Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
மழையால் கைவிடப்பட்ட ஆட்டம் ! ஹாட்ரிக் விக்கெட் எடுத்த ஷ்ரேயாஸ் கோபால்
விராட்கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும் ஸ்டீவன் சுமித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான 49-வது லீக் போட்டி நேற்று தொடங்கியது.
இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து பெங்களூரு அணி முதலில் களமிறங்கி பேட்டிங் செய்யவிருந்த நிலையில் மழை காரணமாக ஆட்டம் துவங்குவது காலதாமதம் ஆனது.
இதனிடையே பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் 5 ஓவர் கொண்ட ஆட்டமாக மாற்றப்பட்டது.
பெங்களூரு அணி தரப்பில் தொடக்க ஆட்டக்காரர்களாக விராட் கோலி மற்றும் ஏபி டி வில்லியர்ஸ் களம் இறங்கினர். ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே பெங்களூரு அணி 6 பந்துகளை சந்தித்து 23 ரன்களை எடுத்து தனது ஆட்டத்தை துவக்கியது.
ஆனால் சற்றும் எதிர்பார்காத நிலையில் ஷ்ரேயாஸ் கோபால் பந்து வீச்சில் விராட் கோலி (25), டி வில்லியர்ஸ் (10), மாகர்ஸ் ஸ்டாய்னிஸ் (0) என்ற எண்ணிக்கையில் அடுத்தடுத்து அவுட்டானார்கள். ஷ்ரேயாஸ் கோபால் தனது பந்து வீச்சில் ஹாட்ரிக் விக்கெட்டை வீழ்த்தினார்.
இதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 5 ஓவரில் பெங்களூரு அணி 7 விக்கெட்களை இழந்து 62 ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து 63 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் களம் இறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக சஞ்சு சாம்சன், லிவிங்ஸ்டோன் களம் இறங்கினர். ஆட்டத்தின் முதல் ஓவரில் ராஜஸ்தான் ராயல்ஸ் விக்கெட் இழப்பு ஏதுமின்றி 10 ரன்கள் எடுத்தது.
இதனிடையயே 3.3 ஓவரின் போது மழை மீண்டும் குறுக்கிட்டதால் ஆட்டம் கைவிடப்பட்டதாக நடுவரால் அறிவிக்கப்பட்டது.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
இமய மலையின் அடிவாரத்தில் பனி மனிதனின் கால் தடம்? -ராணுவ வீரர்கள் தகவல்
ஸ்ரீநகர்,
இமயமலையின் பனிமலைப் பகுதியில், ‘யெதி’ என்ற பனி மனிதன் வாழ்ந்ததாக, இமயமலை பகுதிகளில் வசித்த மக்கள் தங்களின் புராணக் கதைகளில் கூறிவந்தனர்.
இங்கிலாந்தைச் சேர்ந்த சிலர் எவரெஸ்ட் பனிமைலைப் பகுதியில் பயணம் மேற்கொண்டனர். இவர்களிடம் ஹென்றி என்ற நிருபர் கடந்த 1921-ம் ஆண்டு பேட்டி எடுத்தார். அவர்கள் பனிமலைப் பகுதியில் பெரிய கால் தடத்தை பார்த்ததாக தெரிவித்தன
1942-ம் ஆண்டு இமயமலையில் பயணம் செய்த இருவர், பனிமலைப் பகுதியில் இரு ராட்ச உருவம் நடந்து சென்றதை பார்த்ததாக கூறினர். அந்த உருவங்கள் 8 அடிக்கு குறைவாகவும், தலை முழுவதும் நீண்ட முடிகளுடனும், மடிந்த காதுகளுடனும், உடலில் செம்பழுப்பு நிறத்திலான முடியும் இருந்ததாக கூறினர்.
கடந்த 1986-ம் ஆண்டு அந்தோணி உல்டிரிட்ஜ் என்ற மலை ஏறும் வீரர், 500 அடி தூரத்தில் யெதியை பார்த்ததாக, போட்டோ ஆதாரத்துடன் கூறினார். அடுத்து அவர் கூறிய இடத்துக்கு ஆராய்ச்சியாளர்கள் சென்று ஆய்வு செய்தபோது, போட்டோவில் உள்ள உருவம் அப்படியே இருந்தது. அது யெதி அல்ல, கரும் பாறை என அவர்கள் கண்டுபிடித்தனர்.
இதேபோல் இமயமலை பகுதியில் பயணம் மேற்கொண்ட பலரும் பனி மனிதன் பற்றி பலவிதமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்தநிலையில் நேபாளத்தில் இமயமலையின் அடிவாரத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ராணுவ வீரர்கள் யெதி எனப்படும் பனி மனிதனின் கால் தடத்தை கண்டதாக தகவல் தெரிவித்துள்ளனர். பனி மனிதன் கால் தடம் மிகப்பெரியதாக இருந்ததாக ராணுவ வீரர்கள் கூறியுள்ளனர். பனி மனிதனின் கால் தடம் ராணுவ வீரர்கள் மத்தியில் ஒருவித வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
கண்ணிமைக்கும் நொடியில் மின்னல் வேக ஸ்டம்பிங்ஸ்.. தோனியின் அசாத்திய விக்கெட் கீப்பிங்
ஐபிஎல் 12வது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், டெல்லி கேபிடள்ஸ் அணியை வீழ்த்தி மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளது சிஎஸ்கே.
நேற்றிரவு சென்னை சேப்பாக்கத்தில் நடந்த போட்டியில் புள்ளி பட்டியலில் முதலிரண்டு இடங்களில் இருந்த டெல்லி கேபிடள்ஸ் மற்றும் சிஎஸ்கே அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய சிஎஸ்கே அணி, ரெய்னாவின் அதிரடி அரைசதம் மற்றும் தோனியின் மிரட்டலான ஃபினிஷிங்கால் 20 ஓவர் முடிவில் 179 ரன்களை குவித்தது.
180 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணியின் பேட்டிங் வரிசையை இம்ரான் தாஹிரும் ஜடேஜாவும் இணைந்து சரித்துவிட்டனர். சிஎஸ்கே ஸ்பின்னர்களின் அபாரமான பவுலிங் மற்றும் தோனியின் அசத்தலான விக்கெட் கீப்பிங்கால் டெல்லி அணி வெறும் 99 ரன்களுக்கே சுருண்டது. இதையடுத்து 80 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற சிஎஸ்கே, புள்ளி பட்டியலில் மீண்டும் முதலிடத்தை பிடித்தது.
180 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய டெல்லி அணியின் விக்கெட்டுகள் ஒருமுனையில் சரிந்தாலும் மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய ஷ்ரேயாஸ் ஐயர் அரைசதத்தை நெருங்கினார். 83 ரன்களுக்கே டெல்லி அணி 6 விக்கெட்டுகளை இழந்துவிட்ட நிலையில், ஷ்ரேயாஸ் ஐயருடன் கிறிஸ் மோரிஸ் ஜோடி சேர்ந்தார். எனினும் கிறிஸ் மோரிஸ் களத்திற்கு வந்த முதல் பந்திலேயே தோனியின் அபாரமான ஸ்டம்பிங்கால் ஆட்டமிழந்தார்.
ஜடேஜா வீசிய 12வது ஓவரின் நான்காவது பந்தை எதிர்கொண்ட மோரிஸ், பந்தை அடிக்க முயலும்போது பேலன்ஸ் மிஸ்ஸாகி காலை சற்று தூக்கிவிட்டு கீழேவைத்தார். ஆனால் அவரது கால் கிரீஸை விட்டு வெளியே வரவில்லை. கிரீஸுக்குள்ளேயே தான் இருந்தது. எனினும் பேலன்ஸ் மிஸ்ஸாகி தூக்கிவிட்டு மீண்டும் வைக்கும் இடைவெளியில் கண்ணிமைக்கும் நொடியில் ஸ்டம்பிங் செய்தார் தோனி. இதையடுத்து மோரிஸ் கோல்டன் டக்காகி வெளியேற, அந்த ஓவரின் கடைசி பந்தில் மோரிஸ் அவுட்டானதை போலவே ஷ்ரேயாஸ் ஐயரும் அவுட்டானார். ஷ்ரேயாஸும் காலை தூக்கி வைக்கும் நொடிப்பொழுதில் ஸ்டம்பிங் செய்து மிரட்டினார் தோனி. அந்த வீடியோ இதோ..
ஷ்ரேயாஸ் ஐயர் களத்தில் நிற்கும்வரை டெல்லி அணிக்கு நம்பிக்கை இருந்தது. அந்த நம்பிக்கையையும் 12வது ஓவரிலேயே சிதைத்து சிஎஸ்கே அணியின் அபார வெற்றியை உறுதி செய்தார் தோனி. அதன்பின்னர் அந்த அணி அடுத்த 2 விக்கெட்டுகளையும் விரைவில் இழந்துவிட சிஎஸ்கே 80 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணி சஸ்பெண்ட் செய்யப்படுகிறதா?- நெஸ்வாடியா கைதால் சிக்கல்: ஐபிஎல் விதிமுறைகள் சொல்வது என்ன?
