Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
ஏமாந்துபோன 17 ஆண்கள்; சினிமாவை விஞ்சும் சேலம் பெண்ணின் களியாட்டம்
[color][font]
Published on 23/05/2019 (07:53) | Edited on 23/05/2019 (08:14)
இளையராஜா
[/font][/color]
சேலத்தில் சினிமாவை விஞ்சும் வகையில், ஒரே நேரத்தில் பல ஆண்களை திருமண வலையில் வீழ்த்தி லட்சக்கணக்கில் பணம் பறித்த பெண் குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.
[color][font]
[/font][/color]
கவுதம் மேனன் இயக்கத்தில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வெளியான படம், 'பச்சைக்கிளி முத்துச்சரம்'. நாயகி ஜோதிகா, கையில் காசு புரளும் ஆண்களுக்கு வலை விரித்து, காதல் நாடகமாடி, தன் குடும்ப கஷ்டத்தைச் சொல்லி பணம் பறிக்கும் மோசடி பெண் பாத்திரத்தில் அசத்தி இருப்பார். கலையரசன் நடிப்பில் வெளியான 'அதே கண்கள்' படத்தில் வரும் நாயகியோ, பார்வையற்ற வசதியான இளைஞர்களை குறிவைத்து காதல் நாடகம் நடத்தி, பணம் பறிப்பாள்.
இப்படி கற்பனை கதாபாத்திரங்களை விஞ்சும் வகையில் நிஜத்திலும் சேலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், ஒரே நேரத்தில் பல ஆண்களை தன் காதல் + காம வலையில் விழவைத்து நூதன முறையில் ஏமாற்றியிருக்கும் பரபரப்பு தகவல்கள் அம்பலமாகி உள்ளன.
பாலமுருகனுடன்..
[color][font][size]
[/size][/font][/color]
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள வளையமாதேவியைச் சேர்ந்த பத்மநாதன் மகன் பாலமுருகன் (35). பழைய தங்கம், வைர நகைகளை ஏலத்தில் எடுத்து வியாபாரம் செய்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. கல்யாணத்திற்கு பெண் தேவை என்று, கடந்த 2016ம் ஆண்டு தமிழ் மேட்ரிமோனி இணையதளத்தில் தன் புகைப்படம், வேலை, ஊதியம் உள்ளிட்ட விவரங்களை பதிவேற்றம் செய்திருந்தார்.
அதைப்பார்த்த சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி அருகே உள்ள மருளையாம்பாளையத்தைச் சேர்ந்த மாரிமுத்து மகள் மேகலா, இவருடைய செல்போன் நம்பருக்கு மேட்ரிமோனியல் புரஃபைல் பிடித்து இருப்பதாக எஸ்எம்எஸ் அனுப்பியுள்ளார். அன்றுமுதல் இவர்கள் அடிக்கடி தங்களுக்குள் புகைப்படம், குடும்ப விவரங்களை பகிர்ந்து கொள்வது என நட்பை தொடர்ந்துள்ளனர். ஒருகட்டத்தில், மேகலாவை உயிருக்கு உயிராக காதலிப்பதாகவும், அவரையே திருமணம் செய்து கொள்ள தீர்மானித்து விட்டதாகவும் பாலமுருகன் கூறும் அளவுக்கு வாட்ஸ்அப் மூலம் பழகி வந்துள்ளனர். இத்தனைக்கும் இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.
கணபதியுடன்...
[color][font][size]
[/size][/font][/color]
இந்நிலையில்தான் மேகலா, தனது குடும்ப கஷ்டங்களைச் சொல்லி அடிக்கடி தன்னிடம் பணம் கேட்க ஆரம்பித்தார் என்கிறார் பாலமுருகன். அதன்பின் நடந்ததை அவரே நம்மிடம் விலாவாரியாக கூறினார்.
''மேட்ரிமோனி பக்கத்தில் மேகலா, தனக்கு தந்தை இல்லை என்றும், தனியார் நிறுவனத்தில் முக்கிய பொறுப்பில் உள்ளதாகவும், 5 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்குவதாகவும் பதிவிட்டிருந்தார். தம்பி சத்யமூர்த்தியும், தாயார் யசோதாவும்தான் மேகலாவுடன் இருப்பதாகவும் சொல்லி இருந்தார். தந்தையை இழந்த பெண் என்பதால் எனக்கும் அவர் மீது இரக்கம் ஏற்பட்டது.
நாங்கள் பேச ஆரம்பித்த சில நாள்களிலேயே அவர் தன் சொந்த விஷயங்களையும் என்னிடம் பகிர்ந்து கொள்ள ஆரம்பித்தார். என்னிடமும், 'நீங்கள் சாப்பிட்டீங்களா...?' என்று அன்பாக நலம் விசாரிப்பார். திடீரென்று இரவு 8.30 மணிக்கு போன் பண்ணி, 'எனக்கு என்னமோ உங்ககிட்ட என் கஷ்டத்தையெல்லாம் சொல்லி அழணும்னு தோணுது பாலா,' என்பார். 'என் தம்பி ஒரு பொம்பள பொறுக்கி. அவனுக்கு கொஞ்சம்கூட பொறுப்புங்கிறதே இல்ல. டெக்ஸ்டைல் ஃபேக்டரி ஆரம்பிச்சு 16 லட்சம் ரூபாய் நஷ்டத்தை ஏற்படுத்திட்டான்,' என்றெல்லாம் அழுது கொண்டே சொல்வார். நம்மை ஒரு பெண் நம்பி இத்தனையும் பகிர்ந்துக்கறாளே என்று மயங்கித்தான் அவரையே திருமணம் செய்து கொள்வது என தீர்மானித்தேன்.
குணசேகருடன்...
[color][font][size]
[/size][/font][/color]
அதன்பின் அவரைத்தேடி கோவையில் அவர் பணியாற்றும் அம்பாள் மோட்டார்ஸ் நிறுவனத்திற்குச் சென்று சந்தித்தேன். அப்படி பலமுறை நாங்கள் சந்தித்து இருக்கிறோம். ஒருநாள் திடீரென்று தான் 4000 சதுர அடி நிலம் வாங்கி இருப்பதாகவும், அதனால் கடன் ஏற்பட்டுள்ளதாகவும், அந்த கடனை அடைத்தால்தான் நாம் சீக்கிரம் கல்யாணம் செய்து கொள்ள முடியும் என்று புலம்பினார். பிறகு ஒருமுறை தம்பியால் கடன் ஏற்பட்டு விட்டதாகவும் சொல்வார். அவர் இப்படிச் சொல்லும்போதெல்லாம் அவருக்கு பலமுறை பண உதவி செய்திருக்கிறேன்.
நாங்கள் பழக ஆரம்பித்த இரண்டே ஆண்டுகளில் கிட்டத்தட்ட 3 லட்சம் ரூபாய்க்கு மேல் 450 செட் உயர்ரக சுடிதார்கள், உள்ளாடைகள், சேலைகள் வாங்கி கொடுத்திருக்கிறேன். அதுமட்டுமின்றி தங்க சங்கிலி, வைர தோடு, வைரக்கல் பதித்த சங்கிலி வாங்கி தந்தேன். இத்தனையும் எனது வருங்கால மனைவிக்குத்தானே செய்கிறேன் என்று கருதியதால், இதையெல்லாம் அப்போது ஒரு பொருட்டாக கருதவில்லை.
இந்நிலையில்தான், கோவையில் இருந்து அவர் சென்னையில் வேலை கிடைத்திருப்பதாகச் சொல்லி ஒரு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார். அங்கே சேர்ந்த நாள் முதல் பூந்தமல்லியைச் சேர்ந்த கணபதி என்பவரை தனது மாமா மகன் என்று எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். அவர்தான் அடிக்கடி மேகலாவை அவர் தங்கியிருக்கும் விடுதியில் இருந்து அலுவலகத்திற்கு பைக்கில் கொண்டு சென்று விடுவார் என்பதால், மேகலாவுக்கு தேவைப்பட்டதை வாங்கிக் கொடுக்கும்படியும், வாகன செலவுக்காகவும் கணபதியிடம் பணத்தைக் கொடுத்துவிட்டு வருவேன்.
பாலமுருகன்
[color][font][size]
[/size][/font][/color]
ஆனால், மேகலா தனது மாமா மகன் என்று சொல்லிவிட்டு கணபதியுடன் ஷாப்பிங் மால், ஹோட்டல், பீச் என்று பல இடங்களில் நெருக்கமாக ஒன்றாக சுற்றியதை சென்னையில் உள்ள நண்பர்கள் மூலம் தெரிய வந்தது. கடந்த 2018 புத்தாண்டு அன்று, மேகலாவின் விடுதி அருகே சென்றுவிட்டு அவரை போனில் அழைத்தேன். அப்போது அவர் தலைவலியாக இருப்பதால் அறையிலேயே தூங்கிக் கொண்டிருப்பதாக கூறினார். ஆனால், அதேநேரம் அவர் கணபதியுடன் பெசன்ட் நகர் பீச்சுக்கு சென்றுவிட்டு, அன்று இரவு ஈசிஆர் சாலையில் உள்ள ஹோட்டலில் தங்கியிருந்தனர். இதை கணபதியே குடிபோதையில் மறுநாள் உளறிவிட்டார். இருவரின் செல்பிக்களை வைத்தும் உறுதிப்படுத்தினேன். அதன்பிறகுதான் மேகலாவின் நடவடிக்கைகளில் எனக்கு பெரிய அளவில் சந்தேகம் ஏற்பட்டது.
கோவையில் மேகலா இருக்கும்போது ஊட்டிக்கும், சென்னைக்கும் அலுவலக ஊழியர்களுடன் பயிற்சிக்கு செல்வதாகக் கூறிவிட்டுச் சென்று விடுவார். அதனால் என்னை கோவைக்கு வர வேண்டாம் என்பார். அந்த நாள்களில் அவர் கரூர் சிவக்கொழுந்து, பல்லடம் ஆனந்த், ஈரோடு குணசேகர், கோவை ஸ்ரீதர் திருப்பதி, கணபதி உள்ளிட்ட 17 பேருடன் உல்லாசமாக ஊர் சுற்றி வந்துள்ளதை கண்டுபிடித்தேன்.
இதையெல்லாம் கண்டுபிடித்து கேட்டபோது, 'ஆமாம்... நான் ஒரு விலைமாதுதான். நீ என்ன வேணும்னாலும் செய்துக்கோ. உன்னால் ஒரு கூந்தலும் ..... முடியாது,' என்றார். எனக்கு அப்படியே தூக்கி வாரிப்போட்டது. அவருடைய அழுகை, குடும்ப கஷ்டம் என்ற நடிப்பை நம்பி ஏமாந்து எல்இடி டிவி, பிரிட்ஜ், வாஷிங்மெஷின், மிக்ஸி என வீட்டுக்குத் தேவையான பொருள்களில் இருந்து தங்கம், வைர நகைகள் என இதுவரை 35 லட்சம் ரூபாய் செலவு செய்திருக்கிறேன். அவர் அடகு வைத்திருந்த நகைகளைக்கூட மீட்டுக் கொடுத்திருக்கிறேன்.
மேகலாவிடம் இருக்கும் எனது பணம், நகைகளை மீட்டுத்தருவதற்காக சேலத்தில் உள்ள ராக்கிப்பட்டி ராஜா என்பவரின் உதவியை நாடினேன். அவர் தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் இருப்பதாக அறிமுகப்படுத்திக் கொண்டார். அவர் மூலமாக மேகலா முதல்கட்டமாக 2 லட்சம் ரூபாய் ரொக்கம், ஒரு வைர நெக்லஸ், ஒரு வைர தோடு ஆகியவற்றை மட்டும் திருப்பிக் கொடுத்தார். மீதப்பணம், நகைகளை பிறகு தருவதாகச் சொன்னார். ஆனால் இதுவரை மீதப்பணம், நகைகள் வரவில்லை. இந்த வேலையைச் செய்து தருவதற்காக ராக்கிப்பட்டி ராஜா என்னிடம் முன்பணமாக 2.50 லட்சம் ரூபாய் பெற்றுக்கொண்டார். மேலும், 1.50 லட்சம் மதிப்புள்ள வைர மோதிரத்தையும் பறித்துக்கொண்டார்.
