Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
ஊட்டியில் மிஸ் செய்யக்கூடாத கேர்ன்ஹில்... இயற்கையின் செல்லத் தொட்டில்!
ஊட்டியில் சுற்றுலாப் பயணிகளின் உள்ளம் கவர்ந்த இடமாக மாறிவருகிறது கேர்ன்ஹில் வனப்பகுதி. ஊட்டி வரும் சுற்றுலாப் பயணிகள் வழக்கமாகச் சுற்றிப்பார்க்கும் இடங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஓர் இடமாக உள்ளது இது. ஊட்டி மத்தியப் பேருந்து நிலையத்திலிருந்து வெறும் 3 கி.மீ தூரத்தில் இருக்கிறது இது.
இயற்கை எழில் கொஞ்சும் நீலகிரியில் சுற்றுலாப் பயணிகளைக் கவர பூங்காக்கள், பொழுதுபோக்கு அம்சங்கள், படகு சவாரி, மலை ரயில் எனப் பல சிறப்பு அம்சங்கள் நிறைந்து காணப்பட்டாலும், சுற்றுலாப் பயணிகள் வனங்களையும், வன விலங்குகளையும் காணவே அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர். இப்படி வனங்களைக் காண ஆர்வமுடன் வரும் சுற்றுலாப் பயணிகளை வரவேற்க முதுமலை புலிகள் காப்பகம், அவலாஞ்சி, தொட்டபெட்டா, சிங்கார, பகல்கோடுமந்து உள்ளிட்ட இடங்கள் வனத்துறை சார்பில் பராமரிக்கப்பட்டு வருகின்றன. உள்ளூர் மக்கள் மற்றும் பழங்குடிகளைக் கொண்டு சூழல் மேம்பாட்டுக் குழு அமைக்கப்பட்டு அதன் மூலம் சூழலியல் சுற்றுலா இங்கு நடத்தப்பட்டு வருகிறது. இந்தப் பட்டியலில் தற்போது சுற்றுலாப் பயணிகளின் உள்ளம் கவர்ந்த இடமாக மாறி வருகிறது கேர்ன்ஹில் வனப்பகுதி. ஊட்டி வரும் சுற்றுலாப் பயணிகள் வழக்கமாகச் சுற்றிப்பார்க்கும் இடங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஓர் இடமாக உள்ளது இந்த வனப்பகுதி.
[color][font]
ஊட்டி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து எமரால்டு செல்லும் சாலையில் 3 கி.மீ. தொலைவில் நம்மை வரவேற்கக் காத்திருக்கிறது கேர்ன்ஹில். சிறிய வாகனம் மட்டுமே செல்லக்கூடிய, இரு மருங்கிலும் மரங்கள் அடர்ந்த ஒரு குறுகிய சாலையில், சிறிது தூரம் சென்றால் அடர்ந்த காட்டுக்குள் வனத்துறைச் செயல் விளக்கக் கட்டடம் ஒன்று உள்ளது. அதன் அருகிலேயே டிக்கெட் கவுன்டர். பெரியவர்களுக்கு ரூ.20-ம் சிறியவர்களுக்கு, ரூ.10-ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.சுற்றுலாப் பயணிகள் கூட்டம் குறைந்த இந்த வனப்பகுதி நீலகிரி கோட்ட வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. தோடர் பழங்குடி மக்களின் பாரம்பர்ய வளைவுக் குடில், இரட்டைக் கட்டடம் ஆகியவை இங்கே உள்ளன. உள்ளே இருக்கும் விளக்க மையத்தில் முந்நூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்த நீலகிரி அப்படியே வடிவமைக்கப்பட்டுள்ளது. பல லட்சம் ஆண்டுகள் பரிணாமத்தில் உருவான சோலை மரக்காடுகள், புல்வெளிகள், மலைத்தொடர்கள் எனக் கலைநயத்தோடு தத்ரூபமாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் வனப்பகுதியின் மாதிரி, பாறைச் சரிவில் மாநில விலங்கான நீலகிரி வரையாடு, சிறுத்தை, நீலகிரி கருமந்தி போன்றவற்றின் உருவங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
[/font][/color]
[color][font]
நீலகிரி மாவட்டத்தில் வசிக்கக்கூடிய பழங்குடியின மக்களின் வரலாறு குறித்த புகைப்படங்கள், நவீன நீலகிரியின் உருவான வரலாறு போன்ற தகவல்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. நீலகிரிக்கே உரித்தான ஓரிட வாழ்விகள், பறவைகள், வன விலங்குகளின் ஒலிகள் அடங்கிய தொகுப்பும் உள்ளது. இங்குள்ள வனத்தில் சிறுத்தை, மான், காட்டெருமை, அணில், புலி உள்ளிட்ட வன விலங்குகளின் மாதிரி உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த வனத்திற்கு நடுவே சுற்றுலாப் பயணிகள் நடைப்பயணம் மேற்கொள்ளும் வசதியும் உள்ளது. நடைப்பயணமாகச் சென்று வனத்தின் நடுவே உள்ள காட்சிக் கோபுரத்திலிருந்து இயற்கை காட்சிகளைப் பார்வையிடலாம். சிறப்பம்சமாக, ராட்சத மரங்களுக்கு நடுவே தொங்கும் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் சுற்றுலாப் பயணிகள் ஏறி நடந்துசென்று பார்த்து மகிழ்வது வழக்கம். கேர்ன்ஹில் வனத்தில் உள்ள தொங்கு பாலம் மற்றும் வன விலங்குகளின் மாதிரிகளைப் பார்வையிட ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இப்பகுதிக்கு வந்துசெல்கின்றனர்.
[/font][/color]
[color][font]
வனத்துறையால் நடத்தப்படும் காட்டுமாடு மற்றும் புலி என்ற பெயரில் இரு தங்கும் விடுதிகள் உள்ளன. மேலும் அரிய வகை ஆர்க்கிட் மலர்களைக் காக்க பசுமைக் குடில் அமைக்கப்பட்டு பழவகைகளில் ஆர்க்கிட்கள் வளர்க்கப்படுகின்றன. பழங்குடியின மக்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் தோடர் பழங்குடியின மக்களின் 2 விற்பனை மையங்கள் உள்ளன. இவற்றில் தோடர் எம்ராய்டரி சால்வை, தேன், சாக்லேட்கள் போன்றவை விற்பனை செய்யப்படுகின்றன. இயற்கையின் செல்லத்தொட்டில் போன்ற இந்த இடம், காடுகளைக் காணவரும் சுற்றுலாப் பயணிகளுக்கு புது அனுபவத்தைத் தருகிறது.
[/font][/color]
[color][font]
இயற்கை எழில் கொஞ்சும் கேர்ன்ஹில் வனப்பகுதியைக் கண்டு ரசிக்க வந்த வேலூரைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி பானுமதி கூறுகையில், ``கோடை விடுமுறையைக் கொண்டாட குடும்பத்துடன் ஊட்டி வந்தோம். வந்த இடத்தில் நண்பர்கள் சொல்லக் கேள்விப்பட்டு இங்கே வந்து பார்த்தோம். இந்த இடத்தின் அழகை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. ஊட்டி நகருக்கு அருகில் இப்படி ஒரு பகுதி இருப்பதே அதிகம் யாருக்கும் தெரிவதில்லை. ஆதிகாலத்துக்குத் திரும்பியது போன்ற உணர்வு ஏற்படுகிறது. அடுத்த முறையும் இதே இடத்துக்கு வரவேண்டும் போல உள்ளது” எனச் சிலாகித்தார்.
[/font][/color]
[color][font]
வனத்துறையினர் கூறுகையில் ``சூழலியல் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் சமீபத்தில் இதைச் சீரமைத்துள்ளோம். சுற்றுலாப் பயணிகளுக்கு அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. முறையான சோதனைக்குப் பின்னரே பயணிகளை அனுமதிக்கின்றோம், சூழலுக்குக் கேடுவிளைவிக்கும் பொருள்கள் கொண்டுவரத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் வறட்சிக் காலங்களில் மட்டும் நடைப்பயணம் மேற்கொள்ள அனுமதி இல்லை. பாதுகாப்புடன் பார்த்து ரசித்துச் செல்ல வனத்துறை உதவும்” என்றனர்.[/font][/color]
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
ரிக்கெட்
இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் வெற்றி
உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான பயிற்சி ஆட்டங்கள் இங்கிலாந்தில் உள்ள பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் லண்டனில் நேற்று நடந்த பயிற்சி ஆட்டம் ஒன்றில் இங்கிலாந்து-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின.
‘டாஸ்’ ஜெயித்த இங்கிலாந்து அணி கேப்டன் இயான் மோர்கன் பீல்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி, இங்கிலாந்து வீரர்களின் நேர்த்தியான பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் திணறியதுடன், சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. ஆப்கானிஸ்தான் அணி 38.4 ஓவர்களில் 160 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக முகமது நபி 44 ரன்னும், நூர் அலி ஜட்ரன் 30 ரன்னும் எடுத்து ஆட்டம் இழந்தனர். தவ்லத் ஜட்ரன் 20 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டம் இழந்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் ஜோப்ரா ஆர்ச்சர், ஜோரூட் தலா 3 விக்கெட்டும், பென் ஸ்டோக்ஸ், மொயீன் அலி தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
பின்னர் 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் ஆடிய இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜாசன் ராய், பேர்ஸ்டோ ஆகியோர் களம் இறங்கினார்கள். இருவரும் அடித்து ஆடி வேகமாக ரன் சேர்த்தனர். அணியின் ஸ்கோர் 7.2 ஓவர்களில் 77 ரன்னாக இருந்த போது பேர்ஸ்டோ (39 ரன்கள், 22 பந்துகளில் 7 பவுண்டரி, ஒரு சிக்சருடன்) முகமது நபி பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் ரமத் ஷாவால் ஸ்டம்பிங் செய்யப்பட்டு ஆட்டம் இழந்து வெளியேறினார். அடுத்து ஜோரூட் களம் இறங்கினார்.
17.3 ஓவர்களில் இங்கிலாந்து அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தொடக்க ஆட்டக்காரர் ஜாசன் ராய் 46 பந்துகளில் 11 பவுண்டரி, 4 சிக்சருடன் 89 ரன்னும், ஜோரூட் 37 பந்துகளில் 3 பவுண்டரியுடன் 29 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். இங்கிலாந்து அணி தனது முதலாவது பயிற்சி ஆட்டத்தில் 12 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி கண்டது. ஆப்கானிஸ்தான் அணி தனது முதல் பயிற்சி ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி அளித்து இருந்தது.
சவுதம்டனில் நடந்த மற்றொரு பயிற்சி ஆட்டத்தில் இலங்கை அணி, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது. ‘டாஸ்’ ஜெயித்த இலங்கை அணி கேப்டன் கருணாரத்னே பேட்டிங்கை தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 239 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக திரிமன்னே 56 ரன்னும், தனஞ்ஜெயா டி சில்வா 43 ரன்னும் எடுத்து ஆட்டம் இழந்தனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஆடம் ஜம்பா 2 விக்கெட்டும், மிட்செல் ஸ்டார்க், கம்மின்ஸ், கேன் ரிச்சர்ட்சன், மேக்ஸ்வெல், நாதன் லயன், ஸ்டீவன் சுமித் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
பின்னர் இலக்கை நோக்கி ஆடிய ஆஸ்திரேலிய அணி 44.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 241 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக உஸ்மான் கவாஜா 89 ரன்னும், மேக்ஸ்வெல் 36 ரன்னும் எடுத்து ஆட்டம் இழந்தனர். இலங்கை அணி தரப்பில் ஜெப்ரி வாண்டர்சே 2 விக்கெட்டும், நுவான் பிரதீப், தனஞ்ஜெயா டி சில்வா, மிலின்டா ஸ்ரீவர்தனா தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள். ஆஸ்திரேலிய அணி தொடர்ச்சியாக பெற்ற 2-வது வெற்றி இதுவாகும். முதல் ஆட்டத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி இருந்தது. இலங்கை அணி அடுத்தடுத்து சந்தித்த 2-வது தோல்வி இதுவாகும். முதல் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவிடம் வீழ்ந்து இருந்தது.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
நேசமணி குணமாக தமிழர்கள் வேண்டுவது ஏன்? - ஹிட் அடித்த பொறியாளர்கள்
படத்தின் காப்புரிமைTWITTERImage captionநேசமணி ட்வீட்
நகைச்சுவை நடிகர் வடிவேலு நடித்த கதாபாத்திரம் ஒன்றுக்கு அடிபட்டுவிட்டதாகவும் அவருக்காக பிராத்திக்கும்படியும் வேடிக்கையாக சமூக வலைதளங்களில் துவங்கிய பிரச்சாரம் உலக அளவில் ட்ரெண்ட் ஆனது.
