Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
ஒருநாள் போட்டியில் அதிக சிக்ஸ்: ஹிட்மேன், 360, யுனிவர்ஸ் பாஸ் சாதனையை முறியடித்தார் மோர்கன்
இங்கிலாந்து - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் மான்செஸ்டரில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 50 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 397 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து கேப்டன் ருத்ர தாண்டவத்தால்தான் இவ்வளவு ரன்கள் குவிக்க முடிந்தது. அவர் 71 பந்தில் 4 பவுண்டரி, 17 சிக்சர்களுடன் 148 ரன்கள் விளாசினார்.
17 சிக்சர்கள் அடித்ததன் மூலம் ஒரு போட்டியில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர்கள் என்ற சாதனையைப் படைத்துள்ளார். இதற்கு முன் ஹிட்மேன் ரோகித் சர்மா ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 16 சிக்சர்களும், 360 டிகிரி என்று அழைக்கப்படும் ஏபி டி வில்லியர்ஸ் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக 16 சிக்சர்களும், யுனிவர்ஸ் பாஸ் என்று அழைக்கப்படும் கிறிஸ் கெய்ல் ஜிம்பாப்வேவுக்கு எதிராக 16 சிக்சர்களும் விளாசியிருந்தனர். தற்போது மூன்று ஜாம்பவான்களின் சாதனையை மோர்கள் உடைத்தெறிந்துள்ளா
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
ரிஷப் பண்ட்டிற்கு அடித்த மெகா யோகம்! உலகக் கோப்பையில் இருந்து ஷிகர் தவான் நீக்கம் - பிசிசிஐ
உலகக் கோப்பை 2019 கிரிக்கெட் தொடரில், காயம் காரணமாக இந்திய அணியில் இருந்து தொடக்க வீரர் ஷிகர் தவான் நீக்கப்படுவதாக இந்திய அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
உலகக் கோப்பை தொடரில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் சதம் விளாசிய தொடக்க வீரர் ஷிகர் தவானுக்கு இடது கை விரலில் காயம் ஏற்பட்டது. இதனால், அவர் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விளையாடவில்லை. தொடர்ந்து கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தார். ரிஷப் பண்ட் ரிசர்வ் வீரராக அறிவிக்கப்பட்டிருந்தார்.
View image on Twitter
Quote:
[/url]ANI
✔@ANI
Team India Manager Sunil Subramaniam: Shikhar Dhawan has a fracture at the base of the first metacarpal of his left hand. He will remain in cast until mid-July which rules him out of ICC World Cup. We have requested Rishab Pant as the replacement.
494
16:54 - 19 Jun 2019
[color][size][font]
129 people are talking about this
[url=https://twitter.com/ANI/status/1141305693284315141]
Twitter Ads information and privacy
[/font][/size][/color]
இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய இந்திய அணியின் மேனேஜர் சுனில் சுப்பிரமணியம், “காயம் காரணமாக உலகக் கோப்பையில் இருந்து ஷிகர் தவான் நீக்கப்படுகிறார். அவருக்கு பதில் ரிஷப் பண்ட் அணியில் இணையுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறார்” என்று தெரிவித்துள்ளார்.
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
அனல்காற்று வீசும்: பகல் 11 முதல் 4 மணி வரை மக்கள் வெளியே செல்ல வேண்டாம்!
தென்மேற்குப் பருவமழை காரணமாக, கோயம்புத்தூர், நீலகிரி, தேனி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
அனல்காற்று வீசும்: பகல் 11 முதல் 4 மணி வரை மக்கள் வெளியே செல்ல வேண்டாம்!
ஹைலைட்ஸ்
-
- வட தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்று அனல் காற்று வீசும் என்பதால் மக்கள் வெளியே செல்ல வேண்டாம்
- சென்னையைப் பொறுத்தவரை அதிகபட்ச வெப்பநிலையாக 41 டிகிரி செல்சியஸ் பதிவாகும்: வானிலை மையம்
வட தமிழகத்தில் இன்று அனல் காற்று வீசக்கூடும் என்பதால், காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை பொதுமக்கள் வெளியே செல்ல வேண்டாம் என சென்னை வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது: வட தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்று (ஜூன் 20) அனல் காற்று வீசக்கூடும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம், மதுரை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று அனல் காற்று வீசும். எனவே காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை பொதுமக்கள் வெளியே செல்ல வேண்டாம்.
சென்னையைப் பொறுத்தவரை வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலையாக 41 டிகிரி செல்சியஸும் குறைந்தபட்ச வெப்பநிலையாக 30 டிகிரி செல்சியஸும் பதிவாகக் கூடும். அதேநேரம் தென்மேற்குப் பருவமழை காரணமாக, கோயம்புத்தூர், நீலகிரி, தேனி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
வங்கக்கடலின் வடக்குப் பகுதியில் அடுத்த 3 நாள்களில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. மத்திய அரபிக்கடலில் பல பகுதிகளில் அடுத்த 3 நாள்களில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைய சாதகமான சூழல் உள்ளது. இதேபோன்று, தென் அரபிக்கடல் பகுதியில் பருவமழை மிதமாக வலுவடைய வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தில் நேற்று 15 இடங்களில் 100 டிகிரிக்கும் மேல் வெப்பநிலை பதிவானது. அதிகபட்சமாக, திருத்தணியில் 107 டிகிரி, சென்னை நுங்கம்பாக்கம், மீனம்பாக்கம், மதுரை விமான நிலையம், நாகப்பட்டினம், தஞ்சாவூர், வேலூரில் தலா 105 டிகிரி, மதுரை தெற்கில் 104 டிகிரி, திருச்சியில் 103 டிகிரி, கடலூர், பரங்கிபேட்டை, தூத்துக்குடியில் தலா 102 டிகிரி, கரூர்பரமத்தி, பாளையங்கோட்டையில் தலா 101 டிகிரி, சேலத்தில் 100 டிகிரி வெப்பநிலை பதிவானதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
மகாராஷ்ட்ரா தலித் சிறுவன் ஆர்யனுக்கு கொடிய தண்டனை
படத்தின் காப்புரிமைTHINKSTOCK
கோயிலில் திருடியதாக ஐந்து வயது தலித் சிறுவன் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டில், தலித் சிறுவனின் ஆடைகளை நீக்கி சூடான கல்லில் உட்கார வைத்து தண்டனை அளித்துள்ளனர். இந்த சம்பவமானது மகாராஷ்ட்ரா மாநிலம் வர்தா மாவட்டத்தில் நடந்துள்ளது.
இந்த தண்டனையின் காரணமாக அவரது பின்பகுதியில் கடுமையான தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளன. அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அந்த சிறுவனின் பெயர் ஆர்யன் கட்சே. அந்த சிறுவனின் தந்தை அளித்த புகாரில், போலீஸார் அமோல் தோர் எனும் நபரை கைது செய்துள்ளனர்.
அவர் மீது குழந்தைகள் பாதுகாப்பு பிரிவிலும், வன்கொடுமை தடுப்பு சட்டத்திலும் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
பட்டியல் சமூகத்தினருக்கான தேசிய ஆணையமும் இது குறித்து விசாரித்து வருகிறது.
அமோல் தோர் குற்றப் பின்னணி உடையவர்.
சாராயம் விற்றது தொடர்பாக அவர் மீது வழக்கு உள்ளதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.
என்ன நடந்தது?
ஆர்வி நகரத்தில் உள்ள ராணி லக்ஷ்மிபாய் பகுதியில் உள்ள ஜோகனா மாதா கோயிலில் மதிய நேரங்களில் பெரிதாக கூட்டம் இருக்காது.
இது பிரபலமான கோயில் இல்லை. வட் பூர்ணிமா தினங்களில் மட்டுமே கூட்டம் வரும் என்கிறார் அந்த பகுதியை சேர்ந்த சமூக சேவகர் திலீப்.
"அந்த கோயிலில் ஆலமரம் இருப்பதால், வட் பூர்ணிமா அன்று மக்கள் அங்கு திரள்வார்கள். மற்ற நேரங்களில் அந்த ஆலமரத்தின் கீழ் அமர்ந்து சூதாடி கொண்டும், சாராயம் விற்றுக் கொண்டும் இருப்பார்கள். இப்போது குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அமோல் தோரும் சாராய தொழிலில் ஈடுபடுபவர்தான்" என்கிறார் திலீப்.
படத்தின் காப்புரிமைNITESH RAUT
எப்போதும் போல், அந்த கோயில் பகுதியில் மதியம் 12 மணி அளவில் ஆர்யன் விளையாடி கொண்டு இருந்திருக்கிறான். அமோல் தோர் அங்குள்ள ஒரு தூண் அருகே அமர்ந்து இருந்திருக்கிறர். திடீரென, அந்த ஆர்யனை பிடித்து சரமாரியாக தாக்கி இருக்கிறார்.
