Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
#21
என் வாழ்க்கையில் இதுதான் பெஸ்ட் மேட்ச்’ - திருமணம் குறித்து சாய்னா நேவால்!இந்தியாவின் முன்னணி பேட்மின்டன் வீராங்கனையாகத் திகழ்பவர், சாய்னா நேவால். கடந்த 2012-ம் ஆண்டு, லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றார். பேட்மின்டன் போட்டிகளில் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் என்ற சாதனையைப் படைத்தவர், சாய்னா. அர்ஜுனா விருது, பத்ம ஸ்ரீ, பத்ம பூஷண் உள்ளிட்ட விருதுகளை வாங்கிய இவர், விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான ராஜீவ் கேல் ரத்னா விருதையும் பெற்றுள்ளார். ஹைதராபாத்தைச் சேர்ந்த சாய்னா, தனது சக பேட்மின்டன் வீரர் பாருபள்ளி காஷ்யப்பை திருமணம் செய்துகொண்டுள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், ``இது தான் என் வாழ்வில் சிறந்த ஆட்டம்” என்று குறிப்பிட்டுள்ளார்.இருவரும் பல ஆண்டுகளாகக் காதலித்து வந்ததாகக் கூறப்பட்ட நிலையில், இன்று திருமணம் நடந்துள்ளது.

[Image: DuX-YdDU8AIPgde_21321.jpg]
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#22
[Image: DuX-YdEU8AEnHAB_21015.jpg]

 இது தொடர்பாக சாய்னா,  ``2007-08 ம் ஆண்டுதான் நாங்கள் அறிமுகமானோம். டோர்னமென்டுகளை ஒன்றாக விளையாடியுள்ளோம். ஒன்றாக பயிற்சிபெற்றுள்ளோம். இருவரின் விளையாட்டிலும் கவனம் செலுத்தியுள்ளோம். போட்டி மயமான இந்த உலகில், ஒருவருடன் நெருக்கமாகப் பழகுவது என்பது கடினமானது. எப்படியோ நெருக்கம் எங்களுக்குள் சாத்தியமானது. படிப்படியாக எங்கள் நட்பு வளர்ந்தது. அப்போது நாங்கள், திருமணம்குறித்து யோசித்துப் பார்த்ததில்லை. நாங்கள் டோர்னமென்ட்டை வெல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் இருந்தோம்.நாங்கள் இருவரும் பெரும்பாலும் இணைந்தே பயணித்தோம். இதை என் பெற்றோரும் அறிந்திருந்தனர். ஆகவே, என் விருப்பத்தை நான் கூறவேண்டிய தேவை  எழுவில்லை. அவர்களே என் விருப்பத்தைப் புரிந்துகொண்டனர்” என்றார். டிசம்பர் 20-ம் தேதியிலிருந்து ப்ரீமியர் பேட்மின்டன் லீக் ஆரம்பிக்கிறது. அதன் பின், டோக்யோ போட்டிக்கான தகுதிப் போட்டிகள் வருகின்றன. இந்நிலையில், இவர்களின் திருமணம் 16-ம் தேதி நடைபெறும் எனக் கூறப்பட்டது. முன்னதாகவே, இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடந்துள்ளது. தொடர்ந்து சாய்னா - காஷ்யப் திருமண வரவேற்பு, விளையாட்டு, அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் பங்கேற்க, ஹைதராபாத் நகரில் டிசம்பர் 16 அன்று, பிரமாண்டமாக நடைபெற உள்ளது.
Like Reply
#23
[Image: 201812160849296546_Kohli-notches-up-hund...SECVPF.gif]

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட்: விராட் கோலி சதம்

அடித்து அபாரம்

இந்தியா - ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெர்த்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில்  108.3 ஓவர்களில் 326 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது. 