ஃபேஸ்புக்கில் உள்ள Civil Engineers Learners என்ற பக்கத்தில், மே 27ஆம் தேதியன்று சுத்தியல் ஒன்றின் படத்தை வெளியிட்டு, இதை உங்கள் நாட்டில் எப்படி அழைப்பீர்கள் எனக் கேட்கப்பட்டிருந்தது.
படத்தின் காப்புரிமைFACEBOOKImage captionPray for Nesamani நகைச்சுவை பிரசாரம் தொடங்கிய விதத்தை காட்டும் ஃபேஸ்புக் பதிவுகளை ஒழுங்கமைத்து இடப்பட்ட பதிவு.
அந்தப் படத்தின் கீழ், துபாயில் வசிக்கும் தமிழரான விக்னேஷ் பிரபாகர் என்பவர், "இதை நாங்கள் சுத்தியல் என்று அழைப்போம். இதை எதன் மீதாவது அடித்தால் டங், டங் என சத்தம் வரும். ஜமீன் பங்களாவில் வேலை பார்க்கும்போது பெயிண்ட்டிங் கான்ட்ராக்டர் நேசமணியின் தலையை அவரது அண்ணன் மகன் இதை வைத்து உடைத்துவிட்டார். பாவம்." எனக் குறிப்பிட்டிருந்தார். அடுத்தடுத்த கமென்ட்களில், நேசமணிக்காக பிரார்த்தனை செய்யவும் என்ற பொருளில், #Pray_for_Nesamani என்ற ஹாஷ்டாகையும் பயன்படுத்தியிருந்தார்.
சித்திக் இயக்கத்தில் விஜய், சூர்யா, வடிவேலு, ரமேஷ் கண்ணா ஆகியோர் நடித்த ஃப்ரண்ட்ஸ் திரைப்படத்தில் கட்டட வேலைகளைச் செய்யும் கான்ட்ராக்டராக வரும் வடிவேலுவின் தலையில் ரமேஷ் கண்ணா சுத்தியலைப்போடும் காட்சியையே விக்னேஷ் பிரபாகர் வேடிக்கையாகக் குறிப்பிட்டிருந்தார். அந்தப் படத்தில் வடிவேலுவின் பெயர் நேசமணி. ரமேஷ் கண்ணாவின் பெயர் கிருஷ்ணமூர்த்தி.
சிறிது சிறிதாக பிரபலமான இந்த ஹாஷ்டாக் நேற்று முதலில் சென்னையிலும் பிறகு உலக அளவிலும் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆக ஆரம்பித்துள்ளது. மாலை முதலே சென்னையில் இந்த ஹாஷ்டாக் முதலிடத்தில் இருந்து வருகிறது.
முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் குன்றி மருத்துவமனையில் இருந்தபோது ஊடகங்களில் வெளியான செய்திகளைப் போன்ற செய்திகளை வடிவேலுவை வைத்து உருவாக்கி, மீம்களும் வீடியோ காட்சிகளும் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிவருகின்றன.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்திற்கு எதிராக வழக்கு - மீண்டும் சர்ச்சையில் சிக்கியது ஏன்?
படத்தின் காப்புரிமைREUTERS
மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ஜான்சன் & ஜான்சன் நிறுவனம்
அமெரிக்கா ஓக்லாஹோமா மாகாணம் ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளது. மருந்துகளுக்கு அடிமையாகும் வண்ணம் வலி நிவாரணி மருந்துகளை தயாரித்தது உட்பட அந்த நிறுவனத்திற்கு எதிராக தீவிரமான குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டுள்ளன. ஆனால், அந்த நிறுவனம் இந்த குற்றச்சாட்டுகளை மறுக்கிறது.
படத்தின் காப்புரிமைGETTY IMAGES
ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் சர்ச்சையில் சிக்குவது இது முதல்முறையல்ல. சில நாட்களுக்கு முன் ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் தயாரிக்கும் குழந்தைகளுக்கான முகப்பவுடர்களில் புற்றுநோயை உண்டாக்கும் ஆஸ்பெஸ்டாஸ் துகள்கள் இருப்பது குறைந்தது 1971 முதலே தெரியும் என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்ட பின் அதன் பங்கு மதிப்புகள் 10% அளவுக்கு சரிந்தன.
படத்தின் காப்புரிமைGETTY IMAGES
புற்றுநோய் உண்டானதாக அந்நிறுவனம் மீது ஆயிரக்கணக்கான வழக்குகள் நிலுவையில் உள்ளன. ராய்ட்டர்ஸ் செய்தி ஒருதலைப்பட்சமானது என ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் கூறியது
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
ஐரோப்பிய யூனியன் தேர்தலுக்குத் தயாராகும் தென்னிந்திய கிராமம் - சுவாரஸ்ய தகவல்கள்
இந்தியத் தேர்தல் முடிவுகளை அறிந்து கொள்ள இந்திய மக்கள் ஆர்வமாக உள்ள நேரத்தில், யானமில் தொலைதூர கிராமத்தில் இருக்கும் குறைந்த மக்கள் தொகை கொண்ட ஒரு கிராமம் ஐரோப்பியத் தேர்தலில் வாக்களிக்கத் தயாராகி வருகிறது.
பிரான்ஸ் அரசின் காலனி ஆதிக்கத்துக்கு உள்பட்ட பகுதியாக ஏனாம் இருந்துள்ளது. இந்தியாவின் சுதந்திரத்துக்குப் பிறகு 1954ல் அந்தப் பகுதி இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. மாகே, காரைக்கால், ஏனாம், புதுவை ஆகிய பகுதிகள் புதுவை யூனியன் பிரதேச நிர்வாகத்தின் கீழ் வருகின்றன. இதில் சில குடிமக்கள் இன்னும் பிரான்ஸ் தேசத்து குடிமக்கள் என்ற உரிமையையும் வைத்துள்ளனர். அந்தக் குடிமக்களில் சுமார் 5,500 பிரெஞ்ச் வாக்காளர்கள் உள்ளனர்.
வங்காள விரிகுடா கரையோரத்தில் ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் யானம் பகுதி அமைந்துள்ளது. அங்கு 32,000 பேர் வாழ்கின்றனர். அதில் இந்தச் சிறிய கிராமத்தில் உள்ள 80 வாக்காளர்கள், மே 23 முதல் 26 வரை நடைபெறும் ஐரோப்பிய யூனியன் தேர்தலில் வாக்களிக்க உள்ளனர்.
ஏனாம், பிரான்ஸ் அரசின் காலனி ஆதிக்கப் பகுதி
ஏனாம் பகுதி 1723 முதல் 1954 வரையில் பிரான்ஸ் அரசாட்சியின் கீழ் இருந்து வந்துள்ளது. இப்போதும்கூட அதை பிரெஞ்ச் யானம் என்று தான் குறிப்பிடுகிறார்கள்.
இந்தியாவுடன் யானம் இணைந்துவிட்ட போதிலும், பிரான்ஸ் அரசில் பணிபுரிந்தவர்கள் இந்தியா மற்றும் பிரான்ஸ் குடிமக்கள் அந்தஸ்தைத் தேர்வு செய்து கொள்ளும் விருப்ப உரிமை வழங்கப்பட்டது. பலர் இந்திய குடியுரிமை பெற்றுக் கொண்ட போதிலும், சிலர் பிரெஞ்ச் குடியுரிமையை வைத்துக் கொள்ள விருப்பம் தெரிவித்தனர்.
அவர்களுடைய வழித்தோன்றல்களுக்கும் தானாகவே பிரெஞ்ச் குடியுரிமை கிடைத்தது. சில குடும்பத்தினர் பிரான்சில் குடியேறிவிட்டனர்.
பிரெஞ்ச் தேசியக் கொடியை நினைவுபடுத்தும் வகையிலான நிறங்களில் பெயிண்ட் செய்யப்பட்ட, பிரெஞ்ச் கட்டுமான கலைநயத்தைக் காட்டும் கட்டடங்கள் ஏனாமின் தெருக்களில் இன்னமும் பிரெஞ்ச் ஆட்சியை நினைவுபடுத்தும் வகையில் உள்ளன.
தொடரும் மரபு
பிரான்ஸ் அரசில் பணிபுரிந்தவர்களின் குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு பிரெஞ்சு குடியுரிமை உள்ளது என்று, யானமில் பிரான்ஸ் குடிமக்களுக்கான ஆலோசகராக உள்ள சதனலா பாபு பி.பி.சி.யிடம் தெரிவித்தார். பிரெஞ்ச் குடிமக்கள் தொடர்பான விவகாரங்களைக் கவனிப்பதற்காக பிரெஞ்ச் அரசால் இவர் ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.
``என்னுடைய தாயார் பிரெஞ்ச் குடியுரிமை பெற்றவர். அவர் மூலமாக எனக்கு அந்தக் குடியுரிமை கிடைத்தது. 1979ல் இருந்து ஐரோப்பிய தேர்தல்களில் நாங்கள் பங்கேற்று வருகிறோம்'' என்று அவர் தெரிவித்தார்.
வாக்களிப்பின் நடைமுறைகளை விவரித்த அவர், ``புதுவை மற்றும் சென்னையில் பிரெஞ்சு தூதரகங்களில் வாக்குச் சாவடிகள் அமைக்கப் பட்டிருக்கும். பயணம் செய்ய முடியாதவர்கள், நேரில் செல்லாமல் இன்னொருவர் மூலமாக வாக்களிக்கும் வசதியும் இருக்கிறது. வாக்களிப்பதற்காக நீண்ட தொலைவுக்கு பயணம் செய்ய முடியாதவர்கள், தங்களுடைய வாக்கின் உரிமையை எழுத்துபூர்வமாகத் தெரிவிப்பார்கள். ஒரு வாக்காளர், வேறு இருவரின் வாக்குகளை இவ்வாறு எடுத்துச் சென்று அவர்கள் சார்பாக வாக்குகளைப் பதிவு செய்யலாம்'' என்று தெரிவித்தார்.
பிரான்ஸ் நாட்டுக்கு வெளியே வாழும் பிரெஞ்ச் குடிமக்களுக்கு ஒரு கட்சி என்ன வசதிகளை செய்து தர முன்வருகிறது என்பதன் அடிப்படையில், வேட்பாளர்களை தாங்கள் தேர்வு செய்வதாகவும் அவர் கூறினார்.
பிரெக்சிட் முடிவு காரணமாக, இப்போதைய ஐரோப்பிய யூனியன் தேர்தல் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.
ஐரோப்பிய யூனியனில் பிரான்ஸுக்கு 72 பிரதிநிதிகள் உள்ளனர். அதில் மூன்று பேர் யானம் பகுதியின் பிரெஞ்ச் குடிமக்களின் பிரதிநிதிகளாக இருப்பார்கள். இந்த மூன்று இடங்களுக்கு 33 பேர் போட்டியிடுகின்றனர். வாக்குச் சீட்டு முறையில் அவர்கள் தேர்வு செய்யப் படுவார்கள்.
இந்தியாவுக்கான பாடங்கள்
பிரெஞ்ச் குடியுரிமை தொடர்பாக இந்தியாவுக்கும் பிரான்ஸ் அரசுக்கும் இடையிலான ஒப்பந்தத்தை இரு நாடுகளும் தொடர்ந்து பின்பற்றி வருகின்றன என்று, புதுவை அரசில் கால்நடை பராமரிப்புத் துறையில் இணை இயக்குநராக இருந்து ஓய்வு பெற்ற மேடிசெட்டி ஜின்னாய்யா தெரிவிக்கிறார்.
``நான் பிரெஞ்ச் குடியுரிமை பெற்றவராக இருந்தாலும், இரு நாடுகளுக்கும் இடையிலான ஒப்பந்தம் காரணமாக இந்திய அரசின் அலுவலராக இருந்திருக்கிறேன்'' என்று அவர் விவரித்தார்.
இந்தியா மற்றும் பிரான்ஸ் தேர்தல் நடைமுறைகளுக்கு இடையே உள்ள மாறுபாடுகள் பற்றி குறிப்பிட்ட அவர், ``பிரான்ஸ் தேர்தலில், பிரச்சாரம் செய்யும் வகையில் வாக்காளர்களை வேட்பாளர்கள் சந்திப்பது கிடையாது. அரசே பிரச்சாரம் செய்கிறது. வேட்பாளர்களைப் பற்றிய விவரங்கள், செயல்பாடுகள் குறித்த விவரங்களை அரசே வாக்காளர்களுக்கு மெயில் மூலம் தகவல் அனுப்பிவிடும். அதன்பிறகு தங்கள் விருப்பத்தின்படி வேட்பாளர்களை வாக்காளர்கள் தேர்வு செய்கின்றனர்'' என்று தெரிவித்தார்.
சமூக பாதுகாப்பு தொடர்பான விஷயங்களுக்கு தான் முதன்மையான கவனம் செலுத்தப்படும் என்கிறார் ஜின்னய்யா.
