Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
ஹேக்கிங்கை தடுக்க வாட்ஸ்அப்பை அப்டேட் செய்வது எப்படி?
வாட்ஸ்அப் செயலியை இந்தியாவில் 200 மில்லியனுக்கும் அதிகமான பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
வாட்ஸ் ஆப்
Updated: May 14, 2019, 5:07 PM IST
வாட்ஸ்ஆப் செயலியில் கடந்த சில வாரங்களாக ஸ்பைவேர் தாக்குதல் ஒன்று நடைபெற்று வந்துள்ளது. அதை தொடக்கத்திலேயே கண்டறிந்த வாட்ஸ்அப் நிறுவனம் அதற்கான தீர்வையும் உடனே வெளியிட்டுள்ளது.
வாட்ஸ்அப் செயலியை இந்தியாவில் 200 மில்லியனுக்கும் அதிகமான பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த செயலியில் கடந்த சில வாரங்களாக மிஸ்டு கால் மூலம் மொபைல் ஃபோன்களை தாக்கக் கூடிய ஸ்பைவேர் வைரஸ் தாக்குதல் ஒன்று நடந்து வந்துள்ளது.
இந்த தாக்குதல் குறித்து உடனே கண்டறிந்த வாட்ஸ்அப் நிறுவனம் ஸ்பைவேர் வைரஸ் தாக்குதலில் மாட்டிக்கொள்ளாமல் மொபைல் போன்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள புதிய அப்டேட் ஒன்றை மே 10-ம் தேதி வெளியிட்டுள்ளது.
இந்த வாட்ஸ்ஆப் அப்டேட்டை மொபைல் போனில் நிறுவும் போது ஸ்பைவேர் வைரஸ் தாக்குதலிலிருந்து தப்பிக்கலாம் என்றும் வாட்ஸ்ஆப் தெரிவித்துள்ளது.
அதற்கு வாட்ஸ்அப் பயன்படுத்தும் அனைவரும் தங்களது ஸ்மாட்ஃபோனில் உள்ள கூகுள் பிளே ஸ்டோரில் > My apps & games தெரிவுக்குச் சென்று இன்ஸ்டால் செய்த செயலிகளில் வாட்ஸ்ஆப் செயலியைத் தேர்வு செய்ய வேண்டும். பின்னர் அப்டேட் என்பதை கிளிக் செய்து வாட்ஸ்ஆப் செயலியைப் புதுப்பிக்க வேண்டும்.
இதை செய்தால் உங்கள் வாட்ஸ்அப் செயலியை மிஸ்டு கால் மூலமாகத் தாக்கும் ஸ்பைவேர் வைரசிலிருந்து தற்காத்துக்கொள்ளலாம்.
வாட்ஸ்ஆப் செயலியை ஸ்பைவேர் வைரஸ் தாக்கியது குறித்து அறிக்கை வெளியிட்டு இருந்தாலும் அதனால் என்ன மாதிரியான பாதிப்புகள் எல்லாம் ஏற்படும், எவ்வளவு நபர்கள் அதில் பாதிப்படைந்துள்ளனர் என்பது பற்றி தெரிவிக்கவில்லை
ஆனால் வாட்ஸ்ஆப் செயலி மீது இஸ்ரேலை சேர்ந்த என்எஸ்ஓ என்ற சைபர் உளவுத்துறை நிறுவனம் தான் இந்த ஸ்பைவேர் தாக்குதலை நடத்தியது சென்று சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
நோ சொன்ன இந்தியா... வெல்கம் கொடுத்த ஜப்பான்... ’உலகின் முதல் கண்டுபிடிப்பு’ மார்தட்டும் தமிழன்
இந்தியாவில் உள்ள பல தயாரிப்பு நிறுவனங்களை நாடினேன், ஆனால் யாரும் எனக்கு வாய்ப்பு வழங்கவில்லை. அதனால் தான் ஜப்பான் அரசாங்க பார்வைக்கு எடுத்து சென்றேன்.
சவுந்திரராஜன் குமராசாமி
[email=?subject=%E0%AE%A8%E0%AF%8B%20%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%20%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE...%20%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%20%E0%AE%9C%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D...%20%E2%80%99%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E2%80%99%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A9%E0%AF%8D&body=%E0%AE%A8%E0%AF%8B%20%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%20%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE...%20%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%20%E0%AE%9C%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D...%20%E2%80%99%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E2%80%99%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A9%E0%AF%8D:%20https://tamil.news18.com/news/technology/tamil-nadu-engineer-invents-unique-engine-hydrogen-to-oxygen-vjr-153959.html][/email]
Vijay R | news18
Updated: May 11, 2019, 10:56 PM IST
தமிழகத்தைச் சேர்ந்த பொறியாளர் 10 வருட கடின உழைப்பிற்கு பின் சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பான தண்ணீரில் இயங்கக்கூடிய தனித்துவமான இயந்திரத்தைத் தயாரித்துள்ளார்.
கோயம்புத்தூரைச் சேர்ந்தவர் பொறியாளர் சவுந்திரராஜன் குமராசாமி. இவர் உருவாக்கி உள்ள இயந்திரத்தில் ஹைட்ரஜனை எரிபொருளாக எடுத்துக்கெண்டு ஆக்சிஜனை வெளிப்படுத்தும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் தண்ணீரில் இயங்குவது இந்த இயந்திரத்தின் சிறப்பு அம்சமாக உள்ளது.
சவுந்திரராஜன் குமராசாமி
இது தொடர்பாக அவர் ஆங்கில செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில், ’உலகத்திலேயே இது மாதிரியான கண்டுபிடிப்புகளில் இதுவே முதன் முறையானது. இந்த இயந்திரத்தை உருவாக்க பத்து வருடங்கள் தேவைப்பட்டது. இந்த இயந்திரம் ஹைட்ரஜனை எரிபொருளாக எடுத்துக்கெண்டு ஆக்சிஜனை வெளிப்படுத்தும்.
இந்தியாவில் இந்த இயந்திரத்தை அறிமுகப்படுத்த வேண்டும் என்பதே எனது கனவு. இந்தியாவில் உள்ள பல தயாரிப்பு நிறுவனங்களை நாடினேன், ஆனால் யாரும் எனக்கு வாய்ப்பு வழங்கவில்லை. அதனால் தான் ஜப்பான் அரசாங்க பார்வைக்கு எடுத்து சென்றேன். அங்கு எனக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. இந்த இயந்திரம் ஜப்பானில் பயன்பாட்டிற்கு வர உள்ளது. இந்தியாவிலும் விரைவில் அறிமுகமாகும் என நம்புகிறேன்’ என சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
`தோனியின் முடிவுகள் பலமுறை தவறாகியுள்ளது!” - குல்தீப் யாதவ்
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்தியாவுக்கு இரண்டு முறை உலகக்கோப்பையைப்(2007 -ம் ஆண்டு டி20 உலகக்கோப்பை மற்றும் 2011 -ம் ஆண்டு 50 ஓவர் உலகக்கோப்பை) பெற்றுத் தந்தவர். பந்துவீச்சாளர்களை அவர் பயன்படுத்தும் விதமும் களத்தில் அவர் எடுக்கும் பல வித்தியாசமான முடிவுகளும் பலன் தரும்போது ரசிகர்கள் சிலாகித்துவிடுவார்கள். `சொல்லி அடித்த தோனி’ என மீம்ஸ்கள் பறக்கும். அவரது கிரிக்கெட் அறிவு குறித்து பல்வேறு முன்னணி மற்றும் முன்னாள் வீரர்கள் புகழ்ந்துள்ளனர்.
அவரால் எதிரணி வீரர்களின் செயல்பாடுகளைச் சிறப்பாகக் கணிக்க முடியும் எனப் பலர் சொல்லியிருக்கிறார்கள். ஆனாலும் தோனியும் மனிதர்தானே. அவர் தவறு செய்யாமல் இருக்க முடியுமா என நம்மில் பலருக்கும் கேள்வி இருக்கும். இப்படி ஒரு கேள்விதான் இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் முன் வைக்கப்பட்டது.
தோனி, போட்டியின்போது பலமுறை பந்துவீச்சாளர்களுக்கு டிப்ஸ் வழங்குவார். நீங்கள் எப்போதாவது தோனி வழங்கும் டிப்ஸை கேள்வி கேட்டதுண்டா என்ற கேள்வி குல்தீப் முன்வைக்கப்பட்டது. இதற்குப் பதிலளித்த அவர், ``பலமுறை தோனியின் முடிவுகள் தவறாகியுள்ளது. ஆனால், அவரிடம் அதைச் சொல்ல முடியாது” என்றார் நகைச்சுவையாக.
