Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
``இது லெவல் 2 குற்றம்!” - தோனிக்கு அபராதம் விதித்த ஐபிஎல் நிர்வாகம்!
ஐபிஎல் போட்டிகளில் விறுவிறுப்புக்கும், பரபரப்புக்கும் பஞ்சமே இருக்காது. அதுவும் தோனி தலைமையிலான சென்னை போட்டி என்றால் சின்ன டார்கெட்டோ, பெரிய டார்கெட்டோ நாங்க கடைசி ஓவரில்தான் ஜெயிப்போம் என மீம்ஸ் போடும் அளவுக்குப் பரபரப்பாக இருக்கும். நேற்று ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியும் பரபரப்புக்குப் பஞ்சம் இல்லாத ஆட்டமாகதான் இருந்தது.
நடப்பு ஐபிஎல் தொடரின் 25-வது போட்டியில் சென்னை ராஜஸ்தான் அணிகள் ஜெய்ப்பூர் மைதானத்தில் விளையாடினர். டாஸ் வென்ற தோனி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 151 ரன்கள் எடுத்தது. சென்னை அணி தரப்பில் அபாரமாகப் பந்துவீசிய ஜடேஜா 20 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட் எடுத்தார். வெல்டன் ஜட்டு!
Photo: IPLT20.COM
அதன் பின்னர் 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ். ஆனால், சென்னைக்குத் தொடக்கத்திலேயே அதிர்ச்சி வைத்தியம் அளித்தனர் ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள். முதல் ஓவரில் வாட்சன் வெளியேற, இரண்டாவது ஓவரிலேயே ரெய்னா ஆர்ச்சரின் அற்புதமான த்ரோ மூலம் ரன் அவுட் ஆனார். டூப்பெளஸ்ஸும் கேதர் ஜாதவும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க பவர் ப்ளே முடிவில் சென்னை 24/4 என்ற பரிதாபமான நிலையில் இருந்தது.
Photo: IPLT20.COM
அதன் பின்னர் களமிறங்கிய தோனி, ராயுடுவுடன் ஜோடி சேர்ந்து அணியைச் சரிவில் இருந்து மீட்டார். மேற்கொண்டு விக்கெட் விழாமலும், தேவையான ரன்களை பெரும்பாலான ஓவர்களில் சேர்ப்பதிலும் வெற்றிபெற்றது இந்த ஜோடி. இறுதியாக அரைசதம் அடித்து ராயுடு வெளியேற, ஜடேஜா வந்தார். கடைசி ஓவரில் வெற்றிக்கு 18 ரன்கள் தேவை. முதல் பந்திலே சிக்ஸர் அடித்து அமர்க்களப்படுத்தினார் ஜட்டு. அடுத்த பந்தில் 1 ரன் எடுக்கப்பட்டது. அது நோ பாலாக அமைய ஃப்ரீ ஹிட்டில் தோனி இரண்டு ரன் எடுத்து அடுத்த பந்திலேயே ஆட்டமிழந்தார்.
Photo: IPLT20.COM
அடுத்துக் களமிறங்கிய சான்ட்னர், ஃபுல் டாஸாக வந்த பந்தில் 2 ரன்கள் எடுத்தார். அப்போது முதல் நடுவர் நோ - பால் என கையைத் தூக்கினார். பின்னர் ஸ்கொயர் அம்பையர் நோ பால் இல்லை எனச் சொல்ல நோ பால் இல்லை என அறிவிக்கப்பட்டது. இதனால் மைதானத்தில் குழப்பமான நிலை ஏற்பட்டது. களத்துக்கு வெளியே இருந்த தோனி, முதலில் நீங்கள் ஏன் நோ பால் அறிவித்தீர்கள் என மைதானத்தின் நடுவில் வந்து அம்பையர்களிடம் கோபமாகக் கேட்டார். கூல் தோனியின் ரசிகர்கள், தோனியின் கோபத்தை ஆச்சர்யத்துடனும் மிரட்சியுடனும் பார்த்தனர். இறுதிப் பந்தில் வெற்றிக்கு 3 ரன்கள் தேவை என்ற நிலையில் கடைசிப் பந்தில் சிக்சர் அடிக்க ஐபிஎல் தொடரில் தோனிக்கு கேப்டனாக 100வது வெற்றி கிடைத்தது. ஆட்டநாயகனாகவும் தோனி தேர்வு செய்யப்பட்டார்.
Photo: IPLT20.COM
இந்த நிலையில், நோ பால் சர்ச்சையின்போது மைதானத்துக்குள் தோனி வந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், ஐ.பி.எல் விதிமுறைகளை மீறியதாக தோனிக்கு ஐபிஎல் நிர்வாகம் போட்டி ஊதியத்தில் 50 சதவிகிதத்தை அபராதமாக அறிவித்துள்ளது. இது தொடர்பான ஐபிஎல் நிர்வாகத்தின் அறிவிப்பில், ``சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி ஐபிஎல் விதிமுறைகளை மீறியதால் போட்டி ஊதியத்தில் 50 சதவிகிதம் அபராதமாக விதிக்கப்படுகிறது. தோனி ஐபிஎல் விதிமுறைகள் 2.20 வின்படி லெவல் 2 குற்றம் செய்தவராக அறியப்படுகிறார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Photo: IPLT20.COM
ஐபிஎல் விதிமுறைகளின்படி ஆர்ட்டிகிள் 2.20 என்பது, போட்டியின் ஸ்பிரிட்டுக்கு எதிராகச் செயல்படுவது குற்றம் என்றுள்ளது. அதில் குறைந்தபட்ச தண்டனையான ஊதியத்தில் 50% அபராதம் என்பதுதான் தோனிக்கு விதிக்கப்பட்டுள்ளது. தோனி லெவெல் 2 விதிமீறலை முதல்முறை செய்ததால் அவருக்குக் குறைந்தபட்ச அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
Photo: IPLT20.COM
இந்த நிலையில், தோனிக்கு அபராதம் விதிக்கப்பட்டது, தோனி ரசிகர்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. தோனி செய்தது தவறு என்றால் அம்பையர் செய்தது தவறில்லையா எனப் பலரும் சமூகவலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
கள நடுவர்களின் முடிவுகள் இந்தத் தொடரில் தொடர்ச்சியாகச் சர்ச்சையாகி வருகிறது. பெங்களுரூ - மும்பை அணிகள் மோதிய ஆட்டத்தில் கடைசிப் பந்தில் நோ பால் வீசப்பட்டும் அதை நடுவர்கள் கவனிக்காமல் விட்டது சர்ச்சையானது. கடைசிப் பந்தில் பெங்களூர் வெற்றிபெற 6 ரன்கள் தேவைப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
பெண்மிரட்டி பலாத்காரம்: செக்ஸ் வீடியோவில் சிக்கிய 2 அமமுக வேட்பாளர்கள்!
தன்னை மிரட்டியும் கட்டாயப்படுத்தியும் அமமுக வேட்பாளர்கள் என்னுடன் பாலியல் உறவு கொண்டனர்.
இதை வீடியோவாகவும் எடுத்து வைத்து மிரட்டி பலமுறை பாலியல் உறவு கொண்டனர் என பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளார்.
மேலும் இந்த வழக்கில் பெரியகுளம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கதிர்காமமு முது ஏப்ரல் 8ம் தேதி புகார் அளிக்கப்பட்ட நிலையில், தற்போது, இந்த வழக்கில் தற்போது அமமுக கொள்ளை பரப்பு செயலாளர் தேனி மக்களை வேட்பாளர் தங்கதமிழ்செல்வனும் மீது வழக்குபதிவுவாகும் நிலையில் இருக்கின்றது.பாலியல் வீடியோ விவகாரம் தற்போது, தமிழக அரசியல் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
சமூக வலைதளங்களில் வைரல்:
பெரியகுளம் சட்டமன்ற தொகுதி அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் கதிர்காமு ஒரு பெண்ணுடன் இருக்கும் காட்சிகள் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. தற்போது இந்த விவகாரம் பெரும் திருப்பு முனையை ஏற்படுத்தியுள்ளது.
3 பிரிவுகளில் வழக்கு பதிவு:
பெரியகுளம் சட்டமன்ற தொகுதி அமமுக வேட்பாளர் கதிர்காமு மீது ஏப்ரல் 8ஆம் தேதி அதே தொகுதியைச் சேர்ந்த சருத்துப்பட்டியை சேர்ந்த 36 வயது பெண் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார். அதனடிப்படையில் தேனி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் கதிர்காமு மீது கொலை மிரட்டல், கற்பழிப்பு உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
தங்கதமிழ்செல்வன் மீது புகார்:
கதிர்காமு மீது அளிக்கப்பட்டுள்ள புகாரில், அமமுக கொள்கை பரப்பு செயலாளரும், தேனி மக்களவைத் தொகுதி வேட்பாளருமான தங்கதமிழ்செல்வனும் பாதிக்கப்பட்ட பெண்ணை மிரட்டியதாக எஃப்.ஐ.ஆரில் அந்த பெண் கூறியுள்ளார்.
மயக்க ஊசி செலுத்தி உறவு:
கதிர்காமு மீது அளிக்கப்பட்ட புகாரின் முதல் தகவல் அறிக்கையில், 'கடந்த 2015ஆம் ஆண்டு தனது தந்தையின் சிகிச்சைக்காக தேனி அல்லிநகரத்தில் இருக்கும் கதிர்காமுவின் மருத்துவமனைக்கு சென்றேன். அப்போது கதிர்காமு தனக்கு மயக்க ஊசி செலுத்தி உடலுறவு கொண்டார்.
வீடியோவாக எடுத்து மிரட்டி பலமுறை உறவு:
அதை வீடியோவாக எடுத்து வைத்து மிரட்டினார். பலமுறை உடலுறவு கொண்டார். அதன் பின்னர் சம்பந்தபட்ட புகைப்படம், வீடியோவை தரும்படி கேட்டதற்கு தேனியில் உள்ள எம்.எல்.ஏ அலுவலகத்திற்கு வந்தால் தருவதாக கதிர்காமு கூறினார். அங்கு சென்று கேட்டபோது அதிமுகவை சேர்ந்த 3 பேர் இருந்தனர். அப்போது தங்க தமிழ்செல்வன் என்னை மிரட்டி கதிர் காமுவின் விருப்பத்திற்கு ஏற்ப நடந்து கொள்ளுமாறு மிரட்டினார்'' என அந்தப்பெண் புகார் கூறியுள்ளார்.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
தெலுங்கு தேசம், ஒய்எஸ்ஆர் கட்சியினர் இடையே மோதலில் இருவர் உயிரிழப்பு: பல இடங்களில் வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு
வாக்குப்பதிவு எந்திரத்தை சேதப்படுத்திய ஜனசேனா வேட்பாளரை போலீஸார் அழைத்துச் சென்ற காட்சி
ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி, ஒய்எஸ்ஆர் கட்சித் தொண்டர்கள் இடையே நடந்த மோதலில் இருவர் உயிரிழந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.
பல்வேறு இடங்களில் வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டதால் தேர்தல் அதிகாரிகள் தலையிட்டு அதை வேகமாக சீர் செய்தனர்.
இதில் குண்டக்கல் முன்னாள் எம்எல்ஏவும், ஜனசேனா கட்சியைச் சேர்ந்தவருமான மதுசூதன் குப்தா வாக்கு எந்திரத்தில் சின்னம் சரியாக வைக்கவில்லை என்பதால் எந்திரத்தை உடைத்து சேதப்படுத்தினார். அவரை போலீஸார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.
