Posts: 337
Threads: 6
Likes Received: 168 in 136 posts
Likes Given: 21
Joined: Apr 2022
Reputation:
0
♨️♨️♨️
♨️
முதல்நாள் இரவு
தனது அப்பா போன் செய்த விபரத்தை நிதானமாக
நேத்ராவிடம் கூறியதும்
சந்தோஷத்தில்
♨️
அவனைக் கட்டிக் கொண்டு முத்தமிட்டவள்
" தாங்க் காட் ...
இனி நமக்கு எந்த பிரச்சனையும் இல்லை ...
உனக்கு ஜாப் கிடைச்சதுமே
மேரேஜ் தான் "
என்று குதூகளித்தாள் ...
♨️
" அதெப்படி ?....."
என்று ஏதோ சொல்ல வந்து
பாதியில் நிறுத்தியவன் .....
" முதல்ல என் கோர்ஸ் முடியட்டும் ....
மேரேஜ் பத்தி பிறகு பேசலாம் "
என்றவன் மீண்டும்
அணைத்து முத்தமிடுதலைத் தொடர்ந்தான் ...
♨️♨️♨️♨️
♨️
மறுநாள் காலை
நேத்ராவை டிஸ்சார்ஜ் செய்து
அவளது
அப்பார்ட்மெண்ட்க்கு அழைத்துச் சென்று விட்டுவிட்டு
♨️
" நான் கிளம்பறேன் நேத்ரா ....
" என்றவனைத் தடுத்தவள்
" ஏய் நீ பைவ் டேஸ் லீவ் போட்டிருக்க தானே?
அப்புறம் ஏன் இப்பவே கிளம்பனும் ?
லீவு முடியிற வரைக்கும்
என் கூடவே இருந்துட்டு போடா "
என்று
அவனது கழுத்தைக் கட்டிக் கொண்டு
கொஞ்சினாள் ...
♨️♨️♨️♨️
•
Posts: 337
Threads: 6
Likes Received: 168 in 136 posts
Likes Given: 21
Joined: Apr 2022
Reputation:
0
♨️♨️♨️
♨️
அவளின் அழகு முகத்தை
அருகில் கண்ட மயக்கத்தில்
" இட்ஸ் ஓகே ...
இருந்துட்டா போச்சு "
என்று அணைத்துக்கொண்டான் ...
♨️
இருவரும்
அணைத்தபடி காதலில் புரண்ட
அதே நேரம் இங்கே மேலமடை
இசக்கியான் வீட்டில்
அவரது மகள் நாச்சியாவுக்கும்
பூபதியின் மகன் முத்துபாண்டிக்கும்
நிச்சயதார்தம் நடந்துகொண்டிருந்தது ....
♨️
கைகளை மடித்து தலைக்கு ீ
கீழே வைத்து கொண்டு
மல்லாந்துப் படுத்திருந்தவனின்
டீசர்ட் அணிந்த மார்பை வருடியபடி
" இன்னும் சிக்ஸ் மந்த் தான் சத்யன் ...
♨️
அப்புறம்
நம்ம மேரேஜ் ...
இந்த வாடகை அப்பார்மெண்டை
தலை முழுகிட்டு டபுள்
பெட்ரூமோட ஒரு பிளாட் வாங்கனும் ...
சொந்தமா ஒரு கார் ... த்ரீ மந்த்க்கு
♨️
ஒரு முறை ஹில்ஸ் ஸ்டேஷன்ஸ்க்கு டூர் போகனும் ...
ஒரு நாலு வருஷமாவது லைப்பை நல்லா என்ஜாய் பண்ணிட்டு அப்புறமா
ஒரே ஒரு குழந்தை மட்டும் பெத்துக்கலாம்"
என்று
தனது கனவை காற்று வாக்கில் சொல்லிக்கொண்டே
போனாள்....
♨️♨️♨️
•
Posts: 337
Threads: 6
Likes Received: 168 in 136 posts
Likes Given: 21
Joined: Apr 2022
Reputation:
0
♨️♨️♨️
♨️
எல்லாவற்றுக்கும் சிரிப்புடன்
" ம் ம் ...."
என்றானேத் தவிர வேறு
எதுவும் பேசவில்லை ....
♨️
அன்று இரவு
அவன் அப்பாவிடமிருந்து போன் வந்தபோது
" ம் ம் பேசு பேசு "
என்றாள் உற்சாகமாக ....
♨️
" உனக்கு ரூட் கிளியர்
ஆனதும் போகுதுன்னதும் பேசச் சொல்றியா ?
சரியான சுயநலம் பிடிச்சவடி நீ "
என்று கூறி நேத்ராவின்
முதுகில் அடித்துவிட்டு
தனது மொபைலை ஆன் செய்து ....
" சொல்லுங்கப்பா ?"
என்றான் .....
♨️
" சத்யா ....
இந்த மகாலட்சுமி வரத்தான்
இத்தனை நாளா முத்துவுக்கு கல்யாணம் தட்டிப் போச்சு போலருக்குடா மவனே ....
பொண்ணு தேவதை மாதிரி இருக்கா ....
" என்று பூரிப்பில் புலம்பினார் பூபதி ...
♨️
" ம் ம் எனக்கும் ஞாபகம் இருக்குப்பா ...
