தனர். அவர்களில் இருவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது.
முதல் சம்பவமாக நேற்று முன்தினம் மாலை 5-30 மணி அளவில் பெரும்பாக்கம் இந்திராநகர் பிரதான சாலையில் நடந்துச் சென்ற அதே பகுதியில் வசிக்கும் பாலாம்மாள்(75) என்கிற மூதாட்டியிடம் மோட்டார் சைக்கிளில் தன்னந்தனியாக வந்த நபர் அவர் கழுத்திலிருந்த 3.5 சவரன் தங்கச்சங்கிலியை பறித்துச் சென்றுள்ளார். பள்ளிக்கரணை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
2 வது சம்பவத்தில் திருவல்லிக்கேணி பேயாழ்வார் தெருவில் வசிக்கும் சுதாதேவி (57) என்பவர் காலை 8-20 மணி அளவில் வடக்கு குளக்கரை சாலை வழியாக நடந்துச் சென்றுள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு நபர்கள் அவர் கழுத்திலிருந்த 5 சவரன் தங்கச்சங்கிலியை பறித்துச் சென்றனர். இதுகுறித்து ஐஸ் ஹவுஸ் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
3-வது சம்பவத்தில் கோட்டூர் ஏரிக்கரை சாலையில் வசிக்கும் குணசீலன் எனபவரின் மனைவி செல்வி (38), காலை 9-00 மணி அளவில் திருமண நிகழ்ச்சி முடிந்து வீட்டிற்கு சென்று கொண்டிருக்கும் போது ஏரிக்கரை சாலை வழியாக நடந்துச் சென்றுள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் செல்வியிடம் நகையை பறிக்க முயன்றுள்ளனர்.
அதிர்ச்சியடைந்த செல்வி தடுக்க முயன்றதால்,கொள்ளையர்கள் பைக்கோடு கீழே விழுந்துள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் செல்வியை அடித்து உதைத்துள்ளனர், சரமாரியாக கன்னத்தில் அறைந்து தாக்கியுள்ளனர். செல்வி அலறி சத்தம்போட்டதால் அவர்கள் நகையை பறிக்க முடியாமல் தப்பித்து சென்றனர்.
கோட்டூர்புரம் போலீஸாரிடம் செல்வி புகார் அளித்துள்ளனர். சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். செல்விக்கு முகத்திலும், தலையிலும் காயம் ஏற்பட்டது.
4-வது சம்பவமாக ராயப்பேட்டை ஸ்ரீபுரம் முதல் தெருவில் வசிக்கும் ஜெயலட்சுமி(44) என்பவர் காலை 8-30 மணி அளவில் அதே தெரு முனையில் நடந்துச் சென்றபோது மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டுபேர் நகையைப் பறிக்க முயல அவர் பறிக்கவிடாமல் கூச்சலிட்டதால் அவர்கள் தப்பிச் சென்றனர். ராயப்பேட்டை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
5-வது சம்பவமாக மயிலாப்பூர் ராதாகிருஷ்ணபுரம் தெருவில் வசிக்கும் சாந்தா(62) காலை 9 மணி அளவில் மயிலாப்பூர் முண்டக்கண்ணி அம்மன் கோவில் தெருவழியாக சென்றபோது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அவர் கழுத்தில் அணிந்திருந்த 1 சவரன் தங்கச்சங்கிலியைப் பறித்துச் சென்றனர். மயிலாப்பூர் போலீஸார் விசாரணை.
6-வது சம்பவமாக கொடுங்கையூர், திருவள்ளூர் நகரில் வசிக்கும் ரமணி என்பவர் காலை 11-30 மணி அளவில் அம்பேத்கர் கல்லூரி அருகில் சென்றுக்கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு நபர்கள் அவரது கழுத்திலிருந்த 3 சவரன் தங்கச்சங்கிலியை பறித்துள்ளனர். அப்போது அவர்கள் இழுத்துச் சென்றதில் கீழே விழுந்து முகத்தில் பலத்த காயமடைந்தார்.
7-வது சம்பவமாக ஆதம்பாக்கம் நீலமங்கை நகரில் வசிக்கும் முத்துலட்சுமி (65) என்பவர் மாலை இன்கம்டாக்ஸ் காலனி 2 வது தெருவில் மாலை 6-45 மணி அளவில் நடந்துச் சென்றுக்கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த இருவர் அவரிடமிருந்த 5 சவரன் தங்கச்சங்கிலியை பறித்துக்கொண்டு பறந்தனர்.
