Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
#41
இதுகுறித்து டிம் பெயின் கூறுகையில், ‘இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 1-1 என சமன் செய்தது எனக்கு தனிப்பட்ட முறையில் மிகப்பெரிய ஆறுதல் அளிக்கிறது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டியும் மிகவும் கடினமாக இருந்தது. சிறந்த டெஸ்ட் அணியாக இருந்தாலும் அதை வீழ்த்தும் திறமை ஆஸ்திரேலிய அணியிடம் உள்ளது என் நிரூபித்துள்ளோம். இந்த வெற்றி ஆஸ்திரேலிய அணிக்கு மிகப்பெரிய உற்சாகத்தை அளிக்கிறது. ஒரு வெற்றிக்கு பின் பெரிய அளவில் குஷியாகக்கூடாது என்பது சரியாக உள்ளது. ’ என்றார்.

[Image: Master.jpg]
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#42
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மீண்டும் போராட்டம் தீவிரம் தூத்துக்குடியில் போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு

[Image: 201812180137032216_Struggle-Against-Ster...SECVPF.gif]
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி அளித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டு உள்ளது. இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மீண்டும் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது
Like Reply
#43
ஆலை எதிர்ப்பாளர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் நேற்று காலை ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்தனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. இதையொட்டி ஏராளமான போலீசார் கலெக்டர் அலுவலகத்தில் குவிக்கப்பட்டு இருந்தனர். கலெக்டர் அலுவலகத்தின் அனைத்து வாயில்களிலும் போலீசார் நிறுத்தப்பட்டு, தீவிர சோதனைகளுக்கு பிறகே மனு கொடுக்க வந்தவர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் கலெக்டர் அலுவலகம் முன்பு திரண்டனர். அவர்கள் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு சட்டமன்றத்தை கூட்டி அவசர சட்டம் நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி திடீரென ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதேபோன்று தே.மு.தி.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மாவட்ட எம்.ஜி.ஆர், அம்மா, தீபா பேரவையினர் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக அகற்றக் கோரி ஒப்பாரி வைத்து அழுதபடி போராட்டம் நடத்தினர்.

பின்னர் அரசியல் கட்சியினர், ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கத்தினர், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கலெக்டர் சந்தீப் நந்தூரியிடம் தனித்தனியாக கோரிக்கை மனு கொடுத்தனர்.

தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி அருகே இந்திய மாணவர் சங்கத்தினர் நேற்று காலை தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர். அப்போது ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக அகற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பான மேல்நடவடிக்கையை அரசு துரிதமாக எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

ஸ்டெர்லைட் எதிர்ப்பு மாவட்ட மக்கள் கூட்டமைப்பை சேர்ந்த வக்கீல் அரிராகவன், மகேஷ் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தீர்ப்பாயத்தின் உத்தரவை கண்டித்து நாளை (புதன்கிழமை) தூத்துக்குடி மாவட்டத்தில் ஒவ்வொரு கிராமங்கள், நகரங்களில் உள்ள வீடுகள் தோறும் கருப்புக்கொடி ஏற்றும் போராட்டம் நடத்துகிறோம். அனைத்து கட்சிகள், இயக்கங்கள் உள்ளிட்ட அனைத்து அமைப்புகளும் எங்களுக்கு ஆதரவாக, உறுதுணையாக இருக்க வேண்டும்.போலீசார் கருப்புக்கொடி போராட்டத்துக்கு எங்களை அனுமதிக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் பல்வேறு நிபந்தனைகளுடன் உத்தரவு பிறப்பித்து உள்ளது. இந்த உத்தரவின் மீது மேல்முறையீடு செய்யப்போவதாக முதல்-அமைச்சர் அறிவித்து உள்ளார். அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படுகிறது. இதனால் இறுதியாக உச்சநீதிமன்றத்தில் என்ன தீர்ப்பு வருகிறதோ அதன்படி நடவடிக்கை எடுக்கப்படும். மேல்முறையீடு செய்வதால், தற்போது தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளவைகளை கடைபிடிக்கப்போவது இல்லை.

மேலும் போராட்டத்துக்கு மாணவர்கள், பொதுமக்களை யாரும் தூண்டிவிடக்கூடாது. சட்டத்தை மீறி செயல்படுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். வெளியூரில் இருந்து யாராவது ஸ்டெர்லைட் சுற்று வட்டார கிராமங்களுக்கு வருகிறார்களா? என்பது குறித்து போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

இவ்வாறு கலெக்டர் கூறினார்.
Like Reply
#44
நிகழ்பதிவு: ஐபிஎல் ஏலம் 2018
[Image: unadkatjpg]

மீண்டும் கோடீஸ்வரர் ஆனார் ஜெய்தேவ் உனாட்கட்: ரூ.8.4 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் வாங்கியது

 

விற்காத வீரர்கள் இதுவரை: மனோஜ் திவாரி, புஜாரா, ஹேல்ஸ், மெக்கல்லம், கப்தில், வோக்ஸ்,  ஜோர்டான், யுவராஜ் சிங், நமன் ஓஜா, பென் மெக்டர்மட்