♨️♨️♨️♨️
•
Posts: 337
Threads: 6
Likes Received: 168 in 136 posts
Likes Given: 21
Joined: Apr 2022
Reputation:
0
♨️♨️♨️
♨️
சின்ன வயசுலயே அமைதியா அழகா இருப்பா "
என்றவன்
முதல்நாள் அப்பா எச்சரித்தது ஞாபகம் வர ...
" ஸாரிப்பா ...
அண்ணி அழகா அமைதியா இருப்பாங்க
" என்றான் ....
♨️
" ஆமாய்யா ....
அடக்கமான பொண்ணு ....
பார்த்ததும் ரெண்டு குடும்பத்துக்கும்
பிடிச்சுப் போய்ட்டதால
அங்கயே உடனே தட்டு மாத்திக்கிட்டோம் ....
கல்யாணம் கூட அடுத்த மாசம்
இருபத்திரெண்டுல தேதி வச்சாச்சு சத்யா"
என்றார் ...
♨️
இவ்வளவு அவசரமாகவா?
என்று கேட்க நினைத்து கேட்காமல் "
ஒரு மாசம் தானேப்பா இருக்கு ?
அதுக்குள்ள எல்லா ஏற்பாடும் செய்ய முடியுமா? "
என்றவன் கொஞ்சம் தயங்கி "
பணம் வச்சிருக்கீங்களாப்பா ?"
என்று கேட்டான்...
♨️
இளைய மகன்
அக்கரையுடன் கேட்டதும் நெகிழ்ந்து
போன பூபதி "
நம்ம வீட்டுலயா காசுக்கு பஞ்சம் வந்திடப் போகுது ?
♨️
அந்த மசானி புண்ணியத்தில்
ஒரு குறையும் இல்லை சத்யா ....
என்ன ஒண்ணு?
நம்ம வீட்டு மொத கல்யாணம் ...
கொஞ்சம் சிறப்பா செய்யனும் ....
கறிக்கஞ்சி போடலைன்னா
காறித்துப்பிட்டு போய்டுவானுக பயபுள்ளைக ...
கை வசம் நாலு லட்சம் இருக்கு ...
♨️
பத்தாததுக்கு
வள்ளியூர் செட்டியார் கிட்ட நிலத்துப்
பத்திரத்தை அடமானம் வச்சு நாலு லட்சம் வாங்கலாம்னு யோசனைல இருக்கேன் ...
♨️
வீட்டுல யாருக்கும் இன்னும் சொல்லலை ...
உனக்குத்தான் மொதல்ல சொல்றேன் "
என்றார் ...
♨️♨️♨️
•
Posts: 337
Threads: 6
Likes Received: 168 in 136 posts
Likes Given: 21
Joined: Apr 2022
Reputation:
0
♨️♨️♨️♨️
♨️
கடனா ? ....
வட்டி அதிகமாயிடுமே?
அதுவும் நிலத்தை அடமானம் வச்சு வாங்கனுமாப்பா?" கவலையாகக் கேட்டான் ...
♨️
" வேற என்ன ராசு செய்றது ?
வீட்டுல நூறு பவுனுக்கு நகைகள் இருக்கு தான் ...
கல்யான நேரத்துல அதை அடமானம் வச்சிப்புட்டு வீட்டு பொம்பளைக எதை போட்டுக்குவாக?
♨️
அதுவுமில்லாம
அதெல்லாம் பொம்மிக்காக வாங்கி வச்சது ...
திடீர்னு மாப்ளை வீட்டுக்காரவுக வந்துடுவாங்க ... வயசுப்புள்ளையோட
நகைகளை தொடக்கூடாதுடா மவனே ...
♨️
விடுய்யா நிலப் பத்திரம் தானே?
அடுத்த வருஷம் அறுவடைக்கு மீட்டுட்டாப் போச்சு ....
எனக்கு எந்த கவலையும் இல்லை சத்யா...
நீ படிச்சு வேலைக்குப் போனதும்
எல்லாத்தையும் பார்த்துக்கப் போற ...
அப்புறம் எனக்கென்ன
" என்று தைரியமாகக் கூறினார் ...
♨️
தன்மீதான
ப்பாவின் நம்பிக்கை மனதை என்னவோ செய்ய
" சரிப்பா நீங்க ஏற்பாடு பண்ணுங்க ...
ஆனா நான்தான் அண்ணன்
மேரேஜ்க்கு வரமுடியாது போலிருக்கு
" என்று வருத்தமாகக் கூறினான் ...
♨️♨️♨️
•
Posts: 337
Threads: 6
Likes Received: 168 in 136 posts
Likes Given: 21
Joined: Apr 2022
Reputation:
0
♨️♨️♨️
♨️
ஏன்ப்பா இப்படி சொல்ற? ....
லீவு தரமாட்டாகளா?"
என்று பூபதி பதட்டமாகக் கேட்க ....
♨️
" இல்லப்பா
அப்போ தான் எனக்கு
பைனல் எக்ஸாம்ஸ் நெருங்குது ...
நிறைய ஒர்க் இருக்கும் ...
ஒரு மணிநேரம் கூட ஓய்வு கிடைக்காது
" என்று சத்யன் கூறியதும் .... "
அப்படின்னா கல்யாணத்தை
ஒரு மாசம் தள்ளி வைக்கலாமா?"
என்று கேட்டார் பூபதி ...
♨️
" அய்யோ அதெல்லாம் வேணாம்ப்பா ....
