Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
மேடையிலேயே கொளுத்திப் போடும் பாஜக, கலக்கத்தில் கூட்டணி கட்சிகள்!!
தமிழகத்தில் அமைந்திருக்கும் அதிமுக, பாஜக கூட்டணி முரண்பாடுகள் நிறைந்த கூட்டணியா? என்ற சந்தேகத்தை மக்களிடம் எழுப்பியுள்ளது. அதிமுக கூட்டணியில் இடம் பெற்று இருக்கும் மத்திய பாஜக தலைவர்கள் ஏடாம் கூடமாக தமிழகத்தில் பேசி குழப்பத்தை ஏற்படுத்தி வருவதால் கூட்டணி கட்சிகளுக்கு நெருடல் ஏற்பட்டுள்ளது.
Samayam Tamil | Updated:Apr 15, 2019, 06:20PM IST
[/url]
மேடையிலேயே கொழுத்திப் போடும் பாஜக
ஹைலைட்ஸ்
- மேடையிலேயே கொழுத்திப் போடும் பாஜக, கலக்கத்தில் கூட்டணி கட்சிகள்
- பாஜக தலைவர்கள் ஏடாம் கூடமாக பேசி வருவதால் கூட்டணி கட்சிகளுக்கு நெருடல் ஏற்பட்டுள்ளது
[color][font]
தமிழகத்தில் அமைந்திருக்கும் அதிமுக, பாஜக கூட்டணி முரண்பாடுகள் நிறைந்த கூட்டணியா? என்ற சந்தேகத்தை மக்களிடம் எழுப்பியுள்ளது. அதிமுக கூட்டணியில் இடம் பெற்று இருக்கும் மத்திய பாஜக தலைவர்கள் ஏடாம் கூடமாக தமிழகத்தில் பேசி குழப்பத்தை ஏற்படுத்தி வருவதால் கூட்டணி கட்சிகளுக்கு நெருடல் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் வரும் 18ஆம் தேதி மக்களவை மற்றும் 18 சட்டமன்றங்களுக்கான இடைத்தேர்தல் நடக்கிறது. அதற்கான இறுதிக்கட்ட பிரச்சாரமும் நாளையுடன் முடிவடைகிறது. அதிமுக கூட்டணியில் இருக்கும் பாஜக மூத்த தலைவர்கள் தமிழகத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே அதிமுகவின் தேர்தல் அறிக்கை மற்றும் பாஜகவின் தேர்தல் அறிக்கை ஒத்துப் போகவில்லை, முரண்பாடாக உள்ளது என்ற குற்றச்சாட்டு பரவலாக உள்ளது. இதில் முக்கியமானவை நீட் தேர்வு, [url=https://tamil.samayam.com/topics/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%20%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%208%20%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88]சென்னை சேலம் 8 வழிச்சாலை.
நீட் தேர்வு ரத்து செய்ய அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும் என்று அதிமுக தேர்தல் அறிக்கையில் உள்ளது. ஆனால், நீட் தேர்வு குறித்து தமிழக அரசு எதுவும் எங்களிடம் கோரிக்கை வைக்கவில்லை. ஆதலால் நாங்களும் அதுபற்றி எங்களது அறிக்கையில் குறிப்பிடவில்லை என்று சமீபத்தில் தமிழகம் வந்து இருந்த மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தூத்துக்குடியில் வைத்து தெரிவித்து இருந்தார்.
இதற்கிடையே சென்னை - சேலம் 8 வழிச்சாலை அமைக்க நிலம் ஆக்கிரமித்து, தமிழக அரசு விடுத்திருந்த அரசாணையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து, நிலங்களை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று அதிரடி உத்தரவு பிறப்பித்தது. இதனால், பாதிக்கப்பட்ட விவசாயிகள் சந்தோசம் அடைந்தனர். இவர்களது சந்தோஷத்திற்கான ஆயுளை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி குறைத்தார்.
அதுவும் சேலத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் அமர்ந்திருக்கும் மேடையிலேயே, ''நாங்கள் சென்னை-சேலம் 8 வழிச்சாலையை அமைப்போம். அதிக விலை கொடுத்து நிலங்களை வாங்குவோம்'' என்று அதிரடியாக நிதின் தெரிவித்தார். இதனால், விவசாயிகள் ஆத்திரத்தில் உள்ளனர். ஏன், பாமக கட்சி தொண்டர்கள் பயங்கர கோபத்தில் உள்ளனர்.
''தலைவர்களை மேடையிலேயே வைத்துக் கொண்டு நிதின் கட்கரி அவ்வாறு பேசுகிறார், தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவிக்காமல் அமைதியாக இருக்கின்றனர். அன்புமணி ராமதாசோ, நாங்கள்தான் இந்தத் திட்டத்திற்கு எதிராக வழக்கு தொடுத்து வெற்றி பெற்றோம் என்று கூறுகிறார். ஏன் பொதுமக்களின் கருத்துக்களை கட்கரி கேட்கவில்லை. இவர் என்ன சர்வதிகாரியா? வரும் தேர்தலில் அதிமுகவுக்கு, பாஜகவுக்கு சரியான பதிலடியை நாங்கள் கொடுப்போம்'' என்று விவசாயிகள் ஆதங்கத்துடன் கூறி வருகின்றனர்.
இது இப்படி என்றால், முத்தலாக் சட்டத்தை கடுமையாக எதிர்த்த அதிமுக எம்பி., அன்வர் ராஜாவை மேடையில் வைத்துக் கொண்டே பிரதமர் மோடி ராமநாதபுரத்தில் நடந்த கூட்டத்தில், ''நாங்கள்தான் முத்தலாக் சட்டத்தைக் கொண்டு வந்தோம்'' என்று பேசினார்.
இப்படி கூட்டணிக்குள் முரண்பாடுகள் அதிகரித்து வரும் நிலையில் அது மக்களிடம் தேர்தல் நேரத்தில் பெரிய அளவில் எதிரொலித்து வருகிறது. கன்னியாகுமரியில் பாஜக வேட்பாளராக போட்டியிடும் பொன் ராதாகிருஷ்ணனும் நிதின் கட்கரி சொன்னதை வழி மொழிந்துள்ளார். மக்கள் விருப்பத்தின் பேரில் சென்னை-சேலம் 8 வழிச்சாலை கொண்டு வரப்படும் என்று தெரிவித்துள்ளார். இது மீண்டும் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது
[/font][/color]
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
யோகி ஆதித்யநாத், மாயாவதி, மேனகா காந்தி: தேர்தல் நடத்தை விதிகளை மீறியதால் பிரசாரத்துக்கு தடை
படத்தின் காப்புரிமைGETTY IMAGES
தேர்தல் நடத்தை விதிகளை மீறி நடந்து கொண்டதாக உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் 72 மணி நேரங்களுக்கு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடக் கூடாது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி 48 மணி நேரத்துக்கு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதைப் போல மத்திய அமைச்சரும், பாஜக தலைவருமான மேனகா காந்திக்கும் நாளை காலை முதல் 48 மணி நேரம் பிரசாரம் செய்யத் தடை விதித்துள்ளது தேர்தல் ஆணையம்.
தேர்தல் நேரங்களில் வெறுப்பை தூண்டும் விதமாக பேசியதாக குற்றம்சாட்டப்பட்டதால், இருதலைவர்கள் மீதும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்துக் கடவுளான அனுமனை குறித்து இருவரும் எதிரும் புதிருமாக பேசிக் கொண்டதாக கூறப்படுகிறது.
ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக இருக்கும் யோகி ஆதித்யநாத்துக்கு பொதுக் கூட்டங்கள், பேச்சுக்கள் ஆகியவற்றில் இந்திய இறையாண்மையை காக்கும் பொறுப்பு கூடுதலாகவே உள்ளது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அவர் ஏப்ரல் 16ஆம் தேதி காலை 6 மணி முதல் 72 மணி நேரம் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடக்கூடாது என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுளளது.
என்ன நடந்தது?
ஏப்ரல் 9ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் பேசிய ஆதித்யநாத், பகுஜன் சமாஜ்- சமாஜ்வாதி- ராஷ்டிரிய லோக் தள் கூட்டணியுடன் அலி இருந்தால், பாஜக-வோடு பஜ்ரங்பலி இருக்கிறது என்று, மதவாத நோக்கில் பேசியுள்ளார்.
அதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய மாயாவதி, 'அலி மற்றும் பஜ்ரங்பலி என்று அனைவரும் எங்களுடையவர்கள்தான். முக்கியமாக பஜ்ரங்பலி' என்று தெரிவித்தார்.
இருவரும் இவ்வாறு பேசியதற்கு தேர்தல் ஆணையம் இவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
வெயிலில் தவிக்கும் மக்களை வரவேற்கிறது `குளு குளு' ஊட்டி!
’இப்பவே கண்ண கட்டுதே' என்று ஏப்ரல் மத்தியிலேயே கோடை வெயிலால் தவிக்கின்றனர் பொதுமக்கள். மே மாதம், அக்னி நட்சத்திரத்தை நினைத்தாலே உடல் நடுங்குகிறது. இப்படி வெயிலால் வாடி வதங்கும் மக்களை வரவேற்கிறது `குளு குளு' ஊட்டி. இந்தியாவில் உள்ள சுற்றுலாத் தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற உதகை (ஊட்டி) அமைந்திருப்பது மலை மாவட்டமான நீலகிரியில்.
எழில் கொஞ்சும் மலைகள், பச்சை நிறக் கம்பளம் விரித்ததுபோன்ற புல்வெளிகள், வனப் பகுதிகள், எங்கு பார்த்தாலும் பசுமையாக காட்சியளிக்கும் தேயிலைத் தோட்டங்கள், நீர்வீழ்ச்சிகள், அணைகள், உதகை, குன்னூர், கோத்தகிரியில் உள்ள பூங்காக்கள், உதகை படகு இல்லம், பைக்காரா படகு இல்லம் என வெளிநாடு மற்றும் வெளி மாநில சுற்றுலாப் பயணிகளை கவர்பவை அதிகம்.
கோடை சீசன் மார்ச் மாதம் இறுதி வாரத்தில் தொடங்கி, ஜூன் முதல் வாரம் வரை இருக்கும். சீசனுக்கு வரும் ஏராளமான சுற்றுலாப் பயணிகளை மகிழ்விப்பதற்காக மலர்க் கண்காட்சி, ரோஜா கண்காட்சி, படகு கண்காட்சி, போட்டிகள், கலை விழாக்கள் என கோடை விழா களைகட்டும்.
தாவரவியல் பூங்கா
உதகை அரசு தாவரவியல் பூங்கா 1897-ல் ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டது. இங்கு பல வகை வண்ண மலர்கள் மட்டுமின்றி, 20 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த கல்மரம், பசில் மரங்கள், இத்தாலி பூங்கா, மிதக்கும் ஜப்பான் பூங்கா, பெரணி இல்லம், ஆர்கிட் மலர் கண்ணாடி மாளிகை என வியப்பூட்டும் பல உண்டு.
அடுத்த மாதம் இங்கு நடைபெறும் மலர்க் கண்காட்சியில், பல லட்சம் மலர்களை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசிக்கலாம். உதகை நகரின் மத்தியப் பகுதியில் அமைந்துள்ள இந்தப் பூங்காவுக்கு, பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும் சர்க்யூட் பேருந்து, நகரப் பேருந்து மற்றும் ஆட்டோக்களில் செல்லலாம்.
4 ஆயிரம் ரோஜா வகைகள்!
இதேபோல, நூற்றாண்டு கண்ட உதகை ரோஜாப் பூங்காவில் 4 ஆயிரம் ரோஜா வகைகளும், 3 லட்சத்துக்கும் மேற்பட்ட ரோஜா செடிகளும் உள்ளன. ஆண்டுதோறும் மே மாதம் ரோஜா கண்காட்சியும் நடத்தப்படுகிறது. இந்த பூங்காவில், நீலம், ஊதா, பச்சை நிறங்களைக் கொண்ட ரோஜா மலர்களும், ஹைப்ரிட் ரோஜாக்கள், மினியேச்சர் ரோஜாக்களும் அதிகம் நடவு செய்யப்பட்டுள்ளன.
உதகை படகு இல்லம் எதிரே உள்ள மரவியல் பூங்காவில், பல வகையான மரங்கள் வைக்கப்பட்டுள்ளன. ரோஜா பூங்கா, மரவியல் பூங்காவுக்கு, உதகை மத்திய பேருந்து நிலையம், ஏடிசி மற்றும் சேரிங்கிராஸ் பகுதிகளில் இருந்து எளிதாக ஆட்டோ மூலம் செல்லலாம்.