படம் உதவி: ஐபிஎல்
கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான நெஸ் வாடியா போதை மருந்து வைத்திருந்ததாகக் கூறி, ஜப்பான் நீதிமன்றம் அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியதால், பஞ்சாப் அணி சஸ்பெண்டை எதிர்நோக்கி உள்ளது
பாம்பே டையிங், பிரிட்டானியா பிஸ்கட் உள்ளிட்ட பல்துறை சார்ந்த தொழில்களை வாடியா குடும்பத்தினர் செய்து வருகின்றனர். இதன் தலைவரான நுஸ்லி வாடியாவின் மகன் நெஸ் வாடியா (வயது 47). ஐபிஎல் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உரிமையாளர்களில் ஒருவராகவும் நெஸ் வாடியா இருந்து வருகிறார்.
இந்தநிலையில், கடந்த மாதம் விடுமுறையைக் கொண்டாட ஜப்பான் சென்ற நெஸ் வாடியா போதைப் பொருள் வைத்திருந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார். அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பதாக ஜப்பான் நீதிமன்றம் அறிவித்தது.
விதிமுறைகள்
ஐபிஎல் விதிமுறைகளின்படி, அணிகளின் உரிமையாளர்கள், நிர்வாகிகள், அதிகாரிகள் யாரும் அணிக்கும், தொடருக்கும், பிசிசிஐ அமைப்புக்கும், அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் வெளி உலகில் செயல்படக்கூடாது. அவ்வாறு செயல்பட்டால், அந்த நிர்வாகிகள் சம்பந்தப்பட்ட அணி, சஸ்பெண்டை எதிர்நோக்க வேண்டியது இருக்கும்.
இதற்கு உதாரணமாக, சிஎஸ்கே அணி,ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் நிர்வாகிகளான குருநாத் மெய்யப்பன், ராஜ்குந்த்ரா ஆகியோர் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக புகார் எழுந்து, அது நிரூபிக்கப்பட்டது. இதனால், சிஎஸ்கே அணிக்கு 2 ஆண்டுகள் விளையாட தடை விதிக்கப்பட்டதைக் குறிப்பிடலாம். அதுபோல் கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணிக்கும் தடை விதிக்கப்படலாம் எனத் தெரிகிறது.
ஐபிஎல் விதிமுறைகளின்படி, இந்த விவகாரம் முதலில் விசாரணை ஆணையத்துக்கு அனுப்பப்படும். அதன்பின் பிசிசிஐ குறைதீர்ப்பு அதிகாரிக்கு அனுப்பி வைக்கப்பட்டு முடிவு செய்யப்படும்.
இது குறித்து பிசிசிஐ முக்கிய அதிகாரி ஒருவர் கூறுகையில், "சிஎஸ்கே அணியின் நிர்வாகிகள் தவறு செய்ததால், அந்த அணிக்கு என்ன கதி நேர்ந்ததோ அதே போன்றுதான் கிங்ஸ்லெவன் அணிக்கும் ஏற்பட வாய்ப்புள்ளது. நெஸ் வாடியாவுக்கு விதிக்கப்பட்ட தண்டனையால், கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணி தடையையோ அல்லது சஸ்பெண்டையோ எதிர்நோக்கி இருக்கிறது.
சிஎஸ்கே அணியின் நிர்வாகிகள் சூதாட்டத்தில் ஈடுபட்டதால், அந்த அணிக்கு 2 ஆண்டுகள் தடை விதித்து நீதிபதி லோதா குழு தண்டனை விதித்தது. அதுபோல, அணியின் உரிமையாளர் அல்லது நிர்வாகி போதை மருந்து வழக்கில் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டுள்ளது, அவர் கிரிக்கெட் வாரிய அதிகாரியாக பதவியில் இருந்தால், இந்த தண்டனை அறிவிக்கப்பட்டவுடனே அவர் பதவியை இழந்துவிடுவார் " எனத் தெரிவித்தார்.
விதிமுறை சொல்வது என்ன?
ஐபிஎல் செயல்பாட்டு விதிகளின்படி, பிரிவு 14, உட்பிரிவு 2-ன்படி, அணியோடு தொடர்புடைய அதிகாரிகள், நிர்வாகிகள், வீரர்கள், பிசிசிஐ அதிகாரிகள் ஆகியோர் வெளிஉலகிலோ அல்லது மைதானத்திலோ அணிக்கோ அல்லது விளையாட்டுக்கோ அல்லது பிசிசிஐ அமைப்புக்கோ களங்கம் விளைவிக்கும் செயல்படுவது குற்றமாகும். அவ்வாறு செயல்பட்டால், ஆணையம் மற்றும் குறைதீர்ப்பு அதிகாரிகள் அந்த அணியை, அணி நிர்வாகிகளை சஸ்பெண்ட் செய்ய அதிகாரம் உண்டு எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
நடிகரை வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்த நடிகைகள் கைது
மராத்தி பட நடிகர் சுபாஷ் யாதவ்(28) என்பவரும் ரோகினி மானே என்கிற நடிகையும் படப்பிடிப்பு தளத்தில் சந்தித்துள்ளனர். யாதவுக்கு ரோகினியை பிடித்துவிட்டது. ஆனால் ரோகினிக்கு யாதவை பிடிக்கவில்லை.
இந்த காரணத்தால் ரோகினி யாதவிடம் இருந்து தள்ளித் தள்ளி சென்றுள்ளார்.
சுபாஷ் யாதவ் தனக்கு பாலியல் தொல்லை அளிப்பதாக ரோகினி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரை திரும்பப் பெறுமாறு கூறி சுபாஷ் யாதவ் தன்னை மிரட்டுவதாகவும், அடித்ததாகவும் ரோகினி மீண்டும் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
சமூக வலைதளத்தில் சுபாஷ் தன்னை அசிங்கப்படுத்துவதாக ரோகினி போலீசாரிடம் தெரிவித்தார். அதன் பிறகு மராத்தி திரையுலகினர் இந்த விஷயத்தில் தலையிடவே சுபாஷ் ரோகினியடம் மன்னிப்பு கேட்டார்.
ரோகினி தனது தோழியான நடிகை சாராவுடன் சேர்ந்து சுபாஷை ஒரு இடத்தில் சந்தித்து புகாரை வாபஸ் பெற ரூ. 15 லட்சம் தர வேண்டும் என்று கூறி மிரட்டியுள்ளார். மன்னிப்பு கேட்கவில்லை என்றால் குடும்ப மானத்தை கப்பல் ஏற்றிவிடுவோம் என்று அந்த நடிகைகள் சுபாஷை மிரட்டியுள்ளனர்.
சுபாஷின் இமேஜை டேமேஜ் செய்யும் வகையில் சில வீடியோக்களை அந்த நடிகைகள் எடுத்துள்ளனர். நடிகைகள் மிரட்டிய பிறகு சுபாஷ் ரூ. 1 லட்சம் மட்டும் கொடுத்துவிட்டு மீத பணத்தை தர மறுத்துள்ளார்.
நடிகைகள் ரோகினி, சாரா, போலீஸ் அதிகாரி அமோல் விஷ்ணு தகலே மற்றும் ராம் ஜக்டலே ஆகியோர் தன்னை மிரட்டுவதாக சுபாஷ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவரின் புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் நடிகைகளை கைது செய்துள்ளனர்.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
குஜராத் உருளைக் கிழங்கு விவசாயிகளுக்கு எதிரான வழக்கை பெப்ஸி திடீர் வாபஸ்
அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து குஜராத் உருளைக்கிழங்கு விவசாயிகளுக்கு எதிராகத் தொடர்ந்த நீதிமன்ற வழக்கை வாபஸ் பெற ஒப்புக் கொண்டதாக பெப்ஸி நிறுவன இந்தியச் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
லேஸ் சிப்ஸ் உருளைக்கிழங்கு வகையைப் பயிர் செய்து விற்றதற்காக குஜராத்தைச் சேர்ந்த 4 விவசாயிகள் மீது ரூ.4.2 கோடி நஷ்ட ஈடு கேட்டு பன்னாட்டு நிறுவனமான பெப்ஸி நிறுவனம் வழக்குத் தொடர்ந்தது.
முன்னதாக லேஸ் சிப்ஸ் வெரைட்டி உருளைக்கிழங்கு விதைகளுக்கு அறிவுசார் சொத்துரிமை தங்கள் நிறுவனத்துக்கு இருப்பதால் அதைப் பயிர்செய்து விளைவிப்பதன் மூலம் நிறுவன உரிமைகளை விவசாயிகள் மீறிவிட்டதாகவும் இதற்கு நஷ்ட ஈடாக ரூ.4.2 கோடி அளிக்க வேண்டுமென்றும் பன்னாட்டு அமெரிக்க நிறுவனமான பெப்ஸி நிறுவனம் சார்பில் வழக்குத் தொடரப்பட்டது.
