Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
தமிழகம் முழுவதும் கடந்த ஜனவரி 1 ஆம் தேதியன்று பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தவும் விற்பதற்கும் அரசு தடை விதித்தது. தடையை மீறி பிளாஸ்டிக் பொருட்கள் விற்பதாக புகார் எழுந்துள்ள நிலையில், இன்று முதல் பிளாஸ்டிக்கை விற்பனை செய்வோர் மற்றும் பயன்படுத்துவோரிடம் அபராதம் வசூலிக்கப்பட உள்ளது.
பிளாஸ்டிக்கை சேமித்து வைத்தல், விற்பனை செய்தல் மற்றும் பகிர்ந்தளித்தல் போன்ற செயல்களில் ஈடுபடுவோர் முதல் முறை பிடிப்பட்டால் 25 ஆயிரமும், இரண்டாவது முறை பிடிப்பட்டால் ஐம்பதாயிரமும், மூன்றாவது முறை சிக்கினால் ஒரு லட்ச ரூபாயும் அபராதமாக விதிக்கப்பட உள்ளது. நான்காவது முறையாக பிடிபட்டால், விற்பவரின் கடை உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் அரசு தரப்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
அடுத்தடுத்து 100 குழந்தைகள் பலி; பீகாரை புரட்டி போட்ட கொடூர சோகம்!
பீகார் மாநிலத்தில் காய்ச்சல் காரணமாக குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்தடுத்து 100 குழந்தைகள் பலி; பீகாரை புரட்டி போட்ட கொடூர சோகம்!
குறிப்பிட்ட நோய் காரணமாக, ஏராளமான குழந்தைகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் அனுமதிக்கப்பட்ட சில தினங்களில் சிகிச்சை பலனின்றி உயிரிழக்கும் சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
இதுகுறித்து நடத்திய ஆய்வில், குழந்தைகளுக்கு மூளைக் காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 48 மணி நேரத்தில் 36 குழந்தைகள் உயிரிழந்தனர். அடுத்த இரு வாரங்களில் 54 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.
ஒட்டுமொத்தமாக பீகார் மாநிலம் முழுவதும் பலி எண்ணிக்கை 100ஐத் தாண்டியுள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளுக்கு ரத்தத்தில் குளுக்கோஸ் மிகக் குறைவாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை பீகார் மாநில அரசும் உறுதிப்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் குழந்தைகள் உயிரிழப்பைத் தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன், முசாபர்நகரில் ஆய்வு மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.
அதேசமயம் அதிகப்படியான வெப்பம் காரணமாகவும், சில குழந்தைகள் உயிரிழந்துள்ளன. எனவே வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. பீகார் மாநில அரசுக்கு உதவி செய்யும் வகையில், மருத்துவக் குழு ஒன்றை மத்திய அரசு அனுப்பி வைத்துள்ளது.
தற்போது 100க்கு மேற்பட்ட குழந்தைகள் மருத்துவமனைகளில் மூளைக் காய்ச்சல் பாதிப்பால் சிகிச்சை பெற்று வருகின்றனர். குழந்தைகள் தொடர் உயிரிழப்பு சம்பவத்தால், முசாபர்நகரில் வரும் 22ஆம் தேதி வரை 8ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் காலை 10.30 மணி உடன் மேல்நிலைப் பள்ளி வகுப்புகள் முடித்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. கோடையின் உச்சம் காரணமாக, பொதுமக்கள் தண்ணீருக்காக திண்டாடி வருகின்றனர். இந்நிலையில் பீகார்மாநிலத்தில் வேறொரு விஷயம் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
Urinated in Mouth: வாயில் சிறுநீர் கழித்து அசிங்கப்படுத்திய போலீசார்; அதிர்ச்சியில் பத்திரிகையாளர்!
செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளரை வாயில் சிறுநீர் கழித்து, ரயில்வே போலீசார் அசிங்கப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Urinated in Mouth: வாயில் சிறுநீர் கழித்து அசிங்கப்படுத்திய போலீசார்; அதிர்ச்சி...
உத்தரப் பிரதேச மாநிலம் ஷாம்லி மாவட்டத்தில் நேற்று இரவு, ரயில் ஒன்று தடம் புரண்டது. இதுகுறித்து செய்தி சேகரிக்க நியூஸ் 24 சேனலின் செய்தியாளர் அமித் ஷர்மா சென்றிருந்தார். அப்போது அங்கு வந்த சாதாரண உடையில் வந்த ரயில்வே போலீசார், அவரை தாக்க முயற்சித்தனர்.
பின் கேமராவை கீழே தட்டிவிட்டு, அவரையும் தள்ளிவிட்டனர். பின்னர் அவரை கடுமையாக தாக்கி, உடைகளை கிழித்து, வாயில் சிறுநீர் கழித்துள்ளனர். இதையடுத்து அவரை இழுத்துச் சென்று சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த பத்திரிகையாளர்கள், உடனடியாக காவல் நிலையம் விரைந்தனர்.
அங்கிருந்த மூத்த அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தங்கள் கோரிக்கை நிறைவேறாததால், போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்பிறகு மறுநாள் காலை பத்திரிகையாளரை போலீசார் விடுவித்தனர். பத்திரிகையாளர் அமித் ஷர்மாவை போலீசார் தாக்கும் வீடியோ, தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அவற்றின் ஒரு வீடியோவில், ஷர்மா சிறைக்குள் இருப்பது போன்று காட்சி இடம்பெற்றுள்ளது. அவர் தனது சக பத்திரிகையாளர்களிடம் நடந்த சம்பவத்தை கூறினார். அதாவது, 10 முதல் 15 நாட்களுக்கு முன்பு, ரயில்வே போலீசார் குறித்து ஒரு செய்தியை சேகரித்தேன்.
இதுதொடர்பான வீடியோ என்னுடைய மொபைல் போனில் இருந்தது. அதனை என்னிடம் பறித்துச் சென்றுள்ளனர் எனக் குற்றம்சாட்டினார். இந்த விவகாரம் குறித்து அறிந்த உயர் அதிகாரிகள், சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தின் ஹவுஸ் ஆபிசர் மற்றும் கான்ஸ்டபிளை பணியிடை நீக்கம் செய்துள்ளனர்
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
`180-க்கு மைனஸ் 25 மார்க் எடுத்தவருக்கு டாக்டர் சீட்!' - நீட் குளறுபடியைச் சுட்டிக்காட்டும் அன்புமணி
மருத்துவப் படிப்பின் தரத்தை நீட் தேர்வு உயர்த்தும் என்பதும், மருத்துவக் கல்வி வணிகமயமாக்கப்படுவதை நீட் தடுக்கும் என்பதும் அழகாக சித்திரிக்கப்பட்ட அபத்தங்கள் என்பதை மீண்டும் ஒருமுறை புள்ளிவிவரங்கள் நிரூபித்திருக்கின்றன. நீட் தேர்வில் பாடவாரியாகத் தகுதி மதிப்பெண் எடுக்க முடியாத மாணவர்கள்கூட மருத்துவப் படிப்பில் சேர்க்கப்பட்டிருக்கின்றனர் என்பது இதைத்தான் காட்டுகிறது.
2018-ம் ஆண்டு நீட் தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள தனியார் மருத்துவ நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் நடத்தப்பட்ட மாணவர் சேர்க்கை விவரங்களை ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ பகுப்பாய்வு செய்துள்ளது. அதில் நீட் தேர்வில் இயற்பியல் அல்லது வேதியியல் பாடங்களில் ஒற்றை இலக்க மதிப்பெண்ணும் மைனஸ் மதிப்பெண்ணும் எடுத்த 50 பேர் தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் சேர்ந்திருப்பது தெரியவந்துள்ளது. அவர்களில் 7 பேர் இந்த இரு பாடங்களில் ஏதோ ஒன்றில் சுழியம் (0) மதிப்பெண் மட்டுமே எடுத்துள்ளனர். 10 பேர் மைனஸ் மதிப்பெண் எடுத்துள்ளனர். இயற்பியல் பாடத்தில் 180 மதிப்பெண்ணுக்கு மைனஸ் 25 மதிப்பெண், அதாவது சுழியத்தைவிட 25 மதிப்பெண் குறைவாகவும், வேதியியலில் 10 மதிப்பெண்ணும் எடுத்த ஒரு மாணவர் உயிரியலில் 185 மதிப்பெண் எடுத்ததால் மொத்தம் 170 மதிப்பெண் எடுத்து மருத்துவம் படிக்கிறார்.
மற்றொரு மாணவர் இயற்பியலில் சுழியம் மதிப்பெண், வேதியியலில் 15, உயிரியலில் 85 என மொத்தம் 100 மதிப்பெண்களுடன் மருத்துவ மாணவராகியிருக்கிறார். அதாவது, நீட் தேர்வில் 720 மதிப்பெண்களுக்கு 100 மதிப்பெண், வெறும் 13.88% மதிப்பெண் பெற்றால் மருத்துவம் சேர முடிகிறது. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் இந்த மதிப்பெண் எடுத்தால் தேர்ச்சி பெற முடியாது. ஆனால், நீட் தேர்வில் 13%-க்கும் குறைவான மதிப்பெண் பெற்றால்கூட தேர்ச்சி பெறுவதுடன் மருத்துவப் படிப்பில் சேரவும் முடிகிறது. பஞ்சாப் மாநிலத்தில் மட்டுமல்ல... தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களிலும் இதே நிலையே தொடருகிறது.
