Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
#61
[Image: raman_07113.jpg]

தமிழகத்தைச் சேர்ந்த டபிள்யூ.வி ராமன், இந்திய அணிக்காக 11 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 27 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். முதல் தரப் போட்டியில் தமிழ்நாடு அணிக்காக 7939 ரன்கள் குவித்துள்ளார். தென்னாப்பிரிக்காவில் ஒருநாள் போட்டியில் சதமடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையும் படைத்துள்ளார். தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கும் இவர் பந்துவீச்சிலும் விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தியுள்ளார். 

கிரிக்கெட் வீரராக மட்டும் இல்லாமல், பயிற்சியாளராகவும் அனுபவம் கொண்டவர் டபிள்யூ.வி ராமன். 2005-07 வரை தமிழ்நாடு அணியின் பயிற்சியாளராகச் செயல்பட்டு வந்தார். 2001-02 மற்றும் 2010-13 காலகட்டங்களில் பெங்கால் அணிக்குப் பயிற்சியாளராக செயல்பட்டார். 2013-ம் ஆண்டு ஐ.பி.எல் தொடரில் பஞ்சாப் அணிக்கு அசிஸ்டெண்ட் கோச்சாகவும், 2014 -ம் ஆண்டு கொல்கத்தா அணிக்கு பேட்டிங் ஆலோசகராகவும் இருந்த அனுபவம் கொண்டவர். மேலும், 2015-ம் ஆண்டு முதல் தேசிய கிரிக்கெட் அகாடமியில் பேட்டிங் ஆலோசகராக இருந்து வருகிறார். இந்தக் காலகட்டத்தில் இந்திய ஏ, துலீப் டிராபி மற்றும் 19 வயதுக்குட்பட்ட அணிகளுக்குப் பயிற்சியாளராக செயல்பட்டுள்ளார். 

ராமன் தலைமையில் இந்தியப் பெண்கள் கிரிக்கெட் அணி பல்வேறு சாதனைகள் படைக்கும் என அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது. நாமும் வாழ்த்தலாம். வாழ்த்துகள் டபிள்யூ.வி ராமன்!
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#62
ஜெர்மனியிலும் ஆப்பிள் நிறுவனத்துக்கு அடி - தொடர்ந்து சிக்கல் தரும் குவால்காம் 
[/url]
 
[url=https://www.vikatan.com/author/179-g.sudhakar]

குவால்காம் நிறுவனத்துக்குச் சொந்தமான காப்புரிமை ஒன்றை மீறியதற்காக, சில ஐபோன் மாடல்களை விற்பதற்கு ஜெர்மனி மாவட்ட நீதிமன்றம் ஒன்று தடைவிதித்திருக்கிறது. [Image: ai1_01010.jpg]
குவால்காம் நிறுவனத்தின் ஹார்டுவேர் காப்புரிமை ஒன்றை மீறி, குறிப்பிட்ட பாகத்தை ஐபோன்களில் பயன்படுத்தியுள்ளதாக குவால்காம் நிறுவனம் ஆப்பிள் மீது வழக்கு தொடர்ந்திருந்தது. அதில்தான் தற்போது குவால்காம் நிறுவனத்துக்கு ஆதரவாகத் தீர்ப்பு வந்திருக்கிறது. இந்தத் தீர்ப்பின்படி ஐபோன் 7, 7 ப்ளஸ், 8, 8 ப்ளஸ் மற்றும் ஐபோன் X ஆகியவற்றின் விற்பனை பாதிக்கப்படும். ஒருவேளை ஆப்பிள் இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யும்பட்சத்தில் சில காலத்துக்கு இந்தத் தடை அமலுக்கு வராது. இந்தத் தீர்ப்பு ஆப்பிள் நிறுவனத்துக்கு சமீபகாலத்தில் நடந்த இரண்டாவது சறுக்கல். ஏற்கெனவே மென்பொருள் தொடர்பான, 2 காப்புரிமைகளை ஆப்பிள் மீறிவிட்டதாக, சீனாவில் குவால்காம் வழக்கு தொடர்ந்திருந்தது. அதிலும் ஆப்பிளுக்கு எதிராகவே தீர்ப்பு வந்தது.