ஆந்திராவில் உள்ள 25 மக்களவைத் தொகுதிகளுக்கும் 175 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடந்து வருகிறது
முதல்வர் சந்திரபாபு நாயுடு வாக்களித்துவிட்டு வந்த காட்சி
இதில் குண்டக்கல் முன்னாள் எம்எல்ஏவும், ஜனசேனா கட்சியைச் சேர்ந்தவருமான மதுசூதன் குப்தா வாக்கு எந்திரத்தில் சின்னம் சரியாக வைக்கவில்லை என்பதால் எந்திரத்தை உடைத்து சேதப்படுத்தினார். அவரை போலீஸார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.
ஆந்திராவில் உள்ள 25 மக்களவைத் தொகுதிகளுக்கும் 175 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடந்து வருகிறது.
ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலம் பிரிக்கப்பட்ட பின் நடக்கும் முதல் சட்டப்பேரவைத் தேர்தல் இதுவாகும். இந்த முறை 3.93 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதில் 10.15 லட்சம் வாக்காளர்கள் முதல் முறையாக வாக்களிக்க இருக்கின்றனர். 175 தொகுதிகளில், 2,118 வேட்பாளர்களும், 25 மக்களவைத் தொகுதியில் 319 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.
காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியதில் இருந்து மக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.
இத்தேர்தலில் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி, ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது.
கடப்பா மாவட்டம், ஜம்மலமடுகு பகுதியில் உள்ள பொன்னதோட்டா கிராமத்தில் தெலுங்கு தேசம் கட்சியினருக்கும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையே திடீரென மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினரும் கற்களை வீசி தாக்கிக் கொண்டதால் அங்கு பதற்றம் நிலவியது. இதையடுத்து போலீஸார் அங்கு வந்து தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர்.
இதேபோல எழுரூ நகரம், குண்டூர் மாவட்டத்தில் உள்ள நாசரபேட் பகுதியில் உள்ள ஏலமந்தா கிராமத்திலும் தெலுங்கு தேசம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தொண்டர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் வாக்கு மையத்தில் இருந்த நாற்காலிகள், மேஜைகளை இருதரப்பினரும் அடித்து உதைத்து சேதப்படுத்தினார்கள்.
தடிபத்ரி சட்டப்பேரவைக்கு உட்பட்ட வீராபுரம் கிராமத்தில் தெலுங்கு தேசம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த புல்லா ரெட்டி, தெலுங்கு தேசம் கட்சியின் சித்தா பாஸ்கர் ரெட்டி ஆகியோர் உயிரிழந்ததாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தெலுங்கு தேசம் கட்சித் தொண்டர் ஒருவர் மோதலில் உயிரிழந்ததற்கு முதல்வர் சந்திரபாபு நாயுடு கண்டனம் தெரிவித்துள்ளார்.
விஜயவாடாவில் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்த காட்சி
மேலும், குண்டூர், பிரகாசம், அனந்தபுரம் மாவட்டங்களிலும் ஆங்காங்கே ஒய்எஸ்ஆர், தெலுங்கு தேசம் கட்சியினருக்கு இடையே மோதல் ஏற்பட்டு, அதை போலீஸார் கட்டுப்படுத்தினார்கள். இதனால், வாக்குப்பதிவு சிறிதுநேரம் தடைபட்டாலும், தொடர்ந்து அமைதியாக நடந்து வருகிறது.
மாநில தேர்தல் தலைமை அதிகாரி கோபால், கிருஷ்ணா திவேதி கூறுகையில், "மாநிலம் முழுவதும் வாக்குப்பதிவு அமைதியாக நடந்து வருகிறது. ஒரு சில இடங்களில் திடீரென கட்சியினரிடையே மோதல் ஏற்பட்டாலும், போலீஸார் தலையிட்டு அதை சரிசெய்தனர். பல வாக்குப்பதிவு மையங்களில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டது. அவை உடனுக்குடன் சரி செய்யப்பட்டது" எனத் தெரிவித்தார்.
தலைநகர் அமராவதியில் உள்ள வாக்குப்பதிவு மையத்தில் முதல்வர் சந்திரபாபு நாயுடு அவரின் குடும்பத்தினர் வாக்களித்தனர். கடப்பா மாவட்டம், புலிவெந்தலு தொகுதியில் போட்டியிடும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன்ரெட்டிதனது சொந்த கிராமமான புலிவெந்தலுவில் உள்ள வாக்குப்பதிவு மையத்தில் வாக்களித்தார். விஜயவாடாவில் ஜனசேனா கட்சியின் தலைவர் பவன் கல்யாண் வாக்களித்தார்.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
கருந்துளையை படம் பிடித்தது அசாதாரண சாதனை’ - இந்திய விஞ்ஞானிகள் பாராட்டு
நாம் வாழும் பால்வழி மண்டலத்தை போல ஏராளமான நட்சத்திர மண்டலங்கள் அண்டவெளியில் அடங்கி இருக்கின்றன. அவற்றின் மிகவும் சக்தி வாய்ந்த ஈர்ப்பு விசை கொண்ட பகுதியை கருப்பு நட்சத்திரம் என்றும், கருந்துளை என்றும் விஞ்ஞானிகள் அழைத்து வந்தனர்.
தனது ஈர்ப்பு எல்லைக்குள் வரும் ஒளியை கூட வெளியேறவிடாமல் தன்னகத்தே வைத்துக்கொள்ளும் இத்தகைய கருந்துளைகளின் இருப்பு பற்றிய தகவல்களை பல ஆண்டுகளுக்கு முன்னே விஞ்ஞானிகள் கணித்து வந்தாலும், அதை படம் பிடிக்க முடியவில்லை. வெறும் கணினி வரைபடமாக மட்டுமே காண முடிந்தது.
எனினும் அதை நேரடியாக படம்பிடிக்க நீண்ட காலமாக முயன்று வந்த விஞ்ஞானிகளின் முயற்சிக்கு தற்போது பலன் கிடைத்துள்ளது.
ஸ்பெயின், மெக்சிகோ, சிலி, ஹவாய், அரிசோனா போன்ற பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள ராட்சத ரேடியோ தொலைநோக்கிகளின் உதவியால் இந்த கருந்துளை தற்போது படம்பிடிக்கப்பட்டு உள்ளது. ஈவன்ட் ஹாரிசன் டெலஸ்கோப் எனப்படும் இந்த சர்வதேச தொலைநோக்கி திட்டம் மூலம் இது சாத்தியமாகி இருக்கிறது.
பூமியில் இருந்து சுமார் 5.5 கோடி ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள மேசியர் என்ற நட்சத்திர மண்டலத்தில் உள்ள கருந்துளையைத்தான் விஞ்ஞானிகள் படம்பிடித்து உள்ளனர். எம்87 என பெயரிடப்பட்டு உள்ள இந்த கருந்துளை சூரியனை விட 6500 கோடி மடங்கு எடை உடையது ஆகும்.
ஒளி வெள்ள பின்புலத்தில் கருப்பு கோள வடிவமாக காணப்படும் இந்த கருந்துளையின் புகைப்படத்தை நேற்று முன்தினம் வெளியிட்ட விஞ்ஞானிகள், பார்க்க முடியாது என நினைத்த ஒன்றை பார்த்துவிட்டதாக தெரிவித்தனர்.
இந்த சாதனைக்கு உலகம் முழுவதிலும் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இந்திய விஞ்ஞானிகளும், ‘இது ஒரு அசாதாரண சாதனை’ என பாராட்டி இருக்கின்றனர்.
இது குறித்து மும்பை டாடா ஆய்வு நிறுவன இணை பேராசிரியர் சுதிப் பட்டாச்சார்யா கூறுகையில், ‘கருந்துளை பற்றிய முதல் நேரடி ஆதாரம் இது. இது ஒரு மைல்கல் சாதனை. இதன்மூலம் கருந்துளை இருப்பது தொடர்பான சந்தேகங்கள் அனைத்தும் தெளிவுபெற்று விட்டன. கருந்துளை இருப்பதற்கான 99 சதவீத ஆதாரங்கள் ஏற்கனவே இருந்த நிலையில், தற்போது அது 100 சதவீதமாக மாறி இருக்கிறது’ என்று தெரிவித்தார்.
ஒளியின் பின்புலத்தில் இருக்கும் கருப்பான அந்த பொருள் நம்ப முடியாத ஒன்று என்று கூறிய அவர், இதுதான் கருந்துளைகளின் நேரடி ஆதாரம் என்றும் குறிப்பிட்டார்.
இதைப்போல இங்கிலாந்தை மையமாக கொண்டு இயங்கும் சவுதாம்ப்டன் பல்கலைக்கழக வானியல் குழும இணை பேராசிரியர் கோஷாக் காந்தி கூறும்போது, ‘கண்ணால் பார்ப்பதே மெய்யானது. அந்த வகையில் தற்போது எடுக்கப்பட்ட புகைப்படம் கருந்துளைகள் பற்றிய முக்கியமான நேரடி ஆதாரம்’ என்று தெரிவித்தார்.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
வழக்கு நடத்துவதாக சொல்லி 2 கோடி ரூபாயை ஆட்டையை போட்ட பா.ம.க.,வினர்!! வெடித்த அடுத்த சர்ச்சை...
By Sathish K
First Published 11, Apr 2019, 7:27 PM IST
HIGHLIGHTS
8 வழிச்சாலை திட்டத்தை எதிர்த்து, வழக்கு நடத்த, விவசாயிகளிடம், 2 கோடி ரூபாயை, பா.ம.க.,வினர் வசூலித்தனர் என, திமுக முன்னாள், எம்.எல்.ஏ ராஜா குற்றம்சாட்டியுள்ளார்.
8 வழிச்சாலை திட்டத்தை எதிர்த்து, வழக்கு நடத்த, விவசாயிகளிடம், 2 கோடி ரூபாயை, பா.ம.க.,வினர் வசூலித்தனர் என, திமுக முன்னாள், எம்.எல்.ஏ ராஜா குற்றம்சாட்டியுள்ளார்.
சேலம் மாவட்டம், வீரபாண்டி தொகுதி முன்னாள் திமுக MLA, ராஜா, கூறியதாவது; சேலம் - சென்னை எட்டு வழிச்சாலை திட்டத்தை ரத்து செய்யக்கோரி, முதன்முதலில், திமுகவைச் சேர்ந்த ரவிந்தீரன் தான், வக்கீல் கனகராஜ் மூலம், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
இதில், நான்காவது நபராக நுழைந்தவர், பாமகவைச் சேர்ந்த அன்புமணி. இது தொடர்பான அனைத்து வழக்குகளையும் இணைத்து, 8 வழிச்சாலை திட்ட அறிவிப்பாணை ரத்து என, நீதிமன்றம் தீர்ப்பளித்தது. சேலம் உள்ளிட்ட, 5 மாவட்ட விவசாயிகளிடம், அத்திட்ட வழக்கு செலவுக்கு, பா.ம.கவினர், தலா, 2,000 ரூபாய் வீதம், 2 கோடி ரூபாய் வசூலித்தனர். முதலில் வழக்கு தொடுத்த, திமுக ஒரு காசு கூட, விவசாயிகளிடமிருந்து பெறாமல் வழக்கை நடத்தியது.