இதற்கு நாடு முழுதும் பலதரப்புகளிலிருந்தும் எதிர்ப்பு கிளம்பியது. இது தொடர்பாக விவசாயிகள் மற்றும் பெப்ஸி நிறுவனம் ஆகியவற்றுக்கிடையேயான சட்டப் போராட்டத்தில் விவசாயிகள் பக்கம் நிற்கப்போவதாக குஜராத் மாநில அரசு அறிவித்தது.
குஜராத் விவசாயிகள் 1.21 லட்ச ஹெக்டேர்களில் 33 லட்சம் டன்கள் உருளைக்கிழங்குகளை உற்பத்தி செய்கின்றனர். சமீபத்தில் உ.பி.மாநில ஆக்ராவின் உருளை உற்பத்தியை விஞ்சி பனஸ்கந்தா உருளை உற்பத்தியில் இந்தியாவிலேயே சாதனை படைத்துள்ளது.
நாடு முழுதும் பெப்ஸி பொருட்களைப் புறக்கணிப்போம் என்று உலக அளவில் சமூகவலைத்தளங்களில் கோஷங்கள் முற்றுகையிட நீதிமன்றத்துக்கு வெளியே செட்டில் செய்து கொள்வதாக பெப்ஸி முன்வந்துள்ளது. இந்த வழக்கு ஜூன் 12ம் தேதி அகமாதாபாத் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருவதாக இருந்தது.
இந்த விவகாரத்தில் விவசாயிகளின் சட்டச் செலவுகளை மத்திய அரசு ஏற்க வேண்டும் என்று விவசாயிகள் தரப்பில் முன் வைக்கப்பட்டது.
இந்நிலையில் வழக்கை வாபஸ் பெறுவதாக பெப்ஸி நிறுவனம் அறிவித்துள்ளது
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
உங்கள் மகன், மருமகனின் சொத்துக் கணக்குகளை சொல்ல இயலுமா?- உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு சவால் விடுக்கும் குஜராத் வழக்கறிஞர்
பெண் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டு கூறியதால் சர்ச்சையில் சிக்கிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு தற்போது மேலும் ஒரு நெருக்கடி எழுந்துள்ளது.
உங்கள் மகன், மருமகனின் சொத்துக் கணக்குகளை சொல்ல இயலுமா? என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு சவால் விடுத்திருக்கிறார் குஜராத் வழக்கறிஞர் சங்கத் தலைவர் யடின் ஓஜா.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மீது அண்மையில் பெண் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டு கூறியதாக ஆன்லைன் ஊடகம் ஒன்றில் செய்தி வெளியாக அது தொடர்பான புகாரை ரஞ்சன் கோகோய் அடங்கிய அமர்வே அவசர வழக்காக விசாரித்தது. வழக்கில் உத்தரவு ஏதும் பிறப்பிக்கப்படவில்லை. இருப்பினும் இந்த வழக்கு மிகவும் அரிதான வழக்காகப் பார்க்கப்பட்டது.
இந்நிலையில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்க்கு குஜராத் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் யடின் ஓஜா ஒரு கேள்வி எழுப்பியிருக்கிறார்.
தலைமை நீதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில், "உங்கள் மகன் மட்டும் மருமகனின் வருவாய் பல கோடிகளைக் கடந்துள்ளது. அதன் விவரத்தை உங்களால் வெளிப்படையாக அறிவிக்க இயலுமா? வெகு குறைவான காலகட்டத்தில் இவ்வளவு பெரிய தொகையை சம்பாதித்த வழக்கறிஞர்களைப் பார்த்திருக்க முடியாது. ஏன் உச்ச நீதிமன்றத்தில் இன்றைய தேதியில் மிகப்பெரிய வழக்கறிஞர்கூட இவ்வளவு சம்பாதிக்க இயலாது" எனக் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் ரஞ்சன் கோகோய் எனது வங்கிக் கணக்கில் வெறும் 6 லட்சத்து 80 ஆயிரம் மட்டுமே இருக்கிறது எனக் கூறியிருந்தார். இந்நிலையில்தான் குஜராத் வழக்கறிஞர் சங்கத் தலைவர் இவ்வாறு ஒரு கடிதத்தை அனுப்பியுள்ளார்.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
பெங்களூருவில் இருந்து சென்னை வருகிறது; ரூ.1 லட்சத்துக்கு ரூ.10 லட்சம் கள்ளநோட்டு: போலீஸார் விசாரணையில் அதிர்ச்சி தகவல்
பெங்களூருவில் இருந்து சென்னைக்கு ரூ.1 லட்சம் கொடுத்தால் ரூ.10 லட்சம் கள்ள ரூபாய் நோட்டுகள் கொண்டு வரப்படுவதாக போலீஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சென்னை வடபழனியில் கள்ளநோட்டு விவகாரத்தில் கால்டாக்சி ஓட்டுநரான மோகன்ராஜ் என்பவரை கடந்த 26-ம் தேதி போலீஸார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 2 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள இரண்டாயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யபட்டன. 50 ஆயிரம் ரூபாய் கொடுத்தால் அதற்குப் பதில் 2 லட்சம் ரூபாய் கொடுப்பதாகக் கூறி இவர் ஏமாற்றியது தெரியவந்தது. கள்ளநோட்டுகள் என எளிதில்கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு அவை அச்சடிக்கப்பட்டிருந்தன.
சினிமா கலைஞருக்கு தொடர்புமோகன்ராஜிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல தகவல்கள் வெளிவந்துள்ளன. பெங்களூருவில் இருந்து சென்னைக்கு கள்ள நோட்டுகள் வருவதாகவும் 1 லட்சம் ரூபாய்க்கு 10 லட்சம் ரூபாய் வரை கள்ள நோட்டுகள் விற்கப்படுவதாகவும் மோகன்ராஜ் தெரிவித்து இருக்கிறார். இந்த விவகாரத்தில் திரைப்பட சண்டைப் பயிற்சியாளரான சுரேஷ் என்பவருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து சுரேஷை தேடிவரும் போலீஸார், ஸ்டண்ட் யூனியன் நிர்வாகிகளிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில் இந்த விவகாரத்தில் சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட முக்கிய நபர்களுக்கு தொடர்பு இருக்கக் கூடும் என்று சந்தேகிக்கப்படுவதால், வழக்கின் முக்கியத்துவம் கருதி இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற போலீஸார் திட்டமிட்டுள்ளனர். திருச்சியிலும்...
திருச்சி திருவானைக்காவலில் உள்ள எஸ்பிஐ வங்கிக் கிளையின் சிடிஎம் இயந்திரத்தில் கள்ள நோட்டுகளை செலுத்திய நபர்களை கண்டுபிடிக்குமாறு மாநகர குற்றப்பிரிவில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
திருவானைக்காவலில் உள்ள இவ்வங்கியின் கிளையில் உள்ள பணம் செலுத்தும் இயந்திரத்தில் (சிடிஎம்)கடந்த 29.8.2018-ல் செலுத்தப்பட்டிருந்த ரூபாய் நோட்டுகளை வங்கி அதிகாரிகள் சரிபார்த்தனர். அப்போது, அதில் ரூ.6.500 மதிப்பிலான 500 ரூபாய் கள்ள நோட்டுகள் 13 இருந்தன.
குற்றப்பிரிவு போலீஸ் விசாரணைஇதை டெபாசிட் செய்தவர்கள் குறித்த விவரத்தை கண்டறிய முடியாததால், வங்கியின் மேலாளர் விஜயகுரு, இதுகுறித்து திருச்சி மாநகர குற்றப்பிரிவில் நேற்று முன்தினம் புகார் கொடுத்தார். அதன்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸார், சிடிஎம் இயந்திரத்தில் கள்ள நோட்டுகளைச் செலுத்திய நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர். மேலும் வங்கியில் உள்ள சிசிடிவி.யை ஆய்வு செய்து வருகின்றனர்.
அண்மையில் திருச்சி கே.கே.நகரில் கள்ள நோட்டு தயாரித்தபோது சிக்கிய கும்பலுக்கும், இதற்கும் தொடர்புள்ளதா என்பது குறித்தும் போலீஸார்
விசாரிக்கின்றனர்.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
ப்ளேஆஃப் சுற்றில் மும்பை: சூப்பர் ஓவரில் சன்ரைசர்ஸ் தோல்வி: திக், திக் கடைசி 3 ஓவர்கள்
12-வது ஐபிஎல் டி20 போட்டியின் ப்ளே-ஆஃப் சுற்றுக்கு மூன்றாவது அணியாக மும்பை இந்தியன்ஸ் அணி முன்னேறியது.
மும்பை வான்ஹடே மைதானத்தில் நேற்று நடந்த 51-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணியை சூப்பர் ஓவரில் வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ் அணி.
இதன் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 13 ஆட்டங்களில் 8 வெற்றிகள், 5 தோல்விகள் என மொத்தம் 16 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் ப்ளே-ஆஃப் சுற்றை உறுதி செய்தது. அதேசமயம், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 13 ஆட்டங்களில் 6 வெற்றிகள், 7 தோல்விகள் என மொத்தம் 12 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் உள்ளது.