இதையடுத்து, முதல் இன்னிங்சை துவங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே சறுக்கலாக அமைந்தது. பின்னர் விராட் கோலி- ரகானா ஜோடியின் பொறுப்பான ஆட்டத்தால் நேற்றைய ஆட்ட நேர முடிவில்,  இந்திய அணி முதல் இன்னிங்சில் 69 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள்  சேர்த்து இருந்தது.  கேப்டன் விராட் கோலி 82 ரன்களுடனும் (181 பந்து, 9 பவுண்டரி), ரஹானே 51 ரன்களுடனும் (103 பந்து, 6  பவுண்டரி, ஒரு சிக்சர்) களத்தில் இருந்தனர். 


இந்த நிலையில், இன்று 3-வது நாள் ஆட்டம் துவங்கியதும் ரகானே மேற்கொண்டு ஒரு ரன் கூட எடுக்காமல் ஆட்டமிழந்தார். இதன்பிறகு, கேப்டன் விராட் கோலியுடன் ஹனுமா விஹாரி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நம்பிக்கையூட்டும் விதத்தில் விளையாண்டது. சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்த கேப்டன் விராட் கோலி சதம் அடித்து அசத்தினார். சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி அடிக்கும் 25-வது சதம் இதுவாகும்
Like Reply
#24
இந்திய அரசியல் வரைபடத்தில் மீண்டும் காங்கிரசின் ஆதிக்கம் தொடங்கியது

[Image: 201812121636428707_On-the-Indian-politic...SECVPF.gif]
Like Reply
#25
ராஜஸ்தான், சத்தீஷ்கர் ஆகிய 2 மாநிலங்களில் ஆளும் பாரதீய ஜனதாவிடம் இருந்து காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றி இருக்கிறது. தெலுங்கானாவில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி காங்கிரஸ்- தெலுங்குதேசம் கூட்டணியை வீழ்த்தி அமோக வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துக்கொண்டு உள்ளது.

காங்கிரசின் இந்த வெற்றியால் இந்தியாவின் அரசியல் வரை படத்தில் மாற்றம் ஏற்பட்டு உள்ளது.

மே 2018 ஆம் ஆண்டு வரை இந்தியாவில் பாரதீய ஜனதா  மற்றும்  கூட்டணிகட்சிகள்  ஆட்சி செய்யும் மாநிலங்கள் 21 ஆக இருந்தது. தற்போது அதில் பெரும் மாற்றம் ஏற்பட்டு உள்ளது.

பா.ஜ.க. ஆட்சி நடக்கும் 21 மாநிலங்களில் 10 மாநிலங்களில் பா.ஜ.க. தனி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி நடத்தி வந்தது.

அருணாசலபிரதேசம், சத்தீஸ்கர், குஜராத், அரியானா, இமாச்சலபிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் தற்போது கர்நாடகம்.

இதில் கர்நாடகாவில் தற்போது  காங்கிரஸ் ஆதரவுடன்  மதசார்பற்ற ஜனதா தள ஆட்சி குமாரசாமி தலைமையில் நடந்து வருகிறது. மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களில் தற்போது காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உள்ளது.

அருணாசல பிரதேசம், குஜராத், அரியானா, இமாச்சலபிரதேசம்,  உத்தரபிரதேசம், உத்தரகாண்ட்  மாநிலத்தில் மட்டும்  பாரதீயஜனதா ஆட்சி நடைபெறுகிறது. 

6 மாநிலங்களில் கூட்டணி கட்சிகள் உதவியுடன் பா.ஜ.க. ஆட்சி நடத்தி  வருகிறது.

அசாம் (அசாம் கன பரிஷத், போடடோ லேண்ட் கட்சிகள் ஆதரவு),கோவா (கோவா பார்வர்டு கட்சி, மகாராஷ்டி ராவாடி கோமந்தக் கட்சிகள் ஆதரவு), ஜார்க்கண்ட் (அகில ஜார்க்கண்ட் மாணவர்கள் யூனியன் ஆதரவுடன்), மராட்டியம் (சிவசேனா ஆதரவுடன்) மணிப்பூர் (நாகா மக்கள் முன்னணி, தேசிய மக்கள் கட்சி மற்றும் லோக் ஜனசக்தி ஆதரவுடன்) திரிபுரா (திரிபுரா மக்கள் முன்னணி)

