Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
போக்குவரத்தைக் கண்டுகொள்ளாத நீலகிரி எஸ்.பி - சுற்றுலாப் பயணிகள் தவிப்பு!
பள்ளிகளுக்கு விடுமுறை தொடங்கிவிட்டது. தேர்தலும் முடிந்தாகிவிட்டது. கொளுத்தும் கோடை வெயிலிலிருந்து தப்பிக்க, மக்கள் கோடை வாசஸ்தலங்களை நோக்கி படையெடுக்கத்  தொடங்கிவிட்டனர். தென்னிந்திய சுற்றுலாப் பயணிகளின் தேர்வுகளில் ஊட்டி முக்கிய அங்கம் வகிக்கிறது
.[Image: 1_18008.JPG]

சுற்றுலாத் தலங்கள் நிறைந்த நீலகிரி மாவட்டத்தில், சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் ஆண்டுதோறும் மே மாதம் கோடை விழா நடத்தப்படுவது வழக்கம். கடந்த ஆண்டு, சுமார் 40 லட்சம் சுற்றுலாப் பயணிகள் நீலகிரியைக் கண்டு ரசித்துச் சென்றனர். வழக்கமாக, மே மாதத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துக் காணப்படும். ஆனால் இந்தாண்டு, சமவெளிப் பகுதிகளில் நிலவும் வெயிலின் தாக்கம் காரணமாக, இப்போதே பயணிகளின் கூட்டம் நிறைந்து காணப்படுகிறது. ஊட்டி வரும் சுற்றுலாப் பயணிகளின் முக்கியப் பிரச்னையாக இருப்பது போக்குவரத்து நெரிசல். சுற்றுலாப் பயணிகள் ஊட்டிக்குள் நுழையவும்  ஓர் இடத்திலிருந்து  மற்றோர் இடத்துக்குச் செல்ல பல மணி நேரம் சாலையில் காத்துக்கிடக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.


[Image: 2_18567.JPG]
இதுகுறித்து சுற்றுலா வழிகாட்டி ஜான் கூறுகையில், " ஒரே சமயத்தில் வெளி மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் ஊட்டிக்கு வருவதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. வேலிவியூ பகுதியில் இருந்து ஊட்டி நகருக்குள் 1 கி.மீ வருவதற்கே சில சமயம் ஒரு மணி நேரம் ஆகிறது. அதேபோல, அரசு தாவரவியல் பூங்காவிலிருந்து தொட்டபெட்டா 8 கி.மீ சென்றுவர, சில சமங்களில் ஒரு நாளே வீணாகிறது. இதற்கெல்லாம் முக்கியக் காரணம், காவல் துறையினர் போக்குவரத்தை முறைப்படுத்தாதே. கடந்த ஆண்டு கோடை சீசனில் அப்போதைய எஸ்.பி முரளிரம்பா போக்குவரத்துக்கு முக்கிய கவனம் செலுத்தி சுற்றுலாப் பயணிகளும், உள்ளூர் மக்களும் பாதிப்படையா வகையில் பார்த்துக்கொண்டார்.
[Image: IMG-20190328-WA0023_18052.jpg]
ஆனால், தற்போது உள்ள நீலகிரி  எஸ்.பி, போக்குவரத்தைக் கண்டுகொள்வதேயில்லை. இதனால், ஊட்டி வரும் சுற்றுலாப் பயணிகள் சலிப்புடனே திரும்பிச்செல்கின்றனர் " என்றார்.
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
சென்னையில் பரபரப்பு... ஆற்காடு வீராசாமியின் பேரன் ஓட்டிய கார் மோதி எஸ்ஐ படுகாயம்
ஆற்காடு வீராசாமியின் பேரன் ஓட்டிய கார் மோதி எஸ்ஐ படுகாயம்- வீடியோ
சென்னை: திமுக மூத்த தலைவர்களில் ஒருவரான ஆற்காடு வீராசாமியின் பேரன், கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட சம்பவம் அக்கட்சியினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வடசென்னை மக்களவை தொகுதி திமுக வேட்பாளரான டாக்டர் கலாநிதி, ஆற்காடு வீராசாமியின் மகனாவார். கலாநிதியின் மகனும் ஆற்காடு வீராசாமியின் பேரனுமான சித்தார்த், சென்னை காட்டாங்கொளத்தூர் எஸ்.ஆர்.எம். கல்லூரியில் முதலாமாண்டு சட்டப்படிப்பு பயின்று வருகிறார்.



[Image: kalanidhi-veerasamy-1555735070.jpg]


சென்னை எழும்பூரில் நேற்று இரவு தனது காரில் சித்தார்த் சில நண்பர்களுடன் சென்று கொண்டிருந்தார். எழும்பூர் பாந்தியன் சாலையில் சித்தார்த் காரில் சென்ற போது, அவருக்கு முன்னே சென்னை மத்திய குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் ஜெயபாலன் இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

அப்போது சித்தார்த்தின் கார் எதிர்பாராத விதமாக உதவி ஆய்வாளர் ஜெயபாலன் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்த உதவி ஆய்வாளர் ஜெயபாலன், சிகிச்சைக்காக உடனடியாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவ்விபத்து குறித்து காவல்துறை கட்டுப்பாட்டு பிரிவுக்கு தகவல் தரப்பட்டது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த அண்ணாசதுக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவலர்கள், விபத்தை ஏற்படுத்திய சித்தார்த்தின் காரை பறிமுதல் செய்தனர். அதோடு மட்டுமல்லாமல் சித்தார்த் மீது 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். இத்தகவலை கேள்விப்பட்ட ஆற்காடு வீராசாமி உள்ளிட்ட திமுக முன்னணி தலைவர்கள் அதிர்ச்சியடைந்தனர், பின்னர் அக்கட்சியின் வழக்கறிஞர் பிரிவின் முயற்சிக்கு பின்னர், காவல் நிலைய ஜாமீனில் சித்தார்த் விடுவிக்கப்பட்டார் 
Like Reply
ஏன் உள்ள போனீங்க... மதுரை வட்டாட்சியர் சம்பூரணத்திடம் தேர்தல் அதிகாரி விசாரணை

மதுரை: மதுரையில் வாக்குப்பதிவு ஆவணங்கள் அறைக்குள் நுழைந்த விவகாரத்தில் வட்டாட்சியர் சம்பூர்ணத்துடன் சென்ற 3 அதிகாரிகளுடம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதனிடையே சம்பூரணத்திடம் தேர்தல் அதிகாரி விசாரணை நடத்தினார்.
மதுரை மக்களவை தொகுதிக்கான பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள மதுரை மருத்துவக்கல்லூரியில் வைக்கப் பட்டுள்ளது.

இதேபோல் சட்டசபை தொகுதி வாரியாக பதிவான வாக்குகளின் விவரங்களும் மருத்துவக் கல்லூரியில் உள்ள ஒரு அறையில் வைக்கப்பட்டுள்ளன. 
போலீஸ் பாதுகாப்பு
இதனால் மதுரை மருத்துவக் கல்லூரியைச் சுற்றிலும் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு 24 மணி நேரமும் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதுதவிர மத்திய ரிசர்வ் படை போலீசாரும் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.


[Image: elections--1555920117.jpg]
 
[color][font]

அதிகாரிகள் நுழைந்தனர்
இந்நிலையில் சட்டசபை தொகுதி வாரியாக பதிவான வாக்குகளின் விவரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு சீல் வைக்கப்படவில்லை. இந்த அறைக்குள் அனுமதி இன்றி, உதவி கலால் ஆணையரக கண்காணிப்பாளர் சம்பூரணம் ஆவண பதிவு எழுத்தர் சீனிவாசன், மதுரை மாநகராட்சி மண்டலம்-1 அலுவலகத்தில் பணிபுரியும் ராஜ பிரகாஷ், சூரிய பிரகாஷ், ஆகிய நான்கு பேரும் சென்று திரும்பி உள்ளனர்.[/font][/color]

[Image: evm454-1555920415.jpg]
 
[color][font]

வேட்பாளர்கள் முற்றுகை
இவர்கள் வாக்கு எண்ணும் மையத்திற்குள் 2 மணி நேரம் இருந்ததாகவும், சில முக்கிய ஆவணங்களை எடுத்துச் சென்றதாகவும், புகார் எழுந்தது. இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாக்கு எண்ணும் மையத்தை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசன், அமமுக வேட்பாளர் டேவிட் அண்ணாதுரை உள்ளிட்டோர் முற்றுகையிட்டனர்.
[/font][/color]

[Image: voting-machine-155-1555920431.jpg]
 
[color][font]


மாவட்ட ஆட்சியர்
இதையடுத்து இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததால் பெண் அதிகாரி, சம்பூரணம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். தற்போது எழுத்தர் சீனிவாசன், ராஜ பிரகாஷ், சூரிய பிரகாஷ் ஆகிய 3 பேரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவினை மதுரை மாவட்ட ஆட்சியர் நடராஜன் பிறப்பித்துள்ளார்.[/font][/color]

[Image: sampoornam-1555923912.jpg]
 
[color][font]

தேர்தல் அதிகாரி விசாரணை
இதனிடையே ஏன் அத்துமீறி வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு உள்ளே நுழைந்தீர்கள் என மதுரை மக்களை தொகுதி தேர்தல் நடத்துனர் பாலாஜி, வட்டாட்சியர் சம்பூரணத்தை நேரில் அழைத்து விசாரணை நடத்தினார். மேலும் வாக்கு ஆவணம் தொடர்பாக ஜெராக்ஸ் எடுத்தவரிடமும் விசாரணை நடந்தது.[/font][/color]
Like Reply
ஊட்டியில் கொட்டி தீர்த்த கன மழை - காட்டுத் தீ அபாயம் குறைய வாய்ப்பு!

