Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
11 தொடர் தோல்விகளுக்குப்பின் பாக். வெற்றி: ரூட், பட்லர் சதம் வீண்: திக், திக் கடைசி 10 ஓவர்கள்: திருப்புமுனை வகாப், அமீர்
[Image: PAKAPjpgjpg]

வாவ்…. இந்த மாதிரித்தான் ஆட்டம் இருக்கணும்.. கிரிக்கெட் ரசிகர்களுக்கு இங்கிலாந்து, பாகிஸ்தான் போட்டி விருந்து படைத்துவிட்டது.
இங்கிலாந்தின் தோல்வி, பாகிஸ்தானின் வெற்றி உலகக் கோப்பைப் போட்டிகளின் சுவாரஸ்யத்தை அதிகப்படுத்தி இருக்கிறது.
வகாப் ரியாஸ், முகமது அமீர், ஹபீஸ், சதாப்கான் ஆகியோரின் போரட்டக்குண பந்துவீச்சால் உலகக் கோப்பைப் போட்டியில் நாட்டிங்ஹாமில் நேற்று நடந்த ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை 14 ரன்களில் தோற்கடித்தது பாகிஸ்தான்.
கடைசி 10 ஓவர்களில் 91 ரன்கள் இங்கிலாந்து வெற்றிக்கு தேவை, கைவசம் 5 விக்கெட்டுகள் இருந்தபோதிலும், பாகிஸ்தானின் டெத்ஓவர் பந்துவீச்சுதான் ஆட்டத்தை மாற்றியது.
இதன் மூலம் தொடர்ந்து 11 ஒருநாள் போட்டிகளில் தொடர் தோல்விகளைச் சந்தித்துவந்த பாகிஸ்தான் அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. கடந்த 2017-ம் ஆண்டுக்குப்பின் எந்ததொடரையும் வெல்லாமல் தோல்வியைச் சந்தத்துவந்த பாகிஸ்தான் அணிக்கு இப்போது கிடைத்த வெற்றி  மிகப்பெரிய ஊக்கமாக அமையும்.
அதிலும் முதல் ஆட்டத்தில் மே.இ.தீவுகளிடம் 105 ரன்களுக்கு சுருண்டு மோசமான தோல்வியைச் சந்தித்தபின் மீண்டு எழுவது சாதரணமல்ல.
முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 348 ரன்கள் சேர்த்தது. 349 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 334 ரன்கள் மட்டுமே சேர்த்து 14 ரன்களில் தோல்வி அடைந்தது.
அதேபோல கடந்த 4ஆண்டுகளாக உள்நாட்டில் சேஸிங்கின் போது எந்தவிதமான தோல்வியையும் சந்தக்காத இங்கிலாந்து அணிக்கு உலகக் கோப்பையில் கிடைத்த இந்த தோல்வி அந்த அணியை கொஞ்சம் யோசிக்க வைக்கும்.
கடந்த 2011-ம்ஆண்டு உலகக் கோப்பைப் போட்டிக்குப்பின் 300 ரன்களுக்கு மேல் எந்த அணியும் சேஸி்ங் செய்யவில்லை எனும் சாதனை தொடர்கிறது. 2011-ல் பெங்களூரில் நடந்த போட்டியில் 328 ரன்கள் இங்கிலாந்து சேர்க்க, அதை 329 ரன்கள் அடித்து அயர்லாந்து சேஸிங் செய்தது குறிப்பிடத்தக்கது.
உலககக் கோப்பை வரலாற்றில் ஒரு அணியில் (ஜோ ரூட், பட்லர்) இரு பேட்ஸ்மேன்கள் சதம் அடித்தும், அந்த அணி தோல்வி அடைந்தது, இதுதான் முதல்முறையாகும். 
ஜோ ரூட் அடித்ததுதான் இந்த உலகக் கோப்பைப் போட்டியில் அடிக்கப்பட்ட முதல் சதமாகும். ஜோஸ் பட்லர் 75 பந்துகளில் சதம் அடித்ததுதான் உலகக் கோப்பை வரலாற்றில் அதிவேகமாக அடிக்கப்பட்ட சதமாகும். இரு முக்கிய விஷயங்கள் நிகழ்த்தியும் பாவம் இங்கிலாந்து தோல்வி அடைந்தது.
பாகிஸ்தான் அணியில் உலகக் கோப்பைக்கான அணியை அறிவிக்கும்போது நிராகரிக்கப்பட்ட வகாப் ரியாஸ், முகமது அமீர் ஆகியோர்தான் ஆட்டத்தில் பல திருப்புமுனைகளை ஏற்படுத்தி வெற்றிக்கு உதவினார்கள். யாரை வேண்டாம் என்று நிராகரித்தார்களோ அவர்களால் வெற்றி கிடைத்துள்ளது.
வகாப் ரியாஸ், முகமது அமீர், முகமது ஹபீஸ் ஆகியோர் ரன்களை வழங்கினாலும் முக்கியமான தருணத்தில் விக்கெட்டை வீழ்த்தி வெற்றிக்கு வித்தி்ட்டார்கள். அதிலும் அமீர், வகாப் ஆகியோரின் அனுபவம் பாகிஸ்தானுக்கு பலம்.
பேட்டிங்கில் முகமது ஹபீஸ், பாபர் ஆசம், சர்பிராஸ் அகமது ஆகியோரின் அரைசதம் அணியின் ஸ்கோர் உயர்வுக்கு முக்கியமாக பங்களிப்பு செய்தது. கடைசி 10 ஓவர்களில் மட்டும் பாகிஸ்தான் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 90 ரன்கள் சேர்த்தது, மிகப்பெரிய ஸ்கோரை எட்ட உதவியாக இருந்தது.
இங்கிலாந்தைப் பொறுத்தவரை நேற்றை ஆட்டத்தில் மட்டும் 13 மிஸ் பீல்டிங், 4 கேட்சுகளை தவறவிட்டது, 20 உதிரிகள், இந்த தவறுகளே தோல்விக்கு போதுமே. இதில் உதிரிகள் சார்பில் கொடுக்கப்பட்ட 20 ரன்களை கட்டுப்படுத்தி இருந்தாலே வெற்றி இங்கிலாந்து பக்கம் சென்றிருக்கும்.
அதுமட்டுமல்லாமல் ஜோப்ரா ஆர்ச்சர், வோக்ஸ், ரஷித் கட்டுப்பாடின்றி ரன்களை வாரி வழங்கியது இங்கிலாந்து செய்த தவறாகும். ஜோப்ரா ஆர்ச்சர் 79 ரன்கள் கொடுத்தும் விக்கெட் வீழ்த்தவில்லை பேட்டிங்கிலும் சொதப்பினார்.
அதுமட்டுமல்லாமல் தொடக்க ஆட்டக்காரர்கள் ஜேஸன் ராய், பேர்ஸ்டோ, மோர்கன் ஆகியோர் ஏமாற்றம் அளிக்கும் வகையில் பேட் செய்தது பின்னால் களமிறங்கிய வீரர்களுக்கு நெருக்கடியை அதிகரித்துவி்ட்டது. ஜோ ரூட்,
349 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. ராய், பேர்ஸ்டோ ஆட்டத்தை தொடங்கினார்கள். 8 ரன்கள் சேர்த்த நிலையில் சதாப்கானின் 3-வது ஓவரில் ராய் எல்பிடபிள்யு முறையில் வெளியேறினார்.
அடுத்துவந்த ரூட், பேர்ஸ்டோவுடன் இணைந்தார். அதிரடியாக சில பவுண்டரிகளையும், சிக்ஸரையும் அடித்த பேர்ஸ்டோ 32 ரன்கள் சேர்த்த நிலையில், வகாப் பந்துவீச்சில் கீப்பர் அகமதுவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
அடுத்துவந்த மோர்கன் 9 ரன்னில் ஹபீஸ் பந்துவீச்சில் ஸ்டெம்பை பறிகொடுத்தார். 4-வது விக்கெட்டுக்கு வந்த ஸ்டோக்ஸ் 13 ரன்களில் வெளியேறினார். இதனால் இங்கிலாந்து அணி 118 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ரூட் 47 பந்துகளில் அரைசதம் அடித்தார்.
பேட்டிங்கிற்கு சாதகமான பிட்ச்சில் சொதப்புகிறார்களே என்று ரசிகர்கள் யோசித்தனர். 5-வது விக்கெட்டுக்கு பட்லர் களமிறங்கி, ரூட்டுடன் சேர்ந்தார். இருவரும் சேர்ந்தபின் ஆட்டத்தில் சூடுபறக்கத் தொடங்கியது.
ஒருநாள் போட்டியை டி20ஆட்டம் போல், சிக்ஸர், பவுண்டரி என  பட்லர் அடித்து ஆட, ரூட் ஒத்துழைப்பு அளித்தார். 34 பந்துகளில் பட்லர் அரைசதம் அடித்தார். இருவரின் பாட்னர்ஷிப்பால் இங்கிலாந்து வெற்றியை நோக்கி நகர்ந்தது. சிறப்பாக பேட் செய்த ரூட் 97 பந்துகளில் சதம் அடித்தார்.
39-வது ஓவரை சதாப்கான் வீசியபோதுதான் திருப்புமுனை நடந்தது. தேர்டு மேன் திசையில் அடிக்கும் வகையில் தொடர்ந்து பந்துவீசி ரூட்டுக்கு வெறுப்பேற்றினார் சதாப்கான். பொறுமை இழந்த ரூட் ஒரு பந்தை கட்செய்து ஆட முயற்சித்தபோது, ஹபிஸிடம் கேட்ச்கொடுத்து 107ரன்னில் ஆட்டமிழந்தார். இவர் கணக்கில் 10 பவுண்டரி, ஒரு சிக்ஸர் அடங்கும். பட்லர், ரூட் ஜோடி 130 ரன்கள் சேர்த்துப்பிரிந்தது.
அடுத்துவந்த மொயின் அலி, பட்லருடன் சேர்ந்தார். நிதானமாக ஆடிய பட்லர் அணியை மெல்ல வெற்றி நோக்கி நகர்த்தினார். பட்லர் இருக்கும்வரை இங்கிலாந்து அணியின் நம்பிக்கை சாயவி்ல்லை.
45-வது ஓவரை முகமது அமீர் வீசினார். இந்த ஓவரில் பவுண்டரி அடித்து 75 பந்துகளில் சதம் அடித்தார் பட்லர். ஆனால் அடுத்தபந்தில் தேர்டு மேன் திசையில் நின்றிருந்த வகாப் ரியாஸிடம் கேட்ச் கொடுத்து 103 ரன்னில் ஆட்டமிழந்தார் பட்லர். இவர் கணக்கில் 2 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகள் அடங்கும்.
அதன்பின் வந்த வோக்ஸ், மொயின் அலி பேட் செய்தாலும், பாகிஸ்தான் வீரர்களின் பந்துவீச்சாளர்கள் நெருக்கடியை அதிகரித்தனர். பவுன்ஸருக்கு திணறிய மொயின் அலியை 19 ரன்னில் வகாப் ரியாஸ் வெளியேற்றினார். அடுத்த பந்தில் வோக்ஸ் 21 ரன்கள் சேர்த்த நிலையில் சர்பிராஸிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழக்க ஆட்டம் பாகிஸ்தான் பக்கம் சென்றது.
ஆர்ச்சர் வந்தவேகத்தில் ஒரு ரன்னில் அமீர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். கடைசி ஓவரில் வெற்றிக்கு 25 ரன்கள் தேவைப்பட்டது. வகாப் வீசிய ஓவரில் மார்க் வூட் 2 பவுண்டரிகள் அடித்தும் இங்கிலாந்து தோல்வி அடைந்தது.
50 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 9 விக்கெட் இழப்புக்கு 334 ரன்கள் சேர்த்தது 14 ரன்னில் தோல்வி அடைந்தது.
பாகிஸ்தான் தரப்பில் வகாப் ரியாஸ் 3 விக்கெட்டுகளையும், சதாப்கான், அமீர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
முன்னதாக டாஸ்வென்ற இங்கிலாந்து அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இங்கிலாந்து தரப்பில் பிளங்கட்டுக்கு பதிலாக மார்க் உட் சேர்க்கப்பட்டார். பாகிஸ்தானில் இமாத் வாசிம், ஹாரிஸ் சோஹைல் நீக்கப்பட்டு ஆஷிப் அலி, ஷோயப் மாலிக் பக்கர்ஜமான், இமாம் உல் ஹக் நிதானமாகத் தொடங்கி அதன்பின் இங்கிலாந்து பந்துவீச்சை துவம்சம் செய்தனர். பாகிஸ்தான் 10 ஓவர்களில் 69 ரன்கள் சேர்த்தது.
முதல் விக்கெட்டுக்கு இருவரும் 82 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். பக்கர் ஜமான் 32 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து பாபர் ஆசம் களமிறங்கி, இமாம் உல்ஹக்குடன் சேர்ந்தார்.
அரைசதம் நோக்கி முன்னேறிய இமாம் உல்ஹக் 44 ரன்கள் சேர்த்த நிலையில் மொயின் அலி வீசிய 21-வது ஓவரில் ஆட்டமிழந்தார். இவருக்கு வோக்ஸ் பிடித்த கேட்ச் மிக அற்புதமானது.
அடுத்து முகமது ஹபிஸ் களமிறங்கி, பாபர் ஆசமுடன் சேர்ந்தார். ஹபீஸ் 39 பந்துகளில் அரைசதத்தையும், பாபர் ஆசம் 50 பந்துகளில் அரைசதத்தையும் அடித்தனர். 3-வது விக்கெட்டுக்கு 88 ரன்கள் சேர்த்த நிலையில், இருவரும் பிரிந்தனர். பாபர் ஆசம் 63 ரன்களில் மொயின் அலி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
4-வது விக்கெட்டுக்கு கேப்டன் சர்பிராஸ் அகமது வந்து, ஹபீஸுடன் சேர்ந்தார். இருவரும் தொடக்கத்தில் மந்தமாக ஆடிய பின்னர் வேகமாக ரன்களைச் சேர்த்தனர். 40-வது ஓவரில் பாகிஸ்தான் அணி 250 ரன்கள் சேர்த்து. கேப்டன் சர்பிராஸ் அகமது 40 பந்துகளில் அரைசதம் அடித்தார்.
சதத்தை நோக்கி முன்னேறிய ஹபீஸ் 84 ரன்கள் சேர்த்த நிலையில் மார்க்உட் பந்துவீச்சில் வோக்ஸிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 4-வது விக்கெட்டுக்கு இருவரும் 80 ரன்கள் சேர்த்தனர்.
அதன்பின் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர் ஆஷிப்அலி(14), சோயிப் மாலிக்(8), வகாப் ரியாஸ்(4) ரன்களில் வெளியேறினர். கேப்டன் சர்பிராஸ் அகமது 55ரன்களில் ஆட்டமிழந்தார். ஹசன்அலி, சதாப்கான் தலா 10 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
50 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 8 விக்கெட் இழப்புக்கு 348 ரன்கள் சேர்த்தது. இங்கிலாந்து தரப்பில் வோக்ஸ், மொயின் அலி தலா 3 விக்கெட்டுகளையும், மார்க்வூட் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
வாட்டி வதைக்கும் வெப்பம்: மலைப்பிரதேசங்களும் தப்பவில்லை; வெப்ப அலைக்கு நாடு முழுதும் 5 பேர் பலி
[Image: varajpg]படம்: ஏ.எம்.ஃபரூக்.