இந்தியாவின் தேர்தல் முடிவுகள் பற்றி இந்திய வாக்காளர்கள் ஆர்வம் கொண்டிருப்பதைப் போல, பிரெஞ்ச் தேர்தல்கள் பற்றி நாங்கள் ஆர்வம் கொண்டிருக்கிறோம் என்கிறார் அவர்.
பிரெஞ்ச் தேர்தலில் வாக்களிப்பது குறித்து ஏனாம் அரசில் பணியாற்றும் ஜுரேக்கா சுல்தானா உற்சாகம் கொண்டிருக்கிறார்.
``இந்திய வாக்காளர்களைப் போல, நாங்கள் பிரெஞ்சு தேர்தலில் வாக்களிக்கத் தயாராக இருக்கிறோம். எங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த விஷயங்களை நாங்கள் முதன்மையான விஷயங்களாகக் கருதுகிறோம். பிரான்ஸ் குடியுரிமை பெற்றவர்கள் என்பதால், எங்களுக்கு கல்வி வசதிகள் கிடைப்பது எளிதாக இருக்கிறது. மேலும் ஐரோப்பாவில் எல்லா நாடுகளுக்கும் நாங்கள் பயணம் செல்லவும் அதன் மூலம் அனுமதி கிடைக்கிறது'' என்று அவர் தெரிவித்தார்.
பிரான்ஸ் அரசிடம் இருந்து தங்களுக்கு நிறைய பயன்கள் கிடைப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அடுத்த தலைமுறை: எனது இரு பிள்ளைகளும் பிரான்ஸில் வசிக்கின்றனர்
பிரான்ஸ் அரசு அளிக்கும் அனைத்து கல்வி உதவிகளையும் எங்கள் பிள்ளைகள் பெற்றுக் கொள்ள முடியும் என்று சதனலா பாபு தெரிவிக்கிறார். ``எனது இரு பிள்ளைகளும், என் தாயாருடன் இப்போது பிரான்ஸில் வசிக்கின்றனர். எங்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் அந்த அரசு அளிக்கிறது'' என்று அவர் கூறினார்.
``பிரான்ஸ் நாட்டுக்கு வெளியில் வசிக்கும் பிரெஞ்ச் குடிமக்கள் சார்பாக எங்கள் பிரதிநிதிகளை நாங்கள் தேர்வு செய்கிறோம். எங்கள் பிரச்சினைகளைத் தீர்க்கும் வகையில் அவர்கள் பணியாற்றுகின்றனர். புயல்கள் மற்றும் இயற்கைப் பேரிடர் சமயங்களில் எங்களுக்கு உதவிகள் கிடைக்கின்றன. தகுதி உள்ளவர்களுக்கு முதியோர் ஓய்வூதியங்கள் வழங்கப் படுகின்றன'' என்று அவர் தெரிவிக்கிறார்.
யானமில் வரி விகிதங்கள் ஒப்பீட்டளவில் குறைவாக உள்ளன. பிரெஞ்ச் குடிமக்களுக்கு மாதம் 830 யூரோக்கள் ஓய்வூதியமாக பிரெஞ்ச் அரசிடம் இருந்து கிடைக்கிறது.
யானம் மட்டுமின்றி, உலகில் 52 நாடுகளில் பிரெஞ்ச் குடிமக்கள் வாழ்கின்றனர். இந்த மக்களின் நலன்களை பிரெஞ்ச் அரசாங்கம் கவனித்துக் கொள்ளும்.
ஐரோப்பிய யூனியன் தேர்தல்கள் மே 23 முதல் 26 ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. புதுவையில் இந்த எல்லையில் உள்ள வாக்காளர்கள் மே 26 ஆம் தேதி வாக்களிப்பார்கள். 28 நாடுகளைச் சேர்ந்த 10 கூட்டணிகள் இந்தத் தேர்தல்களில் போட்டியிடுகின்றன.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
சாதிக் கொடுமையால் மும்பையில் மருத்துவ மாணவி தற்கொலை - என்ன நடந்தது?
படத்தின் காப்புரிமைFACEBOOKImage captionபாயல் தட்வி
பாயல் தட்வி. இவருக்கு மருத்துவராகி சமூக சேவை செய்ய வேண்டும் என்பதே விருப்பம். மகாராஷ்டிர மாநிலத்தின் ஜல்கோன் என்ற பகுதியை சேர்ந்த இவர், மருத்துவ படிப்பு முடிந்த பிறகு பழங்குடியினருக்காக மருத்துவ சேவையாற்ற வேண்டும் என்று கனவு கண்டார்.
மும்பையில் உள்ள டோபிவாலா மருத்துவக் கல்லூரியில் பெண்கள் நல மருத்துவம் படித்து வந்தார். ஆனால், அந்தக் கனவுகள் எல்லாம் நிறைவேறாமலேயே போனது. கடந்த 22ஆம் தேதி தூக்கு மாட்டிக் கொண்ட பாயல், தன் வாழ்க்கையை முடித்துக் கொண்டார்.
அவர் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவர் என்பதால், அவர் கல்லூரியில் துன்புறுத்தலுக்கு ஆளாகி, தூக்கு மாட்டிக் கொண்டதாக அவரது உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இந்திய தண்டனை சட்டம் 306/34ன் கீழ் அக்ரிபடா காவல் நிலையத்தில் இது தொடர்பாக மூன்று இருப்பிட மருத்துவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக துணை ஆணையர் தீபக் குடள் தெரிவித்துள்ளார்.
என்ன நடந்தது?
மேற்கு மகாராஷ்டிராவில் உள்ள மீரஜ் - சங்லி என்ற இடத்தில் தனது எம்.பி.பி.எஸ் படிப்பை முடித்தார் பாயல். கடந்த ஆண்டு மேற்படிப்புக்காக மும்மையில் உள்ள டோபிவாலா மருத்துவ கல்லூரிக்கு விண்ணப்பித்திருந்தார்
பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த இவர், இடஒதுக்கீட்டின் கீழ் சேர்த்துக் கொள்ளப்பட்டார். அங்கிருந்த மூன்று மருத்துவர்கள், பாயலை சாதியின் அடிப்படையில் பேசி துன்புறுத்தியதாக குற்றம்சாட்டப்படுகிறது. இதனை தாங்கிக் கொள்ள இயலாமல் பாயல் தற்கொலை செய்து கொண்டதாக அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர்.
பாயலின் தாய் ஆபீதா தட்வி இது தொடர்பாக எழுத்துப்பூர்வமான புகார் ஒன்றை அம்மருத்துவமனையின் டீனிடம் வழங்கியுள்ளார். புற்று நோய்க்காக அங்கு சிகிச்சை பெற்றுவந்த ஆபீதா, பாயல் சந்தித்த இன்னல்களை தாம் நேரில் பார்த்ததாகக் கூறுகிறார்.
படத்தின் காப்புரிமைGETTY IMAGES
"அப்போதே புகார் தர இருந்தேன். ஆனால் பாயல் என்னை தடுத்துவிட்டார். புகார் அளித்தால், அதிகமான துன்புறுத்தலுக்கு ஆளாக வேண்டி வருமோ என்று பாயல் அஞ்சினார்," என்று டீனுக்கு எழுதிய கடிதத்தில் ஆபீதா குறிப்பிட்டுள்ளார்.
ஏழ்மையான குடும்பப் பின்னணி மற்றும் பழங்குடியின சாதியில் இருந்து வந்தாலும், அவர் மருத்துவரானார் என்றும் தன் மகளின் சாதனை குறித்து தாம் பெருமைப்பட்டதாகவும் ஆபீதா கூறுகிறார்.
மேலும் நோயாளிகளுக்கு முன்பாகவே பாயலை அங்குள்ள சில மூத்த மாணவர்கள் அவமானப்படுத்துவார்கள் என்று அவர் தெரிவித்தார். தொடர்ந்து மருத்துவம் பயிலவிட மாட்டோம் என்று மிரட்டியதால் பாயல் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்துள்ளார்.
பாயலின் மனநிலை குறித்து அவரது தாய் வருத்தத்தில் இருந்திருக்கிறார். மேலும் அத்துறையில் இருந்து மாற்றிக் கொள்ளவும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.
இறுதியாக பாயல் மே 22ஆம் தேதி தனது வாழ்க்கையை முடிந்துக் கொண்டார்.
படத்தின் காப்புரிமைJEAN-FRANCOIS DEROUBAIX
மகாராஷ்டிரா இருப்பிட மருத்துவர்கள் அமைப்பு (MARD) இதில் சம்மந்தப்பட்ட இருப்பிட மருத்துவர்களை இடைநீக்கம் செய்துள்ளது. அத்துறை தலைவரையும் நீக்க வேண்டும் என்று பாயலின் குடும்பம் வலியுறுத்துகிறது.
MARD அமைப்பின் உறுப்பினர்கள் பாயலுக்கு மரியாதை செலுத்தி, "எங்களுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. நாங்கள் அவர்கள் குடும்பத்துடன் துணை நிற்போம். எங்கள் பிரார்த்தனைகள்" என்று குறிப்பிட்டு அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளனர்.
இது தொடர்பாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாயலுடன் வேலை பார்த்தவர்கள் சமூக ஊடகங்களில் குரல் கொடுத்து வருகின்றனர்.
பாயலின் மரணம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகுபாடு காண்பிப்பது, மன அழுத்தம் போன்ற விவகாரங்கள் குறித்து மீண்டும் அவர்கள் பேசத் தொடங்கியுள்ளனர்.
இது தொடர்பாக, ஜே.ஜே மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவரும், டாக்டர் அம்பேத்கர் மருத்துவ அமைப்பின் முன்னாள் தலைவருமான மருத்துவர் ரீவட் கனின்டேவிடம் பேசினோம்.
"மருத்துவத்தில் மேற்படிப்பு படித்து வந்த மாணவி இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளார். அப்போது அவர் எந்த அளவிற்கு துன்பத்தை அனுபவித்திருப்பார் என்று நினைத்து பாருங்கள்" என்று அவர் கூறுகிறார்.
"அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் 'சம வாய்ப்பு அறை' ஒன்று இருக்க வேண்டும் என பல்கலைக்கழக மானியக் குழு பரிந்துரைத்துள்ளது. ஆனால், மகாராஷ்டிராவில் உள்ள எந்த கல்லூரிகளிலும் இது இல்லை. தங்கள் சொந்த ஊர்களில் இருந்து தள்ளி வந்து மாணவர்கள் படிக்கிறார்கள். அவர்களுக்கு சரியான ஆலோசனை வழங்கப்பட வேண்டும். இது போன்ற வழக்குகளில் உடனடியாக நடவடிக்கை எடுக்க எஸ்.சி - எஸ்.டி அலுவலரை நியமிக்க வேண்டும்" என்று அவர் மேலும் கூறுகிறார்.
பேரிழப்பு
மருத்துவக் கல்லூரியின் டீன் ரமேஷ் பர்மல், "திறமையான ஒரு மாணவரை இழந்துவிட்டோம். அவர் மரணம் எங்களுக்கு பேரிழப்புதான். கிராமப்புறத்திலிருந்து வந்தவர் அவர், கிராம மக்களுக்காக பணியாற்ற விரும்பினார்.” என்கிறார்.
மேலும் அவர், "சுகாதார அறிவியலுக்கான மஹாரஷ்ட்ரா பல்கலைக்கழகம் மற்றும் இந்திய மருத்துவ மன்றத்தின் வழிக்காட்டலின்படி பகடி வதை எதிர்ப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் சம்பவம் நடந்த அடுத்த நாளிலிருந்தே விசாரணையை தொடங்கிவிட்டார்கள். 25 பேரிடம் விசாரித்து வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளனர்" என்கிறார்.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
‘200 ஜாக்கிகள்; 20 தொழிலாளர்கள்!’ - வேலூரில் ‘அலேக்காக’ உயர்த்தப்பட்ட மாடிவீடு
வேலூரில் பள்ளத்திலிருந்த மாடிவீட்டை 200 ஜாக்கிகளைக் கொண்டு நான்கு அடிக்கு ‘அலேக்காக’ உயர்த்திருப்பதைப் பார்த்து பொதுமக்கள் வியப்படைந்தனர்.