[Image: IMG-20190420-WA0052_08034.jpg]

நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு தென்மேற்கு மற்றும் வட கிழக்கு பருவமழை பொய்த்த நிலையில் அனைத்து நீர் நிலைகளும் வறண்டு காணப்பட்டது. மின் உற்பத்திக்காகப் பயன்படும் அணைகளிலும் . ஊட்டி நகராட்சிக்குக் குடிநீர் ஆதாரமாக உள்ள பார்சன்ஸ்வேலி அணை உட்பட அனைத்து அணைகளிலும் தண்ணீர் முற்றிலும் குறைந்து காணப்படுகிறது. அதேபோல் நீலகிரி வனப்பகுதிகளிலும் கடுமையான வறட்சி நிலவி வந்தது. வறட்சி காரணமாக தண்ணீர் தேடி வன விலங்குகள் இடம் பெயர்ந்து வந்தன. கூடலூர் ,முதுமலை ,குன்னூர் ஊட்டி உள்ளிட்ட பல இடங்களில் காட்டுத் தீ ஏற்பட்டுப் பல ஏக்கர் பரப்பளவில் வனங்கள் எரிந்து நாசமாயின. குன்னூர் பகுதியில் ஹெலிகாப்டர் மூலம் தண்ணீர் தெளித்தும் காட்டுத் தீயை கட்டுப்படுத்த முடியாமல் வனத்துறையினர் திணறி வந்தனர்.


[Image: IMG-20190420-WA0054_08214.jpg]
இந்த நிலையில்  மாவட்டத்தில்  பல பகுதிகளில் கடந்த நான்கு நாட்களாக அவ்வப்போது நல்ல  மழை பெய்து வருகிறது. ஊட்டி சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. பகல் 12 மணிக்குத் துவங்கிய மழை சுமார் 2 மணி நேரத்திற்கு மேல் கொட்டித்  தீர்த்தது. ஒரு சில இடங்களில் ஆலங்கட்டி மழையும் பெய்தது
.[Image: _20190421_074538_08319.JPG]
மழையால் ஊட்டி நகரில் பல இடங்கள் வெள்ளக்காடாக மாறியது. ஊட்டி மலை ரயில் நிலைய காவல் நிலையம் தண்ணீரில் மூழ்கியது. நீலகிரி  மாவட்டத்தில் பெய்து வரும் காட்டுத் தீ அபாயம் நீங்கும் நிலை ஏற்பட்டுள்ளது .
[Image: _20190421_074615_08319.JPG]
இனி காட்டுத் தீயை அணைக்க ஹெலிகாப்டர் தேவைஇல்லை மழைபோதும் என வனத்துறையினர் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
Like Reply
``கடைசிக் கட்டத்தில் மட்டும் அதிரடி ஏன்? - தோனி சொன்ன லாஜிக்

[Image: kohli_dhoni_08308.jpg]
பெங்களூரு - சென்னை அணிகள் மோதிய நடப்பு ஐபிஎல் தொடரின் 39 -வது போட்டியில், பெங்களூரு அணி 1 ரன்னில் வெற்றிபெற்றது. கடைசிவரை போராடிய தோனி தலைமையிலான சென்னை அணி, தோல்வியைத் தழுவியது. தற்போது வரை 10 போட்டிகளில் விளையாடியுள்ள பெங்களூர் அணி, 3 வெற்றி 7 தோல்விகளுடன் கடைசி இடத்திலும், சென்னை அணி 7 வெற்றி, 3 தோல்விகளுடன் முதலாவது இடத்திலும் தொடர்கின்றன


நேற்றைய போட்டியில், 28/4 என்ற மோசமான தொடக்கத்தில் இருந்து அணியை மீட்டுக்கொண்டுவந்தார், தல தோனி. ஆர்.சி.பி அணிக்கு எதிரான போட்டி என்றாலே, தோனி தனி மாஸ் காட்டுவார். ஆர்.சி.பி  அணிக்கு எதிராக அதிக ரன்களைக் குவித்த வீரர், தோனிதான். நேற்றைய போட்டியில், 48 பந்துகளில் 84 ரன்கள் குவித்த அவர், டி20 போட்டிகளில் தனது அதிகபட்ச ஸ்கோரைப் பதிவுசெய்தார். 


இந்தப் போட்டியில், சென்னை இன்னிங்ஸில் மொத்தம் அடிக்கப்பட்ட சிக்ஸர்கள் 8. அதில் 7,  தோனி அடித்தது. இதன்மூலம் ஐபிஎல் போட்டிகளில் 200 சிக்ஸர்களை அவர் கடந்தார். தற்போது வரை 203 சிக்ஸர்கள் விளாசியுள்ளார். ஐபிஎல் தொடரில் 200 சிக்ஸர்கள் விளாசிய மூன்றாவது வீரர் என்ற சாதனையும், முதல் இந்திய வீரர் என்ற சாதனையும் படைத்தார். முதல் இடத்தில் 323 சிக்ஸர்களுடன் கெயிலும், 204 சிக்ஸர்களுடன் டிவில்லியர்ஸும் உள்ளனர். 
[Image: dhoni_08578.jpg]
கடந்த ஆண்டு சென்னை அணி, ஐபிஎல் தொடருக்கு கம்பேக் கொடுத்ததில் இருந்து தற்போதுதான் முதன்முறையாக 2 போட்டிகளில் தொடர்ச்சியாகத் தோல்வியைச் சந்தித்துள்ளது. மேலும், சென்னை அணிக்கு எதிராகக் கடந்த 7 போட்டிகளில் வெற்றியைச் சந்திக்காத பெங்களூரு, தனது சோகமான சாதனைக்கு முற்றுப்புள்ளி வைத்தது. 
நேற்றைய போட்டிக்குப் பின்னர் பேசிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி,  ``இது ஒரு ஆரோக்கியமான போட்டி. நாங்கள் பெங்களூரு அணியை சிறப்பாகக் கட்டுப்படுத்தினோம். இந்த மைதானத்தின் சராசரி ஸ்கோருக்குள் அவர்களைக் கட்டுப்படுத்தினோம். எங்களின் டாப் ஆர்டரில்தான் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். எதிரணியின் பலம் என்ன என்பதை அறிந்த நாம், ஒரு திட்டமுடன் போட்டியை எதிர்கொள்கிறோம். ஆனால், தொடக்கத்தில் இழக்கும் விக்கெட்டுகளால், மிடில் ஓவர்களில் ரன்கள் எடுக்க முடியாமல் போகிறது. 
[Image: dhoni1_08044.jpg]
ஆடுகளம் கொஞ்சம் கணிக்கமுடியாதபடிதான் இருந்தது. புதிதாகக் களமிறங்கும் பேட்ஸ்மேன்களுக்கு நிறையவே சிரமமாக இருந்தது. பார்ட்னர்ஷிப் அமைப்பது மிக முக்கியமானது. பெரிய ஷாட் அடிப்பதில் தவறில்லை; நான் ஆட்டமிழந்தாலும் அடுத்தவர்கள் வந்து ஆட்டத்தை முடித்துவைப்பார்கள். ஆனால், விக்கெட்டை இழக்காமல் பெரிய ஷாட் ஆட வேண்டும் என்பதுதான் பிரச்னை. டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் பெரிய ஷாட் எண்ணத்தில் ஆட முடியும்.  5,6 மற்றும்7-வது நிலைகளில் களமிறங்கும் வீரர்கள், மனதில் என்ன கணக்கு வைத்திருந்தாலும், அதைச் செயல்படுத்தும் முன்பு பலமுறை யோசிக்கவேண்டியிருக்கிறது. காரணம், அந்த நேரத்தில் ஒரு விக்கெட் ஆட்டத்தையே முடித்துவிடும்” என்றார்
Like Reply
இலங்கை குண்டு வெடிப்பு 290 பேர் பலி- 6 தீவிரவாதிகளின் பெயர் சமூக இணையதளத்தில் வெளியீடு.!

இலங்கை நடந்த குண்டு வெடிப்பில், இதுவரை சுமார் 260 பேர் பலியாகியுள்ளனர். மேலும், 500 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக 24 கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், 6 தீவிரவாதிகளின் பெயர்களும் வெளியிடப்பட்டுள்ளது.


[Image: srilanga-4-1555920278.jpg]
இந்த சம்பவத்துக்கு அடிப்படை மதவாத அமைப்பும் காரணம் என்று தெரியவந்துள்ளது. ஈஸ்டர் திருநாள் பண்டிகை திருநாள் இலங்கையை மட்டும் அல்லாமல் உலகையும் கதிகலங்க வைத்துள்ளது.