கடைசியில் அவர் மேகலாவுடன் கூட்டு சேர்ந்து கொண்டு, என்னை மேகலாவுக்கு கட்டாய தாலி கட்ட வைத்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். ராக்கிப்பட்டி ராஜாவின் தூண்டுதலின்பேரில் மேகலா, அவருடைய பெரியம்மா கந்தாயி மற்றும் சில ரவுடிகள் வளையமாதேவியில் உள்ள என் வீட்டிற்கு வந்து, நான் மேகலாவுக்கு தாலி கட்டுவது போன்ற படத்தைக் காட்டி என்னிடம் 50 லட்சம் ரூபாய், ஒரு வீடு, ஒரு கார் ஆகியவற்றை கேட்டு பிளாக்மெயில் செய்தனர்.
இதுகுறித்து ஆட்டையாம்பட்டி போலீசில் புகார் அளித்தேன். அப்போது இன்ஸ்பெக்டராக இருந்த நடராஜ், மேகலா ஏமாற்றியதாகச் சொல்லப்படும் 17 பேரையும் அழைத்து வாருங்கள் எப்ஐஆர் போடுகிறேன் என்றார். இப்பிரச்னையில் இருந்து ஒதுங்கிக் கொள்ளுமாறு இன்ஸ்பெக்டர் நடராஜ் மிரட்டினார். அதன்பின் என் புகாரில் காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனக்கு எங்கேயும் நீதி கிடைக்கவில்லை. ஆனால், மேகலா இனி வாழ்நாளில் யாரையும் ஏமாற்றி விடக்கூடாது,'' என்று கண்ணீர் மல்கக்கூறினார்.
மேகலா சிலருடன் மிக நெருக்கமாக பழகி வந்துள்ளார். அவர்களுக்கு தன் செல்போனில் இருந்து தனது அரை நிர்வாண, முழு நிர்வாண படங்களையும் அனுப்பி கிளுகிளுப்பு ஊட்டியிருக்கிறார். கரூர் சிவக்கொழுந்து, பல்லடம் ஆனந்த், குணசேகர், கணபதி ஆகியோருடன் ஹோட்டலில் அறை எடுத்துத் தங்கும் அளவுக்கு ரொம்பவே நெருக்கமாக இருந்துள்ளார். பல்லடம் ஆனந்த், ஆட்டோ லூம் பிஸினஸ் மூலம் கோடீஸ்வரன் ஆனவர் என்பதால், தனக்கு பல லட்சம் ரூபாய் கடன் இருப்பதாக கூறி அவரிடமும் பிராக்கெட் போட முயன்றிருக்கிறார். அவரோ ஆளை விட்டால் போதும் என்று இவரை தடாலடியாக கழற்றிவிட்டிருக்கிறார்.
பெரும்பாலும் மேகலா, கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்த ஆள்களையே குறிவைத்து திருமண ஆசை காட்டி பணம் பறிக்க முயன்றுள்ளார். ஈரோட்டைச் சேர்ந்த குணசேகர் என்பவரும், மேகலாவின் கண்ணீரை நம்பி 3 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார்.
சிவக்கொழுந்துவுடன்...
[color][font][size]
[/size][/font][/color]
இவர்களில் சிவக்கொழுந்து, கணபதி, குணசேகர் ஆகியோரிடமும் நாம் விசாரித்தோம். அவர்களோ, ''பாலமுருகனுக்கும் மேகலாவுக்கும்தான் பிரச்னை. அவர் ஏன் எங்களை எல்லாம் இந்த விவகாரத்தில் கோர்த்து விடுகிறார்? நாங்கள் கவுரவமாக வாழ்ந்து வருகிறோம். நாங்கள் மேகலாவுடன் ஃபிரண்ட்லியாகத்தான் பழகினோம். அப்போது எடுக்கப்பட்ட படங்களை எல்லாம் பாலமுருகன் பலருக்கும் அனுப்பி வைத்துள்ளார். நியாயமாக பார்த்தால் அவர் மீது நாங்கள்தான் புகார் கொடுக்க வேண்டும்,'' என்று சொல்லி வைத்தாற்போல் பேசினர்.
ஆனால் ஓர் ஆணும், பெண்ணும் ஹோட்டலில் ஒரே அறையில் நாள் கணக்கில் இரவில் தங்குவதும், நிர்வாண படங்களை பகிர்ந்து கொள்வதும் என்ன மாதிரியான ஃபிரண்ட்லி உறவுமுறைக்குள் வரும் என்று நமக்கும் புரியவில்லை. ஒரு நிறுவனத்தில் ஹெச்.ஆர். அதிகாரியாக இருக்கும் ஸ்ரீதர் திருப்பதி என்பவரும், இன்னிக்கு நைட்டு வரட்டுமா? எனக்கு பணியாரம்னா ரொம்ப பிடிக்கும் என்று மேகலாவுடன் சாட்டிங்கில் கூறியிருக்கிறார். அவரிடம் கேட்டபோது, நட்புக்குள் இதெல்லாம் சகஜம் சார். இதைக்கூட குற்றம் என்றால் எப்படி? என்கிறார். ஆனால், மேகலா தன்னிடமும் கடன் சுமையைக் கூறி பணம் கேட்டதாகவும், நானே கஷ்டத்தில் இருப்பதாகச்சொல்லி தப்பித்துக் கொண்டேன் என்றும் கூறினார்.
இறுதியாக நாம், மேகலாவிடம் பேசினோம்.
நாம் அவரிடம் அறிமுகப்படுத்தி விட்டுத்தான் பேசினோம் என்றாலும், நீங்கள் எங்கே இருக்கீங்க? உங்க ஆபீஸ் எங்கே இருக்கு? பாலமுருகன் உங்களை எங்கே சந்தித்துப் பேசினார்? என்றெல்லாம் விசாரித்துவிட்டுத்தான் பதில் சொல்ல தொடங்கினார்.
''என்னிடம் 35 லட்சம் ரூபாய் கொடுத்திருப்பதாக உங்களிடம் பாலமுருகன் சொல்கிறார். சிலரிடம் ஒரு கோடி ரூபாய் வரை கொடுத்ததாகச் சொல்லி இருக்கிறார். இதில் எதை நம்புவது? இதையெல்லாம் கேட்டால் எனக்கு சிரிப்புத்தான் வருகிறது. எது எதுக்கோ ஆதாரம் வைத்திருப்பதாகக் கூறும் பாலமுருகன், அவர் பணம் கொடுத்ததற்கு ஏதாவது ஆதாரம் இருந்தால் காட்டட்டும்.
கணபதியுடன்..
[color][font][size]
[/size][/font][/color]
இது பரவாயில்லை. அவர் பல பேரிடம் என்னை ஒரு 'கால் கேர்ள்' என்றுகூட சொல்லி இருக்கிறார். பல பேருக்கு வாட்ஸ்அப் மூலம் என் புகைப்படங்களை அனுப்பி வைத்திருக்கிறார். நீங்கள் சொல்வதைக் கேட்டு எனக்கு ஷாக் ஆக இருக்கிறது,'' என்றார் சிரித்தபடியே.
அவர் உங்களைப் பற்றி தவறாக சித்தரித்து இருந்தால் நீங்கள் அவர் மீது புகார் தரலாமே? என்று கேட்டதற்கு, ''சார்... இவங்க மேல புகார் கொடுக்கறது என் வேலை கிடையாது. நான் சம்பாதிச்சாதான் என் குடும்ப சாப்பிட முடியும். நாமளே அன்றாடங்காய்ச்சி. இதுல எங்க போய் புகார் கொடுக்கறது? சார்... ஓப்பனாக சொல்லணும்னா பாலமுருகன் என்னை லவ் பண்ணினாருங்க...,'' என்றவர் என்ன நினைத்தாரோ திடீரென்று, ''சார், நான் பேசுவதை நீங்கள் ரெக்கார்டு செய்கிறீர்கள் என தெரியுது. நான் உங்களை நேரில் சந்தித்துப் பேசுகிறேன்,'' என்று சொல்லி பேச்சைத் துண்டித்துவிட்டார்.
ஆணாதிக்கம் குறித்தும், பெண்கள் பாலியல் கொடுமைகளுக்கு ஆளாவது குறித்தும் பேசும் இதே நேரத்தில்தான் மேகலா போன்றவர்களின் கதைகளும் கசிகின்றன. காவல்துறை கள்ள மவுனம் சாதிக்காமல் உண்மையை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
"ஆந்திராவில் அனைவரும் பாராட்டும் வகையில் ஆட்சி நடத்தப்படும்" - ஜெகன்மோகன் ரெட்டி உறுதி
ஆந்திராவில் அனைவரும் பாராட்டும் வகையில் ஆட்சி நடத்தப்படும் என்று புதிய முதலமைச்சராக பதவியேற்க உள்ள ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
ஆந்திராவில் அனைவரும் பாராட்டும் வகையில் ஆட்சி நடத்தப்படும் என்று புதிய முதலமைச்சராக பதவியேற்க உள்ள ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார். வரும் 30ஆம் தேதி விஜயவாடாவில் நடைபெறும் விழாவில் ஆந்திர முதலமைச்சராக அவர் பதவியேற்க உள்ளார். இதையொட்டி செய்தியாளர்களை சந்தித்த ஜெகன்மோகன் ரெட்டி, தங்கள் கட்சி 25 மக்களவை தொகுதியிலும் 150 சட்டமன்ற தொகுதியிலும் வெற்றி பெற்றிருப்பது ஆந்திராவின் சரித்திரத்தில் புதிய அத்தியாயம் என குறிப்பிட்டார். இந்த வெற்றி தமது பொறுப்பை அதிகரித்துள்ளதாகவும், தம்மை நம்பி வாக்களித்த ஆந்திர மக்களின் நம்பிக்கை காப்பாற்றப்படும் என்றும் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்தார்.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
`சரியும் அ.தி.மு.க; மாஸ் என்ட்ரி கொடுத்த மக்கள் நீதி மய்யம்!" - இது கொங்கு அரசியல்
கொங்கு மண்டலத்தில் அ.தி.மு.க படுதோல்வி அடைந்துள்ள நிலையில், களமிறங்கிய முதல் தேர்தலிலேயே மக்கள் நீதி மய்யம் சிறப்பான என்ட்ரி கொடுத்துள்ளது.
கமலுடன் கோவை ம.நீ.ம வேட்பாளர் மகேந்திரன்
18 மாதங்களுக்கு முன்பு தமிழகத்தில் இப்படி ஓர் அரசியல் கட்சியே இல்லை. ஆனால், நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற, சட்டமன்ற இடைத்தேர்தல்களில் குறிப்பிட்ட வாக்குகளைப் பெற்று, சந்தித்த முதல் தேர்தலிலேயே சிறப்பான என்ட்ரி கொடுத்திருக்கிறது, மக்கள் நீதி மய்யம். சினிமா, பிக்பாஸ் என்று பிஸியாக சுற்றிக்கொண்டிருந்த கமல்ஹாசன், திடீரென்று அரசியலில் குதித்தார். கட்சி ஆரம்பித்த குறுகிய காலத்திலேயே நாடாளுமன்ற மற்றும் இடைத்தேர்தலில் பிரதான கட்சிகளுடன் கூட்டணி வைக்காமல் களமிறங்கினார்.
