Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
மேற்குறிப்பிடப்பட்ட இரண்டாவது வகையை முதலாக கொண்டே அமேசான் செயல்படுகிறது. இந்தியாவில் இந்தியர்களால் தொடங்கப்பட்ட பிளிப்கார்டை அமெரிக்காவை சேர்ந்த பிரபல இணையதள வர்த்தக நிறுவனமான வால்மார்ட் கடந்த ஆகஸ்டு மாதம் சுமார் 16 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
பொருட்களின் விலை உயருமா?
ஆன்லைன் வர்த்தகத்தில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள 100 சதவீத அந்நிய நேரடி முதலீட்டின் விதிமுறைகளை மேலும் நெறிப்படுத்தும் வகையில் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கை குறித்து பொருளாதார நிபுணர் நாகப்பனிடம் கேட்டபோது, "அமேசான், பிளிப்கார்ட் போன்ற நிறுவனங்கள் ஒரு குறிப்பிட்ட விற்பனையாளரையும், வாடிக்கையாளரையும் இணைக்கும் பாலமாக செயல்படுவதற்கே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், தான் முதலீடு/ஒப்பந்தம் செய்துள்ள குறிப்பிட்ட விற்பனையாளரை மையப்படுத்தி தள்ளுபடிகளையும், பிரத்யேக விற்பனையையும் மேற்கொண்டு வாடிக்கையாளர்களை கவர்ந்து வரும் வணிக முறைக்கு இந்த புதிய விதிமுறைகள் முடிவு கட்டும்" என்று அவர் கூறினார்.
இனி அமேசான், பிளிப்கார்ட் போன்ற இணையதளங்கள் தனது மொத்த விற்பனையில் 25 சதவீதத்திற்கும் மேலாக ஒரு குறிப்பிட்ட விற்பனையாளரிடமிருந்து வாங்கினால் அந்த விற்பனையாளரை குறிப்பிட்ட நிறுவனம் கட்டுப்படுத்துவதாக கருதப்படுவதுடன் அந்த விற்பனையாளர் தொடர்ந்து இணையதளங்களில் பொருட்களை விற்பனை செய்வதற்கு அனுமதிக்கப்படாது என்று அவர் மேலும் தெரிவித்தார்.
[Image: _104960254_8fe9a95c-0489-42bc-b91e-8e37827d53ac.jpg]
"இணையதள வணிக நிறுவனங்கள் குறிப்பிட்ட விற்பனையாளரின் பொருட்களை தங்களின் இணையதளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்வதற்கு வற்புறுத்த முடியாது. மேலும், இதுபோன்ற இணையதளங்களில் வாங்கப்படும் பொருட்களின் உத்தரவாதத்திற்கு விற்பனையாளரே முழு பொறுப்பாகிறார்" என்று அவர் தெரிவித்தார்.
மேற்கண்ட விதிமுறைகளை இணையதள வர்த்தக நிறுவனங்கள் கடைபிடிப்பதை உறுதிசெய்யும் வகையில் அதற்குரிய சான்றிதழ்களை இந்திய ரிசர்வ் வங்கியிடம் ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 30 தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
எனவே, ஒன் பிளஸ், எம்ஐ, ஹானர், ஓப்போ, ரியல்மீ போன்ற கைபேசிகள் ஒரு குறிப்பிட்ட இணையதளத்தில் மட்டும் முதலில் அறிமுகப்படுத்தப்படும் வழக்கம் இனி முடிவுக்கு வரும் என்று கருதப்படுகிறது. அதுமட்டுமின்றி, ஒரு குறிப்பிட்ட விற்பனையாளர் விற்கும் பொருட்களுக்கு மட்டும் கேஷ்-பேக் வழங்குவது பாரபட்சத்துடன் செயல்படுவதாக கருதப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் இனி தள்ளுபடி விலையோடு, கேஷ்-பேக் வழங்குவதும் முடிவுக்கு வரலாம் என்று தெரிகிறது.
ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது, இணையதள வர்த்தக நிறுவனங்கள் தாங்கள் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள நிறுவனங்களுக்கு சார்பாக செயல்படுவதை நிறுத்தும்பட்சத்தில் அந்நிறுவனங்கள் வழங்கும் தள்ளுபடியின் அளவு குறைந்து பொருட்களின் விற்பனை விலை உயர்வதுடன், எந்த பொருளை வாங்கினாலும் கேஷ்-பேக் என்ற கவர்ச்சி விளம்பரங்கள் கட்டுப்பாட்டுக்குள் வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
[Image: _104960248_gettyimages-842613444.jpg]
சில்லறை வணிகர்களுக்கு பலனளிக்குமா?
அமெரிக்காவை சேர்ந்த பெரு நிறுவனங்கள் இந்தியாவிற்குள் அனுமதிக்கப்பட்டால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுமென்று இந்தியாவில் அந்நிய நேரடி முதலீடு குறித்த பேச்சுவார்த்தை தொடங்கிய காலத்திலிருந்தே பல்வேறு வணிகர் சங்கங்கள் கூறி வருவதுடன், கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றன.
இந்நிலையில், மத்திய அரசின் இந்த அறிவிப்பு வணிகர்களுக்கு எந்த அளவிற்கு பலனளிக்கும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜாவிடம் கேட்டபோது, "இந்தியாவில் இணையதள வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீடு அனுமதிக்கப்பட்டதன் விளைவாக ஏற்கனவே 27 சதவீத வியாபாரத்தை இழந்துள்ளோம்'' என்று குறிப்பிட்டார்.
"தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுவதுமுள்ள வணிகர்கள் இணையதள வர்த்தகத்தில் பாதிப்புக்குள்ளாகியுள்ள நிலையில், மத்திய அரசின் இந்த அறிவிப்பு வெறும் கண்துடைப்பாக மட்டும் இருக்கக் கூடாது என்று வலியுறுத்துகிறோம். அதிகாரிகள் விழிப்புடன் செயல்பட்டு அரசின் நெறிமுறைகள் அமல்படுத்தப்படுவதை உறுதிசெய்ய வேண்டும்" என்று அவர் கூறினார்.
Like Reply
பிளாஸ்டிக் ஒழிப்பில் இந்தியாவுக்கே முன்னோடியாக விளங்கும் தமிழ்நாடு - எப்படி?