ற்கனவே ரொம்ப நாள் கழிச்சு
இந்த இடம் அமைஞ்சிருக்கு ....
இன்னும் நாளை தள்ள வேண்டாம் ...
நீங்க ஏற்பாடு பண்ணுங்க ...
எக்ஸாம்ஸ் முடிஞ்சதும்
நான் வந்து அண்ணா அண்ணியைப் பார்த்துக்கிறேன் "
என்றான் ...
♨️
அதன்பிறகு
சிறிதுநேரம் குடும்ப விஷயங்களைப்
பேசிவிட்டு மொபைலை
அனைத்து வைத்தான் ....
♨️
அவன் பேசி முடித்ததுமே பின்புறமாக வந்து
அவன் முதுகில் தாவியேறிய நேத்ரா
" இவ்வளவு நேரமாவா பேசுவ "
என்றபடி
அவனது தலைமுடியை கலைத்து
விளையாடினாள் .....
♨️
அடுத்த மூன்று நாட்களும் நேத்ராவுடன்
பெங்களூரை
சுற்றியவன் நான்காவது
நாள் மாலை டெல்லிக்கு கிளம்பினான் ...
♨️♨️♨️♨️
•
Posts: 337
Threads: 6
Likes Received: 168 in 136 posts
Likes Given: 21
Joined: Apr 2022
Reputation:
0
♨️♨️♨️♨️
♨️
டெல்லியிலிருந்து
பஞ்சாப் சென்றவன்
அதன்பின் தன் படிப்பில் கவணம் செலுத்தினான்....
♨️
தினமும் வீட்டுக்கு போன் செய்து
கல்யாண வேலைகளைப் பற்றிக் கேட்டு
இவனும் அங்கே இருப்பது போல்
ஒரு எண்ணத்தை உண்டாக்கினான் ....
♨️
நேத்ராவுடனானா நேசமும்
நாளுக்குநாள் வளர்ந்தது .....
சத்யனின் தேர்வு காலம் தொடங்கியது ...
♨️
முத்துபாண்டி , நாச்சியா திருமண நாளும் வந்தது ....
♨️♨️♨️♨️
காலையிலிருந்தே வீட்டிலிருந்த
அத்தனை பேரும் மாற்றி மாற்றி போன் செய்து
அவன் திருமணத்தில் இல்லாத வருத்தத்தை
அழுது தீர்த்தனர் ....
♨️
அதுவும் சரசூ பாட்டிக்கு ஆறுதல் கூறுவதற்குள்
சத்யனுக்குப் போதும் போதும்
என்றாகிவிட்டது ....
♨️♨️♨️
முத்துவின் திருமணம் முடிந்தவுடனேயே
தனது மொபைலில்
எடுத்த திருமணப் போட்டோக்களை
உடனடியாக
சத்யனுக்கு மெயில் செய்தாள்
அவன் தங்கை பொம்மி ....
♨️
இரவு ஹாஸ்டல்
அறைக்கு திரும்பியதும் தனது
லாப்டாப்பைத் திறந்து
அண்ணனின் திருமணப் படங்களைப் பார்த்தான் ...
♨️
அத்தனை சொந்தங்களையும்
கவர் செய்த அற்புதமான திருமணப் போட்டோக்கள் ....."
என் அண்ணன் மேரேஜ் ...
♨️
ஆனா நான் மட்டும்
அங்கே இல்லாம போய்ட்டேனே?"
என்று பார்க்கப் பார்க்க
சத்யனின் கண்கள் கலங்கியது ...
♨️♨️♨️♨️
•
Posts: 337
Threads: 6
Likes Received: 168 in 136 posts
Likes Given: 21
Joined: Apr 2022
Reputation:
0
♨️♨️♨️
♨️
முத்துவின்
அருகே மஞ்சள் தாலி கழுத்தில்
மின்ன நின்றிருந்த நாச்சியா ...
இருவரும் மிகப் பொருத்தமாக இருந்தனர் ....
♨️
சிறுவயதில் பார்த்தபோது இருந்த
அழகும் அமைதியும் கொஞ்சமும்
குறையாத முக அமைப்பு ...
♨️
நிஜத்தில் மகாலட்சுமியின்
தோற்றம் இப்படித்தான் இருந்திருக்குமோ
என எண்ணும்படியான பெண் .....
அப்பா கூறியது போல்
இப்படி ஒரு பெண் கிடைக்கத்தான்
அண்ணனின் கல்யாணம்
♨️
இத்தனை நாட்கள் தள்ளிப் போனது போலிருக்கு ,
என்று எண்ணினான் ...
♨️
பத்து நாட்களுக்கு ு
முன்பு
மெயிலில் வந்திருந்த
முத்துபாண்டியின் திருமணப் பத்திரிக்கையின்
பிரதியை ஓபன் செய்து மீண்டும்
ஒருமுறைப் பார்த்தான் ...
♨️
அவர்கள் ீ
விட்டு குலதெய்வம் பொம்மியம்மாள் துணையுடன்
என்று
தொடங்கி தென்மாவட்ட மக்களுக்கே
உரித்தான மிக நீண்ட வரிசையில்
பத்துவூர் சொந்தங்களின்
பெயர்களை பட்டியலிட்ட மிகப் பெரிய
திருமணப் பத்திரிக்கை ....