[Image: srilanga-6-1555920343.jpg]
 


ஈஸ்டர் திருநாளில் சோகம்:

இலங்கையில் நேற்று தேவாலயங்கள் உட்பட 8 இடங்களில் அடுத்தடுத்து நடந்த கொடூர குண்டுவெடிப்புகளில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 290 ஆக உயர்ந்துள்ளது. 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். குண்டுவெடிப்பு தொடர்பாக 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

[Image: srilanga-5-1555920337.jpg]
 


நட்சத்திர ஓட்டல்களில் குண்டு வெடிப்பு:

இந்த குண்டுவெடிப்பு நடந்த சற்று நேரத்தில் கொழும்பு நகரில் உள்ள முக்கிய நட்சத்திர ஓட்டல்களை குறி வைத்து குண்டுவெடிப்புகள் நடந்தன. இதனைத் தொடர்ந்து நீர்கொழும்புவில் பகுதியில் உள்ள புனித செபாஸ்டியன் தேவாலயத்திலும் குண்டுவெடித்தது. பின்னர் தமிழர்கள் அதிகம் வசிக்கும் மட்டக்களப்பு நகரில் உள்ள சியான் தேவாலயத்திலும் பயங்கர தாக்குதல் நடந்த
Like Reply
அறிக்கை வெளியானது :
கொழும்பு, கட்டுவாப்பிட்டிய மற்றும் மட்டக்களப்பு பிரதேசத்தில் நடந்த குண்டு வெடிப்பு தாக்குதல் தொடர்பாக ஏற்கனவே அரசு புலனாய்வு பிரிவுகளுக்கு வழங்கப்பட்ட அறிக்கை குறித்து முழுமையான தகவல்கள் வெளியாகியுள்ளது.
[Image: srilanga-1-1555920317.jpg]
 

மதவாத அமைப்பு மீது குற்றச்சாட்டு :
தேசிய தவ்ஹித் ஜமாத் அமைப்பு தலைவர் மொஹமட் சஹானினால் தற்கொலை கொண்டு தாக்குதல் மேற்கொள்ளவதற்கு திட்டமிட்டப்பட்டதாக வெளிநாட்டு புலனாய்வு பிரிவினால், இலங்கை புலனாய்வு பிரிவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தகவல்கள் அரசு புலனாய்வு பிரிவால் முழுமையாக முன் வைக்கப்பட்டுள்ளது.
[Image: srilanga-3-1555920330.jpg]
Like Reply
இலங்கைக் குண்டுவெடிப்பு ’கேலி’ தலையங்கம் – மன்னிப்புக்கேட்டது தினமலர் !

இலங்கைக் குண்டுவெடிப்பு தொடர்பான செய்தியின் தலைப்பை கேலியாக வெளியிட்டதற்கு தினமலர் நாளிதழ் வருத்தம் தெரிவித்துள்ளது.




இலங்கையில் நேற்று முன் தினம் ஈஸ்டர் பண்டிகை நாடெங்கும் கொண்டாடப்பட்ட வேளையில் வெவ்வேறு பகுதிகளில் நடைபெற்ற மனித வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டன.  தாக்குதலுக்கு இதுவரை 290 உயிர் இழந்துள்ளனர். மேலும் 500 பேர் படுகாயம் அடைந்து அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  நேற்று நள்ளிரவு முதல் இலங்கையில் அவசரநிலை பிரகரனப்படுத்த இருப்பதாக அதிபர் மைத்ரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.

இந்நிலையில் இதுதொடர்பாக நேற்று முதல் பக்கத்தில் செய்தி வெளியிட்ட தினமலர், அச்செய்திக்கு ஓ சேசப்பா எனத் தலைப்பிட்டு இருந்தது. உலகம் முழுவதும் இறந்து போன மக்களுக்காகவும் படுகாயமடைந்தவர்களுக்காகவும் வருத்தப்பட்டு மக்கள் சோகத்தில் ஆழ்ந்திருக்க தினமலரின் இந்த தலைப்பு அனைவருக்கும் எரிச்சலை ஏற்படுத்தியது. இதையடுத்து சமூகவலைதளங்களில் உள்ள வாசகர்கள் பலர் இந்த தலைப்புக்கு எதிர்த்து தெரிவித்தனர். அதையடுத்து தினமலர் நாளிதழ் இன்று விளக்கம் ஒன்றை வெளியிட்டு தனது வருத்தத்தை தெரிவித்துள்ளது.

இன்றைய தினமலர் இதழில் ஓ சேசப்பா! என்ற தலைப்பின் கீழ் இலங்கை துயர சம்பவம் குறித்த சில பதிப்புகளிலும் செய்தி பிரசுரமானது.அந்த தலைப்பு சரியில்லை என்று சில வாசகர்கள் பதிவிட்டிருந்தனர்.
Like Reply
இலங்கையில் தொடர் குண்டு தாக்குதல் நடத்தியவர்கள் வெளிநாட்டவர்களா? வெளியான பகீர் தகவல்கள்
கொழும்பு உட்பட நாட்டின் சில இடங்களில் குண்டு வெடிப்புகளை நடத்த வந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டவர்களில் பலர் வெளிநாட்டவர்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இவர்கள் ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் மாலைதீவு நாடுகளை சேர்ந்தவர்கள் என உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் கூறுகின்றன.
நீர்கொழும்பு தேவாலயம் மற்றும் செங்கீ-ரீலா ஹொட்டல் ஆகியவற்றுக்கு குண்டுகளை கொண்டு வந்தவர்கள் தொடர்பான காட்சிகள் அங்குள்ள பாதுகாப்பு கெமராக்களில் பதிவாகியுள்ளன.
இதனையடுத்து அவர்களின் தலைகள் மூலம் அந்த நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். சங்கீ-ரீலா ஹொட்டலில் தாக்குதல் நடத்தியது இலங்கையை சேர்ந்த அடிப்படைவாத அமைப்பொன்றின் நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
இலங்கையில் இன்று நடத்தப்பட்ட தாக்குதலில் 32 வெளிநாட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 218 பேர் வரை கொல்லப்பட்டுள்ளதாக அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
சிசிடிவி காணொளியில் தெரிந்த குண்டுதாரி
நீர்கொழும்பு, கட்டுபிட்டிய தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டு தாக்குதலுக்கு செல்லும் தாக்குதல்தாரியின காணொளி தற்போது வெளியாகி உள்ளது.
தோளில் சுமந்து செல்லும் பையில் வெடிகுண்டுகள் இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த காணொளி தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நீர்கொழும்பு தேவாலயத்தில் நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதலில் 90 பேர் வரையில் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் தாக்குதல் மேற்கொண்ட நபரின் தகவல் வெளியாகியுள்ளது
இலங்கையில் இன்று தொடர் வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்றுவரும் இந்நிலையில் மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் ஓட்டமாவடியை சேர்ந்த உமர் என தனது பெயரை அடையாளப்படுத்திய சந்தேக நபரொருவரே இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
குண்டு பொருத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் ஒன்றிணை கொண்டே இந்த தாக்குதல் நடாத்தப்பட்டிருக்கலாம் எனவும், அதனை தற்கொலை தாரியொருவர் கொண்டுவந்து தாக்கியிருக்கலாம் எனவும் பாதுகாப்பு தரப்பில் இருந்து சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆலயத்திற்குள் வந்த நபர் ஒருவரை சந்தேகம் கொண்ட தேவாலய ஊழியர்கள் அவரை வெளியேற்றிய நிலையிலேயே குறித்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக சம்பவத்தினை கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
கொழும்பில் தற்கொலை குண்டு தாக்குதல் நடத்தியவர் குறித்த தகவல் வெளியானது!
கொழும்பில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலை மேற்கொண்டவர்கள் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
இதன்படி, கொழும்பு ஷங்ரி-லா நட்சத்திர விடுதியில் zahran hashim என்ற நபரே தற்கொலை குண்டு தாக்குதலை நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன இதேவேளை, இன்று காலை முதல் நாட்டில் இடம்பெற்ற பல்வேறு குண்டு வெடிப்பு சம்பவங்களில் 310 பேர் வரையில் கொல்லப்பட்டுள்ளதுடன், 400 பேர் வரையில் காயமடைந்துள்ளனர்.
இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் ஏழு பேர் வரையில் கைது செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Like Reply
பொள்ளாச்சியைப் போல பெரம்பலூரிலும் பல பெண்கள் பாதிப்பு: போலீசில் வழக்கறிஞர் புகார்

பொள்ளாச்சியில் நடைபெற்ற கூட்டு பாலியல் வண்புனர்வை போன்று பெரம்பலூரிலும் பல பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக வழக்கறிஞர் ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
 


பெரம்பலூரைச் சேர்ந்தவர் ப.அருள். வழக்கறிஞரான இவர், பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் ஒரு புகார் மனு கொடுத்துள்ளார். 


அதில் அவர், பொள்ளாச்சியில் நடைபெற்ற கூட்டு பாலியல் வண்புனர்வை போன்று பெரம்பலூரிலும் பல பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. இதில் பெரம்பலூர் ஆளும் கட்சியைச் சேர்ந்த ஒரு முக்கிய பிரமுகரும், பத்திரிகையாளர் என்று சொல்லிக்கொண்டு வலம் வரும் ஒரு போலி நிருபரும் மற்றும் இன்னும் சிலரும் குழுவாக ஈடுபட்டுள்ளதாக தெரிய வருகிறது.

 
இதில் பல பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் ஆசை வார்த்தை கூறி காம இச்சைக்கு இணங்க வைத்து அதனை வீடியோ எடுத்துவைத்துக்கொண்டு அவர்களை மிரட்டி பணம் பறிப்பது மற்றும் பாலியல் தொல்லை கொடுத்து வருவது, மறுக்கும் பெண்களை வீடியோக்களை வெளியே விடுவோம் என்று மிரட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.
 
இவர்களுடைய மிரட்டலுக்கு பயந்து 20க்கும் மேற்பட்ட பெண்கள் இருந்து வருகின்றனர். மேற்படி சம்பவங்கள் பெரம்பலூரில் உள்ள நட்சத்திர விடுதி உள்பட பல இடங்களில் நடைபெற்று வருவதாக தெரிகிறது. 
 
இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமலும், மேற்கண்ட பெண்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறல் மற்றும் கொலை மிரட்டலில் ஈடுபட்ட மேற்கண்ட நபர்கள் மீது உரிய விசாரணை நடத்தி, பாதிக்கப்பட்ட பெண்களின் எதிர்கால நலன் மற்றும் பாதுகாப்பை கருதி காவல்துறை கண்காணிப்பாளர் தாமாக முன்வந்து இந்த சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.
 