சூப்பர் ஓவரில் மும்பை இந்தியன்ஸ் அணியை வெற்றி பெற வைத்த ஹர்திக் பாண்டியாவை கட்டி அணைத்து பாராட்டும் குர்னல் பாண்டியா : படம் உதவி ஐபிஎல்
ப்ளே-ஆஃப் சுற்றுக்கு ஏறக்குறைய 3 அணிகள் தயாராகிவிட்ட நிலையில் இன்னும் ஒரு இடத்துக்கு 3 அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவிவருகிறது. கேகேஆர், சன்ரைசர்ஸ், கிங்ஸ்லெவன் பஞ்சாப் ஆகிய அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்த வாரத்தின் இறுதியில் முடிவு தெரிந்துவிடும்.
முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் சேர்த்தது. 163 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் சேர்த்ததால் ஆட்டம் டை ஆனது.
சூப்பர் ஓவர்
சூப்பர் ஓவரில் சிக்ஸர் அடித்த முகமது நபி: படம் உதவி ஐபிஎல்
இதையடுத்து முடிவு அறிய சூப்பர் ஓவர் நடத்தப்பட்டது. சூப்பர் ஓவரில் சன்ரைசர்ஸ் அணி தரப்பில் மணிஷ் பாண்டே, முகமது நபி களமிறங்கினர். முதல் பந்திலேயே பும்ரா பந்துவீ்ச்சில் மணிஷ் பாண்டே ரன் அவுட் ஆகினார்.
அடுத்து வந்த கப்தில் ஒரு ரன் சேர்த்தார். 3-பந்தில் முகமது நபி சிக்ஸர் விளாசினார். 4-வது பந்தில் நபி போல்டாகியதால் சூப்பர் ஓவர் முடிக்கப்பட்டது. சூப்பர் ஓவரில் 2 விக்கெட்டுகளை இழந்துவிட்டால் அந்த அணிக்கு வாய்ப்பு முடிந்துவிடும். சன்ரைசர்ஸ் அணி 2 விக்கெட்டு இழப்புக்கு 8 ரன்கள் சேர்த்தது.
9 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஹர்திக் பாண்டியா, பொலார்ட் களமிறங்கினர். ரஷித் கான் வீசிய முதல் பந்திலேயே ஹர்திக் பாண்டியா சிக்ஸர் விளாசினர். அடுத்த பந்தில் பாண்டியா ஒரு ரன் எடுக்க 3-வது பந்தில் பொலார்ட் 2 ரன்கள் சேர்த்து 3 பந்துகள் மீதம் இருக்கையில் வெற்றி தேடித்தந்தனர்.
பும்ரா, ஹர்திக் முத்திரை
பந்துவீச்சில் முத்திரை பதித்த பும்ரா : படம் உதவி ஐபிஎல்
இந்த ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் குயின்டன் டீ காக் 69 ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இவரின் பேட்டிங் அணியின் ஸ்கோர் உயர்வுக்கு முக்கியக் காரணமாக அமைந்து.
குறிப்பாக பந்துவீச்சில் ஜஸ்பரித் பும்ரா, குர்னல் பாண்டியா, ராகுல் சாஹர் ஆகியோர் பந்துவீச்சு சன்ரைசர்ஸ் அணிக்கு பெரும் நெருக்கடியை கொடுத்தது. இவர்களின் பந்துவீச்சை எதிர்கொண்டு ரன்களைச் சேர்க்க சன்ரைசர்ஸ் பேட்ஸ்மேன்கள் மிகுந்த சிரமப்பட்டனர்.
சூப்பர் ஓவரில் பும்ராவின் துல்லியமான பந்துவீச்சும், முகமது நபியின் விக்கெட்டை வீழ்த்தி நிலைகுலையச் செய்ததும் முத்தாய்ப்பாகும். உலகக் கோப்பைப் போட்டியில் பும்ராவின் பந்துவீச்சு சர்வதேச அளவில் பேசப்படும், அச்சுறுத்தலாக இருக்கும் என்பதில் மாற்றமில்லை. ஆட்டநாயகன் விருதையும் பும்ரா பெற்றார்.
அதேபோல, ஹர்திக் பாண்டியா சூப்பர் ஓவரில் அனாசயமாக ஒருசிக்ஸர் அடித்து அனைவரின் டென்ஷனைக் குறைத்தார். இந்த சீசன் முழுவதும் ஹர்திக் பாண்டியா பேட்டிங், பந்துவீச்சு ஆகியவற்றில் ஆல்ரவுண்டர் என்பதில் முத்திரை பதித்து வருகிறார். இதேபோல உலகக் கோப்பையிலும் விளங்கினால் சிறப்பாக இருக்கும்.
விக்கெட் வீழ்த்திய கலீல் அகமதுவை பாராட்டிய வில்லியம்ஸன் : படம் உதவி ஐபிஎல்
வார்னர் வெற்றிடம்
சன்ரைசர்ஸ் அணியில் வார்னர் இல்லாத வெற்றிடம் நேற்று நன்றாகத் தெரிந்தது. வார்னருக்கு பதிலாக வந்த கப்தில் ஏமாற்றினார், வில்லியம்ஸன் இந்த சீசன் முழுவதும் சரியாக விளையாடவில்லை அது நேற்றும் தொடர்ந்தது.
மணிஷ் பாண்டே அபாரம்
ஆனால், தனிமனிதராக மணிஷ்பாண்டே நின்று அணியை கடைசி வரை வழிநடத்திச் சென்றது சிறப்பு. 47 பந்துகளில் 71 ரன்கள் சேர்த்து மணிஷ் பாண்டே இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில் 2 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகள் அடங்கும்.
163 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் சன்ரைசர்ஸ் அணி களமிறங்கியது. சாஹா, கப்தில் களமிறங்கினர். இருவருமே பவர்ப்ளே ஓவருக்குள் ஆட்டமிழந்தனர். கப்தில் 15 ரன்களிலும், சாஹா 25 ரன்களிலும் வெளியேறினர். பவர்ப்ளேயில் சன்ரைசர்ஸ் 2 விக்கெட் இழப்புக்கு 59 ரன்கள் சேர்த்தது. 10 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 80 ரன்கள் சேர்த்திருந்தது.
மணிஷ்பாண்டே மட்டும் ஒருபுறம் நிதானமாக பேட் செய்துவர மற்றொரு பக்கம் களமிறங்கிய கேப்டன் வில்லியம்ஸன் 3 ரன்கள், விஜய் சங்கர் 12 ரன்கள், அபிஷேக் சர்மா 12 ரன்களில் ஆட்டமிழந்து நெருக்கடி கொடுத்தனர்.
தேறுவாரா விஜய் சங்கர்?
உலகக் கோப்பைப் போட்டிக்கு ஆல்ரவுண்டர் என்ற அடிப்படையில் இந்திய அணிக்கு விஜய் சங்கர் தேர்வாகியுள்ளார். ஆனால், இந்த சீசனில் ஒருபோட்டியில் கூட விஜய் சங்கர் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு பேட்டிங் செய்யவில்லை, பந்துவீசவும் இல்லை. உலகக் கோப்பைப் போட்டியில் ராயுடு கூறியதைப் போல் முப்பரிமானக் கண்ணாடியை வாங்க வைத்துவிடக்கூடாது.
கடைசி 3 ஓவர்கள்
கடைசிவரை போராடிய மணிஷ் பாண்டே: படம் உதவி ஐபிஎல்
முகமது நபி, மணிஷ் பாண்டே கூட்டணி 6-வது விக்கெட்டுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் பேட் செய்து ஸ்கோரை உயர்த்தினர். மணிஷ் பாண்டே 37 பந்துகளில் அரைசதம் அடித்தார். கடைசி 3 ஓவர்களில் வெற்றிக்கு 41 ரன்கள் தேவைப்பட்டது.
மலிங்கா வீசிய 18-வது முகமது நபி சிக்ஸர், பவுண்டரி உள்பட 12 ரன்கள் சேர்த்தார். பும்ரா வீசிய 19-வது ஓவரில் 2 பவுண்டரிகள் உள்பட 12 ரன்களை மணிஷ் பாண்டே சேர்த்தார்.
6 பந்துகளுக்கு 17 ரன்கள்
கடைசி ஓவரில் வெற்றிக்கு 17 ரன்கள் தேவைப்பட்டது.கடைசி ஓவரை ஹர்திக் பாண்டியா வீசினார்.முதல் இரு பந்துகளில் நபி ஒரு ரன்னும், 2-வந்து பாண்டே ஒரு ரன்னும் எடுத்னர். 3-வது பந்தில் முகமது நபி ஒரு சிக்ஸர் பறக்கவிட்டார். 4-வது பந்தில் யாதவிடம் கேட்ச் கொடுத்து 31 ரன்களில் ஆட்டமிழந்தார். 5-வது பந்தில் பாண்டே 2 ரன்கள் சேர்த்து, கடைசிப் பந்தில் லாங்-ஆன் திசையில் சிக்ஸர் அடிக்க ஆட்டம் டையில் முடிந்தது.