பாரதீய ஜனதா கட்சி ஆதரவுடன் நடைபெற்ற வந்த 5 மாநிலங்களில் காஷ்மீரில் தற்போது கவர்னர் ஆட்சி நடைபெற்று வருகிறது. பீகார் (ஐக்கிய ஜனதா தளத்துக்கு ஆதரவு), நாகலாந்து (நாகா மக்கள் முன்னணிக்கு ஆதரவு) சிக்கிம் (சிக்கம் ஜன நாயக முன்னணிக்கு ஆதரவு) மேகலயா( தேசிய மக்கள் கட்சிக்கு ஆதரவு) பாரதீய ஜனதா கட்சி ஆதரவுடன் ஆட்சி செய்யும் மாநிலங்கள் 4 ஆக குறைந்து உள்ளது.

காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநிலங்கள் பஞ்சாப், மிசோரம், புதுச்சேரி. மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர்

மாநில கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்கள் : தமிழ்நாடு-(அ.தி.மு.க,) ஆந்திரா-(தெலுங்கு தேசம்) கேரளா-( மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டு) மேற்கு வங்காளம் -(திரிணாமுல் காங்கிரஸ்) ஒடிசா (பிஜூ ஜனதாதளம்) தெலுங்கானா- (தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி)
Like Reply
#26
affairs na kalla thodarbu thane
Like Reply
#27
நல்ல தொடர்பும் affairs தான் ghost .பேட் affairs or குட் affairs .welcome
Like Reply
#28
[quote pid='37235' dateline='1544978009']
பரபரப்பான கட்டத்தில் பெர்த் டெஸ்ட்: இந்திய அணி 283 ரன்னில் ஆல்-அவுட் - விராட் கோலி சதம் அடித்தார்

[/quote]

[Image: 201812170347569492_In-the-thrilling-stag...SECVPF.gif]

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெர்த்தில் நடந்து வருகிறது. இதில் ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 326 ரன்கள் எடுத்தது. பின்னர் தங்களது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா, 2-வது நாள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் எடுத்திருந்தது. கேப்டன் விராட் கோலி (82 ரன்), துணை கேப்டன் ரஹானே (51 ரன்) களத்தில் இருந்தனர்
Like Reply
#29
இந்த நிலையில் 3-வது நாளான நேற்று இந்திய வீரர்கள் தொடர்ந்து பேட் செய்தனர். முதல் ஓவரை சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் வீசினார். அந்த ஓவரிலேயே ரஹானே (51 ரன்) பந்தை தடுத்து ஆட முற்பட்ட போது, விக்கெட் கீப்பர் டிம் பெய்னிடம் கேட்ச் ஆனார். அடுத்து ஹனுமா விஹாரி இறங்கினார்.

மறுமுனையில் எதிரணி பவுலர்களுக்கு சிம்மசொப்பனமாக விளங்கிய விராட் கோலி, பந்தை பவுண்டரிக்கு ஓடவிட்டு தனது 25-வது சதத்தை பூர்த்தி செய்தார். ஹனுமா விஹாரி தனது பங்குக்கு 20 ரன்கள் (46 பந்து, 2 பவுண்டரி) எடுத்தார்.

ஆஸ்திரேலிய வீரர்கள் அவ்வப்போது பவுன்சர்களை போட்டு மிரட்டிப்பார்த்தனர். ஸ்டார்க் வீசிய ஒரு பந்து கோலியின் முழங்கையை பதம் பார்த்தது. அணியின் ஸ்கோர் 251 ரன்களாக உயர்ந்த போது, விராட் கோலி (123 ரன், 257 பந்து, 13 பவுண்டரி, ஒரு சிக்சர்) சர்ச்சைக்குரிய முறையில் ‘ஸ்லிப்’ பகுதியில் கேட்ச் ஆகி நடையை கட்டினார். அவருக்கு பிறகு விக்கெட் கீப்பர் ரிஷாப் பான்ட் (36 ரன், 2 பவுண்டரி, ஒரு சிக்சர்) மட்டும் குறிப்பிடும்படி ஆடினார். முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 283 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதில் கடைசி 32 ரன்களுக்கு இந்திய அணி 5 விக்கெட்டுகளை பறிகொடுத்தது கவனிக்கத்தக்கது.