தொடர்ந்து பேசியவர், ``அவர் சும்மா வந்து ஏதாவது சொல்லிக்கொண்டு இருக்க மாட்டார். மிக குறைவாகத்தான் பேசுவார். எதாவது சில டிப்ஸ் வழங்க வேண்டும் என அவர் எண்ணினால் மட்டுமே வந்து பேசுவார்” என்றார். குல்தீப் யாதவ்வின் இந்தக் கருத்து சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. அவர் இந்தக் கருத்தை நகைச்சுவையாகத்தான் சொன்னார். குற்றச்சாட்டாக சொல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
வாட்ஸ் அப் அப்டேட் ஏன்? - ஹேக்கர்கள் ஊடுருவுவது எப்படி?
பிகாசுஸ் என்ற ஸ்பைவேர் அண்மையில் செல்போன் பயனர்களின் தரவுகளை திருட பரப்பப்பட்டதாக வாட்ஸ் அப் நிறுவனம் கூறியுள்ளது.
பிகாசுஸ், போன் கால்கள் மூலம் பயனர்களின் செல்போன்களில் தானாகவே பதிவிறக்கம் செய்யப்படுகிறது. பின்னர் பயனரின் அனுமதியின்றி கேமரா, மைக், ஆகியவை தானாக செயல்பட்டு பயனரின் தரவுகள் ஹேக்கருக்கு அனுப்பப்படுகிறது. பிகாசுஸ், பயனர்களின் குறுஞ்செய்திகள் மற்றும் இ-மெயில்களை ஹேக்கர்களுக்கு அனுப்பும் திறன் கொண்டது எனவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் ஃபேஸ்புக் நிறுவனத்தின் கிளை நிறுவனமான வாட்ஸ் அப் வெளியிட்டுள்ள அறிக்கையில், பயனர்கள் உடனடியாக வாட்ஸ் அப் செயலியை அப்டேட் செய்ய வேண்டுமென கூறியுள்ளது. மேலும் பயனர்கள் தாங்கள் செல்போன்களின் பயன்படுத்தும் ஓஎஸ் என்படும் இயங்கு தளத்தையும் அப்டேட் செய்து பிகாசுஸ் வைரஸிலிருந்து காத்துக் கொள்ள அறிவுரை வழங்கி உள்ளது.
இம்மாதத் தொடக்கத்தில், பிகாசுஸ் வைரஸ் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலரின் செல்போனை ஊருவிய போது முதல் முதலாக கண்டறியப்பட்டது. பிகாசுஸ் வைரஸ் மூலம் பாதிக்கப்பட்ட பயனர்கள் குறித்த தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.
பயனர்கள் தங்களின் தனிபட்ட தரவுகளை காத்துக் கொள்ள மிகவும் விழிப்புணர்வோடு இருக்க வேண்டுமென்பதே வல்லுநர்களின் கருத்தாக உள்ளது. வாட்ஸ் அப்பில் பல்வேறு அப்டேட்கள் செய்யப்பட்டாலும் பயனாளர்களின் தகவல்களை பாதுகாப்பது மிகப்பெரும் சவாலாகவே இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. வாட்ஸ் அப்பில் அனுப்பப்படும் தகவல்கள், புகைப்படம், வீடியோ போன்றவற்றை அனுப்புநர் மற்றும் பெறுநரை தவிற வேறு யாராலும் பார்க்க முடியாதா? என்றால் அது கேள்விக்குறியே.
வாட்ஸ் அப் போன்று தோற்றமுடைய வாட்ஸ் அப் ப்ளஸ், வாட்ஸ் அப் ஜிபி உள்ளிட்ட செயலிகளே தகவல் திருட்டில் ஈடுபடுகின்றன. இத்தகைய போலியான செயலிகள் ப்ளே ஸ்டோரில் கிடைப்பதில்லை. லிங்குகள் மூலமே பிறருக்கு பகிரப்படுகிறது.
தேவையற்ற லிங்குகள் மூலம் புதிய புதிய செயலிகளை பதிவிறக்கம் செய்யக்கூடாது என்றும், சமூக வலைதளங்களில் உள்ள தனிப்பட்ட தகவல்கள் கசியாமல் இருக்க பயனர்களும் விழிப்புடன் இருக்கவேண்டும் என்பதே நிபுணர்களின் கருத்தாக உள்ளது
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
நீலகிரியில் சுற்றுலாப் பயணிகள் அதிகம் பார்க்காத 7 அருவிகள்!
நீரோடை மற்றும் அருவிகளைக் கண்டு ரசிக்கச் செல்லும் சுற்றுலாப் பயணிகள், பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ளவேண்டும். சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலான பொருள்களை வீசிச் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.
தென்னிந்தியாவின் முக்கிய கோடை வாசஸ்தலமான நீலகிரி மாவட்டத்துக்கு, ஆண்டுதோறும் சுமார் 40 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். சில மாதம் உறைப்பனி, அவ்வப்போது சாரல் மழை, கோடை மழை என எல்லா சீஸன்களிலும் குளிருக்குப் பஞ்சம் இருக்காது. அதேபோல் நீலகிரி மாவட்டம் முழுவதும் சுற்றுலாத்தலங்களுக்கும் பஞ்சமில்லை. நீலகிரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் பெரும்பாலும் ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், பைக்காரா படகு இல்லம், குன்னூர் சிம்ஸ் பூங்கா, தொட்டபெட்டா ஆகிய சுற்றுலாத்தலங்களுக்கு மட்டுமே அதிகம் செல்கின்றனர். ஆனால், இன்றளவும் சுற்றுலாப் பயணிகள் அதிகம் கண்டிராத பல இடங்களும் உள்ளன.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
1. மாயாறு அருவி
வனவிலங்குகளின் சொர்க்கம் என அழைக்கப்படும் முதுமலை அடர் வனப்பகுதிகளுக்குள் அமைந்துள்ள மாயாறு அருவி, சுற்றுலாப் பயணிகள் மட்டுமல்ல, உள்ளூர் பழங்குடிகளே அருகில் நெருங்க முடியாத அருவி. ஊட்டி மலைகளில் உற்பத்தியாகும் ஓடைகள் சீகூர் வனப் பகுதிகளில் ஒன்றிணைந்து மாயாறாக வனவிலங்குகளின் தாகம் தீர்க்கிறது. வனவிலங்குகள் நிறைந்த மாயாறு பள்ளத்தாக்கில் சுமார் 160 மீட்டர் உயரத்திலிருந்து ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.
தெப்பக்காட்டிலிருந்து கக்கநல்லா செல்லும் வழியில் சர்க்கிள் ரோடு வழியாக வனத்துக்குள் சிறிது தூரம் பயணித்தால், மிகப் பிரமாண்டமாகக் காட்சியளிக்கும் மாயாறு அருவி. இதைக் கண்டு ரசிக்க, கருங்கற்கள் மற்றும் தேக்குமரங்களைக்கொண்டு காட்சிக் கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு இருந்து பள்ளத்தாக்கில் பாய்ந்து ஓடும் அருவியின் முழு அழகையும் கண்டு ரசிக்கலாம்.
16 ஆண்டுகளுக்கும் மேலாக சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி தடைவிதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது விடுமுறைக் காலம் என்பதால், ரூ.300 செலுத்தி மாயாறு அருவியைக் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்தப் பகுதி ஆற்றுநீர் முதலைகள் மற்றும் நன்னீர் நாய்கள் அதிகம் உள்ள பகுதியாக உள்ளது. அருவியின் அழகில் மயங்கி அருகில் செல்ல ஓர் அடி முன்னே வைத்தால், உடல்கூட மிஞ்சாது. எனவே, மிகுந்த கட்டுப்பாடுகளுக்குப் பிறகே அனுமதிக்கின்றனர்.