தமிழகத்தில், அ.தி.மு.க, தி.மு.க கட்சிகளுக்கு மாற்றாக ஓர் அரசியல் கட்சி உருவாவது மிகவும் கடினம். அப்படியே கட்சி உருவானாலும் தேர்தலில் ஜொலிப்பது கடினம். இதையெல்லாம் கடந்து தேர்தலில் வெற்றிபெற்றாலும், அதைத் தக்கவைத்துக்கொள்வது மேலும் கடினம். இந்நிலையில், இந்தத் தேர்தலில் டி.டி.வி.தினகரனின் அ.ம.மு.க, கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், சீமானின் நாம் தமிழர் கட்சிகள், பிரதான கட்சிகளுக்கு மாற்றாகத் தங்களை முன்னிறுத்தினர். இதில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அ.ம.மு.க-வை சில இடங்களில் பின்னுக்குத் தள்ளிவிட்டு, மக்கள் நீதி மய்யமும் நாம் தமிழரும் கணிசமான வாக்குகளைப் பெற்றுள்ளன.
கமலுடன் பொள்ளாச்சி ம.நீ.ம வேட்பாளர் மூகாம்பிகா
குறிப்பாக, கொங்கு மண்டலத்தில் பல தொகுதிகளில் மக்கள் நீதி மய்யம் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. அ.ம.மு.க ஐந்தாவது இடத்தையே பிடிக்க முடிந்தது. மக்கள் நீதி மய்யத்தின் கோவை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் டாக்டர். மகேந்திரன், 1 லட்சத்து 44 ஆயிரத்து 829 வாக்குகளும் பொள்ளாச்சி தொகுதி வேட்பாளர் மூகாம்பிகா 59 ஆயிரத்து 693 வாக்குகளும் (6%) பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளனர். அதேபோல, நீலகிரி தொகுதி மக்கள் நீதி மய்ய வேட்பாளர் ராஜேந்திரன் 41 ஆயிரத்து 169 (4.1%) வாக்குகளும், திருப்பூர் தொகுதி வேட்பாளர் சந்திரகுமார் 64 ஆயிரத்து 657 வாக்குகளும் (5.5%), ஈரோடு வேட்பாளர் சரவணக்குமார் 47 ஆயிரத்து 719 வாக்குகளும் (4.5%), சேலம் வேட்பாளர் பிரபு மணிகண்டன் 58 ஆயிரத்து 442 வாக்குகளையும் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளனர்.
மேலும், தென்சென்னையில் மக்கள் நீதி மய்ய வேட்பாளர் ரங்கராஜன் 1 லட்சத்து 35 ஆயிரத்து 465 வாக்குகளும் (12%), வட சென்னை வேட்பாளர் மெளர்யா 35 ஆயிரத்து 331 வாக்குகளும், மத்திய சென்னை வேட்பாளர் கமீலா நாசர் 92 ஆயிரத்து 249 வாக்குகளும் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளனர். இதுதவிர, மதுரை நாடாளுமன்றத் தொகுதி உள்பட பல நகர்ப்புறப் பகுதிகளில் மக்கள் நீதி மய்யம், முதல் தேர்தலிலேயே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. குறிப்பாக, கொங்கு மண்டலம் தங்களது கோட்டை என்று சொல்லிக் கொள்ளும் அ.தி.மு.க, சூலூர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் மட்டும் வெற்றிபெற, மற்ற இடங்களில் படுதோல்வி அடைந்துள்ளது. அதேநேரத்தில், சந்தித்த முதல் தேர்தலிலேயே, கொங்கு மண்டலத்தில் லட்சங்களில் வாக்குகள் பெற்றிருக்கும் மக்கள் நீதி மய்யத்தின் எழுச்சி, அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
வயநாட்டில் பிரமாண்ட வெற்றி.. இந்தியாவிலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்றவர் ராகுல் காந்திதான்!
டெல்லி: காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வயநாடு தொகுதியில் அமோக வெற்றி பெற்றுள்ளார். 12 லட்சம் வாக்குகள் பெற்ற அவர் 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இந்தியாவிலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல்காந்தி பிரமாண்ட வெற்றி பெற்றுள்ளார்.
நாடுமுழுவதும் 542 லோக்சபா தொகுதிகளில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று தொடங்கி நடைபெற்றது. இதில் பாஜக பெருவாரியான தொகுதிகளை வசமாக்கியுள்ளது.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
மம்தாவுக்கு பாஜக கொடுத்த ஷாக்!!!
மேற்கு வங்கத்தில் மொத்தம் உள்ள 42 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் 22 தொகுதிகளிலும், பாஜக 19 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கிறது. மேற்குவங்கத்தில் பாஜக இதுவரை இல்லாத அளவு திரிணாமுல் காங்கிரஸுக்கு அடுத்த இடத்தை கைப்பற்றும் சூழல் ஏற்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 42 தொகுதிகளில் கடந்த 2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் 34 தொகுதிகளில் வெற்றி பெற்றது. எதிர்க்கட்சியான இடதுசாரி கூட்டணி, பாஜக ஆகியவை தலா 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.
கடந்த 2014ஆம் ஆண்டு தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் 34 தொகுதிகளிலும், சிபிஎம் 2, காங்கிரஸ் 4, பாஜக 2 இடங்களில் வெற்றிபெற்றிருந்தது. 17 சதவீத வாக்குகளை வென்ற பாஜக, இம்முறை 2ஆம் இடத்தில் திரிணாமுல் காங்கிரஸுக்கு கடும் சவால் விட்டுள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில் மேற்கு வங்கத்தில் ஆர்.எஸ்.எஸின் வளர்ச்சிதான் இந்த முறை பாஜகவை இரண்டாவது இடத்திற்கு உயர்த்தியுள்ளது என்று சொல்லப்படுகிறது. இதுமட்டுமல்லாமல் மேற்குவங்கத்தில் பாஜகவின் பிரச்சாரம் மற்ற மாநிலங்களை விட கொஞ்சம் கூடுதலாகவே இருந்துள்ளது. பல வருடங்களாக திரிணாமுல் காங்கிரஸுக்கும் கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர்களுக்கும் இடையே நடந்த பல வன்முறைகள், அவர்கள் மேல் மக்களுக்கு இருந்த கோபம் பாஜகவிற்கு ஓட்டாகவே மாறியது என்கிறார்கள். மற்றொரு பக்கம் 42 தொகுதிகளுக்கும் ஒரே நாளில் தேர்தல் வைக்காமல் தேர்தல் ஆணையத்தை கைக்குள் வைத்துக்கொண்டு 7 கட்டங்களாக 42 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தியதுதான் காரணம் என்கின்றனர். ஆனால், பாஜகதான் அண்மையில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலிலும் இடதுசாரிக் கூட்டணியை மூன்றாம் இடத்துக்கு தள்ளி பாஜக 2ஆம் இடம் பெற்றது கவனிக்கத்தக்கது.
பாஜக கணிசமாக வெல்லும் என்பதை உணர்ந்த அம்மாநில திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள், பாஜகவுடன் கடுமையாக மோதினர். இதனால், மாநிலத்தில் வேறு எங்கும் இல்லாத அளவுக்கு இரு கட்சி தொண்டர்கள் இடையே கடும் மோதல் நிலவியது. மக்களவை தேர்தல் முடிவுகள் மூலம், தேசிய அளவில் எதிர்க்கட்சிகளுக்கு பாஜக அதிர்ச்சி அளித்ததைப் போலவே, மாநிலத்திலும் கடும் அதிர்ச்சியை மம்தாவுக்கு பாஜக அளித்துள்ளது.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
அதிமுக எதிர்ப்பலையில் அடித்துச் செல்லப்பட்ட கூட்டணிக் கட்சிகள்
கோப்புப் படம்
தமிழகத்தில் அதிமுக எதிர்ப்பலையில் கூட்டணிக் கட்சிகளும் மூழ்கின. கடைசி நேர ட்விஸ்ட் காரணமாக அதிமுக அணிக்குத் தாவிய பாமக, தேமுதிக கட்சிகள் தோல்வியைத் தழுவின.
மக்களவைத் தேர்தலுக்கு முன் கூட்டணி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்ட திமுக, அதிமுகவினர் கட்சிகளை இழுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதில் பாமக, திமுக அணியில் வருவதாக சொல்லப்பட்ட நிலையில், திடீரென அதிமுக அணிக்கு பாமகவினர் தாவினர். இதை ஸ்டாலின் கடுமையாக விமர்சித்தார்'
மறுபுறம் தேமுதிகவை திமுக வலிந்து சென்று அழைக்க, ஒருபுறம் திமுகவிடம் பேசிக்கொண்டே மறுபுறம் அதிமுகவுடனும் தேமுதிகவினர் பேசினர். இதனால் கூட்டணியில் இனி தேமுதிக இல்லை என திமுக அறிவிக்க நாங்கள் கூட்டணிக்காக வரவில்லை என தேமுதிக அறிவித்தது.
பாமக ஆண்டு முழுவதும் அதிமுக ஆட்சியை விமர்சித்து வந்த நிலையில் அதிமுக அணியில் இணைந்தது அதற்கு பலத்த பின்னடைவைக் கொடுத்துள்ளது. வட மாவட்டங்களில் பாமகவுடன் இணைந்ததால் அதிமுக வெல்லும் என கூறப்பட்ட நிலையில் வடமாவட்டப் பிரதிநிதித்துவ இடங்கள் அனைத்தையும் பாமக இழந்தது.
குறிப்பாக எட்டுவழிச்சாலை போராட்டத்தில் முன்னின்று தருமபுரி மக்களின் அன்புப் பிள்ளையாக இருந்த அன்புமணி ராமதாஸே தோல்வி முகத்தை நோக்கிச் செல்கிறார். ஆரம்பத்தில் வெற்றிமுகம், பின்னர் இழுபறி என்கிற நிலையில் தற்போது அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் செந்தில் குமார் அன்புமணியைவிட கிட்டத்தட்ட 20 ஆயிரம் வாக்குகள் முன்னிலை பெற்றுவிட்டார்.
கடந்த காலங்களில் செய்த அதே தவறை மீண்டும் பாமக செய்துள்ளது என்றே அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். அதேபோன்று அதிமுகவுக்கு பரம வைரியாக இருந்த தேமுதிகவும் தனது நிலையை மாற்றியது அதற்கு மீண்டும் சறுக்கலை ஏற்படுத்தியுள்ளது
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
தேர்தலில் பாமக - தேமுதிக தோல்வி
பதிவு : மே 24, 2019, 08:55 AM
அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட பாமக, 7 தொகுதிகளிலும் தோல்வி அடைந்தது.
Facebook Twitter Mail
அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட பாமக, 7 தொகுதிகளிலும் தோல்வி அடைந்தது. தர்மபுரியில் அன்புமணி, அரக்கோணத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி உட்பட 7 பேரும் தோல்வி அடைந்தனர். இதேபோல, கள்ளக்குறிச்சியில் எல்.கே.சுதிஷ் உட்பட அதிமுக கூட்டணியில் 4 தொகுதியில் போட்டியிட்ட தேமுதிகவும் அனைத்திலும் தோல்வி அடைந்தது.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
கடும் இழுபறிக்கு பிறகு சிதம்பரத்தில் திருமாவளவன் வெற்றி
பாராளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. நாடு முழுவதும் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அபார வெற்றி பெற்றது.
தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி 38 இடங்களில் அபார வெற்றி பெற்றது. இதில் சிதம்பரம் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் சார்பில் அதன் கட்சி தலைவர் திருமாவளவனும் அ.தி.மு.க. சார்பில் சந்திரசேகரும் போட்டியிட்டனர்.
வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே இரு வேட்பாளர்களும் மாறி, மாறி முன்னிலை வகித்தனர். இறுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் 5,00,229 வாக்க்குகள் பெற்றார். அ.தி.மு.க. வேட்பாளர் சந்திரசேகர் 497010 வாக்குகள் பெற்றார். கடும் இழுபறிக்கு பிறகு சுமார் 3,219 வாக்குகள் வித்தியாசத்தில் திருமாவளவன் வெற்றி பெற்றுள்ளார்.