திமுக ஆட்சியில், என் தந்தை ஆறுமுகம், பல்வேறு போராட்டங்களை நடத்தியதால் வந்த, சேலம் ரயில்வே கோட்டம், சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை உள்ளிட்ட மக்கள் நலத்திட்டங்களை, அன்புமணி ராமதாஸ், தான் கொண்டு வந்ததாக தம்பட்டம் அடித்துக்கொண்டார்.
இது போன்ற பேச்சுகளை அன்புமணி ராமதாஸ் நிறுத்திக்கொள்ள வேண்டும், இனி இது தொடர்ந்தால், அவரது சுயரூபத்தை வெளிப்படுத்த வேண்டியிருக்கும் என எச்சரிக்கிறேன் என இவ்வாறு கூறியுள்ளார்.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
முஸ்லிம் பெண்கள் கள்ள ஓட்டு போட்டார்களா? – பாஜக-வினரின் பொய் அம்பலம்
ஏப்ரல் 11ம் தேதி வியாழக்கிழமை முதல் கட்ட மக்களவைத் தொகுதி தேர்தல்கள் நடைபெற்ற பின்னர் இந்த காணொளி வலம் வருகிறது.
இந்தியாவில் நடைபெறும் 17வது மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறுகின்றன. மே மாதம் இதன் முடிவுகள் அறிவிக்கப்படும்.
புர்கா அணிந்த சில பெண்கள் கள்ள ஓட்டுகளை போடுவதாக முஸாஃபர்நகர் பாஜக வேட்பாளர் சன்ஜீவ் பல்யான் தெரிவித்தார்.
அவர் குற்றம்சாட்டுவது ஆயிரக்கணக்கான முறை ஃபேஸ்புக்கிலும், ட்விட்டரிலும் பகிரப்பட்டு பார்க்கப்பட்டுள்ளது.
பிஜேபி மிஷன் 2019” மற்றும் “வி சப்போர்ட் நரேந்திர மோதி” போன்ற வலது சாரி ஃபேஸ்புக் குழுக்களும் இந்த காணொளியை பகிர்ந்துள்ளன.
தற்போது நடைபெற்று வருகின்ற மக்களவைத் தேர்தலுக்கும், இந்த காணொளிக்கும் எந்தவொரு தொடர்பும் கிடையாது என்பதை BBC செய்தி நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது..
[/url]
Quote:
Chowkidar Sandeep singh[img=19.6x20]https://abs.twimg.com/emoji/v2/72x72/1f60e.png[/img][img=20.6x20]https://abs.twimg.com/emoji/v2/72x72/2764.png[/img]@singhsandeep792
'. women got caught in fraud voting, wearing burqa in #Muzaffarnagar in uttar pradesh.
Do you beat @narendramodi like this?
Where is Election Commission?
[img=19.6x20]https://abs.twimg.com/emoji/v2/72x72/1f620.png[/img][img=20.6x20]https://abs.twimg.com/emoji/v2/72x72/1f620.png[/img]@TajinderBagga @Payal_Rohatgi @dscair1 @RitumoudgilRitu @Voice_For_India @followaanchal @TarekFatah @ShefVaidya
4,136
3:54 PM - Apr 11, 2019
[color][font]
4,380 people are talking about this
[url=https://twitter.com/singhsandeep792/status/1116285781943947264]
Twitter Ads info and privacy
[/font][/color]
உண்மை என்ன?
இந்த காணொளியிலுள்ள எழுத்துகள், “கள்ள ஓட்டு போட்ட புர்கா அணிந்த பெண்களை பாஜக முஸ்லிம் ஊழியர் பிடித்தார்,” என்று குறிப்பிடுகிறது.
இந்த காணொளியை கவனமாக செவிமடுத்தால், அந்த பெண் கூறுவதும் கேட்கிறது. அந்த பெண், “நான் பிஎஸ்பி வேட்பாளர் ஷாய்லா. பெண்கள் பிரச்சனையில் சிக்கிக்கொள்வதை நான் விரும்பவில்லை. உண்மையை சொல். இந்த ஆதார் அட்டைகளை உன்னிடம் கொடுத்தது யார்?” என்கிறார்.
ஊடக தகவல்களின்படி, 2017ம் ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சி ஃபேஷன் வடிவமைப்பாளர் ஷாய்லா கானை ராம்பூர் நகர் மன்றத் தலைவர் பதவிக்கு நிறுத்தியது. உத்திர பிரதேச சட்டமன்ற தேர்தல் 2017ம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்றது.
இப்போது வைரலாகும் காணொளி யூடியூபில் 2017ம் ஆண்டு நவம்பர் மாதம் 27ம் தேதி பதிவேற்றப்பட்டது. இது உத்தரப்பிரதேசத்தில் இரண்டாம் கட்ட தேர்தல்களுக்கு ஒரு நாளுக்கு பின்னராகும்.
இத்தகைய சம்பவம் ஒன்று நிகழ்ந்ததாக எந்தவொரு செய்தி தகவலையும் காண முடியவில்லை. ஆனால், இந்த காணொளி 2019ம் ஆண்டை சேர்ந்தது அல்ல. இந்த மக்களவைத் தேர்தலில் இது நடைபெற்றதாக தவறுதலாக குறிப்பிடப்பட்டுள்ளது.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
இப்படி நாக்கூசாமல் அண்டப்புளுகு புளுக வெட்கமா இல்லையா? அன்புமணியை கழுவி கழுவி ஊத்தும் பாதிக்கப்பட்ட விவசாயி!!
By Sathish K
First Published 12, Apr 2019, 3:05 PM IST
HIGHLIGHTS
பாமக, சில ஊடகங்களும் ஏதோ அன்புமணி மட்டுமே எட்டு வழிச்சாலைக்கு எதிராக வழக்குப் போட்டு இத்தீர்ப்பை பெற்றுத் தந்ததாக நாகூசாமல் பொய்யுரைக்கிறார்கள் என பாதிக்கப்பட்ட விவசாயி எட்டு வழிச்சாலை எதிர்ப்பு இயக்க தருமபுரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அன்புமணியை கிழித்து தொங்கவிட்டுள்ளார்.
பாமக, சில ஊடகங்களும் ஏதோ அன்புமணி மட்டுமே எட்டு வழிச்சாலைக்கு எதிராக வழக்குப் போட்டு இத்தீர்ப்பை பெற்றுத் தந்ததாக நாகூசாமல் பொய்யுரைக்கிறார்கள் என பாதிக்கப்பட்ட விவசாயி எட்டு வழிச்சாலை எதிர்ப்பு இயக்க தருமபுரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அன்புமணியை கிழித்து தொங்கவிட்டுள்ளார்.
பி.வி. கிருஷ்ணமூர்த்தி, பாதிக்கப்பட்ட விவசாயி எட்டு வழிச்சாலை எதிர்ப்பு இயக்க தருமபுரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர், அ.பள்ளிப்பட்டி, பாப்பிரெட்டிபட்டி தாலுகா, தருமபுரி மாவட்டம், செல்: 8608696252 இந்த விலாசம் குறிப்பிட்டு எட்டு வழிச்சாலைக்கு எதிராக முதலில் வழக்கு போட்டு எட்டு வழிச்சாலையை தடுத்து நிறுத்தியது பாதிக்கப்பட்ட விவசாயி கிருஷ்ணமூர்த்தியாகிய நான் தான் ! என ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
பாடுபட்டு விளைய வைத்தது நான்! அறுவடை செய்வது நீங்களா? , எட்டு வழிச்சாலைக்கு எதிரான வழக்கை பாமகவின் திரு. அன்புமணி முதலில் போட்டதாக பொய்யுரைப்பதா? நேர்மையிருந்தால் என்னோடு அன்புமணி விவாதத்திற்கு தயாரா? இப்படியான பல அடுக்கடுக்கான கேள்விகளை முன்னிறுத்திய அந்த அறிக்கையில்; எட்டு வழிச்சாலைக்கு எதிரான வழக்கை முதலில் போட்டு அவ்வழக்கின்மூலம் (வழக்கு எண். W.P. No. 16630/2018) எட்டு வழிச்சாலைக்கு எதிரான தடையாணையையும் பெற்றது எட்டு வழிச்சாலை எதிர்ப்பு இயக்கத்தின் தருமபுரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பி.வி. கிருஷ்ணமூர்த்தியாகிய நான். எனவேதான் எட்டு வழிச்சாலைக்கு எதிரான தடை உத்தரவு தீர்ப்பின் முதல் பக்கத்திலேயே என் பெயர் இடம் பெற்றுள்ளது.
ஆனால் பாமக, சில ஊடகங்களும் ஏதோ அன்புமணி மட்டுமே எட்டு வழிச்சாலைக்கு எதிராக வழக்குப் போட்டு இத்தீர்ப்பை பெற்றுத் தந்ததாக நாகூசாமல் பொய்யுரைக்கிறார்கள். பல இடங்களில் பாமகவின் வழக்கே முதல் வழக்கு என்றும் நாக்கூசாமல் பொய்யுரைக்கிறார்கள். அன்பு நண்பர் பியூஸ் மனுஷ் கூறியிருப்பது போல் 115 பக்க தீர்ப்பில் அன்புமணி பெயரோ, அவரின் வழக்கறிஞர் பெயரோ ஒரு இடத்தில்கூட குறிப்பிடப் படவில்லை.
ஆனால் யாரோ பெத்த பிள்ளைக்கு யாரோ இனிசியல் போடுவது போல், நான் போராடி பெற்ற தீர்ப்புக்கு, பாமகவும், அன்புமணியும் உரிமை கொண்டாடப் பார்க்கிறார்கள். சில ஊடகங்களும் இத்தவறைச் செய்து கொண்டிருக்கிறார்கள். இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.
பாமகவும், அன்புமணியும் போட்ட வழக்கினால்தான் இத்தீர்ப்பு வந்ததது என்று இனிமேலும் பொய் சொல்ல வேண்டாம் என்று பணிவோடு கேட்டுக் கொள்கிறேன். அப்படி யாரேனும் நினைத்தால், துணிச்சல் இருந்தால் அன்புமணி அவர்கள் என்னோடு நேரடி விவாதத்திற்கு வருமாறு அழைப்பு விடுக்கிறேன். அங்கு நான்தான் எட்டு வழிச்சாலைக்கு எதிரான வழக்கை முதலில் போட்டேன் என்பதை நிரூபித்துக் காட்ட தயாராக இருக்கிறேன்.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
ஊட்டியில் மழை : விவசாயிகள் மகிழ்ச்சி
2019-04-10@ 11:48:44
ஊட்டி: ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு சில மணி நேரம் மழை பெய்ததால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் கடந்த இரு மாதங்களாக பனி குறைந்த வெயில் வாட்டி வந்தது. பகல் நேரங்களில் மட்டுமின்றி, இரவிலும் கூட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வெப்பம் காணப்பட்டது. இதனால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர். மேலும், வனப்பகுதிகள் காய்ந்து போன நிலையில், அங்காங்கே காட்டு தீ ஏற்பட்டு வந்தது. மேலும், நீர் நிலைகளில் தண்ணீர் இன்றி வன விலங்குகள் உணவு மற்றும் தண்ணீரை தேடி அலைந்துக் கொண்டிருகின்றன. போதிய தண்ணீர் வசதி இன்றி மேடுபாங்கான பகுதிகளில் விவசாயமும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த இரு நாட்களாக பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் சற்று குறைந்து காணப்பட்டது. நேற்று முன்தினம் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.
