Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
உலகக் கோப்பை 2019 : பந்து ஸ்டம்பை முத்தமிடுகிறது; ஆனால் பெய்ல்ஸ் விழுவதில்லை - தப்பிக்கும் பேட்ஸ்மேன்கள்
படத்தின் காப்புரிமைSTU FORSTER-IDI
வார்னர் இன்று பும்ராவின் பந்தில் இரண்டாவது ஓவரில் அவுட் ஆகும் வாய்ப்பில் இருந்து தப்பித்தார்.
இன்று ஆஸ்திரேலியா இந்தியா போட்டியின்போது இரண்டாவது ஓவரை பும்ரா வீசினார். வார்னர் எதிர்கொண்ட அந்த ஓவரின் முதல் பந்தை பும்ரா வீச, அந்த பந்து ஸ்டம்பில் பட்டது ஆனால் பெய்ல்ஸ் விழவில்லை. இதனால் வார்னர் தப்பித்தார்.
லெக் ,ஸ்டம்பில் பந்துபட்டபோதும் பெய்ல்ஸ் விழாததன் காரணமாக பும்ராவுக்கு விக்கெட் கிடைக்கவில்லை.
ஆனால் இதுவொன்றும் புதுமையான நிகழ்வு அல்ல. இந்த உலகக் கோப்பையில் மட்டுமே இதுவரை நடந்த 14 போட்டிகளில் ஐந்து முறை பேட்ஸ்மேன்கள் இதனால் தப்பித்துள்ளனர்.
எல்.இ.டி விளக்குகள் பொருத்தப்பட்டுள்ள இந்த பெய்ல்ஸ்கள் மிகவும் உறுதியாக இருக்கின்றனவா அல்லது பெய்ல்ஸ் விழுவதற்கேற்ப தேவையான 'விசை' கிடைக்காமல் போகின்றதா என பலர் ஆச்சர்யப் படுகிறார்கள்.
கடந்த சனிக்கிழமையன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ஃபின்ச் ''எல் இ டி விளக்குகள் பொருத்தப்பட்டுள்ள ஜிங்கிள் பெய்ல்ஸ்சற்று வலுவானதாக இருப்பது போல தெரிகிறது. எனவே இந்த பெய்ல்ஸை தகர்க்க கூடுதல் விசை தேவைப்படுகிறது” என்றார்
ஆட்டத்தின் 11-வது ஓவரின் ஐந்தாவது பந்தை அடில் ரஷீத் குயின்டன் டீ காக்குக்கு பந்து வீசினார்.
பந்து ஸ்டம்பில் பட்டதானால் எல்.இ.டி விளக்குகளும் லேசாக மின்னின. ஆனால் பெய்ல்ஸ் விழவில்லை. இங்கிலாந்து ஃபில்டர்கள் திகைத்து நிற்க பந்து பௌண்டரிக்குச் சென்றது. இப்போட்டியில் டீ காக் 68 ரன்கள் எடுத்தது.
2. இலங்கை v நியூசிலாந்து
கார்டிஃபில் நடந்த போட்டியில் ஆறாவது ஓவரில் நியூசிலாந்து அணியின் பௌலர் டிரென்ட் போல்ட் இலங்கையின் பேட்ஸ்மேன் கருணாரத்னேவுக்கு பந்து வீசினார்.
பந்து ஆஃப் ஸ்டம்பில் பட்டது ஆனால் பெய்ல்ஸ் நகரவில்லை. கருணாரத்னேவுக்கு அதிர்ஷ்டமடித்தது. அப்போட்டியில் கருணாரத்னே 52 ரன்கள் எடுத்தார்.
3. ஆஸ்திரேலியா v வெஸ்ட் இண்டீஸ்
மூன்றாவது ஓவரின் ஐந்தாவது பந்தை ஸ்டார்க் வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன் கிறிஸ் கெய்லுக்கு வீசினார்.
பந்து கிறிஸ் கெய்ல் பேட்டை உரசிச் சென்று விக்கெட் கீப்பர் கேட்ச் பிடித்தாக ஆஸ்திரேலியா அப்பீல் செய்ய கள நடுவர் அவுட் கொடுத்தார்.
ஆனால் பந்து கெய்ல் பேட்டில் பட வில்லை. ஆனால் ஸ்டம்பை லேசாக முத்தமிட்டுச் சென்றது. ஆனால் பெய்ல்ஸ் விழவில்லை. கெய்ல் ரிவ்யூ மூலம் தப்பித்தார்.
4. இங்கிலாந்து v வங்கதேசம்
ஆட்டத்தின் 46-வது ஓவரை இங்கிலாந்தில் ஸ்டோக்ஸ் வீசினார். அந்த ஓவரின் மூன்றாவது பந்தை எதிர்கொண்ட சைஃபுதீன் உடலில் பட்டு பந்து ஸ்டம்ப் மீது பட்டது. ஆனால பெய்ல்ஸ் நகரவே இல்லை.
இதனால் சைஃபுத்தீன் அந்த ஓவரில் தப்பித்தார்.
5. இந்தியா v ஆஸ்திரேலியா
பும்ரா வீசிய இரண்டாவது ஓவரில் பெய்ல்ஸ் விழாததால் தப்பித்த வார்னர் அதன் பின்னர் அரை சதம் கண்டார்.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
தரமான சம்பவம்.. ஆஸ்திரேலியாவின் நம்பிக்கையை உடைத்த இந்திய வீரர்கள்.. பழிக்குப் பழி தீர்த்து வெற்றி!
NDvsAUS | ஆஸ்திரேலியாவை அதிரடியால் வீழ்த்தியது இந்தியா
லண்டன் : இந்தியா - ஆஸ்திரேலியா மோதிய 2019 உலகக்கோப்பை தொடரின் லீக் போட்டியில் இந்தியா 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தப் போட்டிக்கான எதிர்பார்ப்பு பலமடங்கு அதிகமாக இருந்தது. ஆஸ்திரேலிய அணி உலகக்கோப்பை தொடருக்கு முன் இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரைக் கைப்பற்றி இருந்ததால் இரண்டு அணிகளுக்கும் இடையே கடும் போட்டி இருந்தது.
அதை சமாளித்த இந்தியா, 2003 உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணியிடம் இறுதிப் போட்டியில் அடைந்த தோல்விக்கு மீண்டும் ஒரு உலகக்கோப்பை தோல்வியை அந்த அணிக்கு பரிசளித்து, பழி தீர்த்துக் கொண்டது.
டாஸ் வெற்றி
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. டாஸ் வெற்றியை சரியாக பயன்படுத்திக் கொண்ட இந்தியா, பேட்டிங்கில் பிரித்து மேய்ந்தது. எந்த இடத்திலும் இந்தியா பேட்டிங்கில் சறுக்கவே இல்லை.
ரோஹித், தவான் அபாரம்
துவக்க வீரர்கள் ரோஹித் சர்மா நிதானமாக ஆடினாலும், 57 ரன்கள் குவித்தார். தவான் தன் இயல்பான ஆட்டத்தை ஆடி 117 ரன்கள் குவித்து, ஐசிசி நடத்தும் தொடர்களில் நான் தான் ராஜா என காட்டினார்.
கோலி, பண்டியா அசத்தல்
அடுத்து விராட் கோலி 82 ரன்கள் எடுத்து மிரட்டினார். ஹர்திக் பண்டியா நான்காம் இடத்தில் பேட்டிங் இறங்கி ஆச்சரியம் அளித்தார். அதைவிட 27 பந்துகளில் 48 ரன்கள் எடுத்து எல்லோருக்கும் ஆச்சரியம் அளித்தார். தான் பொறுப்பான பேட்ஸ்மேன் என நிரூபித்துக் காட்டினார்.