[Image: arul%2091_0.jpg]
Like Reply
117 தொகுதி; 1,640 வேட்பாளர்கள் 18.8 கோடி வாக்காளர்கள்! - தொடங்கியது 3-ம் கட்ட வாக்குப்பதிவு
இந்தியாவில், 17-வது மக்களவைத் தேர்தல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதுவரை இரண்டு கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், 13 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்கள் உள்ளிட்ட 117 தொகுதிகளில் இன்று மூன்றாம்கட்ட வாக்குப் பதிவு தொடங்கியுள்ளது. 
[Image: election_07062.jpg] அஸ்ஸாம் 4, பீஹார் 5, சத்தீஸ்கர் 7, கர்நாடகா 14, கேரளா 20, மகாராஷ்டிரா 14, ஒடிசா 6, உத்தரப்பிரதேசம் 10,  கோவா 2, குஜராத் 26, காஷ்மீர் 1, மேற்குவங்கம் 5, தாத்ரா நாகர் ஹவேலி 1,  டாமன்-டையு 1 ஆகிய தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. 


[Image: electin_3_07178.jpg]
இன்று ஒரே நாளில் மட்டும் இந்தியா முழுவதும் 188 மில்லியன் மக்கள் வாக்களிக்க உள்ளதால், ஏழு கட்டமாக நடைபெறும் வாக்குப்பதிவில் இன்று நடைபெறுவதே மிகப்பெரும் வாக்குப்பதிவு எனக் கூறப்படுகிறது.  பொதுமக்கள் வாக்களிப்பதற்காக 13 மாநிலங்களில் மொத்தம் 2,10,770 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு, 1,640 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தேர்தல் நடைபெறும் அனைத்து மாநிலங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், இன்று இந்திய பிரதமர் மோடி, பா.ஜ.க தலைவர் அமித்ஷா , கேரள முதல்வர் பினராயி விஜயன் போன்ற தலைவர்கள் வாக்களிக்க உள்ளனர். 
[Image: electin_2_07307.jpg]
இன்று காலை ஏழு மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு, மாலை ஐந்து மணிவரை நடைபெற உள்ளது. அனைத்துத் தொகுதிகளிலும் காலை முதலே மக்கள் ஆர்வமாக வாக்களித்துவருகின்றன. ஏழு கட்டங்களாக நடைபெறும் தேர்தலின் வாக்குப்பதிவு, ஒட்டுமொத்தமாக மே 23-ம் தேதி எண்ணப்பட உள்ளது. 
Like Reply
``கை சின்னத்துக்கு வாக்களித்தேன்... ஆனால்..?” - கேரளாவில் சர்ச்சையை ஏற்படுத்திய வாக்குப்பதிவு

கை சின்னத்திற்கு வாக்களித்தபோது தாமரை சின்னத்திற்கு அருகில் உள்ள லைட் ஒளிர்ந்ததை அடுத்து, கேரள மாநிலம் திருவனந்தபுரம் தொகுதிக்குட்பட்ட கோவளம் பகுதியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில், வாக்குப்பதிவு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
[Image: IMG_20190423_092121_09593.jpg]
நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடந்துவருகிறது. முதல்கட்ட தேர்தல், கடந்த ஏப்ரல் 11-ம் தேதி 91 தொகுதிகளுக்கு நடந்தது. இரண்டாம் கட்டமாக, கடந்த 18 -ம் தேதி தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் 97 நாடாளுமன்றத் தொகுதிகளுக்குத் தேர்தல் நடந்தது. இன்று மூன்றாம் கட்டமாக உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம், குஜராத், மகாராஷ்டிரா, கேரளம், கர்நாடகம், கோவா, ஒடிசா, சத்தீஸ்கர், அஸ்ஸாம், திரிபுரா உள்பட 13 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 116 தொகுதிகளுக்கு நாடாளுமன்றத் தேர்தல் நடந்துவருகிறது.


[Image: IMG_20190423_092139_09439.jpg]
இதன் அடிப்படையில், கேரள மாநிலத்தின் 20 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் இன்று வாக்குப்பதிவு தொடங்கியது. கேரள தலைநகர் திருவனந்தபுரம் தொகுதிக்குட்பட்ட கோவளம் செவ்வர வாக்குச்சாவடியில், 151-வது பூத்தில் இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கியது. முதலில் சுமார் 76 பேர் ஓட்டு போட்டனர். 77-வது நபர் கை-க்கு வாக்களித்தபோது தாமரை சின்னத்திற்கு அருகில் உள்ள லைட் ஒளிர்ந்ததாக குற்றம் சாட்டினார். இதையடுத்து, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தினர். இதனைத் தொடர்ந்து 151-வது பூத்தில் மட்டும் வாக்குப்பதிவு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
Like Reply
மைதானமே இல்லாத ஊரில் இருந்து வரலாறு படைத்த கோமதி: கண்கலங்க வைக்கும் பின்னணி!
#AsianAthleticsChampionships: #GoldMedalist #Gomathi #Marimuthu's Shocking Background | விடா முயற்சியால் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்று தமிழகத்துக்கு பெருமை சேர்த்துள்ளார் கோமதி

3-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி கத்தார் நாட்டின் தோஹா நகரில் நடைபெற்றது. இந்தப் போட்டியின் 800 மீட்டர் தடகளப் போட்டியில், தமிழகத்தைச் சேர்ந்த கோமதி தங்கம் வென்று வரலாறு படைத்துள்ளார்.

கண்கலங்க வைக்கும் கோமதியின் பின்னணி:
[Image: Gomathi-2-1.jpg]

திருச்சி அருகே உள்ள முடிகண்டம் பகுதியைச் சேர்ந்த மிகவும் ஏழை குடும்பத்தில் பிறந்தவர் கோமதி. பொருளாதாரம் மற்றும் அடிப்படை வசதிகள் சரிவரை கிடைக்காத மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கிறது இவரது கிராமம்.

குறிப்பாக, இந்தக் கிராமத்தில் ஒரு விளையாட்டு மைதானம் கூட கிடையாது. பேருந்து வசதிகள் குறைவுதான். அப்படி இருந்தும் தனது வீட்டில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மைதானத்துக்கு தினமும் சென்று பயிற்சி செய்துள்ளார் தங்க மங்கை கோமதி.

இளநிலை வணிகவியல் படித்துள்ள கோமதி, சிறுவயது முதலே தடகளத்தின்மீது தீராத காதல் கொண்டுள்ளார். கல்லூரி காலங்கள் வரை பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு ஏராளமான பதக்கங்களை வென்று குவித்துள்ளார்.

கடைக்குட்டி சிங்கம்:

அதிகாலை 3 மணிக்கு எழும் கோமதியை, அவரது தந்தை மாரிமுத்து சைக்கிளில் மைதானத்துக்கு அழைத்துச் சென்று வந்துள்ளார். ஒரு மகன், 3 மகள்களுடன் குடும்பம் வறுமையில் தவித்தபோது மாரிமுத்து - ராசாத்தி தம்பதியினர் தங்களது கடைசி மகளான கோமதியின் தடகள பயிற்சிக்கு ஊக்கமளித்து வந்துள்ளனர்.

கோமதியின் விடாமுயற்சி, விஸ்வரூப வெற்றி:

2013 முதல் சர்வதேச போட்டிகளில் கோமதி பங்கேற்று வந்தார். இதற்கிடையே அவரின் தந்தை மாரிமுத்து, 2016-ம் ஆண்டு புற்றுநோயால் மரணமடைந்தார். அடுத்த சில மாதங்களில், கோமதிக்குப் பயிற்சிகள் அளித்து பக்கபலமாக இருந்து வந்த பயிற்சியாளர் காந்தி, திடீர் மாரடைப்பால் மரணமடைந்தார்.

இருப்பினும், தனது விடா முயற்சியால் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்று தமிழகத்துக்கு பெருமை சேர்த்துள்ளார் கோமதி. தற்போது அவர் பெங்களூரு வருமான வரித்துறையில் பணியாற்றி வருகிறார்.
Like Reply
திரும்ப வந்துட்டேன்னு சொல்லு' - மெரினா ஏரியாவில் மெர்சல் காட்டிய வாட்சன்! #CSKvSRH

மனிஷ் பாண்டே, ரெய்னா, வாட்சன் என இந்த ஆட்டம் 'ஃபார்ம் அவுட் ஆனவர்கள் ஃபார்மை மீட்டெடுக்கும் ஆட்டம்!'
[Image: 155823_thumb.jpg]
கிட்டத்தட்ட இரண்டு வாரங்களாக முதலிடத்தை தக்க வைத்துக்கொண்டிருந்த சென்னை அணி திங்கள்கிழமைதான் டெல்லியிடம் அதை பறிகொடுத்தது. மறுபக்கம், தடுமாறிக்கொண்டிருந்த ஹைதராபாத் அணி இப்போதுதான் டாப் 4-க்குள் நுழைந்தது. சென்னை அணிக்கு கடந்த இரண்டு போட்டிகளும் தோல்வி முகம். ஹைதராபாத்திற்கோ கடைசி இரண்டு ஆட்டங்கள் தம்ப்ஸ் அப் காட்டின. இந்த நிலையில்தான் நேற்று தமிழ்நாட்டு பரோட்டா - சால்னாவும் ஹைதராபாத் பிரியாணி - வெங்காய பச்சடியும் உக்கிரமாக மோதிக்கொண்டன.
மெரினாவில் பஜ்ஜியும் சேப்பாக்கத்தில் பாஜியும் இல்லாமல் எப்படி? ஷர்துலுக்குப் பதில் உள்ளே வந்தார் ஹர்பஜன். பெர்சனல் காரணங்களுக்காக சன்ரைஸர்ஸ் கேப்டன் கேன் நியூசிலாந்து பறந்துவிட்டதால் புவனேஷ்வர் மீண்டும் கேப்டனானார். கேனுக்குப் பதில் ஷகிப், நதீமுக்கு பதில் மனிஷ் பாண்டே. ஸ்பின்னர்களுக்குக் கைகொடுக்கும் பிட்ச்சில் நபியை இறக்கியிருக்கலாம்தான். ஆனால், மிடில் ஆர்டர் வீக்காக இருக்கும் லைன் அப்பில் ஷகிப் பேட்ஸ்மேனாக கைகொடுப்பார் என நினைத்தார்களோ என்னவோ?
டாஸை வழக்கம்போல ஜெயித்தது தோனிதான். வழக்கம்போல சேஸிங்தான். இந்த சீசனில் 11 ஆட்டங்களில் ஒன்பது முறை சென்னை டாஸ் ஜெயித்திருக்கிறது. சீசனின் டேஞ்சரஸ் டைனமோக்களான வார்னரும் பேர்ஸ்டோவும் களமிறங்கினார்கள். சஹாரின் ஸ்விங்கில் முதல் ஓவரில் நான்கு ரன்கள்தான். பாஜியின் இரண்டாவது ஓவரில் பந்தை தொட்டுவிட முயன்று தோனியிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார் பேர்ஸ்டோ. சிம்பிளாக முடிந்தது பார்ட்னர்ஷிப். 


