Romance சுவாதி எப்போதும் என்❤️காதலி
முந்தைய பகுதிகளில் தங்களது கருத்துக்களை பதிவு செய்து ஆதரவு கொடுத்த அனைத்து நண்பர்களுக்கும்

நன்றிகள் பல...

முந்தைய பகுதிகளின் தொடர்ச்சியாக..

விக்கி சுவாதியிடம் ப்ரொபோஸ் பண்ண போகலாம் என்று நினைத்த போது மணியிடம் இருந்து போன் வந்தது ஹலோ சொல்றா என்றான் விக்கி .யே மச்சான் டேவிட்க்கு ஆக்சிடன்ட் ஆகிடுச்சுடா என்றான் மணி .என்னடா சொல்ற என்று அதிர்ச்சியோடு கேட்டான் .

ஆமாடா இப்ப தாண்டா அவன ஆஸ்பத்திரில சேத்துட்டு நான் இருக்கேன் என்றான் ,சரி எந்த ஆஸ்பத்திரில சேத்து இருக்கீங்க ஓகே நான் உடனே வரேன் என்று சொல்லிவிட்டு விக்கி வீட்டிற்கு போகமால் உடனே காரை எடுத்து கொண்டு மணி சொன்ன ஆஸ்பத்திரிக்கு விரைந்தான் .

பின் வேகமாக அங்கு போனான் . ரிசப்செனில் விசாரித்து விட்டு டேவிட் இருக்கும் ரூமிற்கு போனான் .அது வரை வேகமாக நடந்தவன் அந்த ரூம் அருகே வந்ததும் ஒரு நிமிடம் நின்றான் .

ஒரு வேல டேவிட் முழிச்சு இருந்து என்னையே பாத்ததும் கோபப்பட்டு வெளியே போடான்னு கத்திட்டானா என்ன பண்றது ம்ம் பரவல அவன் கோபப்பட்டு கத்துனாலும் பரவல அவன் என் பிரண்டு நான் கண்டிப்பா பாக்க போறேன் என்று நினைத்து கொண்டு மெல்ல கதவை திறந்தான் .

அங்கு டேவிட் கட்டிலில் படுத்து இருந்தான் .காலில் பெரிய கட்டு போட்டு படுத்து இருந்தான் .அவன் அருகில் அவன் பொண்டாட்டியும் எதிரில் உள்ள சேரில் மணியும் உக்காந்து இருந்தான் .

விக்கி நுழைந்ததும் மணி எந்திருச்சு வந்தான் .வாடா முழிச்சு தான் இருக்கான் போயி பாரு என்றான் .விக்கி மெல்ல அவன் அருகே போனான் .ஹ எப்படிடா இருக்க என்றான் விக்கி மெல்ல .

ம்ம் பரவலடா என்றான் டேவிட் .ரெஜினா எழுந்து நீங்க பேசிகிட்டு இருங்க நான் போயி டாக்டர் கிட்ட போயி பேசிட்டு ரிசப்சென் போயி பணம் கட்டிட்டு வரேன் என்றாள் .

கொடும்மா நான் கூட போயி கட்டிட்டு வரேன் என்றான் மணி .இல்லன்னா நீங்க கொஞ்ச நேரம் பிறியா பேசுங்க அது அவருக்கும் கொஞ்சம் ஆறுதலா இருக்கும் என்று சொல்லி விட்டு போனாள் .அவள் போன பின் டேவிட் சொன்னான் தேங்க்ஸ்டா என்னையே பாக்க வந்ததுக்கு நான் கூட நீ வர மாட்டே அவனுக்கு சொல்லாத அப்படின்னு மணி கிட்ட சொன்னேன் .

ஆனா நீ எல்லாத்தையும் மறந்து என்னையே பாக்க வந்தது எவளவு சந்தோசமா இருக்கு தெரியுமா இப்ப எனக்கு என் காலுல வலி கூட இல்ல என்றான் .

டேய் இது என்னடா உனக்கு ஒன்னுனா நான் வர மாட்டேனா நம்ம 6 வருஷ நட்ப வெறும் 6 மாச சண்டைல மறந்துடுவேனா அதலாம் நம்ம ரெண்டு பேரும் எப்பயுமே பிரண்டு தான் என்றான் .தேங்க்ஸ் buddy என்று சொல்லி டேவிட் மெல்ல அழுதான் .

சரி என்னடா ஆச்சு என்றான் .பைக்ல போனப்ப ஒரு செகதில டயர் மாட்டி கீழ விழுந்துட்டேன்டா என்றான் .ம்ம் மழை காலத்துல பாத்து போ கூடாது என்றான் .

என்ன பண்ண எல்லாம் என் கெட்ட நேரம் கெட்டதா நடக்குது ஒரு நல்லது கூட நடக்க மாட்டிங்குது என்று சொல்லி பெரு மூச்சு விட்டான் .அவன் அவ்வாறு சொல்வது எதையோ மறைமுகமாக மனதில் வைத்து கொண்டு பேசியது போல் விக்கிக்கு தோணியது .அதன் பின் மணி பேச்சை வேறு விதமாக மாற்றினான் .

மூவரும் வேற வேற விசயங்களை பேசி சிரித்து கொண்டு இருந்தனர் .அதன் பின் ரெஜினா உள்ளே வந்ததும் எல்லாரும் நார்மல் ஆகி அமைதி ஆனார்கள் .பின் டேவிட்டை தூங்க வைத்து விட்டு எல்லாரும் சிறிது நேரம் அமைதியாக இருந்தார்கள் .மணி விக்கியை மட்டும் வெளியே கூப்பிட்டான் .

ஓகே மச்சான் மணி 9 ஆச்சு வள்ளி வீட்ல தனியா இருப்பா மத்த நாள் மாதிரின்னா பரவல இப்ப அவளுக்கு 8 மாசம் ஆச்சு அதுனால நான் கூட இருக்கிறது தான் நல்லது அதனால நான் கிளம்புறேன் நீ இங்க இருந்து கொஞ்சம் பாத்துக்கிரியா என்றான் .

ஒ சுயர்டா நீ போ நான் பாத்துக்கிறேன் . ஆமா நீ எதுல போ போற என்றான் .பஸ் இல்லாட்டி ஆட்டோ தான் என்றான் மணி .என் கார எடுத்துட்டு போ நாளைக்கு ஆபிஸ்க்கு ஸ்ட்ரைட்டா கொண்டு வந்துரு என்று சொல்லி கார் சாவியை கொடுத்தான் .

ஓகே தேங்க்ஸ் மச்சி என்று மணி கிளம்பினான் .டேய் வள்ளிய கேட்டாத சொல்லு என்றான் விக்கி .சரிடா என்று சொல்லி விட்டு மணி ஆஸ்பத்திரியை விட்டு கிளம்பினான் .