தொட்டபெட்டா காட்சி முனை
மேற்குத் தொடர்ச்சி மலை மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலை சந்திக்கும் இடமும், இந்தியாவின் உயர்ந்த சிகரமுமான தொட்டபெட்டா காட்சி முனை, கடல் மட்டத்திலிருந்து 2,623 மீட்டர் உயரத்தில் உள்ளது. நீலகிரி பகுதிகளை மட்டுமின்றி, சூரியன் மேற்கில் மறைவதைக் காணவும் இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிவது வழக்கம். உதகையிலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தொட்டபெட்டா சிகரத்துக்கு தனியார் கார்கள், சர்க்யூட் பேருந்துகள் மூலம் செல்லலாம்.
குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பல வகை மரங்கள், மலர்ச் செடிகள், சிறிய படகு இல்லம், ருத்ராட்ச மரம், குறிஞ்சி மலர்கள், காட்டு சூரியகாந்தி பூச்செடிகள், படகு சவாரி ஆகியவை சுற்றுலாப் பயணிகளைக் கவர்கின்றன. கோடைவிழாவை இங்கு நடைபெறும் பழக் கண்காட்சி பிரசித்திப்பெற்றது.
உதகை அடுத்துள்ள பைக்காராவில், மலைகளின் நடுவே உள்ள அணையில் சீறிப் பாய்ந்து செல்லும் படகுகளில் செல்ல சுற்றுலாப் பயணிகள் ஆர்வம் காட்டுகின்றனர். உதகையிலிருந்து 22 கிலோமீட்டர் தொலைவில் பைக்காரா படகு இல்லம், நீர் வீழ்ச்சி உள்ளன.
இதுதவிர, உதகை-மைசூரூ சாலையில் 13 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கல்லட்டி நீர்வீழ்ச்சி, குன்னூரிலிருந்து 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ள லாஸ் நீர்வீழ்ச்சி, குன்னூர்-குந்தா சாலையில் காட்டேரி நீர் வீழ்ச்சி, உதகை-கூடலூர் சாலையில் பைக்காரா நீர்வீழ்ச்சி, கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் கேத்ரின் நீர்வீழ்ச்சி, மாயாறு நீர்வீழ்ச்சியும் கண்ணைக் கவர்பவை.
கோத்தகிரியிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கோடநாடு காட்சி முனையிலிருந்து தெங்குமரஹாடா, பவானி அணை, ரங்கசாமி மலையைக் காணலாம். இதேபோல, கூடலூர் அருகேயுள்ள ஊசி மலை காட்சி முனை, தவளை மலை காட்சி முனை, டால்பின்ஸ் நோஸ் காட்சி முனை, லேம்ஸ் ராக் காட்சி முனைகளும் உள்ளன.
யானை சவாரி!
முதுமலை புலிகள் காப்பகத்தில் யானை சவாரி, வனத்துறை சார்பில் அழைத்துச் செல்லப்படும் வனச்சுற்றுலா பிரசித்திப் பெற்றவை. மசினகுடியிலிருந்து தனியார் வாகனங்களில் முதுமலை சென்று, அங்குள்ள இயற்கை அழகையும், வன விலங்குகளையும் கண்டு ரசிக்கலாம்.
இவற்றையெல்லாம்விட, யுனஸ்கோவின் பாரம்பரிய அந்தஸ்து பெற்ற நீலகிரி மலை ரயிலே சுற்றுலாப்பயணிகளைப் பெரிதும் கவர்கிறது. அடர்ந்த காடுகளின் நடுவே வளைந்து நெளிந்து செல்லும் இந்த ரயிலில் பயணிக்க, உள்நாட்டவர் மட்டுமின்றி, வெளி நாட்டவரும் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர்.
தங்கும் வசதியும், உணவு வகைகளும்...
உதகை மற்றும் குன்னூர் பகுதியில் ஏராளமான தங்கும் விடுதிகள், காட்டேஜ்கள் உள்ளன. நாளொன்றுக்கு ரூ.400 முதல் ரூ.15,000 வரை பல வகையிலான கட்டணங்களில் அறைகள் கிடைக்கின்றன. தங்களது வசதிக்கேற்ப அறைகளை எடுத்து தங்கலாம். ஹோட்டல்கள் மற்றும் காட்டேஜ்களிலேயே சுற்றுலாத் தலங்களை சுற்றி பார்க்கவும் வாகன வசதிகள் செய்து தரப்படுகின்றன. ஒரு நபருக்கு குறிப்பட்ட தொகை வசூலிக்கப்பட்டு, அனைத்து சுற்றுலாத் தலங்களையும் காண்பிக்கும் `பேக்கேஜ் டூர்' முறையும் உள்ளது.
உதகையை பொறுத்தவரை அனைத்து வகையான உணவு வகைகளும் கிடைக்கும். சைனீஸ், பஞ்சாபி. நார்த் இண்டியன், செட்டிநாடு, ஆந்திரா, சவுத் இண்டியன் வகை உணவு வகைகள் கிடைக்கும். நட்சத்திர ஹோட்டல்களில் இந்த அனைத்து வகையான உணவு வகைகளும் கிடைக்கும். அதுமட்டுமின்றி, குறிப்பிட்ட வகை உணவுக்காக சிறப்பு பெற்ற ஹோட்டல்களும் உதகையில் உள்ளன. சீன உணவுக்கு புகழ்பெற்ற ‘ஷின்கோஸ்’ உணவகம் உள்ளது. இது சீனாவைச் சேர்ந்த தம்பதிகளால் நடத்தப்பட்டு வருகிறது.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
வேலூரில் தேர்தல் ரத்து: பணப் பட்டுவாடாவில் ஈடுபடுபவர்களை போட்டியிட அனுமதிக்க வேண்டுமா? - நீதிபதிகள் கேள்வி
உயர் நீதிமன்றம்: கோப்புப்படம்
வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் இன்று மாலைக்கு தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளது.
வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து, அத்தொகுதி அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று (புதன்கிழமை) நீதிபதிகள் மணிகுமார், சுப்ரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது
அப்போது ஏ.சி.சண்முகம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் சதீஷ் ஆஜராகி, "தேர்தல் அறிவிப்பு வெளியிட்ட பிறகு, ரத்து செய்ய குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் இல்லை. தேர்தல் ஆணையம் புகார் தொடர்பாக வேட்பாளரை தகுதி நீக்கம் செய்யலாம். முறைகேட்டில் ஈடுபடும் வேட்பாளரைத் தகுதிநீக்கம் செய்ய மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் அதிகாரம் உள்ளது. ஆனால் தேர்தலை ரத்து செய்ய முடியாது.
ஒரு கட்சியோ அல்லது வேட்பாளரோ தவறிழைத்தால் அவர்கள் தான் தண்டிக்கப்பட வேண்டும். ஒட்டுமொத்தமாக ரத்து கூடாது. தேர்தல் ரத்து மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்திற்கு எதிரானது. வேலூர் தொகுதியில் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
தேர்தல் ரத்து மனுதாரரின் அடிப்படை உரிமையைப் பாதிக்கிறது. வாக்குச்சாவடி கைப்பற்றுதல், வன்முறை உள்ளிட்ட காரணங்களுக்காக மட்டுமே தேர்தலை ரத்து செய்ய முடியும். தேர்தல் பிரச்சாரம் மாலை ஓய்ந்த பிறகு, இரவு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள்" என வாதாடினார்.
அப்போது, வேலூரில் தேர்தலை ரத்து செய்யக் கூடாது என்றால், பணப் பட்டுவாடாவில் ஈடுபடுபவர்களை போட்டியிட அனுமதிக்க வேண்டுமா என, நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதையடுத்து, சுயேட்சை வேட்பாளர் சுகுமார் என்பவர் சார்பில், மூத்த வழக்கறிஞர் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் ஆஜராகி, "கணக்கில் வராத பணத்தைக் கைப்பற்றியுள்ளனர். வாக்காளர்களுக்கு விநியோகிக்கப்படும் நோக்கில் வைக்கப்பட்டதாகத்தான் ஆணைய அறிக்கையில் கூறப்பட்டுள்ளது" என தெரிவித்தார்.
அதற்கு நீதிபதிகள், "அப்படியென்றால் அது விநியோகிக்கப்பட வைத்தது இல்லை என்கிறீர்களா?", என கேள்வியெழுப்பினர்.
"விநியோகம் செய்வதற்கு முன்பாகவே பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆனால் ஒட்டுமொத்தமாக ரத்து கூடாது" என, சுகுமாரன் தரப்பில் வாதம் முன் வைக்கப்பட்டது.
இதையடுத்து, தேர்தல் ஆணையம் தரப்பில் வழக்கறிஞர் நிரஞ்சன் ஆஜராகி, "தேர்தல் ஆணையப் பரிந்துரைக்கு, குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். பரிந்துரைக்கு கையெழுத்து போட்டுள்ளார். வேலூர் செலவினப் பார்வையாளர்களிடமும் அறிக்கை பெறப்பட்டு முடிவு எடுக்கப்பட்டது. வெறும் பணம் மட்டுமல்லாமல், வாக்காளர் பட்டியலும், பூத் ஸ்லிப் புகைப்படங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
தேர்தல் நேர்மையாக நடக்காது என்பதற்கு போதுமான ஆதாரங்கள் இருந்ததால் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. தேர்தல் ஆணைய முடிவுகளை நீதித்துறை ஆய்வுக்கு உட்படுத்த முடியாது. ஓட்டுக்குப் பணம் கொடுப்பது உள்ளிட்ட ஊழல் முறைகேடுகளில் ஈடுபடுவது குற்றம். இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர் தண்டிக்கப்பட்டால் தகுதி நீக்கம் செய்யப்படுவார்" என வாதாடினார்.
தேர்தல் ஆணையம் தரப்பில் ரகசிய ஆவணங்கள் நீதிபதிகளிடம் தாக்கல் செய்யப்பட்டது. வேலூர் தேர்தல் நிறுத்தப்பட்டதற்கான ரகசிய விசாரணை ஆவணங்கள் மற்றும் அறிக்கையை தேர்தல் ஆணைய வழக்கறிஞர் தாக்கல் செய்தார். பணப் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளதாகவும்,மீதம் உள்ளவர்களுக்கு பட்டுவாடா செய்யவே பணம் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாக வருமான வரித்துறை அறிக்கை அளித்ததாக தேர்தல் ஆணையம் வாதத்தை முன்வைத்தது.
மற்ற தொகுதிகளில் பணப் பட்டுவாடா தொடர்பாக என்ன நிலை என தேர்தல் ஆணையம் தெரிவிக்கவில்லை என, ஏ.சி.சண்முகம் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தீர்ப்பை இன்று மாலை 4.30 மணிக்கு ஒத்தி வைத்தனர்.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
தேர்தல் நியாயமாக நடந்தால் பாஜக 40 தொகுதிகளைக்கூட தாண்டாது.. மோடிக்கு பாஜக சீனியர் தலைவர் கடிதம்
டெல்லி: லோக்சபா தேர்தல் நியாயமாக நடைபெற்றால் பாஜக 40 தொகுதிகளைக் கூட தாண்டாது என்று பாஜக மூத்த தலைவரும், உச்ச நீதிமன்ற வழக்கறிஞருமான அஜய் அகர்வால் தெரிவித்துள்ளார்.
அஜய் அகர்வால் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், மோடி மீது பல்வேறு குற்றசாட்டுகளை அடுக்கியுள்ளார்.
அதோடு, குஜராத் சட்டப் பேரவை தேர்தலில் பாஜக வெற்றி பெற தான்தான் காரணம் என குறிப்பிட்டுள்ள அஜய் அகர்வால், குஜராத் தேர்தலின்போது ஜங்க்புராவில் மணி சங்கர் அய்யர் வீட்டில் முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் ஹமீத் அன்சாரி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பாகிஸ்தானிய அதிகாரிகள் இடையே சந்திப்பு நடைபெற்றது என்பதை கூறியது நான்தான் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதை குறிப்பிட்டு தேசப் பாதுகாப்பு குறித்தும் பிரச்சார மேடைகளில் மோடி பேசி வந்தார். இதன் காரணமாகவே குஜராத்தில் படு தோல்வியடைய இருந்த பாஜக அங்கு வெற்றி பெற்றது என்று கூறியுள்ளார். இந்த விவரங்களை அஜய் வெளியிட்டதால்தான் குஜராத்தில் பாஜக வென்றதாக ஆர்எஸ்எஸ்எஸ் அமைப்பு ஒப்புக் கொண்டதாகவும், அதற்கு ஆதாரமாக தன்னுடன் ஆர்எஸ்எஸ்எஸ் தலைவர் தத்தத்ரேயா ஹோசபலே பேசிய ஆடியோ ஆதாரம் உள்ளதாகவும் அஜய் குறிப்பிட்டுள்ளார்.