வேகப்பந்து வீச்சுக்கு உகந்த இந்திய ஆடுகளத்தில் தாக்கத்தை ஏற்படுத்திய ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் 5 விக்கெட்டுகளை அள்ளினார். இந்தியாவுக்கு எதிராக ஒரு இன்னிங்சில் அவர் 5 விக்கெட் எடுப்பது இது 7-வது நிகழ்வாகும். இதன் மூலம் இந்தியாவுக்கு எதிராக அதிக முறை 5 விக்கெட் வீழ்த்திய இலங்கை ஜாம்பவான் முரளிதரனின் சாதனையை (இவரும் 7 முறை) சமன் செய்தார்.

பின்னர் 43 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலிய அணிக்கு சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தன. ஆட்ட நேர இறுதியில் அந்த அணி 48 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்துள்ளது. உஸ்மான் கவாஜா (41 ரன், 102 பந்து, 5 பவுண்டரி), கேப்டன் டிம் பெய்ன் (8 ரன்) ஆட்டம் இழக்காமல் இருக்கிறார்கள்.

இந்த டெஸ்ட் போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டியிருக்கிறது. ஆஸ்திரேலிய அணி இதுவரை 175 ரன்கள் முன்னிலை பெற்றிருக்கிறது. ஆஸ்திரேலிய மைதானத்தில் 200 ரன்களுக்கு மேலான ஸ்கோரை விரட்டிப்பிடிப்பது (சேசிங்) எளிதான காரியம் அல்ல. ஆடுகளத்தில் இப்போதே நிறைய வெடிப்புகள் வந்து விட்டன. அதனால் இந்த டெஸ்டில் ஆஸ்திரேலியாவின் கையே சற்று ஓங்கி இருப்பது போல் தெரிகிறது. 4-வது நாள் ஆட்டம் இன்று நடைபெறும்.
Like Reply
#30
கோலிக்கு சர்ச்சைக்குரிய அவுட்

விராட் கோலி அடித்த பந்தை தரையோடு கேட்ச் செய்யும் ஹேன்ட்ஸ்கோம்ப்.
இந்திய கேப்டன் விராட் கோலி சதத்தை கடந்த பிறகு ஸ்டார்க்கின் பந்துவீச்சில் ‘தேர்டுமேன்’ பகுதியில் பிரமாதமான ஒரு சிக்சரை பறக்க விட்டார். அவர் நிலைத்து நின்று ஆடிய விதத்தை பார்த்த போது, இந்திய அணி 300 ரன்களை கடந்து விடும் என்றே நினைக்கத்தோன்றியது. கோலி 123 ரன்களில், வேகப்பந்து வீச்சாளர் கம்மின்ஸ் வீசிய பந்தை அடித்த போது, அது பேட்டில் உரசிக்கொண்டு 2-வது ஸ்லிப்பில் நின்ற பீட்டர் ஹேன்ட்ஸ்கோம்ப் நோக்கி தாழ்வாக சென்றது. அதை பிடித்த ஹேன்ட்ஸ்கோம்ப், அவுட் என்பது போல் விரலை உயர்த்தியபடி ஓடிவந்தார். சந்தேகம் கிளப்பிய கோலி நகரவில்லை.