இந்தியாவின் பாதி பகுதி கடும் வெப்ப அலையில் சிக்கித் தவித்து வருகிறது, இதில் ராஜஸ்தான் மாநிலம் சுரு என்ற நகரம் கடும் வெப்ப நகரமாக ஜூன் 3ம் தேதி 49.8 டிகிரி செல்சியஸ் வெப்பம் வாட்டி எடுத்துள்ளது.
இந்தியாவின் பாதி பகுதிகளில் வெப்ப அளவு 45 டிகிரி செல்சியஸைத் தொட்டு அச்சுறுத்தி வருகிறது, பனிப்பிரதேசங்களான ஜம்மு காஷ்மீர், இமாச்சலம், உத்தராகண்ட் ஆகியவையும் வெப்பத்திற்கு தப்பவில்லை. தெலங்கானா, கர்நாடகாவிலும் கடும் வெப்ப அலை வீசி வருகிறது.
ராஜஸ்தானில் ஞாயிறன்று விவசாயி மற்றும் 2 போலீசார் சன் ஸ்ட்ரோக்கிற்கு பலியாக குஜராத் சபர்கந்தா மற்றும் ராஜ்கோட் மாவட்டங்களில் வெப்ப பலி 2 ஆகியுள்ளது.
தனியார் வானிலை ஆய்வுமையமான ஸ்கைமெட் தகவல்கலின்படி ராஜஸ்தான் சுருவில் ஜூன் 3ம் தேதி 43.8 டிகிரி செல்சியஸ் வெப்பமும், இதற்கு அடுத்தபடியாக ராஜஸ்தானின் ஸ்ரீகங்காநகரில் 48.6 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது.
நாட்டின் 10 அதிவெப்ப நகரங்களில் 7 இடங்கள் ராஜஸ்தானில் மட்டும் உள்ளது. உலகம் முழுதும் 15 அதிவெப்ப நகரங்களில் 8 நகரங்கள் இந்தியாவில் உள்ளது என்கிறது எல்டொராடோ என்ற இணையதளம்.  மீதி 7 அதிவெப்ப நகரங்கள் பாகிஸ்தானில் இடம்பெற்றுள்ளது. இதில் பாகிஸ்தானின் ஜேகோபாபாத்தில் அதிகபட்சமாக 51.1 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது.
இந்தியாவில் உள்ள நகரங்களில் பாதி நகரங்களில் வெப்ப அளவு கணிசமாக உயர்ந்து கொண்டிருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இந்திய வானிலை மைய உதவி தலைமை இயக்குநர் ஆனந்த் சர்மா தனியார் ஊடகம் ஒன்றிற்கு கூறிய போது, “வரும் நாட்களில் வெயில் அளவு, வெப்ப அளவு குறைவதற்கான வாய்ப்பு இல்லை. குறிப்பாக வடமேற்கு இந்தியாவில் குறைய வாய்ப்பில்லை. ஜூன் 6ம் தேதி கேரளாவில் பருவ மழை பெய்யத் தொடங்கிய பிறகு தென்னிந்தியாவில் கொஞ்சம் வெப்பத்திலிருந்து விடுதலை கிடைக்க வாய்ப்புள்ளது. ஆனால் நாட்டின் பிற பகுதிகள் வெப்பத்தின் தாக்கத்தை எதிர்கொள்ள வேண்டி வரும்” என்றார்.
பொதுவாக சமவெளிகளில் 40 டிகிரி செல்சியஸ், கடற்கரை பகுதிகளில் 37 டிகிரி செல்சியஸ், மலைப்பிரதேசங்களில் 30 டிகிரி செல்சியஸ் நிலைகளைக் கடக்கும் போதுதான் இந்திய வானிலை ஆய்வுமையம் வெப்ப அலை என்று அறிவிக்கும்.
அடுத்த 2 நாட்களில் பஞ்சாப், மேற்கு உத்தரப் பிரதேசம் டெல்லி ஆகிய நகரங்களில் காற்றின் திசை மாறும் என்பதால் கொஞ்சம் வெயிலிலிருந்து தப்பிக்க வாய்ப்புள்ளது. இதனால் வெப்ப அளவு 2 டிகிரி அல்லது 3 டிகிரி குறைய வாய்ப்புள்ளது. வெப்ப நிலை குறைகிறது என்பதற்காக ஈரப்பதம் குறையும் என்று பொருளல்ல ஆகவே பிசுபிசுப்பும் வியர்வை ஒட்டும் நாட்களிலிருந்து விடுதலை இப்போதைக்கு இல்லை என்கிறது ஐஎம்டி.
பேரழிவு மேலாண்மை தேசியக் கழகத்தின் 2018 அறிக்கையின்படி 1992ம் ஆண்டு முதல் 2015 வரை இந்தியாவில் வெப்ப அலைக்கு 22,562 பேர் பலியாகியுள்ளனர்.
அதிக இரவு நேர வெப்ப நிலை:
கடந்த சில நாட்களாக வடமேற்கின் பெரும்பான்மை பகுதிகள், மத்திய மற்றும் தீபகற்ப இந்தியாவில் வழக்கத்துக்கு மாறான குறைந்தபட்ச வெப்ப அளவு சற்று அதிகமாக பதிவாகியுள்ளது. ராஜஸ்தான் பலோடியில் இரவு நேர வெப்ப நிலை 35 டிகிரி செல்சியஸுக்குக் கீழ் இறங்கவில்லை. சராசரி வெப்ப அளவிலிருந்து 9 டிகிரி செல்சியஸ் அதிகம்.
மேலும் ஐஐடி காந்திநகர் அறிக்கையின் படி இந்தியாவில் உள்ள நிலப்பகுதிகளில் 46% நிலப்பகுதிகள் வறட்சி நிலைமைகளில் உள்ளன. மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழ்நாடு, தெலங்கானா, குஜராத், ஜார்கண்ட், வடகிழக்கு மாநிலங்கள் வறட்சியினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
Like Reply
கிரிராஜ் சிங் சர்ச்சை ட்வீட்: இனி இது போன்று வேண்டாம்- அமித் ஷா கண்டிப்பு
[Image: amit-shahjpg]உள்துறை அமைச்சர் அமித் ஷா. | ஏ.எப்.பி.

நிதிஷ் குமார், சுஷில் குமார் மோடி உள்ளிட்டோர் கலந்து கொண்ட இப்தார் விருந்தை எதிர்த்து கிண்டல் செய்யுமாறு பாஜகவின் கிரிராஜ் சிங் சர்ச்சைக்குரிய விதத்தில் ட்வீட் செய்ய அதற்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அதாவது இனி இது போன்ற கருத்துகளை வெளியிட வேண்டாம் என்று கிரிராஜ் சிங்கை அழைத்து அமித் ஷா எச்சரித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இப்தார் விருந்தில் சிரித்த முகத்துடன் காணப்பட்ட நிதிஷ் குமார், சுஷில் மோடி, ராம்விலாஸ் பாஸ்வான் ஆகியோர் அடங்கிய போட்டோவை வெளியிட்டு கிரிராஜ் சிங் ட்வீட் செய்த போது, “இதே நவராத்திரி திருவிழாவில் ஒரு உணவு விருந்தில் கலந்து கொண்ட புகைப்படமாக இது இருந்தால் எவ்வளவு அழகாக இருக்கும். நாம் ஏன் நம் நம்பிக்கையை மறைத்துக் கொள்ள வேண்டும். ஏன் இந்தப் பாசாங்கு?” என்ற தொனியில் இந்தியில் ட்வீட் செய்திருந்தார்.
இதற்கு பதில் அளித்த பிஹார் முதல்வர் நிதிஷ் குமார், “கிரிராஜ் சிங் இப்படிப்பட்ட கருத்துக்களை வேண்டுமென்றே கூறுவார், நீங்களும் செய்தியாக்கலாம்” என்றார் கடுப்புடன்.
கிரிராஜ் சிங்  பூமிஹார் சமூகப்பிரிவைச் சேர்ந்த சக்தி வாய்ந்த பின்னணி கொண்டவர் இதே சாதியைச் சேர்ந்த இடதுசாரி வேட்பாளர் கன்னையா குமாரை கிரிராஜ் சிங் பெகுசராய் தொகுதியில் 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார்.
பாஜக விமர்சகர்களை ‘பாகிஸ்தானுக்குப் போ’ என்று கூறுபவர் கிரிராஜ் சிங் என்று விமர்சனங்கள் அவர் மீது எழுந்ததுண்டு.
இந்நிலையில் அமித் ஷா, கிரிராஜ் சிங்கை எச்சரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Like Reply
பேட்டிங்கில் சொதப்பிய இலங்கை பந்துவீச்சால்  ‘கிரேட் எஸ்கேப்’: ஆப்கனை போராடி வென்றது 
[Image: srilankajpg]வெற்றியைக் கொண்டாடும் இலங்கை.| ஏ.எப்.பி.

மழையால் வேகப்பந்து சாதகம், மல்லிங்கா, பிரதீப்பின் பந்துவீச்சு ஆகியவற்றால் கார்டிப்பில் நேற்று நடந்த உலகக்கோப்பைப்ப போட்டியின் லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியை 34 ரன்களில் தோற்கடித்தது இலங்கை அணி
நியூசிலாந்துக்கு எதிராக படுமோசாக தோற்ற இலங்கை அணிக்கு இந்த போட்டியில் போராடிக் கிடைத்த வெற்றி சற்று ஆறுதல் அளிக்கும்.
முதலில் பேட் செய்த இலங்கை அணி 36.5 ஓவர்களில் 201 ரன்களுக்கு ஆட்டமிழந்து. ஆட்டத்தில் மழை குறுக்கிட்டதால் டக்வொர்த் லூயி்ஸ் விதிப்படி ஓவர்கள் குறைக்கப்பட்டு இலக்கு மாற்றப்பட்து.
அதன்படி 41 ஓவர்களில் 187 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 32.4 ஓவர்களில் 152 ரன்களுக்கு ஆட்டமிழந்து 34 ரன்களில் தோல்வி அடைந்தது.
இரு அணிகளுமே ஏராளான தவறுகளை, பேட்டிங்கிலும், பந்துவீச்சிலும் செய்தார்கள். இதில் குறைந்த தவறு செய்த இலங்கை வென்றுள்ளது அவ்வளவுதான்… உண்மையில் ஒரு நல்ல பந்துவீச்சு அணியாக இருந்திருந்தால் இலங்கை ஸ்கோர் நேற்று 100தான்.
[Image: malinga1jpg]
 
ஆப்கானிஸ்தான் அணியை வெல்வதற்கு முன்னாள் உலக சாம்பியன் திணறுகிறார்கள் என்றால், பந்துவீச்சும், ேபட்டிங்கும் எந்த கீழ்நிலையில் இருக்கிறது என்பதை கூறத் தேவையில்லை.
கிரீன்டாப் ஆடுகளத்தில் இரு அணிகளுக்கும் ஆடத் தெரியவில்லை என்பது நேற்று தெரிந்துவிட்டது. ஏற்கனவே நியூசிலாந்திடம் கிரீன்டாப் ஆடுகளத்தில் விக்கெட்டுகளை இழந்து தோற்ற இலங்கை இந்த முறையும் தவறுகளை திருத்திக்கொள்ளாமல், ஆப்கானிஸ்தானிடம் அதே தவறுகளைச் செய்து விக்கெட்டுகளை வீணாகப் பறிகொடுத்தது. அதேபோலவே ஆப்கானிஸ்தான் பேட்ஸ்மேன்களின் செயல்பாடும் இருந்தது.
மல்லிங்கா சிறந்த அனுபவமான பந்துவீச்சாளர் என்பதில் மாற்றுக்கருத்தில்லை, பிரதீப் சிறப்பான பந்துவீச்சாளர் அவருக்கு 4 விக்கெட் கிடைத்தது. பிரதீப்புக்குத்தான் ஆட்டநாயகன் விருதும் கிடைத்தது.
ஆப்கானிஸ்தானுக்கு கெட்டநேரம் மழைவடிவில் வந்தது. காலநிலை வேகப்பந்துவீச்சும், ஸ்விங் பந்துவீச்சுக்கும் எளிதாக ஒத்தழைத்தது. இந்த குளிர்ச்சிநிலைதான் பிரதீப் பந்துவீ்ச்சு பிரகாசமாக இருந்ததற்குக்காரணம்.
கிரீன் டாப் ஆடுகளத்தில் லைன், லென்த்தில் பந்துவீசுவது தெரியாமல் ஆப்கானிஸ்தான் பந்துவீச்சாளர்கள் தவறுகளை செய்து தொடக்கத்தில் ரன்களை வழங்கினார்கள். ஏகப்பட்ட வைடுகளை வீசினார்கள் ஆப்கான்பவுலர்கள். ஆனால், முகமது நபி சரியான லென்தில் பந்துவீசி தவறை திருத்திக்கொண்டார் இலங்கையின் சரிவுக்கு சுழி போட்டார்.
இலங்கை பந்துவீச்சாளர்கள் பிரமாதமாக பந்துவீசினார்கள் என்று கூறவிட முடியாது. ஆப்கானிஸ்தான் அணி பேட்ஸ்மேன்களின் அவசரப்போக்கு, நிலைத்தன்மையில்லாத பேட்டிங், தவறான ஷாட் ஆகியவையும், காலநிலையும்தான் இலங்கை பந்துவீச்சாளர்களுக்கு பக்கபலமாக அமைந்தது.
இலங்கையின் பேட்டிங்கில் திரிமானே, பெரேரா தொடக்க கூட்டணியின் ரன்களை கழித்துவிட்டுப்பார்த்தால் அணியின் ஸ்கோர் 100 ரன்களைக் கூட எட்டாது. அந்த அளவுக்கு பேட்டிங்கில் மோசமாக செயல்பட்டார்கள். பந்து ஒருபக்கம் செல்ல, பேட்டை ஒரு பக்கம் சுழற்றி உதானா, திரிமானே போன்றோர் மோசமாக ஆட்டமிழந்தனர். இதுபோன்ற கேவலமான ஷாட்கள் தொழில்முறையிலான கிரிக்கெட் வீரர்களுக்கு அவமானம்.
தொடக்கத்தில் ஆப்கானிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர்கள் லைன்-லென்த்தில் பந்துவீசாமல் செய்த தவறுகள்தான் இலங்கை தொடக்க வீரர்கள் எளிதாக ரன் குவிக்க முடிந்தது. இந்த தவறை தொடக்கத்திலேய சரி செய்திருந்தால் இலங்கை 100 ரன்களில் சுருண்டிருக்கும்.
அனுபவமான வீரர் என்பதை மலிங்கா நிரூபித்துவிட்டார், பிரிக்கமுடியாத கூட்டணியை தனது சாதுர்யமான பந்துவீச்சால் பிரித்து சரிவுக்கு காரணமாகிவிடுகிறார். இலங்கையின் வெற்றிக்கு மலிங்காவின் அனுபவமான பந்துவீச்சு பிரதானமாகும்.
மற்றவகையில் குறைந்த தவறுகளைச் செய்த இலங்கை வென்றுள்ளது.
மழை காரணமாக இலக்கு திருத்தப்பட்டு 41 ஓவர்களில் 187 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் ஆப்கானிஸ்தான் களமிறங்கியது. ஷேசாத், சசாய் இருவரும் 5 ஓவர்கள் வரை விக்கெட் விழாமல், ரன்களைச் சேர்த்தனர். ஆனால், மலிங்கா வீசிய 5-வது ஓவரில் ஷேசாத் 7 ரன்னில் கருணாரத்னேவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். ஹஸ்ரதுல்லா சசாய் டி20 போல் மட்டையை சுழற்றினார். அதுவும் சுரங்க லக்மல் ஒரு ஷார்ட் பிட்ச் வீச காதைப்பிளக்கும் சத்தத்துடன் பந்து ஆன் திசையில் சிக்சருக்கு கண்ணிமைக்கும் நேரத்தில் பறந்தது. முன்னதாக மலிங்காவை அடித்த கவர் ட்ரைவ் ராஜ கவர் ட்ரைவ் ஆகும், இவருக்கு மலிங்கா சில யார்க்கர்களை வீசினார், ஆனால் அவர் அதனை எதிர்கொண்டார். இவர் இன்னும் கொஞ்சம் நிதானம் கடைபிடிக்க வேண்டும்.
[Image: zazaijpg]முகமது சஸாய்
 