இதையெல்லாம் கூறிய அஜய், மோடியை ஒரு நன்றி கெட்டவர் என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த தேர்தலை பொறுத்தளவில் நியாயமாக நடைபெற்றால் பாஜக வெறும் 40 தொகுதிகளில் மட்டும்தான் வெற்றிபெறும் என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். மோடியை தனக்கு 28 ஆண்டுகளாக தெரியும் என்று குறிப்பிட்டவர், அவருடன் பாஜக அலுவலகத்தில் ஒன்றாக அமர்ந்து பலமுறை உணவு உண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அந்த கடிதத்தில் பண மதிப்பிழப்பு குறித்து குறிப்பிட்டுள்ள அஜய் குறைந்தது 5 லட்சம் கோடிகளாவது திரும்பி வராது என்று நீங்கள் (மோடி ) எதிர்பார்த்தீர்கள் ஆனால் 99 % பணம் திரும்பி வந்துவிட்டது. அதில் பெருமளவு கள்ள நோட்டுகளும் இருந்தன. அது குறித்து எந்த விசாரணையும் நடத்தப் படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு
உள் தமிழகத்தில் இன்றும், நாளையும் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென்தமிழகத்தில் சில இடங்களில் இடி மின்னலுடன் 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசவும் வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
தெற்கு உள்கர்நாடக முதல் தென் தமிழகம் வரை காற்றழுத்த தாழ்வுநிலை நிலவுவதால் மழைக்கு வாய்ப்புள்ளது எனவும், சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதிகபட்சமாக கொடைக்கானல், குழித்துறை, பேச்சிப்பாறையில் தலா 5 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
அதானி துறைமுகத்துக்காக 6,200 ஏக்கர் நிலம்... சென்னையின் அடுத்த சூழலியல் பேராபத்து?
இப்போதிருக்கும் காட்டுப்பள்ளி துறைமுகத்தின் பரப்பளவு 330 ஏக்கர்கள். அதை 6200 ஏக்கர்களுக்கு விரிவாக்கப் போகிறார்கள். அதில் கிட்டத்தட்ட 2,000 ஏக்கர்களைக் கரைக்கடலில் ஆக்கிரமிக்கப்போகிறார்கள்.
மீன்களை ஏலம் விட்டுக்கொண்டிருந்தார்கள். பல்வகையான மீன்களைக் கொண்டுவந்து கொட்டிக்கொண்டிருந்த மீனவர்களின் முகங்கள் செலவுக்கேற்ற வரவு கிடைக்காத கவலையை அப்பட்டமாகக் காட்டின. முன்பிருந்த அளவுக்கு அவர்களுக்குத் தற்போது மீன்வளம் அவ்வளவு திருப்திகரமானதாக இருக்கவில்லை. பழவேற்காட்டு ஏரியின் சேற்று நிலங்களில் வலைகள், தூண்டில்கள் என்று எதுவுமே இல்லாமல் வெறும் கைகளால் நண்டுகளையும் இறால்களையும் பிடித்துக்கொண்டுவந்த இருளர் பழங்குடியின மக்களையும் அங்கு பார்க்க முடிந்தது. அந்தச் சந்தையில்தான் அவரையும் பார்த்தேன். அவர் பெயர் சீனிவாசன். சாத்தான்குப்பத்தைச் சேர்ந்தவர். வயது 60 இருக்கும். காட்டுப்பள்ளி துறைமுகம் உட்பட சென்னைக் கடற்கரையில் அமைந்திருக்கும் மூன்று துறைமுகங்கள் உண்டாக்கிய சூழலியல் தாக்கங்களால் பாதிக்கப்பட்டவர்களில் அவரும் ஒருவர்.
அவருடைய சிறுவயதில் தன் நண்பர்களோடு ஓடிப்பிடித்து விளையாடிக்கொண்டிருந்த கடற்கரை இன்று காட்டுப்பள்ளி துறைமுகம் இருக்கும் பகுதியிலிருந்து சில கிலோமீட்டர் தூரத்தில் கடலுக்குள்ளே இருக்கிறது. அவர் இளமைப்பருவம் எய்தி, தன் தந்தையைப்போல் மீன்பிடித் தொழிலுக்குச் செல்லத் தொடங்கியபோது தன் கிராமத்திலிருந்த மூன்று தெருக்கள் ஏற்கெனவே கடலுக்குள் மூழ்கிப் போயிருந்தன. இப்படிச் சிறிது சிறிதாகத் தன் கிராமத்தை இழந்துகொண்டிருந்த அவரும் சாத்தான்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த மற்ற மக்களும் 2004-ம் ஆண்டு சுனாமியின்போது மிகப்பெரிய சேதங்களைச் சந்தித்தனர். அதன் பிறகு அந்தக் கிராமமே இடம் மாற்றப்பட்டது. பழவேற்காட்டுக்கு அருகில்தான் இப்போது இருக்கிறார்கள்.
சென்னை துறைமுகம் வந்ததும் வந்துச்சு. எங்க இடத்தையே அழிச்சிடுச்சு. சின்ன வயசுல நான் விளையாடின இடமெல்லாம் நான் தொழிலுக்குப் போகத் தொடங்கிய காலத்துலயே கடலுக்குள்ள போயிருச்சு. அதுக்கு அப்புறம் எண்ணூர், காட்டுப்பள்ளின்னு ரெண்டு துறைமுகம் வந்துடுச்சு. நான் தொழிலுக்குப் போக ஆரம்பிச்ச கொஞ்ச காலத்துல எங்க கிராமத்தோட மூணு தெருக்கள் கடலுக்குள்ள போயிருந்துச்சு. சுனாமி வந்தப்புறம் நான் விளையாடின, தொழிலுக்குப் போயிட்டு வந்து படகு நிறுத்துன இடமெல்லாம் இப்ப கடலுக்குள்ள. எங்க கிராமம் கடலுக்குள்ள போனது போனதுதான். இப்போ இங்கயே மூணு துறைமுகங்கள் இருக்கு. இப்படியே போச்சுன்னா இன்னொரு சாத்தான்குப்பமா பழவேற்காடு மாறி நிற்கும்" என்றார் மீனவரும் தன் பூர்வாங்கமான வாழ்விடம் கடலுக்குள் போவதைத் தன் கண்களால் கண்டவருமான சீனிவாசன். அவரது அச்சமும் வருத்தமும் நியாயமானதுதான். ஏற்கெனவே, சென்னை துறைமுகமும் எண்ணூர் காமராஜர் துறைமுகமும் சேர்ந்து வடசென்னைக் கடற்கரையை முற்றிலுமாக அரித்தெடுத்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத் திட்டம் பழவேற்காடுவரை அமைந்துள்ள கடற்கரைப் பகுதிகளுக்குப் பேராபத்தாக வந்து நிற்கின்றது. இந்தத் திட்டம் மட்டும் செயல்படுத்தப்பட்டால் பழவேற்காடு முழுவதும் கடலின் ஒருபகுதியாக மாறிவிடும் அபாயமும் இருக்கிறது.
தற்போது மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் காட்டுப்பள்ளி பகுதியில் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் விரிவாக்கத் திட்டத்துக்குச் சூழலியல் தாக்க மதிப்பீடு செய்ய அனுமதி வழங்கும்முன், முதலில் அந்தப் பகுதியை ஆய்வுசெய்ய வேண்டுமென்று உத்தரவிட்டுள்ளது. பல்வேறு எதிர்ப்புகளுக்குப் பின் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. துறைமுக விரிவாக்கத் திட்டம் என்ற போர்வையில் இப்போதிருக்கும் பரப்பளவைவிடச் சுமார் இருபது மடங்கு அதிகமான பகுதிகளை ஆக்கிரமிக்கத் திட்டமிட்டுள்ளது அதானி குழுமம். இந்தத் திட்டம் ஏற்படுத்தப்போகும் பாதிப்புகள் சூழலியல் வரலாற்றில் என்றென்றும் மீட்டெடுக்க முடியாத அளவுக்குப் பேரழிவுகளைக் கொண்டுவர வல்லவை. சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளான எண்ணூர் கழிமுகம், பழவேற்காடு ஏரி, கருங்காளி கழிமுகம், கொற்றலை ஆறு, சதுப்பு நிலங்கள் போன்ற கடற்கரை நில அமைப்புகளை மாற்றியமைப்பதால் கடல் அரிப்பு, மீன்பிடிப் பகுதிகளின் அழிவு, அதனால் சிறு குறு மீனவர்களின் வாழ்தார அழிவு என்று பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். சரி, அப்படி என்னதான் இந்தத் திட்டத்தில் செய்யப்போகிறார்கள். துறைமுகத்தை விரிவாக்குவதால் ஏற்றுமதி இறக்குமதியை அதிகப்படுத்தலாம். பொருளாதாரத்தில் மேன்மையடையலாம். உண்மைதான். ஆனால், அதற்காக நாம் கொடுக்கப்போகும் விலையைப் பொறுத்தே அந்தப் பொருளாதார வளர்ச்சி யாருக்கானது என்பதைப் புரிந்துகொள்ள முடியும். அந்த விலை என்னவென்பதைப் பார்ப்போம்.
காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத் திட்டத்தின் வரைபடம்
[color][font]
இப்போதிருக்கும் காட்டுப்பள்ளி துறைமுகத்தின் பரப்பளவு 330 ஏக்கர்கள். அதை 6,200 ஏக்கர்களுக்கு விரிவாக்கப்போகிறார்கள். அதில் கிட்டத்தட்ட 2,000 ஏக்கர்கள் கரைக்கடலில் ஆக்கிரமிக்கப்போகிறார்கள். காட்டுப்பள்ளிகுப்பம் பகுதியின் கரைக்கடல் முழுவதும், ஆழமற்ற சேற்று நிலங்களைக் கொண்டது. இங்குதான் நண்டுகள், இறால்கள், சில மீன் வகைகள், சிறு சிறு ஆமை வகைகள் அனைத்தும் கிடைக்கின்றன. அந்த இடத்தை மணல்கொட்டி முற்றிலும் நிலமாக்கிவிடுவார்கள். கருங்காளி சேறு, ஆலமரம் சேறு, லாக்கு சேறு, களாஞ்சி சேறு, கோட சேறு போன்ற கரைக்கடல் சேற்றுப் பகுதிகள் மணல் கொட்டப்பட்டு நிலமீட்பு செய்யப்படும். அதன்பிறகு அங்கு பல்வேறு துறைமுகப் பணிகளுக்கான கட்டுமானங்கள் நடைபெறும். நடுவில் ஒரு பகுதிக் கடலை ஆழப்படுத்திக் கப்பல் வந்து நிற்பதற்கான வசதிகளைச் செய்துகொடுப்பார்கள். சுனாமி போன்ற பேரலைகளின்போது இதுபோன்ற கரைக்கடல் சேற்றுப் பகுதிகள்தான் அங்கு அதிக சேதம் ஏற்படாமல் தடுப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. அவற்றை முற்றிலுமாக அழித்து இயற்கையான நில அமைப்பையே மாற்றுவதைச் சூழலியல் பேரழிவு என்றுதான் சொல்ல வேண்டும். ஒரு நில அமைப்பையே செயற்கையாக மாற்றியமைத்தால் என்ன நடக்கும் என்பதற்கான சாட்சியங்களாக நம்முன் ஏற்கெனவே இரண்டு துறைமுகங்கள் நிற்கின்றன. அந்தச் சேதங்களையே நம்மால் இன்னும் சரிசெய்ய முடியாமலிருக்க மூன்றாவதாக இருக்கும் இந்தத் துறைமுகத்தையும் விரிவாக்குகிறேன் என்ற போர்வையில் மேன்மேலும் அழிவுகளை உண்டாக்குவது அறிவுடையமையல்ல.
இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால் பாதிக்கப்படப்போகும் ஆப்பிரஹாம்புரம், களஞ்சி, கருங்காளி, காட்டூர், வயலூர், காட்டுப்பள்ளிகுப்பம் போன்ற கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தற்போது பெரும் அச்சத்தில் உள்ளனர். காட்டுப்பள்ளி துறைமுகத்திலிருந்து பழவேற்காடு வரை நீளும் கொற்றலை ஆற்றுக்கும் கடலுக்கும் இடையே சில நூறு மீட்டர்கள் மட்டுமே கடற்கரை இருக்கிறது. சில கிலோமீட்டர் தூரத்துக்கு இருந்த இந்தக் கடற்கரை இவ்வளவு சிறுத்துப் போனதற்குச் சென்னையில் உருவான துறைமுகங்களுக்குத்தான் நாம் நன்றி சொல்ல வேண்டும். இப்போது திட்டமிடப்பட்டிருக்கும் இந்த விரிவாக்கம் நடைபெற்றால் மீதமிருக்கும் கடற்கரையும் அரிக்கப்பட்டு கொற்றலை ஆறும் கடலோடு கலந்துவிட்டால்கூட ஆச்சர்யம் ஒன்றுமில்லை. அதானிக்குச் சொந்தமான காட்டுப்பள்ளி துறைமுகத்தின் விரிவாக்கத் திட்டத்தை எதிர்த்து வருபவரும் இந்தத் திட்டத்தால் பாதிக்கப்படப்போகும் பகுதிகள் மற்றும் அதன் வாழ்வாதாரத்தை வரைபடமாக்கியவருமான சரவணனைச் சந்தித்துப் பேசியபோது,
[/font][/color]
[color][font]
"MIDPL என்ற பெயரில் இயங்கிவரும் அதானிக்குச் சொந்தமான காட்டுப்பள்ளி துறைமுகம், கடந்த நவம்பர் மாதம் விரிவாக்கத் திட்டத்துக்கான சூழலியல் தாக்க மதிப்பீடு செய்வதற்குக் குறிப்பாணை கேட்டு விண்ணப்பித்திருந்தனர். சுற்றுச்சூழல் மதிப்பீட்டுக் குழு டிசம்பர் மாதம் முழுவதும் அதைக் கிடப்பில் போட்டது. இந்நிலையில், ஜனவரி 18-ம் தேதி கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகள் 2019-ஐ மத்திய அரசு வெளியிடுகிறது. நான்கு கடலோர மண்டலங்களுக்கு இருந்த அனைத்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு அரண்களையும் உடைத்து லாப நோக்கத்தோடு அதைப் பயன்படுத்தும் வகையில் 2019-ம் ஆண்டு விதிகள் கொண்டுவரப்படுகின்றன. உடனடியாக ஜனவரி 20-ம் தேதி காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத் திட்டத்திற்கான கோப்பு எண் ஒதுக்கப்படுகிறது.
இந்தத் திட்டத்திற்கான அவர்களின் திட்ட வரைபடத்தில் காட்டியுள்ள இடங்களைப் பார்த்தால், துறைமுகத்திலிருந்து ஆறரைக் கிலோமீட்டர்வரை கடலில் மணல்கொட்டி சுமார் 2000 ஏக்கர் நிலமீட்பு செய்யப்போகிறார்கள். அந்த இடத்தின் நில அமைப்பையே மாற்றியமைக்கப் போகிறார்கள். இதனால், கூடன்குப்பத்தில் தொடங்கி காட்டுக்குப்பம்வரை பல கிராமங்களைச் சேர்ந்த பாரம்பர்ய மீனவர்கள் பாதிக்கப்படுவார்கள். காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத்துக்காக அவர்கள் நிலமீட்பு செய்யவிருக்கும் கடல்பகுதியும் கொற்றலை ஆற்றின் உப்பங்கழிப் பகுதியும் இந்தப் பாரம்பர்ய மீனவர்களின் மிக முக்கியமான வாழ்வாதாரப் பகுதி. அவையனைத்தின் மீதும் கைவைக்கிறார்கள். இது மீனவர்களுக்கு விழும் மிகப்பெரிய அடி. அங்கிருக்கும் கடல்பகுதியில் ஷோல் (Shoal) என்ற இயற்கையான திட்டு உருவாகியிருக்கும். சென்னை மற்றும் எண்ணூர் துறைமுகங்களால் சில ஆண்டுகளிலேயே பல கிலோமீட்டர்களுக்குக் கடற்கரை அரிப்பு ஏற்பட்டது. அந்த அளவுக்குப் பெரிய பாதிப்புகள் இங்கு நிகழாததற்குக் காரணம், இந்தத் திட்டுகள்தான். இப்போது அதைச் சுத்தமாக அழிக்கப்போகிறார்கள். பழவேற்காட்டுக்கும் கடலுக்கும் இடையில் சிறிய நிலத்திட்டுதான் இருக்கிறது. இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால் அங்கு வேகமாகக் கடல் அரிப்பு நிகழும். அதனால் பழவேற்காடு ஏரி கடலோடு கலந்துவிடும் பேராபத்து இருக்கிறது" என்று கூறினார்.
[/font][/color]
"காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்க வரைபடத்தில் ஆக்கிரமிக்கப்போகும் பகுதிகளின் தற்போதைய நிலையும் அவர்கள் நிலமீட்பு செய்யப்போகும் கரைக்கடல் பகுதியிலுள்ள மீன் வளமும் இந்த வரைபடத்தில் தெளிவாகக் காட்டப்பட்டுள்ளன. வரைபடத்தில் சுட்டப்பட்டிருக்கும் கருங்காளி சேறு என்ற பகுதியிலிருந்து தற்போது துறைமுகத்தின் அலைதடுப்புச் சுவர்கள் இருக்கும் இடம்வரை மீன் மற்றும் மற்ற கடல் வளங்கள் அதிகமுள்ளன. அந்த நிலம் மொத்தத்தையும் மணல் கொட்டி நிலமாக்கி துறைமுகப் பயன்பாட்டுக்குத் திருப்புவதுதான் திட்டம். அது நடந்தால் மேற்குப் பக்கமாக இருக்கும் கொற்றலை ஆறு மற்றும் கிழக்கே கரைக்கடல் தொடங்கி வடக்கே இருக்கும் பழவேற்காடு வரை அதன் பாதிப்புகள் அளவிட முடியாத அளவுக்கு இருக்கும் என்பதை இந்த வரைபடம் தெளிவாகக் காட்டுகின்றது."
[color][font]
"1996-ம் ஆண்டு சென்னை துறைமுகத்தை விரிவுபடுத்தினார்கள். மீண்டும் 1999-ல் எண்ணூர் துறைமுகத்தைக் கொண்டுவந்து கடல் அரிப்பை அதிகப்படுத்தி எங்கள் கிராமங்களையும் வாழ்வாதாரத்தையும் சீரழித்தார்கள். அப்போதே பழவேற்காடு பாதி அழிந்துவிட்டது. அதோடு நிற்காமல் 2007-ம் ஆண்டு திட்டமிடப்பட்டு 2012-ம் ஆண்டு காட்டுப்பள்ளி துறைமுகம் திறக்கப்பட்டது. சாத்தான்குப்பம் அப்புறப்படுத்தப்பட்டது. கோரைக்குப்பம், வைரவன்குப்பம் உள்ளிட்ட 13 கிராமங்கள் கடலுக்கு அருகில் வந்தன. அவை இப்போதிருக்கும் நிலையில் இந்த விரிவாக்கத் திட்டத்தால் அவை கடலுக்குள் மூழ்கினாலும் ஆச்சர்யமில்லை. இப்போதே கடல் அரிப்பு அதிகமாகி, வெகுதூரத்துக்கு இருந்த கடற்கரை குறைந்து எங்கள் வீடுகளுக்கு அருகிலேயே வந்துவிட்டது.
காட்டுப்பள்ளி துறைமுகத்துக்கும் பழவேற்காட்டுக்கும் இடையே வெறும் 8 கிலோமீட்டர் தூரமே உள்ளது. இந்தத் துறைமுக விரிவாக்கம், ஒட்டுமொத்த ஏரியையுமே பாதிக்கும். ஏற்கெனவே இந்தத் துறைமுகங்களால் நாங்கள் பல இழப்புகளைச் சந்தித்து வருகிறோம். இதற்கு மேலும் விரிவாக்கினால் இந்தப் பகுதியின் மீன் மற்றும் மற்ற வளங்கள் முற்றிலுமாக அழிந்து எங்கள் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகிவிடும். காட்டுப்பள்ளியில் அவர்கள் விரிவாக்கத் திட்டம் போட்டிருக்கும் பகுதிகள் முழுவதும் சேற்றுத் திட்டுகளைக் கொண்ட கடல் பகுதிகள். அதுதான் அதிகமான இறால், நண்டு, நவர மீன், கெழங்கான், கானாங்கெளுத்தி போன்றவை அதிகம் கிடைக்கும் பகுதி. அதோடு ஏரிகளின் முகத்துவாரப் பகுதிகளில் இறால் வகைகள் இனப்பெருக்கம் செய்கின்றன. சிறு ஆமை வகைகளும் இங்குதான் அருகில் கடற்கரை ஓரங்களில் இனப்பெருக்கம் செய்கின்றன. இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய உவர்நீர் ஏரி நம் பழவேற்காடு. இதற்கு மிக அருகிலேயே இந்தக் காட்டுப்பள்ளி துறைமுகம் அமைந்துள்ளது. இதைத் தற்போது விரிவாக்குவது இன்னும் அதிகமான பாதிப்புகளையே ஏற்படுத்தும். ஐம்பது வகையான மீன்கள், பத்து வகையான பாசிகள், பதினைந்து வகையான இறால்கள், நண்டுகள் இங்கு வாழ்கின்றன. உலக நாடுகளிலிருந்து பல்வேறு பறவைகள் இங்கு வலசை வந்து செல்கின்றன. இப்படியானதொரு பல்லுயிர்ச்சூழல் மிக்கப் பகுதியின்மீது கொஞ்சம்கூடக் கரிசனமின்றி நடந்துகொள்கின்றனர். இந்தத் திட்டத்திற்கு அனுமதி கொடுப்பது எங்கள் வாழ்வாதாரத்தை அழிப்பதற்குச் சமம்" என்றார் திருவள்ளூர் மாவட்ட பாரம்பர்ய ஐக்கிய மீனவர் சங்கப் பொதுச் செயலாளர் துரை மகேந்திரன். இதுதொடர்பாக அதானி துறைமுக நிறுவனத்திடம் விளக்கம் கேட்டோம். இதுவரைக்கும் பதில் வரவில்லை.
[/font][/color]
[color][font]
இங்கு பொருளாதார வளர்ச்சி என்பது பணம் படைத்தவர்களின் லாபங்களைக் கொண்டு கணக்கிடப்படும்வரை, அவர்களுக்காகச் சுரண்டப்படும் அடித்தட்டு உழைக்கும் வர்க்கத்தினரும் ஏழை மக்களும் அரசுகளின் கண்களுக்குத் தெரிய மாட்டார்கள். பொருளாதார அளவீடுகள் மாற வேண்டும். ஏழை மக்களின் வாழ்வாதாரங்களை அடிப்படையாகக் கொண்ட பொருளாதார வளர்ச்சியே சமுதாய முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும். இந்தக் காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கப் பிரச்னையில் முதன்மையானது எது?
இங்கு முக்கியமானது, பூர்வகுடி மக்களின் வாழ்வாதாரமா, அதானி போன்ற பெருமுதலாளிகளின் லாபப் பெருக்கமா?
[/font][/color]
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
மூடப்பட்டது, 'ஜெட் ஏர்வேஸ்'
புதுடில்லி: வங்கிகள், அவசர நிதியுதவி வழங்க மறுத்து விட்டதால், 'ஜெட் ஏர்வேஸ்' விமான சேவை நேற்றுடன்(ஏப்.,17) தற்காலிகமாக முடிவுக்கு வந்துவிட்டது.
இந்நிறுவனம், 8,000 கோடி ரூபாய் கடனில் சிக்கியுள்ளது. இதையடுத்து, வங்கிகள் கூட்டமைப்பின் யோசனைப்படி, ஜெட் ஏர்வேஸ் நிறுவனர், நரேஷ் கோயல், தன் பங்கு மூலதனத்தை குறைத்துக் கொண்டார். இயக்குனர் குழுவில் மாற்றம் செய்து, 75 சதவீத பங்குகளை விற்க, வங்கிகள் கூட்டமைப்பு முயற்சித்தது. அது பலனளிக்க வில்லை. அதனால், இக்கூட்டமைப்பால் உறுதி அளித்தபடி, ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில், 1,500 கோடி ரூபாய் முதலீடு செய்ய முடியவில்லை.