2018-ம் ஆண்டில் மட்டுமல்ல... அதற்கு முந்தைய ஆண்டிலும் இதே நிலைமைதான். 2017-ம் ஆண்டில் நீட் தேர்வில் 150-க்கும் குறைவான மதிப்பெண் பெற்ற 1990 பேர் தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளனர். இவர்களில் 530 பேர் இயற்பியல், வேதியியல் ஆகிய பாடங்களில் ஒற்றை இலக்க மதிப்பெண்கள் எடுத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
மருத்துவப் படிப்புக்கு நீட் தேர்வை அறிமுகம் செய்வதற்காக மத்திய அரசின் சார்பில் கூறப்பட்ட இரு முக்கியக் காரணங்கள், நீட் தேர்வு வந்தால் மருத்துவக் கல்வியின் தரம் உயரும், மருத்துவக் கல்வி வணிகமாவது தடுக்கப்படும் என்பதுதான். நீட் தேர்வில் 13.88% மதிப்பெண் பெற்றவர்களுக்கெல்லாம் மருத்துவப் படிப்பில் இடம் கிடைக்கிறது என்பதிலிருந்தே அந்த வாதம் அபத்தமானது என்பது உறுதியாகிவிட்டது. நீட் தேர்வால் மருத்துவக் கல்வி வணிகமயமாவதையும் தடுக்க முடியவில்லை என்பதும் 100% உண்மையாகும். இதை நிரூபிப்பதற்கும் ஏராளமான புள்ளி விபரங்களை எடுத்துக்காட்ட முடியும்.
நடப்பாண்டில் இந்தியா முழுவதும் சுமார் 65,000 மருத்துவப் படிப்பு இடங்கள் உள்ளன. ஆனால், இந்த ஆண்டில் நீட் தேர்வு எழுதிய 14,10,755 பேரில் 7,97,042 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். நியாயமான முறையில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டால், இவர்களில் முதல் 65,000 இடங்களைப் பெற்றவர்களுக்கு மட்டும்தான் இடம் கிடைக்க வேண்டும். ஒருவேளை இடஒதுக்கீட்டுக் கணக்கின்படி பார்த்தாலும் முதல் ஒரு லட்சம் இடங்களுக்குள் வந்தவர்களுக்கு மட்டுமே மருத்துவக் கல்வி சாத்தியமாக வேண்டும்.
ஆனால், முதல் 50,000 இடங்களுக்குள் வந்தவர்களுக்குக்கூட இடம் கிடைப்பதில்லை; அதேநேரத்தில் 7 லட்சத்துக்கு அதிகமான தரவரிசையில் வந்தவர்களுக்கு மருத்துவ இடம் கிடைக்கிறது. இதற்குக் காரணம் தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் ஓராண்டுக்கு ரூ.25 லட்சம் வரை கட்டணம் வசூலிக்கப்படுவதுதான். நீட் தேர்வில் 60% மதிப்பெண் பெற்றவர்களில் பலர் அந்தக் கட்டணத்தைக்கட்ட முடியாமல் விலகிக்கொள்ள, கோடிகளை குவித்து வைத்திருக்கும் பலர் 15 விழுக்காட்டுக்கும் குறைவான மதிப்பெண்களை மட்டுமே எடுத்திருந்தாலும், பணத்தைக் கட்ட முடியும் என்பதால் மிக எளிதாக சேர்ந்து விடுகின்றனர். மொத்தத்தில் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களுக்கு மருத்துவப் படிப்புக்குக் கோடிகளைக் கொட்டும் மாணவர்களைப் பிடித்துத் தரும் வேலையைத் தான் நீட் தேர்வு செய்கிறது.
இந்தியா முழுவதும் நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டு 3 ஆண்டுகள் ஆகிவிட்டன. மருத்துவக் கல்வியின் தரத்தை உயர்த்துகிறது; கல்வி வணிகமாவதைத் தடுக்கிறது என்று நீட்டுக்குப் பொய்யான புகழாரங்களைச் சூட்டி மக்களையும் மாணவர்களையும் மத்திய அரசு இனியும் ஏமாற்ற வேண்டாம். கடந்த 3 ஆண்டுகளில் நடத்தப்பட்ட மாணவர் சேர்க்கை விவரங்களின் அடிப்படையில் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டதன் நோக்கங்கள் நிறைவேறியுள்ளனவா என்பது குறித்து ஆய்வு செய்ய சமூகநீதியில் அக்கறை கொண்ட வல்லுநர் குழுவை அமைக்க வேண்டும். அக்குழுவின் பரிந்துரை அடிப்படையில் நீர் தேர்வை ரத்து செய்வது பற்றி முடிவெடுக்க வேண்டும். இதைச் செய்ய மத்திய அரசு தவறும் பட்சத்தில் நீட் தேர்வு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் தமிழக அரசு, இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி சிறப்பு மனுவைத் தாக்கல் செய்து நீட் தேர்வை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
வெற்றியை மட்டுமல்ல இந்த சாதனைகளையும் வசப்படுத்திய இந்திய அணி!
2 வகையிலான உலகக் கோப்பையிலும் பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் வெற்றி 100 விழுக்காடாக உள்ளது.
உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக சதம் விளாசிய இரண்டாவது இந்தியர், இவ்விரு அணிகளுக்கும் இடையே, ஒரு இன்னிங்சில் அதிகபட்ச ரன்கள் விளாசிய வீரர் என்ற பெருமைக்கும் சொந்தக்காரரானார்.
ரோகித் சர்மா
முன்னதாக, 2015 தொடரில் விராட் கோலி 107 ரன்கள் சேர்த்ததே அதிகபட்சமாக இருந்து வந்தது. அத்துடன், இப்போட்டியில், 3 சிக்சர்கள் விளாசியதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் ரோஹித் சர்மா விளாசிய சிக்சர்கள் 358. இதனால் சர்வதேச போட்டிகளில் அதிகம் சிக்சர்கள் விளாசிய இந்திய வீரர் என்ற சாதனையுடன் ரோஹித் சர்மா பட்டியலில் முதலிடம் பிடித்தார்.
இவருக்கு அடுத்தபடியாக 355 சிக்சர்களுடன் தோனி 2-வது இடத்தில் உள்ளார். மேலும், குறைந்த போட்டிகளில் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 24 சதங்கள் அடித்த வீரர்களில் சச்சினை பின்னுக்குத் தள்ளினார்.
சச்சின் 219-வது போட்டிகளில் நிகழ்த்திய சாதனையை, 203-வது போட்டியிலேயே ரோஹித் எட்டியுள்ளார். நேற்றைய போட்டியில் இந்திய கேப்டன் விராட் கோலி 57 ரன்களை கடந்த போது, ஒருநாள் கிரிக்கெட்டில் விரைவாக 11 ஆயிரம் ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை படைத்தார்.
சச்சின் 276 இன்னிங்சுகளில் கடந்த இந்த சாதனையை 222-வது இன்னிங்சிலேயே கோலி முறியடித்துள்ளார். மேலும், 10 ஆயிரம் ரன்களில் இருந்து 11 ஆயிரம் ரன்களை கடக்க சச்சினும், கோலியும் 17 இன்னிங்ஸ்களை மட்டுமே எடுத்துக்கொண்டுள்ளனர்.
பாகிஸ்தானுக்கு எதிராக, உலகக் கோப்பையில் முதல் விக்கெட்டிற்கு பார்ட்னர்ஷிப்பில் அதிக ரன்கள் குவித்தவர்களில் லோகேஷ் ராகுல் - ரோஹித் சர்மா முதலிடம் பிடித்தனர். இவர்கள், முதல் விக்கெட்டிற்கு 136 ரன்கள் குவித்தனர்.
முன்னதாக, 1996-ல் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியாவின் நவ்ஜோத் சிங் சித்து - சச்சின் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 90 ரன் சேர்த்ததே சாதனையாக இருந்து வந்தது.
பாகிஸ்தானுக்கு எதிராக நேற்று தோனி விளையாடியதன் வாயிலாக, சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக போட்டிகளில் விளையாடிய இந்திய வீரர்களில் ராகுல் டிராவிட்டை முந்தி 2-வது இடம் பிடித்தார்.
இவருக்கு நேற்றைய ஆட்டம் 341-வது போட்டியாக அமைந்தது. இந்த வரிசையில், 463 போட்டிகளுடன் சச்சின் டெண்டுல்கர் முதலிடத்தில் உள்ளார்.
மகேந்திர சிங் தோனி
இந்திய அணி, நேற்று 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 336 ரன்கள் குவித்தது. இதுவே, உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக ஓர் இன்னிங்சில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாகும்.
முன்னதாக, கடந்த 2015 தொடரில் 300 ரன்கள் சேர்த்ததே அதிகபட்சமாக இருந்தது. மேலும், பாகிஸ்தானை 89 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தியது,
உலகக் கோப்பையில் அந்த அணிக்கு எதிராக அதிக ரன்கள் வித்தியாசத்தில் பதிவு செய்யப்பட்ட மிகப்பெரிய வெற்றியாகும். முன்னர், கடந்த 2015 தொடரில் 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதே அதிகபட்சமாக இருந்தது.
உலகக் கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் விளையாடிய முந்தைய 6 போட்டிகளிலும் டாஸ் வென்ற அணியே முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆனால், நேற்றைய போட்டியில் தான் பாகிஸ்தான் டாஸ் வென்று, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அத்துடன், 50 ஓவர் மற்றும் இருபது ஓவர் உலகக் கோப்பை தொடர்களில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தோல்வியே சந்தித்ததில்லை என்ற சரித்திர சாதனை தொடருகிறது.