பின் விக்கி ரூமிற்குள் வந்தான் .டேவிட் தூங்கி கொண்டு இருந்தான் .அருகில் ரெஜினா உக்காந்து இருந்தாள் .டாக்டர் வந்தாரா என்றான் .ம்ம் வந்தாரு என்றாள் ரெஜினா .

என்ன சொன்னாரு என்றான் .நாளைக்கு சாய்ங்காலம் டிஸ்சார்ஜ் பண்ணிடலாம்னு சொன்னாரு என்றாள் . ஓகே நல்லது நான் வெளியே ரிசப்சன்ல தூங்குரென் .எதாச்சும்னா என்னையே வந்து எழுப்புங்க என்றான் .

ஓகே சுய்ர்ங்க தேங்க்ஸ் என்றாள் பின் விக்கி ஒரு அலுப்போடு ரிஸ்பசென் போயி உக்காந்தான் .அங்கு ரிசப்சனில் இருந்த டிவியை பார்த்து கொண்டு இருந்தான் .

தீடிரென சுவாதி ஞாபகம் வரவும் விக்கி அவளுக்கு போன் அடித்தான் .ஹே ஹலோ என்ன இன்னும் நீ வர காணோம் என்ன பார்டியா இல்ல எதுவும் பொண்ணு கூட இருக்கியா என்றாள் . உண்மைய இவ கிட்ட சொல்லுவோமா வேணாம் என்று நினைத்து கொண்டு பார்டி இல்ல தீடிருன்னு பாஸ் கூட நான் மட்டும் ஒரு வொர்க் விசயமா டெல்லி வரைக்கும் வர வேண்டியாதா போச்சு

முன்னாடியே சொல்லி இருப்பேன் பட் பிளைட்ல போயிகிட்டு இருந்ததால போன் பேச முடியல சோ இன்னைக்கு ஒரு நாள் நைட் உங்க அந்த அஞ்சலி அக்காவ வர சொல்லிக்கிரியா என்றான் .ஒ சுயர் நான் அவங்கள வர சொல்லி கூட இருந்துக்கிறேன் நீ எப்ப வருவ என்றாள் .

எனக்கும் உன்னையே இப்பயே வந்து பாக்கணும் போல இருக்கு ஆனா விதி நம்மள கடைசி வரைக்கும் ஒன்னு சேர விடாது போல என்று நினைத்து கொண்டு

நான் வழக்கம் போல சாய்ங்காலம் வந்துருவேன் நீ மட்டும் பாத்து பத்திரமா இரு என்றான் .என்ன தீடிருன்னு அக்கறை என்று சுவாதி கேட்க அது வந்து வந்து என்று விக்கி திணறினான் . போதும்டா எனக்கு எல்லாம் தெரியும் என்றாள் .ஐ இவளுக்கு தெரிஞ்சுடுச்சா புரிஞ்சுச்டுச்சா என் லவ் என்று விக்கி நினைத்து கொண்டான்

நீ எதுக்கு என் மேல அக்கறை காட்டேறேன்னு தெரியும் .எனக்கு எதாச்சும் ஆச்சுன்னா அஞ்சலி அக்கா உன்னையே போலீஸ்ல மாட்டி விட்டுருவாங்க அத நினைச்சு தான பயப்படுற என்றாள் .எஸ் ஆமா கரெக்டா கண்டுபிடிச்சிட்டியே என்றான் .டேய் சும்மா அத நினைச்சு நீ எனக்காகக பயந்து கிட்டு இருக்காத நீ நீ பாட்டுக்கு இரு சரியா என்றாள் .ம்ம் சரி என்றான் ,சரி நான் வைக்கிறேன் என்றாள் .

அவள் போனை வைத்த பின் அவன் டேவிட்டை பற்றி நினைத்து பார்த்தான் . பல மாதங்களுக்கு பிறகு டேவிட் கூட பேசியது அவனுக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது .

உள்ளே அவனும் டேவிட்டும் பேசியது ஞாபகத்திற்கு வந்தது .சே டேவிட் நம்ம மேல இன்னும் பாசமும் மரியாதையும் வச்சு இருக்கான் .அத வெட்டியா கெடுத்துக்க வேண்டாம் .ம்ம் நமக்கும் லவ்வுக்கும் சுத்தமா ராசி இல்ல இனி சுவாதிய மறந்துட்டு வழக்கம் போல வேலைய பாப்போம் என்று நினைத்து கொண்டு தூங்கினான் .

பின் காலையில் எழுந்து அவர்களுக்கு காப்பி வாங்கி கொண்டு ரூமிற்குள் போனான் .ஹ குட் மார்னிங்டா நைட் முழுக்க இங்கயே இருந்ததா ரெஜினா சொன்னா எதுக்குடா வீட்டுக்கு போயிருக்கலாம்ல என்றான் டேவிட் .

டேய் அந்த பிள்ள பாவம் மும்பைக்கு புதுசு உனக்கு நைட் எதாச்சும்னா அது மட்டும் தனியா சமாளிக்குமா அதான் நானும் கூடவெ இருந்தேன் என்றான் . தேங்க்ஸ்டா நீ வேணும்னா ஆபிஸ் போறதுக்கு வீட்ல போயி பிரஸ் ஆப் ஆகிட்டு கிளம்பு

ரெஜினா சமாளிச்சுகிடுவா என்றான் டேவிட் .இருக்கட்டும்டா நான் ஆபிஸ்ல சொல்லிகிறேன் வர லேட் ஆகும்னு சொல்லிட்டு கொஞ்ச நேரம் இருந்துட்டே போறேன் என்றான் .

இருக்கட்டும்டா என்று டேவிட் சொல்ல டேய் இட்ஸ் ஓகே என்றான் விக்கி . அவர்களுக்கு காலை டிபன் வாங்கி கொடுத்து விட்டு சிறிது நேரம் அவர்களோடு இருந்தான் .பின் மணி வந்தான் .டாக்டர் என்ன சொன்னார் எல்லாம் நார்மல் தானே என்றான் .ம்ம் எல்லாம் நார்மல் தான் சாய்ங்காலம் டிஸ்சார்ஜ் பண்ணிடலாம்னு சொல்லி இருக்காரு என்றான் .

ஓகே வா ஆபிஸ் போவோம் என்றான் மணி .இல்ல டேவிட் என்று விக்கி சொல்ல இல்லடா அவன ரெஜினா பாத்துகிரட்டும் நமக்கு காலைல ஒரு ரிவியுவ் மீட்டிங் பாஸ்கிட்ட இருக்கு கண்டிப்பா அதுல நீ இருக்கணும் அதனால வா நம்ம போயிட்டு சாய்ங்காலம் வருவோம் என்றான் மணி .