♨️♨️♨️
•
Posts: 337
Threads: 6
Likes Received: 168 in 136 posts
Likes Given: 21
Joined: Apr 2022
Reputation:
0
♨️♨️♨️♨️ ♨️♨️♨️♨️மீண்டும்♨️♨️♨️♨️♨️♨️♨️♨️♨️
♨️♨️♨️♨️♨️ அடுத்த அப்டேட் 4 இல் ♨️சந்திப்போம்♨️♨️♨️♨️♨️
இது என் நண்பன்
♨️வினோத்தின் கதை♨️
His mail id.
♨️Vinothyoung55k;♨️
♨️♨️♨️♨️♨️♨️♨️♨️♨️♨️♨️♨️
•
Posts: 337
Threads: 6
Likes Received: 168 in 136 posts
Likes Given: 21
Joined: Apr 2022
Reputation:
0
♨️♨️♨️♨️
ஊட்டிலயா?
தம்பி அங்க ரொம்ப குளிரும்னு சொல்லுவாங்களே ?
உனக்கு குளிர் ஒத்துக்காதேய்யா ?
வேற இடத்துல வேலை தேடலமே சத்யா?"
என்று கவலையுடன் கேட்டார் பூபதி ...
♨️
" இல்லப்பா அது சின்ன பவர் ஸ்டேஷன் ...
முதல்ல இதுபோல சின்ன இடத்திலிருந்து ஆரம்பிக்கலாம்னு நான்தான் இந்த இடத்தை செலக்ட் பண்ணேன் ....
குளிர் ஒத்துக்காது தான் ...
வீசிங் வரும் தான் ....
மருந்து எடுத்துக்கிட்டா சரியாப் போகும்ப்பா "
என்று சமாதானம் செய்தான் ...
♨️
♨️
♨️
ஆனாலும் பெற்ற மனம் கேட்கவில்லை .... "
யோசிச்சு செய் சத்யா .....
எனக்கு உன் உடல்நிலைதான் முக்கியம் "
என்றார்...
♨️
" அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன்ப்பா ... ீ
விட்டுல எல்லாரும் எப்படியிருக்காங்க ?
அண்ணிக்கு நம்ம வீடு பிடிச்சிருக்காவாம் ?
நம்ம வீட்டுல எல்லார் கூடவும் சகஜமா
பழகுறாங்களா?"
என்று சத்யன் பேச்சை திசை திருப்பியதும்
அதற்கேற்றார் போல் உடனே உற்சாகமானார் பூபதி ..
♨️
குரலில் சந்தோஷம் தெரித்து ஓட ... "
அருமையான பொண்ணு சத்யா .....
வந்து சில நாள்லயே
எல்லாரையும் புரிஞ்சி நடந்துக்குது ....
அந்த புள்ளை நம்ம வீட்டுக்கு மருமக இல்லைய்யா...
பொம்மி மாதிரி அதுவும் ஒரு மகதான் .... "
என்று உற்சாகமாகப் பேசிக்கொண்டே போனவர் ....
" உனக்கு ஒரு விஷயம் தெரியுமா? ".
என்று கேட்க ....
♨️
" என்ன விஷயம்ப்பா ?"
சத்யனும் ஆர்வமானான் ...
" உங்கம்மாவோட
பூர்வீக சொத்து கொஞ்சம் வழக்குல இருந்ததுல்ல?
அது நாலு நாளைக்கு முன்னாடி அந்த வழக்குல தீர்ப்பாகிடுச்சு சத்யா "
என்றார் ...
♨️
தனது அம்மா ஒரே பெண்ணாக இருந்ததால்
அவருக்கு சேரவேண்டிய சொத்துக்களை
தர மறுத்த அம்மாவின் சித்தப்பாவின்
மீது வழக்குத் தொடர்ந்து கிட்டத்தட்ட
பனிரென்டு வருடங்களாக இழுப்பறியில் இருந்து வந்தது சத்யனுக்கும் தெரியும் "
ஆமாம்ப்பா ... தீர்ப்பு என்னனு வந்திருக்கு ?
" என்று அவசரமாகக் கேட்டான் ..
♨️♨️♨️♨️...
•
Posts: 337
Threads: 6
Likes Received: 168 in 136 posts
Likes Given: 21
Joined: Apr 2022
Reputation:
0
♨️♨️♨️
உன் அம்மா பக்கம் தான் தீர்ப்பாகியிருக்கு சத்யா ... அதுமட்டுமில்ல ...
இந்த பதினைஞ்சு வருஷத்துக்கான லாபத்தையும்
தெய்வா கிட்ட ஒப்படைக்கனும்னு ஜட்ஜ்மெண்ட்
குடுத்துட்டாங்க
♨️
" என்று உற்சாகமாகக் கூறியவர் ....
" ஆனா பதினைஞ்சு வருஷ லாபமெல்லாம் வேண்டாம்னு
நானும் உங்கம்மாவும் சொல்லிட்டோம் சத்யா ..
.உன் அம்மாவுக்கு தாய்வீட்டு சொத்துனு
ஒரு அடையாளத்துக்கு கிடைச்சாப் போதும் ...
♨️இத்தனை வருஷத்து லாபமெல்லாம் நமக்கெத்துக்கு ?" என்றவர் இமயம் போன்று தோன்ற .... " ம் கரெக்ட் ப்பா " என்றான் உணர்ச்சிவசப்பட்ட குரலில் ....