1995-96களில் இலங்கை அணி ஜெயசூரியா, கலுவிதரனாவை வைத்து உலகையே மிரட்டி வந்தனர், அதன் ஒரு குறைந்த வடிவம்தான் இந்த ஷசாத், சசாய் கூட்டணி. ஆனால் சசாய் இன்னும் கொஞ்சம் ஒன்று, இரண்டு என்று ரன்களை எடுத்து, தன் விக்கெட்டின் முக்கியத்துவத்தை உணர்ந்து ஆடினால் ஆப்கன் அணியை வீழ்த்துவது கடினமாக இருக்கும்.
அதன்பின் இலங்கை பந்துவீச்சாளர்கள் அளித்த நெருக்கடியால் அடுத்த 23 ரன்களைச் சேர்ப்பதற்குள் ஆப்கானிஸ்தான் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ரஹ்மத் ஷா2), ஹஸ்மத்துல்லா ஷாகிதி(4), முகமது நபி(11), ஹஸ்ரத்துல்லா சசாய்(30) என வீழ்ந்ததால் நெருக்கடிக்கு ஆளானது. 57 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது
6-வது விக்கெட்டுக்கு கேப்டன் குல்புதின் நயிப், நஜிபுல்லா ஜத்ரன் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். இருவரின் பேட்டிங்கால் ஸ்கோர் ஓரளவுக்கு உயர்ந்து நம்பிக்கை அளித்தது. ஆனால், பிரதீப் வீசிய 25 ஓவரில் நயிப் 23 ரன்னில் எல்பிடபிள்யு ஆனபின் ஆட்டம் தலைகீழாக மாறியது. இருவரும் 6-வது விக்கெட்டுக்கு 64 ரன்கள் சேர்த்தனர். 121 ரன்களில் 6-வது விக்கெட்டை இழந்தது ஆப்கானிஸ்தான். நயீப் எல்.பி.டபிள்யூ ரிவியூவுக்குச் சென்றது அதனை களநடுவர் அவுட் என்றதால் மூன்றாவது நடுவர் அம்பயர் கால் என்று அவுட் கொடுத்தார், ஒருவேளை கள நடுவர் நாட் அவுட் என்றால் அது நாட் அவுட். பந்து ஆஃப் ஸ்டம்ப் லைனுக்கு வெளியே பிட்ச் ஆகிறது எப்படி அதை எல்.பி.என்று கூற முடியும்?
அடுத்த 31 ரன்களில் மீதமிருந்த 4 விக்கெட்டுகளையும் இழந்து தோல்வி அடைந்தது. ரஷித் கான்(2), ஜாத்ரன்(6), ஹசன்(6), நஜ்முல்லா ஜாத்ரன்(43) என சரி ஆட்டம் முடிவுக்கு  வந்தது. 32.4 ஓவர்களில் 152 ரன்களுக்கு ஆட்டமிழந்து 34 ரன்களில் தோல்வி அடைந்தது ஆப்கானிஸ்தான் அணி.
இலங்கை தரப்பில் பிரதீப் 4 விக்கெட்டுகளையும், மலிங்கா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள்.
முன்னதாக டாஸ்வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பீல்டிங் செய்தது. இலங்கையின் தொடக்க வீரர்கள் கருணாரத்னே, பெரேரா இருவரும் சேர்ந்து 13 ஓவர்கள்வரை நிலைத்து நல்ல தொடக்கம் அளித்தனர். அதன்பின் நடுவரிசையில் களமிறங்கிய பேட்ஸ்மேன்கள் ஏமாற்றம் அளித்தநர்.
முதல் விக்கெட்டுக்கு 92 ரன்கள் சேர்த்த நிலையில் கருணாரத்னே 30 ரன்களில் நபி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
அடுத்துவந்த திரிமானே, பெரேராவுடன் சேர்ந்தார். ஆப்கானிஸ்தான் பந்துவீச்சாளர்கள் லென்த் கிடைக்காமல் வீசிய பந்துகளை சரியாகப் பயன்படுத்தி பவுண்டரிகளாக விளாசி ஸ்கோரை உயர்த்தினர். இலங்கை அணியின் ஸ்கோர் சென்ற வேகம், 300 ரன்களை எட்டும் வகையில் இருந்தது.
[Image: nabijpg]
 
ஆனால், முகமது நபி வீசிய 22 ஓவரில் ஆட்டம் தலைகீழானது. 22 ஓவரின் 2-வது பந்தில் திரிமானே 25 ரன்களில் ஆட்டமிழந்தார், அடுத்துவந்த மென்டிஸ் 2 ரன்னில் 4-வது பந்திலும், 6-வது பந்தில் மேத்யூஸ் டக்அவுட்டிலும் ஆட்டமிழந்தனர். முகமது நபி வீசிய ஒரே ஓவரில் 3 விக்கெட் சரிந்தது.
அதன்பின் வந்த இலங்கை பேட்ஸ்மேன்கள் ஒருவர் கூட சரியாக பேட் செய்யாமல் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அடுத்துவந்த டி சில்வா(2), டிசி பெரேரா டக்அவுட்டிலும் வெளியேறினர். தொடக்க வீரர் ஜே பெரேரா 78 ரன்கள் சேர்்த்து ரஷித்கான் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
ஒரு கட்டத்தில் 144 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்திருந்த இலங்கைஅணி, அடுத்த 15 ரன்களில் 5 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. மழையால் ஆட்டம் தடைபடும்போது 8 விக்கெட்டுகளை இழந்திருந்த இலங்கை அணி மீண்டும் ஆடவந்தபோது அடுத்த 21 ரன்களில் மீதம் இருந்த 2 விக்கெட்டுகளையும் இழந்தது.
ஆப்கானிஸ்தான் தரப்பில் முகமதுநபி 4 விக்கெட்டுகளையும், ஜத்ரன், ரஷித் கான் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
Like Reply
ரிவர்ஸ் ஸ்விங்குக்காக வேண்டுமென்றே தரையில் அடித்து த்ரோ: பாக், இங்கிலாந்து வீரர்களுக்கு நடுவர் எச்சரிக்கை
[Image: pakjpg]

நாட்டிங்காமில் நடைபெற்ற பாகிஸ்தான் - இங்கிலாந்து உலகக்கோப்பை போட்டியில் இரு அணி வீரர்களும் வேண்டுமென்றே பந்தைச் சேதப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டதாக நடுவர்களால் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
நடுவர்களான மரைஸ் எராஸ்மஸ், சுந்தரம் ரவி ஆகியோர் பாகிஸ்தான் கெப்டன் சர்பராசிடமும் இங்கிலாந்து கேப்டன் மோர்கனிடமும் திங்களன்று இது தொடர்பாக பேசினர்.  அதாவது பந்தை ஒரு பக்கம் கொஞ்சம் தேய்த்து விட்டால் ரிவர்ஸ் ஸ்விங் எடுக்கும் என்று இரு அணி வீரர்களும் அனாவசியமாக வேண்டுமென்றே பந்தை த்ரோ செய்யும் போது தரையில் அடித்து த்ரோ செய்ததாக நடுவர்கள் மோர்கனையும் சர்பராஸ் அகமதுவையும் எச்சரித்தனர்.
இது தொடர்பாக இங்கிலாந்து கேப்டன் மோர்கன் கூறும்போது, “இரண்டு இன்னிங்ஸ் முழுதும் இது குறித்த விவாதங்கள் இருந்தன. நடுவர் நடு இன்னிங்சில் என்னிடம் வந்தனர், பந்தை ஒரு பவுன்ஸ் செய்து வேண்டுமென்றே அடிக்கடி த்ரோ செய்வது போல் தெரிகிறது என்றனர், ஆனால் மிகுதியாகக் குறை கூறுவது போல் தெரிகிறது, ஆனால் எனக்கு புரியவில்லை” என்றார்.
103 ரன்களில் அவுட் ஆன போது ஜோஸ் பட்லர் பந்தை வாங்கி சரிபார்த்ததும் நடந்தது.
“இரு அணிகளுக்கும் தான் எச்சரிக்கை என்றனர் நடுவர்கள், ஆனால் அந்தச் சமயத்தில் எங்களிடம் தெரிவித்தது போல்தான் தெரிந்தது.  ஆனால் பாகிஸ்தானும் இதே உத்தியை கடைபிடிப்பதாக ஆட்டம் கொஞ்சம் தடைபட்டது.  ஜோஸ் பட்லர் பந்தை பார்க்க வேண்டும் என்று கருதினார். பந்து எல்.இ.டி. விளம்பர போர்டுகளின் மீது பட்டு திரும்புகிறது ஆகவே பந்தின் ஒரு புறம் எப்படி இருக்கிறது என்பதை பட்லர் சரிபார்த்தார்” என்றார் மோர்கன்.
பாகிஸ்தான் ஆல்ரவுண்டர் மொகமது ஹபீஸும், “எங்களையும் எச்சரித்தனர், அது அவர்கள் வெலை, ஓரிருமுறை த்ரோ ஒரு பவுன்சில் வரவில்லை ஆனால் 2-3 பவுன்ஸ்களில் த்ரோ செய்யப்பட்டது. 20 ஓவர்கள் முடிந்த பிறகு இரண்டு பவுன்ஸ் த்ரோ செய்தால் தண்டனை உண்டு என்று நடுவர்கள் எச்சரித்தனர். அதனால்தன நான் ஓடிப்போய் பவுலரிடமே பந்தைக் கொடுத்தேன். நடுவர்கள் எச்சரித்தது சரிதான்.
இங்கிலாந்தின் ஜோ ரூட் இது பற்றி, “நான் இதில் ஈடுபடப் போவதில்லை, நான் என்னையே பிரச்சினைக்குள்ளாக்கிக் கொள்வதில்தான் இது போய் முடியும்” என்று ஒதுங்கிக் கொண்டார்.
Like Reply
அண்ணா பல்கலை கழகம் மீது அனைத்திந்திய தனியார் கல்லூரி ஊழியர்கள் கூட்டமைப்பு லஞ்ச ஒழிப்பு துறையிடம் புகார்



[Image: 201906071313511806_All-India-Private-Col...SECVPF.gif]
அண்ணா பல்கலை கழகம் மீது அனைத்திந்திய தனியார் கல்லூரி ஊழியர்கள் கூட்டமைப்பு லஞ்ச ஒழிப்பு துறையிடம் புகார் தெரிவித்துள்ளது.
பதிவு: ஜூன் 07,  2019 13:13 PM
சென்னை,

அண்ணா பல்கலை கழகத்தின் துணைவேந்தராக கர்நாடகாவை சேர்ந்த சூரப்பா பதவி வகித்து வருகிறார்.  இவர் மீது அனைத்திந்திய தனியார் கல்லூரி ஊழியர்கள் கூட்டமைப்பு லஞ்ச ஒழிப்பு துறையிடம் புகார் தெரிவித்துள்ளது.
இந்த லஞ்ச புகாரில், துணைவேந்தர் லஞ்சம் பெற்று கொண்டு தரமற்ற கல்லூரிகளின் பட்டியலை வெளியிடவில்லை என தெரிவித்துள்ளது.
Like Reply
`நிபாவிலிருந்து தப்பிக்க வளர்ப்புப் பிராணிகளிடம் எச்சரிக்கை தேவை!' - குமரி கலெக்டர்
நிபா வைரசிலிருந்து தப்பிக்க வளர்ப்புப் பிராணிகளிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அணில், வெளவால் கடித்த பழங்களைச் சாப்பிட வேண்டாம்' என கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே அறிவுறுத்தியிருக்கிறார்.
[Image: IMG-20190606-WA0018_16551.jpg]
கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் தாக்குதல் காரணமாக கல்லூரி மாணவர், இளம்பெண் என 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 34 பேர் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளனர். இந்தநிலையில் கேரள மாநிலத்தையொட்டிய தமிழக மாவட்டங்களில் நிபா வைரஸ் பரவாமல் தடுக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன.


இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே செய்தியாளர்களிடம் கூறுகையில், ``கன்னியாகுமரி மாவட்டம் கேரளத்தையொட்டியுள்ள மாவட்டம். எனவே, கேரள மாநிலத்தில் நிபா பற்றிய செய்தி வருவதால் இங்குள்ள மக்களுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் 150 தனியார் மருத்துவமனைகள், 12 அரசு மருத்துவமனைகளும் உள்ளன. மருத்துவமனைகளில் உள்ள காய்ச்சல் நோயாளிகளை கண்காணித்து வருகிறோம். கேரள மாநிலத்தையொட்டிய மேல்புறம், திருவட்டார், கிள்ளியூர் ஒன்றியங்களில் காய்ச்சல் பரவுகிறதா எனக் கண்காணித்து வருகிறோம். வெளியூர் சென்று வரும் மக்களுக்குக் காய்ச்சல் வந்தால் மருத்துவமனைகளில் அனுமதிக்க வேண்டும்.
[Image: image_(7)_16115.jpg]
நம் மாநிலத்தில் கேரள எல்லையையொட்டியுள்ள 8 மாவட்டங்களிலும் எந்தப் பிரச்னைகளும் இல்லை. விலங்குகள் கடித்த பழங்களை சாப்பிடக் கூடாது. கைகளை நன்கு கழுவி சாப்பிடவேண்டும். ஒரே இடத்தில் 4-க்கும் மேற்பட்டவர்களுக்குக் காய்ச்சல் வந்ததாகவோ, காய்ச்சல் எண்ணிக்கை உயர்ந்ததாகவோ தகவல் இல்லை. ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரியில் காய்ச்சல் சிறப்பு வார்டு உள்ளது. வளர்ப்புப் பிராணிகளிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அணில், வெளவால் கடித்த பழங்களைச் சாப்பிட வேண்டாம். பழங்களை தோல் எடுத்தபிறகு சாப்பிட வேண்டும். தினமும் காய்ச்சல் நோயாளிகளின் எண்ணிக்கையைக் கண்காணித்துக்கொண்டுதான் இருக்கிறோம். கேரள சுகாதாரத் துறையும் நிபா குறித்து அச்சப்பட வேண்டியது இல்லை என்கிறார்கள். மக்கள் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை" என்றார்.
Like Reply
இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால மீது போலீஸ் மா அதிபர் புகார்: தமிழர்கள் காணாமல் ஆக்கப்பட்ட விவகாரம்

[Image: _107274978_gettyimages-74378290-1.jpg]படத்தின் காப்புரிமைGETTY IMAGESImage captionகோப்புப் படம்: இலங்கை உள்நாட்டுப் போர் முடிவதற்கு முன்பாக காணாமல் ஆக்கப்பட்ட ஒருவரின் உறவினர் அப்போதைய அதிபர் ராஜபக்ஷேவிடம் முறையிடும் படம்.
இலங்கையில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் விசாரணை செய்த போலீஸ் அதிகாரியான நிஷாந்த டி சில்வாவை இடமாற்றம் செய்ய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழுத்தம் கொடுத்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள போலீஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர இந்தப் புகாரைத் தெரிவித்துள்ளார்.
போலீஸ் அதிகாரியான நிஷாந்த டி சில்வாவை இடமாற்றம் செய்ய, ஜனாதிபதி கூறியதாக அப்போதைய பாதுகாப்பு செயலாளரால் தனக்கு அறிவிக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதன்படியே, தான் இடமாற்றும் உத்தரவுக்கு கையெழுத்திட்டதாக பூஜித் ஜயசுந்தர கூறினார்.
ஏப்ரல் 21ஆம் தேதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக விசாரணை செய்யும் நாடாளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் இன்று வியாழக்கிழமை ஆஜராகி சாட்சி அளித்தபோது அவர் இதனை அவர் தெரிவித்துள்ளார்.
[Image: _107274980_gettyimages-74163416.jpg]படத்தின் காப்புரிமைGETTY IMAGESImage captionகோப்புப் படம்: காணாமல் ஆக்கப்பட்டோருக்காக கொழும்பில் நடந்த ஒரு போராட்டம்.
கொழும்பு கொட்டாஞ்சேனை மற்றும் கொழும்பின் புறநகர் பகுதியான தெஹிவளை பகுதிகளில் 11 தமிழ் இளைஞர்கள் 2008 மற்றும் 2009ம் ஆண்டுகளில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டதாக அவர்களின் உறவினர்களினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.இந்த சம்பவத்தில் பாதுகாப்பு பிரிவின் உயர் அதிகாரிகள் பலருக்கு தொடர்பு இருப்பதாக குற்றஞ்சுமத்தப்பட்டது.
இந்த நிலையில் பல உயர் பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்ததுடன், பாதுகாப்பு பிரிவினர் பலர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலிலும் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
[Image: _107259957_img_20190606_130538.jpg]
நிஷாந்த டி சில்வாவை இடமாற்றம் செய்வதற்கான தேவை ஏன் ஜனாதிபதிக்கு ஏற்பட வேண்டும் என நாடாளுமன்ற தெரிவுக்குழு உறுப்பினர்கள் அப்போது பூஜித் ஜயசுந்தரவிடம் கேள்வி எழுப்பினர்.
அத்துடன், இந்த இடமாற்ற விவகாரம், போலீஸ் ஆணைக் குழுவிற்கும் அறிவிக்கப்பட்டு, ஆணைக்குழுவின் அனுமதியுடனேயே இடமாற்றம் வழங்கப்பட்டதாக பூஜித் ஜயசுந்தர கூறினார்.
இதேவேளை, தேசிய பாதுகாப்பு சபை கூட்டத்தில் ஆஜராவதை தவிர்க்குமாறு தனக்கு அப்போதைய பாதுகாப்பு செயலாளர் கபில வைத்தியரத்ன அறிவுறுத்தியதாகவும் போலீஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர, நாடாளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் தெரிவித்தார்.
இலங்கை தாக்குதல் நடத்தப்படுவற்கு முன்னர், தாம் இறுதியாக 2018ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 23ம் தேதியே பாதுகாப்பு சபை கூட்டத்தில் கலந்துகொண்டதாக அவர் குறிப்பிட்டார்.
[Image: _107259959_1111112222222222.jpg]
அவ்வாறாயின், தேசிய பாதுகாப்பு சபையிலிருந்து போலீஸ் திணைக்களம் புறக்கணிக்கப்பட்டதா என போலீஸ் மாஅதிபரிடம், நாடாளுமன்ற தெரிவுக்குழு வினவியது.
அதற்கு, ஆம் என போலீஸ் மாஅதிபர் பதிலளித்தார்.
மேலும், இலங்கை மீது தாக்குதல் நடத்தப்படவுள்ளது தொடர்பாக தனக்கு முதலாவது ஆவணம் ஏப்ரல் மாதம் 9ஆம் தேதியே கிடைத்ததாகவும், இந்த விடயம் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் மேலதிக விடயமாகவே இது கலந்துரையாடப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
பாதுகாப்பு படைகளின் பிரதானிக்கும், 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்திற்கும் இடையில் தொடர்பு காணப்படுகிறது என தாம் எண்ணுவதாக போலீஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர குறிப்பிட்டார்.
போலீஸ் மா அதிபரை பதவி நீக்கம் செய்வதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லாத பின்னணியில், ஏன் அரசியல் அழுத்தங்களுக்கு நீங்கள் உட்படுத்தப்பட்டீர்கள் என நாடாளுமன்ற தெரிவுக்குழு உறுப்பினர்கள் போலீஸ் மாஅதிபரிடம் கேள்வி எழுப்பினர்.
தனது மேலதிகாரியான பாதுகாப்பு செயலாளரே தனக்கு உத்தரவு பிறப்பித்திருந்ததாக அப்போது அவர் சுட்டிக்காட்டினா
Like Reply
”முதல்ல அம்பையருக்கு போய் ஒழுங்கா பாடம் நடத்துங்க...” ஐ.சி.சி-யை கிண்டல் செய்யும் தோனி ரசிகர்கள்
ஆஸ்திரேலியா - மேற்கிந்தியத்தீவுகள் அணி மோதிய போட்டியில், கிறிஸ் கெயிலுக்கு மூன்று முறை தவறான அவுட் அளித்தார்.


[Image: dhoni-2.png]தோனி

[Image: sficon.gif][Image: sticon.gif][Image: sgicon.gif][email=?subject=%E2%80%9D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%20%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D%20%E0%AE%92%E0%AE%B4%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95...%E2%80%9D%20%E0%AE%90.%E0%AE%9A%E0%AE%BF.%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AF%E0%AF%88%20%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%20%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&body=%E2%80%9D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%20%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D%20%E0%AE%92%E0%AE%B4%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95...%E2%80%9D%20%E0%AE%90.%E0%AE%9A%E0%AE%BF.%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AF%E0%AF%88%20%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%20%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D:%20https://tamil.news18.com/news/sports/cricket-dhoni-fans-want-icc-to-focus-on-umpiring-quality-and-not-his-army-insignia-gloves-san-165093.html][Image: email-icon.gif][/email]
news18 
Updated: June 7, 2019, 4:51 PM IST

இந்திய அணியின் விக்கெட் கீப்பர் தோனி, ராணுவத்தின் முத்திரையை கையுறையில் பயன்படுத்தியதை கேள்வி எழுப்பியதால், அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஐ.சி.சி-யை கிண்டல் செய்து வருகின்றனர்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், தற்போதையை விக்கெட் கீப்பருமான தோனிக்கு, 2011-ம் ஆண்டு ராணுவத்தில் கவுரவ லெப்டினட் பதவி வழங்கப்பட்டது.


இந்நிலையில், இங்கிலாந்தில் நடந்துவரும் உலகக்கோப்பை தொடரில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் தோனியின் கையுறையில் துணை ராணுவத்தின் முத்திரை இடம்பெற்றிருந்தது.

தியாகம் என்று பொருள்படும் அந்த முத்திரையை தோனி பயன்படுத்திதால் அவருக்கு பாராட்டுகள் குவிந்தன. எனினும், விதிமுறைகளின் படி அது சரியானதா? என்ற கேள்வியும் எழுப்பப்பட்டது.

இந்த விவகாரத்தில் கருத்து தெரிவித்த பாகிஸ்தான் அமைச்சர் ஒருவர், “தோனி ஒன்றும் போருக்குச் செல்லவில்லை” என்று கருத்து தெரிவித்திருந்தார். இந்நிலையில், அந்த முத்திரை தோனி அகற்ற வேண்டும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி, பிசிசிஐ-க்கு வலியுறுத்தியது.

இதனால், ஐசிசி மீது கோபமடைந்த தோனி ரசிகர்கள், அந்த அமைப்பை கிண்டல் செய்ய தொடங்கினர்.

நேற்று ஆஸ்திரேலியா - மேற்கிந்தியத்தீவுகள் அணி மோதிய போட்டியில், கிறிஸ் கெயிலுக்கு மூன்று முறை தவறான தீர்ப்பை அளித்தார்.
[Image: AdChoice_Icon.svg]
[/url][Image: aHR0cDovL2ltZ2hvc3RzLmNvbS90LzIwMTktMDQv...wZw**.webp]
[url=https://%E0%A4%95%E0%A5%8D%E0%A4%AF%E0%A4%BE_%E0%A4%86%E0%A4%AA_%E0%A4%9F%E0%A5%8D%E0%A4%B0%E0%A5%87%E0%A4%A1%E0%A4%BF%E0%A4%82%E0%A4%97_%E0%A4%95%E0%A5%87_%E0%A4%B6%E0%A4%BE%E0%A4%B0%E0%A5%8D%E0%A4%95_%E0%A4%AC%E0%A4%A8%E0%A4%A8%E0%A4%BE_%E0%A4%9A%E0%A4%BE%E0%A4%B9%E0%A4%A4%E0%A5%87_%E0%A4%B9%E0%A5%88%E0%A4%82/]

Sponsored by MGID
क्या आप ट्रेडिंग के शार्क बनना चाहते हैं?


முதல் இரண்டு முறை டி.ஆர்.எஸ் மூலம் பிழைத்த கெயில், மூன்றாவது முறை எல்.பி.டபிள்யூ ஆனார். அவுட் ஆகி மைதானத்தைவிட்டு வெளியேறிய பின்னர் அது நோபால் என்று தெரிய வந்தது.

இதனால், போட்டி நடுவர் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது. தற்போது, தோனி விவகாரத்தில் மூக்கை நுழைக்கும் ஐஐசி, முதலில் நடுவர்களை சரிசெய்யட்டும் என்று தோனி ரசிர்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.
Quote:Sorry #ICC. I stand with Ms Dhoni.
This Balidan symbol is nothing to do with cricket game.. #DhoniKeepTheGlove pic.twitter.com/QnetFoWERG


— Tweetera? (@DoctorrSays) June 6, 2019



Quote:The nation stands with you #DhoniKeepTheGlove pic.twitter.com/SYh25Eg4PJ

— Sash (@Sash76273512) June 6, 2019



Quote:The ball before Gayle got out, it was a huge no ball , wasn’t called. The ball Gayle got out should have been a free hit. pic.twitter.com/OtJ4ugtKto

— Ghatta (@Kattehaiklu) June 6, 2019



Quote:#DhoniKeepTheGlove
Priortiest


ICC on low ICC on Dhoni's
Level umpiring Balidan batch pic.twitter.com/OtXkLbI7kw

— Akashbabbar (@Akashbabbar321) June 6, 2019



Quote:Dear @ICC,

Instead of focussing on MS Dhoni's gloves better focus on improving the quality of umpires.

4 decisions overturned so far in today's game + a huge No Ball miss that costed Chris Gayle's wicket. We have better umpires in our gully cricket. #DhoniKeepTheGlove #CWC19 https://t.co/EqeYYYDLUt pic.twitter.com/YTjB5ThcNK

— Sir Jadeja fan (@SirJadeja) June 6, 2019
Like Reply
ரூ.10 ஆயிரத்திற்காக 2 வயது சிறுமி கொலை : நாடு முழுவதும் கொந்தளிப்பு




[Image: 201906071634061028_Aligarh-2YearOld-Murd...SECVPF.gif]

மும்பை,

உத்தரபிரதேசம் மாநிலம் அலிகார் பகுதியைச் சேர்ந்தவர் பன்வாரிலால் சர்மா. இவருக்கு டுவிங்கிள் சர்மா எனும் 2 வயது பெண் குழந்தை உள்ளது. கடந்த மே மாதம் 31ம் தேதி டுவிங்கிள் மாயமாகியுள்ளார்.   குழந்தை மாயமானதும் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். குழந்தை கடத்தப்பட்டு இருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.