இதில் அவர் மோட்டார் சைக்கிளுடன் இழுத்துச் செல்லப்பட்டு கீழே விழுந்ததில் முகம், கைகால்களில் பலத்த காயம் மற்றும் சிராய்ப்பு காரணமாக அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆதம்பாக்கம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
8-வது சம்பவமாக சூளைமேடு பஜனைக்கோவில் தெருவில் வசிக்கும் கற்பககன்னி(28) என்பவர் இரவு 9-30 மணி அளவில் திருமங்கலம் 100 அடிச்சாலையில் நடந்து வந்துக்கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அவர் கழுத்திலிருந்த 6 சவரன் தங்கச்சங்கிலியை பறித்துச் சென்றனர். திருமங்கலம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
9-வது சம்பவமாக எழும்பூர் சுந்தர் தெருவில் வசிக்கும் மேரி (65) என்பவர் நேற்றிரவு 10 மணி அளவில் சாமிரெட்டி தெரு திருவீதி அம்மன் தெருவழியாக வந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அவர் கழுத்தில் அணிந்திருந்த 2 சவரன் தங்கச்சங்கிலியை பறித்துச் சென்றனர். எழும்பூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
10-வது சம்பவமாக சென்னை தேனாம்பேட்டை சீத்தாம்மாள் காலனியில் நடந்துச் சென்ற பெண்ணிடம், மோட்டார் சைக்கிளில் வந்த நபர்கள் அவர் கழுத்தில் இருந்து செயினை பறிக்க முயன்ற சம்பவம் நடந்துள்ளது. அப்போது அந்த பெண் கீழே விழுந்து காயமடைந்தார்.
அது தொடர்பான சிசிடிவி காட்சிகளை போலீஸார் கைப்பற்றியுள்ளனர். ஆனால் பாதிக்கப்பட்ட பெண் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுக்கவில்லை. ஆனாலும் போலீசார் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
11-வது சம்பவமாக வில்லிவாக்கம், நொளம்பூர் பகுதியில் வசிக்கும் சுமிதா(29) வெளியூர் சென்றுவிட்டு திரும்ப வந்தவர் தனது தந்தைக்காக, கீழ்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் காத்துக்கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் அவரிடமிருந்த கைப்பயை பறித்துச் சென்றனர்.
அதில் ரூ.5000 ரொக்கப்பணமும், புத்தம் புதிய செல்போனும் இருந்தது. இதுகுறித்து கீழ்ப்பாக்கம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே நாளில் 11 சம்பவங்களிலும் 11 பெண்கள் குறிப்பாக மூதாட்டிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிலும் 3 பெண்கள் கடுமையாக காயமடைந்துள்ளனர்.
11 இடங்களில் அடுத்தடுத்து நகை பறிப்பு, வழிப்பறி சம்பவங்கள் நடைபெற்றுள்ளது பெண்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது. மொத்தம் 26 சவரன் தங்க நகைகளை பறித்துச் சென்ற கொள்ளையர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
சென்னையில் மீண்டும் செயின் பறிப்பு சம்பவங்கள் தலை தூக்கியிருப்பது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொள்ளையர்களை விரைந்து பிடித்து நடவடிக்கை எடுக்க காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
முஸ்லிம் இளைஞர் ஜார்கண்டில் அடித்துக் கொலை - பின்னணி தகவல்கள்
படத்தின் காப்புரிமைSARTAJ ALAMImage captionதப்ரேஜ்
"அது ஜுன் மாதம் 17ஆம் நாள் இரவு; என்னுடைய கணவன் ஜம்ஷேபுரில் இருந்து கிராமத்திற்கு திரும்பி வந்துக் கொண்டிருந்தார். அப்போது கத்கி டீஹ் கிராமத்தைச் சேர்ந்த சிலர் வந்து, அவரை சுற்றி வளைத்துக் கொண்டார்கள். திருட்டுப் பழியை சுமத்தி இரவு முழுவதும் மின்சார கம்பத்தில் கட்டி வைத்து, அடித்து உதைத்திருக்கிறார்கள். ஜெய் ஸ்ரீராம் மற்றும் ஜெய் ஸ்ரீ ஹனுமான் என்று சொல்லுமாறு கட்டாயப்படுத்தி இருக்கின்றனர். ஆனால் அவர் அப்படி சொல்ல மறுத்ததற்கு மோசமாக அடித்தார்கள். காலையானதும் அவரை சராய்கேலா போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்திருக்கிறார்கள். தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எதையுமே எடுக்காத போலீசார், எனது கணவரை திருடன் என்று முத்திரைக் குத்தி சிறைக்கு அனுப்பி விட்டார்கள். அவருக்கு உடம்பில் பலத்த காயங்கள் ஏற்பட்டது. அதனால்தான் அவர் இறந்து விட்டார்"
ஷாயிஸ்தா பர்வீன் இதைச் சொல்லிக் கொண்டே தலையில் அடித்துக் கொண்டு அழுகிறார். திருமணமாகி சில மாதங்கள் மட்டுமே ஆன நிலையில், அவரின் இந்த நிலைமையை பார்க்கவே பரிதாபமாக இருக்கிறது. ஜார்கண்ட் மாநிலத்தின் சராய்கேலா மாவட்டத்தில் உள்ள கதம்டீஹா கிராமத்தை சேர்ந்தவர் தான் தப்பேஜ் அன்ஸாரி.
