10-07-2023, 09:14 PM
(This post was last modified: 10-07-2023, 09:59 PM by monor. Edited 1 time in total. Edited 1 time in total.)
நிறைவு
மணமக்களின் கைகளில் கட்டப்பட்ட காப்புக்களை அவிழ்த்து பவித்திரங்களை கழற்றி அவற்றுடன் பெற்றோரின் பவித்திரங்களையும் வெற்றிலையில் வைத்து குருக்களின் தட்சணையும் சேர்த்து குருக்களிடம் கொடுக்கவேண்டும்.
ஆரத்தி
இரு தரப்பிலும் இருந்து ஒரு பெண்ணாக இரு சுமங்கலிப் பெண்கள் ஆரத்தி எடுப்பார்கள். தம்பதிகளுக்கு தீய சக்தியினால் தீமை ஏற்படாமலும் கண் திருஷ்டி நீங்கும் பொருட்டும் இவை செய்யப்படுகின்றன.
விருந்துபசாரமும் நடைபெறும். மணமக்கள் இருவரும் அர்சனைத் தட்டோடு ஆலயம் சென்று வணங்கி அர்ச்சனை செய்து மணமகன் இல்லம் செல்வர். அங்கு வாசலில் ஆரத்தி எடுத்து வல்து காலை முதலில் வைத்து வீட்டுக்குள் செல்வர். முதலில் பூசை அறைக்குள் சென்று வணங்கிப் பின் பால் அருந்தக் கொடுப்பார்கள்.
பூதாக்கலம்
மணமக்கள் ஒரே இலையில் மணமகள் உணவு பரிமாறி மணமகனுக்கு முதலில் தன் கையால் உணவூட்டிய பின் மணமகன் மணமகளுக்கு உணவூட்ட வேண்டும்.
பின் மணமகன் மணமகளைத் தன் வீட்டுக்கு அழைத்து செல்வார். அங்கும் ஆரத்தி எடுத்து உள்செல்வார். வலது கால் எடுத்து உட்சென்று பூசை அறை சென்று வணங்கி பெற்றோர் காலிலும் விழுந்து வணங்குவர்.
சில தத்துவங்கள்
• தாலி கட்டிய பின் மணமகள் மணமகளின் உச்சந்தலையில் குங்குமத்தால் திலகமிடுவார். இது அவள் தன் கணவனுக்கே உரியவள் என்பதை எடுத்துக்காட்டவே. அத்தோடு அவ்விடத்தில் தான் மகா லட்சுமி வாசம் செய்கின்றாள்.
• மாங்கல்யம் சூட்டும்போது கெட்டிமேளம் கொட்டுவது சபையில் உள்ளோர் யாராவது தும்முதல், அபசகுன வார்த்தைகள் பேசுதல் போன்றவை மணமக்களிற்குக் கேட்கக்கூடாது என்பதற்காகவே.
• மஞ்சள் கயிற்றில் தாலி கட்டும் போது மூன்று முடிச்சுப் போடுவார்கள். இதற்கு ஒரு விளக்கம்.
o முதலாவது முடிச்சு – கணவனுக்குக் கட்டுப்பட்டவள் அல்லது பிறந்த வீட்டிற்கு
o இரண்டாவது முடிச்சு – தாய் தந்தையருக்குக் கட்டுப்பட்டவள் அல்லது புகுந்த வீட்டிற்கு.
o மூன்றாம் முடிச்சு – தெய்வத்திற்குப் பயந்தவள்
தாலி கட்டும்போது தூவப்படும் அட்சதை மணமக்கள் தீய சக்திகளிடம் இருந்து காப்பதற்கும் வளமான வாழ்க்கை அமைவதற்கும் ஆசீர்வதிப்பதாகும். தாலி கட்டும்போது கைவிளக்கு ஏந்தி நிற்பது ஏனென்றால் தாலி கட்டியதற்கு விளக்கு ஏந்தியவர் ஒரு சான்றாவார். இன்னொரு விளக்கம் சகுனத் தடைகள் ஏற்படாமலிருக்க.
திருமணத்தின் போது மணப்பெண் முகத்திரை அணிவது ஏன்?
முக்காலத்தில் மணமகள் தாலி கழுத்தில் ஏறும் வரை மணமகனைப் பார்ப்பதில்லை. ஆகவே முகத்திரை அணிந்து மணவறைக்கு அழைத்து வந்தார்கள். அத்தோடு கண் திருஷ்டிக்கும் விமர்சனங்களில் இருந்து விடுவிப்பதும் ஒரு காரணமாகும். தாலி ஏறியதும் முகத்திரையை அகற்றி நான் இப்போது “இவரின் மனைவியாகி விட்டேன்” என்று சபையோரிற்கு தன் முகத்தைக் காட்டுகிறாள்.