பின், அந்த சிறுவனின் ஆடைகளை நீக்கி, அங்கிருந்த சூடான டைல்ஸில் அமர வைத்திருக்கிறார். வெயிலின் காரணமாக அந்த டைல்ஸின் வெப்பம் 45 டிகிரி என்ற அளவில் இருந்திருக்கிறது. ஆர்யனின் பின்பகுதியில் தீக்காயங்கள் ஏற்பட்டது.
அந்த சிறுவன் அழுது கொண்டே வீட்டிற்கு ஓடி இருக்கிறார். காயங்களைன் கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த சிறுவனின் தாய், அந்த சிறுவனை அரசு மருத்துவமனையில் சேர்த்து இருக்கிறார்.
'கடும் நடவடிக்கை'
ஆர்யன் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறைந்தது பத்து நாட்களாவது அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பார் என்கிறார் அவரின் தந்தை கஜனன் கட்சே.
பிபிசி மராத்தி சேவையிடம் பேசிய அவர், "அந்த குற்றவாளி என்ன மாதிரியான மனநிலையில் இருந்திருப்பார் என யோசிக்கவே முடியவில்லை. திருடினான் என்று ஆர்யனை தண்டித்தார்களா அல்லது சாதிய வன்மத்துடன் தண்டித்தார்களா? ஒருவேளை ஆர்யன் ஐந்து ரூபாயோ அல்லது பத்து ரூபாயோ திருடி இருந்தால், அவனை திட்டி இருக்கலாம் அல்லது கன்னத்தில் அறைந்திருக்கலாம். ஆனால், அவனி ஆடைகளை நீக்கி 45 டிகிரி வெயிலில் உட்கார வைத்திருக்கிறார்கள். அவன் வலியில் அழுதிருக்கிறான். ஆனால் அவன் மீது எந்த கருணையும் காட்டப்படவில்லை." என்கிறார்.
"இதனை பார்த்த ஒரு பெண் இதனை நிறுத்தும்படி கேட்டிருக்கிறார். ஆனால், அந்த நபர் ஆர்யனை விடவில்லை. இறுதியில் அந்த பெண்தான் ஆர்யனை காப்பாற்றி இருக்கிறார். அவர் என் மகனை கொல்லப்பார்த்தாரா என்று தெரியவில்லை. கடவுள் போல வந்து அந்த பெண் என் மகனை காப்பாற்றி இருக்கிறார். அவர் மட்டும் இல்லை என்றால் என் மகனை இழந்திருப்போம்" என்று பிபிசி மராத்தி சேவையிடம் அந்த பெண் தெரிவித்தார்
தினமும் மதிய வேளையில் இந்த சிறுவன் கோயில் பகுதியில் விளையாடுவான். இது அமல் தோரின் சாராய தொழிலுக்கு பாதகமாக இருந்திருக்கிறது. இதன் காரணமாக அந்த சிறுவனை அமல் தோர் தண்டித்திருக்கலாம்" என்கிறார் திலீப்.
இந்த வழக்கை விசாரிக்கும் பர்மேஷ் அகாசே இதனை மறுக்கிறார்.
சட்டத்திற்கு புறம்பான எந்த தொழிலும் அந்த கோயில் வளாகத்தில் நடைபெறவில்லை. இந்த வழக்கில் சாதிய பிரச்சனை எதுவும் இருப்பதாக தெரியவில்லை என்கிறார் பர்மேஷ்.
இந்த சிறுவன் எதையாவது திருடி இருக்கலாமென அந்த நபர் நினைத்திருக்கலாம். அதனால் விளையாட்டிற்காக இதனை செய்திருக்கலாம் என்கிறார் பர்மேஷ்.
ஆர்யனின் குடும்பம் மிகவும் ஏழ்மையான குடும்பம். தினக்கூலியில் வரும் வருமானத்தை வைத்தே அவர்கள் குடும்பத்தை நடத்துகிறார்கள்.
பல அமைப்புகள் இந்த வழக்கை தீவிரமாக விசாரிக்க கோரி கோரிக்கை வைத்துள்ளன.
உரிய நடவடிக்கை கோரி பீம் டைகர் சேனா எனும் அமைப்பு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளது.
இதற்கு முன்பும் அந்த கோயில் அருகே விளையாடிய குழந்தைகள் தாக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால், மனிததன்மையற்ற முறையில் இவ்வளவு மோசமாக யாரும் தாக்கப்படவில்லை.
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
திட்டமா?
'நீங்களே துார் வாரினதா பேர் வாங்க திட்டமா?
''என்னது, ஏரியை துார் வாரப் போறீங்களா... உங்களுக்கு நிதி எங்கேயிருந்து வருது...? 'பேங்க் ஸ்டேட்மென்ட்' இருக்கா... 'பிளான்' வச்சிருக்கீங்களா... கம்பெனி ஸ்பான்சர்னா, அந்த நிதியை எங்கக்கிட்டே கொடுங்க... நாங்க, 'டெண்டர்' விட்டு,ஏரியை துார் வாரிக்கிறோம்...''- ஏரியை துார் வார, அனுமதி கோரிச் சென்ற, நலச் சங்கத்தினரை, சரமாரியாக கேள்வி கேட்டு விரட்டியுள்ளார், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர், ராதாகிருஷ்ணன்.
[color][font]
காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டுக்கு முன் உள்ளது, மறைமலைநகர். இங்கு, 120 ஏக்கரில், மின்னைக்கரை பெரிய ஏரி உள்ளது. அப்பகுதியின் நிலத்தடி நீராதாரமாக விளங்கிய ஏரி, தற்போது வறண்டு கிடக்கிறது.அரசே, பள்ளி கட்டடம், பஸ் நிறுத்தம் அமைக்க ஆக்கிரமித்து உள்ளது. தனியார் சிலரும் ஆக்கிரமித்ததால், தற்போது, ஏரியின் பரப்பளவு, 80 ஏக்கராக குறுகிவிட்டது.
குடிக்க தண்ணீரில்லை; நிலத்தடி நீரும் கிடைக்காததால், மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எதிர்காலத்தில் இதுபோன்ற பிரச்னை வராமல் தடுக்க, ஏரியை துார் வாரி, ஆழப்படுத்துவது தான் சரியாக இருக்கும் என, மறைமலைநகர் எக்ஸ்னோரா அமைப்பினர் முடிவுசெய்தனர்.
ஒரே நிபந்தனை
இதையடுத்து, நேற்று முன்தினம், காஞ்சிபுரம் கலெக்டர், பொன்னையாவைச் சந்தித்து, 'களமிறங்குவோம் நமக்கு நாமே' என, சங்கம் சார்பில், ஏரியை துார் வார அனுமதி கோரினர்.''சபாஷ், நல்ல முயற்சி; சிறப்பாக செய்யுங்கள். எங்களுக்கு ஒரே நிபந்தனை தான். எக்காரணம்
கொண்டும், ஏரியில் எடுக்கப்படும் மண், வெளியில் போகக்கூடாது. அப்படி ஏதாவது நடந்தால், என்னிடம் வரக்கூடாது; மற்றபடி ஏதுமில்லை. ''நீங்கள், ஊரக வளர்ச்சித் துறையில், திட்ட அலுவலரை சந்தியுங்கள். நான் அனுமதி தரச் சொல்கிறேன்,'' என்று கூறி, அனுப்பி வைத்தார், கலெக்டர் பொன்னையா.
கலெக்டரின் பரிந்துரை கையெழுத்துடன், கலெக்டர் அலுவலகத்தில் உள்ள, ஊரக வளர்ச்சி திட்ட அலுவலர், ஸ்ரீதரைசந்தித்தனர்.''கலெக்டர் அனுமதி தரச் சொல்லி விட்டார்;நானும் பரிந்துரைசெய்கிறேன். நீங்கள் செங்கல்பட்டில் உள்ள, மின்னைக்கரை ஏரியின் பொறுப்பாளரான, செங்கல் பட்டு உதவி பொறியாளர், ராதாகிருஷ்ணனை போய் பாருங்கள்,'' என, அனுப்பி வைத்தார்.
கொதித்த அதிகாரி
கலெக்டரும், அதிகாரியும், 'கிரீன் சிக்னல்' கொடுத்ததால் உற்சாகம் அடைந்த, அமைப்பினர், செங்கல்பட்டில் உள்ள, உதவி செயற்பொறியாளர், ராதாகிருஷ்ணனை சந்தித்தனர். கலெக்டர், திட்ட அதிகாரியின் பரிந்துரை விபரங்களை தெரிவித்து, ஏரியை துார் வார அனுமதி கோரினர். ''என்ன, ஏரியை துார் வாரப் போறீங்களா... உங்களுக்கென்ன அக்கறை?'' எனக் கேட்டார், ராதாகிருஷ்ணன்.