வேலூர் சத்துவாச்சாரி நேதாஜி நகர் 5-வது தெருவைச் சேர்ந்தவர் கஜேந்திரமன். இவரது மாடிவீட்டின் தரைதளம் தெருவின் கழிவுநீர் கால்வாய்க்கும் கீழே குறைவான பள்ளத்தில் இருந்தது. அந்தப் பகுதி சாலையும் உயர்த்தப்பட்டுள்ளதால் கழிவுநீர் வெளியேறாமல் தேங்கிநிற்கிறது. கால்வாயில் வரும் கழிவுநீர் கஜேந்திரமன்னின் வீட்டுக்குள் புகுந்துவிடுகிறது. இதனால், அவர்கள் கடும் அவதிக்குள்ளாகிவந்தனர். இந்த நிலையில், அந்தப் பகுதியில் மாநகராட்சி சார்பில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட இருப்பதால் வீடு மேலும் பள்ளமாகும் நிலை உருவானது. வீட்டை இடித்துவிட்டு பள்ளமான பகுதியில் மண்ணைக் கொட்டி நிரப்பிய பிறகு, அதன் மீது புதிய வீட்டைக் கட்டிக்கொள்ளலாம் என்று உரிமையாளர் முதலில் நினைத்தார்.
ஆனால், 800 சதுர அடியில் கட்டப்பட்ட மாடிவீட்டை இடித்துவிட்டு புதிய வீடு கட்டுவதற்கு அதிக செலவாகும். வீட்டை இடித்தால் தூசு பறக்கும். அக்கம், பக்கம் வசிப்பவர்கள் சண்டைக்கு வருவார்கள் என்பதால் வீட்டை இடிக்காமலேயே தரைமட்டத்தை உயர்த்த நண்பர்கள் சிலர் யோசனை கூறினர். இதற்காக, சென்னையில் செயல்பட்டுவரும் வீட்டை இடிக்காமலேயே ஜாக்கி மூலம் தூக்கி உயர்த்தும் நிறுவனத்தைத் தொடர்பு கொண்டனர். அந்த நிறுவனத்தின் உரிமையாளர் தணிகைமலை என்பவர், வேலூர் மாவட்டம் கலவையைச் சேர்ந்தவர். கஜேந்திரமன்னின் வீட்டை இடிக்காமலேயே உயர்த்திக் கொடுக்க அவர் முன்வந்தார். ஒரு சதுர அடிக்கு 50 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்பட்டது.
ஒரு வாரத்துக்கு முன்பு வீட்டை உயர்த்தும் பணி தொடங்கியது. 200 ஜாக்கிகளைக் கொண்டு 20-க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் வீட்டை நான்கு அடி உயரத்துக்குத் தூக்கியிருக்கிறார்கள். வீட்டு சுவர்களில் ஒரு சிறிய வெடிப்புகூட ஏற்படவில்லை. சிறிய அசைவுகூட இல்லாமல் தரைமட்டத்திலிருந்து வீட்டை அலேக்காக உயர்த்தியிருக்கிறார்கள். இதனால், எந்தச் சுற்றுச்சூழல் பாதிப்பும் இல்லை என்று வீட்டை உயர்த்திய நிறுவனத்தினர் தெரிவித்தனர். வீட்டை இடிக்காமல், பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு இடையூறு ஏற்படாமல் குறைந்த செலவில் தரைமட்டத்திலிருந்து உயர்த்தப்பட்ட மாடிவீட்டை, அப்பகுதி மக்கள் ஆச்சர்யத்துடன் பார்த்துச் செல்கிறார்கள்.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
370 தொகுதிகள்... பதிவான வாக்குகளைவிட எண்ணப்பட்ட வாக்குகள் அதிகம் - சர்ச்சையில் EVM
“இந்தியத் தேர்தல் ஆணையத்தினால், நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நாடாளுமன்றத்திற்கான தேர்தல் நடைபெற்று முடிந்துவிட்டது. இந்தத் தேர்தல் முடிவில், பி.ஜே.பி கூட்டணி 350 இடங்களுக்கும் அதிகமான இடங்களில் வெற்றிபெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்துள்ளது. இந்தத் தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துடன், ஒப்புகைச் சீட்டு இயந்திரமும் முதல் முறையாக பயன்படுத்தபட்டு, இந்தத் தேர்தலை நடத்திமுடித்தது தேர்தல் ஆணையம்.
இந்நிலையில், தேர்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரத்தில் குளறுபடிகள் நடந்திருப்பதாக புதிய குற்றச்சாட்டு எழுந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா முழுவதும் சுமார் 370 தொகுதிகளில் இதுபோன்ற குளறுபடிகள் நடைபெற்றுள்ளன. வாக்குப்பதிவு அன்று பதிவான வாக்குகளின் எண்ணிக்கைக்கும், வாக்கு எண்ணிக்கையின்போது இயந்திரத்தில் எண்ணப்பட்ட வாக்குகளுக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது இப்போது தெரியவந்துள்ளது. குறிப்பாக, தமிழகத்தில் காஞ்சிபுரம் நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு அன்று பதிவான வாக்குகளின் எண்ணிக்கை 12,14,086. ஆனால், வாக்கு எண்ணிக்கையின் முடிவில் எண்ணப்பட்ட வாக்குகள் 12,32,417. அதாவது, பதிவான வாக்குகளைவிட எண்ணப்பட்ட வாக்குகள் 18,331 அதிகம்.
அதேபோல், தருமபுரி தொகுதியில் பதிவான வாக்குகள் 11,94,440. எண்ணப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை 12,12,311.பதிவான வாக்குகளைவிட எண்ணப்பட்ட வாக்குகள் இடையே உள்ள வித்தியாசம் 17,871. இதேபோன்று தமிழகத்திலே ஐந்து தொகுதிகளில் சுமார் ஒரு லட்சம் வாக்குகள் கூடுதலாக உள்ளது. இதேநிலை இந்தியா முழுவதும் 373 தொகுதிகளில் நிலவியுள்ளது. இந்த விவரங்கள் தற்போது தேர்தல் ஆணையத்திற்குத் தெரிந்து, பதிவான வாக்குகள்குறித்த விவரங்களைத் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்திலிருந்து நீக்கி உள்ளார்கள். மத்தியில் பா.ஜ.க அசுர பலத்துடன் ஆட்சியைக் கைப்பற்றிய நிலையில், இந்தக் குளறுபடி விவகாரம் இப்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தேர்தல் ஆணைய அதிகாரியிடம் கேட்டபோது, " 6 மணி வரை பதிவான ஓட்டுகள் மட்டுமே முதலில் சொல்லப்படும். அதன்பிறகு பதிவான வாக்குகள் எண்ணும்போதுதான் தெரியவரும்" என்கிறார்கள். ஆனால், தேர்தல் ஆணையம் தேர்தல் நடந்துமுடிந்து ஒரு மாதமாகியும் இன்னமும் பதிவான வாக்குகள் சரிவர பதிவுசெய்யாமல் இருந்திருக்குமா என்னும் கேள்வி பலரிடையே எழுந்துள்ளது.
இது குறித்த விரிவான விளக்கத்தை இந்த வீடியோவில் பார்க்கலாம்.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
உடற்கட்டில் கவனம் செலுத்தும் ஆண்களுக்கு ஆண்மை பாதிக்கும் அபாயம்
படத்தின் காப்புரிமைGETTY IMAGES
விஞ்ஞானிகள் ஒரு பரிமாண முரண்பாட்டை கண்டறிந்துள்ளனர். அதாவது, தங்களை கவர்ச்சிகரமானவராக காட்டிக்கொள்வதற்கு ஆண்கள் எடுக்கும் நடவடிக்கைகள் அவர்களது குழந்தை பெற்றுக்கொள்ளும் திறனை பாதிப்பதாக ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.
அழகான உடற்கட்டையோ அல்லது தலைமுடி இழப்பதை குறைப்பதற்காகவோ ஆண்கள் எடுத்துக்கொள்ளும் மருந்துகளும், மாத்திரைகளும் அவர்களது ஆண்மையை பாதிக்கும் என்று தெரியவந்துள்ளது.
இதற்கான ஆராய்ச்சியில் ஈடுபட்ட விஞ்ஞானிகளின் பெயரை அடிப்படையாக கொண்டு, இதற்கு மோஸ்மான்-பேசி பாரடாக்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது.
தம்பதிகளிடையேயான உறவில் பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தும் இது, கருத்தரிப்பதை கடினமாக்குவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
"தங்களது ஆண்மையை பரிசோதிக்க மருத்துவமனைக்கு வரும் ஆண்களில் பலர் உடற்கட்டில் ஆர்வமிக்கவர்களாக இருப்பதை நான் பார்த்துள்ளேன்" என்று கூறுகிறார் அமெரிக்காவிலுள்ள பிரௌன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த மருத்துவர் ஜேம்ஸ் மோஸ்மான்.
படத்தின் காப்புரிமைGETTY IMAGES
"தங்களை கவர்ச்சிகரமானவராக காட்டிக்கொள்ள நினைக்கும் ஆண்கள் அதற்காக எடுத்துக்கொள்ளும் மாத்திரைகள் அவர்களை மலட்டுத்தன்மை உடையவர்களாக ஆக்குகிறது."
உடற்கட்டை பெறுவதற்கு மருந்துகளை உட்கொண்டு ஹார்மோன்களை தூண்ட செய்து தசைகளின் வளர்ச்சியை அதிகரிப்பே இதற்கு முக்கிய காரணமென்று தெரியவந்துள்ளது.
இதுபோன்ற ஊக்க மருந்துகளை பெரும்பாலும் உடற்கட்டு வீரர்களே பயன்படுத்துகின்றனர்
"பெரும்பாலும் பெண்களை கவருவதற்காக உடற்பயிற்சி கூடங்களுக்கு செல்லும் ஆண்களின் தோற்றம் கவர்ச்சிகரமாவதோடு, அவர்களது ஆண்மையும் பாதிக்கப்படுவது முரண்பாடாக உள்ளது" என்று கூறுகிறார் ஷெஃபீல்ட் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆலன் பேசி எனும் மற்றொரு ஆராய்ச்சியாளர்.
பரிசோதனையின் முடிவுகள் பிரமாதமாக இருக்கப்போகிறது என்று மூளையின் பிட்யூட்டரி சுரப்பியை அனபோலிக் ஸ்டெராய்டுகள் போலியாக நினைக்க வைக்கிறது.
படத்தின் காப்புரிமைGETTY IMAGES
இவ்வாறு ஊக்க மருந்துகள் பிட்யூட்டரி சுரப்பியை ஏமாற்றுவது, விந்தணு உற்பத்தியில் பெரும் பங்கு வகிக்கும் எஃப்.எஸ்.எச் மற்றும் எல்.எச் ஆகிய இரண்டு ஹார்மோன்களின் செயல்பாட்டை நிறுத்துகிறது.
வழுக்கை ஏற்படுவதை தடுக்க ஆண்கள் எடுத்துக்கொள்ளும் மாத்திரைகளினாலும் இதையொத்த பிரச்சனையே ஏற்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஃபாஸ்ட்ரோஸ்டைட் எனும் ஒரு வகை மருந்து டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் சுரப்பதை நிறுத்துகிறது. இதன் காரணமாக முடி கொட்டுவது குறைகிறது. ஆனால், அத்தோடு ஆணுறுப்பு விறைப்பு குறைபாடு மற்றும் கருவுருதலுக்கான வாய்ப்பும் குறையக் கூடும்.
"அனபோலிக் ஸ்டீராய்டுகளை பயன்படுத்துபவர்களுக்கு 90 சதவீதம் மலட்டுத்தன்மை ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது" என்று ஆலன் மேலும் கூறுகிறார்.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
டி 20 போட்டியை விட மோசமாக விளையாடி பாக்..! பந்தாடிய வெஸ்ட் இண்டீஸ்.. 7 விக். வித்தியாசத்தில் வெற்றி
நாட்டிங்ஹாம்:அசத்தல் பந்துவீச்சில் 105 ரன்களில் பாகிஸ்தானை சுருட்டிய வெஸ்ட் இண்டீஸ், 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பாகிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்களுக்கு இடையேயான உலக கோப்பை தொடரின் 2வது போட்டி நாட்டிங்ஹாமில் நடைபெற்றது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஜாசன் ஹோல்டர் முதலில் பந்து வீச தீர்மானித்தார். இதனை அடுத்து பாகிஸ்தான் பேட்டிங் செய்தது.
பாகிஸ்தான் அணி 21.4 ஓவர்களி வெறும் 105 ரன்கள் மட்டுமே எடுத்து, வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக பாகிஸ்தான் அணியின் பேட்ஸ்மேன்கள், பாபர் அசாம் மற்றும் ஃபாகர் ஜமான் 22 ரன்களை எடுத்தனர்.
4 விக். வீழ்த்திய தாமஸ்
மற்ற வீரர்கள் யாரும் எதிர்பார்த்தபடி ஆடவில்லை. சொற்ப ரன்களில் அடுத்தடுத்து அவுட்டாகி வெளியேறி, ரசிகர்களை ஏமாற்றினர். வெஸ்ட் இண்டீஸ் அணியின் தாமஸ் 4 விக்கெட்டுகளும், கேப்டன் ஜாசன் ஹோல்டர் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
குறைந்த ஸ்கோர்
ஐபிஎல் தொடரில் அதிரடியாக விளையாடிய ரசல் 2 விக்கெட்டுகளும், ஷெல்டன் காட்ரெல் 1 விக்கெட்டும் வீழ்த்தினர். பிரம்மாண்ட ஸ்கோரை எட்டும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், பாகிஸ்தான் 105 ரன்களுக்குள் சுருண்டு,உலக கோப்பை வரலாற்றில் 2வது முறையாக குறைந்தபட்ச ஸ்கோர் என்ற மோசமான வரலாற்றை பதிவு செய்தது.