தோனி கடைசி ஐந்து ஓவர்களில் களமிறங்கி அதிரடி ஆட்டம் ஆடினார். 14 பந்துகளில் 27 ரன்கள் குவித்தார். ராகுல் 3 பந்துகளில் 11 ரன்கள் எடுத்து தன்னால் முடிந்த உதவியை செய்தார். இந்தியா 5௦ ஓவர்களில் 352 ரன்கள் குவித்தது.
[color][size][font]
இந்தியா நிர்ணயித்த இலக்கு
இந்தப் போட்டி நடைபெற்ற ஓவல் மைதானத்தில் 300+ ரன்கள் "தண்ணி பட்ட பாடு" என்பதால் இந்தியா பந்துவீச்சில் கவனமாக இருக்க வேண்டும் என்ற நிலை இருந்தது. அதற்கேற்ப, ஆஸ்திரேலிய அணி சிறப்பான துவக்கம் பெற்றது.
[/font][/size][/color]
[color][size][font]
கவனமான ஆட்டம்
சற்று நிதானமாக ரன் சேர்த்தாலும், 13 ஓவர்கள் வரை விக்கெட் இழக்காமல் 60 ரன்கள் சேர்த்தனர் ஆரோன் பின்ச் - டேவிட் வார்னர். இந்திய பந்துவீச்சாளர்களால் விக்கெட் எடுக்க முடியாத அளவு கவனமாக ஆடினர்.
பின்ச் ரன் அவுட்
ஆனால், ரன் ஓடுவதில் இருவரும் சொதப்பினர். அந்த வாய்ப்பை பயன்படுத்திய ஜாதவ், பண்டியா இணைந்து பின்ச்சை ரன் அவுட் செய்தனர். அவர் 36 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து வார்னர் - ஸ்மித் கூட்டணி அமைத்தனர். ஆனால், இவர்களும் நிதானமாக ரன் சேர்க்க ரன் ரேட் அழுத்தத்தில் ஆழ்ந்தது ஆஸ்திரேலியா.
[/font][/size][/color]
[color][size][font]
சரிந்த விக்கெட்கள்
வார்னரை சாஹல் 56 ரன்களில் வெளியேற்ற, அடுத்து வந்த கவாஜா 42 ரன்கள் சேர்த்து பும்ரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதன் பின் ஆஸ்திரேலியா ஆட்டம் கண்டது. ஸ்மித் 69, ஸ்டாய்னிஸ் 0, மேக்ஸ்வெல் 28 என அடுத்தடுத்து விக்கெட்களை இழந்தது ஆஸ்திரேலியா.
[img=0x0]data:image/svg+xml,%3Csvg%20xmlns%3D%22http%3A%2F%2Fwww.w3.org%2F2000%2Fsvg%22%20width%3D%22512%22%20height%3D%22288%22%3E%3C%2Fsvg%3E[/img]
[/font][/size][/color]
[color][size][font]
அலெக்ஸ் கேரி அரைசதம்
அப்போதே ஆஸ்திரேலியாவின் தோல்வி உறுதியானது. அந்த அளவுக்கு தேவைப்படும் ரன் ரேட் உச்சத்தில் இருந்தது. இந்த கலவரத்துக்கு நடுவே அலெக்ஸ் கேரி அரைசதம் அடித்தார். எனினும், பின்வரிசை வீரர்களை, பும்ரா, புவனேஸ்வர் குமார் தட்டித் தூக்கினர்.
[/font][/size][/color]
[color][size][font]
இந்தியா வெற்றி
ஆஸ்திரேலியா சரியாக கடைசி பந்தில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 316 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தது. இந்தியா 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 4 புள்ளிகளுடன் உலகக்கோப்பை லீக் சுற்றில் வெற்றிகரமான அணியாக கால் பதித்துள்ளது இந்தியா.
[/font][/size][/color]
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
உ.பி.யில் கடும் வெப்பம்- ரெயிலில் பயணித்த 4 தமிழர்கள் பலி
ஜான்சி:
இந்தியா முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. தென்மேற்கு பருவமழை தொடங்கிய போதிலும் வட மாநிலங்களில் வெப்பத்தின் தாக்கம் குறைந்தபாடில்லை. குறிப்பாக உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள பண்டல்கண்ட் பகுதியில் வரலாறு காணாத அளவு 50 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியது.
இந்நிலையில், தமிழகத்தை சேர்ந்த 68 பேர் அடங்கிய குழு வாரணாசி மற்றும் ஆக்ராவிற்கு சுற்றுலா சென்றிருந்தனர். அவர்கள் ஆக்ராவில் இருந்து கேரளா எக்ஸ்பிரஸ் ரெயிலில் படுக்கை வசதிகொண்ட சாதாரண பெட்டியில் கோவைக்கு நேற்று திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, கடும் வெப்பம் காரணமாக ஜான்சி அருகே அவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதில் வெப்பம் தாங்க முடியாமல் 4 பேர் பலியாகினர்.
[color][size][font]
பச்சையா (வயது 80), பாலகிருஷ்ணா (வயது 67), தனலட்சுமி (வயது 74), தெய்வானை (வயது 71) ஆகியோர் பலியானதாக தெரியவந்துள்ளது. மேலும் சுப்பாரய்யா (வயது 71) என்பவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிரேத பரிசோதனைக்கு பின்னரே உயிரிழந்ததற்கான காரணம் தெரியவரும் என ரெயில்வே தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
[/font][/size][/color]
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
சசிகலாவை முன்கூட்டியே விடுதலை செய்யலாம்- கர்நாடக அரசுக்கு சிறைத்துறை நிர்வாகம் கடிதம்
பெங்களூரு:
அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் (1991-1996) ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, வி.என்.சுதாகரன் ஆகிய 4 பேரும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக வழக்கு தொடரப்பட்டது.
இது தொடர்பான விசாரணையில் சசிகலாவும், அவரது உறவினர்களும் ரூ.66.65 கோடிக்கு சொத்துக்கள் வாங்கி குவித்து இருப்பதாக கூறப்பட்டது. பெங்களூரு சிறப்பு கோர்ட்டில் விசாரணை நடந்தது.
கடந்த 2014-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ந் தேதி இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 4 பேருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
அதோடு ஜெயலலிதாவுக்கு 100 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. சசிகலா உள்பட மற்ற 3 பேருக்கும் தலா ரூ.10 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் வெளியே வந்தனர்.
சிறை தண்டனையை எதிர்த்து 4 பேரும் கோர்ட்டில் அப்பீல் செய்தனர். அதை விசாரித்த கர்நாடகா ஐகோர்ட்டு, ஜெயலலிதா உள்பட 4 பேரையும் விடுவித்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
[color][size][font]
இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ந்தேதி தீர்ப்பை வெளியிட்டது. ஜெயலலிதா மரணம் அடைந்த நிலையில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேரும் குற்றவாளிகள் என்று சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்தது. 4 ஆண்டுகள் சிறை தண்டனையையும் சுப்ரீம் கோர்ட்டு உறுதிப்படுத்தியது.
இதைத்தொடர்ந்து சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேரும் 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15-ந்தேதி பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டனர்.
சசிகலா சிறை விதிகளை மீறி நடந்து கொண்டதாக கடந்த ஆண்டு குற்றச்சாட்டுகள் எழுந்தது. சிறைத்துறை அதிகாரிகளுக்கு அவர் லஞ்சம் கொடுத்ததாக கூறப்பட்டது.
இது தொடர்பாக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வினய்குமார் தலைமையிலான குழு விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்தது.
சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேரும் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டு 2½ ஆண்டுகள் ஆகிறது. அதற்கு முன்பும் அவர்கள் 3 மாதம் வரை சிறையில் இருந்தனர். அதன்படி அவர்கள் அடுத்த ஆண்டு ஆகஸ்டு மாதம் விடுதலையாகி வெளியே வர வேண்டும். இந்த நிலையில் சிறையில் இருந்து சசிகலா முன்கூட்டியே விடுதலையாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
கர்நாடக மாநில சிறைத்துறை விதிகளின்படி நீண்ட கால மற்றும் குறுகிய கால தண்டனை பெற்றவர்கள் மூன்றில் 2 பங்கு காலத்தை சிறையில் கழித்துவிட்டால், அவரை முன்கூட்டியே விடுதலை செய்யலாம் என்ற விதி உள்ளது.
மேலும் சிறையில் தண்டனையை அனுபவிக்கும் காலக்கட்டத்தில் வேறு எந்த தவறும் செய்யாமல், நன்னடத்தையுடன் நடந்து கொண்டால், அந்த அடிப்படையிலும் கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்ய சட்ட விதிகளில் இடம் உள்ளது.
இந்த சட்ட விதிகளை பயன்படுத்தி சசிகலா பெங்களூரு சிறையில் இருந்து முன்கூட்டியே விடுதலையாக வாய்ப்பு உள்ளது. எனவே சசிகலா சிறையில் இருந்து முன்கூட்டியே விடுதலையாகிறார்.
இதுகுறித்து சிறைத்துறை நிர்வாகம் கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதி உள்ளது. சிறை நன்னடத்தை விதிகளின்படி சசிகலாவை டிசம்பர் மாதத்திற்கு முன்பாகவே விடுதலை செய்யலாம் என்று அந்த கடிதத்தில் கூறப்பட்டு உள்ளது.
அந்த கடிதத்தை ஏற்றுக்கொண்டு அரசு உத்தரவிட்டால் ஒரு ஆண்டுக்கு முன்பே அவர் விடுதலையாக வாய்ப்பு உள்ளது. அதாவது வருகிற டிசம்பர் மாதத்துக்கு முன்பே அவர் விடுதலை ஆகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து வக்கீல் ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
கர்நாடக சிறைத்துறையில் சில சலுகைகள் உண்டு. ஒரு கைதி தண்டனை காலத்தில் 50 சதவீதத்திற்கு மேல் அனுபவித்து விட்டால் அவரை சிறைத்துறை நன்னடத்தை விதியின்படி முன்கூட்டியே விடுதலை செய்யலாம் என்று உத்தரவு உள்ளது.
ஆனால் தமிழ்நாட்டில் அந்த விதி கிடையாது. ஒரு குறிப்பிட்ட கைதிகளுக்கு மட்டுமே முன்கூட்டியே விடுதலை செய்ய விதி உள்ளது. மேலும் கர்நாடக அரசு விதிமுறையின்படி விடுமுறை நாட்களை கணக்கில் எடுத்து அந்த விடுமுறை நாட்களை தண்டனை காலத்தில் இருந்து கழித்துக்கொள்வார்கள்.
சசிகலாவை மட்டும் முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்று அந்த கடிதத்தில் கூறவில்லை. தற்போது சிறை தண்டனை அனுபவித்து வரும் ஏராளமான கைதிகளை சிறையின் நன்னடத்தை விதிகளின் கீழ் அவர்களை முன்கூட்டியே விடுதலை செய்யலாம் என்று கர்நாடக சிறைத்துறை அரசுக்கு கடிதம் அனுப்பி உள்ளது. அந்த பட்டியலில் சசிகலா பெயரும் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினா[/font][/size][/color]
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
கிரேஸி மோகனின் உடல் தகனம் செய்யப்பட்டது
நேற்று காலமான வசனகர்த்தாவும், நகைச்சுவை நடிகருமான கிரேஸி மோகனின் உடல், பெசன்ட் நகர் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
பிரபல நகைச்சுவை நாடக நடிகரும் வசனகர்த்தாவுமான கிரேஸி மோகன் உடல்நலக்குறைவால் நேற்று காலமானார். அவரது உடல் சென்னை மந்தைவெளியில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு பல்வேறு தலைவர்கள், திரையுலக நட்சத்திரங்கள், ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
அஞ்சலி நிகழ்ச்சி காலை 9 மணியளவில் முடிவடைந்ததும், இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டன. அதன்பின்னர் கிரேஸி மோகனின் உடல் ஊர்வலமாக பெசன்ட் நகர் மின் மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த இறுதி ஊர்வலத்தில் திரையுலக பிரபலங்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
[img=0x349]https://img.maalaimalar.com/InlineImage/201906111139085068_1_crazymohan-4._L_styvpf.jpg[/img]
[size][font][size]
ஊர்வலம் காலை 11.00 மணியளவில் பெசன்ட் நகர் மின் மயானத்தில் நிறைவடைந்ததும் அங்கு கிரேஸி மோகன் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.
[/size]
[/font][/size]
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
யோகி ஆதித்யநாத்திற்கு எதிரான அவதூறு கருத்து; கொலை குற்றமா என்ன? சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
உத்தரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கு எதிராக அவதூறு ஏற்படுத்தும் வகையில் சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்ததாக டெல்லியை சேர்ந்த பத்திரிக்கையாளர் பிரசாந்த் கனோஜியாவை உ.பி. போலீஸ் கைது செய்தது. இதற்கு பல்வேறு தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இச்சம்பவத்திற்கு எதிராக பத்திரிக்கையாளரின் மனைவி சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட சுப்ரீம் கோர்ட்டு, உ.பி. அரசு மீது கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தியது.
எந்த அடிப்படையில் பத்திரிகையாளரை கைது செய்தீர்கள்? கைது நடவடிக்கையை சரியானதாக கருதுகிறீர்களா? கொலைக்குற்றம் செய்துவிட்டாரா? அவதூறு வழக்கிற்காக நீதிமன்ற காவலில் வைக்க வேண்டிய அவசியம் என்ன? லக்னோ மாஜிஸ்திரேட் தவறான உத்தரவை பிறப்பித்துள்ளார். ஒவ்வொரு தனிநபருக்கும் தன்னுடைய கருத்தை சுதந்திரமாக தெரிவிக்கும் உரிமையுள்ளது. சில நேரங்களில் சில விஷயங்கள் தவிர்க்கப்பட வேண்டியவைதான். அதற்காக கைது செய்வீர்களா? எதற்கெடுத்தாலும் கைது நடவடிக்கை எடுப்பீர்களா? என சரமாரியான கேள்விகளை எழுப்பியது.
ஜாமீனில் வெளிவரமுடியாத பிரிவில் வழக்குப்பதிவு என்பது எப்படி சரியாகும்? எனவும் கடுமையான கண்டனத்தை சுப்ரீம் கோர்ட்டு வெளிப்படுத்தியது.
பத்திரிக்கையாளர் பிரசாந்த் கனோஜியாவிற்கு ஜாமீன் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. ஜாமீன் வழங்கியதால் பிரசாந்த் கனோஜியாவின் சமூக வலைதள கருத்தை ஏற்றுக்கொள்கிறோம் என பொருள் கிடையாது எனவும் குறிப்பிட்டுள்ளது.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
மல்லையாவை முற்றுகையிட்டு திருடன் என முழக்கமிட்ட ரசிகர்கள்
லண்டனில் கிரிக்கெட் பார்த்துவிட்டு வெளியே வந்த விஜய் மல்லையாவை ரசிகர்கள் சிலர் சூழ்ந்துகொண்டு திருடன் என கூறி கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இந்த போட்டியை பார்த்து விட்டு வெளியே வந்த தொழிலதிபர் விஜய் மல்லையாவை முற்றுகையிட்ட ரசிகர்கள் “திருடன்” எனக்கூறி கூச்சலிட்டனர்.
