Adultery முன்னாள் காதலி (Completed)
#1
இது முழுக்க முழுக்க கற்பனை கதை ! இடங்களும் மனிதர்களும் சம்பவங்களும் யாரையும் குறிப்பிடுவது போல தோன்றினாலும் அது தற்செயலானது தான் !!

பசங்க மரம் மாதிரி பொண்ணுங்க கொடி மாதிரி ! அங்கங்க கையை நீட்டும் கொடி எது கிடைக்கின்றதோ அதை பிடித்துக்கொண்டு மேலே சென்றுவிடும் ! மரம் பார்த்துக்கொண்டே நிற்க வேண்டியது தான் !! 

அப்படி பொதுவா எல்லா பொண்ணுங்களையும் சொல்லிவிட முடியாது ! நூத்துக்கு 99% பொண்ணுங்க எப்படின்னு தெரியாது ஆனா நூத்துக்கு 99% பசங்க லவ் பண்ணிட்டு இருக்கும்போதே இன்னொரு பொண்ணு பிரப்போஸ் பண்ணா உடனே ஓகே சொல்லும் பொருக்கி பசங்க தான் !! அப்படிப்பட்ட பசங்க ஏதாவது ஒரு பொண்ணு தப்பு பண்ணா உடனே அவ்வளவுதான் பொண்ணுங்க எல்லாம் மோசம் ...

வேணாம் மச்சான் வேணாம் இந்த பொண்ணுங்க காதலேன்னு பாட்டு பாடுவானுங்க ... 

அதனால நான் சொல்லப்போற கதை எதோ பொண்ணுங்க யோக்கியம் பசங்க பொருக்கி என்றோ பொண்ணுங்க கெட்டவளுங்க பசங்க தான் நல்லவன்னோ எந்த ஒரு முடிவுக்கும் போகாது !! அந்தந்த பொண்ணு அந்தந்த பசங்க அவ்வளவு தான் !! பொதுவா பொண்ணுங்க பசங்கன்னு பிரிப்பதில் எந்த அர்த்தமும் இல்லை !!   தவறு செய்வது மனித இயல்பு இதில் ஆண் பெண் பேதமில்லை . அதுவே என் கருத்து .

அவள் பெயர் அகிலா ! என் அகிலமும் அவள் தான் என்று ஒருநாள் மாறிப்போனது !! சாதாரணமாக ஆரம்பித்தது தான் எங்கள் காதல் !! பள்ளிக்கூடம் படிக்கும்போதே துவங்கிவிட்டது ! நான் தான் பிரப்போஸ் பண்ணேன் ! பிரப்போஸ் பண்ணணுன்னு அவசியமே இல்லாத அளவுக்கு என்னை பார்த்துக்கொண்டே  இருந்தாள் ! ஒரே பஸ்ல தான் போவோம் !! காலைல அவளை பார்ப்பதற்கே பஸ்ல ஓடிப்போய் ஏறி விழுந்து அடிபட்டு ... சரி அதை விடுங்க இழுத்தா போயிகிட்டே இருக்கும் !!

அகிலா என் காதலை ஏற்றுக்கொண்டாள் !! சிரிப்பும் சிலிர்ப்புமாக கிரீட்டிங் கார்டு டெடி பேர் , மவுத் ஆர்கன்,  ரோஸ் என்று மெல்ல வளர துவங்கியது என் காதல் !!

பள்ளி முடிந்து கல்லூரி வந்து சேர்ந்து அங்கும் தொடர ... இதோ இருவது வருடங்கள் கடந்துவிட்டது !! 

என்னடா நேரா இருபது வருடம் தாண்டி வந்துட்டானேன்னு பாக்குறீங்களா ? ஆமாங்க இருபது வருடம் கடந்துவிட்டது !!
 
காதலும் கடந்து சென்றுவிட்டது !!

2001 பிப்ரவரி மாதம் தொடங்கியது எங்கள் காதல் !! அப்படியே வளர்ந்து எங்கெங்கோ சென்று , இன்று 2021 . அவளுக்கும் திருமணமாகிவிட்டது எனக்கும் திருமணமாகிவிட்டது !! 
 
எனக்கு இரண்டு குழந்தைகள் அவளுக்கு ஒன்னு !!
 
சரி ஆரம்பிப்போம் !!
 
ஒரு நாள் ஊரில் , அதையும் சொல்லிடுறேன் என் ஊர் திருச்சி பக்கம் குளித்தலை !! பிறந்தது வளர்ந்தது எல்லாமே அங்க தான் ! அவளுக்கு பக்கத்தில் ஒரு சின்ன கிராமம் ! அங்கிருந்த குளித்தலை  வந்து படிப்பா ! பிறகு கல்லூரி திருச்சியில் படித்தாள் ! நான் சென்னையில் எஞ்சினியரிங் படித்தேன் ! ஆனா இப்போது வசிப்பது திருச்சியில் !! ஆமாங்க சொந்த வீடு கட்டி வந்துட்டேன் ! மனைவி குழந்தைகளோடு ஒரு அழகான வாழ்க்கை ! இடையில் எப்பவாச்சும் அகிலா நினைப்பு வரும் !!அவ்வளவு தான் !!
ஆனால் அவள் மீண்டும் வந்தாள் !!

திருச்சி ... ஒரு மாலை நேரம் என்னுடைய ஷோரூம்ல , அதாவது நான் வேலை பார்க்கும் ஷோரூம்ல இருந்து வீட்டுக்கு பைக்ல போயிடுவேன் ! அன்று சர்வீஸ் விட்ருந்தேன் அதனால நடந்து போயி வண்டியை எடுத்துக்கொண்டு செல்ல திருச்சி சென்னை தேசிய நெடுஞசாலையில் இடது ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்தேன் !! காவிரி பாலத்துக்கு அந்தப்பக்கம் பஜாஜ் சர்வீஸ் சென்டரில் தான் பைக் நிற்கிறது !! 
கிட்டத்தட்ட நான்கு வருடங்களாக இந்த ரோட்ல தான் பைக்ல போறேன் ஆனா அன்னைக்கு தான் நடந்து போனேன் !!
 
என் முன்னே இரு பெண்கள் !! சைட் அடிக்கும்  பழக்கம் விட்டுப்போகுமா என்ன ??
 
அவர்கள் இருவரும் பேசிக்கொண்டு மெதுவாக முன்னே செல்ல நானும் இருவரின் அசைவுகளை ரசித்தபடி பின்னே மெதுவாக சென்றேன் !!! 

இருவரும் டீச்சர் !  கையில் ஹேண்ட் பேக் லன்ச் கூடை என்று பிராப்பர் டீச்சராக இருவரும் நடந்து சென்றுகொண்டே இருக்க  .. காவிரியை இவ்வளவு அகலமாக வெட்டியவனுக்கு நன்றி சொல்லியபடி அந்த இரட்டை அழகை ரசித்துக்கொண்டே சென்றேன் !!
அனாயசமாக காற்றில் கலைந்த முடியை கோதியபடி திரும்பியவள் , ஹேய் சூர்யா எப்படி இருக்க என்ன இங்க ?

நான் அப்போது தான் நிமிர்ந்து பார்த்தேன் !! அது துளசி ! என்னுடைய உறவுக்காரப் பெண் !! சொல்லப்போனா என்னுடைய அத்தை மகள் ! ஆனால் நான் வார்த்தைகளின்றி மவுனமாக நின்றேன் !! ஏன்னா அவளருகில் நின்றது என் காதலி அகிலா !!

இதே சாலையில் மூன்று வருடமாக  சென்று  கொண்டிருக்கிறேன் ஒரு நாள் கூடவா இவள் என் கண்ணில் படவில்லை ?! அவள் காலை ஒரு முறை மாலை ஒருமுறை சென்றிருக்கலாம் !! கண்ணில் படாமல் செல்ல எத்தனையோ வாய்ப்புகள் இருந்திருக்கலாம் !!
[+] 6 users Like dannyview's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#2
நான் அகிலாவையே பார்த்துக்கொண்டு நிற்க , சூர்யா ...


சூர்யா ...


துளசி என்னை உலுக்க ... ஏய் என்னடா பாக்குற இவளை உனக்கு தெரியுமா ?