ஏமாற்றம் தந்த ஹோப்
இதனை அடுத்து 106 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது. எளிதான இலக்கை துரத்திய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு, ஹோப் 11 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினார். தொடர்ந்து வந்த டேரன் பிராவோ டக் அவுட்டாக ஆட்டம் எப்படி போகுமோ என்று எதிர்பார்ப்பு எழுந்தது.
[img=0x0]data:image/svg+xml,%3Csvg%20xmlns%3D%22http%3A%2F%2Fwww.w3.org%2F2000%2Fsvg%22%20width%3D%22512%22%20height%3D%22288%22%3E%3C%2Fsvg%3E[/img]
கெயில் 50
மறு முனையில் தொடர்ந்து அதிரடியாக விளாசிய காட்டடி மன்னன் கிறிஸ் கெயில் 34 பந்தில் 6 பவுண்டரி, 3 சிக்சர் என 50 ரன்கள் எடுத்து அவுட்டானார். அடுத்து வந்த பூரன், ஹெட்மெயர் அணியை வெற்றி பாதைக்கு கொண்டு சென்றனர்.
வெஸ்ட் இண்டீஸ் வெற்றி
இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணி , 13.4 ஓவரில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து, 108 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தலாக தமது முதல் வெற்றியை பதிவு செய்தது. பிரம்மாண்டமான ரன் குவிப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்த போட்டி குறைந்த நேரத்திலே முடிவுக்கு வந்ததால் ரசிகர்களுக்கு சிறிது ஏமாற்றத்தை அளித்தது.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
உணவு டெலிவரிக்காக ஓவர் ஸ்பீட்.. 616 ஸ்விக்கி, ஜொமோட்டோ பாய்ஸ் மீது வழக்குப்பதிவு
சென்னை: சென்னையில் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்டதாக, கைபேசி செயலி மூலம் உணவு விநியோகம் செய்யும் ஊழியர்கள் 616 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை முழுவதும் ஸ்விக்கி - ஜொமோட்டோ உள்ளிட்ட நிறுவனங்களின் ஊழியர்கள் உணவை விரைவாக கொண்டு செல்ல வாகன விதிமீறலில் ஈடுபட்டதால் போக்குவரத்து போலீஸ் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். சாலைகளில் அதிவேகமாக இரு சக்கர வாகனங்களை இயக்குவதால் மெதுவாக செல்லும் வாகன ஓட்டிகளும் விபத்தில் சிக்குவதாக புகார் எழுந்துள்ளது.
பெருகி வரும் வாகனங்களின் எண்ணிக்கையால் சென்னை நகரம் போக்குவரத்து நெரிசலால் திக்குமுக்காடி வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மன உளைச்சலுக்கு உள்ளாகி வருகின்றனர்.
உணவு டெலிவரி
இதற்கிடையே, நன்கு வளர்ச்சியடைந்த சென்னை, பெங்களூர், மும்பை போன்ற நகரங்களில், உணவு டெலிவரி செய்யும் ஊழியர்களை அதிகம் காண முடிகிறது. அந்தந்த மாநிலங்களின் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் கூட ஸ்விக்கி, ஜொமோட்டோ மற்றும் உபேர் ஈட்ஸ் போன்ற நிறுவனங்கள் வேகமாக வளர்ச்சியடைந்து வருகின்றன.
உணவு ஆர்டர்
உணவு சமைக்காவிட்டால், செல்போனை எடுத்து வேண்டிய உணவை ஆர்டர் மட்டும் செய்து விட்டால் போதும். அடுத்த சில நிமிடங்களில் நீங்கள் இருக்கும் இடத்திற்கே உணவு தேடி வந்து விடும். வீடுகள் மட்டுமல்லாது அலுவலகங்களுக்கு வேலைக்கு செல்பவர்களும், கல்லூரி மாணவ, மாணவிகளும் இதனை அதிகம் பயன்படுத்துகின்றனர்.
[img=0x0]data:image/svg+xml,%3Csvg%20xmlns%3D%22http%3A%2F%2Fwww.w3.org%2F2000%2Fsvg%22%20width%3D%22512%22%20height%3D%22288%22%3E%3C%2Fsvg%3E[/img]
[color][font]
சுட சுட டெலிவரி
வாடிக்கையாளர்களுக்கு குறித்த நேரத்தில், உணவை சுட சுட டெலிவரி செய்ய வேண்டும் என்பதற்காக, பைக்குகளில் அவர்கள் மின்னல் வேகத்தில் பறப்பதை சாலைகளில் நீங்கள் கண் கூடாக பார்த்திருக்க கூடும். அதே நேரம், உணவை வேகமாக டெலிவரி செய்ய வேண்டும் என்பதற்காக, போக்குவரத்து விதிமுறைகள் எதையும் அவர்கள் கடைபிடிப்பதில்லை என போலீசாருக்கு தொடர்ச்சியாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இந்தநிலையில், உணவு விநியோகம் செய்யும் ஊழியர்கள் 616 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து போலீசார் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டுவருகின்றனர்.[/font][/color]
[color][font]
வழக்குப் பதிவு
இதே போல், மும்பையில் 5,797 உணவு விநியோகம் செய்யும் ஊழியர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் பல்வேறு நிறுவனங்களை சேர்ந்தவர்கள். இதில், 2,315 பேர் ஸ்விக்கி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்கள். 1,770 பேர் ஜொமோட்டோ நிறுவனத்தை சேர்ந்தவர்கள். எஞ்சிய 946 பேர் டோமினோஸ் பீட்சா நிறுவனத்திலும், 766 பேர் உபேர் ஈட்ஸ் நிறுவனத்தில் வேலை செய்பவர்கள் என்கின்றனர் மும்பை போக்குவரத்து போலீசார்.[/font][/color]
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
முகிலன் எங்கே? உயிருடன் இருக்கிறாரா? தமிழக அரசே பதில் சொல்.. சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம்!
சென்னை: சமூக ஆர்வலர் முகிலன் காணாமல் போய் 100 நாட்களுக்கு மேல் ஆகியுள்ள நிலையில் அவர் கதி என்ன என கேட்டு சென்னையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சூழலியல் போராளி, சமூக ஆர்வலர், ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர் என பல முகங்களைக் கொண்டவர் முகிலன். ஈரோடு மாவட்டம் சென்னிமலையைச் சொந்த ஊராக கொண்டவர்.
தமிழர்களுக்கு எதிரான அனைத்து பிரச்சனைகளிலும் போராட்டங்களிலும் முன்னின்று குரல் கொடுத்தவர். கூடங்குளம் அணுஉலை பிரச்சனையில் இருந்து கடந்த ஆண்டு நடைபெற்ற ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு வரை அப்பாவி பொதுமக்களாக போராட்டங்களை முன்னெடுத்தவர்.
காணாமல் போன முகிலன்
கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சென்னையில் ஸ்டெர்லைட் படுகொலை தொடர்பான ஆவணப் படத்தை வெளியிட்ட முகிலன் பின்னர் வீடு திரும்பவில்லை. இன்று திரும்புவார் நாளை திரும்பவார் என எதிர்பார்த்த குடும்பத்தினர் அவரது நட்பு வட்டாரத்தின் உதவியுடன் போலீஸில் புகார் அளித்தனர்.
[color][size][font]
சிபிசிஐடி வசம் வழக்கு
ஆனால் முகிலன் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க முடியாமல் திணறியது போலீஸ். இந்நிலையில் முகிலன் குடும்பத்தார் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்தனர். இதைத்தொடர்ந்து வழக்கு சிபிசிஐடி போலீஸாரிடம் சென்றது.
[/font][/size][/color]
[color][size][font]
ஏதோ செய்துவிட்டார்கள்
ஆனாலும் முகிலன் குறித்த எந்த தகவலும் இதுவரை கிடைக்கவில்லை. அதேநேரத்தில் முகிலனால் எதிர்க்கப்பட்டவர்கள் யாரோ அவரை ஏதோ செய்து விட்டார்கள் என்றும் முகிலன் குடும்பப் பிரச்சனைக்காரணம் தலைமறைவாக உள்ளார் என்றும் செய்திகள் றெக்கை கட்டி பறந்தன.
[/font][/size][/color]
[color][size][font]
ட்ரென்ட்டான ஹேஷ்டேக்
முகிலன் மாயமாகி 100 நாட்கள் கடந்து விட்டது. இதுவரை அவர் எங்கேயிருக்கார் என்ற தகவலோ அல்லது அவர் என்ன ஆனார் என்ற தகவலோ கிடைக்கவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் Where is Mugilan? என்ற ஹேஷ் டேக் சமூ க வலைதளங்களில் ட்ரென்ட்டானது.
கண்டன ஆர்ப்பாட்டம்
இதைத்தொடர்ந்து காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர்.
[img=0x0]data:image/svg+xml,%3Csvg%20xmlns%3D%22http%3A%2F%2Fwww.w3.org%2F2000%2Fsvg%22%20width%3D%22512%22%20height%3D%22288%22%3E%3C%2Fsvg%3E[/img]
[/font][/size][/color]
[color][size][font]
பலர் பங்கேற்பு
இந்நிய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர் நல்லக்கண்ணு தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் நெடுமாறன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன், மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா, நாம் தமிழர் கட்சியின் தென்னரசு, ஜி ராமகிருஷ்ணன், இயக்குநர் கவுதமன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
[/font][/size][/color]
[color][size][font]
உயிருடன் இருக்கிறாரா?
அப்போது முகிலன் எங்கே? அவர் உயிருடன் இருக்கிறாரா? தமிழக அரசே பதில் சொல் என அவர்கள் முழக்கமிட்டனர். இப்போராட்டதில் முகிலனின் மனைவி பூங்கொடியும் பங்கேற்றார்.
[/font][/size][/color]
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
ஸ்டாய்னிஸ் பந்துவீச்சைக் காலி செய்து ஆஸி.யை பிரமிக்கச் செய்த ரஷீத் கான்: ஆப்கானிஸ்தான் 207 ரன்களுக்கு மடிந்தது
பந்தை சிக்சருக்கு விரட்டும் ரஷீத் கான். | ராய்டர்ஸ்.
பிரிஸ்டலில் நடைபெறும் உலகக்கோப்பை 2019-ன் 4ம் ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட் செய்து 207 ரன்கள் என்ற மரியாதைக்குரிய ஸ்கோரை வலுவான ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக எடுத்தது.
பாகிஸ்தான், இலங்கை அணிகள் காட்டாத ஒரு அருமையான ஃபைட்டிங் ஸ்பிரிட்டை ஆப்கான் அணி இன்று காட்டியது.
குல்பதீன் நயீப் (31), நஜிபுல்லா ஸத்ரான் (51) ஆகியோர் 77 பந்துகளில் 83 ரன்களைச் சேர்த்த பிறகு இறங்கினார் உலகப்புகழ் பெற்ற லெக் ஸ்பின்னர் ரஷீத் கான்.
2 பந்துகளில் 1 ரன் எடுத்திருந்த போது 36வது ஓவரை ஸ்டாய்னிஸ் வீச வந்தார். அதுவரை ஸ்டாய்னிஸ் 6 ஓவர்கள் வீசி 1 மெய்டனுடன் 16 ரன்கள் 2 விக்கெட் என்று அசத்தியிருந்தார்.
சரி 7வது ஓவரை இவரிடமே கொடுப்போம் என்று ஆஸ்திரேலிய கேப்டன் ஏரோன் பிஞ்ச் கருதிக் கொடுக்க அது வேறு ஒன்றாக மாறி ஸ்டாய்னிசின் அனாலிசிஸையே காலி செய்யும் ஓவராக இருக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.
முதல் பந்தை ஸ்டாய்னிஸ் வைடாக வீச 1 ரன் கிடைத்தது. 2வது பந்து ஸ்டாய்னிஸ் வீச ஓடி வர ரஷீத் கான் அவரை எதிர்நோக்கி மேலேறி வந்தார், பந்து வாகாக மாட்ட மிகப்பிரமாதமாக பார்க்க ஒரு சேவாக் ஷாட் போல் லாங் ஆன் மேல் சிக்சருக்கு ஒரே தூக்குத் தூக்கினார், ஸ்டாய்னிஸ் லேசாக அதிர்ச்சியடைந்தார்.