விக்கி டேவிட்டை பார்க்க நீ போடா நாங்க சமாளிசுகிருவோம் என்றான் டேவிட் .
ஓகே பாத்து இருடா எதாச்சும்னா போன் போடுங்க உடனே வந்துறோம் என்று சொல்லி விட்டு இருவரும் வெளியே போனார்கள் .

பின் வெளியே விக்கியும் மணியும் காரில் ஏறினார்கள் .மச்சி உன் கார்ல நேத்து நிறைய பிளவர்ஸ் இருந்துச்சு என்ன விசயம்டா புதுசா பிளவர்ஸ் எல்லாம் வாங்கி இருக்க எதுவும் பொண்ணு லவ்வுன்னு விழுந்துட்டியா என்றான் மணி .மணி சொன்ன பிறகு அந்த பிளவர்ஸ் எல்லாம் பார்த்தான் .

அது வாடி போயி இருந்தது ,கிட்டத்தட்ட விக்கியும் அதே நிலையில் தான் இருந்தான் .பின் மணியிடம் கேட்டான் .என்ன மச்சான் கேட்ட என்றான் .இல்ல பிளவர்ஸ் வாங்கி இருக்கியே என்ன மேட்டர் என்றான் .

அதான் மேட்டர் தான் ஒரு பொண்ண மேட்டர் பண்றதுக்குகாக பிளவர்ஸ் வாங்கிட்டு போனேன் அதுக்குள்ளே நீ போன் போட்டியா அதான் இங்க வந்துட்டேன் என்றான் .

நீ திருந்தவே மாட்டியாடா என்றான் மணி .எதுக்கு திருந்தனும் ஏன் திருந்தனும் என்று பொய்யாக சிரித்து விட்டு ஒரு நிமிஷம் அந்த பிளவர்ஸ் வச்சு இனி எந்த யூஸ்ம் இல்ல அதுனால அத குப்ப தொட்டில போட்டுட்டு வரேன் .

அப்படியே மழை காலமா ஒன்னுக்கு ரொம்ப அர்ஜெண்டா இருக்கு டாய்லெட் போயிட்டு வரேன் என்று சொல்லி கொண்டு அந்த பிளவர்ஸ் எடுத்து கொண்டு போயி ஒரு குப்பை தொட்டி முன் நின்றான் .

கடைசியாக அதை ஒரு ஏக்கத்தோடு பார்த்து விட்டு மெல்ல அதை குப்பை தொட்டியில் போட்டான் .பின் டாய்லெட் போயி உக்காந்து குழாயை திறந்து விட்டு சிறிது நேரம் அழுதான் .ஏண்டா உனக்கு மட்டும் இப்படி ஒரு நிலைமை வருது இப்ப பிரண்டா இல்ல லவ்வரா நான் என்ன பண்ணுவேன் என்று அழுதான் .

தொடரும்.....

கருத்துக்களை போஸ்ட்க‌ளி‌ல் பதிவு செ‌ய்யவு‌ம்...

என்றும் வாசகர்கள் ஆதரவுடன்

உங்கள் ராஜேஷ்.
[+] 3 users Like Rajiss's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
Superb update
[+] 1 user Likes Rangabaashyam's post
Like Reply
so good
[+] 1 user Likes parottamaster's post
Like Reply
(16-04-2022, 12:28 PM)Rajiss Wrote: முந்தைய பகுதிகளில் தங்களது கருத்துக்களை பதிவு செய்து ஆதரவு கொடுத்த அனைத்து நண்பர்களுக்கும்

ராஜி எஸ் எஸ் நண்பா வணக்கம் 

இந்த முறை இந்த பதிவு மிக மிக அருமை நண்பா 

விக்கி ஸ்வாதி காம்பினேஷன் மிக மிக அருமை நண்பா 

டேவிட்க்கு திடீர் ஆக்சிடென்ட் செய்தி எங்களுக்கும்  மிகவும் அதிர்ச்சியான செய்தியாக தான் இருந்தது நண்பா 

டேவிட் நட்புறவோடு மீண்டும் விக்கியொடு பேசுவது மிக அருமை நண்பா 

டேவிட் மனைவி ரெஜினா பெயரே செம கிக்காக இருக்கிறது நண்பா 

விக்கி டேவிட் மணி மூவர் நட்பின் ஆழத்தையும் மிக அருமையாக காட்டி இருக்கிறீர்கள் நண்பா 

ஸ்வாதி விக்கிக்கு கொடுக்கும் தைரியம் ஊக்கம் சூப்பர் நண்பா 

நீங்க கதையை எடுத்து சொல்லும் விதம்.. அப்படியே ஒரு ஹாஸ்பிடல் அட்மாஸ்பியரில் கதை படிப்பவர்களும் இருப்பது போல ஒரு உணர்வை தூண்டுகிறது நண்பா 

மிக மிக அருமை நண்பா 

பூக்களை தூக்கி போட்டுவிட்டு விக்கி மனம்விட்டு அழும் ஸீன் ரொம்ப டச்சிங் நண்பா 

நேரம் கிடைக்கும் போதெல்லாம் தயவு செய்து தொடர்ந்து எழுதுங்கள் நண்பா பிளீஸ் 

வாழ்த்துக்கள் நன்றி 
[+] 1 user Likes Vandanavishnu0007a's post
Like Reply
Nice update
[+] 1 user Likes Rangushki's post
Like Reply
முந்தைய பகுதிகளில் தங்களது கருத்துக்களை பதிவு செய்து ஆதரவு கொடுத்த அனைத்து நண்பர்களுக்கும்

நன்றிகள் பல...

முந்தைய பகுதிகளின் தொடர்ச்சியாக..

விக்கி பாத் ரூமில் உக்காந்து அழுதுவிட்டு பின் வெளியே வந்து காரில் ஏறி ஆபிஸ் போனான் .ஆபிசில் சுவாதியையும் டேவிட்டையும் நினைத்து கொண்டே இருந்தான் .

பின் ஆபிசில் முக்கியாமான மீட்டிங் ஒன்று நடந்தது அப்போதும் விக்கி அவர்களை நினைத்து பார்த்து ஒழுங்காக மீட்டிங்கில் பேசமால் சொதப்பி விட்டு சாரி எனக்கு உடம்பு சரி இல்லை என்று சொல்லி விட்டு மீண்டும் வருத்ததோடு அவன் சேரில் உக்காந்தான் .