'எங்க ஏரியாவில குடிநீரும் கிடைக்கவில்லை. கொஞ்சம், நஞ்சம் கிடைத்த நிலத்தடி நீரும் கிடைக்காம, திண்டாடுறோம்.'நம்ம பகுதியில இருக்கிற ஏரியை, நாங்களே துார்வாரி, தண்ணீரை தேக்கினா, நிலத்தடி நீராவது கிடைக்குமேங்கிற, எண்ணத்தில தான், துார்வார முன்வந்துள்ளோம்' என, அமைப்பின் நிர்வாகிகள் கூறியுள்ளனர்.''என்னது, எங்க இடத்திலேயே, நீங்க வீடு கட்டுவீங்களா... நல்லாருக்கே... இதுக்கு நாங்களே அனுமதி தரணும்... அப்படித்தானே...
சரி, பிளான் வச்சிருக்கீங்களா... நிதிக்கான ஆதாரம் என்ன? 'பேங்க் ஸ்டேட்மென்ட்' எங்கே?'' என, கேட்டார் ராதாகிருஷ்ணன்.'பேங்க்ஸ்டேட்மென்ட் கிடையாது.நாங்க, ரூ.39 லட்சம் செலவில், துார் வாரப் போறாம்.'இதுக்கு, ஆளாளும் ஒவ்வொரு வேலையை செய்யப் போறாங்க... கம்பெனிகளும் முன் வந்திருக்காங்க... அனுமதி கிடைச்சதும், நீங்க சொல்ற விதிமுறைப்படி, துார் வார வேண்டியது தான்...' என, நிர்வாகிகள் பதில் அளித்து உள்ளனர்.
''நீங்க, 39 லட்சம்ரூபாயில துார் வார போறீங்களா...[/font][/color]
நீங்க ஒண்ணும் துார் வார வேண்டாம். அந்த நிதியை, பொதுப்பணித் துறை அக்கவுன்டில போடுங்க... நாங்க, 'எஸ்டிமேட்' போட்டு, முறையா டெண்டர் விட்டு, துார் வாரிக்கிறோம்...''நாங்க அப்படியே அனுமதி கொடுத்தா... துார் வாரும்போது, மீடியாக்காரங்க கேமராவோட வருவாங்க... 'அரசாங்கமும், அதிகாரிகளும் ஒண்ணும் பண்ணலே... நாங்களே துார் வாருறோம்'னு, பேட்டி கொடுத்து, பேர் வாங்க பார்ப்பீங்க... உங்களுக்கெல்லாம் அனுமதி தர முடியாது.
''நீங்க மனு கொடுத்ததால, ஏ.இ., ஒருத்தரை, ஏரியாவ ஆய்வு செய்ய அனுப்புறேன்... அவரு ஆய்வு செஞ்சப்புறம், நான் கலெக்டருக்கு பதில் கொடுத்துக்கிறேன்... நீங்க கலெக்டரை போய் பாருங்க... என்கிட்டே, அனுமதி கேட்டெல்லாம் வராதீங்க...,'' என, கழுத்தை பிடித்து தள்ளாத குறையாக,நிர்வாகிகளை விரட்டி அடித்து இருக்கிறார், பொதுப்பணித் துறையின் பொறுப்பான அதிகாரி, ராதாகிருஷ்ணன்.
கமிஷன் கணக்கு
அதிகாரியின் இந்த செயல்பாட்டால், ஏரியை துார்வாரும் உயரிய எண்ணத்தில் சென்ற மறைமலைநகர் எக்ஸ்னோரா அமைப்பினர், நொந்து போய் திரும்பியுள்ளனர். '39 லட்சம் ரூபாய்க்கு டெண்டர் விட்டால், எவ்வளவு கமிஷன்' என, அதிகாரி கணக்கு போட்டிருப் பாரோ என, எண்ணத் தோன்றுகிறது.
'கலெக்டர் உத்தரவிட்டாலும், நான் தான் முடிவு செய்யணும்' என்ற தோரணையில் செயல்படும் ராதாகிருஷ்ணன் போன்ற அதிகாரிகள் இருக்கும் வரை, உயர்நீதிமன்றம் எத்தனை உத்தரவு போட்டாலும், தவித்த வாய்க்கு தண்ணீர் கிடைக்காது என்பது தான் உண்மை
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
உலகக்கோப்பை கிரிக்கெட்: 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி
பர்மிங்காம்,
உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழாவில் பர்மிங்காமில் இன்று நடந்த 25-வது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து-தென்ஆப்பிரிக்க அணிகள் மோதின.
டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார். மழையின் காரணமாக ஆட்டம் 49 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இதனையடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி 49 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 241 ரன்கள் எடுத்தது. தென் ஆப்பிரிக்க அணியின் சார்பில் அதிகபட்சமாக ரஷி வான்டெர் துஸ்சென் 67(64) ரன்களும், ஹசிம் அம்லா 55(83) ரன்களும் எடுத்தனர். நியூசிலாந்து அணியின் சார்பில் அதிகபட்சமாக லோக்கி பெர்குசன் 3 விக்கெட்டுகளும், கிரான்ட்ஹோம், மிட்செல் சான்ட்னெர், டிரண்ட் போல்ட் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இதன்மூலம் நியூசிலாந்து அணிக்கு 242 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
பின்னர் 242 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணியின் சார்பில் மார்ட்டின் கப்தில் மற்றும் காலின் முன்ரோ ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். இதில் காலின் முன்ரோ 9(5) ரன்களில் வெளியேறினார். அடுத்ததாக சிறிது நேரம் தாக்குப்பிடித்து ஆடிய கப்தில் 35(59) ரன்களில் ஹிட் விக்கெட் ஆனார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ராஸ் டெய்லர் 1(2) ரன்னும், டாம் லாதம் 1(4) ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்ததாக கேப்டன் கேன் வில்லியம்சனுடன் ஜேம்ஸ் நீஷம் ஜோடி சேர்ந்தார். துவக்கத்தில் இருந்தே பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவந்த கேப்டன் கேன் வில்லியம்சன் 72 பந்துகளில் தனது அரைசதத்தை பதிவு செய்தார்.
இந்த ஜோடியின் நிதானமான ஆட்டத்தால் அணியின் ரன்ரேட் மெதுவாக உயர்ந்தது. அப்போது இந்த ஜோடியில் ஜேம்ஸ் நீஷம் 23(34) ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறினார். அடுத்ததாக கேன் வில்லியம்சனுடன், கிரான்ட்ஹோம் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியின் சிறப்பான ஆட்டத்தால் அணியின் ரன் ரேட் வேகமாக உயர்ந்தது. இடையிடையே தென் ஆப்பிரிக்க வீரர்கள் சில கேட்ச்சுகள் மற்றும் ரன் அவுட் எடுக்கும் வாய்ப்புக்களை தவறவிட்டனர். இதனால் நியூசிலாந்து அணியின் வெற்றிவாய்ப்பு பிரகாசமானது. அதில் அதிரடியாக ஆடிய கிரான்ட்ஹோம் தனது அரைசதத்தை பதிவுசெய்திருந்த நிலையில் 60(47) ரன்களில் ஆட்டமிழந்தார். கடைசி ஓவரில் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேப்டன் கேன் வில்லியம்சன் தனது சதத்தை பதிவு செய்து அசத்தினார்.
இறுதியில் கேன் வில்லியம்சன் 106(138) ரன்களும், மிட்செல் சான்ட்னெர் 2(3) ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முடிவில் நியூசிலாந்து அணி 48.3 ஒவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 245 ரன்கள் எடுத்தது. தென் ஆப்பிரிக்க அணியின் சார்பில் அதிகபட்சமாக கிரிஸ் மோரிஸ் 3 விக்கெட்டுகளும், பெலக்வாயோ, நிகிடி மற்றும் ரபடா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஆட்டத்தில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றிபெற்றது.
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
ஊட்டியில் இரு மலைகள் இடையே அனுமதியின்றி தடுப்பணை கட்டும் ரியல் எஸ்டேட் நிர்வாகம்
இரு மலைகள் இடையே அனுமதியின்றி கட்டப்படும் தடுப்பணை
உதகை அருகே தனியார் எஸ்டேட்டில் அனுமதியின்றி ஓடையை மறித்து இரு மலைகளிடையே எஸ்டேட் நிர்வாகம் தடுப்பணை கட்டி வருகிறது. இதனால், விவசாயம் பாதிக்கப்படும் என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் உதகை அருகேயுள்ளது தேவர்சோலை கிராமம். தேயிலைத் தோட்டங்கள் நிறைந்த இப்பகுதியில், தேயிலைக்குப் போதிய விலை இல்லாததால், பலர் தங்களின் தேயிலைத் தோட்டங்களை விற்பனை செய்து வருகின்றனர். ரியல் எஸ்டேட் அதிபர்கள், இப்பகுதிகளில் உள்ள தேயிலைத் தோட்டங்களை வாங்கி, அவற்றை பிளாட் போட்டும், தங்கும் விடுதிகள் கட்டியும் விற்கின்றனர்
இந்நிலையில், இப்பகுதியில் தேயிலைத் தோட்டத்தை வாங்கியுள்ள ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்று, அப்பகுதியில் விடுதிகள் கட்டி வருகிறது. மேலும், அப்பகுதியை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக அங்குள்ள ஓடையை மறித்துத் தடுப்பணை கட்டி, நீர்த் தேக்கம் அமைக்கவும், அதில் படகு சவாரி விடவும் முடிவு செய்துள்ளது.