ஊட்டியில் மாலை நேரங்களில் குளிர் காற்று வீசி வந்தது. கடும் வெயிலின் காரணமாக புழுக்கத்தை அனுபவித்து வந்த சுற்றுலா பயணிகளுக்கு இந்த காலநிலை மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு மழை கொட்டியது. வெகு நேரம் பெய்யவில்லை என்றாலும், சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் மிதமான மழை பெய்தது. இதனால், புழுக்கம் சற்று குறைந்துள்ளது. அதே சமயம் சாலைகளில் இருந்த புழுதிகளும் குறைந்தது. தொடர்ந்து ஓரிரு நாட்கள் மழை பெய்தால், மாவட்டம் முழுவதும் உள்ள குடிநீர் ஆதாரங்களில் தண்ணீர் அளவு உயரவும், அதே சமயம் காட்டு தீயும் சற்று கட்டுக்குள் வர வாய்ப்புள்ளது. விலங்குகள் தண்ணீருக்காக இடம் பெயருவது சற்று குறையும். நேற்று முன்தினம் பெய்த மழையால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
உலக பாரம்பரிய மலை ரயில் ஊட்டி வரை நீட்டிப்பு
Web Team
Published : 06 Apr, 2019 01:54 pm
மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரையிலான சிறப்பு மலை ரயில் சேவை இன்று முதல் ஊட்டி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை வரை தினசரி காலை 7.10 மணிக்கு நூற்றாண்டு பழமைவாய்ந்த மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கோடை காலத்தில் வருகை தரும் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக கூடுதல் சிறப்பு மலை ரயில் போக்குவரத்து கடந்த 8.12.18 அன்று துவக்கப்பட்டது.
இந்தச் சிறப்பு மலைரயில் வாரம் தோறும் சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் மேட்டுப்பாளையத்தில் இருந்து காலை 9.10 மணிக்கு புறப்பட்டு 12.30 மணிக்கு குன்னூரை சென்றடையும். இந்தச் சிறப்பு மலைரயில் குன்னூர் வரை மட்டுமே இயக்கப்பட்டு வந்ததால் உதகை செல்ல விரும்பும் சுற்றுலா பயணிகள் குன்னூரில் மாற்று வாகனம் மூலம் ஊட்டி செல்ல வேண்டியிருந்தது.
இதனால் வழக்கமாக இயக்கப்படும் மலை ரயிலை போன்றே கோடை கால சிறப்பு மலை ரயிலையும் மேட்டுப்பாளையம் முதல் ஊட்டி வரை இயக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதனை ஏற்றுக்கொண்ட ரயில்வே நிர்வாகம் இன்று முதல் சிறப்பு மலை ரயிலின் சேவையினை உதகை வரை நீட்டித்துள்ளது. இதனால் இன்று மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்பட்ட சிறப்பு மலை ரயில் ஊட்டி வரை இயக்கப்படவுள்ளது.
இந்த கோடைகால மலை ரயில் சேவைக்காக சென்னை பெரம்பலூர் ரயில்வே பணிமனையில் தயாரிக்கப்பட்ட ஐந்து புதிய நவீன ரக ரயில் பெட்டிகள் மேட்டுப்பாளையம் கொண்டு வரப்பட்டு மலை ரயிலுடன் இணைக்கப்பட்டுள்ளன. 132 இருக்கைகள் கொண்ட இந்தச் சிறப்பு மலைரயிலில் முதல் வகுப்புக்கு 16 இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
உலக பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ள ஊட்டி மலை ரயிலில் பயணித்து நீலகிரி மலையின் இயற்கை எழிலை கண்டு ரசிக்க உள்நாடு மட்டுமின்றி உலக நாடுகள் பலவற்றிலும் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் வருகின்றனர்.
இந்நிலையில் இந்தக் கூடுதல் ரயில் சேவை ஊட்டி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது, சுற்றுலா பயணிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் புதிய வசதிகளுடன் நீலகிரியின் இயற்கை எழிலை முழுமையாக கண்டு ரசிக்கும்படியான ரயில் பெட்டிகளில் பயணிப்பது சுற்றுலா பயணிகளிடையே உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
வறண்ட சென்னை ஏரிகளும் தப்பித்து நிரம்பிய வீராணம் ஏரியும்... முழு நிலவரம்!
சென்னை ஏரிகள் முழுவதும் வற்றிவிட்டதால், குடிநீரைக் கொண்டுவரும் நோக்கில் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.
சென்னையின் குடிநீர்த் தேவையை பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஆகிய நான்கு ஏரிகள் பூர்த்தி செய்து வருகின்றன. வீராணம் ஏரியில் தண்ணீர் இருக்கும்போது அவ்வப்போது சென்னையின் குடிநீர்த் தேவைக்காகவும் பயன்படுத்திக் கொள்ளப்படும். இப்போது சென்னையைச் சுற்றியுள்ள ஏரிகளில் தண்ணீர் குறைவாகவே உள்ளது. இதனால் சென்னையின் குடிநீர்த் தேவையை சமாளிக்க தங்களால் முடிந்த ஏற்பாடுகளைச் சென்னை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது. தனியார் லாரிகளும் முடிந்தவரைச் சென்னை மக்களுக்குத் தண்ணீரை கொடுத்து வருகின்றன. இந்நிலையில் சென்னையைச் சுற்றியுள்ள நான்கு ஏரிகளிலும் நீர் அதிவேகமாகக் குறைந்து வருகிறது.
[color][font]
இதில் 12-4-2019 நிலவரப்படி, மொத்தம் 3231 மில்லியன் கன அடி கொள்ளளவுடைய பூண்டி ஏரியில் 283 மில்லியன் கன அடி நீர் மட்டுமே உள்ளது. 881 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியானது 31 மில்லியன் கன அடி நீர் மட்டுமே உள்ளது. ரெட்ஹில்ஸ் ஏரியில் மொத்தக் கொள்ளளவான 3,300 மில்லியன் கன அடியில் 236 கன அடி நீர் மட்டுமே இருப்பு உள்ளது. 2015-ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தில் அதிக தண்ணீரைக் கொண்டிருந்த செம்பரம்பாக்கம் ஏரியில் வெறும் 61.79 மில்லியன் கன அடி நீர் மட்டுமே உள்ளது. இந்த நான்கு ஏரிகளின் மொத்த கொள்ளளவு 11,257 மில்லியன் கன அடி ஆகும். ஆனால் தற்போது நான்கு ஏரிகளிலும் இருக்கும் தண்ணீரை சேர்த்து 556 மில்லியன் கன அடி நீர் மட்டுமே உள்ளது. இது மொத்தக் கொள்ளளவில் 10- ல் 0.5 சதவிகிதம் தண்ணீர் மட்டுமே இருப்பு உள்ளது. ஆனால், கடந்த ஆண்டு இதே தேதியில் 4,206 மில்லியன் கன அடி நீர் இருந்தது குறிப்பிடத்தக்கது.
பொதுவாக சென்னைக்குத் தேவையான குடிநீரைப் பூண்டி, புழல், சோழவரம் மற்றும் செம்பரம்பாக்கம் ஆகிய நான்கு ஏரிகள் வழங்குகின்றன. 2015-ம் ஆண்டு பெரும் வெள்ளத்தை ஏற்படுத்திய செம்பரம்பாக்கம் முழுக் கொள்ளளவை எட்டி கடல்போல காட்சியளித்தது. தற்போது இதே நாளில் 61.79 மில்லியன் கன அடி நீர் கொண்டு வறண்டு காட்சியளிக்கிறது. இந்த நிலையில் தற்போதைய குடிநீர்த் தேவைகளுக்கும் மீதம் இருக்கும் இந்த நீரையே சென்னை மெட்ரோ குடிநீர் வாரியம் எடுத்து வழங்குகிறது. இதே நிலைதான் மற்ற ஏரிகளுக்கும். பூண்டி ஏரியைப் பொறுத்தவரையில் மழைநீர் இல்லாததால் கிருஷ்ணா நதிநீரை நம்பியே உள்ளது.
[/font][/color]
[color][font]
கடந்த ஆண்டு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தென் மேற்குப் பருவமழையும், வடகிழக்குப் பருவ மழையும் தமிழகத்தை ஏமாற்றிவிட்டன. இதனால் சென்னையின் குடிநீர்த் தேவைக்கு ஏற்ப தற்போது ஏரிகளில் நீர்மட்டம் போதுமான அளவில் பாதிகூட இல்லை என்பதே நிதர்சனமான உண்மை. இதனால் சென்னை மக்கள் வரும் கோடைக்காலத்தில் தண்ணீருக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டு காலிக்குடங்களுடன் அலையும் நிலை உருவாகி உள்ளது. இப்போதே தண்ணீர்த் தட்டுப்பாட்டுக்கான அறிகுறிகள் தென்பட ஆரம்பித்துவிட்டன.
சென்னை மாநகரின் குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்யும் முக்கியமான ஏரிகளில் வீராணம் ஏரியும் ஒன்று. கடலூர் மாவட்டம், காட்டுமன்னார் கோயில் பகுதியில் 4 கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் கல்லணை, கீழணை வழியாக வீராணம் ஏரிக்கு வரும். தற்போது போதிய மழை இல்லாததால் மற்ற ஏரிகளைப் போலவே வீராணம் ஏரியும் வறண்டு போகும் நிலையில் இருந்தது. இந்நிலையில், மேட்டூர் அணையில் இருந்து கடந்த மார்ச் 30-ந் தேதி 8 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. அந்தத் தண்ணீரானது, மேட்டூர் அணையில் இருந்து கல்லணை வழியாக கீழணைக்கு வந்தது. அதன் பின்னர் கடந்த 7-ந் தேதி அதிகாலை முதல் வீராணம் ஏரிக்கு 2 ஆயிரம் கன அடி தண்ணீர் வரத்தொடங்கியது. இதன் காரணமாக வீராணம் ஏரியின் நீர்மட்டம் படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியது.
[/font][/color]
[color][font]
இப்போது இந்த ஆண்டில் மூன்றாவது முறையாக முழு கொள்ளளவான 47.5 அடியை வீராணம் ஏரி எட்டியிருக்கிறது. இந்த ஏரி மூலம் சிதம்பரம், காட்டுமன்னார் கோயில் தாலுகாவில் 48,856 ஏக்கர் விளை நிலங்கள் பாசனம் பெற்று வருகின்றன. இதுபோக, சென்னை மக்களின் குடிநீர்த் தேவையையும் பூர்த்திசெய்து வருகிறது. ஏரியில் இருந்து சென்னையின் குடிநீர்த் தேவைக்காக 59 கனடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. சென்னை ஏரிகள் முழுவதும் வற்றிவிட்டதால், குடிநீரைக் கொண்டுவரும் நோக்கில் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. இப்போதைக்கு சென்னைக்கு இருக்கும் ஒரே ஆறுதல் வீராணம் ஏரி மட்டும்தான். இதனால் அப்பகுதி விவசாயிகளும் மகிழ்ச்சியில் ஆழ்ந்திருக்கிறார்கள். சென்னையைச் சுற்றிலும் இருக்கும் ஏரிகள் வறண்டாலும், தனியொருவனாகக் கைகொடுக்கப்போகிறது, வீராணம் ஏரி.[/font][/color]
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
அயோத்தி விவகாரம் ‘நீங்கள் இந்தியாவை அமைதியாகவே இருக்க விடமாட்டீர்கள்’ உச்சநீதிமன்றம்
அயோத்தியில் நீண்ட காலமாக சர்ச்சைக்குரிய பகுதியாக விளங்கி வரும் ராமஜென்மபூமி–பாபர் மசூதி நில உரிமை விவகாரத்தில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதற்காக உச்சநீதிமன்றம் மூவர் குழுவை அமைத்துள்ளது.