இதையடுத்து நடுவர் தர்மசேனா 3-வது நடுவர் நைஜல் லாங்கின் (இங்கிலாந்து) கவனத்துக்கு கொண்டு சென்றார். இவ்வாறு 3-வது நடுவருக்கு செல்லும் போது கள நடுவர் தனது முடிவை முதலில் அவரிடம் சொல்ல வேண்டும். அதற்கு ‘சாப்ட் சிக்னல்’ என்று பெயர். இதன்படி தர்மசேனா அவுட் என்று ‘சாப்ட் சிக்னல்’ கொடுத்தார். பின்னர் டி.வி. ரீப்ளேயில் பல்வேறு கோணங்களில் நைஜல் லாங் ஆராய்ந்தார். ஒரு கோணத்தில் ஹேன்ட்ஸ்கோம்ப் பந்தை தரையோடு அள்ளுவது போல் தெளிவாக தெரிந்தது.

ஆனாலும் உறுதியான ஒரு நிலைப்பாட்டுக்கு வர முடியாமல் குழம்பிய 3-வது நடுவர் நைஜல் லாங், பின்னர் கள நடுவரின் முடிவுக்கு விட்டு விட்டார். இதன்படி கோலிக்கு அவுட் வழங்கப்பட்டது. இதனால் மிகுந்த அதிருப்தியுடன் கோலி பெவிலியன் திரும்பினார். சர்ச்சைக்குரிய தீர்ப்பை, ரசிகர்கள் சமூக வலைதளத்தில் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

காயத்தால் வெளியேறிய பிஞ்ச்

இரண்டாவது இன்னிங்சில் ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர் ஆரோன் பிஞ்ச் 25 ரன்னில் ஆடிக்கொண்டிருந்த போது, இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி வீசிய ஒரு பந்து, அவரது வலது கையை பலமாக தாக்கியது. வலியால் துடித்த அவர் மேற்கொண்டு பேட் செய்யாமல் பாதியில் (ரிட்டயர்ட்ஹர்ட்) வெளியேறினார். ஆள்காட்டி விரலில் வலியால் அவதிப்பட்ட அவருக்கு ‘எக்ஸ்ரே’ சோதனை எடுத்து பார்க்கப்பட்டது. அதில் எலும்பு முறிவு போன்ற பெரிய அளவிலான பாதிப்பு எதுவும் இல்லை என்பது தெரியவந்தது. இதனால் இன்றைய 4-வது நாளில் அவர் கடைசி கட்டத்தில் பேட் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Like Reply
#31
உலக டூர் இறுதிசுற்று பேட்மிண்டனில் சாம்பியன் பட்டம்:‘கேள்விக்கு விடை கிடைத்து விட்டது’ - சிந்து பெருமிதம்
[Image: 201812170321368563_World-Championship-Fi...SECVPF.gif]

டாப்-8 வீரர், வீராங்கனைகள் மட்டுமே பங்கேற்ற உலக டூர் பேட்மிண்டன் இறுதி சுற்று போட்டி சீனாவின் குவாங்சோவ் நகரில் நடந்து வந்தது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று அரங்கேறிய இறுதி ஆட்டத்தில் தரவரிசையில் 6-வது இடம் வகிக்கும் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, முன்னாள் உலக சாம்பியனும், 5-ம் நிலை வீராங்கனையுமான நஜோமி ஒகுஹராவை (ஜப்பான்) எதிர்கொண்டார்.
Like Reply
#32
இரு முன்னணி நட்சத்திரங்கள் மல்லுகட்டியதால் களத்தில் அனல் பறந்தது. முதல் செட்டில் சிந்து 7-3, 14-6 என்று முன்னிலை பெற்றார். அதன் பிறகு சரிவில் இருந்து மீண்ட ஒகுஹரா 17-17 என்று சமநிலைக்கு கொண்டு வந்தாலும், சூப்பரான சில ஷாட்டுகள் அடித்து முதல் செட்டை சிந்து வசப்படுத்தினார்.

2-வது செட்டிலும் சிந்து முதல் 3 புள்ளி முன்னிலையுடன் அமர்க்களமாக ஆரம்பித்தார். இருவரும் நீயா-நானா? என்று மட்டையை சுழட்டினர். ஒரு கேமில் இடைவிடாது மொத்தம் 48 ஷாட்டுகளை விளாசி, ரசிகர்களை பரவசப்படுத்தினர். ஆனால் பந்தை வலை மீது அடிப்பது, வெளியே அடிப்பது என்று ஒகுஹரா சற்று அதிகமாக தவறுகள் இழைத்ததால், சிந்துவுக்கு அது சாதகமாக மாறியது. இறுதியில் லாவகமான ஒரு ஷாட் மூலம் ஆட்டத்தை தித்திப்பாக முடித்து வைத்தார்.