அதற்கான ஆயத்தப்பணிகள் நடந்து வருகின்றன. அங்குள்ள ஓடையை மறித்து தற்போது தடுப்பணை கட்டுமானப் பணிகள் நடந்து வருகிறது. அப்பணிகள் 50 சதவீதத்துக்கு மேல் முடிந்துள்ளன.
இந்நிலையில், இந்த தடுப்பணை கட்டி முடிக்கப்பட்டால், ஓடையின் கீழ்ப்புறம் உள்ள விவசாய நிலங்களுக்கு தண்ணீர் கிடைக்காமல், விவசாயம் செய்ய முடியாது என விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
அவர்கள் கூறும் போது, ''தேவர்சாலை பகுதியில் உள்ள இயற்கை நீரூற்றுகள் தண்ணீருக்கான ஆதாரம். குடிநீர் மற்றும் விவசாயத்துக்கு இந்த நீரூற்றுகளையே நம்பியுள்ளோம். இந்நிலையில், தனியார் எஸ்டேட் நிர்வாகம் நீரோடையின் குறுக்கே தடுப்பணை கட்டி வருகிறது. இந்த அணை கட்டி முடிக்கப்பட்டால், எஸ்டேட்டின் கீழ்ப்புறம் உள்ள விவசாய நிலங்களுக்குத் தண்ணீர் கிடைக்காது. இதனால், அந்த நிலங்களில் விவசாயமும் செய்ய முடியாது. ஏற்கெனவே கோடை காலத்தில் நீரோடை வறண்டு விடுவதால், விவசாயம் செய்ய முடிவதில்லை.
உயர் நீதிமன்றம் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், இங்கு நீதிமன்ற உத்தரவைக் காற்றில் பறக்கவிட்டு, ஓடையை மறித்துத் தடுப்பணை கட்டப்படுவது வேடிக்கையாக உள்ளது. அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால் தடுப்பணை கட்டி முடிக்கப்படும் நிலையில் உள்ளது. இதை அரசு அதிகாரிகள் கண்டுகொள்ளவே இல்லை'' என்றனர்.
அனுமதி பெறாமல் கட்டப்படும் தடுப்பணை
ஓர் அணையைக் கட்ட மாவட்ட நிர்வாகம் மட்டுமின்றி, சுற்றுச்சூழல் துறையினரிடம் அனுமதி பெற வேண்டும். அரசு தடுப்பணை கட்ட வேண்டுமென்றாலும் பல்வேறு நிபந்தனைகள் உள்ளன. குறிப்பாக, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் அனுமதி பெற வேண்டும். ஆனால், தனியார் தேயிலைத் தோட்டத்தில் நீரோடையை மறித்து இரு மலைகளுக்கு நடுவே பிரம்மாண்ட அணை கட்டி வருவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தடுப்பணை கட்ட அனுமதி பெறப்படவில்லை என மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார். அவர் கூறும் போது, ''தேவர்சோலை பகுதியில் தடுப்பணை கட்ட யாரும் எவ்வித அனுமதியும் பெறவில்லை. கோட்டாட்சியரிடம் அப்பகுதியை ஆய்வு செய்து, அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ளேன். அந்த அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
[img=0x0]https://makkalkural.net/news/wp-content/uploads/2019/06/20pic8.jpg[/img]
போஸ்டர் செய்தி
கேப்டன் வில்லியம்சன் அபார சதம்: நியூசிலாந்து அணிக்கு ‘திரில்’ வெற்றி பரிதாப நிலையில் தென் ஆப்பிரிக்க அணி
உலக கோப்பை கிரிக்கெட்டில் நேற்று நடந்த ஆட்டத்தில் நியூசிலாந்து அணி தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி 4-வது வெற்றியை பெற்றது. இந்த தோல்வியின் மூலம் தென்ஆப்பிரிக்க அணி ஏறக்குறைய அரை இறுதி வாய்ப்பை இழந்து விட்டது.
பிர்மிங்காமில் நேற்று நடந்த 25-வது லீக் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா-–நியூசிலாந்து அணிகள் மோதின. முந்தைய நாள் இரவு பெய்த மழை காரணமாக ஆடுகளம் ஈரப்பதமாக இருந்ததால் ஆட்டம் 1½ மணி நேரம் தாமதமாக தொடங்கியது. இதனால் ஒரு ஓவர் குறைக்கப்பட்டது.
‘டாஸ்’ ஜெயித்த நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் முதலில் தென்ஆப்பிரிக்காவை பேட் செய்ய அழைத்தார். இந்த போட்டியில் கட்டாயம் வென்றாக வேண்டிய நிலையில் அந்த அணி ஆட்டத்தை துவங்கியது. தொடக்க ஆட்டக்காரரும், விக்கெட் கீப்பருமான குயின்டான் டி காக்குக்கு 5 ரன்களில் பவுல்டின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். இதையடுத்து அம்லாவுடன் கேப்டன் டு பிளிஸ்சிஸ் கைகோர்த்தார். நியூசிலாந்து வீரர்களின் பந்து வீச்சு அபாரமாக இருந்ததால் தென்ஆப்பிரிக்க வீரர்களால் ரன்களை வேகமாக குவிக்க முடியவில்லை. அணியின் ஸ்கோர் 59 ரன்களாக உயர்ந்த போது டு பிளிஸ்சிஸ் 23 ரன்னில் பெர்குசன் பந்து வீச்சில் க்ளீன் போல்டு ஆனார். 25.2 ஓவர்களில் அந்த அணி 100 ரன்களை தொட்டது. மறுமுனையில் அரைசதம் எட்டிய அம்லா 55 ரன்களில் சான்ட்னெரின் சுழலில் சிக்கினார். பின்னர் மர்கிராம் (38), டேவிட் மில்லர் (36) பொறுப்புடன் ஆடி அணிக்கு ரன்களை சேர்த்து ஆட்டமிழந்தனர். நிர்ணயிக்கப்பட்ட 49 ஓவர்களில் தென்ஆப்பிரிக்க அணி 6 விக்கெட் இழப்புக்கு 241 ரன்கள் சேர்த்தது. வான்டெர் துஸ்சென் 64 பந்துகளில் 67 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார். நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் பெர்குசன் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
அடுத்து 242 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிய நியூசிலாந்து அணியும் ஆரம்பத்தில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. காலின் முன்ரோ 9 ரன்னிலும், மார்ட்டின் குப்தில் 35 ரன்னிலும், ராஸ் டெய்லர், டாம் லாதம் தலா ஒரு ரன்னிலும், ஜேம்ஸ் நீஷம் 23 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதற்கு மத்தியில் கேப்டன் கேன் வில்லியம்சன் மட்டும் ஒரு முனையில் நிலைத்து நின்று ஆடினார். அவருடன் ஜோடி சேர்ந்த கிரான்ட்ஹோம் 60 ரன்னில் கேட்ச் கொடுத்தார்.
கடைசி ஓவரில் நியூசிலாந்தின் வெற்றிக்கு 8 ரன் தேவைப்பட்டது. பரபரப்பான கடைசி ஓவரை பெலக்வாயோ வீசினார். இதில் முதல் பந்தில் சான்ட்னெர் ஒரு ரன் எடுத்தார். அடுத்த பந்தை எதிர்கொண்ட வில்லியம்சன் அதை சிக்சருக்கு பறக்கவிட்டு தனது 12-வது சதத்தை எட்டினார். அதே சமயம் உலக கோப்பையில் அவர் அடித்த முதல் சதமாகும். அடுத்த பந்தை பவுண்டரிக்கு அனுப்பி வெற்றிக்கு வித்திட்டார்.
நியூசிலாந்து அணி 48.3 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 245 ரன்கள் சேர்த்து 4 விக்கெட் வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றி பெற்றது. வில்லியம்சன் 106 ரன்களுடனும், சான்ட்னெர் 2 ரன்னுடனும் அவுட் ஆகாமல் இருந்தார். 4-வது வெற்றியை பெற்ற நியூசிலாந்து புள்ளிப் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது.
இந்த தோல்வியின் மூலம் தென்ஆப்பிரிக்க அணியின் உலக கோப்பை கனவு ஏறக்குறைய முடிந்து போய் விட்டது என்றே கூறலாம். 6-வது லீக்கில் ஆடிய தென்ஆப்பிரிக்க அணிக்கு இது 4-வது தோல்வியாகும். 3 புள்ளியுடன் உள்ள இந்த அணி எஞ்சிய 3 ஆட்டத்தில் வெற்றி பெற்றாலும் அரை இறுதிக்கு தகுதி பெறுமா என்பது சந்தேகத்திக்குரியது.
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
20-06-2019, 06:30 PM
(This post was last modified: 20-06-2019, 06:30 PM by johnypowas. Edited 1 time in total. Edited 1 time in total.)