இந்நிலையில், குத்தகைக்கு விமானங்களை அளித்த நிறுவனங்கள், பெரும்பாலான விமானங்களை திரும்பப் பெற்றுக் கொண்டன. அதனால், 2018, டிசம்பரில், 123 ஆக இருந்த விமானங்களின் எண்ணிக்கை, தற்போது, ஐந்தாக குறைந்து விட்டது. உடனடியாக, 400 கோடி ரூபாய் நிதியுதவி அளித்தால், சேவையை தொடரலாம் என, ஜெட் ஏர்வேஸ் தெரிவித்தது. ஆனால், மேற்கொண்டு நிதியுதவி அளிக்க, வங்கிகள் மறுத்து விட்டன. இதனால், ஜெட் ஏர்வேஸ் விமான சேவை, தற்காலிகமாக முடிவுக்கு வந்தது.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
தேர்தல், தொடர் விடுமுறையால் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்ற மக்கள்: பேருந்து, ரயில் நிலையங்களில் அலைமோதிய கூட்டம்
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் இன்று நடைபெற உள்ளதையொட்டி, தேர்தலில் வாக்களிக்க சொந்த ஊருக்கு நேற்று ஏராளமானோர் சென்றனர். சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில், நெல்லை விரைவு ரயில் முன்பதிவில்லா பெட்டியில் இடம் பிடிக்க முண்டியடித்த மக்கள் கூட்டம் | படம்: க.ஸ்ரீபரத்
தேர்தல் மற்றும் தொடர் விடுமுறை காரணமாக நேற்று ஏராளமான மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர். இதனால், கோயம்பேடு, சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் நேற்று மக்கள் கூட்டம் அலைமோதியது.
தமிழகம், புதுச்சேரியில் இன்று மக்களவை தேர்தல் நடக்கிறது. இதையொட்டி பொது விடுமுறை விடப்பட்டுள்ளது. இதேபோல், 19-ம் தேதி புனித வெள்ளியும், இதைத் தொடர்ந்து சனி, ஞாயிறு என தொடர்ந்து 4 நாட்களுக்கு விடுமுறை வருவதால், கடந்த 2 நாட்களாக சென்னையில் இருந்து ஏராளமானோர் தங்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர். ரயில்களில் வழக்கமான டிக்கெட்முன்பதிவு ஏற்கெனவே முடிந்திருந்ததால், தத்கால் மூலம் டிக்கெட் பெற நேற்று முன்தினம் பலரும் முயற்சித்தனர். அதிலும், டிக்கெட் கிடைக்காதவர்கள் அரசு, ஆம்னி பேருந்துகளில் நேற்று சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர்.
சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் இருந்து புறப்பட்ட விரைவு ரயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகளில் கூட்டம் அதிகமாக இருந்தது. இதேபோல், கோயம்பேடு பேருந்து நிலையம், தாம்பரம், பெருங்களத்தூரிலும் நேற்று வழக்கத்தைவிட மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. மக்கள் கூட்டம் அதிகரித்ததைத் தொடர்ந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. பயணிகளின் தேவையை வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டு ஆம்னி பேருந்துகளில் 30 முதல் 40 சதவீதம் வரையில் கட்டணம் அதிகமாக வசூலிக்கப்பட்டதாக பயணிகள் புகார் தெரிவித்தனர்.
நெல்லைக்கு நேற்று பயணம் மேற்கொண்ட ஜெயராணி மற்றும் அவரது நண்பர்கள் கூறும்போது, “முதல்முறையாக நாங்கள் வாக்களிக்க சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு செல்கிறோம். வாக்குரிமை என்பது ஒவ்வொருவரின் கடமை என்பதால், அதை நிறைவேற்றும் வகையில் நாங்கள் புறப்பட்டு செல்வது மகிழ்ச்சியாக இருக்கிறது’’ என்றனர்.
2,300 சிறப்பு பேருந்துகள்
அரசு போக்குவரத்து கழகங்களின் அதிகாரிகள் தெரிவித்த தாவது:சென்னையில் வசிக்கும் ஏராளமான மக்கள் தங்களது வாக்குரிமையை சொந்த ஊரில் வைத்திருப்பார்கள். எனவே, மக்களின் வசதிக்காக இந்த தேர்தலையொட்டி நேற்று முன்தினம் முதல் சிறப்பு பேருந்துகள் இயக்குகிறோம். இதனால், வழக்கத்தை விட சுமார் 2 லட்சம் பேர் கூடுதலாக பயணம் செய்துள்ளனர். கடந்த 2 நாட்களில் 2,300 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன. இதேபோல், தொடர் விடுமுறை முடிந்த பிறகு மக்கள் சென்னை திரும்பும் வகையில் வரும் 21-ம் தேதி மாலை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
ரசிகர்கள் கூடியதால் சலசலப்பு: நடிகர் அஜித் வரிசையில் நிற்காமல் வாக்களிப்பு
சென்னை திருவான்மியூரில் நடிகர் அஜித் தனது மனைவி ஷாலினியுடன் வந்து வாக்களித்தார். ரசிகர்கள் கூடியதால் அவர் வரிசையில் நிற்காமல் வாக்களித்துச் சென்றார்.
நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடக்கிறது. இதில் முதல்கட்டமாக 91 மக்களவைத் தொகுதிகளில் கடந்த 11-ம் தேதி தேர்தல் நடந்தது. இரண்டாம் கட்ட தேர்தல் 95 தொகுதிகளில் இன்று (ஏப்.18) நடக்கிறது.
தமிழகத் தில் உள்ள 39 தொகுதிகள், புதுச் சேரியில் ஒரு தொகுதி என 40 மக்களவைத் தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடக்கும் என அறிவிக்கப்பட்டது.
இத்துடன், தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டப்பேரவை தொகுதிகள் மற்றும் புதுச்சேரி தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலும் இன்று நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி தமிழகம், புதுச்சேரியில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
சென்னை திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் அஜித் தனது மனைவி ஷாலினியுடன் வாக்களித்தார்.
அவர் அங்கு வந்திருந்ததை அறிந்து ரசிகர்கள் அவரைப் பார்க்கக் கூடியதால் லேசான சலசலப்பு ஏற்பட்டது. சிலர் அத்துமீறி வாக்குச்சாவடிக்குள் நுழைய முயன்றனர்.
இதனால், வரிசையில் நிற்காமல் போலீஸ் பாதுகாப்புடன் வாக்களித்தனர். தென் சென்னை மக்களவைத் தொகுதியில் வாக்களித்துள்ளா
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
சர்காரை தேர்வு செய்ய லைனில் நின்ற விஜய்.. ஆட்டோகிராப் கேட்டு ஓடி வந்த குட்டிஸ்.. திரண்ட கூட்டம்
சென்னை நீலாங்கரை புனித தோமையர் ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் வாக்களிக்க வரிசையில் நின்ற நடிகர் விஜயிடம், சிறுவர்கள் ஆட்டோகிராப் வாங்கி மகிழ்ச்சி அடைந்தனர்.
நாடு முழுக்க லோக்சபா தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு தற்போது நடைபெறுகிறது. புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் 39 தொகுதிகளில் லோக்சபா தேர்தல் நடக்கிறது. லோக்சபா தேர்தலுடன் சேர்த்து தமிழகத்தில் 18 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தலும் நடக்கிறது.
இந்த நிலையில் இந்த தேர்தலில் பிரபலங்கள் அதிகாலையே வந்து வாக்களித்தனர். நடிகர் அஜித், ரஜினிகாந்த் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் தங்கள் தொகுதிகளில் உள்ள வாக்குசாவடிகளில் சென்று வாக்களித்தனர். அதேபோல் நடிகர் விஜயும் தனது வாக்குசாவடியில் சென்று வாக்களித்தார்.
சென்னை நீலாங்கரை புனித தோமையர் ஒன்றிய நடுநிலைப்பள்ளியில்தான் நடிகர் விஜய்க்கு வாக்கு இருக்கிறது. இங்கு வாக்களிப்பதற்காக அவர் அதிகாலை சரியாக 7 மணிக்கே வந்தார். ஆனால் அப்போதே அங்கு பெரிய அளவில் கூட்டம் இருந்தது.
இதனால் நடிகர் விஜய் வரிசையில் நின்றார். வரிசையில் நின்று மக்களோடு மக்களாக வாக்களிக்க காத்து இருந்தார். அப்போது விஜயை காண நிறைய ரசிகர்கள் கூடினார்கள். அந்த பகுதியை சேர்ந்த குழந்தைகள் பலர் விஜயை காண அந்த பகுதிக்கு வந்தனர்.
அவர்கள் நடிகர் விஜயிடம் ஆட்டோகிராப் வாங்கி மகிழ்ச்சி அடைந்தனர். அதேபோல் விஜயின் ரசிகர்கள் பலரும் அவரிடம் வந்து ஆட்டோகிராப் வாங்கி சென்றனர்.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
சென்னை சூப்பர் கிங்ஸை எளிதாக வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: காரணம் என்ன?
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் கிரிகெட் அணிகள் புதன்கிழமை மோதிய ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி எளிதாக வெற்றி பெற்றது.
முதல் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை பறிகொடுத்து மொத்தம் 132 ரன்களை எடுத்திருந்தது.
இந்த போட்டியில் மகேந்திரசிங் தோனி விளையாடவில்லை. ரெய்னா கேப்டனாக இருந்தார். டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
தொடக்க ஆட்டக்காரர்கள் 79 ரன்கள் குவித்த நிலையில், ஒன்றன் பின் ஒன்றாக ஆட்டமிழக்க, அடுத்து வந்த ரெய்னா, ஜாதவ், பில்லிங்ஸ் சொதப்பினர். எனவே 132 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது,
133 ரன்கள் எடுத்தால் வெற்றி இரண்டாவதாக களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தொடக்க ஆடட்டக்காரர் வார்னர் அதிரடியாக விளையாடி அணியின் வெற்றிக்கு நம்பிக்கை அளித்தார்.
24 பந்துகளில் அரைசதம் கடந்த வார்னர் அடுத்த பந்தில் ஆட்டமிழக்கவும் செய்தார். 44 பந்துகளில் 61 ரன்கள் எடுத்த பேர்ஸ்டோவ் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்,
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 16.5 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து இலக்கை அடைந்தது
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
நெடுவாசல் கேட்கிறது: ஹைட்ரோகார்பனுக்காக நிலத்தை சீரழித்தால் வாழ்வாதாரம் என்னவாகும்?
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நெடுவாசல் கிராமம் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு வந்த எதிர்ப்பாலும், போராட்டத்தாலும் தமிழகம் முழுவதும் அறியப்பட்ட பெயராகிவிட்டது.
இந்த ஊர் ஆலங்குடி சட்டமன்றத் தொகுதியிலும், சிவகங்கை மக்களவைத் தொகுதியிலும் இடம் பெற்றுள்ளது.
ஒரு காலத்தில் மானாவாரிப் பயிர்களே அதிகம் செய்யப்பட்ட இப்பகுதியில். ஆழ்துளைக் கிணறுகள் பெருகியதால் விவசாயம் ஊக்கம் பெற்றது.
தற்போது நிலக்கடலை, உளுந்து, வாழை, கரும்பு உள்ளிட்டவை இந்தப் பகுதியின் பிரதான பயிர்கள். இந்த கிராமத்தின் சுற்றுவட்டாரத்தில் உள்ள செம்மண் பூமியில் தைலமரம், முந்திரி ஆகியவை அதிகம் பயிரிடப்படுகின்றன.
நெடுவாசல் பகுதியை சேர்ந்த அடுத்த தலைமுறை இளைஞர்கள் படித்துவிட்டு சென்னை, பெங்களுர்,மற்றும் அரபு நாடுகளுக்கு வேலை தேடி சென்றாலும் நெடுவாசல் பகுதியில் கணிசமானோருக்கு விவசாயமே இப்போதும் பிரதான தொழிலாக இருக்கிறது.
ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்காக அமைக்கபட்டிருந்த குழாயை நேரில் பார்த்தோம். அது தற்போது பயன்பாட்டில் இல்லை. அருகே விவசாய வேலையில் ஈடுபட்டு வந்த விவசாயி மாலதியிடம் கேட்ட போது 'இது குறித்து முன்பு எங்களுக்கு எந்த விழிப்புணர்வும் இல்லை. மண்ணெண்ணெய் எடுக்கிறோம் என்றுதான் முதலில் எங்களிடமிருந்து நிலத்தை குத்தகைக்கு கேட்டார்கள்' இந்த ஊர் வளர்ச்சியடையப் போகிறது என்ற நம்பிக்கையில்தான் நாங்களும் நிலத்தைக் கொடுத்தோம்
ஆனால், அவர்கள் எங்களுக்கு வாக்குறுதி அளித்த எந்த வளர்ச்சியும் வந்து சேரவில்லை. 'அதுமட்டுமல்ல தனியார் நிறுவனங்கள் துளையிட்ட பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் நிலத்தடி நீர் மிகவும் குறைந்துள்ளது'. மேலும், அவர்கள் எண்ணெய் எடுத்துவிட்டு, கைவிட்டுச் சென்ற சில இடங்களில் அவ்வப்போது தீப்பிடிக்கிறது. அதனால்தான் இப்போது நாங்கள் எதிர்கிறோம்' என்றார்.