பின் மீட்டிங் எல்லாம் முடிந்த பின் மணி வந்தான் அவன் ரூமுக்கு .சரி வா டேவிட கூப்பிட அவன் ஆஸ்பத்திரி போவோம் என்றான் ,இந்த வந்துட்டேன்டா என்று போனான் .பின் மணி காரை தான் ஒட்டுவாதாக சொன்னான் .சரி என்று சொல்லி விட்டு விக்கியும் அருகே உக்காந்து தலையில் கை வைத்தாவரு உக்காந்து கண்ணை மூடி வந்தான் .பின் மணி ஒரு இடத்தில காரை நிப்பாட்டினான் .

விக்கி முழித்து என்னடா அதுக்குள்ளே ஆஸ்பத்திரி வந்துருச்சா என்றான் . இல்ல சும்மா உன் கிட்ட பேசுறதுக்கு தான் நிப்பாட்டினேன் என்றான் மணி .

ஒ மீட்டிங்க்ல சொதப்புனத பத்தி கேக்க போறியா நானே சொல்லனும்னு நினைச்சேன் .அது வந்து மச்சான் நைட் நம்ம டேவிட் பயலுக்கு அப்படி ஆனத நினைச்சு நைட் புல்லா தூங்கல அதான் அப்படி சொதப்பின்னேன் அதுனால் தான் இப்ப கூட தூங்கி கிட்டு இருக்கேன் என்றான் .

மச்சி எதுக்குடா நடிக்கிற முந்தி எல்லாம் ஞாயிற்று கிழமைல விடிய விடிய ஆட்டம் போட்டுட்டு அடுத்த நாள் அசால்ட்டா ஆபிஸ் வந்து மீட்டிங்ல சூப்பரா பேசி அசத்துவ இப்ப என்னமோ ஆஸ்பத்திரில தூங்கல அதுனால தான் சொதப்புனேன்னு கத விடாத மச்சி என்றான் . டேய் அதாண்டா நிஜம் என்றான் .ம்ம் நம்பிட்டேன் மச்சான் உனக்கு என்ன தாண்டா ஆச்சு இந்த ஆறு மாசமா நீ சரியாவே இல்ல .

யாரையும் ஆபிஸ்ல பேசன்னு இல்ல நீ நிமிர்ந்து கூட பாக்க மாட்டிங்குற ஏன் நானே நானா உன் கேபினுக்கு வந்தாதான் பேசுற இல்லாட்டி பேச மாட்டிங்குற .

வருண் கிட்ட விசாரிச்சேன் அவன் கிட்டயும் பேசுறது இல்லையாம் அப்புறம் அவன் பார்ட்டிக்கு கூப்பிட்டா கூட போக மாட்டிங்கிரியாம் என்ன தான் ஆச்சு உனக்கு என்றான் .விக்கி ஒன்றும் சொல்லமால் அமைதியாக இருந்தான் .மச்சான் நீ நான் ஓட்ட வாய் ரகசியம் காக்க மாட்டேன்னு தான் சொல்ல மாட்டிங்குற என்றான் மணி .

அப்படி எல்லாம் இல்லடா என்றான் விக்கி .டேய் நான் ஓட்ட வாய் தான் ஆனா காக்க வேண்டிய ரகசியத்த காப்பேன் என்றான் மணி .விக்கி சின்னதாய் சிரித்தான் .

என்னடா கிண்டல் பண்ற மாதிரி சிரிக்கிற இப்ப டேவிட் கூடதான் ரகசியம் சொன்னான் நான் என்ன அத எல்லார்கிட்டயும் சொன்னேனா என்றான் மணி .

அப்படி என்னடா சொன்னான் என்றான் விக்கி .அது ஒன்னும் இல்ல மச்சான் டேவிட்டுக்கும் ரெஜினாவுக்கும் சரியா வரலையாம் இன்னும் சொல்ல போனா டேவிட்டால சுவாதிய இன்னும் மறக்க முடியலையாம் .சில நேரத்துல ரெஜினாவ டைவர்ஸ் பண்ணிட்டு சுவாதி கூட மறுபடியும் செந்துர்லாம்னு யோசிக்கிறனாம் என்றான் மணி .

என்னது என்று விக்கி ஒரு சின்ன அதிர்ச்சியோடு கேட்க ஐயோ உளறிட்டனா உளறிட்டனா என்று மணி தன்னை தானே சொல்லி கொண்டான் .

ஆமா மச்சான் நீங்க சொல்ற மாதிரி என்னால ரகசியத்த காப்பாத்த முடியாதுடா என்றான் மணி .அது எல்லாருக்கும் தெரியும் சரி அத விடு டேவிட் என்ன நிஜமாவே நீ சொன்ன மாதிரி எல்லாம் சொன்னனா என்று விக்கி கேட்டான் .அட ஆமாடா ரொம்ப வருத்தத்தோட சொன்னான் .

அப்ப நீ சொன்ன மாதிரி அவங்களுக்குள்ள எதுவும் affair இருக்காடா என்று எதுவுமே தெரியாதது போல கேட்டான் .ம்ம் அத நானே அவன் கிட்ட கேட்டேன் என்னடா எதுவும் அவ கூட affair ல இருக்கியா அப்படின்னு என்றான் மணி .

ம்ம் என்ன சொன்னான் அவன் .இல்லடா அவள பாத்தே கிட்டத்தட்ட 5 மாசம் ஆகுதுன்னு சொல்றான் என்றான் மணி .அப்ப அந்த கார்ல அவ ஆபிஸ்க்கு போனது என கேட்டான் விக்கி .

சத்தியாமா நான் அவ ஆபிஸ் பக்கம் இப்பக்குள்ள போகவே இல்ல .ஆனா அவ ஹாஸ்டலுக்கு போனேன் அங்க விசாரிச்சப்ப அவ 4 மாசத்துக்கு முன்னாடியே தமிழ் நாடு போயிருக்காத சொன்னங்கன்னு சொல்றான் என்றான் மணி .சரி வாடா நமக்கென்ன எவன் எவள வச்சுட்டு போன வா போலாம் என்றான் விக்கி .

என்னடா இப்படி சொல்ற அவன் உன் பிரண்டு அவன் வழி தவறி போனா அவன காப்பாத்த மாட்டாயே என்றான் மணி .நானே வழி தவறி போயித்தான் இருக்கேன் என்னையே காப்பாத்தவே யாரும் இல்ல என்று ஒரு வருத்ததோடு சொல்லி விட்டு காரில் போயி உக்காந்தான் .