[Image: _104939076_story2.jpg]
"பிளாஸ்டிக் கழிவுகள் மூலம் அமைக்கப்படும் சாலைகளால் அடுத்த பத்து ஆண்டுகளில் தமிழ்நாட்டில் உள்ள மொத்த பிளாஸ்டிக் கழிவுகளையும் அழிக்க முடியும்."
உலகமே பிளாஸ்டிக் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை அச்சுறுத்தலாக பார்த்துக் கொண்டிருக்கிறது.
கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கும் இந்த பிளாஸ்டிக் கழிவுகளை அழிக்க பல்வேறு ஆராய்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன.
[Image: _104939078_story.jpg]
இந்நிலையில் நாம் தூக்கி எறியும் பிளாஸ்டிக் கழிவுகளைக் கொண்டு பளபளக்கும் சாலைகளை அமைக்கும் பணி தமிழ்நாட்டில் தீவிரமடைந்துள்ளது.
திருப்பூரை சேர்ந்த சி.எம்.ஆர். பிட்பிளாஸ்ட்(CMR Bitplast) என்கிற தனியார் நிறுவனமும் கரூர் மாவட்ட நிர்வாகமும் இணைந்து ஈரச் செயல்முறை மூலம் தொலைதூர கிராமப்புறங்களில் பிளாஸ்டிக் சாலைகளை அமைத்து வருகின்றனர்
Like Reply
பிளாஸ்டிக் சாலை
பிளாஸ்டிக் சாலைகளை அமைக்க தொடக்கப்பணியாக கரூர் மாவட்டத்தில் அரசின் உதவியுடன் சுய உதவிக் குழுக்கள் மூலம் பிளாஸ்டிக்கை பிரித்தெடுக்கும் பணி நடைபெறுகிறது. பிரித்தெடுக்கப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளை கிலோ ஒன்றுக்கு ரூ. 6 முதல் 10 வரை இந்த நிறுவனம் கொள்முதல் செய்கிறது.
[Image: _104939080_sto.jpg]Image captionபிளாஸ்டிக் கழிவுகளை பிரித்தெடுக்கும் பணி
இதன் பின்னர் இந்தக் கழிவுகள் நறுக்கும் இயந்திரத்தின் மூலம் சிறிய சிறிய பிளாஸ்டிக் துகள்களாக மாற்றப்படுகின்றன.
இதனையடுத்து டைஜெஸ்டர் எனப்படும் இயந்திரத்தில் கொட்டப்படும் பிளாஸ்டிக் துகள்களுடன் வெப்பநிலையை நிலைப்படுத்த விவசாயத்தில் இருந்து கிடைக்கும் ஒரு திரவத்தையும் சேர்க்கின்றனர். பின்னர் இதனுடன் தார் சேர்க்கப்பட்டு ஒரு கலவையாக இறுதி வடிவம் பெறுகிறது.
[Image: _104939082_m.jpg]Image captionபிளாஸ்டிக் துகள்கள்
இதன் மூலம் தான் பிளாஸ்டிக் சாலைகள் அமைக்கப்படுகின்றன.
பிளாஸ்டிக் கழிவுகளை அழிக்க முடியுமா?
பிளாஸ்டிக் கழிவுகள் மூலம் அமைக்கப்படும் சாலைகளால் அடுத்த பத்து ஆண்டுகளில் தமிழ்நாட்டில் உள்ள மொத்த பிளாஸ்டிக் கழிவுகளையும் அழிக்க முடியும் என்கிறார் சிஎம்ஆர் பிட்பிளாஸ்ட் நிறுவனத்தின் தொழில்நுட்ப பிரிவு இயக்குநர் வெங்கட சுப்பிரமணியன்.
[Image: _104939084_1.jpg]Image captionவெங்கட சுப்பிரமணியன் - தொழில்நுட்ப பிரிவு இயக்குநர் (CMR Bitplast)
"கிராமப்புறங்களில் அமைக்கப்படும் சாலைகளில் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் 800 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளை அழிக்க முடியும். மாநில நெடுஞ்சாலைகளில் ஒரு கிலோமீட்டர் பரப்பளவில் 2000 முதல் 2500 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளை அழிக்க முடியும். இதே போன்று தேசிய நெடுஞ்சாலைகளில் 4000 கிலோ முதல் 8000 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளை அழிக்க முடியும்" என்கிறார் வெங்கட சுப்பிரமணியன்.
Like Reply
ஈரச் செயல்முறை மூலம் அமைக்கப்படும் இந்த பிளாஸ்டிக் சாலைகள் மற்ற சாலைகளுடன் ஒப்பிடும்போது கூடுதல் உறுதித் தன்மையுடன் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
[Image: _104939236_story2hj.jpg]Image captionபிளாஸ்டிக் சாலை
இந்திய சாலை கூட்டமைப்பின் அங்கீகாரம் பெற்றுள்ள இந்த பிளாஸ்டிக் சாலைகளுக்கு திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் உறுதித் தன்மைக்கான சான்றும் வழங்கப்பட்டுள்ளது.
[Image: _104939238_2.jpg]Image captionநாகராஜன் - இயக்குநர் (CMR Bitplast)
"மற்ற சாலைகளின் உறுதித் தன்மை மூன்று ஆண்டுகள் என்றால் இந்த பிளாஸ்டிக் சாலைகள் நான்கு ஆண்டுகளுக்கும் அதிகமாக உழைக்கும். மழையால் ஏற்படும் பள்ளங்களை இந்த சாலைகளில் பார்க்க முடியாது" என்கிறார் சிஎம்ஆர் பிட்பிளாஸ்ட்(CMR Bitplast) நிறுவனத்தின் இயக்குநர் நாகராஜன்.
Like Reply
விரிவுபடுத்தப்படும் பிளாஸ்டிக் சாலைகள்
தற்போது கரூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் மட்டும் அமைக்கப்பட்டு வரும் இந்த பிளாஸ்டிக் சாலைகளை தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுவதும் விரிவுபடுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
[Image: _104939240_3.jpg]Image captionசடையப்பன் - கரூர் மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை செயற் பொறியாளர்
"பிரதம மந்திரி கிராமப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 150 கிலோ மீட்டருக்கு பிளாஸ்டிக் சாலைகள் அமைக்கவுள்ளோம். மேலும் தமிழக அரசும் 200 கிலோ மீட்டர் தூரத்திற்கு இந்த சாலைகளை அமைக்க அனுமதி அளித்துள்ளனர். இதன் மூலம் 400 முதல் 500 டன் பிளாஸ்டிக் கழிவுகளை அழிக்க முடியும்" என்கிறார் கரூர் மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை செயற் பொறியாளர் சடையப்பன்.