இந்நிலையில் அயோத்தியில் சர்ச்சைக்குரிய 67.7 ஏக்கர் நிலத்தில் பூஜை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதனை தள்ளுபடி செய்ய உச்சநீதிமன்றம், “நீங்கள் தேசத்தை ஒருபோதும் அமைதியாக இருக்க அனுமதிக்க மாட்டீர்கள். ஏதாவது ஒன்று நடந்து கொண்டே இருக்கும்,” என கூறியது.
இவ்விவகாரத்தில் மனுதாரருக்கு ஏற்கனவே அலகாபாத் உயர்நீதிமன்றம் ரூ. 5 லட்சம் அபராதம் விதித்தது. இதனை திரும்பப்பெற உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.
இதேபோன்று அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் தொழுகை செய்ய அனுமதி கோரிய மனுவையும் அலகாபாத் நீதிமன்றம், ரூ. 5 லட்சம் அபராதம் விதித்து தள்ளுபடி செய்தது.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
அமெரிக்காவில் 30 குழந்தைகள் பலி எதிரொலி - 50 லட்சம் நவீன தொட்டில்கள், கடைகளில் இருந்து வாபஸ்
பதிவு: ஏப்ரல் 14, 2019 05:40
அ+
அமெரிக்காவில் சந்தையில் உள்ள 50 லட்சம் நவீன தொட்டில்களை திரும்பப்பெற வேண்டும் என்று அமெரிக்க நுகர்பொருள் பாதுகாப்பு ஆணையம் உத்தரவிட்டது. #RocknPlay #FisherPrice
நியூயார்க்:
அமெரிக்காவில் பொம்மைகள் தயாரிப்பில் பிரபலமான பிஷர் பிரைஸ் நிறுவனம், குழந்தைகள் படுத்து உறங்குவதற்கான நவீன தொட்டில்களையும் தயாரித்து சந்தையிட்டு வருகிறது.
‘ராக் என் பிளே சிலீப்பர்ஸ்’ என்று அழைக்கப்படுகிற இந்த நவீன தொட்டில்களின் பாதுகாப்புத்தன்மை கேள்விக்குள்ளாகி இருக்கிறதுஇதற்கு காரணம், 2009-ம் ஆண்டு இந்த நவீன தொட்டில்களை சந்தையில் அறிமுகம் செய்த நாள் முதல், அவற்றில் படுத்து உறங்கிய 30 சின்னஞ்சிறு குழந்தைகள் இதுவரையில் பலியாகி உள்ளனர்.இதுகுறித்து அமெரிக்க நுகர்பொருள் பாதுகாப்பு ஆணையம் (சிபிஎஸ்சி) விசாரணை நடத்தியது.
[color][size][font][size][font]
பிறந்து 3 மாதங்களே ஆன 10 குழந்தைகள், அந்த நவீன தொட்டிலில் படுத்து உறங்கியபோது, திரும்பிப்படுக்க முயன்று இறந்து விட்டதை தாங்கள் அறிந்திருப்பதாக அமெரிக்க நுகர்பொருள் பாதுகாப்பு ஆணையமே ஒப்புக்கொண்டது.
இதையடுத்து சந்தையில் உள்ள 50 லட்சம் நவீன தொட்டில்களை திரும்பப்பெற வேண்டும் என்று அமெரிக்க நுகர்பொருள் பாதுகாப்பு ஆணையம் உத்தரவிட்டது.
இதை பிஷர் பிரைஸ் நிறுவனத்தின் அதிபர் மேட்டல் உண்மைதான் என உறுதி செய்தார்.[/font][/size][/font][/size][/color]
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
ஜூலியன் அசாஞ்: விக்கிலீக்ஸ் வெளியிட்டபின் உலகை உலுக்கிய ஐந்து முக்கிய தகவல்கள்
படத்தின் காப்புரிமைEPA/GETTY IMAGESImage captionஜூலியன் அசாஞ்
விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ் கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி லண்டனில் உள்ள ஈகுவேடார் நாட்டின் தூதரகத்தில் கைது செய்யப்பட்டார்.
பாலியல் தாக்குதல் தொடர்பான ஒன்றிலிருந்து தப்பிக்க, ஸ்வீடனுக்கு நாடு கடத்தப்படக்கூடாது என்று ஏழாண்டுகளுக்கு முன்பு தூதரகத்தில் தஞ்சம் புகுந்திருந்தார் அசாஞ்சே.
பாதுகாப்புத்துறையின் கணிணிகளில் இருந்து ரகசிய ஆவணங்களை எடுக்க சதி செய்ததாக இவர் மீது அமெரிக்கா குற்றஞ்சாட்டியது. அவருக்கு ஐந்தாண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
ரகசிய ஆவணங்கள் மற்றும் படங்களை பெறுவதற்கு மற்றும் வெளியிடுவதற்காக கடந்த 2006-ஆம் ஆண்டு விக்கிலீக்ஸ் இணையதளத்தை ஜூலியன் அசாஞ்சே நிறுவினார்
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
என்னது வரி தள்ளுபடியா அதுவும் ரூ.1100 கோடியா..அதுவும் ரிலையன்ஸுக்கா..மோடி சொல்லியிருப்பாரோ
டெல்லி : பிரான்சில் இயங்கிவரும் அனில் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் நிறுவனம் செலுத்த வேண்டிய ரூ.1,100 கோடி வரி பாக்கியை அந்நாட்டு அரசு தள்ளுபடி செய்து விட்டதாக பிரபல பிரான்ஸ் பத்திரிகை ஒன்று செய்தியை வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில் அனைவரின் மந்திலும் எழுந்திருக்கும் ஒரே கேள்வி எதற்கு இந்த தள்ளுபடி என்றே? பிரான்ஸ் நாட்டில் வெளியாகும் லீ மோன்டே செய்திதாளில் வெளியாகியுள்ள செய்தி: ரிலையன்ஸ் அட்லான்டில் பிளாக் பிரான்ஸ் எனும் பெயரில் அனில் அம்பானி பிரான்ஸில் தொலைத் தொடர்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் கடந்த 2007 முதல் 2012-ம் ஆண்டு வரை செலுத்த வேண்டிய வரி குறித்து பிரான்ஸ் அதிகாரிகள் விசாரனை நடத்தியதில் 151 மில்லியன் யூரோ வரி செலுத்தாமல் பாக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் ரிலையன்ஸ் நிறுவனத்துடன் பிரான்ஸ் அதிகாரிகள் நடத்திய பேச்சு வார்த்தையில், அந்த நிறுவனம், முதல் கட்டமாக 7.3 மில்லியன் யூரோவையும் 2008-2014 காலக் கட்டத்தில் செலுத்த சம்மதித்தது.
இந்த நிலையில், கடந்த 2015-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பிரான்ஸ் நாட்டுக்கு பிரதமர் மோடி பயணம் செய்தபோது டசால்ட் நிறுவனத்திடம் இருந்து பறக்கும் நிலையில், 36 ரபேல் போர் விமானங்களை கொள்முதல் செய்ய ஒப்பந்தம் செய்தார். இது கடந்த 6 மாதங்களுக்குப் முன் நடந்த ஒரு விஷயமாக இருந்தாலும், தற்போது ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு கோடிக்கணக்கில் வரித்தள்ளுபடியை பிரான்ஸ் அரசு வழங்கியுள்ளது.
பிரான்ஸ் தள்ளுபடி செய்தது!
அதாவது, ரிலையன்ஸ் நிறுவனம் 1182 கோடி ரூபாய் வரி செலுத்த வேண்டிய நிலையில், வெறும் 57 கோடி ரூபாய் மட்டும் செலுத்தக் கூறியுள்ளது. இந்த நிலையில் 1,124 கோடி ரூபாயை பிரான்ஸ் அரசு தள்ளுபடி செய்துள்ளது என்று அந்த லீ மாண்டே செய்திதாளில் செய்திகள் வெளியாகியுள்ளன.
வெறும் ரூ.56 கோடிதான் கட்டினோம்
இது குறித்து ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவன செய்தித் தொடர்பாளர் தெரிவித்ததாவது, எங்கள் நிறுவனத்துக்கு செயல்பாட்டு ரீதியில் 20 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது. ஆனால், பிரான்ஸ் அதிகாரிகள் எங்களிடம் 1100 கோடி ரூபாய் வரி கேட்டனர். பிரான்ஸ் வரி செலுத்தும் சட்டத்தின்படி, நடந்த பேச்சு வார்த்தையில் சுமூக நிலை எட்டப்பட்டது. இதன் படி நாங்கள் 56 கோடி ரூபாய் செலுத்தினோம் என்றும் தெரிவித்தார்.
[color][font]
மோடி தலையீடு இருக்குமோ?
ஏற்கனவே இந்தியாவில் நிலவி வரும் சர்ச்சையில், மோடி கார்பரேட் நிறுவனங்களுக்கு தான் உதவிசெய்வார் என்பதையடுத்து, தற்போது விஷ்வரூபாமாகியுள்ள இந்த செய்தியால் மேலும் பிரச்சனை அதிகரிக்கவே வாய்ப்புள்ளது. அதிலும் இந்திய பிரதமர் மோடியின் தலையீட்டால் தான் இவ்வளவு பெரிய தொகையை பிரான்ஸ் அரசு தள்ளுபடி செய்ததாகவும், இந்த விவகாரம் இன்றைய அரசியல் சூழலில் இந்தியாவில் பெரும் சர்ச்சைக்கு ஒரு விஷயமாகவும் மாறியுள்ளது. ஏற்கனவே கார்ப்பரேட் நிறுவனங்களூக்கு உதவி செய்பவர் என்ற நிலையில், தற்போது இந்த செய்தி இது போன்ற தகவல்களை உறுதி செய்வதாகவும் வந்துள்ளது.
[/font][/color]
தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
87 நாடுகள் மாறிவிட்டன... நாம் எப்போது?
தேர்தல் ஜனநாயக முறை, குறிப்பிட்ட சாராருக்கு மட்டுமே பயனளிக்கிற தன்மை கொண்டதாக மாறிவிட்டது. பண பலம், ஆள் பலம், மாபியா பலம், ஊடக பலம் யாரிடம் இருக்கிறதோ, அவர்கள் மட்டுமே தேர்தலில் வெற்றி பெறமுடியும். நீங்கள், 300 கொடுத்தால் அவர், 500 கொடுத்து உங்களை தோற்கடித்துவிடுவார். இதுதான், இன்றைய விசித்திர நிலை.