♨️
" பதினைஞ்சு வருஷமா இழுத்துக்கிட்டு கிடந்த கேஸ்
இப்போ முடிஞ்சு சொத்து கைக்கு வந்ததும்
மருமக நாச்சியாவலதான்னு
உன் அம்மா மருமகளை கொண்டாடுறா சத்யா" என்று சந்தோஷமாக கூறினார் பூபதி ...
♨️
அப்பாவுடன் பேசியப் பிறகு ே
த்ராவுக்கு கால் செய்தான் ...
பல ரிங்குகளுக்குப் பிறகு எடுத்தவள்
" என்ன டார்லிங் இன்னைக்கு சீக்கிரமாவே கால் பண்ணிருக்க ?"
என்ற கேள்வியுடன் தொடங்கினாள் ...
" ம் ம் ஒரு குட்நியூஸ் சொல்லத்தான்
கூப்பிட்டேன் " என்றவன் குரலை இனிமையாக்கி
" சொல்றதுக்கு முன்னாடி கிப்ட் வந்தாதான் சொல்ல முடியும் " என்றான் கொஞ்சலாக ...
♨️
" நீ குட் நியூஸ் சொல்லலைனாலும் குடுப்பேன் தான்
" என்று காதலாகப் பேசியவள் மொபைல் மூலமாக தனது முத்தத்தை அனுப்ப.... "
தாங்க்யூ ஸ்வீட்டி " என்றான் ...
அதன் பிறகு தனக்கு வேலை கிடைத்துவிட்ட விபரங்களைக் கூறினான் ....
♨️
அவன் கூறியவுடனேயே
" ஏன் சத்யன் ?
பெங்களூர் பக்கத்தில் எதுவும் ஜாப் வேகன்ட் இல்லையா?" என்று கேட்டாள் ...
" இல்லை நேத்ரா ,,
அதோட பெங்களூருக்கும் ஊட்டிக்கும்
அப்படியொன்னும் தொலைவு இல்லையே .
.. மேக்ஸிமம் சிக்ஸ் அவர் தான் ரன்னிங் டைம் .... அதனால தூரம் ஒரு பிரச்சனையே இல்லை டியர் "
என்றான் ...
" ம் நீ சொல்றதும் ஓகே தான் ...
ஃப்ரைடே ஈவினிங் கிளம்பினா
நைட் அங்க வந்துடலாம் ... அப்புறம் உன் கூடவே இருந்துட்டு மன்டே மார்னிங் கிளம்பி பெங்களூர் வந்திடலாம் ... ம் ம் எனக்கு டபுள் ஓகே
" என்றாள் குதூகலமாக.....
தேர்வுகள் முடிந்ததும்
ஒரு மாத காலம் குடும்பத்துடன் இருந்துவிட்டு வந்து தான் வேலையில் சேரப்போவதாக சத்யன் கூறியதும் ...
♨️♨️♨️
•
Posts: 337
Threads: 6
Likes Received: 168 in 136 posts
Likes Given: 21
Joined: Apr 2022
Reputation:
0
♨️
ஏய் ஏன்ப்பா ஒன் மந்த் அங்க இருக்கனும்?
ஒன் வீக் போதும் சத்யன் ....
அப்புறம் கிளம்பி பெங்களூர் வந்துடு ...
இங்க ஜாலியா சுத்தலாம் " என்று உற்சாகமாகப் பேசினாள் ...
"♨️ நெவர் நேத்ரா ....
. அண்ணனுக்கு மேரேஜ் ஆகி இன்னும்
நான் போய் பார்க்கலை ...
அதுமட்டுமில்லாம கிட்டத்தட்ட ஏழு வருஷமா
அப்பாவை ரொம்ப மிஸ் பண்றேன் ....
இந்த முறை ஒரு நாளைக் கூட வேஸ்ட் பண்ணாம
அப்பாக் கூடவே இருக்கனும்னு ஆசைப்படுறேன் நேத்ரா
... ப்ளீஸ் புரிஞ்சுக்கோ " என்று கெஞ்சுதலாகக் கூறினான் ...
♨️
சில நிமிட மவுனத்திற்குப் பிறகு
" உன்கிட்ட எல்லாம் ஓகே சத்யா ..
. ஆனா உன்னோட
இந்த அப்பா பாசம் இருக்குப் பாரு ?
இதுதான் எனக்கு பயங்கர தலைவலி ....
இந்த பாசம் எங்க என்னை ஓரங்கட்ட வச்சிடுமோனு கொஞ்சம் பயமாவும் இருக்கு சத்யா " என்றாள் ...
♨️
நேத்ராவின் மனது புரிய "
ஏய் டியர் என்ன இப்படிலாம் யோசிக்கிற?
உனக்கு ஒண்ணு தெரியுமா?
நம்ம லவ் மேட்டரை யார் எதிர்த்தாலும்
நமக்கு முழு சப்போர்டிவ்வா இருக்கப்போறது
என் அப்பாவாத்தான் இருக்கும் ...
எனக்காக எதையும் செய்வார் என் அப்பா....
அதனால நீ இந்த மாதிரி சில்லியா யோசிக்காம
இரு " என்று தெளிவுப்படுத்தினான் ...
♨️♨️♨️♨️
" ம் ம் ... பார்க்கலாம் .....