இதேபோல் திமுக கூட்டணியில் விழுப்புரம் தொகுதியில் போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் ரவிக்குமார் 5,59,585 வாக்குகள் பெற்றார். பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் எதிர்த்து போட்டியிட்ட வடிவேல் ராவணன் 4,31,517 வாக்குகள் பெற்றார். இதனால் ரவிக்குமார் எளிதில் வெற்றி பெற்றார்.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
தமிழகத்தில் 22 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு நடந்த இடைத் தேர்தலில் 8 தொகுதிகள் வரை வெற்றியை உறுதி செய்ததன் மூலம் ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது அதிமுக.
தமிழகத்தில் ஆம்பூர், ஆண்டிப்பட்டி, அரவக்குறிச்சி, குடியாத்தம், அரூர், ஓசூர், மானாமதுரை, நிலக்கோட்டை, ஓட்டப்பிடாரம், பாப்பிரெட்டிபட்டி, பரமக்குடி, பெரம்பூர், பெரியகுளம், பூந்தமல்லி, சாத்தூர், சோளிங்கர், சூலூர், தஞ்சாவூர், திருப்பரங்குன்றம், திருப்போரூர், திருவாரூர், விளாத்திகுளம் ஆகிய தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடைபெற்றது.
[img=0x0]https://wtf2.forkcdn.com/www/delivery/lg.php?bannerid=0&campaignid=0&zoneid=5834&loc=https%3A%2F%2Fwww.dinamani.com%2Ftamilnadu%2F2019%2Fmay%2F24%2F%25E0%25AE%2587%25E0%25AE%259F%25E0%25AF%2588%25E0%25AE%25A4%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AF%2587%25E0%25AE%25B0%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AE%25B2%25E0%25AF%258D-9-%25E0%25AE%25A4%25E0%25AF%258A%25E0%25AE%2595%25E0%25AF%2581%25E0%25AE%25A4%25E0%25AE%25BF%25E0%25AE%2595%25E0%25AE%25B3%25E0%25AE%25BF%25E0%25AE%25B2%25E0%25AF%258D-%25E0%25AE%2585%25E0%25AE%25A4%25E0%25AE%25BF%25E0%25AE%25AE%25E0%25AF%2581%25E0%25AE%2595-%25E0%25AE%25B5%25E0%25AF%2586%25E0%25AE%25B1%25E0%25AF%258D%25E0%25AE%25B1%25E0%25AE%25BF-3157526.html&referer=https%3A%2F%2Fnews.google.com%2F&cb=3c752a4821[/img]
இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் வியாழக்கிழமை (மே 23) எண்ணப்பட்டன. இதன்முடிவுகள் இரவு 8 மணிக்கு மேல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டன. அதன்படி, எட்டு தொகுதிகளில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் ஆளும் அதிமுக வெற்றி முகம் காட்டியது. அவற்றில் சில தொகுதிகளுக்கான முடிவுகள் இரவில் அறிவிக்கப்பட்டன.
அதிமுக வெற்றி: விளாத்திகுளம் தொகுதியில் 28 ஆயிரத்து 554 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் பி.சின்னப்பன் வெற்றி பெற்றார். சோளிங்கர் தொகுதியில் 16 ஆயிரத்து 56 வாக்குகள் அதிகம் பெற்று அதிமுக வேட்பாளர் ஜி.சம்பத்தும், சாத்தூர் தொகுதியில் 1,101 வாக்குகள் அதிகம் பெற்று எம்.எஸ்.ஆர்.ராஜவர்மனும் வெற்றி பெற்றனர்.
திமுக வெற்றி: ஆம்பூரில் 37 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் கூடுதலாகப் பெற்று ஏ.சி.வில்வநாதனும், குடியாத்தம் தொகுதியில் 27 ஆயிரத்து 841 வாக்குகள் அதிகம் பெற்று எஸ்.காத்தவராயனும், திருப்போரூர் தொகுதியில் 21 ஆயிரத்து 13 வாக்குகள் அதிகம் பெற்று எல்.இதயவர்மனும் வெற்றி பெற்றனர்.
ஆட்சியைத் தக்க வைத்தது: இடைத் தேர்தலில் 9 தொகுதிகள் வரை வெற்றிக் கோட்டை எட்டியிருப்பதன் மூலம், சட்டப் பேரவையில் ஆளும் அதிமுகவுக்கு பெரும்பான்மை கிடைத்துள்ளது. பேரவையில் 22 தொகுதிகள் காலியாக இருந்த நிலையில், அதிமுக உறுப்பினர்களின் எண்ணிக்கை 113-ஆக இருந்தது (பேரவைத் தலைவரைச் சேர்க்காமல்). 9 தொகுதிகள் வரை வெற்றி முகம் காட்டியிருப்பதன் மூலம், பேரவையில் அதிமுகவின் பலம் 122 ஆக உயருகிறது. அதேசமயம், பேரவையில் எந்த இடமும் காலியாக இல்லாத சூழ்நிலையில், பெரும்பான்மை பெற வேண்டிய எண்ணிக்கை 117 ஆகும். பேரவையில் அதிமுகவின் பலம் 122 ஆக அதிகரித்ததன் மூலம் பெரும்பான்மை எண்ணிக்கையைத் தாண்டி ஆட்சியைத் தக்க வைத்துள்ளது. இதனால், கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக பேரவையில் அதிமுகவுக்கு இருந்து வந்த பெரும்பான்மை சிக்கல்கள் தீர்ந்துள்ளன.
100-ஐத் தாண்டியது திமுக: இடைத் தேர்தலில் 13 இடங்களைக் கைப்பற்றியதன் மூலம், பேரவையில் திமுக உறுப்பினர்களின் எண்ணிக்கை 88-லிருந்து 101 ஆக உயர்ந்துள்ளது.
பேரவையில் கட்சிகள் பலம்
(தேர்தல் முடிவுக்குப் பிறகு)
மொத்த இடம் 234
அதிமுக 122
திமுக 101
காங்கிரஸ் 8
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 1
சுயேச்சை 1
பேரவைத் தலைவர் 1
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
அமேதி தொகுதியில் ராகுல் காந்திக்கு அதிர்ச்சி அளித்த ஸ்மிரிதி இரானி
Facebook Twitter Mail Text Size Print
அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை வீழ்த்தியதன் மூலம் நாடாளுமன்ற தேர்தல் களத்தில் ஒட்டுமொத்த மக்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளார் மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி.
பதிவு: மே 24, 2019 04:53 AM
அமேதி,
நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவின் வரலாற்று சிறப்புமிக்க வெற்றி ஒருபுறம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், மறுபுறம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உத்தரபிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் தோல்வியடைந்தது அதிர்ச்சியை கொடுத்து இருக்கிறது. சஞ்சய் காந்தி, ராஜீவ், சோனியா, ராகுல் என நேரு குடும்பத்தினர் தொடர்ந்து வெற்றி பெற்று வந்த இந்த தொகுதியில், தற்போது காங்கிரஸ் வெற்றியை பறிகொடுத்திருப்பது கட்சித்தொண்டர்கள் மட்டுமின்றி, ஒட்டுமொத்த நாட்டு மக்களின் புருவத்தையும் உயரச் செய்திருக்கிறது.
காந்தி குடும்பத்தினரின் பாரம்பரிய தொகுதியான அமேதியில் கடந்த 2004–ம் ஆண்டு முதல் 3 முறை ராகுல் காந்தி வெற்றி பெற்றுள்ளார். இதில் முதல் இரு முறையும் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அவருக்கு, 3–வது முறையாக கடந்த 2014–ம் ஆண்டு போட்டியிட்ட போது பா.ஜனதாவின் ஸ்மிரிதி இரானி பலத்த போட்டியாக விளங்கினார். எனினும் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் அமேதியில் வெற்றிக்கனியை தட்டிப்பறித்தார் ராகுல் காந்தி.
அந்த தேர்தலில் ராகுல் காந்திக்கே கடும் போட்டி கொடுத்த ஸ்ம்ரிதி இரானியை மாநிலங்களவை உறுப்பினராக்கிய பா.ஜனதா, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரியாகவும் நியமித்தது. இதில் திறம்பட செயலாற்றிய ஸ்மிரிதி இரானி, அமேதி மீது ஒரு கண் வைத்திருந்தார்.
தான் தோல்வியடைந்த தொகுதி என்ற எண்ணம் எதுவும் இன்றி, அந்த தொகுதி மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து அவர்களுடனான தொடர்பை பேணி வந்தார். இடையில் எதிர்க்கட்சிகளின் போர்க்கொடியால் ஜவுளித்துறை மந்திரியாக இலாகா மாற்றம் செய்யப்பட்ட போதும், தனது அமேதி தொடர்பை அவர் கைவிடவில்லை.
இந்த சூழலில்தான் தற்போதைய நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டது. கடந்த முறை ஸ்மிரிதி இரானியிடம் பெரும் சவாலை சந்தித்ததாலோ என்னவோ, இந்த முறை அமேதியை மிகுந்த கவனத்துடனே அணுகினார் ராகுல் காந்தி. அமேதியுடன், கேரளாவின் வயநாட்டிலும் அவர் போட்டி கோதாவில் குதித்தார்.
அதேநேரம் அமேதி தொகுதியில் ராகுலுக்கு எதிராக மீண்டும் ஸ்மிரிதி இரானியையே களமிறக்கியது, பா.ஜனதா. இதனால் அமேதி முழுவதும் தேர்தல் பிரசாரம் அனல் பறந்தது. ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டாலும், அமேதியில் அவர் இல்லாத குறையை பிரியங்கா பார்த்துக்கொண்டார்.
இதனால் நாடு முழுவதும் பலத்த எதிர்பார்ப்பு நிலவிய அமேதி தொகுதியின் தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் காலையில் வழக்கத்துக்கு மாறாக ஸ்மிரிதி இரானி முன்னிலை வகித்தார். பின்னர் ராகுல் காந்தியும் முன்னணியில் வந்தார். ஆனால் இந்த முன்னிலையை ஸ்மிரிதி இரானி முறியடித்தார்.
இப்படி மாறிமாறி நிலவிய முன்னிலையை ஒருகட்டத்தில் ஸ்மிரிதி இரானியே தொடர்ந்து தக்கவைத்தார். சுமார் 6¾ லட்சம் வாக்குகள் எண்ணப்பட்டபோது ஸ்மிரிதி இரானி 3,39,743 ஓட்டுகளும், ராகுல் காந்தி 2,94,290 வாக்குகளும் பெற்றிருந்தனர். இறுதியில் யாரும் எதிர்பாராத வகையில் ராகுல் காந்தியை, ஸ்மிரிதி இரானி தோற்கடித்தார்.
அமேதி தொகுதியில் தோல்வியடைவோம் என்ற அச்சத்தில்தான் ராகுல் காந்தி தென்னாட்டை தேடி ஓடியிருப்பதாக ஏற்கனவே பா.ஜனதா உள்ளிட்ட கட்சிகள் குறைகூறியிருந்தன. அவர்கள் கூறியது போலவே ராகுல் காந்தியின் இந்த தோல்வி அமைந்திருப்பதாக காங்கிரசார் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
அதேநேரம் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக கருதப்பட்ட ராகுல் காந்தியை தோற்கடித்ததன் மூலம் ஒட்டுமொத்த நாட்டு மக்களின் கவனத்தையும் ஸ்மிரிதி இரானி ஈர்த்துள்ளார். அத்துடன் கடந்த தேர்தலில் ராகுல் காந்தியிடம் பெற்ற தோல்விக்கு பழி வாங்கவும் செய்துள்ளார்.