பிறகு இதே ஓவரின் 4வது பந்தில் மீண்டும் எதிர்நோக்கி மேலேறி வந்து மிட்விக்கெட்டில் ஒரு நான்கு ரன் பவுண்டரி விளாசினார் ரஷீத் கான். அடுத்த பந்து ஷார்ட் பிட்ச் ஆக அதனை ஏதோ மிட் ஆஃபில் ஹூக் ஆடுவேன் என்பது போல் ஒரே சாத்து சாத்தி பவுண்டரிக்கு அனுப்பினார், ஸ்டாய்னிஸ் இப்போது லேசாகக் கலக்கமடைந்தார்.
கடுப்பான ஸ்டாய்னிஸ் அவர் வேகத்துக்கு ஷார்ட் பிட்ச் பந்தை வீச முடிவெடுத்திருக்கக் கூடாது, ஆனால் அந்தப் பந்து நன்றாகத்தான் பிட்ச் ஆகி எழும்பியது, ஆனால் சற்றும் தளராமல் அனைவரும் பிரமிப்படையும் விதமாக தலைக்கு வந்த பந்தை தலைப்பாகையோடு போகட்டும் என்று விடாமல் மட்டையை தூக்கி ஒரு ஹூக் ஷாட் ஆடினாரே பார்க்கலாம் ஸ்கொயர்லெக்கில் 7-8 வரிசைகளைத் தாண்டி போய் விழுந்தது சிக்ஸ். ஒரே ஓவைர்ல் 21 ரன்கள்.
6-16-2 என்று இருந்த ஸ்டாய்னிஸ் பந்து வீச்சு 7-37-2 ஆகி விட்டது. பிறகு மீண்டும் ஆடம் ஸாம்பா பந்தை மேலேறி வந்து நேராக ஒரு சிக்சர் தூக்கினார் ரஷீத், அடுத்த பந்தை கொஞ்சம் நிதானமாக சிங்கிளுக்குத் தட்டியிருக்கலாம் ஆனால் அவர் ஒரு பெரிய ஸ்வீப்புக்கு போய் எல்.பி.ஆனார். ரிவியூவும் வீணானது.
ரஷீத் கான் 11 பந்துகளில் 2 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 27 ரன்கள் எடுத்தார் ரஷீத் கான், ஸ்ட்ரைக் ரேட் 245.45. இந்த ஓவரை ஸ்டாய்னிஸ் மறக்க மாட்டார்.
பாகிஸ்தான், இலங்கை அணிகள் எந்த வித ஃபைட்டும் காட்டாமல் ஆடி சரணடைந்த நிலையில் ஆப்கன் அணி முதுகெலும்புடன் ஆடி 77/5 என்ற நிலையிலிருந்து 207 ரன்கள் எடுத்தது
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
சமூக வலைதளத்தில் 50 பெண்களை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் கொடூரன்
சமூக வலைத்தளம் மூலம் பழகி 50-க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர் கைது செய்யப்பட்ட சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கேரளாவின் கோட்டயம் மாவட்டம் எட்டுமானூர் அருகே உள்ள அரீபறம்பு பகுதியை சேர்ந்தவர் பிரதீஷ் குமார் (வயது 25). இவர் மீது அங்குள்ள போலீஸ் நிலையத்தில் பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரதீஷ் குமாரை கைது செய்தனர்.
பின்னர் அவரிடம் விசாரணை நடத்தியபோது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது, பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் இயங்கி வரும் குடும்பத்தலைவிகளை குறிவைத்து பிரதீஷ் குமார் பழகுவார். அவர்களிடம் அழகாக பேசி அவர்களின் செல்போன் எண்களை வாங்கி விடுவார்.
பின்னர் அந்த பெண்களிடம் தொடர்ந்து பேசி அவர்களின் குடும்ப பிரச்சினைகளை தெரிந்து கொள்வார். அடுத்ததாக அந்த பெண்களின் கணவர்கள் மீது மோசமான பிம்பத்தை ஏற்படுத்துவார். இதற்காக சமூக வலைத்தளங்களில் பெண்களின் பெயரில் போலி கணக்குகளை தொடங்கி குறிப்பிட்ட அந்த குடும்பத்தலைவிகளின் கணவர்களை மடக்குவார்.
அவர்களிடம் பாலியல் ரீதியாக பேசி பல விவரங்களை பெற்றுவிடுவார். பின்னர் இந்த உரையாடலை புகைப்படமாக (ஸ்கிரீன்ஷாட்) எடுத்து அவர்களின் மனைவியருக்கு அனுப்பி விடுவார். இதைப் பார்த்து அதிர்ச்சியும், வேதனையும் அடையும் அந்த பெண்களிடம் ஆறுதலாக பேசுவது போல நடிப்பார்.
இவ்வாறு அவர்களிடம் நெருக்கத்தை ஏற்படுத்திக்கொண்டு செல்போனில் ‘வீடியோ கால்’ மூலம் பேச அந்த பெண்களை வற்புறுத்துவார். இதை ஏற்று அந்த பெண்களும் பேசுவார்கள். அப்போது அதை பதிவு செய்யும் பிரதீஷ் குமார், அந்த பெண்களின் புகைப்படத்தை ஆபாச படங்களுடன் மார்பிங் செய்து உண்மையான படம்போல மாற்றிவிடுவார்.
பின்னர் அந்த ஆபாச படங்களை அந்த பெண்களிடமே காட்டி, தனது ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்துவார். அவ்வாறு இணங்கவில்லை என்றால் அந்த புகைப்படங்களை இணைதளத்தில் வெளியிடுவேன் எனவும், அவர் களின் கணவருக்கு அனுப்பி வைப்பேன் என்றும் மிரட்டுவார்.
இதனால் அதிர்ச்சியும், அச்சமும் அடையும் பெண்கள் பிரதீஷ் குமாரின் வற்புறுத்தலுக்கு இணங்கி விடுகின்றனர். இவ்வாறு 50-க்கும் மேற்பட்ட பெண்களின் கற்பை பிரதீஷ் குமார் சூறையாடி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அவரிடம் ஏமாந்து போன பெண்கள் இந்த சம்பவம் வெளியில் தெரிந்தால், தங்கள் வாழ்க்கை பாழாகிவிடும் என்ற அச்சத்தில் மவுனமாக இருந்து வருகின்றனர்.
அவர்களில் ஒருவர் தைரியமாக புகார் கொடுத்ததால் தற்போது போலீசார் பிரதீஷ் குமாரை கைது செய்துள்ளனர். அவரது செல்போன் மற்றும் லேப்டாப்பை ஆய்வு செய்த போது அவற்றில் ஏராளமான பெண்களின் ஆபாச படங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டன.
இதைத்தொடர்ந்து அவற்றை பறிமுதல் செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சமூக வலைத்தளம் மூலம் நூதன முறையில் பழகி 50-க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் கேரளாவில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
ஆக்சிஜன் சிலிண்டரோடு ஐஏஎஸ் தேர்வெழுத வந்த இளம்பெண்
கேரள மாநிலத்தில் எலும்பு நோயால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர், ஐஏஎஸ் ஆகும் தனது லட்சியத்தை அடைய ஆக்ஸிஜன் சிலிண்டருடன் வந்து தேர்வு எழுதினார்.
கேரள மாநிலத்தின் கோட்டயம் பகுதியைச் சேர்ந்தவர் லதீஷா அன்சாரி(24). இவர் பிறக்கும்போதே மிகவும் அரிதான எலும்பு நோயினால் பாதிக்கப்பட்டவராவார்.
இவருக்கு ஷெஹின் என்பவருடன் திருமணம் ஆனது. இருவரும் ஐஏஎஸ் அதிகாரியாக வேண்டும் என்ற லட்சியத்துடன் இருந்துள்ளனர். ஷெஹினுக்கு இது மூன்றாவது தேர்வு. லதீஷாவுக்கு இது முதல்தேர்வு.
சில தினங்களுக்கு முன் லதீஷாவின் நிலைமை குறித்து பல்வேறு பத்திரிக்கைகளில் தகவல்கள் வலம் வந்தன. லதீஷா, சில காலங்களாக சரியான சுவாசமின்றி சிரமப்பட்டு வந்தார். அவருக்கு தடையற்ற ஆக்ஸிஜன் சப்ளே தேவைப்பட்டது.
அவரால் ஆக்ஸிஜன் சப்ளே இன்றி சாப்பிடக்கூட முடியாத நிலையும் உருவானது. இதையடுத்து கோட்டயம் கலெக்டரிடம் இது தொடர்பாக லதீஷாவின் தந்தை மனு அளித்திருந்தார்.
இதில் லதீஷா ஐஏஎஸ் தேர்வு எழுத உள்ளதாகவும், ஆக்ஸிஜன் சிலிண்டர் தேவைப்படுவதால் அதனை வழங்குமாறும் கோரிக்கை விடுத்திருந்தார்.
இதையடுத்து அரசு சார்பில் அவருக்கான உதவி, ஐஏஎஸ் தேர்வு எழுத தேர்வறைக்கு சென்றபோது வழங்கப்பட்டது. லதீஷா திருவனந்தபுரத்தில் உள்ள பள்ளியில் நேற்று தேர்வு எழுதினார். அங்கு வந்த அரசு அதிகாரிகள், அவரது வீல் சேருக்கு பின்புறம் ஆக்ஸிஜன் சிலிண்டரை பொருத்தினர்.
இது குறித்து லதீஷா கூறுகையில், ‘இப்போது நான் நலமாக உணர்கிறேன். ஓராண்டாக மிகுந்த சிரமத்திற்கு உள்ளானேன். எனது லட்சியத்தை நிச்சயம் எட்டுவேன். ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி’ என புன்சிரிப்புடன் கூறினார்.
மேலும் லதீஷா தனது செல்போனில் இருந்த அவரது படைப்பில் உருவாக்கப்பட்ட கண்ணாடி ஓவியங்கள், கீபோர்ட் வாசித்த வீடியோக்கள் என காண்பித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியும் இருக்கிறார்.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
சென்னை மெரினாவில் பைக் சாகசம் செய்த இளைஞர் உயிரிழப்பு!
ஆபத்தான முறையில் அதிவேகமாக பைக்கை ஓட்டுவது மற்றும் வீலிங் செய்வது என ஏராளமான இளைஞர்கள் ரேசில் ஈடுபட்டனர்.
சென்னை மெரினா கடற்கரையில் பைக் ரேசில் ஈடுபடுவதற்காக ஏராளமான இளைஞர்க்ள நள்ளிரவில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டதையும் மீறி இளைஞர்கள் பைக் ரேசில் ஈடுபட்டனர்.
மெரினா கடற்கரையில் இரவில் இளைஞர்கள் பைக் ரேசில் ஈடுபட உள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று இரவு முதலே ஏராளமான போலீசார் மெரினாவில் குவிக்கப்பட்டனர். சாலையிலன் நடுவே தடுப்புகள் அமைத்து போலீசார் வாகனசோதனையில் ஈடுபட்டனர்
அப்போது அங்கு வந்த ஏராளமான இளைஞர்களை தடுத்து நிறுத்திய போலீசார் அவர்களை திருப்பி அனுப்பினர். ஆனாலும், சில இளைஞர்கள் போலீஸ் கெடுபிடியையும் மீறி பைக் ரேசில் ஈடுபட்டனர்
இளைஞர்கள் பைக் ரேசில் ஈடுபட்டதால் காமராஜர் சாலை, மெரினா கடற்கரை சர்வீஸ் சாலை போன்ற பகுதிகள் பரபரப்பாக காணப்பட்டன. ஆபத்தான முறையில் அதிவேகமாக பைக்கை ஓட்டுவது மற்றும் வீலிங் செய்வது என ஏராளமான இளைஞர்கள் ரேசில் ஈடுபட்டனர்.
அப்போது, வேகமாக சென்ற பைக் ஒன்று விபத்துக்குள்ளானது. இதில், பைக்கின் பின்னால் அமர்ந்திருந்த இளைஞர் உயிரிழந்தார். பைக் ஓட்டி வந்த இளைஞர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆபத்தான முறையில் பைக்ரேசில் ஈடுபடுவதால் பொதுமக்களுக்கு ஆபத்து நேரிடும் என்பதால் போலீசார் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளதோடு, தீவிர கண்காணிப்பிலும் ஈடுபட்டாலும், பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக இது போன்ற ரேஸ்கள் நடைபெறுகின்றன.
கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் ஸ்மார்மிங் ஆபரேசன் என்ற பெயரில் தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தீவிர கண்காணிப்பை மேற்கொண்டனர். அப்போது உரிய ஆவணங்கள் இல்லாமல் வரும் இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
[/url]
[url=https://want_to_live_a_rich_life_start_earning_with_olymp_trade/]
மேலும் விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் அபாரதம் விதிக்கப்பட்டதோடு கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ப்பட்டன. இதனால் செயின் பறிப்பு, பைக் ரேசிங் போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருந்தன.