மேலும் வரும் நாடளுமன்றத் தேர்தலில் பேட்டியிடும் வேட்பாளர்கள் யாராவது, நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டம் கொண்டு வரப்படாது என உறுதியளித்தார்களா என்ற கேள்வியை அப்பகுதியில் வசிக்கும் அலமேலுவிடம் கேட்ட போது 'இந்தப் பகுதி விவசாயத்துக்கு உகந்த பகுதி. 90 சதவிகித மக்கள் தங்கள் வாழ்வாதாரமாக விவசாயத்தையே நம்பி இருக்கிறோம்.
ஹைட்ரோ கார்பன் எடுக்கிறோம் என்ற பெயரில், இந்தப் பகுதியை முழுவதுமாக சீரழித்து விட்டால், நாங்கள் வாழ்வாதாரத்துக்காக எங்கே செல்வது..? இந்த தேர்தலையொட்டி இத்திட்டத்தை நிறுத்தி விடுவதாக வேட்பாளர்கள் தெரிவித்தாலும், இது வரை இத்திட்டம் முற்றிலும் கைவிடப்படும் என யாரும் உறுதியளிக்கவில்லை. நாங்கள் எப்படி யாரை நம்புவது? இதுவரை நாங்கள் யாரும் தேர்தலில் வாக்களிக்க முடிவு செய்யவில்லை. எனினும் இத்திட்டத்தை நிரந்திரமாக மூடினால் மட்டுமே தேர்தலில் கட்சிகளுக்கு வாக்களிப்போம் 'இல்லையெனில் நோட்டாவுக்கு தான் வாக்களிப்போம்' என தெரிவித்தார்.
இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய தென்னை விவசாயி காமராஜ் 'கஜ புயலால் நாங்கள் எங்கள் வாழ்வாதாரத்தை முற்றிலும் இழந்து விட்டு என்ன செய்வது' என்று தெரியால் நின்று கொண்டிருக்கிறோம். இதில் இருந்து மீண்டு வருவதற்கு எட்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகும். இந்நிலையில் 'மீண்டும் இப்பகுதியில் ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்கள் வந்தால் நிச்சயம் போரட்டம் தொடரும்'. வரும் நாடாளுமன்ற தேர்தலை பொருத்த அளவில் எங்கள் பகுதி மக்கள் நோட்டாவுக்கு வாக்களிக்கலாம் என்ற மன நிலையில்' உள்ளனர் என்றார்.
பலா விவசாயி பால வேலாயுதம், 'தற்போது ஆழ்துளை கிணறுகளை நம்பி விவசாயம் செய்து வருகிறோம். ஆனாலும், நீர் மட்டம் முற்றிலும் குறைந்துவிட்டது. நீர் மட்டத்தை உயர்த்த, நீர் ஆதாரத்தைப் பெருக்க அரசுத் தரப்பில் எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை.
தேர்தல் நேரங்களில் 'காவிரி ஆறு இணைக்கப்படும் குண்டாறு இனைக்கபடும் என தேர்தல் வாக்குறுதிகள் அளித்தாலும் மக்கள் நம்பத் தயாராக இல்லை' காரணம் ஐந்தாண்டுகளுக்கு முன்னதாக இதே வாக்குறுதிகளை முன் வைத்தனர். ஆனால் இதுவரை நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை என்றார்.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
ஒரு வழியாக ஓட்டு போட்ட சிவகார்த்திகேயன்: ஓட்டு போட முடியாமல் திரும்பிய ரோபோ ஷங்கர்
சென்னை: சென்னையில் வாக்காளர் பட்டியலில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், ரோபோ ஷங்கரின் பெயர்கள் இல்லை. இந்நிலையில் தான் வாக்களித்துவிட்டதாக சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
லோக்சபா தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை துவங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. திரையுலக பிரபலங்கள் மக்களோடு மக்களாக வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.
ரஜினிகாந்த், கமல் ஹாஸன், அஜித், விஜய் உள்ளிட்டோர் காலையிலேயே வாக்களித்துள்ளனர். சிவகார்த்திகேயன் ஏன் இன்னும் வாக்களிக்கவில்லை என்று பார்த்தால் வாக்காளர் பட்டியலில் அவர் பெயர் இல்லை என்று கூறப்பட்டது. இந்நிலையில் தான் வாக்களித்துவிட்டதாக புகைப்படத்துடன் ட்வீட் செய்துள்ளார் சிவகார்த்திகேயன்.
View image on Twitter
Quote:
[/url]Sivakarthikeyan
✔@Siva_Kartikeyan
Voting is your right and fight for your right [img=17.9x18]https://abs.twimg.com/emoji/v2/72x72/1f4aa.png[/img][img=17.9x18]https://abs.twimg.com/emoji/v2/72x72/1f44d.png[/img]
15.9K
13:13 - 18 Apr 2019
[color][size][font][color][size][font]
1,995 people are talking about this
[url=https://twitter.com/Siva_Kartikeyan/status/1118782204652294144]
Twitter Ads information and privacy
[/font][/size][/color]
நடிகர் ரோபோ ஷங்கரின் பெயரும் வாக்காளர் பட்டியலில் இல்லை. அதனால் அவர் வாக்குச்சாவடிக்கு வந்துவிட்டு ஓட்டு போட முடியாமல் திரும்பிச் சென்றார்.
வாக்களிப்பவர்கள் யோசித்து வாக்களிக்கவும், அதன் பிறகு அது சரி இல்லை இது சரி இல்லை என்று புலம்ப வேண்டாம் என திரையுலக பிரபலங்கள் வலியுறுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
[/font][/size][/color]
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
``அ.ம.மு.க வுக்கு தினகரன்; அ.தி.மு.க -வுக்கு சசிகலா!” -பின்னணியை விவரிக்கும் சி.ஆர் சரஸ்வதி
[/url]பிரேம் குமார் எஸ்.கே.
[url=https://www.vikatan.com/author/3119-s.k.premkumar] Follow
அ.ம.மு.க விரைவில் கட்சியாகப் பதிவுசெய்யப்பட இருக்கிறது. மேலும் அதன் பொதுச் செயலாளராக தினகரன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
[color][font]
மக்களவைத் தேர்தலில் அ.ம.மு.க வேட்பாளர்களுக்குச் சின்னம் கிடைப்பதில் கடைசி வரை கடும் இழுபறி இருந்தது. இறுதியாக நீதிமன்ற உத்தரப்படி அவர்களுக்கு பரிசுப்பெட்டி சின்னம் ஒதுக்கப்பட்டது. அப்போது நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது அ.ம.மு.க வை கட்சியாகப் பதிவு செய்யத் தயார் எனத் தினகரன் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது,
தமிழகத்தில் நேற்று வாக்குப்பதிவு முடிந்த நிலையில், இன்று அ.ம.மு.க வின் துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அமமுக நிர்வாகிகளுடன் சென்னை அலுவலகத்தில் அவசர ஆலோசனை நடத்தினர். இந்தக் கூட்டத்தில் அ.ம.மு.க வை கட்சியாகப் பதிவு செய்ய ஒருமனதாக முடிவு செய்யப்பட்டதாகவும், மேலும் அந்தக் கட்சிக்கு தினகரன் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியானது.
[/font][/color]
[color][font]
இது தொடர்பாக நாம் சி.ஆர் சரஸ்வதியைத் தொடர்புகொண்டோம். அவர், ``இன்று சென்னை அலுவலகத்தில் முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்ட கூட்டம் நடைபெற்றது. அதில் அ.ம.மு.கவை கட்சியாகப் பதிவு செய்வது தொடர்பான முக்கிய முடிவு எடுக்கப்பட்டது. நீதிமன்றத்தில் தெரிவித்ததை போன்று விரைவில் கட்சியாகப் பதிவு செய்ய முடிவெடுக்கப்பட்டது. அக்கட்சியின் பொதுச் செயலாளராக தினகரன் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்” என்றார்.
[/font][/color]
[color][font]
சசிகலா குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, ``அவர் அ.தி.மு.க வின் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். சிறையிலிருந்து வந்த பின்னர் இது தொடர்பாக நீதிமன்றத்தில் நடக்கும் வழக்கை அவர் கவனித்துக் கொள்வார்” என்றார். அ.தி.மு.க சசிகலா வசம் வந்தால் அ.ம.மு.க, அ.தி.மு.க வுடன் இணைக்கப்படுமா என்ற கேள்விக்கு பதிலளித்த சி.ஆர் சரஸ்வதி, ``அது தொடர்பாக அப்போது முடிவு செய்யப்படும். தினகரன் ஒருமனதாக தேர்தெடுக்கப்பட்டது குறித்து விரைவில் செய்தியாளர்களைச் சந்தித்து தகவல் தெரிவிப்பார்” என்றா[/font][/color]
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
பாஜகவுக்கு வாக்களித்ததால் விரலையே வெட்டிக்கொண்ட தலித் இளைஞர்
சிகிச்சைக்குப் பிறகு பவன்குமார்
தவறுதலாக பாஜகவுக்கு வாக்களித்ததால் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த தலித் இளைஞர், தனது விரலையை வெட்டிக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மக்களவைக்கான இரண்டாம் கட்டத் தேர்தல் தமிழகம், கர்நாடகா, மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம், அசாம் மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்றது
உ.பி.யில் சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் ராஷ்ட்ரிய லோக் தளம் ஆகிய கட்சிகள் இணைந்து தேர்தலில் போட்டியிடுகின்றன. புலந்த்ஷெஹரில் இக்கூட்டணி சார்பில் யோகேஷ் சர்மா என்ற வேட்பாளர் நிறுத்தப்பட்டார்.
புலந்த்ஷெஹரின் சாந்திபூர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட அப்துலாபூர் ஹுலஸ்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பவன் குமார். 25 வயதான இவர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர். பகுஜன் சமாஜ் சார்பில் யோகேஷ் சர்மாவுக்கு வாக்களிக்க விரும்பினார் பவன்குமார்.
தனது கிராமத்திலேயே அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிக்குத் தனது சகோதரருடன் சென்றார். ஆனால் தவறுதலாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பாஜக வேட்பாளர் போலா சிங்குக்கு வாக்களித்துவிட்டார். இதனால் மனமுடைந்தார் பவன்குமார். உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தமுடியாமல், தனது விரலையே துண்டித்துக்கொண்டார்.
இதைத் தொடர்ந்து பவன்குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை முடிந்து வீடுதிரும்பிய பவன்குமார் இதுதொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
ஜெட் ஏர்வேஸ் மீண்டும் பறக்கும்- எஸ்பிஐ தலைமையிலான வங்கிகள் கூட்டமைப்பு அறிக்கை
டெல்லி: பங்கு ஒதுக்கீட்டிற்கு வந்த அனைத்து விண்ணப்பங்களையும் பரிசீலனை செய்து பங்குகளை ஒதுக்கீடு செய்த உடன் ஜெட் ஏர்வேஸ் விமான சேவையை மீண்டும் தொடர்வதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று எஸ்பிஐ தலைமையிலான வங்கிகள் கூட்டமைப்பு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை ஏற்று நடத்துவதற்கு தேவையான நிதி உதவி அளிப்பதற்கு வங்கிகளும் தயங்கி காலம் தாழ்த்தி வரும் நிலையில் விமான சேவையை தொடர்வதற்கு மத்திய அரசும் எந்தவிதமான முயற்சியையும் எடுக்காததால், எங்கே கிங்க ஃபிஷர் விமான நிறுவனம் போல் ஆகிவிடுமோ என்று ஊழியர்கள் அனைவரும் அதிருப்தியில் இருந்தனர்.
ஜெட் ஏர்வேஸ் விமான சேவையை தொடங்குவதற்கு மத்திய அரசும், வங்கிகள் கூட்டமைப்பு உதவ முன்வரவில்லை என்றால் தொழிலாளர் ஆணையரை சந்தித்து முறையிடப்போவதாக ஜெட் ஏர்வேஸ் ஊழியர் சங்கம் அறிவித்தவுடன் வங்கிகள் கூட்டமைப்பு இந்த அறிவிப்பை வெளியிட்
துங்கிய நரேஷ் கோயல்
கடன் சுமையை குறைப்பதற்காக வங்கிகள் கூட்டமைப்பு உதவ முன்வந்தாலும் நிறவனத்தின் தலைவரான நரேஷ் கோயல் பதவி விலகினால் மட்டுமே உதவ முடியும் என்று நெருக்கடி கொடுத்ததைத் தொடர்ந்து அவரும் பதவி விலகினார். அதோடு ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் தான் வைத்திருந்த 51 சதவிகித பெரும்பான்மை பங்குகளில 26 சதவிகிதத்தை வங்கிகள் கூட்டமைப்பிற்கு கொடுத்துவிட்டு பாக்கி 25 சதவிகித பங்குகளை வைத்துகொண்டு ஒதுங்கிக் கொண்டார்.