[Image: ai_01171.jpg]



இருந்தாலும்கூட, அது மென்பொருள் சார்ந்த காப்புரிமை என்பதால் ஐபோன்களைத் திரும்பப் பெற்றுக்கொள்வதற்குப் பதிலாக ஐபோன்களின் மென்பொருளிலேயே சில திருத்தங்களைச் செய்து நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தியது ஆப்பிள். ஆனால், இந்தமுறை ஜெர்மனியில் ஹார்டுவேர் தொடர்பான சிக்கல் என்பதால் இதுபோன்று எதுவும் செய்யமுடியாது. குவால்காம் Vs ஆப்பிள் மோதல் ஜெர்மனி, சீனாவில் மட்டுமல்ல; இதற்குமுன்பு அமெரிக்காவிலும் நடந்திருக்கிறது.
Like Reply
#63
சனிக்கே ஏழரை சனியா? - வேகமாக மறையும் சனிக்கோளின் வளையம் 
[Image: 3360_thumb.jpg]
[/url]

[Image: saturn-67671_1280_22087.jpg]


அதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும் கடந்த திங்கள் கிழமை வெளிவந்திருக்கும் ஆய்வுகள் சனி கோளின் வளையங்கள் வேகமாக அழிந்து வருகிறது எனக் கூறுகிறது. வானியல் அறிஞர்கள் பலரைக் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதன் அழிவு ஏற்பட்டு வருகிறது. இன்னும் 100 மில்லியன் ஆண்டுகளில் இருந்து 300 மில்லியன் ஆண்டுகளுக்குள் இந்த வளையங்கள் அழிந்துவிடும் எனச் சொல்கிறது ஆய்வுகள்.



அதுதான் 100 மில்லியன் ஆண்டுகள் இருக்கிறதே என நீங்கள் நினைப்பது கேட்கிறது. ஆனால், மனிதர்களுக்குத்தான் இவை நீண்ட காலம். அண்டக் காலங்களின்படி இது கண் இமைக்கு நேரம் எனச் சொல்லப்படுகிறது. மேலும், சூரியக் குடும்பம் தோன்றி 4.5 பில்லியன் ஆண்டுகளாகியுள்ளன. இன்னும் பல பில்லியின் ஆண்டுகள் மிச்சம் இருக்கின்றன. அதற்குள் சனி கோளின் வளையங்கள் அழிவது என்பது அண்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்தும் எனச் சொல்லப்படுகிறது. 
Like Reply
#64
`ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது!’ - உயர் நீதிமன்ற மதுரைக் கிளை

[Image: 2_18034.jpg]

ஸ்டெர்லைட் ஆலையை மூடி தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு எதிராக அந்த ஆலை நிர்வாகம் சார்பில், தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தேசிய பசுமைத் தீர்ப்பாயம், ஆலையை மூட தமிழக அரசு கூறிய காரணங்கள் போதுமானவையாக இல்லை என்று கூறி அரசாணையை ரத்து செய்து கடந்த 15-ம் தேதி உத்தரவிட்டது. இது மக்கள் மத்தியில் மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதை எதிர்த்து தமிழக அரசு, உச்ச நீதிமன்றத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் ஆலை திறக்கக் கூடாதென்று பல்வேறு அமைப்புகள் போராட்டங்களை மீண்டும் தொடங்கியுள்ளன. பசுமைத் தீர்ப்பாய உத்தரவு குறித்து சென்னையில் பத்திரிகையாளர்களிடம் பேசிய ஸ்டெர்லைட் ஆலையின் தலைமை நிர்வாக அதிகாரி ராம்நாத், ஆலையைத் திறக்க அரசிடம் அனுமதி கோரப்பட்டிருப்பதாகவும், 2 மாதங்களில் ஆலை திறக்கப்படும் என்றும் கூறியிருந்ஸ்டெர்லைட் ஆலையை மூடி தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு எதிராக அந்த ஆலை நிர்வாகம் சார்பில், தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தேசிய பசுமைத் தீர்ப்பாயம், ஆலையை மூட தமிழக அரசு கூறிய காரணங்கள் போதுமானவையாக இல்லை என்று கூறி அரசாணையை ரத்து செய்து கடந்த 15-ம் தேதி உத்தரவிட்டது. இது மக்கள் மத்தியில் மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதை எதிர்த்து தமிழக அரசு, உச்ச நீதிமன்றத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் ஆலை திறக்கக் கூடாதென்று பல்வேறு அமைப்புகள் போராட்டங்களை மீண்டும் தொடங்கியுள்ளன. பசுமைத் தீர்ப்பாய உத்தரவு குறித்து சென்னையில் பத்திரிகையாளர்களிடம் பேசிய ஸ்டெர்லைட் ஆலையின் தலைமை நிர்வாக அதிகாரி ராம்நாத், ஆலையைத் திறக்க அரசிடம் அனுமதி கோரப்பட்டிருப்பதாகவும், 2 மாதங்களில் ஆலை திறக்கப்படும் என்றும் கூறியிருந்தார். 
Like Reply
#65
[Image: Sterlit_18291.jpg]