பிபிசியிடம் பேசிய ஷாயிஸ்தா, "நான் போலீசாரிடம் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தேன். அவர்கள் அதை பதிவு செய்து, எனக்கு நியாயம் வழங்கியிருக்க வேண்டும். தப்ரேஜுக்கு 24 வயதுதான் ஆகிறது. அவரை கொலை செய்துவிட்டார்கள். இந்த விவகாரத்தில் போலீசும், சிறை நிர்வாகமும் அலட்சியமாக இருக்கின்றனர். எங்கள் புகாரை உயர் நிலையில் விசாரிக்க வேண்டும்" என்கிறார் அவர்.
படத்தின் காப்புரிமைSARTAJ ALAM
ஊடகங்களிடம் பேசிய சராய்கேலா காவல் நிலைய பொறுப்பாளர் அவினாஷ் குமார், "தாத்கீடீஹ் கிராமத்தை சேர்ந்தவர்கள், தப்ரேஜ் அன்ஸாரி திருடியதாக சொல்லி பிடித்து வந்தார்கள். தாத்கீடீஹில் கமல் மொஹ்தா என்பவரின் வீட்டு மாடியில் இருந்து குதித்துச் செல்வதைப் பார்த்து கிராம மக்கள் அவரை பிடித்து வந்தார்கள். அவருடன் அப்போது வேறு இரண்டு பேரும் இருந்தார்கள். அவர்கள் தப்பித்து போய்விட்டார்கள்."
தப்ரேஜை மட்டும் கிராமத்தினர் பிடித்துவிட்டார்கள். பிறகு அவர்கள் எங்களிடம் வந்து ஒப்படைத்து விட்டார்கள். இதில் போலீசார் அலட்சியம் காட்டினார்கள் என்று சொல்வதற்கான வாய்ப்பே இல்லை" என்று அவர் சொல்கிறார்.
இங்கு தப்ரேஜின் மரணத்திற்கு பிறகு, அவரது சடலத்தை பிரேத பரிசோதனை செய்வதற்காக, சிறை அதிகாரிகள் சராய்கேலா சதர் மருத்துவமனைக்கு எடுத்து சென்றபோதுதான் பிரச்சனை வெடித்தது. பிறகு, அங்கிருந்து தர்பேஜின் சடலம், ஜம்ஷேத்புருக்கு அனுப்பப்பட்டது.
படத்தின் காப்புரிமைSARTAJ ALAM
இதற்கிடையில் தப்ரேஜ் அன்சாரியை அடித்தபோது எடுக்கப்பட்ட இரண்டு வீடியோக்கள் வைரலாகின. அதில் கிராம மக்கள் சேர்ந்து அவரை மின்கம்பத்தில் கட்டி வைத்து அடிக்கும் காட்சியும் இடம் பெற்றுள்ளது.
முதலில் அவரிடம் பெயர் கேட்கப்படுகிறது. பிறகு, ஜெய் ஸ்ரீ ராம், ஜெய் ஸ்ரீ ஹனுமான் என்று சொல்லச் சொல்கிறார்கள்
இந்த வீடியோவில் சில பெண்களும் இருப்பது தெரிகிறது. இந்த வீடியோவை பார்த்த சில விவரம் அறிந்தவர்கள், சராய்கேலா கர்சாம்பாவின் காவல்துறை கண்காணிப்பாளரிடம் வீடியோவை கொடுத்தார்கள்.