[Image: manish_02022.jpg]
[color][font]
ஒன் டவுனில் இறங்கினார் மனிஷ் பாண்டே. 'மூணு வருஷத்துக்கு ஒருதபா தான் நல்லா ஆடுவேன்' என முடிவு செய்து ஒவ்வொரு சீசனுக்கும் இறங்குவது அன்னாரின் வழக்கம். இந்த சீசனில் இதுவரை பெரிதாக அடிக்காவிட்டாலும் ஒன்டவுனில் ஆட ஆளில்லாமல் இறக்கிவிட்டார்கள். நோட்டாவை முந்திய பா.ஜ.கபோல இட் வாஸ் எ மெடிக்கல் மிராக்கிள்! ரவுண்டு கட்டி வெளுத்தார் பாண்டே. முதல் பாலிலேயே பவுண்டரி. ஒருபக்கம் காட்டடி வார்னர், மறுபக்கம் சுளீர் சுளீர் என அடிக்கும் மனிஷ் என பந்து படாதபாடுபட்டது. சி.எஸ்.கே பவுலர்களும்தான். 
பவர்ப்ளே முடிவில் 54 ரன்கள்... சென்னை பிட்ச்சில்! பெங்களூருவிலிருந்து கிளம்பியபோது கூடவே சின்னச்சாமி ஸ்டேடியத்தின் பிட்ச்சையும் பிய்த்து எடுத்து வந்து வைத்துவிட்டார்கள் போல என யோசிக்கும்படி ரன்ரேட் பறந்தது. ஓவருக்கு ரெண்டு, மூன்று சிங்கிள்கள், ஒரு டூஸ், கேப்பில் ஒரு பவுண்டரி, அது சிக்காவிட்டால், 'அடி ஒரு சிக்ஸை' என அலட்டிக்கொள்ளாமல் ஆடினார்கள் இருவரும். 'எப்படி வந்தது' என யோசிப்பதற்குள்ளாகவே நூறைக் கடந்தது ஸ்கோர். 12 ஓவர்களில் 103 ரன்கள். சென்னை பிட்ச்சில் இந்த சீசனில் நடந்திடாத அதிசயம் இது!
சென்னை பவுலர்களையும் சும்மா சொல்லக்கூடாது. Wide of off stump பந்துகளாக போட்டுக்கொடுத்துக்கொண்டே இருந்தார்கள். பேட்ஸ்மேன்களும் அலேக்காக அடித்துக்கொண்டே இருந்தார்கள். வார்னருக்கு முந்தி அரைசதம் அடித்தார் மனிஷ். ஸ்ட்ரைக் ரேட் 200! 'வளர்ற புள்ள, அதான் பீஸை எல்லாம் அதுக்குப் போட்டுட்டு குஸ்காவை மட்டும் நான் சாப்பிட்டேன்' ரேஞ்சுக்கு நிதானம் காட்டினார் வார்னர். 39 பந்துகளில் அவரும் அரைசதம் அடித்தார். இந்த சீசனில் அவரின் எட்டாவது 50+ ஸ்கோர் இது. அதுவும் இது தொடர்ந்து ஐந்தாவது அரைசதம்.
இந்த இணையைப் பிரிக்கவும் பாஜிதான் வரவேண்டியதாக இருந்தது. ஏகப்பட்ட சிங்கிள், டூஸ் என வார்னர் ஏகத்துக்கும் டயர்டாகி இருந்தார். எனவே தூக்கியடிக்க ஆசைப்பட்டு முன்னால் வர பளிச் ஸ்டம்பிங். ஸ்கோர் 14 ஓவரில் 124 ரன்கள். ஈஸியாக 200-ஐத் தொட்டுவிடுவார்கள் என நினைத்தநேரத்தில் திரும்ப ஆட்டத்திற்குள் வந்தார்கள் சென்னை பவுலர்கள். இறுதி ஓவர்களில் இறுக்கிபிடிக்க ரன்ரேட் தள்ளாடியது. மனிஷ் பாண்டேவும் டயர்டாகிப் போனார். கடைசி 2 ஓவர்களில் வெறும் 15 ரன்கள்தான். ஸ்கோர் 175! ராஜஸ்தானோடு மோதிய ஆட்டத்தில் சென்னை எடுத்த அதே ஸ்கோர். டார்கெட்டை சேஸ் செய்தால் இந்த சீசனில் இதுதான் சேப்பாக்கத்தில் பதிவான ஹை ஸ்கோராக இருக்கும். 
வாட்சனும் டுப்ளெஸ்ஸியும் களத்தில் இறங்கினார்கள். வாட்சன் கடைசியாக பாகிஸ்தான் லீக்கில் ஆடியது. ஐ.பி.எல்லில் ஸ்ட்ரீட் கிரிக்கெட்டில் தொட்டுக்கொடுத்து அவுட்டாகும் டபுள்சைட் போலத்தான் ஆடிக்கொண்டிருந்தார். அதை நிரூபிப்பது போலவே புவி வீசிய முதல் ஓவர் மெய்டன். 'சரி டுப்ளெஸ்ஸி அடிப்பாரு' என ரசிகர்கள் அந்தப் பக்கம் திரும்ப 'வெவ்வவ்வே' காட்டி அவரும் கட்டை வைத்தார். சென்னையின் முதல் ரன் 11வது பந்தில்தான் வந்தது. அடுத்த ஓவரிலேயே சிங்கிள் ரன்னுக்கு ஆசைப்பட்டு விக்கெட்டைவிட்டார் டுப்ளெஸ்ஸி. 3 ஓவர்களில் எட்டு ரன்கள். 'ரைட்டு... அதே டிசைன்' என முக்காடு போட்டுக்கொண்டார்கள் ரசிகர்கள்.
ஆனால், கலீலின் இரண்டாவது ஓவரில் ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரி அடித்து, 'நான் திரும்ப வந்துட்டேன்னு சொல்லு' என பாடி லாங்குவேஜில் உணர்த்தினார் வாட்சன். மறுபக்கம் நான்கு பவுண்டரி, ஒரு சிக்ஸ் என சந்தீப் ஓவரில் சடுகுடு ஆடினார் ரெய்னா. விண்டேஜ் சென்னை பேட்டிங்! அதன்பின் பைபாஸில் பறக்கும் ஆம்னிபஸ் போல வேகத்தைக் குறைக்கவே இல்லை இருவரும். ஆளானப்பட்ட ரஷித் ஓவரையே காலி செய்தார்கள். புவி பாவம் என்ன செய்வார்? ரஷித்தை மட்டுமே நம்பினார். ரஷித்தும் சொன்னதுபோலவே ரெய்னாவைத் தூக்க, உடைந்தது பார்ட்னர்ஷிப். 45 பந்துகளில் 77 ரன்கள் எடுத்த பார்ட்னர்ஷிப்.
[/font][/color]
[Image: raina_02279.jpg]
[color][font]
அதன்பின் களம் கண்ட ராயுடு, 'நீ அடி பங்காளி, நானும் இறங்கினா ரொம்பப் பெரிய கேங்வார் ஆயிடும்' என ஒதுங்கிக்கொள்ள ஒன்மேன் ஷோவை காட்டு காட்டென காட்டினார் வாட்சன். அதுவும் பச்சைப்பிள்ளை சந்தீப்பை அவர் அடித்த அடி இருக்கிறதே! மறுபடியும் ஒரே ஓவரில் ஒரு 19 ரன்கள்! பவுலிங்கில் ஃபிப்டியை நெருங்கினார் சந்தீப். அடுத்து ரஷித் போட்ட ஓவரில் இரண்டு பவுண்டரி, ஒரு சிக்ஸ். அவருக்கு வசதியாக சன்ரைஸர்ஸ் பவுலர்கள் ஷார்ட் பாலாக போட்டுக்கொடுக்க, பளார் பளாரென பறக்கவிட்டார் வாட்சன். கடலில் விழுந்த பந்தை கழுவி எடுத்துக்கொண்டுவந்து பவுலிங் போட்டு திரும்ப பறக்கவிட்டு விளையாடினார்கள். நைஸ் கேம்!
[/font][/color]
[Image: watto_04022.jpg]
[color][font]
ரஷித்தின் கடைசி ஓவரிலும் ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரி! 'யோவ் நான் லெஜெண்டுய்யா', - 'லெஜெண்டுன்னா போய் ஓரமா நில்லு போ' - இப்படித்தான் இருந்தது வாட்சன் வெர்சஸ் ரஷித் ஆட்டம். உலகின் முன்னணி பவுலராக இருந்தும், வாட்சனுக்கு எக்கச்சக்க பந்துகள் போட்டும் இதுவரை ஒருமுறைகூட அவரை அவுட்டாக்கியது இல்லை ரஷித். கடைசியில் வாட்சனாகப் பார்த்து அவுட்டானபோது சென்னை ஸ்கோர் 160. 17 பந்துகளில் 16 ரன்கள் தேவை. சப்ப மேட்டர்தான். ஆனால், சென்னை அணியின் ரூல் புக்கில் கடைசி ஓவருக்கு முந்தி மேட்ச் முடியக்கூடாது என்று இருக்கிறதே! போலவே குட்டிக்கரணம் எல்லாம் அடித்து, ஸ்டம்ப்பை எல்லாம் பறக்கவிட்டு சிங்கிள் தட்டி கடைசியாக ஜெயித்தார்கள்.
மனிஷ் பாண்டே, ரெய்னா, வாட்சன் என இந்த ஆட்டம் 'ஃபார்ம் அவுட் ஆனவர்கள் ஃபார்மை மீட்டெடுக்கும் ஆட்டம்!' புள்ளிப்பட்டியலில் முதலிடம், ஏறக்குறைய உறுதியாகிவிட்ட ப்ளே ஆஃப் வாய்ப்பு, ஃபார்முக்குத் திரும்பும் முக்கிய வீரர்கள், இந்த சீசனில் சென்னையில் தோல்வியே காணாத ரெக்கார்ட் என சி.எஸ்.கே பையில் போட்டு எடுத்துப்போக ஏகப்பட்ட விஷயங்கள் இருந்தன இந்த கேமில்! சன்ரைஸர்ஸுக்கோ பிரஷர் எகிறிக்கிடக்கிறது. 
[/font][/color]
[Image: csk_team_02112.jpg]
[color][font]
பிரசன்டேஷனில் மேன் ஆஃப் தி மேட்ச் வாங்கிய வாட்சன், 'நான் இங்க உங்க முன்னாடி நிக்கிறேன்னா அதுக்குக் காரணம் தோனியும் ப்ளெமிங்கும்தான்' என பாசமழை பொழிந்தார். ஆமா சார்! இது டீமில்ல, விக்ரமன் சார் படம்! [/font][/color]
Like Reply
வாக்கு எண்ணிக்கை நாளில் பெட்ரோல், டீசல் விலை ரூ.10 உயரும்...! அதிர்ச்சி கொடுக்கும் காங்.
மே 23-ம் தேதி மாலையில், பெட்ரோல் லிட்டருக்கு 5 முதல் 10 ரூபாய் வரை விலையை உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.