மே.இ.தீவுகளின் நிகோலஸ் பூரன் என்ற வீரரை கிங்ஸ் லெவன் ரூ.4.2 கோடிக்கு ஏலம் எடுத்தது

2019-ஐபிஎல் போட்டிக்கான வீரர்கள் ஏலம் ஜெய்ப்பூரில் இன்று நடைபெறுகிறது. 346 வீரர்கள் பங்கேற்றும் இந்த ஏலத்தில் முக்கிய வீரர்களான யுவராஜ் சிங், முகமது ஷமி, உனத்கட் உள்ளிட்ட வீரர்களை எந்த அணி ஏலம் எடுக்கப்போகிறது என்பது பெரிய எதிர்பார்ப்பாக இருக்கிறது.
ஏறக்குறைய 8 ஐபிஎல் அணிகளில் 70-க்கும் மேற்பட்ட வீரர்களுக்கான இடங்கள் காலியாக இருக்கிறது என்பதால், இன்றைய ஏலம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.ஏலம் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறுகிறது.
Like Reply
#45
வீரர்

தொகை

அணி

மனோஜ் திவாரி விற்கப்படவில்லை -- --
அலெக்ஸ் ஹேல்ஸ் விற்கப்படவில்லை -- --
புஜாரா விற்கப்படவில்லை. -- --
ஹனுமா விஹாரி ரூ.2 கோடி டெல்லி கேப்பிடல்ஸ்
ஷிம்ரன் ஹெட்மையர் ரூ.4.2 கோடி ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு
பிரெண்டன் மெக்கல்லம் விற்கப்படவில்லை (அடிப்படை விலை ரூ.2 கோடி) -- --
மார்டின் கப்தில் முதல் சுற்றில் விற்கவில்லை (அடிப்படை விலை ரூ.1 கோடி) -- --
கிறிஸ் வோக்ஸ் (அடிப்படை விலை ரூ.2 கோடி) விற்கப்படவில்லை -- --
கார்லோஸ் பிராத்வெய்ட் ரூ.5 கோடி கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
கிறிஸ் ஜோர்டான் (இங்கி. ஆல்ரவுண்டர்) விற்கவில்லை -- --
குர்கீரத் சிங் ரூ.50 லட்சம் ஆர்சிபி
மோய்சஸ் ஹென்றிக்ஸ் (ஆஸி. ஆல்ரவுண்டர்) ரூ.1 கோடி கிங்ஸ் லெவன் பஞ்சாப்
அக்சர் படேல் ரூ.5 கோடி டெல்லி
ஜானி பேர்ஸ்டோ (இங்கிலாந்து) ரூ.2.2 கோடி சன் ரைசர்ஸ்
நிகோலஸ் பூரன் (மே.இ.தீவுகள்) ரூ. 4.2 கோடி கிங்ஸ் லெவன் பஞ்சாப்
விருத்திமான் சஹா ரூ.1.2 கோடி சன் ரைசர்ஸ்
ஜெய்தேவ் உனாட்கட் ரூ.8.4 கோடி ராஜஸ்தான் ராயல்ஸ்
Like Reply
#46
என்கிட்ட கையை நீட்டிப் பேசற வேலையெல்லாம் வேண்டாம்’: இஷாந்த் சர்மா-ஜடேஜா மோதலில் நடந்தது என்ன?