அதுமட்டுமல்லாமல், தேர்தல் முடிவுக்குப் பின்னர், 'எங்களுக்கு இத்தனை சதவீத ஓட்டுக்கள் கிடைத்திருக்கின்றன. ஆனால், போதுமான இடங்கள் கிடைக்கவில்லை' என்று பல கட்சிகள் புள்ளி விபரங்களை சொல்லி புலம்புவதை கேட்கிறோம். இந்த விசித்திரத்துக்கும், புலம்பலுக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அதற்கு, நமது தேர்தல் முறையை, விகிதாச்சார பிரதிநிதித்துவ தேர்தல் முறையாக மாற்ற வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே, ஒவ்வொரு ஓட்டுக்கும் உண்மையான மதிப்பு கிடைக்கும். ஒரு தொகுதியில் அதிக ஓட்டு பெற்றவரே வெற்றி பெற்றவர். மேலோட்டமாக பார்த்தால், இதில் தவறு இருப்பதாக தெரியாது. ஆனால், பதிவான ஓட்டுகளில், 30 சதவீத ஓட்டுகளை பெற்று, முதல் இடத்தை பிடிப்பது இப்போது சகஜமாகி விட்டது. அதாவது, ஜெயித்தவர், 30 சதவீதம் பெற்றிருப்பார். அதன் அர்த்தம் என்ன? 70 சதவீதம் பேருக்கு அவரை பிடிக்கவில்லை. ஆனால், அவருக்கு எதிராக, ஏழு பேர் நின்றதால், அந்த, 70 சதவீத ஓட்டுகள் அவர்களுக்கு ஆளுக்கு, 10 சதவீதமாக விழுந்திருக்கும். சுருக்கமாக சொல்லப் போனால், 30 சதவீத ஓட்டுக்கு மதிப்பு கொடுத்து அவரை, எம்.பி., அல்லது எம்.எல்.ஏ., ஆக்குகிறது நமது தேர்தல் முறை. ஆனால், 70 சதவீத வாக்காளர்களின் ஓட்டுகளுக்கு எந்த மதிப்பும் தரவில்லை.
கடந்த, 1989 லோக்சபா தேர்தலில், தி.மு.க., 31 இடங்களில் போட்டியிட்டு, அனைத்திலும் தோற்றது. ஆனால், அந்த கட்சிக்கு, 70 லட்சம் பேர் ஓட்டு போட்டு இருந்தனர். 1990 தேர்தலிலும், தி.மு.க., 29 தொகுதிகளில் போட்டியிட்டு, 56 லட்சம் ஓட்டுக்கள் வாங்கியும், ஒரு இடம்கூட ஜெயிக்கவில்லை. 2014 லோக்சபா தேர்தலில், தி.மு.க., 24 சதவீத ஓட்டு பெற்றது; 95 லட்சம் பேர், தி.மு.க.,வுக்கு ஓட்டு போட்டிருந்தனர். எனினும், ஒரு எம்.பி., கூட கிடைக்கவில்லை. மாறாக, 2014 லோக்சபா தேர்தலில், பா.ஜ., பெற்ற ஓட்டுக்கள், 17 கோடியே, 16 லட்சத்து, 37 ஆயிரத்து 684. இது மொத்த ஓட்டுக்களில், 31 சதவீதம்தான். ஆனால், அக்கட்சிக்கு, 282 எம்.பி.க்கள் இருந்தனர். இது மொத்தமுள்ள, எம்.பி.,க்களின் எண்ணிக்கையில், 51.9 சதவீதம்.அதே போல் காங்கிரசுக்கு, 10 கோடியே, 69 லட்சத்து, 35 ஆயிரத்து, 311ஓட்டுக்கள் கிடைத்தன. இது, 19.3 சதவீதம். ஆனால், காங்., -- எம்.பி.,க்களின் எண்ணிக்கை, 44 மட்டுமே. அந்த தேர்தலில், உ.பி.,யில், 20 சதவீத ஓட்டுக்களை பெற்ற, பகுஜன் சமாஜ் கட்சிக்கு, ஒரு எம்.பி., கூட கிடைக்கவில்லை.
விகிதாச்சார தேர்தல் முறையில், ஒவ்வொரு கட்சியும் பெற்ற ஓட்டு விகிதத்துக்கு ஏற்ப, சட்டசபை மற்றும் பார்லிமென்டில் இடங்கள் வழங்கப்படுகின்றன. சட்டசபை உறுப்பினர் எண்ணிக்கை, 100 என வைத்துக்கொண்டால், 1 சதவீத ஓட்டு பெற்ற ஒரு கட்சிக்கு, ஒரு இடம் கிடைப்பது உறுதி. பிரதிநிதிகள் பட்டியலை கட்சிகள் முன்கூட்டியே சமர்ப்பிக்க வேண்டும். கட்சிக்கு கிடைக்கும் மொத்த ஓட்டுக்களுக்கு, ஏற்ப ஏற்கனவே கட்சி அளித்துள்ள பெயர் பட்டியல்படி,எம்.பி., -- எம்.எல்.ஏ.க்கள் அறிவிக்கப்படுவார்கள். தனித்து ஆட்சி அமைக்க, 'மெஜாரிட்டி' வராவிட்டால், ஒரே எண்ணம் கொண்ட கட்சிகளுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைக்கலாம். அரசியல், ஒரு, 'பிசினசாகும்' ஆபத்தை தடுக்க வேண்டும்; ரஷ்யா, ஜெர்மனி ஆஸ்திரியா, பெல்ஜியம், டென்மார்க், நார்வே, ஸ்பெயின், சுவீடன், சுவிஸ், பிரேசில், வெனிசுலா உள்பட பல நாடுகளில் விகிதாச்சார தேர்தல் முறையே நடைமுறையில் உள்ளது. பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் இம்முறையையே பின்பற்றுகின்றன.
இலங்கை, இம்முறையில் தான், எம்.பி.,க்களை தேர்ந்தெடுக்கிறது. கடந்த, 1932 ல் ஆண்டு ஜெர்மனியில் நடைபெற்ற தேர்தலில், 33.1 ஓட்டுக்களை பெற்றே ஹிட்லர் அதிபராக வந்தார். 1949ம் ஆண்டு அந்த நாட்டில், விகிதாச்சார தேர்தல் முறை வந்தது. விகிதாச்சார பிரதிநிதித்துவம் கொண்ட ஜனநாயக ஆட்சி தான் சிறந்தது என்ற நம்பிக்கை, அன்று முதல் பரவலானது. அப்படி மாறுவது, இங்குள்ள பல்வேறு சமூகங்களின் அச்சத்தை அகற்றுவதுடன், நாட்டின் எதிர்கால குழப்பங்களுக்கான தீர்வாகவும் அமையும் என்பது, 1928ம் ஆண்டு நேருவின் கருத்தாக இருந்தது. பின்னர் அவர் பார்வை மாறியது வேறுவிஷயம். 1962 ல் கோவையில் நடைபெற்ற, தி.மு.க., பொதுக்குழுவிலும், மாநாட்டிலும், தேர்தல் அறிக்கையிலும் இந்தியாவுக்கு விகிதாச்சார பிரதிநிதித்துவ முறை வேண்டும் என்று அண்ணாதுரை வலியுறுத்தினார். 1974ம் ஆண்டு, ஜெயபிரகாஷ் நாராயணனால் நியமிக்கப்பட்ட தார்க்குண்டே குழு ஜெர்மனியில் இருப்பது போன்ற தேர்தல் முறை இந்தியாவுக்கு வேண்டும் என பரிந்துரைத்தது.
அதன் பிறகு, தினேஷ் கோஷ்சுவாமி குழு (1990), வோரா கமிட்டி (1993), இந்திரஜித் குப்தா குழு (1998), தேர்தல் சட்ட திருத்தத்தின் மீதான சட்ட ஆணையத்தின், 170வது அறிக்கை (1999), அரசியல் சாசன நடைமுறை மறு ஆய்வுக்கான தேசிய ஆணையம் (2001), இந்திய தேர்தல் ஆணையத்தால் முன்னுரைக்கப்பட்ட தேர்தல் சீர்திருத்தங்கள் (2004), நிர்வாக சீர்திருத்த, இரண்டாவது ஆணையம் (2008), மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி தலைமையிலான இந்திய சட்ட ஆணையம் (2011) ஆகிய அனைத்தும் விகிதாச்சார பிரதிநிதித்துவம் குறித்து நீண்ட ஆய்வை சமர்பித்தன.எனினும், எந்த மாற்றமும் நிகழவில்லை. விகிதாச்சார பிரதிநிதித்துவ தேர்தல் முறை வந்தால், அனைத்து ஓட்டுகளும் மதிப்பு பெறும். பணபலம், ரவுடியிசம், சாதி, மதவெறி குறைய வாய்ப்பு ஏற்படும். அவரவர் ஜாதி ஆதரவின் அடிப்படையில் பிரதிநிதித்துவம் பெறக்கூடும் என்றாலும், மாகாணம் முழுவதும் சிதறிக்கிடக்கிற ஜாதிகளும், சிறிய ஜாதிகளும் எளிதில் பிரதிநிதித்துவம் பெற முடியும்.
இந்தியா போன்ற பல்வேறு மொழிகள், இனங்கள் கொண்ட சுவிட்சர்லாந்து நாட்டில் விகிதாச்சார ஓட்டுரிமை நடைமுறையில் இருக்கிறது. இந்தியாவில் இப்போதுள்ள தேர்தல் முறையை பின்பற்றிய, 89 நாடுகள், இன்று விகிதாச்சார பிரதிநிதித்துவ முறைக்கு மாறி விட்டன. உலகில் பெரும்பாலான நாடுகளில் அந்த நடைமுறைதான் உள்ளது. ஒவ்வொரு துறையிலும் முன்னேறுவதாக சொல்லப்படும் நமது நாடு, அனைத்து துறைகளுக்கும் தாயான, தேர்தல் துறையில் தேர்தல் முறையில் பின்தங்கி நிற்கலாமா? விகிதாச்சார பிரதிநிதித்துவ தேர்தல் முறையை கொண்டுவர கட்சிகளுக்கு நாம்தான் அழுத்தம் கொடுக்க வேண்டும். நாம் போடும் ஓட்டுக்கு மரியாதை வேண்டுமா, வேண்டாமா? யோசியுங்கள்.
-ப.திருமலை, பத்திரிகையாளர்
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
ரபாடா மின்னல் வேகம்: 15 ரன்களில் 8 விக்கெட்டுகளை இழந்து சன்ரைசர்ஸ் சரண்: 2-வது இடத்தில் டெல்லி
சன்ரைசர்ஸ் சரிவுக்கு காரணமான ரபாடாவை பாராட்டும் டெல்லி வீரர்கள் : படம் உதவி ஐபிஎல்
ரபாடா, கீமோ பால், மோரிஸ் கூட்டணியின் கட்டுக்கோப்பான, துல்லியமான வேகப்பந்துவீச்சால், ஹைதராபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 30-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 39 ரன்களில் வீழ்த்தி டெல்லி கேபிடல்ஸ் அணி அபார வெற்றது.
இந்த வெற்றி மூலம் டெல்லி கேபிடல்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் 10 புள்ளிகளுடன் 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. இதுவரை 8 போட்டிகளில் விளையாடி 5 வெற்றிகள், 3 தோல்விகளுடன் டெல்லி உள்ளது. கொல்கத்தா அணி 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டது. சன்ரைசர்ஸ் அணி தொடர்ந்து 3 -வது தோல்வியைச் சந்தித்து 6-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
டெல்லி அணி பெற்ற 5 வெற்றிகளில் 4 வெற்றிகள் வெளி மாநில மைதானத்தில் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. அதிகமான இளம் வீரர்களைக் கொண்ட டெல்லி கேபிடல்ஸ் அணி வழக்கத்துக்கு மாறாக ஒவ்வொரு விக்கெட்டு வீழ்ந்தபோதும் ஒற்றுமையுடன் ஒருவரை ஒருவர் பாராட்டிக்கொள்வதும், கட்டித்தழுவுவதும் என டீம் ஸ்பிரி்ட்டை வெளிப்படுத்தியது அருமையாக இருந்தது.