இந்த நிலையில், பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து ஸ்டெர்லைட் எதிர்ப்புக் குழுவை சேர்ந்த பாத்திமா பாபு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், `பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவு வெளிவருவதற்கு முன்பாகவே தீர்ப்பு நகல் வேதாந்தா நிறுவனத்துக்குக் கிடைத்துவிட்டது. கடந்த 15-ம் தேதி மதியம் 2 மணிக்கு தீர்ப்பாய உத்தரவு நகல் வெளிவந்த நிலையில், அதற்கு 6 மணி நேரத்துக்கு முன்பாகவே அந்த நிறுவனத்துக்குக் கிடைத்துவிட்டதாகக் குற்றம்சாட்டியிருந்தார். தீர்ப்பாயம் அறிவிக்கும் முன்னரே வெளியாகும் உத்தரவு செல்லாது என வழிகாட்டுதல் இருப்பதாகவும் பாத்திமா பாபு, தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.  

இந்த வழக்கை இன்று மதியம் விசாரித்த நீதிபதிகள், ``ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கும் நடவடிக்கைகளில் வேதாந்தாந்தா நிறுவனம் ஈடுபடக்கூடாது. நீதிமன்றம் உத்தரவிடும் வரை தற்போதைய நிலைதான் தொடர வேண்டும். இந்த வழக்கில் தமிழக தலைமைச் செயலாளர், ஸ்டெர்லைட் நிர்வாகம் பதில் அளிக்க வேண்டும்’’ என்று உத்தரவிட்டனர். இவ்வழக்கின் அடுத்த விசாரணையை  ஜனவரி 21-ம் தேதிக்கு ஒத்திவைத்தது உயர் நீதிமன்றம். பசுமைத் தீர்ப்பாய உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்வது குறித்து தமிழக அரசு அன்றைய தினம் பதிலளிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. 
Like Reply
#66
திருட்டு பூட்டுக்கு காவல் எதற்கு? விஷால் ஆவேசம்!

''திருட்டுப் பூட்டுக்கு காவல் காக்கிறார்கள். அதிகாரம் இல்லாதவர்கள் எங்கள் அலுவலகத்திற்கு பூட்டு போட்டுள்ளனர். அதற்கு காவல் காக்கின்றனர்'' என்று தயாரிப்பாளர் சங்கத்திற்கு போடப்பட்ட பூட்டை உடைக்க வந்த அச்சங்கத்தின் தலைவர் விஷால் ஆவேசமாகக் கூறினார். 


''என்னுடைய அலுவலகம், என்னுடைய பூட்டு ஏன் பூட்டு போடுகின்றனர். அதிகாரம் இல்லாதவர்கள் போட்ட பூட்டுக்கு பாதுகாப்பு கொடுத்து வருகின்றனர். இதை எங்களால் நம்ப முடியவில்லை. பூட்டை உடைக்க என்னை அனுமதிக்கவில்லை. நாளை 7 படங்கள் திரைக்கு வர உள்ள நிலையில், அதுகுறித்த வேலையை செய்யத் தடுக்கின்றனர். உள்ளே ஆவணங்கள் உள்ளன. அவற்றுக்கு என்ன நடந்தது என்று தெரிய வேண்டும். சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது'' என்று போலீசாரால் கைது செய்யப்பட்ட பின்னர் பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியில் விஷால் தெரிவித்தார். 
Like Reply
#67
கடந்த சில மாதங்களாகவே நடிகர் விஷால் மீது தயாரிப்பாளர்கள் சங்கத்தை சேர்ந்த ஒரு பிரிவினர் அதிருப்தியில் இருந்து வருகின்றனர். தயாரிப்பாளர் சங்க தேர்தலின் போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. தமிழ்ராக்கர்ஸ் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. சிறிய பட்ஜெட் பட தயாரிப்பாளர்கள் மீது கண்டிப்பு காட்டப்படுகிறது என பல்வேறு குற்றச்சாட்டுகளை அவர்கள் விஷால் மீது முன் வைத்து வருகின்றனர்.
Vishal: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு பூட்டு போட்டு போராட்டம்
இந்நிலையில் நடிகர் விஷால் தலைமையிலான நிர்வாகத்தை கண்டித்து தமிழ் திரைப்பட தயார்ப்பாளர்கள் சங்கத்தை சேர்ந்த ஒரு பிரிவினர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் ஒரு பகுதியிலாக சென்னை தி நகரில் உள்ள தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க அலுவகத்திற்கு பூட்டு போட்டு சாவியை அப்பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் ஒப்படைக்கவுள்ளதாக தெரிவித்தனர்.
இது தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஏ.எல். அழகப்பன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கடந்த இரண்டு ஆண்டுகளில் விஷால் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. சங்கத்திற்கான நிரந்த வைப்பு தொகை ரூ. 7 கோடி எங்கே போனது என்று தெரியவில்லை. சங்க பிரச்னை தொடர்பான பொதுக்குழுவை விஷால் கூட்டவில்லை.