[Image: Capturejpg]
Like Reply
#47
பெர்த் டெஸ்ட் போட்டியின் போது மைதானம் முழுதும் கேமராக்களும் மைக்குகளும் இருப்பதை மறந்து இந்திய அணிக்குள் இருக்கும் முரண்பாடுகளை, கருத்து வேறுபாடுகளை வெட்ட வெளிச்சமாக்கும் விதமாக இஷாந்த் சர்மாவும், ரவீந்திர ஜடேஜாவும் நடந்து கொண்ட விவகாரம் ஆஸ்திரேலிய ஊடகங்களில் சந்தி சிரித்து வருகிறது.
பெர்த் டெஸ்ட் போட்டியில் விராட் கோலியைச் சீண்டினால் போதும் நமக்கு வெற்றி நிச்சயம் என்பதை மிகவும் சாதுரியமாகப் பயன்படுத்தியது ஆஸ்திரேலியா, டிம் பெய்ன், விராட் கோலி நெஞ்சுக்கு நெஞ்சு மோதுமாறு அசிங்கமாக நடந்து கொண்டனர், ஆனால் அது “போட்டிமனப்பான்மை உணர்வு” என்று வியாக்கியானம் அளிக்கப்பட்டு சரிகட்டப்பட்டு விட்டது.
ஆனால் இஷாந்த்சர்மா, ஜடேஜா மோதல் தெருச்சண்டை போல் சித்தரிக்கப்பட்டு வருகிறது, வழக்கம் போல் பிசிசிஐ, அப்படி எதுவும் நடக்கவில்லை என்று முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கவே முயற்சி செய்கிறது.
இந்நிலையில் இஷாந்த் சர்மா, ஜடேஜா மோதலுக்கிடையே இஷாந்த் சர்மாவின் நோ-பால் பிரச்சினையும், ஜடேஜா 12வது வீரராக களத்தில் விளையாடியதும் இருவருக்குமே தனித்தனியான விதத்தில் அதிருப்தி இருந்தது மோதலாக வெடித்ததாகக் கூறும் ஆஸி. ஊடகம், அவர்கள் பேசியது என்ன என்பதை வெளியிட்டுள்ளது.
ஜடேஜாவும், இஷாந்த் சர்மாவும் அவ்வளவு அருகில் நெருக்கமாக மோதல் போஸில் இருந்தனர், ஜடேஜா கையை நீட்டி ஏதோ ஆவேசமாகப் பேசுகிறார். ஆனால் எதுவுமே நடக்கவில்லை என்றால் எப்படி?
அவர்கள் இருவருக்குமிடையே எதன்பொருட்டு இத்தகைய வாக்குவாதம் நடந்தது என்று தெரியவில்லை, ஆனால் அசிங்கமான வார்த்தைகளினால் நடந்த வாக்குவாதம் என்று ஆஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அதாவது, “என்னிடம் கையை நீட்டி பேசும் வேலையெல்லாம் வேண்டாம், என்னிடம் ஏதாவது சொல்ல வேண்டுமென்றால் என் அருகில் வந்து சொல்லு” என்று இஷாந்த் சர்மா கூற,  “ஏன் நீ அதிகமா பேசற?” என்று ஜடேஜா பதில் பேசியுள்ளார்.  இதற்கு இஷாந்த் சர்மா, “என்னிடம் கையை நீட்டிப் பேசாதே, உன் கோபத்தை என் மேல் காட்டாதே.. என்னிடம் உன் கோபத்தைக் காட்டினால்..  டோண்ட் டாக் புல்**** என்று ஆவேசமாக இஷாந்த் தெரிவித்ததாக ஆஸி. ஊடகம் ஒன்று தெரிவிக்கிறது.
இஷாந்த்சர்மாவையும், ஜடேஜாவையும் ஷமி சமாதானப்படுத்தியதாக ஏற்கெனவே செய்திகள் வெளியாகியிருந்தன.  ஜடேஜா ஏற்கெனவே ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ வேடிடம் வாய்வார்த்தையில் நிதானம் தவறியிருக்கிறார், ஆனால் மேத்யூ வேடும் வாய்பேசாதவர் அல்ல.
ரிக்கி பாண்டிங் இது குறித்து கூறும்போது, “அவர்கள் என்ன பேசிக்கொண்டார்கள் என்று யாருக்குத் தெரியும். ஆனால் இருவரும் ஆவேசமாகப் பேசிக்கொண்டனர். ஒருவரையொருவர் கையை நீட்டி பேசினர். இருமுறை அவர்களை விலக்க நேரிட்டது” என்றார்.
Like Reply
#48
இந்த ஆஸி. அணிக்கு எதிராக தொடரை வெல்ல முடியவில்லை எனில் எதற்கு இந்த கேப்டன், கோச்? - கோலி, ரவிசாஸ்திரி மீது கவாஸ்கர் விளாசல்

[Image: ravi-kohlijpg]
Like Reply
#49
அணித்தேர்வில் தொடர்ந்து தப்பும் தவறுமாக செயல்பட்டு வரும் ரவிசாஸ்திரி, விராட் கோலிக்கு சுனில் கவாஸ்கர் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தென் ஆப்பிரிக்கத் தொடரிலிருந்து அணித்தேர்வில் ஏகப்பட்ட தவறுகளைச் செய்து விட்டு அதனை நியாயப்படுத்தி வேறு பேசி வருகிறார் விராட் கோலி. ரவிசாஸ்திரி கடந்த கால அணிகளை மட்டம் தட்டி தன் தவறுகளை மறைக்கப்பார்க்கிறார். பெர்த் டெஸ்ட் போட்டியில் உமேஷ் யாதவ் 2 விக்கெட்டுகளை 139 ரன்களுக்கு எடுத்துள்ளார் ஹனுமா விஹாரி அவரை விடவும் சிறப்பாக அவருக்கு சாதகமாக இல்லாத பிட்சில் வீசினார்.

நேதன் லயன் அதிவேக பிட்சில் 8 விக்கெட்டுகளை எடுத்து ஆட்ட நாயகன் விருதைத் தட்டிச் சென்றார். இதனையடுத்து ஸ்பின்னரை சேர்க்காதத், கே.எல்.ராகுலை அணியில் வைத்திருப்பது என்று சுனில் கவாஸ்கர் ரவிசாஸ்திரி, விராட் கோலி மீது கடும் விமர்சனங்களை எழுப்பியுள்ளார்.

இந்நிலையில் ஆஜ்தக் தொலைக்காட்சிக்கு சுனில் கவாஸ்கர் கூறியதாவது:

நான் இதை சில காலமாகப் பார்த்து வருகிறோம். அதாவது தென் ஆப்பிரிக்காத் தொடரிலிருந்து அணித்தேர்வு தவறுகளைப் பார்த்து வருகிறோம். இது அணியை பாதிக்கிறது, அணி தோல்வி அடைகிறது, வெற்றி பெற வேண்டிய போட்டியெல்லாம் அசட்டுத்தனமான அணித்தேர்வினால் தோல்வி அடைகிறோம்.