கைமாறிய பங்குகள்
நரேஷ் கோயல் பதவி விலகியதைத் தொடர்ந்து அவர் ஒப்படைத்த 26 சதவிகித பங்குகளையும் வங்கிகள் கூட்டமைப்பு எடுத்துக்கொண்டது. இதனையடுத்து ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் 51 சதவிகித பெரும்பான்மை பங்குகள் எஸ்பிஐ தலைமையிலான 26 வங்கிகள் அடங்கிய கூட்டமைப்பின் வசம் வந்தது. இதைத் தொடர்ந்து ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் இயக்குனர் குழுவில் மாற்றம் செய்யப்பட்டது.
வாங்க ஆளில்லையே
இயக்குநர் குழுவில் மாற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து தன் வசம் உள்ள 75 சதவிகித பங்குகளை உடனடியாக விற்கும் நடவடிக்கையில் வங்கிகள் கூட்டமைப்பு இறங்கியது. ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு ஜெட் ஏர்வேஸ் பங்குகளை வாங்குவதற்கு யாரும் முன்வரவில்லை. கடன் சுமையில் சிக்கி மீளமுடியாமல் உள்ள நிறுவனத்தில் 1500 கோடி ரூபாயை முதலீடு செய்வதற்கு முதலீட்டாளர்கள் போதிய ஆர்வம் காட்டவில்லை எனக் கூறப்படுகிறது. அதனால் எஸ்பிஐ தலைமையிலான வங்கிகள் கூட்டமைப்பால் உறுதி அளித்தபடி ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் ரூ.1500 கோடியை முதலீடு செய்ய முடியவில்லை.
123இல் இருந்து 5ஆக குறைந்தது
வங்கிகள் கூட்டமைப்பு எப்படியும் கடன் உதவியளித்து விடும், இதனால் தங்களின் குத்தகை பாக்கி வந்துவிடும் என்ற நம்பிக்கையில் இருந்த குத்தகை நிறுவனங்கள், வங்கிகள் கூட்டமைப்பு கைவிரித்துவிட்டதால், வேறு வழியில்லாமல் விமானங்களை குத்தகைக்கு விட்ட நிறுவனங்கள், பெரும்பாலான விமானங்களை திரும்பப் பெற்றுக் கொண்டன. அதனால் கடந்த 2018ஆம் ஆண்டு டிசம்பரில் 123ஆக இருந்த ஜெட் ஏர்வேஸ் விமானங்களின் எண்ணிக்கை வெறும் 5 ஆகக் குறைந்தது.
தற்காலிக நிறுத்தம்
குத்தகை நிறுவனங்கள் விமானங்களை திரும்பப் பெற்றக்கொண்டதால் விமான சேவையை நிறுத்தவேண்டிய இக்கட்டான நிலை ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக ரூ.400 கோடி நிதி உதவி அளித்தால் விமான சேவையை தொடர முடியும் என ஜெட் ஏர்வேஸ் தெரிவித்தது. ஆனால், மேற்கொண்டு நிதியுதவி அளிக்க வங்கிகள் கூட்டமைப்பு மறுத்து விட்டன. இதனால், ஜெட் ஏர்வேஸ் விமான சேவை 17ஆம் தேதி நள்ளிரவுடன் தற்காலிகமாக முடிவுக்கு வந்தது.
ஊழியர்கள் பாதிப்பு
ஜெட் ஏர்வேஸ் விமான சேவை தற்காலிகமாக முடிவுக்கு வந்ததை அடுத்து அதன் ஊழியர் சங்கம் பிரதமர் மோடி நிதியமைச்சர் அருண்ஜெட்லி ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளது. அதில் ஜெட் ஏர்வேஸ் விமான சேவை நிறுத்தப்பட்டதால், 16000 நிரந்தர ஊழியர்கள் நேரடியாகவும் 22000 பேர் மறைமுகமாகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால், இப்பிரச்னையில், உடனடியாக தலையிட்டு, தீர்வு காண வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீர்வுதான் என்ன
ஜெட் ஏர்வேஸ் ஊழியர்கள் அதோடு நில்லாமல், எஸ்பிஐ தலைமையிலான வங்கிகள் கூட்டமைப்பும் நிதி உதவி அளிக்க மறுத்துவிட்டதாலும் மத்திய அரசு ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை மறுசீரமைப்பு செய்வதற்கு முன்வராமல் பாராமுகமாக இருப்பதையும் சுட்டிக்காட்டி தங்களின் வேலை மற்றும் சம்பள பாக்கிக்கு தீர்வு கேட்டு தொழிலாளர் ஆணையரை நாடப்போவதாக அறிவித்தனர்.
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
ஜெட் ஏர்வேஸ் நிறுவன ஊழியர்களின் தடாலடி அறிவிப்பால் வேறு வழியில்லாத வங்கிகள் கூட்டமைப்பு கடந்த 18ஆம் தேதி அறிவிப்பை வெளியிட்டது. அதில் ஜெட் ஏர்வேஸ் பங்கு விற்பனை தொடர்பாக 16ஆம் தேதி நிலவரப்படி, தகுதியுள்ள முதலீட்டாளர்களிடம் இருந்து வந்த விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும்.
மீண்டும் பறக்கும்
பங்கு ஒதுக்கீடு கேட்டு வந்துள்ள விண்ணப்பங்களின் தகுதி அடிப்படையில் பங்கின் விலை, நியாயமாகவும் வெளிப்படையான முறையிலும் நிர்ணயிக்கப்படும். இப்பணி வெற்றிகரமாக முடியும் என, எதிர்பார்க்கிறோம். இதைத் தொடர்ந்து போதுமான நிதி உதவி பெற்று விரைவில் ஜெட் ஏர்வேஸ் மீண்டும் வழக்கம் போல விமான சேவையை தொடரும் என, நம்புகிறோம் என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. டுள்ளது.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
jet airways-க்கு கடன் கொடுத்து பயண் இல்லை..! Air India வாங்கிக் கொள்ளட்டுமே
மும்பை: "மத்திய அரசின் விமான சேவை நிறுவனமான ஏர் இந்தியா, நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் லாபகரமான சர்வதேச மற்றும் உள்ளூர் வழித்தடங்களை எடுத்துக்கொண்டு ஏர் இந்தியா நிறுவனத்தை சிறப்பாக நடத்தலாம்" என அறிவுரை வழங்கி இருக்கிறது அனைத்திந்திய வங்கி ஊழியர்கள் சங்கம்
இப்போது வரை ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை வாங்கி கொள்ளவோ அல்லது அதில் முதலீடு செய்யவோ எந்த ஒரு வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அல்லது விமான சேவை நிறுவனமும் முன்வரவில்லை.
எனவே ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை ஏர் இந்தியா நிறுவனம் ஏன் வாங்கிக் கொள்ளக் கூடாது..? எனவும் அனைத்து இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் கேள்வி எழுப்பி இருக்கிறது.
8500 கோடி
ஏற்கனவே ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு 8,500 கோடி ரூபாய் கடன் இருக்கிறது. இந்த 8,500 கோடி ரூபாயும் ஏற்கனவே வாராக் கடன்களாக அனைத்து வங்கிகளும் அறிவித்து விட்டன. இத்தனை நெருக்கடியான கடன் உள்ள நிறுவனத்திற்கு மேலும் வங்கிகளில் கடன் கொடுப்பதில் அர்த்தமில்லை என அனைத்து இந்திய வங்கிகள் ஊழியர்கள் சங்க பொதுச்செயலாளர் வெங்கடாச்சலம் தன் கருத்தை பதிவு செய்திருக்கிறார்.
லே ஆஃப்
அதோடு ஏர் இந்தியா நிறுவனம் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை கையகப்படுத்தி, ஒரு பகுதி ஜெட் ஏர்வேஸ் ஊழியர்களை லே ஆஃப் செய்து பெரும்பகுதி ஜெட் ஏர்வேஸ் ஊழியர்களைக் காப்பாற்றலாம் எனவும் சொல்லி இருக்கிறது அனைத்து இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம்.
தண்டிக்க வேண்டும்
அதோடு ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் இந்த நிதி நெருக்கடிக்கு அவர்களின் தவறான நிர்வாக முடிவுகளும், பிரம்மாண்ட விரிவாக்கங்கள் தான் காரணம். எனவே ஜெட் ஏர்வேஸை முழுமையாக விசாரித்து, இந்த மோசமான நிதி நெருக்கடிக்கும், நிர்வாக தவறு செய்தவர்கள் கண்டு பிடிக்கப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் எனவும் அனைத்திந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் சொல்லியிருக்கிறது.
[color][font]
கண்டு கொள்ளவில்லை
இதையெல்லாம் விட "இப்போது வரை செய்திகளில் வங்கிகள் தான் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு மேலும் கடன் கொடுத்து நிறுவனத்தைக் காப்பாற்ற வேண்டும் எனச் சொல்கிறார்கள். ஆனால் யாரும் நரேஷ் கோலைக் கண்டு கொண்டதாக தெரியவில்லை. உண்மையாகவே அவர் தான் இந்த மோசமான நிதி நெருக்கடிக்கு பதில் சொல்ல வேண்டியவர்" எனவும் காட்டமாக குற்றம்சாட்டி இருக்கிறார்கள் அனைத்திந்திய வங்கி ஊழியர்கள் சங்கம்.
[/font][/color]
[color][font]
வரவேற்பு
ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு மேலும் கடன் கொடுக்க வற்புறுத்த முடியாது என மும்பை உயர் நீதிமன்றம் சமீபத்தில் ஒரு தீர்ப்பளித்தது. அதை பகிரங்கமாக வரவேற்றதும் இதே வங்கி ஊழியர்கள் சங்கமும், இதே வெங்கடாசலமும் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
[/font][/color]
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
ஜெட் ஏர்வேஸ் விமானிகள், ஊழியர்களை காப்பாற்றிய ஸ்பைஸ் ஜெட் - தற்காலிக நிம்மதி
டெல்லி: ஜெட் ஏர்வேஸ் விமான சேவை தற்காலிகமாக முடக்கப்பட்டிருப்பதால் வேலையிழந்து தவிக்கும் அந்நிறுவன ஊழியர்கள் மற்றும் பைலட்களை காப்பாற்றும் விதமாக அந்நிறுவனத்தில் உள்ள 400 ஊழியர்களையும் 100 பைலட்களையும் பணிக்கு எடுத்துக்கொள்ளப்போவதாக மற்றொரு விமான நிறுவனமான ஸ்பைஸ் ஜெட் அறிவித்துள்ளது.
வேலையிழந்து தவிப்பதால் மாதாந்திர செலவுகள் மற்றும் இஎம்ஐ போன்றவற்றுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து நிற்கும் ஜெட் ஏர்வேஸ் ஊழியர்கள் தற்காலிகமாக நிம்மதிப் பெருமூச்சு விட்டுள்ளனர்.
ஜெட் ஏர்வேஸ் நிறுவன ஊழியர்கள் மற்றும் பைலட்களை பணியமர்த்துவது தொடர்பாக ஸ்பைஸ் ஜெட் நிறுவனத் தலைவர் அஜய் சிங் கூறும்போது, எங்களின் முதல் சாய்ஸ் ஜெட் ஏர்வேஸ் ஊழியர்களை பணியமர்த்துவதுதான் என்றார்.
தற்காலிக நிறுத்தம்
கடன் சுமையில் சிக்கி சின்னாபின்னமாகி கடனை திரும்ப செலுத்துவதற்காக வங்கிகளிடமும் மத்திய அரசிடமும் கையேந்திய நிலையில் அவர்களும் கைவிட்டு விட்டதால் வேறு வழியே இல்லை என்ற நிலையில் ஜெட் ஏர்வேஸ் விமானங்கள் இயங்குவதற்கு தேவையான ஓடுதளம் முற்றுப் பெற்றதால் கடைசியில் விமான சேவையை தற்காலிகமாக நிறுத்திக் கொண்டது.