மும்பையை சேர்ந்த ஸ்மிரிதி இரானி மாடலிங் துறையில் நுழைந்து பின்னர் நடிகையானார். சினிமாவில் ஜொலிக்கவில்லை என்றாலும் தொலைக்காட்சி தொடர்கள் மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றார். அத்துடன் தொலைக்காட்சி தொடர்களையும் தயாரித்து புகழ் பெற்றார்.
பின்னர் பா.ஜனதாவில் இணைந்து அரசியல் வாழ்க்கையில் படிப்படியாக முன்னேறினார். பிரதமர் மோடியின் நன்மதிப்பை பெற்றவர்கள் பட்டியலில் ஸ்மிரிதி இரானிக்கு தனியிடம் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
திக் திக் நிமிடங்களில் திருமாவளவன் - 4 பெட்டிகள் மிஸ்ஸிங்; திருப்பத்தை ஏற்படுத்திய 18-வது சுற்று
சிதம்பரம் தொகுதியில், திருமாவளவனை பின்னடைவு என திட்டமிட்டு தகவல் பரப்பப்பட்டுள்ளது. தேர்தல் எண்ணிக்கையின்போது, 4 பெட்டிகள் எண்ணப்படவில்லை என்றும் 18-வது சுற்றில் திருமாவளவனுக்குக் கிடைத்த ஓட்டுகள், அ.தி.மு.க-வுக்கு கிடைத்ததாகவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அதிகாலை மூன்று மணியளவில்தான் திருமாவளவன் வெற்றிபெற்றதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சிதம்பரம் மக்களவைத் தொகுதியில், தி.மு.க கூட்டணி சார்பில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பானை சின்னத்தில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து, அ.தி.மு.க சார்பில் சந்திரசேகர் இரட்டை இலைச் சின்னத்தில் களமிறங்கினார். அ.ம.மு.க சார்பில் இளவரசனும், மக்கள் நீதி மய்யம் சார்பில் ரவியும், நாம் தமிழர் கட்சி சார்பில் சிவஜோதியும் போட்டியிட்டனர். ஆரம்பம் முதலே திருமாவளவனுக்கும் சந்திரசேகருக்கும் இடையே இழுபறி நீடித்துவந்தது. திடீரென சந்திரசேகர் முன்னணியில் இருப்பதாகவும், திருமாவளவனுக்கு பின்னடைவு ஏற்பட்டதாகவும் ஓட்டு எண்ணிக்கை மையத்திலிருந்து தகவல் அறிவிக்கப்பட்டது. ஓட்டு எண்ணிக்கை மையத்தில் காலை முதல் காத்திருந்த திருமாவளவனும் அவரின் ஆதரவாளர்களும் அதிர்ச்சியடைந்தனர்.
திருமாவளவனுக்கும் சந்திரசேகருக்கும் இடையே இரவு வரை இழுபறி நீடித்தது. ஒருக்கட்டத்தில், சந்திரசேகர் வெற்றிபெற வாய்ப்பு உள்ளதாகத் தகவல் வெளியானது. இதையடுத்து அவருக்கும் தகவலும் தெரிவிக்கப்பட்டது. இந்தத் தகவலை அறிந்த பா.ம.க-வினரும் அ.தி.மு.க-வினரும் வாக்கு எண்ணிக்கை மையத்தின் அருகிலேயே பட்டாசு வெடித்தனர். அந்த சத்தம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தொண்டர்களின் காதுகளில் இடியாக விழுந்தது.
இந்தச் சமயத்தில்தான் திருமாவளவனுக்கு ஒரு தகவல் சொல்லப்பட்டது. அந்தத் தகவலை அவர் உறுதிப்படுத்தினார். உடனடியாக வாக்கு எண்ணிக்கை மையத்திலிருந்த அதிகாரிகளிடம் அந்தத் தகவலை அவர் கூறினார். இதையடுத்துதான் திருமாவளவன் வெற்றிமுகம் கண்டார் என்கின்றனர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய வி.சி.க-வின் தலைமைக் கழக நிர்வாகி ஒருவர், ``சிதம்பரம் தொகுதியில் திருமாவளவனைத் தோற்கடிக்க அ.தி.மு.க கூட்டணிக் கட்சியினர் கங்கணம் கட்டிக்கொண்டு வேலைபார்த்தனர். குறிப்பாக, திருமாவளவன் பேச்சுக்களை ஒரு தரப்பு சி.டி-யாகப் போட்டு, மக்களுக்குக் கொடுத்தது மற்றும் திருமாவளவனை தோற்கடிக்க, சில 'சி'க்கள் தொகுதியில் இறக்கப்பட்டன. இதனால் தேர்தல் பிரசாரத்தின்போதே திருமாவளவன், 'கவனமாகச் செயல்படுங்கள், நமக்கு எதிரிகள் அதிகம்' என்று தேர்தல் பொறுப்பாளர்களிடம் கூறினார். அதோடு தொகுதியில் உள்ள ப்ளஸ், மைனஸ் குறித்து கலந்து ஆலோசித்த திருமாவளவன், தேர்தல் பொறுப்பாளர்களிடம் மைனஸை சரிசெய்யக் கூறினார். கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்தோம்.
வாக்குப் பதிவுக்குப் பிறகும், தவறுகள் நடக்காமலிருக்க கவனத்துடன் இருந்தோம். ஓட்டு எண்ணிக்கையின்போது, கோளாறு காரணமாக 4 இயந்திரங்களின் வாக்குகளை எண்ணவில்லை. பிறகு எண்ணிக்கொள்ளலாம் என்று தேர்தல் அலுவலர்கள் கூறி இயந்திரங்களை, ஓரமாக வைத்துவிட்டனர். 18-வது சுற்றில் திருமாவளவன் 3,000 ஓட்டுகள் பின்னடைவு என்று வாக்கு எண்ணும் மையத்தில் அறிவிக்கப்பட்டது. இதனால், நாங்கள் கவலையடைந்தோம். இந்தச் சமயத்தில்தான், இந்தியத் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்கு எண்ணிக்கையை நாங்கள் பார்த்தபோது எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. அதில், திருமாவளவன் 3000 ஒட்டுகள் முன்னிலையில் இருப்பதாகத் தகவல் குறிப்பிடப்பட்டிருந்தது. உடனடியாக திருமாவளவனின் கவனத்துக்கு இந்தத் தகவலை எடுத்துச் சென்றோம். அவரும், தேர்தல் அதிகாரிகளிடமும் வாக்கு எண்ணிக்கையில் ஈடுபட்ட அதிகாரிகளிடமும் பக்குவமாகப் பேசினார். அதன்பிறகுதான், தவற்றை அதிகாரிகள் கண்டறிந்து அதைத் திருத்தினர்.
இதையடுத்து, வாக்கு எண்ணிக்கை முடிந்து அ.தி.மு.க வேட்பாளர் வெற்றி என்று அறிவிக்க அதிகாரிகள் தயாராகிக்கொண்டிருந்தனர். அப்போதுதான், எங்கள் பூத் ஏஜென்ட்டுகளிடம் திருமாவளவன் பேசினார். அப்போது ஒருவர், தலைவரே, 4 பெட்டிகளை எண்ணவில்லை என்று கூறினார். அதைத் தேர்தல் அலுவலர்களிடம் கூறியபோது, எல்லாவற்றையும் எண்ணிவிட்டோம் என்று கூறினார்கள். ஆனால், ஆதாரத்துடன் பூத் ஏஜென்ட்டுகள் கூறிய பிறகு அந்தப் பெட்டிகள் எண்ணப்பட்டன. அதில் எங்களுக்கு 2,500 ஓட்டுகள் கிடைத்தன. இதனால்தான் திருமாவளவன் வெற்றிபெற முடிந்தது.
அதிகாலை 2.45 மணியளவில்தான் திருமாவளவன் வெற்றிபெற்றதாக அதிகாரபூர்வமாக அறிவித்தனர். 3 மணியளவில் சான்றிதழை திருமாவளவன் பெற்றார். வாக்கு எண்ணிக்கை மையத்திலிருந்து வெளியில் வந்த திருமாவளவன், தேர்தல் பொறுப்பாளர்களைக் கைக்குலுக்கி கட்டிப்பிடித்து பாராட்டினார்'' என்றனர்.
திருமாவளவனை வெற்றிபெற வைத்ததில், காட்டுமன்னார் கோயில் சட்டமன்ற தொகுதியும் சிதம்பரம் சட்டமன்ற தொகுதியும் முக்கியமானதாக வி.சி.க -வினர் தெரிவித்தனர். அதாவது, சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் காட்டுமன்னார்கோயில் தொகுதியில் வி.சி.க-வுக்கு 32,000 ஓட்டுகள் கூடுதலாக கிடைத்துள்ளன. சிதம்பரம் தொகுதியில் 6,000 ஓட்டுகள் அதிகமாகக் கிடைத்துள்ளன. ஆனால் புவனகிரி, அரியலூர், ஜெயங்கொண்டம், குன்னம் ஆகிய 4 தொகுதிகள் திருமாவளவனுக்கு கைகொடுக்கவில்லை. சிதம்பரம் தொகுதியில், கடந்த தேர்தலில் தி.மு.க தோல்வியடைந்த நிலையிலும், சிதம்பரம் நகரப்பகுதியில் படித்தவர்கள் மற்றும் அனைத்து சமூகத்தினர் இருப்பதால்தான் இந்த முறை திருமாவளவனுக்கு அதிக ஓட்டுகள் விழுந்துள்ளன. திருமாவளவன், 5,00,229 ஓட்டுகளும், சந்திரசேகர் 4,97,010 ஓட்டுகளும் பெற்றதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனால், 3,219 ஓட்டுகள் வித்தியாசத்தில் திருமாவளவன் வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு 1,828 தபால் ஓட்டுகள் கிடைத்தன.
சிதம்பரம் தொகுதியில், காலை 8 மணி முதல் அதிகாலை 3 மணி வரை திருமாவளவனுக்கு திக் திக் நிமிடங்களாகவே கடந்துள்ளன.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
அப்ரண்டிஸ் பணி; மற்ற மாநிலத்தவர்களுக்கு `நோ' - போராட்டத்தால் அதிரடி காட்டிய ரயில்வே!
சென்னை ரயில்வே அப்ரண்டிஸ் பணிக்குத் தமிழ்நாட்டு வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் எனத் தமிழ்த் தேசிய பேரியக்கத்தின் போராட்டத்துக்குப் பிறகு, ரயில்வே நிர்வாக அதிரடி அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் மத்திய அரசுப் பணிகளில் தமிழர்கள் புறக்கணிப்படுவதாகத் தமிழ்த் தேசியப் பேரியக்கத்தினர் தொடர்ச்சியாக ஆதாரங்களுடன் குற்றம்சாட்டி வந்தார்கள். இதைக் கண்டித்து திருச்சி பொன்மலை ரயிலே பணிமனையில் இவர்கள் நடத்திய போராட்டமும் சமூக வலைதளங்களில் இவர்கள் உருவாக்கிய தமிழக வேலை தமிழருக்கே என்ற ஹேஸ்டேக்கும் இந்திய அளவில் கவனத்தை ஈர்த்தது. இந்நிலையில்தான் சென்னை ரயில்பெட்டி தொழிற்சாலையில் அப்ரண்டிஸ் பணிக்கு, தமிழ்நாட்டு வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து நம்மிடம் பேசிய தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைமைச் செயற்குழு உறுப்பினர் அருணபாரதி, ``இது எங்கள் போராட்டத்துக்குக் கிடைத்த முதல் வெற்றியாகும். பி.ஹெச்.இ.எல், நெய்வேலி அனல்மின் நிலையம், அஞ்சல் துறை, வருமான வரித்துறை, ரயில்வே உள்ளிட்ட மத்திய அரசுப் பணிகள் அனைத்திலும் தமிழக இளைஞர்கள் திட்டமிட்டே புறக்கணிப்படுகிறார்கள். தமிழ்நாட்டில் செயல்படும் மத்திய அரசு நிறுவனங்களில் தமிழர்களுக்கு வேலை கிடையாது எனச் சொல்வது அநீதியாகும். திருச்சி பொன்மலை ரயில்வே பணி மனையில் அப்ரண்டிஸ் பணிக்கு 300 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். அவர்களில் ஒருவர்கூட தமிழர் கிடையாது. இதைக் கண்டித்து திருச்சி பொன்மலையில் நாங்கள் நடத்திய போராட்டம் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. தமிழக வேலை தமிழருக்கே என்ற ஹேஸ்டேக் இந்திய அளவில் டிரெண்டிங் ஆனது. அப்போராட்டத்தின் முதல் கட்ட வெற்றியாகத் தற்போது சென்னை ரயில் பெட்டி தொழிற்சாலையில் அப்ரண்டிஸ் பணிக்குத் தமிழக வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் 90 சதவிகித பணி இடங்கள் தமிழர்களுக்கே வழங்க வேண்டும் என வலியுறுத்தி எங்கள் போராட்டம் தொடரும்” என்றார்.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
ஒரு ஆச்சரியம்.. தமிழகத்தில் நோட்டா பெற்ற ஓட்டு எவ்வளவு தெரியுமா?