 இதனையடுத்து குழந்தை முகம் அடையாளம் தெரியாத அளவிற்கு தாக்கப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது உத்தரபிரதேசம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதில் குற்றவாளிகள் ஜாகித் மற்றும் அஸ்லாம் என தெரிய வந்துள்ளது. அவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். இருவரும் குழந்தையை தாங்கள் கொன்றதாகவும் ஒப்புக் கொண்டனர். 

குழந்தையின் பெற்றோர் ஜாகித்திடம் பணம் வாங்கியுள்ளனர். அதனை திருப்பி கொடுக்க முடியாத நிலையில் இந்த கடத்தல் கொலை நடத்தப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது குற்றவாளிகளுக்கு எதிராக தேசிய பாதுகாப்பு சட்டத்தை பிரயோகிக்க உ.பி. அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சிறுமிக்கு சமூக வலைதளங்களில் நியாயம் கேட்டு பல்வேறு தரப்பு மக்களும் போராடி வருகின்றனர். மேலும் '#JusticeForTwinkle' எனும் ஹேஷ்டாக் வைரலாகியுள்ளது. 
Like Reply
நடிகர் சங்க தேர்தல் : பாக்யராஜ் களமிறக்கம்
[Image: NTLRG_20190607182420163196.jpg]

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடக்கிறது. அதன்படி 2019-22ம் ஆண்டுக்கான தேர்தல் வருகிற ஜனவரி 23ம் தேதி சென்னையில் நடைபெற இருக்கிறது. ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபன் தலைமையில் நடக்கும் இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளை(ஜூன் 8) முதல் துவங்குகிறது. இன்று(ஜூன் 7) முதல் வேட்பு மனு விநியோகம் செய்யப்பட்டுள்ளது.


இந்த தேர்தலில் கடந்த முறை போட்டியிட்டு வெற்றி பெற்ற நாசர் தலைமையிலான பாண்டவர் அணியே களமிறங்குகிறது. தலைவர் பதவிக்கு நாசரும், பொதுச்செயலாளர் பதவிக்கு விஷாலும், பொருளாளர் பதவிக்கு கார்த்தியும், துணை தலைவர் பதவிக்கு கருணாஸூம் மீண்டும் போட்டியிடுகிறார்கள். பொன் வண்ணன் போட்டியிடாததால் அவருக்கு பதில் பூச்சி முருகன் துணை தலைவராக போட்டியிடுகிறார்கள். இவர்கள் தவிர 26 பேர் செயற்குழு உறுப்பினர்களாக போட்டி களத்தில் உள்ளனர்.

இவர்களை எதிர்த்து மற்றொரு அணி உருவாகி வந்தது. ஐசரி கணேஷ் தலைமையில் இந்த அணி களமிறங்க வேலைகள் நடந்து வந்தன. இந்நிலையில் இந்த அணி சார்பாக தலைவர் பதவிக்கு பாக்யராஜ் போட்டியிட உள்ளார். விஷாலை எதிர்த்து ஐசரி கணேஷ் களமிறங்க உள்ளார். மற்ற பதவிகளுக்கான வேட்பாளர்கள் தேர்வு மும்முரமாய் நடக்கிறது. கடந்த தேர்தலில் விஷால் வெற்றி பெற உழைத்த ஐசரி கணேஷ், உதயா, ஆர்கே சுரேஷ் போன்ற பலர், விஷால் மீதான அதிருப்தி காரணமாக இந்த முறை அவரை எதிர்க்க தொடங்கி உள்ளனர். இதனால் இந்த தேர்தலும் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என்றே தெரிகிறது
Like Reply
பால்வினை நோய்த் தொற்று: 10 லட்சம் பேர் பாதிப்பு - உலக சுகாதார நிறுவனம்
[Image: _107277261_ed27aac3-7f93-4096-945d-b25954778db3.jpg]படத்தின் காப்புரிமைGETTY IMAGES
உலகில் ஒவ்வொரு நாளும் 10 லட்சம் பேருக்கு புதிதாக பால்வினை நோய்த் தொற்று ஏற்படுவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
கோனோரியா, சிபிலிஸ், ச்லாமைதியா, ட்ரைகோமோனியாசிஸ் போன்ற பாலுறவு மூலம் பரவும் நோய்த் தொற்றுகளுக்கு ஆளானவர்கள் எண்ணிக்கையை குறைக்கும் முயற்சியில் 2012 முதல் பெரிய முன்னேற்றம் ஏற்படவில்லை என்று சுகாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
ஒருவகை கோனோரியா நோய் மருந்துகளுக்கு கட்டுப்படுவதில்லை என்பதே சமீபத்திய கவலைகளுக்கு காரணம்.
[Image: _107279193_6b577635-f6b7-4d07-ba69-a879b237721a.jpg]படத்தின் காப்புரிமைGETTY IMAGES
பால்வினை நோய்த் தொற்றுகளால், குழந்தை இறந்தே பிறப்பது, குழந்தையின்மை, நரம்பியல் நோய்கள், இதய நோய் போன்றவை ஏற்படுவதுடன், எச்.ஐ.வி. தொற்றுக்கான வாய்ப்பும் அதிகரிக்கிறது.
சிகிச்சை பெறுவது, ஆணுறை பயன்படுத்துவது போன்ற பாதுகாப்பு வழிகளை மேற்கொள்வது அவசியம் என்பதை புள்ளிவிவரங்கள் உணர்த்துவதாக உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ள
Like Reply
தண்ணீர் இல்லை என்கிற முழக்கங்களும், அதற்கான போராட்டங்களும் இந்தியா முழுவதுமே அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. ஆனால், இதைக் காரணமாக வைத்து காசு பார்க்கிற சம்பவங்களும் நிகழாமல் இல்லை. சாலையில் தென்படுகிற லாரிகளில் பாதிக்கு மேல் தண்ணீர் டேங்கர் லாரிகளாகவே இருக்கின்றன. மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை ஒரு லாரி மீண்டும் மெட்ரோ நிலையங்களுக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறது. தண்ணீர் லாரிகள் செல்ல முடியாத குறுகிய தெருக்களுக்கு ஆட்டோக்களில் தண்ணீர் விநியோகம் நடைபெறுகிறது. நிமிடத்திற்கு நான்கு லாரிகள் மெட்ரோ நிலையங்களில் தண்ணீர் நிரப்பிக்கொண்டு கிளம்புகின்றன. லாரிகள் என்று இருந்த வணிகம் தண்ணீர் ஆட்டோக்கள், தண்ணீர் வேன்கள் என விஸ்வரூபம் எடுத்திருக்கிறது.
சென்னையின் இன்னொரு பக்கமான ஓ.எம்.ஆர்  சாலையின் தண்ணீர்ப் பிரச்னை முக்கியமான பிரச்னையாக உருமாறியுள்ளது. ஓ.எம்.ஆர் என்பது ஓல்டு மாமல்லபுரம் சாலை என்றாலும் இன்று அது சென்னையின் நவீன அடையாளங்களுள் ஒன்று. பூஞ்சேரி கூட்டு ரோட்டில் தொடங்கி மத்திய கைலாஷ் வரை நீண்ட நெடிய சாலையாக இருக்கும் இது, சிலவருடங்களுக்கு முன் வரை சதுப்பு நிலக்காடுகளாகவும், விவசாய நிலம் நிறைந்த பகுதிகளாகவும் அறியப்பட்ட இந்தச் சாலை இன்று வான் உயர் கட்டடங்கள், வழுக்கும் சாலை பறக்கும் சொகுசு கார்கள், பன்னாட்டு உணவு விடுதி, பன்னாட்டுத் திரை அரங்குகள் என அரக்கப் பரக்க இயங்கிக்கொண்டிருக்கிறது.
[Image: 75_13449.jpg]
[color][font]
`மிரட்டும் தண்ணீர்ப் பஞ்சம்... காலியாகும் அப்பார்ட்மென்ட்கள்!' - சிக்கலில் சென்னை OMR சாலை