[Image: _104939244_story2hbj.jpg]Image captionபிளாஸ்டிக் சாலை அமைக்கும் பணி
பிளாஸ்டிக் மாசில்லா தமிழகத்தை உருவாக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இந்த பிளாஸ்டிக் சாலைகளும் ஒரு தீர்வாக அமையும் என்று நம்பப்படுகிறது.
Like Reply
சுழன்று அடித்த பும்ரா; தடுமாறிய ஆஸி., பேட்ஸ்மேன்கள் - இந்தியா தொடர் ஆதிக்கம்
[Image: Dvc6oMfVAAARjIJ_09401.jpg]
இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடிவருகிறது. முதலில் நடைபெற்ற டி20 தொடர் 1-1 என்ற சமனில் முடிய, பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் தொடங்கியது டெஸ்ட் தொடர். அடிலெய்டில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணி வெற்றிபெற்றது. பெர்த் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்று தொடரைச் சமன்செய்தது. இதையடுத்து, மூன்றாவது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் மைதானத்தில் நேற்று தொடங்கியது. பாக்ஸிங் டே கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி, பேட்டிங்கைத் தேர்வுசெய்தது. இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் சிறப்பான பேட்டிங்கைச் செய்தது. அறிமுக வீரர் மயங்க் அகர்வால், 78 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில், இந்திய அணி 89 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 215 ரன்கள் சேர்த்திருந்தது. புஜாரா 68 ரன்களுடனும் (200 பந்து, 6 பவுண்டரி), விராட் கோலி 47 ரன்களுடனும் (107 பந்து, 6 பவுண்டரி) களத்தில் இருந்தனர்.
Like Reply
[Image: DvdcCVIWkAALy2l_09295.jpg]
இரண்டாவது நாளான நேற்று புஜாரா- விராட் கோலி இணை ஆட்டத்தைத் தொடர்ந்தது. ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களுக்கு இந்த இணை சிம்ம சொப்பனமாக விளங்கியது. அபாரமாக ஆடிய புஜாரா, சதம் அடித்து அசத்தினார். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் புஜாரா அடிக்கும் 17-வது சதம் இதுவாகும். இதையடுத்து, மிட்சல் ஸ்டார்க் பந்து வீச்சில் கோலி வெளியேறினார். களத்தில் இறங்கிய ரஹானே, புஜாராவுடன் கைகோத்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பின் கம்மின்ஸ் பந்து வீச்சில் அவுட்டாகி வெளியேறினார் புஜாரா. பின்னர், இதையடுத்து, களமிறங்கிய வீரர்கள் பெரிய அளவில் ரன்களைச் சேர்க்காத நிலையில், ரோஹித் நிலைத்து ஆடி 63 ரன்களைச் சேர்த்து, களத்தில் இருந்தார். இந்திய அணி 7விக்கெட் இழப்புக்கு 443 ரன்கள் குவித்த நிலையில், டிக்ளேர் செய்ததது. பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலியா இரண்டாம் நாள் முடிவில் 6 ஓவர்களுக்கு விக்கெட் இழப்பின்றி 8 ரன்களை எடுத்திருந்தது. இதையடுத்து மூன்றாம் நாளான இன்று, அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது
Like Reply
[Image: Dvd55ISXcAAKzLU_09516.jpg]
இந்திய பந்து வீச்சாளர்களைச் சமாளிக்க முடியாமல் ஆஸி பேட்ஸ்மேன்கள் திணறி வருகின்றனர்.  100 ரன்களைச் சேர்ப்பதற்குள் 5 முக்கிய விக்கெட்டுகளை இழந்து தவித்து வருகிறது. இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் ஜஸ்பிர்த் பும்ரா, இசாந்த், சர்மா, ஜடேஜா ஆகியோரின் கணிக்க முடியாத பந்துவீச்சு, பேட்ஸ்மேன்களை எளிதில் களத்திலிருந்து வெறியேறச் செய்கின்றன. மெல்போர்ன் ஆடுகளம் மூன்றாம் நாளில் மாற்றமடைந்துவிடும் என ஏற்கெனவே புஜாரா கூறியிருந்தார். அவர் கூறியது ஏறக்கூறைய உண்மையாகியுள்ளது. புஜாரா,  ``இந்த ஆடுகளத்தில் 400 ரன்களுக்கு மேல் அடித்ததே வெற்றிக்கான ஸ்கோர்தான். ஆடுகளம் 3-வது நாளில் மாற்றமடைந்துவிடும்” என்றார். அந்தவகையில் இந்திய அணி டாஸ் வென்றது வெற்றிக்கு பெரும் சாதமாக அமைந்துள்ளது. அதுமட்டுமின்றி இமாலய இலக்கை இந்தியா எட்டியுள்ளதால், அது ஆஸ்திரேலிய வீரர்களுக்கு பெரும் சவாலாகியுள்ளது. ஆஸி வீரர்களின் இந்த நிலையை இந்திய பந்து வீச்சாளர்கள் நன்றாகவே பயன்படுத்திக்கொண்டனர். நீண்ட நேரம் தாக்குப்பிடிக்காத ஆஸ்திரேலியா 151 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக பும்ரா 6 விக்கெட்டை வீழ்த்தியுள்ளார். ஜடேஜா 2 விக்கெட்டுகளையும், சமி, இஷாந்த் ஷர்மா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதன்மூலம் ஆஸ்திரேலியா 292 ரன்கள் பின்தங்கியுள்ளது.
Like Reply
மெல்போர்ன் டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணிக்கு 399 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணையித்தது இந்தியா