View image on Twitter
Quote:
[/url]Cricket World Cup
✔@cricketworldcup
Results of India v Pakistan in Men's World Cups:
1992: [img=16.9x18]https://abs.twimg.com/emoji/v2/72x72/1f1ee-1f1f3.png[/img]
1996: [img=16.9x18]https://abs.twimg.com/emoji/v2/72x72/1f1ee-1f1f3.png[/img]
1999: [img=16.9x18]https://abs.twimg.com/emoji/v2/72x72/1f1ee-1f1f3.png[/img]
2003: [img=16.9x18]https://abs.twimg.com/emoji/v2/72x72/1f1ee-1f1f3.png[/img]
2011: [img=16.9x18]https://abs.twimg.com/emoji/v2/72x72/1f1ee-1f1f3.png[/img]
2015: [img=16.9x18]https://abs.twimg.com/emoji/v2/72x72/1f1ee-1f1f3.png[/img]
2019: [img=16.9x18]https://abs.twimg.com/emoji/v2/72x72/1f1ee-1f1f3.png[/img]
10.2K
12:06 AM - Jun 17, 2019
[color][size][font]
2,343 people are talking about this
[url=https://twitter.com/cricketworldcup/status/1140327287449169920]
Twitter Ads info and privacy
[/font][/size][/color]
50 ஓவரை பொறுத்தவரை, 1992, 96,99, 2003, 2011, 2015 மற்றும் 2019 ஆகிய 7 தொடர்களிலும் பாகிஸ்தான் வீழ்த்தப்பட்டுள்ளது.
இதற்கிடையில், 20 ஓவர் உலகக் கோப்பையில் மோதிய 5 போட்டிகளிலும் இந்தியாவே வெற்றிக்கொடி நாட்டியுள்ளது.
அந்த வகையில், 2 வகையிலான உலகக் கோப்பையிலும் பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் வெற்றி 100 விழுக்காடாக உள்ளது.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
ஆண் நண்பர் மீது ஆசிட் வீசிய பெண்
புதுடில்லி: திருமணம் செய்ய மறுத்த ஆண் நண்பர் மீது ஆசிட் வீசிய பெண் டில்லியில் கைது செய்யப்பட்டார். இது வரை ஆண்கள் தான் ஆசிட் வீசுவார்கள் என்ற நிலையை இந்த பெண் மாற்றி குற்றச்செயல் புரிந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
டில்லி விகாஸ்புரியை சேர்ந்த 19 வயது பெண். 24 வயது ஆண் நண்பருடன் 3 ஆண்டுகளாக பழகி வந்துள்ளார். இந்நிலையில் உறவை முறித்து கொள்ள ஆண் நண்பர் கூறியுள்ளார். ஆனால் அந்த பெண் அதனை ஏற்கவில்லை. திருமணம் செய்ய வலியுறுத்தி உள்ளார். ஆண் நண்பரோ மறுத்து விட்டார். இதனால் வழக்கம் போல் ஆண் நண்பருடன் அந்த பெண் பைக்கில் பின்னால் அமர்ந்தபடி சென்றார். இந்நேரத்தில் மறைத்து வைத்திருந்த ஆசிட்டை அவரது முகத்தில் ஊற்றினார். இதில் நிலைதடுமாறிய அவர் பைக்குடன் கீழே விழுந்தார்.
இதில் ஆசிட் யார் ஊற்றியது என்பது தெரியாத நிலையில் இருவரும் காயத்துடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். போலீசார் விசாரித்தனர். அந்த பாதையில் உள்ள காமிராக்கள் ஆய்வு செய்யப்பட்டன. இதில் முறையான குற்றச்செயலில் ஈடுபடும் படியான காட்சி கிடைக்கவில்லை.
ஹெல்மெட்டை கழற்றுங்க
இதனை தொடர்ந்து போலீசார் இருவரிடமும் துருவி, துருவி விசாரிக்கையில், அந்த ஆண் நண்பர் போலீசாரிடம் ; " நாங்கள் பயணித்து கொண்டிருக்கும் போது, பெண் நண்பர் ஹெ ல்மெட்டை கழற்றும் படி கூறினார். நெருங்கி அமர இடையூறாக இருப்பதாக கூறினார். இந்நேரத்தில் ஆசிட் என் மீது பட்டது என்றார். இதனை தொடர்ந்து போலீசாருக்கு அந்த பெண் மீது சந்தேகம் ஏற்பட்டது. தொடர் விசாரணையில் பெண் ஆசிட் ஊற்றியதை ஒத்து கொண்டார்.போலீசார் அந்த பெண்ணை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் டில்லியில் பரபரப்பாக பேசப்படுகிறது
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
குரூப் 1 தேர்வு முடிவு விவகாரம்: டிஎன்பிஎஸ்சி உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல்
கோப்புப் படம்
குரூப் 1 தேர்வை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கில் டிஎன்பிஎஸ்சி தனது பதில் மனுவை உயர் நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்தது.
கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற குரூப் 1 தேர்வில் 1 லட்சத்து 68 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர். இதற்கான முடிவுகள் ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டது
முன்னதாக, கேட்கப்பட்ட 200 கேள்விகளுக்கு சரியான விடைகளைத் தெரிந்துகொள்ளும் வகையில் வெளியான மாதிரி விடைத்தாளில் இருந்த 18 விடைகள் தவறானவை என்று புகார் எழுந்தது.
இதையடுத்து, இந்த 18 தவறான விடைகளை மறுமதிப்பீடு செய்யாமல் தேர்வு முடிவுகளை வெளியிடக்கூடாது என சென்னையைச் சேர்ந்த விக்னேஷ் உள்ளிட்ட தேர்வாளர்கள் டிஎன்பிஎஸ்சிக்கு கோரிக்கை மனு அளித்தனர்.
இந்தக் கோரிக்கைகளை ஏற்காத டிஎன்பிஎஸ்சி ஏப்ரல் மாதம் 3-ம் தேதி முதல்நிலைத் தேர்வு முடிவுகளை வெளியிட்டது. இதனை எதிர்த்து, விக்னேஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நீதிபதி பார்த்திபன் முன்பு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது.
அப்போது கேட்கப்பட்ட 200 கேள்விகளில் 24 கேள்விகள் தவறானவை என டிஎன்பிஎஸ்சி தரப்பில் ஒப்புக் கொள்ளப்பட்டது.
மேலும், இது தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது.
டிஎன்பிஎஸ்சியின் இந்த விளக்கத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதி, மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த குரூப் 1 தேர்வில் இது போன்ற குளறுபடிகள் நடப்பதை அனுமதிக்க முடியாது. ஜூன் 17-ம் தேதி பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது டிஎன்பிஎஸ்சி துணை செயலாளர் தாரா பாய் சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்தார்.
அவரது பதில் மனு விவரம் வருமாறு:
மாதிரி விடைத்தாளில் இருந்த 96 கேள்விகளுக்கு தவறான பதில்கள் அளித்துள்ளதாக 4,390 விண்ணப்பதாரர்கள் தேர்வாணையத்திற்கு மனு அளித்தனர். இவற்றை ஆய்வு செய்ய 3 பேர் கொண்ட நிபுணர் குழு அமைக்கப்பட்டது.
மாதிரி விடைத்தாளில் 12 கேள்விகளுக்குத் தவறான விடைகள் வழங்கப்பட்டுள்ளன என்றும் 5 கேள்விகளுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட சரியான விடைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
7 கேள்விகளுக்கான மாதிரி விடைகள் தவறானவை எனவும் நிபுணர் குழு அறிக்கை அளித்துள்ளது. இந்த அறிக்கையின் அடிப்படையிலேயே மனுதாரர் உள்ளிட்டோருக்கு கூடுதலாக 6 மதிப்பெண்கள் வழங்கப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டது.
நிபுணர் குழுவின் இந்த அறிக்கையை இணையதளத்தில் வெளியிட முடியாது. இது போன்ற அரசுப் பணியாளர் தேர்வின் மதிப்பெண்களை இயந்திரத்தனமாக வெளியிக் கூடாது என ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் குரூப் 1 தேர்வை ரத்து செய்யக்கோரி விண்ணப்பதாரர் விக்னேஷ் தொடர்ந்த வழக்கு மீண்டும் ஜூன் 19-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
புரட்சியும் டெக்னாலஜியும் சேர்ந்தால் என்னாகும்? சீனாவுக்குப் பாடம் எடுத்த ஹாங்காங் மக்கள்!
அரச கண்காணிப்பு தீவிரமாக உள்ள சீனாவையே கொஞ்சம் திணறவைத்திருக்கின்றனர், அண்மையில் ஹாங்காங் போராட்டத்தில் கலந்துகொண்ட போராட்டக்காரர்கள்.
இந்த யுகத்தின் புரட்சிகள் மீதும், போராட்டங்கள் மீதும் இருந்த பிம்பத்தை, அரசுகளிடையே மொத்தமாக மாற்றியமைத்த ஓராண்டு 2011. மத்திய கிழக்கு நாடுகளின் சர்வாதிகாரங்களுக்கு எதிராகப் பூத்த அந்தக் கிளர்ச்சிகள், மக்களின் கோபத்தை மட்டும் அரசுகளிடம் கொண்டுசேர்த்து விடவில்லை. அவர்களின் நவீன கிளர்ச்சி வடிவங்களையும் அரசுகளுக்குச் சொல்லிச் சென்றன. மக்களின் தகவல்தொடர்பு முறைகள் அனைத்தும் பெரும் கட்டுப்பாட்டிலிருந்த அன்று, அந்த மக்களுக்குக் கிளர்ச்சியின் சதுக்கங்களில் ஒன்றுகூட உதவிய ஊடகம், இன்டர்நெட். எகிப்து, துனிசியா, லிபியா எனக் கிளர்ச்சி பரவிய எல்லா நாடுகளிலும் ஃபேஸ்புக்கும், ட்விட்டரும்தான் மக்களை ஒன்றுதிரட்டின. அவர்கள் உரையாட களம் அமைத்துக்கொடுத்தின. அதற்குப் பிறகு வந்த எல்லாப் போராட்டங்களிலும் இதே வடிவங்கள் வெவ்வேறு வழிகளில் வெளிப்பட்டன. இன்றைக்கு வாட்ஸ்அப், ஃபேஸ்புக், ட்விட்டர் பயன்படுத்தாத புரட்சிகளே இல்லை. சென்னை மெரினாவில் நடந்த போராட்டத்தில்கூட இந்தத் தொழில்நுட்பம் பெரும்பங்கு வகித்ததை யாரும் மறுக்கமுடியாது. ஆனால், ``இந்த இணைய உதவி புரட்சிகள், இப்போது அடுத்தகட்டத்திற்குச் செல்லவேண்டிய காலமிது. காரணம், அரசின் கண்காணிப்பு இயந்திரங்கள்" என்கின்றனர் ஹாங்காங் கிளர்ச்சியாளர்கள்.