கணவர் பாகிஸ்தானுக்கு ஆடுவதனாலேயே கடும் விமர்சனங்களுக்கு ஆளாகிறார்: சானியா மிர்சாவுக்காக வருந்தும் ஷோயப் அக்தர்
ஒவ்வொரு முறையும் பாகிஸ்தான், இந்திய அணிகள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் ஆடும்போதெல்லாம் சானியா மிர்சாவை சமூகவலைத்தளவாசிகள் நாகரிகமின்றி விமர்சித்து வருகின்றனர், பாவம் சானியா மிர்சா என்று ஷோயப் அக்தர் நெட்டிசன்களை கண்டித்ததோடு சானியா மிர்சாவுக்காக வருந்தவும் செய்துள்ளா
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
பள்ளிகளில் வாரத்தில் ஒரு நாள் யோகா பயிற்சி.. இந்தி குறித்த கேள்வியால் தர்மசங்கடமான செங்கோட்டையன்
சென்னை: இந்தி ஆட்சி மொழி என 7ம் வகுப்பு பாட புத்தகத்தில் இருக்கிறேதே என செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, கல்வி அமைச்சர் செங்கோட்டையன், இருமொழி கொள்கை தான் அரசின் கொள்கை என மழுப்பலாக பதில் அளித்துவிட்டு தப்பினார். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர். வாரத்தில் ஒரு நாள் பள்ளிகளில் யோகா கட்டாயமாக்கப்படும் என்று கூறினார்.
இன்று சர்வதேச யோகா தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. சென்னை நந்தனத்தில் நடந்த யோகா பயிற்சியில் பள்ளி மாணவ மாணவிகளுடன் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்றார்.
அதன்பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "மதங்களுக்கு அப்பாற்பட்டது யோகா, யோகா செய்வதன் மூலம் அமைதியும் உடல் ஆரோக்கியமும் கிடைக்கும். மாணவர்கள் சிந்தனைகளை மேம்படுத்தவும் அறிவுக்கூர்மையுடன் விளங்கவும் யோகா பெரிதும் உதவுகிறது.
அனைத்து பள்ளிகளிலும் வாரத்திற்கு ஒரு நாள் யோகா பயிற்சி திட்டம் அமல்படுத்தப்படும். பள்ளிகளில் யோகா பயிற்சி வழங்க 13 ஆயிரம் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளார்கள்
அரசு பள்ளிகளை பொறுத்தவரையில் அங்கு விளையாட்டு மைதானங்களின் ஓரங்களில் குறைந்தது 3 அடி ஆழத்தில் மழைநீர்சேகரிப்பு அமைப்புகளை ஏற்படுத்த திட்டமிடடுள்ளோம். அதன்படி பள்ளிகளில் தன்னார்வலர்கள், தொழில்அதிபர்கள், முன்னாள் மாணவர்கள் ஒருங்கிணைந்து பல பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இதுவரை 102 கோடி மதிப்பிலான உள்கட்டமைப்பு பணிகளை அவர்களுடன் மேற்கொண்டு வருகிறோம்" என்றார்.
இந்தி ஆட்சி மொழி என 7ம் வகுப்பு பாடபுத்தகத்தில் இருப்பது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விககு, இருமொழி கொள்கை தான் அம்மாவின் கொள்கை, அதைத்தான் எங்கள் அரசு பின்பற்றி வருகிறது என்றார். ஆனால் இந்தி ஆட்சி மொழி என உள்ளதே என்ற கேள்விக்கு பதிலே அவர் சொல்லாமல் லாவகமாக அங்கிருந்து கிளம்பினார்.
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
தெலுங்கு தேசம் கட்சியின் நான்கு மாநிலங்களவை உறுப்பினர்கள் பாஜகவில் இணைந்தனர்
பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா... மற்றும் தெலுங்கு தேசம் கட்சியிலிருந்து பாஜகவில் இணைந்த எம்.பிக்களுடன். |
தெலுங்கு தேசம் கட்சியின் 4 மாநிலங்களவை உறுப்பினர்கள் தங்கள் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தனர். இதில் முன்னாள் மத்திய இணை அமைச்சரும் நாடாளுமன்றக் கட்சித் தலைவருமான ஒய்.எஸ்.சவுத்ரியும் அடங்குவார். இதனால் மாநிலங்களவையில் தெலுங்கு தேசம் எம்.பி.க்களின் எண்ணிக்கை 2 ஆகக் குறைந்தது
டி.ஜி.வெங்கடேஷ், சவுத்ரி, ஜி.மோகன் ராவ், மற்றும் சி.எம்.ரமேஷ் ஆகியோர் பாஜவில் சேர்வதை உறுதி செய்துள்ளனர். வெங்கடேஷ் ஏற்கெனவே அகிலபாரதிய வித்யா பரிஷத்தில் உறுப்பினராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சவுத்ரி இது தொடர்பாக கையெழுத்திட்ட தீர்மானத்தில், “நரேந்திர மோடிஜியின் அபாரமான தலைமைத்துவ திறமைகள் மற்றும் நாட்டின் நலன்களுக்கான வளர்ச்சிக் கொள்கைகளினால் ஊக்கம் பெற்று உடனடியாக பாஜகவில் இணைய திட்டமிட்டோம்” என்று கூறப்பட்டுள்ளது.
அரசியலமைப்புச் சட்ட விதிகளின் 10வது ஷெட்யூலின் படி நாடாளுமன்றக் கட்சியின் மூன்றில் 2 பங்கினர் கட்சி மாறினால் உறுப்பினர் பதவியை இழக்க மாட்டார்கள் என்று கூறுகிறது. ஆகவே கட்சித்தாவல் தடைச்சட்டம் இங்கு வராது என்று தீர்மானத்தில் இவர்கள் கூறியுள்ளனர்.
பாஜக செய்தித் தொடர்பாளர் ஜி.வி.எல்.நரசிம்மராவ் கூறும்போது, “தெலுங்கு மாநிலங்களின் பல்வேறு கட்சிகளின் பல தலைவர்கள் பாஜகவில் இணைய விரும்புகின்றனர். இவர்களை வரவேற்கிறோம்” என்றார்.
அயல்நாட்டில் இருக்கும் சந்திரபாபு நாயுடு, சவுத்ரியிடம் பேசி கட்சி மாற வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதாகவும் ஆனால் தேர்தல் தோல்விகளுக்கு பொறுப்பேற்பின்மை காரணமாக கட்சியை உதறுவதாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
`கேரள அரசின் உதவியை மறுத்ததா தமிழகம்?' - பினராயி விஜயன் பதிவுக்கு தமிழக அரசு விளக்கம்!
தமிழகத்துக்கு ரயில் மூலமாக 20 லட்சம் லிட்டர் தண்ணீர் வழங்கத் தயார் எனக் கேரள அரசு அறிவித்த நிலையில் அதை வேண்டாம் எனத் தமிழகம் மறுத்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை உட்பட தமிழகத்தில் பல்வேறு நகரங்களில் தண்ணீர்ப் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. சாமானியர்கள் குடிநீர் கிடைக்காமல் அலைபாய்ந்துகொண்டிருக்கிறார்கள். கால்நடைகள் செத்து மடிகின்றன. சென்னையின் தண்ணீர் விநியோகத்தில் மிகவும் முக்கியமானவையாக இருந்த நான்கு ஏரிகளும் வறண்டுவிட்டன. சோழவரம், போரூர், செம்பரம்பாக்கம் போன்ற ஏரிகள் கடந்த ஆண்டின்போது இதே நேரத்திலிருந்த தண்ணீரின் அளவில், நூற்றில் ஒரு பங்கு அளவுதான் தற்போது இருக்கிறது. ஏரிகளின் தற்போதைய அளவு, அவற்றின் மொத்த கொள்ளளவில் 0.2 சதவிகிதம் மட்டும்தான். ஆனால், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் என ஆளும் கட்சியைச் சார்ந்த பலரும் `தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் இல்லை’ என்றே கூறி வருகின்றனர்.