அவன் அப்படி சொன்னது மணிக்கு அவன் மேல் ஒரு பரிதாபத்தை உண்டு பண்ணியது ஏதோ பிரச்சினைல இருக்கான் .ஆனா என்னனு சொல்ல பயப்புடுறான் சரி இன்னொரு நாள் கேப்போம் இப்ப கேட்க வேணாம் என்று நினைத்து கொண்டு சரி மச்சி நம்ம ஆஸ்பத்திரி போயி டேவிட் டிச்சார்ஜ் பண்ணி வீட்ல சேத்துட்டு போவோம் என்றான் மணி .

சரிடா என்றான் விக்கி .பின் ஆஸ்பத்திரி போயி டேவிட்டை டிஸ்சார்ஜ் பண்ணி விட்டு அவனை விக்கியின் காரில் ஏத்தி கொண்டு டேவிட் வீட்டில் போயி அவனை சேர்த்தார்கள் .

ரொம்ப தேங்க்ஸ்டா என்றான் டேவிட் .டேய் ஏன் பிரண்ட்ஸ்க குள்ள தேங்க்ஸ் எல்லாம் என்றான் மணி .ம்ம் கரெக்ட்டா என்றான் விக்கி .நீங்க பேசிகிட்டு இருங்க நான் போயி காப்பி போட்டு கொண்டு வரேன் என்றாள்

ரெஜினா வேணாமா இருக்கட்டும் நீ ஆஸ்பத்திரில இருந்து டயார்ட் ஆகி இருப்ப நாங்க கிளம்புறோம் என்றான் மணி .ம்ம் ஆமாடா டேவ் நாங்க கிளம்புறோம் என்றான் விக்கி .டேய் இருங்கடா ஒரு காப்பி தான குடிச்சுட்டு போங்க என்றான் .அதுக்குள் ரெஜினா கிச்சனுக்குள் காப்பி போட போயி விட்டாள்

அப்புறம் நீ ஏண்டா ஒரு மாதிரி இருக்க என்றான் டேவிட் ,ஒன்னும் இல்லடா ஆபிஸ்ல சில பிரச்னை அதான் என்றான் விக்கி .ஓகேடா எனக்கு உன்னையே பத்தி தெரியும் நீ இப்ப இங்க சொல்ல கூச்சப்படுவ நான் எனக்கு சரியானதுக்கு அப்புறம் ஒரு நாள் மீட் பண்ணி நிறைய பேசுவோம் இந்த அஞ்சு மாசம் பேச முடியாதத எல்லாம் பேசுவோம் என்றான் டேவிட் .ஓகேடா கண்டிப்பா என்றான் விக்கி .

அப்புறம் ஒரு வகைல எனக்கு இந்த ஆக்சிடன்ட் ஆனதுல நான் சந்தொசபடுறேன் என்றான் டேவிட் .ஏன்டா அப்படி சொல்ற என கேட்டான் விக்கி இப்படி ஆனதால தான நீயும் நானும் மறுபடியும் ஒன்னு சேர முடிஞ்சுச்சு மறுபடியும் பேச முடிஞ்சுச்சு .

இந்த அஞ்சு மாசம் உன் கிட்ட பேசாம எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு நானா வந்து பேச நினைப்பேன் ஆனா என் ஈகோ என்னைய விடல ஆனா இப்ப கடவுளா நம்ம நட்ப மறுபடியும் ஒன்னு சேத்து வச்சு இருக்காரு என்றான் டேவிட் .

சரி எதுக்குடா பழச எல்லாம் பேசிகிட்டு நீ இப்பதைக்கு ரெஸ்ட் எடு நம்ம இன்னொரு நாள் நல்லா ரொம்ப நேரம் பேசிகிருவோம் என்றான் விக்கி ,ஓகே சுயர்டா என்றான் டேவிட் .பின் காப்பியை குடித்து விட்டு இருவரும் கிளம்பினார்கள் . பின் மணியை இறக்கி விட அவன் வீட்டிற்கு போனான் .வீட்டுக்கு வாடா என்றான் மணி .இல்ல மச்சான் இன்னொரு நாள் என்று விக்கி சொல்ல

அட வாடா வீடு வரைக்கும் நீ வந்துட்டு வீட்டுக்குள்ள வராம போன வள்ளி அப்புறம் உன் கிட்ட பேச மாட்டா என்று சொன்னான் .ஓகே வரேன் என்று மணி வீட்டிற்குள் போனான் .ஹ சிஸ் எப்படி இருக்க என்றான் விக்கி .

அவள் ஒரு கடுப்போடு நல்ல இல்ல என்றாள் ,இங்கயும் அப்படிதான் என்று விக்கி நினைத்து கொண்டு ஏன் என்ன ஆச்சு என்றான் விக்கி .ஒன்னும் இல்ல நீ எதுவும் சாப்பிடிரியா என்றாள் வள்ளி .

அது இருக்கட்டும் டேய் மணி வள்ளி ஏன்டா இப்படி இருக்கா என்ன ஆச்சுடா என்றான் விக்கி .அவளுக்கு என் மேல கோபம் அதான் இப்படி உம்முன்னு இருக்கா என்றான் மணி .

ஏண்டா நீ எதுவும் அவள திட்டினியாடா என்றான் விக்கி .திட்ட எல்லாம் செய்யலடா அவளுக்கு இப்ப 8 மாசம் ஆச்சு அதுனால ரொம்பவே பயப்படுறா அவங்க அப்பா அம்மாவ கூப்பிட்டு வர சொல்லி என்னைய ரயில் டிக்கெட் போட சொன்னா அது கேன்சல் ஆனா அதுக்கு நான் என்ன பண்ணுவேன் என்றான் மணி .

ஏண்டா கேன்சல் ஆச்சு என்றான் விக்கி .ஏண்டா நீ நியுஸ் எல்லாம் பாக்க மாட்டியா நம்ம ஸ்டேட்ல மழை கொட்டோ கொட்டுன்னு கொட்டி தமிழ் நாடு முழுக்க வெள்ளத்துல மிதக்குது வீடே மிதக்குது ,இதுல எப்படி நம்ம ஊர்ல இருந்து ரயில் வரும் .

இப்ப என்ன அவங்க அப்பா அம்மா இல்லாட்டி நான் இல்லையா இவளுக்கு என்றான் மணி .உங்களுக்கு என்ன தெரியும் நீங்க ஆம்பிளக பொண்ணு இருந்து எங்கள மாதிரி நீங்களும் குழந்தைய சுமந்தா தெரியும் எங்க வலி கஷ்டம் வேதனை எல்லாம் .

அதுவும் எனக்கு முத பிரசவம் வேற உலகத்துல எல்லா பொன்னும் முத பிரசவத்துக்கு அம்மா பக்கத்துல இருக்கணும்னு தான் நினைப்பாங்க . என் பயம் உங்களுக்கு எப்படி தெரிய போகுது நீங்க எல்லாம் உடல் சந்தோசத்துக்கு விந்த செலுத்திட்டு போயிடுவிங்க நாங்க தான் சுமக்கிறது என்றாள் வள்ளி .