இந்திய வங்கிகளில் சுமார் 9 ஆயிரம் கோடி கடன் பெற்று அதனை திருப்பி தராமல் வெளிநாடு தப்பி சென்ற மல்லையாவை இந்தியாவிற்கு கொண்டு வருவதற்கு மத்திய அரசு முயற்சி எடுத்து வருகிறது.
இந்நிலையில் கிரிக்கெட் போட்டியை பார்த்துவிட்டு திரும்பிய மல்லையாவை ரசிகர்கள் சிலர் முற்றுகையிட்டு ‘திருடன்’ என கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அதேநேரம் அவரை பிடித்திருப்பதாக ஒரு சிலர் கூச்சலிட்டனர். தொடர்ந்து சிலர் அவருடன் செல்பியும் எடுத்துக் கொண்டனர். இதையடுத்து பாதுகாவலர்கள் உதவியுடன் மல்லையா அங்கிருந்து வெளியேறினார்.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
பயணியை அலட்சியப்படுத்திய இரயில்வே நிர்வாகத்திற்கு நீதிமன்றம் அதிரடி அபராதம்
ரயில் பயணிக்கு முறையான சேவை வழங்காத இந்திய ரயில்வே நிர்வாகத்திற்கு 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருநெல்வேலி சாந்தி நகரை சேர்ந்த வரிசை இக்பால் என்பவர் கடந்த 2011ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 13ஆம் தேதி சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு அனந்தபுரி ரயிலில் பயணம் செய்துள்ளார்.
அவருக்கு ரயிலில் மேல்நிலை படுக்கையுடன் கூடிய இருக்கை ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அந்த இருக்கைக்கு செல்வதற்கு முறையான ஏணி வசதி இல்லாமல் இருந்திருக்கிறது.
இதுகுறித்து வரிசை இக்பால் ரயில்வே டிக்கெட் பரிசோதகரிடம் முறையிட்டிருக்கிறார். ஆனால் டிக்கெட் பரிசோதகரோ மாற்று இடம் ஒதுக்கித் தர இயலாது என்றும் முடியவில்லை என்றால் தரையில் படுத்துக் கொள்ளுங்கள் என்றும் கூறியதாகத் தெரிகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த வரிசை இக்பால் ரயில்வே நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளார். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் திருநெல்வேலி நுகர்வோர் நீதிமன்றத்தில் வரிசை இக்பால் வழக்கு தொடர்ந்தார்.
அந்த வழக்கில் தீர்ப்பளித்துள்ள நீதிமன்றம், ரயில்வே நிர்வாகத்தின் சேவை குறைபாட்டுக்கு அபராதமாக 15 ஆயிரமும், வழக்கு செலவிற்கு என ஐந்து ஆயிரமும் சேர்த்து இந்திய ரயில்வே நிர்வாகம் 20 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
எல்இடி பெய்ல்ஸ்: விராத், ஆரோன் பின்ச் கோரிக்கை நிராகரிப்பு
உலகக் கோப்பை தொடரில், ஸ்டம்பில் பந்து பட்டாலும் பெய்ல்ஸ் கீழே விழாததால், எல் இ டி பெய்ல்ஸ்-ஐ நீக்க வேண்டும் என்ற விராத் கோலி, ஆரோன் பின்ச் ஆகியோரின் கோரிக்கையை ஐசிசி நிராகரித்துள்ளது.
தற்போது நடக்கும் உலகக் கோப்பை தொடரில், எல்இடி பெய்ல்ஸ் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது நடுவர்களுக்கான வேலையை எளிதாக்கு கின்றன. இந்த பெய்ல்ஸ் கடந்த 2015 ஆம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடரில் இருந்தே பயன்படுத்தப்பட்டு வருகிறது. நடப்பு உலக கோப்பை தொடரில் பந்து ஸ்டம்பை தாக்கியும் பெய்ல்ஸ் கீழே விழாமல் இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
இந்தியாவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் ஒரு ரன்னில் இருக்கும்போது, பும்ரா வீசிய பந்து, ஸ்டம்பில் தாக்கியது. பெய்ல்ஸ் விழாததால் அதிர்ஷ்டவசமாக அவர் தப்பினார். இதே போல, இந்த உலகக் கோப்பைத் தொடரில் 10 முறை பந்து, ஸ்டெம்பை தாக்கியும் பெய்ல்ஸ் விழவில்லை. இதனால் பந்துவீச்சாளர்களும் கேப்டன்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதை நீக்க வேண்டும் என்று இந்திய கேப்டன் விராத் கோலி, ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பின்ச் ஆகியோர் கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில் அவர்களின் கோரிக்கையை ஐசிசி நிராகரித்துவிட்டது. ‘’தற்போது உலகக் கோப்பை போட்டிகள் மத்திய கட்டத்தை எட்டியுள்ளன. இப்போது எல் இ டி பெய்ல்ஸில் மாற்றம் செய்தால், போட்டியின் நம்பகத்தன்மை கேள்விகுறியாகிவிடும். 2015 உலகக் கோப்பைப் போட்டியில் இருந்தே இந்த பெய்ல்ஸ்தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது’’ என்று ஐசிசி தெரிவித்துள்ளது.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
சசிகலா முன்கூட்டியே விடுதலையா? ஐ.பி.எஸ். அதிகாரி ரூபா பதில்
சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு நான்காண்டு சிறை தண்டனையும், தலா ரூபாய் 10 அபராதமும் விதித்து 2017 பிப்ரவிரி 14ல் உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இதையடுத்து 3 பேரும் கர்நாடக மாநிலம், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் 2017 பிப்ரவரி 15ஆம் தேதி அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் நன்னடத்தை அடிப்படையில் சசிகலா விடுவிக்கப்படலாம் என்று கடந்த சில நாட்களாக செய்திகள் வெளியாகி வந்தன. இதுகுறித்து கர்நாடக மாநில மூத்த ஐஏஎஸ் அதிகாரி ரூபா, நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.
அதில், குற்றவாளிகளை நன்னடத்தையின்படி அவர்களின் தண்டனை காலம் முடிவதற்கு முன்னரே விடுதலை செய்ய விதிமுறை உள்ளது. ஆனால் சசிகலா வழக்கை பொருத்த வரை அந்த விதிமுறைகளுக்குள் வராது. எனவே தண்டனை காலத்திற்கு முன்னதாகவே அவரை விடுவிக்கும் கேள்வியே எழாது என தெரிவித்துள்ளார்.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
மாதவரத்தில் தன்பாலின உறவுக்கு அழைத்து கொலை: சைக்கோ நபரின் அடையாளம் தெரிந்தது
கோப்புப் படம்
சென்னை மாதாவரம், ரெட்டேரியில் தன்பாலின உறவுக்கு அழைத்து 2 பேரின் பாலுறுப்பை அறுத்த நபரை தேடி வந்த போலீஸார் தற்போது அவரது நடமாட்டம் அடங்கிய சிடிடிவி காட்சியை வெளியிட்டு பொதுமக்களுக்கு வேண்டுகோள் வைத்துள்ளனர்.
கடந்த மாதம் 26-ம் தேதி இரவு ரெட்டேரி பாலத்தின் அடியில் படுத்திருந்த அசதுல்லா என்பவரின் பாலுறுப்பு துண்டிக்கப்பட்ட நிலையில் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டுவரப்பட்டார்
அவர் தானே தனது உறுப்பை அறுத்துக்கொண்டதாக தெரிவித்தார். சில நாட்களில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீஸாரும் அதை தற்கொலை என முடிவு செய்து வழக்கை முடித்தனர்.