மேலும், ஸ்டார்மிங் ஆபரேசன் வாகன சோதனையால் இரண்டாயிரத்து 750 ரவுகள் கைது செய்யப்பட்டனர். இதே போல் கடுமையான நடவடிக்கைகளை போலீசார் மேற்கொள்ள வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
அமெரிக்க விசாவுக்கு சமூக வலைதள விவரங்கள் கட்டாயம்
புதுடில்லி: அமெரிக்கா விசா பெற வேண்டும் என்றால், சமூக வலைதள கணக்கு விவரங்களை அளிக்க வேண்டும் என்ற புதிய விதிமுறையை அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது. சமூக வலைதளங்களில், விசா கேட்பவர்களின் கடந்த 5 ஆண்டுகால செயல்பாடுகளை அமெரிக்கா ஆய்வு செய்ய உள்ளது.
இது குறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் விதிகளில் கூறப்பட்டு உள்ளதாவது: அமெரிக்க விசா பெற விரும்புபவர்கள், கடந்த 5 ஆண்டுகளாக அவர்கள் பயன்படுத்தி வரும், பேஸ்புக், யுடியூப், இன்ஸ்டாகிராம், லிங்கெடின், உள்ளிட்ட சமூக வலைதள கணக்குகளின் விவரங்களை அளிக்க வேண்டும். சமூக வலைதளங்களில், அந்த நபரின் செயல்பாடுகளை ஆய்வு செய்வதற்கு இந்த நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் அவர்கள் பயன்படுத்தும் இமெயில் முகவரி, மொபைல் எண்ணையும் அளிக்க வேண்டும் எனக்கூறப்பட்டுள்ளது.
இதனால், 1.5 கோடி வெளிநாட்டவர்கள் பாதிக்கப்படுவார்கள் என அமெரிக்க அதிகாரிகள் கணக்கிட்டுள்ளனர். இருப்பினும், தூதரக மற்றும் அலுவலக ரீதியில் விசா கேட்பவர்களுக்கு இந்த விதிகளில் இருந்து விலக்கு அளிக்கப்படும். வேலைபார்க்க அல்லது படிக்க வருபவர்கள் கட்டாயம், சமூக வலைதள விவரங்களை அளிக்க வேண்டும்.
அதிகாரிகள் கூறுகையில், அமெரிக்க மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த விதிமுறைகள் கொண்டு வரப்படுகிறது. தங்கள் சமூக வலைதள பயன்பாடு தொடர்பாக, தவறான தகவல்களை அளிப்பவர்கள், கடும் பாதிப்பை சந்திக்க நேரிடும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
மீண்டும் 'சோக்கர்ஸ்' ஆன தென் ஆப்பிரிக்கா: வங்கதேசம் வரலாற்று வெற்றி: டூப்பிளசியின் திமிர்பேச்சுக்கு சரியான பதிலடி
தெ.ஆப்பிரிக்க வீரர் டீகாக்கை ரன் அவுட் செய்த மகிழ்ச்சியில் வங்கதேச வீரர்கள் : படம் உதவி ஐசிசி
சகிப் அல் ஹசன், முஷ்பிகுர் ரஹிம் ஆகியோரின் அரைசதம், மகமதுல்லாவின் அதிரடி ஆட்டம், கட்டுக்கோப்பான பந்துவீச்சு ஆகியவற்றால், லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று நடந்த உலகக்கோப்பைப் போட்டியின் லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணியை 21 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து வரலாற்று வெற்றிபெற்றது வங்கதேசம் அணி.
முதலில் பேட் செய்த வங்கதேசம் அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 330 ரன்கள் குவித்தது. 331 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 309 ரன்கள் மட்டுமே சேர்த்து 21 ரன்களில் தோல்விஅடைந்தது
அதிவேக 250 விக்கெட்
ஆட்டநாயகனாக அனுபவ வீரர் சஹிப் அல்ஹசன் தேர்வு செய்யப்பட்டார். அதுமட்டுமல்லாமல் ஒருநாள் போட்டிகளில் 199 போட்டிகளில் வேகமாக 250 விக்கெட்டுகள், 5 ஆயிரம் ரன்களை எட்டிய 5-வது வீரர் எனும் பெருமையை சஹிப் அல்ஹசன் பெற்றார். இதற்கு முன் அப்துல் ரசாக்(பாக்.258), அப்ரிடி(273வி), காலிஸ்(296வி), ஜெயசூர்யா(303வி) ஆகியோர் விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்கள்.
சஹிப் அல்ஹசன் : படம் உதவி ஐசிசி
சோக்கர்ஸ் எனும் தீரா பழி
மிகமுக்கியமான தருணம், போட்டியில் கடைசி நேரத்தில் நெருக்கடியையும், அழுத்தத்தையும் சமாளிக்க முடியாமல் தோல்வி அடைபவர்களை ஆங்கிலத்தில் “சோக்கர்ஸ்” என்று அழைப்பார்கள். இந்த அவப்பெயர் தென் ஆப்பிரிக்காவுக்கு நீண்ட ஆண்டுகளாக இருந்து வருகிறது.
வழக்கமாக அரையிறுதி, காலிறுதியில்தான் தென் ஆப்பிரிக்கா தாங்கள் சோக்கர்ஸ் என இயல்பாகவே வெளிப்படுத்துவார்கள், ஆனால், என்னவோ தெரியவில்லை, இந்த உலகக் கோப்பைப் போட்டியில் தொடக்கத்திலேயே தாங்கள் சோக்கர்ஸ் என்பதை காட்டிவிட்டார்கள்.
தென் ஆப்பிரிக்க அணி உலகக்கோப்பையில் சேஸிங் செய்து 14 முறை 300 ரன்களுக்கு மேல் அடித்தும்அதில்ஒருமுறை மட்டுமே வென்றுள்ளது.
இந்த தோல்வி மூலம் தென் ஆப்பிரிக்காவின் மீதான வெற்றியின் அழுத்தம் அதிகரிக்கத் தொடங்க இருக்கிறது. இருதோல்வியின் பாதிப்பு லீக்சுற்றின் முடிவில் தென் ஆப்பிரிக்காவுக்கு தெரியவரும். இந்த தோல்வியால் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றிக்கட்டாயத்துக்கு தென் ஆப்பிரிக்கா தள்ளப்பட்டுள்ளது.
படம் உதவி ஐசிசி
வரலாற்று வெற்றி
வங்கதேசத்துக்கு இது வரலாற்று வெற்றிதான். ஏனென்றால், உலகக் கோப்பைப் போட்டியில் இதற்கு முன் வங்கதேசம் அணி முதல் போட்டியில் வென்றது இல்லை, அதிலும் 330 ரன்கள் எனும் மிகப்பெரிய ஸ்கோரை எட்டியதில்லை, குறிப்பாக வலிமையான தென் ஆப்பிரிக்க அணியை முதல் ஆட்டத்தில் வீழ்த்தியதும் இல்லை.
இவை மூன்றையும் ஒரே போட்டியில் செய்து வங்கதேசம் மைல்கல் வெற்றி பெற்றுள்ளது. உலகக் கோப்பைப் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை 2-வதுமுறையாக வங்கதேசம் வீழ்த்தியுள்ளது.
12வது வெற்றி
உலகக் கோப்பைப் போட்டியில் வங்கதேசம் பெறும் 12-வது வெற்றி இதுவாகும். இதற்குமுன் இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, தென் ஆப்பிரிக்கா அணிகளை 2 முறையும் இந்தியா, பாகிஸ்தான், நெதர்லாந்து, ஆப்கானிஸ்தான், அயர்லாந்து பெர்முடாவை தலா ஒருமுறையும் வீழ்த்தியுள்ளது வங்கேதசம்
எச்சரிக்கை செய்தி
உலகக் கோப்பையில் தங்களை குறைத்து மதிப்பிட்ட அனைத்து அணிகளுக்கும் இந்த வெற்றி மூலம் எச்சரிக்கையை செய்தியை வங்கதேசம் விடுத்துள்ளது. எப்படி வேண்டுமானாலும், தங்களை வீழ்த்திவிடலாம் என்று நினைத்துவராதீர்கள், திட்டமிடலுடன் வாருங்கள் என்று தங்களின் வலிமையை வெளிப்படுத்தியுள்ளது வங்கதேசம்.
கடந்த காலங்களில்.....
கடந்த காலங்களில் இரு அணிகளுமே ஏதாவது ஒரு எல்லையின் ஓரத்துக்குச் சென்றுதான் தோற்றுள்ளார்கள். கடந்த 2003 உலகக்கோப்பைப் போட்டியில் ப்ளோபன்டைன் நகரில் நடந்த ஆட்டத்தில் வங்கதேசத்தை 10 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா வென்றது.
2007-ம் ஆண்டு உலகக்கோப்பைப் போட்டியில் புராவிடன்ஸ் நகரில் நடந்த ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை 67ரன்களில் சூப்பர்8 சுற்றில் வங்கதேசம் தோற்கடித்தது. 2011-ம் ஆண்டு உலகக்கோப்பையில் மிர்பூர்ஆட்டத்தில் வங்கதேசத்தை சொந்தமண்ணில் வைத்து 78 ரன்களுக்கு ஆல்அவுட் ஆக்கி 208 ரன்களில் தென் ஆப்பிரிக்கா வென்றது.
இப்போது 21 ரன்களில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியுள்ளது வங்கதேசம்.
படம் உதவி ஐசிசி
தோல்விக்கு காரணம்
கேப்டன் டூப்பிளசியின் திறனற்ற கேப்டன்ஷியும், களத்தில் மதிநுட்பம் இல்லாத செயல்பாடுகள், திமிர்தனமான பேச்சுதான் தென் ஆப்பிரிக்க அணியின் தோல்விக்கு முக்கியக் காரணம்.
டாஸ்வென்றவுடன் ஆடுகளத்தின் தன்மையை அறியாமல் வங்கதேசத்தை அடித்துநொறுக்கத்தான் கூடுதலாக வேகப்பந்துவீச்சாளர்களை கொண்டுவந்துள்ளோம் என்று டூப்பிளசி ஏளனமாகவும், திமிராகவும் பேசினார். ஆனால், வங்கதேசம் அணியினர் தென் ஆப்பிரிக்க அணியை அடித்து துவைத்துவிட்டனர்.
ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்று தவறாகக் கணித்துவி்ட்டார் டூப்பிளசிஸ். தொடக்கத்தில் வேகப்பந்துவீச்சு சாதகமாக இருந்தாலும், அதன்பின் பேட்ஸ்மேன்களை நோக்கி பந்து மெதுவாக வரத் தொடங்கிவி்ட்டது. ஆடுகளத்தை கணிப்பதில் டூப்பிளசிஸ் தவறு செய்துவி்ட்டார்.
தோனியிடம் இருந்தும் கற்கவில்லையா
உலகின் மிகச்சிறந்த கேப்டன் என்று அழைக்கப்படும் மகேந்திர சிங் தோனியுடன் ஐபிஎல் போட்டியில் விளையாடியும் டூப்பிளசியால் கேப்டன்ஷிப் குறித்து தெரிந்து கொள்ளமுடியவில்லை என்பதை என்ன சொல்வது. அதிலும் ஐபிஎல் போட்டியில் இம்ரான் தாஹீரை மிகச்சிறப்பாக பயன்படுத்தினார் தோனி. ஆனால் தோனி பயன்படுத்திய அளவுக்குகூட இம்ரான் தாஹிரை டூப்பிளசிஸ் பயன்படுத்தவில்லை.
இந்தப் போட்டியில் இம்ரான் தாஹிரை பவர்ப்ளேயில் பந்துவீச வைத்திருக்கலாம், அல்லது10 ஓவர்கள் முடிந்தபின் பயன்படுத்தி இருக்கலாம். 18 ஓவர்களுக்கு மேல் பயன்படுத்தும்போது, பேட்ஸ்மேன்கள் நன்கு செட்டில்ஆகிவிட்டதால் விக்கெட் வீழ்த்தமுடியாமல் போய்விட்டது.
அதுமட்டுமல்லாமல் டுமினி நன்றாக சுழற்பந்துவீசக்கூடியவர், இக்கட்டான நேரத்தில் விக்கெட் வீழ்த்தக்கூடிய திறமை உடையவர். தனது முதல் ஓவரில் 10 ரன்கள் வழங்கினா் என்பதற்காக ஒரு ஓவரோடு டூப்பிளசி நிறுத்தியதை என்ன சொல்ல.
பந்துவீச்சில் நேற்று லுங்கி இங்கிடி 4 ஓவர்கள் முடிவில் காயம் அடைந்தது தென் ஆப்பிரிக்காவுக்கு பெரும் பின்னடைவாகும். அடுத்து ஒருவாரத்துக்கு விளையாடமுடியாத வகையில் காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டுள்ளது தென் ஆப்பிரிக்காவுக்குஅதிர்ச்சியான செய்தி.