சென்னை: தமிழகத்தில் நோட்டாவுக்கு தனி ரசிகர்களே உள்ளார்கள் என்பது இந்த லோக்சபா தேர்தலிலும் நிரூபணமாகியுள்ளது. இந்த நிலையை மாற்ற வேண்டிய கட்டாயம் அரசியல் கட்சிகளுக்கு உள்ளது என்பதை, தேர்தல் அரசியலில் நம்பிக்கையுள்ளவர்களால் மறுக்க முடியாது.
நாடாளுமன்றம், அல்லது சட்டசபை தேர்தல்களின்போது Nota அதாவது None of the above என்ற ஒரு வாய்ப்பு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வழங்கப்ப்டும். எந்த வேட்பாளரும் பிடிக்கவில்லைங்க என சொல்வோர் இந்த பொத்தானை அழுத்துவர்.
எந்த கட்சி மீதும் நம்பிக்கை இல்லை என்பது, மாற்று அரசியல் தேடுவோருக்கான குறியீடாக பார்க்கப்படுவதால், அது தற்போதுள்ள கட்சிகளுக்கு தார்மீக அழுத்தம் தரக் கூடியதாக உள்ளது.
கடந்த தேர்தல்
கடந்த 2014ம் ஆண்டு, நடைபெற்ற தேர்தலில், தமிழகத்தில், 1.4 சதவீதம் ஓட்டுக்கள் நோட்டாவுக்கு விழுந்தன. மொத்தம், 5,82,062 பேர் நோட்டா பொத்தான் தேயத் தேய அழுத்தி தள்ளினர். அப்போது ஜெயலலிதா மற்றும் கருணாநிதி ஆகிய இரு ஆளுமைகள் தமிழக அரசியலில் இருந்தனர். இப்போது அவர்கள் இல்லாத நிலையில், எத்தனை விழுக்காடு மக்கள் நோட்டாவுக்கு ஓட்டுப் போட்டனர் என்ற அவா இயல்பானது.
[color][size][font]
கட்சிகள் வாக்கு சதவீதம்
அதற்கு முன்பாக, சில தகவலை பாருங்கள்: இந்த லோக்சபா தேர்தலில், திமுக மட்டுமே தனித்து 32.76% வாக்குகளை பெற்றுள்ளது. காங்கிரஸ்- 12.76%, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி- 2.40%, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி- 2.43%, இந்திய யூனியன் ** லீக்- 1.11% வாக்குகளை பெற்றுள்ளன. ஆக மொத்தம், திமுக கூட்டணி பெற்ற மொத்த வாக்கு சதவீதம் என்பது, 51.46% ஆகும்.
[img=0x0]data:image/svg+xml,%3Csvg%20xmlns%3D%22http%3A%2F%2Fwww.w3.org%2F2000%2Fsvg%22%20width%3D%22512%22%20height%3D%22288%22%3E%3C%2Fsvg%3E[/img][/font][/size][/color]
[color][size][font]
அதிமுக பக்கம்
அதிமுக மட்டும் தனித்து- 18.48% வாக்குகளை பெற்றது. பாமக- 5.24%, பாஜக- 3.66%, தேமுதிக- 2.19% வாக்குகளை பெற்றுள்ளன. ஆக மொத்தம், அதிமுக கூட்டணி மொத்த ஓட்டு வங்கி 29.57% மட்டுமேயாகும். பிறர் 17.11 சதவீத வாக்குகளை பெற்று அசத்தியுள்ளனர். இதில் நாம் தமிழர், மநீம போன்ற கட்சிகள், சுயேச்சைகள் வருவர்.[/font][/size][/color]
[color][size][font]
அடடே ஆச்சரியம்
இந்த முறை, தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் நோட்டா வாங்கிய ஓட்டு - 1.28% அதாவது, 541,150 மக்கள் நோட்டாவுக்கு ஓட்டுப் போட்டுள்ளனர். அதாவது முன்பைவிட இப்போது நோட்டாவுக்கு ஓட்டு குறைந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம், முந்தைய தேர்தலைவிடவும், இந்த தேர்தலில் தமிழர்கள் வாக்களிக்க பல ஆப்ஷன்கள் வந்துவிட்டன. மநீம, அமமுக போன்றவை இந்த தேர்தலில் புதிதாக களம் கண்டன. நாம் தமிழரும் முன்பைவிட அதிக மக்களை சென்று சேர்ந்துள்ளது. எனவேதான், வாக்காளர் எண்ணிக்கை கூடியும், நோட்டா எண்ணிக்கை குறைந்துள்ளது. இது சர்ப்ரைஸ்தான்.[/font][/size][/color]
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
பாஜகவுக்கு அணிமாற தயாராகும் திரிணமூல் எம்எல்ஏக்கள்: தேர்தலைத் தொடர்ந்து மம்தாவுக்கு அடுத்த நெருக்கடி
மக்களவைத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ள நிலையில் அக்கட்சி நிர்வாகிகள் பலர் பாஜகவுக்கு அணி மாறத் தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. எம்எல்ஏக்கள் பலரும் பாஜக நிர்வாகிகளுடன் பேசி வருவதாகக் கூறப்படுகிறது.
மேற்கு வங்கத்தில் கம்யூனிஸ்ட்டுகளிடம் இருந்து ஆட்சியைப் பறித்த திரிணமூல் காங்கிரஸ் கட்சி கடந்த 10 ஆண்டுகளாக மாநிலத்தில் கோலோச்சிய நிலையில், பாஜகவின் திடீர் வளர்ச்சி, எழுச்சி மம்தாவுக்கு ஏற்படுத்தியுள்ளது
மக்களவைத் தேர்தலில் மம்தா கட்சி கடந்த ஆண்டு பெற்ற தொகுதிகளில் பலவற்றை இழந்து 22 இடங்களை மட்டுமே பெற்றது. கடந்த தேர்தலில் 2 இடங்கள் பெற்ற பாஜக 18 இடங்களையும் வென்றுள்ளது. காங்கிரஸ் 2 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
பாஜக கைப்பற்றியுள்ள 18 தொகுதிகளில் மொத்தம் 129 சட்டப்பேரவை தொகுதிகள் வருகின்றன. அதாவது 129 தொகுதிகளில் வெல்லக்கூடிய அளவுக்கு பாஜகவுக்கு வலிமை உள்ளது. இதனால் அடுத்த 2 ஆண்டுகளில் மே.வங்கத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் நிலையில், பாஜகவின் இந்த வளர்ச்சி மம்தாவுக்கு மிகப்பெரிய எச்சரிக்கையாக அமைந்துள்ளது.
தேர்தல் தோல்வி ஒருபுறம் என்றால் மறுபுறம் கட்சியைக் காப்பாற்ற வேண்டிய நிலைக்கும் மம்தா பானர்ஜி தள்ளப்பட்டுள்ளார். திரிணமூல் காங்கிரஸ் நிர்வாகிகள் பலரையும் தங்கள் பக்கம் இழுக்க பாஜக முயற்சி மேற்கொண்டுள்ளது. திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் உள்ளிட்டவர்களுடன் பாஜக நிர்வாகிகள் பேசி வருகின்றனர்.
மேற்கு வங்க அரசுக்கு எதிராகப் பல்வேறு ஊழல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. சாரதா சிட்பண்ட் ஊழல் வழக்கில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பலரும் சிக்கியுள்ளனர். இதையடுத்து, சிபிஐ, அமலாக்கத்துறை போன்றவை விசாரணை நடத்தி வருகிறது. பல இடங்களில் அதிரடி சோதனைகள் ஏற்கெனவே நடந்துள்ளன. வரும் காலத்தில் இது அதிகரிக்கும் எனத் தெரிகிறது.
இதனால் திரிணமூல் காங்கிரஸ் நிர்வாகிகள் பலரும் கலக்கத்தில் உள்ளனர்.
மேற்கு வங்க மாநிலத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி‘‘திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 40 எம்எல்ஏக்கள் என்னுடன் தொடர்பில் இருந்து வருகிறார்கள். மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றவுடன், அவர்கள் கட்சியில் இருந்து விலகிவிடுவார்கள். அரசியல் களத்தில் மம்தா சறுக்கப்போகிறார்’’ என ஏற்கெனவே தெரிவித்து இருந்தார்.
எனவே திரிணமூல் காங்கிரஸைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் அணிமாறக்கூடும் என என்ற அச்சம் மம்தாவுக்கு இருப்பதாக கூறப்படுகிறது.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
சர்வசாதாரணமாக முன்னேறிய சீமான்... பேசிப் பேசியே 4 வது இடத்திற்கு வந்த கதை!!
By Sathish K
First Published 25, May 2019, 7:08 PM IST
HIGHLIGHTS
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகம் முழுதும் எதிர்பாராத கவனம் பெற்றிருப்பவை நாம் தமிழர் கட்சியும், புதிதாக களம் கண்ட கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியும் தான்.
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகம் முழுதும் எதிர்பாராத கவனம் பெற்றிருப்பவை நாம் தமிழர் கட்சியும், புதிதாக களம் கண்ட கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியும் தான்.
உலகநாயகன் கமல்ஹாசன் கட்சியான மக்கள் நீதி மய்யம் சுமார் 20 தொகுதிகளில் நல்ல வோட்டு வேட்டை நடத்தி மூன்றாம் இடத்தில் உள்ளது. கோவை, தென் சென்னை, வடசென்னை உள்ளிட்ட தொகுதிகளில் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்றுத் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது.
இவர்கள் ஒருபக்கம் இருக்க, இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சியும் கூட தமிழகம் முழுக்க யார் என நிரூபித்துள்ளது. கடந்த 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் படுகொலைக்குப் பிறகு கட்சி ஆரம்பித்த சீமான் கடந்த 2011 தேர்தலில் திமுக-காங்கிரஸ் கட்சிகளை எதிர்த்துக் கடுமையான பரப்புரையில் இறங்கினார். நெல்லையில் தொடங்கி தமிழகம் முழுதும் சீமானின் பேச்சு தாறுமாறாக ஒலித்தது ஆனால் திமுகவுக்கு எந்தவித காங்கிரசுக்கும் எந்தவித பாதிப்பை ஏற்படுத்தவில்லை.
அதற்குப் பின் 2016 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் பங்கேற்று 1% சதவிகித ஓட்டுகளைப் பெற்ற சீமான், அடுத்ததாக தற்போது நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் சுமார் 4% ஓட்டுகளைப் பெற்றிருக்கிறார். ஆண்கள் 20, பெண்கள் 20 என்று சரிசமமாக வேட்பாளர்களை நிறுத்திய சீமானுக்கு கணிசமான வரவேற்பு கிடைத்தது.