கடந்தவாரம் ஹாங்காங்கின் வீதிகளில் லட்சக்கணக்கான மக்கள் திரண்டு, சீனாவிற்கு எதிராகவும், ஹாங்காங்கின் நிர்வாகத்திற்கு எதிராகவும் குரல்கொடுத்தது உங்களுக்கு நினைவிருக்கலாம். ஹாங்காங்கில் கடும்குற்றங்கள் புரியும் குற்றவாளிகளை சீனாவிற்கு நாடுகடத்துவதற்கான சட்டமசோதாவை எதிர்த்துதான் அந்த மக்கள் தெருவில் இறங்கிப் போராடினர். இதன்மூலம் சீனாவின் ஆதிக்கம், ஹாங்காங்கில் அதிகமாகும் என்பதுடன், ஹாங்காங் தற்போது கொண்டிருக்கும் தனி சட்ட அமைப்புக்கே இது எதிரானது என்பதுதான் அந்தக் கிளர்ச்சிக்குக் காரணம். ஹாங்காங்கிற்குப் போராட்டங்களும், புரட்சியும் புதிதல்ல; என்றைக்கு அந்தப் பகுதியை, சீனாவிடம் பிரிட்டன் ஒப்படைத்ததோ அன்றிலிருந்தே அங்கு எதிர்ப்புகள்தான்; போராட்டங்கள்தான். கறுப்புக் குடைகளைக் கொண்டு அந்நாட்டு மக்கள் நடத்திய `குடைப்புரட்சி' வெகுபிரபலம். தற்போது அதைத் தாண்டி இந்தமுறை இன்னும் அதிகமாக கவனம் ஈர்த்துக் கொண்டிருக்கிறார்கள் அந்நாட்டு மக்கள். ஒரே உதாரணம் மட்டும் சொல்கிறேன்.
[color][font]
கடந்த வாரம் புதன்கிழமை மதியம், ஹாங்காங்கின் அட்மிராலிட்டி நகரத்தின் உள்ளூர் ரயில்நிலையம். அங்கே வழக்கத்திற்கு மாறாக டிக்கெட் வெண்டிங் மெஷின்களில் நெடும் வரிசையில் மக்கள் நின்றுகொண்டிருப்பதைப் பார்க்கிறார் பத்திரிகையாளர் மேரி ஹூ. அங்கு நின்றுகொண்டிருந்தவர்கள் அனைவரும் அப்போதைய போராட்டத்திலிருந்து விலகி, மதிய உணவுக்காகச் செல்பவர்கள். மீண்டும் அன்று மாலையே போராட்டத்திற்கு அங்கே வரவிருப்பவர்கள். அவர்கள் யாரும் அங்கு வரிசையில் நிற்கவேண்டிய அவசியமே இல்லை. காரணம், எல்லோரிடமும் `ஆக்டோபஸ் கார்டு' இருக்கிறது. நம்மூர் மெட்ரோ ரயில்நிலைய கார்டு போலவே அதுவும் ஒரு ப்ரீபெய்டு கார்டு. அதன்மூலமாகவே அந்நாட்டு மக்கள் எங்கு வேண்டுமானாலும் பொருள்கள் வாங்கவும், பயணம் செய்யவும் முடியும். அதோடு அவர்களின் கிரெடிட் கார்டு விவரத்தையும் இணைத்துவைத்துக் கொண்டால், ஆட்டோமேட்டிக்காகவே பணம் அதில் லோடு ஆகிவிடும். அங்கிருப்பவர்கள் அனைவருமே ஆக்டோபஸ் கார்டு வைத்திருந்தும் அன்று வெண்டிங் மெஷின்கள் முன்னர் வரிசையில் நின்றுகொண்டிருந்தனர். பொதுவாக அந்தப் பகுதிக்கு வரும் வெளிநாட்டுப் பயணிகளைத் தவிர யாருமே அந்த டிக்கெட் வெண்டிங் மெஷின்களைப் பயன்படுத்தமாட்டார்கள். இதனால் அவர்களிடம் அந்தப் பத்திரிகையாளர் விசாரிக்கிறார். அதற்கு அவர்கள் சொன்ன பதில், ``இந்த கார்டு மூலம் பயணித்தால் நாங்கள் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டதை அரசு கண்டறிந்துவிடும். எங்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், பழிவாங்கவும் அரசுக்கு இதுவே போதும். அதனால்தான் டிக்கெட் வாங்குகிறோம்" என்றிருக்கின்றனர் மக்கள். உண்மைதான். இதுபோல பொதுமக்களின் பரிவர்த்தனை கார்டுகள் மூலம் குற்றவாளிகள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டதும், 2014-ம் ஆண்டு குடைப்புரட்சியில் ஈடுபட்டவர்களை அரசு தேடித்தேடி வழக்குப் பதிவு செய்ததும் அங்கே வரலாறு. அதுதான் அந்த மக்களின் அச்சத்திற்குக் காரணம். இன்னொரு சம்பவம்.
[/font][/color]
[color][font]
எப்போதுமே குடை அவர்களின் ஆயுதம்; போராட்டத்தின் முக்கிய வடிவம். ஆனால், இந்தமுறை அது தற்காப்பாகவும் அமைந்தது. இந்தமுறை போராட்டக்காரர்கள் குடையுடன் சேர்த்து, முகமூடிகளையும் (Face masks) கொண்டுவந்திருந்தனர். அது அவர்களை பெப்பர் ஸ்ப்ரேயில் இருந்தும், கண்ணீர்ப் புகையிலிருந்தும் மட்டும் காக்கவில்லை. சீனாவின் ஃபேஷியல் ரெககனைஷன் மென்பொருள்களிலிருந்தும் தப்பிக்க உதவியிருக்கிறது என்கிறார்கள். காவல்துறை எப்போதும் விரட்ட பயன்படுத்திய ரப்பர் குண்டுகள், கண்ணீர்ப் புகை, சின்ன பெல்லட்கள் என அனைத்திற்கும் எதிராக கவசங்களைக் கொண்டுவந்திருந்தவர்கள் அரசின் டிஜிட்டல் கண்காணிப்பிலிருந்தும் தப்பித்துக்கொள்ளவும் தெரிந்து வைத்திருக்கிறார்கள். இதனால் சமூக ஊடகங்களில் படங்களைப் பகிர்வது, ஊடகங்களுக்கு நேரடியாகப் பேட்டியளிப்பது, காவல்துறையின் ட்ரோன்கள் விண்ணில் பறந்தால் குடையைக் கொண்டு மறைப்பது எனத் தங்களின் அடையாளங்களை மறைப்பதில் வெகுநேர்த்தியாக இருந்திருக்கிறார்கள் மக்கள். இவர்கள் ஒருபக்கம் இப்படி இருக்க, இன்னொருபுறம் வழக்கமான முறையில் போராடிய மக்களும் இருக்கவே செய்தனர். அவர்களிடமும் முகமூடி அணியச் சொல்லி உஷார்படுத்தியிருக்கிறார்கள் இளைஞர்கள்.
[/font][/color]
[color][font]
இதேபோல இன்னொரு சம்பவத்தைப் பதிவுசெய்திருக்கிறார் வாஷிங்டன் போஸ்ட்டின் செய்தியாளர் ஷிபானி மடானி. ``போராட்டத்திலிருந்து வீடு திரும்பிய பெண் ஒருவர், இன்னும் கண்ணீர்ப் புகையின் பாதிப்பிலிருந்து கூட முழுமையாக வெளிவரவில்லை. ஆனால், அதைக் கவனிப்பதைவிடவும் முதலில் எதைச் செய்யவேண்டும் என்பது அவருக்குத் தெரிந்தது. உடனே தன் மொபைலில் இருந்த சீன ஆப்களை எல்லாம் டெலிட் செய்கிறார். மொபைலில் VPN ஆன் செய்து, டெலிகிராம் ஆப்பை இன்ஸ்டால் செய்கிறார்" என்கிறார் அவர். இவர் மட்டுமல்ல; போராட்டக்காரர்கள் அனைவருக்கும் அன்று கைகொடுத்தது டெலிகிராம்தான். அதில்தான் அவர்களின் திட்டம், உரையாடல்கள் எல்லாம். அன்றைக்கு முழுக்க ஆப்பிளின் ஆப் ஸ்டோரில் ட்ரெண்டிங் பட்டியலில் நம்பர் 1 ஆக இருந்திருக்கிறது டெலிகிராம். என்னதான் அது பாதுகாப்பு என்றாலும், இன்னும் ஒருபடி கூடுதலாகவே பாதுகாப்பு விஷயத்தில் கவனம் செலுத்தினர் அவர்கள். யாருமே அவர்களின் சொந்தப் பெயர், DP-யைப் பயன்படுத்தாதது, வழக்கமான சிம் கார்டுகளுக்குப் பதில் புதிய தற்காலிக சிம் கார்டுகளைப் பயன்படுத்துவது என அங்கேயும் வித்தை காட்டினர். இவர்களின் வீரியம் பார்த்ததாலோ என்னவோ அன்றைக்கே டெலிகிராமை மறைமுகமாக DDoS அட்டாக் மூலம் தாக்கியிருக்கின்றனர் சில ஹேக்கர்கள். இந்தத் தாக்குதல்கள் எல்லாமே சீனாவிலிருந்துதான் வந்திருக்கின்றன என உறுதியாகச் சொல்கிறார் அதன் சி.இ.ஓ பாவெல்.