ம்ம் ...


அகிலா இவனை உனக்கு தெரியுமா ?


ம்ம் ... முதலில் நான் ம்ம் சொல்லிவிட்டதால் அகிலா வேறு வழியின்றி ம்ம் என்றாள் !!


ஓ ! எப்படி தெரியும் ?


ஒன்னா என்று நான் ஒரு வார்த்தையை மட்டும் சொல்லி அடுத்த வார்த்தைக்கு முயற்சிக்க ...


படித்தோம் என்று சட்டென முடித்தாள் அகிலா !!


ஒன்னா படிசீங்களா ? ஆமால்ல குளித்தலை தான ...


ஓகே ஓகே இருந்தாலும் நான் அறிமுகம் செய்யிறேன் அது என்னோட கடமை !! அகிலா இது சூர்யா என்னுடைய மாமா பையன் ! சூர்யா இது அகிலா என்னுடைய கொலீக் !!


ஓ !!


இங்க தான் ஹை ஸ்கூல்ல ஒர்க் பண்ணுறோம் !! நீ இங்க என்ன பண்ணுற ?


நான் என் பைக் சர்வீஸ் விட்டுருக்கேன் அதை எடுத்துட்டு போலாம்னு வந்தேன் !!


ஓ !! சரி வா எங்களுக்கு ஒரு காபி வாங்கி குடு !!


இல்லை வேண்டாம் துளசி நான் கிளம்புறேன் !!


எங்கடி போற ... இவன்கிட்ட அந்த விஷயத்தை பத்தி பேசுவோம் !! எதுனா ஐடியா கிடைக்கலாம் !!


துளசி அதெல்லாம் வேண்டாம் நான் கிளம்புறேன் !!


சரி ஓகே காபி குடிப்போம் அப்புறம் நீ கிளம்பு ...


நீண்ட தயக்கத்துக்கு பின் அகிலா சரி என்றாள் !!


அகிலா முன்னாடி செல்ல நானும் துளசியும் சற்று பின்னால் நடந்தோம் !!


என்னடா ஒன்னா படிச்சோம்னு சொல்லுறீங்க ஆனா இத்தனை வருஷம் கழிச்சி சந்திச்சும் ஒன்னும் பேசிக்காம வரீங்க ?


அது நீ அவகிட்ட கேளு ...


ஓ ...


அதுசரி தினமும் இப்படித்தான் நடந்து போறீங்களா ?


ம்ம் காலைல என் ஹஸ்பெண்ட் என்னை ஸ்கூல்ல டிராப் பண்ணிட்டு போயிடுவார் ! ஈவினிங் நான் இப்படியே நடந்து, பக்கத்துல ss நகர் தான் ! அப்படியே நடந்து போயிடுவேன் !! நீ தான் நாங்க வீடு குடி போனதுக்கு கூட வரல ...


அப்படிலாம் இல்லை துளசி !! நீங்க வீடு மாறுனப்ப நான் சென்னைல இருந்தேன் !! அப்படியே விட்டுப்போச்சு ...


நீ இங்க என்ன பண்ணுற ?


நான் இங்க தான் டொயோட்டா ஷோரூம்ல மேனேஜரா இருக்கேன் !!


ம்ம் ... அதுக்கு பின்னாடி தான் எங்க ஸ்கூல் . எத்தனை வருஷமா வேலை செய்யிற ?


நான் மூனு வருஷமா வேலை செய்யிறேன் !!


பார்றா நாங்களும் அங்க தான் மூனு வருஷமா வேலை செய்யிறோம் உன்னை பார்க்கவே இல்லை பாரு ! கார் ஷோ ரூம் மேனேஜர்னு சொல்லுற ஆனா நடந்து போற ?


மேனேஜர் தான் துளசி ஓனர் இல்லை !!


இல்லடா அவங்க உன்னை பைக் சர்வீஸ் சென்டர்ல டிராப் பண்ண மாட்டாங்களா ?


இல்லை நான் தான் சும்மா வாக் போலாம்னு ...


ம்ம் அதனால எங்களை பார்த்த ...


ம்ம்


துளசி நான் கிளம்புறேன் நீ பொறுமையா பேசிட்டு வாயேன் ...


எங்கடி போக போற ? நீயும் அங்க தான போகணும் ... என்னமோ பறந்து போகப்போற மாதிரி ... அதே எஸ் எஸ் நகர்ல தான குப்பை கொட்டப்போற ?


ஓ ரெண்டு பேரும் ஒரே ஏரியா தானா ?


ஆமாடா .... நீ எங்க இருக்க ?


நான் டோல் கேட் !!


அடப்பாவி ரெண்டு கிலோமீட்டர்ல இருக்க ஆனா என்னை உனக்கு தெரியவே இல்லை !!


ம்ம் என்ன பண்ணுறது ? காலம் ஓடுது !!


பேசிக்கொண்டே டீ ஸ்டால் வந்து சேர்ந்துட்டோம் !!


மூவருக்கும் காபி டோக்கன் வாங்கினேன் !! அகிலா என்னை பார்க்காமல் சாலையை வெறித்து பார்த்துக்கொண்டிருக்க , துளசி என்னையும் அவளையும் மாறி மாறி பார்த்துவிட்டு ...


டேய் ரெண்டு பேரும் லவ் பண்ணி பிரிஞ்சிட்டீங்களா ?


துளசி இப்படி சட்டென கேட்கவும் அகிலாவே அதிர்ச்சியாகி என்னை பார்க்க , நான் என்ன பதில் சொல்வதென தெரியாமல் ... துளசி இந்த ஆராய்ச்சிலாம் இப்ப தேவையா ? காபிக்கு ரொம்ப தேங்க்ஸ் ! நான் கிளம்புறேன் நீ உன் அத்தை பையனோட பேசிட்டு பொறுமையா வா ...


அப்ப காண்ஃபாம் ... உங்களுக்குள்ள சம்திங் ராங் ...


துளசி ...


ஓகே அகிலா ... நீ கிளம்பு ! உன்னோட பிரச்னை பத்தி தான் நான் இப்ப பேசப்போறேன் ...


துளசி அதை இவன்கிட்ட ... சாரி இவர்கிட்ட பேசி ஒன்னும் ஆகாது .


அது எப்படி அகிலா பேசினா தான தெரியும் !!
[+] 4 users Like dannyview's post
Like Reply
#3
நீ சொன்னா கேக்கமாட்ட ...


அகிலா இவனை பத்தி எனக்கு நல்லா தெரியும் . பயங்கர பிரில்லியண்ட் ! இவன்கிட்ட பேசினா நிச்சயம் நல்ல முடிவு தெரியும் !



துளசி உன்னைவிட இவரை எனக்கு ரொம்ப நல்லா தெரியும் !! நீ தேவையில்லாம பண்ணுற ...


ஓ ... அப்படியா சூர்யா இவளை உனக்கு ரொம்ப நல்லா தெரியுமா ?


துளசி !! அதெல்லாம் முடிஞ்சி போன கதை !! இப்ப அவங்களுக்கு விருப்பம் இல்லைன்னா விடேன் ஏன் போட்டு மல்லு கட்டுற ?


முடிஞ்சி போனதா ... முடிஞ்சி போன கதையா ? நான் கதையா சூர்யா ?


ரத்தமும் சதையுமா நான் நிக்கிறேன் . நான் உனக்கு கதையா சூர்யா ??


அகிலா அப்படி பேசுவான்னு நான் சத்தியமா நினைக்கவே இல்லை ! எதோ பெரிய பிரச்சனை போல இல்லைன்னா ஏன் இப்படி கண்ணீர் முட்ட ஒரு பொது இடத்தில கத்தனும் ?? அவள் கண்களில் கண்ணீர் துளிகள் எட்டிப்பார்க்க , துளசி அதிர்ச்சியோடு அகிலாவை பார்க்க சுற்றி மனிதர்கள் !! என்ன ஏதுன்னு எல்லோரும் எங்களை பார்க்க ... துளசி சுதாரித்துக்கொண்டு , சாரி அகிலா நான் எதோ விளையாட்டா பேசிட்டேன் நீ என்னோட வீட்டுக்கு வா அங்க பேசலாம் இங்க எல்லாரும் பாக்குறாங்க ...