62 நிமிடங்கள் நடந்த ஆட்டத்தின் முடிவில் சிந்து 21-19, 21-17 என்ற நேர் செட்டில் ஒகுஹராவை சாய்த்து சாம்பியன் பட்டத்திற்குரிய தங்கப்பதக்கத்தை சொந்தமாக்கி புதிய வரலாறு படைத்தார். கவுரவமிக்க இந்த போட்டியில் இந்தியர் ஒருவர் பட்டத்தை உச்சிமுகர்வது இதுவே முதல் முறையாகும். முந்தைய காலங்களில், சூப்பர் சீரிஸ் பைனல்ஸ் என்ற பெயரில் நடந்த இந்த போட்டி தற்போது உலக டூர் இறுதி சுற்று என்ற பெயரில் நடத்தப்படுகிறது.

இந்த போட்டியில் 2016-ம் ஆண்டு அரைஇறுதியிலும், 2017-ம் ஆண்டு இறுதிஆட்டத்திலும் மண்ணை கவ்விய சிந்து இந்த முறை தடையை வெற்றிகரமாக கடந்திருக்கிறார். மற்ற இந்தியர்களை எடுத்துக் கொண்டால் சாய்னா நேவால் 2011-ம் ஆண்டும், கலப்பு இரட்டையர் பிரிவில் ஜூவாலா கட்டா- திஜூ ஜோடி 2009-ம் ஆண்டும் இறுதி ஆட்டங்களில் தோற்று இருந்தனர்.

2018-ம் ஆண்டில் சிந்து ருசித்த முதல் பட்டம் இதுவாகும். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்கு பிறகு சிந்து ஹாங்காங் ஓபன், உலக டூர் இறுதி சுற்று, இந்திய ஓபன், காமன்வெல்த் விளையாட்டு, தாய்லாந்து ஓபன், உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப், ஆசிய விளையாட்டு போட்டி ஆகியவற்றில் வரிசையாக இறுதிப்போட்டிகளில் தோல்வி அடைந்து, ஒவ்வொரு முறையும் வெள்ளிப்பதக்கத்துடன் திருப்தி அடைய வேண்டியதாகி இருந்தது. இறுதி போட்டி என்றாலே சிந்து மனரீதியாக தடுமாறுவதுடன் பதற்றத்தில் கோட்டை விட்டு விடுகிறார் என்று விமர்சிக்கப்பட்ட நிலையில், இந்த பட்டம் அவருக்கு மிகப்பெரிய நிம்மதியை அளித்துள்ளது.

வாகை சூடிய ஐதராபாத்தை சேர்ந்த 23 வயதான சிந்துவுக்கு 12 ஆயிரம் தரவரிசை புள்ளிகளுடன் ரூ.86 லட்சம் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது. 2-வது இடத்தை பிடித்த ஒகுஹரா ரூ.43 லட்சத்தை பரிசாக பெற்றா
Like Reply
#33
கேள்விக்கு விடை கிடைத்து விட்டது’ - சிந்து பெருமிதம்

மொத்தத்தில் சிந்து கைப்பற்றிய 14-வது சர்வதேச பட்டம் இதுவாகும். பின்னர் அவர் கூறுகையில், ‘அழகான வெற்றியுடன் இந்த ஆண்டை நிறைவு செய்திருப்பது உண்மையிலேயே பெருமிதம் கொள்கிறேன். மகிழ்ச்சியை விவரிக்க என்னிடம் வார்த்தைகளே இல்லை. இந்த ஆண்டின் எனது முதல் பட்டம் இது. அதுவும் தொடர்ச்சியான இறுதிப்போட்டி தோல்விகளுக்கு பிறகு கிடைத்திருப்பதால் இந்த வெற்றி மறக்க முடியாத ஒன்றாக இருக்கும்.