[/font][/color]
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
போலி ஆதரவற்றோர் இல்லம் நடத்தி ரூ.11.5 லட்சம் திருட்டு: பெண் கைது, போலி நிருபர் தலைமறைவு
தலைமறைவான போலி நிருபர், துணிமூட்டையுடன் பெண்
ஆதரவற்றோர் இல்லம்போல் போலியாக நடத்தி பழைய துணிகள், பொருட்கள், பணம் உள்ளிட்டவற்றை சேகரித்து அமைப்பின் பெண் பணியாளர் ஒருவீட்டில் 11.5 லட்சம் ரூபாய் பணத்தை திருடிவிட்டு தலை மறைவானார். அவரை கைது செய்த போலீஸார் அதன் உரிமையாளரான போலி பத்திரிகையாளர் ஒருவரை தேடி வருகின்றனர்.
சென்னை தேனாம்பேட்டை ரவி(40). இவரது மனைவி சுசீலா(38). ரவி தள்ளுவண்டியில் துணிகளை இஸ்திரிபோட்டுத்தரும் பணியும், சுசிலா வீட்டுவேலையும் செய்து வந்துள்ளனர். வீடு கட்டுவதற்காக சுசிலா சிறுக சிறுக பணம் சேர்த்து வைத்துள்ளார்
திருட்டுப்பயத்தினால் பணத்தை பழைய துணிகளுடன் மூட்டையாக கட்டி பீரோவில் வைத்திருந்துள்ளார். பிள்ளைகளிடம் எதற்கும் உதவாத பழைய துணிகள் என்று கூறி வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 13-ம் தேதி தேனாம்பேட்டைக்கு ஆட்டோவில் வந்த சிலர், திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகில் அம்மா டிரஸ்ட் என்கிற பெயரில் ஆதரவற்றோர் மற்றும் முதியோர் இல்லம் நடத்தி வருவதாகவும் பழைய துணிகள், பணம் , பொருள் இருந்தால் தரவேண்டும் என நோட்டீஸ் வழங்கி வீடுவீடாக கேட்டுள்ளனர்.
இதை உண்மை என நம்பி பலரும் பணம், பொருள், பழைய துணிகள், மளிகை பொருட்களை கொடுத்துள்ளனர். இதேபோல் சுசிலாவின் வீட்டிலும் கேட்டுள்ளனர். வீட்டில் சுசிலாவும், அவரது கணவரும் இல்லாத நிலையில் மகன் ரவி மட்டும் இருந்துள்ளார்.
அவர் வீட்டில் அம்மா பழைய துணிகளை மூட்டையாக கட்டி வைத்துள்ளாரே அதை ஏழைகளுக்கு கொடுத்துவிடலாம் என எடுத்து கொடுத்துள்ளார்.
மாலை வேலை முடிந்து வீடு திரும்பிய சுசிலா பழைய துணி மூட்டையை பீரோவில் காணாது அதிர்ச்சியடைந்து மகன் ரவியிடம் கேட்டுள்ளார். பழைய துணி தானே ஆதரவற்றோர் இல்லத்திலிருந்து கேட்டு வந்தார்கள் அவர்களுக்கு உதவ கொடுத்தேன் என கூறியுள்ளார் மகன்.
இதைக்கேட்டு அலறி துடித்த சுசிலா அதில் தமது சேமிப்புப்பணம் ரூ.11.5 லட்சம் இருப்பதை மகனிடம் கூறி அதை எடுத்து வைத்தாயா என கேட்டுள்ளார். இல்லை, அப்படியே மூட்டையை பிரிக்காமல் கொடுத்தனுப்பி விட்டேன் என மகன் கூற யார் அவர்கள் என கேட்டபோது அவர்கள் கொடுத்த நோட்டீசை மகன் காண்பித்துள்ளார்.
அந்த நோட்டீஸில் உள்ள விலாசத்திற்கு சென்று பார்த்தபோது அது ஒரு பயன்படுத்தப்படாத கட்டிடம் என்பதும் அங்கு எந்த ஆதாரவற்றோர் இல்லமும் செயல்படவில்லை, அது போலி நோட்டிஸ் என தெரிய வந்துள்ளது. உரிமையாளர்கள் யார் என்பதும் தெரியவைல்லை. இதனால் அதிர்ச்சியில் உறைந்த கணவன் மனைவி இருவரும் உடனடியாக தேனாம்பேட்டை போலீஸில் நடந்ததைக்கூறி புகார் அளித்துள்ளனர்.
உடனடியாக களத்தில் இறங்கிய தேனாம்பேட்டை போலீஸார், சுசிலாவின் வீட்டருகில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆராய்ந்துள்ளனர். அதில் ஒரு பெண் துணிமூட்டையை வாங்கிச் செல்வதும், பின்னர் ஆட்டோவில் செல்வதும் பதிவாகி இருந்தது.
ஆட்டோ எண்ணை வைத்து ஆட்டோ ஓட்டுனரை பிடித்து விசாரித்தபோது செங்குன்றத்தைச் சேர்ந்த மகாலட்சுமி என்பவர் தனது ஆட்டோவை வாடகைக்கு எடுத்து பழைய துணைகளை சேகரித்து எடுத்து வந்ததாக கூறியுள்ளார்.
அவர் அடையாளம் காட்டியப்படி செங்குன்றம் பகுதியில் இருந்த மகாலட்சுமியைப் போலீஸார் பிடித்தனர். அவரிடம் விசாரணை நடத்தியதில், பணத்தை திருடியதை ஒப்புக்கொண்டார். அவரது வீட்டிலிருந்து ரூ. 11 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயயை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மகாலட்சுமியிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், பணம், காசோலை மற்றும் பழைய துணிகளைப் பெற்று பணம் சம்பாதிக்க சென்னையில் ஒரு பெரிய நெட்வர்க் செயல்படுவது தெரிய வந்துள்ளது. பொதுமக்களின் இரக்கக்குணம்தான் இவர்களது மூலதனம்.
அரவிந்தன் என்கிற நபர் பெண்களை வேலைக்கு அமர்த்தி இதுபோன்று பணம், பழைதுணிகள், பொருட்களை வசூல் செய்து பணத்தை வாரத்திற்கு ஒரு முறை தங்களுக்குள் பங்கு போட்டுக் கொள்ளவும், பழைய துணிகளை மொத்த ஏஜெண்டுகளிடம் விற்று பணம் சம்பாதிப்பதும்தெரியவந்தது.
இந்த கும்பல், வேலையில்லாமல் இருக்கும் ஏழைப் பெண்களை வேலைக்கு அமர்த்தி தாங்கள் கொடுக்கும் துண்டுப் பிரசுரங்களை வீடுவீடாகச் சென்று கொடுத்து பணம் துணிகளை பெறுவதற்கு பயிற்சி அளித்து பொதுமக்களின் இரக்க உணர்வை பயன்படுத்தி பணம் பார்த்து வந்துள்ளனர்.
அம்மா அறக்கட்டளை அரவிந்தன் என்பவரின் பெயரில் பதிவு செய்யபட்டுள்ளதையும், அந்த நபர் மக்கள் நம்பிக்கை என்ற வாரஇதழை நடத்தி வருவதையும் போலீஸார் கண்டுபிடித்தனர். அரவிந்தன் ஆரம்பத்தில் ஒரு தொலைக்காட்சியில் விளம்பரப்பிரிவில் வேலைப்பார்த்ததும், அங்கு அவரது நடத்தைச் சரி இல்லாததால் வெளியேற்றப்பட்டதும், பின்னர் தானே பத்திரிகை ஆரம்பித்து காவல் ஆணையர் அலுவலகம், டிஜிபி அலுவலகம், தலைமைச் செயலகம் போன்ற இடங்களில் நுழைந்து பலரது அறிமுகத்தை பெற்றுள்ளார்.
காவல் ஆணையர் உள்ளிட்ட பிரபலங்களுடன் நெருக்கமாக இருப்பது போல் புகைப்படம் எடுத்து வைத்துகொண்டு போலி அறக்கட்டளை நடத்தி பண வசூலில் ஈடுபட்டு பொதுமக்களிடம் மோசடி செய்ததும் தெரியவந்துள்ளது.
மகாலட்சுமியை கைது செய்த தேனாம்பேட்டை போலீஸார் பணம் ரூ. 11 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர். தலைமறைவாக உள்ள போலி பத்திரிகையாளர் அரவிந்தனைத் தேடி வருகின்றனர்.
ஆதரவற்றோருக்கு உதவ வேண்டும் என்கிற பொதுமக்களின் நல்ல எண்ணத்தை மூலதனமாக்கி மோசடியில் ஈடுபட்ட அரவிந்தன் முக்கியமாக நடுத்தர மக்கள் வசிக்கும் பகுதியிலேயே தனது ஆட்களை அனுப்பி வசூலில் ஈடுபட்டு வந்துள்ளார்.
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
'மூளையில்லாத கேப்டன் சர்பிராஸ்; சராசரி பாக். வீரர்களிடம் பெரிதாக எதிர்பார்க்க முடியாது': அக்தர் விளாசல்
ஷோயிப் அக்தர், சர்பிராஸ் அகமது : கோப்புப்படம்
பாகிஸ்தான் அணியின் சர்பிராஸ் கான் மூளையில்லாத கேப்டன். இப்போது இருக்கும் சாராசரி பாகிஸ்தான் அணி வீரர்களிடம் இருந்து மிகச்சிறப்பான செயல்பாடு எதையும் எதிர்பார்க்க முடியாது என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ஷோயிப் அக்தர் விளாசியுள்ளார்.
உலகக் கோபைப் போட்டயின் லீக் ஆட்டத்தில் இந்தியாவிடம் டக்வொர்த் லூயிஸ் விதிப்படி 89 ரன்களில் பாகிஸ்தான் 7-வது முறையாக தோல்வி அடைந்தது. பாகிஸ்தான் தோல்வி அடைந்ததையடுத்து அந்நாட்டு ரசிகர்கள் ட்விட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். முன்னாள் வீரர்களும் பாகிஸ்தான் அணியின் செயல்பாட்டை விமர்சித்து வருகின்றனர்
முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஷோயிப் அக்தர் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பாகிஸ்தான் அணியையும், கேப்டன் சர்பிராஸ் அகமதுவையும் காட்டமாக விமர்சித்துள்ளார். அவர் கூறியதாவது:
சர்பிராஸ் அகமதுவைப் போன்று ஒரு மூளையில்லாத கேப்டன் இருக்க முடியுமா என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியாது. நம்மால் சேஸிங் செய்ய முடியாத நிலையில் பின் எதற்கு சேஸிங்கை தேர்வு செய்ய வேண்டும்.