இந்நிலையில் அதே இடத்தில் ஒருவாரம் கழித்து ஜூன்.2-ம் தேதி கூடங்குளத்தை சேர்ந்த நாராயணபெருமாள் என்பவரின் உறுப்பு துண்டிக்கப்பட்டதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஒரே இடத்தில் ஒரே மாதிரி சம்பவம், ஒரே மாதிரி உள்ளதை கண்டு சந்தேகமடைந்த போலீஸார் நாராயணபெருமாளிடம் விசாரித்தனர்.
அவர் அளித்த வாக்குமூலத்தில் தன்பாலின உறவில் ஈடுபட்டபோது அந்த நபர் மது போதையில் இருந்த எனது உறுப்பை அறுத்துவிட்டார் என தெரிவித்திருந்தார். அப்படியானால் அசதுல்லாவும் இதேப்போன்று தன்பாலின சேர்க்கையின்போது ஆணுறுப்பு அறுக்கப்பட்டிருக்கவேண்டும் என போலீஸார் முடிவுக்கு வந்தனர். தொடர்ந்து போலீஸார் விசாரணை நடத்தினர்.
அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.அதில், நாராயண பெருமாள் சொன்ன அடையாளத்துடன் உறுப்பை அறுத்த நபர் நடமாடும் காட்சி பதிவாகி இருந்தது.
வேட்டி, வெள்ளைச் சட்டை அணிந்தபடி நடமாடும் அந்த நபரின் புகைப்படத்தை வெளியிட்டுள்ள போலீஸார் அந்த சைக்கோ நபர் குறித்து தகவல் தெரிவிந்தால் உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கோ அல்லது மாதவரம் காவல் ஆய்வாளருக்கோ தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
கல்லைக் கூட விட்டு வைக்க மாட்டீங்களா?: கஸ்தூரி ஆவேசம்
செல்போனில் போட்டோ எடுக்கும் வசதி வந்த பின், என்ன செய்கிறோம்; எதற்காக செய்கிறோம் என்பதே புரியாமல் பலரும் செய்து கொண்டிருக்கின்றனர். திருச்சி செங்குளம் பகுதியை சேர்ந்த முஜிபுர் ரஹ்மான் என்ற இளைஞன், கடந்த சில நாட்களுக்கு முன், தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு சுற்றுலா சென்றிருக்கிறார்.
அங்கே பல விதமான புகைப்படங்கள் எடுத்து கொண்டார். பின், அங்குள்ள பெண் சிலைகளோடு கட்டிபிடித்து, முத்தம் கொடுத்து படம் எடுத்திருக்கிறார். இந்த புகைப்படங்களையெல்லாம், சமூக வலைதளங்களிலும் அவர் பகிர்ந்துள்ளார். இது, பெரும் சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது. இது தொடர்பாக, முஜிபுர் ரஹ்மான் மீது போலீசில் புகார் கொடுத்துள்ளனர். இதை வைத்து, போலீஸார் முஜிபுர் ரஹ்மான் மீது வழக்குப்பதிவும் செய்து கைது செய்தனர்.
இந்நிலையில், நடிகை கஸ்தூரி, தனது ட்விட்டர் பக்கத்தில் தன்னுடைய கருத்தை பகிர்ந்திருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது: ரம்ஜான் கொண்டாடினானாம்! வாக்குமூலம் குடுத்துருக்கான். ச்சை! பொம்பள மாதிரி இருந்தா, கல்லை கூட விட்டு வைக்க மாட்டீங்களாடா? முஜிபுர் ரஹ்மான்! எவ்வளவு பெரிய தலைவர் பேரை வச்சிக்கிட்டு எவ்வளவு சின்ன புத்தி செயல்!
இவ்வாறு கஸ்தூரி, அந்தப் பதிவில் கூறியிருக்கிறார்
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
ஷிகர் தவண் காயத்தால் ரிஷப் பந்த்துக்கு அழைப்பு
இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரரான ஷிகர் தவண் காயம் அடைந்துள்ளதால் உலகக் கோப்பை தொடரில் அவரது இடத்தை நிரப்பும் விதமாக இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பந்த்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
12-வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஆட்டத்தில் பங்கேற்ற போது இந்திய அணியின் தொடக்க வீரரான ஷிகர் தவணுக்கு இடது கட்டை விரல் பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டிருந்தது. இதையடுத்து இந்திய அணி பங்கேற்கும் அடுத்த 3 ஆட்டங்களிலும் ஷிகர் தவண் கலந்து கொள்ளமாட்டார் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் ஷிகர் தவண் இடத்தை நிரப்பும் விதமாக ரிஷப் பந்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். வரும் 16-ம் தேதி பாகிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெறும் ஆட்டத்தின் போது ரிஷப் பந்த், மான்செஸ்டர் நகரில் இருப்பார் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதுதொடர்பாக இங்கிலாந்தில் உள்ள பிசிசிஐ மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “இந்திய அணி நிர்வாகத்தின் வேண்டுகோளின்படி ரிஷப் பந்த் இங்கிலாந்து புறப்பட்டு வருகிறார். மான்செஸ்டர் நகரில் வரும் 16-ம் தேதி பாகிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற உள்ள ஆட்டத்துக்கு முன்னதாக ரிஷப் பந்த், இங்கிலாந்து வந்து சேர்ந்துவிடுவார்.
ஷிகர் தவண் தொடரில் இருந்து முழுமையாக விலக்கிக் கொள்ளப்படாதால் ரிஷப் பந்த், இந்திய அணியுடன் பயணிக்க முடியாது. மான்செஸ்டர் நகரில் ரிஷப் பந்த் தங்கியிருந்தாலும் இந்திய அணியின் ஒரு அங்கமாக கருதப்படமாட்டார். இதனால் அவர், வலைப் பயிற்சி பந்து வீச்சாளர்களான கலீல் அகமது உள்ளிட்டவர்களுடனே பயணிப்பார்.
போட்டியின் நாளன்று வீரர்கள் அறைக்கு செல்லவும் ரிஷப் பந்த்துக்கு அனுமதி கிடையாது. ஐசிசி ஊழல் தடுப்பு விதிகளின்படி பிரதானமாக தேர்வு செய்யப்படும் வீரர்கள் மட்டுமே அணியின் பேருந்திலும், ஓய்வறையிலும் தங்க முடியும்” என்றார்.
இந்திய அணி நிர்வாகம் ஷிகர் தவண், தொடரின் எஞ்சிய ஆட்டங்களில் விளையாட முடியுமா என்ற விஷயத்தில் இறுதி முடிவு எடுத்த பிறகே ரிஷப் பந்த் முறைப்படி மாற்று வீரராக அணிக்குள் நுழைய முடியும். 21 வயதான ரிஷப் பந்த் கடந்த ஒரு வருட காலமாக இந்திய கிரிக்கெட்டில் சிறந்த தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறார்.