2. கேத்ரின் அருவி
மேட்டுப்பாளையத்திலிருந்து கோத்தகிரி செல்லும் சாலையின் உள்ளே தேயிலைத் தோட்டங்களின் சிறிய சாலையில் சிறிது தூரம் பயணித்தால், அளக்கரை சோலைக் காடுகளில் உற்பத்தியாகி ஆண்டு முழுவதும் வற்றாது சில்லென ஆர்ப்பரித்துக் கொட்டும் கேத்ரின் அருவி உள்ளது. 250 அடி உயரத்திலிருந்து பள்ளத்தாக்கில் இரு நிலைகளாக அருவி ஆர்ப்பரித்துக் கொட்டுவதைப் பார்த்தால், தலைச்சுற்றிவிடும்.
குன்னூர் டால்பின் நோஸ் காட்சி முனையிலிருந்து பார்த்தால்தான் கேத்ரின் அருவியின் முழு பிரமாண்டத்தையும் கண்டு ரசிக்க முடியும். கோத்தகிரியில் முதன்முதலாக காபி பயிரிடக் குடியேறிய காக்பர்ன் என்பவரின் மனைவி நினைவாகப் பெயரிடப்பட்டுள்ளது. பள்ளத்தாக்குகள் நிறைந்த ஆபத்தான பகுதி என்பதால், இங்கு நடைப்பயணம் மேற்கொள்ளவும் குளிக்கவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
3. காட்டேரி அருவி
நீலகிரி மாவட்டம் குன்னூரிலிருந்து 15 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது காட்டேரி அருவி. உயரமான இரண்டு மலைகளுக்கு நடுவே 150 மீட்டர் உயரத்திலிருந்து கொட்டும் நீர், அருகிலிருந்து காண்போரை மெய்மறக்கச் செய்யும். காட்டேரி அருவிக்கு மிக அருகில் சாலை செல்வதால் கீழிருந்து அருவியின் முழு அழகையும் கண்டு ரசிக்கலாம். ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இங்கு அணைகள் கட்டப்பட்டு நீரின் விசையிலிருந்து 1000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. இந்தியாவின் முதல் நீர் மின் உற்பத்தி நிலையம் இங்கு உள்ளது. தற்போது மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதில்லை என்றாலும், காட்டேரி அணை பாதுகாப்புத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
4.கல்லட்டி அருவி
ஊட்டியிலிருந்து மசினக்குடிக்குச் செல்லும் சாலையில் கல்லட்டி வனப்பகுதியில் உள்ளது, கல்லட்டி அருவி. ஊட்டி தலைக்குந்தா பகுதிகளில் உற்பத்தியாகும் நீர், காமராஜ் சாகர் அணையிலிருந்து மாயாற்றைச் சென்றடையும் வழியில் கல்லட்டி வனப்பகுதியில் மலையில் அழகிய அருவியாய்க் கொட்டுகிறது. சீகூர் ஹள்ளா எனப்படும் இந்த நீர்தான் வறட்சிக் காலங்களில் முதுமலை வனவிலங்குகளின் தாகம் தீர்க்கும் அட்சயப்பாத்திரம். கல்லட்டி அருவி எந்த அளவுக்கு அழகாக உள்ளதோ, அதே அளவுக்கு ஆபத்தானதும்கூட. பல சுற்றுலாப் பயணிகள் இந்த அருவியில் குளிக்க ஆசைப்பட்டு, பலியாகியுள்ளனர். மசினக்குடி வனப்பகுதியைச் செழுமையாக்கும் இந்த அருவியை ரசித்தால் மட்டுமே போதுமானது.
.
5.பைக்காரா அருவி
எத்தனை முறை பார்த்தாலும் பார்க்கப் பார்க்க சலிக்காத ஒன்று, பைக்காரா அருவி. பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் நன்கு அறிந்த அருவி. நீலகிரியில் ஆர்ப்பரித்துக் கொட்டும் அருவிகளில் மிக அகலமான அருவியாக இருப்பது பைக்காரா அருவிதான். பைக்காரா அணையிலிருந்து வெளியேற்றப்படும் உபரிநீர், பாறைகளில் சலசலத்து ஓடி, அருவியாக வனப்பகுதியில் கொட்டுகிறது. வழுக்கும் பாறைகள் நிறைந்த பகுதி என்பதால், சுற்றுலாப் பயணிகள் அருகில் செல்லாதவாறு இந்த அருவியைச் சுற்றிலும் பாதுகாப்பு வேலிகள் போடப்பட்டுள்ளன.
6. பவானி சிற்றருவி
பவானி நதி உற்பத்தியாகும் இடமான லக்கிடி பகுதியில், பவானி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. மேல் பவானி என்றழைக்கப்படும் இந்தப் பகுதியில் பரந்து விரிந்து கிடக்கும் புல்வெளிகள் சோலை மரக் காடுகளில் பெய்யும் மழைநீரைப் புல்வெளிகள் சேமித்து ஆண்டு முழுவதும் பல சிற்றோடைகள் இணைந்து பவானி நிதி உற்பத்தியாகிறது. நீலகிரியில் காணவேண்டிய முக்கியமான இடங்களில் இதுவும் ஒன்று. உள்ளூர் மக்கள் மிகப் புனிதமான இடமாகக் கருதுகின்றனர். இங்கு செல்வதற்கு ஊட்டியிலிருந்து தங்கள் வாகனத்தில் சென்றாலும், அவலாஞ்சியிலிருந்து வனத்துறை சார்பில் உள்ள சூழல் மேம்பாட்டுக் குழுவால் அமர்த்தப்பட்டுள்ள வாகனங்களில் மட்டுமே செல்ல முடியும்.
இன்றளவும் மாசடையாத பகுதியாகப் பராமரிக்கப்படுவதால், சுற்றுலாப் பயணிகளை மிகுந்த கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கின்றனர். பவானி உற்பத்தியாகும் இடத்தில் பெரிய அருவி இல்லை என்றாலும், பவானி அம்மன் கோயில் அருகே பாறைகளில் சிற்றருவியாய்க் காட்சியளிக்கும்.
7. `எருமைப் பள்ளம்' எனும் சுண்டட்டி கோம்ஸ் அருவி
கோத்தகிரியிலிருந்து கொடநாடு செல்லும் வழியில் சுண்டட்டி கிராமத்திலிருந்து சுமார் 1 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது கோம்ஸ் அருவி. மக்கள் நடமாட்டம் குறைந்த பகுதியாக உள்ளது. உள்ளூர் பகுதியைச் சேர்ந்த சிறு தேயிலை விவசாயிகள் மட்டும் தேயிலை பறிக்க இந்தப் பகுதிக்குச் சென்று வருகின்றனர். ஆபத்தான பாறைகள் நிறைந்ததாகவும், கரடி, காட்டு மாடு அதிகம் உலவும் பகுதியாகவும் உள்ளது.
கட்டபெட்டு வனச்சரகத்துக்கு உட்பட்ட இந்த அருவி, ஆரம்ப காலத்தில் `எருமைப் பள்ளம்' எனவும், நாளடைவில் `கோம்ஸ்' அருவி எனவும் அழைக்கப்படுகிறது. முழுக்க பாறைகள் நிறைந்த பகுதியில் அமைந்துள்ளது. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள், மது அருந்துவதையும், பாசி படர்ந்த ஆபத்து நிறைந்த பாறைகள் உள்ள பகுதியில் குளிப்பதையும் வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். இதனால், உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. கடந்த காலங்களில் இந்த அருவியில் குளிக்கச் சென்ற சில இளைஞர்கள் உயிரிழந்த சம்பவங்களும் நடந்துள்ளன.