ஆடுகளம் மிகவும் காய்ந்த நிலையில் இருக்கிறது, ஈரப்பதமாக இல்லை எனும் போது பேட்டிங்கைதேர்வு செய்யலாமே. முதலில் சர்பிராஸ் அகமது அணியின் பலம் பேட்டிங் அல்ல, பந்துவீச்சுதான் என்ற உண்மையை அறிய வேண்டும்.
டாஸ்வெல்வது ஆட்டத்தின் முக்கியமான விஷயம். ஆனால், டாஸ வென்ற சர்பிராஸ் எதற்காக பீல்டிங் தேர்வு செய்தார். டாஸ் வென்று பேட்டிங் செய்திருந்தாலே ஏறக்குறைய பாதி வெற்றி பெற்றதுபோலத்தான். ஆனால், நீங்கள் என்ன செய்தீர்கள். போட்டியில் வெற்றி பெற்றுவிடக்கூடாது என்பதற்காக முயற்சித்தீர்கள். மறுபடியும் முட்டாள்தானமான, மூளையில்லாத கேப்டன்ஷிப், மூடத்தனமான நிர்வாகம்தான் வெளிவந்துள்ளது.
படம் ஐசிசி
நமது அணியில் இன்சமாம், யூசுப், சயீத் அன்வர், ஷாகித் அப்ரிடி ஆகிய மிகப்பெரிய பேட்ஸ்மேன்கள் இருந்தபோதே, நம்மால் 1999-ம் ஆண்டு 227 ரன்களே இதை மைதானத்தில் சேஸிங் செய்ய முடியவில்லை. ஆனால், இப்போது 336 ரன்களை எவ்வாறு சேஸிங் செய்ய முடியும். நமக்கு ஏற்றார்போல் டாஸ் வென்றவுடன், பேட்டிங்கை தேர்வு செய்திருக்க வேண்டும்.
கடந்த 2017-ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணி செய்த தவறுகளை இந்த முறை பாகிஸ்தான் செய்துள்ளது. கர்மா பாகிஸ்தான் பக்கம் திரும்பியது. சராசரியான பாகிஸ்தான் வீரர்களிடம் இருந்து மிகப்பெரிய அளவுக்கு செய்யக்கூடிய விஷயங்களை எதிர்பார்க்க முடியாது.
பயிற்சியாளர் மிக்கி ஆர்த்தரும், அணி நிர்வாகமும் அணியை மேம்படுத்த எந்த முயற்சியும் எடுக்கவில்லை. கேப்டன் சர்பிராஸ் அகமது 10-ம்வகுப்பு மாணவர் போல் செயல்பட்டு முடிவுகளை எடுக்கிறார். எவ்வாறு வெற்றி பெறுவது என அவருக்குத் தெரியவில்லை .
பாகிஸ்தான் அணிக்கு ட்வீட் செய்து இம்ரான் கான் ஊக்கப்படுத்தக்கூடாது. எந்த வீரர்கள் சிறப்பாக விளையாடுவார்களோ அந்த வீரர்களுக்கு ட்வீட் செய்ய வேண்டும்.
இவ்வாறு அக்தர் தெரிவித்தார்.
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
`சடன் பிரேக்’ கொடுத்த பாடம் ! - `தலை'தெறிக்க ஓடிய ரூட்டுத் தலைகள்
சென்னையில் கோடை விடுமுறை முடிந்து கல்லூரிகள் மீண்டும் திறந்தன. `பஸ் டே’ கொண்டாடத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் மாணவர்கள் பஸ் டே கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். பச்சையப்பன் கல்லூரி, மாநிலக் கல்லூரி, நந்தனம் கலைக் கல்லூரி, தியாகராய கல்லூரிகள் நேற்று திறக்கப்பட்டதால், மாணவர்கள் பஸ் டே கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் பல இடங்களில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. ஏற்கெனவே தண்ணீர் பஞ்சத்தில் அடிபட்டுக் கிடக்கும் சென்னைவாசிகள் மாணவர்கள் ஏற்படுத்திய இடர்ப்பாடுகளால் கடுமையாக எரிச்சல் அடைந்தனர். காலையிலேயே வெயில் வேறு கொளுத்த பஸ் டே கொண்டாட்டத்தால் நெரிசலில் சிக்கி இரு சக்கர வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தைச் சந்தித்தனர். ஷெனாய் நகரில் நேற்று காலை மாநகரப் பேருந்தில் ஏராளமான மாணவர்கள் பஸ்டே கொண்டாடினர். அலங்கரிக்கப்பட்ட பேருந்தின் மேற்கூரையில் ஏராளமான மாணவர்கள் அமர்ந்திருந்தனர். உற்சாகத்துடன் அவர்கள் கோஷமிட்டுக்கொண்டு வந்தனர்.
பேருந்தின் முன்புறம் இரு சக்கர வாகனத்திலும் மாணவர்கள் சென்றுகொண்டிருந்தனர். பேருந்து ஆடி அசைந்தபடி வந்து கொண்டிருந்தது. அப்போது, பேருந்தின் முன்புறம் இரு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த மாணவர்கள் திடீரென்று பிரேக் அடித்தனர். இதனால், அவர்கள் மீது மோதாமல் இருக்க பஸ் டிரைவர் சடன் பிரேக் போட்டார். அப்போது ஏற்பட்ட அதிர்ச்சியில் பேருந்தின் முகப்பில் அமர்ந்திருந்த ஏராளமான மாணவர்கள் மொத்தமாக அப்படியே கீழே விழுந்தனர்.
அதில் ஒருவர், இரு சக்கர வாகனத்தில் முன்னால் சென்றுகொண்டிருந்த மாணவரின் கழுத்துமீது விழுந்தார். பல மாணவர்களுக்கு அடிபட்டது. 'ஐயோ அம்மா'னு கூச்சல் போட்டவாறு அங்கிருந்து நகர்ந்தனர். அடிபட்ட மாணவர்கள் பலர் நடக்க முடியாமல் நடந்து சென்றனர். எனினும், மாணவர்களுக்குப் பெரிய காயம் எதுவும் ஏற்படவில்லை. மாணவர்கள் கீழே விழும் வீடியோ காட்சிகள் இணையத்தில் பரவியது. இணையத்தில் மாணவர்களுக்குக் கண்டனம் எழுந்ததே தவிர, யாரும் பரிதாபப்படவில்லை. பேருந்தில் இருந்து தூக்கி எறியப்பட்ட அதிர்ச்சியிலிருந்து இன்னும் பல மாணவர்கள் மீளவில்லை என்று சொல்லப்படுகிறது.
பஸ்டே நடத்தி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக 26 மாணவர்கள் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
போலீசார் தாக்கியதில் உயிரிழந்த இளைஞர் : இளைஞரின் மனைவி தற்கொலை முயற்சி
பதிவு : ஜூன் 18, 2019, 02:47 PM
மதுரையில் போலீசார் தாக்கியதில் இளைஞர் உயிரிழந்ததாக குற்றம்சாட்டப்படும் நிலையில், அவரின் மனைவி, தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை சிம்மக்கல் அருகே கடந்த சனிக்கிழமை இரவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த விவேகானந்தகுமார், சரவணகுமார் ஆகிய இருவர் நிறுத்தாமல் சென்ற நிலையில், போலீசார் லத்தியால் அவர்களை தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த விவேகானந்தகுமார், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து நேற்றைய தினம் இந்த சம்பவம் தொடர்பாக, தாக்கிய காவலர் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என உறவினர்கள் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் தாக்குதல் சம்பவத்தின் போது பணியில் இருந்த 6 காவலர்களின் பெயரை ஆட்சியர் சாந்தகுமார் அளித்த பின்னரே, இரவு உடற்கூறாய்வு நடைபெற்றது. தொடர்ந்து, தாக்குதல் நடத்திய காவலர் மீது வழக்குப்பதிவு செய்யாவிட்டால், உடலை வாங்க மாட்டோம் எனக்கூறி மறியலில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், இன்று அதிகாலை விவேகானந்தகுமாரின் மனைவி கஜப்பிரியா வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த சம்பவம் அவரது குடும்பத்தினர் இடையே மேலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
பீகாரில் மூளைக்காய்ச்சல் பலி: முதல்வர் மீது பொதுநல வழக்கு
குழந்தைகளின் எண்ணிக்கை 109 ஆக அதிகரித்துள்ளது. இதில் முஷாபர்நகர் ஸ்ரீ கிருஷ்ணா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மட்டும் 83 குழந்தைகள் பலியாகி உள்ளனர்.
இந்நிலையில் மூளைக்காய்ச்சலுக்கு குழந்தைகள் பலியான சம்பவத்தில் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்காததாக அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார், மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மங்கள்பாண்டே, மத்திய சுகதாரம் மற்றும் குடும்பல அமைச்சர் ஹர்ஷ்வர்தன், இணை அமைச்சர் அஸ்வினி சவுபே உள்ளிட்டோர் மீது பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு வரும் 26-ம் தேதி விசாரணைக்கு வருகிறது.
ஹர்ஷ்வர்தன், நிதிஷ் ஆய்வு:
முன்னதாக முஷாபர்நகர் மருத்துவமனையில் மேலும் 290 குழந்தைகள் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சைபெற்று வருகின்றனர். பருவமழை இல்லாத நிலையில் இந்த நோய் குழந்தைகள் இடையே பரவியதாக கூறப்படுகிறது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் முஷாபர்நகர் மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.