இல்லை துளசி நான் கிளம்புறேன் !! அகிலா அங்கிருந்து வேகமாக செல்ல ... நான் அவளையே பார்த்துக்கொண்டு நிற்க ...


டேய் வா என் வீட்டுக்கு போலாம் ...


நான் மவுனமாகவே அவளோடு பயணித்தேன் ஆனா என் மனம் என் அகிலாவுக்கு என்ன பிரச்னை மீண்டும் பிரச்சனையா என்றே அல்லாட ...



ஃபிளாஷ் பேக் ...
[+] 5 users Like dannyview's post
Like Reply
#4
நான் சென்னையில் இன்ஜினியரிங் சேர்ந்திருந்த சமயம் , அகிலா திருச்சியில் ஒரு கல்லூரியில் Bsc சேர்ந்திருந்தாள் . உண்மையை சொல்லனும்னா ப்ளஸ் டு படிக்கும்போதே எங்கள் காதலில் பல பிரச்சனைகள் !! அவளுடைய பக்கத்து வீட்டு பையன் ஒருத்தனுக்கு எங்க லவ் மேட்டர் தெறிஞ்சி அவ வீட்ல போட்டு விட்டு பிரச்சனையை ஆரம்பிச்சதே அவன் தான் !! கரெக்ட்டா ப்ளஸ் டு எக்ஸாம் நெருங்கும் நேரம் தினம் ஒருத்தன் வருவான் !! அவளோட அண்ணன்னு சொல்லுவான் மிரட்டுவான் ! அதைப்பத்தி அகிலாகிட்ட பேச கூட முடியாது எவனாச்சும் ஒருத்தன் அகிலாவை பாலோ பண்ணி வருவான் !!


அதனாலே எதுவும் பேசாமல் , நாட்கள் நகர்ந்து ப்ளஸ் டு முடிச்சி நான் சென்னைல இன்ஜினியரிங் சேர்ந்துட்டேன் ! அகிலா திருச்சியிலேயே Bsc சேர்ந்திருந்தாள் ...


நாங்கள் காதலர்களாவே இருந்தாலும் எங்க சேரப்போற என்ன படிக்கப்போறன்னு கூட தெரிஞ்சிக்காம போனுச்சு ! இன்னும் சொல்லப்போனா லவ் பண்ணுறோமான்னு கூட தெரியாத அளவுக்கு பிரிவு . ஆனால் காலம் எல்லாத்தையும் ஆறப்போடும் !!! அப்படிதான் அகிலாவை வீட்டில் செய்த டார்சர்களும் கொஞ்சம் கொஞ்சமாக கரைந்தது !! அதற்கு இரண்டு முக்கிய காரணம் !


என்னதான் அகிலா சொந்தக்காரனுனுங்க ஊரெல்லாம் அண்ணன்னு என்னை வந்து வந்து மிரட்டினாலும் அவளுக்கு உண்மையில் கூடப்பிறந்தவனுங்க இரண்டு பேர் !! அந்த இரண்டு அண்ணனும் ஃபாரின் போயிட்டானுங்க !! இப்ப அவளுடைய அம்மாவும் அப்பாவும் மட்டும் தான் அவங்க பெருசா கண்டுக்கல ஏன்னா அவங்க அகிலாவின் இந்த லவ் மேட்டர் தெரியாது !!



அகிலா , பார்க்க பேரழகுன்னு சொல்லமுடியாது ஆனா குளித்தலைல அவ தான் சூப்பர் ஃபிகர் !! பார்க்க அப்படியே குடும்பப்பாங்கா இருப்பா ஆனா என்ன ஒன்னுன்னா அவ பதினெட்டு வயசுலே நல்லா திமுதிமுன்னு இருப்பா . நானே ஒருமுறை அவகிட்ட பேசிட்டு இருக்கும்போது என்ன அகிலா உன் தம்பியான்னு சில பொண்ணுங்க கிண்டல் பண்ணாங்க ...


இரண்டு மூன்று மாதம் அவளுடைய இரண்டு அண்ணன்களும் அவளை போட்டு டார்ச்சர் பண்ணிட்டு ரெண்டு பேரும் ஃபாரின் கிளம்பிவிட அகிலாவிற்கு உண்மையில் நிம்மதியாக இருந்தது !! அதில் இன்னொரு விபரீதம் என்னன்னா எப்பவுமே அடக்கி வச்சிருந்தவங்கள திடீர்னு இப்படி அவுத்துவிட்டா அது இன்னும் ஆட்டம் போடும் !! அதற்கு மிக மிக வாகாக ஒரு விஷயம் நடந்தது !!


அது 2002. அப்போதைய ஆட்சியில் , அரசு கல்லூரிகளை பல்கலைக்கழக கட்டுப்பாட்டில் கொண்டுவந்தார்கள் !! அதனால மாணவர்கள் பாதிக்கப்பட்டாங்க ஆயிரம் ரூபாய் இருந்த கட்டணம் பத்தாயிரம் ஆனது . இன்னும் பல பாதிப்புகள் அதை எதிர்த்து மாணவர்கள் ஸ்ட்ரைக் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க . அதனால முதல் செமஸ்டர் நடக்கவே இல்லை !!


காலைல கிளம்பி காலேஜ் வரவேண்டியது கல்லூரி நடக்காது ! ஒரு பதினோரு மணிக்கெல்லாம் கிளம்பிட வேண்டியது !! சில பொண்ணுங்க வீட்டுக்கு போனாங்க பல பொண்ணுங்க வெளில சுத்த ஆரம்பிச்சாங்க அப்படி சுத்தின பெண்களில் என் காதலியும் ஒருத்தி !!
[+] 7 users Like dannyview's post
Like Reply
#5
Superb start. Missing your andha 7 naatkal story bro.
Like Reply
#6
Amazing start
Like Reply
#7
super start dude
Like Reply
#8
GOOD START. HOPE YOU COMPLETE THIS STORY.
Like Reply
#9
(17-10-2021, 07:12 PM)dannyview Wrote: நான் சென்னையில் இன்ஜினியரிங் சேர்ந்திருந்த சமயம் , அகிலா திருச்சியில் ஒரு கல்லூரியில்  Bsc சேர்ந்திருந்தாள் . உண்மையை சொல்லனும்னா ப்ளஸ் டு படிக்கும்போதே எங்கள் காதலில் பல பிரச்சனைகள் !! அவளுடைய பக்கத்து வீட்டு பையன் ஒருத்தனுக்கு எங்க லவ் மேட்டர் தெறிஞ்சி அவ வீட்ல போட்டு விட்டு பிரச்சனையை ஆரம்பிச்சதே அவன் தான் !! கரெக்ட்டா ப்ளஸ் டு எக்ஸாம் நெருங்கும் நேரம் தினம் ஒருத்தன் வருவான் !! அவளோட அண்ணன்னு சொல்லுவான் மிரட்டுவான் ! அதைப்பத்தி அகிலாகிட்ட பேச கூட முடியாது எவனாச்சும் ஒருத்தன் அகிலாவை பாலோ பண்ணி வருவான் !!


அதனாலே எதுவும் பேசாமல் , நாட்கள் நகர்ந்து ப்ளஸ் டு முடிச்சி நான் சென்னைல இன்ஜினியரிங் சேர்ந்துட்டேன் ! அகிலா திருச்சியிலேயே Bsc சேர்ந்திருந்தாள் ...


நாங்கள் காதலர்களாவே இருந்தாலும் எங்க சேரப்போற என்ன படிக்கப்போறன்னு கூட தெரிஞ்சிக்காம போனுச்சு ! இன்னும் சொல்லப்போனா லவ் பண்ணுறோமான்னு கூட தெரியாத அளவுக்கு பிரிவு . ஆனால் காலம் எல்லாத்தையும் ஆறப்போடும் !!! அப்படிதான் அகிலாவை வீட்டில் செய்த டார்சர்களும் கொஞ்சம் கொஞ்சமாக கரைந்தது !! அதற்கு இரண்டு முக்கிய காரணம் !