வெற்றி மகிழ்ச்சியில் டெல்லி அணியினர் : படம் உதவி ஐபிஎல்
ஒரு புத்துணர்ச்சி மிக்க, மிக இளமையான துடிப்பான அணியைப் போல் காட்சி அளித்தனர். அதற்கு ஏற்றார்போல், மைதானத்துக்கு வெளியே பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங், ஆலோசகர் தாதா கங்குலி ஆகியோர் ஒவ்வொரு விக்கெட் வீழ்ந்தபோதும் உற்சாகத்தில் துள்ளிக் குதித்து அணி வீரர்களுடன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டது கங்குலி மீண்டும் விளையாடிய காலத்தை நினைவுபடுத்தியது.
முதலில் பேட் செய்த டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் சேர்த்தது. 156 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதர்பாத் அணி 18.5 ஓவர்களில் 116 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து படுதோல்வி அடைந்தது.
ஒரு கட்டத்தில் 101 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அடுத்த 15 ரன்களில் 3 ஓவர்களில் மீதமிருந்த 8 விக்கெட்டுகளை இழந்து அதிர்ச்சித் தோல்வி அடைந்தது. பந்துவீச்சாளர்களுக்கு எந்தவிதமான சிரமும் வைக்காமல் சன்ரைசர்ஸ் அணி சரணடைந்தது.
சன்ரைசர்ஸ் அணியில் வார்னர், பேர்ஸ்டோ மட்டுமே இரட்டை இலக்கத்தில் ரன்கள் சேர்த்தனர். மற்ற அனைத்து பேட்ஸ்மேன்களும் ஒற்றை இலக்கத்தில் ரன் சேர்த்து வீணாக விக்கெட்டை பறிகொடுத்தனர்.
சன்ரைசர்ஸ் அணியின் விக்கெட் சரிவுக்கு காரணமாக வேகப்பந்துவீ்ச்சாளர் கீமோ பால், ரபாடா, மோரிஸ் ஆகியோர் இருந்தனர். இதில் கீமோ பால் 4 ஓவர்கள் வீசிய 17 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருது பெற்றார்.
ரபாடா, 22 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளையும், மோரிஸ் 22 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளையும் சாய்த்தார்.
சன்ரைசர்ஸ் அணியில் பேர்ஸ்டோ, வார்னர் களத்தில் இருக்கும் வரை அந்த அணியினருக்கு மட்டுமல்லாமல் ரசிகர்களுக்கும் வெற்றி பெற்றுவிடுவார்கள் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால், இருவரும் ஆட்டமிழந்தபின், வில்லியம்ஸனும் ஏமாற்றினார்.
அதன்பின் வந்த பேட்ஸ்மேன்கள், தங்களுக்கும், அணிக்கும் தொடர்பே இல்லாத வகையில், வருவதும், பந்தை உயரை தூக்கி அடித்து டெல்லி கேபிடல்ஸ் பந்துவீச்சாளர்களுக்கும் பந்துவீச்சு பயிற்சியும், பீல்டர்களு்ககு பீல்டிங் பயிற்சியும் அளித்துவிட்டுச் சென்றனர்.
ஆட்டநாயகன் விருது வென்ற கீமோ பால் : படம் உதவி ஐபிஎல்
கடந்த சில போட்டிகளாகவே டேவிட் வார்னர் தன்னுடைய ஆரஞ்சு தொப்பை தக்கவைக்கும் விதத்திலேயே கவனம் செலுத்தி விளையாடுகிறார் எனத் தெரிகிறது. டி20 போட்டியில் விளையாடுகிறோம் என்ற நினைப்பு இல்லாமல் பந்துகளை அதிகமாக வீணாக்கி ரன்களைச் சேர்த்தது சன்ரைசர்ஸ் அணியின் ஸ்கோர் மந்தமானதற்கு முக்கியக் காரணமாகும்.
156 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் சன்ரைசர்ஸ் அணி களமிறங்கியது. பேர்ஸ்டோ, வார்னர் நல்ல தொடக்கம் அளித்தனர். ரபாடா, இசாந்த் சர்மா ஓவர்களில் பவுண்டரி. சிக்ஸர்கள் அடித்து பவர்ப்ளே ஓவரில் விக்கெட் இழப்பின்றி 40 ரன்களைச் சேர்த்தனர். படேல் வீசிய 9-வது ஓவரில் வார்னர் சிக்ஸர் , பவுண்டரி விளாசினார்.
கீமோ பால் வீசிய 10-வது ஓவரில் லாங் -ஆன் திசையில் நின்றிருந்த ரபாடாவிடம் கேட்ச் கொடுத்து பேர்ஸ்டோ 41 ரன்களில் ஆட்டமிழந்தார். இவர் கணக்கில் ஒருசிக்ஸர், 5 பவுண்டரி அடங்கும். முதல் விக்கெட்டுக்கு 72 ரன்கள் சேர்த்தனர்.
ரபாடாவை கட்டி அணைத்த பிரித்வி ஷா : படம் உதவி ஐபிஎல்
அடுத்து வந்த வில்லியம்ஸன் நிலைக்கவில்லை. கீமோ பால் வீசிய 12-வது ஓவரில் மிட்-ஆப் திசையில் நின்றிருந்த ரபாடாவிடம் கேட்ச் கொடுத்து 3 ரன்களில் வில்லியம்ஸன் வெளியேறினார். அடுத்து நிக்கி புகி களமிறங்கினார். அமித் மிஸ்ரா வீசிய 15-வது ஓவரில் கிடைத்த கேட்ச் வாய்ப்பை மிஸ்ரா நழுவ விட்டார்.
16-வது ஓவரை வீசிய கீமோ பால் ஓவரில் படேலிடம் கேட்ச் கொடுத்து புகி 7 ரன்னில் ஆட்டமிழந்தார். இந்த ஓவரில் இருந்துதான் சன்ரைசர்ஸ் அணியின் சரிவு தொடங்கியது.
17-வது ஓவரை ரபாடா வீசினார். முதல்பந்தில் 2 ரன்கள் சேர்த்த வார்னர், 46 பந்துகளில் அரைசதம் அடித்தார். அடுத்த பந்தை தூக்கி அடிக்க அது அய்யர் கையில் கேட்சாக மாறியது. வார்னர் 51 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த விஜய் சங்கர் வந்தவேகத்தில் அடித்து ஆடுவதற்காக ஸ்டிரைட் டிரைவ் ஆடினார். ஆனால், எட்ஜ் ஆகி கீப்பர் ரிஷப் பந்த் கைவசம் புகுந்தது. விஜய் சங்கர் டக்அவுட்டில் வெளியேறினார்.
ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகளை வீழ்த்திய மோரிஸை பாராட்டும் ரபாடா : படம் உதவி ஐபிஎல்
18-வது ஓவரை மோரிஸ் வீசினார். இந்த ஓவரில் 3 விக்கெட்டுகள் மளமளவென சரிந்தன. தீபக் ஹூடா 3 ரன்கள் சேர்த்த நிலையில் மோரிஸ் பந்துவீச்சில் கிளீன் போல்டாகினார். அடுத்துவந்த ரஷித் கான் லெக்சைடில் தூக்கி அடிக்க அது கேட்ச் ஆனது. ரஷித் கான் டக் அவுட்டில் வெளியேறினார். அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. கடைசிப்பந்தில் அபிஷேக் சர்மா 2 ரன்களில் கீமோ பாலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ஒரே ஓவரில் 3 விக்கட்டுகளை இழந்ததால், சன்ரைசர்ஸ் அணி தோல்வி ஏற்ககுறைய உறுதியானது.
101 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளையும் 112 ரன்களுக்கு 8விக்கெட்டுகளையும் இழந்தது.
ரபாடா பந்துவீச்சில் போல்டான கலீல் அகமது: படம் உதவி ஐபிஎல்
19-வது ஓவரை ரபாடா வீசினார். ஏற்கனவே மின்னல் வேகத்தில் பேட்ஸ்மேன்களை திணறவைத்த ரபாடாவுக்கு டெய்லன்டர்களை வீழ்த்துவது எளிதானதாக இருந்தது. 19-வது ஓவரின் 4-வது பந்தில் புவனேஷ் குமார் 2 ரன்னில் ரபாடாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார், அடுத்த பந்தில் கலீல் அகமது ஸ்டெப்ம் தெறிக்க போல்டாகி வெளியேறினார்.
18.5 ஓவர்களில் 116 ரன்களில் சன்ரைசர்ஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 39 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. டெல்லி கேபிடல்ஸ் தரப்பில் கீமோ பால் 3 விக்கெட்டுகளையும், ரபாடா 4 விக்கெட்டுகளையும், மோரிஸ் 3 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.
முன்னதாக, டாஸ்வென்ற சன்ரைசர்ஸ் அணி டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்ய, டெல்லி கேபிடல்ஸ் அணி முதலில் பேட் செய்தது. டெல்லி அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் பிரித்விஷா(4), தவண்(7) ரன்களில் ஏமாற்றம் அளித்தனர். 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 20 ரன்கள் மட்டுமே சேர்த்து இக்கட்டான நிலையில் இருந்தது. நடுவரிசையில் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர், முன்ரோ நம்பிக்கை அளித்து சரிவில் இருந்து மீட்டனர். பவர்ப்ளே ஓவரில் டெல்லி அணி 2 விக்கெட் இழப்புக்கு 51 ரன்கள் சேர்த்தது. 10 ஓவர்களில் 87 ரன்கள் சேர்த்தது டெல்லி அணி.
முன்ரோ 3 சிக்ஸர்கள் 4 பவுண்டரிகள் என 24 பந்துகளில் 40 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். ஸ்ரேயாஸ் அய்யர் 5 பவுண்டரிகள் உள்பட 40 பந்துகளில் 45 ரன்கள் சேர்த்தார். ரிஷப் பந்த் 23 ரன்கள் சேர்த்தார். ஸ்ரேயாஸ் அய்யர், பந்த் கூட்டணி 4-வது விக்கெட்டுக்கு 56 ரன்கள் சேர்த்தனர். 125 ரன்களுக்கு 4 விக்கெட்டை இழந்த டெல்லி அணி அடுத்த 27 ரன்களுக்கு 3 விக்கெட்டை இழந்தது குறிப்பிடத்தக்கது. சன்ரைசர்ஸ் தரப்பில் கலீல் அகமது 3 விக்கெட்டுகளையும், புவனேஷ் குமார் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
எட்டுவழிச்சாலை விவகாரம் - அன்புமணிக்கு சவால் விட்ட விவசாயி கைது
சேலம் டூ சென்னை இடையிலான எட்டுவழிச்சாலைக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்தது. இந்த திட்டத்தை கைவிட வேண்டுமென பலரும் வழக்கு தொடுத்திருந்தனர். அதில் முக்கியமானவர் தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த விவசாயி கிருஷ்ணமூர்த்தி. இவரது நிலம் 8 வழிச்சாலைக்காக எடுக்கப்படுவதால் அதனை எதிர்த்து வழக்கு தொடுத்திருந்தார். அவர் வழக்கு முக்கியமானதாக இருந்தது.
வழக்கு நடந்து வந்தது. 8 வழிச்சாலையால் பாதிக்கப்படும் தருமபுரி மாவட்ட விவசாயிகளை ஒருங்கிணைத்து எட்டுவழிச்சாலை எதிர்ப்பு இயக்கத்தின் தருமபுரி மாவட்ட ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு வந்தார். தீர்ப்பு வெளிவந்ததும், இந்த தீர்ப்பு எங்கள் வழக்கால் தான் வந்தது என பாமக இளைஞரணி தலைவரும், தருமபுரி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளருமான அன்புமணியும், அவரது கட்சியினரும் பிரச்சாரம் செய்தனர்.