அட்சதை
அட்சதை என்றால் குத்துப்படாததும், பழுதற்றதும் என்று பொருள்படும். பழுதுபடாத பச்சைஅரிசியைப் போல் வாழ்க்கையும் பழுதுபடாமல் இருக்கவேண்டும் என்பதற்காகவே ஆசி வழங்கும் போது பெரியவர்கள் அதைத் தெளிக்கிறார்கள். (நுனி முறியாத முழு அரிசியாக இருக்கவேண்டும்).
நெல்லில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட முளையுள்ள அரிசியுடன் மஞ்சள்மா, பன்னீர், மலர் இதழ்கள் ஆகியவை கலந்து அட்சதை தூவுவதே முறையாகும்.
ஆரத்தி
ஒரு தட்டில் 3 வாழைப்பழத் துண்டுகள் வைத்து அதன் நடுவே திரியைச் செருகவேண்டும். இலகுமுறை ஒரு நெருப்புக் குச்சியில் பச்சைசுற்றி நெய்யில் தோய்த்த வாழைபழத்தின் நடுவே குத்துவதாகும்.
ஆரத்தி எடுக்கும் போது யாருக்கு திருஷ்டி கழிக்கின்றோமோ அவரை நிற்க வைத்து (கிழக்கு முகமாக அல்லது வடக்கு பார்க்க நிற்கவேண்டும்). அவரை இறைவனாக நினைத்து இறைவனுக்கு எப்படிக் கற்பூரம் காட்டுகிறோமோ அதேபோல் ஆரத்தித் தட்டைச் சுற்றவேண்டும் (வலம் சுழியாக).
மணமக்களுக்கு எடுக்கும்போது மணமகன் பக்கத்தில் மேலெழும்பி மணமகளின் பக்கத்தில் கீழிறங்கவேண்டும். கீழே 3 முறை செய்யவேண்டும். கீழே 3 தரம் ஆட்டி பின் மேலெழும்பிச் சுற்ற வேண்டும்.
திருமணத்தில் அறுகரிசி இடும்முறை
இந்துசமய விளக்கப்படி அறுகரிசியை (அட்சதை) பெரியோர்கள் இரு கைகளாலும் எடுத்து மணமக்களின் சிரசில் தூவிப்பின் இரு தோழ்களிலும் இடுப்பு, முழந்தாள் என்று மேலிருந்து கீழே வர வாழ்த்த வேண்டும். (3 முறை அல்லது சிரசில் மட்டும் 3 முறை 3 தூவி ஆசிர்வதிக்கலாம்).
நாங்கள் மணமக்களைத் தெய்வமாகக் கருதுவதால் தெய்வத்திற்குப் பாதத்திலிருந்து சிரசிற்குச் செல்லவேண்டும். என்று சொல்வார்கள். மணமக்களை மானிடராகக் கருதினால் சிரசில் இருந்து பாதத்திற்கு வரவேண்டும் என்று சொல்வார்கள். இவ்விரண்டு விதமான வருணணைகளையும் இலக்கியங்களிற் காணலாம். பதாதி கேசமா? கேசாதி பாதமா? இவை வர்ணணைகளே அன்றி அட்சதை தூவுவதற்கல்ல. தெய்வத்திற்கு நாம் செய்வது பாத பூஜை பூச் சொரிவது அல்ல. அத்தோடு மணமக்களை பெரியோர்களே அட்சதை தூவி ஆசிர்வதிப்பார்கள். ஆகவே சிரசில் இருந்து தான் வரவேண்டும். மீனாட்சி சுந்தரேசர் கல்யாணத்தில் தேவர்கள் வானிலிருந்து மலர் தூவி ஆசிர்வதித்து வாழ்த்தியதாகப் புராணம் சொல்கின்றது. ஆகவே அரிசி மேலிருந்து கீழே வருவதுதான் சாலப் பொருத்தம்.”
“இதெல்லாம் நீங்களே இருந்து பாத்துக்கோங்க. என்னென்ன செய்யணும்கிறதை அப்பப்போ சொல்லுங்க. செஞ்சிடறோம். இந்த மாதிரி கல்யாணத்தை நடத்தி எங்களுக்கு பழக்கமில்லே.”
“அதனால் என்ன. இந்தாங்க லிஸ்ட் இதுல இருக்கிறதை வரிசையா செஞ்சுகிட்டு வாங்க, பையன் ஒருத்தனை அனுப்பறேன். அவன் உங்களுக்கு எல்லா விதத்திலும்
உதவியா இருப்பான். அதே மாதிரி இந்த லிஸ்ட்ல இருக்கிற பொருள்களை பையனே வாங்கி கொடுத்துடுவான். நீங்க பணம் மட்டும் கொVடுத்தா போதும்.”
சரிங்க புரோகிதரே.”