மணிஷ் பாண்டே 71 ரன்களிலும், ரஷித் கான் ரன் ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர். 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் சேர்த்தது சன்ரைசர்ஸ் அணி.
மும்பை தரப்பில் பும்ரா, பாண்டயா பிரதர்ஸ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
டீ காக் ஆறுதல்
அரைசதம்அடித்த டீகாக் : படம் உதவி ஐபிஎல்
டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங் செய்தது.. அணியில் குயின்டன் டீகாக் தவிர மற்ற வீரர்கள் யாரும் குறிப்பிடத்தகுந்த அளவு பேட்டிங் செய்யவில்லை
அதிரடியாக தொடங்கிய ரோஹித் சர்மா 5 பவுண்டரிகள் உள்பட 24 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். பவர்ப்ளேயில் மும்பை அணி ஒருவிக்கெட் இழப்புக்கு 44 ரன்கள் சேர்த்தது.
2-வது விக்கெட்டுக்கு சூரியகுமார், டீகாக் கூட்டணி அணியை ஓரளவுக்கு இழுத்துவந்தனர். கலீல் அகமது பந்துவீச்சில் 23 ரன்கள் சேர்த்த நிலையில் சூரியகுமார் யாதவ் ஆட்டமிழந்தார். 2-வது விக்கெட்டுக்கு 54 ரன்கள் சேர்த்தனர்.
அடுத்து களமிறங்கிய லூயிஸ் ஒரு ரன்னில் வெளியேறினார். ஹர்திக் பாண்டியா, 18 ரன்னிலும், பொலார்ட் 10ரன்னிலும் ஆட்டமிழந்தனர். நிதானமாக ஆடிய டீகாக் 48 பந்துகளில் அரைசதம் அடித்தார்.டீகாக் 69 ரன்களிலும், குர்னல் பாண்டியா 9 ரன்னிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
கோடை வெயிலில் இருந்து தப்பிக்க கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்...
கொடைக்கானலில் தங்குவதற்கு அறைகள் கிடைக்காததால், சுற்றுலாப் பயணிகள் தவித்து வருகின்றனர்.
கோடை விடுமுறையை கொண்டாடுவதற்காக, கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனர். இந்த நிலையில், பெரும்பாலான தங்கும் விடுதிகள் மூடிக்கிடக்கின்றன. இதனால், இரவில் தங்குவதற்கு அறைகள் கிடைக்காமல் பயணிகள் தவித்து வருகின்றனர். பெரும்பாலானோர், தங்களது வாகனங்களிலேயே இரவு நேரத்தில் படுத்து உறங்குகின்றனர்.
இதுதொடர்பான, புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன. இதனிடையே, மேற்கூரை இல்லாத தற்காலிக குடில்கள் அமைத்து, தங்கும் விடுதி உரிமையாளர்கள் மோசடியில் ஈடுபடுவதாகவும் சுற்றுலாப் பயணிகள் வேதனை தெரிவிக்கின்றனர்
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய கொடூரன்!
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே 13 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டு, கர்ப்பமாக்கிய நபரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
குடியாத்தம் சித்தூர்கேட் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரின் 13 வயது சிறுமி, வீட்டில் தனியாக இருந்த போது, உறவினர் இலியாஸ் என்பவர் ஆபாச படங்களை காட்டி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர், இதுகுறித்து வெளியே சொன்னால், அப்பா அம்மாவை கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டியுள்ளார். சில மாதங்கள் கழித்து, சிறுமி கர்ப்பமாகியுள்ளார். இது, சிறுமியின் பெற்றோருக்கு தெரியவந்து, பின்னர் சிறுமியிடம் விசாரித்தபோது தன் உறவினரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக கூறியுள்ளார்.
இதனைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனைத்தொடர்ந்து, இலியாஸை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
இஸ்லாமியர்களுக்கு வட்டி இல்லா கடன்.. நகைகளை அடகு வைக்க வைத்து ஏமாற்றிய தி.நகர் நகைக்கடை
சென்னை: நகைகளை அடகு வைத்தால் வட்டியில்லாத கடன் தருவதாக கூறி இஸ்லாமியர்களிடம் நகைகளை மோசடி செய்ததாக தியாகராயர் நகரில் இயங்கி வந்த ரூபி நகைக்கடை மீது புகார் எழுந்துள்ளது,
சென்னை தியாகராய நகரில் ரூபி என்ற நகைக்கடை இயங்கி வருகிறது. இங்கு அணீஸ் என்பவர், நகைகளை அடகுவைத்தால் இஸ்லாமியர்களுக்கு வட்டியில்லாத கடன் தருவதாக நகைகளை அடகு வைக்க வைத்துள்ளார்.
இதை நம்பி 200க்கும் மேற்பட்டோர் ரூபி நகைக்கடையில் ஏராளமானோர் தங்களது நகைகளை அடகு வைத்திருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் திடீரென ரூபி நகை அடகுக்கடை மூடப்பட்டதால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதபற்றி விசாரித்ததில் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்தார்கள்.
இதனால் 200க்கும் மேற்பட்டோர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தங்கள் நகைகளை ஏமாற்றிவிட்டு தப்பிய அணீஸ் என்பவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், நகைகளை திருப்பி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
இதனால் சென்னை காவல் ஆணையர் அலுவலகம் இன்று மாலை பரபரப்பாக காணப்பட்டது.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
போனி புயல் : ஆந்திராவில் ஏற்பட்ட பாதிப்பு
அமராவதி : போனி புயல் ஒடிசாவை கரையை கடந்த நிலையில், ஆந்திராவின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால், மனித உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை. 9 கால்நடைகள், 12 ஆடுகள் மழை தொடர்பான சம்பவங்களில் உயிரிழந்துள்ளன. சூறாவளி காற்றால், 2,129 மின்கம்பங்கள் சாய்ந்துள்ளன. 218 மொபைல் போன் கோபுரங்கள் சேதமடைந்துள்ளன. அங்கு போர்க்கால அடிப்படையில் மின்கம்பங்களை நட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
போனி புயல், ஒடிசாவின் புரி நகரை காலை 8 மணியளவில் கரையை கடக்க துவங்கியது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒடிசாவின் 11 கடலோர மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் வசித்த 11 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். இதனால், பாதிப்பு ஏற்படவில்லை. புயல் நகர்வை, ஆந்திர அரசின் ரியல் டைம் கவர்னன்ஸ் சென்டர்(ஆர்டிஜிசி) 24 மணி நேரமும் கண்காணித்து ஒடிசா அரசிற்கு தகவல்களை அளித்து வந்தது. இதற்காக, ஒடிசா அதிகாரிகள் அந்த அமைப்பிற்கு நன்றி தெரிவித்து கொண்டனர்.
நடத்தை விதிகள் தளர்வு
போனி புயல் காரணமாக ஆந்திராவின் ஸ்ரீகாகுளம், விஜியநகரம், விசாகப்பட்டினம், கிழக்கு கோதாவரி மாவட்டங்களில், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க தேர்தல் நடத்தை விதிகளை தேர்தல் ஆணையம் தளர்த்தியது. ஒடிசாவில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், பகுடா, வம்சதாரா நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படலாம் என்பதால், அதனை ஒட்டிய ஆந்திர பகுதிகளில் அதிகாரிகள் உஷாராக இருக்கும்படி எச்சரிக்கப்பட்டுள்ளது.
பாதிப்பு
புயலின் பாதிப்பு ஆந்திராவில் 145 கிராமங்களில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. 406 ஹெக்டேர் நிலங்களில் பயிரிடப்பட்ட பயிர்கள், 187 ஹெக்டேர் அளவு நெல், 555 ஹெக்டேரில் பயிரிடப்பட்ட சூரியகாந்தி, பருத்தி, கடலை உள்ளிட்ட பயிர்கள் சேதமடைந்துள்ளன. 3,334 குடும்பங்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மழை
ஒடிசாவை ஒட்டியுள்ள ஸ்ரீகாகுளம் மாவட்டத்தின் இச்சாபுரம்,கவிதி மண்டலங்களில், காலை 8.30 மணி முதல் 4.30 மணி வரையில் 23.25 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. மற்ற பகுதிகளில் ஒரு செ.மீ., முதல் 8 செ.மீ., வரை மழை பதிவாகியுள்ளது.
ரயில்கள் ரத்து
புயல் காரணமாக அடுத்த 3 நாட்களுக்கு கிழக்கு கடற்கரை பகுதிகளில் 4 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால், கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில், விசாகப்பட்டினத்திலிருந்து மும்பைக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட்டது.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
கத்திரி வெயில் இன்று தொடக்கம்: கொளுத்தும் வெயிலில் இருந்து தற்காத்து கொள்ள அறிவுரை
கத்திரி வெயில் இன்று தொடங்கி வரும் 29-ம் தேதி வரை 26 நாட்கள் நீடிக்கிறது.