அணிச்சேர்க்கையில் உள்ள ஓட்டை அடைக்கப்பட வேண்டும். ஓட்டையை அடைத்தால்தான் அடுத்த 2 போட்டிகளை வெல்ல முடியும். ஸ்டீவ் ஸ்மித், வார்னர் இல்லாத இந்த பலவீனமான ஆஸ்திரேலிய அணியை வெல்ல முடியாவிட்டால் இந்த கேப்டன், இந்தப் பயிற்சியாளர்கள் கூட்டம் ஆகியோரினால் என்ன பயன் என்பதை நாம் தொடர் முடிந்தவுடன் கணித்தாக வேண்டும்.

தொடருக்கு ஏன் 19 வீரர்களை அனுப்ப வேண்டும், ஏன் இன்னும் 3 வீரர்களைச் சேர்த்து அனுப்பி 2 அணியாக அனுப்ப வேண்டியதுதானே? பணக்கார வாரியம் பிசிசிஐ அதற்காக 40 வீரர்களை வேண்டுமானாலும் அனுப்பலாமா?

விளையாடுபவர்களைத் தவிர மற்றவர்கள் ஏன் இங்கு வந்து ரஞ்சி டிராபியில் ஆடக்கூடாது? இதனால் உள்நாட்டு கிரிக்கெட் பயனடையும். மேலும் டெஸ்ட் போட்டிகளில் வாய்ப்பளிக்காத வீரர்க்ளுக்கு வாய்ப்பளிக்கலாமே.

கே.எல்.ராகுல் அடுத்த 2 டெஸ்ட் போட்டிகளிலும் ஆடவே வாய்ப்பில்லை. அவர் கர்நாடகாவுக்கு ரஞ்சியில் ஆட வேண்டிய வீரர். அவர் பார்மில் இல்லை என்பதல்ல விஷயம், அவர் அங்கு இல்லவேயில்லை. நான் கூறுவது தவறு என்று அவர் நிரூபித்தால் எனக்கு மகிழ்ச்சிதான்.

இவ்வாறு சுனில் கவாஸ்கர் விளாசியுள்ளார்.
Like Reply
#50
அவர் சச்சின் ஆகலாம்; ஒரு போதும் தோனி ஆக முடியாது: கோலியின் கேப்டன்சியை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

[Image: hbvcjpg]
Like Reply
#51
கோலியின் கேப்டன்சியை விமர்சித்து பரவலான விமர்சனங்கள் எழத் தொடங்கியுள்ளன. வீரர்கள் தேர்வு செய்யும் விதத்திலும், பில்டிங் மற்றும் பந்துவீச்சு தேர்விலும் கோலி சுமாரான நிலைக்கு கீழே சிந்திக்கக் கூடியவராக இருக்கிறார் என்று நெட்டிசன்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

தனிநபராக ரன்களை மட்டும் குவித்தால் போதாது அணியை நல்ல முறையில் வழி நடத்தவும் ஒரு தலைவனுக்குத் தெரிய வேண்டும் என்று பலரும் கூறியுள்ளனர்.

இதோ அவற்றில் சில பதிவுகள்

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச?

‏ஒரு சூப்பர் ஸ்டார் (கோலி) மற்றும் பத்து டம்மி பீஸ்களை விட, பதினோரு சுமாரான பிளேயர்கள் எவ்வளவோ மேல் என்று நமக்கெல்லாம் உறைக்கப்போகும் நாள், இன்று !

MSDian

‏கிரிக்கெட் உலகத்துல திமிர் புடிச்சவனுங்கன்னா அது ஆஸ்திரேலியா அண்ட் இங்கிலாந்து க்ரிக்கெட்டர்ஸ்தான். ஆனா அவனுங்களே கோலி ஸ்லெட்ஜ் பண்றது கெத்துன்றானுங்கன்னா, கோலி தன்னோட வேர்ல்ட் க்ளாஸ் பேட்டிங்னால சம்பாதிச்ச மரியாதைதான்.

தோழர்‏

கோலி ஃபார்ம் அவுட்டாறது மாதிரி தெரியல! ஒரே வீக்னஸ் டீம் செலக்ஷனும் கேப்டன்சியும்தான்.

D காப்ரியோ

தோல்வியோ வெற்றியோ அதுல கேப்டனுக்குதான் கிரெடிட். இதுதான வழக்கமா ஃபாலோ பண்றது..இப்ப என்ன ரவிசாஸ்திரியில ஆரம்பிச்சு பந்து பொறுக்கி போடுறவன மொதகொண்டு திட்றானுக

கmee

உண்மையாவே கோலி கேப்டன்சி சரியில்ல.

சொன்னா ஒத்துக்க மாட்டானுக.

வின்னிங்க எடுத்து பாரும்பானுக

யோகி ஆதித்யநாத்‏

எந்த அளவு கோலி ஒரு அட்டகாசமான ப்ளேயரோ.. அந்த அளவுக்கு ஒரு மட்டமான கேப்டன். சச்சின் மாதிரி..

ℳя.ரிச்சி

கோலி சச்சின் ஆகலாம் ஆனால் ஒரு போதும் தோனி ஆக முடியாது..