[Image: 201812290621080057_Bumrah-strikes-as-Aus...SECVPF.gif]

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த இந்தியா 7 விக்கெட்டுக்கு 443 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா அணி மளமளவென விக்கெட்டுகளை பறிகொடுத்தது. ஆஸ்திரேலிய அணியின் எந்த ஒரு வீரரும்  25 ரன்களை கூட தொடவில்லை. ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 66.5 ஓவர்களில் 151 ரன்களில் சுருண்டு பாலோ-ஆன் ஆனது. பும்ரா 33 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை அள்ளினார்.
Like Reply
292 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு பாலோ-ஆன் வழங்கவில்லை. ஒரு வேளை கடைசி நாளில் பேட்டிங் செய்யும் நிலை ஏற்பட்டால் சேசிங் செய்வது மிகவும் கடினம் என்று கருதிய இந்திய அணி நிர்வாகம் 292 ரன்கள் முன்னிலையுடன் தொடர்ந்து 2-வது இன்னிங்சை விளையாடுவது என்று முடிவு செய்தது.

ஆனால் 2-வது இன்னிங்ஸ் இந்தியாவுக்கு திருப்திகரமாக அமையவில்லை. ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் மிரட்டினார். இந்திய வீரர்கள் மயங்க் அகர்வாலை தவிர, விராட் கோலி, புஜாரா உள்பட முன் வரிசை வீரர்கள் அனைவரும் சொதப்பினார். இந்திய அணி 2-வது இன்னிங்சில் நேற்றைய ஆட்ட நேர முடிவில், 27 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 54 ரன்கள் எடுத்திருந்தது. மயங்க் அகர்வால் 28 ரன்களுடனும் (79 பந்து, 4 பவுண்டரி), விக்கெட் கீப்பர் ரிஷாப் பான்ட் 6 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். கம்மின்ஸ் 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.