ஆண்டுதோறும் மே மாதம் அக்னி நட்சத்திரம் காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படும். இருப்பினும், இந்த ஆண்டு அக்னிநட்சத்திரத்துக்கு முன்னதாகவே வாட்டி வதக்கிய வெயிலால் மக்கள் வேதனை அடைந்துள்ளனர்.
கடந்த ஜனவரி முதல் படிப்படியாக வெயில் தாக்கம் அதிகரித்து, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், வேலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் 100 டிகிரி முதல் 105 டிகிரி வரை வெயிலின் அளவு பதிவாகியுள்ளது.
அக்னி நட்சத்திரம் தொடங்கும் முன்பாகவே நேற்று முன்தினம் வேலூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 112 டிகிரி வெயில் பதிவானது. அதேபோல, மாநிலம் முழுவதும் வெயிலின் அளவு அதிகப்படியாக இருந்தது.
இந்நிலையில் இன்று முதல் வரும் 29-ம் தேதி வரை 26 நாட்கள் அக்னி நட்சத்திரம் நீடிக்கிறது. இந்த காலக்கட்டத்தில் வெயில் அளவு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் தங்களை தற்காத்துக் கொள்வது அவசியம்.
இதுகுறித்து சேலம் மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவமனைக் கல்லூரி கண்காணிப்பாளரும், பொது அறுவை சிகிச்சை நிபுணருமான டாக்டர் பி.வி.தனபாலிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:பொதுவாக அக்னிநட்சத்திரம் காலத்தில் உஷ்ண நிலை அதிகரித்து, சீதோஷ்ண நிலை மாற்றம் ஏற்படும். வெயிலின் தாக்கத்தால் நம் உடலில் நீர்ச்சத்து குறைய வாய்ப்புள்ளது. இதனை ஈடு செய்யும் வகையில் நாளொன்றுக்கு நான்கு முதல் ஐந்து லிட்டர் தண்ணீரை குடிக்க வேண்டும். தர்பூசணி, நுங்கு, இளநீர், எலுமிச்சை உள்ளிட்ட இயற்கை பழரசங்களை அருந்த வேண்டும். செயற்கை பானங்களை தவிர்ப்பது நலம்.
ஆடைகள் தளர்வாகவும், பருத்தி துணி வகையை அணிவதும் சிறந்தது. பகலில் வெளியே செல்பவர்கள் கண்டிப்பாக குடை, கைக்குட்டை உள்ளிட்டவை மூலம் வெயில் தாக்கத்தை தற்காத்துக் கொள்ள பயன்படுத்துவது அவசியம். இறைச்சி உள்ளிட்ட அசைவ உணவுகளை அக்னிநட்சத்திர காலங்களில் தவிர்த்து விட்டு, இட்லி, தோசை, கம்பு, களி உள்ளிட்ட சிறுதானிய உணவுகளை அதிகளவு சேர்த்துக் கொள்ளலாம். காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும்.
அக்னிநட்சத்திரத்தின் போது சூரியனில் இருந்து புற ஊதா கதிர்வீச்சு நேரடியாக தோலை பாதிப்பதால், வெயில் கட்டி சிலருக்கு தோன்ற வாய்ப்புள்ளது. எனவே, அதிகப்படியான எண்ணெய் பதார்த்தங்களையும், துரித உணவு வகையையும் தவிர்த்து, உடலுக்கு குளிர்ச்சி தரும் இயற்கை சார்ந்த உணவு வகைகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். கண் எரிச்சல், தலைவலி, வியர்கூறு வருவதை தடுத்திட காலை, மாலையில் குளிர்ந்த நீரில் குளித்து, பொதுமக்கள் அக்னிநட்சத்திர வெயிலில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ளலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
ஐபிஎல் போட்டி: பஞ்சாப் கனவை நொறுக்கியது கொல்கத்தா!
ஐபிஎல் போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வீழ்த்தியது. இதையடுத்து அடுத்த சுற்று வாய்ப்பில் இருந்து பஞ்சாப் அணி ஏறக்குறைய வெளியேறிவிட்டது
ஐபிஎல் தொடரில் 52 வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் நேற்று மோதின. முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி, தொடக்கத்திலேயே தடுமாறியது. கே.எல்.ராகுல் 7 பந்துகளுக்கு 2 ரன் மட்டுமே எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார். தொடர்ந்து கெய்லும் 14 ரன்னில் ஆட்டமிழந்தார்.
அடுத்து ஜோடி சேர்ந்த மயங்க் அகர்வாலும் நிக்கோலஸ் பூரனும் சற்று நிதானமாக ஆடி, ஆட்டத்தை தங்கள் பக்கம் கொண்டு வந்தனர். பூரன் சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார். அவர் 27 பந்துகளில் 48 ரன்னும் அகர்வால் 38 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
தொடர்ந்து களமிறங்கிய மந்தீப் சிங்கும், சாம் குர்ரனும் அதிரடி ஆட்டத்தில் ஈடுபட்டனர். சாம் குர்ரன் 24 பந்துகளில் 55 ரன் விளாசினார். மந்தீப் சிங் 17 பந்துகளில் 25 ரன் எடுத்தார். 20 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி, 6 விக்கெட் இழப்பிற்கு 183 ரன் எடுத்தது. கொல்கத்தா தரப்பில் சந்தீப் வாரியர் 2 விக்கெட்டுகளையும் கர்னே, ரஸல், ராணா தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
184 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு, தொடக்க ஆட்டக்காரர்கள் சுப்மான் கில், கிறிஸ் லின் சிறப்பானத் தொடக்கம் கொடுத்தனர். லின் 22 பந்தில் 46 ரன் எடுத்து ஆண்ட்ரு டை பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ராபின் உத்தப்பா 14 பந்தில் 22 ரன்னுடனும் ஆண்ட்ரு ரஸல் 14 பந்தில் 24 ரன்னுடனும் ஆட்டமிழந்தனர்.
பின்னர் வந்த கேப்டன் தினேஷ் கார்த்திக், அதிரடியாக விளையாடி அணியை வெற்றி பெறச் செய்தார். 18 ஓவரிலேயே கொல்கத்தா அணி 3 விக்கெட் இழப்புக்கு 185 ரன் எடுத்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
சுப்மான் கில் 49 பந்தில் 65 ரன்னுடனும் தினேஷ் கார்த்திக் 9 பந்தில் ஒரு சிக்சர் 2 பவுண்டரிகளுடன் 21 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந் தனர். ஆட்ட நாயகன் விருது சுப்மான் கில்-லுக்கு வழங்கப்பட்டது.
இந்த வெற்றியால், பிளே ஆப் சுற்று வாய்ப்பை பிரகாசப்படுத்தியுள்ளது கொல்கத்தா அணி. பஞ்சாப் அணி, அடுத்த சுற்று வாய்ப்பில் இருந்து ஏறக்குறைய வெளியேறிவிட்டது
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
ஒரு பெண் உட்பட163 இளைஞர்கள்... விதவிதமான போதை வஸ்துகள்!- பொள்ளாச்சி சொகுசு விடுதியால் மிரண்ட எஸ்.பி.
பொள்ளாச்சியை அடுத்த சேத்துமடைப் பகுதியில் உள்ள ஒரு சொகுசு விடுதியில் 163 இளைஞர்கள் விதவிதமான போதை வஸ்துகளை உட்கொண்டு ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பொள்ளாச்சியில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
பொள்ளாச்சியை அடுத்துள்ள சேத்துமடை அண்ணா நகர் பகுதியில் கணேஷ் என்பவரது தோட்டத்தில் `அக்ரி நெஸ்ட்' என்ற சொகுசு விடுதி செயல்பட்டு வருகிறது. அங்கே அப்படி ஒரு சொகுசு விடுதி இருக்கிறது என்பதே சுற்றுவட்டாரப் பகுதி மக்களுக்குத் தெரியாத அளவுக்கு இருந்துள்ளது. ஆன்-லைன் புக்கிங் மூலம் அந்த சொகுசு விடுதியைக் கண்டடைந்து ஏராளமான இளசுகள் குத்தாட்டம், கும்மாளம் போடுவது வாடிக்கையாக இருந்திருக்கிறது.
இந்த நிலையில், நேற்று நள்ளிரவு நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் விதவிதமான போதை வஸ்துகளை உட்கொண்டுவிட்டு பெரும் ரகளையில் ஈடுபட்டிருக்கின்றனர். இந்தத் தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் சிலர், இதுகுறித்து ஆனைமலை போலீஸாருக்குத் தகவல் அளித்தனர். இதையடுத்து, உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்த ஆனைமலை போலீஸார், அங்கு நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் இருந்த போதை நிலையைக் கண்டு அதிர்ந்து போனார்கள். அவர்கள் உடனடியாக கோவை எஸ்.பி சுஜித்குமாருக்கு தகவல் அளித்தனர்.