இங்கிலாந்து, ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடர்களில் அதிரடியாக விளையாடி சதம் விளாசிய அவர், கடந்த மாதம் நடைபெற்ற ஐபிஎல் தொடரிலும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார். உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டபோதே ரிஷப் பந்த் சேர்க்கப்படாதது முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் உள்ளிட்ட பலரது மத்தியில் கடும் விவாதப் பொருளாக மாறியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
தமிழில் பேச தடை.. இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே பேச வேண்டும்.. தெற்கு ரயில்வே அறிவிப்பால் அதிர்ச்சி
Southern Railway - இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே பேச வேண்டும்.. தெற்கு ரயிலவே அறிவிப்பால் அதிர்ச்சி
சென்னை: அலுவலகத்தில் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே பேச வேண்டும் என்றும் அலுவல் விஷயமாக ரயில்வே அதிகாரிகள் யாரும் தமிழில் பேச கூடாது என்றும் தெற்கு ரயில்வே அதிகாரி சிவா என்பவர் நேற்று இரவு சுற்றறிக்கை அனுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருமங்கலம் அருகே விபத்து ஏற்படும் அபாயத்துக்கு மொழி பிரச்னை தான் காரணம் என்பதால் இப்படி ஒரு உத்தரவை தெற்கு ரயில்வே பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே இரு பயணிகள் ஒரே பாதையில் சென்றதால் பெரும் விபத்து ஏற்படும் சூழல் ஏற்பட்டது. இரு ஸ்டேசன் மாஸ்டர்களுக்கும் ஏற்பட்ட மொழிப்பிரச்னை தான் காரணம் என தெரியவந்தது.
ஒரு ரயில்வே ஸ்டேசன் மாஸ்டர் தமிழில் ரயிலை அனுபப வேண்டாம் என சொன்னதை, இந்தி மட்டுமே தெரிந்த மற்றொரு ரயில்வே ஸ்டேசன் மாஸ்டர் சரியாக புரிந்து கொள்ள தெரியாமல் ரயிலை அதே பாதையில் அனுப்பிவிட்டுள்ளார். இதுவே விபத்து ஏற்படும் அபாயத்துக்கு கொண்டு சென்றது.
இதையடுத்து தெற்கு ரயில்வ அதிகாரி சிவா என்பவர் அனைத்து ரயில்வே கட்டுப்பாட்டு அலுவலர்கள் மற்றும் ஸ்டேசன் மாஸ்டர்களுக்கு அவரச சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது.
[img=0x0]data:image/svg+xml,%3Csvg%20xmlns%3D%22http%3A%2F%2Fwww.w3.org%2F2000%2Fsvg%22%20width%3D%22512%22%20height%3D%22288%22%3E%3C%2Fsvg%3E[/img]
அந்த அறிவிப்பில், ரயில்வே கட்டுப்பாட்டு அலுவலர்கள் மற்றும் ஸ்டேசன் மாஸ்டர்கள் ரயில்வே தொடர்பான பணிகள், ரயில்வே இயக்கம், ரயில் வந்து செல்லும் அறிவிப்பு ஆகியவற்றை ஆங்கிலம் மற்றும் இந்தியில் செய்ய வேண்டும். இருவரும் இந்தி அல்லது ஆங்கிலத்தில் மட்டுமே பசி கொள்ள வேண்டு. தமிழில் பேசிக்கொள்ளக்கூடாது. தெற்கு ரயில்வே கட்டுப்பாட்டு அலுவலர்களும், ஸ்டேசன் மாஸ்டர்களும் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். பிராந்திய மொழிகளை (தமிழ் உள்பட) பேசக்கூடாது பணியில் இருக்கும் போது இதனை கண்டிப்பாக அப்படியே கடைபிடிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு ரயில்வே ஊழியர்களை மட்டுமல்லாமல், பொதுமக்களுக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது நேரடியாக இந்தி திணிப்பு என கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
மழையால் கதை முடிந்தது.. உலக கோப்பைக்கு பெரிய அஞ்சலி.. வைரலாகும் புகைப்படம்
By Veerakumar
| Published: Thursday, June 13, 2019, 21:01 [IST]
WORLD CUP 2019 | தெறிக்கவிடும் உலகக்கோப்பை மழை மீம்ஸ்
டெல்லி: இங்கிலாந்தில் நடைபெறும் நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், மற்ற எல்லா டீமையும் விட, மழைதான் அதிக புள்ளிகளைப் பெற்று முதல் இடத்தில் இருக்கிறது. எந்த பிளேயர் நன்றாக விளையாடுகிறார்களோ, இல்லையோ மழை நின்று அடித்து விளையாடுகிறது.
ஆடிய போட்டிகளை விட, கைவிட்ட போட்டிகள் அதிகரிக்கும் சூழ்நிலை வந்து விட்டது. இதோ இன்று நாட்டிங்காம் நகரில் நடைபெற இருந்த இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் நடுவேயான போட்டி, மழையால் கைவிடப்பட்டு தலா ஒரு புள்ளிகள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.
இந்தியா போன்ற ஒரு பெரிய அணிக்கு இப்படி மழையால், ஆட்டம் கைவிடப்படுவது, ஒரு இழப்புத்தான். சிறு அணிகள் வேண்டுமானால் சந்தோஷப்பட்டுக் கொள்ளலாம்.. ஏதோ எப்படியாவது ஒரு புள்ளி கிடைத்ததே என்று!
இந்த நிலையில்தான், உலககோப்பை ஆன்மா சாந்தி அடையட்டும் என்று சொல்லி ஒரு புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. உலக கோப்பை கிரிக்கெட் ஆரம்பிப்பதற்கு முன்பாக அதில் பங்கேற்க கூடிய அனைத்து நாடுகளின் கேப்டன்களும் எடுத்துக்கொண்ட குரூப் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி இருந்தது.
இப்போது அந்த கேப்டன்களை மழை வெள்ளம் மூழ்கடிப்பது போல சித்தரித்து இந்த படம் சுற்றி வருகிறது.
[img=0x0]data:image/svg+xml,%3Csvg%20xmlns%3D%22http%3A%2F%2Fwww.w3.org%2F2000%2Fsvg%22%20width%3D%22512%22%20height%3D%22288%22%3E%3C%2Fsvg%3E[/img]
Quote:
[/url]Mohandas Menon
✔@mohanstatsman
· 15h
It's hide and seek here at Trent Bridge, Nottingham. We have all clear one moment and then the big dark clouds appear without any warning.
Rain again! [img=16.9x18]https://abs.twimg.com/emoji/v2/72x72/1f61f.png[/img]#fingerscrossed#CWC19 #CWC2019 #INDvsNZ #INDvNZ
Quote:
Kishalaya@kishalaya
Not very far pic.twitter.com/gTRhsQWcZV
142
6:18 PM - Jun 13, 2019
Twitter Ads info and privacy
39 people are talking about this
[url=https://twitter.com/kishalaya/status/1139152520633311233]
இதேபோன்று முகத்தில் ஆக்சிஜன் முகமூடி அணிந்துகொண்டு தண்ணீருக்கு அடியில்தான் கிரிக்கெட் ஆட வேண்டுமா, என்றும் நெட்டிசன்கள் கேட்க ஆரம்பித்துள்ளனர்.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
தமிழகத்தின் ஒருபக்கம் கனமழைக்கு வாய்ப்பு, மறுபக்கம் அனல் காற்று எச்சரிக்கை!
தமிழகத்தின் மேற்குத்தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், கடலோர மாவட்டங்களில் அனல் காற்று நீடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
கேரளாவில் சமீபத்தில் தென்மேற்குப்பருவ மழை தொடங்கியது.