சுற்றுலாப் பயணிகள் அதிகம் கண்டிராத பல அருவிகள் இன்னும் உள்ளன. `தென்னகத்தின் தண்ணீர்த் தொட்டி' என்று அழைக்கப்பட்ட நீலகிரி, காடழிப்பு, அதிகரிக்கும் கட்டடங்கள் போன்ற பல காரணங்களால் நீரோடைகள் அற்றுப்போகும் நிலையில் உள்ளது. இருந்தும் உயிலட்டி , ஓட்டகொடார், தாய்சோலை போன்ற பல அருவிகள் உயிர்ப்புடன் இருந்து வனங்களையும் மனிதர்களையும் வாழவைக்கின்றன. எனவே, நீரோடை மற்றும் அருவிகளைக் கண்டு ரசிக்கச் செல்லும் சுற்றுலாப் பயணிகள், பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ளவேண்டும். சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலான பொருள்களை வீசிச் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
பெண்ணின் கருப்பையிலிருந்து அகற்றப்பட்ட பைக் கைப்பிடியின் உடைந்த பகுதி: கணவர் கைது
பெண்ணின் கருப்பையில் இருந்து பைக் கைப்பிடியின் 6 இஞ்ச் அளவிலான உடைந்த பிளாஸ்டிக் துண்டை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். இது தொடர்பாக பெண்ணின் கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
போலீசார் வெளியிட்ட தகவலின்படி மத்தியப்பிரதேச மாநிலம் தார் மாவட்டத்தைச் சேர்ந்த பெண், 15 வருடங்களுக்கு முன் திருமணம் செய்துகொண்டுள்ளார். தற்போது அவருக்கு 6 குழந்தைகள் உள்ளனர். இவர் கடந்த 2 வருடங்களுக்கு மேலாக கணவரால் சித்ரவதைக்கு ஆளாகி வந்துள்ளார். இரண்டு வருடங்களுக்கு முன்பு நடந்த வாக்குவாதத்தில் பெண்ணை, கணவர் தாக்கியுள்ளார். கோபத்தின் உச்சத்தில் பெண்ணின் பிறப்புறுப்பில் பைக்கின் உடைந்த கைப்பிடியை சொருகி சித்ரவதை செய்துள்ளார். ஆனால் இந்த கொடுமை குறித்து அப்பெண் யாரிடமும் எதுவும் தெரிவிக்கவில்லை.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக பெண் வயிற்றுவலியால் பாதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையை அணுகிய போது அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமென்றும், ரூ.1 லட்சம் வரை செலவாகும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கையில் போதுமான பணமில்லாததால் திரும்பி வந்த அப்பெண் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
பெண்ணின் புகாரைக் கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார் அவரை உடனடியாக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். பெண்ணின் புகாரின் அடிப்படையில் அவரது கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
நான்கு மணி நேரம் நடந்த அறுவை சிகிச்சையில் பெண்ணின் கருப்பையில் இருந்து பைக் கைப்பிடியின் 6 இஞ்ச் அளவிலான உடைந்த பகுதியை மருத்துவர்கள் அகற்றியுள்ளதாகவும், தற்போது அவர் நலமாக இருப்பதாகவும், பெண்ணின் கணவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
வெளியான 43 வீடியோக்கள்.. பூமராங் போல திரும்பிய கொல்கத்தா கலவரம்.. பாஜக ஷாக்!
கொல்கத்தாவில் பயங்கர மோதல்-வீடியோ
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் நேற்று நடந்த கலவரத்தில் பாஜகவிற்கு எதிராக நிறைய ஆதாரங்கள் வெளியாகி வருவதால், அக்கட்சி அதிர்ச்சியில் ஆழ்ந்து இருக்கிறது.
பாஜக தேசிய தலைவர் அமித் ஷா நேற்று மேற்கு வங்கத்தில் பிரம்மாண்ட சாலை பேரணியை நடத்தினார். நேற்று கொல்கத்தா கல்லூரி சாலையில் உள்ள வித்யாசாகர் கல்லூரி அருகே இந்த பேரணி செல்லும் போது பெரிய கலவரம் ஏற்பட்டது. அங்கு இருந்த திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் ஆர்எஸ்எஸ், பாஜகவினர் இடையே பெரிய அளவில் கலவரம் ஏற்பட்டது.
அதேபோல் ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாணவர் பிரிவான ஏபிவிபி அமைப்பினர் அந்த வித்யாசாகர் கல்லூரிக்குள் சென்று அங்கிருந்த பொருட்களுக்கு தீ வைத்தனர். நேற்று இரவு முழுக்க இந்த கலவரம் அங்கு நடந்தது. இந்த கலவரத்திற்கு திரிணாமுல் காங்கிரஸ்தான் காரணம் என்று பாஜக குற்றஞ்சாட்டியது.
[/url]
Quote:
Derek O'Brien | ডেরেক ও’ব্রায়েন
✔@derekobrienmp
#Video #3 Here's more evidence of the vandalism by goons of #BJP at Amit Shah road show #Kolkata #Vidyasagar
1,021
முற்பகல் 8:39 - 15 மே, 2019
[color][font]
இதைப் பற்றி 742 பேர் பேசுகிறார்கள்
Twitter விளம்பரத் தகவல் மற்றும் தனியுரிமை
[/font][/color]
இது தொடர்பாக பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவும் மூன்று புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார். இதை வைத்து கொல்கத்தாவில் கடைசி கட்ட தேர்தலின் போது வாக்கு கேட்கலாம் என்று பாஜக நினைத்தது. ஆனால் பாஜகவின் கனவை மமதா பானர்ஜி கலைத்து இருக்கிறார்.
கொல்கத்தாவில் நேற்று நடந்த கலவரத்தில் பாஜகவிற்கு எதிராக நிறைய ஆதாரங்கள் வெளியாக தொடங்கி உள்ளது. மொத்தம் 43 வீடியோக்கள் வெளியாகி உள்ளது. இதில் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் பொருட்களை உடைப்பது, கட்டிடங்களை தாக்குவது, கல்லூரியை தாக்குவது எல்லாமே பதிவாகி உள்ளது.
Quote:
Derek O'Brien | ডেরেক ও’ব্রায়েন
✔@derekobrienmp
#Video #2 more evidence of what BJP goons did at Amit Shah’s road show in #Kolkata #Vidyasagar
684
முற்பகல் 8:38 - 15 மே, 2019
[color][font]
இதைப் பற்றி 655 பேர் பேசுகிறார்கள்
Twitter விளம்பரத் தகவல் மற்றும் தனியுரிமை
[/font][/color]
அதேபோல் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் ஜெய் ஸ்ரீ ராம் என்று சொல்லிக்கொண்டே, தங்களது சொந்த பைக்கையே கொளுத்துவதும் பதிவாகி உள்ளது. இந்த பைக்குகளைதான் காங்கிரஸ் கட்சியினர் கொளுத்திவிட்டனர் என்று பாஜக குற்றஞ்சாட்டியது குறிப்பிடத்தக்கது. தற்போது அதற்கு எதிராகவே ஆதாரங்கள் வெளியாகி உள்ளது.
அதோடு ஆர்எஸ்எஸ் அமைப்பினர் ஈஸ்வர் சந்திரா வித்யாசகரின் சிலையை அடித்து உடைத்தனர். ஈஸ்வர் சந்திரா வித்யாசாகர் மேற்கு வங்கத்தில் மிக மிக முக்கியமான தலைவர். தமிழகத்தில் பெரியாருக்கு இணையாக பார்க்கப்படும் மறுமலர்ச்சி தலைவர் ஈஸ்வர் சந்திரா வித்யாசாகர்.
Quote:
Derek O'Brien | ডেরেক ও’ব্রায়েন
✔@derekobrienmp
#Video #1 Evidence of what BJP goons did at Amit Shah’s road show in #Kolkata #Vidyasagar
3,218
முற்பகல் 8:37 - 15 மே, 2019
[color][font]
இதைப் பற்றி 2,447 பேர் பேசுகிறார்கள்
Twitter விளம்பரத் தகவல் மற்றும் தனியுரிமை
[/font][/color]
இதனால் திரிணாமுல் அவரை மையமாக வைத்தே தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட தொடங்கி உள்ளது. கடைசி கட்ட தேர்தல் பிரச்சாரத்தை திரிணாமுல் அதை வைத்தே செய்யும் என்று கூறுகிறார்கள். இதெல்லாம் போக இன்று மாலை மமதா இதை மையமாக வைத்து தேர்தல் பிரச்சாரம் செய்ய போகிறார்.
Quote:
Sid
✔@sidmtweets
Ishwar Chandra Vidyasagar is no less than Swami Vivekananda for us
I appeal to every Bengali ,punish BJP on polling day for doing this
A murder accused like @AmitShah has no respect for our culture he only wants power at the cost of breaking down our culture
6,485
பிற்பகல் 10:06 - 14 மே, 2019
[color][font]
இதைப் பற்றி 3,264 பேர் பேசுகிறார்கள்
இந்த பிரச்சனை காரணமாக காலையில் பாஜக சார்பாக நடக்க இருந்த அனைத்து தேர்தல் பிரச்சாரமும் மேற்கு வங்கத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளது. பாஜக திரிணாமுல் மீது பழி வரும் என்று நினைத்த நிலையில் பூமராங் போல மொத்த பழியும் பாஜக மேல் வந்து விழுந்துள்ளது..