மேலும், சென்னையின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்ய வெளியில் இருந்த தண்ணீர் கொண்டுவரப்படும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் இன்று மதியம் தமிழகத்துக்கு ரயில் மூலமாக 20 லட்சம் லிட்டர் தண்ணீர் வழங்கத் தயார் எனக் கேரள அரசு அறிவித்தது. திருவனந்தபுரத்திலிருந்து 20 லட்சம் லிட்டர் நீரை ரயில் மூலம் சென்னைக்குக் கொண்டு செல்ல கேரள முதல்வர் பினராயி உத்தரவு பிறப்பித்ததாகச் செய்திகள் வெளியாகின. சென்னையில் நிலவி வரும் வறட்சியைக் கருத்தில் கொண்டு இந்த முயற்சியைக் கேரள அரசு செய்தது. கேரள அரசு உதவ முன்வந்தபோதும் தமிழக அரசு வேண்டாம் என மறுத்ததாகக் கேரள முதல்வர் பினராயி விஜயன் தகவல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்த அவர், ``கடுமையான குடிநீர் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்துக்குக் குடிநீர் வழங்க மாநில அரசு முன்வந்தது. இது தொடர்பாகத் தமிழக முதல்வர் அலுவலகத்தைத் தொடர்புகொண்டு தெரிவித்தபோது தற்போது இதற்கான தேவை இல்லை எனப் பதில் கொடுத்தனர். திருவனந்தபுரத்திலிருந்து 20 லட்சம் லிட்டர் நீரை ரயில் மூலம் சென்னைக்குக் கொண்டு செல்ல கேரளா முயன்றது. சென்னையில் உள்ள முக்கிய நீர் நிலைகளும் வறண்டு வருகின்றன. வறட்சி காரணமாக விவசாயமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இந்தச் சூழ்நிலையில்தான் கேரள அரசு உதவ முன்வந்தது" என அவர் பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவு தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் குடிநீர் பஞ்சம் நிலவி வரும் வேளையில் கேரளம் குடிநீர் தர முன்வந்தும் அரசு அதை மறுத்தது தற்போது புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. எனினும், தமிழக அரசு இதுகுறித்து எந்த ஒரு பதிலும் இதுவரை தெரிவிக்கவில்லை.
இதற்கிடையே, தற்போது இந்த குற்றச்சாட்டை தமிழக அரசு மறுத்துள்ளது. இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள ஊரக வளர்ச்சித்துறை அமைச்சகம், ``கேரள அரசின் உதவிக்கு தமிழக அரசு சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுளள்து. சென்னையின் ஒரு நாள் குடிநீர் தேவை என்பது 525 MLD. தற்போது கேரளாவில் இருந்து ஒருமுறை ரயில் மூலம் அனுப்பப்படும் 2 MLD நீரை இங்கேயே சமாளித்து விடுகிறோம். இதனால் தான் தேவை ஏற்படின் கேரள அரசின் உதவியை நாடுவோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரள அரசு தினமும் 2 MLD நீர் அனுப்பினால் உதவிகரமாக இருக்கும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். இதுகுறித்து நாளை நடைபெறும் தண்ணீர் தொடர்பான கூட்டத்தில் விவாதிக்கப்படும். எனவே தமிழக முதல்வர் தண்ணீர் உதவியை மறுத்ததாக கூறப்படும் தகவல் உண்மையில்லை
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
வீடு, காலேஜ் எல்லாமே ஏலம் போற அளவுக்கு... விஜயகாந்த் குடும்ப பேராசையால் வந்த வினை!
சென்னை: வாங்கிய கடனுக்காக ஏலத்துக்கு வந்த விஜயகாந்தின் சொத்து..! பரபரப்பு தகவல்கள்
சென்னை: தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்தின் சாலிகிராமம் வீடு, ஆண்டாள் அழகர் கல்லூரி என முக்கிய சொத்துகளை வாங்கிய கடனுக்காக ஏலம் விடப்போவதாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அறிவித்திருப்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
விஜயகாந்த்துக்கா இந்த நிலைமை என்பதுதான் அனைவரின் அதிர்ச்சியும். பத்திரிகைகளில் சொத்துக்கள் ஏலம் வருவதாக வெளியான செய்தியைப் பார்த்து அரசியல் வட்டாரமே ஆடிப் போய்க் கிடக்கிறது.
தேர்தல் அரசியலுக்கு தொண்டர்களின் ஏகோபித்த ஆதரவுடன் நுழைந்தவர் விஜயகாந்த். பிரதான அரசியல் கட்சிகளாக அதிமுகவையும் திமுகவையும் மிரட்டும் வகையில் வாக்கு சதவீதத்தைப் பெற்றார்.
கருணாநிதி உயிருடன் இருந்த போதே திமுகவை எதிர்க்கட்சியாகக் கூட வெற்றி பெறவிடாமல் சாதித்துக் காட்டியவர் விஜயகாந்த். அப்போது அவரது கட்சியில் செலவு செய்ய 2-ம் கட்ட தலைவர்கள் ஏராளமானோர் இருந்தனர்.
பேராசைதான்
ஆனால் விஜயகாந்தின் ஒட்டுமொத்த குடும்பமும் இந்த வெற்றியை அறுவடை செய்ய களமிறங்கியதன் விளைவுதான் இன்றைய இத்தகைய நிலைமைக்கு முதன்மை காரணம். விஜயகாந்துக்கு இயல்பாகவே இருந்த செல்வாக்கு தங்களுக்கும் இருக்கிறது என காட்டுவதற்கு 2-ம் கட்ட தலைவர்களை பணத்தை வாரி இறைக்கச் சொன்னார்கள்.
[color][font]
தப்பி ஓடிய நிர்வாகிகள்
அவர்களோ ஆளைவிட்டால் போதும் என தப்பி ஓடி பிற கட்சிகளிடம் சரணடைந்தனர். ஒருகட்டத்தில் 2-ம் கட்டத் தலைவர்கள் யாருமே இல்லாத ஒரு கட்சியாக நிலைகுலைந்து போனது தேமுதிக. அப்போது பிரேமலதாவும் சகோதரர் சுதீஷும்தான் கட்சியில் இருந்தனர்.[/font][/color]
[color][font]
மகனின் பந்தாவுக்கும் செலவு
இவர்கள் போதாது என்று மகனும் கட்சிக்காக களப்பணியாற்றுகிறேன் என களமிறங்கினார். விஜயகாந்தைப் போல தங்களுக்கும் செல்வாக்கு இருக்கிறது என்பதை வெளிப்படுத்த பணத்தை வாரி இறைத்து பில்டப் கொடுத்து பார்த்தனர். மகனுக்கு 100 கார்கள் அணிவகுப்பு ஏற்பாடு செய்தனர்.[/font][/color]
[color][font]
கூட்டணி பேரம்
இப்படி பணத்தை தண்ணீராய் செலவு செய்ய இருக்கிற வீடு, கல்லூரி என அனைத்தையும் அடமானம் வைத்தனர். எப்படியும் தேர்தலின் போது கூட்டணி தலைமையிடம் இருந்து பெரும் தொகை கிடைக்கும். அதைவிட்டு மீட்டுவிடலாம் என்கிற மனக்கணக்குதான். இதனால் யார் அதிகம் தருவார்களோ அவர்களோடு கூட்டணி என சந்தை கடையாக விரித்து வைத்தது தேமுதிக.
[/font][/color]
[color][font]
அதிமுக டோக்கன்
ஆனால் கடைவிரித்தான் கொள்வாரில்லை கதையானதால் அதிமுகவிடம் சரணடைந்தது. அதிமுகவும் கணிசமான ஒரு தொகையை பேசி டோக்கனான சின்ன தொகையை தந்தது. ஆனால் தேமுதிகவை அதன்பிறகு அதிமுக கண்டுகொள்ளவே இல்லை.[/font][/color]
குடும்பம்தான் காரணம்
சின்ன தொகையை வைத்து ஒன்றும் செய்ய முடியாமல் போக விழிபபிதுங்கி இப்போது பரிதாபமாக விஜயகாந்த் சினிமாவில் கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்த சாலி கிராமத்து வீடு, ஆண்டாள் அழகர் கல்லூரி ஆகியவற்றை ஏலத்தில் பறிகொடுக்கும் நிலைமை ஏற்பட்டிருக்கிறது. நேர்மையான, வெள்ளந்தி மனிதரான விஜயகாந்தை முன்வைத்து அவரது குடும்பம் நடத்திய தரகு அரசியலே இந்த நிலைமைக்கு காரணம் என்பதை தமிழகமே நன்கு அறியும்... அதனால்தான் அதிர்ச்சியும் அதிகமாக இருக்கிறது.
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
`குளிக்க 2 வாளி, குடிக்க 4 லிட்டர் தண்ணீர்தான்!'- முதல்வர் எடப்பாடி விளக்கம்
சென்னை உட்பட தமிழகத்தின் பல பகுதிகளிலும் வெயில் வாட்டி வருகிறது. இதனால் நிலத்தடி நீர் குறைந்து ஏரி, குளங்களிலும் தண்ணீர் இல்லாமல் போய் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. சென்னை போன்ற பெரு நகரங்களில் உள்ள மக்கள் ஒரு குடம் குடிநீருக்காக கடும் சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர். இந்த நிலையில், இன்று தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர், ``தினமும் ஜோலார்பேட்டையிலிருந்து ரயில் மூலமாகச் சென்னைக்குத் தண்ணீர் கொண்டுவருவது குறித்து ஆலோசனை நடத்தினோம். அதற்காக 65 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வீராணம் ஏரியிலிருந்து தண்ணீர் கொண்டுவர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னையில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறையைச் சமாளிக்க முடிந்தவரை துரித நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. அதிக தண்ணீர் பிரச்னைகள் உள்ள பகுதிகளில் கூடுதல் லாரிகள் இயக்கப்பட்டு தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
சென்னையைப் பொறுத்தவரை தினமும் 9,800 லாரிகள் தண்ணீர் சப்ளை செய்து வருகின்றன. வருடம்தோறும் ஆந்திராவின் கிருஷ்ணா நதியில் இருந்து தமிழகத்துக்கு 12 டி.எம்.சி தண்ணீர் வரும். ஆனால், இந்த வருடம் 2 டி.எம்.சி மட்டுமே வந்துள்ளது. அவர்களிடமும் போதுமான தண்ணீர் இல்லை எனக் காரணம் தெரிவித்துவிட்டனர். கிராமப் பகுதிகளிலும் தேவையான தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. குவாரிகளில் இருந்தும் தண்ணீர் எடுத்து வழங்கப்பட்டு எங்களால் முடிந்த அளவு தண்ணீர் பிரச்னையைச் சரிசெய்து வருகிறோம்.