" என்றாள் ... அதன் பின் வழக்கமான காதல் பேத்தல்களுடன் கைப்பேசியிலிருந்த
காசை கரைத்துவிட்டு வெகுநேரம் கழித்து உறங்கச் சென்றனர் ....
♨️♨️♨️♨️
சத்யனின் தேர்வுகள் முடிந்தது ...
. ஹாஸ்டல் அறையை காலி செய்து கொண்டு ஊருக்குக் கிளம்பினான் ...
பஞ்சாப்பிலிருந்து டெல்லி வந்து அங்கிருந்து ரயில் மூலமாக நல்லிரவு ஒன்று நாற்பதுக்கு
சென்னைக்கு வந்தான் ...
♨️♨️♨️♨️♨️
•
Posts: 337
Threads: 6
Likes Received: 168 in 136 posts
Likes Given: 21
Joined: Apr 2022
Reputation:
0
♨️♨️♨️
அந்த நேரத்தில் சென்னையிலிருந்து திருநெல்வேலிக்கு ரயில்கள் இல்லாததால் பேருந்தில்
புறப்பட்டு திருநெல்வேலி
வந்து அங்கிருந்து
கள்ளிடைக்குறிச்சு வந்து சேர்வதற்குள்
பாதி இளைத்தேவிட்டான் ...
♨️♨️
கள்ளிடைக்குறிச்சி பேருந்துநிலையத்தில்
வந்து இறங்கும் போது மாலை ஆறு மணி ......
எத்தனை மணிக்கு வந்து சேருவோம்
என்று உறுதியாகத் தெரியாததால்
வீட்டிற்கு போன் செய்து புறப்பட்டு வருவதாக
மட்டும் கூறியவன்
வந்து சேரும் நேரத்தைக் கூறவில்லை .....
♨️♨️
சொந்த மண்ணில் கால் வைத்ததும்
சோர்வு போய் மனமும் உடலும் புத்துணர்வு பெற்றுவிட ...சேந்தம்பட்டி கிராமத்துக்கு செல்ல
ஆட்டோவோ டாக்ஸியோ கிடைக்குமா
என்று தேடிக்கொண்டு பேருந்து நிலையத்தின் வெளியே வந்தான்....
♨️♨️♨️
ஒரு ஆட்டோவை அழைத்து பேரம் பேசிக்கொண்டு இருக்கும் போது பின்புறமிருந்து
யாரோ யாரிடமோ பேசும் குரல் "
ஏலா அதோ அங்க நிக்கிதே அந்தப்புள்ளதான்
நம்ம மச்சுவீட்டு மருமக ..
. எம்புட்டு அழகு பார்த்தியா?...."
மச்சுவீட்டு மருமகளா?
♨️♨️
சத்யன் சட்டென்று திரும்பிப் பார்த்தான் ... பேசிக்கொண்டிருந்த பெண்கள் சுட்டிக்காட்டிய
திசைக்கு அவன் பார்வை சென்றது ....
♨️♨️♨️
பேருந்து நிலையத்தின் பெண்கள் கழிவறையின்
பக்கச்சுவர் ஓரமாக மூக்கை கர்சீப்பால்
பொத்திக்கொண்டு சுற்றிலும்
தனது பார்வையை ஓட்டி பரபரவென விழித்தபடி நின்றிருந்த பெண் ? ....
அண்ணனுடன் மணக்கோலத்தில்
நின்றிருந்த மான்சி நாச்சியாவேதான் ....
சட்டென்று நிமிர்ந்த சத்யன் " அண்ணி .....?"
என்று அழைத்தபடி வேகமாக அங்கே சென்றான் ..
♨️♨️♨️♨️
அண்ணி என்று அழைத்து
ருகில் வந்து நின்றவனை திரும்பிப் பார்த்தாள்
அந்தப் பெண் ..... வீட்டில் போட்டோ ஆல்பத்தில் பார்த்த அறிமுகமான முகம் ....
" நீங்க .......?"
என்று முடிக்காமல் நிறுத்தினாள் ...
♨️♨️♨️
புன்னகை ததும்பிய முகத்தோடு
" நான் சத்யன் அண்ணி ...
முத்தண்ணாவுக்கு அடுத்தவன் "
என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான் ...
♨️♨️♨️
மான்சியின் முகமும் தெளிந்தது ....
" நீங்க வர்றதா மாமா சொன்னார் ...
ஆனா எப்ப வர்றீங்கன்னு சொல்லலை ...
பிரயாணமெல்லாம் நல்லபடியா இருந்ததா ?"
என்று அன்புடன் விசாரித்தாள் ....
♨️♨️♨️
•
Posts: 337
Threads: 6
Likes Received: 168 in 136 posts
Likes Given: 21
Joined: Apr 2022
Reputation:
0
♨️♨️♨️
♨️
ம்ம் ஒரு வழியா புத்தக மூட்டைக்கு விடுதலை குடுத்துட்டு வந்துட்டேன்
" என்று கூறி சிரித்தவன் .... "
அதுசரி
நீங்க எங்க இந்த நேரத்துல இங்க வந்து நிக்கிறீங்க ? அதுவும் இவ்வளவு நகைகளைப் போட்டுக்கிட்டு ? "
என்று புருவம் சுருங்க குழப்பமாகக் கேட்டான் ...
♨️
சற்று தயங்கி சுற்றிலும் தனது பார்வையை ஓட்டியவள்
" அது வந்து ...
