விக்ரம் தனக்கு திருமணமே ஆகவில்லை என்ற விரக்தியோடு பைக் எடுத்து ஒட்டி சென்றான்.விக்ரம் 29 வயது 90S கிட் அவன் நண்பர்கள் நிறைய பேருக்கு திருமணம் முடிந்து இருந்தது. இவனை விட சுமார் பசங்க எல்லாம் சூப்பர் பொண்ணுங்களை காதலித்து மணந்து கொண்டனர்.இவன் பெண்களை பார்த்து பேசவே கூச்சப்படும் மிகவும் அப்பாவி இளைஞன்.வீட்டில் பார்த்த பெண்களும் அவனுக்கு பிடிக்கவில்லை, அவன் கவன சிதறலோடு வாகனம் ஓட்ட வேகமாக வந்த கார் சடார் என்று அவன் பைக்கில் மோத வேகமாய் தூக்கி சாலை அருகே இருந்த புளிய மரத்தில் தூக்கி வீசப்பட்டான்விக்ரமுக்கு நடப்பது ஒன்றும் புரியவில்லை இருந்தாலும் அவன் விநோதமாகவே உணர்ந்தான் அவன் தலையில் ரத்தம் வழிய அவன் எழுந்தான் நடந்தான் சிறிது தூரம் நடந்து ஒருவரை சத்தமாக அழைக்க அவர் இவன் கூப்பிடுவது கேட்கவில்லை அருகே இருந்த அவன் போனை எடுக்க பார்த்தான் எடுக்க முடியவில்லை அப்போது தான் பார்த்தான் அவன் உடல் மரத்தின் அருகே இருப்பதாய், தான் இறந்து விட்டதை அப்போது தான் உணர்ந்து கதறி அழுதான் அவன்.விக்ரமை முதலில் இரண்டு எம காதர் பிடித்து கொண்டு போய் எமலோகத்தில் விட அவனுடைய எல்லா புண்ணிய பாவத்தையும் பார்த்தனர்.
விக்ரமை மிகவும் பாவமாக பார்த்த எமலோகத்தினர்.இந்த அப்பிராணி 90ஸ் கிட்ஸ் கொண்டு போய் பத்திரமாக விடுங்க பா
"விக்ரம் உன்னுடைய கதையினை நாங்கள் அறிவோம் நீ இழந்ததை இந்திரலோகத்தில் அடைவாய் என்றனர் "
விக்ரமை இந்திரலோக வாயிலில் இறக்கி விட்டனர் விக்ரம் லோகத்தின் வாயிலில் இறங்கி நடக்க உள்ளே மிக பெரிய ஆழி இருந்தது அவனுக்கு மிகவும் பயம் கூடியது.
பெரிய குதிரை ஒன்று பறந்து வந்தது,அது வெண்ணிறத்தில் பார்க்கவே மிகவும் அருமையாக இருந்தது.. விக்ரம் அருகே இருந்த கடலை பார்க்க வெள்ளை நிற ஒளி வேகமாக வெளிய வர அதிர்ச்சியோடு பார்த்தான். பால் வெண்மை நிறத்தில் ஒரு அழகிய பெண் வந்து இறங்கினால்.விக்ரமை அப்படியே அவள் கையை புடித்து தூக்கி அருகே இருந்த மலை பகுதிக்கு கூட்டி சென்றால்,
"விக்ரம் நீ பெண்களிடம் பேசவே மிகவும் கூச்ச படுற பையன் தான் போல "
"என்ன செய்றது அழகியே எனக்கு அப்படியே பலகிடுச்சு "
"சரி விக்ரம் இனி நான் தான் உன் தோழி உனக்கு சிறப்பான வாழ்க்கையை இங்கு அமைத்து தருகிறேன் "
"நிஜமா தான் சொல்லுறிய உன் பேர் என்ன "
"என்னோட பெயர் சாதனா "
"சாதனா எனக்கு மட்டும் என் இப்படி நடந்தது "
"எல்லாம் நன்மைக்கே நீ போய் அந்த மர வீட்டில் உறங்கு காலை வந்து பார்க்கிறேன் "
"இங்கையும் பகல் இரவுலாம் இருக்க சாதனா "
"இங்க எல்லாம் இருக்கு விக்ரம் "
காலை விடிந்து விட விக்ரம் எழுந்தான்
"விக்ரம் சீக்கிரம் வெளியே வாடா "
"என்ன சாதனா இப்படி பூலோக பெஸ்டி போல கூப்பிடுற"
"உன் வாய்க்கு தான் உனக்கு எவளும் பூலோகத்தில் மாட்டாள"
"ம்ம் சரி தான் தேவதையே "
சாதனா விக்ரமுக்கு சில டிப்ஸ் கொடுத்தான் ஒழுங்கா போய் அந்த பிங்க் டிரஸ் போட்டு இருக்க பொண்ணு கிட்ட பேசு
"என்ன சாதனா பூலோக சந்தானம் போல நீயும் மாறிடியா "
"பின்ன நாங்களும் ட்ரெண்டுக்கு வர வேண்டாமா போ டா போய் பேசு "
விக்ரம் அந்த பிங்க் ட்ரெஸ் பொண்ணுகிட்ட பேச ரொம்பவே உதறல் விட்டுகிட்டு இருந்தான்
ஒரு வழியாக ஹாய் சொல்ல அவள் கொல்லனு சிரிக்க பயந்து போய் வர
"ச்சை இப்படி தத்தியெல்லாம் ஏன் தலைல கட்டுறது இந்த லோகத்துல வேலையா போச்சு "
சாதனா விக்ரம் தலையில் கொட்டி மண்டு ஒரு பொண்ணுகிட்ட எப்படி பேசணும்னு கூட ஒனக்கு தெரியாதா
விக்ரம் குழந்தை போல அழ
சாதனா தேவதை கொஞ்சம் இரக்க பட்டு
இங்க பாரு விக்ரம் தேவலோகமா இருந்தாலும் பெண்ணை கரெக்ட் பண்ணா தான் நீ மரியாஜ் பண்ண முடியும் சரியா போய் நிறையா கத்துக்கணும்
விக்ரம் மனதில் அப்போ இங்கையும் நமக்கு பொண்ணு கிடைக்காதோ என்று வருத்தமாக இருந்தான் விக்ரம்.
"இங்க பாரு விக்ரம் பொண்ணு லவ் பண்ண வைக்கிறது எல்லாம் ஒரு கலை
இருந்தாலும் நீ பார்க்க பாவமாய் தான் இருக்க "
"சாதனா டார்லிங் எனக்கு ஏதாச்சும் ஐடியா கொடேன் "
"இங்க பாரு விக்ரம் நீ தான் எவலையாச்சும் கரெக்ட் பண்ணனும் "
"பேசாம நீயே என்னை கட்டிக்கிறியா டி சாதனா "
"டேய் விக்ரம் இதை கேட்டா இந்திரன் உன்னை உரிச்சு ஊறுகாய் போட்டுட்டு போயிடுவார் "
"என்ன தான் வழி எனக்கு "