பொதுக்குழுவில் ஆலோசிக்காமல் தன்னிசையான முடிவுகளை அவர் எடுத்து வருகிறார். தமிழ்ராக்கர்ஸை அழிப்பதாக கூறி தயாரிப்பாளர் சங்க தேர்தலில் வெற்றிபெற்ற நடிகர் விஷால், அந்த இணையதளத்தில் பார்டனராக இருப்பதாக தகவல்கள் வெளிவருகிறது. நடிகர் சங்கத்தில் செயலாளராக உள்ள நடிகர் விஷால் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு தலைவரானது தவறு என ஏ.எல். அழகப்பன் கூறினார்.

[Image: vishal-news-2.jpg]

தொடர்ந்து பேசிய நடிகர் எஸ்.வி. சேகர் நடிகர் விஷால் மீது முதலமைச்சர் பழனிசாமியிடம் புகார் அளிக்க உள்ளோம். இளையராஜாவுக்கு பாராட்டு விழா நடத்தியதில் உள்நோக்கம் உள்ளது என தெரிவித்தார்.
Like Reply
#68
[Image: Master.jpg]

மேலும், தயாரிப்பாளர் சங்க நடவடிக்கைகளை குறித்து பேச நடிகர் விஷாலை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும். பொறுப்பற்ற முறையில் சங்கத்தை வழிநடத்திச் செல்லும் நடிகர் விஷால் தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து பதவி விலக வேண்டும் என தொடர்ந்து அச்சங்கத்தை சேர்ந்த உறுப்பினர்கள் சிலர் போராட் டம் நடத்தி வருகின்றனர். 
Like Reply
#69
இழப்பீடு கேட்டது நாங்க... காசு அவங்களுக்கா? அதிர்ச்சியில் பாக். கிரிக்கெட் வாரியம்

[Image: PCB-Ehsan-Mani-ICC-Twitter.jpg]

014-ல் போடப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் 2015-ம் ஆண்டு முதல் 2023-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் இடையே 6 கிரிக்கெட் தொடர்களை நடத்த முடிவு செய்யப்பட்டது.


ஆனால், இருநாட்டு எல்லைப் பகுதியில் பதற்றமான சூழல்நிலை வருவதை காரணம்காட்டி மத்திய அரசு அனுமதி அளிக்காததால் பாகிஸ்தானிலோ, பொதுவான இடத்திலோ விளையாட முடியாத நிலை ஏற்பட்டது.இருநாட்டு தொடர்கள் நடத்தப்படாததால், சுமார் ரூ.500 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்று பிசிசிஐ-க்கு எதிராக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐசிசி) புகார் அளித்தது
Like Reply
#70
இதனை விசாரித்த மைக்கேல் பெலாப் தலைமையிலான 3 பேர் கொண்ட அமர்வு, இருநாட்டு அரசுகளுக்கு இடையிலான பிரச்னை என்பதால், இழப்பீடு கேட்க முடியாது என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தது.தேவையில்லலாத இழப்பீடு வழக்கிற்கான செலவு முழுவதையும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வழங்க வேண்டும் என்று பிசிசிஐ முறையிட்டது.


இதனையடுத்து, பிசிசிஐ கோரிய தொகையில் 60 சதவீதத்தை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வழங்க வேண்டும் என்று ஐசிசி தீர்ப்பளித்துள்ளது. இதனால், இழப்பீடு வழக்கு தொடர்ந்த பாகிஸ்தான் வாரியம் அதிர்ச்சியில் உள்ளது.