இன்று 4-வது நாள் ஆட்டம் துவங்கியதும், அதிரடியாக ஆடிய ரிஷாப் பாண்ட் 33 ரன்களில் ஆட்டமிழந்தார். மயங்க் அகர்வால் 42 ரன்களில் வெளியேறினார். ஜடேஜா 5 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்திய அணி 37.3 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 106 ரன்கள் சேர்த்து இருந்த போது தனது 2-வது இன்னிங்சை டிக்ளேர் செய்தது. முதல் இன்னிங்சின் 292 ரன்கள் முன்னிலையுடன் சேர்த்து இந்திய அணி, 399 ரன்களை ஆஸ்திரேலிய அணிக்கு வெற்றி இலக்காக நிர்ணையித்தது. 

இதனைத்தொடர்ந்து இமாலய இலக்குடன் 2-வது இன்னிங்சை துவங்கி ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்து கொண்டு இருக்கிறது. பந்து வீச்சுக்கு சாதகமாக மைதானம் மாறியிருப்பதால், இந்த இலக்கை துரத்துவது மிக கடினம். இதனால்,  இந்த ‘பாக்சிங் டே’ டெஸ்டில் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாகியிருக்கிறது.
Like Reply
மெல்போர்ன் மைதானத்தில் வெடித்த இனவெறி சர்ச்சை! - 
மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இந்திய ஆஸ்திரேலிய அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டியில் ரசிகர்கள் இனவெறியை தூண்டும் விதமாக பேசியதாக புதிய சர்ச்சை வெடித்துள்ளது. 
[Image: mel_07297.jpg]
இந்திய ஆஸ்திரேலிய அணிகள் மோதும் டெஸ்ட் தொடர் வெறும் கிரிக்கெட் போட்டியாக மட்டும் இருப்பதில்லை. அது ஒரு போராட்டக்களம். மைதானத்தில் இருக்கும் வீரர்களுக்கு மத்தியில் இருக்கும் மோதலைப் போலவே, ரசிகர்களுக்கும் கடுமையான வார்த்தை போரில் ஈடுபடுவது தொடர் கதையாகி வருகிறது. 
Like Reply
[Image: AP18360081937412_07302.jpg]
இந்தப் போட்டியிலும், வீரர்கள் மத்தியில் வழக்கமான ஸ்லெட்ஜிங் யுத்தங்கள் தொடர்ந்தது. குறிப்பாக ரோகித் ஷர்மா மற்றும் பன்ட் ஆகியோரிடம் ஆஸ்திரேலிய கேப்டன் பெய்னே வம்பிழுத்தார். இதுபோன்ற மோதல்கள் ஒருபுறம் இருக்க மறுபுறம், போட்டியைக்காண வந்த ரசிகர்களும் வார்த்தை மோதலில் ஈடுபட்டனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
Like Reply
[Image: AP18362813290509_07205.jpg]
போட்டியின் முதல் இரண்டு நாள்களில் மைதானத்தில் இருந்த ரசிகர்கள் சிலர் மோசமாகப் பேசியதாக சில குற்றச்சாட்டுகள் சென்றுள்ளது. இதுதொடர்பாக தீவிர கண்காணிப்பில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் இறங்கியது. போட்டியின் முதல் நாளே புகார்கள் வந்ததால், இரண்டாம் நாள், ரசிகர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கிறார் ஆஸ்திரேலியாவின் கிரிக்கெட் நிர்வாகி ஒருவர். ஆஸ்திரேலிய ரசிகர்கள் சிலர் இந்திய வீரர்களையும், மைதானத்தில் போட்டியைக் காண வந்திருந்த இந்திய ரசிகர்களையும் இனவெறியைத் தூண்டும் வகையில் பேசியதாகத் தெரிகிறது. இது தொடர்பாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகத்துக்கும் மைதான நிர்வாகத்துக்கும் தகவல் செல்ல, இது மீண்டும் தொடர்ந்தால், குறிப்பிட்ட பகுதியில் இருக்கும் அனைத்து ரசிகர்களும் வெளியேற்றப்படுவீர்கள் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது
Like Reply
[Image: ap_07505.jpg]
 இந்நிலையில் மூன்றாவது நாளிலும் ரசிகர்கள் சிலர் இனவெறியைத் தூண்டும் வகையில் பேசியுள்ளனர். இதைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம், அதிரடியாகக் குறிப்பிட்ட நபர்களை மைதானத்தை விட்டு வெளியேற்றியுள்ளது. பதிவு செய்யப்பட்ட வீடியோவின் உதவியுடன் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  
[Image: AP18360095505347_07431.jpg]  
இது தொடர்பாகப் பேசிய ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகத்தின் செய்திதொடர்பாளர் ஒருவர்,  ``ஆஸ்திரேலியா கிரிக்கெட் நிர்வாகம் ஒருபோதும் இனவாத கருத்தை ஏற்றுக்கொள்ளாது. அது வீரர்கள், ரசிகர்கள், மைதான ஊழியர்கள் என யார் மீது சொல்லப்பட்டாலும் பொறுத்துக்கொள்ள முடியாது. ரசிகர்களின் செயல்பாடு தொடர்ந்து கண்காணிக்கப்படும்” என்றார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் இந்த விவகாரத்தில் உடனடியாக செயல்பட்டு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்து வரவேற்பைப் பெற்றுள்ளது.
Like Reply
மெல்போர்ன் டெஸ்ட்: பட் கம்மின்ஸின் சிறப்பான ஆட்டத்தால் இந்தியாவின் வெற்றி தாமதம்