விஷயத்தின் தீவிரத்தை உணர்ந்த எஸ்.பி உடனடியாக தனது தலைமையில் ஒரு குழுவை அழைத்துக்கொண்டு இரவே சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளார். நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் அங்கு ரகளை செய்து கொண்டிருந்திருக்கிறார்கள். அதன்பின் என்ன நடந்தது என்று கோவை எஸ்.பி.சுஜித்குமாரிடம் பேசினோம். ``அங்கே கண்ட காட்சி என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கிவிட்டது. ஒரு பெண் உட்பட மொத்தம் 163 இளைஞர்கள். அவர்களில் 120-க்கும் மேற்பட்டவர்கள் கேரள இளைஞர்கள், 40-க்கும் மேற்பட்டவர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். இதில் பெரும்பாலானோர் கல்லூரி முடித்து வேலைக்குச் சென்றுகொண்டிருப்பவர்கள். அவர்களுக்கு எப்படி இவ்வளவு போதை வஸ்துகள் கிடைத்தது என்பதுதான் எங்களை அதிர்ச்சியடைய வைக்கிறது.
அவர்கள் அனைவரையும் கைது செய்து விசாரித்து வருகிறோம். அந்த சொகுசு விடுதியின் உரிமையாளரையும் கைது செய்திருக்கிறோம். எப்படி இவர்களுக்கு போதை வஸ்துகள் கிடைத்தது, இவர்கள் எவ்வளவு நாள்களாக இங்கு வருகிறார்கள், இதன் பின்னணியில் வேறு ஏதாவது குற்றங்கள் நடக்கிறதா? என்கிற கோணத்திலெல்லாம் விசாரணை நடத்தி வருகிறோம்" என்றவர் எதிர்கால நம்பிக்கையான இளைஞர்கள், `ஜாலி' என்ற பெயரில் இப்படி தடம் மாறிச் செல்வது மிகவும் வருத்தமளிக்கிறது" என்றார் வேதனையோடு.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் ‘வெற்றிகரமான தோல்வி’ - ரிஷப் பந்தின் , 2 பவுண்டரியும், 5 சிக்ஸரும்
ஐபிஎல் போட்டிகளில் நேற்று டெல்லி கேபிடல்ஸ் அணி ராஜஸ்தான் அணியை ஐந்து விக்கெட் வித்தியாசத்திலும், ராயல் சேலஞ்சர்ஸ் அணி சன் ரைசர்ஸ் அணியை நான்கு ரன்கள் வித்தியாசத்திலும் வீழ்த்தின.
இந்த வெற்றியால் டெல்லி அணி புள்ளிகள் பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. மேலும் ராஜஸ்தான் அணி லீக் சுற்றிலிருந்து வெளியேறியது.
ஆனால் ஐதராபாத் அணிக்கு இன்னும் வாய்ப்புகள் உள்ளன. ஞாயிறன்று கொல்கத்தா மற்றும் மும்பை அணி இடையே நடைபெறக்கூடிய போட்டியை பொறுத்து ஐதராபாத் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறுவது முடிவாகும்.
பெங்களூர் அணி ஏற்கனவே வெளியேறிவிட்ட நிலையில், இந்த ஐபிஎல்லின் தனது கடைசி போட்டியை வெற்றியுடன் முடித்துள்ளது.
பல போட்டிகளுக்கு பிறகு பெங்களூரு அணி நேற்று டாஸில் வெற்றி பெற்றது.
176 ரன்கள் என்ற இலக்குடன் களம் இறங்கிய பெங்களூரு அணியின் பார்த்தீவ் பட்டேல், ஏபி டி வில்லியர்ஸ் மற்றும் விராட் கோலி ஆகியோர் வெறும் 20 ரன்களே எடுத்திருந்த நிலையில் அவுட் ஆக ஹட்மேயர் மற்றும் குர்கீரத் சிங் களம் இறங்கினர். இருவரும் சேர்ந்து நான்காவது விக்கெட்டுக்கு 144 ரன்களை எடுத்தனர். இதுவே பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் வெற்றிக்கு காரணம்.
ஐதராபாத் அணியின் கேப்டன் கென் வில்லியம்சன், 43 பந்துகளில், 5 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் உட்பட 70 ரன்கள் எடுத்து அவுட் ஆகாமல் இருந்தார்.
அவரை தவிர அந்த அணியின், தொடக்க ஆட்டக்காரர் விரிதிமன் சஹா 20 ரன்களையும், மார்டின் கப்டில் 30 ரன்களையும், விஜய் சங்கர் 27 ரன்களையும் எடுத்தனர்.
வெற்றிக்கு வித்திட்ட பந்த்
முதலாவதாக நடைபெற்ற போட்டியில், டெல்லி கேபிடல்ஸ் அணி ராஜஸ்தான் அணியை ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
டெல்லி அணியின் வெற்றிக்கு 116 ரன்கள் இலக்காக வைக்கப்பட்டன. ரிஷப் பந்தின் 53 ரன்கள் டெல்லி அணியின் வெற்றியை இலகுவாக்கியது.
ரிஷப் பந்த் 38 பந்துகளில், 2 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 53 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
டாஸை வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆனால் அந்த அணியின் ரயான் பராக்கை தவிர யாரும் டெல்லி அணியின் பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியவில்லை. ரயான் பராக் 50 ரன்களை எடுத்திருந்தார்.
டெல்லி அணி 16 புள்ளிகளுடன் ஏற்கனவே அடுத்த சுற்றுக்கு தகுதிப் பெற்றது. தற்போது இந்த வெற்றிக்கு பின் 18 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது.
இதில் சென்னை மற்றும் மும்பை அணிகள் ஏற்கனவே அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டன.
தற்போது புள்ளி வரிசையில் 18 புள்ளிகளுடன் சென்னை அணி முதல் இடத்தில் உள்ளது.
ஞாயிறன்று நடைபெறும் போட்டிகளில், சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி பஞ்சாப் அணியையும், இரண்டாவது போட்டியில், மும்பை அணி கொல்கத்தாவையும் எதிர்கொள்கின்றன.
கொல்கத்தா அணி தோல்வி பெற்றால் சன் ரைசர்ஸ் அணி முதல் நான்கு இடத்துக்கு முன்னேறலாம். தற்போது புள்ளி வரிசையில் ஐதராபாத் அணி நான்காவது இடத்திலும் கொல்கத்தா அணி ஐந்தாவது இடத்திலும் உள்ளன.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
பந்துவீச்சாளர்களும், ஃபீல்டர்களும் செய்தது சரியில்லை': திட்டித் தீர்த்த தினேஷ் கார்த்திக்
வீரர்களிடம் கோபத்துடன் பேசிய தினேஷ் கார்த்திக் : படம் உதவி ஐபிஎல்
பந்துவீச்சாளர்களும், ஃபீல்டர்களும் செய்தது சரியில்லை, திட்டினால்தான் விளையாடுவார்கள் என்றால், அதையும் செய்யலாம் என்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
மொஹாலியில் நேற்று ஐபிஎல் டி20 போட்டியின் 52-வது லீக் ஆட்டம் நடந்தது. அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கும், தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் இந்த ஆட்டம் முக்கியமானதாக இருந்தது. 184 ரன்கள் சேர்த்த கிங்ஸ் லெவன் பஞ்சாபின் இலக்கைத் துரத்திய கொல்கத்தா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி பேட்டிங் செய்தபோது, முதலாவது டைம்-அவுட் வழங்கப்பட்டது. அப்போது, அனைத்து வீரர்களையும் அழைத்து கேப்டன் தினேஷ் கார்த்திக் காட்டமாகப் பேசினார்.
இதில் குறிப்பாக சுனில் நரேன், உத்தப்பா ஆகியோரிடம் கடுமையாகப் பேசிவிட்டு இருவரையும் ஃபீல்டிங்கக்கு அனுப்பினார். பந்துவீச்சை மாற்றியது குறித்து நரேனும், உத்தப்பாவும் கேள்வி எழுப்பியதால், அவர்களை தினேஷ் கார்த்திக் திட்டியதாகக் கூறப்படுகிறது. அதன்பின இருவரும் இறுகிய முகத்துடன் சென்றனர்.
தினேஷ் கார்த்திக் : படம் உதவி ஐபிஎல்
போட்டிமுடிந்த பின் கேகேஆர் அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் நிருபர்களிடம் கூறுகையில், ''சுப்மான் கில்லை நாங்கள் தொடக்க வீரராக களமிறங்கியதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. அவருக்கு கிடைத்த வாய்ப்பை இருகரம் கொண்டு பிடித்துள்ளார். பெரிய மைதானம், பெரிய இலக்கு. விக்கெட்டுகளுக்கு இடையே ரன்கள் அதிகமான எடுத்ததால், விரைவாக இலக்கை எட்ட முடிந்தது'' என்றார்.