ஐபிஎல் போட்டியில் கட்டுக்கோப்புடன் பந்தவீசிய ரபடா நேற்று யார்கர்கள் வீச முயன்றும் லைன்-லென்த் கிடைக்காமல் சிரமப்பட்டார். ரன்களையும் அதிகமாக வாரி வழங்கினார்.
இருபேட்ஸ்மேன்கள் பாட்னர்ஷிப் அமைக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டியது கேப்டனின் பொறுப்பு. ஆனால், வங்கதேசத்தின் சகிப் அல்ஹசனையும், முஷ்பிகுர் ரஹிமை நிற்க அனுமதி்த்துவி்ட்டார் டூப்பிளசிஸ்.
தென் ஆப்பிரிக்காவில் டுமினிக்கு அடுத்து களமிறங்கிய பேட்ஸ்மேன்கள் அதாவது கடைசிவரிசை பேட்ஸ்மேன்கள் நிலைக்காதது இலக்கை அடைய முடியாதமைக்கு காரணம். தென் ஆப்பிரிக்க அணியில் எந்த இரு வீரர்களும்100 ரன்களுக்கு மேல் நல்லவலுவான கூட்டணியை அமைக்கவில்லை என்பதை கவனிக்கத்தக்கது. இதுபோன்ற பெரிய இலக்குகளை நோக்கி செல்லும்போது பெரியஅளவு பாட்னர்ஷிப் என்பது முக்கியம் அதை தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்கள் தவறவிட்டுவி்ட்டார்கள்.
நல்ல தொடக்கம், பாட்னர்ஷிப்
வங்கதேசம் அணியைப் பொருத்தவரை தொடக்க வீரர்கள் தமிம் இக்பால், சவுமியா சர்க்கார் பொறுமையாக ஆடி நல்ல அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தார்கள். நடுவரிசையில் சஹிப் அல் ஹசன், முஷ்பிகுர் ரஹ்மான் இருவரும் சேர்ந்து 142 ரன்கள் சேர்த்ததுதான் ஆட்டத்தின் திருப்பமுனையாகும். இங்கிலாந்து கவுண்டி அணியில் சஹிப் அல் ஹசன் விளையாடி வந்த அனுபவம் அருமையாக நேற்று கைகொடுத்தது.
கடைசி ேநரத்தில் மொசாடக் ஹூசைன், மகமதுல்லா இருவரும் சேர்ந்து கடைசி 8ஓவர்களில் 80 ரன்கள் சேர்த்ததுதான் ஸ்கோர் உயர்வுக்கு காரணமாகும். ெதன் ஆப்பிரிக்க வீரர்களின் பந்துவீச்சை இருவரும் கடைசிநேரத்தில் துவம்சம் செய்துவிட்டனர்.
சஹிப் அல் ஹசன் அரைசதம் அடித்த காட்சி : படம் உதவி ஐசிசி
பந்துவீச்சில் வங்கதேச வீரர்கள் யாரும் 135கி.மீ வேகத்துக்கு மேல் யாரும்வீசமாட்டார்கள். ஆனாலும், தங்களின் துல்லியமான பந்துவீச்சால் தென் ஆப்பிரிக்காவுக்கு நெருக்கடி கொடுத்ததை பாராட்ட வேண்டும். குறிப்பாக சஹிப் அல் ஹசன், மெகதி ஹசன் ஆகியோரின் சுழற்பந்துவீச்சு மிகப்பெரிய பலம்.
அதிரடி சர்க்கார்
வங்கதேசம் அணிக்கு சவுமியா சர்க்கார், தமிம் இக்பால் நல்ல தொடக்கத்தை அளித்தனர். இங்கிடி, ரபாடாவின் ஆக்ரோஷமான வேகம், பவுன்ஸர்களை அனாயசமாக சமாளித்து பவுண்டரிகள் அடித்து ஸ்கோரை உயர்த்தினார்கள். அதிலும் ஷாட்பிட்ச் பவுன்ஸர்களை இருவரும் துல்லியமாக பவுண்டரிகளாக விளாசி ரன்வேகத்தை உயர்த்தினார்கள். முதல் விக்கெட்டுக்கு 60 ரன்கள் சேர்த்தநிலையில், இக்பால் 16 ரன்னில் வெளியேறினார்.
சூப்பர் பாட்னர்ஷிப்
அடுத்துவந்த சஹிப் அல் ஹசன், சவுமியாவுடன் சேர்ந்தார். சவுமியா நிதானமாக பேட் செய்த நிலையில் அடுத்து சிறிதுநேரத்தில் 30 பந்துகளில் 42ரன்கள் சேர்த்து மோரிஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 3-வது விக்கெட்டுக்கு சஹிப் அல்ஹசன், முஷ்பிகுர் ரஹ்மான் இருவரும் அமைத்த பாட்னர்ஷிப் அணிக்கு திருப்புமுனையாக அமைந்து. நிதானமாக விளையாடி ரன்களைச் சேர்த்தனர். இருவரையும் பிரிக்க டூப்பிளசிஸ் முயற்சித்தும் பயனில்லை. சஹிப் 54 பந்துகளிலும், ரஹிம் 52 பந்துகளிலும் அரைசதம் கடந்தனர். சஹிப் அல்ஹசனஅ 75 ரன்கள் சேர்த்த நிலையில் இம்ரான் தாஹிப்பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதில் 8 பவுண்டரி, ஒரு சிக்ஸர் அடங்கும்.
தெ.ஆப்பிரிக்க வீரர் இம்ரான் தாஹிர் விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்த காட்சி : படம் உதவி ஐசிசி
அடுத்துவந்த மிதுன் 21 ரன்களிலும், ரஹிம் 78 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். மகமதுல்லா, மொசாடக் ஹூசைன் இருவரும் கடைசிநேரத்தில் அதிரடியாக ரன்களைக் குவித்தனர். கடைசி 10 ஓவர்களில் மட்டும் வங்கதேசம் அணி 90 ரன்களுக்குமேல் குவித்தது. மொசாடக் ஹூசைன் 26 ரன்களில் ஆட்டமிழந்தார். மகமதுல்லா 46ரன்னிலும், மெகதிஹசன் 5 ரன்னிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
தென் ஆப்பிரிக்கத் தரப்பில் பெலுக்வேயோ, இம்ரான் தாஹிர், மோரிஸ் தலா 2 விக்கெட்டுகளைவீழ்த்தினார்கள்.
வீண் ரன்அவுட்
331 ரன்கள் எனும் இலக்குடன் தென் ஆப்பிரிக் அணி களமிறங்கியது. மார்க்ரம், டிகாக் நல்ல தொடக்கம் அளித்தார்கள். அதிரடியாக ஆடிய டீகாக் 23ரன்னில் வீணாக ரன்அவுட் செய்யப்பட்டார். பின்னர் மார்க்ரம், டூப்பிளசிஸ் இணைந்து ஸ்கோரை உயர்த்தினர். மார்்க்ரம் 45ரன்கள் சேர்த்திருந்தபோது, ஷகிப்பந்தவீச்சில் போல்டாகி வெளிேயறினார்.
டீகாக் ரன் அவுட் ஆகிய காட்சி
கேப்டன் டூப்பிளசிஸ் அரைசதம் அடித்து 62ரன்னில் மெஹதி ஹசன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.அதன்பின் டேவிட் மில்லர், வேண்டர் டூசைன் இருவரும் நிதானமாக பேட் செய்து ஸ்கோரை உயர்த்தினர். 38 ரன்களில் மில்லரை ஆட்டமிழக்கச்செய்தார் முஸ்தபிசுர், சைபுதீன் பந்துவீச்சில் 41 ரன்னில் வேண்டர் வெளியேறினார்.
40-வது ஓவரில் தென் ஆப்பிரிக்கா 5 விக்கெட் இழப்புக்கு 228 ரன்கள் என்றகணக்கில் தடுமாறியது. பெலுக்வயோ 8, மோரிஸ் 10 ரன்களில் ஏமாற்றம் அளிக்க, நம்பிக்கை தந்த டுமினியும் 45 ரன்களில் நடையை கட்டினார். கடைசியில் ரபாடா 13 ரன்னிலும், தாஹிர் 10ரன்னிலும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 309ரன்கள் சேர்்த்து தென் ஆப்பிரிக்கா தோல்வி அடைந்தது.
வங்கதேசம் தரப்பில் முஸ்தபிசுர் ரஹ்மான் 3 விக்கெட்டுகளையும்,சைபுதீன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
சேலம் 8 வழிச்சாலை மீதான தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
டெல்லி: எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுப்பு. எட்டு வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த உயர்நீதிமன்றம் விதித்த தடை தொடரும் என நீதிபதிகள் அமர்வு உத்தரவு
8 வழிச்சாலை மீதான தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
ஹைலைட்ஸ்
- சேலம் 8 வழிச்சாலை வழக்கில் உயர்நீதிமன்றத்தின் தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுப்பு.
- நீதிபதி இந்து மல்கோத்ரா கோடைக்கால சிறப்பு அமர்வு மேல்முறையீட்டு வழக்கில் உத்தரவு
சேலம் - சென்னை எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது.
ரூ. 10 ஆயிரம் கோடி மதிப்பீட்டில், மத்திய அரசின் பாரத் மாலா திட்டத்தின் கீழ் சென்னை சேலம் இடையே 8 வழிச்சாலைத் திட்டம் அமைக்க ட்முடிவு செய்யப்பட்டது. இதற்காக சேலம், தருமபுரி, திருவண்ணாமலை, வேலூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் 1900 ஹெக்டேர் பரப்பளவு நிலத்தை கையகப்படுத்த தமிழக அரசு அறிவிப்பாணை வெளியிட்டது.
சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி நிலத்தின் உரிமையாளர்கள், விவசாயிகள் மற்றும் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
இந்த வழக்கில் தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்றம், சேலம் - சென்னை எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு நிலத்தை கையகப்படுத்த தடை விதித்தது. மேலும் கையகப்படுத்தப்பட்ட நிலங்களை 8 வாரங்களுக்குள் உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் உத்தரவில் குறிப்பிட்டது
சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த மனு நீதிபதி இந்து மல்கோத்ரா தலைமையிலான கோடைக்கால சிறப்பு அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், சேலம் - சென்னை எட்டு வழிச்சாலை விவகாரத்தில் உயர்நீதிமன்றம் விதித்த தடையை நீக்க மறுத்துவிட்டனர். மேலும், எதிர்மனுதாரர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கு ஜூலை முதல் வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
இந்தி எதிர்ப்பு: ஒன்று சேர்ந்த எதிர்க்கட்சிகள்
புதுடில்லி : மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய கல்வி கொள்கை வரைவிற்கு தமிழகத்தை தொடர்ந்து கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களிலும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தி பேசாத மாநிலங்களில் 3வது மொழியாக இந்தி படிக்க வேண்டும் என தேசிய கல்வி கொள்கை வரைவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இது இந்தி பேசாத மாநிலங்களில் இந்தியை திணிக்கும் முயற்சி என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி உள்ளன. "இது இந்தியை திணிக்கும் முயற்சி அல்ல; மனிதவள மேம்பாட்டு துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள வரைவு தொடர்பாக மாநில அரசுகளிடம் கருத்து கேட்கப்பட்டு, ஒப்புதல் பெற்ற பிறகே அமல்படுத்தப்படும்" என மத்திய அரசு சார்பில் பல்வேறு துறைகளை சார்ந்த அமைச்சர்களும் விளக்கம் அளித்துள்ளனர். தொடர்ந்து இந்தி கட்டாயமாக்கபடாது என தேசிய கல்வி கொள்கை வரைவில் திருத்தமும் கொண்டு வரப்பட்டுள்ளது.
இருப்பினும் இதனை ஏற்காத பல்வேறு மாநில எதிர்க்கட்சிகள் தங்களின் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன. கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமைய்யா, புதிய தேசிய கல்வி கொள்கை எங்களின் உணர்வுகளுக்கு எதிராகவும், இந்தியை திணிப்பதாகவும் உள்ளன. இந்தியை திணிப்பதற்கு பதில் பிராந்திய அடையாளத்தை அங்கீகரிப்பதில் கவனம் செலுத்தலாம். நாங்கள் அனைவரும் கன்னடர்களாகவே இந்தியாவில் இருப்போம் என டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார்.
மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா தலைவர் ராஜ் தாக்ரேவும் மத்திய அரசிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். கேரளாவிலும் புதிய தேசிய கல்வி கொள்கைக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. டுவிட்டரில் #StopHindiImposition, #TNAgainstHindiImposition ஆகிய ஹேஷ்டேக்கள் உருவாக்கப்பட்டு, டிரெண்டிங் ஆக்கப்பட்டு வருகிறது.
•
|