[Image: 201812291309475340_India-close-in-but-Cu...SECVPF.gif]
[Image: fb-icon-art.png] Facebook [Image: twt-icon-art.png] Twitter [Image: google-icon-art.png] Google+ [Image: mail-icon.png] Mail[Image: t-max-icon.png] [Image: t-min-icon.png] Text Size [Image: print-icon.png] Print
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றியின் விளிம்பில் உள்ளது.
பதிவு: டிசம்பர் 29,  2018 13:09 PM
மெல்போர்ன்,

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த இந்தியா 7 விக்கெட்டுக்கு 443 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலிய அணி மளமளவென விக்கெட்டுகளை பறிகொடுத்தது. ஆஸ்திரேலிய அணியின் எந்த ஒரு வீரரும்  25 ரன்களை கூட தொடவில்லை. ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 66.5 ஓவர்களில் 151 ரன்களில் சுருண்டு பாலோ-ஆன் ஆனது. பும்ரா 33 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை அள்ளினார்.

292 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி, 2-வது இன்னிங்சில் 37.3 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 106 ரன்கள் சேர்த்து இருந்தபோது டிக்ளேர் செய்தது. முதல் இன்னிங்சின் 292 ரன்கள் முன்னிலையுடன் சேர்த்து இந்திய அணி, 399 ரன்களை ஆஸ்திரேலிய அணிக்கு வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

இதனைத்தொடர்ந்து இமாலய இலக்குடன் 2-வது இன்னிங்சை துவங்கிய ஆஸ்திரேலிய அணி, இந்திய அணியின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறியது. ஆனால், முதல் இன்னிங்சைப் போல் இல்லாமல் 2-வது இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி பேட்ஸ்மேன்கள் கொஞ்சம் சுதாரித்து ஆடினர். இருப்பினும், சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்து கொண்டிருந்தன. பட் கம்மின்ஸ் மட்டும் ஒருபுறம் இந்திய பந்து வீச்சாளர்களுக்கு  சவாலை அளித்தார். இந்திய ரசிகர்களின் பொறுமையை சோதித்த பட் கம்மின்ஸ் அரை சதம் அடித்ததோடு, இந்திய அணியின் வெற்றியையும் தள்ளிப்போட்டுக்கொண்டே சென்றார். நாதன் லயனும் அவருக்கு பக்க பலமாக தனது விக்கெட்டை பாதுகாத்துக்கொண்டார். 

இதனால், 4-வது நாளிலேயே ஆட்டம் முடிந்து விடும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே ஏற்பட்டது. ஆஸ்திரேலிய அணி 4-வது நாள் ஆட்ட நேர முடிவில் 84 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 258 ரன்கள் சேர்த்துள்ளது. ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு 141 ரன்கள் தேவைப்படுகிறது. கம்மின்ஸ் 61 ரன்களுடனும், லயன் 6 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். 

இந்திய அணியின் வெற்றிக்கு இன்னும் 2 விக்கெட்டுகளே தேவைப்படுவதால், இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு இந்தப்போட்டியில் பிரகாசமாக உள்ளது.  எனினும், ஆஸ்திரேலிய அணியின் மீதமுள்ள இரு விக்கெட்டுகளையும் இந்திய அணி விரைவாக வீழ்த்துவது அவசியமாகும். ஏனெனில், 60 சதவீதம் மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால், போட்டியின் முடிவு இதைப்பொறுத்து மாறவும் வாய்ப்பு உள்ளது.
Like Reply
15 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை... சிறை செல்லும் முன்னாள் திமுக எம்.எல்.ஏ