என் வழக்குதான் முக்கியமானது, தீர்ப்பின் நகலில் பாருங்கள், என் பெயர் தான் முதல் பக்கத்தில் இருக்கும். அந்த தீர்ப்பில் ஒரு இடத்தில் கூட அன்புமணி பெயரோ, அவரது வழக்கறிஞர் பெயரோ கிடையாது. யார் தொடுத்த வழக்கில் தீர்ப்பு வந்தது என்பதை அன்புமணி என்னுடன் விவாதிக்க தயாரா என சவால் விட்டார்.
இந்த சவாலை கேட்டு ஆத்திரமான பாமக நிர்வாகியான சத்தியமூா்த்தி என்பவர், கிருஷ்ணமூர்த்தியை தொலைபேசியிலும், நேரிலும் சென்று மிரட்டியுள்ளார். அந்த வழக்கு மற்றும் தீர்ப்பு தொடர்பாக 8 வழிச்சாலை எதிர்ப்பு இயக்க நிர்வாகியான பழனியப்பன் என்பவரின் மகனும் விவசாயியுமான சந்தோஷ், தொடர்ச்சியாக சமூக வளைத்தளங்களில் பதிவிட்டு வந்துள்ளார். இதில் அன்புமணி ஏமாற்றுகிறார் என்பதையும், அதிமுக – பாமக நடகத்தையும் அதில் பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதில் கோபமான பாமக நிர்வாகிகள், சந்தோஷ் மீது பாப்பிரெட்டிப்பட்டி காவல்நிலையத்தில் புகார் தர, அதிமுக – பாமக கூட்டணியில் உள்ளதால் அதிகாரத்தில் உள்ள அதிமுக தலைமையின் உத்தரவால் சந்தோஷ் கைது செய்யப்பட்டு பாப்பிரெட்டிப்பட்டி காவல்நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளாராம். இந்த தகவல் பரவி தற்போது 8 வழிச்சாலைக்காக போராடிவரும் விவசாயிகளையும், அமைப்புகளையும் அதிர்ச்சியடையவைத்துள்ளது
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
ஜெயிக்க வச்சா இன்னும் எத்தனை பொண்ணுங்க குடிய கெடுக்கப் போறானுகளோ - பொள்ளாச்சி அரசியல்
கொங்கு பெல்ட்டின் இப்போதைய அ.தி.மு.க. எம்.பி.க்களில் பலர், இந்தத் தேர்தலில் போட்டியிடத் தயங்கிய நிலையில், பொள்ளாச்சி எம்.பி. மகேந்திரன் மட்டும் தில்லாக களத்தில் குதித்திருக்கிறார். ஆனாலும் அவரை திகிலடிக்க வைத்துக்கொண்டிருக்கிறார் துணை சபா பொள்ளாச்சி ஜெயராமன். கடந்த ஐந்து வருடங்களில் தொகுதிக்கு எதுவுமே செய்யாமல் எப்படி ஓட்டுக் கேட்டுப் போவது என்ற தயக்கம் அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கு இருப்பதை பல இடங்களில் காணமுடிந்தது. இதேபோல் இஸ்லாமிய, கிறிஸ்தவ சமூக ஏரியாக்களில் ஓட்டுக் கேட்டுப் போவதும், அ.தி.மு.க.வினருக்கு கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கிறது.
இதையெல்லாம் சமாளித்துப் போய்க் கொண்டிருந்தாலும் மகேந்திரனின் பிரச்சார வேனில் பொள்ளாச்சி ஜெயராமன் ஏறி நின்று பயமுறுத்துகிறார். பாலியல் கொடூரத்தால் பொள்ளாச்சியே எரிமலையாய் இருக்கும் போது, கட்சியின் சீனியரான இவரை, பிரச்சார வேனிலிருந்து எப்படி இறங்கச் சொல்வது என தவியாய் தவித்துக் கொண்டிருக்கிறார் மகேந்திரன். ஆனால் பொள்ளாச்சி ஜெயராமனோ, பிரச்சார வேனுக்கு முன்னும் பின்னும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பவனி வந்து கொண்டிருக்கிறார்.
இந்த பாதுகாப்புடன் கிணத்துக்கடவு தொகுதியில் ஓட்டுக் கேட்டுப் போன போது ஏக களேபரமாகிவிட்டது. கிணத்துக்கடவு ஒன்றியத்தில் இருக்கும் குளத்துப்பாளையத்தில் பொள்ளாச்சி ஜெயராமனும் மகேந்திரனும் ஓட்டுக் கேட்டுக் கொண்டிருந்தபோது, நடராஜ் என்கிற ரத்தத்தின் ரத்தம், "காலம் காலமாக நாங்க ரெட்டை இலைக்குத்தான் ஓட்டுப் போட்டுக்கிட்டிருக்கோம். அப்படியெல்லாம் நாங்க ஓட்டுப் போட்டு உங்களை ஜெயிக்க வச்சதுக்குப் பரிசுதான் உன்னோட ரெண்டு பசங்களும் பல சின்னப் பொண்ணுங்களை நாசம் பண்ணிருக்கானுங்க. இப்பவும் ஜெயிக்க வச்சா இன்னும் எத்தனை பொண்ணுங்க குடிய கெடுக்கப் போறானுகளோ''’என சகட்டுமேனிக்கு ஒருமையில் விளாசியதும் வேனிலிருந்து இறங்கி, காருக்குள் போய் உட்கார்ந்துகொண்டார் பொள்ளாச்சி ஜெயராமன்.
அப்போதும் விடாத நடராஜ், கார் கண்ணாடியைத் தட்டியபடி சவுண்ட் விட... காரைக் கிளப்பிக் கொண்டு, ஜெயராமன் பறக்க, பிரச்சார வேனைக் கிளப்பிக்கொண்டு பறந்துவிட்டார் மகேந்திரன். சொந்தக் கட்சிக்காரர்களின் கோபத்தால் ரொம்பவே தத்தளித்துக் கொண்டிருக்கிறார் மகேந்திரன். இது போதாதென்று, முதல்வர் எடப்பாடி பிரச்சாரத்திற்கு வருவதற்கு முன்னால், "பச்சைக்கிளி முத்துச்சரம்' என்ற எம்.ஜி.ஆர்.பாடலுக்கு படுகவர்ச்சியாக டான்ஸ் ஆடி மக்களை முகம் சுழிக்க வைத்தது கலைநிகழ்ச்சி குரூப்.
இப்படி பல வழிகளில் அ.தி.மு.க. தத்தளிப்பது, தி.மு.க. வேட்பாளர் சண்முகசுந்தரத்திற்கு சாதகமாகத்தான் இருக்கிறது. ஆனால் இங்கும் சொந்தக் கட்சி நிர்வாகிகளின் சொதப்பலால், பல இடங்களில் தள்ளாடிக் கொண்டிருக்கிறது தி.மு.க. "ஆனைமலை மற்றும் பொள்ளாச்சி வடக்கு ஒன்றியங்கள்தான் தி.மு.க. வீக்காக இருக்கும் ஏரியா. ஆனைமலை ஒ.செ. தேவ சேனாதிபதியும் பொள்ளாச்சி வடக்கு ஒ.செ. மருதவேலுவும் களப்பணிகளில் மந்தகதியாக இருப்பதுடன், அ.தி.மு.க.வினரின் பணப்பட்டுவாடாவையும் கண்டுகொள்வதேயில்லையாம். இதே ஸ்டைலில்தான் வால்பாறை ந.செ. கோழிக்கடை கணேசனும் இருக்கிறார். இதையெல்லாம் தலைமை சரிபண்ணலைன்னா சிக்கல்தான்' என்கிறார்கள் உ.பி.க்கள்.
இரு கட்சிகளின் தத்தளிப்பு, தள்ளாட்டத்திற்கிடையிலும் மக்கள் நீதி மய்யம் மூகாம்பிகாவும் நாம் தமிழர் சனுஜாவும் தீவிரமாக வாக்கு கேட்டுவருகிறார்கள்.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
அடுத்த 2 நாளைக்கு வெயில் உக்கிரமாக இருக்குமாம்.. 12 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை
சென்னை: இந்த மாவட்டங்களில் எல்லாம் அடுத்த 2 நாளைக்கு வெயில் உக்கிரமாக இருக்கப் போகிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தமிழகத்தில் கோடை வெயில் கடுமையாக கொளுத்தி வருகிறது. கோடை மழை இன்னும் எந்த பகுதியிலும் பெய்ததாக தெரியவில்லை.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகம் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு வறண்ட வானிலையே காணப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்தமிழகத்தில் அடுத்த இரண்டு தினங்களுக்கு இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக வேலூர், கிருஷ்ணகிரி, சேலம், திருச்சி, கரூர், திண்டுக்கல், மதுரை , திருவள்ளூர், தர்மபுரி, பெரம்பலூர், நாமக்கல், திருவாண்ணாமலை உள்பட 12 மாவட்டங்களில் வழக்கத்தை விட வெப்பம் அதிகமாக இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொருத்தவரை வெப்பநிலை அதிகபட்சமாக 36 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்றும் கூறியுள்ளது.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
உலக கோப்பை தொடரில் தினேஷ் கார்த்திக்குக்கு வாய்ப்பு.. கோலி தலைமையில் 15 பேர் கொண்ட அணி அறிவிப்பு
மும்பை: இங்கிலாந்தில் நடக்கும் உலக கோப்பை தொடருக்கான விராட் கோலி தலைமையிலான 15 பேர் கொண்ட அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. அணியில் தினேஷ் கார்த்திக்குக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் இந்த ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் மே 30, 2019ல் துவங்கி ஜூன் 14, 2019 வரை நடக்கவுள்ளது. மொத்தம் 48 போட்டிகள் 12 நகரங்களில் நடக்கிறது. 1992ல் பென்சன் மற்றும் ஹெட்ஜ்ஸ் உலக கோப்பை முறையில் இந்த தொடர் நடக்கவுள்ளது.
இத்தொடரில் ஆஸ்திரேலியா, வங்கதேசம், இங்கிலாந்து, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்ரிக்கா, இலங்கை அணிகள் முதல் 8 அணிகள் என்ற தர வரிசைப்படி தகுதி பெற்றுள்ளன. மேற்கிந்திய தீவுகள் அணியும், ஆப்கானிஸ்தான் அணியும் தகுதிச்சுற்று மூலமும் தேர்வு செய்யபட்டது.
இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. அனைவரும் எதிர்பார்த்து இருந்தது போலவே விராட் கோலி கேப்டனாக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.
அணி விவரம்:
விராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா (துணை கேப்டன்), ஷிகர் தவான், கே.எல்.ராகுல், விஜய் சங்கர், தோனி (விக்கெட் கீப்பர்), கேதர் ஜாதவ், தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ், சகால், ஜஸ்பிரீத் பும்ரா, புவனேஷ்வர் குமார், முகமது சமி, ரவிந்திர ஜடேஜா.
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியில் ஐசிசி, அனுமதி இல்லாமலேயே வரும் மே 23ம் தேதி வரை பிசிசிஐ மாற்றம் செய்து கொள்ள முடியும். எப்போது... எப்போது என்று எதிர்பார்த்திருந்த அணி விவரங்கள் வெளியாகி உள்ளதால் ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.
•
|