தல

தளபதி சிட்டி

அடேய் கோலி உனக்கு உமேஷ் யாதவ் புடிச்சிருந்தா அவன பெங்களூர் ஐபிஎல் லோட நிறுத்திக்கோ.அவனுக்கு பதிலா ஜடேஜா இருந்திருந்தா மேட்சே மாறி இருக்கும். இங்க ஒரு பேட்ஸ்மேன கொறச்சு அவன சேர்த்து எங்க உயிர வாங்காத

சிலுக்குவார்பட்டி சேட்டு

கோலி அவுட்டா !யப்பே 2-0 ன்னு எல்லாம் ஆஸி கேப்டன் கிட்ட பேசுனியேப்பு இப்ப என்னாச்சுபே

மது

என்னடா தொண்டைய கவ்வுது - கோலி
Like Reply
#52
தனி ஆளாக போராடுகிறேன்: பொன்.மாணிக்கவேல்
சென்னை: சிலை கடத்தல் வழக்கில் போலீசார் எனக்கு எதிராக திரும்பியதாக கருதவில்லை. தனி ஆளாக போராடுகிறேன் என சிலை கடத்தல் தடுப்பு வழக்கின் சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் கூறினார்.

'மாநில, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு, சிறப்பு அதிகாரி, பொன் மாணிக்க வேல், பொய் வழக்கு பதிவு செய்யச் சொல்லி மிரட்டுகிறார்' என, டி.ஜி.பி., அலுவலகத்தில், போலீஸ்காரர்கள் புகார் அளித்துள்ளனர். இன்றும் சில போலீசார் புகார் அளித்தனர்.




பரிதாபம்

இது தொடர்பாக நிருபர்களை சந்தித்த பொன்.மாணிக்கவேல் கூறியதாவது: என் மீதான குற்றச்சாட்டுகள் எதிர்பா்த்தது தான். சிலை கடத்தல் சிறப்பு அதிகாரியாக ஐகோர்ட் தான் என்னை நியமித்தது. என் மீது புகார் கூறிய 21 பேரும் 400 நாளில் ஒரு வழக்குப்பதிவு கூட செய்யவில்லை. அவர்கள், ஒரு குற்றவாளியை கூட கைது செய்யவில்லை. அவர்களின் முகத்தைக் கூட டிவியில் பார்க்கவில்லை. அவர்கள் மீது பரிதாபம் தான் வருகிறது. அவர்களின் பின்னால் இருந்து சிலர் இயக்குகிறார்கள்.








கைது செய்யவில்லை
250 நாட்களாக பணிக்கு வராத ஒருவரை, மீண்டும் பணியில் சேர்க்க முடியாது. ஆனால், ஊழல் தடுப்பு பணிக்கு நியமிக்கின்றனர். மீண்டும் எப்படி பணிக்கு எடுக்க முடியும். வழக்கை முறையாக விசாரிக்காத அதிகாரிகளால் எங்களுக்கு தான் மன உளைச்சல் ஏற்படுகிறது. 
பந்தநல்லூர் பசுபதீஸ்வரர் கோவில் வழக்கை எங்களிடம் நீதிமன்றம் ஒப்படைத்துதது. பசுபதீஸ்வர் கோவில் வழக்கை ஒப்படைத்த பிறகு, விசாரணை அதிகாரி ஓடிவிட்டார். 5 டிஎஸ்பி 5 ஏடிஎஸ்பி தான் எனக்கு கொடுத்துள்ளனர். இவர்கள் மூலம் நான் இதுவரை ஒருத்தரை கூட கைது செய்யவில்லை. மிகக்குறைந்த போலீசாரை பயன்படுத்தி 47 பேரை கைது செய்துள்ளேன். 
இதற்கு, அந்தந்த மாவட்ட ரிசர்வ் போலீசார், உயரதிகாரிகளுக்கு தான் பெருமை கிடைக்கும். வெற்றி தோல்வி பற்றி பேசுவதற்கு இல்லை. கடமையை செய்கிறோம். சிலை கடத்தல் தடுப்பு வழக்கிற்கு ஐஜியான நானே விசாரணை அதிகாரியாக இருந்தேன். திருட்டு வழக்கில் ஐஜி ரேங்கில் உள்ள விசாரணை அதிகாரி நான் மட்டுமே
Like Reply
#53
[Image: Tamil_News_large_2172489.jpg]

பழங்கால குற்றச்சாட்டு
போலீஸ் உள்விவகாரங்களை வெளியில் பேசுவது முறையானது தானா? என் மீதான புகார்களுக்கு அவர்களால் ஆதாரங்கள் அளிக்க முடியுமா? புகார் கூறியவர்கள், பணி காலத்தில் இடமாற்றம் கேட்டு விண்ணப்பித்திருக்க வேண்டும். என்னிடம் நேரடியாகவோ, இமெயில் மூலமோ மனு அளித்திருக்க வேண்டும். அவர்களை பணியாற்றிய போலீஸ் உயர் அதிகாரிகளுக்கும் மனு அளித்திருக்க வேண்டும். ஆனால், புகார் கூறிய ஒருவர் கூட மனு அளிக்கவில்லை. 6 மாத பணி காலம் முடிந்த பிறகு 3 பேர் மட்டுமே விண்ணப்பித்தனர். 
வழக்கின் நிலையை கொடுத்துவிட்டு செல்வதாக இருந்தால் யாரையும் நான் கட்டாயப்படுத்த முடியாது. கடமைகளை செய்யாத யாரையும் பணியில் இருந்து விடுவிக்க முடியாது. அவதூறு பேசுவது மன உளைச்சலை ஏற்படுத்துவது என்பது எல்லாம் பழங்கால குற்றச்சாட்டு. போலீசார் எனக்கு எதிராக திரும்புவதாக கருதவில்லை. தனி ஆளாக போராடுகிறேன். 