 
தற்போதைய நிலவரப்படி இந்தச் சாலையில், அதாவது ஓ.எம்.ஆரில் சுமார் 360 தனியார் அப்பார்ட்மென்ட்கள் கட்டப்பட்டு மக்கள் குடியேறி உள்ளனர். குறைந்த பட்சம் 3 அடுக்கு மாடியிலிருந்து அதிகபட்சமாக 50 அடுக்கு மாடிகள் வரை உள்ள இந்த அப்பார்ட்மென்ட்கள் ஒவ்வொன்றிலும் 6 வீடுகளிலிருந்து சுமார் 3500 வீடுகள் வரை உள்ளன. சினிமா மால், ஷாப்பிங்மால், ஸ்விம்மிங்புல், என ஸ்டார் ஹோட்டல் தரத்தில் ஒரு குட்டி ஹைடெக்சிட்டிக்கு ஈடாக இருக்கின்றன இந்த அப்பார்ட்மென்ட்கள். சராசரியாக ஒரு அப்பார்ட்மென்ட்க்கு ஆயிரம்பேர் வசிப்பதாகக் கணக்கிட்டாலும் முந்நூற்று அறுபது அப்பார்ட்மென்ட்களுக்கு முன்று 3,60,000 பேர் ஆகிறது. மேலும் இச்சாலையில் டிசிஎஸ், சிடிஎஸ், காக்னிசென்ட் எனக் கிட்டதட்ட 82 க்கும் மேற்பட்ட ஐடி நிறுவனங்கள் உள்ளன. சிறுசேரி சிப்காட்டில் மட்டும் 31 ஐடி நிறுவனங்கள் உள்ளன. இதில் டிசிஎஸ் எனும் தனியார் ஐடி நிறுவனத்தில் மட்டும் 36,000 ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இச்சாலையில் உள்ள ஐடி நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் எண்ணிக்கை மட்டும் 3,50,000 க்கும் அதிகம். ஆக மொத்தம் இந்த ஓல்டு மாமல்லபுரம் சாலையில் மட்டும் கடந்த 2005 ஆண்டுவாக்கிலிருந்து சுமார் 7 லட்சத்துக்கும் அதிகமானோர் புதியதாகக் குடியேறி உள்ளனர். இவர்கள் தினசரி குளிப்பது முதற்கொண்டு குடிப்பதுவரைக்குமான தண்ணீர் வசதி வெளியிலிருந்தே பெறப்படுகிறது.
[/font][/color]
[Image: 76_13352.jpg]
[color][font]
இது குறித்து ஓ.எம்.ஆர் பகுதியில் வசிக்கும் சமரன் என்பவர் பேசும் போது, ``ஓ.எம்.ஆர் அருகில் உள்ள தாழம்பூர், சிறுசேரி, பொன்மார், புதுப்பாக்கம், மாம்பாக்கம், காயார், பனங்காட்டுப்பாக்கம் வெண்பேடு, இள்ளலூர், தண்டலம், ஆலத்தூர், பையனூர், திருப்போரூர், கன்னகப்பட்டு, காலவாக்கம், தையூர் உள்ளிட்ட சுமார் 22 க்கும் மேற்பட்ட சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள விவசாய கிணறுகளிலிருந்து டேங்கர் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்துவரப்படுகிறது. இப்படி குடிநீர் சப்ளை செய்யும் லாரி ஒவ்வொன்றும் 12,000 லிட்டர் கொள்ளளவில் இருந்து 32,000 லிட்டர் கொள்ளளவு கொண்டவையாக உள்ளது.
சராசரியாக 20,000 கொள்ளளவு கொண்ட ஒரு டேங்கர் லாரி நாள் ஒன்றுக்கு ஒரு கிணற்றிலிருந்து 10 லோடுகள் சப்ளை செய்தாலும் ஒரு கிணற்றிலிருந்து ஒரு லாரிமூலம் நாள் ஒன்றுக்கு 2 லட்சம் லிட்டர் தண்ணீர் உறிஞ்சப்படுகிறது. சுற்றுவட்டார கிராமங்களில் இருக்கும் 346 கிணறுகளில் நாள் ஒன்றுக்கு என்றாலும் கூட 6 கோடியே 92லட்சம் லிட்டர் தண்ணீர் உறிஞ்சி விற்பனை செய்யப்படுகிறது.
[/font][/color]
[Image: 77_13586.jpg]
[color][font]
நாள் ஒன்றுக்கே கிட்டத்தட்ட 7 கோடி லிட்டர் என்றால் ஒரு மாதத்திற்கு மட்டும் 210 கோடி லிட்டர் உறிஞ்சப்படுகிறது. உங்களுக்கு இன்னும் கொஞ்சம் எளிதாகச் சொல்வதாக இருந்தால் ஒரு மாதத்திற்கு மட்டும் சராசரியாக ஒரு ஏரித் தண்ணீர் காலி ஆகிறது. அதாவது 800 ஏக்கரிலிருந்து 1500 ஏக்கர் வரை விவசாயம் செய்ய பயன்படுத்தப்படும் பாசன நீர் செலவாகிறது. கடந்த எட்டு ஆண்டுகளுக்கும் மேலாகக் கொடிகட்டி பறக்கும் இந்த வாட்டர் பிசினஸால் ஓ.எம்.ஆர் சுற்றுவட்டாரத்தில் கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் வெகு விரைவாகக் குறைந்து வருவதால் கடல்நீர் உயர்ந்து கிராமங்களுக்குள் ஊடுருவி வருகிறது. பாசனநீரை விற்பனைசெய்யும் விவசாயிகளைக் குறைசொல்லியும் பயனில்லை. ஏனென்றால் ஒரு ஏக்கர் நிலத்தில் பயிர் செய்வதற்கு ஒரு விவசாயி சுமார் 12 ஆயிரத்திலிருந்து 35 ஆயிரத்திற்குச் செலவு செய்கிறார்.
[Image: 79_14266.jpg]அவருக்கு சுமார் 10 ஆயிரத்திலிருந்து 15 ஆயிரம் வரை லாபம் கிடைக்கிறது. இதற்கு தான் மட்டுமல்லாது தனது மனைவி குழந்தை, குட்டி, மாடு, கண்ணு என எல்லோருமே உழைக்கவேண்டும். மேலும் நாற்றுநட, களைபறிக்க, அறுவடைசெய்ய, ஆட்கள் கிடைப்பதில்லை, மாற்றாக இயந்திரங்களின் உதவியுடன் நாற்று நடவும் ,களை பறிக்கவும், அறுவடை செய்யவும் முயன்றாலும் அதிக பணம் கொடுக்கவேண்டி இருக்கிறது. அப்படியே கொடுத்தாலும் சரியான நேரத்தில் இயந்திரங்கள் கிடைப்பதில்லை. கடைசியில் பண நஷ்டமும் மன உளைச்சலுமே விவசாயிக்கு மிஞ்சுகிறது இதனால் விவசாயம் செய்வதை விட்டு தண்ணீரை விற்கும் நெருக்கடிக்கு ஆளாகிறான் விவசாயி. ஒரு நடைக்கு 200 ரூபாய் கிடைக்கிறது, சராசரியாக 10 நடை போனாலும் நாள் ஒன்றுக்கு 2 ஆயிரம் ரூபாய் என மாதத்திற்கு 60,000 ஆயிரம் கிடைக்கிறது.
கிட்டதட்ட 4 அல்லது 5 மாதங்கள் உழைத்துப் பயிர் வைத்தால் ஆயிரத்திலிருந்து 15 ஆயிரம் வரை லாபம் கிடைத்த நிலையில் எந்த உழைப்பும் இன்றி வெறும் தண்ணீர் விற்பதால் மட்டும் ஒரு மாதத்தில் 60 ஆயிரம் லாபம் பார்க்கிறான். இந்த நிலை நீடித்தால் இந்த ஆண்டே பழைய மாமல்லபுரம் சாலையைச் சுற்றியுள்ள 300க்கும் மேற்பட்ட விவசாய கிராமங்கள் வறட்சியையும் கடும் தண்ணீர்ப் பஞ்சத்தையும் சந்திக்கவேண்டிய சூழல் நிலவுகிறது. மேலும் விளைநிலங்கள் – குடியிருப்புகள் அத்தனையும் உப்புமண் ஆகி மண் மலடுதட்டிபோகும் பெரும் அபாயம் உள்ளது என்கிறார்.
[/font][/color]
[Image: OMR_13427.jpg]
[color][font]
ஓ.எம்.ஆர் பகுதிகளில் தண்ணீர்த் தட்டுப்பாட்டைப் பயன்படுத்திக் கொள்கிற தனியார் நிறுவனங்கள் கடந்த ஜூன் மாதம் ஒன்றாம் தேதி முதல் தண்ணீர் விலையை உயர்த்தியுள்ளனர். 30 ஆயிரம் லிட்டர் தண்ணீரை 2400 இருந்து 3300 ஆக உயர்த்தியுள்ளனர். இது சென்ற மாதத்தை விட 900 ரூபாய் அதிகம். அதிக விலைகொடுத்து தண்ணீர் வாங்கும் பணம் படைத்தவர்களுக்கு இந்தத் தொகை பெரிதாகத் தெரிவதில்லை. ஆனால் வசதி இல்லாத மக்களுக்கு விலையேற்றம் மிகப் பெரிய இடியாக இறங்கியிருக்கிறது. இதே நிலை தொடர்ந்து நீண்டால் விலை ஏற்றம் இன்னும் அதிகமாக வாய்ப்புள்ளது. அரசு உடனடியாக தீர்வை நோக்கி முன்னேறாவிட்டால் மக்கள் பல இன்னல்களைச் சந்திக்க வேண்டி வரும். 
[/font][/color]
Like Reply
2019 உலகக் கோப்பையில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் இந்திய கேப்டன் விராட் கோலி கையாண்ட 3 சூழ்ச்சிகள்
[Image: ee4db-15598317382557-800.jpg]
South Africa v India - ICC Cricket World Cup 2019
[color][size][font]
2019 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான முதல் போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளி அட்டவனையில் தனது முதல் புள்ளியை பெற்றுள்ளது. முதலில் பேட் செய்த தென்னாப்பிரிக்க அணியில் அதன் தொடக்க ஆட்டக்காரர்கள் ஹாசிம் அம்லா மற்றும் குவின்டன் டிகாக்கை விக்கெட்டுகளை ஆட்டத்தின் ஆரம்பத்திலே ஜாஸ்பிரிட் பூம்ரா வீழ்த்தினார்.
இருப்பினும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் நிலைத்து விளையாட முற்பட்ட போது சுழற்பந்து வீச்சாளர்கள் அந்த விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். தென்னாப்பிரிக்க அணி 35 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 135 ரன்களை எடுத்து தடுமாறிக் கொண்டிருந்த போது கிறிஸ் மோரிஸ் மற்றும் காகிஸோ ரபாடா ஒரு நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி தென்னாப்பிரிக்க அணியின் ரன்களை 227ஆக உயர்த்தினர். 
ஒரு சுமாரான இலக்கை சேஸ் செய்த இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷீகார் தவானை, காகிஸோ ரபாடா வெளியேற்றினார். ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த விரும்பியபோது, கேப்டன் விராட் கோலி 18 ரன்களுடன் நடையைக் கட்டினார். பின்னர் களமிறங்கிய கே.எல்.ராகுலுடன், ரோகித் இனைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதன் பின்னர் எம்.எஸ்.தோனியுடனும் இனைந்து ரோகித் விளையாடினார். இந்திய துனைக் கேப்டன் ரோகித் சர்மா ஒரு சிறப்பான சதத்தினை விளாச, ஹர்திக் பாண்டியா ஆட்டத்தை முடித்து வைத்தார்.
ரோகித் சர்மா 144 பந்துகளை எதிர்கொண்டு 122 ரன்களை விளாசினார். இது இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்தது. இருப்பினும் விராட் கோலியின் அற்புதமான கேப்டன்ஷீப்பும் இந்திய அணியின் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. 
நாம் இங்கு தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான முதல் உலகக் கோப்பை போட்டியில் விராட் கோலி கையாண்ட 3 சூழ்ச்சிகளை பற்றி காண்போம்.[/font][/size][/color]
#3 அணித் தேர்வு
[Image: 0f09b-15598317145138-800.jpg]
South Africa v India - ICC Cricket World Cup 2019
[color][size][font]
உலகக் கோப்பையில் விராட் கோலி இந்திய அணியை எவ்வாறு தேர்வு செய்வார், மற்றும் எந்தெந்த வீரர்கள் இடம்பெறுவார்கள் என்ற விவாதம் பல நாட்களாக ரசிகர்கள் மனதில் எழுந்து வந்தது. அத்துடன் அவ்வப்போது நடைபெறும் செய்தியாளர்கள் சந்திப்பில் தனது நம்பிக்கை வீரர்களை தெரிவிப்பார். ரவீந்திர ஜடேஜா மற்றும் முகமது ஷமி ஆகியோருக்கு பதிலாக குல்தீப் யாதவ் மற்றும் புவனேஸ்வர் குமார் ஆகியோரை விராட் கோலி நம்பி இந்திய ஆடும் XI-ல் தேர்வு செய்தார். கோலியின் இந்த முடிவு ரசிகர்களுக்கு சற்று வெறுப்பை ஏற்படுத்தியது அத்துடன் இது தவறான முடிவாக அமையப் போகிறது என அனைத்து ரசிகர்களும் எண்ணியிருந்தனர்.
புவனேஸ்வர் குமார், ஜாஸ்பிரிட் பூம்ராவுடன் சேர்ந்து அதிரடி பந்துவீச்சை தொடக்கத்தில் வெளிபடுத்தினார்‌. குல்தீப் யாதவும் மிடில் ஓவரில் சிறப்பான பந்துவீச்சை மேற்கொண்டார். கடந்த சில ஆண்டுகளாக விராட் கோலியின் அணித்தேர்வை ரசிகர்கள் வெறுத்து வந்தனர். ஆனால் இந்தப் போட்டியில் அவரின் அணித்தேர்வு சிறப்பானதாக இருந்தது[/font][/size][/color]
#2 முதல் 10 ஓவரில் அதிரடியான ஃபீல்டிங்
[Image: 89155-15598317980540-800.jpg]
South Africa v India - ICC Cricket World Cup 2019
[color][size][font]
தென்னாப்பிரிக்க அணி பேட்டிங் செய்ய களமிறங்கிய போது ஜாஸ்பிரிட் பூம்ரா தனது முதல் ஓவரை வீச வந்த போது அவரது பந்துவீச்சு அதிக வேகத்தில் வந்தது. இதனால் பேட்ஸ்மேன் அதிகமாக தடுமாறினார்‌. எனவே விராட் கோலி இரண்டு ஸ்லிப்புடன் தன்னை மூன்றாவது ஸ்லிப்பாக இனைத்துக் கொண்டார். ஹாசிம் அம்லா இரண்டாவது ஸ்லிப்பில் இருந்த ரோகித் சர்மாவிடம் கேட்ச் ஆனார். 
விராட் கோலி முதல் 8 ஓவர்களுக்கு டெஸ்ட் போட்டிகளில் ஃபீல்டிங் செட் செய்வது போல அமைத்திருந்தார். ஒரு கல்லி, இரண்டு ஸ்லிப் மற்றும் தெர்ட் மேன் திசையில் யாரும் இல்லாமலும், வலது புறத்தில் அதிக இடம் விட்டும் வீரர்கள் நின்று கொண்டிருந்தனர். விராட் கோலியின் இந்த அற்புத முடிவு சிறப்பாக செட் ஆனது. ஜாஸ்பிரிட் பூம்ரா வீசிய 6வது ஓவரில் டிகாக் எதிர்கொள்ள அதிக தடுமாற்றத்தை வெளிபடுத்தினார். அப்போது 2 ஸ்லிப்புகள் அங்கு நின்று கொண்டிருந்தனர்.
பூம்ரா ஓவரில் அதிகமாக டிகாக் தடுமாறி வந்த காரணத்தால் 6வது ஓவரின் 5வது பந்தில் விராட் கோலி தன்னை மூன்றாவது ஸ்லிப்பாக இனைத்துக் கொண்டார். கேப்டன் கோலி எதிர்பார்த்த படியே டிகாக் சரியாக கோலி நின்ற இடத்தில் பந்தை தட்டிவிட சட்டென்று கேட்ச் பிடித்தார். 
.[/font][/size][/color]
#3 சுழற்பந்து வீச்சாளர்களை சரியான ஓவரில் களமிறக்கி மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களை வீழ்த்தியது
[Image: 2e7d1-15598319202907-800.jpg]
South Africa v India - ICC Cricket World Cup 2019
[color][size][font]
விராட் கோலியின் கேப்டன் ஷீப் அதிகம் குறிப்பிடும் படியாக அமைந்த மற்றொரு நிகழ்வு வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான இந்த மைதானத்தில் குல்தீப் யாதவ் மற்றும் யுஜ்வேந்திர சகால் ஆகிய இரு சுழற்பந்து வீச்சாளர்களை எடுத்து வந்ததுதான். விராட் கோலி, யுஜ்வேந்திர சகாலை முதல் பவர் பிளேவிற்கு பிறகு எடுத்து வந்தார். சிறப்பான மற்றும் அதிரடியான பந்துவீச்சை மேற்கொண்டு ரன்களை கட்டுபடுத்தினார் குல்தீப்.
அதன்பின் பந்துவீசிய சகால் மாயஜால சுழலை வெளிகொண்டு வந்தார்‌. சாதுரியமாக செயல்பட்ட சகால், ஆடுகளத்தின் டரிஃப்ட் மற்றும் பவுண்ஸை சரியாக பயன்படுத்திக் கொண்டார். குல்தீப் யாதவ் மற்றும் யுஜ்வேந்திர சகால் இனைந்து தென்னாப்பிரிக்க அணியின் மிடில் ஆர்டரை சிதைத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
யுஜ்வேந்திர சகால் 10 ஓவர்களை வீசி 51 ரன்களை தனது பௌலிங்கில் அளித்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். குல்தீப் யாதவ் 10 ஓவர்களை வீசி 46 ரன்களை தனது பௌலிங்கில் அளித்து 1 விக்கெட்டை வீழ்த்தினார். விராட் கோலியின் அணியில் குல்தீப் யாதவ் மற்றும் யுஜ்வேந்திர சகால் ஆகியோருக்கு எப்பொழுதும் இடம் இருக்கும். தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் விராட் கோலி சுழற்பந்து வீச்சாளர்களின் மேல் வைத்திருந்த நம்பிக்கையை குல்தீப் யாதவ் மற்றும் யுஜ்வேந்திர சகால் காப்பற்றி உள்ளனர். 
[/font][/size][/color]
Like Reply
உள்ளதும் போச்சே.. சென்னை புழல் ஏரி முற்றிலும் வறண்டது.. குடிநீர் கடும் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!
சென்னை: சென்னையை அடுத்த புழல் ஏரி முற்றிலும் வறண்டது. இதனால் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 3 ஆண்டுகளாக பொய்த்து வருகிறது. இதனால் கோடை காலத்தில் கடும் வறட்சி நிலவி வருகிறது. மக்கள் குடிநீருக்காக அல்லல்படும் நிலை ஏற்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டு பருவமழை பொய்த்துவிட்ட நிலையில் இந்த ஆண்டு நீண்ட நாளுக்கு பிறகு ஃபனி புயல் உருவானது. அது தமிழகம் அருகே அதாவது சென்னை- புதுவை இடையே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது
அதிர்ஷ்டம் இல்லை
அவ்வாறு கடந்தால் இந்த ஃபனி புயல் நல்ல மழையை கொடுத்து சென்னையின் தண்ணீர் பஞ்சத்தை முற்றிலும் போக்கிவிடும் என வானிலை நிபுணர்கள் தெரிவித்தனர். ஆனால் வழக்கம் போல் நமது துரதிருஷ்டம் நமக்கு முன்னால் போய் நின்றுவிட்டது.


[Image: fani2334-1560047044.jpg]
தண்ணீர் எங்கே
ஆம், அந்த புயல் ஒடிஸாவுக்கு சென்றுவிட்டது. இதனால் இந்த கோடை காலத்தில் வழக்கத்துக்கு அதிகமாக வெப்பம் வாட்டி எடுத்தது. ஒரு பக்கம் வெப்பம், மறுபக்கம் தண்ணீர் தட்டுப்பாடு என தமிழகமே தண்ணீருக்கான தேடுதலில் ஈடுபட்டுள்ளது.
[img=0x0]data:image/svg+xml,%3Csvg%20xmlns%3D%22http%3A%2F%2Fwww.w3.org%2F2000%2Fsvg%22%20width%3D%22512%22%20height%3D%22288%22%3E%3C%2Fsvg%3E[/img]

[Image: chembarabakkam-1560047067.jpg]
 
[color][size][font]
தண்ணீர்
இந்த நிலையில் செம்பரம்பாக்கம், சோழவரம் ஆகிய ஏரிகள் வறண்டு விட்டன. இதனால் சென்னை உள்பட சுற்றுவட்டார பகுதிகளுக்கு தண்ணீர் அனுப்பும் பணி நிறுத்தப்பட்டது.