என்னதான் அகிலா சொந்தக்காரனுனுங்க ஊரெல்லாம் அண்ணன்னு என்னை வந்து வந்து மிரட்டினாலும் அவளுக்கு உண்மையில் கூடப்பிறந்தவனுங்க இரண்டு பேர் !! அந்த இரண்டு அண்ணனும் ஃபாரின் போயிட்டானுங்க !! இப்ப அவளுடைய அம்மாவும் அப்பாவும் மட்டும் தான் அவங்க பெருசா கண்டுக்கல ஏன்னா அவங்க அகிலாவின் இந்த லவ் மேட்டர் தெரியாது !!



அகிலா , பார்க்க பேரழகுன்னு சொல்லமுடியாது ஆனா குளித்தலைல அவ தான் சூப்பர் ஃபிகர் !! பார்க்க அப்படியே குடும்பப்பாங்கா இருப்பா ஆனா என்ன ஒன்னுன்னா அவ பதினெட்டு வயசுலே நல்லா திமுதிமுன்னு இருப்பா .  நானே ஒருமுறை அவகிட்ட பேசிட்டு இருக்கும்போது என்ன அகிலா உன் தம்பியான்னு சில பொண்ணுங்க கிண்டல் பண்ணாங்க ...


இரண்டு மூன்று மாதம் அவளுடைய இரண்டு அண்ணன்களும் அவளை போட்டு டார்ச்சர் பண்ணிட்டு ரெண்டு பேரும் ஃபாரின் கிளம்பிவிட அகிலாவிற்கு உண்மையில் நிம்மதியாக இருந்தது !! அதில் இன்னொரு விபரீதம் என்னன்னா எப்பவுமே அடக்கி வச்சிருந்தவங்கள   திடீர்னு இப்படி அவுத்துவிட்டா அது இன்னும் ஆட்டம் போடும் !! அதற்கு மிக மிக வாகாக ஒரு விஷயம் நடந்தது !!


அது 2002. அப்போதைய ஆட்சியில் , அரசு கல்லூரிகளை பல்கலைக்கழக கட்டுப்பாட்டில் கொண்டுவந்தார்கள் !! அதனால மாணவர்கள் பாதிக்கப்பட்டாங்க ஆயிரம் ரூபாய் இருந்த கட்டணம் பத்தாயிரம்  ஆனது . இன்னும் பல பாதிப்புகள் அதை எதிர்த்து மாணவர்கள் ஸ்ட்ரைக் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க . அதனால முதல் செமஸ்டர் நடக்கவே இல்லை !!


காலைல கிளம்பி காலேஜ்  வரவேண்டியது கல்லூரி நடக்காது ! ஒரு பதினோரு மணிக்கெல்லாம் கிளம்பிட வேண்டியது !! சில பொண்ணுங்க வீட்டுக்கு போனாங்க பல பொண்ணுங்க வெளில சுத்த ஆரம்பிச்சாங்க அப்படி சுத்தின பெண்களில் என் காதலியும் ஒருத்தி !!



வாவ் சூப்பர் லவ் ஸ்டோரி நண்பா 


அகிலா கதாபாத்திரம் சூப்பர் நண்பா 

அகிலாவின் அண்ணன்கள் செம வில்லன்களாக இருக்கிறார்களே நண்பா 

பிளாஷ் பேக் கதை மிக மிக அருமையாக துவங்கி இருக்கிறது நண்பா 

அப்படியே இந்த ஸ்பீட்லயே தொடர்ந்து எழுதுங்கள் நண்பா ப்ளஸ் 

நேரம் கிடைக்கும் போது மட்டும் எழுதினால் போதும் 

ஆனால் தொடர்ந்து எழுதவேண்டுமாறு மிக தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் நண்பா ப்ளஸ் 

வாழ்த்துக்கள் நன்றி 
Like Reply
#10
கொஞ்ச நாளில் பசங்களும் பழக்கமாக திருச்சியின் பல இடங்களுக்கு பசங்களும் பொண்ணுங்களுமாக கூட்டம் கூட்டமாக சுத்த ஆரம்பிச்சிட்டாங்க ! இதில் அகிலாவுக்கு மூனு நாளு பசங்க ஃபிரண்ட்ஸ் ஆகிட்டாங்க !! ஆனாலும் அகிலா என்னை தான் மனதில் வைத்திருந்தாள் !! எப்டியோ யாரையோ பிடிச்சி என்னுடைய ஹாஸ்டல் நம்பருக்கு கால் பண்ணிட்டா !!


அப்பல்லாம் செல்போன் கிடையாது ! கொஞ்சம் கொஞ்சமாக பரவ ஆரம்பித்த சமயம் !! அகிலா போன் பண்ணுவான்னு நான் நினைச்சி கூட பார்க்கல ...


ஆனால் பேசியது அகிலா தான் !!


அகிலா எப்படி இருக்க ?


எதோ இருக்கோம் !!


ஏன் என்னாச்சு ?


நான் ஒருத்தன லவ் பண்ணேன் அவன் என்னை அப்படியே மறந்துட்டு போயிட்டான் !!


அகிலா அதெல்லாம் ஒன்னும் இல்லை !! உங்க வீட்ல பிரச்னை ஆனது சரி அப்புறம் பாத்துக்கலாம்னு கொஞ்சம் கேப் விட்டேன் !!



அப்ப பிரச்சனை வந்தா அப்படியே விட்டுட்டு ஓடிடுவ அடப்பாவி உன்னைப்போயி நான் லவ் பண்ணேன் பாரு ...



ஹேய் அப்படிலாம் விடுவானா சரி எப்படி இருக்க என்ன பண்ணுற எந்த காலேஜ் ?



உலகத்துல தன் காதலி என்ன படிக்கிறான்னு கூட தெரிஞ்சிக்காத காதலன் நீ தான் !!



சாரி அகிலா என்ன பண்ணுறது தினம் ஒருத்தன் வந்து மிரட்டுவான் !! சரி காலெஜ்லாம் போன பிறகு பாத்துக்கலாம்னு நினைச்சேன் அவ்வளவு தான் !!



தினம் ஒருத்தன் மிரட்டுனானா ? யாருடா மிரட்டுனா ?



எவன்னே தெரியாது கேட்டா உனக்கு சித்தப்பா பையன் பெரியப்பா பையன் அண்ணன் அண்ணன் மாதிரின்னு... எண்ணிப்பார்த்தா எட்டு பேர் வருவானுங்க !!



ஒருத்தன் கூட என் மாமா பையன்னு சொல்லலையா ?



அது நான் கேள்விப்பட்டேன் . உன்னோட பக்கத்து வீட்டுபய வினோத் இருக்கான்ல அவன்தான் ஒவ்வொருத்தனையும் கூட்டிட்டு வந்தான் !!



அவன் தான் பிரச்னைக்கே காரணம் !!


என்ன சொல்ற அகிலா அவன் தான் காரணமா ?



ஆமாடா அந்த பரதேசி என்னை ஒன் சைடா லவ் பண்ணுறான் போல நான் அவனை கண்டுக்கவே மாட்டேன் !! அதுனால அந்த பண்ணி என்னை போட்டு விட்டுட்டான் !!


அவன் தான் உன்னோட மாமா பையனா ?


அவன் இல்லைடா என் மாமா பையன் பேரு பிரபு ! இங்க கோவில்பட்டில இருக்கான் !! அவனால ஒன்னும் பிரச்னை இல்லை !!


என்ன அகிலா குழப்புற ?


டேய் நான் சொல்றதை தெளிவா கேட்டுக்க !! நான் அகிலா உன்னோட லவ்வர் ! பிரபு என்னுடைய முறைப்பையன் ஆனா அவன் என்னுடைய அக்காவ லவ் பண்ணுறான் !


ஓ !!


அக்கான்னா சொந்த அக்கா இல்லை பெரியப்பா பொண்ணு !! அவளும் அவனை லவ் பண்ணுறா ! அதனால அவன் நம்ம லவ்வுக்கு குறுக்க வரவே மாட்டான் ! ஆனா இந்த வினோத் இருக்கானே அவன் நட்பா பேசுறான் ஆனா உள்ளுக்குள்ள அவனுக்கு உன் மேல பொறாமை !! அதனால அவன் தான் பிரபுகிட்டு போட்டு விட்டுருக்கான் !! ஆனா உன்னைப்பத்தி தப்பு தப்பா இந்தமாதிரி சூர்யா ஒரு பொருக்கி அவன் வேஸ்ட்டு அப்படி இப்படின்னு சொல்லிருக்கான் ! உடனே இந்த லூசு எங்கண்ணன் கிட்ட போட்டு விட்டான் .