இதில், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கரூர், நாமக்கல், பெரம்பலூர், கிருஷ்ணகிரி, கன்னியாகுமரி ஆகிய ஏழு தொகுதிகளில் நாம் தமிழர் 3 வது இடத்தைப் பிடித்துள்ளது. பல்வேறு தொகுதிகளில் 50000 ஓட்டுகளை சர்வ சாதாரணமாகவே கடந்துள்ளது. அரக்கோணம் -29, 065, ஆரணி 32,151, மத்திய சென்னை 30, 809, வடசென்னை 60 411, தென் சென்னை 50,156, சிதம்பரம் 37,329, கோவை 60, 391 என்று வாக்குகள் பெற்றுள்ள சீமானின் வேட்பாளர்கள் தமிழகம் முழுதும் மொத்தம் 16 லட்சத்து 45 ஆயிரத்து 185 வாக்குகளைப் பெற்றுள்ளார்கள். கடந்த சட்டமன்றத் தேர்தலில் 6 ஆவது இடத்தில் இருந்த நாம் தமிழர் இப்போது 4 வது இடத்தில் உள்ளது.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
அடுத்த அதிர்ச்சி தரும் அறிவிப்பு? திடீரென அதிகளவில் புழக்கத்திற்கு வந்த ரூ.2000 நோட்டுகள்!
மத்திய அரசு மீண்டும் ஒரு அதிர்ச்சி தரும் அறிவிப்பு வெளியிட இருப்பதாக வந்த தகவலால், ரூ.2000 நோட்டுகள் அதிகளவில் புழக்கத்திற்கு வந்துள்ளன.
Samayam Tamil | Updated:May 26, 2019, 07:40AM IST
[url=https://tamil.samayam.com/business/business-news/reason-behind-the-rs-2000-notes-usage-are-suddenly-increased-in-market/articleshowprint/69501627.cms][/url]
அடுத்த அதிர்ச்சி தரும் அறிவிப்பு? திடீரென அதிகளவில் புழக்கத்திற்கு வந்த ரூ.2000...
கடந்த 2014ல் மத்தியில் ஆட்சிக்கு வந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, கறுப்பு பணத்தை ஒழிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுப்பதாக உறுதியளித்தது. அதன்படி, 2016ஆம் ஆண்டு நவம்பர் 8ல் பணமதிப்பிழப்பு அறிவிப்பை பிரதமர் மோடி வெளியிட்டார்.
இதனால் ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாமல் போனது. அதன்பிறகு புதிய ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுகளை ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்தது. இதற்கிடையில் பழைய ரூபாய் நோட்டுகளை வங்கியில் கொடுத்து, அதற்குப் பதிலாக புதிய ரூபாய் நோட்டுகளை பெற்றுக் கொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்தது.
குறிப்பாக ஒரு நபர் ஒரு நாளைக்கு குறிப்பிட்ட அளவிற்கு மட்டுமே பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
இதனால் வியாபாரிகள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோர் தாங்கள் பதுக்கி வைத்திருந்த பழைய ரூபாய் நோட்டுகளை பினாமிகள் மூலம் வங்கிகளில் கொடுத்து புதிய ரூபாய் நோட்டுகளாக மாற்றிக் கொண்டனர். அதில் ஏராளமானோர் கறுப்பு பணத்தை ரூ.2000 நோட்டுகளாக தற்போது பதுக்கி வைத்துள்ளனர்.
இந்நிலையில் புதிதாக பதவியேற்க உள்ள பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, கறுப்பு பண ஒழிப்பின் அடுத்தக்கட்ட நடவடிக்கையாக ரூ.2000 நோட்டுகளை மதிப்பிழக்கச் செய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் ரூ.2000 நோட்டுகளை பதுக்கியவர்கள் தங்களிடம் உள்ள பணத்தை புழக்கத்தில் விட்டுள்ளனர். இதனால் வழக்கத்தை விட அந்த நோட்டுக்கள் தற்போது அதிகளவில் பயன்பாட்டிற்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
விமானத்தில் இருந்து இறக்கி விடப்பட்ட ஜெட் ஏர்வேஸ் முன்னாள் சேர்மன்!
Web Team
Published : 26 May, 2019 08:12 am
வெளிநாடு செல்ல இருந்த ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவரும் அவர் மனைவியும் விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெட் ஏர்வேஸ் விமானத்தின் தலைவராகவும், நிர்வாக இயக்குனராகவும் இருந்தவர் நரேஷ் கோயல். அவர் மனைவி அனிதா நிர்வாக குழு உறுப்பினராக இருந்தார். நிதி நெருக்கடி காரணமாக அந்நிறுவனம் தடுமாறியது. வங்கி கடனை திருப்பி செலுத்த முடியாமலும் ஊழியர்களுக்கு சம்பளம் தர முடியாமலும் திணறிய அந்நிறுவனம் அனைத்து விமான சேவைகளையும் கடந்த மாதம் 17 ஆம் தேதி முதல் தற்காலிகமாக நிறுத்தி வைத்தது.
வங்கிகளின் நெருக்கடி காரணமாக, தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் பொறுப்பில் இருந்து நரேஷ் கோயல் விலகினார். அவர் மனைவியும் பதவியை ராஜினாமா செய்தார்.
ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் சம்பள பாக்கி வைத்துள்ளதால் அந்நிறுவனத்தின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அமைப்பின் தலைவர் கிரண் பவாஸ்கர், ஜெட் ஏர்வேஸ் நிறுவன தலைவர், இயக்குனர்கள், நிர்வாக குழு உறுப்பினர்களின் பாஸ்போர்ட்டுகளை முடக்க வேண்டும் என போலீசில் கூறியிருந்தார்.
இந்நிலையில், துபாய் செல்வதற்காக, நரேஷ் கோயலும் அவர் மனைவி அனிதாவும் மும்பை விமான நிலையத்தில் இருந்து எமிரேட்ஸ் விமானத்தில் ஏறி அமர்ந்தனர். அப்போது இருவரையும் குடியுரிமை அதிகாரிகள் வெளிநாடு செல்ல அனுமதி மறுத்தனர். பின்னர், புறப்பட இருந்த விமானத்தில் இருந்து அவர்களை கீழே இறக்கினர். போலீசில் புகார் இருப்பதால் இந்த நடவடிக்கையை எடுத்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
லண்டன்: உலகின் நாடுகளில் பெரும்பாலானவற்றில் அலுவலக வேலை நாட்கள் 6 நாட்களாக இருக்கும்போது இங்கிலாந்து நாட்டிலுள்ள ஒரு நிறுவனம் தனது ஊழியர்களின் சந்தோசத்திற்காக வாரத்தில் 4 நாட்கள் மட்டும் வேலைக்கு வந்தால் போதும் என்று அறிவித்து ஊழியர்களை திக்குமுக்காட வைத்துள்ளது. பரிசோதனை முயற்சியாக இந்நிறுவனம் 9 ஊழியர்களை மட்டும் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு மட்டும் இந்த சலுகையை அளித்துள்ளது.
நம்மில் பெரும்பாலானவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை முடிந்து திங்கள் கிழமை வந்தால் அடுத்து எப்படா சனிக்கிழமை வரும் என்று ஆவலோடும் ஏக்கத்தோடும் காத்திருப்போம். ஒவ்வொரு நாளும் கவுண்ட்டவுன் சொல்லிக்கொண்டு உட்கார்ந்திருப்போம். ஆனால் வேலை மட்டுமே பெரிதாக செய்திருக்க மாட்டோம். அலுவலகம் போனால் உருப்படியாக வேலையை பார்க்காமால் மிகவும் சீரியசாக அரட்டை அடித்துகொண்டு பொழுதை போக்கிக் கொண்டு இருப்போம்.
அலுவலகத்தில் நம்முடைய மேலதிகாரிகளோ அல்லது உரிமையாளர்களோ நம்மை திட்டினாலோ அல்லது கடுப்பேற்றினாலோ உடனடியாக நம்முடைய மனதில், ச்சே என்னடா வாழ்க்கை இது, பேசாமல் லீவு போட்டுவிட்டு போயிடலாமா அல்லது ரிசைன் பண்ணிட்டு ஊர் பக்கம் போய் செட்டிலாகிடலாமா என்று கூட மனம் வெறுத்துப்போகும்.
இன்றைக்கு உலகம் முழுவதிலும் உள்ள பெரும்பாலான நிறுவனங்கள் அலுவலக வேலை நாட்களை 5 நாட்களாக குறைத்துவிட்டன. ஒரு சில நிறுவனங்கள் சனிக்கிழமையன்று மட்டும் அரை நாளை மட்டும் வேலை நாளாக கடைபிடிப்பதுண்டு. இன்னும் சில நிறுவனங்கள் மாதத்தில் முதல் மற்றும் மூன்றாவது சனிக்கிழமைகளை அலுவலக வேலை நாட்களாக அமைத்துக்கொண்டுள்ளன.
இந்தியாவில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் நுழைந்து ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியதில் இருந்து அலுவலக வேலை நாட்களின் எண்ணிக்கை 6 நாட்களில் இருந்து 5 நாட்களாக குறைந்துவிட்டன. அதிலும் சில தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் 8 மணிநேர வேலை என்பது கண்டிப்புடன் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இதனால் ஊழியர்கள் தங்கள் வேலைகளை ஆத்ம திருப்தியுடனும் கூடுதல் உற்சாகத்துடனும் முழு ஈடுபாட்டுடனும் செய்து முடிக்க முடிகிறது. தங்களின் உற்பத்தித் திறனையும் அதிகரித்துக்கொள்ள முடிகிறது.
வெளிநாடுகளில் சில நிறவனங்கள் தங்கள் நிறவனத்தின் உற்பத்தி திறனை அதிகரிக்கும் நோக்கில் வார வேலை நாட்களை ஐந்திலிருந்து நான்கு நாட்களாக குறைத்து வருகின்றன. உலகின் பல நாடுகளிலும் வார வேலை நாட்களை 4 நாட்களாக குறைப்பதற்கு முயற்சிகளை எடுத்துவருகின்றன.
கடந்த 2018ஆம் ஆண்டில் நியூசிலாந்து நாட்டிலுள்ள பெர்பெச்சுவல் கார்டியன் (Perpetual Guardian) என்னும் நிறுவனம் 5 நாட்களாக இருந்து வந்த வேலை நாட்களை 4 நாட்களாக குறைத்தது. இதே பாணியை பின்பற்றி இப்பொழுது இங்கிலாந்து நாட்டில் லண்டன் நகரத்திலுள்ள போர்ச்சுகலிஸ் லீகல் (Portcullis Legals) என்னும் சட்ட நிறுவனம் தனது அலுவலக வேலை நாட்களை ஐந்திலிருந்து நான்கு நாட்களாக குறைத்து அறிவித்துள்ளது.
தற்சமயம் பரிசோதனை முயற்சியாக 9 ஊழியர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு 5 மாதங்களுக்கு மட்டும் சோதனை அடிப்படையில் நான்கு நாட்கள் என்ற சலுகையை அறிவித்துள்ளது. இது குறித்து இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ட்ரெவர் வொர்த் (Trevor Worth) தெரிவிக்கையில், தற்போது கொண்டுவரப்பட்டுள்ள இந்த புதிய திட்டத்தால் அலுவலகத்திற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படப்போவதில்லை.
அதோடு எங்களின் வாடிக்கையாளர்களுக்கும் எந்த சிரமமும் ஏற்படப்போவதில்லை. இந்த பரிசோதனை முயற்சி வெற்றிபெற்றால் படிப்படியாக நிறுவனம் முழுவதுக்கும் செயல்படுத்தப்போகிறோம் என்று உற்சாகமாக தெரிவித்தார்.
தங்களின் குடும்பத்திற்காகவும், மன நிம்மதி மற்றும் பொழுதுபோக்கிற்காகவும், இதர அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளவும் ஊழியர்களுக்கு கூடுதலாக ஒரு நாள் விடுமுறை கிடைப்பதால் அவர்கள் அலுவலகத்தல் முன்பை விட கூடுதல் உற்சாகத்துடன் வேலை செய்ய முடியும் என்றும் கூறினார்.