5 வயது சிறுமி கற்பழித்து கொலை : 15 வயது சிறுமியை கற்பழித்து மரணத்தை ஏற்படுத்திய வழக்கில் திமுக முன்னாள் எம்.எல்.ஏவுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு.
பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியின் கடந்த 2006 முதல் 2011 தி.மு.க சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. ராஜ்குமார் (வயது 52) செயல்பாட்டு வந்தார். இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு ஜூன் மாதம் கேரள மாநிலம் இடுக்கி பீர்மேடு பகுதியைச் சேர்ந்த தொழிலாளி ஒருவர் வறுமை காரணமாக தனது 15 வயது மகளை ராஜ்குமார் வீட்டுக்கு வேலைக்காக அனுப்பி வைத்துள்ளார்.
15 வயது சிறுமி கற்பழித்து கொலை –  வழக்கு பதிவு செய்த தாயார்
ஒரு சில நாட்களில் தனது தாயாரை போனில் தொடர்பு கொண்ட அந்த சிறுமி, தன்னால் இங்கு இருக்க முடியவில்லை என்றும், உடனே அழைத்து செல்லும்படியும் கூறி உள்ளார். இதைத்தொடர்ந்து மகளை அழைத்து செல்வதற்காக சிறுமியின் பெற்றோர் கேரளாவில் இருந்து புறப்பட்டு பெரம்பலூருக்கு வந்து கொண்டிருந்த போது, ராஜ்குமாரின் நண்பர் ஜெய்சங்கர் சிறுமியின் தாயாரை போனில் தொடர்பு கொண்டு சிறுமி உடல்நிலை சரியில்லாமல் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே பெரம்பலூர் வந்த சிறுமியின் தாயார், ஆஸ்பத்திரியில் மகளை பார்த்தபோது சுயநினைவில்லாமல் இருந்துள்ளார். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி சிறுமி இறந்து போனார். சிறுமியின் சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது பெற்றோர் அளித்த புகாரின் பேரில் பெரம்பலூர் போலீசார் சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
பிரேத பரிசோதனையில் சிறுமி கற்பழித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து முன்னாள் எம்.எல்.ஏ. ராஜ்குமார், அவரது நண்பர்கள் ஜெய்சங்கர், அன்பரசு, மகேந்திரன், விஜயகுமார், அரிகிருஷ்ணன், பன்னீர்செல்வம் உள்ளிட்ட 7 பேர் மீது ஆள்கடத்தல், கற்பழிப்பு, மரணத்தை ஏற்படுத்துதல் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.  இதைத்தொடர்ந்து முன்னாள் எம்.எல்.ஏ. ராஜ்குமார் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
10 ஆண்டுகள் சிறை தண்டனை
பெரம்பலூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணையின் போது பன்னீர்செல்வம் இறந்து போனார். குற்றம்சாட்டப்பட்டவர்களில் ராஜ்குமார் முன்னாள் எம்.எல்.ஏ. என்பதால் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்க சென்னையில் ஏற்படுத்தப்பட்டுள்ள சிறப்பு நீதிமன்றத்திற்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கில் விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிபதி சாந்தி குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ.வுக்கு ராஜ்குமார்க்கு எதிராக காவல்துறை குறிப்பிட்ட கற்பழிப்பு, மரணத்திற்கு காரணம், கூட்டுச் சதி உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
இந்த தண்டனை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும். கூட்டாளி ஜெய்சங்கர் எதிராக கூட்டுச் சதி, மோசடி ஆகிய பிரிவுகளில் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பதாகவும், இருவருக்கும் 42 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் மற்ற குற்றவாளிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை காவல் துறை தரப்பில் நிரூபிக்கவில்லை என்பதால் அவர்களை விடுதலை செய்வதாக தீர்ப்பளித்தார்.
Like Reply
சேதம் அடைந்த குடிசையை சீரமைக்க மகனை ரூ.10 ஆயிரத்துக்கு கொத்தடிமையாக விற்ற பெற்றோர் நெஞ்சை உலுக்கும் கஜா புயல் சோகம்
[Image: 201812290511501332_Son-to-Rs10-thousand-...SECVPF.gif]
தஞ்சாவூர்,


கஜா புயல் கடந்த மாதம் 16-ந் தேதி தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை ஆகிய 4 மாவட்டங்களிலும் மிக கடுமையான சேதத்தை ஏற்படுத்தியது. இந்த புயலால் ஓட்டு வீடுகள், குடிசை வீடுகள் அனைத்தும் சேதம் அடைந்தன. வீடுகளை இழந்த மக்கள் ஆங்காங்கே இருந்த நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு இருந்தனர். முகாம்களில் தங்கி இருந்தவர்கள் தற்போது மெல்ல, மெல்ல மீண்டு வருகிறார்கள். நிரந்தர வருவாய் ஏதும் இல்லாத ஏழைகள், சேதம் அடைந்த வீடுகளை சீரமைக்க முடியாமல் தவித்து வருகிறார்கள்.

Like Reply
இத்தகைய நிலையில் உள்ள ஒரு ஏழை கூலி தொழிலாளி தம்பதியினர், கஜா புயலால் சேதம் அடைந்த தனது வீட்டை சீரமைக்க தாங்கள் பெற்ற மகனையே ரூ.10 ஆயிரத்துக்கு விற்பனை செய்த சம்பவம் நடந்து உள்ளது.
இது பற்றிய விவரம் வருமாறு:-

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அண்ணா குடியிருப்பை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 45). இவரது மனைவி வசந்தா (41). இருவரும் தினக்கூலி தொழிலாளர்கள். இவர்களுக்கு சக்தி (25) மற்றும் 12 வயது நிரம்பிய மகன் என்று இரண்டு மகன்களும், காமாட்சி (10) என்ற மகளும் உள்ளனர்.