கேரள முதல்வர் ஒரு நாளுக்கு மட்டும்தான் 20 லட்சம் லிட்டர் தண்ணீர் வழங்குவதாகக் கூறினார். தினமும் வழங்குவதாகக் கூறவில்லை. தண்ணீர் தருவதாக கூறிய முதல்வருக்கு நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். ஆனால், தினமும் 20 லட்சம் லிட்டர் தண்ணீர் கொடுத்தால் தமிழக மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதற்காக நான் கேரள முதல்வருக்குக் கடிதம் எழுதவுள்ளேன்.
என் வீடு மற்றும் அமைச்சர்கள் வீடுகளுக்குத் தினமும் 2 லாரி தண்ணீர் வருவதாகக் கூறுவது தவறான செய்தி. உங்கள் வீட்டுக்கு தண்ணீர் வருவது போலத்தான் அனைவரது வீட்டுக்கும் செல்கிறது. அமைச்சர்கள் வீட்டுக்குத் தண்ணீர் செல்வது இயல்பான ஒன்றுதான். கடந்த 2 மாதமாக என் வீட்டில் நான் மட்டும்தான் வசித்து வருகிறேன். 2 லாரி தண்ணீரை வைத்துக்கொண்டு தனி ஆளாக நான் என்ன செய்யப் போகிறேன். நான் தினமும் 2 வாளி தண்ணீர் பயன்படுத்துவேன், அதிகமாக 4 லிட்டர் தண்ணீர் குடிப்பேன் அவ்வளவுதான்.
எங்களைப் போல அமைச்சர்கள் வீட்டில் ஒரு நாளுக்கு பல பேர் வருவார்கள். அதிகாரிகள், வேலையாட்கள் இருப்பார்கள். உங்களைப் போல பத்திரிகையாளர்களும் தினமும் வருவார்கள். அவர்களுக்குத் தண்ணீர் வழங்க வேண்டும். நீங்கள் என் வீட்டுக்கு வந்து நான் தண்ணீர் வழங்கவில்லை என்றால் வெளியில் வந்து முதல்வர் வீட்டில் ஒரு டம்ளர் தண்ணீர்கூட வழங்கவில்லை என சொல்லக் கூடாது அல்லவா. அதற்காகதான் சற்று கூடுதலாக வருகிறது. 2 லாரி தண்ணீர் வரவில்லை.
ஆன்லைன் மூலம் தண்ணீர் புக் செய்பவர்கள், ஒரே அப்பார்ட்மென்டில் இருந்துகொண்டு 10 லாரி தண்ணீர் கேட்கிறார்கள். ஒருவருக்கே எப்படி அவ்வளவு தண்ணீர் வழங்கமுடியும். மேலும், அவர்கள் எவ்வளவு பணம் கொடுத்தும் தண்ணீர் வாங்கத் தயாராக இருக்கிறார்கள். அதனால்தான் இதைப் பயன்படுத்தி சிலர் அனைவரிடமும் அதிக பணம் வசூலிக்கின்றனர். எங்களிடம் குறிப்பிட்ட அளவிலான லாரிகள் மட்டுமே உள்ளது. அவற்றில் சிலவற்றை நாங்கள் அரசுப் பணிகளுக்காகப் பயன்படுத்திவருகிறோம். அதுபோக மீதமுள்ள லாரிகள்தான் மக்களுக்கு அனுப்பப்படுகிறது. எங்களால் முடிந்த வரை அனைத்து மக்களுக்கு முறையாகத் தண்ணீர் வழங்கி வருகிறோம்” எனக் கூறி முடித்தார்.
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
`அவர் மட்டும் இல்லை என்றால்....!' - சரியான நேரத்தில் குழந்தையின் உயிரைக் காப்பாற்றிய நிருபர்!
பீகார் மாநிலம் முசாஃபர்பூர் மாவட்டத்தில் மூளைக் காய்ச்சலால் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 120-ஐ தொட்டுள்ளது. இப்படியான நிலையில் மூளைக்காய்ச்சலால் அவதிப்பட்ட குழந்தையைச் சரியான சமயத்தில் மருத்துவமனைக்கு கொண்டு சென்று அவரின் உயிரைக் காப்பாற்றியுள்ள நபருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. அமீர் ஹம்சா என்னும் அந்த நபர் பீகார் செய்தி சேனல் ஒன்றின் நிருபர். சமீபத்தில் முசாஃபர்பூர் அருகே உள்ள கிராமத்தின் சாலையோரத்தில் தாய் ஒருவர் மூளைகாய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தையுடன் பரிதாபமாக உட்கார்ந்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு தான் காய்ச்சலுக்குச் சிகிச்சை பெற்றுவந்த அந்தக் குழந்தை காய்ச்சல் குணமானதால் வீடு திரும்பியுள்ளது. வீடு திரும்பியதும் மீண்டும் காய்ச்சல் ஏற்படவே குழந்தையை தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர்.
நீண்ட தூரம் நடந்து வந்தால் என்ன செய்வதென்று தெரியாமல் விழிபிதுங்கிப் போய் உதவியை எதிர்பார்த்து தெருவோரத்தில் உட்கார்ந்து அழுதுகொண்டிருந்துள்ளார் அந்தத் தாய். அப்போது அங்கு இருந்தவர்கள் எல்லாம் அவர்களை வேடிக்கை பார்த்தவாறே இருக்க அந்த வழியாக வந்த நிருபர் அமீர் இதைப் பார்த்ததும் இருவரையும் தன் பைக்கில் ஏற்றிக்கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தார். மருத்துவமனைக்குச் சென்றபிறகு தான் குழந்தையின் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்தது தெரியவந்தது. காய்ச்சல் அதிகமானதால் குழந்தையின் உடல் அதிக வெப்பத்தால் தகித்துள்ளது. சிறிது தாமதமாகியிருந்தாலும் குழந்தையின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கும் என மருத்துவர்கள் விளக்கியதுடன் அந்த நிருபரின் செயலை பாராட்டியுள்ளனர். ``நீண்ட நேரம் சாலையில் உட்காந்திருந்தேன். யாரும் உதவ முன்வரவில்லை.
என்னால் அவ்வளவு தூரம் குழந்தையைத் தூக்கிச்செல்ல முடியவில்லை. சரியான சமயத்தில் வந்து எங்களை ஆஸ்பத்திரிக்குக் கொண்டுவந்தார் அமீர். அவரால் தான் இன்று என் குழந்தை உயிர் பிழைத்துள்ளது" எனக் கண்ணீருடன் கூறியுள்ளார் அந்தப் பெண். ``நான் வேறு ஒரு வேலைக்காக மிஸ்ஹான் பூரா சென்றுகொண்டிருந்தேன். அப்போது தான் சாலையில் தன் குழந்தையுடன் அழுதபடி அந்தத் தாய் உட்கார்ந்திருந்தார். என்னவென விசாரித்த போது குழந்தையின் உடல்நலம் குறித்து கூறினார். இந்த நோய் குறித்து தற்போது அதிகமாகப் பார்த்துவருகிறேன். அதனால் இந்த நோயின் தீவிரம் நன்றாகவே தெரியும். அதனால் தான் இனியும் தாமதிக்கக்கூடாது என எனது பைக்கிலேயே அவர்களை மருத்துவமனைக்கு கூப்பிட்டுச் சென்றேன்" எனக் கூறுகிறார் அமீர். இவர் பாதிக்கப்பட்ட குழந்தையை பைக்கில் அழைத்துச் செல்லும் புகைப்படத்தை அங்கிருந்தவர்கள் வலைதளங்களில் பதிவிட அமீரின் மனிதநேயத்துக்குப் பாராட்டுகள் குவிந்து வருகிறது.