[url=https://twitter.com/sidmtweets/status/1128338226454728704][/font][/color]
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
கமல்ஹாசன் உருவபொம்மை எரிப்பில் கலந்துக்கொண்ட 4 பேர்... சிரிப்பை வரவைத்த இந்து மக்கள் கட்சி!
மிழகத்தில் அரவாங்குறிச்சி, திருப்பரங்குன்றம், சூலூர் உட்பட 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் மே 19 ந்தேதி நடைபெறவுள்ளது. இந்த இடைத்தேர்தலை முன்னிட்டு ஒவ்வொரு கட்சி தலைவரும் பிரச்சாரத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
தன்படி மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நடிகர் கமல் அவரக்குறிச்சியில் பிரச்சாரத்தில் பேசும்போது, இந்தியாவின் முதல் இந்து தீவிரவாதி கோட்சே தான் என்றார். இது இந்துத்துவா சக்திகளிடம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பாஜக தலைவர்கள் கமல்ஹாசனை கடுமையாக சாடிவருகின்றனர். பாஜகவுடன் கூட்டணியில் உள்ள அதிமுகவை சேர்ந்த அமைச்சர்களும் கமல் கருத்துக்கு கடுமையான வார்த்தைகளில் விமர்சனம் செய்துள்ளனர்.
இந்நிலையில் வேலூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த பொன்னேரியில் இந்து மக்கள் கட்சியின் மாநில அமைப்பாளர் செல்வம் தலைமையில், கமல்ஹாசன் பேச்சை கண்டித்தும், கோட்சேவை எப்படி தீவிரவாதி எனச்சொல்லலாம் என கோஷமிட்டு கமல்ஹாசன் உருவபொம்மையை எரித்தனர். இந்த உருவபொம்மை எரிப்பில் 4 பேர் கலந்துக்கொண்டனர் என்பது முக்கியத்துவமானதாக உள்ளது.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
வரியை அதிரடியாக உயர்த்தி அமெரிக்காவுக்கு சீனா பதிலடி
பீஜிங்:
உலகின் இரு பெரும் பொருளாதார நாடுகளான அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே வர்த்தக போர் மூண்டுள்ளது. சமீபத்தில் சீனாவில் இருந்து இறக்குமதியாகும் ரூ.1 லட்சத்து 41 ஆயிரத்து 250 கோடி மதிப்புள்ள (இந்திய மதிப்பில்) பொருட்களுக்கு 10 சதவீதமாக இருந்த இறக்குமதி வரியை 25 சதவீதமாக அமெரிக்கா உயர்த்தியது. இது
சீனாவுக்கு அதிர்ச்சியாக அமைந்தது
உடனடியாக அமெரிக்காவுக்கு சீனாவும் பதிலடி கொடுத்தது. அது, அமெரிக்க பொருட்களுக்கான இறக்குமதி வரியை உயர்த்தியுள்ளது. ரூ.42 ஆயிரத்து 375 கோடி மதிப்புள்ள அமெரிக்க பொருட்களுக்கு சீனா இறக்குமதி வரியை உயர்த்தி உள்ளது. சீனாவின் நிதித்துறை அமைச்சகம் இதனை தெரிவித்துள்ளது.
அமெரிக்காவுடன் சீனா உடனே வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்ளாவிட்டால், மேலும் வரி உயர்வு செய்யப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், எச்சரிக்கையும் விடுத்தார்.
இதையொட்டி சீனா பதில் அளித்துள்ளது. அந்த நாட்டின் வெளியுறவு செய்தி தொடர்பாளர் செங் சுவாங் நேற்று கருத்து தெரிவிக்கையில், “வரிகளை உயர்த்திக்கொண்டே போவது பிரச்சினைக்கு தீர்வு ஆகாது என்று சீனா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. சீனா வர்த்தகப்போரை விரும்பவில்லை. அதே நேரத்தில் சீனா வர்த்தகப்போருக்கு அஞ்சவும் இல்லை. யாரேனும் எங்கள்மீது வர்த்தகப்போரை தொடுத்தால் நாங்கள் இறுதிவரை போராடுவோம். வெளியில் இருந்து வருகிற எந்தவொரு நிர்ப்பந்தத்துக்கும் நாங்கள் அடிபணிய மாட்டோம். எங்கள் சட்டப்பூர்வமான உரிமைகளை, நலன்களை பாதுகாப்பதற்கான தீர்வும் தகுதித்திறனும் எங்களுக்கு உள்ளது” என குறிப்பிட்டார்.
மேலும் இதில் சீனாவின் உறுதியான நிலைப்பாட்டை டிரம்ப் தவறாக மதிப்பிட்டு விட வேண்டாம் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
`பகலில் மாஸ்டர்... அதிகாலையில் கொள்ளை!' - அண்ணாநகரில் சிக்கிய கடப்பாரைக் கொள்ளையனின் பின்னணி
அண்ணாநகரில் உள்ள உணவகத்தில் வேலைபார்த்த சமையல் மாஸ்டர், அதிகாலையில் கொள்ளையடிப்பதை பார்ட் டைம் வேலையாக வைத்துள்ளார். சிசிடிவி கேமராவால் வாய் பேசமுடியாத கொள்ளையன் போலீஸாரிடம் இன்று சிக்கிக்கொண்டார்.
சென்னை அண்ணா நகர், திருமங்கலம், அமைந்தகரை, அரும்பாக்கம், கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளில் கடைகளின் ஷட்டரை உடைத்து தொடர்ந்து கொள்ளைகள் நடப்பதாகப் புகார்கள் காவல் நிலையங்களுக்கு வந்தன. இதையடுத்து அண்ணா நகர் துணை கமிஷனர் சுதாகர் உத்தரவின் பேரில், உதவி கமிஷனர் குணசேகரன் மேற்பார்வையில். அண்ணாநகர் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கண்ணா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீஸார் கொள்ளையனை தேடி வந்தனர்.
இந்நிலையில் கடந்த 25-ம் தேதி அண்ணா நகரில் உள்ள ஒரு கடையின் ஷட்டரை உடைத்து கொள்ளை நடந்தது. இதனால் அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்தனர். அதில், இரும்பு கம்பியைக் கொண்டு ஒருவர் ஷட்டர் கதவை உடைக்கும் காட்சிகளும், உள்ளே நுழைந்தபின், லாக்கரை (கல்லா பெட்டி) உடைத்து பணத்தைத் திருடும் காட்சிகளும் கொள்ளையனின் முகத்துடன் தெளிவாகப் பதிவாகி இருந்தது.
[img=400x0]https://image.vikatan.com/news/2019/05/15/images/WhatsApp_Image_2019-05-15_at_19.17.21_(1)_20371.jpeg[/img]
இதையடுத்து கொள்ளையனை போலீஸார் தேடிவந்தனர். இன்று அதிகாலை கையில் கடப்பாரையோடு கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையம் அருகே ஒருவர் நின்றுகொண்டிருந்தார். அவரின் முகமும் சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தவரின் முகமும் ஒன்று என்பதை தனிப்படை போலீஸார் அடையாளம் கண்டனர். இதையடுத்து அவரைக் கைது செய்து விசாரணை செய்தனர். அப்போது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``எங்களிடம் சிக்கியவர் ஆந்திராவைச் சேர்ந்த பிரபல கொள்ளையன் மார்க் (எ) சிவா (29). இவர் அண்ணா நகரில் உள்ள பிரபல தனியார் உணவகத்தில் சமையல் மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். அதிகாலை நேரத்தில் கடைகளின் ஷட்டர்களைக் கடப்பாரையின் மூலம் உடைத்துக் கொள்ளையடிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார். இவர் மீது வடபழனி, அண்ணாநகர், கொடுங்கையூர், எம்.ஜி.ஆர் நகர் உள்ளிட்ட காவல் நிலையங்களில் கொள்ளை வழக்குகள் உள்ளன. இவரால் வாய் பேச முடியாது. கொள்ளையடித்த பணத்தில் ஆடம்பரமாக வாழ்ந்துள்ளார்" என்றனர்
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
‘நாதுராம் கோட்சே தேசபக்தர்’ சர்ச்சை கருத்துக்கு எதிர்ப்பு கிளம்பியதால் மன்னிப்பு கேட்டார் பிரக்யா சிங்
Facebook Twitter Mail Text Size Print
மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சே தேசபக்தர் என்ற சர்ச்சை கருத்துக்கு எதிர்ப்பு கிளம்பியதால் பிரக்யா சிங் மன்னிப்பு கேட்டார்.