களத்தில் வீரர்களைத் திட்டியதாகக் கூறப்படுகிறதே எனக் கேட்டபோது, "ஆம், நான் வீரர்களிடம் கடுமையாகத்தான் பேசினேன். கடந்த சில நாட்களாக கடுமையாகத்தான் நடக்கிறார்கள். பந்துவீச்சாளர்களும், ஃபீல்டர்களும் நடந்து கொண்ட முறை சரியில்லை, எனக்கு பிடிக்கவும் இல்லை. அந்த நேரத்தில் வீரர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று அறிய நான் நினைத்து அவ்வாறு பேசினேன். நான் கோபப்பட்டு பேசியதை யாரும் அரிதாகவே பார்த்திருப்பார்கள். எங்கள் வீரர்களிடம் இருந்து நல்லவிதமான உழைப்பு கிடைக்க, முடிவு கிடைக்க கோபம் அவசியம் என்றால், அதையும் செய்ய வேண்டியதுதான்.
கடைசி ஓவர்களில் 10 ரன்களுக்கும் அதிகமாக சாம் கரனை விட்டுக்கொடுத்தோம். ஐபிஎல் போட்டி என்பது வித்தியாசமானது. எங்கிருந்தோ யாரோ வந்து அணிக்கு தேவையான ரன்களை அடித்துக் கொடுப்பார்கள். அதைத்தான் சாம் கரன் செய்தார். பந்துவீச்சு, பேட்டிங், ஃபீல்டிங்கில் சமநிலையுடன் நாங்கள் செயல்படுவது அவசியம்'' என்று தினேஷ் கார்த்திக் தெரிவித்தார்.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
ஆன் லைனில் அறிமுகம்; வீடியோ எடுத்த இளம் பெண்'- சிக்கலில் சென்னை டாக்டர்
சென்னை திருவான்மியூரில் குடியிருக்கும் டாக்டர், வீட்டில் யாரும் இல்லாததால் ஆன் லைன் மூலம் வீட்டு வேலைக்கு இளம்பெண்ணை அமர்த்தியுள்ளார். அந்தப் பெண் மீது டாக்டர் கொடுத்த புகாரால் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை திருவான்மியூரில் டாக்டர் ஒருவர் குடியிருந்து வருகிறார். கோடை விடுமுறையொட்டி டாக்டரின் மனைவி மற்றும் குடும்பத்தினர் வெளியூர் சென்றனர். இதனால், வீட்டு வேலைக்காக டாக்டர், ஆன் லைனில் பெண் தேடியுள்ளார். அப்போது, தேவி என்ற பெயரில் ஒருவர் டாக்டரை தொடர்பு கொண்டுள்ளார்.
இதையடுத்து டாக்டர் வீட்டில் தேவி வேலை பார்த்துள்ளார். அதன்பிறகு நடந்த சம்பவங்கள்தான் டாக்டருக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. வேலைக்கார பெண் மீது திருவான்மியூர் காவல் நிலையத்தில் டாக்டர் புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில் போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
இதுகுறித்து போலீஸ் உயராதிகாரி ஒருவர் கூறுகையில், ``திருவான்மியூரைச் சேர்ந்த டாக்டரின் வீட்டில் வேலை பார்த்த தேவி, பணம் கேட்டு மிரட்டியுள்ளார். பெண்ணின் மிரட்டலுக்கு பயந்து டாக்டரும் குறிப்பிட்ட தொகையைக் கொடுத்துள்ளார். அதன்பிறகு, மீண்டும் டாக்டரிடம் பேசிய அந்தப் பெண், நான் உங்கள் வீட்டில் வேலை பார்த்த நாள்களில் நீங்களும் நானும் சேர்ந்திருக்கும் வீடியோ என்னிடம் உள்ளது. நீங்கள் பணம் கொடுக்கவில்லை என்றால் அந்த வீடியோவை வெளியிடுவேன் என்று கூறி மிரட்டியுள்ளார். இதனால் பயந்துபோன டாக்டர், அந்தப் பெண் கேட்ட பணத்தைக் கொடுத்துள்ளார். ஆனால் தொடர்ந்து அவர் பணம் கேட்டு நச்சரித்ததால் எங்களிடம் டாக்டர் புகார் கொடுத்தார். அதன்பேரில் தேவியைப் பிடித்துள்ளோம். அவரிடம் விசாரணை நடத்திவருகிறோம்.
அவரிடமிருந்து வீடியோ ஒன்றை பறிமுதல் செய்துள்ளோம். அந்த வீடியோ தொடர்பாக டாக்டரிடமும் விசாரணை நடத்திவருகிறோம். மேலும் எங்களிடம் சிக்கிய தேவி, பணக்காரர்கள் வீட்டுக்கு வேலைக்குச் செல்லும் போது வீட்டில் உள்ளவர்களிடம் நெருங்கிப் பழகுவார். அதை யாருக்கும் தெரியாமல் வீடியோ எடுத்து பணத்தை மிரட்டி வாங்குவதை வழக்கமாக வைத்துள்ளார். அவரால் பாதிக்கப்பட்டவர்கள் சில காரணங்களுக்காக புகார் கொடுப்பதில்லை. ஆனால், திருவான்மியூர் டாக்டர் கொடுத்த புகாரால் தேவி சிக்கிக் கொண்டார். அதே நேரத்தில் டாக்டர் மீது தேவியும் பகிரங்க புகார் கூறியுள்ளார். இதுகுறித்து டாக்டரிடமும் விசாரணை நடந்துவருகிறது" என்றார்.
தேவியிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட வீடியோ, பரம ரகசியமாக காவல்துறை உயரதிகாரி ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அந்த வீடியோவைப் பார்த்த காவல்துறை அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதுதொடர்பாக டாக்டரிடம் கேட்டதற்கு அவர் அமைதியாக இருந்துள்ளார். இதையடுத்து டி.ஜி.பி. அலுவலகத்திலிருந்து அடையாறு சரக காவல்துறை உயரதிகாரிகள் ஒரு போன் அழைப்பு வந்துள்ளது. அதன்பிறகு டாக்டருக்கு சாதகமான நிலையை அடையாறு சரக காவல்துறை அதிகாரிகள் எடுத்துள்ளனர். மேலும் இந்தச் சம்பவத்தை மூடிமறைக்க முயன்ற காவல்துறையினர், செக் மோசடி என வழக்கை முடிக்க முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
காவல் நிலையத்தில் டாக்டர் புகார் கொடுத்ததும் விசாரிக்க போலீஸ் உயரதிகாரி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. வழக்கமாக பெண்களைத்தான் வீடியோ எடுத்து மிரட்டும் சம்பவங்கள் நடப்பதுண்டு. ஆனால் இந்தச் சம்பவத்தில் டாக்டரை வீடியோ எடுத்து மிரட்டியதால்தான் உயரதிகாரி ஒருவர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், ஆன் லைன் மூலம் வேலைக்குச் சேர்ந்த பெண்ணின் பின்னணியில் யார், யார் இருக்கிறார்கள் என்ற தகவல்களை போலீஸார் சேகரித்துவைத்துள்ளனர். அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க போலீஸார் முடிவு செய்துள்ளனர்.
ஆன் லைன் மூலம் வேலைக்கு வந்த இளம்பெண், டாக்டருக்கு வலை விரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
06-05-2019, 11:06 AM
(This post was last modified: 06-05-2019, 11:07 AM by johnypowas. Edited 1 time in total. Edited 1 time in total.)
நீட் தேர்வு எழுதி விட்டு ஊருக்கு திரும்பிய மாணவி உயிரிழப்பு
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை சேர்ந்த மாணவிக்கு மதுரையில் நீட் தேர்வு மையம் ஒதுக்கியதால் ஏற்பட்ட விபரீதம்.
உயிரிழந்த சந்தியா
Updated: May 6, 2019, 10:26 AM IST
மதுரையில், நீட் தேர்வு எழுதி வந்து விட்டு, ஊருக்கு செல்லும் போது பேருந்திலேயே மயக்கமடைந்து மாணவி உயிரிழந்தார்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பாப்பானம் கிராமத்தை சேர்த்த முனியசாமியின் மூத்த மகள் சந்தியா, அங்குள்ள ** பள்ளியில் பிளஸ் 2 வரை படித்து வந்தார். மாற்றுதிறனாளியான சந்தியாவிற்கு, நீட் தேர்வு எழுத மதுரை திருப்பாலையில் உள்ள ஜெயின் வித்யாலயா பள்ளி தேர்வு மையமாக ஒதுக்கீடு செய்யப்பட்டது.
ஞாயிற்றுகிழமை அதிகாலை பாப்பனம் கிராமத்தில் இருந்து தனது தந்தையோடு புறப்பட்ட சந்தியா, தேர்வு மையத்திற்கு வந்து தேர்வு எழுதினார். தேர்வு முடிந்து ராமநாதபுரம் செல்ல பேருந்தில் ஏறிய சந்தியாவிற்கு மயக்கம் வந்தது. பதறிப்போன தந்தை முனியசாமி, திருப்புவனம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு மகளை கொண்டு சென்றார். அங்கு மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். நீட் தேர்வு எழுத சென்ற மாணவி உயிரிழந்ததால் சடலத்தோடு தந்தை கதறி அழுத காட்சி காண்போரையும் கண் கலங்க வைத்தது.
•
|