ரீஃபண்ட் கிடையாது
விமான சேவை திடீரென நிறுத்தப்பட்டதால் இதில் பயணம் செய்ய முன்பதிவு செய்திருந்த பயணிகளும் செய்வதறியாது தவித்து பின்னர் வேறு விமானங்களை நாடத்தொடங்கிவிட்டனர். இவர்களுக்கு டிக்கெட்டுக்கான ரீஃபண்ட் தொகையையும் இப்போதைக்கு தர முடியாது என்று ஜெட் ஏர்வேஸ் நிர்வாகம் கைவிரித்துவிட்டது
எங்களைக் காப்பாற்ற யாருமே இல்லையா
பயணிகளின் நிலை இப்படி இருக்க, இன்னொரு பக்கம், ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியர்கள், மேலாளர்கள், பைலட்கள் மற்றும் பயணிகளின் உதவியாளர்கள் (cabin crew) என அத்தனை பேரும் தாங்கள் நட்டாற்றில் விடப்பட்டதை அடுத்து தங்களின் நிலுவை சம்பளத்தை பெற்றுத் தருமாற பிரதமர் மோடி, நிதியமைச்சர் அருண் ஜெட்லி மற்றும் சிவில் விமான போக்குவரத்துத்துறை அமைச்சகம் என அனைவருக்கும் கடிதம் எழுதினர்.
கைகொடுத்த ஸ்பைஸ் ஜெட்
ஜெட் ஏர்வேஸ் ஊழியர்கள் மற்றும் பைலட்களின் நிலையை நன்கு உணர்ந்து கொண்ட போட்டி நிறுவனமான ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம் கிடைத்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொண்டது. ஜெட் ஏர்வேஸ் நிறுவன ஊழியர்களில் 400 பேரையும் பைலட்களில் 100 பேரையும் வேலைக்கு எடுத்துக்கொள்ள முன்வந்துள்ளதாக தெரிகிறது.
அண்ணனுக்கு 27 விமானங்கள் பார்சேல்
ஜெட் ஏர்வேஸ் விமான சேவை நிறுத்தப்பட்டதால் பயணிகளின் அடுத்த சாய்ஸாக ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனமாக உள்ளதால் பயணிகளை கவர்வதற்காகவே கூடுதலாக 22 போயிங்737 விமானங்களையும் 5 டர்போப்ராப் பாம்பார்டிர் க்யூ (Turboprob Bombardier Q400) ரக விமானங்களையும் வாங்கப்போவதாக அறிவித்துள்ளது.
தகுதியான ஆட்கள் தேவை
கூடுதலாக விமானங்களை வாங்குவதால் அதற்கான ஊழியர்கள் மற்றும் பைலட்கள், பயணிகளின் உதவும் பணியாளர்கள் என தேவையான அனைவரையும் பணியமர்த்த ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் முடிவெடுத்துள்ளது. அதற்கான தகுதியான ஆட்களையும தேர்ந்தெடுக்கும் பணியும் முடுக்கி விடப்பட்டுள்ளது.
எங்கள் முதல் சாய்ஸ்
புதிதாக ஊழியர்கள் மற்றும் பைலட்களை பணியமர்த்துவது தொடர்பாக பேசிய ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் தலைவரான அஜய் சிங், எங்களின் நிறுவனத்தை விரிவாக்கம் செய்யும் பணியில் இறங்கியுள்ளோம். ஆகவே, எங்களின் முதல் சாய்ஸ் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் ஊழியர்கள் மற்றும் பைலட்கள் தான். அவர்களுக்குத்தான் நாங்கள் முன்னுரிமை கொடுப்போம் என்றார்.
மனிதாபிமான முயற்சிதான்
ஜெட் ஏர்வேஸ் ஊழியர்கள் மற்றும் பைலட்களுக்கு நாங்கள் முன்னுரிமை தருவதற்கு காரணம் அவர்கள் ஏற்கனவே வேலையிழந்து தவித்து வருகின்றனர். எனவே அவர்களை காப்பாற்றுவது எங்களின் கடமை மற்றும் மனிதாபிமானமும கூட, என்று மேலும் அவர் கூறினார்.
கூடுதல் விமானங்கள்
எங்கள் நிறுவனம் ஏற்கனவே 100 பைலட்களையும், பயணிகளின் உதவியாளர்கள் (Cabin crew) 200 பேரையும், பொறியாளர்கள் 200 பேரையும் பணியமர்த்தி உள்ளோம். இன்னும் கூடுதலாக பணியமர்த்த திட்டமிட்டுள்ளோம். இதற்காகவே கூடுதலாக விமானங்களையும் வாங்க முடிவெடுத்துள்ளோம் என்றும் அஜய் சிங் கூறினார்.
இடையில் நிற்காது
கடந்த 18ஆம் தேதியன்று 24 புதிய விமானங்களை வாங்குவதாக ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த விமானங்களின் சேவை வரும் ஏப்ரல் 26ஆம் தேதி முதல் மே மாதம் 2ஆம் தேதிக்குள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிதாக இயக்கப்படும் விமானங்கள் மும்பையில் இருந்து இடையில் எங்கும் நிற்காமல் ஹாங்காங், ஜெட்டா, துபாய், கொழும்பு, டாக்கா, ரியாத், காத்மண்டு மற்றும் பாங்காக் போன்ற நகரங்களுக்கு விமான சேவையை வழங்கும் என்று அறிவித்துள்ளது.
சிரமங்களை போக்க முயற்சி
புதிதாக வாங்கியுள்ள சர்வதேச போக்குவரத்துக்கான விமானங்கள் வரும் மே மாத இறுதி வாக்கில் சேவையை தொடங்கும் என்று தெரிகிறது. இந்த நெருக்கடியான சூழ்நிலையில், பயணிகள் விமான டிக்கெட் வாங்குவது மிகக்கடினமாக உள்ளது. இதை உணர்ந்துதான் ஸ்பைஸ் ஜெட் நிர்வாகம் விமான பயணிகளின் அனைத்து சிரமங்களையும் போக்க தேவையான நடவடிக்கைகளை நிறுவனம் எடுத்துவருகிறது என்றார் அஜய் சிங்.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
தமிழகத்தின் வட மாவட்டங்களில் பிளஸ் 2 தேர்ச்சி சதவீதம் குறைந்துள்ளது.
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதில் தேர்ச்சி வீதம் பட்டியலில் வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, கடலூர், நாகை, திருவாரூர், விழுப் புரம், காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய வட மற்றும் கடலோர மாவட் டங்களே எப்போதும் போல இந்த ஆண்டும் பின்னடைவை சந்தித் துள்ளன. அரசுப் பள்ளிகள் தேர்ச்சி வீதத்திலும் மேற்கண்ட மாவட் டங்கள் மிகவும் பின்தங்கியுள் ளன.
2,404 மாற்றுத்திறனாளிகள் தேர்ச்சி
கடந்த கல்வியாண்டில் மொத் தம் 2, 697 மாற்றுத்திறனாளி மாணவர் கள் பிளஸ் 2 தேர்வு எழுதினர். இதில் 2,404 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அதிகபட்சமாக பார்வையற்ற மாணவர்கள் 95.83 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். காது கேளாதவர்கள் பிரிவில் 88.89 சதவீதம் பேரும், உடல் ஊனமுற்றோர் பிரிவில் 87.86 சதவீதம் பேரும், இதர பிரிவுகளில் 87.27 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கடைசி இடத்தில் வேலூர்
வேலூர் மாவட்டத்தில் மொத்தம் 40,714 மாணவர்கள் தேர்வு எழுதியதில் 34,800 பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்துள்ளனர். தேர்ச்சி விகிதம் 85.47 சதவீதமாகும். ஒட்டு மொத்த பள்ளிகள் தேர்ச்சியில் மாவட்ட வாரியாக வேலூர் கடைசி இடத்தில் உள்ளது. இதேபோல், அரசுப் பள்ளிகள் தேர்ச்சி விகிதத்திலும் 79.31 சதவீதம் பெற்று வேலூர் கடைசி இடத்துக்கு சென்றுள்ளது.
கலைப்பிரிவில் தேர்ச்சி சரிவு
பாடப்பிரிவு வாரியாக தேர்ச்சியில் கலை மற்றும் தொழிற் பிரிவு மாணவர்கள் மிகவும் பின்தங்கியுள்ளனர். அதன்படி மாணவர்கள் தேர்ச்சி விகிதம் கலைப்பிரிவில் 80.13 சதவீதமும், தொழிற்பிரிவில் 82.70 சதவீதமும்தான் உள்ளது. இது கடந்த ஆண்டை விட குறைவாகும். கடந்த தேர்வில் கலைப்பிரிவில் 87.64%, தொழிற்பிரிவில் 86.86% மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருந்தனர். பிளஸ் 2 தேர்வு முறைகளில் கொண்டுவரப்பட்ட மாற்றங்கள் மற்றும் தேர்வு வினாத்தாள்கள் கடினமாக இருந்ததால் தேர்ச்சி விகிதம் சரிந்துள்ளது. மறுபுறம் அறிவியல் பிரிவில் 92.75 சதவீதமும், வணிகவியல் பிரிவில் 90.78 சதவீதமும் மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
முன்னரே வெளியான முடிவு
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் காலை 9.30 மணிக்கு இணையதளத்தில் வெளியிடப்படும் என்று தேர்வுத் துறை அறிவித்தது. ஆனால், 6 நிமிடங்கள் முன்னதாகவே பத்திரிகை அலுவலகங்களுக்கும், பள்ளிகளுக்கும் பொதுத்தேர்வு முடிவுகள் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அடுத்த சில நிமிடங்களில் மாணவர்களுக் கும் குறுஞ்செய்தி மூலம் முடிவுகள் வந்தன. அதேநேரம் தேர்வுத்துறை இணையதளத்தில் 9.30 மணிக்கு தான் தேர்வு முடிவுகள் விவரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டன.
வெறிச்சோடிய பள்ளிகள்
கடந்த காலத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகளை அறிய மாணவர்களும், பெற்றோர்களும் பள்ளிகள் மற்றும் இணையதள மையங்களை நோக்கி படை எடுப்பது வாடிக்கையாக இருந்தது. இந்த நடைமுறை மாற்றப்பட்டு இப்போது தேர்வு முடிவுகளை இணையதளம் மற்றும் குறுந்தகவல் மூலம் அறிய மாணவர்களுக்கு வசதிகள் செய்யப்பட்டன. இதனால் பல மாணவர்கள் வீட்டில் இருந்தபடி தங்கள் தேர்வு முடிவுகளை தெரிந்துகொண்டனர். இதனால் பள்ளிகள், பிரவுசிங் சென்டர்கள் வெறிச்சோடி காணப்பட்டன. இதே போல், தேர்வு முடிவுகள் வெளி யிடும் நாளில் சென்னை நுங்கம் பாக்கம் டிபிஐ வளாகத்தில் உள்ள தேர்வுத்துறை இயக்கு நரக அலுவலகமும் பத்திரிகை யாளர்கள், பெற்றோர்கள் கூட்டத் தால் பரபரப்பாக காணப்படும். ஆனால், அங்கும் நேற்று பெரும் அமைதியே நிலவியது. புனித வெள்ளி விடுமுறை மற்றும் தேர்தல் பணிகளில் ஈடுபட்டதன் காரணமாக பள்ளிகளுக்கு ஆசிரி யர்கள் வருகையும் குறைவாகவே இருந்தது.
104-ஐ அழையுங்கள்
பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியாகியுள்ளது. குறைந்த மதிப்பெண், தோல்வி என்பதெல் லாம் நிலையல்ல. தோல்வியால் நம்பிக்கை இழந்த மாணவர்கள், ஆலோசனைக்கு 104 இலவச உதவி மையத்தை அழைக்கலாம். தோல்வி மனப்பான்மையில் விரக்தி அல்லது தவறான எண்ணம் தோன்றும் மாணவர்கள் தயங்காமல் எண் 104-ஐ அழைத்தால் உங்களுடன் பேசி உங்களுக்கு நிச்சயம் நம்பிக்கையான வழிகாட்ட ஆலோசகர்கள் தயாராக உள்ள னர். மாணவர்கள் மட்டுமின்றி பெற்றோருக்கும் தங்கள் பிள்ளைகள் தேர்வில் தோல்வி அடைந்ததால் ஏற்படும் மன உளைச்சல், உறவினர்களிடம் எப்படி தலைகாட்டுவது என்பது போன்ற எண்ணங்கள் இருந்தால், அவர்களும் தயக்கமின்றி 104-யை அழைத்தால் தகுந்த ஆலோசனை கிடைக்கும்.
அரசு பள்ளிகள் தேர்ச்சி விவரம்
மாவட்ட வாரியாக அரசுப் பள்ளிகள் தேர்ச்சி வீதத்தில் 92.64 சதவீதம் பெற்று கன்னியாகுமரி முதலிடம் பிடித்துள்ளது. அதற்கு அடுத்தபடியான 2, 3-ம் இடங்களில் ஈரோடு (92.38%), பெரம்பலுார் (91.80%) மாவட்டங்கள் இடம்பெற்றுள்ளன. கடைசி இடத்தில் வேலுார் மாவட்டம் இருப்பது குறிப்பிடத்தக்கது
•
|