பதிவு: மே 16, 2019 23:36 PM மாற்றம்: மே 17, 2019 02:03 AM
போபால்,
மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சே தேசபக்தர் என்று பா.ஜனதா பெண் வேட்பாளர் பிரக்யாசிங் தாக்குர் கருத்து தெரிவித்தார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால் அவர் மன்னிப்பு கேட்டார்.
மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன், தமிழ்நாட்டில் அரவக்குறிச்சி தொகுதியில் கடந்த 12-ந் தேதி தனது கட்சி வேட்பாளர் மோகன்ராஜூவை ஆதரித்து பிரசாரம் செய்தார். அப்போது அவர், “சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து; அவர்தான் நாதுராம் கோட்சே. அங்குதான் தீவிரவாதம் தொடங்குகிறது. காந்திஜியின் படுகொலைக்கு பதில் பெறத்தான் இங்கு வந்துள்ளேன். நான் காந்திஜியின் கொள்ளுப்பேரனாக இங்கு வந்துள்ளேன்” என கூறினார்.
இந்து தீவிரவாதம் என அவர் கூறிய வார்த்தைகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி விட்டன. அவர் மீது வழக்குகள் குவிகின்றன.
இந்த நிலையில் பெண் சாமியாரும், மத்திய பிரதேச மாநிலம் போபால் நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங்கை எதிர்த்து போட்டியிடும் பாரதீய ஜனதா கட்சி வேட்பாளருமான பிரக்யா சிங் தாக்குர் டெலிவிஷன் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவரிடம் நாதுராம் கோட்சேயை இந்து தீவிரவாதி என கமல்ஹாசன் கூறியது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.
அப்போது அவர், “நாதுராம் கோட்சே தேச பக்தராக இருந்தார்; இருக்கிறார்; அப்படியே தொடர்ந்து இருப்பார்” என பதில் அளித்தார்.
அதுமட்டுமின்றி, “நாதுராம் கோட்சேயை இந்து தீவிரவாதி என்று சொல்கிறவர்கள், தங்களை பார்க்கட்டும். அவர்களுக்கு இந்த தேர்தலில் சரியான பதிலடி கிடைக்கும்” என குறிப்பிட்டார்.
மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சேயை பிரக்யா சிங் தாக்குர் தேசபக்தர் என்று சான்று அளித்திருப்பது புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
ஆனால் பிரக்யா சிங் தாக்குர் கருத்தை பாரதீய ஜனதா கட்சி ஏற்கவில்லை.
இதையொட்டி அந்தக் கட்சியின் செய்தி தொடர்பாளர் ஜி.வி.எல். நரசிம்மராவ் விடுத்துள்ள அறிக்கையில், “ மகாத்மா காந்தி தொடர்பாக பிரக்யா சிங் தாக்குர் கூறிய கருத்தை முற்றிலும் ஏற்க முடியாது. இந்த கருத்துக்காக அவருக்கு கண்டனம் தெரிவித்துக்கொள்கிறோம்” என கூறினார்.
மேலும், “ஏன் அவர் இப்படிச்சொன்னார் என்பதுபற்றி அவரிடம் விளக்கம் கேட்கப்படும். தனது ஆட்சேபகரமான கருத்துக்கு அவர் பகிரங்க மன்னிப்பு கேட்பதுதான் சரியாக இருக்கும்” எனவும் குறிப்பிட்டார்.
பிரக்யாசிங் தாக்குரின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதைத் தொடர்ந்து சிறிது நேரத்திலேயே அவர் மன்னிப்பு கேட்டார்.
இதை அவரது செய்தி தொடர்பாளர் டாக்டர் ஹிதேஷ் பாஜ்பாய் தெரிவித்தார்.
இது தொடர்பாக மத்திய பிரதேச மாநில பாரதீய ஜனதா கட்சித்தலைவர் ராகேஷ் சிங்கிடம் பிரக்யா சிங் மன்னிப்பு கேட்டாரா என ஹிதேஷ் பாஜ்பாயியிடம் கேட்கப்பட்டது.
அதற்கு அவர், “இது ஒரு பிரச்சினை அல்ல. ஆனாலும் அவர் மன்னிப்பு கேட்டு விட்டார். தனது கருத்தை திரும்பப்பெற்றுக்கொண்டார்” என பதில் அளித்தார்.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
சீனாவுக்கு அடுத்தடுத்து செக் வைக்கும் அமெரிக்கா.. சீனா தொலைத்தொடர்பு சாதனங்களுக்கு தடை
வாஷிங்டன் : அமெரிக்கா சீனாவிடையே நிலவி வரும் வர்த்தக போர் தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கும் இந்த நிலையில், அமெரிக்கா அதன் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதால், அமெரிக்க தொலைத் தொடர்பு நிறுவனங்கள், வெளிநாட்டு தொலைத் தொடர்பு நிறுவனங்களில் தயாரிக்கப்படும் தொலைத் தொடர்பு சாதனங்களை பயன்படுத்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தடை உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்த நிலையில் ஏற்கனவே அமெரிக்கா - சீனா ஆகிய இரு பெரும் பொருளாதார நாடுகளுக்கு இடையே நடக்கும் வர்த்தகப் போரை இந்த தடை உத்தரவு மேலும் தீவிரப்படுத்துவதாய் அமைந்துள்ளது.
இந்த தடையை அமல்படுத்துமாறு கடந்த புதன்கிழமையன்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கையெழுத்திட்டார். இந்த நிலையில் இந்த உத்தரவில் எந்த ஒரு தனி நிறுவனத்தையோ அல்லது நாட்டையோ குறிப்பிடவில்லை என்று கூறப்பட்டுள்ளதாம். எனினும் இது சீனாவின் ஹூவாய் போன் நிறுவனங்களுக்கான 'செக்' என்றே அதிகாரிகள் மத்தியில் கருத்து நிலவி வருகிறது.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
அமெரிக்கா பொருட்களுக்கு இறக்குமதி வரி உயர்வு இப்போதைக்கு இல்லை - மீண்டும் ஒத்திவைப்பு
டெல்லி: அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 29 வகையான பொருட்களுக்கு விதிக்கப்பட இருந்த இறக்குமதி வரி உயர்வு வரும் ஜூன் 16ஆம் தேதி வரையிலும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. புதிய அரசு அமைந்த உடன் தான் இது பற்றிய முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த வாரம் பேச்சுவார்த்தை நடத்த இந்திய வந்திருந்த அமெரிக்க வர்ததக செயலாளர் இந்திய அரசு அமெரிக்க நிறுவனங்களுக்கு விதித்திருந்த கட்டுப்பாடுகளை முதலில் நீக்கினால் மட்டுமே பேச்சுவார்த்தை நடக்கும் என்று மறைமுகமாக நிர்பந்தப்படுத்திய காரணத்தினால் தான் இந்தியா தனது முடிவை இப்போதைக்கு ஒத்தி வைத்துள்ளதாக தெரிகிறது.
அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் விலை உயர்ந்த ஆடம்பர ஹேர்லி டேவிட்சன் பைக்கிற்கு இந்தியா 100 சதவிகித இறக்குமதி வரி விதித்தது. பின்னர் டொனால்ட் ட்ரம்ப் கேட்டுக்கொண்டதற்கு இணங்க 50 சதவிகிதமாக குறைத்தது. ஆனாலும் திருப்தி அடையாத அமெரிக்கா போட்டியாக இரும்பு மற்றும் அலுமினியப் பொருட்களுக்கான இறக்குமதி வரியை உயர்த்தியது.
இரு நாடுகளும் போட்டி போட்டு இறக்குமதி வரியை உயர்த்தியதால் இரு நாடுகளின் வர்த்தகமும் பாதிக்கும் சூழ்நிலை ஏற்பட்டது. கூடவே இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு அளித்திருந்த ஏற்றுமதியாளர்களுக்கான முன்னுரிமை முறைமை திட்டத்தின் (Generalized System of Preferences program) மூலம் வழங்கப்பட்ட அந்தஸ்தையும் திரும்பப் பெறுவதற்கும் அமெரிக்கா தீவிரமாக முயற்சித்து வந்தது.
ஒருவேளை இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு வழங்கி வந்த முன்னுரிமை அந்தஸ்தை அமெரிக்கா திரும்பப் பெறுமானால், இந்தியாவுக்கு சுமார் 39 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புக்கு ஏற்றுமதி பாதிக்கும் சூழ்நிலை ஏற்பட்டது.