[/url]
இதன் காரணமாக தமிழகத்தின் மேற்குத்தொடர்ச்சி மலையோரம் உள்ள கன்னியாகுமரி, திருநெல்வேலி, தேனி, கோயம்பத்தூர் மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது
[color][font][color]
நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழகத்தின் பல இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
[/color][/font][/color]
[color][font][color]
அதேசமயம், இன்று கடலோர மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், விழுப்புரம், காஞ்சீபுரம், கடலூர், புதுச்சேரி மற்றும் உள்மாவட்டங்களான திருச்சி, சேலம், பெரம்பலூர், வேலூர் ஆகிய பகுதிகளில் அனல் காற்று தீவிரமாக வீசும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
[/color][/font][/color]
[color][font][color]
[url=http://twitter.com/share?text=%20%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%2011%20%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%204%20%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%20%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%20%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%20%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%20%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%20%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81.&url=https://tamil.news18.com/photogallery/tamil-nadu/weather-updates-for-tamilnadu-heavy-rainfall-for-western-ghat-area-districts-san-167153-page-5.html]
மேற்கண்ட மாவட்டங்களில் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை பொதுமக்கள் வெயிலில் நடமாட வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் கேட்டுக்கொண்டுள்ளது.[/color][/font][/color]
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
`புரியும் மொழியில் பேசிக்கொள்ளுங்கள்!' - தி.மு.க எதிர்ப்பால் பணிந்த ரயில்வே #SouthernRailway
ரயில்வே அதிகாரிகள், தங்களுக்கு புரியும் மொழியில் தகவல் தொடர்பை மேற்கொள்ளலாம் என தென்னக ரயில்வே, ஏற்கெனவே வெளியிட்டிருந்த சுற்றறிக்கையில் திருத்தம் மேற்கொண்டிருக்கிறது. முன்னர் அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில் உடனடியாக மாற்றம் கொண்டுவர வேண்டும் என்று கூறி மத்திய சென்னை தி.மு.க எம்.பி. தென்னக ரயில்வே பொதுமேலாளரை நேரில் சந்தித்து மனு அளித்தார்.
திருமங்கலம் சிக்னல் செயலிழப்பு சம்பவத்தை அடுத்து அங்கு நடக்க இருந்த மிகப்பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. ரயில்வே துறை அதிகாரிகள் இருவர் தங்களுக்குள் மேற்கொண்ட தகவல் தொடர்பில் ஏற்பட்ட குழப்பமே இந்த நிலைக்குக் காரணம் என கண்டறியப்பட்டது. இதையடுத்து, அந்த விவகாரம் தொடர்பாக அதிகாரிகள் 3 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர். இந்த நிலையில், ரயில்வே கோட்ட கட்டுப்பாட்டு அதிகாரிகளை நிலைய அதிகாரிகள் தொடர்புகொள்ளும்போது ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே பேச வேண்டும் என தென்னக ரயில்வேயின் சென்னைக் கோட்டம் சார்பில் சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டது. தமிழ்நாட்டில் தமிழ் மொழியைத் தவிர்க்கச் சொல்கிறதா தென்னக ரயில்வே என பல்வேறு தரப்பிலும் கண்டனக் குரல்கள் எழுந்தன. அதேபோல், ரயில்வே துறையின் பணிநியமனக் கொள்கையால்தான் இந்தநிலை ஏற்பட்டது என்றும், தென்னக ரயில்வேயில் பணிபுரிய வருபவர்களுக்கு தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகள் தெரிந்திருக்க வேண்டும் என பணிநியமனக் கொள்கையில் மாற்றம் கொண்டுவர வேண்டும் எனவும் டி.ஆர்.எம்.யூ தொழிற்சங்கம் வலியுறுத்தியது.
அதேபோல், இந்த விவகாரத்துக்கு தி.மு.க, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், திராவிடர் கழகம் உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனத்தைப் பதிவு செய்திருந்தன. தி.மு.க தலைவர் ஸ்டாலின், `தமிழகத்தில் தமிழ் பேசக் கூடாது, இந்தி பேசு என்பது மொழித் திணிப்பு மட்டுமல்ல, மொழி மேலாதிக்கம், மொழி அழிப்பு' என்று கடும் கண்டனத்தைப் பதிவு செய்திருந்தார். அதேபோல், இந்த உத்தரவைத் திரும்பப் பெற வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சரும் தி.மு.க எம்.பி-யுமான தயாநிதி மாறன் தென்னக ரயில்வே துறை அதிகாரிகளை நேரில் சந்தித்து வலியுறுத்தியிருந்தார். கனிமொழி, வைரமுத்து உள்ளிட்டோரும் தங்களது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்திருந்தனர்.
அதேபோல், தென்னக ரயில்வேயின் சென்னை அலுவலகத்தை முற்றுகையிட்டு தி.மு.க உள்ளிட்ட கட்சியினர் போராட்டம் நடத்த முயன்றனர். இதையடுத்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய தென்னக ரயில்வே அதிகாரிகள், சுற்றறிக்கையில் மாற்றம் கொண்டுவரப்படும் என்று உறுதியளித்தனர். அதன்படி, ஏற்கெனவே அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் மாற்றம் கொண்டுவரப்பட்டிருக்கிறது
இதுகுறித்து டி.ஆர்.எம்.யூவின் செயல் தலைவர் இளங்கோவன், `ரயில்வேயின் இந்த நடவடிக்கை மட்டும் போதாது. நிலைய மேலாளர், டிக்கெட் பரிசோதகர்கள், டிக்கெட் கவுன்டரில் பணிபுரிபவர்கள் உள்ளிட்ட மக்களோடு தொடர்பில் இருக்கும் ரயில்வே பணியாளர்கள் அனைவருக்கும் தமிழ் மொழிப் பயிற்சி அளிக்க வேண்டும். திருச்சியில் உள்ள ரயில்வே பயிற்சி மையத்தில் பணியாளர்களுக்கு இந்தி மொழி பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது. அதேபோல், அந்தப் பயிற்சி மையத்தில் தமிழ் மொழி தெரியாத ரயில்வே அதிகாரிகள், பணியாளர்களுக்குத் தமிழ் மொழியும் பயிற்றுவிக்க வேண்டும்' என்றார்.
இந்த நிலையில், ரயில்வே கட்டுப்பாட்டு அறை மற்றும் ரயில்நிலைய அதிகாரிகள் இடையிலான தகவல் பரிமாற்றத்துக்கு ஆங்கிலம், இந்தி மொழிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற சுற்றறிக்கையை தென்னக ரயில்வே மாற்றியிருக்கிறது. அதில், `அதிகாரிகள் குழப்பம் இல்லாமல் புரியும் மொழியில் பேசிக்கொள்ளலாம்' என மாற்றி சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருக்கிறது.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
`போ... அங்க போயி வண்டியை நிப்பாட்டு!' - நடுரோட்டில் தலைகுனிந்த சப்-இன்ஸ்பெக்டர்
ஹெல்மெட் போடாமல் செல்பவர்களின் வாகனங்களை ஏன் பறிமுதல் செய்யக் கூடாது? என்கிற ஒரு கேள்வியைத்தான் சென்னை உயர் நீதிமன்றம் கேட்டது. இதைத் தொடர்ந்து, டிராஃபிக் போலீஸார் மீண்டும் ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகளைப் பாய்ந்து பாய்ந்து பிடித்து வருகின்றனர். போலீஸாரின் பிடியில் ஹெல்மெட் அணியாமல் சென்ற சப் இன்ஸ்பெக்டர் ஒருவரும் சிக்கியதுதான் ஹைலைட்..