சட்ட அறிவு இல்லை
சிலை கடத்தல் தடுப்பு வழக்கில், போதிய ஆவணம், ஆதாரம் இல்லாமல் யாரையும் ரிமாண்ட் செய்ய முடியாது. எனக்கு எதிரான வழக்கில் பின்னடைவு ஏற்பட்டதால், சிலர் பிரச்னை செய்கின்றனர். அறநிலையத்துறை அதிகாரி கவிதாவை கைது செய்த மறுநாள், வழக்கை சிபிஐக்கு மாற்றுகிறாரகள். அடிப்படை ஆதாரம் இல்லாமல் எப்ஐஆர் போட சொன்னதாக கூறியவர்களுக்கு சட்ட அறிவு கிடையாது. 

புகாரை வாங்கியவர்களுக்கும் சட்ட அறிவு கிடையாது. விருப்பப்பட்டு இருப்பவர்களை வைத்து தொடர்ந்து பணியாற்றுவேன்.விரும்பி வரும் போலீசாரை வைத்து சிலைகளை மீட்டு கொண்டு வருவேன். மனஉளைச்சல் இருப்பதாக கூறியவர்களுக்கு போலீசாக இருக்க தகுதி கிடையாது. 

மக்களின் வரிப்பணத்தில் சாப்பிட்டு விட்டு, மன உளைச்சல் என கூறினால், அவர்கள் போலீசே கிடையாது. குறையில்லாமல் வேலை பார்க்கிறேன். என்னை நம்பலாம்.நல்ல எண்ணங்களும், ஆன்மிகமும் தான் என்னை செலுத்துகிறது. இவ்வாறு அவர் கூறினார். 


ஏற்க மறுப்பு
இதனிடையே, பொன்.மாணிக்கவேல் மீது போலீசார் புகார் அளித்த விவகாரத்தில் தலையிட ஐகோர்ட் மறுத்து விட்டது. ஆவணங்கள் இல்லாமல் இந்த விவகாரத்தில் தலையிட முடியாது எனக்கூறிவிட்டது.
Like Reply
#54
சென்னை அப்போலோவில் இட்லி என்ன விலை? ஜெயலலிதா உணவு பில் பின்னணி

ஜெயலலிதா அப்போலோவில் சிகிச்சை பெற்றதற்கான செலவு விவரங்களை நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் முன்பு வைத்திருக்கிறது அப்போலோ நிர்வாகம்.
[img=500x0]https://image.vikatan.com/news/2018/12/19/images/appo_13439.jpg[/img]
ஜெயலலிதா சிகிச்சையில் இருந்த 75 நாள்களுக்கு ஆன மொத்த செலவு 6 கோடியே 85 லட்சத்து 69 ஆயிரத்து 584 ரூபாய். இதில் உணவு செலவு மட்டும் 1 கோடியே 17 லட்சத்து 4 ஆயிரத்து 925 ரூபாய். ``ஜெயலலிதா போயஸ் கார்டனில் இருந்தால்கூட இவ்வளவு ரூபாய் உணவுக்கு செலவாகியிருக்காது. இது ஜெயலலிதாவுக்கு மட்டும் வழங்கப்பட்ட செலவாக இருக்க வாய்ப்பில்லை. சசிகலா குடும்பத்தினர் அங்கேதான் தங்கியிருந்தார்கள். அமைச்சர்கள், அதிகாரிகள் அடிக்கடி விசிட் அடித்தார்கள். அவர்களுக்கான உணவு, தேநீர் அனைத்தும் இந்தச் செலவில் சேர்க்கப்பட்டிருக்கலாம்” எனவும் சிலர் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். அப்போலோவில் செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்களுக்கும் உணவு வழங்கினார்கள். அந்தச் செலவும் இதில் சேர்க்கப்பட்டதா எனத் தெரியவில்லை. சராசரியாக ஒரு நாளைக்கு மட்டும் 1.56 லட்சம் ரூபாய் உணவுக்காக செலவழித்திருக்கிறார்கள்.