நாள்தோறும் காலையில் கணவன்-மனைவி இருவரும் கூலி வேலைக்கு சென்று மாலையில் வீட்டுக்கு திரும்பி வருவார்கள். அதன்பின்னர்தான் இவர்கள் வீட்டில் அடுப்பே எரியும். அன்றாட வாழ்க்கையை கடத்துவதற்கே இவர்களுக்கு போதும்... போதும்... என்று இருந்து வந்த நிலையில் கடந்த மாதம் 16-ந் தேதி இவர்களது வாழ்க்கையை புரட்டி போட்டது கஜா புயல்.

பெரிய, பெரிய மரங்களை வேரோடு பிடுங்கி போட்ட கஜா புயலுக்கு இவர்களது குடிசை வீடு எம்மாத்திரம். சுழன்று அடித்த புயல் இவர்களது குடிசை வீட்டை முற்றிலும் உருக்குலைத்து விட்டு சென்று விட்டது. இதனைத் தொடர்ந்து நிவாரண முகாமில் குடும்பத்துடன் தங்கி இருந்த மாரிமுத்துவுக்கு புயலுக்கு பின்னர் கூலி வேலையும் சரிவர கிடைக்கவில்லை. இருந்த ஒரே வாழ்வாதாரமான குடிசையையும் இழந்து விட்டு, சாப்பாட்டுக்கும் வழியில்லாமல் குழந்தைகளை வைத்துக்கொண்டு மாரிமுத்து-வசந்தா தம்பதியினர் வறுமையில் வாடி வந்தனர்.

தங்களது குடிசையை சீரமைப்பதற்காக அவர்களுக்கு பணம் தேவைப்பட்டது. இந்த பணத்தை புரட்டுவதற்கு அவர்களிடம் பொட்டு தங்கமோ, வேறு எதுவுமோ இல்லை. யாரிடம் சென்று உதவி கேட்பது? தங்களது குடிசையை எப்படி சீரமைப்பது என்று தம்பதியினர் மிகுந்த வேதனையில் வாடினர். அப்போது அவர்கள் இருவரும் கலந்து பேசி தங்களிடம் இருக்கும் ஒரே சொத்தான தங்கள் இரண்டாவது மகனை தற்காலிகமாக விற்று குடிசையை சீரமைப்பது என்று முடிவு செய்தனர்.

இதனையடுத்து கடந்த 15 நாட்களுக்கு முன்பு தனது 12 வயது மகனை ரூ.10 ஆயிரத்துக்கு நாகை மாவட்டம் பனங்குடியை அடுத்த சன்னமங்கலம் கிராமத்தை சேர்ந்த பண்ணை தோட்ட உரிமையாளர் சந்துரு என்பவரிடம் விற்று உள்ளனர். அவர் அந்த சிறுவனை விலைக்கு வாங்கி தனது பண்ணை தோட்டத்தில் வேலைக்கு ஈடுபடுத்தினார். கொத்தடிமை போல் அந்த சிறுவன் வேலையில் ஈடுபடுத்தப்பட்டதாக தெரிகிறது. தோட்டத்து வேலைகளில் மட்டுமல்லாது ஆடு மேய்க்கும் வேலையிலும் அவன் ஈடுபடுத்தப்பட்டான்.

இந்த நிலையில் அந்த சிறுவனை கொத்தடிமை போல் வேலையில் ஈடுபடுத்தப்படுவதை பார்த்தவர்கள், இதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சிறுவனை மீட்டனர்.

இதற்கிடையில் சிறுவனை கொத்தடிமையாக வைத்திருந்த சந்துரு மீது நாகூர் போலீசார் 8 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். பின்னர் மீட்கப்பட்ட சிறுவனை தஞ்சையில் உள்ள சிறுவர் இல்லத்தில் அதிகாரிகள் தங்க வைத்து உள்ளனர். இந்த நெஞ்சை உலுக்கும் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Like Reply
மெல்போர்ன் டெஸ்ட்; மழையால் ஆட்டம் தொடங்குவதில் பாதிப்பு

[Image: 201812300659128894_Melbourne-Test-Match-...SECVPF.gif]

ஆஸ்திரேலிய அணிக்கு 399 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.  2-வது இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா நேற்று ஆட்ட நேர முடிவில் 85 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 258 ரன்கள் சேர்த்துள்ளது.

ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு மேற்கொண்டு 141 ரன்கள் தேவைப்படுகிறது. கைவசம் 2 விக்கெட் மட்டுமே உள்ளது.  5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் இன்று நடக்கிறது.  இந்த நிலையில் மழையால் ஆட்டம் தொடங்குவது பாதிக்கப்பட்டு உள்ளது.  தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையில் உணவு இடைவேளை விடப்பட்டு உள்ளது.
Like Reply




Users browsing this thread: 168 Guest(s)