இறுதிப்போட்டிகளில் ஏன் எப்போதும் தோற்று கொண்டு இருக்கிறீர்கள் என்று மக்கள் அடிக்கடி என்னிடம் கேள்வி எழுப்பி கொண்டே இருந்தார்கள். இனி அந்த கேள்வியை என்னை நோக்கி தொடுக்கமாட்டார்கள் என்று நம்புகிறேன். ஏனெனில் இப்போது நான் தங்கப்பதக்கம் வென்று விட்டேன் என்று பெருமையோடு சொல்ல முடியும். ஒரு வகையில் மக்கள் அந்த மாதிரி என்னிடம் கேட்டது நல்லதாகவே பட்டது. அதனால் தான் நானும் எனக்குள் இறுதிப்போட்டியில் தோற்பது ஏன் என்று கேட்க வேண்டி இருந்தது. இவற்றுக்கு ஒரு வழியாக இப்போது விடை கிடைத்து விட்டது.

லீக் சுற்றில் மூன்று ஆட்டங்களிலும் வெற்றி பெற்றேன். அதைத் தொடர்ந்து அரைஇறுதி, இறுதிப்போட்டியிலும் வெற்றி கண்டேன். அந்த வகையில் இந்த தொடர் எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்ததாக அமைந்தது. இந்த ஆட்டத்தில் நேர் செட்டில் வெற்றி பெற்றாலும் ஒவ்வொரு புள்ளியையும் எடுக்க கடுமையாக போராட வேண்டி இருந்தது. அடுத்து இந்தியாவில் நடக்கும் பிரிமீயர் பேட்மிண்டன் லீக்கில் விளையாட உள்ளேன்’ என்றார்.
Like Reply
#34
பெர்த் டெஸ்ட்: 146 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி

[Image: 201812180907496179_Australia-square-seri...SECVPF.gif]
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெர்த்தில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் முறையே ஆஸ்திரேலிய அணி 326 ரன்னும், இந்திய அணி 283 ரன்னும் எடுத்தன.



43 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலிய அணி 2-வது இன்னிங்சில் 93.2 ஓவர்களில் 243 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது. இந்திய அணி தரப்பில் வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது ஷமி 6 விக்கெட்டும், ஜஸ்பிரித் பும்ரா 3 விக்கெட்டும், இஷாந்த் ஷர்மா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.


பின்னர் 287 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2-வது இன்னிங்சை ஆடிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்து இருந்தது. புஜாரா (4 ரன்கள்), விராட் கோலி( 17 ரன்கள்) என முன்னணி விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.  நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் இந்திய அணி  2-வது இன்னிங்சில் 41 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 112 ரன்கள் எடுத்து இருந்தது. 
Like Reply
#35
இந்தியா தோல்வி

இந்த நிலையில்,  இன்று 5-வது நாள் ஆட்டம் துவங்கிய சிறிது நேரத்தில் ஹனுமா விஹாரி, ஸ்டார்க் பந்தில் 28 ரன்களில் வெளியேறினார். ரிஷாப் பண்ட் 30 ரன்களில் லயன் சுழலில் சிக்கினார்.  இதன்பிறகு, வந்த வீரர்கள் அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினர். 56 ஓவர்கள் தாக்குப்பிடித்த இந்திய அணி 140 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 146 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது. 

இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது.  இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி வரும் 26 ஆம் தேதி மெல்போர்னில் துவங்குகிறது. 
Like Reply
#36
செல்போன் எண், வங்கி கணக்குடன் ஆதார் எண் இணைக்க சட்ட திருத்தம் - மத்திய மந்திரிசபை ஒப்புதல்

[Image: 201812180826128932_Union-Cabinet-Approve...SECVPF.gif]

நலத்திட்டங்களை பெற ஆதார் எண் கட்டாயம் என்று சுப்ரீம் கோர்ட்டு அரசியல் சட்ட பெஞ்ச் சில மாதங்களுக்கு முன்பு தீர்ப்பு அளித்தது. இருப்பினும், செல்போன் எண் மற்றும் வங்கி கணக்குடன் ஆதார் எண் இணைப்பது கட்டாயம் அல்ல என்று கூறியது.