[Image: India-vs-Pakistan-Asia-Cup-Dubai-AP.jpg]
Like Reply
#71
அரசின் அங்கீகாரம் இல்லாமல் நாட்டின் பிரதிநிதியாக பங்கேற்கபதா?'- பிசிசிஐ அமைப்புக்கு தடை கோரி சென்னை  உயர் நீதிமன்றத்தில் வழக்கு

[Image: BCCIajpg]

மத்திய அரசிடம் இருந்து எந்தவிதமான முறையான அங்கீகாரம் இன்றி நாட்டின் பிரதிநிதியாக உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் செயல்படும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு அமைப்பை (பிசிசிஐ) தடை செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

டெல்லியைச் சேர்ந்த கீதா ராணி என்பவர் இந்த மனுவை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்து, பிசிசிஐ அமைப்புக்கு எதிராகவும், அதன் அதிகாரிகளுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கக் கோரியுள்ளார்.
பிசிசிஐ என்பது தமிழகத்தில் சங்கப் பதிவுச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. அரசியலமைப்புச் சட்டம் 12-ன் பிரிவின்படி அதனால் அரசின் பிரதிநிதியாக செயல்பட முடியாது. பிசிசிஐ பதிவுசெய்யப்பட்ட நேரத்தில் நாட்டின்  பிரதிநிதியாக வெளிநாடுகளில் போட்டிகளில் பங்கேற்க பதிவு செய்யப்பட்ட நேரத்தில்  அரசிடமிருந்து எந்தவிதமான அங்கீகாரத்தையும் அனுமதிதையும் பிசிசிஐ பெறவில்லை.
Like Reply
#72
[Image: hignjpg]

ஆனால், கிரிக்கெட்டை நிர்வகிக்கும் பொறுப்பு அமைப்பாக எந்தவிதமான தடையும் இல்லாமல் பிசிசிஐ செயல்பட்டு வருகிறது. மேலும், நாட்டின் பிரதிநிதியாகவும், கிரிக்கெட்டை நிர்வகிக்கும் அங்கீகாரம் பெற்ற அமைப்பாகும் பிசிசிஐ செயல்பட்டு  வருகிறது.
பிசிசிஐ அமைப்பு எந்தவிதமான தயக்கமும் இல்லாமல் ஆங்கிலேயர்கள் காலணி ஆதிக்கத்தில் இருந்தபோது பயன்படுத்தப்பட்ட நட்சத்திரத்தை தனது லட்சினையாக பயன்படுத்திக் கொண்டு, அங்கீகாரம் இல்லாத நிலையில் இந்தியாவின் பிரதிநிதி என்று கூறிக்கொள்கிறது.
ஆங்கிலேயர்கள் காலத்தில் பயன்படுத்தப்பட்ட லட்சிணையை அரசின் அனுமதியில்லாமல் பிசிசிஐ பயன்படுத்துவது சட்டப்படி குற்றமாகும். லட்சிணை மற்றும் பெயர்சட்டம் 1950ன்படி, சட்டத்தை மீறியதாகும்  
இந்தியா என்ற வார்த்தையை பயன்படுத்த பிசிசிஐ அமைப்புக்கு எந்தவிதமான சட்டப்பூர்வ அனுமதியும் இல்லை, வெளிநாடுகளில் இந்தியாவின் பிரதிநிதி அணியாக செயல்படவும் உரிமை இல்லை. இந்தியா என்பது இந்திய அரசுக்கு சொந்தமான பெயராகும்.
அதுமட்டுமல்லாமல் அரசு நிறுவனமான பிசிசிஐ மாற்றுவதற்கு தொடர்ந்து அதன் நிர்வாகிகள் மறுத்துவருகிறார்கள், சட்டப்பூர்வ தேசிய விளையாட்டு அமைப்பாக அறிவிக்கவும் எதிர்க்கிறார்கள். வீரர்கள் தேர்விலும் எந்தவிதமான வெளிப்படைத் தன்மையும் இல்லாமல், பாகுபாட்டுடனே வீரர்கள் தேர்வும் இருந்து வருகிறது.கிரிக்கெட் விளையாட்டை மத்திய விளையாட்டு அமைச்சகதத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதிகள் எம். சத்தியநாராயணா, பி. ராஜமாணிக்கம் ஆகியோர் அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிசிசிஐ அமைப்பு, மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி பதில் அளிக்க உத்தரவிட்டனர். வழக்கை 2019, பிப்ரவரி 7-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்
Like Reply
#73
சிவில் சர்வீசஸ் முதன்மை தேர்வு முடிவு வெளியீடு சைதை துரைசாமியின் மனிதநேய மையத்தில் படித்த 34 பேர் தேர்வு

[Image: 201812210116406331_Results-of-Civil-Serv...SECVPF.gif]

வில் சர்வீசஸ் முதன்மை தேர்வு முடிவு வெளியிடப்பட்டு உள்ளது. இதில் சைதை துரைசாமியின் மனிதநேய மையத்தில் படித்த 34 பேர் தேர்வு பெற்றனர்.


மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் ஆண்டுதோறும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.ஆர்.எஸ்., ஐ.எப்.எஸ். போன்ற சிவில் சர்வீசஸ் பணிகளுக்கான தேர்வுகளை நடத்துகிறது. முதலில் முதல்நிலை தேர்வும், தொடர்ந்து முதன்மை தேர்வும், அதன் பிறகு நேர்முகத்தேர்வும் நடக்கிறது.
Like Reply
#74
இந்த ஆண்டு 874 பணிகளுக்கான தேர்வு நடைபெற்றது. இதில், முதல்நிலை தேர்வில் வெற்றி பெற்றவர்கள் முதன்மை தேர்வில் கலந்துகொண்டனர். கடந்த செப்டம்பர் 27-ந்தேதி முதல் அக்டோபர் 7-ந்தேதி வரை முதன்மை தேர்வு நடைபெற்றது.

இந்த தேர்வில் கலந்துகொண்டவர்களுக்கு சைதை துரைசாமியின் மனிதநேய மையம் இலவச பயிற்சி அளித்தது. அந்த பயிற்சியில் கலந்துகொண்டவர்களுக்கு மிக தீவிர பயிற்சி அளிக்கப்பட்டது.

இந்தநிலையில் முதன்மை தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. இதில் மனிதநேய மையத்தில் படித்த 10 மாணவர்கள், 24 மாணவிகள் என 34 பேர் தேர்ச்சி பெற்றனர்.

இந்த முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள அனைத்து மாணவ- மாணவிகளுக்கும் நேர்முக தேர்வுக்கான பயிற்சி வகுப்பு இலவசமாக தொடர்ந்து நடத்தப்பட உள்ளன.

இப்பயிற்சியில் கலந்துகொள்ள விரும்பும் தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவ- மாணவிகளும், தங்களுடைய பாஸ்போர்ட் அளவு புகைப்படம், எழுத்து தேர்வுக்கான நுழைவுச்சீட்டு ஆகியவற்றுடன் இன்று (வெள்ளிக் கிழமை) முதல் மனிதநேயம் மையத்தில் நேரிலோ அல்லது இணையதளத்தின் (ஷ்ஷ்ஷ்.னீஸீ௴யீக்ஷீமீமீவீணீ.நீஷீனீ) வாயிலாகவோ பதிவு செய்துகொள்ளலாம்.

நேர்முகத் தேர்வுக்கு பதிவு செய்துகொள்ளும் அனைவருக்கும், இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. இந்த நேர்முக தேர்வுக்கான பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ளும் அனைத்து மாணவ-மாணவிகளுக்கும், அனைத்து வசதிகளும் இலவசமாக செய்து தரப்படும்.

மேற்கண்ட தகவலை மனிதநேய மைய பயிற்சி இயக்குனர் கார்த்திகேயன் தெரிவித்து உள்ளார்.
Like Reply
#75
நிதி மசோதாவுக்கு ஒப்புதல் பெறப்படாததால் அமெரிக்க அரசு நிர்வாகம் மீண்டும் முடக்கம்

[Image: 201812221301207986_US-Government-Shuts-D...SECVPF.gif]

வாஷிங்டன்,

அமெரிக்க அரசின் செலவின மசோதாவுக்கும், அதிபர் டிரம்பின் கோரிக்கைக்கும் எதிர்ப்புத் தெரிவித்து எந்தவிதமான நிதிமசோதாவையும் நிறைவேற்றாமல் செனட் அவை  ஒத்திவைக்கப்பட்டது. இதனால் அமெரிக்காவில் அரசு நிர்வாக முடக்கம் ஏற்பட்டுள்ளது. 

நிர்வாக முடக்கம் காரணமாக 8 லட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஊதியம் இல்லாமல் பணியாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், நிர்வாக முடக்கம் ஏற்பட்டுள்ளது. மெக்சிகோ எல்லைப்பகுதியில் சுவர் எழுப்பும் தனது திட்டத்துக்காக டிரம்ப், 5 பில்லியன் தொகையை கோரியிருந்தார். ஆனால், டிரம்ப் கோரிக்கைக்கு செனட் சபையில் எதிர்ப்பு எழுந்தது. இதன் தொடர்ச்சியாக நிர்வாக முடக்கம் (ஷட் டவுன்) நிகழ்ந்துள்ளது.  நிர்வாக முடக்கம் எவ்வளவு நேரம் நீடிக்கும் என்பது தெரியவில்லை.  எனினும், சனிக்கிழமை பிற்பகல் இரு சபைகளும் மீண்டும் கூட இருப்பதாக செய்திகள் கூறுகின்றன.