சென்னையைப் பொறுத்தவரை, தற்போது இ-சலான் வழியாகத் தலைக்கவசம் அணியாதவர்களிடம் அபராதம் வசூலிக்கப்படுகிறது. வண்டி எண்ணை போலீஸார் வைத்திருக்கும் எந்திரத்தில் பதிந்தால் போதும் நம்மைப் பற்றிய அத்தனை விவரங்களும் அதில் காட்டிவிடும். அபராதத்தை கிரிடிட் கார்டு, டெபிட் கார்டு வழியாகக் கட்டலாம். கையில் பணமாகக் கொடுக்கக் கூடாது. இ-சலானைக் கொண்டு தபால் அலுவலர்கள் வழியாகவும் அபராதத்தைச் செலுத்த வழி வகை செய்யப்பட்டுள்ளது. சென்னை கமிஷனர் விஸ்வநாதனின் அதிரடி உத்தரவால் தலைக்கவசம் அணியாமல் ஓட்டும் வாகன ஓட்டிகள் இப்போது போலீஸாரிடமிருந்து தப்ப முடிவதில்லை.
உச்சக்கட்டமாக ஹெல்மெட் அணியாமல் சென்ற சப் இன்ஸ்பெக்டர் ஒருவரை இணை கமிஷனர் ராதாகிருஷ்ணன், பொது இடத்தில் வைத்து லெப்ட் , ரைட் வாங்கும் வீடியோ காட்சியும் வெளியாகி வைரலானது. நேற்று கடற்கரை சாலையில் போலீஸார் தீவிர சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இணை கமிஷனர் தலைமையில் போலீஸார் ஹெல்மெட் அணியாதவர்களைப் பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது, சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் ஹெல்மெட் அணியாமல் வந்தார். சாதாரண டிராஃபிக் போலீஸார் இருந்தால் சல்யூட் அடித்து விட்டு விடுவார்கள். ஆனால், இங்கே இணை கமிஷனரே ஹெல்மெட் அணியாதவர்களைப் பிடித்துக்கொண்டிருந்ததால் அவர் வசமாகச் சிக்கிக் கொண்டார்.
சாமானியர்கள்போல அந்த சப் இன்ஸ்பெக்டரை ட்ரீட் செய்த இணை கமிஷனர், 'போ அங்கே வண்டியை நிப்பாட்டுனு' திட்டினார். மேலும், அந்த சப் இன்ஸ்பெக்டரை இணை கமிஷனர் நன்றாகத் திட்டுவதும் தெரிந்தது. இன்ஸ்பெக்டரை இணை கமிஷனர் திட்டுவதை பொதுமக்கள் பலரும் வியப்புடன் பார்த்தவாறே கடந்து சென்றனர்.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
வாசிம் அக்ரமின் திமிர் பேச்சும் ! எகிறி அடித்த இந்திய அணியும்: ஒரு ப்ளாஷ்பேக் !
1999 ஆம் ஆண்டுக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்றது. இப்போதும் போலவே அந்தத் தொடரிலும் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போட்டியை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். அந்தத் தொடரில் பாகிஸ்தான் இறுதிப் போட்டி வரை முன்னேறி தோல்வியடைந்தது. ஆனால், இந்தியா சூப்பர் 6 சுற்றுடன் வெளியேறியது. இந்தியா பாகிஸ்தானை லீக் சுற்றுகளில் சந்திக்கவில்லை ஆனால் சூப்பர் 6 சுற்றில் சந்தித்தது. இந்தியாவை ஒப்பிடுகையில் லெஜன்ட்ஸ் இருக்கும் அணியாக பாகிஸ்தான் இருந்தது.
அப்போதைய ரசிகர்கள் எப்போது பாகிஸ்தான் - இந்தியா மோதும் என ஆர்வமுடன் காத்துக்கொண்டிருந்தனர். உலகக் கோப்பை சூப்பர் 6 போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் மோதும் வாய்ப்பு அமைந்தது. இந்தியாவுக்கு அசாருதின் கேப்டன், பாகிஸ்தானுக்கு வாசிம் அக்ரம் கேப்டன். ஆம், ஜூன் 8 ஆம் தேதி இங்கிலாந்தின் மான்சஸ்டர் நகரில் இரு அணிகளும் மோத இருந்தன. உலக கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருந்தார்கள். அப்போது டாஸ் போடப்பட்டது. டாஸ் ஜெயித்த பாகிஸ்தான் இந்தியாவை முதலில் பேட்டிங் செய்ய கேட்டுக்கொண்டது.
[color][font][color][size]
அப்போது பேசிய வாசிம் அக்ரம் "இந்தியாவுடனான இன்றையப் போட்டி எங்களுக்கு வெறும் பயிற்சி போட்டிபோலதான்" என எகத்தாளமாக பேசினார். அப்போதே இந்திய ரசிகர்களுக்கு நரம்புகள் புடைத்தது. அன்றையப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் 45 ரன்களும், ராகுல் திராவிட் 61 ரன்களும், முகமது அசாருதின் 59 ரன்களும் எடுத்தனர். 50 ஓவர்கள் முடிவில் இந்தியா 6 விக்கெட் இழப்புக்கு 227 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் பாகிஸ்தான் எப்படியும் வெற்றிப்பெற்று விடும் என நினைத்தனர்.
இதனையடுத்து பாகிஸ்தான் எளிதான இலக்கை நோக்கி ஆடத்தொடங்கியது. ஆனால் அந்த அணியில் அதிகபட்சமாக இன்சமாம் 41 ரன்களும், சயீத் அன்வர் 36 ரன்களை மட்டுமே எடுத்தனர். அந்த அணி இந்தியாவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 45.3 ஓவர்களில் 180 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி படுதோல்வியடைந்தது. இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளர் வெங்கடேஷ் பிரசாத் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இந்தியா அந்தத் தொடரில் சூப்பர் 6 சுற்றுடன் வெளியேறினாலும் பாகிஸ்தான் திமிர் பேச்சுக்கு இந்தியா கொடுத்த பதிலடி ரசிகர்களுக்கு போதுமானதாகவே இருந்தது[/size][/color][/font][/color]
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
குடிநீர் இல்லாத பள்ளிகளுக்கு இப்படியொரு அட்டகாசமான ஏற்பாடு - அமைச்சர் செங்கோட்டையன்!
குடிநீர் இல்லாத பள்ளிகள் பற்றி தெரிவித்தால், 24 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
குடிநீர் இல்லாத பள்ளிகளுக்கு இப்படியொரு அட்டகாசமான ஏற்பாடு - அமைச்சர் செங்கோட்ட...
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு இருந்து வருகிறது. எனவே சென்னையில் உள்ள பள்ளிகளில் குடிநீர் பிரச்னை இருந்தால், உடனே தகவல் தெரிவிக்கலாம்.
அந்த பள்ளிகளுக்கு 24 மணி நேரத்தில் குடிநீர் வசதி செய்து தரப்படும். பள்ளிகளுக்கு தேவையான குடிநீர் வாங்க பெற்றோர் ஆசிரியர் சங்கம் மூலம் நிதி ஏற்பாடு செய்யப்படும்.
இதன்மூலம் பள்ளிகளில் மாணவ, மாணவிகள் குடிக்க, கழிவறைகளில் பயன்படுத்த தண்ணீர் கிடைக்க வழி செய்யப்படும் என்று கூறினார். முன்னதாக சென்னையில் உள்ள சில தனியார் பள்ளிகள், மாணவர்களை வீட்டிலிருந்தே குடிநீரைக் கொண்டு வருமாறு உத்தரவிட்டுள்ளது.
ஏற்கனவே புத்தக மூட்டையை சுமந்து செல்லும் மாணவர்கள், தண்ணீர் பாட்டில்களை சுமந்து செல்வது பெரும் சுமையாக இருக்கும் என்று பெற்றோர் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் போதிய பருவமழை இல்லாத காரணத்தால், தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. பொதுமக்கள் காலிக் குடங்களுடன் தண்ணீரைத் தேடி அலைந்து கொண்டிருக்கின்றனர். தங்கள் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய, மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்
•
|