ஓஹோ !!


ம்ம் அதாவது நான் ஒரு தப்பானவன லவ் பண்ணி கெட்டு போயிடக்கூடாதாம் அந்த அக்கரைல அவன் போட்டு விட ... நான் வீட்ல அந்தமாதிரிலாம் ஒன்னுமே இல்லைனு சமாளிச்சிட்டேன் !! உன்னை மிரட்ட வந்தப்ப நீ என்ன சொன்ன ?


நான் இந்தமாதிரி அகிலா ரொம்ப நல்லப்பொண்ணு . நான் அவளை லவ் பண்ணது உண்மை தான் !!


அடப்பாவி


இரு அகிலா சொல்றதை முழுசா கேளு ...


ம்ம் சொல்லு


ஆனா அந்த பொண்ணு என் லவ்வ ஏத்துக்கல நான் படிக்கணும்னு சொல்லிடிச்சி நானும் அதுக்கப்புறம் டிஸ்டர்ப் பண்ணல அதுகூட நான் சீரியஸா கேக்கல , சும்மா அந்த பொண்ணுகிட்ட நீ யாரையாச்சும் லவ் பண்ணுறியான்னு கேட்டேன் அவ்வளவு தான்னு சொன்னேன் !! அப்புறம் லைட்டா மிரட்டி திரும்ப அந்த பொண்ணுகிட்ட பேசுறத பார்த்தேன் அவ்வளவுதான்னு சொல்லிட்டு போயிட்டானுங்க


அப்பா நல்ல காரியம் பண்ண ... இனிமே நம்ம ரொம்ப ரகசியமா தான் லவ் பண்ணனும் !! இப்போதைக்கு அந்த வினோத் பிரச்னை இல்லை ... அவன் ஃபெயிலாகி திருப்பூருக்கு வேலைக்கு போயிட்டான் !! வேற யாருகிட்டயும் மாட்டாம தான் நாம சந்திக்கணும் !


ம்ம் ஓகே ஓகே ...


இதுல நீ ஒன்னும் பேக் அடிக்கல தான லவ் இருக்கு தான ??
[+] 4 users Like dannyview's post
Like Reply
#11
என்ன அகிலா அதெல்லாம் விடுவேனா ஐ லவ் யு அகிலா ...



காலேஜ் சேர்ந்தே ரெண்டு மாசம் ஆகுதுடா இன்னும் என்னை பார்க்கணும் பேசணும்னு உனக்கு தோணவே இல்லையா ?


சரி விடு அகிலா எப்படி இருக்க எந்த காலேஜ் நாம மீட் பண்ணலாமா ?


ம்ம் நீ எந்த காலேஜ் என்ன கோர்ஸ் எல்லாம் சொல்லவா ?


ம்ம் சொல்லு பார்ப்போம் !!


அகிலா எல்லாத்தையும் சொல்ல அவள் காதலின் ஆழம் கண்டு வியந்து போனேன் !! அப்போ பொண்ணுங்க உள்ள எல்லாமே வச்சிருக்காங்க பசங்க தான் வெளில காட்டிக்கிறாங்க !!


அகிலா என்னை மறந்துவிட்டதாகவே நினைத்துவிட்டேன் !! ம்ம் எப்படியோ என் காதலும் காதலியும் கிடைத்துவிட்டார்கள் !!


ம்ம் இப்ப நான் எங்க படிக்கிறேன் எப்படி போறேன் வரேன் என்ன கோர்ஸ் எல்லாம் சொல்லு பார்ப்போம் !!


அகிலா அதெல்லாம் தெரியாது அகிலா ஐ லவ் யு அது மட்டும் தான் தெரியும் !!


அப்பாடா புல்லரிக்குதுடா ...


சரி சொல்லு அகிலா டிரெயின்ல போறியா ?


ம்ம் ... நீ வருவியா ?


எனக்கு அடுத்தவாரம் லீவ் ! சுதந்திர தினம் வியாழக்கிழமை வருது ! அப்படியே வந்தா வெள்ளி சனி ரெண்டு நாள் லீவ் போட்டு மண்டே மார்னிங் காலேஜ் வந்துடுவேன் !!


ம்க்கும் அப்படின்னா வெள்ளிக்கிழமை ஒருநாள் தான் !!


நீ எப்படி வெள்ளிக்கிழமை கட் அடிச்சிட்டு வருவியா ?


டேய் தினமும் கட் அடிச்சி தான்டா போகுது !!


என்ன சொல்ற அகிலா ?


அப்போது தான் இந்த காலேஜ் பல்கலைக்கழகம் மேட்டர் ஸ்ட்ரைக் வெளில சுத்துறது எல்லாம் சொன்னா ... இதுல தான் என்னைப்பத்தி அங்கங்க விசாரிச்சு என் நண்பர்கள் மூலமாவே என் நம்பர் வாங்கி பேசுனது எல்லாம் நடந்துருக்கு ...


அப்ப சும்மா சுத்திகிட்டு இருக்கீங்களா ?


எஸ் வேற என்ன பண்ணுறது ? நேரா காலேஜ் போவோம் எல்லாரும் அசெம்ம்பிள் ஆவோம் ! ஜஸ்ட் ஒரு ஆப் அவர் ... எங்கனா கிளம்பிடுவோம் !!


பார்ரா ம்ம் அப்புறம் ??


அப்புறம் என்ன ? கதையா சொல்லுறேன் நீ வெள்ளிக்கிழமை காலைல நம்ம ஸ்டேஷன் வந்துடு !! காலைல ஏழு மணிக்கு டிரெயின் !!


ஓ ! சரி நான் வந்துடுறேன் !!


இப்படியாக என் காதல் வளர ஆரம்பித்தது !! அப்போது தான் முதன்முதலில் இந்த பிரபு பற்றி கேள்விப்பட்டேன் ... ஆனா அகிலா அப்ப சொன்னது , பிரபு பத்தி பிரச்னை இல்லை ! அவன் நம்ம காதலுக்கு குறுக்க வரவே மாட்டான் ஆனா அவன் தான் இப்போ அகிலாவின் கணவன் !!
[+] 4 users Like dannyview's post
Like Reply
#12
இதெல்லாம் மனத்திரையில் ஓட நான் துளசி வீட்டில் அமர்ந்திருந்தேன் !! வேறு விஷயங்களை பேசவோ கேட்கவோ எனக்கு பொறுமையில்லை !! நேரடியாக விஷயத்தை ஆரம்பிக்க நினைத்து , துளசி என்ன பிரச்னை என்றேன் !!



அது இருக்கட்டும் உங்களுக்குள்ள என்ன அதை முதல்ல சொல்லு !!


நானும் அகிலாவும் ஒரு காலத்துல லவ்வர்ஸ் !!


ஓ !! அதான் விஷயமா ? சரி சொல்லு என்ன நடந்துச்சு ? ஏன் நீங்க கல்யாணம் பண்ணிக்கல ?


துளசி நான் அதெல்லாம் விலாவாரியா கூட உனக்கு சொல்லுறேன் இப்ப என்ன பிரச்னை அதை சொல்லு முதல்ல ...


ம்ம் சொல்லுறேன் !! ஆனா விலாவாரியா சொல்லணும் !!


ம்ம்


அகிலாவோட பிரச்னை அகிலாவோட புருஷன் தான் !!


ஏன் ?

சந்தேகப்படுறான் ராஸ்கல் !!


சந்தேகப்படுறானா ? என்னடா இது எனக்கு வந்த அதே பிரச்சனையா ?


என்னடா யோசிக்கிற ?



இல்லை அதுல என்ன பிரச்னை ?



பிரச்னை அந்த ராஸ்கல் தினம் தினம் இவளை வார்த்தைகளால் டார்ச்சர் பண்ணுறான் !!



அவர் என்ன வேலை செய்யிறார் ?