அமெரிக்க அரசின் நிர்வாக முடக்கம், நீடிக்காது என நம்பிக்கை இருப்பதாக டொனால்டு டிரம்ப் தெரிவித்து உள்ளார். தனது டுவிட்டரில் டிரம்ப் வெளியிட்டுள்ள பதிவில், ''நிர்வாக முடக்கம் நீண்ட காலம் நீடிக்காது” என கூறியுள்ளார்.

கடந்த 2013-ம் ஆண்டுக்கு பின் இப்போது மீண்டும் நிர்வாக முடக்கம் 4-வது முறையாக ஏற்பட்டு உள்ளது. அதிபர் டிரம்ப் பதவி ஏற்று 2-வது முறையாக நிர்வாக முடக்கம் ஏற்பட்டுள்ளது.
Like Reply
#76
ரூ160 கோடி நிலுவை தொகையை வழங்க வேண்டும் - பிசிசிஐ- க்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் எச்சரிக்கை
[Image: 201812231224415130_BCCI-Cricket-Council-...SECVPF.gif]

டிசம்பர் 31-ம் தேதிக்குள் நிலுவைத் தொகையான ரூபாய் 160 கோடியைச் செலுத்தாவிட்டால், 2023-ம் ஆண்டு உலக கோப்பையை நடத்தும் வாய்ப்பு வழங்கப்படாது என்று, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ-க்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் எச்சரிக்கை விடுத்துள்ளது. 2016-ம் ஆண்டு  டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடைபெற்ற போது, போட்டிகளை ஒளிபரப்ப இந்திய அரசாங்கம் வரிச்சலுகை எதுவும் வழங்கவில்லை என கூறப்படுகிறது.  இதனால் போட்டியை ஒளிபரப்பிய தனியார் தொலைக்காட்சி நிறுவனம் வரிகள் அனைத்தையும் கழித்துக்கொண்டு மீதி தொகையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் வழங்கியது.  இந்த நிலையில் நிலுவை தொகை 160 கோடி ரூபாயை பிசிசிஐ செலுத்தவேண்டும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வலியுறுத்தியுள்ளது..
Like Reply
#77
"வங்கி கணக்கில் தலா ரூ. 15 லட்சம் விழும்" - மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே நம்பிக்கை

பிரதமர் நரேந்திரமோடி அறிவித்திருந்த தேர்தல் வாக்குறுதிபடி, இந்திய மக்கள் அனைவரின் வங்கி கணக்குகளிலும் விரைவில், தலா 15 லட்சம் ரூபாய் வந்து சேரும் என்று சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார்.

[Image: 201812182207302763_15-lakhs-will-be-cred...SECVPF.gif]

பிரதமர் நரேந்திரமோடி அறிவித்திருந்த தேர்தல் வாக்குறுதிபடி, இந்திய மக்கள் அனைவரின் வங்கி கணக்குகளிலும் விரைவில், தலா 15 லட்சம் ரூபாய் வந்து சேரும் என்று சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார். மஹாராஷ்டிரா மாநிலம் சங்லி மாவட்டம் இஸ்லாம்பூர் என்ற நகரில் செய்தியாளர்களிடம் பேசியபோது, அவர் இந்த நம்பிக்கை வெளியிட்டார். 
Like Reply
#78
மொபைலால் பார்வையை இழந்த பிக் பாஸ் நடிகை – உருக்கமான ட்வீட்.!

பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சி பட்டி தொட்டியெங்கும் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.
இந்த நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகையான காஜல் பசுபதி.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு படங்களில் வாய்ப்புகள் தேடி வந்தாலும் ஒரு சில படங்களில் மட்டும் நடித்து வருகிறார்.
அதே சமயம் சமூக வளையதளங்களிலும் எப்போதும் பிஸியாக இருந்து வரும் இவர் கடந்த சில தினங்களாக அந்த பக்கமே தலை காட்டாமல் இருந்து வருகிறார்.

இது குறித்து தற்போது ரசிகர் ஒருவர் கேட்டதற்கு எந்த நேரமும் கேம் விளையாடி கண் காலியாடிச்சு. கொஞ்ச நாளைக்கு அதிகமாக போன் பயன்படுத்த கூடாதுனு டாக்டர் சொல்லிட்டாங்க என கூறியுள்ளார்.