[Image: appo_13439.jpg]


 [img=500x0]https://image.vikatan.com/news/2018/12/19/images/barkath_13189.jpg[/img]
Like Reply
#55
ஜெயலலிதா சிகிச்சையில் இருந்த 75 நாள்களுக்கு ஆன மொத்த செலவு 6 கோடியே 85 லட்சத்து 69 ஆயிரத்து 584 ரூபாய். இதில் உணவு செலவு மட்டும் 1 கோடியே 17 லட்சத்து 4 ஆயிரத்து 925 ரூபாய். ``ஜெயலலிதா போயஸ் கார்டனில் இருந்தால்கூட இவ்வளவு ரூபாய் உணவுக்கு செலவாகியிருக்காது. இது ஜெயலலிதாவுக்கு மட்டும் வழங்கப்பட்ட செலவாக இருக்க வாய்ப்பில்லை. சசிகலா குடும்பத்தினர் அங்கேதான் தங்கியிருந்தார்கள். அமைச்சர்கள், அதிகாரிகள் அடிக்கடி விசிட் அடித்தார்கள். அவர்களுக்கான உணவு, தேநீர் அனைத்தும் இந்தச் செலவில் சேர்க்கப்பட்டிருக்கலாம்” எனவும் சிலர் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். அப்போலோவில் செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்களுக்கும் உணவு வழங்கினார்கள். அந்தச் செலவும் இதில் சேர்க்கப்பட்டதா எனத் தெரியவில்லை. சராசரியாக ஒரு நாளைக்கு மட்டும் 1.56 லட்சம் ரூபாய் உணவுக்காக செலவழித்திருக்கிறார்கள்.


 [Image: barkath_13189.jpg]

அப்போலோவின் உணவு அவ்வளவு விலை உயர்ந்ததா ஐந்து நட்சத்திர ஹோட்டலைவிட கூடுதலாக விலை இருந்தால் மட்டுமே இந்த அளவுக்கு தொகை வந்திருக்கும். உண்மையில் அப்போலோவின் உணவு விலைப்பட்டியல் என்ன என்பதைக் கண்டறிய நேரடியாக அப்போலோவுக்கு விசிட் அடித்தோம். மெயின் பிளாக்கிலும் சிந்தூரி பிளாக்கில் தலா ஒரு ரெஸ்ட்டாரன்ட் அப்போலோவில் உள்ளது. கீழ்த் தளத்தில் இருக்கிற ரெஸ்ட்டாரன்ட்டுக்கு முதலில் போனோம். இது செல்ஃப் சர்வீஸ் ரெஸ்ட்டாரன்ட்டு. டாக்டர்கள் சாப்பிட தனிப் பகுதி உள்ளது. நோயாளிகளின் அட்டன்டர்களும் விசிட்டர்களும் டாக்டர்களும்தான் இங்கே சாப்பிட வருகிறார்கள். சாதாரண ஹோட்டல்களில் கிடைக்கும் அத்தனை உணவும் இங்கே கிடைக்கிறது. நிறைய சாப்பிட்டோம். பார்சலும் வாங்கினோம். சப்பாத்தி 53 ரூபாய். பிளைன் தோசையும் 53 ரூபாய்தான். மினரல் வாட்டர் பாட்டல் 19 ரூபாய். வெஜ் பிரியாணி 105 ரூபாய். டின்னர் தால் 105 ரூபாய். என ஒவ்வொரு உணவுக்கு ஒரு விலை. இதில் ஜி.எஸ்.டி 5 சதவிகிதம் வேறு. இங்கே விலைப்பட்டியல் போர்டு எல்லாம் இல்லை. கேஷியர் பின்னால் இருக்கும் போர்ட்டில் தயாராகிற உணவை வைத்து அவ்வப்போது உணவு பெயரை எழுதிப் போடுகிறார்கள். உணவுப் பெயருடன் விலையும் எழுதி வைக்கிறார்கள்.
Like Reply
#56
[Image: menu_13390.jpg]

``அம்மா இட்லி சாபிட்டார்கள்'' என மூளையின் ஸ்பார்க் அடிக்க.. ``சார் இட்லி என்ன விலை?'' என்றோம். ``மூன்று இட்லி கொண்ட ஒரு பிளேட் 44 ரூபாய்'' என்றார் கேஷியர். ஜூஸ் அயிட்டங்களும் இங்கே விற்கிறார்கள். இந்த ரெஸ்ட்டாரன்டை ஒட்டியே பெரிய கிச்சனும் இருக்கிறது. இதுதவிர இதே மெயின் பிளாக்கில் இன்னோரு இடத்திலும் ரெஸ்ட்டாரன்ட்டும் உள்ளது. இது தவிர சின்ன காபி ஷாப்பும் உண்டு. அடுத்து சிந்தூரி பிளாக்கில் உள்ள ரெஸ்ட்டாரன்ட்டுக்குப் போனோம். அந்த ரெஸ்ட்டாரன்ட்டுக்கு பெயர் Le Bistra. கொஞ்சம் ஸ்டார் ஹோட்டல் ரேஞ்சுக்கு இருக்கிறது அந்த ரெஸ்ட்டாரன்ட். முற்றிலும் ஏஸி வசதி செய்யப்பட்டிருக்கிறது. டேபிளில் உட்கார்ந்தால் ஆர்டர் எடுக்கிறார்கள். இங்கேயும் இட்லியை ருசி பார்த்தோம். அதே மூன்று இட்லி கொண்ட ஒரு பிளேட் 58 ரூபாய். இங்கே விலைப்பட்டியல் உண்டு. அசைவமும் கிடைக்கிறது. இங்கே உள்ள உணவுகளில் மிகக் குறைவாக உள்ள விலையுள்ள உணவு பட்டர் மில்க்தான். விலை 30 ரூபாய். அதிக விலையுள்ள உணவுப் பொருள் கிரில்டு ஃபிஸ் 330 ரூபாய்.
Like Reply
#57
[Image: bill_13560.jpg]