[Image: sandep-swerjiwala.jpg]காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா,



எல்லாவற்றையும் துணிச்சலாக பேசும் பிரதமர் மோடி, பெட்ரோல் டீசல் விலை பற்றி பேசாமல் மவுனமாக இருப்பது ஏன்? என கேள்வி எழுப்பிய அவர், வாக்கு எண்ணிக்கையான மே 23-ம் தேதி மாலையில், லிட்டருக்கு 5 முதல் 10 வரை  பெட்ரோல் மற்றும் டீசலின் விலையை உயர்த்த ஏற்பாடு நடைபெற்று வருவதாகவும் குற்றம்சாட்டினார்.

ஆனால் மக்களை யாராலும் ஏமாற்ற முடியாது என்றும் அவர்கள் தெளிவானவர்கள் என்றும் பதிவிட்டுள்ளார்.
Like Reply
இலங்கை குண்டுவெடிப்பு தாக்குதல்களுக்கு காரணம் என்ன? - ஐ.எஸ் தலைவர் அபுபக்கர் அல்-பாக்தாதி
[Image: _106645040_5beacc07-1ce1-4412-b632-6bd55affe536.jpg]
இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்து கொள்ளும் குழு ஒருவரின் காணொளியை வெளியிட்டு, இவர்தான் ஐ.எஸ் அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல்-பாக்தாதி என்று கூறி உள்ளது. அந்த காணொளியில் அவர் இழந்த பிரதேசங்களுக்காக பலி தீர்ப்போம் என சூளுரைத்துள்ளார்.
2014ஆம் ஆண்டுக்கு பின்பிலிருந்தே அபுபக்கர் அல்-பாக்தாதியை காணவில்லை. அதாவது சிரியா மற்றும் இராக்கின் சில பிரதேசங்களை கைப்பற்றி கலிபாவை ஏற்படுத்திய பின்பிலிருந்தே அவரை காணவில்லை.
ஐ.எஸ் வசம் இறுதியாக இருந்தா பாகூஸ் நகரத்தை இழந்ததை இந்த காணொளியில் ஒப்புக் கொண்டுள்ளார்.
எப்போது இந்த காணொளி எடுக்கப்பட்டதென தெரியவில்லை. ஏப்ரலில் எடுக்கப்பட்ட காணொளி இது என்கிறது ஐ.எஸ் அமைப்பு.
ஏன் தாக்கினோம்?
பாகூஸ் நகரத்தை இழந்ததற்கு பலி தீர்க்கும் விதமாக ஈஸ்டர் அன்று இலங்கையை தாக்கினோம் என்று அல்-பாக்தாதி கூறி உள்ளார்.
இலங்கை தாக்குதலுக்கு முதன்முதலாக ஐ.எஸ் உரிமை கோரிய போது இந்த காரணத்தை கூறவில்லை என்கிறார் பிபிசியின் மின அல் லாமி.
[Image: _106645042_ae8b08e9-6b5a-4845-8f63-38849027daca.jpg]படத்தின் காப்புரிமைAFP
இந்த காணொளியில் சூடான், அல்ஜீரியாவில் நடக்கும் போராட்டங்கள் குறித்து பேசி உள்ள அவர் சர்வாதிகாரத்தை விழ்த்த ஜிஹாத்தான் சரியான வழி என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த காணொளியின் இறுதி காட்சியில் பாக்தாதியின் புகைப்படம் மெல்ல மறைந்து , இலங்கை தாக்குதல் குறித்து பேசும் ஒலி கேட்கிறது.
இலங்கை வெடிகுண்டு தாக்குதல் நியூசிலாந்து மசூதி தாக்குதலுக்கு பதிலடியாக நடத்தப்பட்டது என்று கூறப்பட்டுவந்த சூழ்நிலையில் இந்த காணொளியில் பாகூஸ் நகரத்தை இழந்ததற்கு பலி தீர்க்கும் விதமாகவே இந்த தாக்குதல் நடந்ததாக கூறப்பட்டுள்ளது.
18 நிமிடங்கள் இந்த காணொளி நீள்கிறது
மற்ற ஜிஹாதித் தலைவர்களைப் போலல்லாமல் பாக்தாதி, மிக அதிகத் தேவை இருந்தால் மட்டுமே பொதுவெளியில் தோன்றவோ அல்லது பேசவோ செய்திருக்கிறார்.
[Image: _106618426_90409457-6908-4175-b7cb-0580cee44b53.jpg]படத்தின் காப்புரிமை---C STATEImage captionஐ.எஸ் வெளியிடும் பல காணொளிகளின் இறுதியில் காணப்படும் படம்.
இஸ்லாமிய அரசு குழுவின் தலைமை வரிசையில் , உயர செல்லச் செல்ல, மேலிருப்பவர்களுடன் தொடர்பு என்பது அவர்களுக்கு விசுவாசமான சொற்ப எண்ணிக்கையிலானவர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது.
எனவே, பாக்தாதி எங்கிருக்கிறார் என்பது விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலருக்கு மட்டுமே தெரிந்திருக்கும்.
இதுதான், அவரை வலைவீசித் தேட சிறப்புப் படைகளை உருவாக்கியிருக்கும் அமெரிக்காவுக்கு, அவர் எங்கிருக்கிறார் என்பதைக் கண்டறிவதை கடினமாக்குகிறது.
சிரியாவுக்கும் இராக்குக்கும் இடையே உள்ள எல்லைப்புறப் பகுதி, பாக்தாதிக்கு சற்றுப் பாதுகாப்பான மற்றும் பழக்கமான நிலப்பரப்பைத் தருகிறது. அங்கு அவர் ஒளிந்து கொண்டு அவரைப் பிடிக்கவோ அல்லது கொல்லவோ எடுக்கப்படும் முயற்சிகளைத் தோற்கடிக்கலாம்.
Like Reply
இலங்கை குண்டுவெடிப்பு: பயங்கரவாதிகள் உடல்களை புதைக்க இடம் தரமறுக்கும் உலமா சபை