நம் ஊரில் இப்போதுதான் பல நிறுவனங்கள் வாரத்தில் 2 நாட்கள் விடுமுறையை அறிவித்து செயல்படுத்தி வருகின்றன. இந்த 3 நாள் லீவு எப்போ வருமோ. வேலைன்னு பார்த்தா இந்த மாதிரி கம்பெனியில வேலை செய்ய நினைக்கறீங்களா
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
சி .ஐ வாழ்க்கையை மறக்கமுடியுமா?!' - டி.எஸ்.பி-க்கு சல்யூட் அடிக்கும் எம்.பி #ViralPhoto
தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் டி.எஸ்.பி ஒருவருக்கு எம்.பியாகத் தேர்வு செய்யப்பட்ட முன்னாள் எஸ்.ஐ ஒருவர் சல்யூட் அடிக்கும் புகைப்படம் ஆன்லைனில் வைரலாகி வருகிறது.
ஆந்திர மாநிலத்தில்தான் இந்தச் சம்பவம் நடந்திருக்கிறது. ஆந்திர மாநிலக் காவல்துறையில் சர்க்கிள் இன்ஸ்பெக்டராக இருந்தவர் கொரண்டலா மாதவ். இவர் தற்போது, அனந்த்பூர் மாவட்டத்தில் உள்ள ஹிந்த்பூர் தொகுதி எம்.பியாகத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட மாதவ், சிட்டிங் எம்.பியான தெலுங்கு தேசம் கட்சியின் கிறிஸ்டப்பா நிம்மலாவைவிட 1,40,748 வாக்குகள் அதிகம் பெற்று அமோக வெற்றி பெற்றிருக்கிறார். போலீஸார் சிலர் நின்றிருக்க, டி.எஸ்.பி மஹபூப் பாஷாவுக்கு அவர் சல்யூட் அடிக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்தப் புகைப்படம் வைரலான நிலையில், எம்.பி ஒருவர் போலீஸ் அதிகாரிக்கு சல்யூட் அடிக்கலாமா போன்ற புரோட்டோக்கால் விஷயங்கள் குறித்து நெட்டிசன்கள் விவாதித்து வந்தனர். அதற்கு விளக்கமளித்துள்ள மாதவ், வாக்கு எண்ணிக்கையின்போது தனது முன்னாள் உயர் அதிகாரியான பாஷாவைப் பார்த்ததாகவும், அவருக்கு மரியாதை செலுத்தும்விதமாக சல்யூட் அடித்ததாகவும் கூறியிருக்கிறார். மேலும், அவருக்கு தான் முதலில் மரியாதை செலுத்தியதாகவும் பின்னர் பதிலுக்கு வணக்கம் வைத்ததாகவும் கூறியிருக்கும் மாதவ், `தனிப்பட்ட முறையில் அவரது குணநலன்கள் என்னை ஈர்ப்பவை. பரஸ்பரம் மரியாதை செய்யவே சல்யூட் அடித்தேன்' என்று விளக்கம் கொடுத்திருக்கிறார்.
கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ததிபாத்ரி பகுதியில் உள்ள சின்னபோலமாடா கிராமத்தில் விநாயகர் சிலை கரைப்பதில் ஏற்பட்ட தகராறு பெரும் வன்முறையாக வெடித்தது. அதில், ஒருவர் கொல்லப்பட்டார். மேலும் பலர் படுகாயமடைந்தனர். அப்போது அப்பகுதியில் மாதவ் போலீஸ் அதிகாரியாகப் பணியாற்றி வந்தார். அப்போது, அனந்த்பூர் தொகுதியின் எம்.பியான ஜே.சி.திவாகர் ரெட்டிக்கும் இவருக்கும் பெரிய வாக்குவாதமே நடந்தது. தெலுங்குதேசம் கட்சியைச் சேர்ந்த திவாகர் ரெட்டி, தனது கருத்துகளால் அவ்வப்போது சர்ச்சையில் சிக்குபவர். போலீஸாரை அவமதிக்கும் வகையில் பேசிய திவாகர் ரெட்டிக்கு, மாதவ் பதிலடி கொடுக்கவே, அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
காவலர் சீருடை இல்லாமல் தனித்து நேருக்கு நேர் சந்திக்கத் தயார் என்று சவால்விட்ட எம்.பி திவாகர் ரெட்டியை, போலீஸாரை அவமதிக்கும் வகையில் ஆளுங்கட்சியினர் யார் பேசினாலும் அவர்கள் நாக்கை துண்டித்துவிடுவேன் என கடுமையாக மாதவ் பேசியிருந்தார். அந்த சம்பவத்துக்குப் பின்னர் போலீஸ் பணியைத் துறந்து தீவிர அரசியலில் களமிறங்கினார் மாதவ். அரசியலில் களமிறங்கி ஓராண்டுக்குள் எம்.பியாகியிருக்கிறார் அவர். கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பரில், போலீஸ் பணியிலிருந்து அவர் விருப்ப ஓய்வுபெற்றார். அவருக்குத் தேர்தலில் போட்டியிட ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் இந்த முறை வாய்ப்பளித்தது. முதலில் அவரது விருப்ப பணி ஓய்வு முடிவை காவல்துறை ஏற்கவில்லை என்பதால், அவரது வேட்புமனுவையும் தேர்தல் ஆணையம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, மாநில நிர்வாக ஆணையம் தலையிட்டு அவரது ராஜினாமாவை ஏற்கும்படி ஆந்திர டி.ஜி.பிக்கு உத்தரவிட்டது. இதையடுத்தே அவரது வேட்புமனு ஏற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
அறம் பழகு: மதுரையில் நடந்த நெடுஞ்சாலைக் கொலையால் உயிரிழந்தவரின் மகன் படிப்புக்கு உதவலாமே!
Published : 27 May 2019 12:53 IST
Updated : 27 May 2019 16:42 IST
க.சே.ரமணி பிரபா தேவி
சிசிடிவி காட்சி, உயிரிழந்த பாஸ்கர்
மதுரை நெடுஞ்சாலையில் கற்களைப் போட்டுவைத்து விபத்தை ஏற்படுத்திய விஷமியால், குடும்பத்தலைவர் ஒருவர் அநியாயமாக உயிரிழந்த நிலையில், அவர் மகனின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. மகன் படிக்க உதவி தேவைப்படுகிறது.
என்ன நடந்தது?
தவறவிடாதீர்
அறம் பழகு: அப்போது ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் கோச்; இப்போது வாட்ச்மேன் - பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட ராகவனின் மகள் படிப்புக்கு உதவலாமே?
மதுரை திருநகரை அடுத்த பாண்டியன் நகரில் வசித்தவர் பாஸ்கர் (48). மதுரை அண்ணாநகர் பகுதியில் உள்ள தனியார் ஸ்கேன் சென்டரில் லேப் டெக்னீசியனாக வேலை செய்துவந்தார். இவரது மனைவி ஸ்ரீதேவி (42), தனியார் பள்ளியில் ஆசிரியராக உள்ளார். இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர்.
கடந்த ஏப்ரம் மாதம் 23-ம் தேதி பாஸ்கர் வேலைமுடிந்து நள்ளிரவு 1 மணிக்கு தனது இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். திருப்பரங்குன்றம் பூங்கா பேருந்து நிலையம் பகுதியில் விபத்து ஏற்பட்டதை அடுத்து, மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பாஸ்கர் உயிரிழந்தார்.
காவல்துறை விசாரணையில் கிடைத்த சிசிடிவி காட்சிகள் மூலம் பாஸ்கர் விபத்தில் இறக்கவில்லை என்றும் அவர் செயற்கையான விபத்தினால் கொல்லப்பட்டிருக்கிறார் என்பதும் தெரியவந்தது. இதில் சம்பந்தப்பட்ட நபர் சாலையின் நடுவில் மூன்று பெரிய கற்களை வைத்து வாகனத்தை நிலைதடுமாறி விழ வைத்து, பாஸ்கரின் செல்போன் மற்றும் உடைமைகளைப் பறித்துக் கொண்டது தெரிய வந்தது. இதனால் பரிதாபமாக உயிரிழந்தார் பாஸ்கர்.
அதிர்ச்சியில் இருந்து மீளாத குடும்பம்
தாய் மாமாவையே திருமணம் செய்துகொண்டவர் ஸ்ரீதேவி. சிறுவயதில் இருந்து கண் முன்னால் பார்த்து வளர்ந்த கணவர் உயிரிழந்ததை ஸ்ரீதேவியால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதுகுறித்து வேதனையுடன் பகிர்ந்துகொள்கிறார் ஸ்ரீதேவியின் சகோதரி பிரியா.
''சம்பவம் நடந்து ஒரு மாசத்துக்கும் மேல ஆச்சு. ஆனா இன்னும் ஸ்ரீதேவி தடுமாற்றத்தோடதான் இருக்கா. ரொம்ப கஷ்டமா இருக்கு. சரளமான பேச மாட்டேங்கறா. நேத்துதான் கவுன்சிலிங் கூட்டிட்டு போனேன். ரெண்டு பையன்களும் இன்னும் இயல்புக்கு வரலை. வீடே உடைஞ்சு போய் இருக்கு.
ஃப்ரேமுக்குள் அடங்கிவிட்ட தந்தை பாஸ்கர்.
மாமா இறந்ததில் இருந்து இப்போ வரைக்கும் 2.5 லட்ச ரூபாய்க்கு மேல செலவாகிடுச்சு. விபத்தை ஏற்படுத்தின கல்லைக் கூட நாங்கதான் பாக்ஸ் பண்ணிப் பாதுகாப்பு பண்ணி இருக்கோம். எப்படியோ நகையை அடமானம் வச்சு எல்லா செலவையும் சமாளிச்சுட்டோம். இனி பெரிய பையன் முகேஷ் கண்ணாவுக்கு காலேஜ் ஃபீஸ் கட்டணும். 12-ம் வகுப்புல அவன் 364 மார்க் வாங்கினான்.
46 ஆயிரம் ரூபாய் தேவை
இப்போ மதுரை அமெரிக்கன் கல்லூரில பிஎஸ்சி பயோ கெமிஸ்ட்ரி சேர்த்திருக்கோம். 3 நாள்ல 46 ஆயிரம் ரூபாய் ஃபீஸ் கட்டணும். இருந்த நகைகளும் அடமானத்துக்கு போயிருச்சு. மாமாவையும் இழந்தாச்சு. இனி இவங்களாவது நல்லா இருக்கணும். அதுக்கு முகேஷ் நல்லாப் படிக்கணும். அதுக்கு நீங்க உதவி செஞ்சா நல்லா இருக்கும்'' என்று தயங்கித் தயங்கிக் கேட்கிறார் பிரியா.
உதவ விரும்பும் உயர் உள்ளங்களுக்காக ஒரு குடும்பமே காத்து நிற்கிறது.
முகேஷ் கண்ணாவின் சித்தி பிரியாவின் தொடர்பு எண்: 8668035875
*
அவரின் வங்கிக் கணக்கு எண்: R.PRIYA,
A/C NO:10943859943,
IFSC:SBIN0000853,
State Bank of India, Kanchipuram
- க.சே. ரமணி பிரபா தேவி, தொடர்புக்கு: [email protected]
*
தங்களின் குழந்தைகளுக்கோ தெரிந்தவர்களுக்கோ படிப்பு உதவி தேவைப்படும் வாசகர்கள் [email protected] என்ற மெயில் ஐடி மூலம் 'இந்து தமிழ் திசை'யைத் தொடர்புகொள்ளலாம்.
'இந்து தமிழ்' வாசகர்கள் உங்களுக்காக உதவக் காத்திருக்கின்றனர்.
•
|