அதான் பிரச்னை ! அவனுக்கு வேலையும் இல்லை ஒன்னும் இல்லை !! இவளோட மாமா பையன் தான் அவன் !!



அவன் பேர் என்ன ?


அவன் பேர் பிரபு !!



பிரபு .... மாமா பையன் ... எனக்கு தலையே வெடித்துவிடும் போல ...



என்ன சொல்லுற துளசிஅவளோட மாமா பையன் பிரபுவை தான் இவ கல்யாணம் பண்ணிருக்காளா ??



ஆமாடா ... உனக்கு தெரியாதா ?


தெரியாது ! அவளுக்கு கல்யாணம் ஆகிடிச்சி ஒரு குழந்தை இருக்கு அது மட்டும் தான் தெரியும் !!



ஓ !! அந்த அளவுக்கு தெரிஞ்சி வச்சிருக்கியா ??



சரி சொல்லு ...



அவளுக்கு 2012ல கல்யாணம் ஆகியிருக்கு !! அவளுக்கு பிறந்த குழந்தையே அவளோட குழந்தை தானான்னு அவனுக்கு சந்தேகம் !! அதுல ஆரம்பிச்சி இப்ப வரைக்கும் போகுது ...



ஏன் சந்தேகப்படுறான் ?


ஏன்னா கல்யாணம் பண்ணி சரியா ஒன்பது மாசத்துக்குள்ள அவளுக்கு குழந்தை பிறந்துடுச்சு ...

ம் அப்புறம் ...



அப்புறம் என்ன ? வேலைக்கு போற இடத்துல கூட எவனாச்சும் வாத்தியார் கூட இல்லைன்னா ஸ்டூடன்ட் எவனா இருந்தா கூட சந்தேகம் தான் !! அதுக்கு தான் இவ கேர்ள்ஸ் ஹை ஸ்கூலுக்கு டிரான்ஸ்பர் ஆகி வந்தா !! ஆனாலும் சில வாத்தியாருங்க இருக்க தான செய்வாங்க ! அதெல்லாம் இவனுக்கு பெரிய பிரச்னை ! அவ புடவை கட்டிருந்த அழகை பார்த்தியா ? இன்னமும் வயசு பொண்ணுங்க பிரைவேட் ஸ்கூல்ல வேலை செய்யிற மாதிரி இடுப்பு தெரியாம எல்லாத்தையும் மறைச்சி ...


சரி இது தொடர்ச்சியா நடக்குதுன்னா திடீர்னு இப்ப என்ன பெரிய பிரச்னை ?
[+] 3 users Like dannyview's post
Like Reply
#13
இப்ப ஒரு ஸ்கூட்டி பெப் வாங்கிருக்கா . அதை வாங்குனதுல , ஒருநாள் பைக் ஸ்டார்ட் ஆகாம நின்னுடுச்சு!! நானும் அவளும் ஈவ்னிங் வரும்போது ஒன்னா தான் வருவோம் !! அன்னைக்கு ஸ்ரீரங்கம் கோவிலுக்கு போலாம்னு ரெண்டு பேரும் போனப்ப தான் இந்த பிரச்னை ! பைக் நிக்கவும் இவ புருஷனுக்கு போன் பண்ணிட்டா அந்தாளு வெட்டியா தான இருக்கான் அதனால அவனும் பைக் எடுத்துகிட்டு வரேன்னு சொல்லிட்டான் !! நானும் என் புருஷனுக்கு போன் பண்ண அவரும் வந்தார் ! அப்போ எங்களோட கொலீக் ஒருத்தர் வந்தார் ! அவருகிட்ட பேசிட்டு நான் கிளம்பிட்டேன் !! அதான் துணைக்கு இருக்காரேன்னு நான் போயிட்டேன் !! அது நாள் வரைக்கும் அவளை சந்தேகப்பட்டு அவ புருஷன் பிரச்னை பண்ணிட்டு இருக்க மேட்டர் எனக்கு தெரியாது !! இவங்க ரெண்டு பேரும் தனியா நிக்க அவ புருஷன் பிரபு வர உடனே அங்கே சண்டை போட்டு அந்த ஆள அடிச்சிட்டான் !! அவரு இவனை போட்டு அடிக்க பெரிய சண்டையாகி ... கடைசில அகிலா புருஷன காவிரி ஆத்துல தள்ளி விட்டு போலீஸ் கேஸ் அளவுக்கு போயிடிச்சு !!



ஐயோ அப்புறம் ?



அந்த ஆளு பெரிய ஆளு , கொஞ்சம் அரசியல் தொடர்புலாம் இருக்கு ! அதனால கேஸ் இவன் மேல மட்டும் வரமாதிரி செஞ்சிட்டான் !



அப்படியா ? சரி அதுல என்ன பிரச்னை ?



இப்ப இவ புருஷன் ஃபாரின் போகணும் !!எல்லாமே ரெடி ஆகிடிச்சி !! போலீஸ் கிளியரன்ஸ் கொடுக்கணும்னு அந்த கேஸ் வாபஸ் வாங்கணும் .


இதுக்கெல்லாமா போலீஸ் கிளியரன்ஸ் வேணும் ?


அசால்ட் கேஸ் !! சும்மா விடுவாங்களா ? அதுவும் பாரின் போறதுக்கு இது முக்கிய பிரச்னை !!


ஓ !


சரி அந்த ஆள்கிட்ட பேசி பார்க்கலாம் தான ? உங்க கொலீக் தான ?


அட நீ வேற அவன் சரியான பொருக்கி !! ஸ்கூல்ல பல பொண்ணுங்க மேல கை வச்சிருக்கான் ! கெமிஸ்ட்ரி வாத்தியார் ! பிராக்டிக்கல்ல கை வச்சிடுவேன்னு இவன் கை வச்சிடுவான் !! அப்படிப்பட்டவன் டீச்சர்ஸ் மேல மட்டும் கை வச்சதே இல்லை !!

இப்ப அகிலா அவன்கிட்ட மாட்டிகிட்டு தவிக்கிறா .


என்ன பண்ணுறான் ?


சரி நான் முழுசா சொல்லிடுறேன் நீயே புரிஞ்சிக்க முயற்சி பண்ணு புரியலைன்னா நான் சொல்றேன் !!


என்ன துளசி டீச்சர் மாதிரி பேசுற ?


நான் டீச்சர் தானடா ?


கூல் ...


அந்தாளு பேரு மூர்த்தி !!கல்யாணமே பண்ணிக்காத பொருக்கி பிரம்மச்சாரி !! இப்ப ஸ்கூல்ல பொண்ணுங்கள தொட்டு தொட்டு பேசி எந்த பொண்ணு மடங்கும்னு பார்த்து கொஞ்சம் கொஞ்சமா அவன் வழிக்கு கொண்டு வந்துடுவான் !! டீச்சர்ஸ் யார்கிட்டையும் வாலாட்டாம ஒழுங்கா இருந்தான் !! இப்ப இந்த அகிலா பிரச்சனையில் என்னமோ தான் பெரிய யோக்கியன் மாதிரியும் அகிலா புருஷன் ரோட்ல வச்சி சண்டை போட்டதால் தனக்கு அவமானமாகிடிச்சி , அவனை விடமாட்டேனு கேஸ் போட்டு வச்சிருக்கான் !!


அந்த கேஸ்க்கு ஒரு வக்கீலை புடிச்சி செலவு பண்ணுறது எல்லாமே அகிலா தான் !!


ம்ம்

இப்ப காம்பரமைஸ் பேசுனா , எங்க வாத்தியார் சர்க்கிள் அப்புறம் ஹெட் மாஸ்டர் யாரை வச்சி பேசினாலும் , என் கவுரம் போச்சி அவனை என்னை பல பேர் முன்னாடி மன்னிப்பு கேக்க சொல்லுங்கன்னு சொல்லி எல்லார் வாயையும் அடைச்சிடுவான் . ஆனா அவன் நோக்கமே வேற ...


என்ன நோக்கம் ?


அவனோட நோக்கம் அகிலா !!
[+] 4 users Like dannyview's post
Like Reply
#14
Nalla erukku nanba... ennum continue pannunga...
Like Reply
#15
Super update
Like Reply
#16
Great going
Like Reply
#17
Apo kulanthai yaruku than piranthuchu, angathan twist iruko
Like Reply
#18
அதிர்ச்சியாகி எழுந்துவிட்டேன் !!