[Image: puzhal13223-1560046989.jpg]
[/font][/size][/color]
 
[color][size][font]
தண்ணீர்
இந்த நிலையில் புழல் ஏரியும் முற்றிலும் வறண்டுவிட்டது. அந்த ஏரியிலிருந்து நேற்று வரை 6 கனஅடி நீர் எடுக்கப்பட்டு வந்தது. தற்போது முற்றிலும் வறண்டுவிட்டதால் புழலிலிருந்து ஓரளவு தண்ணீர் எடுக்கப்பட்டு வந்த நிலையில் தண்ணீர் எடுக்கும் பணிகள் நிறுத்தப்பட்டது. இதனால் குடிநீர் பஞ்சம் மேலும் தலைவிரித்தாடும் என்று சென்னை மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.
[/font][/size][/color]
Like Reply
ண்ணீர் வரவில்லை, தண்ணீர்ப் பிரச்னை, நிலத்தடி நீர் மட்டம் குறைந்துவிட்டது, பருவமழை பொய்த்துவிட்டது என்று சமீபகாலமாகத் தண்ணீர்ப் பஞ்சம் குறித்து பலரும் பேசிவருகின்றனர். ஆனால், இனி வரும் காலங்களில் இதைத் தவிர்க்க என்னென்ன செய்யலாம் என்ற முயற்சியை யாரும் இதுவரை செய்ததில்லை. என்னென்ன செய்தால் தண்ணீர் பிரச்னையிலிருந்து வெளிவரலாம். மழையே இல்லையென்றாலும் 5 வருடங்களுக்கு தண்ணீர்ப் பஞ்சத்திலிருந்து எப்படித் தப்பிக்கலாம் என்ற ஆலோசனையைக் கூறுகிறார் எக்ஸ்னோரா அமைப்பின் தலைவர் செந்தூர் பாரி.
"சென்னையைப் பொறுத்தவரை போதுமான அளவு தண்ணீர் கிடைக்கிறது. ஆனால், அதை சரியாகப் பயன்படுத்தாமல் பலர் வீணாக்குகின்றனர். ஒரு மாதத்துக்கு சென்னைக்குத் தேவையான தண்ணீர் அளவு ஒன்றறை டி.எம்.சி., என்றால் வருடத்துக்கு 18 டி.எம்.சி. (ஒரு டி.எம்.சி = ஆயிரம் மில்லியன் கன அடி.) தற்போது, சென்னையில் இருக்கும் ஏரிகளை முறையாகப் பராமரித்தால், வருடத்துக்கு 84 டி.எம்.சி அளவுக்குத் தண்ணீரைச் சேமிக்கலாம்.
[Image: IMG-20160125-WA0003_12517.jpg]



பல்வேறு ஏரிகள், ஆக்கிரமிப்பு காரணமாகக் காணாமல் போய்விட்டன. அதை மீட்பது என்பது மிகவும் கடினமானதுதான். எனவே, தற்போது இருக்கும் ஏரிகளை முறையாகப் பராமரிக்க வேண்டும். இதனால் சேமித்து வைக்கப்படும் தண்ணீரை, 5 வருடத்துக்கு மழை பெய்யாத காலங்களில்கூட பயன்படுத்தலாம் என்று பல்வேறு ஆய்வுகள் கூறுகின்றன. இதனால், சென்னைக்கு தண்ணீர்ப் பஞ்சம் வருவதற்கான வாய்ப்புகள் வராது. இதுவரை அரசாங்கத்தின் மூலமாக 20,000 கோடிக்கும் மேல் செலவு செய்திருப்பதாக ஒரு கணக்கு இருக்கிறது. இருந்தும் நீர்நிலைகள் முறையாகப் பராமரிப்பின்றி உள்ளன. 
சின்னச் சின்ன நீர்நிலைகளை உருவாக்கலாம். மழை நீர் சேகரிப்புத் திட்டத்தைக் கட்டாயப்படுத்தி, முறையாகப் பயன்படுத்தலாம். மக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் அரசாங்கத்தால் ஒன்றுமே செய்ய முடியாது. எனவே, அந்தந்த பகுதிகளில் இருக்கும் NGO-க்கள், தன்னார்வலர்கள் என்று அனைவரையும் இணைத்தால், பல்வேறு புதிய மாற்றங்களைக் கொண்டுவரலாம். ஒரு முயற்சியைக் கையில் எடுத்தால், ஒருநாள்... இரண்டு நாள்களில் விட்டுவிடுகின்றனர். தொடர்ந்து திட்டம் முடியும் வரை முயற்சி செய்ய வேண்டும். 
[Image: Periyeri-North3_12156.jpg]
சென்னையைப் பொறுத்தவரை விவசாய நிலங்களே இல்லை. ஆனால், நீர் நிலைகள் இருக்கின்றன. அதை முறையாக சுத்தப்படுத்தி, [Image: 0ce113d0-c216-4321-af82-10b8ec7381cd_12318.jpg]பாதுகாத்துவந்தால், தண்ணீர் பிரச்னைகளில் இருந்து வெளிவரலாம். தற்போது பலர், குழந்தைகளின் உயர்கல்வி, கார், வீடு வாங்குதற்கு என பல்வேறு நல்ல தேவைகளுக்காக  நாம் சேமித்துவைத்திருக்கும் பணத்தை எல்லாம் தண்ணீருக்காக செலவழித்துவருகிறோம். 


ஓ.எம்.ஆரின் தண்ணீர் வணிகம் மட்டும் 1,000 கோடி என்கின்றனர். இலவசமாகக் கிடைக்கும் தண்ணீருக்காக அதிக அளவில் செலவுசெய்துவருகிறோம். சென்னைக்கு, வருடத்துக்கு 1350 மி.மீ மழைகிடைக்கிறது. அதேபோல, ராஜஸ்தானில் 580 மி.மீ  தான் மழைப்பொழிவு. ஆனால், போதிய தண்ணீரை மக்களுக்கு கொடுத்துவருகின்றனர். ஆனால், தேவைக்கு அதிகமான மழை பெய்தாலும், சென்னையில்தான் தண்ணீர்ப் பிரச்னை. தற்போது நீர்நிலைகள் அனைத்தும் வறண்டு காணப்படுகின்றன. எனவே, கரைகளைப் பலப்படுத்துதல், ஏரி, குளங்களைத் தூர் வாரி அகலப்படுத்தல் என்று முறையான  பணிகளை NGO-க்கள், தன்னார்வலர்களின் குழுக்களையும், அரசாங்கம் இணைத்துச் செய்துவந்தால், குறைந்தபட்சம் இனி வரும் காலங்களில் தண்ணீர்ப் பிரச்னையை கட்டுப்படுத்தலாம் என்கிறார் செந்தூர் பாரி.   
நீர்நிலைகளைப் பாதுகாத்து ,நிலத்தடி நீரை உயர்த்த பல்வேறு தன்னார்வலர்களுடன் இணைந்து நம்மால் முடிந்த உதவிகளைச் செய்து, இனி வரும் காலங்களில் தண்ணீர்ப் பிரச்னை வராமல் இருக்க முன்னெச்சரிக்கையாகச் செயல்படுவோம்.
Like Reply
வங்கதேசத்தை 106 ரன்கள் வித்தியாசத்தில் விழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி!
[Image: eng.png]

வங்கதேசத்திற்கு எதிரான லீக் போட்டியில் இங்கிலாந்து அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. இங்கிலாந்து அணியின் ஜேசன் ராய், வங்கதேச அணியின் சகீப் அல் ஹசன் ஆகியோர் சதமடித்து அசத்தினர். 
உலககோப்பை தொடரின் லீக் ஆட்டமொன்றில் போட்டியை நடத்தும் இங்கிலாந்து அணி வங்கதேசம் அணியை எதிர் கொண்டது. கார்டிப் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி கேப்டன் பந்து வீச்சை தேர்ந்தெடுத்தார்.  முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஜேசன் ராயும்  பேர்ஸ்டோவும், தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக விளையாடினர். பேர்ஸ்டோவ் 51 ரன்களிலும், ஜோ ரூட் 21 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். மறுபுறம் அதிரடி காட்டிய ஜேசன் ராய் சதமடித்து அசத்தினார். வங்கதேச பந்து வீச்சாளர்கள் ஜேசன் ராயை கட்டுப்படுத்த முடியாமல் திணறினர். பவுண்டரி சிக்சர் என விளாசி வங்கதேச அணியினரை திணறடித்தார் ஜேசன் ராய்

[Image: jesan-rai.png]
153 ரன்கள் எடுத்த நிலையில் ஜேசன் ராய் ஆட்டமிழந்தார். இதன் பின்னர் களமிறங்கிய பட்லர் மற்றும் மோர்கன் ஆகியோர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அந்த அணி 50 ஓவர்கள் முடிவில் அந்த அணி 386 ரன்கள் குவித்தது. பட்லர் 64 ரன்களும், மோர்கன் 35 ரன்களும் எடுத்தனர்

[Image: Patnership.png]

[Image: sahib.png]
127 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சகீப் அல் ஹசன் ஆட்டமிழந்ததும், அந்த அணியின் தோல்வி கிட்ட தட்ட உறுதியானது. அவரை தொடர்ந்து வந்த வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில் 48.5 ஓவரில் அந்த அணி 280 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 
இங்கிலாந்து அணி தரப்பில் ஆர்ச்சர், பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். சதமடித்து அசத்திய ஜேசன் ராய் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்
Like Reply
இலங்கையில் மோதி தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு கொடுத்த வாக்கு என்ன? - விரிவான தகவல்கள்