நானும் உங்கண்ணாவும் சினிமா பார்க்க வந்தோம் ...
மாட்னி ஷோ பார்த்துட்டு வீட்டுக்கு கிளம்பினோம் ...
வரும் போது என்னை கொண்டு வந்து
இங்க விட்டுட்டு கொஞ்ச நேரம்
இரு இதோ வந்துடுறேன்னு சொல்லிட்டுப் போனார் ...
நாற்பது நிமிஷம் ஆச்சு இன்னும் காணோம்
" என்றாள் கவலையாக .....
♨️
அண்ணன் மீது கோபமாக வந்தது ...
இவ்வளவு நகைகளைப் போட்டு
ஒரு பெண்ணை தனியா இந்த நேரத்துல இங்க விட்டுட்டு இவர் எங்க போனார் ?
என்று எண்ணியவன் ....
" ஏதாவது அவசர வேலையா போயிருப்பார் ...
நீங்க வாங்க அதோ அங்கே உட்காருங்க ..
அண்ணன் வர்ற வரைக்கும் நான் கூட இருக்கேன்
" என்று கூறிவிட்டு பேருந்து நிலையத்தில் போடப்பட்டிருந்த ஸ்டீல் சேரில் மான்சியை அமரச் சொன்னான் ...
♨️
தனியே நிற்க பயந்து போய் கழிவறை ஓரமாக நின்றிருந்தவள் சத்யன் கூறியபின் தைரியமாக
வந்து சேரில் அமர்ந்தாள் ...
♨️
அவளருகே தனது லக்கேஜ்களை
இறக்கி வைத்து விட்டு பாதுகாப்பாக இருக்கைக்குப் பக்கத்தில் நின்றுகொண்டவன் ... "
சினிமாக்கு வர்றதுக்கு இவ்வளவு நகைகள் அவசியமா அண்ணி?..
ஊர் கெட்டு கிடக்கே?"
என்றான் வருத்தமாக ...
♨️♨️♨️
•
Posts: 337
Threads: 6
Likes Received: 168 in 136 posts
Likes Given: 21
Joined: Apr 2022
Reputation:
0
♨️
நான் எங்கப் போட்டுக்கிட்டேன் ...
இந்த அம்மாச்சி பண்ண வேலை ...
முதல் முதலா புருஷன் கூட வெளியேப் போற...
எல்லா நகையும் போட்டுக்கோன்னு எடுத்து மாட்டி விட்டுட்டுச்சு ... வீட்டுக்குப் போய் பேசிக்கிறேன் ....
" கோபம் போல் கூறினாலும் அதில் ஒருவித குறும்புத்தனமிருந்தது ...
♨️
சிரித்துவிட்டான் சத்யன் .... "
நீங்களும் சரசூவும் பெஸ்ட் பிரண்ட்னு பொம்மி சொன்னா.... பிரண்ட்டைப் போய்
இது போல திட்டலாமா?"
என்றவன் தனது மொபைலை எடுத்து அண்ணனின் நம்பருக்கு கால் செய்தான் ....
ரிங் போய்க்கொண்டே இருந்தது...
எடுக்கவில்லை ...
♨️
" ம்ம் அம்மாச்சி மட்டுமில்ல ...
அத்தை மாமா .. பொம்மி ...
எல்லாருமே எனக்கு பிரண்ட்ஸ் தான் ....
." என்றாள் புன்னகையுடன் ....
♨️
இவனுடன் பேசிக் ொ
ண்டிருந்தாலும் அவளது பார்வை
தனது கணவனைத் தேடி நாற்புறமும் அலசிக்கொண்டிருந்தது ... சத்யனும் அண்ணன் நம்பருக்கு அடுத்தடுத்து
கால் செய்தபடியே இருந்தான் ....
கிட்டத்தட்ட பதிணைந்து நிமிடம் கழித்து பைக்கில் வந்து இறங்கியவன் தம்பியைக் கண்டதும் உற்சாகமாகி
" டேய் தம்பி ...."
என்று ஓடி வந்து அணைத்துக் கொண்டான் ...
♨️
அன்போடு அண்ணனை
ணைத்தவன்
அடுத்த நிமிடமே முகம் சுழித்தான் சத்யன் ....
மதுவின் நெடி ....
ஓ இதுக்குத்தான் பொண்டாட்டியை தனியா விட்டுட்டு போயிருக்கார் போலருக்கு என்று
கோபமாக எண்ணியவன் அந்த கோபத்தை
வாழ வந்தவள் முன்பு காட்ட மனமின்றி " அண்ணியை இப்படியா தனியா நிக்க வச்சுட்டு போவ ?
ரொம்ப பயந்து போய் நின்னிருந்தாங்க...,ஏதோ நான் வரவச்சி சரியா போச்சு ?
இல்லேன்னா ?"
என்று கோபத்தை அடக்கிக் கொண்டு கேட்டான் ...
♨️
" டேய் தம்பி ...
து நம்ம ஏரியாடா ....
எவன் வந்து என்ன செஞ்சிட முடியும் "
என்று தைரியமாகப் பேசியவன்
மான்சியிடம் திரும்பி "
ஏ புள்ள ... பயந்தியா என்ன?
இங்கல்லாம் நம்மளை மீறி எதுவும் நடக்காது புள்ள" என்றான் ...