தொடர்ந்து முதல்வர் நிதிஷ்குமார் ஸ்ரீ கிருஷ்ணா மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சென்று ஆய்வு செய்து படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் போதிய மருந்து மாத்திரைகளை இருப்பு வைக்கவும் உத்தரவிட்டார்.
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
தமிழ் வாழ்க என்றதற்கு கொதித்த பாஜக எம்பிக்கள்.. ஒரே வார்த்தையில் சாந்தப்படுத்திய பாரிவேந்தர்
டெல்லி: தமிழ் வாழ்க என்று கூறி தமிழக எம்பிக்கள் பலர் பதவியேற்றுக் கொண்ட போது பாஜக எம்பிக்கள் பாரத் மாதா கி ஜே என முழக்கமிட்டனர். அவர்களை இந்தியாவும் வாழ்க என கூறி பாரிவேந்தர் சாந்தப்படுத்தினார்.
நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு ஏற்கெனவே பிரதமராக இருந்த நரேந்திர மோடி தலைமையிலான அரசு மீண்டும் பதவி ஏற்றுள்ளது. இதையடுத்து, புதிய 17-வது மக்களவைக்கான முதல் கூட்டத்தொடர், நேற்று தொடங்கியது.
நேற்றும், இன்றும் புதிய எம்.பி.க்கள் பதவி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது தமிழக எம்பிக்கள் பதவியேற்றனர். முதலில் புதுச்சேரி எம்பி வைத்திலிங்கம் பதவியேற்ற போது தமிழிலேயே பதவியேற்றார்.
தொகுதி வரிசைபடி
அப்போது மேஜையை தட்டி தமிழக எம்பிக்கள் வரவேற்றனர். இதைத் தொடர்ந்து திருவள்ளூர் எம்பி ஜெயக்குமார் முதல் தமிழக எம்பிக்கள் தொகுதி வரிசையின்படி பதவியேற்றுக் கொண்டனர்.
[color][font]
கூச்சல்
அவர்களும் தமிழிலேயே பதவியேற்றனர். தமிழ் வாழ்க என ஒவ்வொருவரும் கோஷமிட்டனர். அப்போது பாஜக எம்பிக்கள் பாரத் மாதா கி ஜே என பதில் முழக்கமிட்டதால் லோக்சபாவில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் திமுக எம்எல்ஏ சண்முகசுந்தரம் மூன்று முறை தமிழ் வாழ்க என கூறியதால் பாஜக எம்பிக்கள் கூச்சலிட்டனர்.
[/font][/color]
[color][font]
பாஜக எம்பிக்கள்
இதைத் தொடர்ந்து பெரம்பலூர் தொகுதி எம்பியாக பாரிவேந்தர் பதவியேற்க வந்தார். அப்போது பாரிவேந்தர் தமிழ் வாழ்க இந்தியாவும் வாழ்க என கூறினார். இதன் மூலம் பாஜக எம்பிக்கள் சற்று சாந்தமடைந்தனர்.[/font][/color]
[color][font]
லோக்சபாவில் பரபரப்பு
எனினும் அடுத்தடுத்து வந்தோர் தமிழ் வாழ்க என கூறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பாரத் மாதா கி ஜே என கோஷமிட்டதுடன் ஜெய் ஸ்ரீராம் என கோஷமிட்டனர். அவர்களை இடைக்கால சபாநாயகர் எச்சரித்தார்.[/font][/color]
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
ஜெய்ஸ்ரீராம் என முழங்கி ஒவைஸியை சீண்டிய பாஜக எம்பிக்கள்.. பதிலுக்கு அவர் என்ன செய்தார் தெரியுமா?
டெல்லி: ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஒவைஸி இன்று பதவியேற்ற போது ஜெய்ஸ்ரீராம் என முழங்கிய பாஜக எம்பிக்களுக்கு மென்மையான பதிலடியை கொடுத்தார்.
நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. இதில் தேர்வு செய்யப்பட்ட மக்களவை எம்பிக்கள் நேற்றும் இன்றும் பதவியேற்றுக் கொண்டனர். இந்த நிலையில் தமிழக எம்பிக்களும் இன்றைய தினம் பதவியேற்றனர்.
அவர்கள் அனைவரும் தமிழில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர். 38 தமிழக எம்பிக்களில் சிலர் தமிழ் வாழ்க என கோஷமிட்டனர். அப்போது அவையில் லேசான சலசலப்பு ஏற்பட்டது.
பதிலுக்கு பாஜக எம்பிக்கள் பாரத் மாதா கி ஜே என முழங்கினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதுபோல் மாநிலங்களின் வரிசையின் படி தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த எம்பிக்கள் பதவியேற்றனர்.
[color][size][font]
பாரத் மாதா கி ஜே
அப்போது ஹைதராபாத் எம்பியும் ஏஐஎம்ஐஎம் தலைவருமான அசாதுதீன் ஒவைஸியின் பெயரை கூறி அழைத்தனர். பதவியேற்க வந்த போது பாஜக எம்பிக்கள் பாரத் மாதா கி ஜே, ஜெய் ஸ்ரீராம் என முழக்கமிட்டனர்.[/font][/size][/color]
[color][size][font]
அமர்ந்தார்
அதையும் மீறி அவர் பதவியேற்றுவிட்டு தனக்கே உரிய கோஷமான ஜெய் பீம், ஜெய் மீம், தக்பீர் அல்லாஹ் ஹு அக்பர், ஜெய்ஹிந்த் ("Jai bheem,Jai Meem, Takbeer ,.' hu Akbar, Jai Hind" ) என கோஷமிட்டுவிட்டு தனது இருக்கையில் அமர்ந்தார்.
[/font][/size][/color]
[/url]
Quote:
Md Asif Khan آصِف@imMAK02
When @asadowaisi comes for oath then suddenly MPs started sloganeering in the Parliament.
He gave it back with "Jai bheem,Jai Meem, Takbeer ,.' hu Akbar, Jai Hind"
Savage [img=17.9x18]https://abs.twimg.com/emoji/v2/72x72/1f60d.png[/img][img=16.9x18]https://abs.twimg.com/emoji/v2/72x72/1f60d.png[/img][img=17.9x18]https://abs.twimg.com/emoji/v2/72x72/1f923.png[/img][img=16.9x18]https://abs.twimg.com/emoji/v2/72x72/1f44f.png[/img][img=17.9x18]https://abs.twimg.com/emoji/v2/72x72/1f44f.png[/img]
9,303
1:19 PM - Jun 18, 2019
[color][size][font][size][color][size][font]
3,258 people are talking about this
[url=https://twitter.com/imMAK02/status/1140889296351555584]
Twitter Ads info and privacy
[/font][/size][/color]
[/size]
EXPANDந்தைகள் இறப்பு
இதுகுறித்து ஒவைஸி செய்தியாளர்களிடம் என்னை பார்த்தவுடன் இதுகுறித்து அவர்கள் நினைவில் வைத்துக் கொண்டிருப்பது சந்தோஷமாக இருக்கிறது. அதே போல் அவர்கள் அரசியலமைப்பையும், பீகாரில் குழந்தைகள் இறப்பையும் நினைவில் கொள்ள வேண்டும் என்றார்.[/font][/size][/color]
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
சென்னை கிழக்கு தாம்பரத்தில் அரசு உதவி பெரும் பெண்கள் மேல்நிலை பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது.இதில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை செயல்பட்டு வருகிறது.இந்த பள்ளியில் மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகிறார்கள்.இதனிடையே சென்னையில் நிலவி வரும் தண்ணீர் தட்டுப்பாடு இந்த பள்ளியையும் விட்டு வைக்கவில்லை.தண்ணீர் பற்றாக்குறை காரணமாக 6 முதல் 8-ஆம் வகுப்புகளுக்கு நேற்றும் இன்றும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளி கல்வி துறையின் முறையான அனுமதி பெற்றே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.இருப்பினும் இது பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இது குறித்து பள்ளி நிர்வாகம் கூறுகையில் ''இந்த பகுதியில் தண்ணீர் பிரச்சனை அதிகமாக காணப்படுகிறது. அதிகமான விலை கொடுத்தே தண்ணீரை வாங்கும் சூழ்நிலை உள்ளது.
அத்துடன் கூடுதல் தண்ணீரை சேமித்து வைக்கும் வசதியும் இல்லை.எனவே கீழ்நிலை நீர் தேக்க தொட்டி கட்டும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.அந்த பணியானது இன்னும் 2 நாட்களில் முடிந்து விடும்.அதன் பின்பு பள்ளியானது வழக்கம் போல செயல்படும்'' என தெரிவித்துள்ளனர். சென்னையின் தண்ணீர் பிரச்சனை என்பது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது.இதனால் சில ஐடி நிறுவனங்கள் தங்களது பணியாளர்களை வீட்டிலிருந்து வேலை செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளது.இதனிடையே தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக தாம்பரத்தில் உள்ள பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.இது பெற்றோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
'சென்னை'க்கு சோதனை மேல் சோதனை'...'பள்ளி எடுத்த அதிரடி முடிவு' ... அதிர்ச்சியில் பெற்றோர்கள் !
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
சசிகலா பெயர் நீக்கம்... பணியாளர்கள் வெளியேற்றம்... ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டில் என்ன நடக்கிறது?
சிறைக்குப் போனதற்காக... அல்லது பழிவாங்குவதற்கா எனத் தெரியவில்லை சசிகலா, இளவரசி பெயர்கள் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறது.
ஜெயலலிதா வாக்களிக்கும் ஸ்டெல்லா மாரீஸ் வாக்குச் சாவடியில் பணியாற்றிய முகவர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது, ``சசிகலாவின் பெயரை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கிவிட்டார்கள்'' என்கிற தகவலை பேச்சின் ஊடே, சொன்னபோது ஆச்சர்யமாக இருந்தது.