[Image: _107309805_f34b7119-5db6-4f28-9c97-4d46bef9524f.jpg]
இலங்கை மீதான பயங்கரவாதத் தாக்குதலினால் ஏற்பட்டுள்ள பதற்ற நிலைமைக்கு மத்தியில் தனது நாட்டிற்கு விஜயம் மேற்கொண்டது, இலங்கையின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டதாக உலகிற்கு வழங்கிய நற்செய்தி என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் நரேந்திர மோதியிடம் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் மோதி
இந்திய பிரதமராக இரண்டாவது முறையாக பதவி பிரமாணம் செய்து கொண்ட நரேந்திர மோதி, தனது முதலாவது வெளிநாட்டு விஜயமாக மாலத்தீவிற்கு நேற்றைய தினம் சென்று, இலங்கைக்கு இன்று அடுத்த கட்டமாக விஜயம் மேற்கொண்டிருந்தார்.
[Image: _107309811_803b951f-c364-4c4e-84fc-90d707435474.jpg]
சுமார் ஐந்து மணி நேரம் இலங்கையில் தங்கியிருந்த இந்திய பிரதமர் நரேந்திர மோதி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷ மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளையும் சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தியிருந்தார்.
[Image: _107309804_bfb0128d-96f8-45cf-835f-0b48c7d6fb7d.jpg]
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு இன்று முற்பகல் 11 மணியளவில் வருகைத் தந்த இந்திய பிரதமர் நரேந்திர மோதியை, பிரதமர் ரணில் விக்ரமசிங்க வரவேற்றிருந்தார்.
இந்த நிலையில், கடும் பாதுகாப்புக்கு மத்தயில் இந்திய பிரதமர் நரேந்திர மோதி கொழும்பை நோக்கி வருகைத் தந்தார்.
அந்தோனியார் தேவாலயத்தில் மோதி
இலங்கை விஜயத்தின் முதலாவது சந்தர்ப்பமாக, ஏப்ரல் 21ஆம் தேதி பயங்கரவாதத் தாக்குதலுக்கு இலக்கான கொழும்பு - கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்திற்கு சென்று, பயங்கரவாதத் தாக்குதலில் உயிர்நீத்த மக்களுக்கு தனது அஞ்சலியை செலுத்தினார்.
[Image: _107309813_dbdad91c-c818-41b7-b269-e3b321bf79a8.jpg]
இதன்போது, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அமைச்சர் சஜித் பிரேமதாஸ, கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகை மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் உள்ளிட்டோரும் கலந்துக்கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து, ஜனாதிபதி செயலகத்திற்கு வருகைத் தந்த இந்திய பிரதமர் நரேந்திர மோதியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வரவேற்றார்.
ராணுவ அணிவகுப்பு மரியாதை இந்திய பிரதமருக்கு வழங்கப்பட்டது.
இருதரப்பு பேச்சுவார்த்தை
இதனைத் தொடர்ந்து, இந்திய பிரதமர் நரேந்திர மோதிக்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையில் இருதரப்பு பேச்சுவார்த்தை ஆரம்பமானது.
பிரதமர் நரேந்திர மோதியின் இந்த விஜயத்தின் ஊடாக அயல் நாடான இந்தியாவிற்கும், இலங்கைக்கும் இடையிலான நம்பிக்கை மற்றும் நட்புறவு மேலும் வலுவடைந்துள்ளதாக ஜனாதிபதி, இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்திய பிரதமரின் இந்த விஜயத்தின் ஊடாக, இலங்கையின் பொருளாதார, வர்த்தக, சுற்றுலா துறைகளின் வளர்ச்சியை சாதகமாக மாற்ற முடியும் என ஜனாதிபதி நம்பிக்கை வெளியிட்டார்.
[Image: _107309807_078de58e-27bf-425a-999b-9e978791069a.jpg]
இதற்கு பதிலளித்த பிரதமர் நரேந்திர மோதி, இக்கட்டான சூழ்நிலைகளில் அயல் நட்பு நாடுகளுக்கு உறுதுணையாக இருப்பது தனது கடமையாகும் என கூறியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிடுகின்றது.
பயங்கரவாதத்தை முழுமையாக இல்லாதொழிப்பதற்கு சர்வதேச ஒத்துழைப்புக்களை மேம்படுத்த வேண்டும் என இரு நாட்டு தலைவர்களும் இணங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை மீது பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்ட பின்னர், இலங்கைக்கு விஜயம் செய்யும் முதலாவது அரசத் தலைவர் இந்திய பிரதமர் நரேந்திர மோதியாவார்.
இந்த நிலையில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிற்கும், இந்திய பிரதமர் நரேந்திர மோதிக்கும் இடையில் இருதரப்பு பேச்சுவார்த்தை இடம்பெற்றது.
பயங்கரவாதத் தாக்குதலின் பின்னர் இலங்கை எதிர்நோக்கியுள்ள நிலைமை குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நட்பு ரீதியில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர்களான தினேஷ் குணவர்தன, நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட மேலும் சிலர் கலந்துக்கொண்டிருந்தனர்
இந்த நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோதி, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளையும் இன்று சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தியுள்ளார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், மாவை சேனாதிராஜா, செல்வம் அடைகலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன் உள்ளிட்ட சிலர் இதில் கலந்துக்கொண்டுள்ளனர்.
[Image: _107309809_744565b7-f8b0-4030-ba04-eb97b6388d6a.jpg]
இந்திய பிரதமருடன் கலந்துரையாடல்களை நடத்துவதற்கு சுமார் 15 நிமிடங்கள் மாத்திரமே வழங்கப்பட்ட நிலையில், தமது உரிய கலந்துரையாடல்களை நடத்துவதற்கு இது போதுமான காலமாக அமையவில்லை என கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத் தலைவர் இரா.சம்பந்தன் இந்திய பிரதமர் நரேந்திர மோதியிடம் தெரிவித்துள்ளார்.
இலங்கை தமிழ் பிரச்சினை குறித்து விரிவாக கலந்துரையாட வேண்டிய நிலைமை காணப்படுவதாகவும், தமக்கு அதற்கான சந்தர்ப்பத்தை புதுடெல்லியில் ஏற்படுத்தி தருமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
அதற்கு பதிலளித்த இந்திய பிரதமர் நரேந்திர மோதி, தான் விரைவில் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு உறுதியளித்ததாகஅக்கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
இந்த நிலையில், தனது இலங்கை விஜயத்தை நிறைவு செய்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இலங்கையிலிருந்து மாலை 4 மணியளவில் இந்தியா நோக்கி புறப்பட்டு சென்றமை குறிப்பிடத்தக்கது.
Like Reply
பெண் ஒருபாலுறவு இணையர் மீது தாக்குதல் நடத்திய பதின்வயது இளைஞர்கள்
[Image: _107306070_18c9390f-3d41-498e-9a4e-04c5708a40ee.jpg]படத்தின் காப்புரிமைFACEBOOK
லண்டன் நகரில் பேருந்தில் பயணம் செய்துக்கொண்டிருந்த பெண் ஒருபாலுறவு இணையர் ஒருவரை ஒருவர் முத்தமிடச் சொல்லி வற்புறுத்தியதுடன், அவர்களை ரத்தம் வரும் அளவுக்கு தாக்கிய 15 முதல் 18 வயதிற்குட்பட்ட ஐந்து பதின்வயது இளைஞர்களை அந்நகர காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
லண்டன் நகரில் இரவு பேருந்து ஒன்றின் மாடியில் பயணித்துக் கொண்டிருந்தபோது, தன்னையும் தனது இணையான கிறிஸ் மீதும் இந்த இளைஞர்கள் தாக்குதல் தொடுத்ததாக 28 வயதாகும் மெலானியா கெய்மோனட் என்பவர் தெரிவித்துள்ளார்.
இந்த பெண்கள் இருவரும் ஒருபாலுறவு இணையினர் என்பதை தெரிந்துகொண்ட அந்த பதின்வயது இளைஞர் குழுவினர், இவர்களை நோக்கி பாலியல் ரீதியாக சைகைகளை காண்பிக்க தொடங்கியதுடன், ஒருவருக்கொருவர் முத்தம் கொடுத்துக்கொள்ள சொல்லி தொந்தரவு செய்யத் தொடங்கின
இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக கருதப்படும் 15 முதல் 18 வயதிற்குட்பட்ட ஐந்து பதின்வயது இளைஞர்களை கைது செய்துள்ளதாக லண்டன் நகர காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் திருட்டு, உடல் ரீதியிலான தாக்குதல் தொடுத்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
[Image: _107306071_552adc9a-87d4-4c4f-82f5-deff9e5d28d4.jpg]படத்தின் காப்புரிமைSFDImage captionமெலானியா கெய்மோனட்
கடந்த 30ஆம் தேதி நள்ளிரவில் தாங்கள் தாக்குதலுக்கு உள்ளானதாக பிபிசி ரேடியோ 4இன் 'வேர்ல்ட் அட் ஒன்' எனும் நிகழ்ச்சியில் பேசிய கெய்மோனட் தெரிவித்துள்ளார். தாங்கள் இதற்கு முன்னர் 'நிறைய வார்த்தை ரீதியிலான வன்முறைகளுக்கு உட்பட்டுள்ளதாக' கூறியுள்ளார்.
தனது பாலின அடையாளத்தை முதலாக கொண்டு, தான் இதற்கு முன்பு தாக்குதலுக்கு உள்ளானது இல்லை என்று அவர் மேலும் கூறினார்.
எனது கோபம் இன்னும் தணியவில்லை. அந்த மோசமான சம்பவம், அசாதாரணமான ஒன்றல்ல," என்று கிறிஸ் மேலும் கூறினார்.
2014ஆம் ஆண்டு லண்டனில் ஒருபாலுறவு கொள்பவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களின் எண்ணிக்கை 1,488ஆக இருந்த நிலையில், அது கடந்த ஆண்டு 2,308ஆக அதிகரித்துள்ளதாக காவல்துறையின் தரவு தெரிவிக்கிறது.
Like Reply
24 மணி நேரம் கடைகள் இயங்க உத்தரவு: தொழிலாளர்களுக்கு வரமா சாபமா?
[Image: _107288855_gettyimages-1148100733.jpg]படத்தின் காப்புரிமைNURPHOTO/GETTY IMAGES
தமிழகத்தில் வணிக நிறுவனங்கள் 24 மணிநேரமும் செயல்பட தமிழக அரசு அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டதை அடுத்து, தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
அரசாணைக்கு முன்னர், கடைகள் பெரும்பாலும் இரவு 11 மணிவரை மட்டுமே இயங்கமுடியும் என்ற கட்டுப்பாடு இருந்ததால், சிறிய மற்றும் பெரிய கடைகள், வணிக வளாகங்கள் இரவு 11 மணிக்கு மூடப்பட்டன.
மத்திய அரசின் தொழில்துறை அமைச்சகம் நாடு முழுவதும் வேலைவாய்ப்பை அதிகரிக்கவும், வணிகத்தை மேம்படுத்தவும் வணிக நிறுவனங்கள் 365 நாட்கள், 24 மணி நேரமும் கடைகள் இயங்கலாம் என்ற விதியை பரிந்துரை செய்து, சட்ட முன்வடிவு வரைவு திட்டத்தை 2016ல் அனுப்பியது. மத்திய அரசின் வரைவு திட்டத்தை பரிசீலித்த தமிழக அரசு இந்த விதிமுறையை அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு பின்பற்ற அரசாணை வெளியிட்டுள்ளது.
இந்த அரசாணையின்படி, 10 ஊழியர்களுக்கும் அதிகமானவர்கள் பணிபுரியும் வணிக நிறுவனங்கள் 365 நாட்கள், 24 மணி நேரம் செயல்படலாம். பெண் ஊழியர்கள் 8 மணிக்கு மேல் பணியில் இருக்கக்கூடாது, பெண்கள் இரவு பணியில் இருக்க அவர்களின் ஒப்புதலை பெறவேண்டும் என்றும் ஒவ்வொரு தொழிலாளிக்கும் சுழற்சி முறையில் வாரத்தில் ஒரு நாள் கட்டாயமாக விடுப்பு கொடுக்கவேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
[Image: _107288857_gettyimages-1019968906.jpg]படத்தின் காப்புரிமைINDRANIL MUKHERJEE/GETTY IMAGES
புதிய அரசாணையைப் பற்றி வெளிப்படையாகப் பேச பல தொழிலாளர்கள் முன்வரவில்லை. பெயர் குறிப்பிட விரும்பாத சென்னையை சேர்ந்த இளம் ஊழியர் ஒருவர், ''நான் சூப்பர்மார்கெட்டில் பணிபுரிகிறேன். தற்போது எட்டு மணி நேரம் வேலை என்றாலும், மதியம் ஒரு மணிக்கு தொடங்கி, இரவு 11 மணிக்குதான் என்னை வீட்டுக்கு அனுப்புகிறார்கள். இரவு ஷிப்ட் வேலை கட்டாயம் என்று சொல்லிவிட்டால், எனக்கு ஒய்வு கிடைப்பது சிரமம்தான். என் உடல் நலனும் மோசமாகும். இரவு நேரம் பணிபுரியும் ஊழியர்களின் ஆரோக்கியத்தில் நிறுவனங்கள் அக்கறை காட்ட வேண்டும் என அரசு விதிகளை கொண்டுவந்தால் சிறப்பாக இருக்கும்,''என்றார்.
தனியார் கல்லூரி மாணவர் சந்தோஷ், இரவு நேர வேலை தனக்கு வேலைவாய்ப்பையும், அதன் மூலம் தன் படிப்பிற்கான பணத்தை தரும் என்று நம்புகிறார்.
''இரவு ஷிப்ட் வேலைக்கு சென்றுவிட்டு, அந்த சம்பளத்தில் கல்லூரி கட்டணத்தை செலுத்தலாம். தற்போது ஒரு கடையில் பகல் நேரத்தில் காலை ஷிப்ட் கல்லூரியில் படிக்கிறேன். இரவு வேலை கிடைத்தால் எனக்கு உதவியாக இருக்கும்,''என்கிறார் சந்தோஷ்.
வணிக நிறுவனங்களிடம் பாதுகாப்பு வசதிகள் இருப்பதை அரசுக்கு தெரிவித்தபின்னரே, கடைகள் இயங்க வேண்டும் என தமிழக அரசு ஒரு விதியை இந்த அரசாணையில் சேர்த்திருக்கலாம் என்கிறார் பெண்ணிய செயல்பாட்டாளர் கே.ஆர்.ரேணுகா.
[Image: _107288859_gettyimages-972450154-1.jpg]படத்தின் காப்புரிமைFAROOQ NAEEM/GETTY IMAGES
''இரவு நேரத்தில் பெண்கள் வேலை செய்ய, அவர்களின் விருப்பத்தை எழுத்துப்பூர்வமாகப் பெற்ற பின்னர், கடைகளில் அவர்கள் பணி செய்ய அனுமதிக்கலாம் என்று புதிய அரசாணை கூறுகிறது. பெண் ஊழியர்களின் போக்குவரத்து வசதி மற்றும் பாதுகாப்பு வசதிகளுக்காக என்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்பதை வணிக நிறுவனங்கள் தெரிவித்துவிட்டு, பின்னர் கடைகளை நடத்தினால், அந்த ஊழியர்கள் அச்சமின்றி பணி செய்வார்கள். பல கடைகளில் இரவு நேரப் பணியை ஒத்துக்கொண்டால்தான், வேலையில் வைத்துக்கொள்வோம் என வாய்மொழி கட்டுப்பாடு விதித்தால், அதனை ஏற்க பெண்கள் கட்டாயப்படுத்தப்படுவார்கள்,''என்கிறார் ரேணுகா.
மேலும், காவல்துறையின் பாதுகாப்பு குறித்தும் ஊழியர்களுக்கு தெரிவிக்கவேண்டும் என்கிறார் அவர். ''தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் எந்த அளவில் சிரத்தையுடன் விதிகளை பின்பற்றாத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுப்பார்கள் என்பதை பொறுத்துத்தான் இந்த அரசாணை பயனுள்ளதா என்று தெரியவரும். வேலைவாய்ப்பை அதிகரிக்க, சுயதொழில் செய்வோருக்கு எளிதில் கடன் கொடுப்பது, தொழில் முனைவோர் பயிற்சிகள் அளிப்பது போன்றவை இந்த புதிய 24 மணி நேர ஒப்புதலைவிட பயனளிக்கும்,''என்பது அவரது கருத்து

ஓய்வு பெற்ற பொருளியல் பேராசிரியர் வெங்கடேஷ் ஆத்ரேயாவிடம் இந்த புதிய அரசாணை வேலைவாய்ப்பில் ஏற்படுத்தும் மாற்றங்கள் குறித்து கேட்டோம்.
''8 மணி நேரம் மட்டுமே ஒரு தொழிலாளிக்கு வேலை கொடுக்கவேண்டும், ஆனால் வேலை நேரத்தை தாண்டி அதிகபட்சமாக இரண்டரை மணிநேரம் வேலையில் ஈடுபடும் சூழலில், ஒரு வாரத்தில் 57 மணி நேரம் மட்டுமே வேலைவாங்க வேண்டும் என்கிறது அரசாணை. இந்த அறிவிப்பு எட்டு மணி நேர வேலை என்பதற்கு முரணாக உள்ளது. இந்த அரசாணையில் உள்ள விதிகள் பெரும்பாலும் முதலாளிகளுக்கு சாதகமாக உள்ளதாக தோன்றுகிறது. தமிழக அரசாங்கம் இதில் தொழிலாளியின் நலனுக்காக விதிகளை சேர்த்திருக்க வேண்டும். தொழிலாளர்களின் பாதுகாப்புக்கு உறுதி, ஊழியர்களை மூன்று ஷிப்ட் முறையில் மட்டுமே பணியமர்த்த வேண்டும் என்று கூறியிருந்தால், இது மேலும் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் என்று நம்பலாம்,''என்கிறார் வெங்கடேஷ் ஆத்ரேயா.
[Image: _107288861_gettyimages-689060444.jpg]படத்தின் காப்புரிமைPACIFIC PRESS/GETTY IMAGES
தமிழக அரசின் இந்த அரசாணை அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு செயல்படுத்தப்படும் என்று கூறியுள்ளதை சுட்டிக்காட்டும் தொழிற்சங்கவாதி ஆ.சௌந்தராராஜன், குறைந்தது மூன்று மாதங்கள் இந்த விதிகள் எவ்வாறு பின்பற்றப்படுகிறது என்பதை கண்காணிப்பது அவசியம் என்கிறார்.
''இந்த அரசாணையில் கூறப்பட்டுள்ள விதிகள் பின்பற்றப்படுகிறதா என்பதை ஆராய்வோம். எல்லா வணிக நிறுவனங்களிலும் தொழிற்சங்கம் இருக்கவேண்டும் என ஒரு விதியை அரசாங்கம் கொண்டு வந்திருக்கலாம். பல ஐடி நிறுவனங்களில் தொழிற்சங்கம் அமைப்பதற்கு கடும் எதிர்ப்பு நிலவுகிறது. இந்நிலையில் பிற வணிக நிறுவனங்களில் உள்ள ஊழியர்களின் நிலையை நாம் சிந்தித்து பார்க்கவேண்டும். பல கடைகளில் ஊழியர்கள் அமர்வதற்கு நாற்காலிகள் கூட கொடுக்கப்படுவதில்லை,'' என்கிறார் சௌந்தராராஜன்.
தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளில் வணிக நிறுவனங்கள் செயல்படுகின்றனவா என அரசு தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கும் சௌந்தரராஜன், ''பணியாளர்களுக்கு தேவையான ஓய்வறைகள் இருப்பதை அரசு உறுதிசெய்யவேண்டும். பாலியல் தொல்லைகளை தெரிவிக்க குழு செயல்படுகிறதா என்றும் கவனிக்க வேண்டும்,''என்கிறார்.
Like Reply




Users browsing this thread: 163 Guest(s)