♨️
•
Posts: 337
Threads: 6
Likes Received: 168 in 136 posts
Likes Given: 21
Joined: Apr 2022
Reputation:
0
♨️
" சரி நீ பைக் சாவியைக் குடு நான் பைக்ல வர்றேன் ..
நீயும் அண்ணியும் ஆட்டோவில வாங்க
" என்ற சத்யன் முத்துவின் கையிலிருந்து
பைக் சாவியை வாங்கிக் கொள்ள .... "
என்னலே நீயும் இப்புடிப் பயப்படுற ?
எவ்வளவு தடுமாறுனாலும்
கரெக்டா வீடு போய் சேருவோம்ல "
என்றான் முத்து ...
♨️
வந்த கோபத்தை அடக்கிக் கொண்டு
ஒரு ஆட்டோவை அழைத்தவன்
அதில் தனது லக்கேஜ்களை வைத்து விட்டு
மான்சியிடம் திரும்பி "
ஏறிக்கங்க அண்ணி " என்றான் ...
♨️
மான்சி தன் கணவனின் முகம் பார்க்க .... "
ம்ம் தம்பியார் கோபமாயிட்டார் ...
வா வா நாம ஆட்டோவிலேயே போய்டலாம்
" என்று தம்பிக்குப் பயந்தவன் போல்
மான்சியுடன் ஆட்டோவில்
ஏறிக்கொண்டான் முத்து ...
♨️
குனிந்து ஆட்டோ டிரைவரிடம் முகவரி சொல்லிவிட்டு
நீங்க முன்னாடி போங்க ...
நான் பின்னாலேயே வர்றேன் "
என்று கூறி ஆட்டோவை அனுப்பி விட்டு
தனது பைக்கில் அவர்களை
பின் தொடர்ந்தான் சத்யன் ..
வீட்டிற்கு வந்ததும்
ஆட்டோவிற்கான பணத்தைக் கொடுத்து அனுப்பிவிட்டு தனது லக்கேஜ்களை எடுக்க குனிந்தான் ....
" நீ உள்ள போ தம்பி ..
நான் எடுத்துட்டு வர்றேன்
" என்ற முத்து சத்யனின் பெட்டிகளை
தூக்கிக்கொண்டு போக ...
அவனது அன்பில் நெகிழ்ந்து நிமிட நேரம் நின்றுவிட்டான் ...
மிச்சமிருந்த
ஒரு பேக்கை எடுத்துக் கொண்ட மான்சி ...
" உள்ள வாங்க " என்றுவிட்டுப் போனாள் ...
♨️
•
Posts: 337
Threads: 6
Likes Received: 168 in 136 posts
Likes Given: 21
Joined: Apr 2022
Reputation:
0
♨️
முத்து சென்று கூறியதை வைத்து
இளைய மகன் வந்துவிட்டதை
அறிந்து பூபதியும் தெய்வாவும் வாசலுக்கு ஓடிவர
அவர்களுக்குப் பின்னாலேயே சரசூ பாட்டியும் பொம்மியும் வந்தார்கள் ....
♨️
மூன்று படிகள் ஏறியிருந்தவனை 4அம் படிகள் இறங்கி வந்து " ஏவே சத்யா ....."
என்று அணைத்துக் கொண்ட பூபதி
" ஏன்ய்யா ராசு ....
இத்தனை மணிக்கு வர்றேன்னு சொல்லிருந்தா
நான் காரை எடுத்துக்கிட்டு
திருநெல்வேலிக்கே வந்திருப்பேனே?" என்றார் ...
♨️
" என்னது காரா? .... யப்பா அதை காருன்னு வெளிய சொல்லாதீங்க ....
அதை விட நம்ம மாட்டு வண்டியே தேவலை"
என்று பின்னாலிருந்து கேலி செய்தாள் பொம்மி ...
♨️
அவ்வளவு நேரம் இருந்த மனநிலை மாறி சந்தோஷம் வந்து ஒட்டிக் கொள்ள... "
ய் வாலு ? வளர்ந்துட்டயே ?"
என்று தங்கையிடம் கூறியவன்
தனது அம்மாவின் காலைத் தொட்டு கண்களில் ஒற்றிக் கொண்டவன் " எப்படிம்மா இருக்க ?"
என்று கேட்டான் ..
♨️
மகனைப் பார்த்த சந்தோஷத்தில் விழிகள் குளமாக .... " எனக்கென்னய்யா ராசு ..
. நல்லாருக்கேன் ...
நீதான் ரொம்ப இளைச்சுப் போயிருக்க
" என்று மகனின் குழிந்த தாடையை வருடியபடி தாயாய் கலங்கினாள் ...
♨️
" ம்ம் ,, சாப்பிட நேரமில்லாதபடி
டிக்கிற வேலை அதிகம்மா ...
இனி ஒரு மாசத்துக்கு இங்கதான்..
உன் கையால சாப்பிட்டு உடம்பை தேத்திக்கிட்டுப் போக வேண்டியதுதான் "
என்றான்
♨️
" இதென்னடி கூத்து?
ந்த புள்ளைய வெளியவே நிறுத்திப் பேசிக்கிட்டு ?
வீட்டுக்குள்ள வர்ற மாதிரி யோசனையில்லையா?"
சரசூ பாட்டியின் குரல் உச்சத்தில் கேட்கவும்
அத்தனை பேரும் அவசரமாக வீட்டுக்குள் நுழைந்தனர் .
♨️..
•