என்ன சொல்ற துளசி ?


இருடா கோவப்படாத நீயாச்சும் நிதானமா யோசிச்சி நல்ல தீர்வா சொல்லு .


இவனையெல்லாம் என்னாத்த தீர்வு சொல்லுறது தீர்த்திட வேண்டியது தான் !!


டேய் ஏன்டா எல்லா ஆம்பளைங்களும் இப்படியே இருக்கீங்க . கொஞ்சம் பொறுமையா கேளுடா ...


ம்ம் சொல்லு !!


அவன்கிட்ட அகிலா காம்ப்ரமைஸ் பேச போனப்ப , நாம தனியா பேசி ஒரு நல்ல முடிவுக்கு வரலாம் மேடம்னு அன்னைக்கு அவனோட கெமிஸ்ட்ரி லேப் வர சொல்லிட்டான் !!

அந்த கெமிஸ்ட்ரி லேப்ல வச்சி தான் எல்லா பொண்ணுங்களையும் . அதுக்கு ஸ்கூல் பியூன் ஒருத்தன் தான் காவல் !! அரசியல் செல்வாக்கு பள்ளிக்கூடத்துல புகுந்தா எந்த அளவுக்கு நாசமாகும்னு எங்க ஸ்கூல் ஒரு உதாரணம் !!


ஆமா துளசி இப்பல்லாம் இது நிறைய நடக்க ஆரம்பிச்சிடிச்சி !! என்ன நடந்துச்சு சொல்லு துளசி டென்சன் ஏறுது ..


ம்ம் இரு இரு கோவப்படாத , அகிலா உள்ளப்போனதும் நாம பேசுறது யாருக்கும் கேட்க வேண்டாம் மேடம்னு கதவை தாழ் போட்டிருக்கான் !!


கதவை தாழ் போட்டானா ? இதெல்லாம் ஸ்கூல்ல நடந்ததா ?


ஆமாடா அவன் பிஜி ! அதனால அந்த கெமிஸ்ட்ரி லேப் முழுக்க அவன் கண்ட்ரோல் தான ? அதனால அங்க அவன் என்ன வேணா பண்ணலாம் !!


ம்ம் அப்புறம் என்ன ஆச்சு ?


அவன் பாட்டுக்கு , அன்னைக்கு உன் புருஷனால எனக்கு பெரிய அவமானமா போச்சு ...


சார் அன்னைக்கு நீங்க தான சார் என் புருஷன அடிச்சி ஆத்துல தள்ளிவிட்டீங்க ! பார்த்த எல்லாருமே உங்களை தான் பெரிய ஆளுன்னு சொன்னாங்க . உங்களுக்கு அதனால ஒன்னும் அவமானம் இல்லை சார் !!


என் மேல ஒருத்தன் கை வச்சிட்டு அவன் உயிரோட இருக்கிறதே எனக்கு அவமானம் தான் அகிலா .


சார் அதுக்கு தான் அவர் மேல கேஸ் குடுத்துட்டீங்க ! அதுவும் அட்டம்ப்ட் மர்டர் கேஸ் ! இப்ப அவரு பாரின் போகணும் சார் !! உங்களுக்கே தெரியும் வேலைக்கும் போகாம வீட்டுல இருந்துகிட்டு வெட்டியா இருக்க ஆளு எப்படியோ அவர் நண்பர் மூலமா ஒரு வேலை கிடைச்சிருக்கு . கிட்டத்தட்ட மூணு லட்சம் என்னுடைய pf மொத்தம் காலி சார் !! நீங்க மனசு வச்சா எல்லாமே ஸ்மூத்தா முடிஞ்சிடும் !


ம்ம் ஓகே அகிலா உன் மேல எனக்கு ரொம்பவும் அக்கறை உண்டு !! உன்னோட விஷயமெல்லாம் கேள்விப்பட்டேன் !! பாவம் !! சரி போகட்டும் ஒன்னு பண்ணு நான் கேஸ் வாபஸ் வாங்கிடுறேன் எல்லாமே உன் கைல தான் இருக்கு .


என்ன பண்ணனும் சொல்லுங்க சார் ?


அன்னைக்கு உன் புருஷன் என்ன சொன்னான் ?


என்ன சொன்னாரு ?


நீ என்ன என் பொண்டாட்டிய வச்சிருக்கியான்னு தான கேட்டான் !!


ம்ம் ...


சொல்லு அகிலா அப்படி தான கேட்டான் !


ம்ம்


அதை உண்மையாக்கிடு ...



அதிர்ச்சியில் என் இதயம் வெடித்துவிடும் போல , என்ன சொல்லுற துளசி உண்மையில் ஒரு வாத்தியார் அப்படி கேட்டானா ?


அவன் முழு பொருக்கி அவன் அப்படிதான் கேப்பான் !!


அகிலா அதுக்கு என்ன சொன்னா ... நான் அதிர்ச்சியின் உச்சத்தில் இருக்க வாசலில் கேட் திறக்கும் சத்தம் !!

ஹேய் நாம அப்புறம் பேசலாம் என் புருஷன் வந்துட்டார் !! இன்னைக்கு பார்த்து இவ்வளவு சீக்கிரம் வந்துட்டார் ...


துளசி அவரை வரவேற்று ஏற்கனவே அறிமுகமான என்னை மீண்டும் அறிமுகம் செய்துவைத்தாள் !!


இவரை தெரியாதா என்று அவரும் சகஜமாக பேச எனக்கு இருப்பு கொள்ளவில்லை !! இப்ப நான் எப்படி இவகிட்ட பேசுறது ? இனி நாளைக்கு தானா ??

என்ன துளசி வந்தவருக்கு ஒரு காபி கூட போட்டு தரலையா ?


இல்லைங்க ரோட்ல தான பார்த்தோம் !! அகிலா வேற இருந்தா அதான் அங்கே மூனு பேரும் காபி சாப்பிட்டோம் !! அகிலா வீட்டுக்கு போயிட்டா நாங்க இப்ப தான் உள்ள வந்தோம் நீங்க வரீங்க ? இன்னைக்கு என்ன இவ்வளவு சீக்கிரம் !!


ஏண்டி எனக்கே என்னைக்காச்சும் தான் இப்படி அமையுது அது பொறுக்கலையா உனக்கு ?


ம்ம் நான் என்ன ஏன் வந்தீங்கன்னா கேட்டேன் ..


அதற்கு மேல அங்கே இருக்க பிடிக்காமல் ஓகே நான் கிளம்புறேன் ...


இருங்க சாப்பிட்டு போலாம் !!


பரவாயில்லை நான் இன்னொரு நாள் வரேன் !! இங்க தான இருக்கோம் என்று விடைபெற்றேன் !!


நல்லவேளையாக ஒரு இரண்டு நிமிடம் துளசியிடம் தனியாக பேச டைம் கிடைச்சது ! போன் நம்பர் வாங்கிக்கொண்டு விடைபெற்றேன் !!


மனசு ரணமானது !! பைக்கை எடுக்க நினைப்பே வராமல் மீண்டும் காவிரி ஆற்றுக்கே நடந்தேன் !! துளசிக்கு உடனே போன் பண்ணக்கூடாது ! அவ புருஷனுக்கு எது தெரியவந்தா பிரச்னை ஆகிடும் !!



பொறுமையாக நடந்து காவிரியின் நடுவில் நின்றேன் ! இதே காவிரி பாலத்தில் நானும் அகிலாவும் எத்தனையோ முறை சந்தித்து பேசி இருக்கோம் !! காலம் கடந்துவிட்டது , இப்போது நானும் காவிரியும் மட்டுமே .. இடையில் அகிலா என்னன்னவோ ஆகி இருந்தாள் !! ஒரு ஸ்கூல் வாத்தியார் என்னுடைய அகிலாவை இப்படி ஒரு கேள்வி கேட்டுருக்கான் !! அவனை என்ன பண்ணலாம் ?