சசிகலா வாழ்க்கையின் பெரும்பகுதி போயஸ் தோட்டத்தில்தான் கழிந்தது. ஜெயலலிதா, அ.தி.மு.க-வில் ஐக்கியமான காலத்தில், அவருக்கு பி.ஏ-வாக இருந்தவர் பிரேமா. அ.தி.மு.க-வின் கொள்கைபரப்புச் செயலாளராக இருந்து, ராஜ்ய சபா எம்.பி-யாக உயர்ந்ததுவரையில் ஜெயலலிதாவுக்கு எல்லா வகையிலும் உதவிகளைச் செய்து வந்தார் பிரேமா. அப்போது, கடலூர் கலெக்டராக சந்திரலேகா ஐ.ஏ.எஸ். இருந்தபோது, அங்கே அரசு மக்கள் தொடர்பு அதிகாரியாகப் பணியாற்றிக்கொண்டிருந்தார் எம்.நடராசன். அவரின் மனைவி சசிகலா, `வினோத் வீடியோ விஷன்' என்ற பெயரில் வீடியோ கடை நடத்தி வந்தார். ``ஜெயலலிதாவின் நிகழ்ச்சிகளைக் கவர்செய்ய நல்ல ஒத்துழைப்பு தாருங்கள்'' என அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர் சொல்ல...சந்திரலேகா மூலம் நடராசனுக்கு அந்த வாய்ப்புக் கிடைத்தது. அதன்மூலம் நடராசனும் சசிகலாவும் ஜெயலலிதாவுடன் ஒட்டிக்கொண்டார்கள். இதனால் பிரேமா துரத்தியடிக்கப்பட்டார்.
இளவரசி வாக்களித்த போது...
[color][font]
சென்னை ஆழ்வார்பேட்டை, பீமன்ன கார்டன் தெருவில் வசித்து வந்த சசிகலா, 1987-ம் ஆண்டுக்குப் பிறகு ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டிலேயே குடியேறினார். அன்றிலிருந்து `பழைய எண் 36. புதிய எண் 81, போயஸ் கார்டன்'தான் சசிகலாவின் முகவரி ஆகிவிட்டது. சசிகலாவின் ரேஷன் கார்டு, எரிவாயு இணைப்பு, வங்கிக் கணக்கு என அனைத்தும் இந்த முகவரியில்தான் இருக்கிறது. ஒவ்வொரு தேர்தலிலும் ஜெயலலிதாவுடன் சசிகலாவும் வந்து, ஸ்டெல்லா மாரீஸ் கல்லூரி வாக்குச்சாவடியில் வாக்களிப்பார்.
சசிகலாவின் சகோதரர் ஜெயராமன்தான், ஜெயலலிதாவின் ஹைதராபாத் திராட்சைத் தோட்டத்தைப் பார்த்துக் கொண்டார். அங்கே நடந்த மின்சார விபத்தில் அவர் இறந்துபோக, அவருடைய மனைவி இளவரசி சசிகலாவுடன் போயஸ் கார்டனில் நிரந்தரமாகத் தங்கிவிட்டார். அதனால் இளவரசிக்கும், ஜெயலலிதாவின் வீடுதான் நிரந்தர முகவரி ஆகிப்போனது. இருப்பிடச் சான்றிதழ் முதல் வாக்காளர் அடையாள அட்டைவரை இளவரசிக்கும் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் முகவரிதான் தரப்பட்டிருக்கிறது.
ஜெயலலிதா உயிருடன் இருந்தவரை, போயஸ்கார்டனில் அதிகாரம் செலுத்திவந்த சசிகலா, அவர் மறைவுக்குப் பிறகு கட்சியிலும் ஆட்சியிலும் அதிகாரம் செலுத்த முயன்றார். முதல்வர் பதவியில் அமர ஆசைப்பட்டவர், கடைசியில் சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறைக்குத் தள்ளப்பட்டார். எடப்பாடியும் பன்னீர்செல்வமும் இணைந்த பிறகு, ``ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லம் நினைவு இல்லமாக மாற்றப்படும்'' என அறிவித்தார்கள். அதற்காக கருத்துக்கேட்பு கூட்டங்கள் எல்லாம் நடத்தப்பட்டன. சசிகலாவும், இளவரசியும் சிறைக்குப் போனபிறகு போயஸ் கார்டனில் இப்போது யாரும் வசிக்கவில்லை.
ஜெயலலிதா இறந்த பிறகு அவரின் பெயர் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டது. அப்போதுகூட சசிகலா, இளவரசி மற்றும் கார்டனில் தங்கிப் பணியாற்றும் ஊழியர்கள் ஆகியோரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்தன. கடந்த மாதம் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின்போதுதான் சசிகலா, இளவரசி ஆகியோரின் பெயர்கள் நீக்கப்பட்டிருக்கின்றன.
[/font][/color]
சசிகலா மற்றும் பணியாளர்கள் பெயர்கள் நீக்கப்பட்ட வாக்காளர் பட்டியல்...
[color][font]
ஜெயலலிதா இருந்தபோது சமையல்காரர், வாட்ச்மேன், தோட்டக்காரர், அலுவலக உதவியாளர்கள், டிரைவர்கள், கம்ப்யூட்டர் ஆபரேட்டர் என 15 பேர் போயஸ் கார்டன் வீட்டில் வசித்தார்கள். ஜெயலலிதா மறைந்து ஓராண்டு கடந்தும் தொடர்ந்து அங்கே வசித்தார்கள். அதன்பிறகுதான் அவர்கள் வெளியேறினார்கள். ஜெயலலிதா உட்பட கார்டனில் வசித்தவர்களுக்குச் சமைத்துப் போட்டவர் ராஜம்மாள். 74 வயதாகும் ராஜம்மாள், பல வருடங்களாக கார்டனிலேயே தங்கி சமையல் வேலை செய்துவந்தார். மணி என்பவரின் மகள் லட்சுமி, ஜெயலலிதாவின் சுற்றுப்பயணங்களில் அவரின் உதவியாளராக உடன் சென்றவர். தேர்தல் பிரசாரம் மற்றும் வெளியூர் நிகழ்ச்சிகளுக்கு ஜெயலலிதா ஹெலிகாப்டரில் சென்றபோது, அவருடன் லட்சுமியும் பயணம் செய்வார். கண்ணன், சுரேஷ்குமார், மற்றொரு சுரேஷ்குமார், ராஜீவ், பீம்தபா, ராஜன் பிரதான், ராவ் பகதூர், பாரதிராஜ், ஆனந்தன், யோகநாத், சதீஷ், தங்கமணி, கார்த்திக் என மொத்தம் 15 பேர் கார்டனில் வசித்து வந்தார்கள். இவர்களின் பெயர்களும் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருந்தன. ஜெயலலிதா இருந்தவரையில் தேர்தல்களில் வாக்களித்து வந்தார்கள். சசிகலா, இளவரசியோடு இந்த 15 பேரின் பெயர்களும் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறது.
[/font][/color]
வாக்குச் சாவடியில் ஜெயலலிதாவும் சசிகலாவும்...
[color][font]
``எந்த அடிப்படையில் சசிகலா மற்றும் இளவரசியின் பெயர்கள் நீக்கப்பட்டிருக்கும்" என வழக்கறிஞர் ரமேஷிடம் கேட்டோம். ``மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் பிரிவு 62 உட்பிரிவு 5-ன் படி, சிறையில் இருக்கிற கைதிகள் மற்றும் போலீஸ் காவலில் இருக்கிற கைதிகள் தேர்தலில் வாக்களிக்க முடியாது. இந்த விதியில் உள்ள விதிவிலக்குப்படி, தடுப்புக் காவலில் இருப்பவர்கள் கைதி என்கிற கட்டுப்பாட்டுக்குள் வரமாட்டார்கள். அதனால், அவர்கள் வாக்களிக்க எந்தத் தடையும் இல்லை. வாக்காளர் பட்டியல் ஆய்வு செய்யும்போது, சம்பந்தப்பட்ட வீடுகளில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு, அங்கே வாக்காளர்கள் இல்லையெனில் அவர்கள் பெயர்கள் நீக்கப்படலாம். அல்லது யாராவது ஆட்சேபனை அளித்து, அதன் காரணமாக வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டிருக்கும்'' என்றார்.
[/font][/color]
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
2-வது கணவனின் ஆசைக்காக மகனை கொன்ற கொடூரத்தாய்!
வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன் இவர் அதே பகுதியில் கூலி வேலை செய்து வருகிறார். அவரது மனைவி காவ்யா இவர்கள் இருவருக்கும் கடந்த 2014ஆம் ஆண்டு திருமணம் நடந்தது.
அவர்களுக்கு நான்கு வயதில் தருண் என்ற மகனும் உள்ளார். கணவன் மனைவிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் காவ்யா அவரது தாய் வீட்டின் அருகே தனியாக வீடு வாடகைக்கு எடுத்து வாழ்ந்து வந்தார்.
அப்போது அவருக்கும், தியாகராஜன் என்பவருக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டு, கடந்த ஜனவரி மாதம் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திருமணம் நடந்த நாளில் இருந்து, தியாகராஜனுக்கு, காவ்யாவின் மகனை பிடிக்காமல் இருந்துள்ளது.
இதனால் காவ்யாவும், தியாகராஜனும் சேர்ந்து அவரது மகன் தருணை கொலை செய்துள்ளனர். இந்நிலையில் காவ்யாவின் தாய், வீட்டிற்கு வந்து தருண் எங்கே என்று கேட்டதற்கு, அதிர்ச்சியில் உறைந்துள்ளார் காவ்யா. இதையடுத்து இருவரும் சேர்ந்து மகனை கொன்றதை ஒப்புக்கொன்டனர்.
பின்னர் காவ்யா அப்பகுதி காவல்நிலையத்தில் உண்மையை ஒப்புக்கொண்டு சரணடைந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், தலைமறைவான தியாகராஜனை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
first 5 lakhs viewed thread tamil
•
|