[Image: _106634501_gettyimages-1139834764.jpg]படத்தின் காப்புரிமைGETTY IMAGES
இலங்கை சாய்ந்தமருது பொலிவேரியன் பகுதியில் பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டு மரணித்த எவருடைய உடல்களையும் தமது பள்ளிவாசல் பொறுப்பேற்காது என்றும் அந்த சடலங்களை தமது பிரதேச மையவாடிகளில் அடக்கம் செய்ய இடமளிக்கப் போவதில்லை எனவும் சாய்ந்தமருது ஜும்ஆ பள்ளிவாசல் உலமா சபை அறிவித்துள்ளது.
சாய்ந்தமருது வர்த்தக சபை மற்றும் பொதுமக்களுடன் இணைந்து இந்த அறிவித்தலை விடுப்பதாகவும் ஜும்ஆ பள்ளிவாசல் உலமா சபையினர் தெரிவித்துள்ளனர்.
அம்பாறை மாவட்டத்தில் கல்முனை போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட சாய்ந்தமருது பகுதியில் பாதுகாப்பு பிரிவின் மீது தீவிரவாதிகள் ஏப்ரல் 26 அன்று இரவு துப்பாக்கி பிரயோகம் செய்தனர். பாதுகாப்பு பிரிவினரும் பதில் தாக்குதல் நடத்தினர். இதில் 6 தற்கொலை குண்டுதாரிகள் உள்பட 16 பேர் உயிரிழந்தனர். அப்பகுதியில் நடந்த சோதனையில் ஏராளமான ஆயுதங்களும் கண்டெடுக்கப்பட்டன.
இந்நிலையில் நடத்திய ஊடக சந்திப்பில். இந்த சம்பவத்தில் இறந்த தீவிரவாதிகளின் சடலங்களை தங்கள் மையவாடிகளில் அடக்கம் செய்ய அனுமதிப்பதில்லை என்ற முடிவை சாய்ந்தமருது ஜும்ஆ பள்ளிவாசல் உலமா சபையினர் வெளியிட்டனர்.
[Image: _106634504_sainthamaruthuulama-011.jpg]
"பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டு இப்பிரதேசத்தில் என்றுமில்லாதவாறு அமைதியின்மையை ஏற்படுத்திய நபர்கள் எவரின் உடல்களையும் எமது பள்ளிவாசல் பொறுப்பேற்காது. மேலும், அந்த சடலங்களை இப்பிரதேச மையவாடிகளில் அடக்கம் செய்யவும் இடமளிக்கமாட்டோம்." என்று அவர்கள் தெரிவித்தனர்.
"ஸியாரம் (புனிதர்களை அடக்கம் செய்த இடம்) அமைந்துள்ள பள்ளிவாசல்களை இலக்கு வைத்து விஷமிகளின் தாக்குதல் நடைபெறலாம் என போலீஸார் எம்மை எச்சரித்ததற்கு அமைய, நாம் ஸியாரம் அமைந்துள்ள எமதுபள்ளிவாசல்களை பாதுகாக்கும் பல நடவடிக்கைகளை முடுக்கியிருந்தோம்." என்றனர்
ஏற்கனவே சுனாமியால் பாதிக்கப்பட்டு தமது உறவுகளையும், சொத்துக்களையும் இழந்து, மீள் குடியேறியுள்ள இம் மக்களை, மீண்டும் துயரத்தில் ஆழ்த்தியிருப்பது மோசமான ஒன்று என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
வீடுகளுக்கு செல்ல அச்சப்படும் மக்கள்
சாய்ந்தமருது பொலிவேரியன் பகுதியில், தமது வீடுகளிலிருந்து வெளியேறிய அந்தப் பகுதி மக்களில் கணிசமானோர், இன்னும் அவர்களுடைய வீடுகளுக்குத் திரும்பவில்லை. வேறுவழிகளின்றி, வீடு திரும்பியவர்களும் - கடும் அச்சத்துடனேயே காணப்படுகின்றனர்.
சாய்ந்தமருது பொலிவேரியன் பகுதியிலுள்ள வீடு ஒன்றில் வாடகைக்குத் தங்கியிருந்தவர்களில் - குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட 15 பேர், கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற தற்கொலைக் குண்டு வெடிப்பு மற்றும் துப்பாக்கிச் சூடு சம்பங்களில் உயிரிழந்தனர்.
[Image: _106634499_sainthamaruthu-afterincident-123.jpg]
அந்த சம்பவம் நடந்த வீட்டினுள்ளும் சுற்றுப்புறங்களிலும் காணப்பட்ட சடலங்கள் தற்போது அகற்றப்பட்டுள்ளன. அங்கு காணப்பட்ட தடயப் பொருட்களை போலீஸார் எடுத்துச் சென்றுள்ளார்கள். வீட்டின் முன்பாக போலீஸார் காவலில் உள்ளனர்.
சம்பவம் நடந்த வீட்டின் முன்னாலுள்ள வீதியில், குண்டு வெடிப்பின் போது உடைந்து சிதறிய பொருட்களின் பகுகள் இன்னும் காணப்படுவதையும் அவதானிக்க முடிகிறது.
இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு - மேற்படி பயங்கரவாதச் சம்பவங்கள் நடந்ததை அடுத்து, தமது வீடுகளிலிருந்து வெளியேறிய அந்தப் பகுதி மக்களில் கணிசமானோர், இன்னும் தமது வீடுகளுக்குத் திரும்பவில்லை. வேறு வழிகளின்றி தமது வசிப்பிடங்களுக்குத் திரும்பியதாக சிலர் பிபிசியிடம் கூறினார்கள். அதிர்ச்சியும், பயமும் இன்னும் விலகாத நிலையிலேயே அவர்கள் உள்ளனர்.
தமது வாழ்நாளில் இவ்வாறான சம்பவத்தை முதன் முதலாகக் கண்டதாக, அங்குள்ள பலர் கூறுகின்றனர். கடந்த சில வாரங்களுக்கு முன்னர், தனது அடையாள அட்டையை எடுத்துச் செல்லாமலேயே, சாய்ந்தமருதிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையம் வரை, பணித்துத் திரும்பியதாகக் கூறும் இப்பகுதிவாசி ஒருவர், இப்போது அடையாள அட்டை இன்றி வெளியேற முடியாத பாதுகாப்புக் கெடுபிடிகள் ஏற்பட்டுள்ளதாகவும், இவ்வாறான குண்டுவெடிப்பு சம்பவங்களின் பின்னர் தமது சுதந்திரம் பறிபோய் விட்டதாகவும் பிபிசி யிடம் கவலை தெரிவித்தார்.
இதேவேளை, தமது ஊரில் இவ்வாறானதொரு சம்பவம் நடந்துள்ளதால் அங்குள்ள மக்கள் கடுமையான கவலையுடனும், கோபத்துடனும் காணப்படுகின்றனர்
Like Reply
கிரண்பேடிக்கு மத்திய அரசு வழங்கிய அதிகாரத்தை ரத்து செய்தது உயர் நீதிமன்றம்!
காங்கிரஸ் எம்.எல்.ஏ லட்சுமி நாராயணன் மத்திய அரசின் அனுமதிக்கு எதிராக மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

[Image: kiran-bedi-reuters-875.jpg]
Like Reply
வெற்றியுடன் விடைபெற்றார் வார்னர்: ப்ளே-ஆஃப் வாய்ப்பை பிரகாசப்படுத்திய சன்ரைசர்ஸ்: அஸ்வின் அணிக்கு சிக்கல்

[Image: 1warnerjpg]ஆட்டநாயகன் விருது வென்ற டேவிட் வார்னர் : படம் உதவி ஐபிஎல்

டேவிட் வார்னரின் அதிரடி அரைசதம், ரஷித் கானின் திணறவைக்கும் லெக்ஸ்பின் ஆகியவற்றால், ஹைதராபாத்தில் நேற்று நடந்த 48-வது லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை 45 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
இதன் மூலம்  12 ஆட்டங்களில் 6 வெற்றிகள், 6 தோல்விகள் என மொத்தம் 12 புள்ளிகளுடன் சன்ரைசர்ஸ் அணி 5-வது இடத்தில் இருக்கிறது. நிகர ரன்ரேட் அடிப்படையில் சன்ரைசர்ஸ் அணி நல்ல நிலையில் இருப்பதால், அடுத்து வரும் இரு ஆட்டங்களையும் கட்டாயம் வென்றால், ப்ளே-ஆப் சுற்றுக்கான வாய்ப்பு பிரகாசமாக இருக்கும். அதேசமயம், மற்ற அணிகளின் வெற்றி, தோல்விகளும் சன்ரைசர்ஸ் அணி ப்ளே-ஆப் சுற்றுக்குள் செல்வதையும் தீர்மானிக்கும்
அதேசமயம், அஸ்வின் தலைமையிலான கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணி 12 ஆட்டங்களில் 5 வெற்றிகளையும், 7 தோல்விகளையும் பெற்று 10 புள்ளிகளுடன் 6-வது இடத்தில் உள்ளது. அடுத்துவரும் 2 ஆட்டங்களையும் கட்டாயம் அதிகமான ரன்ரேட் அடிப்படையில் வெல்ல வேண்டியது அவசியம். அவ்வாறு வென்றாலும், ரன்ரேட் அடிப்படையில் பார்க்கும் போது, ப்ளே-ஆப் சுற்றுக்கு செல்வதை உறுதி செய்ய முடியாது
முதலில் பேட் செய்த சன்ரைசர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் குவித்தது. 213 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் சேர்த்து 45 ரன்களில் தோல்வி அடைந்தது.
[Image: rasigjpg]3 விக்கெட்டுகளை வீழ்த்திய ரஷித் கான் : படம் உதவி ஐபிஎல்
 
'ப்ளையிங் கிஸ்' வார்னர்
சன்ரைசர்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னரின் பேட்டிங், ரஷித் கானின் பந்துவீச்சு ஆகியவை வெற்றிக்கு முக்கியக் காரணமாகக் குறிப்பிடலாம். இந்த ஆட்டத்துடன் வார்னர் உலகக் கோப்பைப் போட்டிக்கு தயாராவதற்காக தன்னுடைய தாய்நாட்டுக்கு புறப்பட்டார். ஆட்டமிழந்து செல்லும் போது வார்னர் சொந்த மைதானத்தில் உள்ள ரசிகர்களுக்கு ப்ளையிங் கிஸ் கொடுத்துவிட்டு  சென்றபோது, ரசிகர்கள் கரகோஷம் காதைப் பிளந்தது.
இந்த சீசனில் தன்னுடைய கடைசி ஆட்டம் சிறப்பாக இருக்க வேண்டும் என்று நினைத்த வார்னர், இந்த ஆட்டத்தில் 56 பந்துகளில் 86 ரன்கள் சேர்த்து ஆட்டநாயகன் விருதைப் பெற்றார். தொடர்ந்து இந்த சீசனில் 8-வது முறையாக வார்னர் அரைசதம் அடித்துள்ளார்.
கடந்த 2014-ம் ஆண்டு சன்ரைசர்ஸ் அணிக்கு சென்றதில் இருந்து கடந்த ஆண்டைத் தவிர்த்து மற்ற ஆண்டுகளில் எல்லாம் வார்னர் 500  ரன்களுக்கு குறையாமல் சேர்த்துள்ளார். தற்போதுவரை 12 ஆட்டங்களில் 692 ரன்கள் சேர்த்துள்ளார். இதில் ஒரு சதம், 8 அரை சதங்கள் அடங்கும்.
[Image: kalleeeeeejpg]கேப்டன் வில்லியம்ஸனை முத்தமிட்ட கலீல் அகமது : படம் உதவி ஐபிஎல்
 