மனம் மீண்டும் பழைய நினைவுகளில் மூழ்கியது !!
[+] 2 users Like dannyview's post
Like Reply
#19
அகிலாவுக்கு பிடித்த பாடம் கெமிஸ்ட்ரி !! அதுல அவள் வாங்கிய மார்க் இப்பவும் ஞாபகம் இருக்கு !! 197 . முதன்முதலாக அகிலாவிடம் முத்தமே கெமிஸ்ட்ரியில் தான் கேட்டேன் !! ஆனால் இன்று ஒரு கெமிஸ்ட்ரி வாத்தியார் என் அகிலாவை ...


பிளாஷ் பேக் ...



அது என்ன கெமிஸ்ட்ரி முத்தம்னு சொல்லவா ??



முதன்முதலாக அகிலாவிடம் முத்தம் கேட்டேன் ! ஆனா அவ வெட்கப்பட்டு கொடுக்கவே இல்லை !! ஆனால் நான் முத்தத்தை நேரடியாக கேட்கவில்லை ...



அகிலா உனக்கு கெமிஸ்ட்ரி தான ரொம்ப பிடிச்ச சப்ஜெக்ட் !!



ம்ம் அதுக்கு என்ன ?



சரி நான் மூனு பொருள் கேக்குறேன் உன்னோட கெமிஸ்ட்ரில ... சேர்த்து குடுக்குறியா ?



ம்ம் என்ன வேணும் ?



ஒரு பொட்டாசியம் ...



ஒரு பொட்டாசியமா ?



பொட்டாசியத்துக்கு சிம்பல் என்னடி ?



ம் k .



ஒரு அயோடின்



I



ரெண்டு சல்பர்



SS



ம்ம் இப்ப சேர்த்து குடு ...



Kiss ... ம்ம் ஆசை தோசை போடா ...



அகிலா நாம முதன்முதலா வெளில போறோம் !! கண்டிப்பா எனக்கு குடுத்தே ஆகணும் !!!



அதெல்லாம் ஒன்னும் கிடைக்காது வேணும்னா ஒரு சல்பர் ஒரு lanthunam ஒரு பாஸ்பரஸ் கொடுக்குறேன் ...


அப்படின்னா ?


ம்ம் தேடிப்பாரு ...


Slap !!


அன்று காலையிலேயே கிளம்பும்போது அம்மா கேட்டாங்க எங்கடா போற?


அம்மா ஒரு ஃபிரண்டை பார்க்க போறேன் மதியம் வந்துடுவேன்னு பொய் சொல்லிவிட்டு குளித்தலை ரயில் நிலையத்தில் நின்றேன் !!


ஒரு அடர் சிவப்பு நிற சுடிதாரும் நீல நிற பேண்ட் அதே கலரில் சிவப்பு பார்டர் வைத்த ஷால் போட்டுக்கொண்டு அப்ஸரஸ் போல வந்தாள் என் காதலி அகிலா !! அகிலா அப்போது இருந்த நடிகைகளில் சவுந்தர்யா போல இருந்தாலும் அவள் குரலும் சிரிப்பும் ரம்யா கிருஷ்ணன தான் ஞாபகப்படுத்தும் !! ஆமாங்க அகிலா எப்பவுமே ரம்யா கிருஷ்ணன் போல பளீர்னு தான் சிரிப்பா ... எப்போதும் சிரிப்பு தான் ! அதனால தான் அவளுக்கு இத்தனை நண்பர்கள் இருந்தாலும் அதை சிரிப்பாகவே கடக்க முடிகிறது !!


என்னை தூரத்திலே பார்த்தாலும் அவள் சொன்னபடி நான் டிக்கெட் மட்டும் வாங்கிக்கொண்டு காத்திருந்தேன் !! ஸ்டேஷன்ல எதுவும் பேசக்கூடாது என்பது அகிலா விதித்த கட்டுப்பாடு !!


அவள் கல்லூரி தோழிகளும் தோழர்களும் சூழ ஜாலியாக பேசி சிரித்துக்கொண்டு ரயிலுக்காக காத்திருந்தார்கள் !!



ஆனா அந்த முதல் அனுபவமே மறக்க முடியாதது !! சொல்லப்போனா ரொம்ப இன்சல்டிங்கா போயிடிச்சு ...


அதாவது அகிலாவின் ஆண் நண்பர்கள் அறிமுகம் கிடைத்தது !! எங்களுக்குன்னு ஒரு பிரைவசி கிடைக்கும்னு நினைச்சேன் ஆனா அவனுங்க மடில கட்டுன பூனை மாதிரி கூடவே இருந்தானுங்க !!


ஜாலியா பேசி சிரிச்சிகிட்டு ஒரிஜினல் கல்லூரி வாழ்க்கை !! என்ன இருந்தாலும் ஆர்ட்ஸ் ஆர்ட்ஸ் தான் இன்ஜினியரிங் வேஸ்ட் தான் என்று நினைக்கும்படி அப்படி ஒரு ஜாலியான வாழ்க்கை !!


பசங்க பொண்ணுங்க கூச்சமே இல்லாம சகஜமா பழகுனாங்க !!

திருச்சி கோட்டை ரயில் நிலையத்தில் வந்து இறங்கினோம் ! யாரும் கல்லூரிக்கு போகல எதோ தகவலுக்கு காத்திருந்தது போல காத்திருந்தோம் !! பிறகு அவ்வளவு தான்னு எல்லாரும் கிளம்பி முக்கம்பு போயாச்சு ... அங்க எங்களை ஒரு ஐந்து நிமிஷம் கூட தனியா விடல ...


இப்படியாக தான் கல்லூரி காலம் முழுக்க அப்பப்ப நான் லீவ்ல வருவதும் சந்திப்பதுமாக என் காதல் வளர்ந்தது .
[+] 4 users Like dannyview's post
Like Reply
#20
ஆனால் அகிலா ஒருவிஷயத்தில் தெளிவாக இருந்தாள் !! பசங்க கூட பழகுனா ஆனா எல்லாமே வெறும் நட்பு தான் !! என்னுடன் காதல் !! ஆனா அளவான ரொமான்ஸ் தான் !! சொல்லப்போனா பேசுறதுல அவ்வளவு ஆர்வம் காட்டுவாள் சின்னதா ஒரு கிஸ் குடுக்க கூட அப்படி யோசிச்சா ...

எங்கள் முதல் முத்தம் சினிமா தியேட்டரில் !!


மாதவன் நடித்த பிரியமான தோழி படத்தில் தான் நடந்தது அது !!


என்ன ஒரு விஷயம்னா அகிலா எப்பவுமே கூட யாராச்சும் தோழி நண்பன் என்று இரண்டு மூன்று பேராக தான் வருவா தனியா என்னை சந்திச்சதே கிடையாது !! கேட்டா நாம மட்டும் தனியா போனா மாட்டிப்போம் !! மாட்டிக்கிட்டாலும் சமாளிக்க முடியாது ! அதே கும்பலா போனா ஃபிரண்ட்ஸ் கூட படத்துக்கு போனேன்னு சமாளிப்பேன்னு என் வாய அடைச்சிடுவா !! ஆனா ஒரு விஷயம் நல்லபடியா நடந்தது !!! கும்பலா போனாலும் நாங்க சினிமாவுக்கு போனா மட்டும் தனியா அமர பிரைவசி கிடைத்தது !!


அப்படிதான் பிரியமான தோழி படத்துக்கு போயிருந்தப்ப அவளுடைய தோழி ஒரே ஒருத்தி பேர் கவுரி ! அவள் மட்டும் வந்திருந்தா !! அதனால அன்று துணிந்து அகிலாவின் கன்னத்தில் முத்தமிட்டேன் !!


பாத்துக்கங்க முத்தம் கொடுக்கவே ஒரு வருஷம் ஆகியிருக்கு !! அவ்வளவு கண்ணியமான என் காதலில் எந்த சிக்கலும் இல்லை !! யுஜி முடித்து பிஜி சேர்த்துவிட்டாள் ! எனக்கும் கடைசி வருடம் !! தினம் தினம் போன் பேசுவது திருச்சியின் பார்க் தியேட்டர் சுற்றுலா தளம் என ஒரு இடத்தை விடாம சுத்தி இருக்கோம் !!
[+] 4 users Like dannyview's post
Like Reply




Users browsing this thread: 6 Guest(s)