முசாஃபர்பூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் குழந்தைகள் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. இது குறித்து ஆய்வு செய்த எய்ம்ஸ் மருத்துவர்கள் குழுவோ பீகார் மருத்துவர்களுக்கு போதிய திறமை இல்லை எனத் திடுக்கிடும் அறிக்கை கொடுத்துள்ளது. ஸ்ரீ கிருஷ்ணா மருத்துவமனை கல்லூரி, கெஜ்ரிவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைகள் அதிக அளவு உயிரிழந்துள்ளனர். உயிரிழப்பு மூளைக் காய்ச்சல் தான் காரணம் என்றும் தெரிந்த பின்பும் அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுப்பதன்று தெரியாமல் தவித்து வருகிறது. காரணம், இந்த மாதம் மட்டும் முசாஃபர்பூர் பகுதியில் 40 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமாக வெப்பம் நிலவி வருகிறது. ஏற்கெனவே ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகள் இந்த வெப்பத்தைத் தாங்கிக்கொள்ள முடியாமல் உயிரிழக்கும் நிலைக்குச் செல்கின்றனர். இந்தப் பிரச்னை முசாஃபர்பூருக்கு புதியது ஒன்றும் கிடையாது. இது பல வருடங்களாக நடைபெற்றுக்கொண்டுதான் உள்ளது. முசாஃபர்பூர் மாவட்டம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் கோடைக்காலங்களில் அந்த நோய் அதிகம் தாக்கப்படுவது வழக்கமாக உள்ளது.
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
ராமேஸ்வரம் : 55 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன சாலை பாலம்... ஆச்சரியத்தோடு பார்த்து செல்லும் மக்கள்
பதிவு : ஜூன் 22, 2019, 07:53 AM
ராமேஸ்வரம் அருகே 55 ஆண்டுகளுக்கு முன்பு புயலால் காணாமல் போன சாலை பாலத்தை, மக்கள் ஆச்சரியத்தோடு பார்த்து செல்கின்றனர்.
ராமேஸ்வரம் அருகே 55 ஆண்டுகளுக்கு முன்பு புயலால் காணாமல் போன சாலை பாலத்தை, மக்கள் ஆச்சரியத்தோடு பார்த்து செல்கின்றனர். ராமேஸ்வரம் அருகே உள்ள முத்திராயர் சத்திரத்திலிருந்து தனுஷ்கோடி வரை 1964 ஆம் ஆண்டு டிசம்பர் 23 ஆம் தேதிக்கு முன்பு வரை, மிகப் பெரிய சிமெண்ட் குழாய்கள் அமைத்து அதன் மீது கான்கீரிட் சாலை அமைத்து இருபுறமும் கடல் நீர் சென்று வரும் வகையில் பாலம் அமைக்கப்பட்டு போக்குவரத்து நடைபெற்று வந்துள்ளது. இந்த நிலையில் 1964 டிசம்பர் 23 ஆம் தேதி இரவு ஏற்பட்ட பெரும் புயலின் காரணமாக தனுஷ்கோடி நகரமே முற்றிலும் அழிந்தது. மிகப் பெரிய கட்டடங்கள், தேவாலயங்கள், மருத்துவமனை, பள்ளிகள் என அனைத்தும் கடலில் அடித்துச் செல்லப்பட்டது. இதேபோன்று, முத்திராயர் சத்திரம் முதல் தனுஷ்கோடி வரையிலான சாலை பாலமும் கடல் நீரால் முடப்பட்டு, பாலம் இருந்ததற்கான அடையாளமே தெரியாத வகையில் காணப்பட்டது.
இந்நிலையில் கடந்த சில தினங்களாக தனுஷ்கோடி தென் கடல் பகுதியில் பலத்த காற்றால், கடல் சீற்றமாக காணப்படுகிறது. இந்த நிலையில் 55 ஆண்டுகளாக கடலுக்குள் மணல் மூடி கிடந்த பாலத்தை தற்போது தெளிவாகக் காண முடிவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இப்பாலம் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டது எனவும் மக்கள் தெரிவித்தனர்.
ராமேஸ்வரம் அருகே 55 ஆண்டுகளுக்கு முன்பு புயலால் காணாமல் போன சாலை பாலத்தை, மக்கள் ஆச்சரியத்தோடு பார்த்து செல்கின்றனர். ராமேஸ்வரம் அருகே உள்ள முத்திராயர் சத்திரத்திலிருந்து தனுஷ்கோடி வரை 1964 ஆம் ஆண்டு டிசம்பர் 23 ஆம் தேதிக்கு முன்பு வரை, மிகப் பெரிய சிமெண்ட் குழாய்கள் அமைத்து அதன் மீது கான்கீரிட் சாலை அமைத்து இருபுறமும் கடல் நீர் சென்று வரும் வகையில் பாலம் அமைக்கப்பட்டு போக்குவரத்து நடைபெற்று வந்துள்ளது. இந்த நிலையில் 1964 டிசம்பர் 23 ஆம் தேதி இரவு ஏற்பட்ட பெரும் புயலின் காரணமாக தனுஷ்கோடி நகரமே முற்றிலும் அழிந்தது. மிகப் பெரிய கட்டடங்கள், தேவாலயங்கள், மருத்துவமனை, பள்ளிகள் என அனைத்தும் கடலில் அடித்துச் செல்லப்பட்டது. இதேபோன்று, முத்திராயர் சத்திரம் முதல் தனுஷ்கோடி வரையிலான சாலை பாலமும் கடல் நீரால் முடப்பட்டு, பாலம் இருந்ததற்கான அடையாளமே தெரியாத வகையில் காணப்பட்டது.
இந்நிலையில் கடந்த சில தினங்களாக தனுஷ்கோடி தென் கடல் பகுதியில் பலத்த காற்றால், கடல் சீற்றமாக காணப்படுகிறது. இந்த நிலையில் 55 ஆண்டுகளாக கடலுக்குள் மணல் மூடி கிடந்த பாலத்தை தற்போது தெளிவாகக் காண முடிவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இப்பாலம் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டது எனவும் மக்கள் தெரிவித்தனர்.
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
கிளென் மெக்ரா, வாசிம் அக்ரம், முரளிதரன் மாவீரர்கள் சாதனைப் பட்டியலில் இணைந்த மலிங்கா
படம். | ஏ.பி.
இங்கிலாந்துக்கு எதிரான உலகக்கோப்பைப் போட்டியில் அதிர்ச்சி வெற்றி பெற்ற இலங்கை அணிக்கு சூத்ரதாரியாக விளங்கியவர் லஷித் மலிங்கா. இவர் பேர்ஸ்டோ, வின்ஸ், ரூட், பட்லர் ஆகிய இங்கிலாந்து பேட்டிங்கின் முதுகெலும்பை உடைக்க இங்கிலாந்து படுதோல்வியைச் சந்தித்தது.
10 ஓவர் 1 மெய்டன் 43 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய லஷித் மலிங்கா உலகக்கோப்பை சாதனையில் மெக்ரா, முரளிதரன், வாசிம் அக்ரம் ஆகியோருடன் சாதனைப் பட்டியலில்இணைந்தார்.
உலகக்கோப்பைப் போட்டிகளில் 50 விக்கெட்டுகளுக்கும் மேல் வீழ்த்தியவர்கள் பட்டியலில் ஆஸி. மேதை கிளென் மெக்ரா 39 போட்டிகளில் 71 விக்கெட்டுகளுடன் முதலிடம் வகிக்கிறார். முரளிதரன் 40 போட்டிகளில் 68 விக்கெட்டுகள், வாசிம் அக்ரம் 38 போட்டிகளில் 55 விக்கெட்டுகள், அடுத்த இடத்தில் மலிங்கா 26 போட்டிகளில் 51 விக்கெட்டுகள் என்று 4 இடங்களில் சாதனையாளர்களுடன் இணைந்தார் மலிங்கா.
5வது இடத்தில் 49 விக்கெட்டுகளுடன் இலங்கையின் மற்றொரு பவுலர் சமிந்தா வாஸ் உள்ளார். ஆகவே உலகக்கோப்பையில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியதில் முதல் 5 இடங்களில் 3 இடங்கள் இலங்கை பவுலர்களுக்குரியது!! இந்தியாவைப் பொறுத்தவரையில் ஜாகீர் கான், ஸ்ரீநாத் 44 விக்கெட்டுகளுடன் 6 மற்றும் 7ம் இடங்களில் உள்ளனர்.
கடைசியாக இங்கிலாந்து அணி உலகக்கோப்பையில் இலங்கையை வீழ்த்தியது 1999-ல்தான் அதன் பிறகு 2007-ல் 2 ரன்களிலும் 2011-ல் கொழும்புவில் 10 விக்கெட்டுகளிலும், 2015-ல் வெலிங்டனில் 9 விக்கெட்டுகளிலும், 2019-ல் 20 ரன்களிலும் இங்கிலாந்து இலங்கையிடம் தோல்வி தழுவியது குறிப்பிடத்தக்கது.
உலகக்கோப்பைக்கு முன்னதாக படுதோல்விகளை ஒருநாள் போட்டிகளில் சந்தித்து வந்த இரு அணிகளிடம் இந்த உலகக்கோப்பையில் இங்கிலாந்து தோல்வி தழுவியது. ஒன்று பாகிஸ்தான். இந்த அணி 11 ஒருநாள் போட்டிகளில் தோல்விகளுடன் இங்கிலாந்தைச் சந்தித்து வெற்றி கண்டது. அதே போல் இலங்கையிடம் நேற்று தோல்வி தழுவியது.
first 5 lakhs viewed thread tamil
•
|