எல்லாம் சரி நோயாளிகளுக்கு உணவு எங்கிருந்து செல்கிறது. நோயாளிகளுக்கு தனியாக கிச்சன் இருக்கிறது. அங்கிருந்துதான் உணவு பெட்டுக்கு எடுத்துச் செல்கிறார்கள். ஜெயலலலிதா அப்போலோவில் பல நாள்கள் சுய நினைவு இல்லாமல் இருந்ததாக சொல்லப்படும் நிலையில், எத்தனை நாள்களுக்கு அவர் உணவு சாப்பிட்டிருப்பார். அப்படி சாப்பிட்ட சில நாள்களுக்கு கோடிகளில் பில் வராது. அப்போலோவில் உள்ள உணவு விலையும் மிகப் பெரிய அளவில் இல்லை. ஆனால், எப்படி கோடிகளில் கட்டணம் வந்தது என்பது அப்போலோவுக்கே வெளிச்சம்
Like Reply
#58
பெண்கள் கிரிக்கெட் அணிக்கு தமிழகத்தைச் சேர்ந்த பயிற்சியாளர் - யார் இந்த டபிள்யூ.வி ராமன்?

இந்திய அணியின் முன்னாள் வீரரான ரமேஷ் பவார், இந்தியப் பெண்கள் அணியின் பயிற்சியாளராக இருந்து வந்தார். கடைசியாக நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி அரையிறுதியில் வெளியேறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. முக்கிய போட்டியில், மூத்த வீராங்கனை மிதாலி ராஜை அணியில் சேர்க்காதது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. இதற்கு இடையில் மிதாலி ராஜ் ரமேஷ் பவார் மீது பல குற்றச்சாட்டுகளை அடுக்கினார். பதிலுக்கு பவாரும் மிதாலி மீது பல குற்றச்சாட்டுகளை பி.சி.சி.ஐ-க்கு கடிதமாக எழுதினா

[Image: bcci_07133.jpg]

கடந்த நவம்பர் மாத இறுதியுடன் பவாரின் பயிற்சியாளர் பதவிக்காலம் முடிவுக்கு வந்த நிலையில், புதிய பயிற்சியாளரை தேர்வு செய்யும் பணியில் பி.சி.சி.ஐ இறங்கியது. ரமேஷ் பவாரே பயிற்சியாளராக நீடிக்க வேண்டும் என இந்தியப் பெண்கள் அணியின் கேப்டன் கவுர் மற்றும் ஸ்மிரிதி மந்தானா ஆகியோர் கோரிக்கை வைத்தனர். ஆனால், அந்தக் கோரிக்கையை பி.சி.சி.ஐ ஏற்கவில்லை.
Like Reply
#59
[Image: pavaar_07393.jpg]

இதைத் தொடர்ந்து இந்தியப் பெண்கள் அணிக்கான பயிற்சியாளருக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு அதன் இறுதிப்பட்டியல் கபில்தேவ், அன்ஷுமன் மற்றும் ஷாந்தா ரங்கசாமி ஆகியோர் அடங்கிய குழுவுக்கு அனுப்பட்டது. இதில் ரமேஷ் பவாரின் பெயரும் இருந்தது. இந்த மூவர் குழு அனைவரிடமும் நேர்முகத்தேர்வு நடத்தி மூன்று பேர் கொண்டப் புதியப் பட்டியலை பி.சி.சி.ஐ-யின் நிர்வாகக் குழுவுக்கு அனுப்பியது.
 
இதில் முதல் இடத்தில் இருந்தவர் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரான கேரி கிரிஸ்டன்தான். இவர் ஐ.பி.எல் தொடரில் பெங்களூரு அணிக்காகச் செய்துள்ள ஒப்பந்தம் காரணமாக, பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருந்த தமிழகத்தைச் சேர்ந்த ராமனுக்கு வாய்ப்பு கிடைத்தது. கேரி கிரிஸ்டன் பெங்களூரு அணிக்குப் பயிற்சியாளராக தொடரவே விருப்பம் தெரிவித்துள்ளார். மூன்றாவது இடத்தில் இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளரான வெங்கடேஷ் பிரசாத் பெயர் இருந்தது குறிப்பிடத்தக்கது. 
Like Reply
#60
[Image: harman_and_mandana_04233_07124.jpg]

இந்தத் தேர்வு தொடர்பாகப் பேசிய அன்ஷுமன்,  ``பட்டியலில் இருந்த அனைவரிடமும் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. அதில் முக்கியமான கேள்விகளாக, ஏன் பெண்கள் அணிக்குப் பயிற்சியாளராக வர விரும்புகிறீர்கள், இந்திய அணியை முன்னெடுத்துச் செல்ல என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள் போன்ற கேள்விகள் கேட்கப்பட்டன. இந்தக் கேள்விகளுக்கான பதிலின் அடிப்படையில் மூன்று பேரை தேர்வு செய்தோம்” என்றார். 
Like Reply




Users browsing this thread: 11 Guest(s)