Quote:[Image: hZ3zElGa_normal.jpg]
[/url]Kaajal Pasupathi@kaajalActress




[Image: 1f601.png]illa PA[Image: 1f602.png]  kannu gaali [Image: 1f61e.png] 8bp game velaiyadiye [Image: 1f622.png] mobile adhigama use pannakudadhunu doc sollitanga
it's me[Image: 1f609.png][Image: 1f609.png]dk[Image: 1f60d.png][Image: 1f60d.png]@deepak071094
Replying to @kaajalActress
Now a days don very busy pola activeva ila Twitter la



40
8:13 AM - Dec 24, 2018
Twitter Ads info and privacy


See Kaajal Pasupathi's other Tweets

[url=https://twitter.com/kaajalActress]
Like Reply
#79
இந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட்: பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில் கோலியின் படை சரித்திரம் படைக்குமா?

பாக்சிங் டே டெஸ்ட் போட்டியொன்றில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் விளையாடி வருகின்றன. முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியாவும், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவும் வெற்றி நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டி மெல்பர்ன் மைதானத்தில் நடந்து வருகிறது.

பொதுவாக பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில் ரசிகர்களின் எண்ணிக்கை வழக்கத்தை விட அதிகமாக இருக்கும். உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் விளையாடும் ஆஸ்திரேலிய அணியை வெல்வது எந்த ஒரு அணிக்கும் பெருஞ் சவால்.

கிறிஸ்துமஸ் தினத்துக்கு அடுத்த வேலை தினத்தை பாக்சிங் டே என்கிறார்கள். ஆஸ்திரேலியாவில் பொதுவாக டிசம்பர் 26-ம் தேதி ஒரு டெஸ்ட் போட்டி நடக்கும். இந்த டெஸ்ட் போட்டியை பாக்சிங் டே டெஸ்ட் என்கிறார்கள்.

இம்முறை பாக்சிங் டே டெஸ்டில் ஆறு அணிகள் விளையாடுகின்றன. சென்சூரியனில் நடக்கும் பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில் தென்னாப்ரிக்காவும் பாகிஸ்தானும் மோதுகின்றன. நியூசிலாந்து நாட்டில் கிரைஸ்ட்சர்ச் மைதானத்தில் நடக்கும் பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில் இலங்கையும் நியூசிலாந்தும் மோதுகின்றன.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய அணியில் முதன்முறையாக மயங்க் அகர்வால் மற்றும் ஹனுமா விஹாரி தொடக்க வீரர்களாக களமிறங்குகின்றனர். கடந்த டெஸ்ட் போட்டியில் ஒரு சுழற்பந்து வீச்சாளர் கூட இல்லாமல் களமிறங்கிய இந்திய அணி இம்முறை இடது கை சுழற்பந்து வீச்சாளரான ரவீந்திர ஜடேஜாவை களமிறக்கியுள்ளது. நடுவரிசையில் புஜாரா, விராட் கோலி, ரஹானே வலுசேர்ப்பார்கள்.
ரோஹித் ஷர்மா, ரிஷப் பன்ட் ஆகியோரும் அணியில் இடம்பெற்றுள்ளதால் அணியில் ஏழு பேட்ஸ்மேன்கள் இருக்கின்றனர். கடந்த டெஸ்ட் போட்டியில் அணியில் இருந்த உமேஷ் யாதவ் இப்போட்டியில் நீக்கப்பட்டிருக்கிறார்.
[Image: _104946668_kohli1.jpg]
Like Reply
#80
[Image: _104946671_mayangagarwal.jpg]

இந்தியாவுக்காக டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ள 295-வது வீரராகியுள்ளார் மயங்க் அகர்வால். கடந்த ஆண்டு நடந்த ரஞ்சி கோப்பையில் கர்நாடக வீரர் மயங்க் மகாராஷ்டிரா அணிக்கு எதிரான போட்டியில் முச்சதம் அடித்தார். இந்த ஆண்டின் துவக்கத்தில் நடந்த விஜய் ஹசாரே கோப்பையில் அதிக ரன்கள் விளாசியவரும் மயங்க்தான்.

ஆந்திராவைச் சேர்ந்த ஹனுமா விஹாரி ஒரு பேட்டிங் ஆல்ரவுண்டர்.
இவ்வருடம் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்த ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் விஹாரி அறிமுகம் ஆனார். முதல் டெஸ்ட் போட்டியில் ஒரு அரைசதம் விளாசினார். இதுவரை இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள விஹாரி முதன்முறையாக இந்திய அணிக்கு தொடக்க வீரராக களமிறங்குகிறார்.

மிச்சேல் ஸ்டார்க், நாதன் லயன், ஜோஷ் ஹாசில்வுட், நாதன் லயன், பேட் கம்மின்ஸ் என ஐந்து பௌலர்களுடன் ஆஸ்திரேலிய அணி களம் காண்கிறது.
Like Reply




Users browsing this thread: 151 Guest(s)