பாருடா இப்படி தான் எதாச்சும் பேசி என் கோபத்த கிளருடா நான் இன்னும் ஒரு வருஷம் போகட்டும்னு கூட தான் சொன்னேன் இவ கேட்டாளா என்றான் மணி .

ஆமா இன்னும் ஒரு வருஷம் போனா உங்க அம்மா என்னைய மலடின்னு சொல்லிட்டு உங்களுக்கு வேற ஒரு பொண்ண கல்யாணம் பண்ணி வச்சுடுவாங்க அதுக்குதான நீங்களும் அடி போடுறிங்க என்றாள் வள்ளி .இங்க பாரு எங்க அம்மாவ பத்தி பேசுனா அவளவுதான் என்றான் மணி .

அப்போது தான் விக்கிக்கு அந்த கர்ப்பம் என்ற வார்த்தையை கேட்டதும் சுவாதி நினைப்பு வர மணியை பார்த்தான் , மணி 9 ஆச்சு ,ஐயோ பாவம் உடனே கிளம்பனும் என்று நினைத்து கொண்டு அவர்கள் இருவரிடமும் ஹலோ நீங்க சண்ட போட்டு கிட்டே இருங்க நான் கிளம்புறேன் என்று சொன்னான் , இருவரும் சண்டையை நிறுத்தி விட்டு சாப்பிட்டு போடா என்றார்கள் . இருக்கட்டும் லேட் ஆகிடுச்சு என்றான் விக்கி .

அங்க என்ன உன் பொண்டாட்டியா உனக்காக வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கா பேசாம இங்கயே சாப்பிட்டு இங்கயே தூங்கிட்டு காலைல எந்திர்ச்சு போடா என்றாள் வள்ளி .அதுக்கு இல்ல இப்ப கொஞ்ச நாளா என் எரியலா திருட்டு இருக்குன்னு சொல்றாங்க நான் நேத்தும் போகல இன்னைக்கும் போகல அதுனால போயி வீடு செப்பா இருக்கான்னு பாக்கணும் என்றான் விக்கி ,

ஓகே போயிட்டு வா ஆனா அது என்ன புதுசா பிளவர்ஸ் எல்லாம் வாங்கி இருக்க ம்ம் அந்த கதைய அடுத்து பாக்கும் போது சொல்ற என்றாள் வள்ளி புத்திசாலி எங்கிட்டு போனாலும் எனக்கு செக் வச்சுருரா என்று விக்கி மனதில் நினைத்து கொண்டு .ம்ம் சரி வரேன் சண்ட போடாம இருங்க என்று சொல்லிவிட்டு போனான் .

போயி காரில் ஏறி உக்காந்து சுவாதி என்ன பண்ணிக்கிட்டு இருக்கான்னு கேப்போம் என்று செல்லை எடுத்தான் .அது பேட்டரி டெட் ஆகி இருந்துச்சு .

பாவம் என்ன செஞ்சுகிட்டு இருக்களோ என்று அவளை நினைத்து கொண்டு வண்டியை எடுத்துகொண்டு வேகமாக ஓட்டினான் அங்கு சுவாதி அஞ்சலியிடம் சொல்லி கொண்டு இருந்தாள் ஆமாக்கா நான் விக்கிய லவ் பண்றேன் ரொம்ப லவ் பண்றேன் .

தொடரும்...

கருத்துக்களை போஸ்ட்க‌ளி‌ல் பதிவு செ‌ய்யவு‌ம்...

என்றும் வாசகர்கள் ஆதரவுடன்

உங்கள் ராஜேஷ்.
[+] 4 users Like Rajiss's post
Like Reply
Superb update.
[+] 1 user Likes Vasanthan's post
Like Reply
So nice
[+] 1 user Likes Nesamanikumar's post
Like Reply
Good one
[+] 1 user Likes NovelNavel's post
Like Reply
https://xossipy.com/thread-46280.html
Tiger                                         ராஜாசிங்@107
[+] 1 user Likes Rajasingh107's post
Like Reply
Super
[+] 1 user Likes Dorabooji's post
Like Reply
முந்தைய பகுதிகளில் தங்களது கருத்துக்களை பதிவு செய்து ஆதரவு கொடுத்த அனைத்து நண்பர்களுக்கும்

நன்றிகள் பல...

முந்தைய பகுதிகளின் தொடர்ச்சியாக..

ஒரு நாள் முன்பு விக்கி டேவிட் ஆக்கிசிடன்ட் ஆன பின்பு அவன் அங்கே ஆஸ்பத்திரியில் இருந்ததால் அவன் சுவாதியிடம் அஞ்சலியை வர சொல்லி விக்கி இருந்து கொள்ள சொன்னதால் சுவாதியும் அஞ்சலி அக்காவை போன் பண்ணி வர சொன்னாள் ,அஞ்சலியும் வந்தாள் ஹலோ மதர் எப்படி இருக்கீங்க உள்ள உங்க குட்டி மக்கி எப்படி இருக்கான் என்றாள் அஞ்சலி .

வாங்க அக்கா அது என்ன புதுசா மதர் நான் என்ன கல்யாணம் முடிக்காம கன்னியாஸ்திரியவா போயிட்டேன் என்றாள் ,அது இல்லடி நீதான் ஒரு குழந்தைக்கு தாய் ஆகிட்டாலே அந்த மதர் சொன்னேன் என்றாள் அஞ்சலி . அப்புறம் அது என்ன குட்டி மக்கி என கேட்டாள் .அதான் உன் வயித்துல வளருதே அதான் குட்டி மக்கி என்றாள் . அக்கா first of all அவங்க அப்பா பேரு மக்கீ இல்ல விக்கி விக்னேஷ் இத நான் உங்க கிட்ட பல தடவ சொல்லிட்டேன் என்றாள் சுவாதி .