இந்நிலையில், செல்போன் எண் மற்றும் வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு மீண்டும் சட்ட அங்கீகாரம் அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக டெலிகிராப் சட்டத்திலும், சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்திலும் திருத்தங்கள் கொண்டுவர பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த மத்திய மந்திரிசபை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
Like Reply
#37
[Image: 201812180826128932_1_pmmodi._L_styvpf.jpg]

இதன்படி, புதிய செல்போன் இணைப்பு (சிம்கார்டு) பெறவும், வங்கி கணக்கு தொடங்கவும் பொதுமக்கள் தாங்களாக முன்வந்து ஆதார் எண்ணை அளிக்கலாம். இது, அவர்களின் விருப்பத்தை பொறுத்தது ஆகும்.
Like Reply
#38
ஆந்திராவில் மீன் மழை...வானிலிருந்து விழுந்த மீன்களைக் கண்டு பொதுமக்கள் வியப்பு.
December 18,
[Image: andhra-fish-rain.png]

ஆந்திர மாநிலத்தில் பெய்ட்டி புயல் தாக்கிய நிலையில் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் மீன் மழை பெய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலத்தில் உள்ள காக்கிநாடா, மசூலிப்பட்டினம், கிருஷ்ணா, குண்டூர், கிழக்கு கோதாவரி, மேற்கு கோதாவரி, மாவட்டங்களில் பெய்ட்டி புயலால் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள அமலாபுரம் கிராமத்தில் நேற்று மாலை மீன் மழை பெய்துள்ளது. 

இதனை அறிந்த அப்பகுதி மக்கள் வெளியே வந்து பார்த்தபோது அங்குள்ள நகராட்சி பள்ளி அருகே சுற்றுப்பகுதிகளில் மீன் மழை பெய்து இருப்பது தெரியவந்தது. இதனைக் கண்ட அப்பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் எடுத்த வீடியோ, சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.
Like Reply
#39
[video=youtube]http:/<iframe width="750" height="480" src="https://www.youtube.com/embed/YALzEX4jLX0" frameborder="0" allow="accelerometer; autoplay; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen></iframe>/[/video]
Like Reply
#40
யப்பா... என்னா ஆட்டம் டா போட்டீங்க... இப்ப அடிச்சோம்ல ஆப்பு.....: டிம் பெயின் நக்கல்
அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்டில், இந்திய அணி வென்றது. இரு அணிகள் மோதிய இரண்டாவது டெஸ்ட் பெர்த்தில் நடந்தது. ஆஸ்திரேலிய அணி, முதல் இன்னிங்சில் 326 ரன்கள் எடுத்தது. இந்திய அணி, 283 ரன்கள் எடுத்தது. இரண்டாவது இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 243 ரன்கள் எடுத்து இந்திய அணிக்கு 287 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது. 

நான்காவது நாள் ஆட்டநேர முடிவில், இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில், 5 விக்கெட்டுக்கு 112 ரன்கள் எடுத்துள்ளது. இன்றைய கடைசி நாள் ஆட்டத்தில், இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த இந்திய அணி அடுத்ததடுத்து விக்கெட்டை பறிகொடுத்து, 140 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 146 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 1-1 என ஆஸ்திரேலிய அணி சமன் செய்தது. தவிர, அடிலெய்டு டெஸ்ட் தோல்விக்கு மரண பதிலடி கொடுத்தது. 
 
என்னா... ஆட்டம்.....? 
இந்நிலையில் இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை சமன் செய்தது தனக்கு மிகப்பெரிய ஆறுதல் அளிப்பதாக ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெயின் தெரிவித்துள்ளார்.
Like Reply




Users browsing this thread: 65 Guest(s)