ஜார்கண்டில் கும்பலால் அடித்து கொலைச் செய்யப்படும் சம்பவங்கள் அவ்வப்போது ஆங்காங்கே வெளியாகும் செய்திதான். ஜார்கண்ட் பொதுமக்கள் உரிமை இயக்கத்தின் அறிக்கையின்படி, தற்போதைய பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சியில் குறைந்தது 12 பேர் கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டிருக்கின்றனர்.
படத்தின் காப்புரிமைSARTAJ ALAM
அதில் இரண்டு பேர் பழங்குடியினத்தை சேர்ந்தவர்கள், எஞ்சிய பத்து பேரும் **. பொதுவாக மதரீதியிலான பகைமை அதிகரிக்கும் போதும், குற்றவாளிகள், பாஜக மற்றும் விஷ்வ ஹிந்து பரிஷத் அல்லது அவர்களுடைய தோழமை நிறுவனமாக இருக்கும் போதும், இது போன்ற கும்பல் தாக்குதலும், கொலையும் தொடர்கின்றன.
ராம்கட்டில் அலீமுதீன் அன்ஸாரி கும்பலால் அடித்து கொல்லப்பட்ட பிறகு, குற்றவாளிகள் என கூறப்பட்டவர்களுக்கு, உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கிடைத்தபோது மலர்மாலை போட்டு வரவேற்றவர், நரேந்திர மோதி தலைமையிலான அமைச்சரவை உறுப்பினர்களில் ஒருவர். அவர்தான் அப்போதைய அமைச்சர் ஜெயந்த் சின்ஹா. இது தொடர்பாக அவரை பலரும் விமர்சித்திருந்தார்கள்.
இதன் பிறகும், பிபிசியிடம் பேசியபோது அவர் சொன்ன மற்றொரு விஷயம் ஆச்சரியமளித்தது. அது என்ன தெரியுமா? கும்பல் படுகொலை செய்த குற்றத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் வழக்கு நடத்துவதற்காக அவர் நிதியுதவியும் செய்திருக்கிறார் என்பது.
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
[color=var(--titleColor)]கிறிஸ்தவரை மணக்கும் சுதா ரகுநாதன் மகள்... மிரட்டல் விடுக்கும் சாதிய அமைப்புகள்![/color]
[color=var(--titleColor)] பாடகி சுதா ரகுநாதனின் மகள் தன் விருப்பப்படி கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த ஒருவரை மணக்க இருக்கிறார். இதையொட்டி, சாதிய அடிப்படைவாதிகள் சுதா ரகுநாதனைக் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.[/color]
கர்நாடக சங்கீத பாடகி சுதா ரகுநாதனின் மகள் தன் விருப்பப்படி கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த ஒருவரை மணக்க இருக்கிறார். இதையொட்டி, சமூக வலைதளங்களிலும், சில பிராமணிய உட்குழுக்களிலும் சுதா ரகுநாதனைக் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.
புகழ்பெற்ற பாடகியான சுதா ரகுநாதனை தங்கள் சமூகத்தின் பெருமைமிகு அடையாளமாகக் கொண்டிருக்கும் அவர்களுக்கு, அவர்தம் மகளை கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவருக்கு மணமுடித்து வைப்பது ஒப்பவில்லை.
திருமணம் இன்னும் சில நாட்களில் நடைபெறவிருக்கும் நிலையில், ராஷ்டிரிய சனாதன சேவா சங்கத்தின் நிறுவன தலைவர் எஸ்.ராமநாதன் சுதா ரகுநாதனின் கணவரிடம் போன் செய்து மாற்று மதத்தினர் இணையும் இந்தத் திருமணத்திற்கு எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார்.
தொடர்ந்து, சுதா ரகுநாதனின் அலைபேசி எண்ணையும் பலர் பகிர்ந்து, அவரது மகள் திருமணத்திற்கு எதிராகப் பேசுமாறு ஊக்குவித்து வருகின்றனர். தங்கள் சாதிப்பெருமையை திருமணத்தின் வழியாக நிலைநிறுத்துவதற்காக தரங்கெட்ட செயலில் ஈடுபட்டு வரும் அவர்களுக்கு கண்டனங்களும் குவிந்து வருகின்றன.
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
•
|