ஒ சாரி டியர் ம்ம் பரவல அவன பிடிக்கிலன்னு சொல்லிட்டு எல்லா பொண்ணுக மாதிரியும் பேசுற ஒரு குடும்ப பொண்ண மாறிட்ட கிட்டத்தட்ட என்றாள் அஞ்சலி .நீங்க சொல்றது ஒன்னும் புரியல என்றாள் சுவாதி . புரியலையா அதாவது நார்மலா கல்யாணம் ஆன பொண்ணுக கல்யாணம் ஆன புதுசுல புருஷன் பேர சொல்ல கூச்சபட்டுகிட்டு அவரு இவருன்னு சொல்வாங்க .அப்புறம் குழந்தை பிறந்ததுக்கு அப்புறம் யார் ஆச்சு புருஷன பத்தி கேட்டா குழந்தையோட பேர சொல்லி அவ அப்பா

for example என்னைய எடுத்துக்கோ நானும் உங்க அண்ணன starting ல அவங்க அப்படின்னு சொன்னேன் . அப்புறம் முதல் குழந்தை ராம் பிறந்ததுக்கு அப்புறமா அவர எங்கன்னு யாருச்சு கேட்டா ராம் அப்பா கடைக்கு போயிருக்காரு ராம் அப்பா குளிக்கிறாரு அப்படிதான் சொல்வேன் நீயும் அதே மாதிரி சொல்ல ஆரம்பிச்சு நார்மல் பொண்ண மாறிட்டியே என்றாள் அஞ்சலி .ஏதோ சொல்றிங்க போங்க எனக்கு இன்னும் புரியல என்றாள் .

சரி என்ன இவன் அப்பா எங்க போனாரு என்று சுவாதி வயிற்ரை செல்லமாக தொட்டு கொண்டே கேட்டாள் .ம்ம் ஏதோ ஒரு மீட்டிங்காம் டெல்லி வரைக்கும் போயிருக்கான் நாளைக்கு தான் வருவானாம் என்றாள் ,ம்ம் என்ன உன்னையே எப்படி வச்சு இருக்கான் என்றாள் அஞ்சலி .ம்ம் அவன் என்ன என் புருசனா நல்லா வச்சு இருக்கிறதுக்கு அவன் ஒரு ரூம்ல இருக்கான் நான் ஒரு ரூம்ல இருக்கேன் .நாங்க ரெண்டு பேரும் ஜஸ்ட் ரூம் மேத்ஸ் அண்ட் ஜஸ்ட் பிரண்ட்ஸ் அவளவு தான் என்றாள் .

ஒ அப்படியா என்று அவள் கண்களை ஊடுருவது போல் ஒரு மாதிரியாக அஞ்சலி கேட்க சுவாதி ஆமாக்கா அதுக்கு ஏன் இப்படி பாக்குறிங்க என்றாள் சுவாதி .ஒன்னும் இல்ல உன் கண்ணுல ஏதோ ஒரு மாறுதல் அதாவது சந்தோசம் பயம் ரெண்டும் கலந்த மாதிரி இருக்கு அதான் அப்படி பாக்குறேன் என்றாள் அஞ்சலி .ஒ அதுவா ஒரு வேல நான் கர்ப்பமா இருக்கிறதால அப்படி தெரியும் போல என்றாள் .

ம்ம் நிஜமாதானா என்று மீண்டும் அஞ்சலி ஒரு மாதிரியாக கேட்க அதற்கும் மேல் அந்த விசாரணை பார்வை பொறுக்க முடியாமல் ஓகே alright என்னால இதுக்கும் மேலயும் உண்மைய மறைக்க முடியல .யார்கிட்டயாச்சும் இதுக்கும் மேல சொல்லாட்டி எனக்கு தலையே வெடிச்சுடும் போல இருக்கு என்றாள் சுவாதி .சரி சொல்லு என்றாள் அஞ்சலி .எனக்கு விக்கி மேல என்று சொல்ல முடியாமல் அஞ்சலியை கட்டி பிடித்து அழுக ஆரம்பித்தாள் .

இவ ஒருத்தி எதையாச்சும் சொல்றதுக்கு முன்னாடி சீரியல் கதாநாயகி மாதிரி அழுக ஆரம்பிச்சுடுவா என்று சொல்லி அஞ்சலி அவளை தட்டி எழுப்பி சொல்லுடி உனக்கு அவன் மேல என்ன என்றாள் .ஏதோ சொல்ல முடியாத பீலிங் வர வர அவன ஏதோ பிடிக்க ஆரம்பிச்சு இருக்கு அவனும் அதுக்கு ஏத்த மாதிரி ரொம்ப நல்லவானா மாறிகிட்டு வரான் என்றாள் .இது எப்ப இருந்து அவன பிடிக்க ஆரம்பிசுச்சு மேடத்துக்கு என்றாள் அஞ்சலி .

தெரியல அன்னைக்கு எனக்கு மாங்கா வாங்க மார்க்கெட் புல்லா அலைஞ்சப்ப அப்புறம் அன்னைக்கே மழை பெஞ்சப்ப எனக்காக ஓடி வந்து என்னைய கூப்பிட வந்தது அப்புறம் ஒரு நாள் முழுக்க கார்ல அவன் கூட இருந்தது .இதலாம் என்னைய அவன் பக்கம் இழுத்துருச்சு அக்கா .அண்ட் உங்களுக்கு தெரியுமா இப்பலாம என் பையனுக்கும் அவன பிடிச்சு போச்சு போலக்கா நான் விக்கிய பாக்குறப்ப எல்லாம் அப்படியே உள்ள பயங்கரமா ஏதோ ரொம்ப சந்தோசமா துள்ளி குதிக்கிற மாதிரி உதைக்கிறான் . இருக்காதடி அவங்க அப்பன பாக்கும் போது அவனுக்கு உள்ள சந்தோசம் வர தான் செய்யும் என்றாள் அஞ்சலி

அண்ட் எனக்கும் இப்பலாம் அவன பாக்கும் போதெலாம் என் இதயம் ரொம்ப பட படன்னு அடிக்குது ஆரம்பத்துல அவன் கூட ரூம்ல இருக்கும் போது ஏண்டா இவன் கூட எல்லாம் இருக்கோம்னு தோணும் .சில நேரங்கள அவன் என்னைய ரொம்ப திட்டும் போது அப்படியே எதாச்சும் கடல குதிச்சு செத்துர்லாம்னு தோணும் .ஆனா என் குழந்தைக்காக பொறுத்து கிட்டேன் . ஆனா இப்பலாம் அவன் என்னையே திட்டவே மாட்டிங்குறான் என்று சொல்லி சிறிது நேரம் அமைதியாக இருந்து விட்டு

ஏன் அக்கா உங்களுக்கு எப்பாயச்சும் உங்க வீட்டுகாரார் உங்கள திட்டாம இருந்தா எப்படி இருக்கும் என சுவாதி கேட்டாள் .ஒ அந்த பீலிங்க கேட்குறியா அவங்க நம்மள கொஞ்சாம இருந்தா கூட ஒன்னும் தெரியாது ஆனா ஒரு நாள் நம்மள திட்டாம அமைதியா இருந்தா அந்த நாளே ஏதோ ஒன்னு குறையுற மாதிரி இருக்கும் என்றாள் அஞ்சலி . உடனே சுவாதி ஆமாக்கா அதே தான் அக்கா அவன் இப்ப எல்லாம் என்னையே திட்டவே மாட்டிங்குறான் அது ஒரு மாதிரி இருக்கு...