ஆனாலும் மசியாத இந்தியா கடந்த 2018ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில், அங்கிருந்து இறக்குமதி செய்யப்படும் பாதாம்பருப்பு உள்ளிட்ட 29 வகையான பொருட்களுக்கான வரியை உயர்த்தியது. இந்த வரி உயர்வானது கடந்த 2018ஆம் ஆண்டு ஆகஸ்டு 4ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று மத்திய நிதி அமைச்சகம் அறிவித்தது.
இருந்தாலும் இந்த வரி உயர்வு முடிவை பின்னர் செப்டம்பர் 18ஆம் தேதி வரையிலும் ஒத்திவைத்து விட்டு இரு நாட்டு வர்த்தக உயரதிகாரிகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இப்படி மாறி மாறி இறக்குமதி வரி உயர்வை பல முறை இந்தியா ஒத்திவைத்தது,
இதற்கிடையில் வரி உயர்வை திரும்பப் பெறும்படி அமெரிக்கா தீவிரமாக வலியுறுத்தி வந்ததோடு மே 2ஆம் தேதி வரை இறுதிக் காலக் கெடுவும் விதித்தது. இல்லாவிட்டால் இந்தியாவுக்கு அளித்து வந்த முன்னுரிமை அந்தஸ்து பறிக்கப்படும் என்று எச்சரித்தது. இதையடுத்து இந்தியாவும் அமெரிக்கப் பொருட்களுக்கு விதிக்கப்பட இருந்த இறக்குமதி வரி உயர்வை மே 16ஆம் தேதி வரையிலும் ஒத்திவைத்தது.
இறுதியில் கடந்த மே 6ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அமெரிக்க வர்த்தக செயலாளர் வில்பர் ரோஸ் இந்தியா வந்தார். மத்திய வர்த்தக அமைச்சர் சுரேஷ் பிரபு உடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர் அமெரிக்க நிறுவனங்களுக்கு இந்தியா கொடுத்து வரும் நெருக்கடியை தளர்த்த வேண்டும் என்று நெருக்கடி கொடுத்தார்.
தற்போது லோக்சபா தேர்தல் நடைபெற்று வருவதால் இறக்குமதி வரி குறைப்பு தொடர்பாக எந்தவித உறுதியான முடிவையும் எடுக்க முடியாத நிலையில் இந்தியா உள்ளதை விளக்கிய வர்த்தக அமைச்சரும், இது பற்றிய முடிவை தேர்தல் முடிந்த பிறகே எடுக்க முடியும் என்றும் விளக்கினார்.
இதையடுத்து மத்திய நிதி அமைச்சகம் புது அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் அமெரிக்க பொருட்களுக்கு விதிக்கப்பட்ட இறக்குமதி வரி உயர்வானது வரும் ஜூன் மாதம் 16ஆம் தேதி வரையிலும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
ஒருவேளை இந்தியா இறக்குமதி வரி உயர்வை அமல்படுத்தினால் அமெரிக்கா உடன் மேற்கொண்டுள்ள 39 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஏற்றுமதி வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
`தேனி பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத்குமார்' - குச்சனூர் கோவில் கல்வெட்டால் சர்ச்சை
பிரபலமான சனீஸ்வர பகவான் திருக்கோயிலான குச்சனூர் சனீஸ்வர பகவான் கோயிலில் நேற்று (16.5.2019) அமைக்கப்பட்டுள்ள கல்வெட்டில், `தேனி பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத்குமார்' என பொறிக்கப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே அமைந்துள்ளது சுயம்பு சனீஸ்வரபகவான் திருக்கோயில். கோயில் வளாகத்திற்குள்ளேயே அமைந்துள்ளது காசி ஶ்ரீ அன்னபூரணி கோயில். இக்கோயிலில் நேற்று (16.5.2019) கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. இதையடுத்து கோயிலுக்குள் அமைக்கப்பட்டுள்ள கல்வெட்டில், கோயிலுக்கு உதவி புரிந்தவர்கள் எனக் குறிப்பிட்டு துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பெயர் மற்றும் ஓ.பி.எஸ்ஸின் கடைசி மகன் ஜெயபிரதீப் குமார் பெயர் இடம்பெற்றுள்ளது. இவை அனைத்துக்கும் மேலாக, `தேனி பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத்குமார்' என்று பொறிக்கப்பட்டுள்ளது. தேர்தல் முடிந்து இன்னும் வாக்கு எண்ணிக்கை முடியாத நிலையில், கோயில் நிர்வாகம், ரவீந்திரநாத்குமாரை எப்படி தேனி எம்.பி என்று கல்வெட்டில் பொறிக்கலாம் என எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்புகின்றனர்.
இந்த நிலையில், இச்சம்பவம் குறித்து விசாரித்தபோது, ``கோயில் நிர்வாகத்துக்குத் தெரியாமல் இது நடந்திருக்காது. அதில் தேதி 16.5.2019 எனக் குறிப்பிட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை வரும் 23-ம் தேதி நடைபெறும் நிலையில், அதற்கு முன்னதாகவே துணைமுதல்வரின் மகன் ரவீந்திரநாத்குமாரை எம்.பி என அறிவிக்கும் விதமாக கல்வெட்டு பொறிக்கப்பட்டிருப்பதன் பின்னால், அரசு அதிகாரிகள் இருப்பதையே காட்டுகிறது" என்கிறார்கள் தகவலறிந்த வட்டாரங்கள். குச்சனூர் சனீஸ்வரபகவான் கோயிலும், அதன் வளாகத்துக்குள் உள்ள காசி ஶ்ரீஅன்னபூரணி கோயிலும், இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
இந்தியா
கோவாவில் செல்பி எடுத்த போது பெண் டாக்டர் உயிரிழப்பு
கோவா கடற்கரையில் செல்பி எடுக்க முயன்ற போது கடல் அலைகளில் சிக்கி உயிரிழந்த ஆந்திராவைச் சேர்ந்த இளம் பெண் மருத்துவர் ரம்யா கிருஷ்ணாவின் உடல் அவருடைய சொந்த ஊரான ஜக்கையா பேட்டைக்கு கொண்டு வரப்பட்டது.
கோவா அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த ரம்யா கிருஷ்ணா நேற்றுமாலை கடற்கரைக்கு சென்றார். கடலை பின்புலமாகக் கொண்டு அவர் தமது செல்போனில் செல்பி எடுக்க முயன்ற போது திடீரென எழுந்த ராட்சத அலை அவரை கடலுக்குள் இழுத்துச் சென்றது. அவரது உடலை மீனவர்களும் காவல்துறையினரும் கடலுடன் போராடி மீட்டனர்.
அவருடைய உடல் இன்று காலை அவருடைய சொந்த ஊருக்கு இறுதிச் சடங்குகளுக்காக கொண்டு வரப்பட்டுள்ளது. மருத்துவம் படித்து அரசு மருத்துவராகப் பணியாற்றி வந்த இளம் பெண்ணின் செல்பி மோகம் அவர் உயிரையே பறித்து விட்டதால் அந்த ஊரே சோகத்தில் ஆழ்ந்துள்ளது.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
ஊட்டி மலர் கண்காட்சி துவங்கியது
ஊட்டி: ஊட்டியில் இன்று(மே 17), மலர் கண்காட்சி துவங்கியது. கண்காட்சியை கவர்னர் பன்வாரிலால் புரோஹித் துவக்கி வைத்தார். இதனையொட்டி சுற்றுலா பயணியருக்காக, பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நீலகிரி மாவட்டம், ஊட்டி தாவரவியல் பூங்காவில், 123வது மலர் கண்காட்சி, இன்று துவங்கி, 21ம் தேதி வரை, ஐந்து நாட்கள் நடக்கிறது. கண்காட்சிக்கு வரும் சுற்றுலா பயணியரை கவர, தாவரவியல் பூங்காவில் பல்வேறு மலர் அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன.பூங்காவின் பெரணி இல்லம் அருகே, கார்னேஷன் மலர்களால், பார்லிமென்ட் வடிவம் தத்ரூபமாக உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு, 2 லட்சம் மலர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
குழந்தைகளுக்கான பால் புட்டியில் புற்றுநோயை உண்டாக்கும் வேதிப்பொருள்!