இங்கு மட்டுமே காண முடியும்
 சிறப்பாகப் பந்துவீசிய ரஷித் கான் 4 ஓவர்கள் வீசி 21 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். கே.எல். ராகுல் சன்ரைசர்ஸ் கேப்டன் வில்லியம்ஸன் கேட்ச்பிடித்து ஆட்டமிழக்கச் செய்தார். வில்லியம்ஸன் கேட்ச் பிடித்ததும் அவரின் தலையில் முத்தமிட்டு கலீல் அகமது பாராட்டியது அழகு, மிகவும் உணர்வுப்பூர்வமாக இருந்தது. இதுபோன்ற நிகழ்வுகளை நிச்சயம் ஐபிஎல் போட்டியில் மட்டுமே காண முடியும்.
மோசமான பந்துவீச்சு
அஸ்வின் தலைமையிலான கிங்ஸ்லெவன் அணியில் நேற்றைய பந்துவீச்சும், பேட்ஸ்மேன்களின் செயல்பாடும் மிக மோசமாக இருந்தது. அந்த அணியின் தொடக்க பந்துவீச்சாளர் அர்ஷதீப் சிங், முஜிப் உர் ரஹ்மான் இருவரும் சேர்ந்ந்து 108 ரன்களை வாரி வழங்கினார்கள்.
ஐபிஎல் வரலாற்றில் தொடக்க  பந்துவீச்சாளர்கள் இந்த அளவுக்கு மோசமாக பந்துவீசியது இதுதான் முதல் முறையாகும். அதிலும் முஜிப் உர் ரஹ்மான் 4 ஓவர்களில் 66 ரன்கள் வழங்கி ஐபிஎல் சீசனில் அதிகபட்ச ரன்களை வழங்கிய பந்துவீச்சாளர் என்ற பெயரைப் பெற்றார்.
பஞ்சாப் அணியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கிறிஸ் கெயில் நேற்று  4 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தது அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. ராகுல் 79 ரன்கள் சேர்த்ததே அந்த அணிக்கு மிகப்பெரிய ஆறுதலாகும். மற்ற வீரர்கள் அனைவரும் ப்ளே-ஆஃப் வாய்ப்பு கிடைக்காதோ என்று தெரிந்து கொண்டு விளையாடியதுபோல் பொறுப்பின்றி பேட் செய்ததைக் காண முடிந்தது.
213 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்கியது. கெயில், ராகுல் ஆட்டத்தைத் தொடங்கினார்கள். கெயில் 4 ரன்கள் சேர்த்தநிலையில், கலீல் அகமது வீசிய 3-வது ஓவரில் பாண்டேயிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
கெயில் ஏமாற்றம்
அடுத்துவந்த மயங்க் அகர்வால், ராகுலுடன் சேர்ந்து ஓரளவுக்கு நிதானமாக ரன்களைச் சேர்த்தார். பவர்ப்ளேயில் பஞ்சாப் அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 44 ரன்கள் சேர்த்தது. ரஷித்கான் வீசிய 8-வது ஓவரில் விஜய்சங்கரிடம் கேட்ச் கொடுத்து 27 ரன்கள் சேர்த்த நிலையில் மயங்க் அகர்வால் ஆட்டமிழந்தார். இருவரும் 2-வது விக்கெட்டுக்கு 60 ரன்கள் சேர்த்தனர்.
அதன்பின் வந்த நிகோலஸ் பூரன் வேகமாக ரன்களைச் சேர்த்தார். ரஷித் கான் வீசிய 11-வது ஓவரில் ஒருசிக்ஸர், 2 பவுண்டரிகள் சேர்த்து, 4-வது பந்தில் புவனேஷ்வரிட் கேட்ச் கொடுத்து 21 ரன்களில் பூரன் ஆட்டமிழந்தார்.
ரஷித் கான் வீசிய 13-வது ஓவரில் மில்லர் 11 ரன்னிலும், அஸ்வின் டக்அவுட்டிலும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது பஞ்சாப் அணியை மேலும் சிக்கலாக்கியது. விக்கெட்டுகள் ஒருபக்கம் வீழ்ந்தபோதிலும் நிதானமாக பேட் செய்த ராகுல் 38 பந்துகளில் அரைசதம் அடித்தார்.
[Image: rahujpg]அரைசதம் அடித்த ராகுல் : படம் உதவி ஐபிஎல்
 
ராகுல் ஆறுதல்
6-வது விக்கெட்டுக்கு சிம்ரன் சிங், ராகுல் கூட்டணி ஓரளவுக்கு நிலைத்தனர். இருவரும்53 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். கலீல் அகமது பந்துவீச்சில் 56பந்துகளில் 79 ரன்கள் சேர்த்த நிலையில் ராகுல் ஆட்டமிழந்தார். அதன்பின் பஞ்சாப் அணியின் பேட்டிங் வரிசை ஆட்டம் கண்டது.
சந்தீப் சர்மா வீசிய கடைசி ஓவரில் சிம்ரன் சிங் 16 ரன்களிலும், முஜிப் உர் ரஹ்மான் டக்அவுட்டிலும் ஆட்டமிழந்தனர். கடைசி 7 ரன்களுக்குள் 3 விக்கெட்டை பஞ்சாப் அணி இழந்தது குறிப்பிடத்தக்கது. 20 ஓவர்களில் பஞ்சாப் அணி 8 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் சேர்த்து 45 ரன்களில் தோல்வி அடைந்தது.
வார்னர் அதிரடி

[Image: warner-pandejpg]
விரைவாக ரன்கள் சேர்த்த வார்னர், மணிஷ் பாண்டே கூட்டணி : படம் உதவி ஐபிஎல்

 
முன்னதாக, டாஸ்வென்ற அஸ்வின் பீல்டிங்கைத் தேர்வு செய்தார். வார்னர், விர்திமான் சாஹா நல்ல தொடக்கம் அளித்தனர். குறிப்பாக வார்னர் முஜிப்உர்ரஹ்மான் பந்துவீச்சையும், அர்ஷ்தீப் சிங் பந்துவீச்சையும் வெளுத்துவாங்கி  பவுண்டரி, சிக்ஸர்களாக விளாசினார். பவர்ப்ளே ஓவரில் சன்ரைசர்ஸ் அணி விக்கெட் இழப்பின்றி 77 ரன்கள் குவித்தது.
முருகன் அஸ்வின் வீசிய 7-வது ஓவரில் சாஹா 28 ரன்கள் சேர்த்தநிலையில், கீப்பர் சிம்ரன் சிங்கிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து மணிஷ்பாண்டே களமிறங்கி வார்னருடன் இணைந்தார். இருவரும் சீராக ரன்களை சேர்த்ததால்,  ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. வார்னர் 38 பந்துகளில் அரைசதம் அடித்தார். 10 ஓவர்களில் சன்ரைசர்ஸ் அணி ஒருவிக்கெட் இழப்புக்கு 103 ரன்கள் சேர்த்தது.
அஸ்வின் வீசிய 17-வது ஓவர் திருப்புமுனையாக அமைந்தது. 36 ரன்கள் சேர்த்த நிலையில் ஷமியிடம் கேட்ச் கொடுத்து  மணிஷ் பாண்டே ஆட்டமிழந்தார். அடுத்த இரு பந்துகளில் , ரஹ்மானிடம் கேட்ச் கொடுத்து 81 ரன்களில் வார்னர் வெளியேறினார்.
கடைசி 5 ஓவரில் 5 விக்கெட்
இருவரும் சென்றபின் விக்கெட்டுகள் விரைவாக விழுந்தன. முஜிப்பூர் வீசிய 18-வது ஓவரில் வில்லியம்ஸன் ஒரு சிக்ஸர், பவுண்டரியும், முகமது நபி ஒரு சிக்ஸர்,பவுண்டரியும் அடித்து நொறுக்கினார்கள்.
ஷமி வீசிய 19-வது ஓவரில் வில்லியம்ஸன் 14 ரன்னில் முருகன் அஸ்வினிடம் கேட்ச் கொடுத்தார், அடுத்து இரு பந்துகளில் முகமது நபி 20 ரன்னில் போல்டாகி வெளியேறினார்.
அர்ஷ்தீப் வீசிய கடைசி ஓவரில் ரஷித் கான் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். விஜய் சங்கர் 7 ரன்னிலும், அபிஷேக் சர்மா 5 ரன்னிலும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். கடைசி 5 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை சன்ரைசர்ஸ் அணி இழந்தாலும், ஏறக்குறைய 73 ரன்களைச் சேர்த்தது.
20ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் சேர்த்தது சன்ரைசர்ஸ் அணி. பஞ்சாப் அணித் தரப்பில்  ஷமி, அஸ்வின் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர்.
Like Reply
மோடி, அமீத் ஷா மீதான வழக்கில் சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்
பா.ஜனதா தேசியத் தலைவர் அமித் ஷா, பிரதமர் மோடி இருவரும் தேர்தல் நடத்தை விதிகளை மீறி இருப்பதாகவும் அவர்கள் மீது தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று காங்கிரஸ் கூறி வருகிறது.
இது தொடர்பாக காங்கிரஸ் சார்பில் பெண் எம்.பி. சுஷ்மிதா தேவ் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
இவ்விவகாரம் தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு தலைமை தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ் அனுப்புமாறு உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட், மறுவிசாரணையை மே 2-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
Like Reply




Users browsing this thread: 156 Guest(s)