அட்லிஸ்ட் கோபம் ஆச்சும் படுவான் இப்ப அதுவும் பட மாட்டிங்குறான் எப்ப அவன் என்னைய திட்டுவான்னு ஏக்கமா இருக்கு என்றாள் சுவாதி .அப்புறம் என்ன பண்றான் என்று அவள் சொல்வதை ரசித்து கொண்டே கேட்டாள் அஞ்சலி .தெரியல திட்டவே மாட்டிங்குறான் ரொம்ப பிரண்ட்லியா பேசுறான் அண்ட் சில நேரத்துல என்னைய பாத்தா உடனே பேச மாட்டின்கிறான் அப்படியே கொஞ்ச நேரம் கம்முனு இருக்கான் என் முகத்தையே பாத்து கிட்டு இருக்கான் . எனக்கும் அவன பாத்தா என்னைய அறியாம என் வாய் சிரிக்குது சந்தோசத்துல ,

அதாவது உன்னையே பாத்து அவன் ஜொள்ளு வடிக்கிரான்னு அவன பாத்து நீ வழியிற சரி சொல்லு என்றாள் அஞ்சலி .அப்படியா அக்கா அவன் என்னைய பாத்து நிஜமாவே வழியிரனா என்றாள் மெல்ல ஒரு புன்னகையோடு சுவாதி கேட்க .அட ஆமாடி மேல சொல்லு என்றாள் அஞ்சலி .சொல்றதுக்கு என்ன இருக்கு இனி I think I am Love With VIKI என்று சொல்லி விட்டு அப்படியே ஒரு சின்ன வருத்ததோடு தலையை குனிந்தாள் . அது நல்ல விசயம் தாண்டி அத ஏன் வருத்ததோடு சொல்ற என்று கேட்டாள் அஞ்சலி .

அது வந்து நான் அவன முழுக்கவே லவ் பண்ணிருவநேனோ பயமா இருக்கு என்றாள் சுவாதி . ஏண்டி அதுல என்ன பயம் என்று அஞ்சலி கேட்க அது வந்து வந்து என்று சொல்ல முடியாமல் அஞ்சலியின் தோளில் சாய்ந்து அழுதாள் .ஏண்டி அழுகுர விக்கி பொம்பள பொறுக்கியா இருக்கிரதாலையா என கேட்டாள் ,இல்ல அக்கா அது ஒரு மேட்டரே இல்ல சொல்லபோனா விக்கி இப்ப ரொம்ப திருந்திட்டான் .எனக்கு தெரிஞ்சு அவன் இப்ப எந்த பொன்னுகிட்டயும் போன மாதிரி தெரியல அப்படியே போயி இருந்தாலும் அத பத்தி எல்லாம் எனக்கு கவலை இல்ல .

அப்புறம் என்னதான்டி உன் கவலை என்றாள் அஞ்சலி .அதாவது விக்கிய நான் இழக்க விரும்பல அக்கா என்று சொல்லி மேலும் குலுங்கி குலுங்கி அழுதாள் .அப்புறம் என்னடி அவனுக்கும் உன்னையே பிடிச்சு இருக்கு உனக்கும் அவன பிடிச்சு இருக்கு அல்ரெடி ரெண்டு பேர் குழந்தையும் வளருது அப்புறம் என்ன குழந்தையோட சந்தோசமா கல்யாணம் பண்ணிகொங்க எந்த குழந்தைக்கும் கிடைக்காத பாக்கியம் அவங்க அப்பா அம்மா கல்யாண போட்டோல கூட இருக்க போற பாக்கியம் உன் குழந்தைக்கு கிடைக்க போகுது என்னடா மவனே பெரியம்மா சொல்றது சரிதானே என்று வயற்றை தொட்டு அஞ்சலி கேட்க

சுவாதி அதை கேட்டு மெல்ல சிரித்தாள் . சிரித்தும் அழுதும் கொண்டே சொன்னாள் கேட்க நினைச்சு பாக்க நல்லாத்தான் இருக்கு ஆனா இதலாம் நடக்குனுமே என்றாள் சுவாதி .முதல கண்ண தொடடடி முண்ட கண்ணி என்று அவள் கண்ணீரை அஞ்சலி துடைத்து விட்டு கேட்டாள் ஏன் நடக்காது உனக்கு சொல்ல பயமா இருந்தா சொல்லு நானே நீ விரும்புறத அவன் கிட்ட சொல்றேன் என்றாள் அஞ்சலி .

இல்லக்கா வேணாம் என்றாள் ,ஏண்டி வேணாம் என கேட்டாள் சுவாதி .இல்ல இது சரிபட்டு வராது என்றாள் சுவாதி . எதுக்குடி சரியா வராது என்றாள் அஞ்சலி . இல்லக்கா வேணாம் என்று மறுபடியும் சுவாதி சொல்ல அஞ்சலி கடுப்பாகி இப்ப என்ன தாண்டி சொல்ல வர என்றாள் அஞ்சலி .

ஏன்னா நான் ஒரு ராசி இல்லாதாவ என்று கத்தினாள் சுவாதி .அதை கேட்டு அஞ்சலி சிரித்தாள் அடீ போடி நான் கூட ஏதோ பெருசா சொல்ல போறேன்னு பயந்தா போயும் போயும் ராசிய போயி ஒரு காரணமா சொல்ற என்னைய கூடதான் இப்ப வரைக்கும் என் மாமியார் ராசி இல்லாதாவ விளங்காதவ அப்படின்னு சொல்றாங்க நான்லாம் அத இந்த காதுல வாங்கி அந்த காது வழியா விட்ருவேன் .போயும் போய் ராசிக்கு போயி பயப்புடிரியே நீ எல்லாம் என்ன மார்டன் காலத்து பொண்ணு என்று அஞ்சலி கிண்டல் அடித்து சிரிக்க

அக்கா நான் ஒரு கொலைகாரி என்றாள் சுவாதி .சிரித்து கொண்டு இருந்த அஞ்சலி சிரிப்பை நிப்பாட்டி விட்டு என்னது என்றாள் ,சுவாதி மெல்ல சொன்னாள் நான் ஒரு கொலைகாரி..

தொடரும்....

கருத்துக்களை போஸ்ட்க‌ளி‌ல் பதிவு செ‌ய்யவு‌ம்...

என்றும் வாசகர்கள் ஆதரவுடன்

உங்கள் ராஜேஷ்.
Like Reply
Pleasant update
Like Reply

Users browsing this thread: 8 Guest(s)