குழந்தைகளுக்கு பாலூட்டுவதற்கு பயன்படுத்தப்படும் புட்டிகளில், புற்றுநோயை ஏற்படுத்தும் அபாயம் உடைய , தடை செய்யப்பட்ட பிஸ்பினால்-ஏ என்ற வேதிப்பொருள் பாலூட்டும் புட்டிகளில் பயன்டுத்தப்படுவது ஆய்வில் தெரியவந்துள்ளது என டாக்சிக் லிங்க் அமைப்பு கூறியுள்ளது. பிஸ்பினால்-ஏ என்பது, பிளாஸ்டிக் புட்டிகள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களின் ஒன்று. உணவு பொருட்கள் அடைத்து வைக்கப்படும் பிளாஸ்டிக் புட்டிகளில் இந்த வேதி பொருள் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. குழந்தைகளுக்கு பாலூட்டுவதற்காக தயாரிக்கப்படும் பால் புட்டிகளில் இந்த வகை வேதிப்பொருட்களை முற்றிலும் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என இந்திய நிர்ணய ஆணையம் 2015 ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தது.
குழந்தைகளுக்கு பிஸ்பினால்-ஏ வேதிப்பொருளை கொண்டும் தயாரிக்கப்பட்ட பாட்டில்களை பயன்படுத்தி உணவூட்டும் போது , வேதிப்பொருளானது உணவில் கலந்து இருக்கும். இந்த உணவை அருந்தும் குழந்தைகளுக்கு உடல்நலத்தில் பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் தான் இந்திய தர நிர்ணய ஆணையம் இந்த வகை வேதிப்பொருளுக்கு தடை விதித்துள்ளது. உலக நாடுகள் பலவும் குழந்தைக்களுக்கான உணவுப் பொருட்களை இந்த வேதிப்பொருளை கொண்டு தயாரிக்கப்பட்ட புட்டிகளில் அடைத்து வைப்பதை தடை செய்துள்ளது. இருப்பினும் இந்தியாவில் இத்தகைய பிஸ்பினால்-ஏ பயன்படுத்தி பால் புட்டிகள் தயாரிக்கப்படுவது ஆய்வில் தெரிய வந்துள்ளதாக டாக்சிக் லிங்க் அமைப்பு கூறியுள்ளது.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
சென்னை மக்கள் மெட்ரோ நீரை ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி?
சென்னையில் வசிப்பவர்கள் மெட்ரோ நீரை ஆன்லைன் மூலமாக பதிவு செய்யும் முறை நடைமுறையில் உள்ளது. பதிவு செய்வதற்கான வழிமுறைகள் என்ன?
சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நிலத்தடி நீர் அதள பாதாளத்திற்கு சென்றுவிட்டது. பருவமழை பொய்த்துப் போனதாலும், ஆழ்துளை கிணறுகள் அதிக அளவில் அமைக்கப்பட்டதாலும் இந்த நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், இந்த கோடைக் காலத்தில் சென்னையில் குடிநீருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான சென்னை மக்கள் மெட்ரோ நீரையே நம்பியுள்ளனர். இந்நிலையில் சென்னையில் வசிப்பவர்கள் மெட்ரோ நீரை ஆன்லைன் மூலமாக பதிவு செய்யும் முறை நடைமுறையில் உள்ளது. அதன்படி
மெட்ரோ நீரை பெற விரும்பும் பயனர்கள், https://chennaimetrowater.tn.gov.in என்ற இணையம் மூலமாக எளிதாக பெறமுடிகிறது. முதலில் இணையதளத்தில் முகப்பு பக்கத்தில் உள்ள Book a water tanker என்ற ஆப்சனை தேர்வு செய்ய வேண்டும். பின்பு தோன்றும் பக்கத்தில் முகவரி, பெறப் போகும் நீரின் கொள்ளளவு உள்ளிட்ட தகவல்களை பதிவிட வேண்டும்.
பின்பு OTP எனப்படும் ஒரு முறை பயன்படுத்தப்படும் கடவுச்சொல் வழியாக மெட்ரோ நீர் புக்கிங் உறுதி செய்யப்படுகிறது. வெற்றிகரமாக புக் செய்யப்பட்டவுடன் பயனரின் செல்போனிற்கு ரகசிய எண் ஒன்று அனுப்பப்படுகிறது. மெட்ரோ நீர் வீட்டிற்கு கொண்டுவரப்படும் போது, ரகசிய எண்ணை பயனர்கள் தெரிவிக்க வேண்டுமென வலியுறுத்தப்படுகிறது.
6000 லிட்டர் மெட்ரோ நீருக்கு, 475 ரூபாயும், 9 ஆயிரம் லிட்டர் மெட்ரோ நீருக்கு 700 ரூபாயும் கட்டணமாக பெறப்படுகிறது. பயனருக்களுக்கு உடனடியாக நீர் வேண்டும் பட்சத்தில் தட்கல் முறையில் பதிவுச் செய்யும் முறையும் உள்ளது. ஒருவருக்கு மெட்ரோ நீர் வெற்றிகரமாக பதிவு செய்யப்பட்டவுடன் அவர் ஏழு நாட்களுக்கு பிறகு மட்டுமே மீண்டும் மெட்ரோ நீரை பதிவு செய்யமுடியும்.
அரசின் மெட்ரோ இணையம் மூலம் நீரை எளிதாக பெறமுடிவதாக பயனடைந்தவர்கள் தெரிவிக்கின்றனர்
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
இந்தியாவில் சீனப் பொருட்கள் குவியும் அபாயம்
புதுடில்லி: அமெரிக்காவின் வரி உயர்வு நடவடிக்கையால், சீனாவில் இருந்து அதிக அளவில் மலிவு விலை பொருட்கள் குவியும் அபாயம் உள்ளது.
கடந்த வாரம், அமெரிக்கா, 20 ஆயிரம் கோடி டாலர் மதிப்பிலான சீனப் பொருட்களுக்கு, 10 - 25 சதவீதம் வரி உயர்வை அமல்படுத்தியது. அத்துடன், மேலும், 30 ஆயிரம் கோடி டாலர் மதிப்பிலான பொருட்களுக்கு, வரி உயர்த்தப்படும் எனவும் அறிவித்துள்ளது. இதற்கு பதிலடியாக, அமெரிக்காவின், 6,000 கோடி டாலர் மதிப்புள்ள பொருட்களின் வரியை, சீனா உயர்த்தியுள்ளது.
எச்சரிக்கை:
இந்த பரஸ்பர வர்த்தகப் போரால், சீனாவின் மலிவு விலை பொருட்கள், அதிக அளவில் இந்தியாவில் குவியும் அபாயம் உள்ளதாக, தர நிர்ணய நிறுவனமான, 'இந்த் - ரா' எச்சரித்துள்ளது. இது குறித்து, இந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை: அமெரிக்காவின் வரி உயர்வை சமாளிக்க, இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளில், சீனா ஏற்றுமதியை அதிகரிக்கும். இதனால், இந்தியாவின் உற்பத்தி மற்றும் தேவைப்பாட்டிற்கான இடைவெளி குறையும். உள்நாட்டு வர்த்தகம், குறிப்பாக, மின்னணு சாதனங்கள், இரும்பு, உருக்கு மற்றும் இயற்கை ரசாயனப் பொருட்கள் அதிக அளவில் குவியும்.
கடந்த ஆண்டு, சீனாவில் இருந்து, 54 ஆயிரம் கோடி டாலர் மதிப்பிலான பொருட்களை, அமெரிக்கா இறக்குமதி செய்தது. இது, அமெரிக்காவின் மொத்த இறக்குமதியில், 18 சதவீதம்; மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 2.34 சதவீதம். இந்த அளவிற்கு சீனாவை, அமெரிக்கா சார்ந்துள்ளது. அதனால், வரி உயர்வு காரணமாக, அமெரிக்காவில் பொருட்கள் விலை உயரும். இது, அந்நாட்டின் பணவீக்க உயர்வுக்கு வழி வகுக்கும். அமெரிக்க முதலீட்டாளர்களின் அன்னிய முதலீடுகள் குறையும். இதுவும், இந்தியாவிற்கு சாதகமற்ற அம்சம் தான்.
அதுபோல, சீனா, அதன் யுவான் கரன்சி மதிப்பை குறைத்தால், அது, அன்னியச் செலாவணிக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு குறைய வழி வகுக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
•
|